Jump to content

யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி


Recommended Posts

52 வது கேள்வி வரை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.....

 

1. கந்தப்பு  56

2. கறுப்பி  53

3. suvy   52

4. பகலவன்  52

5. கிருபன்  52

6. குமாரசாமி  52

7. vasanth1  51

8. kalyani  49

9. nunavilan  48

10. nesen  48

11. ஈழப்பிரியன்  48

12. Eppothum Thamizhan   47

13. தமிழினி  46

14. சுவைப்பிரியன்  46

15. வாதவூரான் 45

16. வாத்தியார்  44

Link to comment
Share on other sites

  • Replies 375
  • Created
  • Last Reply

இன்றைய போட்டி.....

 

சமபலத்துடன் பிரான்ஸ்-பெல்ஜியம்

 

 
france-belgium

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை இரவு நடைபெறும் பிரான்ஸ்-பெல்ஜிய அணிகள் இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் கோல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காலிறுதியில் பிரான்ஸ் அணி உருகுவேயையும், பெல்ஜியம் பிரேஸில் அணியையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின. 
இந்நிலையில் செயின்ட்பீட்டர்ஸ்பர்க்கில் செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணிக்கு நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன. இரு அணிகளும் சிறந்த முன்கள தாக்குதல் ஆட்டக்காரர்கள் உள்ள நிலையில் கோல் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. 
கடந்த 1986-இல் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம் 2-4 என பிரான்ஸிடம் தோல்வியடைந்தது. அதன் பின் இரு அணிகளும் 8 நட்பு ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் பெல்ஜியம் 2 முறை வென்றுள்ளது. இரண்டாவது முறையாக உலகக்கோப்பை அரையிறுதிக்கு பெல்ஜியம் முன்னேறியுள்ளது.
நடப்பு உலகக் கோப்பையில் இளம் வீரர்களை அதிகம் கொண்ட இரண்டாவது அணியாக பிரான்ஸ் உள்ளது. 19 வயது முன்கள வீரர் மாப்பே, தாக்குதல் ஆட்டக்காரர்கள் பவேர்ட், லுகாஸ் ஹெர்ணான்டஸ் ஆகியோர் இதில் பிரதானமாக உள்ளனர். கிரைஸ்மேன், போக்பா, போன்ற முன்கள வீரர்கள் எதிரணியின் தற்காப்பு ஊடுருவி கோலடிக்கும் திறன் பெற்றவர்கள். 
1998-இல் உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த டெஸ்சாம்ப்ஸ் தற்போது தலைமை பயிற்சியாளராக உள்ளார். அவரின் கீழ் கட்டுக்கோப்பான துடிப்பான அணியாக உருவெடுத்துள்ளது.
அதே நேரத்தில் ராபர்ட்டோ மார்டினெஸ் தலைமையில் பெல்ஜிய அணி உலகக் கோப்பையை எவ்வாறு எதிர்கொள்ளும் என சந்தேகம் எழுந்த நிலையில் அந்த அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. வீரர்களின் தனிப்பட்ட திறமையை ஒட்டுமொத்த அணியின் திறமையாக மாற்றி மார்டினெஸ் சாதனை படைத்துள்ளார். பிரான்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரராக இருந்த தியரி ஹென்றி தற்போது பெல்ஜியத்தின் துணை பயிற்சியாளராக உள்ளார். தாக்குதல் ஆட்ட முறையை பலப்படுத்திய ஹென்றியால் பெல்ஜிய அணி இதுவரை 14 கோல்களை அடித்துள்ளது. 
பெல்ஜிய கோல்கீப்பர் திபாட் கோர்டோய்ஸ், பிரான்ஸின் ஹியுகோ லோரிஸ் ஆகியோர் எதிரணியின் கோல் வாய்ப்புகளை தடுப்பதில் பிரதானமாக உள்ளனர். 
பெல்ஜியத்தின் தற்காப்பு வீரர் தாமஸ் மியுனியர் இல்லாததது பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் அரையிறுதி ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் பெல்ஜியம் போட்டி  சுவியாரா கிருபனா யாழ்களப் போட்டியில் வெல்லப்போகிறார்கள் எனத்தீர்மானிக்கப்போகிறது. 

அப்ப  நான் வெல்லமாட்டேனா?.   இங்கிலாந்து அல்லது குரோசியா உலகக்கிண்ணத்தினைக் கைப்பற்றினால் சந்தர்ப்பம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

பிரான்ஸ் பெல்ஜியம் போட்டி  சுவியாரா கிருபனா யாழ்களப் போட்டியில் வெல்லப்போகிறார்கள் எனத்தீர்மானிக்கப்போகிறது. 

அப்ப  நான் வெல்லமாட்டேனா?.   இங்கிலாந்து அல்லது குரோசியா உலகக்கிண்ணத்தினைக் கைப்பற்றினால் சந்தர்ப்பம் இருக்கிறது.

