Jump to content

காணாமல் ஆக்­கப்­ப­டுமா...? ‘காணாமல் போனோர்’ விவ­காரம்


Recommended Posts

காணாமல் ஆக்­கப்­ப­டுமா...? ‘காணாமல் போனோர்’ விவ­காரம்

6-56634dcb12c8b5d14bbeb32832fa33676896f347.jpg

 

காணாமல் போனோரை தேடும் தமிழ் உற­வுகள் விரக்­தியின் விளிம்பில் நிற்­பதை நான் நேரில் பார்த்தேன். அவர்­களை பொறுத்­த­வரை தங்­க­ளுக்கு ஆறுதல் வார்த்­தைகள் கூறு­வ­தற்கு கூட எவரும் இல்­லாத நிலை. இதில் ஒரு உண்­மையை உணர வேண்டும். இலங்கை அர­சியல்வாதி­களின் சிங்­க­ளவர் உட்­பட எவ­ரு­டைய பிள்­ளையும் இவ்வாறு காணாமல் ஆக்­கப்­பட­வில்லை. அப்­படி நடந்­திருந்தால் அதன் வேத­னையை ஓர­ள­வா­வது புரிந்து இருப்­பார்கள். தமிழ் அர­சியல்வாதிகள் முக்­கி­ய­மாக எதிர்­க்கட்சித் தலை­வ­ராக இருக்கும் சம்­பந்தன் இந்த விடயம் தொடர்­பாக எவ்­வித கரி­ச­னை­யையும் காட்­ட­வில்லை என்­பது தெளி­வா­கின்­றது. தமிழ் அர­சியல்வாதி­களை நம்­பினோம், ஜனா­திப­தியை நம்­பினோம் எவரும் கரி­சனை காட்­ட­வில்லை என்­கின்ற அந்த மக்­களின் உணர்­வு­களை எவரும் புரிந்­த­தாக தெரி­ய­வில்லை. இலங்கை அரசில் தற்­போது இருக்கும் மூன்று முக்­கிய தலை­வர்கள் ஜனா­தி­பதி, பிர­தமர் மற்­றது எதிர்க்­கட்சி தலைவர். தமிழ்ச்­ச­மூ­கத்தின் தலைவர் என இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர், அவர் காணா­மல்­போனோர் விட­யத்தில் எத­னை­யா­வது செய்து இருக்­கி­றாரா? காணாமல் போனோர் உற­வுகள் கேட்கும் நியா­ய­மான கேள்வி.

ஜனா­தி­ப­தியுடன் தங்கள் பிள்­ளை­களை தாங்கள் பார்­த­்ததாகக் கூறும் உற­வு­களும் இராணு­வத்­திடம் தாங்­களாக ஒப்­ப­டைத்­த­தாகக் கூறும் தாய்­மாரும் தங்­க­ளுக்கு சர்­வ­தே­சம்தான் ஒரு பதில் சொல்­ல­வேண்டும் என்­கி­றார்கள். இது அவர்­களின் விரக்­தியின் வெளிப்­பாடு. சர்­வ­தேசம் பதில் சொல்­ல­வேண்­டிய பல நூறு வினாக்­க­ளுக்கு பதில் இல்லை. இவர்­களின் அவ­லத்தை முக­வரி அற்ற சர்­வ­தேசம் எவ்­வாறு அணுக முடியும்.

கடந்த ஜூலை ஐக்­கிய நாடுகள் சபை பொது செயலர், இலங்கை அரசு காணாமல் போனோர் காரி­யா­லயம் அமைக்­கப்­பட்­ட­தற்­காக தனது பாராட்­டு­களை இந்த அர­சுக்கு தெரி­வித்து இருந்தார். சர்­வ­தேச சமூ­கத்தின் நல்­லு­றவை சம்­பா­திக்க இலங்கை அரசு செய்­து­வரும் இழுத்­த­டிப்­புகள் என்­ப­தனை ஐக்­கிய நாடுகள் அறிந்­தி­ருந்தும் இலங்­கையின் பொறுப்பு கூறும்­வி­ட­யத்தில் இலங்கை அரசு மீது அழுத்­தங்­களை பிர­யோ­கிக்க முடி­யாத தனது ‘கையா­லா­காத போக்கை’ மீண்டும் ஒரு முறை வெளிக்­காட்­டி­யது.

