Jump to content

உலக கிண்ண கால்பந்தாட்டம் 2018 செய்திகள், ஆய்வுகள், கருத்து பகிர்வுகள்


Recommended Posts

Quote

கோல் அடிப்பதற்கு ஓட்டத்தைவிட,  இலக்கை நோக்கிய துல்லியமான ஷாட்டுகள்தான் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்கிறார், ரஷ்ய அணியின் செய்தித்தொடர்பாளர் ஐகர் விளாடிமிரோவ்.

சரியான சொல்லியுள்ளார்.

இன்று ரஸ்யா ஐந்து கோலாவது போட்டிருக்க வேண்டுமே??

Link to comment
Share on other sites

  • Replies 262
  • Created
  • Last Reply

அரணாய் அசத்திய உருகுவே; மூன்றாவது போட்டியையும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

 

உலகக் கோப்பை குரூப் ஏ போட்டியில் தொடரை நடத்தும் ரஷ்யாவை வீழ்த்தியது உருகுவே. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய உருகுவே அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கெனவே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றதால் உருகுவே அணி சில மாற்றங்கள் செய்தது. இந்தப் பிரிவில் முதலிடம் பிடிக்கவேண்டுமென்ற நோக்கில் ரஷ்யா முழு பலத்தோடு களமிறங்கியது.

உருகுவே

9-வது நிமிடத்தில் உருகுவே வீரர் பென்டன்கரை, கஸின்ஸ்கி பாக்சுக்கு வெளியே தள்ளிவிட ஃப்ரீ கிக் தரப்பட்டது. அதை அடிக்கத் தயாரானார் லூயிஸ் சுவாரஸ். கோல் போஸ்டின் டாப் கார்னருக்குக் குறிவைப்பார் என்று நினைக்கையில், அழகாகப் பாட்டம் கார்னருக்கு உருட்டிவிட்டு கோலடித்தார் சுவாரஸ். 

 

 

23-வது நிமிடத்தில் உருகுவே இரண்டாவது கோலடித்தது. உருகுவே அணி எடுத்த கார்னரை, ரஷ்ய வீரர்கள் கிளியர் செய்ய, அது பாக்சுக்கு வெளியே இருந்த உருகுவே வீரர் லக்சல்ட் வசம் சென்றது. அதை அவர் கோல் நோக்கி ஷூட் அடிக்க, ரஷ்ய வீரர் செரிஷேவ் காலில் பட்டு கோலானது. 

 

 

முதல் இரண்டு போட்டிகளிலும் டிஃபன்ஸ், முன்களம் என இரண்டு ஏரியாவிலும் பட்டையைக் கிளப்பிய ரஷ்யா, இந்தப் போட்டியில் இரண்டு ஏரியாவிலுமே பின்வாங்கியது. உருகுவே அணியின் அரண் போன்ற டிஃபன்ஸை அவர்களால் உடைக்கவே முடியவில்லை. இந்நிலையில் அந்த அணிக்கு இன்னொரு பெரிய அடி விழுந்தது. 

கவானி

27-வது நிமிடம் கவானியை ஃபௌல் செய்ததற்காக யெல்லோ கார்டு பெற்றார் ரஷ்ய வீரர் இகோர் ஸ்மால்நிகோவ். அடுத்து 36-வது நிமிடத்தில் லக்சல்டை ஃபௌல் செய்து இரண்டாவது மஞ்சள் அட்டைப் பெற்று, ஆட்டத்திலிருந்து வெளியேறினார். இதனால் ரஷ்யா அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு ஆளானது. 

இரு அணிகளும் அதன்மேல் ஏதும் கோல் போடாததால் முதல் பாதி 2-0 என்ற கோல் கணக்கில் முடிவுக்கு வந்தது. அப்போதே உருகுவே அணியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுவிட்டது. இரண்டாவது பாதியில் உருகுவே அணி அவ்வப்போது அட்டாக்கிங் ஆட்டம் ஆடியபோதும் கஷ்டப்பட்டு அதைத் தடுத்தது ரஷ்யாவின் பின்களம். 

உருகுவே

90-வது நிமிடத்தில் கார்னர் மூலம் இன்னொரு கோலை அடித்தது உருகுவே, இம்முறை கோலடித்தவர் ஸ்ட்ரைக்கர் கவானி. இதன்மூலம் உருகுவே அணி 3-0 என வெற்றி பெற்றது. லீக் சுற்றின் 3 போட்டிகளிலும் உருகுவே ஒரு கோல்கூட விடாமல் மிகச்சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. ஏ பிரிவில் உருகுவே முதலிடமும், ரஷ்யா இரண்டாம் இடமும் பிடித்தன. 

https://www.vikatan.com/news/tamilnadu/128843-uruguay-vs-russia-match-report.html

Link to comment
Share on other sites

45 வயதில் களமிறங்கி உலகக்கோப்பை வரலாற்றில் சாதனைப் படைத்தார் எகிப்து கோல்கீப்பர்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மிகவும் அதிக வயதில் களம் இறங்கிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை எகிப்து கோல்கீப்பர் படைத்துள்ளார். #WorldCup2018

 
 
45 வயதில் களமிறங்கி உலகக்கோப்பை வரலாற்றில் சாதனைப் படைத்தார் எகிப்து கோல்கீப்பர்
 
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஒரு போட்டியில் எகிப்து - சவுதி அரேபியா அணிகள் மோதி வருகின்றன.

ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் எகிப்து அணியின் நட்சத்திர வீரர் சாலா கோல் அடித்தார். 41-வது நிமிடத்தில் சவுதி அரேபியாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. சவுதி அரேபியாவின் பஹத் பந்தை அடிக்க எகிப்து கோல் கீப்பர் எஸ்ஸம் எல் ஹடாரி சிறப்பாக தடுத்தார்.

201806252045408626_1_hadary002-s._L_styvpf.jpg

பெனால்டி தடுத்தது பெரிய விஷயம் இல்லை. இன்றைய போட்டியில் களம் இறங்கியதன் மூலம், மிகவும் அதிக வயதில் அதாவது 45 வயதில் உலகக்கோப்பையில் விளையாடிய ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

இவர் 1973-ம் ஆண்டும் ஜனவரி மாதம் 15-ந்தேதி பிறந்தார். தற்போது அவருக்கு 45 வயது 5 மாதம் ஆகிறது. எகிப்பு அணிக்காக கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து 155 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/25204541/1172602/Egypt-Essam-El-Hadary-45-becomes-oldest-player-in.vpf

Link to comment
Share on other sites

24 ஆண்டுகளில் முதல் வெற்றி... எகிப்தை வீழ்த்தி சவுதி அரேபியா அபாரம்!

 

ரஷ்யாவில் தற்போது 21 -வது உலகக்கோப்பை கால்பந்துத் தொடர் நடைபெற்று வருகிறது. சவுதி அரேபியா மற்றும் எகிப்து அணிகள் 'ஏ' பிரிவில் மோதிய ஆட்டம், வோல்கோகிராட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியைத் தோற்கடித்து, சவுதி அரேபியா ஆறுதல் வெற்றி பெற்றது.

சவூதி அரேபியா

இவ்விரு அணிகளும் இதற்கு முன் மோதிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி ஏதும் பெறவில்லை. இதனால் இப்போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெற, இரண்டு அணிகளும் கடுமையாக மோதின.  `அதிக வயதில் உலகக்கோப்பையில் விளையாடியவர்' என்ற சாதனையை எகிப்து அணியின் கோல் கீப்பர் எல்-ஹதாரி(45) இன்றைய போட்டியில் படைத்தார்.

 

 

அதிக வயதில் உலகக்கோப்பையில் விளையாடி சாதனை படைத்த எல்-ஹதாரி

முதல் பாதியில் சவுதி அரேபியா அட்டாக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டபோதும், அந்த அணியால் கோல் ஏதும் அடிக்க முடியாதபடி எகிப்து அணியின் டிஃபண்டர்களும், கோல்கீப்பர் எல்-ஹதாரியும் சிறப்பாகச் செயல்பட்டனர். ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் எகிப்து அணியின் நட்சத்திர வீரர் முகமது சலா ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். இது உலகக்கோப்பையில் அவர் அடிக்கும் இரண்டாவது கோல் ஆகும்.

 

 

முதல்பாதி முடிவை நெருங்கிக் கொண்டிருந்தபோது எகிப்து அணியின் டிஃபண்டர் செய்த தவறால், சவுதி அரேபியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஃபஹத் அல்-முவாலத் அடித்த பந்தை, எகிப்து கோல் கீப்பர் எல்-ஹதாரி அழகாக சேவ் செய்து அசத்தினார். எகிப்து அணிக்கு இந்த மகிழ்ச்சி அதிகநேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்தில் எகிப்து டிஃபண்டர் அலி காபர் செய்த தவறால், சவுதி அரேபிய வீரர்கள் பெனால்டி வாய்ப்பு கேட்டனர்.  VAR சிஸ்டம் மூலமாக வீடியோ ஃபுட்டேஜ்களைப் பார்வையிட்ட ரெஃப்ரி, சவுதி அரேபியாவுக்கு மீண்டும் பெனால்டி வாய்ப்பளித்தார். இவ்வாய்ப்பை அந்த அணி இம்முறை சரியாகப் பயன்படுத்திக்கொண்டது. சல்மான் அல்-ஃபராஜ் சவுதி அரேபியா அணிக்காகக் கோல் அடித்தார். இதனால் முதல்பாதி முடிவடையும்போது ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.

முகமது சலா

இரண்டாம் பாதி தொடங்கியதிலிருந்து இரு அணிகளும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் திணறினர். டிராவை நோக்கி ஆட்டம் சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் கூடுதலாக வழங்கப்பட்ட நிறுத்த நேரத்தில் சவுதி அரேபிய வீரர் சலீம் அல்-தவ்சாரி, தனது அணிக்காக இரண்டாவது கோலை அடித்தார். இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி சவுதி அரேபியா ஆறுதல் வெற்றி பெற்றது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு சவுதி அரேபியா வெல்லும் முதல் உலகக்கோப்பை போட்டி இது. உலகக்கோப்பை போட்டிகளில் எகிப்து அணி இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.vikatan.com/news/tamilnadu/128844-2018-fifa-world-cup-saudi-arabia-won-after-24-years-in-world-cup.html

Link to comment
Share on other sites

நைஜீரியாவுடன் இன்று மோதல்: நாக் அவுட் சுற்றில் நுழையுமா மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி?

 

 
26CHPMULIONELMESSI

சக அணி வீரரான செர்ஜியோ அகுரோவுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்ட லயோனல் மெஸ்ஸி.   -  படம்: ஏஎப்பி

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று டி பிரிவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் அர்ஜென்டினா - நைஜீரியா அணிகள் மோதுகின்றன.

லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா, ஐஸ்லாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தை 1-1 என டிரா செய்திருந்த நிலையில் 2-வது ஆட்டத்தில் குரோஷியாவிடம் 3-0 என படுதோல்வியை சந்தித்தது. இதனால் தனது பிரிவில் ஒரு புள்ளியுடன் கடைசி இடம் வகிக் கும் அர்ஜென்டினா அணி, நாக் அவுட் சுற்றுக்கு முன் னேற வேண்டுமானால் இன் றைய ஆட்டத்தில் நைஜீரியாவை வீழ்த்தியாக வேண் டும் என்ற கடும் நெருக்கடியில் களமிறங்குகிறது.

 

அதேவேளையில் நைஜீரியா அணிக்கும் இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான். அந்த அணி முதல் ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளதால் இன் றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் நாக் அவுட் சுற்றுக்கு எளிதாக முன்னேறி விடும். அதேவேளையில் ஆட்டத்தை டிராவில் முடித்தாலும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. இரு அணிகளுக்குமே வெற்றி முக்கியம் என்பதால் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அர்ஜென்டினா அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், ஐஸ்லாந்து - குரோஷியா அணிகள் மோதும் ஆட்டத்தின் முடிவை பொறுத்துதான் அதன் அடுத்த கட்ட சுற்றுக்கான வாய்ப்பு தெரியவரும். ஒருவேளை குரோஷியா அணியை ஐஸ்லாந்து வீழ்த்தினால் அர்ஜென்டினா அணிக்கு சிக்கல்தான். இந்த சூழ்நிலை உருவானால் அர்ஜென்டினா, ஐஸ்லாந்து அணிகள் தலா 4 புள்ளிகளைப் பெறும். அப்போது கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் அணியே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். தற்போதைய நிலையில் அர்ஜென்டினா ஒரு கோல் அடித்துள்ள நிலையில் 4 கோல்கள் வாங்கி உள்ளது. அதேவேளையில் ஐஸ்லாந்து ஒரு கோல் அடித்த நிலையில் 3 கோல்கள் வாங்கி உள்ளது.

நைஜீரியா - அர்ஜென்டினா அணிகள் இதுரை 6 உலகக் கோப்பை தொடர்களில் 4 முறை மோதி உள்ளன. இதில் அனைத்திலும் அர்ஜென்டினா அணியே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2014 உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. அந்த ஆட்டத் தில் மெஸ்ஸி இரு கோல்கள் அடித்து வெற்றி தேடிக் கொடுத்திருந்தார். நேற்று முன்தினம் தனது 31-வயதில் காலடி எடுத்து வைத்துள்ள மெஸ்ஸி, மீண்டும் அசாத்தியமான வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும் என கருதப்படுகிறது.

