Sign in to follow this  
நவீனன்

அணிசேரா இயக்கம் புதிய திசையை நோக்கி பயணிக்குமா?

Recommended Posts

அணிசேரா இயக்கம் புதிய திசையை நோக்கி பயணிக்குமா?

 

உலக வல்­ல­ர­சு­க­ளான ஐக்­கிய அமெ­ரிக்­காவும் சோவியத் ரஷ்யாவும் அர­சியல், இரா­ணுவ, பொரு­ளா­தார, விஞ்­ஞான துறை­களில் ஜாம்­ப­வான்­க­ளாக விளங்­கிய கால­கட்­டத்­தில் அபி­வி­ருத்­தி­ய­டைந்­து­வரும் மூன்றாம் உலக நாடுகள் குறிப்­பாக ஆசிய, ஆபி­ரிக்க, இலத்­தீன்­ அ­மெ­ரிக்க நாடுகள் வல்­ல­ர­சு­களின் ஆதிக்­கத்­தினால் ஏற்­பட்ட பாதக நிலை­மை­களைக் கருத்­திற்­கொண்­டன. நேர­டி­யாக இரு வல்­ல­ர­சு­களின் நிகழ்ச்சி நிர­லுடன் இணை­யாமல் மூன்­றா­வது அணி­யாக சர்­வ­தேச மேடை­களில் பல நாடு­க­ளினைக் கொண்ட ஒரு அணி உரு­வாக வேண்­டு­மென்ற வேட்­கையில் இந்­தி­யாவின் முதல் பிர­தமர் ஜவ­ஹர்லால் நேரு, இந்­தோ­னே­சிய ஜனா­தி­பதி சுகர்ணோ, எகிப்­திய ஜனா­தி­பதி நாசர், யூகோஸ்­லா­விய ஜனா­தி­பதி மார்சல் டிட்டோ, கானா ஜனா­தி­பதி நிக்­கொ­ரோமா ஆகி­யோரின் கூட்­டு­மு­யற்­சியால் மூன்­றா­வது அணி உரு­வாக வேண்டும் என்­கின்ற சிந்­தனை அணி­சேரா இயக்கம் உரு­வாகக் கார­ண­மாக இருந்­தது. அத்­துடன் புகழ்­பெற்ற இந்­திய இரா­ஜ­தந்­திரி ஏ.மு. கிருஸ்­ண­மேனன் 1953 ஆம் ஆண்டில் ஐ.நா. சபையில் உரை­யாற்­றிய போது முதன்­மு­த­லாக அணி­சே­ராமை பற்றி பேசினார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இக்­கா­லப்­ப­கு­தியில் 1954 ஆம் ஆண்டில் கொழும்பில் நடை­பெற்ற கூட்டம் ஒன்றில் இந்­திய பிர­தமர் ஜவர்ஹர்லால் நேரு கூட்­டுச்­சே­ராமை பற்றி உரை­யாற்­றினார். எல்­லா­வற்­றிற்கும் மேலாக ஜவ­ஹர்லால் நேரு இந்­திய, சீன உற­வு­களைப் பற்றி அது எவ்­வாறு அமைய வேண்டும் என்­கின்ற ஐந்து கொள்­கை­களை முன்­வைத்தார். ஜவ­ஹர்லால் நேரு மிகுந்த முற்­போக்­கான சிந்­த­னை­களைக் கொண்­டவர்.கால­னித்­து­வ ஏகா­தி­பத்­திய எதி­ர்ப்­பாளர், சீனா­வுடன் நல்­லு­ற­வு­களைப் பேணி­யவர். இந்­திய–சீன உற­வுக்கு அவர் முன்­வைத்த ஐந்து கொள்­கை­களும் ஐந்து தூண்கள் என வர்­ணிக்­கப்­ப­டு­கின்­றன. அவை­யா­வன;

1. ஆள்­புல நிலப்­ப­ரப்பு, இறைமை ஆகி­ய­வற்றை பரஸ்­பரம் மதித்தல்.

2. பரஸ்­பர ஆக்­கி­ர­மிப்­பின்மை.

