Jump to content

பதவிகளை நீடிக்கும் இரு தலைவர்கள்


Recommended Posts

பதவிகளை நீடிக்கும் இரு தலைவர்கள்

New-china-0e5b53f16c1a0561a4c269dd83f509af811f01c5.jpg

 

கடந்த வாரம் உலக அரங்கில் இரு தலை­வர்­களின் பெயர்கள் கூடு­த­லாக உச்­ச­ரிக்­கப்­பட்­டன. இரு­வரும் பத­வியில் இருப்­ப­வர்கள்.  தத்­த­மது அதி­கா­ரங்­களை நீடித்துக் கொள்ள இரு­வரும் முனை­வ­தாக மேற்­கு­லக ஊட­கங்கள் விமர்­சித்­தன. 

ஒருவர் சீன ஜனா­தி­பதி க் ஷி ஜிங்பிங். மற்­றவர் ரஷ்ய ஜனா­தி­பதி விளாடிமிர் புட்டின். முறை­கே­டான விதத்தில் அதி­கா­ரங்­களைக் குவித்து கொண்டு வாழ்நாள் முழு­வதும் ஆட்­சி­பீ­டத்தில் அமர்ந்­தி­ருப்­பது இரு­வ­ரதும் நோக்கம் என மேற்­கு­லக அர­சியல் ஆய்­வா­ளர்கள் அபாயச் சங்கு ஊதி­னார்கள்.

சீனாவின் மாற்றம்

சீனாவில் கம்­யூனிஸ்ட் கட்­சியின் தலைவர் ஜனா­தி­ப­தி­யாக இருப்பார். ஒரு ஜனா­தி­பதி இரண்டு தட­வைகள் பதவி வகிக்­கலாம். பதவிக் காலத்தின் மீதான கட்­டுப்­பாட்டை நீக்­கு­வது பற்றி கம்­யூனிஸ்ட் கட்சி யோசனை கூறி­யது.

இதற்­காக அர­சியல் யாப்பை மாற்ற வேண்டும். அதனைத் திருத்­து­வ­தற்­கான யோசனை மக்­க­ள­வையில் வாக்­கெ­டுப்­பிற்கு விடப்­படும். மக்­க­ள­வையில் இருப்­ப­வர்கள் கட்சி விசு­வா­சிகள் என்­பதால், பிரே­ரணை நிறை­வே­று­வது உறுதி.

இது மேற்­கு­ல­கத்­திற்குப் பிரச்சினை. ஜனா­தி­ப­தியின் பதவிக் காலம் மீதான கட்­டுப்­பாடு நீக்­கப்­ப­டு­வதால், க் ஷி ஜிங்பிங் வாழ்நாள் முழு­வதும் ஆட்சி பீடத்தில் அமர்ந்­தி­ருக்கும் நிலை தோன்றி விடும் என்­பது மேற்­கு­லகின் அச்சம்.

ரஷ்­யாவின் ஜனா­தி­பதித் தேர்தல்

ரஷ்­யா­விலும் ஜனா­தி­ப­தி­யொ­ருவர் இரு தட­வைகள் மாத்­தி­ரமே பதவி வகிக்­கலாம். இரு தட­வைகள் பதவி வகித்த விளாடிமிர் புட்டின் 2008இல் சிறி­ய­தொரு தந்­திரம் செய்தார். தமது நண்பர் திமித்ரி மெத்­வெ­தவ்வை ஜனா­தி­பதி பத­வியில் அமர்த்தி, அவ­ருக்குக் கீழ் பிர­த­ம­ராக கட­மை­யாற்­றினார்.

அதே வரு­டத்தில், ரஷ்­யாவின் அர­சியல் யாப்பு திருத்­தப்­பட்­டது. ஜனா­தி­ப­தியின் பத­விக்­காலம் நான்கு ஆண்­டு­களில் இருந்து ஆறாண்­டு­க­ளாக மாற்­றப்­பட்­டது. விளாடிமிர் புட்டின் 2012ஆம் ஆண்டில் மீண்டும் ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வானார். எதிர்­வரும் 18ஆம் திகதி மீண்டும் ஜனா­தி­பதித் தேர்தல். இதில் விளாடிமிர் புட்டின் வெற்றி பெறு­வது நிச்­சயம். அதன்­மூலம், 2024ஆம் ஆண்டு வரை அவரே ஜனா­தி­ப­தி­யாக இருப்பார்.

