Jump to content

உலக கிண்ண கால்பந்தாட்டம் 2018 செய்திகள், ஆய்வுகள், கருத்து பகிர்வுகள்


Recommended Posts

வெற்றியோ தோல்வியோ ரொனால்டோ தாங்க ஹீரோ! உருகுவே போட்டியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் போர்ச்சுக்கல் அணி தோல்வியடைந்த போதும் ரொனால்டோ ஹீரோவாக ஜொலித்துள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் நாக் அவுட் சுற்றில் போர்ச்சுக்கல் அணி, உருகுவே அணியிடம் தோல்விடையடைந்து தொடரை விட்டு வெளியேறியது.

இப்போட்டியில் போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் உருகுவே வீரர் கவானிக்கு காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் திணறினார். இதைப்பார்த்து பதறிய போர்ச்சுகல் அணியின் தலைவரும், நட்சத்திர வீரருமான ரொனால்டோ, அவருக்கு உதவி பெவிலியன் திரும்ப உதவினார்.

 

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

தனது அணி பின்தங்கியிருந்த நிலையில் இருந்தும் எதிரணி வீரருக்கு உதவிய ஹீரோ ரொனால்டோவை இரு அணி ரசிகர்களும் பாராட்டும் விதமாக உற்சாகப்படுத்தினர்.

 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

 

http://news.lankasri.com/football/03/182373?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • Replies 262
  • Created
  • Last Reply

எடின்சன் கவானியின் அபாரமான 2 கோல்கள்: உருகுவேயிடம் மூழ்கியது ரொனால்டோவின் போர்ச்சுகல்

 

 
cavani

2 கோல்களின் ஆட்ட நாயகன் உருகுவேயின் எடின்சன் கவானி. | கெட்டி இமேஜஸ்

ரஷ்யா உலகக்கோப்பை 2018-ல் இறுதி 16 சுற்றில் நேற்று இரண்டு சூப்பர் ஸ்டார் அணிகள் வெளியேறின, பிரான்ஸ், அர்ஜெண்டினா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் கைலியன் மபாப்பே ஒரு மின்னல் வேக ஆட்டத்தில மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவை ஊதித்தள்ள, மற்றொரு சூப்பர்ஸ்டார் அணியான போர்ச்சுகலை 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவே வென்றது.

சோச்சியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 7வது நிமிடத்திலும் பிறகு 62வது நிமிடத்திலும் எடின்சன் கவானி அடித்த இரண்டு திகைக்கவைக்கும் கோல்களினால் போர்ச்சுகல் கனவு முறிய கிறிஸ்டியானோ ரொனால்டோ எனும் அற்புத வீர்ரின் உலகக்கோப்பை கனவும் முடிவுக்கு வர உருகுவே 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

   
 

ஆனால் கடைசி நேரத்தில் கவானி காயமடைந்ததால் வரும் வெள்ளியன்று நடைபெறும் பிரான்ஸுக்கு எதிரான காலிறுதியில் விளையாடுவாரா என்பது சந்தேகமாகியுள்ளது.

நேற்றைய 2வது போட்டியில் பெரும்பாலும் ஒரு மந்தமான தடுப்பாட்டத்தையே எதிர்பார்த்தனர், ஆனால் மாறாக ஆட்டம் இருதயத்துடிப்பை எகிறச்செய்யும் ஆட்டமாக அமைய எப்போதும் விமர்சனத்துக்கு ஆளாகும் கவானி 7வது நிமிடத்தில் தலையால் முட்டியும், 62வது நிமிடத்தில் மிகப்பிரமாதமாக, கம்பீரமாக அடித்த ஷாட் வளைந்து கோலுக்குள் சென்றது.

ஆனால் ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் போர்ச்சுகலின் பெபே தலையால் முட்டி சமன் செய்திருந்தார். ஆனால் 62வது நிமிடத்தில் கவானி செண்டர் ஃபார்வர்டில் மிக அற்புதமாக ஆடி வெற்றி கோலை அடித்தார்.

pepejpg

போர்ச்சுகல் வீரர் பெபேயின் தலையால் முட்டிய கோல்.

 

கடைசி நிமிடங்களில் போர்ச்சுகல் தங்கள் ஆற்றல் முழுதையும் திரட்டி ஆடியது, கோல் கீப்பர் ரூடி பேட்ரிசியோ முன்னால் வந்து ஆடப்பணிக்கப்பட்டார். இவர் ஏறக்குறைய தலையால் முட்டி ஒரு கோலையும் அடித்திருப்பார். போர்ச்சுகலின் ஒவ்வொரு இடைமறிப்பையும் பந்து கடைதலையும் ரசிகர்கள் ஆவலுடன் வரவேற்றனர். விஏஆஆர் கேட்டு தங்களைக் காப்பாற்றி கொண்டனர், ஆனாலும் இவர்கள் எதிர்பார்த்த அந்த 2வது கோல் வரவேயில்லை.

குரூப் மட்டத்தில் ஒரு கோல் கூட வாங்காமல் இறுதி16க்கு வந்தது உருகுவே, நேற்று முதல் கோலை வாங்கியது.

ஆட்டம் தொடங்கி 7வது நிமிடத்தில் அந்த அணியின் நட்சத்திர வீரர் லூயி சுவாரேஸ் அடித்த அற்புத கிராஸ் கவானியின் முதல் கோலுக்குக் காரணமானது. இதன் பிறகு போர்ச்சுகல் முட்டியது, மோதியது, ஆனால் உருகுவேயின் தடுப்புக் கோட்டையை தகர்க்க முடியவில்லை. இடைவேளைக்குப் பிறகு கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்திய பெபே தலையால் முட்டி முதல் கோலை அடித்து சமன் செய்தார். ஆனால் இந்த சமன் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை, கவானியின் பக்கவாட்டு பாத உதை போர்ச்சுகலின் கனவுகளை சிதறடித்தது.

போர்ச்சுகல் பந்துகளை அதிகம் தங்கள் வசம் வைத்திருந்தனர், அதில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேறிச் சென்றனர், ஆனால் உருகுவே தடுப்புக் கோட்டை ஊடுருவ முடியாததாக இருந்தது. இருமுறை கோல் அடிக்க நெருக்கமாக வந்தும் முடியவில்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோவை நம்பியிருந்த அணி அவரை உருகுவே முடக்கியவுடன் திடீரென ஒன்றுமில்லாமல் ஆனது. 4 கோல்களை அடித்த பிறகே ஆ.. ஊ.. என்று பயங்கர பில்ட் அப் எழுந்தது, ஆனால் 6 உலகக்கோப்பைகளில் அவர் நாக் அவுட் சுற்றில் கோலே அடித்ததில்லை என்ற எதிர்மறைச் சாதனை தொடர்ந்தது. அடித்ததோடு மட்டுமல்ல அடுத்தவர் கோல் அடிக்க உதவிகரமாகவும் இருந்ததில்லை என்கின்றன புள்ளி விவரங்கள்.

ronaldojpg

விரக்தியில் ரொனால்டோ. | ஏ.எப்.பி.

 

போர்ச்சுக்களின் பிரசித்தி பெற்ற ஹீரோவான ரொனால்டோ இடது புறம் பந்தை ஒரு பிளிக் செய்து பிறகு நேராக கோலை நோக்கி அடிக்கத் தயாரானார், அடித்த போது நேராக பெர்னாண்டோ மியூஸ்லேராவிடம் சென்றது.

ஆனால் ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் டயக்னலாக வந்த பந்தை சுவாரேசிடம் அடித்தார் கவானி பிறகு அவரே மின்னல் வேகத்தில் பாக்ஸிற்குள் சென்றார். சுவாரெஸ் அடித்த பந்துக்கு எழும்பிய கவானி தலையால் முட்டி கோலுக்குள் தள்ளினார்.

இந்தக் கோலுக்குப் பிறகு போர்ச்சுகல் கொஞ்சம் வேகம் காட்டியது, ரொனால்டோவின் அசுர முட்டு ஒன்று ஜோஸ் கிமினேசினால் இடைமறிக்கப்பட்டது. பிறகு ரோட்ரிகோ பெண்டன்கரின் ஃபவுல் மூலம் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை ரொனால்டோ சுவர் போல் நின்ற வீரர்கள் மேல் அடித்து வீண் செய்தார். உருகுவே தடுப்பரணை டீகோ கோடின் கவனித்து கொண்டார். ஆனால் இடைவேளைக்குப் பிறகு போர்ச்சுகல் கொஞ்சம் முனைப்புடன் வந்தது. ரபேல் குயெய்ரோ ஷார்ட் கார்னர் வாய்ப்பை கிராஸ் செய்ய அங்கு மார்க் செய்யப்படாத பெபே எம்பி தலையால் முட்டி கோலுக்குள் செலுத்தினார், 1-1 என்று சமன் ஆனது.

ஆனால் ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் பெண்டன்கர் பந்தை லேசாக உருட்ட, கவானி அதனை கோலுக்குள் அற்புதமாகச் செலுத்தினார் 2-1 முன்னிலை பெற்றது உருகுவே. ரொனால்டோவுக்கு நெருக்கடி அதிகரிக்க ஏதாவது செய்யும் முனைப்பில் கொஞ்சம் தொலைவிலிருந்து ஒருஷாட்டை முயன்றார், அது சில்வாவினால் விரயம் செய்யப்பட்டது.

இடைவேளைக்குப்பிறகு கடைசி நிமிடங்களில் போர்ச்சுகல் சிலபல நெருக்கடிகளை கொடுத்தது, உருகுவே அணியின் வசம் பந்து 30% தான் இருந்தது. ஆனால் உருகுவே தடுப்பரண் ரொனால்டோவுக்கு விமானத்தைக் காட்டி விட்டது. கடைசியில் உருகுவே இருமுறை பாக்சிற்குள் பந்தைக் கொண்டு சென்றது, இதில் ஒன்று கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மஞ்சள் அட்டையில் முடிந்தது, அடுத்த சுற்றுக்கு போர்ச்சுகல் முன்னேறியிருந்தால் ரொனால்டோ ஆடியிருக்க முடியாது.

ஆட்ட நாயகன் எடின்சன் கவானி, இவர் இந்த உலகக்கோப்பையில் தன் கோல் கணக்கை 3ஆக உயர்த்தியுள்ளார், மொத்தமாக 45 கோல்களை சர்வதேச போட்டிகளில் அடித்துள்ளார் கவானி. உருகுவே முதல் முறையாக உலகக்கோப்பையில் முதல் 4 போட்டிகளை வென்றுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article24303742.ece

Link to comment
Share on other sites

அர்ஜென்டினா அணி வெளியேற்றம்: பிரான்ஸிடம் 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வி- கிளியான் மாபே இரு கோல்கள் அடித்து அசத்தல்

 

 
SOCCER-WORLDCUP-FRA-ARGjpgjpg

கஸான்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் அணி 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.

 
 

ரஷ்யாவின் கஸான் நகரில் நேற்று நடைபெற்றற இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 4-3-3 என்ற பார்மட்டிலும், பிரான்ஸ் அணி 4-2-3-1 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. பிரான்ஸ் அணியில் 6 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. கிளியான் மாபே, பால் போக்பா அணிக்கு திரும்பினர். அதேவேளையில் அர்ஜென்டினா அணியில் கோன்சாலோ ஹிகுவெய்ன் நீக்கப்பட்டு கிறிஸ்டியன் பவோன் சேர்க்கப்பட்டார். ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்தில் கிளியான் மாபேவை, பாக்ஸ் பகுதிக்கு வெளியே அர்ஜென்டினா வீரர் ஜேவியர் மஸ்செரேனோ தள்ளிவிட்டார். இதனால் பிரான்ஸ் அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இதில் இலக்கை நோக்கி அன்டோனி கிரீஸ்மான் அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது.

11-வது நிமிடத்தில் பெனால்டி பகுதிக்குள் வைத்து பிரான்ஸ் வீரர் கிளியான் மாபேவை அர் ஜென்டினாவின் மார்கஸ் ரோஜோ பவுல் செய்தார். இதனால் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி கீரிஸ்மான் கோல் அடிக்க பிரான்ஸ் அணி 1-0 என முன்னிலை பெற்றது. 21-வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் மூலம் பால் போக்பா, பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த பந்து கோல்கம்பத்துக்கு மேலாகச் சென்றது. அடுத்த நிமிடத்தில் அர்ஜென்டினாவின் எவர் பனேகா அடித்த பந்து தடுக்கப்பட்டது.

