Sign in to follow this  
Kavi arunasalam

பார்க்காதே பார்க்காதே

Recommended Posts

பார்க்காதே பார்க்காதே

புலம் பெயர்ந்து ஜேர்மனிக்கு வந்த பொழுது, “நாட்டுக்கே திரும்பி போய்விடலாமா?” என்ற நினைப்புதான் ஓங்கி நின்றது. குளிர் ஒரு காரணமாக இருந்தது என்றாலும்,குளிரில் வரும் நடுக்கத்தை விட டொச் மொழியை கேட்கும் போது ஏற்பட்ட உதறல் அதிகமாக இருந்தது.

ஜேர்மனியர்கள் கதைக்கும் வார்த்தைகளுடன்ஸ்ஸ்ஸ்என்று காற்று வரும் பொழுதெல்லாம் என்னுள் இருந்து தன்னம்பிக்கைக் காற்று தானாக வெளியேறிக் கொண்டிருக்கும்.

“என்ன பாஷை இது. தமிழுக்கு வசப்பட்ட நாக்கு டொச்சுக்கு பிரளமாட்டுதாம்என்னுடன் ஊரில் இருந்து யேர்மனிவரை கூட வந்த ரத்தினம் இப்படி என்னுடன் அடிக்கடி சலித்துக் கொண்டிருப்பான்.

ரத்தினம் என்னைவிட இரண்டு வயது இளமையானவன். அவனது தமையன் சந்திரன் என்னுடன் ஒன்றாகப் படித்தவன். நான் ஜேர்மனிக்கு வெளிக்கிடப் போகிறேன் என்று கேள்விப்பட்டு,  “தம்பியையும் உன்னோடு ஜேர்மனிக்கு கூட்டிக் கொண்டு போ மச்சான்என்று ரத்தினத்தையும் என்னுடன் சேர்த்து விட்டான்.

எங்களது பயணம் எயார் பிரான்ஸில் தொடங்கியது. பரிஸ் இல் இடைத்தங்கல். அங்கிருந்து கிழக்கு ஜேர்மனி சென்று பின்னர் ரெயின் எடுத்து மேற்கு ஜேர்மனி புகுந்து அரசியல் தஞ்சம் கேட்பதாகத் திட்டம். பயணத்தின் போது விமானத்தில் இன்னும் இரண்டு பேர் எங்களுடன் ஒட்டிக் கொண்டார்கள்

பரிஸில் இறங்கி கிழக்கு ஜேர்மனிக்கு பறப்பதற்கு விமானத்தில் ஏறுவதற்காகச்  சென்று கொண்டிருக்கும் போது, எங்கள் நான்கு பேரையும் பிரான்ஸ் காவல்துறையினர் பிடித்துக் கொண்டார்கள். முதலில் எங்களிடம் இருந்த கடவுச்சீட்டுக்களை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். பிறகு நீண்ட தூரம் எங்களை அழைத்துச் சென்றார்கள்.

“எங்கையண்ணை கூட்டிக் கொண்டு போறாங்கள்?” ஒட்டிக் கொண்டவர்களில் ஒருவன் என்னிடம் கேட்டான். திருப்பி நாட்டுக்கு அனுப்பி விடுவார்களோ என்ற பயம் அவனிடம் தெரிந்தது. அந்தப் பயம் அவனுக்கு மட்டுமல்ல எனக்கும் கூட இருந்தது. நான் வாய் திறப்பதற்கும் முன்னர் ரத்தினம் முந்திக்கொண்டு கொண்டு அவனுக்கு பதில் கொடுத்தான்.

“பார்த்தியா, முன்னுக்கும் பின்னுக்கும் பொலீஸ்காரர்கள் வர, சனங்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க பிரான்ஸ் எயர்போட்டிலை அழைச்சுக் கொண்டு போறாங்களே, இதுதான் இராஜ மரியாதை. இப்பிடியே திருப்பி சிறிலங்காவுக்கு  அனுப்பினாங்கள் எண்டால், லலித் அத்துலக்முதலியே நேரிலை  வந்து இதைவிட அமோகமான ஒரு பெரிய வரவேற்பு அங்கை தருவார்

என்ன நடக்கிறது என்று தெரியாமல் பயந்து கொண்டு நடந்து கொண்டிருக்கும் போது ரத்தினத்தின் அந்தப் பேச்சு சூழ்நிலையின் அழுத்தத்தை கொஞ்சம் குறைத்தது.

