Sign in to follow this  
நவீனன்

காணாமல் போனோர் அலுவலகம் துரித செயற்பாடுகளை முன்னெடுக்கும் : ஜெப்ரி பெல்ட்மன் நம்பிக்கை

Recommended Posts

காணாமல் போனோர் அலுவலகம் துரித செயற்பாடுகளை முன்னெடுக்கும் : ஜெப்ரி பெல்ட்மன் நம்பிக்கை 

 

 

காணாமல் போனோர் அலுவலகத்திற்கு பொறுப்பான ஆணையாளர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, விரைவில் காணாமல்போனோர் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகம் உரிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் என நம்புவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்களுக்கான உதவி பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார். 

Jeffrey-Feltman1.jpg

இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களுடனான ஐக்கிய நாடுகள் சபையின் உறவினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்களுக்கான உதவி பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்தார். 

இவ்விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் போன்ற தரப்பினரை சந்தித்து உரையாடியிருந்தார். 

 

இதன்போது இலங்கையின் சிவில் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரதிநிதிகளின் செயற்பாடுகளை பாராட்டியதோடு, காணாமல் போனோர் அலுவலகத்திற்கான ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையினை தொடர்ந்து காணாமல் போனோர் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நம்புவதாகவும் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தார்.

 மேலும் தற்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வலுகட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாத்தல் தொடர்பான சமவாய சட்டம் அரசாங்கம் மக்கள் தொடர்பாக கொண்டள்ள பொறுப்புணர்வின் வெளிப்பாடாகும் எனவும் தெரிவித்தார். 

அத்தோடு இலங்கையில் ஜனநாயக நிலைமைகள் பேணப்படும் என இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளதற்கு அமைவாக அரசியலமைப்பு சீர்திருத்தம், நல்லிணக்கம், பயங்கரவாத மற்றும் வன்முறை செயல்களை கட்டுப்படுத்தல் ஆகிய விடயங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். 

2015 இல் ஆட்சிக்கு வந்தபோது அரசாங்கத்தின் குறிக்கோள்களான சமாதானத்தை நிலைநாட்டுதல், பாதுகாப்பு மற்றும் நாட்டின் செழிப்புத்தன்மை என்பவற்றை வலுப்படுத்தல் போன்றவற்றை நோக்கிய இலங்கை அரசியல் தலைவர்களின் நகர்வுகள் வரவேற்கத்தக்கவை. ஆனால் அதனை குறிப்பிட்ட கால எல்லைக்குள் துரிதமாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

http://www.virakesari.lk/article/31592

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this