Jump to content

கனடா தமிழர்களும் டாக்டர் ஷாலினியும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

On ‎2‎/‎22‎/‎2018 at 11:01 PM, செல்வி said:

Dr.சாலினியை கனடாவிற்குத் தனது நிகழ்விற்கு அழைத்தவர் நினைவுகள் கணா, அவரை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்றவர் ஜிவனீட்டா நாதன், நான் சாலினியை down town நாடகம் ஒன்று பார்க்கப் போயிருந்த போது ஜிவனீட்டா அவரை அழைத்து வந்திருந்த போது கண்டேன், அவரோடு கதைக்கும் சந்தர்ப்பம் அப்போது எனக்குக் கிடைக்கவில்லை, அடுத்த நாள் நினைவுகள் நிகழ்வில் Dr. சாலினியின் உரையின் பின்னால் அவரோடு இருக்கக் கிடைத்தது, நான் எனது திரைப்படம், பற்றியும் நான் அடுத்து எடுக்க இருக்கும் திரைப்படத்திற்கான ஸ்ரிப்டைப் பற்றியும் அவரோடு உரையாடினேன், அத்தோடு தமிழ்நாட்டு இன்றைய அரசியல் நிலை பற்றியும் நகைச்சுவையாக உரையாடினோம். உப்புச் சப்பற்ற புலிப் பிரச்சனை பற்றி தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்திருக்கும் ஒருவருடன் உரையாடும் அளவிற்கு நான் ஒன்றும் தாழ்ந்து போகவில்லை, மாறாக இந்தியர்களை இங்கே எல்லா நிகழ்விற்கும் அழைக்கின்றார்கள் நான் அதற்கு எதிரானவள் அதுபற்றி நான் எழுதியும் இருக்கின்றேன் என்று அவருக்கு நேரடியாகச் சொன்னேன். அந்த அளவு துணிவு எனக்கிருக்கின்றது எனக்கு. அடுத்தநாள் நிகழ்வு முடிந்து எனது நண்பி அவரை மதிய உணவிற்க அழைத்துச் சென்றார், அப்போது அங்கிருந்த வேறு சிலரையும் அவர் அழைத்ததால் நானும் போனேன். அவ்வளவுதான் எனக்கும் Dr.சாலினிக்குமான தொடர்பு, நீங்கள் என்ன ஆதாரத்தை வைத்து இப்படி ஒரு பதிவைப் போட்டீர்கள், நீங்கள் இவ்வளவுதானா? இல்லாவிட்டால் எங்கோ விலைபோய் ஆதாயம் தேடுகின்றீர்களா?
அடுத்துக் கோணேஸ்வரிக் கவிதை, ஒரு கதை காலம் செல்லச் செல்ல எப்படியெல்லாம் தமக்கேற்றபடி மனிதர்களால் மாற்றப்படுகின்றது என்று ரசித்துச் சிரிக்க முடிகின்றது. 
பிற்குறிப்பு – நான் Dr. சாலினியின் பதிவைப் படிக்கவில்லை. ஆனால் முகப்புத்தகத்தைப் பார்த்த போது அவர் நிச்சயம் நேர்மையாக எதையோ எழுதியிருக்கின்றார் என்பது மட்டும் புரிகின்றது.

 

Karupy Sumathy in fb..

 

இது எந்த வகை?

 

image.png.606e764c99b1c78169b600c991e0bd37.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காத்திரமான பதில் - From Neethan Shan

 

My reaction to Dr Shalini's comments:

Firstly, I want to say that my reaction is only towards her comments and it no way diminishes or takes away the work she has done for mental health and social issues within Tamil Nadu. As a trained teacher, we are always reminded to address the behaviour not the person. So I will try my best to do that.

Secondly, this reaction is in no way a reflection on Gana anna. Gana anna has done good work for the community for many years and in no significant way is responsible for this irresponsible behaviour of Dr Shalini. In fact, few weeks ago we both had a chat about his plan of bringing a psychiatrist from India. We all know that our community have had a number of issues related to mental health, violence and trauma in the past few years and his intention was to help the community to address these critical issues. So his intentions were legitimate and much appreciated.

Having said that, I want to offer my thoughts on this matter as it is very personal for many of us and has impacted us greatly. Taking a position and standing up and speaking out against views that undermine our communities and our struggle (and undermines those who stood for us and sacrificed their lives for us) is an important trait of leadership. Staying silent and watching it happen is not an option, at least for those claim to take on leadership positions in the community. So I want to thank Abi anna for alerting us to this situation. On my part, I also want to register my absolute opposition, condemnation and disappointment to Dr Shalini's gross generalization and disgusting behaviour.