ஐஸ்லாந்து அணிக்கு எதி ரான ஆட்டத்தில் மெஸ்ஸி, பெனால்டி கிக் வாய்ப்பை தவறவிட்டிருந்தார். அதேவேளையில் குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் களத்தில் இருந்த இடம் தெரியாமலே இருந்தார். தகுதி சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஈக்வேடார் அணிக்கு எதிராக சாத்தியமே இல்லாத சூழ்நிலை யில் அதுவும் பின்தங்கிய நிலையில் ஹாட்ரிக் கோல் அடித்து அர்ஜென்டினா அணியை உலகக் கோப்பைக்குள் அழைத்து வந்திருந்தார் மெஸ்ஸி. அதுபோன்ற ஒரு மேஜிக், மெஸ்ஸியின் கால்களில் இருந்து வெளிப்படும் என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே ஏற்கெனவே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதால் ஐஸ்லாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அணி யில் உள்ள சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் முடிவில் குரோஷியா அணி உள்ளது. இது அர்ஜென்டினா அணிக்கு தலைவலியை ஏற்படுத்தக்கூடும்.

http://tamil.thehindu.com/sports/article24259593.ece

Link to comment
Share on other sites

திக்.. திக்.. கடைசி நிமிடங்கள்: ஸ்பெயினை கதிகலக்கிய மொராக்கோவின் துயர வெளியேற்றம்

 

 
spain

கடைசி கோலை நடுவர் சரிபார்த்து கோல் என்றாவுடன் இனியெஸ்டா உட்பட ஸ்பெயின் மகிழ்ந்த காட்சி. | ஏ.எஃப்.பி.

உலகக்கோப்பை குரூப் பி ஆட்டத்தில் நேற்று மொராக்கோ அணி ஸ்பெயின் அணியின் வயிற்றில் புளியைக் கரைத்தது. 2-1 என்று மொராக்கோ முன்னிலையில் இருந்த போதுதான் அந்த கடைசி நேர திக் திக் கணங்கள் ஸ்பெயின் அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏற்பட்டது.

மொராக்கோ 14ம் நிமிடத்தில் காலித் பூட்டைப் மூலம் முதல் கோலை அடிக்க ஸ்பெயின் அணி அலார்கன் இஸ்கோ மூலம் 19வது நிமிடத்தில் சமன் செய்தது, ஆனால் ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் யூசெஃப் என் நெஸிரி எதிர்பாராதவிதமாக ஒரு கோலை அடிக்க மொராக்கோ 2-1 என்று முன்னிலை பெற்றது.

     
 

அதன் பிறகுதான் திக் திக் நிமிடங்கள், ஸ்பெயின் முதல் சுற்றிலேயே வெளியேறும் அபாயம் இல்லாவிட்டாலும் தோல்வி என்பது அடுத்த சுற்றில் நுழையும் போது மற்ற அணிகள் ஸ்பெயினை ஒரு தொக்காக பாவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் 92வது நிமிடத்தில் 1-2 என்று பின் தங்கிய நிலையில் ஸ்பெயின் வீரர் இயாகோ ஆஸ்பாஸ் ஒரு கோலை அடிக்க, ஆட்டம் முடிய இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில் நடுவர் ஆஃப் சைடு, கோல் இல்லை என்று தீர்ப்பளித்தார். ஸ்பெயினின் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வர ஸ்டேடியமே திக் திக் என்று வீடியோ நடுவரின் முடிவு என்னவாக இருக்கும் என்று கைகளைத் தேய்த்தபடி, நகங்களை கடித்தபடி காத்திருந்தன.

sppain2jpg

திக் திக் கடைசி நிமிடங்கள் ஆஃப் சைடு சொன்ன பிறகு நடுவர் வி.ஏ.ஆர். ரெஃபர் செய்வதற்கு முன்...

 

வீடியோ நடுவர் ஆஃப்சைடு இல்லை என்று தீர்ப்பளிக்க ஸ்பெயினின் கடைசி நிமிட கோல் 2-2 என்று மொராக்கோவுடன் ஒரு ட்ராவை ஏற்படுத்தியது, இதே வேளையில் ஈரானுக்கு சர்ச்சைக்குரிய ஒரு பெனால்ட்டியை போர்ச்சுகலுக்கு எதிராகக் கொடுக்க அது கோலாக 2வது இடத்திலிருந்த ஸ்பெயின் குரூப் ‘பி’யில் முதலிடத்துக்குத் தாவ இறுதி 16-ல் ரஷ்யாவை எதிர்த்து விளையாட மாஸ்கோ செல்கிறது ஸ்பெயின், இல்லையெனில் சோச்சிக்குச் சென்று உருகுவே என்ற கடினமான அணியை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும்.

இந்த கடைசி நிமிட வீடியோ ரெஃபரலால் ட்ரா ஆனதையடுத்து கடுப்பான மொராக்கோவின் நார்டின் அம்ராபட், “வீடியோ ரெஃபரல் ஒரு புல்ஷிட்” என்று திட்டினார்.

ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் அம்ராபட் ஒரே நேரத்தில் இஸ்கோ, ரேமோஸ் ஆகியோரை ஃபவுல் செய்தார். ஒன்றும் நடக்கவில்லை, ஆனால் 8வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் பிகே மொராக்கோ வீரர் பூட்டைபை மிகவும் நேரடியாக ஃபவுல் செய்தார். மிகவும் மோசமான சேலஞ்ச் அது. அதற்காக அவர் சிகப்பு அட்டைக் காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவும் நடக்கவில்லை. 10 வீரர்களாகியிருக்க வேண்டிய ஸ்பெயின் தப்பியது.

இந்நிலையில் ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் மைதானத்தின் நடுவில் ரேமோஸ், இனியெஸ்டா இருவரும் பந்தை எடுப்பது நீயா நானா என்று ஆட பூட்டைப் புகுந்து பந்தை எடுத்து வந்தார் யாரும் இல்லை, வேகமாக ஸ்பெயின் எல்லைக்குள் நுழைந்தார் ஸ்பெயின் கோல் கீப்பர் டி ஜியா பதற்றத்தில் வெகுமுன்னால் வந்தார் இது பூட்டைபுக்கு சவுகரியமாக அமைய கோலுக்குள் பந்தை செலுத்தினார் 1-0 என்று முன்னிலை பெற்றது மொராக்கோ.

boutaibjpg

மொராக்கோவின் முதல் கோலை அடித்த பூட்டைப்.| ராய்ட்டர்ஸ்.

 

17வது நிமிடத்தில் 25 அடியிலிருந்து இனியெஸ்டா அடித்த ஷாட் கோலுக்கு வைடாகச் சென்றது.

ஆனால் ஸ்பெயினின் பின்னடைவு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மிகப்பிரமாதமான ஒரு பாஸ் மூவில் இனியெஸ்டா முதலில் இஸ்கோவுக்கு பாஸ் செய்தார், இஸ்கோ, கோஸ்டாவுக்கு தட்டிவிட்டார், அவர் விரைவுகதியில் பாக்ஸுக்கு இடது புறம் இருந்த இனியெஸ்டாவுக்கு அனுப்பினார். அவர் தடுப்பாட்ட வீரருக்குப் போக்குக் காட்டி மேலும் உள்ளே ஊடுருவினார். பந்தை இஸ்கோவுக்கு அனுப்பினார், அவர் பந்தை கோலுக்குள் அனுப்பினார், ஸ்பெயின் 1-1 சமன்.

23வது நிமிடத்தில் கார்னர் ஷாட் ஒன்றை எடுத்த ஸ்பெயின் வீரர் பிகேயின் தலை ஷாட்டை மொராக்கோ கோல் கீப்பர் முனிர் தடுத்தார். 25வது நிமிடத்தில் மொராக்கோவுக்கு ஒரு அருமையான கோல் வாய்ப்பு கிடைத்தது. த்ரோ செய்ய வாய்ப்பு கிடைக்க மந்தமாக இருந்த பிகே, ரேமோஸ் ஆகியோருக்கு மேல் சென்ற பந்தை பூட்டைப் எடுத்து கோல் நோக்கி ஒரு முயற்சி செய்தார், அதனை டிஜியா பிடித்து விட்டார், இது கோலுக்கு மிக அருகில் கிடைத்த வாய்ப்பு, பூட்டைப் ஷூட் செய்யும் முன் கொஞ்சம் யோசித்தார், அது டிஜியாவை சுதாரிக்கச் செய்தது.

26வது நிமிடத்தில் இனியெஸ்டா மிக அபாரமாக ஆடி ஒரு நகர்த்தலைச் சாதிக்க, அல்பா பந்தை வெட்டி கோஸ்டாவுக்கு அனுப்ப 15 அடியிலிருந்து இடது கால் அரக்கத்தனத்தைக் காட்டினார் ஆனால் கோலாகவில்லை.

ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் ஸ்பெயின் முன்னிலை பெற ஒரு அபாரமான வாய்ப்புக் கோட்டை விடப்பட்டது, இஸ்கோ அடித்த உள்ளே வளைந்து வந்த கார்னர் ஷாட்டை பஸ்கெட்ஸ் 8 அடியிலிருந்து தலையால் முட்டினார், பந்து கோலுக்கு மேலே சென்றது, இது மிக அருமையான வாய்ப்பு ஏனெனில் இவரை மொராக்கோ கவர் செய்யாமல் விட்டிருந்தனர். கோல் வாய்ப்பு பறிபோனது. இடைவேளைக்கு சற்று முன் ஸ்பெயினுக்கு வாய்ப்பு கிடைத்தது. கோஸ்டா அடித்த ஷாட் கோலாக மாறவில்லை. ஆஃப் டைம் விசில் ஊதப்பட்டது 1-1 என்று சமநிலையில் இருந்தது.

விறுவிறுப்பான இரண்டாவது பாதி...

ஸ்பெயின் அணிக்கு இடைவேளைக்குப் பிறகு சரியாக அமையவில்லை, ஜார்ஜ் பிகே பந்தை ஹேண்ட்பால் செய்ததற்கு தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் தப்பினார். முபாரக் பூசவுஃபா கோலுக்காக பாய்ச்சலை மேற்கொள்ள ஸ்பெயின் கோல் கீப்பர் டிஜியாவின் தடுப்பு அவ்வளவு சிறப்பாக இல்லை. அம்ராபட் ஒரு ஷாட்டை திகைப்பூட்டும் வண்ணம் ஸ்பெயின் கோலை நோக்கி அடித்தார், ஆனால் பந்து துரதிர்ஷ்டவசமாக வெளியே சென்றது. இவையெல்லாம் ஆஃப் டைமுக்குப் பிறகு 10 நிமிட ஆட்டத்தில் நடந்தது.

ஆபத்தை உணர்ந்த ஸ்பெயின் விறுவிறுவென்று ஆடத்தொடங்கியது. பந்தை அதிகம் இவர்களே வைத்திருந்தனர், பாஸ்கள் எண்ணிக்கை சில நிமிடங்களில் ஸ்பெயின் வசம் 500 என்று புள்ளிவிவரங்கள் கூறுமளவுக்கு ஸ்பெயின் அவசரம் காட்டியது. இஸ்கோவின் தலையால் முட்டிய முயற்சி ஒன்று கோலுக்குள் செல்லும் தருணத்தில் மொராக்கோ வீர்ரால் வெளியே அனுப்பப்பட்டது. ஸ்பெயின் அணிக்காக அசென்சியோ, ஆஸ்பாஸ் களமிறக்கப்பட்டனர்.

ஆட்டம் முடிய 15 நிமிடங்களே இருந்தன ஸ்பெயின் வெற்றி பெற 2 கோல்கள் தேவை. ஆட்டத்துன் 81வது நிமிடத்தில் மொராக்கோவுக்கு அந்த அற்புதமான 2 வது கோல் வாய்த்தது. வலது பக்கத்திலிருந்து அம்ராபட் பெனால்டி ஸ்பாட்டுக்கு மிக அழகாக கார்னர் ஷாட் ஒன்றை அனுப்ப உயரே எழும்பி வந்த பந்தை ரேமோஸ் உள்ளிட்ட ஸ்பெயின் வீரர்களுக்கும் மேல் அதீதமாக எம்பி புல்லட் ஷாட்டாக தலையால் அரக்கத்தனமாக ஒரு முட்டு முட்டினார் மொராகோவின் எந்நஸீரி. பந்து கோல் வலையைத் தாக்குவதை மற்றவர்கள் போல் ஸ்பெயின் கோல்கீப்பரும் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. மொராக்கோ 2-1 முன்னிலை.

nesyirijpg

மொராக்கோ வீரர் நெசிரியின் மிக அற்புதமான தலை முட்டல் கோல். | ஏ.எஃப்.பி.

 

2வது கோலை அடித்தவுடன் மொராக்கோ கோல் கீப்பர் முனிர் பந்தை வைத்துக் கொண்டு போக்குக் காட்டி நேர விரயம் செய்ததற்கு கார்டு காட்டப்பட்டு எச்சரிக்கப்பட்டார்.