இறுதியாக ஒரு அறைக்குள் கொண்டு போய் விட்டார்கள். என்ன கேட்டாலும் அவர்கள் எங்களுக்காக வாயைத் திறக்கவேயில்லை. அதிலும் மறந்தும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை கூட அவர்களிடம் இருந்து வரவேயில்லை. தங்களுக்குள் பிரெஞ்சில் கதைத்துக் கொண்டிருந்தார்கள்

எங்களை அழைத்து வந்தவர்கள் காவலுக்கு நிற்க மேலும் இரு போலீஸ்காரர்கள் உள்ளே வந்தார்கள். வந்தவர்கள் எங்களுடன் பயணித்த ஒருவனை அழைத்துச் சென்றார்கள். பதினைந்து நிமிடங்கள் போயிருக்கும். கூட்டிக் கொண்டு போனவனை கொண்டு வந்து விட்டு விட்டு மற்றவனை அழைத்துப் போனார்கள். முதலில் போய் வந்தவன் எதையோ இழந்துவிட்டவன் போல முகத்தில் கவலையோடு காணப்பட்டான்.

ரத்தினம் அவனருகில் போய் தனது பார்வையால் விசாரித்தான்

“உடுப்பெல்லாம் கழட்டிப் பார்த்தாங்கள்மிகுந்த கவலை அந்த இளைஞன் முகத்தில் தெரிந்தது.

“எதைப் பார்த்தாங்கள்?” ரத்தினம் அந்த இளைஞனை விசாரிப்பதைப் பார்த்த ஒரு பொலீஸ்காரன், இளைஞனிடமிருந்து  ரத்தினத்தை  பிரித்து வைத்தான்.

திரும்பி வந்த மற்றைய இளைஞனும் ஏறக்குறைய முதலாவது இளைஞனைப் போலவே முகத்தை வைத்திருந்தான். இப்பொழுது  எனது முறை. இருவர் இருந்த அறையில் நின்றேன். உடுப்புகள், சப்பாத்துக்களை எல்லாம் கழட்டச் சொல்லி சைகையால் காட்டினார்கள்.

அவர்கள்  முதலில் உடுப்பு, சப்பாத்துக்களை தடவி, தட்டி எல்லாம் பார்த்தார்கள். அடுத்ததாக எனது உடம்புக்கு வந்தார்கள். தலை தொட்டு உள்ளங்கால்வரை எல்லாம் ஆராய்ந்தார்கள்பிறகு குனி என்றார்கள். குனிந்தேன். அவர்களுடையடோர்ச் லைற்றின் வெளிச்சம் என்னுடைய விம்பத்தை அறைச் சுவரில் காட்டியது. மீண்டும் சைகயால் உடுப்பை போடு என்றார்கள்

எண்பதுகளில் நன்றாக பொதியிட்டு, பாகிஸ்தானில் இருந்து மலவாசலுக்குள் வைத்து ஐரோப்பிய நாடுகளுக்குப் போதைப் பொருட் கடத்தல் நடந்து கொண்டிருந்ததுதான் எங்களை விமான நிலையத்தில் தடுத்து வைத்ததும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த சோதணையும்.

இப்பொழுது ரத்தினத்தின் முறை. எதற்காக அழைத்துப் போகிறார்கள் என்பதில் அவனுக்குத் தெளிவு இருந்தது. சிரித்தபடியே அவர்களுடன் போனான். ஐந்து நிமிடங்கள் கூட ஆகி இருக்காது. போனவன் அதே சிரிப்புடன் திரும்பி வந்தான்.

“எங்களுக்கெல்லாம் பதினைந்து நிமிசங்கள் எடுத்தது. அதெப்படி உன்னை உடனேயே விட்டிட்டாங்கள்?”

“இப்பிடி ஒரு சூத்தை பிரெஞ்சுக்காரன் ஒருநாளும் கண்டிருக்க மாட்டான். வாழ்க்கையிலை இனி ஒருத்தனின்ரை சூத்தையும் பார்க்கவே மாட்டான்

இப்பொழுது ரத்தினம் நான் இருக்கும் இடத்தில் இருந்து அறுபது கிலோ மீற்றர் தூரத்தில்தான் வசிக்கிறான். எனக்கும் அவனுக்குமான தொடர்புகள் குறைந்து குறைந்து இன்று இல்லாமலேயே போய்விட்டது. ஆனால் அவனது நினைவுகள் மட்டும்  என்னுடன் இன்றும் இருக்கின்றது.

 

கவி அருணாசலம்

10.03.2018

 • Like 8
 • Haha 4

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Kavi arunasalam said:

தலை தொட்டு உள்ளங்கால்வரை எல்லாம் ஆராய்ந்தார்கள்பிறகு குனி என்றார்கள். குனிந்தேன். அவர்களுடையடோர்ச் லைற்றின் வெளிச்சம் என்னுடைய விம்பத்தை அறைச் சுவரில் காட்டியது.