Dr Shalini, here are my comments to you, in reaction to your post:

1. I begin with noting the absolute disregard you have shown to the mental and emotional well-being of Tamils in Canada. Through your statements, you have created a situation that is triggering, re-victimizing and traumatizing. You have created sadness and disappointment within a community that is still on the path of healing and recovering from the wounds of a genocidal war. So regardless of what your political stand is and the validity of your claims, one would not expect a person who is apparently "trained psychiatrist" to deliberately create a situation that can impact adversely so many people on such a personal and emotional level. If we know a topic can be sensitive and triggering to people, it is important for anybody, but more importantly a psychiatrist, to take extra care. You miserably failed this basic expectation, thereby putting your credibility as someone who promotes mental well-being on the line.

2. In referring to our young people, you use a word that in my work as a youth workers for years, I tried hard to challenge. Calling our youth "confused" and saying that they don't know what is the "real Tamil culture" is seriously problematic and clearly contrary to what mental health professionals would do. Identity is fluid. If our youth have merged together a Tamil Identity that works for them but does not fit your narrow box, that is not their problem, but yours. It is important to not further "culture-police" our youth, especially not what I expect from someone claiming expertise in mental health. As we all know, mental well-being is tied into people feeling good about who they are. Rigid definitions of how and what they should be can create unnecessary stress. Again what you said about their "confusion" is not an uncommon view but hearing it come from a "psychiatrist" who visited Toronto to promote mental health is very disappointing. You do not understand the struggles and lives of our youth in the diaspora and has absolutely no authority over this matter to make those gross generalizations.

You also say that our youth think the pain that our elders share about the trauma of the war and their longing/yearning to return as "too much drama". This is absolutely an insult to our youth: the empathic young people who have taken up various roles to not only to understand the nuances of our struggle but also to find ways to help rebuild our nation, in the post 2009 era.
Our youth have done lot of heavy lifting for our community both here and in Eelam in political and social issues. Not sure how you missed a very organized, politically savvy, social justice and humanitarian minded and Tamil youth population when you were here, because they are not easy to miss. They are everywhere.

3. In your reference to Tamil women, there were lots of patronizing comments. Now, I am not a woman and I don't claim to speak for them. I am sharing based on the conversation with my wife and from what she has already shared on Facebook herself. Your statement about Tamil women in Canada not knowing their "self-worth" is extremely devaluing. You have attempted to insult my resilient mom who protected four of us, her children, during the brutal war, you have attempted to insult my three sisters who are independent and powerful on their own and you have attempted to insult my wife, who is an organizer and the first Tamil to be a Vice President of a federal political party in Canada. Your attempts failed because they are stronger than you think and value them much more than you think they do. These five women are examples just in my family and this family is not the exception. Our families in Canada have strong women leading us in many ways and I am proud to be mentored and supported by many of them, whom I look up to. Do we need more support, programs and resources to ensure that many barriers against women are removed. Absolutely! But your gross generalization saying Tamil women in Canada don't know their self-worth is insulting and disgusting.
You claim that Tamil women don't seem to know Periyar. In fact many of them do. But regardless, why do you think is it absolutely important for our women to know about Periyar? Though I agree that Periyar is an iconic figure in authentic "woman" emancipation. (Please note I used the word woman instead of the word female you used, as woman is a more inclusive term, something for you to consider as trans people continue to struggle for equal rights both in India and Canada and around the world, language is important and I don't need to remind a psychiatrist about it) Going back to Periyar, as much as I adore him, he was still a person who identified as man. Our Tamil woman in Canada have had great inspirations in thousands of woman who have fought and died for our freedom starting from first woman Maveerar Malathy akka. In fact, most of us would probably have at least one of those brave woman connected to us as a family member or relative. In fact, they have become role models not just for women but for men as well, as they fought not only for our freedom but also against Patriarchy. So we don't need to always look for iconic figures, we got them in our families. In addition, I suggest you please read up on the role of Tamil women in our freedom struggle. There is a lot for all of us learn from those brace woman and their sacrifices.

3. With respect to "glorifying" Maveerar: In many of our prayer rooms, we have our grandparents and great grandparents and anyone in the family who has passed away and we pray to them. We have traditionally prayed and elevated the people who leave us to a divine status. I am sure you are aware of it. It will be hard to not notice this, if you are at least slightly observant. So if we pray to our family members who have played a role mainly in supporting our individual families, why would we not pray the thousands of young people who have sacrificed their lives for our people collectively? The Maveerar need to held at an even higher level and that's exactly what we do. Besides, it's not some random people, these thousands of people are brothers, sisters, uncles, aunts, mothers, fathers, sons, daughters etc of each of our families. Regardless of what we feel is the political solution, regardless of where we stand with respect to armed struggles, almost all of us are united as Tamils in our resolve to continue to remember our Maveerar. Sorry if it bothers you, but I am not giving up my right to hold my brothers and sisters to higher and elevated status in my life, because you have some screwed up view about our freedom fighters. The fact that a psychiatrist seems to have a hard time understanding this is ridiculous.