அப்போதுதான் ஆட்டத்தின் கடைசி நிமிடங்கள் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஸ்பெயின் வீரர் ஆஸ்பாஸ் மோராக்கோ பாக்சிற்குள் தனக்கு வந்த பந்தை பிளிக் செய்து கோலாக்கினார், ஆனால் அது கோல் இல்லை ஆஃப் சைடு என்று தீர்ப்பளிக்கப்பட்டது, வாக்குவாதங்கள், மோதல்கள், கோபாவேசங்கள், அதிருப்திகள் என்று உணர்ச்சிகரக் கட்டமாக இருந்தது. ஆஃப் சைடா இல்லையா என்பது வீடியோ ரெஃபரலுக்குச் சென்றது, அதில் ஆஃப் சைடு இல்லை என்று தீர்ப்பாக கோல் என்று நடுவர் கைகாட்ட ஸ்பெயின் மொராக்கோ போட்டி 2-2 என்று ட்ரா ஆனது. ஸ்பெயின் இறுதி 16-க்கு முன்னேற, மொராக்கோ வெளியேறியது, ஆனால் மொராக்கோ அணி இன்னும் கொஞ்சம் ஆழமாக இந்தத் தொடரில் சென்றிருக்க வேண்டும், அவர்கள் ஆட்டம் புதிதானது, உத்தி புதிதானது, ஆற்றல் வேறு ஒருதளத்தில் இருப்பது, மொராக்கோ வெளியேறியது உலகக்கோப்பை 2018 கால்பந்துத் தொடரின் துரதிர்ஷ்டமே.

http://tamil.thehindu.com/sports/article24259733.ece

Link to comment
Share on other sites

த்ரில் போட்டியில் இரானை டிரா செய்து அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றது போர்ச்சுகல்! #IRNPOR

 

21-வது உலகக்கோப்பை கால்பந்துத் தொடர் தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. மார்டோவியா அரங்கத்தில் நடைபெற்ற 'பி' பிரிவின் இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில், போர்ச்சுகல் மற்றும் இரான் அணிகள் மோதின. இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. எனினும், 5 புள்ளிகளுடன் போர்ச்சுகல் 'ரவுண்ட் ஆஃப் 16' சுற்றுக்குத் தகுதிபெற்றது.

போட்டி தொடங்குவதற்கு முன், 'பி' பிரிவில் போர்ச்சுகல் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இரான் அணி 3 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் இருந்தன. இப்போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் என்பதால், இவ்விரு அணிகளும் தொடக்கம் முதலே கடுமையாக மோதின.

ரிகார்டோ குரேஷ்மா அடித்த முதல் கோல்

 

 

முதல் பாதியில் போர்ச்சுகல் அணியே அதிகம் ஆதிக்கம் செலுத்தியது. 71 சதவிகித அளவில் பந்தை தன்வசம் வைத்திருந்தது அந்த அணி. சரியாக 45-வது நிமிடத்தில் அந்த அணியின் ரிகார்டோ குரேஷ்மா பாக்ஸுக்கு வெளியே இருந்து அற்புதமாகக் கோல் அடித்து, 1-0 என போர்ச்சுகல் அணி முன்னிலை பெற உதவினார். இந்த உலகக்கோப்பைத் தொடரில் ரொனால்டோ அல்லாத போர்ச்சுகலின் முதல் கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாதியில் 3 முறை முயன்றும் இரானால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

 

 

போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ அடித்த பெனால்டியைத் தடுக்கும் ஈரான் கோல்கீப்பர்

இரண்டாம் பாதி தொடங்கிய சிறிது நேரத்தில் டிஃபண்டர் செய்த தவறால், போர்ச்சுகல் அணி பெனால்டி வாய்ப்பு கேட்டது.  VAR சிஸ்டம் மூலம் டிஃபண்டரின் தவற்றை உறுதி செய்த ரெஃப்ரி பெனால்டி வாய்ப்பளித்தார். 'கோல்டன் பூட்' பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ  பெனால்டி கிக் செய்யத் தயாரானார். 'கோல் நிச்சயம்... 2-0 லட்சியம்' என போர்ச்சுகல் ரசிகர்கள் பெனால்டி கோலை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். தனக்கு இடதுபுறமாக வந்த பந்தை சாமர்த்தியமாக சேவ் செய்தார் இரான் அணியின் கோல் கீப்பர் அலி பெய்ரன்வேண்ட். ஆம்... ரொனால்டோ பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டார். இந்த உலகக்கோப்பைத் தொடரில் மெஸ்ஸி தொடங்கிவைத்த பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டவர்களின் பட்டியலில், ஆறாவதாக இணைந்தார் ரொனால்டோ.

இரு அணிகளும் அட்டாக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டதால் ஆட்டம் பரபரப்பின் உச்சத்தை எட்டியது. போதாக்குறைக்கு 83-வது நிமிடத்தில் இரான் வீரர் முர்டெஸா பொராலிகஞ்சியை, ரொனால்டோ கீழே தள்ளிவிட்டதால் 'ரெட் கார்டு' கொடுக்க  VAR சிஸ்டத்தில் ரிவ்யூ செய்யப்பட்டது. ஆனால், 'யெல்லோ கார்டு' போதுமானதென ரெஃப்ரி முடிவெடுத்து, ரொனால்டோவை புக்கிங் செய்தார்.

ஆட்டம் இறுதிகட்டத்தை எட்டிக்கொண்டிருந்த நிலையில், நிறுத்த நேரமாகக் கூடுதல் நிமிடங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், பாஸ் வந்த பந்து போர்ச்சுகல் வீரரின் கையில் பட்டு 'ஹேண்ட் பால்' ஆனதால், இரான் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த அணியின் வீரர் கரிம், பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். மேட்ச் 1-1 என்ற நிலையில் டிராவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இரான் அணி வீரர் மெஹ்தி தரேமி அடித்த பந்து கோல் கம்பத்தை உரசிக்கொண்டு சைட் நெட்டில் பட்டது. அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை மயிரிழையில் இரான் தவறவிட்டது என்றே சொல்லலாம்.

 

 

சோகத்தில் ஈரான் வீரர்கள்

1-1 கோல் கணக்கில் மேட்ச் டிரா ஆனது. ஒரு போட்டியில் வெற்றி பெற்று, இரண்டு போட்டிகளை டிரா செய்ததால் 5 புள்ளிகளைப் பெற்றது போர்ச்சுகல். 4 புள்ளிகளைப் பெற்று 'பி' பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததால், அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது இரான்.

https://www.vikatan.com/news/tamilnadu/128850-2018-fifa-world-cup-match-report-portugal-iran-match-ends-in-draw.html

Link to comment
Share on other sites

பெனால்டியை கோலாக்கத் தவறிய ரொனால்டோ: ஈரானின் நாடகீய நெருக்கடிகளில் மீண்ட போர்ச்சுகல் ட்ரா

 

 
portugaljpg

கோல் அடித்த மகிழ்ச்சியில் குரேஸ்மா (இடது), பிற போர்ச்சுகல் வீரர்கள். | ஏ.பி.

உணர்ச்சி மோதல்கள், கோபாவேசங்கள், சர்ச்சைகள் என்று அனைத்து விதமான விறுவிறுப்புடனும் நடந்த உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியில் ஈரானுக்கு எதிராக தோல்வியடையாமல் இருக்க போர்ச்சுகல் போராடி கடைசியில் 1-1 என்று ட்ரா ஆனது. இறுதி 16 சுற்றுக்கு போர்ச்சுகல் நுழைய கடும் கடுப்புடன் ஈரான் வெளியேறியது.

ஆட்டத்தில் வீடியோ ரெஃபரலை அதிகம் பயன்படுத்தினர், ஈரான் வீரர்கள் எதற்கெடுத்தாலும் வீடியோ ரெஃபரல் கேட்டனர், இப்படியே போயிருந்தால் ரெஃப்ரீ வெறும் வீடியோவைத்தான் பார்த்துக் கொண்டிருக்க நேரிட்டிருக்கும், கொஞ்சம் விட்டால் ஆட்டத்தின் ஹைலைட்சைக் காட்டுமாறு கூட ஈரான் வீரர்கள் ரெஃப்ரியை வலியுறுத்தியிருப்பார்களென்ற என்ற நிலைதான் தோன்றியது. கிரிக்கெட்டில் பங்களாதேஷ் போல் இந்த உலகக்கோப்பையில் ஈரான். தங்களைப் பற்றி அதீதமான ஒரு சிந்தனை.

   
 

சர்ச்சைகளும் வீடியோ ரெஃபரல்களும்!

ஈரானின் போர்த்துக்கீசிய பயிற்சியாளர் கார்லோஸ் குய்ரோஸ் வீடியோ மேல்முறையீட்டுத் திட்டத்தை திட்டித் தீர்த்தார், காரணம் ஈரான் வீரர் மோர்டீசா பவ்ராலிகனியை போர்ச்சுக்கல் நட்சத்திரம் கிரிஸ்டியானோ ரொனால்டோ முழங்கையால் இடித்துத் தள்ளிவிட்டாராம். இதற்கு ரொனால்டோவுக்கு சிகப்பு அட்டை அளித்திருக்க வேண்டும் என்று கூச்சலிட்டனர். ஆனால் விஏஆர் ரெஃபரலுக்குப் பிறகு பராகுவே ரெஃப்ரி என்ரிக் சாசெரெஸ் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு மஞ்சள் அட்டைக் காட்டினார்.

ஆட்டத்தின் வேறு முக்கியத் தருணங்களிலும் வீடியோ ஆதாரச் சுட்டி கேட்கப்பட்டது. ரொனால்டோவுக்கு இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் வீடியோ சுட்டி மூலம்தான் பெனால்டி கிக் வழங்கப்பட்டது ஆனால் ரொனால்டோ அதனை அதிர்ச்சிகரமாக விரயம் செய்தார்.

ronaldojpg

ரொனால்டோ ஏமாற்றம். | ஏ.எஃப்.பி.

 

ஆனால் ஈரானுக்குக் கடைசி தருணத்தில் ஏகப்பட்ட கோஷங்கள், அதிருப்திகளுக்குப் பிறகு அளிக்கப்பட்ட பெனால்டி கிக்கை ஈரான் வீரர் கரீம் அன்சாரிஃபார்ட் கோலாக மாற்றினார். இதனால் 45வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் ரிக்கார்டோ குரேஸ்மா அடித்த கோலுக்கும் இதற்கும் சமம் ஆனது. 1-1.

சமன் ஆனவுடனேயே ஈரான் உடலுக்குள் பூதம் புகுந்தது போல் ஒரு வேகம் இதில் ஈரான் 2வது கோலுக்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. அப்படி அந்த 2வது கோல் வாய்த்திருந்தால் ஈரான் இறுதி 16க்குக் தகுதி பெற்றிருக்கும். ஈரான் முன்னேறி விடும் என்று அந்நாட்டு ரசிகர்கள் நினைக்கும் வேளையும் வந்தது, அந்த அணியின் மெஹதி தரேமியின் ஒரு சீரிய முயற்சி பக்கவாட்டு கோல்வலையைத் தாக்கியது, ஈரானுக்கு முன்னிலை கிடைக்கவில்லை.

போர்ச்சுகலுக்கு இந்த ஆட்டத்தில் முக்கியக் கணம் கிறிஸ்டியானோ ரொனால்டோவினால் வரவில்லை, மாறாக அந்த அணியின் குரேஸ்மா மூலம்தான் வந்தது, ஆஃப் டைமுக்கு சற்று முன் 45வது நிமிடத்தில் வலது புறத்திலிருந்து மிக வேகாமாக குறுக்காக ஈரான் கோல் எல்லைக்குள் புகுந்தார், நெருக்கடியான அந்த நிலையிலும் மிக அருமையாக ஒரு புல்லட் ஷாட்டில் கோலாக மாற்றினார்.

முதல் பாதியில் மிகவும் நெருக்கடியான முட்டுக்கட்டைகள், ஒரு சில தெளிவான கோல் வாய்ப்புகள் என்று சென்றது ஈரான் பதற்றத்தில் ஆடியதால் சிலபல தவறுகளை இழைத்தது அதிர்ஷ்டவசமாக அது அவர்களுக்கு எதிராக கோலாக மாறாவில்லை. 10வது நிமிடத்தில் இப்படிப்பட்ட தருணத்தில்தான் ஈரானின் பெய்ரன்வாண்ட், சயீத் ஈசாடொலாஹி இடையே சிறு குழப்பம் ஏற்பட பந்தைத் தள்ளி விட கோல் கீப்பர் முன்னேறி வர ஆனால் சரிவரத் தடுக்க முடியாததால் பந்து ஜோவோ மரியாவுக்கு வாகாக அமைந்தது. அவர் ஷாட்டை மேலே அடித்தார், இது முடிந்த சில நிமிடங்களிலேயே ஒரு சாதாரண கிராஸைத் தடுக்க பெய்ரன்வான்ட் தடுக்கும் போது பந்தைத் தவறவிட பந்து நல்ல வேளையாக ஈரான் வீரடிடமே சென்றது.

ஈரான் போர்ச்சுக்கல் வீரர்களை மிகவும் கடுமையாக எதிர்கொண்டு தடுத்தது, போர்ச்சுகலுக்கு வலதுபுறம் தொல்லையைக் கொடுத்தது அலிரேசா ஜகன்பக்‌ஷ் என்ற ஈரான் வீரர். ஒருமுறை இவரை கீழே தள்ளினார் போர்ச்சுகலின் ரஃபேல் கிரைரோ.