பல­வந்­த­மாக காணாமல் ஆக்­கப்­பட்டோர் விவ­கா­ரத்தில் ஐக்­கிய பாது­காப்பு சபையின் தீர்­மா­னத்தின் பிர­காரம் யுத்­த­க்குற்­றங்­களை புரிந்த நாடு­க­ளுக்குள் யுத்­தத்தில் காணாமல் ஆக்­கப்­ப­ட்டதற்­கான விசா­ர­ணைகள் உட்­பட யுத்தக் குற்ற விசா­ர­ணை­களும் நடத்­தப்­பட்டு அதற்­கான பரி­கா­ரங்­களும் காணப்­பட்­டன. ஆனால்­, இ­லங்கை விட­யத்தில் அப்­ப­டி­யா­ன­தொரு முன்­னெ­டுப்பு அறவே இல்­லாது போனதால் இலங்கை அரசு தனது பொறுப்பில் இருந்து புத்­தி­சா­லித்­த­ன­மாக தப்­பிக்­கொள்­கி­றது.

அண்­மையில் நடந்த தேர்தல் பிர­சாரக் கூட்­ட­மொன்றில் ஜனா­தி­பதி, காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் இலங்கை சிறையில் எந்த இடத்­திலும் இல்லை என்­கிறார். நாட்டின் அதி உயர்ந்த அதி­கா­ரத்தில் உள்­ளவர் கூறும்­போது வேறு யாரி­டமும் காணாமல் போன­வர்கள் அடைக்­கப்­பட்டு இருக்­கி­றார்­களா என வின­வ­மு­டி­யாது. காணாமல் ஆக்­கப்­ப­ட­்ட­வர்கள், உயி­ரோடு இருந்தால் அவர்கள் இலங்­கையில் இல்லை. அல்­லது வெளி­நா­டு­களில் இருக்­கலாம். அவ்­வாறு இல்­லா­விடில் அவர்கள் இப்­போது உயி­ரோடு இல்லை. தங்கள் உற­வுகள் உயி­ரோடு இல்லை என்­பதை ஏற்­றுக்­கொள்ள உணர்­வுகள் இடம் கொடுக்­கா­வி­ட்­டாலும் அதுதான் உண்மை.

ஜனா­தி­பதி தேர்தல் பிர­சார மேடை­களில் காணாமல் போனோர் உயி­ரோடு இல்லை என்று சொல்­வதை தங்­களால் ஏற்றுக் கொள்ள முடி­யாது என்றும், இரண்டு மூன்று தட­வைகள் ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பில் காணாமல் போனோரை தேடி தரு­வ­தாக உறுதி அளித்­த­தா­கவும் காணா­மல்­போனோர் உற­வி­னர்­களின் சார்பில் கூறப்­ப­டு­கின்­றது.

காணாமல் போனோரை கண்­டு­பி­டிக்க அரசின் மற்­று­மொரு வழி காணாமல் போனோ­ருக்­கான காரி­யா­லயம். ஜனா­தி­பதி கூறி­ய­தைத்தான் இந்த காரி­யா­ல­யமும் உறு­திப்­ப­டுத்­த­போ­கின்­றது. ஆனால் அது ஒவ்வொ­ரு­வ­ருக்கும் தனித்தனி­யாக கூறப்­போ­கின்­றது. இதில் எவ்­வித மாற்­றமும் கிடை­யாது. காரணம் அவ­ர்கள் உயி­ரோடு இல்லை என்­ப­துதான் ஏற்றுக்கொள்­ளவே முடி­யாத உண்­மை­யாக இருக்­கலாம்.

காணாமல் போனோர் காரி­யா­லயம் இந்த அர­சாங்­கத்தின் இந்த விவ­கா­ரத்தை கையாளும் பொறி­மு­றையைக் கொண்­ட­தாக நம்­பப்­படும் தற்­போ­தைய ஏற்­பாடு. இது எந்த அள­வுக்கு காணாமல் போனோர்­களின் உற­வு­களை அணுக போகின்­றது என்­பது ஒரு புற­மி­ருக்க, இந்த காரி­யா­லயம் அமைப்­பதில் அர­சாங்கம் காட்­டி­வ­ரு­கின்ற அச­மந்தப் போக்கு எந்த அள­வுக்கு மனித உயி­ர்களை அதுவும் சிறு­பான்மை தமி­ழர்­களின் உயிர்­க­ளையும் உணர்­வு­களையும் மதிக்­கி­றது என்­ப­தற்கு ஒரு எடுத்துக்காட்டு.

