Sign in to follow this  
நவீனன்

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களின் சூத்திரதாரிகள்

Recommended Posts

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களின் சூத்திரதாரிகள்

aaaa-b97af750a3a15251639232a6e2fba01188594d30.jpg

 

இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கடும்­போக்­கு­வா­தி­களின் திட்­ட­மிட்ட இன­வாத தாக்­கு­தலின் உச்ச நிலை­யி­னையே கண்டி மாவட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள தாக்­குதல் சம்­ப­வங்கள் எடுத்துக் காட்­டு­கின்­றன. இத்­தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்தி கடு­மை­யான தண்­டனை வழங்­காது போனால் முஸ்­லிம்கள் மீண்டும் மீண்டும் பாதிக்­கப்­ப­டு­வார்கள் என்­ப­தனை அர­சாங்கம் புரிந்து கொள்ளல் வேண்டும். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள மேற்­படி தாக்­கு­தல்கள் யாவும் நன்கு திட்­ட­மி­டப்­பட்டு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இதற்கு அர­சி­யல்­வா­திகள் முதல் அதி­கா­ரிகள் வரை ஆத­ரவு வழங்கி இருக்­கின்­றார்கள் என்­பது மறுக்க முடி­யாத உண்­மை­யாகும். திகன மற்றும் தெல்­தெ­னிய பகு­தி­களில் தாக்­கு­தலை மேற்­கொண்­ட­வர்­களை சட்டம் தடுத்து நிறுத்­த­வில்லை. கடும்­போக்­கு­வா­திகள் முதல் நாள் தாக்­கு­தலின் போது சட்­டத்தை சுமார் 04 மணித்­தி­யா­லங்கள் கைகளில் வைத்­தி­ருந்­தார்கள். பொலி­ஸாரின் முன்­னி­லையில் முகங்­களை துணி­யினால் மறைத்துக் கொண்டு தாக்­குதல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டார்கள் என கூறப்­ப­டு­கி­றது .

இதனால் இன­வா­தி­க­ளிடம் சட்டம் மண்­டி­யிட்டு விட்­டதா அல்­லது சட்­டத்­தையும், ஒழுங்­கையும் நிலை நாட்ட வேண்­டி­ய­வர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்­க­ளுக்கு துணை­யாக செயற்­பட்­டார்­களா என்ற சந்­தே­கங்கள் முஸ்­லிம்­க­ளிடம் மட்­டு­மல்ல இந்த நாட்டை உளப்­பூர்­வ­மாக நேசிக்­கின்ற அனைத்து பிர­ஜை­க­ளி­டமும் ஏற்­பட்­டுள்­ளன.

கடும்­போக்கு இன­வா­திகள் தற்­போது மட்­டு­மல்ல சுதந்­திர இலங்­கைக்கு முற்­பட்ட காலத்­தி­லி­ருந்து முஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்தைச் சிதைக்க வேண்­டு­மென்றும், பள்­ளி­வா­சல்­களை தாக்கி அழிக்க வேண்­டு­மென்றும் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்கள் காலத்­திற்கு காலம் வெவ்­வேறு பெயர்­களில் இயங்கிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கடும்­போக்காளர்கள் மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போதும் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள், வர்த்­தக நிலை­யங்கள் போன்­ற­வற்றை தாக்­கி­னார்கள். இத்­த­கைய வன்­செ­யல்­களை செய்­கின்­ற­வர்கள் யாரென்று மிகத் தெளி­வாகத் தெரிந்­தி­ருந்த போதிலும் மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷவின் அர­சாங்கம் அவர்­க­ளுக்கு எதி­ராக முறை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. அர­சாங்­கத்தில் உள்­ள­வர்­களே இன­வாத அமைப்­புக்­க­ளுக்கு துணை­யாகச் செயற்­பட்­டார்கள். சட்­டத்­தி­லி­ருந்து அவர்­களை பாது­காக்கும் நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்­டார்கள்.

ஆனால், இன்று மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்­சியில் நடை­பெற்­றதை விடவும் மிகவும் மோச­மான வகையில் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள், வர்த்­தக நிலை­யங்கள், வீடுகள் தாக்கி அழிக்­கப்­பட்­டுள்­ளன. இந்தச் சம்­ப­வத்தில் முஹம்மட் பாசித் எனும் இளை­ஞனும் கொல்­லப்­பட்­டுள்ளான். இன்­றைய அர­சாங்­கத்­திலும் இன­வா­தி­க­ளுக்கு அதி­கா­ரத்தில் உள்­ள­வர்கள் துணை­யாகச் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றையில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­துள்ளார். அவர்­களின் பெயர்­களை விரைவில் வெளி­யிட இருப்­ப­தாக சபா­நா­யகர் கரு­ஜய சூரிய தெரி­வித்­துள்ளார்.

