Jump to content

ராஜீவ் காந்தி கொலையாளிகளை முற்றாக மன்னித்து விட்டோம் – ராகுல் காந்தி


Recommended Posts

ராஜீவ் காந்தி கொலையாளிகளை முற்றாக மன்னித்து விட்டோம் – ராகுல் காந்தி

 

Rahul-Gandhi-300x200.jpgராஜீவ் காந்தி கொலையாளிகளைத் தானும், தனது சகோதரி பிரியங்காவும் முழுமையாக மன்னித்து விட்டதாக, ராஜீவ் காந்தியின் மகனும்,  காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மலேசியா சென்றுள்ள ராகுல் காந்தி, கோலாலம்பூரில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் கலந்துரையாடல் நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் பல ஆண்டுகளாக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தோம். அது எம்மை பாதித்தது.

நாங்கள் மிகவும் கோபமாக இருந்தோம். ஆனால், எப்படியோ அதனை முற்றிலும் மன்னித்து விட்டோம்.

பிரபாகரன் இறந்து கிடப்பதை தொலைக்காட்சியில் பார்த்த போது, எனக்குள் இரண்டு உணர்வுகள் எழுந்தன.

ஏன் இந்த மனிதனை அவர்கள் இப்படி இழிவுபடுத்துகிறார்கள் என்பது முதலாவது.

இரண்டாவதாக, அது அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் உண்மையில் கெட்டது என்று உணர்ந்தேன்.

இந்த அனுபவத்தில் இருந்து வந்த நாம், அதனைப் புரிந்து கொள்கிறோம்.

வெறுப்பை வெளிப்படுத்துவோரைக் கண்டுபிடிப்பது உண்மையில் மிகவும் கடினம். எந்த வகையான வன்முறைகளையும் நான் விரும்பவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/03/11/news/29704

Link to comment
Share on other sites

”ராகுல் காந்தி மன்னிக்கட்டும்..ஆனால், என் போராட்டம் தொடரும்!” - அற்புதம்மாள்

 
 

ராகுல் காந்தி

ந்திய மேலாண்மைக் கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கெடுத்துக் கொண்டார். நிகழ்வின் ஒருபகுதியான கேள்வி நேரத்தில் ராகுல் காந்தியிடம் இந்திரா மற்றும் ராஜீவ் காந்தி மரணம் தொடர்பான சில கேள்விகளும் முன்வைக்கப்பட்டன. ராகுலுடன் உரையாடியவர், “உங்களை நான் ஒரு கேள்வி கேட்கவேண்டும், அது உங்களை பாதித்தால் மன்னித்துவிடுங்கள். உங்கள் அப்பாவைக் கொன்றவர்களை நீங்கள் மன்னித்துவிட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். சில நிமிட அமைதிக்குப் பிறகு பதிலளித்த ராகுல்....  

 

 

ராஜீவ் காந்தி

”எங்களால் யாரையும் வெறுக்க முடியவில்லை!”

”நான் என் பாட்டியைக் கொன்றவர்களுடன் பேட்மின்டன் விளையாடி இருக்கிறேன். அவர்கள் என் பாட்டியைக் கொன்றதைப் பார்த்திருக்கிறேன், அவர்கள் இறந்ததையும் பார்த்திருக்கிறேன். எனக்கு எங்கள் பாட்டி இறந்துவிடுவார் என்றும் எங்கள் அப்பா இறந்துவிடுவார் என்பதும் முன்கூட்டியே தெரியும். இந்த அரசியலில் ஒரு கொள்கையுடன் தீய சக்திகளுக்கு எதிராக நிற்கும்போது நீங்கள் கொல்லப்படுவது தானாகவே நடந்துவிடுகிறது. அப்படிதான் எனது பாட்டியும் அப்பாவும் இறந்தார்கள். தான் இறந்துவிடுவேன் என்று எங்கள் பாட்டி என்னிடம் சொன்னார். இந்த அரசியலை உணர்ந்திருந்த நான் நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்று அப்பாவிடம் சொன்னேன். ஸ்ரீபெரும்புதூரில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது நான் ஹார்வார்டில் இருந்தேன். தேர்தல் பிரசாரம் தொடர்பான விவாதங்கள் அப்போது நடந்துகொண்டிருந்தது. அது மிகவும் பிரச்னையான தேர்தல் என்பதும் எனது அப்பா தேர்தல் பிரச்சாரத்துக்காக வருவது ஆபத்தானது என்பதும் நாங்கள் அறிந்திருந்ததே.ஹார்வார்டில் எனக்கு திடீரென்று ஒரு போன் அழைப்பு வந்தது. எனது அப்பாவின் நண்பருடைய நண்பர் ஒருவர் அழைத்தார். “ராகுல்! உனக்கு ஒரு கெட்ட செய்தி என்றார்!”. என்னால் அந்தச் செய்தியை ஊகிக்க முடிந்தது. “இறந்துவிட்டாரா?” என்று கேட்டேன். ”ஆம்!”, என்றார். அழைப்பைத் துண்டித்துவிட்டேன். அரசியலில் இருக்கும்போது கண்ணுக்குத் தெரியாத பல சக்திகளுடன் நாம் போராட வேண்டி இருக்கிறது. அதுபற்றிப் பொதுமக்களுக்கும் தெரிவதில்லை அதனால் நம் மீது வேறு மாதிரியான பிம்பம் படிகிறது.   அப்பா இறப்பிற்குப் பிறகு மிக நீண்ட காலம் எனக்குள்ளும் பிரியங்காவிற்குள்ளும் அந்தக் கோபம் அப்படியே இருந்தது. ஆனால் கால ஓட்டத்தில் அது மாறிவிட்டது. ஈழத்தில் பிரபாகரனின் இறந்த உடலைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது உண்மையில் எனக்குள் மகிழ்ச்சிதான் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், ‘ஏன் இவர்கள் பிரபாகரனை அவமானப்படுத்துகிறார்கள்?’ என்றுதான் தோன்றியது. அவரின் குடும்பத்திற்கும் குழந்தைகளுக்குமாக வருந்தினேன். பிரியங்காவும் அதே சிந்தனையில்தான் இருந்தாள். காரணம், எங்களால் நாணயத்தின் மற்றொரு பக்கத்தைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வன்முறை நிகழும்போதும் ஒரு குடும்பம்,அதன் அற்புதம்மாள்குழந்தைகள் அந்தச் சமூகம் என அத்தனையும் பாதிக்கப்படுகிறது. இதை நாங்கள் உணர்ந்திருந்தோம். எங்களால் யாரையும் வெறுக்க முடியவில்லை. ஆம், நாங்கள் முழுவதுமாக எங்கள் அப்பாவைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டோம்”   என்றார். ராகுல் காந்தியின் இந்த பேச்சை பல்வேறு அரசியல் தரப்பினர் வரவேற்றுள்ளனர். 