இன்று பெல்ஜியம் கொடுக்கும் மரண அடியில் பிரான்ஸ்காரர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று மொஸ்கோவில் இருந்து பாரிஸுக்கு ஓடும்போது தெரியும்?

இங்கிலாந்து அதிர்ஷ்டத்தால் இவ்வளவு தூரம் வந்திருக்கு. அதிகம் ஆசைப்படக்கூடாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

உலகமே எதிர்பார்த்திருக்கும் அற்புதமான தருணங்கள் மிக விரைவில்.....!  ?

Link to comment
Share on other sites

பிரான்ஸ் வெற்றி.

suvy,  Eppothum Thamizhan, ஈழப்பிரியன், வாதவூரான், வாத்தியார்  இவர்களுக்கு2 புள்ளிகள் கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

53.   இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்கு தலா 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்)

                                                                   பிரான்ஸ் வெற்றி.

suvy,  Eppothum Thamizhan, ஈழப்பிரியன், வாதவூரான், வாத்தியார்  இவர்களுக்கு 2 புள்ளிகள் கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

53  வது கேள்வி க்கு     இது வரை நடந்து முடிந்த போட்டிக்கு மட்டும்  வரை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.....

 

1. கந்தப்பு  56

3. suvy   54

2. கறுப்பி  53

4. பகலவன்  52

5. கிருபன்  52

6. குமாரசாமி  52

7. vasanth1  51

8. ஈழப்பிரியன்  50

9. Eppothum Thamizhan   49

10. kalyani  49

11. nunavilan  48

12. nesen  48

13. வாதவூரான் 47

14. தமிழினி  46

15. சுவைப்பிரியன்  46

16. வாத்தியார்  46

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம மாஸ்டர் கறுப்பி கிருபனின் ஆளாய் இருப்பாரோ......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி புள்ளிகள் எடுக்க சாண்ஸ்சே இல்லை.‭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கலைஞன் said:

மெதுவாக ஆனால் உறுதியாக இலக்கினை நோக்கி முன்னேறுகின்றார் சிட்னி கந்தப்பு.

ஆமையும் முயலும் கதைதான்  நினைவில் வருகிறது.  காலிறுதிவரைக்கும் வேகமாக ஓடி புள்ளிகள் பெற்றுவிட்டேன். இனி புள்ளிகள் கிடைக்காது.  நிதானமாக ஓடி பிரான்ஸ் வெல்வதினால் சுவியர் முதல் இடம் பிடிப்பார். எனினும் இங்கிலாந்து அல்லது குரோசியா அணியினர்  சிலவேளைகளில் என்னைக் காப்பாற்றுவார்கள். 

Link to comment
Share on other sites

வரலாறு படைக்குமா குரோஷியா?: அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதல் அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதல்

 

 
crotia-training2

பயிற்சியில் குரோஷிய வீரர்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் வென்று உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைக்குமா குரோஷியா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இங்கிலாந்து அணி காலிறுதியில் ஸ்வீடனையும், குரோஷியா போட்டியை நடத்தும் ரஷியாவையும் வென்று அரையிறுதிக்கு முன்னேறின.
கடந்த 1998-இக்கு பின் தற்போது தான் குரோஷியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில் 1966 சாம்பியனான இங்கிலாந்தும் 1990-இக்கு பின் தற்போது தான் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 


இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பையில் துவக்கம் முதலே தனது தாக்குதல் ஆட்டத்தால் எதிரணிகள் மீது கோல் மழை பொழிந்தது. மொத்தம் 11 கோல்களை அடித்துள்ளனர். இதில் 8 கோல்கள் திட்டமிட்டு அடிக்கப்பட்டவையாகும். தாக்குதல் முறை மற்ற அணிகளைக் காட்டிலும் வித்தியாசமாக காணப்படுகிறது. வழக்கமான ஆட்டமுறைக்கு அதன் பயிற்சியாளர் செளத்கேட் கடைபிடித்து புதிய உத்திகளை கடைபிடித்து வருகிறார். மேலும் தற்காப்பு அரணும் வலுவான உள்ளது. கைல் வாக்கர், ஜான்ஸ்டோன்ஸ், ஹாரி மேகியூர் போன்றவர்கள் நடுக்களத்திலும், கோல்கீப்பர் பிக் போர்டும் எதிரணிகளின் கோல் முயற்சிகளை முறியடித்து விடுகின்றனர். அதே நேரத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் சிறப்பாக பந்துகளை கடத்தி நேர்த்தியாக அனுப்புகிறார்.


குரோஷியா அணியும் முதல் சுற்றில் தோல்வியே காணாமல் அரையிறுதிக்கு முன்னேறியது. மெஸ்ஸின் ஆர்ஜென்டீனாவை 3-0 என வீழ்த்தியதும் குரோஷியா அனைவரதும் கவனத்தையும் கவர்ந்து விட்டது. உலகின் சிறந்த தாக்குதல் ஆட்டக்காரர்களில் ஒருவரான மரியோ மண்டுஸுகிக், நடுக்கள வீரர் கேப்டன் லுகா மொட்ரிக் , இவான் ரக்டிக் ஆகியோர் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடக்கூடியவர்கள்.
64 ஷாட்களில் 41 கோல்பகுதிக்கு உள்ளேயே சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.