40-வது நிமிடத்தில் அர்ஜென்டினா பதிலடி கொடுத்தது. எவர் பனேகா உதவியுடன் பந்தை பெற்ற ஏஞ்சல் டி மரியா, பாக்ஸ் பகுதிக்கு வெளியில் 35 யார்டு தூரத்தில் இருந்து வலுவாக அடித்த ஷாட், உயரமாக கர்லிங் முறையில் சுழன்றபடி கோல்கம்பத்தின் வலது ஓரமாக கோல் வலையை துளைத்தது. இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது.

48-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி 2-வது கோலை அடித்தது. எவர் பனேகாவின் கிராஸை, பிரான்ஸ் அணி சரியாக தடுக்காத நிலையில் வலதுபுறம் பாக்ஸின் வெளியே நின்ற மெஸ்ஸிக்கு சென்றது.

அதை அவர், இலக்கை நோக்கி அடித்த நிலையில் 6 அடி தூரத்தில் நின்ற கேப்ரியல் மெர்காடோ, பந்தின் வேகத்துக்கு தகுந்தவாறு தனது இடது காலால் லேசாக திருப்பி விட பந்து கோல் வலைக்குள் பாய்ந்தது. இதனால் அர்ஜென்டினா 2-1 என முன்னிலை பெற்றது. 57-வது நிமிடத்தில் பிரான்ஸ் பதிலடி கொடுத்தது. லூக்காஸ் ஹெர்னான்டெஸின் கிராஸை பெற்ற பெஞ்சமின் பவார்டு, பாக்ஸின் வெளியே இருந்து அடித்த பந்து கோல் கம்பத்தின் இடது ஓரத்தில் பாய்ந் தது. இதனால் ஆட்டம் 2-2 என சமநிலையை எட்டியது. அடுத்த 11 நிமிடங்களில் பிரான்ஸ் அணி மேலும் இரு கோல்கள் அடிக்க அர்ஜென்டினா அணி அதிர்ச்சியில் உறைந்தது. இந்த இரு கோல் களையும் கிளியான் மாபே 64 மற்றும் 68-வது நிமிடங்களில் அடித்திருந்தார். அர்ஜென்டினா அணியின் பலவீமான தடுப்பாட் டத்தை கிளியான் மாபே சரி யாக பயன்படுத்திக் கொள்ள பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் அர்ஜென்டினா அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது.

இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் 3-வது நிமிடத்தில் லயோனல் மெஸ்ஸி உதவியுடன் பந்தை பெற்ற அர்ஜென்டினாவின் அகுரோ தலையால் முட்டி கோல் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் எஞ்சிய நிமிடத்தில் அர்ஜென்டினாவினால் மேற்கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் போனது. முடிவில் பிரான்ஸ் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.

http://tamil.thehindu.com/sports/article24303507.ece

Link to comment
Share on other sites

நாக் அவுட் சுற்றில் இன்று மோதல்: ஸ்பெயின் பலவீனத்தை பயன்படுத்திக் கொள்ளுமா ரஷ்யா?

 

 
RUSSIAjpg

மாஸ்கோ

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு  நடைபெறும் நாக் அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் - ரஷ்யா அணிகள் மோதுகின்றன.

 

ஸ்பெயின் அணி கடந்த 2016-ம் ஆண்டு யூரோ உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியடையாமல் வலம் வருகிறது. உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் முதல் ஆட்டத்தை சந்திப்பதற்கு முன்ன தாக பயிற்சியாளர் ஜூலியன் லோபெட்டிகுய் அதிரடியாக நீக்கப் பட்டார்.

எனினும் இடைக்கால பயிற்சி யாளர் பெர்னாண்டோ ஹைரோ உதவியுடன் லீக் சுற்றை வெற்றி கரமாக முடித்துள்ளது ஸ்பெயின் அணி. போர்ச்சுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தை 3-3 என்ற கோல் கணக்கில் டிரா செய்த ஸ்பெயின் அணி, அதன் பின்னர் ஈரான் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. கடைசி லீக் ஆட்டத்தில் மொராக்கோ அணிக்கு எதிராக 2-2 என டிரா செய்த ஸ்பெயின் அணி பி பிரிவில் 5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்குள் கால்பதித்துள்ளது.

லீக் சுற்றில் டிகோ கோஸ்டா, நாச்சோ, இஸ்கோ, இகோ அஸ்பஸ் ஆகியோர் கோல் அடித்திருந்தனர். இதில் டிகோ கோஸ்டா 3 கோல்கள் அடித்து சிறந்த பங்களிப்பு செய்திருந்தார். இதேபோல் இனியஸ்டா கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருந்தார். இந்த கூட்டணி, ரஷ்யா அணிக்கு நெருக்கடி கொடுக்க ஆயத்தமாக உள்ளது.

ஸ்பெயின் வீரர் தியாகோ அல்கேன்ட்ரா கூறுகையில், நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும், இதுவரை நாங்கள் எங்களது சிறந்த ஆட்டத்தை விளையாடவில்லை. மிகவும் முக்கியமான விஷயம், நாங்கள் ரஷ்யாவுக்கு எதிரான ஆட்டத்தை சிறப்பாக அமைக்க வேண்டும். நாங்கள் 11 ரஷ்ய வீரர்களுக்கு எதிராக விளையாடவில்லை. மைதானம் முழுவதும் காணப்படும் பல்லாயிரக்கணக்கான ரஷ்யர்களுக்கு எதிராக விளையாட உள்ளோம்” என்றார்.

சென்டர் பேக் ஜோடியான செர்ஜியோ ரமோஸ், ஜெரார்டு பிக்கி மற்றும் கோல்கீப்பர் டேவிட் டி ஜியா ஆகியோர்  லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் 5 கோல்களை எதிரணி வீரர்களால் அடிக்க விட்டிருந்தனர்.

இதனால் டிபன்ஸில் ஸ்பெயின் அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

ரைட்-பேக் திசையில் விளையாடக் கூடிய ஸ்பெயின் வீரர் டேனி கார்வஜல் கூறுகையில், தற் காப்பு ஆட்டத்தில் உள்ள தவறுகளை நாங்கள் குறைக்க வேண்டும். இந்த பகுதியில் நாங்கள் தவறு செய்தால், அது எதிரணியினர் கோல் அடிக்க மிக எளிதானதாக அமைந்துவிடும். எதிரணியினர் அவர்களது புத்தி சாலித் தனத்தைவிட எங்களது தவறுகளால்தான் கோல் கள் அடித்துள்ளனர்” என்றார்.

உலகக் கோப்பை தொடரில் போட்டியை நடத்தும் நாடான ரஷ்யா, லீக் சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியா அணியை 5-0 என்ற கோல் கணக் கில் வீழ்த்தி மிரள வைத்தது. இதைத் தொடர்ந்து பலம் வாய்ந்த எகிப்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை பெற்றது. அந்த அணியின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு கடைசி லீக் ஆட்டத்தில் உருகுவே முட்டுக்கட்டை போட்டது. அந்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயிடம் ரஷ்யா தோல்வி கண்டது.

உலகக் கோப்பை தொடரில் கால்பதிப்பதற்கு முன்னதாக ரஷ்ய அணி கடும் விமர்சனங்களை எதிர் கொண்டிருந்தது. அதாவது கடந்த 8 மாதங்களில் அந்த அணி ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல் இருந்தது. அதிகபட்சமாக நவம்பர் மாதம் ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தை 3-3 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது. ஆனால் லீக் சுற்றின் முதல் ஆட்டத் திலேயே அபார வெற்றி பெற்று சிறிய அளவிலான அற்புதத்தை நிகழ்த்தியது ரஷ்ய அணி. லீக் சுற்றில் ரஷ்ய அணி 8 கோல்கள் அடித்த நிலையில் 4 கோல்களை வாங்கியது.

38 வயதான ரஷ்ய அணியின் டிபன்டரான செர்ஜி இக்னாஷேவிச் கூறுகையில், “ஸ்பெயின் அணி கடந்த வருடங்களில் விளையாடிய பாணியிலேயே தற்போதும் விளையாடுகிறது. அந்த அணியின் டிபன்டர்கள் பெரிய அளவிலான இடைவெளி விட்டு விளையாடுவார்கள். இதனை எதிர்தாக் குதல் ஆட்டம் தொடுக்கும் அணி பயன்படுத்திக் கொள்ள முடியும். ஸ்பெயின் அணிக்கு பலவீனம் என்று ஒன்று இருந்தால் அது இந்த விஷயமாகத்தான் இருக்கும்” என்றார்.

உருகுவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரஷ்ய வீரர் இகோர் ஸ்மோல்னிகோவ் சிவப்பு அட்டை பெற்றதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் குணமடைந்துள்ள நடுகள வீரர் ஆலன் ஸகோவ் அணியுடன் இணைந்துள்ளார். இது ரஷ்ய அணிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது. லீக் சுற்றில் ரஷ்ய அணியின் வெற்றிகளில் டெனிஸ் செரிஷேவ், ஆர்டெம் ஸூபா, கொலோவின், கஸின்ஸ்கி ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். இதில் செரிஷேவ் 3 கோல்கள் அடித்து, அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். இந்த கூட்டணி மீண்டும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த பிறகு முதன்முறையாக கால் இறுதியில் கால்பதித்து சாதனை படைக்கலாம்.

நேருக்கு நேர்

ஸ்பெயின் - ரஷ்யா அணிகள் இதுவரை 12 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் ஸ்பெயின் 6 ஆட்டங்களிலும், ரஷ்யா 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 4 ஆட்டங்கள் டிரா வில் முடிந்துள்ளது. கடைசியாக இரு அணிகளும் 2017-ம் ஆண்டு மோதின.

இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்திருந்தது. அதற்கு முன்னதாக 2008-ம் ஆண்டு யூரோ கோப்பை அரை இறுதியில் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணியை வீழ்த்தியிருந்தது.

http://tamil.thehindu.com/sports/article24303511.ece

Link to comment
Share on other sites

குரோஷியாவை சமாளிக்குமா டென்மார்க்?

 

 
modjpg

நிஷ்னிநோவோகிராட்

உலகக் கோப்பை கால்பந்து நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் இன்று இரவு 11.30 மணிக்கு குரோஷியா, டென்மார்க் அணிகள் மோதவுள்ளன.

 

ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கரோட் மைதானத்தில் இந்த போட்டி இன்று நடைபெறவுள்ளது.

குரூப் டி பிரிவில் இடம்பெற்ற குரோஷியா அணியானது அபார மாக விளையாடியது. தான் விளை யாடிய 3 ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி கண்டது. மொத்தம் 9 புள்ளிகளுடன் அந்த அணி முதலிடத்தைப் பிடித்திருந்தது.  7 கோல்களைப் போட்ட அந்த அணி, ஒரே ஒரு கோலை மட்டுமே வாங்கியிருந்தது.

பலம் வாய்ந்த அர்ஜென்டினா, நைஜீரியா அணிகளையும், ஐஸ்லாந்து அணியையும் குரோஷியா லீக் ஆட்டங்களில் அபாரமாக சாய்த்திருந்தது.

குறிப்பாக கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் அர்ஜென்டினா அணியை 3-0 என்ற கணக்கில் குரோஷியா அணி வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தை ரசிகர்கள் நிச்சயம் மறக்க மாட்டார்கள்.

அதே நேரத்தில் டென்மார்க் அணியானது குரூப் சி பிரிவில் 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிராக்களுடன் நாக்-அவுட் சுற்றில் நுழைந்தது. முதல் சுற்றில் டென்மார்க் அணி 5 புள்ளிகளை மட்டுமே பெற்று 2-வது இடத்தைப் பிடித்தது. லீக் ஆட்டங்களில் அந்த அணி 2 கோல்களை மட்டுமே அடித்திருந்தது. மாறாக ஒரு கோலை மட்டுமே அந்த அணி வாங்கியிருந்தது.

இந்த நிலையில் பலம் கொண்ட இரு அணிகளாக நாக்-அவுட் சுற்றில் குரோஷியாவும், டென்மார்க்கும் மோதவுள்ளன. இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்றாலும் டென்மார்க்கை விட குரோஷியா ஒரு படி மேலேயிருக்கிறது. எனவே அந்த அணியைச் சமாளிப்பது டென்மார்க் அணிக்கு கடினமானசவாலாக இருக்கும்.

