Jump to content

Recommended Posts

112 ஆவது வடக்கின் போர் மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பம்!

 

112 ஆவது வடக்கின் போர் மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பம்!


மத்திய கல்லூரி மற்றும் சென்ஜோன்ஸ் கல்லூரிகள் மோதும் வடக்கின் போர் துடுப்பாட்ட போட்டி 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும், யாழ்.பரியோவான் கல்லூரிக்கும் (சென்.ஜோன்ஸ் கல்லூரி) இடையிலான 112 ஆவது மாபெரும் துடுப்பாட்ட போட்டி எதிர்வரும் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி 3 தினங்கள் இடம்பெறவுள்ளது.

அது விடயந்தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பும், வீரர்கள் ஒன்று கூடலும் இன்று பிற்பகலில் யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்.மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார். பாடசாலைகளுக்கு இடையிலான துடுப்பாட்ட போட்டிகள் மாறிவரும் கலாச்சார சீரழிவுகள் காரணமாக நிறுத்தப்பபடும் நிலையில், இப் போட்டி 112 ஆவது தடவை இடம்பெறுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

112 ஆவது வடக்கின் போர் மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பம்!

112 ஆவது வடக்கின் போர் மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பம்!

https://news.ibctamil.com/ta/cricket/battle-of-the-north-on-march-8th

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

112ஆவது வடக்கின் பெரும் சமருக்கான ஊடக சந்திப்பு- 2018

 
f26618e2073ad2b5445e8105443cf180-696x463

வடக்கின் இரு புகழ்பூத்த பாடசாலைகளான சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ் மத்திய கல்லூரி அணிகளுக்கிடையிலானவடக்கின் பெரும் சமர்என வர்ணிக்கப்படும் மாபெரும் துடுப்பட்ட சமரின் 112ஆவது போட்டியானது இம்மாதம் 8ஆம், 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றது. இப்போட்டி தொடர்பான விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பும், வீரர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அறிமுக நிகழ்வும் அண்மையில் யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்றிருந்தது.

 

குறித்த நிகழ்வில் யாழ் மத்திய கல்லூரியின் அதிபர் திரு. எழில்வேந்தன், இப்போட்டிக்கு அனுசரணை வழங்குகின்ற மொபிடெல் நிறுவனத்தின் வடமாகாண தலைமை அதிகாரி, இரு கல்லூரிகளினதும் உப அதிபர்கள், விளையாட்டு முதல்வர்கள், பொறுப்பாசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், வீரர்கள், மத்தியஸ்தர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வின்  ஆரம்பத்தில் கருத்து தெரிவித்த இவ்வருட   போட்டி ஏற்பாட்டாளர்களான   யாழ் மத்திய கல்லூரியின்  அதிபர் எழில்வேந்தன் அவர்கள்,  போட்டியின் போது வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பான விளக்கத்தினை வழங்கினார்.  

தொடர்ந்து உரையாற்றிய பிரதான அனுசரணையாளர்களான மொபிடல் நிறுவனத்தின் வட மாகாண தலைமை அதிகாரி சுகத் அபயசிங்க, வராலாற்றுச் சிறப்புமிக்க இப்போட்டித்தொடரிற்கு அனுசரணையாளர்களாக தாம் இணைவதையிட்டு தனது மகிழ்வை வெளியிட்டார். இதன்போது 112ஆவது போட்டிக்கான மொபிடல் வெற்றிக்கிண்ணத்தினையும் அவர் அறிமுகம்செய்துவைத்தார். அத்துடன், சுகத் இரு கல்லூரி அணியினருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.   

இலங்கையில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான மொபிடல் நிறுவனம், பழமைமிக்க இந்த பெரும் சமர் போட்டிக்கு தொடர்ந்து இரண்டாவது வருடமாகவும் பிரதான அனுசரணையாளர்களாகத் திகழ்கின்றனர்.

குறித்த நிகழ்வின்போது சென். ஜோன்ஸ் கல்லூரியின் உப அதிபர் V.S.B துசிதரன் அவர்கள்இந்த போட்டியானது, வழமை போன்று இரு கல்லூரிகளினதும் மகத்துவங்கள் மற்றும் விழுமியங்களுக்கு  சான்றாக அமையும்எனத் தெரிவித்தார்.