டென்மார்க் போடரிலை எனக்கும் என்ரை கூட்டுவளுக்கும் எட்டத்தை  எட்டத்தை குனியவிட்டு உதே பிரச்சனை நடந்தது.....அதிலை ஒரு சிங்கனை கலியாணம் கட்டிட்டியோ எண்டு கேட்டுட்டு ஓரு பொலிசு சத்தமாய் சிரிச்சான்...காரணம் இண்டுவரைக்கும் எனக்கு விளங்கேல்லை.....சம்பந்தப்பட்ட சிங்கம் இப்ப கனடாவிலை குடும்பம் குழந்தை குட்டியெண்டு சந்தோசமாய் இருக்கிறார் எண்டு கேள்விப்பட்டன்.

1 hour ago, Kavi arunasalam said:

“இப்பிடி ஒரு சூத்தை பிரெஞ்சுக்காரன் ஒருநாளும் கண்டிருக்க மாட்டான். வாழ்க்கையிலை இனி ஒருத்தனின்ரை சூத்தையும் பார்க்கவே மாட்டான்

இப்ப இரவு நேரம் எண்டபடியாலை சத்தமில்லாமல் சிரிச்சு சிரிச்சு நெஞ்செல்லாம் நோகப்புடிச்சிட்டுது.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Kavi arunasalam said:

எங்களது பயணம் எயார் பிரான்ஸில் தொடங்கியது. பரிஸ் இல் இடைத்தங்கல்.

அந்தக் காலங்களில் ஏரோபிளட் தான் மிகவும் மலிவானது.

Share this post


Link to post
Share on other sites

இது நல்ல பயணக் கட்டுரை......!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, ஈழப்பிரியன் said:

அந்தக் காலங்களில் ஏரோபிளட் தான் மிகவும் மலிவானது.

உண்மை. எனது பயணத்துக்கு அப்பொழுது 16,000 ரூபாக்கள் முடிந்தது. ஏரோபிளட்டில் வந்தவர்கள் 10,000க்கு குறைவாகவே கொடுத்திருந்தார்கள்

9 hours ago, suvy said:

இது நல்ல பயணக் கட்டுரை......!  tw_blush:

இது தொடர்ந்து எழுத வைக்கும் ஒரு ஊக்க மருந்து. நன்றி Suvy

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, குமாரசாமி said:

இப்ப இரவு நேரம் எண்டபடியாலை சத்தமில்லாமல் சிரிச்சு சிரிச்சு நெஞ்செல்லாம் நோகப்புடிச்சிட்டுது.

இதற்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது குமாரசாமி. நான்தான் “பார்க்காதே பார்க்காதே” என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவை குறிப்பிட்டிருந்தேனே.

Share this post


Link to post
Share on other sites

ரத்தினம் துணிஞ்ச கட்டையாக இருக்கவேண்டும். பிரெஞ்சுப் பொலிஸ் டோர்ச் அடிக்கேக்கை எதையும் பறிய விட்டாரோ??

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, கிருபன் said:

ரத்தினம் துணிஞ்ச கட்டையாக இருக்கவேண்டும். பிரெஞ்சுப் பொலிஸ் டோர்ச் அடிக்கேக்கை எதையும் பறிய விட்டாரோ??

நல்ல மிளகாய்த் தூளும்....நிறைய உள்ளியும்...போட்ட கறியாய்...பயணம் வெளிக்கிட முந்தி...ஒரு வெட்டு வெட்டியிருப்பார் போல !

வெள்ளைக்காரனுக்கு...அந்தக் காலத்தில...உள்ளி...அவ்வளவு பிடிக்கிறது இல்லைத் தானே!

இப்ப...என்ன மாதிரியோ...தெரியாது!

அவுசில்....அரைவாசி வெள்ளையல் சாப்பிடுகிறது.....ஆசியன் கடைகளில தான்!

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, கிருபன் said:

 

ரத்தினம் துணிஞ்ச கட்டையாக இருக்கவேண்டும். பிரெஞ்சுப் பொலிஸ் டோர்ச் அடிக்கேக்கை எதையும் பறிய விட்டாரோ

 

அப்படியும் ஏதாவது நடந்திருக்கலாம் கிருபன்

ஆனால் ரத்தினம் அதைப் பற்றி எனக்கு ஒண்டும் சொல்லவேயில்லல.?

 
20 hours ago, புங்கையூரன் said:

நல்ல மிளகாய்த் தூளும்....நிறைய உள்ளியும்...போட்ட கறியாய்...பயணம் வெளிக்கிட முந்தி...ஒரு வெட்டு வெட்டியிருப்பார் போல !