3. உள்­வி­வ­கா­ரங்­களில் தலை­யி­டாமை.

4. சமா­தான சக­வாழ்வு.

5. சமத்­து­வம் ­ப­ரஸ்­பர நன்மை.

இந்­தக்­ கா­லப்­ப­கு­தியில் 1955 இல் இந்­தோனே­சி­யாவின் பாண்டுங் நகரில் இடம்­பெற்ற ஆசிய, ஆபி­ரிக்க நாடு­களின் மாநாடு அணி­சேரா இயக்­கத்­திற்கு முன்­னோடி என வர­லாற்­றா­சி­ரி­யர்கள் வர்­ணிக்­கின்­றனர். ஜவ­ஹர்லால் நேரு குறிப்­பிட்ட ஐந்து கொள்­கை­களும் ஏறக்­கு­றைய பாண்டுங் மா­நாட்டின் கொள்­கை­க­ளாக அமைந்­தன. இந்­தோ­னே­சிய ஜனா­தி­பதி சுகர்­ணோவின் முயற்­சியே பாண்டுங் மா­நா­டாகும். பாண்டுங் மா­நாட்டு கோட்­பா­டு­க­ளா­னவை;

1. ஐ.நா. சாசன கோட்­பா­டு­களின் அடிப்­ப­டை­யில் மனித உரி­மை­க­ளை­ ம­தித்தல்.

2. சகல நாடு­க­ளி­னதும் இறைமை, ஆட்­புல நிலப்­ப­ரப்பை அங்­கீ­க­ரித்தல்.

3. தேசிய விடு­தலை இயக்­கங்­களை அங்­கீ­க­ரித்தல்.

4. பெரிய,சிறிய நாடு­களின் சமத்­துவம், சகல இனங்­க­ளையும் அங்­கீ­க­ரித்தல்.

5. இன்­னொரு நாட்டின் உள்­வி­வ­கா­ரங்­களில் தலை­யி­டாமை.

6. ஐ.நா. சாச­னப்­படி ஒவ்­வொரு நாடும் தனது உரி­மை­களை பாது­காக்க தனி­யா­கவோ, கூட்­டா­கவோ நட­வ­டிக்­கை­யெ­டுக்கும் உரி­மையை மதித்தல்.

7. ஒரு நாட்டின் ஆட்­புல நில உரி­மையை அல்­லது ஒரு நாட்டின் அர­சியல் சுதந்­தி­ரத்தை மீறி அச்­சு­றுத்தல் விடுக்­காமை அல்­லது பலம் பாவிக்­காமை.

8. ஐ.நா. சாச­னப்­படி சர்­வ­தே­ச­ மு­ரண்­பா­டு­களை சமா­தான வழி­களில் தீர்த்தல்.

9. பரஸ்­பர நலன்­களும் கூட்­டு­றவும்.