 

தொடர்ந்து இரு கல்லூரிகளினதும் வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்பின்னர், இரு அணி வீரர்களும் தமது எதிர் தரப்பினருக்கான தொப்பிகளை அணிவித்து தமது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர்.

ஒரு நூற்றாண்டு தாண்டிய பழைமை வாய்ந்த “வடக்கின் பெரும் சமர்” என வர்ணிக்கப்படும், யாழ் மத்திய கல்லூரி – சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையிலான இப்போட்டி தொடர்பான முன்னோட்டங்கள், புகைப்படங்கள் மற்றும் போட்டி அறிக்கைகள் என்பவற்றினை ThePapare.com ஊடாக உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேவேளை ThePapare.com ஆனது உலகம் பூராகவுமுள்ள இரு கல்லூரிகளினதும் பழைய மாணவர்கள், ஆதரவாளர்களுக்காக இவ்வருடம் தொடர்ச்சியான 3ஆவது ஆண்டாக வடக்கின் பேரும் சமரினை இணையம் வாயிலாக நேரடியாக ஒளிபரப்ப இருக்கின்றது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

வடக்கின் பெரும் சமரில் இம்முறை சாதிக்கப்போவது யார்?

Untitled-1-86-696x464.jpg

வடக்கின் முன்னணி பாடசாலைகளான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிகளுக்கு டையில் இடம்பெறும் நூற்றாண்டு தாண்டிய வரலாற்றினைக் கொண்டுள்ளவடக்கின் பெரும் சமர்என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் தொடரில், 112ஆவது போட்டியானது எதிர்வரும் 8ஆம், 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த 1904ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட வடக்கின் பெரும் சமரில் இதுவரை இடம்பெற்றுள்ள 111 சமர்களில் 36 போட்டிகளில் சென்.ஜோன்ஸ் கல்லூரியும், 27 போட்டிகளில் மத்திய கல்லூரியும் வெற்றிபெற்றுள்ளன. 40 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. ஒரு போட்டியானது(1967) கைவிடப்பட்ட அதேவேளை, 7 போட்டிகளின் (1905, 1911-1914, 1925, 1927) முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை.

 

கடந்த வருடம் இடம்பெற்ற 111ஆவது சமரில் சென் ஜோன்ஸ் கல்லூரி அணியானது இன்னிங்ஸ் வெற்றி ஒன்றினை பதிவுசெய்து கிண்ணத்தினை தக்கவைத்துள்ளது. மத்திய கல்லூரி அணியானது இறுதியாக 2011ஆம் ஆண்டிலேயே வெற்றி ஒன்றினை பதிவு செய்துள்ளது.

சென். ஜோன்ஸ் கல்லூரி அணி

இந்த பருவகாலத்தில் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் போட்டித்தொடரில் பிரிவு 2இல் ஆடிவரும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணியானது, கொழும்பு றோயல் கல்லூரி அணியுடனான வெற்றியுடன் தொடரினை ஆரம்பித்திருந்தாலும் இறுதி நேரத்தில் அடைந்த பின்னடைவின் காரணமாக, தமது குழுவில் 3ஆவது இடத்தினையே அவர்களால் பெற முடிந்தது.

இரண்டாவது சுற்றுப்போட்டியில் தேவபத்திராஜா அணியுடனான முதல் இன்னிங்ஸ் தோல்வி காரணமாக தொடரிலிருந்து விலகியிருக்கின்றனர். 50 ஓவர்கள் கொண்ட போட்டித்தொடரில் காட்டுனேறிய சென் செபஸ்டியன்ஸ் கல்லூரியினை எதிர்கொள்ளவுள்ளனர்.

தமது பாரம்பரியமான போட்டிகளில் கல்கிசை புனித தோமியர் கல்லூரியுடனான போட்டியில் மட்டும் முதல் இன்னிங்ஸால் தோல்வியடைந்துள்ளனர். ஏனைய 6 போட்டிகளில் 5இல் இன்னிங்ஸ் வெற்றியினையும், ஒன்றில் (Outright) வெற்றியினையும் பதிவு செய்துள்ளனர்.  