குரோஷியா அணியின் கேப்ட னான லூகா மோட்ரிக், நட்சத்திர வீரர் இவான் ராகிடிக் பலம் வாய்ந்த வீரர்களாக எதிரணியை களத்தில் மிரட்டுபவர்களாக உள்ளனர். ஸ்பெயின் வீரர் ஆந்த்ரே இனியெஸ்டாவுடன் பார்சிலோனா கால்பந்து கிளப்புக்காக நீண்ட காலம் விளையாடிய அனுபவம் உள்ளவர் லூகா மோட்ரிக்.

கிளப் போட்டிகளுக்காக லூகா மோட்ரிக் விளையாடிய அனுபவம் இந்த நாக்-அவுட் சுற்றில் குரோஷி யாவின் வெற்றிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல் மாட்ரிக் அணிக்காக 4 முறை கோப்பையைப் பெற்றுத் தந்தவர் மோட்ரிக். மேலும் லாலிகா, கோபா டெல் ரே கோப்பையையும் கைப்பற்றித் தந்தவர்தான் மோட்ரிக்.

அதேபோல மோட்ரிக்குக்கு நிகரான அனுபவம் வாய்ந்தவர் ராகிடிக். அவரது திறமையும் இந்த நாக்-அவுட் சுற்றில் பளிச் சிடக்கூடும். அதே நேரத்தில் டென்மார்க் அணியானது மிட்பீல்டர் கிறிஸ் டியன் எரிக்ஸனை நம்பி களம் காண்கிறது. களத்தில் அவரது புயல்வேக பாஸ்கள் எதிரணிக்கு நிச்சயம் அச்சுறுத்தலைத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் கிடை யாது.

இதுகுறித்து எரிக்சன் கூறும் போது, “மோட்ரிக் சிறந்த வீரர்தான். அவரைக் கையாள எங்களுக்குத் தெரியும். அவரை விட மோசமான வீரர் நான் இல்லை. ரியல் மாட்ரிட் அணிக்காக அவர் விளையாடும்போது நான் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு சிறந்த வீரர். கிளப்புக்காக ஆடும் போதே அவர் சிறப்பாக ஆடுவார். தற்போது அவர் நாட்டுக்காக விளையாடும்போது அவரது ஆட்டத்தில் அனல் பறக்கும்.

எங்கள் அணி வீரர்களும் நாக்-அவுட் போட்டிக்காகத் தயாராகி வருகின்றனர். பலத்தில் நாங்கள் ஒன்றும் குரோஷியாவுக்கு சளைத் தவர்கள் அல்ல” என்றார்.

இதுவரை சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் குரோஷியா, டென்மார்க் அணிகள் 2 முறை மோதியுள்ளன. இதில் குரோஷியா ஒருமுறையும், டென்மார்க் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1999-ல் நடைபெற்ற ஆட்டத்தில் டென்மார்க் 1-0 என்ற கணக்கில் குரோஷியாவை வென்றிருந்தது. 2004-ல் நடைபெற்ற ஆட்டத்தில் குரோஷியா 2-0 என டென் மார்க்கைத் தோற்கடித்துள்ளது.

இதுவரை 2 அணிகளுமே உல கக் கோப்பையை வென்றதில்லை. 1998-ல் குரோஷியா 3-வது இடத்தைப் பிடித்ததே உலகக் கோப்பையில் அதன் அதிகபட்ச வெற்றியாகும். அதேபோல டென்மார்க் அணியானது 1998-ல் கால் இறுதி வரை முன்னேறியிருந்தது அதிகபட்ச வெற்றியாகும். கால் இறுதியில் 1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸிடம் தோல்வி கண்டு வெளியேறியது டென்மார்க்.

http://tamil.thehindu.com/sports/article24303509.ece

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை வெளியேற்றத்துக்குப் பிறகு என்ன? - வாய்திறவா கிறிஸ்டியானோ ரொனால்டோ

 

 
ronaldojpg

உலகக்கோப்பைக் கனவு இன்னொருமுறை சிதைய தொடர்ந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுகலுக்கு ஆடுவாரா அல்லது கிளப் கால்பந்துடன் நிறுத்திக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐரோப்பிய சாம்பியன்களான போர்ச்சுகல் ரொனால்டோவின் ஹாட்ரிக்குடன் ஸ்பெயினுக்கு எதிராக 3-3 டிரா மூலம் ஆழமாகச் செல்லும் அணியாக தெரிந்தது, ஆனால் ரொனால்டோ தவிர அங்கு வேறு எவரும் சிறப்பாக ஆடுவது போல் தெரியவில்லை. இந்நிலையில் நேற்று நாக் அவுட் சுற்றில் உருகுவேயின் தடுப்பு வியூகத்தை உடைக்க முடியாமல் நாக்குத் தள்ளி, கவானியின் இரு அற்புத கோல்களினால் வெளியேறியது.

 

2022-ல் அடுத்த உலகக்கோப்பையின் போது ரொனால்டோவுக்கு வயது 38 ஆகியிருக்கும்.

இந்நிலையில் ரொனால்டோ கூறியிருப்பதாவது:

எதிர்காலம் பற்றி பேசுவதற்கு இதுவல்ல நேரம். இது மட்டுமல்ல வீர்ர்கள், பயிற்சியாளர் என்று யாரைப்பற்றியும் எதுவும் கூற இது தருணமல்ல.

ஆனால் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக் போர்ச்சுகல் தொடர்ந்து திகழும் என்று நான் உறுதியளிக்கிறேன். இளமையும் லட்சியமும் கொண்ட அணி நம்மிடம் உள்ளது” என்று ரத்தினச் சுருக்கமாகக் கூறினார்.

2006 முதல் பார்த்தால் ரொனால்டோ, மெஸ்ஸி இருவருமே உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றில் கோல் அடித்ததில்லை என்பதே கசப்பான உண்மை.

ரொனால்டோ பற்றி உருகுவே கோச் ஆஸ்கார் தபரேஸ் கூறும்போது, “ரொனால்டோ ஒரு தனித்துவ வீரர். அவர் அவர்களது தலைவர், கேப்டன், ஆனால் எங்களுக்கு எதிராக அவர் வெற்றியடையாமல் இருக்க கவனம் செலுத்தினோம், ஆனாலும் அது கடினம்தான்” என்றார்

போர்ச்சுகல் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் கூறும்போது, “அவர் தொடர்ந்து போர்ச்சுகலுக்காக ஆடுவார் என்று நிச்சயம் நம்புகிறேன், கால்பந்தாட்டத்துக்குக் கொடுக்க அவரிடம் இன்னும் நிறைய உள்ளது

இன்னொரு தொடர் செப்டம்பரில் தொடங்குகிறது அதில் ரொனால்டோ இளம் வீரர்கள் வளர உதவுவார், இளம் வீரர்கள் நிறைய உள்ளனர், அவர்களுக்கு இவரைப் போன்ற கேப்டன் தேவை” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article24303990.ece

Link to comment
Share on other sites

மெஸ்ஸி, அர்ஜெண்டினாவை இருளுக்குள் தள்ளிய பிரான்சின் கிலியான் பாப்பே: பிரேசில் ரொனால்டோவுடன் ஒப்பிடப்படும் ‘ரைஸிங் ஸ்டார்’- பீலே சாதனை சமன்

 

 
kiliyan

பிரான்ஸின் உயரும் நட்சத்திரம் கிலியான் பாப்பே. | ஏ.எப்.பி.

அர்ஜெண்டினா அணி நேற்று உலகக்கோப்பைக் கால்பந்திலிருந்து வெளியேற பிரதான காரணமாக அமைந்த பிரான்ஸ் வீரர், 19 வயது இளம்புலி கிலியான் பாப்பே 2 கோல்களையும் முதல் கோலுக்கு மின்னல் காரணமாகவும் அமைந்தவர்.

ஆட்டம் தொடங்கி 13ம் நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கிரீஸ்மென் முதல் கோலை பெனால்டி மூலம் அடித்து முன்னிலை கொடுத்தார், ஆனால் அதற்கு சில விநாடிகளுக்கு முன் நடந்தது உலக நட்சத்திர வீரர்களான பீலே, மாரடோனா, ரொமாரியோ, பிரேசில் ரொனால்டோ, பேக்கியோ உள்ளிட்ட சில பேர்களுக்குத்தான் கைகூடும், ஏனெனில் அவ்வளவு வேகம்.

   
 

பந்தை பிரான்ஸ் பகுதிக்குள் அர்ஜெண்டினா உடைமையை இழக்க பந்தை ஒரு அழகிய கிராஸ் மூலம் பெற்றார் கிலியான் பாப்பே, ஆனால் அதன் பிறகு 75 யார்டுகள் பந்தை அவர் எடுத்து சென்ற மின்னல் வேகம் நம்ப முடியாதது, அர்ஜெண்டினாவின் அனைத்து வீரர்களும் அவர் பின்னால் வரிசை கட்டி ஓடிவரச் செய்தார், பனேகா, தாக்லியாபிகோ இருவரும் தங்களுக்குள்ளேயே குழப்பத்தில் ஆழ்ந்ததால் வந்த விளைவு, பந்தை எடுத்த கிலியான் பாப்பே 100 மீ உலக சாம்பியன் உசைன் போல்ட்டானார். அவரைப் பிடிக்க வழியே இல்லை.

rojojpg

75 அடி மின்னல் வேகப்பாய்ச்சலுக்குப் பிறகு கோல் முனையில் கிலியான் பாப்பேவை ஃபவுல் செய்த ரோஜோ.   -  படம். | ஏ.பி.

 

வலது புறம் பந்தை தள்ளிச் சென்றார். ரோஜோவிடமிருந்து விலகிப் பந்தை நகர்த்தினார், ஆனால் ஓபன் கோல், ஆளில்லை வேறு வழியில்லை, ரோஜோ தியாகம்தான் செய்தார், வேண்டுமென்றேதான் மின்னல் வேக பாப்பேவை கீழே தள்ளினார், பெனால்டி வரும் என்றேதான் தள்ளினார், பெனால்டி கொடுக்கப்பட்டது. ஆனால் பாப்பேவின் அந்த வேகம் நீண்ட நாள் கழித்து தங்கள் பகுதியிலிருந்து பந்தை பரபரவென எடுத்துச் சென்று எதிரணியினரின் 9-10 வீரர்களை தன் பின்னால் பரபரக்க ஓடிவரச் செய்ததைப் பார்க்க முடிந்தது, பெனால்டி பகுதிக்குள் நுழைந்து கோல் அடிக்க வேண்டியதுதான் பாக்கி ரோஜோ அவரை கீழே தள்ளினார், பெனால்டி கிக்கில் கிரீஸ்மென் கோல் அடித்தார். ஒருவேளை அவர் போன வேகத்துக்கு அவரே ஷாட் அடித்திருந்தால் கூட வேறு மாதிரி நிகழ்ந்திருக்கலாம் ஆனால் ஃபவுல் செய்யும் பதற்றத்தை ஏற்படுத்தியதுதான் கிலியான் பாப்பேவின் ஆட்டத்திறன்.

அதன் பிறகு அர்ஜெண்டினாவின் ஏஞ்செல் டி மரியா அடித்த கோல் உண்மையில் நம்ப முடியாதது. மெஸ்ஸிக்கு கார்னர் வாய்ப்புக் கிடைக்க அதனை பவார்ட் தட்டி விடுகிறார் உடனே இடது புறம் த்ரோ வாய்ப்புக் கிடைக்கிறது. அதனை ஒத்தைக்கு ஒத்தை ஆடி பிறகு டிமரியாவிடம் கொடுக்கின்றனர் அங்கு அவரை மறிக்க ஆளில்லை, பந்து வந்ததும் எல்லோரும் பாஸ்தான் செய்வார் என்று எதிர்பார்த்திருப்பார்கள், ஏனெனில் அந்தத் தூரத்திலிருந்து கோல் முயற்சி செய்தால் அது வீணே என்று நினைத்திருப்பார்கள் ஆனால் அவர் இடது காலால் அடித்தார் பாருங்கள் ஒரு அடி கோல்வலைக்கு மேல் மூலையில் போய் இடித்தது அனைவரும் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. 48வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் தாக்குதலில் மெர்காடோ அழகாக பந்திற்கு திசை கொடுத்து கோலாக மாற்ற 2-1 என்று முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் பிரான்ஸ் இடது புறம் தாக்குதல் தொடுக்க கிராஸ் ஒன்று பிரான்ஸ் வீரர் பேவர்டிடம் வர இது வரை கோல் அடிக்காத அவர் வலது காலால் அற்புதமான கோலை அடித்து சமன் செய்தார் 2-2.

