Jump to content

கோதபாயவை ஜனாதிபதி ஆக்குவேன் என்கிறார் சுப்ரமணியம் சுவாமி :


Recommended Posts

கோதபாயவை ஜனாதிபதி ஆக்குவேன் என்கிறார் சுப்ரமணியம் சுவாமி :

subramaniam-samy-and-gothapaya.jpg?resiz

2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது வரலாற்றை மாற்றக் கூடிய தேர்தலாக அமையும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோதபாய ராஜபக்ஸவை 2020 இல் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் பெறப்படும் வெற்றியே இதற்கான காரணமாக அமையும் எனவும் அவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

குறித்த தேர்தலின் போது, இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு கோதபாய ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட வேண்டுமென தான் இந்திய அரசாங்கத்தை கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

subramaniam-samy-and-gothapaya2.jpg?resi

http://globaltamilnews.net/2018/70730/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்குங்கோ....இந்தியாவின்ட ஜனாதிபதியா ஆக்குங்கோ... ஆள் அமரிக்கன் சிட்டிசன் தானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 முதலில் 2020 ல் இந்த ஆள் உயிரோடு இருக்குமோ என்று ஜாதகத்தைப் பார்க்கச் சொல்லுங்கோ. கண்டவனெல்லாம் இந்த நாட்டின் ஜனாதிபதியை நியமிக்கற அளவுக்கு தன்னைத் தாழ்த்தி குட்டிச் சுவராகி  நிக்கிறது  இந்த நாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூனா சாமியின்....கற்பனை....கரை புரண்டு ஓடுகின்றது!

அது சரி....மகிந்தவுக்குப் பாரத ரத்னா...பட்டம் எடுத்துக் குடுக்கிற மாதிரிக் கொஞ்சக் காலத்துக்கு முன்னம் கதை சொன்ன மாதிரிக் கிடக்குது!

சாமிக்கு நினைவிருக்கோ..?

2020 இல்...அருணாச்சலப் பிரதேசத்தின் பெரும்பகுதி...சீனாவிடமிருக்கும்!

Link to comment
Share on other sites

11 hours ago, நவீனன் said:

இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு கோதபாய ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட வேண்டுமென தான் இந்திய அரசாங்கத்தை கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி நயவஞ்சகர்கள், கயவர்கள் ஆளுக்காள் குரல்  கொடுக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.