குரோஷிய கோல்கீப்பர் டேனிஜல் சுபாஸிக் அபார பார்மில் உள்ளார். குறிப்பாக டென்மார்க், ரஷியா அணிகளுக்கு எதிரான பெனால்டி ஷூட் அவுட்டில் எதிரணி முயற்சிகளை முறியடித்தார். பெனால்டி பகுதியில் 8 ஷாட்களை தடுத்தார். அரையிறுதியிலும் சுபாஸிக் பங்கு அதிகம் இருக்கும்.
இரு அணிகளில் இங்கிலாந்து சற்று கூடுதல் பலத்துடன் காணப்படுகிறது. ஆனால் குரோஷிய அணியினர் ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடிய ஆபத்தான அணியாகும் என்பதால் இந்த அரையிறுதி ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து இன்றைய போட்டியில் வெல்லும்போது சில கார்கள், கடைகள் உடைக்கப்படலாம்! தோற்றால் பல கார்களும் கடைகளும் உடைக்கப்படும்!!

எனவே பிரான்ஸ் உலகக்கிண்ணத்தை வெல்லவேண்டும். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

இங்கிலாந்து இன்றைய போட்டியில் வெல்லும்போது சில கார்கள், கடைகள் உடைக்கப்படலாம்! தோற்றால் பல கார்களும் கடைகளும் உடைக்கப்படும்!!

எனவே பிரான்ஸ் உலகக்கிண்ணத்தை வெல்லவேண்டும். ?

The Battle of Waterloo was fought on Sunday, 18 June 1815, near Waterloo in present-day Belgium, then part of the United Kingdom of the Netherlands. A French army under the command of Emperor Napoleon Bonaparte was defeated by two of the armies of the Seventh Coalition: a British-led Allied army under the command of the Duke of Wellington, and a Prussian army under the command of Gebhard Leberecht von Blücher, Prince of Wahlstatt. The battle marked the end of the Napoleonic Wars.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரோஷியாவில் எமது கிளைகள் கிடையாது,அதனால் இங்கிலாந்துக்கு நாம் எமது ஆதரவை நல்குகின்றோம்....!  tw_blush:

வெற்றிக்கோப்பை நெப்போலியனுக்கே......!

Image associée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது 1815ல் நெப்போலியன் தோற்ற இடம் வொட்டலூர்.  பெல்ஜியத்தினைக் கடந்து நெப்போலியனின் பிரெஞ்சுப் படை இங்கிலாந்திடம் தோற்றது. இது மீண்டும் நடக்குமா?      ஆனால் குரோசியாவின் கோல்கீப்பரின் விளையாட்டினைப்பார்க்கும் போது குரோசியாவை வெல்வது அவ்வளவு இலகுவானதானது அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறுகள் மாற்றி எழுதப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை ......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த Greizman வேற ஒழுங்கா கோல்  அடிக்கிறான் இல்லை. எண்ட பாடு கொஞ்சம் கஷ்டம்தான்.

Link to comment
Share on other sites

53.   இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்கு தலா 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்)

                                                                   பிரான்ஸ், குரோஷியா

53  வது கேள்வி வரை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.....

 

1. கந்தப்பு  56

3. suvy   54

2. கறுப்பி  53

4. பகலவன்  52

5. கிருபன்  52

6. குமாரசாமி  52

7. vasanth1  51

8. ஈழப்பிரியன்  50

9. Eppothum Thamizhan   49

10. kalyani  49

11. nunavilan  48

12. nesen  48

13. வாதவூரான் 47

14. தமிழினி  46

15. சுவைப்பிரியன்  46

16. வாத்தியார்  46

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்துக்காரர் விழுந்துகிடந்து அழுவதைப் பார்க்க சந்தோசமா இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

suvy எனக்கு என்னவோ உலக கிண்ண கோப்பையில் Croatia வின் பெயர் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது போல தோன்றுகிறது.  ஆனால் Griezmann ஹாட்ரிக் அடித்து பிரான்ஸ் வென்றால் எனக்குத்தான் வெற்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Eppothum Thamizhan said:

suvy எனக்கு என்னவோ உலக கிண்ண கோப்பையில் Croatia வின் பெயர் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது போல தோன்றுகிறது.  ஆனால் Griezmann ஹாட்ரிக் அடித்து பிரான்ஸ் வென்றால் எனக்குத்தான் வெற்றி .

அதிக கோல் அடிப்பவர் இடத்தில் நானும் "கிரிஷ்மான்" தான் போட்டிருக்கிறன். பார்ப்போம்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.