கிலியான் பாப்பேவின் கடைசி 2 கோல்கள்:

ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் பிரான்ஸின் போக்பா ஒரு பாஸை ஹெர்னாண்டஸுக்கு அடிக்க, அவர் அடித்த கிராஸை கையாள ஆளில்லை. பந்து கிலியான் பாப்பேவுக்கு வருகிறது, அவர் பந்தை சிறிது எடுத்துச் சென்று தடைகளைத் தாண்டி தாழ்வாக அர்மானியைத் தாண்டி அடித்தார் பிரான்ஸ் 3-0.

bapejpg

பாப்பேயின் 4வது கோல்

 

மீண்டும் 68வது நிமிடத்தில் அர்ஜெண்டினா நடுக்கள வீரர்கள் நிறைய இடைவெளி கொடுக்க பிரான்ஸ் பாஸ் எளிதானது. பந்து ஜிரவ்டுக்கு வருகிறது, அர்ஜெண்டினா தடுப்பு இருந்தும் இவருக்கு கொஞ்சம் இடம் கிடைத்தது, கிலியான் பாப்பேவை மறிக்க அர்ஜெண்டினா தவறியது, பாஸ் பாப்பேவிடம் வர அவர் ஓடிகீடியெல்லாம் அடிக்க வேண்டிய தேவையிருக்கவில்லை, பந்தை கண நேரத்தில் கீழ் வலது மூலைக்கு வலைக்குள் தள்ளினார். அனைவரும் வியந்தனர். காரணம் அவருக்கு வயது 19தான், ஆனால் இந்த கோலை அர்மான் தடுத்திருக்கலாம். இந்த 2 கோல்களும் அர்ஜெண்டினாவை வெளியேற்றின.

கிலியான் பாப்பேவுக்குப் புகழாரம்:

கேரி நெவில் கூறும்போது, “அடுத்த 3,4,5 ஆண்டுகளில் கிலியான் எந்த உயரத்தில் இருப்பார் என்றுதான் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். இது உண்மையில் அவர் கரியரில் ஒரு முக்கியமான தருணமாகும்.

லியோனல் மெஸ்ஸியின் அருகில் ஆடுகிறார், அதில் மெஸ்ஸியை ஓரங்கட்டிய ஆட்டத்தை ஆடினார். அன்று ஸ்பெயினுக்கு எதிராக கிறிஸ்டியானோ ரொனால்டோ என்ன செய்தாரோ அதை கிலியான் பாப்பே இன்று செய்தார்.

1958-ல் டீன் ஏஜ் வீரராக ஸ்வீடனுக்கு எதிராக உலகக்கோப்பையில் பீலே இரு கோல்களை அடித்தார். அந்தச் சாதனையை 60 ஆண்டுகளில் சமன் செய்தார் டீன் ஏஜ் வீரர் கிலியான் பாப்பே.

ஆனால் அவர் மகா ஒப்பீடுகளை அவர் கூச்சத்துடன் மறுத்தார், “எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, பீலே போன்றோருடன் ஒப்பிடுவது மயக்குவதாக உள்ளது. ஆனால் அவர் வேறொரு லெவல். இருந்தாலும் சாதனைப் பட்டியலில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார் பாப்பே.

டெஸ்சாம்ப் புகழ்ந்து கூறுகையில், “பிரேசில் ரொனால்டோ ஒரு முன்கள வீரர் அவர் மிகவும் விரைவானவர், ஆனால் கிலியான் அவரை விடவும் விரைவானவர். ஆனால் ரொனால்டோ ஒரு உலக சாம்பியன், பாப்பேவுக்கு வயது 19தான். அவர் பெரிய முன்னேற்றம் காண்பார்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article24304132.ece

Link to comment
Share on other sites

உலகக் கிண்ணம்: குழு ஈ
 
 

- ச. விமல்

image_69650f0682.jpg

உலகின் கால்பந்து ஜாம்பவான் பிரேசில் அணி இடம்பிடித்துள்ள குழு E. எனவே இந்தக் குழு தானாகவே முக்கியம் பெறும். பிரேசில் அணியுடன் ஒப்பிடும் போது இந்தக் குழுவில் உள்ள மற்றைய அணிகள் பலம் குறைந்தவை. ஆனால் சுவிற்சலாந்து அணி தாங்கள் பிரேசில் அணிக்கு ஈடானவர்கள் என போட்டியினை சமன் செய்ததன் மூலம் நிரூபித்தார்கள். பிரேசில் அணி இம்முறை உலகக்கிண்ணத்தை வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமுள்ள  அணியாக காணபப்டுகிறது. இந்த நிலையில் அவர்களின் சமநிலை முடிவு சிறிய பின்னடைவை ஏற்படுத்தியது. ஜேர்மனி அணி தடுமாறிய போது அவர்கள் எவ்வாறாவது இரண்டாமிடத்தை பிடிப்பார்கள். இரண்டாம் சுற்றில் பிரேசில் மற்றும் ஜேர்மனி அணிகளுக்கிடையிலான போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அது இல்லாமல் போயுள்ளது. பிரேசில் அணி குழு நிலையில் முதலிடத்தை பெற்றுள்ள போதும் அவர்களின் திறமைக்கு இலகுவாக கிடைத்த முதலிடமாக இதனை கருத முடியாது. கொஸ்டரிகா அணியுடன் நிச்சயமான சமநிலை முடிவென இருக்க போட்டி நிறைவடைய சில நிமிடங்கள் மாத்திரம் இருந்த வேளையில் இரண்டு கோல்களை அடுத்தடுத்து அடித்து தப்பித்துக்கொண்டார்கள். எனவே அவர்கள் மீது அழுத்தமில்லாமல் இல்லை. சேர்பியா அணியுடன் ஓரளவு இலகுவான வெற்றி கிடைத்தது. 

உலகின் சிறந்த வீரர்களில் சம காலத்தில் மூன்றாமிடத்திலுள்ள நெய்மர் பிரேசில் அணிக்காக விளையாடுகிறார். இது அவர்களுக்கு பலம். பிரேசில் அணி தென்னமெரிக்க அணி. இரண்டாம் சுற்றில் மெக்சிகோ அணியினை சந்திக்கப்போகிறர்கள். மெக்சிகோ அணி மத்திய அமெரிக்க அணி. அமெரிக்க கண்ட அணிகளுக்கான மோதலாக இது அமையப்போகிறது. மெக்சிகோ அணியும் இம்முறை பலமாக காணப்படுவதனால் பிரேசில் அணி இலகுவாக இந்தப் போட்டியில் வெல்ல முடியாது. விறுவிறுப்பான போட்டியினை எதிர்பார்க்க முடியும். ஜேர்மனி அணி வெளியேறியதனை தொடர்ந்து இம்முறை உலகக்கிண்ணத்தை வெல்லும் முதல் வாய்ப்பு பிரேசில் அணிக்கு இருப்பதாக பந்தயக்காரர்கள் தங்கள் எதிர்வுகூறல்களை வெளியிட்டுள்ளனர். அது சாத்தியமா இல்லையா என்பதனை இந்தப் போட்டியின் மூலம் தீர்மானிக்க முடியும்.

இந்தக் குழுவிலிருந்து இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகிய மற்றைய அணி சுவிற்சலாந்து. இம்முறை பலமான அணியாகவே சுவிற்சலாந்து அணி காணப்படுகிறது என்பதனை அடுத்த சுற்றுக்கு தெரிவானதன் மூலம் நிரூபித்துள்ளார்கள். பிரேசில் அணியுடன் சமநிலை முடிவினை பெற்றதன் மூலம் அவர்களின் பலம் தெரியவந்தது. ஆனால் கொஸ்டரிக்கா அணியுடன் இறுதிப் போட்டியில் சமநிலையில்  நிறைவு செய்தமையின் மூலம் தடுமாறுகிறார்களோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை.   அடுத்த சுற்று வாய்ப்புகளை ஏற்கனவே ஓரளவு இலகுபடுத்தி வைத்திருந்தமையினால் இரண்டாம் சுற்றுக்கு இலகுவாக தெரிவானார்கள். ஆனால் தற்போது சுவீடன் அணியினை சந்திக்க போகின்றார்கள். சுவீடன் அணி ஜேர்மனி அணியினை வென்று பலமான நிலையில் அடுத்த சுற்றுக்கு வந்துள்ளார்கள். எனவே சுவிற்சலாந்து அணி காலிறுதிப் போட்டிகளுக்கு செல்ல மிகப்பெரியளவில் போராட வேண்டும். 1954 ஆம் ஆண்டுக்கு பின்னர் அவர்கள் காலிறுதிப் போட்டிகளுக்கு தெரிவானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் சுற்றின் மூன்றாம் கட்டப்போட்டிகள் ஆரம்பிக்கும் வேளையில் பிரேசில், சுவிற்சலாந்து மற்றும் சேர்பியா அணிகளுக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையிலேயே போட்டிகள் ஆரம்பித்தன. முதற் போட்டியில் சேர்பியா அணி கொஸ்டரிக்கா அணியினை வெற்றி பெற்றதன் மூலம் தமக்கான வாய்ப்பினை உருவாக்கியவர்கள் சுவிற்சலாந்து  அணியுடன் தோல்வியடைந்ததன் மூலம் வாய்ப்புகள் குறைவு என்ற நிலையை உருவாக்கினார்கள். ஏனெனில் பிரேசில் அணியினை வெற்றி பெறுவது கடினமானது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. உலககிண்ண தொடருக்கு வருவதும் போவதுமா உள்ள இவர்கள் 1998 ஆம் ஆண்டுக்கு பின்னர் இதுவரை இரண்டாம் சுற்றுக்கு தெரிவானதில்லை.

2014 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரின் காலிறுதிப்போட்டிகளுக்கு தெரிவான கொஸ்டரிக்கா அணி இம்முறை முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. முதலிரு போட்டிகளிலும் தோல்விகளை சந்தித்ததன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தவர்கள், சுவிற்சலாந்து அணியுடன் 2-2 என்ற சமநிலை முடிவினை பெற்றுக்கொண்டார்கள். ஒரு ஆறுதல் முடிவுடன் நாடு திரும்பினாலும், கடந்த உலகக்கிண்ண தொடரில் காலிறுதி வரை முன்னேறிய அணி குறைந்தது இரண்டாம் சுற்றுக்கு கூட தெரியவாகவில்லை என்பது அவர்களுக்கு பின்னடைவே.

புள்ளி விபரம்

1 பிரேசில்                                      3              2              1              0              5              1              4              7

2 சுவிட்சர்லாந்து                    3              1              2              0              5              4              1              5

3 செர்பியா                                   3              1              0              2              2              4              -2            3

4 கொஸ்டரிக்கா                    3              0              1              2              2              5              -3            1

(அணி, போட்டிகள், வெற்றி,சமநிலை, தோல்வி, அடித்த கோல்கள், வாங்கிய கோல்கள், கோல் வித்தியாசம், புள்ளிகள்)

 

போட்டி முடிவுகள்

கொஸ்டரிக்கா                        vs            செர்பியா                      0 - 1

பிரேசில்                                         Vs           சுவிட்சர்லாந்து       1 - 1

பிரேசில்                                         Vs           கொஸ்டரிக்கா        2 - 0

செர்பியா                                      Vs           பிரேசில்                        0 - 2

சுவிட்சர்லாந்து                       Vs           கொஸ்டரிக்கா       2 – 2

இரண்டாம் சுற்றுப் போட்டிகள்

ஜூலை 02 - 19.30, பிரேசில் எதிர் மெக்சிகோ

ஜூலை 03 - 19.30, சுவீடன் எதிர் சுவிற்சலாந்து

  •  

http://www.tamilmirror.lk/sports-articles/உலகக்-கிண்ணம்-குழு-ஈ/139-218385

Link to comment
Share on other sites

உலக கோப்பை கால்பந்து - நாக் அவுட் சுற்றில் ரஷியா 4-3 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது

 
அ-அ+

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் ரஷியா அணி 4-3 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. #WorldCup2018 #SPARUS #SpainvRussia

 
 
 
 
உலக கோப்பை கால்பந்து - நாக் அவுட் சுற்றில் ரஷியா 4-3 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது
 
ரஷியாவில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் ரஷியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடினர். ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் செர்கய் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

201807012218085180_1_foot-3 - Copy._L_styvpf.jpg

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் ரஷியா வீரர் ஏரியம் டியுபா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதிய்ல் இரு அணிகளும்  1-1 என சமநிலை வகித்தன.
 