”ராகுல் மன்னிக்கட்டும்...என் போராட்டம் தொடரும்!”

இந்த நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளை தொடர்புகொண்டு பேசினோம். அவர் கூறுகையில்,“என் மகன் குற்றவாளியே இல்லை நிரபராதி என்றுதான் இத்தனை வருடங்களாகப் போராடிக் கொண்டிருக்கிறேன்.செய்யாத குற்றத்திற்காக எனது மகன் இத்தனை ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்துவிட்டான். அதற்கு யார் பொறுப்பு?.ஒரு பக்கம் என் மகன் குற்றவாளி இல்லை என்று நிருபிப்பதற்கான காரணங்கள் நிறையவே நீதிமன்றத் தரப்பிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் தான் மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறியிருக்கிற்றார். அவர்கள் மன்னிக்கட்டும் ஆனால் என் மகன் குற்றவாளியே இல்லை என்கிற என்னுடைய போராட்டம் தொடரும். 

https://www.vikatan.com/news/coverstory/118868-let-rahul-forgive-but-my-stand-on-my-sons-part-in-the-incident-says-arputhammal.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

ராஜீவ் காந்தி கொலையாளிகளை முற்றாக மன்னித்து விட்டோம் – ராகுல் காந்தி

அடுத்த தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை கவரும் விதமாக கூறியுள்ளார்.

சொல்லில் மட்டும் இல்லாமல் செயலிலும் இறங்கி அத்தனை பேருக்கும் விடுதலை கொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'ராஜீவ் கொலையில் மலிவு விளம்பரம் தேடுகிறார் ராகுல்காந்தி!' - விளாசும் பாஜக

 

'ராஜீவ் கொலையில் மலிவு விளம்பரம் தேடுகிறார் ராகுல்காந்தி' என பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் கடுமையாக விமர்சித்துள்ளார். 

ராகுல்காந்தி

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு 5 நாள் சுற்றுப் பயணமாகச் சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிங்கப்பூர் ஐ.ஐ.எம் முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது “ராஜீவ் காந்தியின் கொலையாளிகளை மன்னித்துவிட்டீர்களா? என்ற மாணவர்களின் கேள்விக்கு, “ராஜீவ் கொலையாளிகளை முழுமையாக மன்னித்துவிட்டோம்” என்று தெரிவித்திருந்தார். ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்குப் பல்வேறு தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி வந்திருந்த பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்பதைத்தான் தமிழக மற்றும் புதுச்சேரி பாஜக வலியுறுத்தி வருகிறது.

பிரதமரின் கருத்தும் அதுதான். ஆறு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஆனால், ஒரு சிலர் அரசியல் லாபத்துக்காக வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தவறான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.  ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளைப் பற்றிய நீதிமன்ற நடைமுறைகள் தெரியாமல் ராகுல் காந்தி பேசுகிறார். ஏனெனில், குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது குற்றவாளிகளின் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு நீதிமன்றங்கள் தீர்ப்பளிப்பதில்லை. இத்தனை ஆண்டுகாலம் குற்றவாளிகள் சிறையில் இருக்கும் போது மௌனமாக இருந்துவிட்டும், ஆட்சியில் இருக்கும்போது சொல்ல வேண்டிய கருத்துகளைச் சொல்லாமலும், இப்போது கருத்துகளைச் சொல்வது குற்றவாளிகள் மீதுள்ள கரிசனத்தால் அல்ல.

மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதற்கும், ஒரு எளிமையான விளம்பரத்தை தேடுவதற்காகவுமே இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி தற்போது கருத்துத் தெரிவித்துள்ளார். எந்தக்காலத்திலும் இல்லாத அளவுக்குக் குற்றவாளிகளுடைய கருணை மனு குடியரசுத் தலைவரின் மேஜையில் நீண்ட நாள்கள் கிடப்பில் கிடந்தது யார் ஆட்சிக் காலத்தில் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் ராகுல் காந்தி தற்போது பேசுவதை எந்தத் தமிழரும் நம்ப மாட்டார்கள். இது ஒரு ஏமாற்று வேலை” என்றார். 

-விகடன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.