4. I don't even know where to begin with, with respect to your comments about "We are alive today because of Rajiv Gandhi". I can write pages about this but maybe Thaiveedu and Ekuruvi (local publications) and others have had well researched articles about the time Eelam was under IPKF. Those articles may wake you up. Maybe they can share the links with you. All I will say is that I was child in Eelam during the IPKF time, and your comments have triggered me, revictimized me and has made me revisit many traumatic times I encountered. I can't even imagine what the many adults and particularly women are experiencing because of your off the cuff comment about this very difficult times in many of our lives.

Now, I know there are people with different views. I see them in Canada. I talk to them all the time. I am not fragile to think that there is only one narrative. You are entitled to your views. But to come to Canada, enjoy the hospitality under the "cover" of a mental health promoter and then once you are on the plane, make these gross generalizations and insulting remarks about our community is what got many of us frustrated. If you were making these comments from there and didn't attempt to link us "Tamil Canadians as your source" for your "observations", no one would have cared about who you are and what your views are.

To be continued...

I have few more things to share on two additional topics:

about a) the relationships, invitations and ongoing struggles and tensions between the made in Canada vs outside Canada invited guests/experts/stars

and about b) the way the members of our community reacted to the posts by Dr Shalini, though the anger is justified, the focus and respect are critical aspects to advancing this conversation.

I will have more to say on these two topics later.

A few people who had not seen the original post by her have asked me for a copy, so I have attached what was being shared initially.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்தநாடுகளில் புலி எதிர்ப்புக்காய்சலினாலும், சிங்களத்தின் மீதான காதலினாலும் ,குறிப்பாக தமிழகத்தில் இருந்துவருபவர்களிடம் இல்லாது பொல்லாததினைச் சொல்லிவருவதே தொழிலாக சிலர் இருக்கிறார்கள். வைத்தியர் சாலினி தனது முகனூலில் பதிவினை இட்டதினால் எங்களுக்கு இச்செய்தி தெரிந்திருக்கிறது. ஆனால் எமக்குத் தெரியாமல் , இன்னும் எத்தனை செய்திகளோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/23/2018 at 1:33 AM, arjun said:

நாய்கள் என்றால் கண்ட சுவரில் மூத்திரம் பெய்யும் என்றுதான் யாழை விட்டு விலகினேன் ஆனால் நாய்கள் பெய்துகொண்டே இருக்கின்றன .

இதில் நான் உங்களுக்கு புள்ளி குத்தினது மீள்வருகைக்கு மட்டுமே உங்கள் கருத்துக்கு அல்ல உங்களை போன்றவர்களுக்கு உங்களால் உதிர்க்கப்பட்ட கருத்தாகவே பார்க்கிறேன் யாழில்  உங்களால்  முடியாமல் போனது தமிழ்நாட்டில் நாலை  பிடித்து இப்படி இலகுவாக மண்டை கழுவலாம் என்று யாரோ அறிவு ஜீவி என்று சொல்லிகொல்பவர்கள் சொல்லித்தந்து அதுவும் சாலினி பதிவிட பிட்டுகேடு இப்படி வெளிக்கிடும் என்று கனவிலும் நினைக்க மாட்டீர்கள் ஏனென்றால் பாருங்க உங்களுக்கு அவ்வளவு அறிவு .:14_relaxed::14_relaxed:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய தமிழ் சமூகம் என்பது கட்டுக்கோப்பான போராட்ட காலத்தின்போதும், நெருக்கடிகளின்போதும்,பலவகைப்பட்ட எதிர்ப்பாளர்கள் தோன்றியபோதும், அனைத்தையும் ,அனைவரையும் எதிர்கொண்டு  வலுவாக நின்ற ஒரு மக்கள்கூட்டம்,

எங்கோ இருந்து வந்த ஷாலினி என்ற ஒருவரின் கருத்துக்களுக்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது,பதட்டப்படுகிறது?

இதன் அர்த்தம் நம்மைநாமே பலவீனமானவர்கள் என்ற முடிவுக்கு வந்துவிட்டோமா, அல்லது ஷாலினி வகையறாக்கள், அவரை அழைத்துவந்த ஒரு சிலர் நம்மைவிட பலமானவர்கள் என்று கருதிக்கொண்டுவிட்டோமா?