இலங்கை 2020ஆம் ஆண்டு முழு­மை­யாக பௌத்த நாடாக மாற்­றப்­பட வேண்­டு­மென்று கடும்­போக்­கா­ளர்கள் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­களின் இந்த செயற்­திட்­டத்­திற்கு துணை­யாக செயற்­பட்டு அர­சியல் அதி­கா­ரத்தை அடைந்து கொள்ள வேண்­டு­மென்று ஒரு சில அர­சி­யல்­வா­தி­களும் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­களின் இத்­த­கைய சிந்­த­னைக்கு முஸ்­லிம்­களைப் பலி­யாக்கிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்­களை சிங்­கள மக்­க­ளிடம் பயங்­க­ர­வா­திகள் போன்றும், மோச­மான சிந்­தனை கொண்­ட­வர்கள் என்றும் காட்டிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­களின் இத்­த­கைய இன­வாத பிர­சா­ரங்­க­ளுக்கு பெரும்­பான்­மை­யான பௌத்­தர்கள் ஆளா­க­வில்லை. ஆயினும், ஒரு குறிப்­பிட்ட தொகை­யி­னரே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இத்­த­கைய வன்­செ­யல்­களை மேற்­கொண்டு வரு­கின்­றார்கள்.

 கடும்­போக்கு இன­வா­திகள் சமூக வலைத் தளங்­களைப் பயன்­ப­டுத்­தியே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­களை மேற்­கொண்­டுள்­ளார்கள். நாட்டின் பல பாகங்­க­ளிலும் உள்ள இன­வா­திகள் சமூக வலைத் தளங்­களின் மூல­மாக ஓர் இடத்­திற்கு அழைக்­கப்­பட்­டதால் அவர்கள் மிகவும் நேர்த்­தி­யாக வன்­செ­யல்­களை மேற்­கொண்­டுள்­ளார்கள்.

இலங்­கையின் அரச புல­னாய்வுப் பிரிவு மிகவும் பலம் வாய்ந்த ஒன்­றாகும். புலி­களின் தோல்­விக்கு அரச புல­னாய்வுப் பிரிவின் செயற்­பா­டுகள் முக்­கிய கார­ண­மாகும். ஆதலால், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நீண்ட கால­மாக முன்­னெ­டுக்­கப்­பட்ட நாச­கார நட­வ­டிக்­கை­க­ளையும் அரச புல­னாய்வுப் பிரிவு அறிந்­தி­ராது இருக்க வாய்ப்பே இல்லை என்­பதே முஸ்­லிம்­களின் நிலைப்­பா­டாகும்.

அம்­பா­றையில் முஸ்லிம் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான ஹோட்டல் ஒன்றில் வாங்­கப்­பட்ட கொத்து ரொட்­டியில் கருத்­தடை மாத்­திரை சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக வேண்டு­மென்றே குழப்­பத்தை ஏற்­ப­டுத்தி அங்­குள்ள பள்­ளி­வா­ச­லையும், முஸ்­லிம்­களின் கடை­க­ளையும் உடைத்து சேதப்­ப­டுத்­தி­னார்கள் . இதனால், முஸ்­லிம்கள் கொதித்து எழு­வார்கள் என்று அவர்கள் கணித்த போதிலும் முஸ்­லிம்கள் பொறுமை காத்­தார்கள். இதனால், தோல்­வி­ய­டைந்த இன­வா­திகள் தற்­செ­ய­லாக 03 முஸ்­லிம்­க­ளுக்கும், ஒரு சிங்­கள இளை­ஞ­னுக்­கு­மி­டையே ஏற்­பட்ட மோத­லை­ய­டுத்து ஏற்­பட்ட மர­ணத்தைப் பயன்­ப­டுத்தி தமது இன­வா­தத்தை அரங்­கேற்­றி­யுள்­ளார்கள்.

மேலும், அம்­பாறைத் தாக்­கு­தலில் தோல்­வி­ய­டைந்த இன­வா­திகள் கண்டி மாவட்­டத்தில் முஸ்­லிம்­களின் பல பிர­தே­சங்­களை இலக்கு வைத்­துள்­ளார்கள்.

   இதற்­காக மிகப் பெரிய முன் ஆயத்­தங்­களை மேற்­கொண்­டுள்­ளார்கள். இதற்­காக நாட்டின் பல பாகங்­க­ளிலும் உள்­ள­வர்கள் வர­வ­ழைக்­கப்­பட்­டுள்­ளார்கள். சமூக இணைய தளங்­களில் செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளார்கள். தாக்­கு­த­லுக்கு தேவை­யான பொருட்கள், நிதி என்­ப­வற்றை சேக­ரித்­துள்­ளார்கள். தாக்­குதல் நடத்த வேண்­டிய இடங்­களில் செயற்­பட வேண்­டி­ய­வற்றை தெளி­ப­டுத்­தி­யுள்­ளார்கள். இவை போன்று அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்­டதன் பின்­னர்தான் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டுள்­ளார்கள். இவ்­வ­ளவு காரி­யத்தை ஒரு நாளில் செய்ய முடி­யாது. ஆதலால், அம்­பாரை தாக்­கு­தலை மேற்­கொண்­டதன் பின்னர் தெல்­தெ­னி­யாவில் இடம்­பெற்ற மோத­லுக்கு முன் கூட்­டியே திட்­ட­மிட்­டுள்­ளார்கள் என்­பது புல­னா­கின்­றது. 