இடைவேளைக்குப் பிறகு ரொனால்டோவிற்குக் கால்தட்டுப் போட்டார் எசாடொலாஹி பெனால்டி பகுதிக்குள்தான் இது நடக்கிறது. ரொனால்டோ கீழே விழுந்து விட்டார், நடுவர் ஒன்றும் கொடுக்கவில்லை, ஆனால் வீடியோ அறையில் இருந்த நடுவர்கள் இந்தக் கால்தட்டைப் புறக்கணிக்க வேண்டாம், பார்க்கவும் என்று அறிவுறுத்த ரீப்ளேயில் போர்ச்சுகலுக்கு பெனால்டி கொடுப்பது தவிர நடுவருக்கு வேறு வழியில்லை. ஈரான் கடும் எதிர்ப்பு காட்டியது. எதிப்பு காட்டியதற்காக ஈஷான் ஹஜ்சாஃபிக்கு கார்டு காட்டியதில்தான் முடிந்தது.

ஈரான் கோல் கீப்பர் பெய்ரன்வாண்ட் ரொனால்டோவின் பெனால்டி கிக்கிற்குத் தயாரானார், ரொனால்டோ அடித்தார், ஈரான் கோல் கீப்பர் அதனை அதிர்ச்சிகரமாகத் தடுத்துவிட்டார், ஈரான் முகாமில் கடும் கொண்டாட்டம், குதூகலம்.

இதன் பிறகு உத்வேகம் கொண்டு ஈரான் தாக்கியது, ஆனால் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை, போர்ச்சுகல் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஆனால் பெனால்டி கொடுக்க முடியாததற்கெல்லாம் பெனால்டி கேட்டு தொல்லைக் கொடுத்தனர் ஈரானியர்கள். பயிற்சியாளர் குய்ரோஸ் டச் லைனில் நின்று கொண்டு வீடியோ, வீடியோ என்று கூக்குரலிட நடுவர் அவரை வேண்டுமானால் உள்ளே போய் வீடியோ பாரும் என்று எச்சரித்தார்.

போர்ச்சுகல் 1-0 என்று வென்று விடும் என்றே தெரிந்தது, ஆனால் நாடகம் முடியவில்லை. முதலில் ரொனால்டோ ஈரான் வீரரை முழங்கையால் தடுத்தார் என்று அவருக்கு சிகப்பு அட்டை அளித்தால்தான் ஆடுவோம் என்ற அளவுக்கு ஈரான் ஆர்பாட்டம், கடைசியில் மஞ்சள் அட்டைதான் கொடுக்க முடிந்த சாதாரண ஒரு தடுப்புதான் அது என்பது வீடியோ ரெபரலில் தெரியவந்தது.

iran%20goaljpg

ஈரானின் சமன் கோல், பெனால்டி.

 

மீண்டும் போர்ச்சுகல் வீரர் செட்ரிக் சோவாரேஸ் அவரே அறியாமல் பந்து கையில் பட, இதுவும் பெனால்டி கொடுக்கும் அளவுக்கு பெரிய ஹேண்ட் பால் எல்லாம் இல்லை. ஆனால் வீடியோ சுட்டிக்குச் சென்று அதன் மூலம் பெனால்டி கொடுக்கப்பட்டது. பதிலி வீரர் கரிம் அன்சாரிஃபார்ட் டாப் கார்னரில் வலைக்குள் தள்ளினார். ஆட்டம் 1-1 ட்ரா. கடைசியில் தரேமியின் ஷாட் ஒன்று இலக்கு பிறழ்ந்தது, இறுதி விசில் ஊதப்பட ஈரான் வீரர்கள் விரக்தியிலும் அதிருப்தியிலும் மைதானத்தில் சாய்ந்தனர். 1-1 டிரா என்பது இந்தப் பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஆடிய ஸ்பெயினுக்கு நல்லதாக முடிந்தது, இதனால் ஸ்பெயின் இந்தப் பிரிவில் முதலிடம் பிடித்து இறுதி 16-ல் ரஷ்யாவைச் சந்திக்கிறது,, இல்லையெனில் 2வதாக முடிந்திருந்தால் உருகுவேயைச் சந்திக்க நேரிட்டிருக்கலாம்.

http://tamil.thehindu.com/sports/article24260039.ece

Link to comment
Share on other sites

மெஸ்ஸிக்கு இன்று பிரியாவிடை அளிப்போம்: பயிற்சியாளருக்கே பிடிக்காத நைஜீரிய வீரரின் பேச்சு

 

 
messi

மெஸ்ஸி. | கெட்டி இமேஜஸ்.

இன்று செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் நடைபெறும் உலகக்கோப்பை முக்கியக் கால்பந்து போட்டியில் நைஜீரியா, அர்ஜெண்டினா அணிகள் வாழ்வாசாவா போட்டியில் மோதுகின்றன.

இந்நிலையில் நைஜீரியா அணியின் ஃபுல் பேக் வீரர் பிரையன் இடோவு, இன்று அர்ஜெண்டினாவை வெளியேற்றுவதோடு மெஸ்ஸிக்கும் பிரியாவிடை கொடுப்போம் என்று பேசியது நைஜீரியா பயிற்சியாளருக்கே பிடிக்கவில்லை.

 

இடோவூ கூறும்போது, “ஆம் அதுதான் எங்கள் முக்கிய இலக்கு. அவருக்கு இதுவே கடைசி உலகக்கோப்பை போட்டியாக இருக்க வேண்டும் அதுதான் இலக்கு, அவர் விளையாடுவதைப் பார்க்க எந்த அளவுக்கு விரும்புகிறேனோ அதே அளவுக்கு எங்களுக்கு எதிராக அவர் ஆடுகிறார் என்பதால் எங்களுக்கு இதுதான் ஒரே தெரிவு.

ஆனால் அவருடன் சீருடையை மாற்றிக் கொள்ளவும் விரும்புகிறேன் அவர் மட்டுமல்ல அர்ஜெண்டினாவின் மற்றவீர்ர்களுடனும் சீருடையை பரிமாற்றம் செய்து கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

ஆனால் இவரது பேச்சை நைஜீரியாவின் தலைமைப் பயிற்சியாளர் கெர்னாட் ரோர் இடோவூவின் இந்தப் பேச்சை மறுத்தார், “இல்லை இல்லை, நாங்கள் மெஸ்ஸி பற்றி யோசிக்கவில்லை, எங்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்தவே விரும்புகிறோம்.

மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக்கோப்பையா இல்லையா என்பது எங்கள் பிரச்சினையல்ல. நாங்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதுதான் எங்கள் கவனம். அவர் விளையாடுவதைப் பார்க்க நாங்கள் இங்கு வரவில்லை. முடிவு நோக்கி பயணிக்கிறோம். நாங்கள் தொழில்நேர்த்தியானவர்கள், நைஜீரியாவின் வண்ணங்கள் பறக்க வேண்டும்.

கால்பந்தில் கருணையோ, பரிவோ கிடையாது, பரிசளித்து விடக்கூடாது, எந்த வீரரையும் நமக்கு தனிப்பட்ட முறையில் பிடித்திருந்தாலும் நாம் விட்டுக் கொடுக்க முடியாது.

ஐஸ்லாந்துக்கு எதிராக மெஸ்ஸி சிறப்பாகவே ஆடினார், அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை, அதிர்ஷ்டம் இல்லவேயில்லை, பெனால்டி விஷயத்தில் துரதிர்ஷ்டமே அவருக்கு எஞ்சியது. அவர் நல்ல உடல்தகுதியில் இருக்கிறார், நாங்கள் அவரிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றார் ரோர்.

http://tamil.thehindu.com/sports/article24261818.ece

Link to comment
Share on other sites

`யார் உனக்கு இந்தத் தைரியம் கொடுத்தது!’ - முத்தமிட வந்த ரசிகரை விளாசிய பெண் நிருபர் #FIFA

 

லைவ்வில் பேசிக்கொண்டிருந்தபோது தன்னிடம் தவறாக நடக்க முற்பட்ட கால்பந்து ரசிகருக்குப் பெண் பத்திரிகையாளர் சரியான பதிலடி கொடுத்துள்ளார். 

பெண் நிருபர்
 

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின்போது ரசிகர்கள் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவேயில்லை. ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் கடந்த சில தினங்கள் முன்பு லைவ்வில் பேசிக்கொண்டிருந்த கொலம்பியா பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் திடீரென ஒருவர் முத்தமிட்டுச் சென்றார். அதுமட்டுமின்றி அந்தப் பெண் பத்திரிகையாளரைக் கட்டியணைத்து வன்கொடுமை செய்தார். இந்தச் சம்பவம் பூதாகரமாக வெடித்தது. `இது அநாகரிகத்தின் உச்சம்’ என்று அந்த நபரின் புகைப்படத்தைப் பகிர்ந்து இணையவாசிகள் கொந்தளித்தனர். அந்தப் பெண் பத்திரிகையாளர் லைவ்வில் பேசிக்கொண்டிருக்கையில் இப்படி நடந்ததால், செய்வதறியாது லைவ்வில் பேசுவதைத் தொடர்ந்தார். அதன்பின் ட்விட்டரில் அந்த நபரை திட்டித்தீர்த்தார். பெண் பத்திரிகையாளர்களிடம் கால்பந்து ரசிகர்கள் பலர் அநாகரிகமாக நடந்துகொள்வதாகக் குறிப்பிட்டு வருந்தினார்.

இந்தச் சம்பவத்தின் பரபரப்பு குறையும் முன்னரே , மற்றொரு பெண் நிருபர் கால்பந்துப் போட்டியின்போது லைவ்வில் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாகியுள்ளார். ஆனால், கொலம்பியா பெண் நிருபரைப் போன்று இவர் செய்வதறியாது தவிக்கவில்லை. அந்த இடத்திலேயே அந்த நபருக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.

பிரேசில் ஊடகம் ஒன்றின் பெண் நிருபரான ஜூலியா நேற்று ஜப்பான், செனிகல் இடையேயான போட்டியின்போது லைவ்வில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கால்பந்து ரசிகர், அவரின் கன்னத்தில் முத்தமிட முயற்சி செய்தார். அதிர்ச்சியடைந்த ஜூலியா, சுதாரித்துக்கொண்டு அந்த நபரைத் தள்ளிவிட்டு சரமாரியாகத் திட்டத் தொடங்கினார். `இது போன்று செய்யாதே. ஒருபோதும் இப்படிச் செய்யாதே. யார் உனக்கு இந்தத் தைரியத்தைக் கொடுத்தது. பெண்களை மதிக்கக் கற்றுக்கொள். இது கண்ணியம் கிடையாது. எந்தப் பெண்ணிடமும் இப்படி நடந்துகொள்ளாதே’ என்று விளாசினார். அந்த நபரும் மெல்லியக் குரலில் மன்னிப்புக் கேட்டுவிட்டு கடந்து சென்றார். ஜூலியாவின் வீடியோ இணையத்தில் செம வைரல். அவரின் துணிவுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. உலகமே உற்றுப் பார்க்கும் கால்பந்து அரங்கத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற அநாகரிக செய்கைகளுக்கு என்னதான் தீர்வு? 

 

 

 

 

https://www.vikatan.com/news/world/128925-man-tries-to-kiss-brazil-reporter-on-live-tv-during-fifa.html

Link to comment
Share on other sites

உலகக்கோப்பையின் முதல் கோல் லெஸ் மேட்ச்... பிரான்ஸ் - டென்மார்க் ஆட்டம் டிரா! #DENFRA

 

கடைசி பத்து நிமிடத்தில் அட்டாக்கிங்கை துரிதப்படுத்தியது பிரான்ஸ். ஆனாலும், அவர்களுக்கு ஒரு பிரேக்த்ரோ கிடைக்கவில்லை. ஃபீல்டு கோலுக்கு வாய்ப்பில்லாத சமயத்தில், செட் பீஸ் கிரியேட் செய்து கோல் அடிக்கவும் முயற்சிக்கவில்லை.

ரஷ்யாவில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடரில், 38 போட்டிகளுக்குப் பின் முதன்முறையாக ஒரு போட்டி கோல் லெஸ் டிராவில் முடிந்தது. பிரான்ஸ், டென்மார்க் இரு அணிகளும் 90 நிமிடங்கள் போராடியும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இருப்பினும், இந்த ரிசல்ட் இரு அணிகளும், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறுவதற்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. #DENFRA

குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள பிரான்ஸ், டென்மார்க் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கால்பந்து லீக் போட்டி மாஸ்கோவில் உள்ள லஸ்னிகி ஸ்டேடியத்தில் நடந்தது. பிரான்ஸ் ஏற்கெனவே ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டதால், அணியில் ஏழு மாற்றங்களைச் செய்திருந்தார், பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ். 

#DENFRA

 

 

ஆரம்பத்திலிருந்தே பிரான்ஸ்தான் ஆதிக்கம் செலுத்தியது. இருந்தாலும், 24-வது நிமிடத்தில் பாக்ஸில் இருந்த டென்மார்க் வீரர் ஜன்கா கையில் பந்து பட்டது. ஆனால், ரெஃப்ரி அதை கவனிக்கவில்லை. இதனால், பிரான்ஸுக்கு பெனால்டி கிடைக்கவில்லை. கிரிஸ்மன் அட்டகாசமாகக் கொடுத்த பாஸ்களை டெம்பெலே, ஜிராடு சரியாக கனெக்ட் செய்யவில்லை. 44-வது நிமிடத்தில் கோல் அடிக்கக் கிடைத்த வாய்ப்பை, ஜிராடு வீணடித்தார். அடித்திருந்தாலும் அது கோலாக வாய்ப்பில்லை. ஏனெனில் கிரிஸ்மன் ஆஃப் சைடில் இருந்தார்.