தமிழகத்திலிருந்து வந்து கனடாவில் கருத்து பதிவிட்ட ஷாலினி இந்த கருத்தை தமிழகத்தில்கூட போய் துணிவாக சொல்லமுடியாது, எமதுபோராட்டங்களையும் அதன் வலிகளையும் எம்மவர்களிலேயே பலர் மறந்துவிட்டு ஊர் சுற்ற கிளம்பிவிட்ட நிலையில், இன்னும் எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை தமக்கு இழைக்கப்பட்டதாகவே தமிழகத்தின் பல உறவுகள்,அமைப்புக்கள்,கட்சிகள் பார்க்கின்றன ,கோபத்தையும் எதிர்ப்பையும் இன்றுவரை காண்பிக்கின்றன,பதிவிடுகின்றன

அந்த சூழலில் மருத்துவர் ஷாலினி என்பவரும் அவரது கருத்துக்களூம் அச்சத்தோடு பார்க்கப்படவேண்டியதும், முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியதுமான ஒன்றா?

கனேடிய தமிழ் சமூகத்தின்மீதான ஷாலினி என்ற ஒருவரின் விமர்சனம் ஏற்படுத்திய பாதிப்பைவிட,

கனேடிய தமிழர்களும் ஏனையவர்களும் ஷாலினிபற்றி பேசபோய் அவருக்கு தந்த விளம்பரமே அதிகம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

எங்கோ இருந்து வந்த ஷாலினி என்ற ஒருவரின் கருத்துக்களுக்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது,பதட்டப்படுகிறது?

இதுவரை  எத்தனை தமிழ்நாட்டு முக்கிய அதிகார ஆட்களுக்கு இப்படி புலி எதிர்ப்பை இடியப்பத்துடன் சேர்த்து ஊட்டி விட்டவை என்ற கணக்கு உங்களிடம் இருக்கா ?

 

1 hour ago, valavan said:

இதன் அர்த்தம் நம்மைநாமே பலவீனமானவர்கள் என்ற முடிவுக்கு வந்துவிட்டோமா, அல்லது ஷாலினி வகையறாக்கள், அவரை அழைத்துவந்த ஒரு சிலர் நம்மைவிட பலமானவர்கள் என்று கருதிக்கொண்டுவிட்டோமா?

நாம் பலமானவர் என்றால் வடகிழக்குல் எமக்குரிய தீர்வு  இதுவரைக்கும் கிடைத்து இருக்கும் .

அழைத்தவர்கள் பலமானவர்கள் கிடையாது சிறு உளி பெருமலையை தகர்க்கும் நேசரி 

 வகுப்பில் சொல்லி தந்து இருப்பினம் உங்களுக்கு .

 

2 hours ago, valavan said:

தமிழகத்திலிருந்து வந்து கனடாவில் கருத்து பதிவிட்ட ஷாலினி இந்த கருத்தை தமிழகத்தில்கூட போய் துணிவாக சொல்லமுடியாது, எமதுபோராட்டங்களையும் அதன் வலிகளையும் எம்மவர்களிலேயே பலர் மறந்துவிட்டு ஊர் சுற்ற கிளம்பிவிட்ட நிலையில், இன்னும் எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை தமக்கு இழைக்கப்பட்டதாகவே தமிழகத்தின் பல உறவுகள்,அமைப்புக்கள்,கட்சிகள் பார்க்கின்றன ,கோபத்தையும் எதிர்ப்பையும் இன்றுவரை காண்பிக்கின்றன,பதிவிடுகின்றன

அப்ப தமிழகத்தில் ஈழ ,புலி எதிர்ப்பு உங்கள் பார்வையில் இன்னும் தென்படவில்லை ?

 

2 hours ago, valavan said:

அந்த சூழலில் மருத்துவர் ஷாலினி என்பவரும் அவரது கருத்துக்களூம் அச்சத்தோடு பார்க்கப்படவேண்டியதும், முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியதுமான ஒன்றா?

இந்த பிரச்சனையை ஆழ நோக்குபவர்களுக்கு இப்படியான கேள்வி வராது .

2 hours ago, valavan said:

கனேடிய தமிழ் சமூகத்தின்மீதான ஷாலினி என்ற ஒருவரின் விமர்சனம் ஏற்படுத்திய பாதிப்பைவிட,

கனேடிய தமிழர்களும் ஏனையவர்களும் ஷாலினிபற்றி பேசபோய் அவருக்கு தந்த விளம்பரமே அதிகம்!