      மேலும், தாக்­குதல் யாவும் பிர­தான வீதி­களில் காணப்­பட்ட பள்­ளி­வா­சல்கள், வர்த்­தக நிலை­யங்கள் மீதே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. வெளி மாவட்­டங்­க­ளி­லி­ருந்து அழைக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு தாக்­குதல் நடத்தும் இடங்­களைப் பற்­றிய பூரண அறிவு இருக்­காது. இத­னால்தான் பிர­தான வீதியில் தாக்­கு­தலை மேற்­கொள்­வதே அவர்­க­ளினால் தப்பிச் செல்­வ­தற்கு இல­கு­வாக இருக்­கு­மென்று கணிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும், இத்­தாக்­கு­தலை அவ­தா­னிக்கும் போது மிகவும் பரீட்­ச­ய­மா­ன­வர்­க­ளி­னால்தான் இத்­தாக்­குதல் திட்­ட­மி­டப்­பட்­டி­ருக்க வேண்டும். இதனை நிரூ­பிக்கும் வகையில் கலா­நிதி சரத் அமு­னு­க­மவின் கருத்­துக்கள் அமைந்­துள்­ளன. அதா­வது, வெளி­மா­வட்­டங்­க­ளி­லி­ருந்து வந்த அர­சியல் நிகழ்ச்சி நிரலைக் கொண்ட சதி­கா­ரர்­க­ளி­னா­லேயே இத்­தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இதில், அர­சியல் ஆத­ர­வா­ளர்கள், ஓய்­வு­பெற்ற பாது­காப்பு அதி­கா­ரிகள், தற்­போது பாது­காப்புச் சேவையில் இருக்­கின்ற ஒருவர் எனப் பலர் சம்­பந்­தப்­பட்­டுள்­ளார்கள் என்­பது நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது என அவர் தெரி­வித்­துள்ளார்.

இதே வேளை, இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு கண்டி திகன, தெல்­தெ­னிய பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்கள், வேறொரு சம்­ப­வத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அச்­சம்­ப­வத்­துடன் எவ்­வி­தத்­திலும் தொடர்­பற்ற சில இன­வா­தி­களால் திட்­ட­மிட்டு வன்­முறை தூண்­டப்­பட்­டுள்­ளன என்­பது தெளி­வா­கின்­ற­தென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எழு­திய கடி­தத்தில் தெரி­வித்­துள்­ளது.

ஆகவே, பல­த­ரப்­பட்­ட­வர்­களின் கருத்­துக்கள், ஆய்­வு­களின் அடிப்­ப­டையில் கண்டி மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் திட்­ட­மிட்ட வகையில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளமை உண்­மை­யாகும்.

    இத்­தாக்­கு­தலில் அர­சியல் கார­ணிகள் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­படும் நிலையில், அர­சாங்­கத்­திற்கு நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக எதி­ர­ணி­யி­னரின் சதி என்று ஆளும் தரப்­பி­னரும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக வரு­கின்ற நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னத்­தையும், பிணை முறி விவ­கா­ரத்­தையும் திசை திருப்­பு­வ­தற்­காக முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்று எதி­ர­ணி­யி­னரும் குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். தாக்­கு­தலை மேற்­கொண்­ட­வர்கள் மர­ண­ம­டைந்த சிங்­கள இளை­ஞனின் குடும்­பத்தின் வறு­மைக்கு உதவ முன் வர­வில்லை. இதனால் அவர்­களின் உள்­நோக்கம் மேலும் தெளி­வா­கின்­றது. ஆயினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­குதல் அர­சியல் சதி­யல்ல. ஆளும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் திற­மை­யின்­மையைக் காட்­டு­வ­தாகத் தெரி­வித்­துள்ளார். அர­சியல் சதி­யாக இருந்­தாலும் அதனை அடக்­கு­வ­தற்கு அர­சாங்­கத்தின் திறன் பயன்­ப­ட­வில்லை என்­பது உண்­மை­யாகும். அதே வேளை, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ தமது ஆட்­சியின் போது முஸ்லிம் விரோத இன­வாத சக்­தி­களை அடக்­கு­வ­தற்கு தவ­றி­ய­மைதான் இன்று முஸ்­லிம்கள் அடைந்­துள்ள துன்­பத்­திற்கும், இழப்­புக்கும் கார­ண­மாகும். ஆதலால், கடந்த அர­சாங்­கமும் பௌத்த கடும்­போக்­கு­வா­தி­களை கட்­டுப்­ப­டுத்­த­வில்லை என்ற உண்­மையை அவர் மறந்து கருத்­துக்­களை வெளி­யிட முடி­யாது. பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்ட போது அது பற்றி தனக்குத் தெரி­யாது. அது குறித்து முஸ்லிம் அமைச்­சர்கள் என்­னிடம் தெரி­விக்­க­வில்­லை­யென முழுப் பூச­ணிக்­காயை சோற்றில் மறைத்த கதையை என்­ன­வென்ற சொல்­லு­வது.