முதல் பாதி முடிவதற்கு முன், இஞ்சுரி டைமில் கவுன்டர் அட்டாக்கிங்கில் ஈடுபட்டபோது, கிரிஸ்மனை ஃபவுல் செய்ததற்காக, டென்மார்க் வீரர் ஜங்கா புக் செய்யப்பட்டார். முதல் பாதி முடிவில், இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இடைவேளைக்குப் பின்பும் பிரான்ஸ் அட்டாக்கிங் எடுபடவில்லை. ஒருவேளை இந்த மேட்ச் கோல் லெஸ் டிராவில் முடியுமோ என்ற சந்தேகம் எழுந்தது. கிரிஸ்மனுக்குப் பதிலாக களமிறங்கிய ஃபெகிர் 70-வது நிமிடத்தில் 25 யார்டு பாக்ஸுக்கு வெளியே இருந்து லெஃப்ட் ஃபுட்டில் லாங் ரேஞ் ஷாட் அடித்தார். அது, சைடு நெட்டில் விழுந்தது. இன்னும் 15 நிமிடங்களே இருப்பதால், எப்படியும் கோல் அடிக்கும் முனைப்பில் டெம்பெலேக்கு பதிலாக எம்பாபேவை இறக்கினார் பிரான்ஸ் பயிற்சியாளர்.

#DENFRA

கடைசி பத்து நிமிடத்தில் அட்டாக்கிங்கை துரிதப்படுத்தியது பிரான்ஸ். ஆனாலும், அவர்களுக்கு ஒரு பிரேக்த்ரோ கிடைக்கவில்லை. ஃபீல்டு கோலுக்கு வாய்ப்பில்லாத சமயத்தில், செட் பீஸ் கிரியேட் செய்து கோல் அடிக்கவும் முயற்சிக்கவில்லை. பிரான்ஸ் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிவிட்ட  அலட்சியத்தில்  விளையாடியது போலவே தெரிந்தது. கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால், ஆட்டம் கோல் லெஸ் டிராவில் முடிந்தது.

இருப்பினும், குரூப் சுற்று முடிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பிரான்ஸ், 5 புள்ளிகளைப் பெற்ற டென்மார்க் ஆகிய இரு அணிகளும்  நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. இந்த குரூப்பில் இடம்பெற்றிருந்த மற்ற இரு அணிகளான ஆஸ்திரேலியா, பெரு  உலகக் கோப்பையில் இருந்து வெளியேறின.

https://www.vikatan.com/news/tamilnadu/128946-denmark-vs-france-match-report.html

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியாவைக் காலி செய்து, ஆறுதல் வெற்றி பெற்ற பெரு! #AUSPER

 

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற சிறிதளவு வாய்ப்பிருந்த நிலையில் ஆஸ்திரேலியா ஆடியது. ஆனால் ஆஸ்திரேலியாவைக் காலி செய்து வீட்டுக்கு அனுப்பியது பெரு!

ரஷ்யாவில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பைத் தொடரின் 'சி' பிரிவு ஆட்டத்தில், ஆஸ்திரேலியா பெருவை எதிர்கொண்டது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற சிறிதளவு வாய்ப்பிருந்த நிலையில் ஆஸ்திரேலியா ஆடியது. ஆனால் 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து, ஆறுதல் வெற்றி பெற்றது பெரு.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோல் அடித்த மகிழ்ச்சியில் பெரு வீரர்கள்

இப்போட்டிக்கு முந்தைய இரு ஆட்டங்களிலும் தோல்வியுற்றிருந்ததால், பெரு அணி லீக் சுற்றிலிருந்து ஏற்கெனவே வெளியேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்றைய போட்டியில் வென்று ஆறுதல் வெற்றிபெற ஆரம்பம் முதலே பெரு முனைப்போடு ஆடியது.

 

 

முதல்பாதி தொடங்கிய சில நிமிடங்களிலேயே அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியது பெரு. 18 -வது நிமிடத்தில் பாலோ குரேரோ பாஸ் செய்த பந்தை, மின்னல் வேகத்தில் அடித்து கோல் ஆக்கினார் ஆண்ட்ரே கரியோ. இந்த உலகக்கோப்பைத் தொடரில் பெரு அணியின் முதல் கோல் இதுவாகும்.

 
 

 

முதல்பாதியில் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை எவ்வளவு முயன்றும் கோல் ஆக கன்வெர்ட் செய்ய முடியாமல் திண்டாடியது ஆஸ்திரேலியா. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் பெரு முதல்பாதியில் முன்னிலை பெற்றது.

உலகக்கோப்பையில் முதல் கோல் அடிக்கும் பாலோ குரேரோ

இரண்டாம் பாதி தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது பெரு. 50-வது நிமிடத்தில் பெருவின் நட்சத்திர வீரர் பாலோ குரேரோ உலகக்கோப்பையில் தனது முதல் கோலை அடித்தார். பெரு 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

அதன்பிறகு ஆட்டநேர இறுதிவரை இரு அணிகளும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைக் கோல் ஆக்காமல் சொதப்பினர். ஆட்டநேர இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்று அசத்தியது பெரு அணி.

https://www.vikatan.com/news/sports/128948-fifa-world-cup-peru-beats-australia-in-league-match.html

Link to comment
Share on other sites

உலகக் கிண்ணம்: குழு ஏ
 
 

 

- ச. விமல்

image_88d50dfe5a.jpg

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் குழுநிலைப் போட்டிகள் நிறைவடைய ஆரம்பித்துள்ளன. குழு ஏக்கான போட்டிகள் நேற்று நிறைவடைந்தன.

குழுநிலைப் போட்டிகளின் இறுதி 16 அணிகளுக்கான கட்டப் போட்டிகள் நிறைவடைந்த போதே குழு ஏ இலிருந்து போட்டிகளை நடாத்தும் ரஷ்யா, உருகுவே அணிகள், அடுத்த சுற்றான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தெரிவுசெய்யப்பட்டுவிட்டன. சவுதி அரேபியாவும் எகிப்தும் இறுதி 16 அணிகளுக்கான சுற்று வாய்ப்புகளை இழந்தன. ஆனாலும்இறுதி 16 அணிகளுக்கான சுற்று தெரிவென்பது மட்டுமல்ல, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு தெரிவாகும் அணிகள் குழுநிலைப் போட்டிகளில் எந்த இடங்களை பெற்றுக் கொள்கின்றன என்பது கூட முக்கியமே. இக்குழுவில் இடம்பிடித்துள்ள உருகுவே அணி கூட 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் அவ்வாறே நான்காமிடத்தைப் பெற்றுக் கொண்டது.

இம்முறை சிறிய அணிகள் அல்லது பலம் குறைந்த அணிகள் என கூறப்படுகின்ற அணிகளும் சிறப்பாகவே விளையாடி வருகின்றன.  இம்முறை உலக கிண்ண தொடரின் இலகுவான குழுவாக இக்குழுவை குறிப்பிடலாம். அதாவது மிகப்பலமான அணிகள் இக்குழுவில் இடம்பெறவில்லை.

இக்குழுவில் உள்ள அணிகள் தரப்படுத்தல்களின்படி நான்காமிட அணி ரஷ்யா. தங்கள் நாட்டில் போட்டிகள் நடைபெறுவதால் போட்டிகளை வென்றுவிட்டார்கள் எனக்கூறிவிட முடியாது. ரஷ்யா அணி சிறப்பாக விளையாடுகிறது. எனவே இவர்கள் நிச்சயம் இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் சந்திக்கவுள்ள ஸ்பெய்ன் அணிக்கு தலையிடியாக இருப்பார்கள் என நம்பலாம்.  

குழுவில் முதலிடத்தை பிடித்திருந்தாலும் போர்த்துக்கல் அணியை சந்தித்திருக்க வேண்டும். அதுவும் கூட இவர்களுக்கு இலகுவாக அமையாது.  சவுதி அணியுடன் 5-0 என வெற்றி பெற்றவர்கள், எகிப்துடன் 3-1 என்ற வெற்றி பெற்றுக்கொண்டார்கள். உருகுவே அணியுடன் 0-3 என்ற தோல்வி, அடுத்த சுற்றில் எவ்வாறு ஸ்பெய்னை எதிர்கொண்டு வெல்லப் போகிறார்கள் என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது. ரஷ்யா அணியாக இவர்கள் விளையாடும் நான்காவது உலக கிண்ணமிது. இப்போதே இவர்கள் முதற் தடவையாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தெரிவாகியுள்ளார்கள். அத்துடன் இவர்களின் மிகப் பெரிய உலகக் கிண்ண வெற்றியாக சவுதிஅரேபியா அணியுடன் பெற்ற வெற்றியைப் பதிவு செய்துள்ளார்கள். சோவியத் ஒன்றியமாக விளையாடிய வேளையில் அவர்கள் நான்காமிடத்தை பெற்றுள்ள அதேவேளை, காலிறுதி வரை மூன்று வரை தடவைகள் தெரிவாகியுள்ளார்கள்.

கால்பந்தாட்ட உலகக் கிண்ண முதல் சம்பியன் உருகுவே. கடந்த இரண்டு உலகக் கிண்ண தொடரில் சிறப்பாக விளையாடிவருகிறார்கள். ஆனால் அவற்றை தாண்டி இம்முறை இன்னமும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். பலமாக தென்படுகிறாரக்ள். உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான லூயிஸ் சுவாரஸ் அணிக்கான வெற்றிகளை பெற்றுக் கொடுக்கிறார். விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள். ரஷ்ய அணியுடன் விளையாடிய விதம் அவர்கள் இரண்டாவது சுற்றில் போர்த்துக்கல் அணியை பலமாக எதிர்கொள்வார்கள் என நம்ப முடிகிறது.

உருகுவே அணி தரப்படுத்தல்களில் 14ஆம் இடத்தில் காணப்படுகிறது. அவர்கள் எதிர்கொள்ளவுள்ள போர்த்துக்கல் நான்காமிடத்திலுள்ளது. இந்த மோதலில் யார் வெற்றிபெற்று காலிறுதிப் போட்டிகளுக்கு செல்வார்கள் என்பது மிகவும் சுவாரஷ்யம். போர்த்துக்கல் அணிக்கு இன்னமும் அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆனால், போர்த்துக்கல் ஈரான் அணியுடன் தடுமாறிய விதம் உருகுவே அணிக்கு நம்பிக்கையை வழங்கும். போர்த்துக்கல், உருகுவே அணிகளுக்கிடையிலான போட்டியினை சமபல போட்டியாகவே கருத முடியும்.

அதிஷ்டம் கூட தன்னுடைய பங்கை இனி வரும் சுற்றுக்களில் வழங்கும் என்பதும் கூட முக்கியமானதே. போர்த்துக்கல்லின் பலம், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பலம் இந்த இரண்டையும் உருகுவே அணி தகர்க்குமானால் உருகுவே அணி காலிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகும் வாய்ப்புகளை உருவாக்கும்.

சவுதி அரேபியா அணிக்கு, உலகக் கிண்ண தொடர்களில் மூன்றாவது வெற்றி இந்த உலகக்கிண்ணத்தில் கிடைத்துள்ளது. 1994ஆம் ஆண்டு முதற் தடவையாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தெரிவானார்கள். அதன்பின்னர் இம்முறை உலகக் கிண்ணத் தொடரே அவர்களுக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. முதற் போட்டியில் ரஷ்யா அணியுடன் மோசமான தோல்வியை சந்தித்தவர்கள், இரண்டாவது போட்டியில் உருகுவே அணியுடன் கடுமையாக போராடினார்கள். உருகுவே அணியை ஒரு கோல் மாத்திரமே பெற அனுமதித்தார்கள். மூன்றாவது போட்டியில் எகிப்து அணியுடன் 2-1 என வெற்றி பெற்றுக் கொண்டார்கள். எகிப்து அணி தரப்படுத்தல்களில் 45 ஆமிடத்தை பெற்றுள்ள அணி. சவுதிஅரேபிய அணி 67 ஆமிடத்தை பெற்றுள்ள அணி. ஆக பலமான அணியான எகிப்து அணியினை வெற்றி பெற்று திருப்தியாக உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்கள். 

எகிப்து அணி பலமான அணியாக இம்முறை களமிறங்கியது. இது அவர்களின் மூன்றாவது உலகக்கிண்ணம். 1990ஆம் ஆண்டின் பின்னர் இம்முறை விளையாடியுள்ளார்கள். 1934ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் முதல் உலகக்கிண்ணம் இவர்களுக்கு. ஆபிரிக்காவின் பலமான அணியாக களமிறங்கிய இவர்களுக்கு இந்த உலகக்கிண்ணம் ஏமாற்றத்தை வழங்கியுள்ளது. பலமான பின் வரிசை அணியாக இவர்கள் விளையாடியுள்ளார்கள். அதனால்தான் கோல்களை எதிரணிகள் அதிகமாக பெற இடம் வழங்கவில்லை.