இல்லை தமிழகத்தில் இருந்து கனடா அழைத்து வரப்படுபவர்களை விட அழைப்பவர்களை சந்தேக கண்ணுடன் சக கனேடிய தமிழர்கள் பார்ப்பது அதிகரிக்கும் இதன் விளைவு நன்மைக்கே .

Link to comment
Share on other sites

தேசிய இனங்களின் சிறைக்கூடம் தான் இந்தியா என்றும் அங்கு இருக்கும் ஆரிய பார்ப்பனிய அதிகாரத்தைப் பற்றியும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் தெளிவடைந்துகொள்வதில்லை.

தமிழர் மரபு, பண்பாடு என்பன பற்றிய அடிப்படைப் புரிதல்கள் இல்லாமல் அரைப் பிராமணனாக எமது புலம்பெயர் ஈழத் தமிழர்கள் திரிகின்றனர். பார்ப்பனிய இந்துத்துவ கலாச்சாரங்களைத் தமிழரது என நினைத்து அரைப் பிராமணனாக இவர்கள் வலம் வருகின்றனர்.

தமிழினத்திற்கும் இந்த ஆரியப் பார்ப்பானிற்கும் இருக்கும் கொடும்பகை குறித்து இந்த புலம்பெயர் அரைப் பார்ப்பனர்களுக்கு எந்தப் பார்வையுமில்லை.

"விஜய்" தொலைக்காட்சி போன்ற ஆரிய பார்ப்பனிய இந்துத்துவ கருத்தியல் அடியாட்கள் பற்றி எந்தப் பார்வையும்  இந்தக் கூட்டங்களிடம் இல்லை.
தமிழர்களுக்கு இப்போது பண்பாட்டு மீட்டெடுப்புப் பற்றிய அடிப்படைப் புரிதல் தேவை. தமிழ்த்தேசியம் குறித்த நல்ல தெளிவான பார்வை தேவை.

ஆரிய பார்ப்பனியம் குறித்த எச்சரிக்கை உணர்வு எம்மவர்களிடம் தேவை. "விஜய்" தொலைக்காட்சி ஒருவரை அறிமுகம் செய்கின்றது என்றால் அவர் யாராக இருப்பார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் புலம்பெயர் அரைப் பார்ப்பனர்களே....

அடிப்படையான விடயங்களையே தெரிந்துகொள்ளாமல் இருக்கும் எமது புலம்பெயர் அரைப் பார்ப்பனர்கள் எப்போது தமிழ்த் தேசியக் கருத்தியலைச் சரியாக உள்வாங்கித் தமிழர்களாக மாறப்போகின்றார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ மாத்திரை காலாவதியாகும் அபாயத்தில்! – பீமன்.

on: மார்ச் 03, 2018

உளவியல் நிபுணர், சமூகசேவையாளர், பெண்ணியவாதி, வரலாற்ராய்வாளர், தமிழ் ஆர்வலர் என பல்வேறுவிதமாக டாக்டர் ஷாலினி அறியப்படுகின்றார். இவர் அண்மையில் கனடா சென்றார்.

அங்கே தமிழரின் பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்தார். தனது பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவில் இறங்கிய அவர் கீழ்கண்டவாறு தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.எனது முழுப்பயணத்தைப்பற்றி எழுதுவதானால் அல்லது பேசுவதானால் அதற்கு வருடங்கள் தேவைப்படும்.

பல்வேறு பாடங்களையும், அவதானிப்புக்களையும், புரிதல்களையும் தந்ததோர் பயணமாகவே ரோறொன்டோவுக்கான பயணம் அமைந்திருந்தது. அவற்றில் சில முக்கியமான புள்ளிகளை குறிப்பிடுகின்றேன் என தனது அனுபவங்களை பதிவு செய்துள்ளார்.

தமிழ் நாட்டிலிருக்கின்ற எங்களுக்கு எல்ரிரிஈ என்பது ஒர் கதாநாயக அமைப்பு என்றும் பிரபாகரனே தமிழ் மக்களின் இறுதி அடையாளச்சின்னம் என்றும்தான் தெரியும்.

ஆனால் நான் ரொறொன்டோவில் இறங்கியதிலிருந்து சந்தித்த ஒவ்வொரு தமிழரிடமிருந்தும் ஒவ்வொரு புதிய கதையை படித்துக்கொண்டேன்.

இலங்கைத் தமிழர்களின் கதை பல பக்கங்களைக்கொண்டது. அவர்களில் பலர் நடந்து முடிந்தது எவ்வித பலனையும்தராத யுத்தம் என்று உணர்கிறார்கள்.