இதே வேளை, இத்­தாக்­கு­தலின் பின்­ன­ணியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தொடர்ச்­சி­யாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் பிக்­கு­களும் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­க­லா­மென்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.

இதே வேளை, தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய முக்­கிய சூத்­தி­ர­தா­ரிகள் 10 பேரையும்; அவர்­களின் ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட்ட 71 பேரையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இத்­தாக்­கு­தலில் 24 பள்­ளி­வா­சல்கள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. பல வீடு­களும், வர்த்­தக நிலை­யங்­களும் தீயிட்டுக் கொளுத்­தப்­பட்­டுள்­ளன. பல கோடி ரூபா பெறு­ம­தி­யான சொத்­துக்கள் அழிக்­கப்­பட்­டுள்­ளன. இவற்­றிக்கு முழு­மை­யான நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­கு­ரிய அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் அர­சாங்கம் துரி­த­மாக மேற்­கொள்ள வேண்டும். இத்­தாக்­கு­தல்கள் நடை­பெற்ற நெருக்­க­டி­யான நிலையில் அமைச்­சர்கள் றிசாட் பதி­யுதீன், ரவூப் ஹக்கீம் ஆகி­யோர்கள் களத்தில் நின்­ற­மையை பாராட்­டுதல் வேண்டும். இந்த நடை­முறை முஸ்­லிம்­களின் அர­சியல் செயற்­பா­டு­க­ளிலும் வருதல் வேண்டும். ஒற்­று­மைப்­பட்­டால்தான் முஸ்லிம் சமூ­கத்தை பாது­காத்துக் கொள்­ள­லா­மென்­பது மீண்டும் ஒரு தடவை நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. இதே வேளை, முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மீதும், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் றிசாட் பதி­யுதீன் மீதும் குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைப்­பதில் அக்­க­றை­யுடன் செயற்­பட்ட அர­சி­யல்­வா­திகள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­முறை குறித்து எக்­க­ருத்­துக்­களை வெளி­யி­டாது வீடு­க­ளுக்குள் முடங்­கி­யுள்­ள­மையை கண்­டிக்­காது இருக்­கவும் முடி­யாது. முஸ்லிம் சமூ­கத்தின் இருப்பு, பாது­காப்பு போன்­றன அர­சியல் கார­ணி­க­ளுக்கு அப்பால் சமூகம் என்ற அடிப்­ப­டையில் அமைய வேண்டும். அர­சியல் கட்­சி­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் சமூகத்திற்காகவே என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதே வேளை, முஸ்லிம் சமூகம் மிகுந்த துன்பத்தில் உள்ள நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் கருத்துக்கள் உள்ளன. அவர் முஸ்லிம்களினால்தான் சிங்களவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டது. இதனை தான் நிருபிக்கத் தயார். என்னோடு விவாதிக்க முஸ்லிம் அமைச்சர்கள் தயாரா என்று சவால் விட்டுள்ளார். மேலும், அடித்தால் அடிப்போம் என்று முஸ்லிம்களை எச்சரிக்கை செய்துள்ளார். இவர் விடயத்தில் அரசாங்கம் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.

இதே வேளை, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்துடன் பயணிக்க முடியுமா என்பதனை ஆராய வேண்டும். அரசாங்கம் பௌத்த இனவாத அமைப்புக்களுக்கு அச்சப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும், முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் பௌத்த இனவாத அமைப்புக்களுடன் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு நெருக்கமான தொடர்புகள் உள்ளன. இத்தகையவர்கள் உள்ள அரசாங்கத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு ஏற்படும் அநியாயங்களை தடுக்க முடியாது. அரசாங்கம் ஒரு போதும் இனவாதிகளுடன் தொடர்புகளை பேண முடியாது. அவர்களினூடான தொடர்புகள் நாட்டின் நிலையான ஆட்சிக்கு பாதகமாகவே அமையும். இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ நல்ல உதாரணமாகும். பௌத்த இனவாதிகளின் தொடர்புதான் அவரின் தோல்விக்கு காரணமாகும்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-03-11#page-2

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this