10. நீதி­யையும் சர்­வ­தேச மதிப்­பீ­டு­க­ளையும் மதித்தல்

இவ்­வாறு ஐந்து தலை­வர்­களும் முன்­மொ­ழிந்த பிரே­ர­ணைகள் மூலம் உரு­வா­கிய அணி­சேரா இயக்­கத்தின் முத­லா­வது உச்சி மா­நாடு யூகோஸ்­லா­வியா தலைநகர் பெல்­கி­ரேட்டில் 1961 ஆம் ஆண்டு நடை­பெற்­றது. இரண்டு வல்­ல­ர­சு­களின் போட்­டியால் பனிப்போர் காலத்தில் அணி­சேரா இயக்கம் அர­சியல் ரீதி­யாக முக்­கி­யத்­துவம் பெற்­றது. அணி­சேரா இயக்­கத்தின் கொள்­கைகள் அடிப்­ப­டையில் அர­சி­ய­லுக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்­தது. எனினும் நாடு­க­ளி­டையே வர்த்­தக உற­வுகள் நியா­ய­மான முறையில் அமைக்­கப்­பட வேண்டும், தொடர்­பா­டலில் ஐக்­கியம் பேணப்­பட வேண்டும் என்ற கொள்­கை­க­ளையும் பின்னர் நடை­பெற்ற மா­நா­டு­களில் தீர்­மா­னித்­தன. எவ்­வா­றெ­னினும் ஆபி­ரிக்­காவில் நில­விய நிற வெறியும் அதா­வது தென்­னா­பி­ரிக்கா, றொடி­சியா (இன்­றைய சிம்­பாவே) நாடு­களில் அன்­றைய நிற­வெறி சிறு­பான்மை ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக நடை­பெற்ற போராட்­டங்­க­ளுக்கும், அரபு -– இஸ்ரேல் பிரச் ­ச­ினையில் பலஸ்­தீன மக்­களின் விடு­தலை, சுதந்­திரம் ஆகி­ய­வற்­றுக்­கா­கவும் பெருங்­கு­ரலில் ஆத­ரவு அளித்­தமை சாத­னை­க­ளாக கரு­தப்­ப­டு­கின்­றன.1960 களில் அணி­சேரா இயக்கம் ஸ்தாபிக்­கப்­பட்ட போது ஏரா­ள­மான தென்­னா­சிய நாடுகள் கால­னித்­து­வத்­தி­லி­ருந்து விடை­பெற்று விட்­டன. ஆபி­ரிக்க நாடு­க­ளான கென்யா, கானா, நைஜீ­ரியா, தன்­சா­னியா, சம்­பியா போன்ற நாடுகள் 1950 களின் இறு­தி­க­ளி­லும 1960 களின் ஆர­ம்­பத்­திலும் படிப்­ப­டி­யாக காலனித்­து­வத்­தி­லி­ருந்து விடு­தலை பெற்­றன. உல­கத்­திற்கு சுதந்­திரப் போராட்ட வழி­மு­றை­களில் புதிய கோட்­பாட்­டினை அதா­வது கத்­தி­யின்றி, இரத்­த­மின்றி, பலாத்­கா­ர­மின்றி போராடி வெற்றி கண்ட காந்­தியக் கோட்­பாடு பிர­ப­ல­ம­டைந்­தது. ஆபி­ரிக்க நாடுகள் குறிப்­பாக நெல்சன் மண்­டே­லாவின் தலை­மையில் ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் கட்சி நிற­வெ­றிக்கு எதி­ராகப் போரா­டி­யமை நல்ல உதா­ர­ண­மாகும். சில மத்­திய கிழக்கு நாடு­களும் அணி­சேரா இயக்கம் ஆரம்­பிக்­கப்­பட்ட போது ஐரோப்­பிய கால­னித்­து­வத்­தி­லி­ருந்து விடு­தலை பெற்­று­விட்­டன. 1961 ஆம் ஆண்டு பெல்­கி­ரேட்டில் முத­லா­வது உச்­சி­ம­ா­நாட்டை அந்­நாட்டு தலை­வரின் தலை­மையில் நடத்தி 17 உச்சி மா­நா­டு­களை நடத்­தி­யுள்­ளது. 2012இல் ஈரான் தலை­நகர் தெஹ்ரான் தலை­வரின் தலை­மையில் நடை­பெற்­றது. அடுத்த உச்சி மா­நாடு வெனின்­சூலா தலை­நகர் கராகஸ் நகரில் 2017ஆம் ஆண்டு நடை­பெற்றது. நூற்றி இரு­பது அங்­கத்­துவ நாடு­களைக் கொண்ட இப்­பா­ரிய உச்சி மா­நாட்டில் சுற்­றுச்­சூழல் சீர­ழிதல், சுவாத்­திய நிலை வேறு­பா­டுகள், ஆயுத பரி­க­ரணம், அரச பயங்­க­ர­வாதம், பயங்­க­ர­வாதம், இன, மத முரண்­பா­டு­களால் தக­ரா­றுகள் உரு­வா­குதல் ஆகி­ய­ பல தீர்­மா­னங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டன.