பணம் புகழ் அதிகாரம் என்பவற்றின் மீது பிரபாகரன் கொண்டிருந்த பேராசை காரணமாக அவன் மக்களை கொன்றுகுவித்து, பயங்கரவாதமயமாக்கி, துஷ்பிரயோகம்செய்து ஒர் சமூகவிரோதிக்கான பரிபூரண சின்னமாக விளங்கினான் என அம்மக்கள் என்னிடம் அழுத்தம்திருத்தமாக கூறினார்கள்.

பல தாய்மார் தமது மகன்மார் யுத்தவெறிக்குள் பலாத்காரமாக தள்ளப்படுவதிலிருந்தும் பெண்பிள்ளைகள் பாலியல் வல்லுறவுக்களிலிருந்தும் தப்புவதற்காக நாட்டைவிட்டே ஓட நிர்பந்திக்கப்பட்டோம் என மிகுந்த மனவுளைச்சலுக்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

நாம் தற்கொலையை ஓர் சாகசமாக ஏற்று அதைப்போற்றி வாழ்த்துப்பாடும் ஒர் கலாச்சாரத்தை கொண்டுள்ளளோம். ஆனால் எமது வளர்ந்துவருகின்ற சமுதாயம் இவ்விடயத்தை ஓர் தலைசிறந்த செயற்பாடாக கற்றுக்கொள்கின்றது என்ற அபாயத்தை நாம் மறந்து விடுகின்றோம். நாம் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டிய விடயம் இதுவல்ல..

கியூபாவிற்கு சென்று வந்தவர்கள் பிடல் கஸ்ரோ ஒரு புனிதமான புரட்சியாளன் என்று சொல்கின்றார்கள். ஆனால் அவரும் ஒரு போலி கதாநாயகன்தான்.

பருவமடையாத பெண்பிள்ளையை தாய் கூட்டிக்கொடுக்கிற நிலையில் அந்நாட்டின் வறுமை உள்ளது. ஆனால் பிடல்கஸ்ரோ இவ்விடயத்தில் எதுவும் செய்யவில்லை. அவர் தொலைக்காட்சியில் தோன்றியபோது அவ்வப்போது அவரின் மூஞ்சியில் மக்கள் துப்பினர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

என்னைப்பொறுத்தவரை ஷாலினி அவர்கள் எதுவும் புதிதாக தெரிவிக்கவில்லை. புலிகள் என்று தமது கோரமுகத்தை தமிழ் மக்கள் மீதும் சகபோராளி அமைப்புக்கள் மீதும் காண்பிக்க முற்பட்டார்களோ அன்றே மேற்படி குற்றச்சாட்டுக்கள் நிருபணமாகியிருந்தது.

அண்மையில் கனடாவில் திரையிடப்பட்டிருந்த ”சொர்கத்தில் பிசாசுகள்” என்ற குறும்படத்தில்கூட தமிழ் சமூகத்திடமிருக்கின்ற வன்செயல்நாட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

ரெலோ இயக்கத்தை தடை செய்த புலிகள் அவ்வியக்க உறுப்பினர்களை கைது செய்து அவர்களை உயிருடன் ரடயர்போட்டு எரித்த காட்சியை நேரடியாக கண்ட ஒருவரின் நடிப்பில்: புலிகள் ரெலோ அமைப்பினரை உயிருடன் டயர் போட்டு எரித்தார்கள்.

அங்கே இளைஞர்களின்  உயிர் தீக்குள் துடிதுடித்துக்கொண்டிருந்தது. புலிகள் எரிகின்ற டயர்களுக்கும் உயிர்களுக்கும் காவல்நின்றார்கள்.

யாழ் தமிழ் சமூகம் காவல்நின்றவர்களுக்கு குளிர்பாணம் கொடுத்து உற்சாகமேற்றிக்கொண்டிருந்து என்று குறிப்பிட்டதுடன், யாழ் சமூகத்திடம் வன்முறைக்குணாம்சம் போராட்ட இயக்கங்கள் உருவாக முன்பிருந்தே இருந்திருக்கின்றது என்றார்.

இலங்கையில் புலிகள் கருத்துச்  சுதந்திரத்தை தமது இரும்புக்கரம் கொண்டு நசுக்கி துவம்சம் செய்திருந்தாலும், புலம்பெயர்தேசத்தில் பயங்கரவாதத்திற்கு வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டுக்கொண்டேயிருந்தது.

ld1191  டாக்டர் ஷாலினி நோயை பகிரங்கமாக கூறியதால் தமிழீழ மாத்திரை காலாவதியாகும் அபாயத்தில்!  - பீமன். ld1191டாக்டர் ஷாலினி

ஷாலினி விடயத்தில் புலி-வியாபாரிகளின் அடக்குமுறை அவரின் முகநூல் கணக்கை முடக்கி அவரது குரல்வளையை நசுக்கிவிடலாம் என்ற முயற்சிவரை சென்றுள்ளமை தொடர்பில் விசாரணை செய்கின்றபோது, பழ நெடுமாறன், வைகோ, சீமான் என பல்வேறு இந்திய அரைகுறைகளை அழைத்து வியாபாரத்தை விஸ்தரித்துக்கொண்டிருக்கின்ற தமிழீழ வியாபாரிகட்கு டாக்டர் ஷாலினியினுடனான அனுபவம் தெருவால்சென்ற பாம்பை சீலைக்குள்ளே விட்டதாக தென்படுகின்றது.

