Sign in to follow this  
நவீனன்

சிலோன் சிக்கன் பரோட்டா செய்வது எப்படி

Recommended Posts

சிலோன் சிக்கன் பரோட்டா செய்வது எப்படி

 

சிலோன் பரோட்டா சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று வீட்டிலேயே சிக்கன் வைத்து சிலோன் பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
சிலோன் சிக்கன் பரோட்டா செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத சிக்கன் - அரைக்கிலோ
ச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் - 2
 மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - 2
சிலோன் கறிபவுடர்  - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கா
ல் தேக்கரண்டி
தேங்காய் பால் - 2 கப்
எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு

சிலோன் கறி பவுடர் செய்ய :

தனியா, சீரகம் - தலா 2 மேசைக்கரண்டி
அரிசி, சோம்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
ஏலக்காய், கிராம்பு - 4
கறிவேப்பிலை - சிறிதளவு

பரோட்டா செய்ய :

மைதா மாவு - 2 கப் ,
முட்டை - 2
சர்க்கரை - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

201803011507313470_1_stuffedparatha._L_styvpf.jpg

செய்முறை :

முதலில் பரோட்டா செய்ய தேவையான பொருட்களை ஒன்றாக ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு சிறிது சிறிதாக பாலும், தேவையெனில் தண்ணீரும் தெளித்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

சிலோன் கறி பவுடர் செய்ய தேவையான பொருட்களை  ஒவ்வொன்றாக வெறும் கடாயில் போட்டு வறுத்தெடுக்கவும். நன்றாக ஆறியதும் கொரகொரப்பாக பொடியாக திரித்து வைக்கவும்.

சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் சிக்கனை போட்டு வதக்கவும். சிக்கன் சில நிமிடங்களில் கலர் மாறி அதிலிருந்து நீர் வெளியேற ஆரம்பித்தவுடன் சிக்கனை மட்டும் தனியே எடுத்து விடவேண்டும்.

அதே நெயில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது (முழுவதுமாக பொன்னிறமாகக் கூடாது) வதங்கியவுடன் உப்பு, பிரிஞ்சி இலை,  மிளகாய் தூள், சிலோன் கறிபவுடர், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

இப்பொழுது பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து தீயை குறைத்து மிதமான தீயில் பத்து நிமிடம் வேக விடவும்.

தேங்காய் பால் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.

கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி எடுத்து ஆற வைக்கவும்.

பரோட்டா மாவை சதுரமாக திரட்டி நடுவில் சிக்கனை வைத்து மூடவும்.

தவாவில் பரோட்டாவை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு இரு புறமும் திருப்பி போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.

இந்த பரோட்டாவின் ஸ்பெஷலே சதுர வடிவம் தான்.

சூப்பரான சிலோன் பரோட்டா ரெடி.

https://www.maalaimalar.com

Share this post


Link to post
Share on other sites

இப்படி எங்கப்பா, சிலோன்ல பரோட்டா இருக்குது?:rolleyes:

Share this post


Link to post
Share on other sites

 பரோட்டா     சிலோன் தமிழ் அல்ல   இதை சிக்கன் ரொட்டி என்றுதான்    சொல்ல வேண்டும்   

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இப்ப இட்டலியை கூட இட்டலியாய் பார்க்க முடியாது. அதற்குள்ளும் உள்ளுடன்கள் வைத்து அவிக்கிறார்கள்......!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

உது எங்கடை கிழங்கு ரொட்டிமாதிரி கிடக்கு.....:grin:

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this