 

போட்டி முடிவுகள்

ரஷ்யா                             5-0                          சவுதி அரேபியா

எகிப்து                            0-1                          உருகுவே

ரஷ்யா                             3-1                          எகிப்து

உருகுவே                       1-0                          சவுதி அரேபியா

உருகுவே                       3-0                          ரஷ்யா

சவுதி அரேபியா      2-1                          எகிப்து

 

புள்ளி விபரம்

உருகுவே                                       3              3              0              0              5              0              5              9

ரஷ்யா                                             3              2              0              1              8              4              4              6

சவுதி அரேபியா                      3              1              0              2              2              7              -5            3

எகிப்து                                            3              0              0              3              2              6              -4            0

(அணி, போட்டிகள், வெற்றி,சமநிலை, தோல்வி, பெற்ற கோல்கள், எதிரணி கோல்கள், கோல் வித்தியாசம், புள்ளிகள்)

 

இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டிகள்

இம்மாதம் 30 ஆம் திகதி - 11.30 PM - உருகுவே எதிர் போர்த்துக்கல்

அடுத்த மாதம் முதாலம் திகதி - 7.30 PM - ரஷ்யா எதிர் ஸ்பெய்ன்

http://www.tamilmirror.lk/sports-articles/உலகக்-கிண்ணம்-குழு-ஏ/139-218172

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை கால்பந்து - நைஜீரியாவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது அர்ஜெண்டினா

 

ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் நேற்று நடந்த லீக் போட்டியில் நைஜீரியாவை 2-1 என வீழ்த்திய அர்ஜெண்டினா அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. #NGAARG #WorldCup2018 #FIFA2018

 
உலகக்கோப்பை கால்பந்து - நைஜீரியாவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது அர்ஜெண்டினா
 
 
மாஸ்கோ:
 
உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றது. முதல் லீக் ஆட்டத்தில் பெரு, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. டென்மார்க், பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது லீக் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து மூன்றாவது லீக் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள அர்ஜெண்டினா, நைஜீரியா அணிகள் பலப்பரீட்சை செய்தன.
 
இரு அணிகளும் இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கின. அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்சி முதல் இரண்டு லீக் போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்த போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது.
 
இப்போட்டி தொடங்கியதில் இருந்தே அர்ஜெண்டினா வீரர்கள் பந்தை முடிந்த அளவு தங்கள் வசமே வைத்திருந்தனர். 14-வது நிமிடத்தில் 
அர்ஜெண்டினா அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் மெஸ்சி சிறப்பான முறையில் ஒரு கோல் அடித்தார். இதனால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். 
 
201806270135247561_1_arggoal1._L_styvpf.jpg
 
அதன்பின், முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்ஜெண்டினா 1-0 என முன்னிலை வகித்தது.
 
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் நைஜீரியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நைஜீரியா வீரர் விக்டர் மோசஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. 
 
201806270135247561_2_ngagoal1._L_styvpf.jpg
 
அதன்பின் 87-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் மார்கஸ் ரோஜோ கோல் அடித்தார். இதனால் அர்ஜெண்டினா அணி 2-1 என முன்னிலை பெற்றது.
 
201806270135247561_3_arggoal2._L_styvpf.jpg
 
அதன்பின் எந்த கோலும் அடிக்கப்படாததால் அர்ஜெண்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக நடந்த மற்றொரு டி பிரிவு ஆட்டத்தில் குரோசியா அணி ஐஸ்லாந்தை வீழ்த்தியது. இதனால் இந்த பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த அர்ஜெண்டினா அணி நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிப்பெற்றது #NGAARG #WorldCup2018 #FIFA2018

https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/27013524/1172812/FIFA-World-Cup-2018-Argentina-beat-Nigeria-by-21.vpf

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை கால்பந்து - ஐஸ்லாந்து அணியை 2-1 என வீழ்த்தியது குரோசியா

 

 

ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘டி’ பிரிவில் நேற்று நடந்த லீக் போட்டியில் குரோசியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தியது #ISLCRO #WorldCup2018 #FIFA2018

 
உலகக்கோப்பை கால்பந்து - ஐஸ்லாந்து அணியை 2-1 என வீழ்த்தியது குரோசியா
 
 
மாஸ்கோ:
 
உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றது. முதல் லீக் ஆட்டத்தில் பெரு, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. டென்மார்க், பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது லீக் போட்டி டிராவில் முடிந்தது.
 இதையடுத்து நான்காவது லீக் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள 
ஐஸ்லாந்து, குரோசியா அணிகள் பலப்பரீட்சை செய்தன.
 
குரோசியா அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் ஏற்கனவே நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. ஐஸ்லாந்து அணி இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கியது. 
 
இப்போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்கள் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை.
 
201806270128171274_1_croatiagoal1._L_styvpf.jpg
 
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் குரோசியா வீரர் மிலான் படேல்ஜ் கோல் அடித்தார். இதனால் குரோசியா அணி 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் 76-வது நிமிடத்தில் ஐஸ்லாந்து அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் கைல்பி சிகுர்ட்சன் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. 
 
201806270128171274_2_icelandgoal1._L_styvpf.jpg
 
அதைத்தொடர்ந்து 90-வது நிமிடத்தில் குரோசியா அணியின் இவான் பெரிசிக் கோல் அடித்தார். இதனால் குரோசியா அணி மீண்டும் முன்னிலை பெற்றது. 
 
201806270128171274_3_croatiagoal2._L_styvpf.jpg
 
அதன்பின் எந்த அணியிம் கோலும் அடிக்காததால் குரோசியா அணி 2-1 என வெற்றி பெற்றது. இதனால் ஐஸ்லாந்து அணி தொடரைவிட்டு வெளியேறியது. #ISLCRO #WorldCup2018 #FIFA2018

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/27012817/1172811/FIFA-World-Cup-2018-Croatia-beat-Iceland-by-21.vpf

Link to comment
Share on other sites

எஃப் பிரிவில் நாக் அவுட் சுற்றில் நுழைவது யார்?- தென் கொரியாவுடன் ஜெர்மனி மோதல்; மற்றொரு ஆட்டத்தில் சுவீடன் - மெக்சிகோ பலப்பரீட்சை

 

 

 
Today%20Matchescol

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. எஃப் பிரிவில் இன்று இரவு நடைபெறும் முக்கியமான ஆட்டங்களில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி, தென் கொரியாவுடன் மோதுகிறது. மற்றொரு ஆட்டத்தில் சுவீடன் - மெக்சிகோ அணியை சந்திக்கிறது. மெக்சிகோ 6 புள்ளிளுடன் முதலிடத்திலும் ஜெர்மனி, சுவீடன் அணிகள் தலா 3 புள்ளிகளுடன் அடுத்த இரு இடங்களில் உள்ளன. தென் கொரியா இரு ஆட்டங்களில் தோல்வி கண்டு புள்ளிகள் ஏதும் இல்லாத நிலையில் கடைசி இடத்தில் உள்ளது.

ஜெர்மனி முதல் ஆட்டத்தில் மெக்சிக்கோவிடம் 1-0 என தோல்வியடைந்த நிலையில் 2-வது ஆட்டத்தில் சுவீடனை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மீண்டு வந்தது. 3 புள்ளிகளுடன் உள்ள ஜெர்மனி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியில் உள்ளது. அதிலும் தென் கொரியாவுக்கு எதிராக 2 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ஜெர்மனி அணியால் எளிதாக நாக் அவுட் சுற்றுக்குள் கால்பதிக்க முடியும்.

 

அதேவேளையில் தென் கொரியா அணியும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது. மெக்சிகோ, சுவீடன் அணிகளிடம் தோல்வி கண்ட தென் கொரியா, இன்றைய ஆட்டத்தில் ஜெர்மனி அணியை வீழ்த்தும் பட்சத்தில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பெறக்கூடும். ஆனால் இதற்கு மெக்சிகோ அணி, சுவீடனை வெல்ல வேண்டும். மேலும் கோல்கள் வித்தியாசத்திலும் தென் கொரியா முன்னிலை வகிக்க வேண்டும். இது நடப்பதற்கான சாத்திய கூறுகள் அரிதுதான். ஜெர்மனி, சுவீடன் அணிகள் தங்களது ஆட்டத்தை டிரா செய்தால் மெக்சிகோ அணி 7 புள்ளிகளுடன் எளிதாக நாக் அவுட் சுற்றில் கால்பதித்துவிடும்.

இந்த சூழ்நிலை உருவானால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் 2-வது அணி, கோல்கள் வித்தியாசத்தில் முடிவாகும். இரு அணிகளும் சமஅளவிலான கோல்களை பெற்றிருந்தால் ஜெர்மனி அணியே நாக் சுற்றுக்கான வாய்ப்பை பெறும். ஏனெனில் அந்த அணி ஏற்கெனவே சுவீடனை வென்றுள்ளது. ஒருவேளை சுவீடன், ஜெர்மனி அணிகள் வெற்றி பெற்றால் இந்த இரு அணிகளும் தலா 6 புள்ளிகளை பெறும். இந்த சூழ்நிலை ஏற்பட்டால் ஏற்கெனவே 6 புள்ளிகளுடன் உள்ள மெக்சிகோ அணிக்கும் சிக்கல்தான்.

இ பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்து - கோஸ்டா ரிகா அணிகள் மோதுகின்றன. சுவிட்சர்லாந்து அணி இன்றைய ஆட்டத்தை டிரா செய்தால் கூட நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. அந்த அணி இரு ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. கோஸ்டா ரிகா அணி ஏற்கெனவே நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரேசில் - செர்பியா

இ பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் பிரேசில் - செர்பியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பிரேசில் 4 புள்ளிகளுடனும், செர்பியா 3 புள்ளிகளுடனும் உள்ளன. இன்றைய ஆட்டத்தை பிரேசில் அணி டிரா செய்தாலே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடலாம். எனினும் பிரேசில் அணி வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடம் பிடிப்பதில் கவனம் செலுத்தக்கூடும். செர்பியா அணியை பொறுத்தவரையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.

ஒருவேளை இந்த ஆட்டம் டிராவில் முடிந்தால், சுவிட்சர்லாந்து - கோஸ்டா ரிகா ஆட்டத்தின் முடிவை பொறுத்து சுவிட்சர்லாந்து தலைவிதி நிர்ணயமாகும். சுவிட்சர்லாந்து அணி ஒரு கோலுக்கும் அதிகமான வித்தியாசத்தில் தோல்வியடைந்தால் மட்டுமே செர்பியா அணியால் நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை பெற முடியும். மாறாக செர்பியா அணி தோல்வியடைந்தால், சுவிட்சர்லாந்து அணி கோஸ்டா ரிகாவிடம் வீழ்ந்தால் கூட நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும்.

http://tamil.thehindu.com/sports/

Link to comment
Share on other sites

கடவுள் எங்கள் பக்கம் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்: ‘லயன்’ மெஸ்ஸி நெகிழ்ச்சி

messi2

கடினமான சூழ்நிலையில் பந்தை ‘டேக்கிள்’ செய்யும் மெஸ்சி. | ஏ.எஃப்.பி.

நேற்றைய போட்டி போல் ஒரு போட்டியை தான் ஆடியதில்லை என்று கூறிய லியோனல் மெஸ்ஸி, ஒரு போதும் அர்ஜெண்டினா வெளியேறிவிடும் என்று தான் பயப்படவில்லை ஏனெனில் கடவுள் எங்கள் பக்கம் இருக்கிறார் என உணர்ச்சிவயப்பட்டு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவை கடைசியில் ரோஜோவின் கோலினால் 2-1 என்று வீழ்த்திய அர்ஜெண்டினா இறுதி 16 சுற்றில் பிரான்ஸைச் சந்திக்கிறது.

 
 

வாரம் முழுதுமான பதற்றம், வசைகள், கேலிகள், கிண்டல்கள், அறிவுரைகள், சுற்றிலும் ஒரே பேச்சுக்கள் என்று அர்ஜெண்டினாவைச் சுற்றி பெரிய புகைமூட்டம் எழுந்தது, இனி அடுத்த சுற்று பற்றிய பதற்றமே பாக்கி.

இந்நிலையில் மெஸ்ஸி கூறும்போது, “கடவுள் எங்கள் பக்கம் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். எங்களை இந்தச் சுற்றுடன் வெளியேற்றி விடமாட்டார் என்றும் எனக்குத் தெரியும்.

argentina2jpg

படம். | ஏ.எஃப்.பி.

 

நான் இவ்வாறு வாதையை அனுபவித்தது இல்லை. ஏனெனில் சூழ்நிலை அதுமாதிரியானது, உலகக்கோப்பை என்றால் அது ரசிகர்களுக்கு என்ன என்பதையெல்லாம் யோசித்த போது எனக்குள் பெரிய வாதையை உணர்ந்தேன். இப்போது பெரிய விடுதலையை உணர்கிறேன்.

கடந்த போட்டியில் தோற்றதையடுத்து கடினமான காலங்களைக் கடந்தோம். அதிர்ஷ்டவசமாக இன்று நாங்கள் நிம்மதியடைந்து விட்டோம். எப்படியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது, கடவுளுக்கு நன்றி.” என்றார்.

கடைசியில் பயிற்சியாளர் சம்போலியை மெஸ்ஸி ஆரத்தழுவினார், இதுபற்றி சம்போலி கூறும்போது, “அந்தச் செய்கை என்னைப் பெருமையடையச் செய்கிறது. நான் செய்யும் அனைத்திலும் எனக்கு இருக்கும் பற்றுதலை மெஸ்ஸி அறிவார். ரஷ்யாவுக்கு ஒரே கனவுடன் தான் இருவரும் வந்தோம், அர்ஜெண்டினாவுக்காக பெரிதாக ஒன்றைச் செய்ய வேண்டும்.

விஷயம் என்னவெனில் மெஸ்ஸி அதிகம் பந்துகளைக் கையாண்டார், அவர் தனிமைப்படுத்தப்படவில்லை, இதுதான் மிக முக்கியம்.” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article24268941.ece

 

 

நான் நலமாக இருக்கிறேன்: டிகோ மரடோனா

 

 

 
jnpng

மெஸ்சி கோல் அடித்த மகிழ்ச்சியை கொண்டாடும் மரடோனா

மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றப் பிறகு தற்போது தான் நலமாக இருப்பதாக அர்ஜெண்டினாவின் டிகோ மரடோனா தெரிவித்திருக்கிறார்.