 

 

இக்கல்லூரி வீரர்கள் தமது இந்த பருவகாலத்தினை சிறப்பாக ஆரம்பித்தாலும் துடுப்பாட்ட தளும்பல் காரணமாக சில போட்டிகளில் பின்னடைவினை சந்தித்துள்ளனர். அதேவேளை, அநேக போட்டிகளில் பலம்மிக்க பந்துவீச்சானது இவர்களுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளது.

சென் ஜோன்சின் இந்த பருவகால போட்டி முடிவுகள்  

போட்டி இன்னிங்ஸ் வெற்றி வெற்றி முதல் இன்னிங்ஸ் வெற்றி இன்னிங்ஸ் தோல்வி தோல்வி முதல் இன்னிங்ஸ் தோல்வி
14 03 06 01 01 01 02

 

அவதானிக்க வேண்டியவர்கள்

இம்முறை சென் ஜோன்ஸ் கல்லூரி அணியினை ஆறாவது வருட அனுபவ வீரரான வசந்தன் யதுசன் தலைமை தாங்கி வழிநடாத்துகின்றார். இவர் இவ்வருடம் வட மாகாண 19 வயதிற்குட்பட்ட அணியினை தலைமை தங்கிய அதேவேளை, 23 வயதிற்குட்பட்ட அணியினையும் பிரதிநிதித்துவம் செய்திருந்தார். இந்த பருவகாலத்தில் 2 சதங்கள் (106, 153) உள்ளடங்கலாக 700 ஓட்டங்களினையும், பந்துவீச்சில் 65 விக்கெட்டுகளினையும் கைப்பற்றியுள்ள சகலதுறை வீரராகவே அவர் உள்ளார்.

அதேபோன்று, 5ஆவது வருடமாக களம் காணும் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரும், அணியின் உப தலைவருமான கனகரத்தினம் கபில்ராஜ் 75 விக்கெட்டுக்களினை கைப்பற்றியுள்ள அதேவேளை, 400 இற்கும் அதிகமான ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் இம்முறை ஜோனியன்களின் மத்திய வரிசை துடுப்பாடத்தில் முக்கிய பங்காளராகவுள்ளார்.

சகலதுறை வீரரான அபினாஷ் 60 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதுடன் 500 இருக்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றுள்ளார். அனுபவ வீரர்களில் இவரும் ஒருவர்.

கடந்த வருடம் வட மாகாண 15 வயதிற்குட்பட்ட அணியின் தலைவராக செயற்பட்ட டினோஷான் இம்முறை சென். ஜோன்ஸ் கல்லூரி அணியில் தனக்கென தனி இடத்தினை வைத்துள்ளார். இவர் கபில்ராஜுடன் வேகப்பந்து வீச்சு துறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் மத்திய வரிசையில் நிதான அட்டத்தினை வெளிப்படுத்தக் கூடியவருமாவார்.

இவர்களிற்கு மேலதிகமாக சிரேஷ்ட வீரர்களான சுபீட்ஷன், ஷெரோபன், அபிலக்ஷன் ஆகியோர் நிதானமான துடுப்பாட்டக்காரர்களாகவும், பகுதிநேர பந்து வீச்சாளர்களாகவும் நம்பிக்கை தரக்கூடியவர்கள். தனுஜன், சௌமியன் மற்றும் இளைய வீரர் பிரசாந்த் ஆகியோரும் துடுப்பாட்டத்தில் எதிர்பார்க்க கூடியவர்கள். இவர்களில் தனுஜன் யாழ் இந்துவுக்கு எதிராக சதம் ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

சென் ஜோன்சின் பந்துவீச்சு துறையினை அவதானிக்கையில் வேகப்பந்து வீச்சாளர்களான கபில்ராஜ், டினோஷான் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களான ஜதுசன், அபினாஷ் ஆகியோரிலேயே தங்கியுள்ளது.  

கடந்த காலங்களில் கல்லூரியின் கனிஷ்ட அணிகளின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட டேனியல் சுரேந்திரன் அவர்கள், கடந்த வருடம் பெற்றுக்கொடுத்த இன்னிங்ஸ் வெற்றியினைத் தொடர்ந்து இம்முறை இரண்டாவது ஆண்டாக சிரேஷ்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பணியினை தொடர்கின்றார்.