கடந்த 2016 மே மாதம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட்ட காணா­மல்­போனோர் காரி­யா­லயம் அமைக்கும் சட்டத்தில் 2017 ஜூலை மாதம் ஜனா­தி­பதி அங்­கீ­காரம் செய்து இது­ வரை காரி­யா­லயம் இயங்க ஆரம்­பிக்­க­வில்லை.

நடந்து முடிந்த பல மனித உரிமை மீறல் கள் அதன் குற்­றச்­சாட்­டுக்கள் யாவும் காலம் தாழ்த்­து­வதால் அவற்றை நீர்த்து போக செய்ய முடியும் என்ற போக்கில் இருக்கும் இலங்கை அரசு காணாமல் போனவர் விட­யத்­திலும் அவ்­வாறு நடந்து கொள்ள முயற்­சிக்­கின்­றது என்ற சந்­தேகம் எழுந்­துள்­ளது.

காணாமல் போனோர் காரி­யா­லயம் அமைப்­ப­திலும் அதன் செயற்­பா­டு­க­ளிலும் வெளிப்­படை தன்மை இருக்க வேண்டும் என அர­சாங்கம் நம்­பு­கி­றது. அதன் படி அந்த காரி­யா­ல­யத்­திற்­கு­ரிய அங்­கத்­த­வர்­களை பகி­ரங்க விண்­ணப்­பங்கள் கோரப்­பட்டு, தெரிவு செய்­யப்­பட்டு ஜனா­தி­ப­தி­யினால் நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்ட­தாக தெரிய வரு­கின்றது. 90 வீத­மா­ன­வர்கள் சிறு­பான்மை தமி­ழர்கள் காணாமல் போன விவ­கா­ரத்தை கையா­ளப்­போகும் இந்த காரி­யா­ல­யத்தில் ஏழு பேர் கொண்ட அங்­க­த்தவர்­களில் இருவர் மாத்­தி­ரமே தமிழ் சமூ­கத்தை சேர்ந்­த­வர்கள் என்­பது இங்கு குறிப்­பிட வேண்டும்.

இந்த காரி­யா­லயம் செயற்­பட ஆரம்­பித்­த­பின்பு காணாமல் போனோரின் உற­வுகள் இந்த காரி­யா­லய அதி­கா­ரி­களை அணுகி, தங்கள் காணாமல் போன­வர்கள் பற்­றிய விப­ரத்தை திரும்­பவும் ஒரு முறை வெளிப்­ப­டுத்த வேண்டும். அவ்­வாறு வழங்­கப்­படும் தக­வல்­களின் அடிப்­ப­டையில் அதி­கா­ரிகள் காணாமல் போன­வரை தேடி கண்­டு­பி­டிக்க முனை­வார்கள் உதா­ர­ண­மாக, ஜனா­தி­ப­தி­யுடன் ஊடக புகைப்­ப­டத்தில் காணப்­பட்ட­தாகக் கூறும் உற­வினர் அந்த விப­ரங்­களை தெரி­யப்­ப­டுத்தி எங்கு உள்ளார் என்­பதை தேடு­வ­தற்­கு­ரிய ஒரு வாய்ப்பை இந்தக் காரி­யா­லயம் வழங்கும் என கூறப்­பட்­டுள்­ளது. ஆனால், ஜனா­தி­ப­தி­யினால் கண்டுபிடிக்க முடி­யாத ஒரு­வரை இந்த அதி­கா­ரிகள் கண்டுபிடிக்க முடி­யுமா என்ற காணாமல் போன உற­வு­களின் சந்­தேகம் நியாய­மா­ன­தாக இருக்கக்கூடும்.

காணாமல் போனோரின் உற­வி­னர்கள் நடத்தும் போரா­ட்டம் இனி­மேலும் அர்த்­த­முள்­ளதா என்­பதை அந்த உற­வுகள் சற்று சிந்­திக்க வேண்டும். காணாமல் போனோர் உற­வுகள் நடத்தும் போராட்டம் ஒரு வரு­டத்தை எட்­டு­கி­றது.