தலைவர் வருவார்! தருவார் தமிழீழம்! என தமிழீழ மாத்திரை விற்பனை செய்கின்ற வியாபாரிகட்கு டாக்டரின் அறிக்கை தமிழீழ-மாத்திரை வியாபாரத்திற்கு சீல் வைக்கும் நிகழ்வாக உணரப்பட்டுள்ளது.

வியாபார நஷ்டத்திற்கு காரணமானவர்கள் என்று கருதப்பட்டோர் அத்தனைபேர்மீதும் காழ்புணர்ச்சி தீர்க்கப்படுகின்றது. கனடாவில் செயற்படுகின்ற ஒர் பெண் இழிசெயலர்களால் சிடுமூஞ்சித்தனமாக இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.

அப்பெண்ணை இலக்கு வைத்தவர்கள் அம்பாறை மாவட்ட மத்தியமுகாம் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கற்பழித்து கொல்லப்பட்ட கோணேஸ்வரியை மீண்டும் திரைக்கு கொண்டுவந்துள்ளனர்.

சுமார் இரண்டரை தசாப்தங்களாக கோணேஸ்வரியை வைத்து உண்டியல் குலுக்கும் கோணங்கிகளிடம் கோணேஸ்வரியின் அயலூர்காரனாகிய நான் கேட்கும் கேள்வி யாதெனில்:

உங்கள் உண்டியல் குலுக்கலுக்கு உறுதுணையாய் நிற்கின்ற கோணேஸ்வரியின் குடும்பத்திற்கு இதுவரை உண்டியல் பணத்தில் எத்தனை பைசா வழங்கியுள்ளீர்கள்? அவரது குழந்தைகள் அனுபவித்த துன்பத்தில் எதாவது பங்கு கொண்டுள்ளீர்களா?

மேலும் தமிழ் சமூகம் கடந்தகால வன்முறை அனுபவங்களை மறக்கமுடியாதவர்களாக அதன் தாக்கங்கள் அவர்களை மனநோயாளிகளாக்கியுள்ளது என்பது ஷாலினி அவர்களால் மாத்திரம் முன்வைக்கப்பட்ட கருத்துக்கிடையாது.

மேற்குலக நாடுகளில் பல்வேறுபட்ட வன்செயல் சார்ந்த செயற்பாடுகளுக்காக நிதிமன்றங்களில் குற்றவாளிகளாக்கப்பட்ட தமிழர்கள் சார்பாக வாதாடிய வக்கீல்கள்: ‘தமிழ் மக்கள் கடந்துவந்த பாதை கடினமானதும் வன்முறை கலந்ததுமாகவும் இருந்திருக்கின்றது.

அவர்கள் இவ்வனுபவங்களினால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதன் தாக்கமே இவர்களை வன்செயலுக்கு தூண்டுகின்றது என்பதை கருத்திற்கொண்டு அவர்களை விடுதலை செய்யுங்கள் அல்லது குறைந்தபட்ச தண்டனை வழங்குங்கள்’; என நீதிமன்றுகளில் மனுச்செய்யப்பட்ட தருணங்களில் மன்றுகள் அதை ஏற்றுக்கொண்டிருக்கின்றது என்பதை கிணற்றுத்தவளைகள் எவ்வாறு அறிந்திருக்கப்போகின்றார்கள்.

ஏன் இன்றுவரை மேற்குலக நாடுகளில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட பலருக்கு மேற்படி காரணத்திற்காக மனிதாபிமான ரீதியில் தங்குமிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதை வன்செயலின் போஷகர்கள் அறிந்திருக்கவில்லையா? அவ்வாறயின் புலி-வியாபாரிகள் பயங்கரவாதம் நியாயப்படுத்தப்படவேண்டுமென்பதற்காக சலுகைகளை தமிழர் இழக்கவேண்டும் என விரும்புகின்றார்களா?