புங்கையூரான்,

கொழும்பில் இருந்து வெளிக்கிடும் போது, மருதானை புஹாரி ஹோட்டலில் இரண்டு பேரும் பிரியாணி சாப்பிட்டோம்.பிரியாணியில் இருந்த (அவித்த) முட்டை எனக்குப் பிடிக்கவில்லை. “உங்களுக்கு வேண்டமெண்டால் தாங்கோ. நான் சாப்பிடுகிறேன்”  என்று ரத்தினம் எனது கோப்பையில் இருந்த முட்டையையும் எடுத்துச் சாப்பிட்டான். மற்றும்படி நீங்கள் குறிப்பிட்டதுபோல், “பயணம் வெளிக்கிட முந்தி...ஒரு வெட்டு வெட்டியிருப்பார்என்பது நடக்கவில்லை.??

 

 

 

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, Kavi arunasalam said:

அப்படியும் ஏதாவது நடந்திருக்கலாம் கிருபன்

ஆனால் ரத்தினம் அதைப் பற்றி எனக்கு ஒண்டும் சொல்லவேயில்லல.?

 

புங்கையூரான்,

கொழும்பில் இருந்து வெளிக்கிடும் போது, மருதானை புஹாரி ஹோட்டலில் இரண்டு பேரும் பிரியாணி சாப்பிட்டோம்.பிரியாணியில் இருந்த (அவித்த) முட்டை எனக்குப் பிடிக்கவில்லை. “உங்களுக்கு வேண்டமெண்டால் தாங்கோ. நான் சாப்பிடுகிறேன்”  என்று ரத்தினம் எனது கோப்பையில் இருந்த முட்டையையும் எடுத்துச் சாப்பிட்டான். மற்றும்படி நீங்கள் குறிப்பிட்டதுபோல், “பயணம் வெளிக்கிட முந்தி...ஒரு வெட்டு வெட்டியிருப்பார்என்பது நடக்கவில்லை.??

நோர்மலாய் ஒரு முட்டையின்ரை விக்கனமே பெரிசு....அதிலை இரண்டு முட்டையெண்டால் சொல்லி வேலையில்லை......ரத்தினம் அண்ணைக்கு லைற் அடிச்ச பொலிசு எப்பிடியும் கொஞ்ச நேரம் தள்ளாடி தடுமாறியிருக்கும்.

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
On 3/13/2018 at 9:41 PM, Kavi arunasalam said:

...கொழும்பில் இருந்து வெளிக்கிடும் போது, மருதானை புஹாரி ஹோட்டலில் இரண்டு பேரும் பிரியாணி சாப்பிட்டோம்.பிரியாணியில் இருந்த (அவித்த) முட்டை எனக்குப் பிடிக்கவில்லை. “உங்களுக்கு வேண்டமெண்டால் தாங்கோ. நான் சாப்பிடுகிறேன்”  என்று ரத்தினம் எனது கோப்பையில் இருந்த முட்டையையும் எடுத்துச் சாப்பிட்டான்...

காற்று வாங்கலாமென கொழும்பு வீதிகளில் நடந்தபோது இந்த "புஹாரி ஹோட்டல்" கண்ணில் பட்டது..

ஒருவேளை 'மின்னல்' ஐயா, இங்கே முட்டை சாப்பிட்டிருக்கலாமென தோன்றியது..!   vil-heureux.gif

சுட்டுப் போட்டேன்..!! :innocent:

 

sta.jpg

 

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
On 12/03/2018 at 5:56 AM, Kavi arunasalam said:

இதற்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது குமாரசாமி. நான்தான் “பார்க்காதே பார்க்காதே” என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவை குறிப்பிட்டிருந்தேனே.

வாசிக்காதே வாசிக்காதே என்று போட்டிருந்தால் நாங்கள் வாசிக்காமல் விட்டிருப்போம் ....பார்க்காதே என்று போட்டபடியால் எதோ விசயம் இருக்கும் என்று பார்த்திட்டோம்....tw_blush:

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

படிக்காதே படிக்காதே என்று போடாதபடியால் நாங்களும் படித்தோம். எம் துயரங்களிலும் நகைச்சுவை காண்பது எல்லேரலும் முடியாது.நல்லதொரு அனுபவப் பதிவு.

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டதுக்கு நன்றி. மிக சுவார்சியமாக இருக்கின்றது. அச்சம் மிகுந்த பயணம் இருந்தாலும் அதனுள்ளே ஒரு இலகுதன்மை.

தொடர்ந்து எழுதுங்கள். மேலும் நீங்கள் ரத்தினத்துடன் உறவை ஏற்படுத்துவது பிரயோசனமாக இருக்கலாம்.

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 16/03/2018 at 10:27 AM, putthan said:

வாசிக்காதே வாசிக்காதே என்று போட்டிருந்தால் நாங்கள் வாசிக்காமல் விட்டிருப்போம் .

பார்க்காமலே வாசிக்க முடியுமா புத்தன்??

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this