இதுவும் மேற்­கு­ல­கிற்குப் பிரச்­சினை. விளாடிமிர் புட்டின் சர்­வா­தி­கா­ரி­யாக மாறி ரஷ்ய மக்­களை ஒடுக்கி விடு­வாரோ, அவ­ரது இரும்­புப்­பிடி ஆட்­சிக்குள் மக்­களின் கதி என்­ன­வாகி விடுமோ

என்­றெல்லாம் அச்சம் வெளி­யிட்­டன.

மேற்­கு­லகம் போதித்த ஜன­நா­ய­கமும் சீன-­–ரஷ்ய ஆட்சி நிர்­வா­கமும்

மேற்­கு­லகம் போதித்த ஜன­நா­ய­கத்தின் பார்­வையில் ஆராய்ந்தால், க் ஷி ஜிங்பிங், விளாடிமிர் புட்டின் ஆகி­யோரின் பதவி நீடிப்பு முயற்­சிகள் ஜன­நா­யத்­திற்கு விரோ­த­மா­ன­வை­யாகத் தோன்றும். அவை சட்­ட­வி­ரோ­த­மா­னவை என்ற தோற்­றப்­பாட்டை ஏற்­ப­டுத்­து­வதில் மேற்­கு­லக ஊட­கங்கள் பெரும்­பாலும் வெற்றி பெற்­றுள்­ளன என்றே கூற வேண்டும். எனினும், சீன, ரஷ்ய அர­சியல் யாப்பின் பிர­காரம், இவை எந்த வகை­யிலும் தவ­றா­னவை அல்ல.

சீனாவைப் பொறுத்­த­வ­ரையில், கம்­யூனிஸ்ட் கட்­சியின் அர­சியல் யாப்பு வலு­வா­னது. இதன் பிர­காரம், கட்­சியின் தலைமைப் பதவி, இரா­ணு­வத்தின் தலைமைப் பதவி ஆகிய இரு பத­வி­களை வகிப்­ப­வர்கள் மீதான பத­விக்­கா­லங்கள் மீது கட்­டுப்­பாடு கிடை­யாது. இரு பத­வி­க­ளையும் ஜனா­தி­பதி க் ஷி ஜிங்­பிங்கே வகிக்­கிறார். கம்­யூனிஸ்ட் கட்சி ஆட்­சியின் மைய­மாக இருக்­கையில், கம்­யூனிஸ்ட் கட்­சியின் தீர்­மா­னங்கள் அர­சாங்­கத்தில் பிர­தி­ப­லிப்­பதில் என்ன தவறு இருக்­கலாம்?

ரஷ்­யாவின் விவ­கா­ரமும் அப்­ப­டித்தான். அந்­நாட்டின் அர­சியல் யாப்பின் பிர­காரம், ஒருவர் அடுத்­த­டுத்து இரு தட­வை­க­ளுக்கு மேல் ஜனா­தி­பதி பத­வியை வகிக்க முடி­யாது. ஆனால், ஒருவர் எத்­தனை தடவை பதவி வகிக்­கலாம் என்ற கட்­டுப்­பா­டுகள் இல்லை. இதன் பிர­காரம், புட்டின் செய்­தது அர­சியல் யாப்­பிற்கு முர­ணா­னது அல்ல. புட்­டி­னுக்கு கீழ்ப்­ப­டிந்து நடப்­பவர் மெத்­வெதெவ். ஆனால், மெத்­வெ­தெவ்வின் ஆட்­சி­கா­லத்தில் எது­வித இடை­யூறும் செய்­யாமல், அவ­ரது பத­விக்­கா­லத்தை பூர்த்தி செய்ய புட்டின் இட­ம­ளித்தார். மீண்டும் தேர்­தலின் மூலமே ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வாகி, அவர் மக்கள் ஆணைக்கு மதிப்­ப­ளித்தார்.

மக்கள் நேசிக்கும் தலை­வர்கள்

இன்று மேற்­கு­லக ஊட­கங்கள் க் ஷி ஜிங்­பிங்­கையும், விளாடிமிர் புட்­டி­னையும் சர்­வா­தி­கா­ரி­க­ளாக விப­ரித்து நீலிக்­கண்ணீர் வடிப்­பதன் பின்­ன­ணியில் உள்ள அர­சி­யலைப் புரிந்து கொள்­வது இல­கு­வா­னது. இவ்­விரு தலை­வர்­களும் தமது நாட்டை முன்­னேற்றி அமெ­ரிக்கா முத­லான வல்­ல­ர­சு­க­ளுக்கு சவால் விடுக்கும் நிலைக்குக் கொண்டு வந்­தி­ருக்­கி­றார்கள் என்­பது நிதர்­ச­ன­மான உண்மை.