இறுதியாக இந்தியத் தேர்தல்களில் இலங்தைத்தமிழர் விவகாரம் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றது என தெரிவித்துள்ள ஷாளினி. எதிர்வரும் காலங்களில் இவ்விடயம் தொடர்பாக பேசுபவர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் தான் தமிழர்களின் உண்மைக்குரல்களை செவிமடுத்துள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

201712130505333626_Why-not-reinvestigate-Rajiv-murder-case-again_SECVPF  டாக்டர் ஷாலினி நோயை பகிரங்கமாக கூறியதால் தமிழீழ மாத்திரை காலாவதியாகும் அபாயத்தில்!  - பீமன். 201712130505333626 Why not reinvestigate Rajiv murder case again SECVPF

அத்துடன் ‘ரஜீவ் காந்தியினால்தான் தமிழர்களாகிய நாம் இன்று இலங்கையில் வாழ்கின்றோம்‘ என தமிழர்கள் சிலர் தெரிவித்ததாவும் குறிப்பிட்டுள்ளதுடன் இனிமேலும் நாம் ஒருபக்க கதையை மாத்திரம் கேட்டுக்கொண்டிருக்கமுடியாது, விடயத்தை ஆழமாக படிக்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆம். இலங்கையில் 13ம் திருத்தச்சட்டத்திற்கு வழிவகுத்த ராஜீவ்காந்தி அவர்களின் செயற்பாடும் இன்றுவரை தமிழ்நாட்டு மக்கள் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காட்டிவருகின்ற அக்கறையும் தரம்தாழ்த்த முடியாதது எனச் சிரம்தாழ்துகின்ற அதேநேரத்தில் இந்தியாவிடம் நாம் கற்றுக்கொண்ட கசப்பான பாடங்களையும் ஷாலினி அறிந்தாகவேண்டும்.

இந்தியாவின் வெளிவிவகாரக்கொள்கையானது இலங்கையின் இறையாண்மையை உதாசீனம் செய்வதாகவே இருந்துவந்துள்ளது. இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னதாகவே இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை எவ்வாறு இருக்கவேண்டும் என இந்தியா தீர்மானித்துள்ளது.

டாக்டர் பலேக்கர் 1948ம் ஆண்டு எழுதிய „இந்தியப்பாதுகாப்பு’ எனும் புத்தகத்தில் இலங்கை அரசு சுதந்திரம் கிடைத்தபோதும் தனது வெளிநாட்டுக் கொள்கையில் இந்தியாவுக்கு எதிரான கொள்கையை முன்வைத்தாலோ அல்லது தன்னை நடுநிலைமை என்று சொன்னாலோ அல்லது இந்தியாவின் ஜோதியாக இருந்தாலோ அது இந்தியாவின் பாதுகாப்புக்கு பேராபத்தாக அமைந்துவிடும்.

அப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகின்றபோது இந்தியா மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார். அதற்கு ஆசிய ஜோதி நேரு அவர்கள் வழங்கிய முன்னுரையில் அக்கருத்து சரியானது என்று ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆனால் நாங்கள் ‘அணிசேரா’ (நொன்அலையன்ஸ்) கொள்கையை கடைப்பிடித்து எமது இறைமையை நிலைநிறுத்துவோம் என்ற செய்தி இந்தியாவிற்கு தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் இலங்கையில் தனது காலை நிலையாக பதிப்பதற்கு அல்லது இலங்கை அரசை அடிபணிய வைப்பதற்காக இலங்கையில் தமிழ் ஆயுதக்குழுக்களை உருவாக்கிய இந்தியா, அவ்வமைப்புக்களின் வளர்ச்சி கண்டு மிரண்டது.

இலங்கையில் தமிழீழம் உருவாவது இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலான முன்னுதாரணமாகும் என்ற கருத்தை தமிழ் அமைப்புக்களுக்கு எடுத்துக்கூறி இலங்கையில் தமிழீழம் உருவாவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என தனது இரட்டை முகத்தை வெளிக்காட்டியது.

அத்துடன் நின்றுவிடாது தமிழ் அமைப்புக்களின் ஒட்டுமொத்த பலத்தை நொருக்கியது. அமைப்புக்களுள் உள்மோதல்களை உருவாக்கி அவற்றை பலவீனமாக்கியதுடன் இயக்கமோதல்களுக்கும் தூபமிட்டது.

இவை தொடர்பான வரலாறு புத்தகங்களாகவே எழுதப்படமுடியும்… எனவே இந்தியா இட்;ட 13 என்ற பிச்சையில்தான் இலங்கையில் தமிழர்களின் இருப்பு உறுதியானது என்ற மமதையை இந்தியா ஒடித்துக்கொள்ளவேண்டும்.

– பீமன்.

WWW.ilankainet.com 
இலங்கைநெற்.கொம்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.