சோவியத் யூனி­யனின் உடைவு ஆதிக்க சம­வ­லுவில் பெரும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யது. இரு வல்­ல­ர­சுகள் உலக அர­சியல், இரா­ணுவ பொரு­ளா­தார மேம்­பாட்­டினை கொண்­டி­ருந்த நிலை மாறி அமெ­ரிக்கா ஏக வல்­ல­ர­சான சூழ்­நிலை உரு­வா­கி­யது.குறிப்­பாக அமெ­ரிக்­காவின் ஏக­வல்­ல­ரசு நிலை­மையும் ஐரோப்­பிய நாடு­களின் ஆதிக்க மனப்­பான்­மையும் உலக விட­யங்­களில் அணி­சேரா இயக்கம் கவனம் செலுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. உதா­ர­ண­மாக அமெ­ரிக்­காவின் தலை­மையில் 2003 ஆம் ஆண்டு ஈராக்கின் இறை­மையை மதிக்­காமல் ஆக்­கி­ர­மிப்புச் செய்­தமை, வட­கொ­ரி­யாவின் அணுத்­திட்­டமும் அமெ­ரிக்­காவின் அச்­சு­றுத்தல் நட­வ­டிக்­கை­க­ளையும், அணி­சேரா இயக்கம் கடு­மை­யாக விமர்­சனம் செய்­துள்­ளது. இரண்டு வல்­ல­ரசுப் போட்­டி­களில் சிக்கிச் சீர­ழி­யாமல் இரண்டு வல்­ல­ர­சு­க­ளி­னதும் அணு­ ஆ­யுத ஆதிக்கப் போட்­டியில் சிக்­கா­மலும் மூன்­றா­வது சக்­தி­யாக இயங்­கிய அணி­சேரா இயக்கம்,ஏக­வல்­ல­ரசு சூழ்­நி­லையில் என்ன பங்­கினை வகிக்கப் போகின்­றது என்­கின்ற வினா அர­சியல் அறி­ஞர்­க­ளி­டையே தொடர்ந்து விவா­திக்­கப்­ப­டு­கின்­றது. அணி­சேரா இயக்­கத்தின் கோட்­பாட்டு ரீதி­யான கொள்­கை­களில் கால­னித்­துவ ஒழிப்பு, நிற­வெறி ஆட்­சி­க­ளுக்­கெ­தி­ரான முனைப்பு, இரு­வல்­ல­ர­சு­க­ளு­டனும் கூட்­டுச்­சே­ராமை என்ற கொள்­கைகள் மூன்­றுமே அணி­சேரா இயக்கம் ஆரம்­பிக்­கப்­பட்ட போது கோட்­பாட்டு ரீதி­யாக இருந்தன் தற்­போ­தைய நிலை மாறி­விட்­டது என்­பது சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய விடயம் ஆகும். வேறு வார்த்­தையில் கூறினால் இன்று இரு வல்­ல­ர­சுகள் உலகைக் கூறு­போ­ட­வில்லை. இன்று எந்த நாடும் ஐரோப்­பிய கால­னித்­து­வத்தின் கீழ் ஆளப்­ப­ட­வில்லை. நிற­வெறி, வெள்ளைக்­கார சிறு­பான்­மை­யினர் ஆட்சி நடத்­திய தென்­னா­பி­ரிக்கா இன்று நிற­வெறி ஆட்சி இல்­லா­தொ­ழிந்­துள்­ளது. முன்னர் றொடி­சியா என்­ற­ழைக்­கப்­பட்ட இன்­றைய சிம்­பா­ப்வேயில் இன­வெறி வெள்ளைக்­கார சிறு­பான்மை ஆட்சி முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்டு பெரும்­பான்­மை­யான கறுப்­பின மக்­களின் ஆட்சி கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. தென்­னா­பி­ரிக்­காவில் நெல்சன் மண்­டே­லாவும் சிம்­பா­வேயில் றொபேட் முகா­பேயும் ஆட்சி தலை­வர்­க­ளாக புதிய அர­சியல் நிலை­மையில் ஆட்­சிப்­பொ­றுப்பை ஏற்­றனர். இந்தச் சூழ்­நி­லையில் கால­னித்­துவம் முடி­வுக்­கு­கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. அதே­போன்று நிற­வெறி சிறு­பான்மை ஆட்­சி­களும் முடி­வுக்குக் கெண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. இரு­வல்­ல­ர­சு­களால் ஆளப்­பட்ட பனிப்போர் இன்று இல்லை. எனவே அணி­சேரா இயக்­கத்தின் இயக்கம் இன்று அவ­சி­ய­மா­கின்­றதா? என்­கின்ற கேள்­வியும் மீண்டும் மீண்டும் எழுப்­பப்­ப­டு­கின்­றது. அமெ­ரிக்கா ஏக வல்­ல­ர­சாக பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. சோவியத் ரஷ்யா என்ற வல்­ல­ரசு ஒழிந்­தாலும் கடந்த நூற்­றாண்டின் இறு­தியில் புதிய அதி­கார மையங்கள் தோன்­றி­யதைத் தட்­டிக்­க­ழிக்க முடி­யாது. புதிய அதி­கார மையங்­க­ளாக சீனா, இந்­தியா, பிரேசில் என்­ப­வற்றைக் குறிப்­பி­டலாம். அத்­துடன் அணி­சேரா இயக்­கத்தின் பெரும் குர­லாக விளங்­கிய ஈராக், ஈரான் போன்ற நாடு­களும் இன்று பெரும் சவால்­களை எதிர்­நோக்­கு­கின்­றன. இன்­றைய சூழ்­நி­லையில் இரண்­டா­வது பனிப்போர் உரு­வா­கலாம் என்று சில அறி­ஞர்கள் கருத்து வெளியிட்­டுள்­ளனர். அண்­மையில் கடந்த சில வாரங்­க­ளாக சீனா, அமெ­ரிக்­கா­விற்­கி­டையில் நிகழும் வர்த்­தகப் பொரு­ளா­தாரப் போட்­டியும் சீனாவின் மிகப்­பெ­ரிய பூகோளத் திட்­ட­மான (One Belt One Road – OBOR) ஒரு­பட்டி ஒரு பாதைத் திட்­டமும் உலக நாடுகள் பல­வற்றை சீனாவின் பொரு­ளா­தார கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வரும் சீனாவின் அர­சியல் தந்­தி­ரோ­பா­யமும் உலக வங்­கிக்கு நிக­ரான சீனாவின் ஆசிய உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி வங்­கியின் தாரா­ள­மான கடன், உதவி வழங்கும் செயற்­பா­டு­களும் சீனா ஒரு வல்­ல­ர­சாக பரி­ண­மிக்­கின்­றது என்­பதை கோடிட்டுக் காட்­டு­கின்­றன. இதன் கார­ண­மா­கவே இரண்­டா­வது பனிப்போர் பற்றி பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டுள்­ளது.