காணாமல் போனோர் உயி­ரோடு இல்லை என்ற இறுதி முடி­வைத்தான் இந்த காரி­யா­லயம் கூற­மு­டி­யுமே தவிர, இலங்கை முழு­வதும் சல்­லடை போட்­டு ­தேடும் பணியை இந்த காரி­யா­லயம் செய்­யப்­போ­வது இல்லை. இராணு­வத்­திடம் தங்கள் உற­வு­களை ஒப்­ப­டைத்­த­தாக கூறும் இவர்கள் எங்கு எவ்­வாறு தேடப் போகி­றார்கள். இராணுவ முகாம்­க­ளுக்குள் இருக்கும் மனித புதைகுழி­களை தோண்டி எடுக்கும் அதி­காரம் இந்தக் காரி­யா­ல­யத்­திற்கு இல்லை. இந்தக் காரி­யா­லயம் செயற்­பட ஆரம்­பித்த பின்பு காணாமல் போன உற­வுகள் உயி­ரோடு இல்லை என்று கூறு­வதை கேட்கும்வரை இந்த போராட்­டங்­களை தொடர வேண்­டுமா அல்­லது உயி­ரோடு இல்லை என்­பதை ஏற்­றுக்­கொண்டு அடுத்த கட்­ட­மாக இந்த காரி­யா­ல­யத்தை விரை­வில் செயற்­பட செய்து அதனால் கிடைக்கக்கூடிய நன்­மை­களை பெற முயற்­சிப்­பது பல­னுள்­ளதா என்­பதை சிந்­திக்க வேண்­டிய நிலையில் காணாமல் போனோரின் உற­வுகள் இருக்­கின்­றார்கள். இது இலங்­கையில் இப்­போது உள்ள யதார்த்த நிலைமை என்­பதை விட வேறு எதுவும் இல்லை.

இலங்­கையின் தற்­போ­தைய நீதி சேவை ஒப்­பி­ட்ட அளவு நம்­பிக்­கை­யா­னதும் சுயா­தீ­ன­மா­கவும் இருக்­கி­றது என்­பது அனை­வ­ராலும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. காணாமல் போனோர் விவ­கா­ரத்தில் நீதி மன்­று­களை நாடு­வது தொடர்­பாக இலங்­கையில் உள்ள மனித உரிமை தொடர்பான வழக்­கு­களை கையாளும் சட்­ட­வா­ளர்­களின் உத­வி­களை நாடு­வது பற்­றியும் காணாமல் போனோர் உற­வுகள் முயற்­சிக்­கலாம். இராணு­வத்­திடம் கூட்­ட­மாக சர­ண­டையும் போது அல்­லது தங்கள் உற­வு­களை ஒப்­ப­டைக்கும் போதும் சரி­யான ஆதா­ரங்­களை வைத்­தி­ருப்­பார்கள் என முடி­யாது. ஆனால் ஒரு குறிப்­பி­ட்ட இராணுவ சிப்­பா­யிடம் அல்­லது படையை சேர்ந்­த­வ­ரிடம் ஒரு­வரை ஒப்­ப­டைத்த­தற்கு உரிய ஆதா­ரங்கள், அதா­வது திகதி, நேரம், இடம், படை­யி­னரின் பிரிவு அல்­லது முகாம்­பற்­றிய விப­ரங்கள் இருக்­கு­மானால் ஆட்கொணர்வு மனு ஒன்றை நீதிமன்றில் தாக்கல் செய்­வது பொருத்­த­மாக இருக்கும். ஆனால் இல­கு­வாக இங்கு எழு­து­வது போல் செயற்­பாட்டில் இல­கு­வாக இருக்­காது. இருந்­தாலும் நீதிமன்றை நாடும் உரிமை எவ­ருக்கும் உண்டு.

தற்­போது நடந்து முடிந்­துள்ள உள்­ளூ­ராட்சி தேர்­தல்­க­ளில் ­மற்­றைய கட்­சி­களை விட அதிக வாக்­கு­களை பெற்­றுள்ள ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர்களில் ஒருவரான பசில் ராஜபக் ஷ, காணாமல் போனோர் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு தனது கருத்தை தெரிவித்து இருந்தார். முன்னைய ஆட்சியினால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் விசாரணையை தற்போதைய மைத்திரி அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்றும், காணாமல் போனோர் காரியாலயம் அமைத்ததில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறியுள்ளார். மக்கள் எதிர்பார்ப்பது போல் அடுத்த இரண்டு வருடங்களின் பின் ராஜபக் ஷ அரசு பதவிக்கு வந்தால் இந்த காணாமல் போனோர் காரியாலயத்திற்கு என்ன நடக்கும் என்பது கேள்விக்குறி. எமக்கு புரிய முடியாத விடயம், அடுத்த இரண்டு வருடங்களில் இந்த காரியாலயம் அமைக்கப்பட்டு செயல்படுமா அல்லது இலங்கையில் நடந்தேறிய மனித உரிமை மீறல்களை காலத்தை இழுத்தடித்து நீர்த்துப்போக செய்வது போல் காணாமல் போனவர் விவகாரமும் காணாமல் ஆக்கப் படுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-23#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.