கூடுதலாக வழங்கப்பட்ட முதல் 15 நிமிடங்களில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்காததால் மறுபடியும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்பொழுது மழை பெய்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியாக, பெனால்டி ஷூட் முறை நடத்தப்பட்டது. முதலில் ஸ்பெயின் ஒரு கோல் அடித்தது.

அதற்கு பதிலடியாக ரஷியாவும் ஒரு கோல் அடித்தது. மறுபடியும் ஸ்பெயின் ஒரு கோல் அடிக்க 2-1 என ஆனது. ரஷியா மறுபடியும் கோல் அடிக்க 2-2 என சமனானது.

அடுத்த வாய்ப்பை ஸ்பெயின் அடித்த கோலை கோ கீப்பர் தடுத்தார். ரஷியா தனது அடுத்த வாய்ப்பை கோல் அடித்ததால் 2-3 என்ற கணக்கில் முன்னேறியது. ஸ்பெயின் ஒரு கோல் அடிக்க 3-3 என சமனானது.

அடுத்து கோல் போட்டதால்  ரஷியா 3-4 என முன்னேறியது. இறுதியாக ஸ்பெயின் கோல் தடுக்கப்பட்டதால் 4-3 என்ற கணக்கில் ரஷியா வென்றது. #WorldCup #SPARUS #SpainvRussia #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA

https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/01221808/1173771/russia-beat-spain-43-in-world-cup-football.vpf

Link to comment
Share on other sites

 

Quote

12-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் செர்கய் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை பிறேசிலைத் தவிர  மற்ற நட்ச்சத்திர நாடுகள் எல்லாம் வெளியேறி விட்டன.அதுவும் ஒரு விததத்தில் நல்லது தான்.எவளவு காலத்திற்குததான் குண்டுச்சட்டிக்குள் பந்தை உருட்டுவது.இந்த முறை உருகவே வந்தாலும் வரும் போல: உள்ளது.ஏதாவது ஒரு புது நாடு வந்தால் நல்லது.

Link to comment
Share on other sites

உலக கோப்பை நாக் அவுட் சுற்றில் டென்மார்க்கை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரோஷியா காலிறுதியில் நுழைந்தது

 

உலக கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் டென்மார்க் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரோஷியா காலிறுதியில் நுழைந்தது. #WorldCup2018 #CRODEN #CroatiavDenmark

 
 
உலக கோப்பை நாக் அவுட் சுற்றில் டென்மார்க்கை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரோஷியா காலிறுதியில் நுழைந்தது
 
உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் குரோஷியா - டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
 
ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்தில் டென்மார்க் அணியின்  மதியாஸ் ஜோர்ஜென்சன் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வலு சேர்த்தார்.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் குரோஷியா அணி வீரர் மரியோ மண்டூகிக் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலை அடைந்தது. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் குரோஷியா - டென்மார்க் அணிகள் 1-1 என சமனிலை வகித்தன.
 
ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
 
கூடுதலாக வழங்கப்பட்ட முதல் 15 நிமிடங்களில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்காததால் மறுபடியும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இறுதியில், கிடைத்த பெனால்டி வாய்ப்பை குரோஷியா அணி பயன்படுத்தவில்லை. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
 
201807020227258740_1_cro-3._L_styvpf.jpg
 
இறுதியாக, பெனால்டி ஷூட் முறை நடத்தப்பட்டது. இதில் டென்மார்க் அடித்த முதல் வாய்ப்பை கோலை குரோஷியா கோல் கீப்பர் தடுத்தார். அடுத்து குரோஷியா அடித்த கோலையும் டென்மார்க் கோல் கீப்பர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
தொடர்ந்து, இரண்டாவது வாய்ப்பை டென்மார்க் கோலாக மாற்றியது. இதனால் 1-0 என முன்னிலை வகித்தது. குரோஷியா இரண்டாவது வாய்ப்பை கோலாக் மாற்றியதால் 1-1 என சமநிலை அடைந்தது.
 
டென்மார்க் மூன்றாவது வாய்ப்பை கோலாக மாற்றியதால் 2-1 என முன்னிலை பெற்றது. குரோஷியாவும் அடுத்த வாய்ப்பை கோலாக மாற்றியது. இதனால் இரு அணிகளும் 2-2 என சமநிலை பெற்றன.
 
டென்மார்க் அணியின் 4வது வாய்ப்பை குரோஷிய அணி கோல் கீப்பர் அபாரமாக தடுத்தார்.  குரோஷியா அணியின் 4வது வாய்ப்பையும் கோல் கீப்பர் தடுத்ததால் சமநிலை நீடித்தது.
 
டென்மார்க் அணியின் கடைசி வாய்ப்பை குரோஷியா கீப்பர் தடுத்து விட்டார். இதனால், குரோஷியா அணி தனது கடைசி வாய்ப்பை கோலாக மாற்றி 3-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது. #WorldCup #CRODEN #CroatiavDenmark #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA

https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/02022726/1173787/croatia-beat-denmark-32-in-world-cup-football.vpf

Link to comment
Share on other sites

உலக கோப்பை கால்பந்து காலிறுதிக்குள் நுழைந்த ரஷியா அணிக்கு அதிபர் புதின் பாராட்டு

 
அ-அ+

உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ரஷிய வீரர்களுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார். #WorldCup2018 #SPARUS #SpainvRussia

 
 
 
 
உலக கோப்பை கால்பந்து காலிறுதிக்குள் நுழைந்த ரஷியா அணிக்கு அதிபர் புதின் பாராட்டு
 
மாஸ்கோ:
 
ரஷியாவில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் மற்றும் ரஷியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் செர்கய் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
 
இதற்கு பதிலடியாக ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் ரஷியா வீரர் ஏரியம் டியுபா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.
  
கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆட்டத்தின் இடையே மழை பெய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
201807020301214218_1_russia-1._L_styvpf.jpg
 
இறுதியாக, பெனால்டி ஷூட் முறை நடத்தப்பட்டது. இதில் அபாரமாக செயல்பட்ட ரஷியா அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.
 
இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ரஷிய வீரர்களுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்காவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்பெயின் - ரஷியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின் ஆரம்பம் முதல் முடிவு வரை அதிபர் புதின் கண்டுகளித்தார். சிறப்பாக விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என கூறியுள்ளார். #WorldCup #SPARUS #SpainvRussia #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/02030121/1173788/Putin-congratulates-Russia-for-World-Cup-win-over.vpf

Link to comment
Share on other sites

உலக கோப்பை கால்பந்து - மெக்சிகோவின் தடையை தகர்க்கும் முனைப்பில் பிரேசில்

 
அ-அ+

உலக கோப்பை கால்பந்து 'நாக்அவுட்' சுற்றில் பலம் வாய்ந்த முன்னாள் சாம்பியனான பிரேசில் அணியை, மெக்சிகோ இன்று எதிர்கொள்கிறது. #WorldCup2018

 
 
 
 
உலக கோப்பை கால்பந்து - மெக்சிகோவின் தடையை தகர்க்கும் முனைப்பில் பிரேசில்
 
உலக கோப்பை கால்பந்து போட்டியில் பட்டம் வெல்லும் வாய்ப்பு உள்ள அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி, மெக்சிகோவை சமரா ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) சந்திக்கிறது.

லீக் சுற்றில் சுவிட்சர்லாந்துடன் டிரா (1-1) கண்ட பிரேசில் அணி, அதன் பிறகு கோஸ்டாரிகா (2-0), செர்பியா (2-0) அணிகளை தோற்கடித்து தனது பிரிவில் முதலிடத்தை பிடித்தது. நெய்மார், பிலிப் காட்டினோ, கேப்டன் தியாகோ சில்வா, கேப்ரியல் ஜீசஸ் உள்ளிட்டோர் பிரேசிலை தாங்கிப்பிடிக்கும் நட்சத்திர வீரர்களாக மின்னுகிறார்கள். இதில் நெய்மார், காட்டினோ ஏற்கனவே தலா ஒரு மஞ்சள் அட்டை பெற்றிருப்பதால் இன்னொரு மஞ்சள் அட்டை வாங்கினால் அடுத்த ஆட்டத்தில் ஆட முடியாத நிலை ஏற்படும். அதனால் இன்றைய ஆட்டத்தில் அவர்கள் மிகுந்த கவனமுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.

கணிக்க முடியாத அணிகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் மெக்சிகோ லீக் சுற்றில் உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பேரதிர்ச்சி அளித்தது. தென்கொரியாவையும் (2-1) பதம் பார்த்த மெக்சிகோ கடைசி லீக்கில் சுவீடனுடன் (0-3) தோல்வியை தழுவியது. ஜெர்மனியை போன்று பிரேசிலின் கனவையும் சிதறடிக்கும் முனைப்புடன் மெக்சிகோ அணியினர் வியூகங்களை வகுத்துள்ளனர்.

கோல் கீப்பர் குல்லர்மோ ஒச்சாவ் மற்றும் மெக்சிகோ அணிக்காக சர்வதேச போட்டிகளில் 49 கோல்கள் அடித்துள்ள அனுபவம் வாய்ந்த ஜாவியர் ஹெர்னாண்டஸ் ஆகியோர் அந்த அணியின் நம்பிக்கை தூண்கள் ஆவர்.

2014-ம் ஆண்டு உலக கோப்பையில் பிரேசிலுக்கு எதிரான லீக்கில் குல்லர்மோ ஒச்சாவ் ஒரு கோல் கூட அடிக்க விடாமல் அந்த ஆட்டத்தை கோல் இன்றி டிராவுக்கு கொண்டு வந்தது நினைவு கூரத்தக்க விஷயமாகும். எல்லா வகையிலும் மெக்சிகோ முட்டுக்கட்டை போடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் வெற்றி வாய்ப்பில் பிரேசிலின் கையே சற்று ஓங்கி நிற்கிறது. #WorldCup2018 #WorldCup

https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/02074454/1173804/Brazil-vs-Mexico-collides-in-World-Cup-2018.vpf

Link to comment
Share on other sites

முதல் 4 நிமிடங்களுக்குள் இரு அணிகளும் கோல்; மோட்ரிச் விட்ட பெனால்டி வாய்ப்பு: டென்மார்க்கை பெனால்டியில் வீழ்த்தி காலிறுதியில் குரேஷியா

 

 
croatiajpg

குரேஷிய கோல் கீப்பர் சுபாசிச் வெற்றியை கொண்டாடுகிறார். | ஏ.எப்.பி.

உலகக்கோப்பைக் கால்பந்து 2018-ன் இறுதி 16 சுற்றில் நேற்று நடைபெற்ற போட்டியில் டென்மார்க் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் குரேஷியா அணி வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

முதல் 4 நிமிடங்களுக்குள்ளேயே இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்துச் சமன் செய்திருந்தன, அதன் பிறகு கோல் இல்லை, இதனையடுத்து கூடுதல் நேரம் தாண்டி பெனால்டி ஷூட் அவுட் முறைக்குச் சென்றது, இதில் குரேஷியா 3-2 என்று வெற்றி பெற்றது.

 

குரேஷிய அணியின் வெற்றி ஹீரோ கோல் கீப்பர் சுபாசிச்தான். பெனால்டி ஷூட் அவுட்டில் டென்மார்க்கை வீட்டுக்கு அனுப்பினார்.

டென்மார்க்குக்காக மத்தியாஸ் ஸாங்கா ஜோர்கென்சன் 1வது நிமிடத்தில் முதல் கோலை அடிக்க, 4வது நிமிடத்தில் குரேஷிய வீரர் மரியோ மண்ட்சூகிக் பதிலடி கொடுத்துச் சமன் செய்தார், பரபரத் தொடக்கம் இறுதி வரைக் காக்கப்பட்டதால் பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றது.

