Jump to content

ஒரு வளவும் இரு வாசலும்


Recommended Posts

ஓர் வளவில் குடியிருந்தோம்
எனினும் எப்போதும் எமக்கு தெரியாமலேயே
பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்

உங்கள் ரகசிய நடமாட்டங்களின்
காலடிச் சத்தங்கள்
எங்கள் பிடரியில் கேட்கத் தொடங்க
எதேச்சையாகத் தான் கவனித்தோம்
விசாரிக்கத் தொடங்கிய வேளை
அறுகம்புல்லாய் படர்ந்து கொண்டே போனது
எமை நீர் அறுப்பதற்கு தயாரான
ஆயிரம் தடையங்கள்

கிழக்கிலும் நீரெம்மை
கிழித்துத் தொங்கவிடும்
மரணத்தின் சாக்குரல்கள்
அடிவயிற்றில் புரளத் தொடங்க
வேறுவழியெதுவும் இருக்கவில்லை

கீறோ, கிழிதலோ இன்றி
அப்போதைக்கான அவகாச ஏற்பாடாய்
விலகிச் செல்ல வேண்டிக் கொண்டோம்
அதன் பிறகு ஆயிரம் நடந்தது போனது
குலை குலையாய் எமையழித்து
அதைக் கொண்டாடும் அளவுக்கு
நிகழ்த்திக் காட்டினீர்கள்
எதிரியிடம் கூடக் காணாத வன்மமது

ஆயினும்
இப்பாலிருந்து மன்னிப்பும் இணக்கமுமென
எத்தனை முறை, எத்தனை பேர்
பலமாயிருந்த போதுகூட பல தடவை கேட்டோம்

அப்பாலிருந்தோ
ஓர் வார்த்தை, ஓர் வருத்தம்
ஒப்புக்குக் கூட ஓர் சொல்தானும்
என்றும் எழுந்ததில்லை,
இருக்கட்டும்.

எமக்கிடையே விருட்சமாகி நிற்கும்
இந்த பெருமரத்தின் விதையில்
எவரால் குரோதம் பதியம் செய்யப்பட்டது..?
எங்கள் கனிகள் உங்களுக்கும்
உங்கள் கனிகள் எங்களுக்கும்
எப்படி விடமாகிப் போனது..?

இவ்வளவின் பின்னரும் கூட
பற்றி எரிவதைப் பார்த்து
ஓடி வந்து தோள் கொடுப்போமென்று
உன்னிய போது தான் தெரிந்தது
எதிரியுடன் சேர்ந்து
எங்கள் கால்களையும்
நீங்கள் முடமாக்கி விட்டீர்கள் என்பது..

-திரு (Thiru Thirukkumaran)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் மனசில் வலிக்கும் ஓராயிரம் வார்த்தைகளை ஒரு கவிதைக்குள் அடக்கி விட்டீர்கள்......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தம்பியன் said:

 

ஓர் வளவில் குடியிருந்தோம்
எனினும் எப்போதும் எமக்கு தெரியாமலேயே
பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்

 

கிராமங்களில் பொட்டில்லாத வேலியே காண்பது அரிது.அழகாக வடித்துள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித இனம் பல்லாயிரம் வருடங்கள்...இந்தப் பூவுலகில் வாழ்ந்தது!

எத்தனையோ மதங்கள் தோன்றி மறைந்தன!

எனினும் ஒரேயொரு மதம் மட்டும்....எனது மார்க்கத்துக்கு நீ வரா விட்டால்நீ... ஒரு infidel என்று சொல்கின்றது!

அப்படியானால்...இந்த உலகில்....கிறிஸ்துவுக்குப் பின்.....ஆறாம் நூற்றாண்டு வரை.....infidel கள்  மட்டுமே வாழ்ந்திருக்கிறார்கள்!

எனது ஐந்தாம் வகுப்பிலிருந்தே...இவர்களால்....உதைக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறேன்!

கவிதை...வரலாற்றை...அப்படியே சொல்லி இருக்கின்றது!

நன்றி....தம்பியன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.