இவ்வருடம் சிரேஷ்ட அணியில் இருக்கின்ற வீரர்கள் தொடர்பில் இவரது கடந்தகால அவதானிப்புகள் மற்றும் புரிதல்கள் அணியினை வழிநடத்துவதற்கு பெரும் உதவியாக இருக்கும். இவர் “தனது வீரர்கள் பெற்றுள்ள போட்டி அனுபவங்கள் மற்றும் சிறந்த களத்தடுப்பு என்பன இம்முறை பெரும் சமரில் கைகொடுக்கும்” என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.  


யாழ் மத்திய கல்லூரி

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் போட்டித்தொடரில் பிரிவு 3 இல் ஆடிவரும் யாழ் மத்திய கல்லூரி அணியானது, தமது முதலாவது சுற்றுபோட்டிக்காக தாம் சந்தித்த 6 போட்டிகளில் 5 இல் வெற்றிபெற்றுள்ளது (2 இன்னிங்ஸ் வெற்றி உள்ளடங்கலாக). ஒரேயொரு போட்டியில் மட்டும் முதல் இன்னிங்ஸ் தோல்வியினை தழுவியுள்ளனர்.  தமது குழுவினுடைய சம்பியன்களாக திகழும் யாழ் மத்திய கல்லூரி அணியினர் இவ்வருடம் பிரிவு இரண்டிற்கு முன்னேறுவதிலும் தமது கவனத்தினை செலுத்தி வருகின்றனர்.

இந்த பருவகாலத்தில் மத்திய கல்லூரி பங்கெடுத்திருக்கின்ற 5 நட்பு ரீதியிலான போட்டிகளில், ஒன்றில் வெற்றி பெற்றுள்ளதுடன், 2 போட்டிகளை  சமநிலையில் நிறைவுசெய்துள்ள அதேவேளை, 2 போட்டிகள் மழை காரணமாக  முடிவின்றியும் நிறைவு பெற்றுள்ளன. புற்தரை ஆடுதளத்தில் (turf  pitch) இடம்பெற்ற கண்டி புனித அந்தோனியார் கல்லூரியுடனான போட்டியினை சமநிலையில் நிறைவுசெய்துள்ளனர்.

 

இரண்டாவது சுற்றுப் போட்டிகள் 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக இருப்பதால், அதற்கான தயார் படுத்தலிற்காக 3 போட்டிகளில் பங்கெடுத்திருக்கின்ற இவ்வணியினர் அவற்றில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் centralites கழக அணியுடனான போட்டியில் மட்டும் தோல்வியடைந்துள்ளனர்.  

பருவக்காலத்தின் ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரு துறைகளிலும் சமமான பெறுதியினை வெளிப்படுத்தி வருகின்றனர் யாழ் மத்திய கல்லூரி அணியினர். இவ்வருடம் பெரும் சமரினை மாத்திரமின்றி, பிரிவு 3 கிண்ணத்தினையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் மத்தியின் மைந்தர்கள்.

யாழ் மத்தியின் இந்த பருவகால போட்டி முடிவுகள்

போட்டி இன்னிங்ஸ் வெற்றி வெற்றி முதல் இன்னிங்ஸ் வெற்றி முடிவற்றது இன்னிங்ஸ் தோல்வி தோல்வி முதல் இன்னிங்ஸ் தோல்வி
11 02 02 03 02 00 00 02

 

அவதானிக்க வேண்டியவர்கள்

கடந்த வருட பெரும் சமரில் மத்திய கல்லூரியின் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் பலம் சேர்த்த 4 ஆம் வருட அனுபவ வீரரான சிவலிங்கம் தசோபன் மத்திய கல்லூரி அணியினை இம்முறை தலைமை தாங்குகின்றார். இவர் கடந்த வருடம் வட மாகாண 19 வயதிற்குட்பட்ட அணியினை பிரதிநிதித்துவம் செய்திருந்தார்.

உபாதை காரணமாக சில போட்டிகளில் ஓய்விலிருந்தபோதும், தசோபன் கண்டி அந்தோனியார் கல்லூரி, அக்குறனை அஸ்ஹர் கல்லூரி அணிகளுக்கெதிரான சதங்கள் உள்ளடங்கலாக இந்த பருவகாலத்தில் 500ற்கும் அதிகமான ஓட்டங்களைப் பெற்றுள்ளார். பந்துவீச்சிலும் 50 இற்கும் அதிகமான விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

19 வயதிற்குட்பட்ட வடமாகாண அணியில் அங்கம்வகித்திருந்த, ஓர்   அதிரடி ஆட்டக்காரரான ஸ்ரீஸ்கந்தராஜா கௌதமன் இப்பருவகாலத்திற்கான அணியின் உப தலைவராக செயற்பட்டு வருகின்றார். இவரும் இந்த பருவகாலத்தில் 3 அரைச்சதங்களை பதிவுசெய்திருக்கின்றார்.

அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான மதுசன் இம்முறை 45 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளதுடன், இந்த பருவகாலத்தில் மத்திய கல்லூரியின் மத்திய வரிசை துடுப்பாடத்தில் முக்கிய வீரராகவும் விளங்குகின்றார். இதற்கு சான்றாக ஒரு சதம் மற்றும் 5 அரைச் சதங்களினை பெற்றிருக்கின்றார். இவர் வட மாகாண 19 வயதிற்குட்பட்ட அணியில் சிறந்த பந்துவீச்சு பெறுதிகளினை வெளிப்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மத்தியின் பந்துவீச்சு துறையினை தலைமை தாங்குகின்றார் சுழற்பந்துவீச்சாளர் துஷாந்தன். ஸ்ரீ சுமங்கல வித்தியாலயத்திற்கெதிரான 10  விக்கெட்டுக்களினை சிறப்பு பெறுதியாகக்கொண்டு, பருவகாலத்தில் 65 இற்கும் அதிகமான விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.  

இரண்டாவது வருட சகலதுறை வீரர்களான இயலரசன் மற்றும் ஜெயதர்சன் ஆகியோர் இந்தவருடம் எதிர்பார்ப்பிற்குரிய இளைய வீரர்கள். இயலரசன் நிலைமையை அறிந்து நிதானமாக துடுப்பெடுத்தாடக்கூடியவர். அதேவேளை, ஜெயதர்சன் அல் அஸ்ஹர் கல்லூரிக்கு எதிராக சதம் ஒன்றினையும் பதிவுசெய்துள்ளார்.  

மத்திய கல்லூரியின் ஆரம்பத் துடுப்பாட்ட இணையாக புதுமுக வீரர்களான வியஸ்காந்த் மற்றும் மிஷன் ஆகியோர் களமிறங்குகின்றனர். இவர்களுள் நிஷான் ஒரு சதம், 3 அரைச் சதங்களை இந்த பருவகாலத்தில் பதிவுசெய்துள்ளார்.

இவர்களுக்கு மேலதிகமாக வேகப்பந்து வீச்சினை பலப்படுத்த மதுஷனுடன் இணைகின்றார் சுஜன்.

மத்திய கல்லூரி அணி வீரர்களின் இந்த பருவகால பெறுதிகளினை அவதானிக்கையில் சிரேஷ்ட வீரர்கள் மட்டுமன்றி, புதுமுக வீரர்களும் பந்து வீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு என முத்துறைகளிலும் சிறப்பாக செயற்பட்டுள்ளனர். அத்தனை வீரர்களும் ஒருங்கே தமது அணிக்காக சிறப்பான பெறுதியினை வெளிப்படுத்தி, சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு அழுத்தத்தினை வழங்கும் பட்சத்தில் போட்டியினை தம்வசப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

2001ஆம் ஆண்டில் மத்திய கல்லூரியில் இணைந்த சுரேஷ்மோகன் அவர்கள், சிரேஷ்ட அணியினை 2005ஆம் ஆண்டு முதல் இன்றுவரை தொடர்ச்சியாக 14 ஆண்டுகளாக பயிற்றுவித்து வருகின்றார்.  

அவர் கடமையேற்று, முதல் இரண்டு வருடங்கள் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. பின்னர் 2007 முதல் 2011 வரை தொடர்ச்சியாக 5 வருடங்கள் மத்திய கல்லூரி வடக்கின் பெரும் சமரில் வெற்றிபெற்றுள்ளது. இது வடக்கின் பெரும் சமர் வரலாற்றில் மத்திய கல்லூரி பெற்ற தொடர்ச்சியான நீண்ட வெற்றியாகும். அதன் பின்னரான 6 வருடங்களில் 3 சமநிலை முடிவுகளை இவர் பெற்றுக்கொடுத்துள்ளதுடன், 3 போட்டிகளில் அணி தோல்வியையும் சந்தித்துள்ளது.  