தீர்க்­கப்­ப­டாத புதிய பிரச்­சி­னைகள் உலகை அச்­சு­றுத்­து­கின்­றன. இவை புதிய வடிவம் எடுத்­துள்­ளன. இவற்­றுக்­கெ­தி­ரா­கவும் அணி­சேரா இயக்­கத்தின் ஒன்­று­பட்ட பல­மான நட­வ­டிக்கை அவ­சி­ய­மா­கின்­றது. கால­னித்­துவம் முற்­று­மு­ழு­தாக ஒழிக்­கப்­பட்­டுள்­ளது. இருப்­பினும் நவ கால­னித்­துவம் புதிய வடி­வத்தில் பல­வீ­ன­மான நாடு­களில் வல்­லா­திக்க சக்­தி­க­ளின்­ த­லை­யீட்டின் மூலம் ஆட்­சி­க­ளுக்கு தலை­யி­டியைக் கொடுக்­கின்­றது. வறுமை, குறை­வி­ருத்தி ஆகி­யவை இன்­னமும் பாரிய பிரச்­ச­ினை­க­ளாக உலகை அச்­சு­றுத்­து­கின்­றன. சுற்­றுச்­சூழல் சீர­ழிதல், சுவாத்­திய நிலை வேறு­பா­டுகள், ஆயுத பரி­க­ரணம், அரச பயங்­க­ர­வாதம், பயங்­க­ர­வாதம், இன, மத முரண்­பா­டு­களால் தக­ரா­றுகள் உரு­வா­குதல் ஆகி­யவை அபி­வி­ருத்­தி­ய­டைந்­து­வரும் நாடு­களைச் சீர­ழிக்­கின்­றன. பல சர்­வ­தேச மன்­று­களில் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான குரல் ஓங்கி ஒலித்­தாலும் பயங்­க­ர­வா­தத்தின் கோரப் பற்கள் அன்­றாட செய்­தி­க­ளா­கின்­றன.ஆசியா, ஆபி­ரிக்கா கண்­டங்­களில் ஏரா­ள­மான நாடுகள் வறு­மையைத் தணிப்­ப­தற்குப் பெரும் பிரயத்­த­னங்­களை மேற்­கொண்­டாலும் உலக பொரு­ளா­தார முறைமை இந்­நா­டு­க­ளுக்கு சாத­க­மா­ன­தாக இல்லை. உல­க­ம­ய­மாதல், கடன்­சுமை, நீதி­யற்ற வர்த்­தக கொள்­கைகள், குறைந்­து­வரும் வெளிநாட்டு உதவி, உதவி வழங்கும் நாடு­கள் நிறு­வ­னங்­களின் நிபந்­த­னைகள், நிதி உதவி வழங்கும் நிறு­வ­னங்­களின் தீர்­மானம் மேற்­கொள்­வதில் ஜன­நா­யக தன்மை குறை­வாக காணப்­ப­டுதல், இவ்­வா­றான சர்­வ­தேச போக்­குகள் அபி­வி­ருத்­தி­ய­டைந்­து­வரும், அபி­வி­ருத்­தி­ய­டை­யாத நாடு­க­ளுக்கு அர­சியல், பொரு­ளா­தார ரீதியில் பாத­க­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­து­கின்­ற­ன .­நி­லைத்து நிற்கும் பொருளாதாரத்தை அமைப்பதற்கும் MDG என அழைக்கப்படும் (Millennium Development Goals) மில்லேனியம் அபிவிருத்தி இலக்குகளை (08 இலக்குகள்) அடைய முயற்சித்தாலும் வறுமை பெரும் சுமையாகவே இருந்தது. தற்போது 2015 2030 ஆம் ஆண்டுக்குள் ஐ.நா. வின் திட்டமிடலில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கான இலக்குகள் (Millennium Development Goals) 17 இலக்குகளை நடைமுறைப்படுத்துவதற்கான நிதி, பங்குடமை மற்றும் ஆலோசனை நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச பொருளாதார முறைமையைச் சீராக்க வேண்டும்மென்று (World Trade Organization) .உலக வர்த்தக மாநாடுகள் போன்றவற்றில் குரல்கள் ஒலிக்கின்றன.

இச் சவால்கள் அணிசேரா இயக்கத்தின் சவால்களாக உற்றுநோக்கப்பட வேண்டும். இப்பிரச்சினைகளிலிருந்து ஓரளவிற்கு விடுபடுவதற்கு அணிசேரா இயக்கம் புதிய திசையை நோக்கிப் பயணிக்க வேண்டும். மாறிவரும் உலகஅரசியல் சமன்பாட்டில் அணிசேரா இயக்கம் தனது நிகழ்ச்சி நிரலை மாற்றி முன்னுரிமைகளை அடைவதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டும். அணிசேரா இயக்கம் கோட்பாட்டு ரீதியாக மீண்டும் சீரமைக்கப்பட்டு புதிய சக்தியுடன் புதுப் பொலிவுடன் சர்வதேச அரங்கில் பலமான சக்தியாக விளங்க முடியும். எவ்வாறாயினும் மூன்றாம் உலக நாடுகள் எனக் கூறப்படும் தற்போதைய அபிவிருத் திய டைந்துவரும் நாடுகள் ஒற்றுமையாகச் செயற்பட்டு அணிசேரா இயக்கத்தைப் பலப் படுத்துவதன் மூலம் பல நன்மை களை பெறுவதற் கான வாய்ப்பு கள் உண்டு.

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்  
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-03-10#page-7

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this