உ.கோப்பையின் அதிவிரைவு கோல்:

ஆட்டத்தின் 57வது விநாடியில் லாங் த்ரோ ஒன்றை குரேஷியா தடுக்கத் தவறியது, அந்த வாய்ப்பை டென்மார்க் வீரர் ஜோர்கென்சன் பற்றி கோலாக்கினார். பந்து முதலில் குரேஷியா கோல் கீப்பர் டேனியல் சுபாசிச்சினால் கோல் போஸ்டுக்குத் திருப்பி விடப்பட்டது, பிறகு பந்து கோட்டைக் கடந்து கோல் ஆனது. 2014 முதல். இதுதான் அதிவிரைவு கோல் என்ற பெருமையைத் தட்டிச் சென்றது.

இது நடந்து அடுத்த 3 நிமிடங்களில் டென்மார்க் பாக்ஸில் அசையாமல் இருந்த ஆண்ட்ரியாஸ் கிறிஸ்டென்சென்னிடமிருந்து எதேச்சையாகப் பந்து பட்டு வர குரேஷியாவின் மண்டுகிச் கோலாக மாற்றி சமன் செய்தார்.

இரு கோல்கள் அடித்தாலும் இரு அணிகளின் உத்வேகம் குறையவில்லை, உடனே பாக்சிற்குள் 5 வீரர்களை அழைத்துத் தடுப்பாட்டம் ஆடவில்லை. இரு அணியினரும் வீர்ர்களைத் தொடர்ந்து முன்னணி நோக்கி முடுக்கியபடியே இருந்தனர்.

27வது நிமிடத்தில் டென்மார்க்குக்கு முன்னிலை பெற அருமையான வாய்ப்புக் கிடைத்தது, அப்போது டென்மார்க் வீரர் ப்ராத்வெய்ட் முயற்சியை குரேஷியாவின் கோல் கீப்பர் சுபாசிச் தடுத்தார். இதற்கு 2 நிமிடங்கள் சென்று குரேஷியாவின் ராக்கிடிக் ஒரு நீண்ட தூர ஷாட்டை முயன்றார் ஆனால் இதனை டென்மார்க்கின் காஸ்பர் ஷ்மீச்செல் வெற்றிகரமாகத் தடுத்தார். பந்து மீண்டும் பெரிசிச்சிடம் வர முதல் உதை சரிவர அமையவில்லை, ஷ்மீச்செல் கடும் நெருக்கடி கொடுக்க ஷாட்டை பெரிசிச் வெளியே அடித்தார்.

இரு அணிகளும் கடும் சவால்களுடன் ஆட ஆட்டம் விறுவிறுப்பாக நகர்ந்தாலும் கோல் அடிக்க முடியவில்லை, முழு நேரத்திலும் 1-1 என்றே இருந்தது.

அதன் பிறகு கூடுதல் 30 நிமிட நேர ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மோட்ரிச் தனக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோட்டை விட்டார், டென்மார்க் கோல் கீப்பர் காஸ்பர் ஷ்மீச்செலுக்கு சற்று நெருக்கமாக அடித்து விட்டார் மோட்ரிச் அது தடுக்கப்பட்டது. யூரோ 2008-ல் காலிறுதியில் துருக்கியிடம் பெனால்டியில்தான் தோற்றது குரேஷியா.

subasic-afpjpg

சுபாசிச் தடுக்கும் பெனால்டி கிக்.| ஏ.எப்.பி.

 

பெனால்டி ஷூட் அவுட் பதற்றமாக அமைந்தது. டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் அடித்த பெனால்டி ஷூட் அவுட்டை குரேஷிய  கோல் கீப்பர் டேனியல் சுபாசிச் தட்டி விட்டார், அதே போல் லாஸே ஷோனி, மற்றும் நிகோலய் ஜோர்கென்சன் ஆகியோரது பெனால்டி ஷூட் அவுட்டையும் சுபாசிச் அபாரமாகத் தடுத்து ஹீரோவானார்.

டென்மார்க்கின் நுட்பமான கோல் கீப்பர் ஷ்மெய்ச்சல் குரேஷியாவின் மிலன் படேலியின் ஷாட்டைத் தடுத்தார், அதே போல் ஜோஸிப் பிவாரிச் ஷாட்டையும் வெற்றிகரமாகத் தடுத்தார். கடைசியில் குரேஷியாவின் இவான் ராக்கிடிக் ஷாட் கோலாக குரேஷியாவுக்கு மூச்சு வந்தது. காலிறுதியில் ரஷ்யாவைச் சந்திக்கிறது குரேஷியா.

ஆட்ட நேரத்தில் பெனால்டி கிக்கை கோலாக மாற்றத்தவறிய மோட்ரிக் பெனால்டி ஷூட் அவுட் ஷாட்டையும் திருப்திகரமாக அடிக்கவில்லை. டென்மார்க்கின் நுட்ப கோல் கீப்பர் ஷ்மெய்ச்சல் காலணி மீது பந்து பட்டது ஆனால் கோலைத் தடுக்க முடியவில்லை.

வெற்றிக் கொண்டாட்டத்தில் சுபாசிச்சை தூக்கிப் போட்டு விளையாடினர் குரேஷிய வீரர்கள் கீழேயும் போட்டனர். நல்ல வேளையாக அவர் காயமடையவில்லை.  ‘கோல்கீப்பர் சுபாசிச்தான் எங்கள் ஹீரோ’ என்றார் அணி மேலாளர் ஸ்லாட்கோ டேலிச்.

முதல் நிமிடங்களின் கோல்கள் தவிர ஆட்டம் இறுக்கமாகச் சென்றது, ஆனால் பரபரப்பு ஒன்றுமில்லை, ஸ்பெயின் ரஷ்யா ஆட்டம் போல் நல்ல விறுவிறுப்பு என்று கூற முடியாது. டென்மார்க் அணி அதன் அறியப்பட்ட ஆக்ரோஷத்துடன் ஆடவில்லை, ஆங்காங்கே சில மின்னல்கள் தோன்றின, மற்றபடி பெரிய அச்சுறுத்தல் இல்லை.

http://tamil.thehindu.com/sports/article24309611.ece

Link to comment
Share on other sites

நெய்மர், பிர்மிடோ அசத்தல் கோல் - மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பிரேசில்

 

ரஷியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணியை 2-0 என்ற கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. #BRAMEX #WorldCup #FIFAWC

 
 
நெய்மர், பிர்மிடோ அசத்தல் கோல் - மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பிரேசில்
 
மாஸ்கோ:
 
ரஷியாவில் நடந்து வரும் உலக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் இன்று மெக்சிகோ - பிரேசில் அணிகள் மோதின. பிரபல வீரர் நெய்மர் அங்கம் வகிக்கும் பிரேசில் அணி மீது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பார்ப்பை சிறிதும் நோகடிக்காமல் பிரேசில் அணி சிறப்பாக விளையாடியது.
 
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை என்றாலும் பிரேசில் கட்டுப்பாட்டில் பந்து இருந்தது. இதனை அடுத்து, இரண்டாம் பாதியின் 51வது நிமிடத்தில் நெய்மர் அசத்தலாக கோல் அடித்தார். 90 வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பிர்மிடோ மற்றொரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணி 2-0 என்ற கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
 
முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் அணிகள் நாக் அவுட் சுற்றில் வெளியேறியதால், பிரேசில் அணியும் வெளியேறும் என பலர் கணித்த நிலையில், அவர்களின் கணிப்பு பொய்யாகியுள்ளது. 

https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/02212435/1174015/FIFA-world-cup-brazil-defeat-mexico-and-enter-next.vpf

Link to comment
Share on other sites

உலக கோப்பை கால்பந்து - ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் காலிறுதியில் நுழைந்தது

 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் பெல்ஜியம் அணி 3 - 2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. #WorldCup2018 #BELJPN #BelgiumvJapan

 
 
உலக கோப்பை கால்பந்து - ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் காலிறுதியில் நுழைந்தது
 
உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
ஆட்டத்தின் தொடக்கத்தி இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
 
இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் 0-0 என சமனிலை வகித்தன.
 
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜப்பான் அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஜெங்கி ஹராகுசி ஒரு கோல் அடித்தார்.
 
மேலும், ஆட்டத்தின் 52 வது நிமிடத்தில் டகாஷி இனுல் ஒரு கோல் அடிக்க ஜப்பான் 2-0 என முன்னிலை பெற்றது.
 
201807030137564695_1_jpn-2._L_styvpf.jpg
 
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெல்ஜியம் அணியின் ஜேன் வெர்டோகன் ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.  
 
அதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 74 வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மரானே பெலானி ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன.
 
இரண்டாவது பாதியில் இரு அணிகளும் சமனிலை வகித்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி பெல்ஜியம் வீரர் நாசர் சடி 94வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
 
இறுதியில், ஜப்பானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி காலிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup #BELJPN #BelgiumvJapan #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA

https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/03013756/1174037/belgium-beat-japan-32-in-world-cup-football.vpf

Link to comment
Share on other sites

அபாய வில்லியான் அபார ஆட்டம்; நெய்மர், ஃபர்மினோ கோல்கள்: மெக்சிகோவை வழியனுப்பி காலிறுதியில் பிரேசில்

 

villiyan2jpg
neymar-afpjpg
villiyan2jpg
neymar-afpjpg

இந்த உலகக்கோப்பையில் பிரேசிலின் ஆட்டம் அதற்கேயுரிய அந்த வித்தியாசங்களுடனும், வண்ணங்களுடனும் களைக் கட்டத் தொடங்கியுள்ளது. இன்று சமாராவில் நடந்த இறுதி 16 ஆட்டத்தில் மெக்சிகோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது பிரேசில்.

இடைவேளை வரை இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இடைவேளைக்குப் பிறகு வில்லியன் நெய்மர் கூட்டணியில் 51வது நிமிடத்தில் நெய்மர் மிக அருமையான கோலை அடித்தார், பிறகு கடைசியில் 88வது நிமிடத்தில் ஃபர்மினோ இன்னொரு கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

 

உண்மையில் சொல்லப்போனால் மெக்சிகோவுக்கு வாய்ப்புகள் வந்தாலும் ஒரேயொரு வாய்ப்பைத்தான் கோல் வாய்ப்பு என்று கூற முடியும், அதுவும் இடைவேளைக்குப் பிறகு கோல் வலைக்குள் செல்லும் நேரத்தில் பிரேசில் கோல் கீப்பர் எம்பி அதனை வெளியே தட்டி விட்டார், விளைந்த கார்னர் வாய்ப்பையும் பிரேசில் தடுப்பணை ஊதியது. இந்த முதல் கோல் பிரேசில் உலகக்கோப்பையில் அடிக்கும் 227வது கோல், இதில் பிரேசில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.

இடைவேளை வரை: முதல் 20-25 நிமிடங்களுக்குப் பிறகு மெக்சிகோவுக்கு கடும் குடைச்சல் கொடுத்த பிரேசில்:

தொடக்கத்தில் மெக்சிகோ கொஞ்சம் பிரேசில் பகுதிக்குள் ஊடுருவியது, அப்படி ஊடுருவிய போதுதான் மெக்சிகோவின் அபாய வீரர் ஹிர்விங் லொசானோ அடித்த கோல் நோக்கிய ஷாட்டை பிரேசிலின் மிராண்டா தடுத்து விட்டார், இவ்வாறு நிறைய பிரேசில் தடுப்பு வீரர்கள் தடுத்து விட்டனர். மாறாக பிரேசில் ஊடுருவிய போதெல்லாம் ஒரு 4-5 கோல் நோக்கிய ஷாட்களை மெக்சிகோவின் அனுபவ கோல் கீப்பர் கில்லர்மோ தடுத்தும் தட்டியும் மெக்சிகோவின் விதியை இழுத்துச் சென்று கொண்டிருந்தார்.

5வது நிமிடத்திலேயே நெய்மர் ஷாட் ஒன்று கில்லர்மோ ஓச்சோவா கையைப் பதம் பார்த்தது. ஒவ்வொரு முறை மெக்சிகோ முன்னேறிச் சென்று இடது புறத்திலிருந்து தாக்குதல் தொடுக்கும் போதும் பிரேசிலின் தடுப்பாட்டம் மெக்சிகோவின் முயற்சிகளை எளிதாக முறியடித்தது, பிரேசில் நன்கு திட்டமிட்டபடி ஆடியது.