7 ஒருநாள் போட்டிகளினையும் இவர் வென்று கொடுத்திருக்கின்றார். மத்திய கல்லூரியின் வெற்றிகரமான பயிற்றுவிப்பாளர்களுள் இவரும் ஒருவர் என்பதில் எதுவிதமான மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

இவர் இவ்வருட அணிகுறித்து தெரிவிக்கையில்தொடர் வெற்றிபெற்ற காலங்களில் தமக்கு பெரும்பலமாகவிருந்த வேகப்பந்துவீச்சினை அண்மைக் காலங்களில் அணியினுள் உள்ளடக்க முடியாமை பெரும் குறையாக இருந்தது. ஆனால் இம்முறை அணியில் அக்குறையும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. இம்முறை மிகவும் சவாலான ஒரு போட்டியினை வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்என அவர் தெரிவித்திருந்தார்.

இறுதியாக,  

இரு அணிகளினதும் பந்து வீச்சு பலமான நிலையில் இருக்கின்ற அதேவேளை, துடுப்பாட்டம் தளும்பல் நிலையிலேயே இருக்கின்றது. ஒரு புறம் அனுபவ வீரர்களினை முதுகெலும்பாகக்கொண்ட அதிக எண்ணிக்கையிலான புதுமுக வீரர்களை உள்ளடக்கிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணியினரும், மறுபுறம் அதிக எண்ணிக்கையிலான இறுதிவருட வீரர்களை உள்ளடக்கி இருக்கின்ற அணியாக மத்திய கல்லூரி அணியினரும் திகழ்கின்றனர்.

இரு அணிகளினதும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்படுவார்கள் என எதிர்பார்க்கலாம். அதனால், போட்டியின் போக்கினை தீர்மானிப்பவர்களாக இரு அணிகளின் துடுப்படட வீரர்களே திகழப்போகின்றனர்.

புதுமுக வீரர்கள் அதிகளவாக காணப்படுகின்றதால், அவர்கள் பெரும்திரளான ரசிகர்கள் மத்தியிலான போட்டியினை எதிர்கொள்ளப்போகின்ற விதம் அணியின் சாதக பாதகங்களினை தீர்மானிக்கும்.

எதிர்வரும் 8 ஆம், 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ள 112ஆவது வடக்கின் பெரும் போரினை Thepapare.com ஊடக உலகம் பூராகவும் நேரடியாக கண்டுகளிக்க முடியும்.

 

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

யாழ் மத்திய கல்லூரியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கணேசநாதன் தனது கிரிக்கெட் அனுபவங்கள் மற்றும் இம்முறை 112ஆவது வடக்கின் பெரும் சமரில் களங்காணும் இரு அணிகள் குறித்து தனது கருத்துக்களை ThePapare.com உடன் பதிவு செய்கின்றார்.

SJC 53/2

Link to comment
Share on other sites

கடந்த 1994ஆம் மற்றும் 1995ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி கிரிக்கெட் அணியினை பிரதிநிதித்துவம் செய்திருந்த அரவிந்தன் அவர்கள் தனது அனுபவம் மற்றும் இவ்வருட பெரும்சமர் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்துகொள்கின்றார்.

SJC 75/2

Link to comment
Share on other sites

மதிய உணவு இடைவெளியின் பின் ஆட்டம் தொடர்கிறது...

 

சென். ஜோன்ஸ் கல்லூரி  110/2

Link to comment
Share on other sites

65 ஓட்டங்கள் எடுத்து ஆடி கொண்டு இருந்த சரோபன் ஆட்டம் இழந்து உள்ளார்.

சென். ஜோன்ஸ் கல்லூரி  116/3

Link to comment
Share on other sites

முதல் நாள் ஆட்ட முடிவில்...

 

சென். ஜோன்ஸ் கல்லூரி  217

 

யாழ் மத்திய கல்லூரி... 43/1

Link to comment
Share on other sites

112 ஆவது வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப் போட்டிகள்- இன்றைய ஆட்ட முடிவுகள்!