நைஜீரியாவுனான வாழ்வா, சாவா  ஆட்டத்தில்   2-1 என்று வீழ்த்திய அர்ஜெண்டினா வெற்றி  நாக் அவுட்  சுற்றில் பிரான்ஸை சந்திக்கிறது. அர்ஜெண்டினாவின் வெற்றிக்கும்  அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் மெஸ்சி, ரோஜோ ஆகியோர் முக்கிய காரணமாக இருந்தனர்.

 

 அர்ஜெண்டினா வெற்றி பெற்றதை மைதானத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடனும், ஆக்ரோஷமாகவும் கொண்டாடினார் அந்நாட்டின் முன்னாள் நட்சத்திரர் டிகோ மரடோனா.

இந்த நிலையில் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில்  அவருக்கு மைதானத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சற்று மயங்கிய நிலையில் காணப்பட்ட மரடோனவை உடனடியாக அவரது சக தோழர்கள் மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் மருத்துவரை பார்த்தப் பிறகு தற்போது நான் நலமாக இருப்பதாக மரடோனா தனது இன்ஸ்டாகிராம்  பதிவிட்டுள்ளார்.

இது குறித்து மரடோனா,  "நான் நலமாக இருப்பதை அனைவரிடமும் கூறிக் கொள்கிறேன். நான் மருத்துவரை பார்த்தப் பிறகு அவர் என்னை வீட்டுக்கு கூறும்படி கூறினார் ஆனால் நான் போட்டியை முழுமையாக கண்ட பிறகுத்தான் செல்ல முடியும் என்றேன். நான் எப்படி  செல்ல முடியும்?” என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த நடைபெறும் நாக் அவுட் சுற்றில் அர்ஜெண்டினா பிரான்ஸை சனிக்கிழமை எதிர்க் கொள்கிறது.

http://tamil.thehindu.com/sports/article24269439.ece

Link to comment
Share on other sites

மெஸ்ஸியின் முதல் கோல், மார்கஸ் ரோஜோவின் உயிர்கொடுத்த கோல்: அர்ஜெண்டினா அடுத்த சுற்றில் பிரான்சைச் சந்திக்கிறது

 

 
argentina

நைஜீரியாவை வீழ்த்தி நாக் அவுட்டுக்கு முன்னேறிய அர்ஜெண்டினா மகிழ்ச்சி. | ராய்ட்டர்ஸ்.

நைஜீரியா வீரர் இடோவூ நேற்று மெஸ்ஸிக்குப் பிரியாவிடை கொடுப்போம் என்றார், பயிற்சியாளர் ரோர் அதனை மறுத்தார், ஆனால் ஜீனியஸுக்கு பிரியாவிடை கொடுக்க இவர்கள் யார் என்று கேட்கும் விதமாக ஆட்டம் தொடங்கி 14ம் நிமிடத்திலேயே நம்பர் 10 ஜெர்ஸி மின்ன மெஸ்ஸி இந்த உலகக்கோப்பையின் முதல் கோலை அடித்தார், அர்ஜெண்டீனா ரசிகர்கள் உற்சாகத்தில் கண்ணீர் மல்க காட்சியளித்தனர், ரோஜோ கோலில் போட்டியை வென்றவுடன் அர்ஜெண்டினா வீரர்களின் கண்களிலும் கண்ணீர்.

ஆம்! நைஜீரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் பரபரப்பான ஆட்டத்தில் வீழ்த்தி அர்ஜெண்டினா இறுதி 16 சுற்றுக்கு முன்னெறியது.

     
 
 

நைஜீரியாவின் விக்டர் மோசஸ் பெனால்டியில் முதல் கோலை அடித்து சமன் செய்ய அடுத்த 35 நிமிடங்களுக்கு அர்ஜெண்டினா ரசிகர்களுக்கு மட்டுமல்ல உலக அர்ஜெண்டினா ரசிகர்களுக்கும் நெஞ்சில் திக் திக்.. நைஜீரியா வெற்றி பெற்றிருக்கும், ஆனால் வாய்ப்புகளைக் கோட்டை விட்டதோடு பெனால்ட்டி கேட்டுக் கொண்டே காலத்தை ஓட்டினர். கடைசியில் மார்கஸ் ரோஜோ அடித்த அற்புதமான கோல் அர்ஜெண்டினாவுக்கு உயிர் கொடுத்தது, வீரர்கள் கண்ணீர் மயம்.

அர்ஜெண்டின பயிற்சியாளர் சம்போலி ஒருமுறை கூறினார் உலகக்கோப்பை என்பது மெஸ்ஸியின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி என்று.

குரேஷியாவுக்கு எதிராக ஆட்டம் முழுதுமே பந்தை மெஸ்ஸி 49 முறைதான் தொட்டார் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன, ஆனால் வாழ்வா சாவா நைஜீர்யாவுக்கு எதிராக நேற்று இடைவேளைவரையிலேயே மெஸ்ஸி கால்களில் பட்டதன் எண்ணிக்கை அதிகம்.

messi1jpg

பந்தை கோலை நோக்கி அடிக்கும் மெஸ்சி. | படம். ஏஎப்பி.

 

ஆட்டத்தின் 14ம் நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் எவர் பனேகா நடுமைதானத்திலிருந்து ஒரு திகைக்கவைக்கும் பாஸை அனுப்ப வலது புறம் அதை அழகாக வாங்கிய மெஸ்ஸி தன் தொடையால் கட்டுப்படுத்தி பிறகு பந்து தரையில் படாமல் இடது காலால் தொட்டு பிறகு வலது காலினால் கோல் வலையின் டாப் கார்னருக்குள் தள்ள ஸ்டேடியம் வெடித்து எழுந்தது.

கடந்த போட்டியை விட மெஸ்ஸியின் பங்களிப்பு இதில் செயல்பூர்வமாக இருந்தது ஒரு முறை கொன்சாலோ ஹிகுவெய்னுக்கு ஒரு பாஸை அனுப்பினார், ஆனால் அவரால் அதனை கோலாக மாற்ற முடியவில்லை. பிறகு பனேகா கொடுத்த பாஸை ஏஞ்செல் டி மரியா நைஜீரியா தடுப்பைக் கடந்து ஊடுருவி எடுத்து சென்றார். ஆனால் லியான் பால்கன் ஃபவுல் செய்தார். ஃப்ரீ கிக் வந்தது மெஸ்ஸி எடுத்தார், ஆனால் பந்து வைடாகச் சென்றது. இன்னொரு ஆட்டத்தில் குரேஷியா இரண்டாவது பாதியின் தொடக்கத்திலேயே ஒரு கோல் அடித்து அர்ஜெண்டினாவுக்கு ரிலீஃப் கொடுத்தது இவர்களுக்குத் தெரியாது, ஆனால் அர்ஜெண்டினா தங்களுக்கே ஆப்பு வைத்துக் கொண்ட தருணம்தான் நைஜீரியாவுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பாகும்.

ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் நைஜீரியாவின் லாங் த்ரோவுக்கு 3 அர்ஜெண்டினா வீரர்கள் பந்தை நோக்கி வந்தனர். விளைவு நைஜீரியாவுக்குக் கிடைத்தது கார்னர். எடீபோ அடித்த கார்னர் தலையால் முட்டி தள்ளி விடப்பட்டது, ஆனால் இந்த நடைமுறையில் மஸ்சரானோ பாலோகன் என்ற நைஜீரிய வீரரைப் ஃபவுல் செய்ததால் மஸ்செரானோ புக் செய்யப்பட உடனடியாக வீடியோ ரெஃபரலுக்கும் அழைக்கப்பட்டது. பெனால்டி கிக் நைஜீரியாவுக்கு.

viktor%20mosesjpg

விக்டர் மோசஸ் நைஜீரியாவுக்காக சமன் செய்த பெனால்டி கிக். | ராய்ட்டர்ஸ்.

 

நைஜீரிய வீரர் விக்டர் மோசஸ் பெனால்டி கிக்கை அடித்தார், அர்மானி வலது புறம் நகரக் காத்திருந்து அதற்கு எதிர்த்திசையில் வலைக்குள் திணித்தார், வாயடைத்தனர் அர்ஜெண்டினா ரசிகர்கள், வீரர்கள், 1-1 என்று சமன் ஆனது. ஒரே பந்துக்கு 3 வீரர்கள் பாய்ந்ததுதான் அங்கு அர்ஜெண்டினா செய்த தவறு. வீரர்களிடையே கம்யூனிகேஷன் இடைவெளி என்று இதற்கு வர்ணனையில் காரணம் கூறப்பட்டது.

இந்த நைஜீரியக் கோலுக்குப் பிறகே அர்ஜெண்டினா முகாமில் பதற்றம் அதிகரித்தது. மேலும் துல்லியமின்மைகள் தொடர்ந்தன. இதனால் அகமட் மியூஸா, நைஜீரியாவின் அபாய வீரர் இடது புறம் வேகமாக கோலை நோக்கிச் சென்று வில்பிரெட் எண்டீடியிடம் கொடுக்க அவர் மேலே அடித்தார். இன்னொரு முறை மியூஸாவின் பாஸை இழந்த ரோஜோ தன் கையில் பந்து பட்டுச் சென்றதை அறியவில்லை. இது பெனால்டி தருணம் என்று கூறப்பட்டது, ஆனால் ரெஃப்ரி வீடியோ ரெஃபரல் செய்து இல்லை என்றார். பிறகு எடீபோ ஒரு ஃப்ரீ கிக்கை வலையின் பக்கவாட்டில் அடித்தார்.

goaljpg

மார்கஸ் ரோஜோ அடித்த வெற்றி கோல். | கெட்டி இமேஜஸ்.

 

இதற்கிடையே ஹிகுவெய்ன் ஒரு பந்தை தூக்கி ஸ்டேண்டுக்கு அடித்தார், ஆனால் இவருக்குப் பின்னால் பெனால்டி பகுதியில் மெஸ்ஸி இருக்கிறார், ஷூட் செய்யும் நிலையில் இருக்கிறார், ஆனால் ஹிகுவெய்ன் அந்த வாய்ப்பை விரயம் செய்தார். சரி அர்ஜெண்டினாவுக்கு எல்லாம் முடிந்து விட்டது என்ற நிலையில் 86வது நிமிடத்தில் அந்த முக்கியக் கணம் வந்தது, மெர்கடோ வலது புறத்திலிருந்து நடுவுக்கு ஒரு கிராஸ் செய்ய அவர் கடும் நெருக்கடிக்கிடையில் வலது காலால் கோலின் இடது மூலையில் பந்தைச் செலுத்தினார். அர்ஜெண்டினாவே எழுந்தது, மரடோனா உணர்ச்சிமயத்தின் உச்சக் கட்டத்தில் இருந்தார்.

ஆனாலும் இன்னொரு நைஜீரியா கோல் அர்ஜெண்டினாவை முடித்திருக்கலாம், அங்கு குரேஷியாவுக்கு எதிராக ஐஸ்லாந்து கோல் அடித்திருக்கலாம் இவை இரண்டில் ஏதாவது ஒன்று நடந்திருந்தால் அர்ஜெண்டினா பாடு திண்டாட்டம்தான். ஆட்டத்தின் கடைசியில் நேரம் விரயம் செய்ததற்காக மெஸ்ஸி புக் செய்யப்பட்டார். 95வது நிமிடத்தில் விசில் ஊதப்பட்டவுடன் அர்ஜெண்டினா வீரர்கள், ரசிகர்கள் கண்களில் கண்ணீர். இறுதி 16 சுற்றில் பிரான்சைச் சந்திக்கிறது.

http://tamil.thehindu.com/sports/article24268763.ece

Link to comment
Share on other sites

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜெண்டினா அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த ரொனால்டோ

 
அ-அ+

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜெண்டினா அணிக்கு போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். #CristianoRonaldo #NGAARG #WorldCup2018

 
 
 
 
நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜெண்டினா அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த ரொனால்டோ
 
மாஸ்கோ:

உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றது. முதல் லீக் ஆட்டத்தில் பெரு, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. டென்மார்க், பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது லீக் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து மூன்றாவது லீக் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள அர்ஜெண்டினா, நைஜீரியா அணிகள் பலப்பரீட்சை செய்தன.

இரு அணிகளும் இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கின.

இப்போட்டி தொடங்கியதில் இருந்தே அர்ஜெண்டினா வீரர்கள் பந்தை முடிந்த அளவு தங்கள் வசமே வைத்திருந்தனர். 14-வது நிமிடத்தில்
அர்ஜெண்டினா அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் மெஸ்சி சிறப்பான முறையில் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் நைஜீரியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நைஜீரியா வீரர் விக்டர் மோசஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.
 
201806271137134593_1_argentinaa._L_styvpf.jpg

அதன்பின் 87-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் மார்கஸ் ரோஜோ கோல் அடித்தார். இதனால் அர்ஜெண்டினா அணி 2-1 என முன்னிலை பெற்றது.
அதன்பின் எந்த கோலும் அடிக்கப்படாததால் அர்ஜெண்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக நடந்த மற்றொரு டி பிரிவு ஆட்டத்தில் குரோசியா அணி ஐஸ்லாந்தை வீழ்த்தியது. இதனால் இந்த பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த அர்ஜெண்டினா அணி நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிப்பெற்றது.
 
அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்சி முதல் இரண்டு லீக் போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்த போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது.
 
201806271137134593_2_Capturefootball._L_styvpf.jpg
இந்நிலையில், வெற்றி பெற்ற அர்ஜெண்டினா அணிக்கு போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், 'நோக்கம் நிறைவேறி விட்டது. மிகுந்த கவனத்துடனும், ஒற்றுமையுடன் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. செல்லலாம் அர்ஜெண்டினா' என டுவிட் செய்திருந்தார்.  #CristianoRonaldo #NGAARG #WorldCup2018

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/27113713/1172883/Cristiano-Ronaldo-Posts-Photo-Says-Vamos-Portugal.vpf

Link to comment
Share on other sites

உலக கோப்பையில் மெஸ்சியின் முதல் கோல், ஆனாலும் அது அனைவருக்கும் ஸ்பெஷல்

 
அ-அ+

உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் நைஜீரியாவுக்கு எதிராக மெஸ்சி அடித்த கோல் இந்த உலக கோப்பையில் 100-வது கோல் ஆக பதிவாகி உள்ளது. #WorldCup #NGAARG #LionelMessi

 
 
 
 
உலக கோப்பையில் மெஸ்சியின் முதல் கோல், ஆனாலும் அது அனைவருக்கும் ஸ்பெஷல்
 
அர்ஜென்டினா கேப்டனும், உலகின் தலை சிறந்த வீரர்களில் ஒருவருமான லியோனஸ் மெஸ்சி நைஜீரியாவுக்கு எதிராக தனது திறமையை வெளிப்படுத்தினார்.

அவர் 14-வது நிமிடத்தில் மிகவும் அபாரமாக செயல்பட்டு கோல் அடித்தார். இந்த உலக கோப்பையில் இது 100-வது கோலாகும். 40 ஆட்டங்கள் முடிவில் 105 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. சராசரி 2.63 ஆகும்.

இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் 5 கோல்கள் அடித்து முன்னணியில் உள்ளார். அடுத்த இரண்டு இடத்தை பெல்ஜியம் வீரர் ரொமெலு லுகாகு 4, போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 4 கோல்களுடன் உள்ளனர். #WorldCup #NGAARG #LionelMessi

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/27122125/1172893/Lionel-Messi-first-goal-in-World-Cup-2018-was-the.vpf

Link to comment
Share on other sites

அது எப்படி பெனால்டி இல்லை?: ஆர்ஜென்டீனாவுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்த நடுவருக்கு நைஜீரிய அணி கேப்டன் கேள்வி!

 

 
Argentina_nigeria1_(10)

 

உலகக் கோப்பை 2018-ல் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி. ஆனால் தொடக்க ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியிடம் டிரா செய்தது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் 3-0 என ஆர்ஜென்டீனாவை வென்றது குரோஷிய அணி. இதையடுத்து வெறும் 1 புள்ளியுடன் நைஜீரியாவை நேற்று எதிர்கொண்டது முன்னாள் சாம்பியனான ஆர்ஜென்டீனா அணி. வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்த ஆட்டத்தில் 2-1 என்கிற கோல் கணக்கில் அட்டகாசமாக வென்று நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி படைத்துள்ளது.

16 முறை உலகக் கோப்பையில் விளையாடி, ஐந்துமுறை அரையிறுதிக்குத் தகுதி பெற்று, ஐந்துமுறை இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்து இருமுறை உலகக் கோப்பையை வென்றுள்ளது ஆர்ஜென்டீனா அணி. இந்நிலையில் ரஷிய உலகக் கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறிவிடுமா என்கிற அச்சத்தில் நேற்றைய ஆட்டத்தைக் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். 

மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் கோல் அடித்தது ஆர்ஜென்டீனா. முதல் கோலை மெஸ்ஸி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதன்பிறகு பெனால்டி மூலம் நைஜீரியா கோல் அடித்து சமன் செய்தது. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் நைஜீரிய அணி பிரமாதமாக விளையாடியது. இதனால் ரசிகர்கள் பதற்றத்துடன் இருந்தார்கள். ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் 4 நிமிடங்கள் மீதமுள்ள நிலையில் மார்கோஸ் ரோஜோ அட்டகாசமான கோல் அடித்து ஆர்ஜென்டீனா அணி வெற்றி பெற உதவினார். மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா 2-1 என ஐஸ்லாந்தைத் தோற்கடித்ததால் 4 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது ஆர்ஜென்டீனா.

இரண்டாம் பகுதியில் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தபோது பந்து, ஆர்ஜென்டீனா வீரர் ரோஜோவின் கையில் பட்டது. ஆனால் விடியோ நடுவரிடம் இதுகுறித்து மேல்முறையீடு செய்தபிறகும் பெனால்டி வழங்க மறுத்தார் ஆட்ட நடுவர் கனேயெட் சகிர். அவருடைய இந்த முடிவு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

நைஜீரிய அணி கேப்டன் ஜான் ஒபி இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது: அது எப்படி பெனால்டி இல்லை என்று எங்களுக்குப் புரியவில்லை. பந்து அவர் கையில் பட்டது தெளிவாகத் தெரிகிறதே! போர்ச்சுகலுக்கு நேற்று வழங்கியதை விடவும் மோசமானது இது. கையை வெளியே நீட்டிக்கொண்டிருந்தபோது பந்து அவர் கையில் பட்டது. முதலில் ஒரு பெனால்டி தந்துவிட்டதால் அடுத்த பெனால்டி தர நடுவருக்கு மனமில்லை போல. ஆனால் அது பெனால்டிக்கு உகந்தது என்றால் பெனால்டி தரவேண்டியதுதானே. ஓய்வறைக்கு வந்தபிறகு நாங்கள் விடியோவில் அதைப் பார்த்தோம். பந்து கையில் பட்டது உண்மைதான். நிச்சயம் பெனால்டி வழங்கியிருக்க வேண்டும். பந்து கையில் பட்டதா என்று நடுவரிடம் கேட்டேன். ஆமாம் என்றார். பிறகு ஏன் அது பெனால்டி இல்லை என்று கேட்டதற்கு,
அது எனக்குத் தெரியாது என்கிறார் எனத் தன வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் நைஜீரிய கேப்டன்.

http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/27/nigeria-felt-they-should-have-had-a-penalty-versus-argentina-2948427.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, நவீனன் said:

நான் நலமாக இருக்கிறேன்: டிகோ மரடோனா

jnpng

மெஸ்சி கோல் அடித்த மகிழ்ச்சியை கொண்டாடும் மரடோனா

மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றப் பிறகு தற்போது தான் நலமாக இருப்பதாக அர்ஜெண்டினாவின் டிகோ மரடோனா தெரிவித்திருக்கிறார்.

நைஜீரியாவுனான வாழ்வா, சாவா  ஆட்டத்தில்   2-1 என்று வீழ்த்திய அர்ஜெண்டினா வெற்றி  நாக் அவுட்  சுற்றில் பிரான்ஸை சந்திக்கிறது. அர்ஜெண்டினாவின் வெற்றிக்கும்  அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் மெஸ்சி, ரோஜோ ஆகியோர் முக்கிய காரணமாக இருந்தனர்.

 

 அர்ஜெண்டினா வெற்றி பெற்றதை மைதானத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடனும், ஆக்ரோஷமாகவும் கொண்டாடினார் அந்நாட்டின் முன்னாள் நட்சத்திரர் டிகோ மரடோனா.

இந்த நிலையில் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில்  அவருக்கு மைதானத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சற்று மயங்கிய நிலையில் காணப்பட்ட மரடோனவை உடனடியாக அவரது சக தோழர்கள் மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் மருத்துவரை பார்த்தப் பிறகு தற்போது நான் நலமாக இருப்பதாக மரடோனா தனது இன்ஸ்டாகிராம்  பதிவிட்டுள்ளார்.

இது குறித்து மரடோனா,  "நான் நலமாக இருப்பதை அனைவரிடமும் கூறிக் கொள்கிறேன். நான் மருத்துவரை பார்த்தப் பிறகு அவர் என்னை வீட்டுக்கு கூறும்படி கூறினார் ஆனால் நான் போட்டியை முழுமையாக கண்ட பிறகுத்தான் செல்ல முடியும் என்றேன். நான் எப்படி  செல்ல முடியும்?” என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த நடைபெறும் நாக் அவுட் சுற்றில் அர்ஜெண்டினா பிரான்ஸை சனிக்கிழமை எதிர்க் கொள்கிறது.

http://tamil.thehindu.com/sports/article24269439.ece

Maradona

ஆள் ஓவர் மப்பாம்..:grin:

Maradona

Link to comment
Share on other sites

அர்ஜெண்டினா வெற்றி பெற்ற போது நட்சத்திர வீரர் மாரடோனா ஆக்‌ஷன்: புகைப்படங்கள்

 

 
Maradona%203%201jpg

உணர்ச்சிவயப்பட்ட மாரடோனா: படம். | ஏ.எஃப்.பி.

அர்ஜெண்டினா முக்கியப் போட்டியில் நைஜீரியாவுக்கு எதிராக 2-1 என்று வெற்றி பெற்றதையடுத்து அந்த ஆட்டம் முழுதும் அந்நாட்டு கால்பந்து முன்னாள் நட்சத்திரம் டீகோ மாரடோனா கடுமையாக உணர்ச்சிவயப்பட்டார்.

படங்களில் மாரடோனா:

 

முதல் கோலை அர்ஜெண்டினா அடித்தவுடன், அதுவும் மெஸ்ஸி அடித்தவுடன் மாரடோனா ஆக்‌ஷன்!

 

Maradona%202jpg

படம். | ஏ.எஃப்.பி.

 

ரசிகர்களுடன் பிரார்த்தனையில்...

 

 

Maradona%204jpg

படம். | ஏ.எஃப்.பி

 

கடைசி கோலில் உணர்ச்சிகளை அடக்க முடியாத மாரடோனா:

 

Maradona%205jpg

படம். | ஏ.எஃப்.பி.

 

விமர்சகர்களை நோக்கி கிண்டல் செய்யும் விதமாக செய்கை செய்யும் மாரடோனா:

 

 

Maradona%206jpg

படம். | ஏ.எஃப்.பி.

http://tamil.thehindu.com/sports/article24270751.ece

Link to comment
Share on other sites

நடப்பு  சாம்பியன் ஜெர்மனி லீக் சுற்றோடு வெளியேறியது. 

தென்கொரியாவுடனான போட்டியில் 0-2 என்ற கணக்கில் ஜெர்மனி  தோல்வி.

Link to comment
Share on other sites

கால்பந்து உலககோப்பை: நடப்பு சாம்பியன் ஜெர்மனியின் கனவு சுக்குநூறானது

தற்போது நடந்து வரும் உலககோப்பை கால்பந்து லீக் சுற்றில் ஜெர்மனி தென் கொரியாவிடம் 0-2 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்ததன் மூலம் உலககோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

ஜெர்மனிபடத்தின் காப்புரிமைLUIS ACOSTA

நடப்பு சாம்பியன் ஜெர்மனி லீக் சுற்றோடு வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. குரூப் F-ல் இடம்பெற்றிருந்த ஜெர்மனி அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும் என கால்பந்து உலகில் எதிர்பார்க்கப்பட்டது.

ஜெர்மனியுடன் மெக்சிகோ, சுவீடன், தென் கொரியா ஆகிய அணிகள் F பிரிவில் இடம்பெற்றிருந்தன. ஜெர்மனி தனது முதல் போட்டியில் மெக்சிகோவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. இரண்டாவது போட்டியில் சுவீடனை 2-1 என்ற கணக்கில் வெற்றி கொண்டது. இந்நிலையில் மூன்றாவது போட்டியில் இன்று தென் கொரியாவை எதிர்கொண்டது.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரண்டு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. ஆனால் இஞ்சுரி டைம் என கூடுதலாக கொடுக்கப்பட்ட ஆறு நிமிட நேரத்தில் 94-வது நிமிடத்தில் கிம் யங்-வான் கோல் அடித்தார். ஜெர்மனி அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சன் ஹியூங் மின் இன்னொரு கோல் அடித்தார். ஆட்டம் 100 நிமிடங்கள் வரை நீட்டிக்கப்பட்டிருந்தபோதிலும் ஜெர்மனியால் எதுவும் செய்யமுடியவில்லை.

ஜெர்மனிபடத்தின் காப்புரிமைALLSPORT/GETTY IMAGES

ஜெர்மனி 1938-க்கு பிறகு அதாவது 80 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தான் விளையாடும் முதல் சுற்றோடு வெளியேறியது.

F பிரிவில் இருந்து சுவீடன் மற்றும் மெக்சிகோ அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. தென் கொரியா ஜெர்மனியுடன் வென்ற போதிலும் மூன்று புள்ளிகள் மட்டுமே பெற்றிருப்பதால் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. ஜெர்மனி அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை என்பதோடு லீக் சுற்றிலும் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

கடைசி ஐந்து உலக கோப்பை கால்பந்துப் போட்டிகளில் நான்குமுறை அப்போதைய நடப்பு சாம்பியனாக இருந்த பிரான்ஸ் (2002), இத்தாலி (2010), ஸ்பெயின் (2014), ஜெர்மனி (2018) ஆகிய அணிகள் லீக் சுற்றோடு வெளியேறியுள்ளன.

https://www.bbc.com/tamil/sport-44636494

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.