சீனாவைப் பொறுத்­த­வ­ரையில், மாவோ சேதுங், டெங் க்யோபிங் வரி­சையில் மக்கள் மனம் வென்ற தலை­வ­ராக

க் ஷி ஜிங்பிங் திகழ்­கிறார். பொரு­ளா­தா­ரத்தைத் தாரா­ள­ம­ய­மாக்கி, சீனாவை துரித முன்­னேற்­றத்­திற்கு வழி­கோ­லிய நவீன சிற்­பி­யாக க் ஷி ஜின்பிங் கரு­தப்­ப­டு­கிறார். இந்த மனி­தரை மக்கள் மகத்­தான மனி­த­ராக வழி­ப­டு­கி­றார்கள்.

இன்று அமெ­ரிக்­காவின் அர­சியல் ஆதிக்கம் நலி­வ­டைந்த இடங்­களில் சீனாவின் பொரு­ளா­தார ஆதிக்­கத்தை நிலை­நாட்ட வழி­வ­குத்­தவர் என்ற பெருமை ஜனா­தி­பதி க் ஷி ஜின்­பிங்கை சாரும். அமெ­ரிக்­கா­விற்கு பெருமை சேர்த்த உலகின் முன்­னணி வல்­ல­ரசு என்ற பத­விக்கே சவால் விடுக்­கக்­கூ­டிய ஆற்­றலை சீனா­விற்குத் தந்­தவர் அவரே. அத்­த­கைய தலை­வ­ரது பதவி நீடிப்­பதை சீன மக்கள் விரும்­பினால், அதில் மேற்­கு­லகம் கவ­லைப்­ப­டு­வதில் என்ன நியாயம்?

இன்று ரஷ்யா உலகில் நிமிர்ந்து நிற்கக் கூடிய தேச­மாக இருக்­கி­றது என்றால், அந்த நிலை நோக்கி முன்­னேற்­றிய பெருமை விளாடிமிர் புட்­டி­னையே சாரும். சோவியத் ஒன்­றியம் என்ற தேசத்தை சிதைத்த மறு­சீ­ராக்கல் முயற்­சிகள், 1998ஆம் ஆண்டின் நிதி நெருக்­கடி போன்­ற­வற்றால் ரஷ்ய மக்கள் அல்­லற்­பட்டுக் கொண்­டி­ரு­ந்­தனர். அந்த சம­யத்தில் ஆட்­சி­பீ­ட­மே­றிய விளாடிமிர் புட்டின்,

நாட்டில் அர­சியல் ஸ்திரத்­தன்­மையை ஏற்­ப­டுத்­தி­யதன் மூலம் ரஷ்ய தேசம் பற்­றிய நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தினார். நேட்­டோவின் கிழக்கு நோக்­கிய நகர்வைத் தடுத்­ததன் மூலம், ரஷ்­யாவின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தினார். ஜோர்­ஜி­யாவை ஆக்­கி­ர­மித்­ததன் மூலம் இரா­ணுவ ரீதி­யான பலத்தை நிரூ­பித்தார். ஆசிய நாடு­க­ளுடன் உற­வு­களை ஏற்­ப­டுத்­தி­யதன் மூலம் உலக அரங்கில் ரஷ்­யாவின் புகழை ஓங்கச் செய்தார். நாட்டு மக்கள் தம்மை கதா­நா­ய­க­ராக போற்­றக்­கூ­டிய நிலை­மையை உரு­வாக்­கினார். இன்று ரஷ்ய மக்கள் மத்­தியில் புட்­டி­னுக்­குள்ள ஆத­ரவு 80 சத­வீ­தத்தைத் தாண்­டு­வ­தாக புள்ளி விப­ரங்கள் கூறு­கின்­றன.

ஜன­நா­ய­கத்தின் முரண்கள்

நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி, வலுவான ஆளுமைகளாக, தீர்க்க தரிசனத்துடன் தமது பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றும் தலைவர்கள். இந்தத் தலைவர்கள் எவரை ஆள்கிறார்களோ, அந்த மக்களின் விருப்பத்தின் பிரகாரம் தலைவர்களின் ஆட்சிக்காலம் நீடிக்கப்படுமானால், அதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை?

இன்று மக்களைப் பற்றி சிந்திக்காமல், தாம் சொல்வது என்ன, செய்வது என்ன என்பதைப் பற்றி கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல், பொறுப்புக்களைத் தவற விடும் தலைவரே அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருக்கிறார். அவர் குறைந்தபட்சம் அமெரிக்க மக்களின் விருப்பத்தை வென்ற தலைவராகவேனும் இருக்கிறாரா? அது தான் பிரச்சினை.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-03-11#page-3

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.