DSC_1825.jpg?resize=800%2C533
 
 வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று வியாழக்கிழமை காலை ஆரம்பமானது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டி இரண்டு கல்லூரிகளுக்கும் இடையேயான நூற்றாண்டு கடந்த 112ஆவது போட்டியாகும்.
 
இதுவரை நடந்து முடிந்த 111 ஆட்டங்களில் 40 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்ததுடன் சென் ஜோன்ஸ் கல்லூரி 36 போட்டிகளிலும் யாழ். மத்திய கல்லூரி 27 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எஸ்.தசோபன் தலைமையில் யாழ் மத்திய கல்லூரி அணியினரும் வி.ஜதுசன் தலைமையில் நடப்பு சம்பியன சென் ஜோன்ஸ் கல்லூரியினரும் இன்றைய 112வது போட்டியில் களம் இறங்கியுள்ளனர்.
 
யாழ். மத்திய கல்லூரி அதிபர் எழில் வேந்தன் மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஞானபொன்ராஜா ஆகியோர் தலைமையில் இன்று காலை யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் வீர்ர்கள் அறிமுகம் மற்றும் நாணயச்சுழற்சி இடம்பெற்றன.
 
 
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி அணி தலைவர் எஸ்.தசோபன் களத்தடுப்பை தேர்வு செய்தார். இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி 77.1ஓவர்களில் 217 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
 
துடுப்பாட்டத்தில் அணியின் ஆரம்ப ஆட்டக்காரராகக் களமிறங்கிய  வீரர் செரூபன் சிறப்பாக ஆடி 65 ஒட்டங்களைப் பெற்றார். மற்றொரு ஆட்டக்காரரான எல்சான் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார். இந்த நிலையில் மத்திய கல்லூரி அணி சார்பில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட றியாஸ்கான் மற்றும் ஜெயதர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
 
எனினும் றியாஸ்கான் ஐந்து ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த நிலையில் இன்றைய ஆட்டநேர முடிவின்போது யாழ். மத்திய கல்லூரி அணி 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ஓட்டங்களை பெற்றுள்ளது. இரண்டாம் நாள் ஆட்டம் நாளைக் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும்.
 
படங்கள்  – ஐ.சிவசாந்தன்
DSC_1827.jpg?resize=533%2C800DSC_1831.jpg?resize=533%2C800DSC_1853.jpg?resize=800%2C533DSC_1881.jpg?resize=800%2C533DSC_1887.jpg?resize=800%2C293DSC_1893.jpg?resize=800%2C533DSC_1900.jpg?resize=800%2C713DSC_1971.jpg?resize=800%2C533DSC_2033.jpg?resize=800%2C533DSC_2068.jpg?resize=800%2C533DSC_2084.jpg?resize=800%2C533DSC_2096.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/69968/

Link to comment
Share on other sites

வியாஸ்காந்த் பந்துவீச்சில் அசத்த யாழ் மத்திய கல்லூரி முன்னிலையில்
Battle-of-the-north-Day-1.jpg

வியாஸ்காந்த் பந்துவீச்சில் அசத்த யாழ் மத்திய கல்லூரி முன்னிலையில்

 

சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ் மத்திய கல்லூரி அணிகள் மோதும் 112 ஆவது வடக்கின் பெரும் சமர் இன்று (08) யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் மத்திய கல்லூரி அணித் தலைவர் சிவலிங்கம் தசோபன் முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாட களம் நுழைந்த சென் ஜோன்ஸ் கல்லூரி அணி அதிரடியாக ஆடி 20 பந்துகளில் 22 ஓட்டங்களை குவித்திருந்த வேளையில், சுஜன் முதலாவது விக்கெட்டை சாய்த்தார். பின்னர் தசோபன் எதிர்பார்ப்பிற்குரிய வீரரான அபினாசை விரைவாக ஆடுகளம் விட்டு அகற்றினார். ஷெரோபன் நிதானமாக ஆடி அரைச் சதம் (65) கடந்திருந்தார். மறுமுனையில் எல்ஷான் டெனுஷன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்.