15வது நிமிடத்தில் ஹிர்விங் லொசானோ அருமையாக ஆடி ஃபெலிப்பேவைக் கடந்து பந்தை வேகமாக குறுக்கு பாஸ் செய்தார். பிரேசில் பெனால்டி பகுதிக்குள் வந்தது ஆனால் ஜேவியர் ஹெர்னாண்டஸ் அங்கு சரியான இடத்தில் இல்லை மிகவும் தள்ளி இருந்தார். இவ்வாறு சில பாஸ்களில் சரியான இடத்தில் மெக்சிகோ வீரர்கள் இல்லை. ஒருமுறை கார்லோஸ் வெலா அடித்த ஷாட்டுக்கு அங்கு இருந்த ஹெக்டர் ஹெரேரா பந்து வந்தவுடனேயே அடிப்பதை விடுத்து இடது காலால் மறுபடியும் வெட்டி ஆட முயன்ற போது மஞ்சள் கோட்டை சூழ்ந்தது. நல்ல கோல் வாய்ப்பு விரயம் செய்யப்பட்டது. முதல் 20-25 நிமிட ஆட்டத்தை வைத்து வர்ணனையாளர்கள் பிரேசிலின் பலவீனம், எப்போது வேண்டுமானாலும் கோல் வாங்கலாம் என்ற ரீதியில் பேசத் தொடங்கினர், ஆனால் அவர்கள் பதட்டமில்லாமல் மெக்சிகோ எவ்வளவு முறை வேண்டுமானாலும் வா, ஆனால் கோல் கிடையாது என்பதில் திட்டவட்டமாக இருந்தனர்.

மாறாக 26வது நிமிடத்தில் நெய்மரிடம் பந்து வர அவர் எட்சன் அல்வாரேஸுக்குப் போக்குக் காட்டி கடந்து வந்து இறுக்கமான கோணத்தில் அடித்த ஷாட்டை கில்லர்மோ தடுத்தார். 26வது நிமிடத்தில் பிரேசிலுக்கு ஃப்ரீ கிக் பாக்சிற்கு வெளியே கிடைத்தது நெய்மர் பெனால்டி ஏரியாவுக்குள் பந்தை அனுப்பினார், கேப்ரியல் ஜீசஸ் காலில் பந்து பட்டது, அதன் பிறகு ஓரிரு நிமிடங்களுக்கு மெக்சிகோ வயிற்றில் புளியைக் கரைத்தனர் பிரேசில். கடும் நெருக்கடிக்குப் பிறகு கில்லர்மோ ஒச்சாவ் பந்தைத் தட்டி விட்டு நிம்மதிப் பெருமூச்செறிந்தார். இது முடிந்தவுடனேயே கேப்ரியல் ஜீஸஸ் அடித்த ஷாட்டை அயாலா தடுத்தார், பிலிப் கூட்டினியோ அடித்த ஷாட் கோல் மேல்கம்பிக்கு மேல் சென்றது. மெக்சிகோ சிறிது நேரம் ஆடிப்போய் விட்டது.

29வது நிமிடத்தில் அழகான ஒரு லாங் பால் வந்தது அதனை கார்லோஸ் செலா பெற்று தொலைவிலிருந்தே கோல் முயற்சி மேற்கொண்டார் வெற்று தனிமனித முயற்சி, மாறாக ஜேவியர் ஹெர்னாண்டஸ் அங்கு கோல் அடிக்கும் நிலையில் இருந்தார், அவரிடம் பாஸ் செய்திருக்க வேண்டியதை வெலா வீண் செய்தார்.

32வது நிமிடத்தில் மீண்டும் பாலினியோ மையத்தில் வேகம் காட்டினார் பிறகு வலது புறம் அபாய வில்லியானிடம் பந்தை அடிக்க அவர் அழகாக கேப்ரியல் ஜீஸசுக்கு அடிக்க அவர் அதனை மெக்சிகோ பெனால்டி பகுதிக்குள் கொண்டு சென்று ஒரு கோல் முயற்சி மேற்கொண்டார் ஆனால் மீண்டும் கில்லர்மோதான் மெக்சிகோவைக் காப்பாற்றினார். ஆனால் அவர் தட்டி விட்ட பந்து 7 அடியில் பிரேசிலுக்கு இன்னொரு கோல் வாய்ப்பாக அமைந்தது ஆனால் இம்முறை மெக்சிகோ வீர்ர கொலார்டோ தடுத்து விட்டார்.

முதல் 20-25 நிமிட ஆதிக்கத்துக்குப் பிறகு மெக்சிகோவுக்கு முழுதும் திக் திக் கணங்கள்தான். 39வது நிமிடத்தில் நெய்மர் கொடுத்த நெருக்கடி தாங்காமல் எட்சன் அல்வாரேஸ் ஃபவுல் செய்ய மஞ்சள் அட்டைக் காட்டப்பட்டார். 40வது நிமிடத்தில் நெய்மர், கூட்டினியோ அபாயக் கூட்டணி இணைந்து நெருக்கடி கொடுத்து பந்தை வில்லியானுக்கு வலது உள்புறம் கிராஸ் செய்ய வில்லியான் பந்தை விறுவிறுவென கோல் நோக்கி சற்று நகர்த்தி ஷாட் ஒன்றை கோல் நோக்கி முயன்றார். ஆனால் கில்லர்மோ உடனடியாக அதனைக் கணித்து தடுத்து விட்டார். இடைவேளையின் போது 0-0.

வில்லியானின் திடீர் ஆக்ரோஷ எழுச்சி, கோல்கள், மெக்சிகோ ஆட்கொள்ளப்பட்ட கதை:

இடைவேளை முடிந்தகையுடன் 48வது நிமிடத்தில் கார்னர் ஷாட்டை நெய்மர், பிலிப் கூட்டினியோவுக்குக் கொடுக்க, இருவரும் மெக்சிகோ பெனால்டியை நோக்கி பாய்ந்தனர், கூட்டினியோ பந்தை வெட்டி மெக்சிகோ பெனால்ட்டி பகுதிக்குள் கொண்டு சென்று வலது காலினால் ஒரு பெரிய கோல் உதைக்குத் தயாரான போது மெக்சிகோவை மீண்டும் வலது புறம் டைவ் அடித்துக் காத்தார் கோல் கீப்பர் கில்லர்மோ.

villiyanjpg

ஆக்ரோஷ வில்லியான் பந்தை மெக்சிகோ வீரரைக் கடந்து கொண்டு செல்லும் காட்சி. | ஏ.எப்.பி.

 

பிரேசில் ஆதிக்கம் தொடர நெய்மர் கோலுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு அந்தக் கணம் வாய்த்தது. மெக்சிகோ பெனால்டி பகுதிக்குள் பந்தை நெய்மர் பின்பாஸ் செய்தார், மிகவும் அருமையான ஒரு யோசனை அது. பின் பாஸை வில்லியானுக்குச் செய்ய வில்லியான் அங்கு சிலபல கால் வித்தைகளைக் காட்டி அபாயகரமான ஒரு பாய்ச்சலில் மெக்சிகோ தடுப்பைக் கடந்து பெனால்டி பகுதிக்குள் ஊடுருவி கோல் பகுதிக்குள் பந்தை தாழ்வாக அனுப்பினார், அங்கு நெய்மர் வரிசையில் 2வதாக இருந்தார், பந்து வந்தவுடன் சறுக்கியபடி பந்தை கோலுக்குள் திணித்தார். பிரேசில் முன்னிலை பெற்றது.

அப்போது முதல் வில்லியான் அபாயகரமான சில மூவ்களை வலது புறம் தொடுத்தார், வலது புறத்திலிருந்து அவர் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் பந்தை உள்புறம் கொண்டு சென்று ஊடுருவத் தொடங்கிய போதும், இது சீராக அடுத்தடுத்து நடந்த போதும் நமக்குப் புரிந்ததெல்லா மெக்சிகோ கதை முடிந்தது என்பதே. 56வது நிமிடத்தில் வில்லியன் ஒரு பந்தை அப்படித்தான் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் எடுத்துச் சென்று கோல் அடிக்கும் அபாய பகுதிக்குள் வர ஹெக்டர் ஹெரேரா அவரை ஃபவுல்தான் செய்யமுடிந்தது. இதனால் அவர் புக் செய்யப்பட்டார். அடுத்த போட்டியில் இவர் ஆட முடியாது. நெய்மர் எடுத்த ஃப்ரீ கிக், மெக்சிகோ பெனால்டிப் பகுதிக்கு வர அதனை ஹியுகோ அயாலா தலையால் வெளியேற்றினார். 58வது நிமிடத்தில் பிலிப் லூயிஸ் பந்துடன் முன்னேறிச் சென்று நெய்மாரிடம் அளித்தார், பாக்சிற்கு ஓரத்தில் வில்லியனிடம் அனுப்பினார் நெய்மர், வில்லியன் சிலபல போக்குகளைக் காட்டி பாஸை ஃபாக்னருக்கு அனுப்பினார் அவர் பாலினியோவுக்கு அனுப்பினார், அப்போது ஒரு 15 அடியிலிருந்து பாலினியோ அடித்த ஷாட் மீண்டும் கில்லர்மோ ஓச்சாவினால் தடுக்கப்பட்டது. 63வது நிமிடத்தில் தேவையில்லாமல் ஒரு ஃபவுல் செய்து பிரேசில் வீரர் காஸ்மிரோ மஞ்சள் அட்டை வாங்கினார் அடுத்த போட்டிக்கு இவர் இல்லை.

64வது நிமிடத்தில் மீண்டும் வில்லிய பந்துடன் வெட்டி உள்ளே வந்து ஒரு அபாரமான ஷாட்டை அடிக்க கில்லர்மோ அதனை தள்ளி விட கார்னர் வாய்ப்பு பிரேசிலுக்குக் கிடைத்தது. அது கோலாகவில்லை. 67வது நிமிடத்தில் வில்லியான் வலது புறத்திலிருந்து பந்தி இடது புறம் கொண்டு வந்து நெய்மருக்குக் கொடுத்தார், நெய்மரின் ஷாட்டினால் ஒரு பயனும் இல்லாமல் போனது, ஆனால் வில்லியன் அங்கு தன்னலமற்று ஆடினார். வில்லியான் இடைவேளைக்குப் பிறகு கொடுத்த அச்சுறுத்தல் அவரை இனி வரும் போட்டிகளில் எதிரணியினருக்கு ஓர் அபாய வீரராகக் காட்டியிருக்கும், எதிர்கொண்டு முடக்க வேண்டிய ஒரு வீரர் என்ற செய்தியையும் அளித்திருக்கும். 69வது நிமிடத்தில் ஹெக்டர் ஹெரேரா அடித்த ஷாட், கொராடோ அடித்த ஷாட் இரண்டும் பிரேசிலினால் தடுக்கப்பட்டது.

நெய்மரைத் தேவையில்லாமல் லயுன் பந்தை எடுக்கும் போது அவருக்கு ஏற்கெனவே பாதிப்பில் உள்ள வலது கணுக்காலை மிதிக்கிறார், இதற்கு அவருக்கு ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும், ஆனால் நடுவர் எச்சரிக்கையுடன் விட்டுவிட்டது ஆச்சரியமளித்தது, ஆட்டத்தில் இல்லாத பந்தை எடுக்கப் போகும்போது எதற்கு கால் வேலையை வீரர் மேல் காட்ட வேண்டும்?

86வது நிமிடத்தில் பிலிப் கூட்டினியோவுக்குப் பதில் ஃபர்மினோ களமிறங்கினார். 89வது நிமிடத்திலேயே ஃபர்மினோ கோல் அடித்து பிரேசில் வெற்றியை உறுதி செய்தார். மெக்சிகோ வீரர் லயூன் பந்துடைமையை இழக்க நெய்மர் பந்துடன் புகுந்தார். கில்லர்மோவை அவர் இடத்தை விட்டு முன்னேறி வரச்செய்தார், கோல் நோக்கி டோ-குத்து குத்தினார், கில்லர்மோ பந்தை டச் செய்ய முடிந்தது, ஆனால் பந்து ஃபர்மினோவுக்கு வர கோலாக மாற்றினார் பிரேசில் 2-0, காலிறுதியில் நுழைந்தது.

http://tamil.thehindu.com/sports/article24314983.ece

Link to comment
Share on other sites

இங்கிலாந்தை வெற்றிகொள்ளுமா கொலம்பியா?

 

 

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21ஆவது உலகக் கிணண கால்பந்தாட்டத்தில் கொலம்பியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான கடைசி முன்னோடி கால் இறுதிப் போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது. இப் போட்டி மொஸ்கோ, ஸ்பார்ட்டக் விளையாட்டரங்கில் இன்று இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

colombia_vs_england.jpg

இரண்டு அணிகளும் கடைசி அணியாக கால் இறுதி வாய்ப்பை பெறும் எதிர்பார்ப்புடன் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

எவ்வாறாயினும் இங்கிலாந்தை இதுவரை கொலம்பியா வெற்றிகொண்டதில்லை என்பதால் இங்கிலாந்துக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என கருதப்படுகின்றது.

பிரான்ஸில் பத்து வருடங்களுக்கு முன்னர் இந்த இரண்டு அணிகளும் கடைசியாக சந்தித்தபோது இங்கிலாந்து 2 க்கு 0 என வெற்றிகொண்டிருந்தது.

england_team_1.jpg

கொலம்பியா தனது குழுவில் ஜப்பானிடமும் இங்கிலாந்து தனது குழுவில் பெல்ஜியத்திடம் தோல்வி அடைந்தன. ஆனால் மற்றைய இரண்டு வெற்றிகளிலும் அவ்வணிகளின் திறமை வெகுவாக வெளிப்பட்டன.

கொலம்பியா அணியில் ரடாமெல் பெல்கோ, ஜேம்ஸ் ரொட்றிகூஸ் ஆகியோரும் இங்கிலாந்து அணியில் தலைவர் ஹெரி கேன் (2 போட்டிளில் 5 கோல்களைப் போட்டு தங்கப் பாதணிக்கான பட்டியலில் முன்னிலையில் இருப்பவர்), ரஹீம் ஸ்டேர்லிங் ஆகியோரும் பிரதான வீரர்களாக இடம்பெறுகின்றனர்.

இப் போட்டியில் எந்த அணி முதலாவதாக கோல் போடுகின்றதோ அந்த அணிக்கு வெற்றிவாய்ப்பு கூடுதலாக அமையும்.

colombia_team__1_.jpg

அணிகள் விபரம்

கொலம்பியா: டேவிட் ஒஸ்பினா, சன்டியாகோ ஏரியாஸ், டெவின்சன் சன்ச்செஸ், யெரி மினா, ஜோஹான் மொஜிகா, கார்லொஸ் சன்ச்செஸ், மெட்டியஸ் யுரிப், யுவான் குவார்ட்ராடோ, யுவான் குவின்டீரோ, லூயிஸ் மியூரியல், பெல்கோ (அணித் தலைவர்).

இங்கிலாந்து: ஜோர்டான் பிக்போர்ட், கய்ல் வொக்கர், ஜோன் ஸ்டோன்ஸ், ஹெரி மெகயர், கீரான் ட்ரிப்பியர், டேல், ஜோர்டான் ஹெண்டர்சன், ஜெசே லிங்கார்ட், ஏஷ்லி யங், ரஹீம் ஸ்டேர்லிங், ஹெரி கேன் (அணித் தலைவர்).

http://www.virakesari.lk/article/35922

Link to comment
Share on other sites

உலகக் கிண்ணம்: குழு ஜி
 
 

- ச. விமல்

image_12c606a8d9.jpg

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இம்முறை உலகக்கிண்ணத்தை வெல்லுமென அதிகம் எதிர்பார்ப்பில்லாத இரண்டு அணிகள் இந்தக் குழுவில் இடம்பிடித்திருந்தன. பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளன. இரண்டு அணிகளும் உலகக்கிண்ணத்தை வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ள அணிகள். ஆனால் இதுவரை வெற்றி பெறும் என்பதற்கான வாய்ப்புகள் பற்றி  குறைவாக பேசப்படுகின்றன. பெல்ஜியம் விளையாடி வரும் விதமும், குழு நிலையில் முதலிடத்தையும் பெற்றதன் பின்னர் கால்பந்து விற்பன்னர்களின் பார்வை இவர்கள் பக்கமாக திரும்பியுள்ளது. குறிப்பாக இங்கிலாந்து அணியினை இவர்கள் வெற்றி பெற்றதன் பின்னர் இவர்கள் உண்மையிலேயே பலமாக உள்ளார்கள் என்பதை நிரூபித்துள்ளார்கள். இம்முறை உலகக்கிண்ண தொடரின் குழு நிலை போட்டிகளில் மூன்று போட்டிகளையும் வெற்றி பெற்ற அணிகள் மூன்று மாத்திரமே. அவற்றுள் பெல்ஜியம் அணியும் ஒன்று.

இங்கிலாந்து அணி கடந்த காலங்களிலும் பார்க்க பலமான அணியாக தென்படுகிறது. இங்கிலாந்து, பெல்ஜியம் போன்ற அணிகள் பலமாக காணப்படலும் கூட, இவர்கள் அரை இறுதிப்போட்டியில் அல்லது காலிறுதிப் போட்டியில் பிரேசில் அணியினை சந்திக்க வேண்டுமென்பதே இவர்களின் வாய்ப்புகள் குறைவாக எதிர்வு கூறப்படுவதற்கான காரணம். ஆனால் ஏன் இந்த அணிகளினால் பிரேசில் அணியினை வெற்றி பெற முடியாது? என்ற கேள்வி நிச்சயம் கேட்கப்படலாம். இம்முறை போட்டிகளை வைத்துப் பார்க்கும் போது இந்த இரண்டு அணிகளுமே பிரேசில் அணியிலும் பார்க்க சிறப்பாக விளையாடுகிறார்கள் என்றே தோன்றுகிறது.

பெல்ஜியமணி குழு நிலைப் போட்டிகளில் பனாமா மற்றும் டுனீசியா ஆகிய அணிகளை இலகுவாக  வெற்றி பெற்றார்கள். இரண்டு போட்டிகளும் மூன்று கோல் வித்தியாசங்கள். இதன் மூலம் இரண்டாம் சுற்றுக்கு தெரிவானார்கள். இங்கிலாந்து அணியுடன் சமநிலை முடிவு போதும், முதலிடத்தை பெற்றுக்கொள்வதற்கு என்ற நிலையில் இங்கிலாந்து அணியிடுடன் விளையாடினார்கள். எதிர்பார்த்தது போன்று இரண்டு அணிகளுக்குமிடையிலான போட்டி விறுவிறுப்பாக காணப்பட்டது.  51வது நிமிடத்தில் அடித்த கோலின் மூலம் பெல்ஜியம் அணி இங்கிலாந்து அணியினை வெற்றி பெற்று முதலிடத்தை தனதாக்கியது.

பெல்ஜியம் அணியே ஐரோப்பிய வலையத்திலிருந்து முதலாவதாக உலகக்கிண்ண தொடருக்கு தெரிவான அணி. எந்தவித தோல்விகளுமின்றி,  ஒரு சமநிலை முடிவு மற்றும் ஒன்பது வெற்றிகளுடன் உலகக் கிண்ண தொடருக்கு  தெரிவானார்கள். கடந்த முறை காலிறுதிப்போட்டிகள் வரை முன்னேறிய அணிக்கு இம்முறையும் நிச்சயம் காலிறுதி வாய்ப்புகளுள்ளன.  1986 ஆம் ஆண்டு நான்காமிடத்தை பெற்றதன் பின்னர் கடந்த முறை இரண்டாவது தடவையாக காலிறுதிப்போட்டிகளுக்கு தெரிவானார்கள். அடுத்த சுற்றில் ஜப்பான் அணியினை இவர்கள் சந்திப்பதனால் காலிறுதிப்போட்டிகளுக்கு தெரிவாவது  நிச்சயம் என கூற முடியும். ஆனால் காலிறுதிப் போட்டியில் இவர்கள் பிரேசில் அணி அணி இரண்டாம் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றால், பிரேசிலை சந்திக்கவேண்டிய நிலை உருவாகும். 

தரப்படுத்தல்களில் அடுத்த இரண்டு இடங்களிலுள்ள அணிகள் பெல்ஜியம் மற்றும் பிரேசில். ஆனால் அடுத்த போட்டி பற்றி பேசும் நிலையில் பெல்ஜியம் அணி ஜப்பான் அணியினை அவ்வளவு இலகுவாக வெற்றி பெற்றுவிடுமென நம்ப முடியுமா? இம்முறை உலகக்கிண்ண தொடரில் அதிகம் எதிர்பார்த்த அணிகள் எல்லாம் தோல்வியடைந்து வெளியேறிவரும் நிலையில் ஜப்பான் அணி ஏன் பெல்ஜியம் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்காது என நம்புவது? பெல்ஜியம் அணிக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளன என கூறுவது மட்டுமே இங்கே பொருத்தமாக அமையும்.

இங்கிலாந்து அணி தற்போதுள்ள நிலையில் இறுதிப்போட்டி வரையும் பயணிக்கக் கூடிய வாய்ப்புகளும் உண்டு. இவர்களுக்கான தடைகள் இலகுவாக காணப்படுகின்றன.  இதற்காகவே இவர்கள் பெல்ஜியம் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்தார்கள் என சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் உள்ளன. முதலிடத்தை பெற்றால் பிரேசில் அணியினை சந்திக்க தேவையில்லை. மற்றைய அணிகள் இலகுவானவை எனவும் பேச்சுக்கள் உள்ளன. அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதை யோசிக்க முன்னர் கொலம்பியா அணியினை அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. கடந்த முறை உலகக்கிண்ண தொடரில் பிரேசில் அணியினை வெற்றி  பெற்று மூன்றாமிடத்தை பெற்ற கொலம்பியா அணி பற்றி யோசிக்க வேண்டும். இரண்டாம் சுற்றில் அவர்களை வெற்றி பெற்றால்தான் அடுத்த கட்டம். அடுத்த கட்டமே உறுதியாக சொல்ல முடியாத நிலையில் இவ்வாறான குழப்பம் அவர்களுக்கு தேவைதானா?

இங்கிலாந்து அணி டுனீசியா அணியுடன் போராடியே வெற்றி பெற்றார்கள். ஆனால்  அடுத்த போட்டியில் பனாமா அணியினை 5 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுக்கொண்டார்கள். இதன் மூலம் இரண்டாம் சுற்று உறுதியானது. இந்த நிலையில் பெல்ஜியமணியுடன் போராடியவர்கள் தோல்வியை சந்தித்துக் கொண்டார்கள். இதன் காரணமாக பலமான கொலம்பியா அணியினை இரண்டாம் சுற்றில் சந்திக்கவுள்ளார்கள். இங்கிலாந்து அணி தரப்படுத்தல்களில் பன்னிரெண்டாமிடத்திலுள்ளது. கொலம்பியா அணி பதினாறாமிடத்திலுள்ளது. எனவே இரு அணிகளும் பலமானவை என கூற முடியும். அத்துடன் இங்கிலாந்து அணிக்கு உலகக்கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு நான்காமிடத்திலும், கொலம்பியா அணிக்கு ஏழாமிடத்திலும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. கடுமையான போட்டி ஒன்றை இரண்டாம் சுற்றுப்போட்டியில் எதிர்பார்க்க முடியும். கடந்த இரண்டு உலக கிண்ண தொடர்களிலும் இங்கிலாந்து அணி காலிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தக் குழுவில் இடம்பிடித்த டுனீசியா மற்றும் பனாமா ஆகிய இரு அணிகளுமே பாவப்பட்ட அணிகளாகிவிட்டன. இம்முறை உலகக்கிண்ண தொடரில் மோசமாக அடிவாங்கிய அணிகளாக இவையிரண்டும் காணப்படுகின்றன. ஐந்தாவது உலகக்கிண்ண தொடரில் விளையாடிய இவர்கள் பனாமா அணியினை வெற்றி பெற்றதன் மூலம் இரண்டாவது உலகக்கிண்ண வெற்றியினை தமதாக்கினார்கள். இதன் மூலம் இம்முறை இவர்களுக்கு 24 ஆம் இடம் கிடைத்துள்ளது. மற்றப்படி இவர்கள் பெரியளவில் கூறும்படி சிறப்பாக சாதிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெற்