• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
மோகன்

தொலைந்துபோன கவிவரிகள்

Recommended Posts

உருப்பெற்று உருப்பெற்று
வார்த்தைகள்
வரிசைகட்டி நிற்கின்றன
பேறுகாலநிலை; பேரவஸ்தை!
ஞாபகங்களின்
தொடர்பறுந்து விடாமல்,
கண்ணாடிக் குவளையை
கை பற்றுதல்போல்
தாள்களில் பிரசவிக்கும்
கணம்வரை
கவனம் வேண்டியிருக்கிறது!

கைதவறி வைத்துவிட்ட
கைத்தொலைபேசி,
மருமகள் மீதான
அம்மாவின் வசைபாடல்,
மூன்றுநாள் காய்ச்சலோடு
மூத்தவளின் முனகல்,
அடுக்களைக்கும் அறைகளுக்குமாய்
அந்தரித்து திரியும் மனையாள்….
கவனத்தை சிதைத்த
காலைநேர களேபரங்களோடு
கருக்கொண்ட கவிவரிகளும்
கட்டறுந்து விடுகின்றன.

அடிக்கடி சிணுங்கும்
அலுவலக தொலைபேசிகள்,
கணினிக்குள் தொலைந்துபோன
கணக்கியல் பதிவுகள்,
முகாமையாளரின்
மேலாண்மை சிடுசிடுப்புக்கள்
கூட்டங்கள்
கொதிநிலை
விதண்டாவாதம்
குரோதம்…..
மறுபடி புனரமைத்த மணல்வீட்டை
அலைவந்து அள்ளிச் சென்றதாய்
காணாது போயின
கவிவரிகள்!

பின்னிரவு,
வினையாற்றல் தளராத
விக்கிரமாதித்தனாய்
அறுந்து கலைந்துவிட்ட சொற்களை
அழகழகாய் கோர்க்கும் முயற்சியில்….
திறந்த கதவிடுக்கில்
ஈரத் தலையுலர்த்தி
தேவதையாய் தெரிகின்றாள் அவள்
போர்வைக்குள் பரவிய வெம்மை
காது மடல்மேவிக் கடக்கிறது
கைவிடப்பட்டது கவிமுயற்சி!
மறுபடியும்
நழுவிய சொற்கள்
கட்டிலெங்கும் சிதறின.

யாரடா சொன்னான்…?
கவி யாப்பது
அப்படியொன்றும் 
கடினமல்ல என்று!


02.03.18
- சோதியா

  • Like 5

Share this post


Link to post
Share on other sites
29 minutes ago, மோகன் said:

யாரடா சொன்னான்…?
கவி யாப்பது
அப்படியொன்றும் 
கடினமல்ல என்று!

அதனால்த் தான் என்னவோஇந்தப் பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை.

Share this post


Link to post
Share on other sites
53 minutes ago, மோகன் said:

பின்னிரவு,
வினையாற்றல் தளராத
விக்கிரமாதித்தனாய்
அறுந்து கலைந்துவிட்ட சொற்களை
அழகழகாய் கோர்க்கும் முயற்சியில்….
திறந்த கதவிடுக்கில்
ஈரத் தலையுலர்த்தி
தேவதையாய் தெரிகின்றாள் அவள்
போர்வைக்குள் பரவிய வெம்மை
காது மடல்மேவிக் கடக்கிறது
கைவிடப்பட்டது கவிமுயற்சி!
மறுபடியும்
நழுவிய சொற்கள்
கட்டிலெங்கும் சிதறின

அருமையான கவிதை....மோகன் அண்ணா!

இணைப்புக்கு நன்றி..!

 

பி.கு: விடிஞ்ச பிறகு....கட்டிலில் சிதறிக்கிடக்கும்...வார்த்தைகளைப் பொறுக்கி ...மீண்டுமொரு முறை...அடுக்க வேண்டியது தானே!

நெடுந்தீவில்...பயிர்..அடுக்கிற மாதிரி....!

 

img_4671.jpg

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this