 

பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஆடுகளம் விரைந்த  சென் ஜோன்ஸ் கல்லூரியின் அணித் தலைவர் யதுஷன் வந்த வேகத்திலேயே சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் பகுதி நேர சுழல் பந்து வீச்சாளரான வியாஸ்கந்த் மூலம் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து 18 ஓட்டங்களுடன் சுபீட்ஷன் துஷாந்தனின் பந்து  வீச்சில் ஆட்டமிழந்தார். நெடுநேரம் நிலைத்து, நிதானமாக ஆடி 160 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பெற்ற வேளையில் எல்ஷான் டெனுசனின் விக்கெட்டையும் வியாஸ்கந்த் சாய்த்தார்.

7 ஆம் இலக்கத்தில் களம் நுழைந்த டினோசன் விரைவான 28 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். கபில்ராஜ், அபிலாக்ஷன் ஆகியோரின் விக்கெட்டுக்கள் விரைவாக சரிக்கப்பட, 101 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்கள் என்ற பலமான நிலையில் மதிய போசண இடைவேளைக்கு சென்றிருந்த சென் ஜோன்ஸ் கல்லூரி அணி  195 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.

இறுதியில் ஜோயல் பிரவீனின்  21 ஓட்டங்களின் துணையுடன், சென் ஜோன்ஸ் கல்லூரி 77.1 ஓவர்களை எதிர்கொண்டு சகல விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது.  

யாழ் மத்திய கல்லூரியின் சார்பில் பந்துவீச்சில் 8 விக்கெட்டுக்களை சுழல் பந்துவீச்சாளர்கள் தம்வசப்படுத்தினர். அதிலும் வியாஸ்காந்த் முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தி போட்டியின் போக்கை மாற்றியிருந்தார். வியாஸ்கந்த 4 விக்கெட்டுக்களையும் தசோபன் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

தொடந்து தமது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த யாழ் மத்திய கல்லூரி அணி ஆட்ட நேர நிறைவில் 16 ஓவர்களை எதிர்கொண்டு 43 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து காணப்படுகின்றது.

 

ஜெயதர்ஷன் 16 ஓட்டங்களுடனும், நிஷான் 13 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். வீழ்த்தப்பட்ட ஒரு விக்கெட்டை கபில்ராஜ் தம்வசப்படுத்தியிருந்தார்.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது நாள் ஆட்டம் நாளை தொடரும்.

  • ஸ்கோர் விபரம்

Full Scorecard

 
Jaffna Central College

43/1

(16 overs)

Result

217/10

(77.1 overs)

St.John's College Jaffna

 

Jaffna Central College’s 1st Innings

BATSMEN         R B
V. Viyaskanth c V. Jathushan (C) b K. Kapilraj 5 18
A.D. Jeyatharsan not out 16 44
S. Nishan not out 13 38
Extras
 
Total
43/1 (16 overs)
Fall of Wickets:
 
BOWLING O M R W ECON
K. Kapilraj 8 0 16 1 2.00
T. Dinoshan 2 0 10 0 5.00
S. Shanushan 4 0 9 0 2.25
V. Jathushan 2 1 4 0 2.00

St.John's College Jaffna’s 1st Innings

BATSMEN         R B
N. Sowmiyan b S. Sujan 22 20
D. Sherophan c A.D. Jeyatharsan b S. Thasopan (C) 65 110
M.Abinash b S. Thasopan (C) 5 14
E. Denushan c S. Dilesiyan b V. Viyaskanth 32 160
V. Jathushan b V. Viyaskanth 1 5
J. Subeedsan b S. Thusanthan 18 42
T. Dinoshan c S. Dilesiyan b S. Thasopan (C) 28 38
K. Kapilraj c S. Dilesiyan b V. Viyaskanth 16 18
V. Abilakshan c S. Dilesiyan b V. Viyaskanth 1 9
J. Piraveen c S. Nishan b S. Mathusan 21 28
S. Shanushan not out 1 19
Extras
7
Total
217/10 (77.1 overs)
Fall of Wickets:
 
BOWLING O M R W ECON
S. Sujan 11 1 57 1 5.18
S. Mathusan 8.1 1 23 1 2.84
S. Thasopan (C) 29 8 34 3 1.17
S. Thusanthan 12 2 38 1 3.17
V. Viyaskanth 17 3 58 4 3.41

Jaffna Central College’s 2nd Innings

Extras
 
Total
0/0 (0 overs)
Fall of Wickets:
 

St.John's College Jaffna’s 2nd Innings

Extras
 
Total
0/0 (0 overs)
Fall of Wickets:
 

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.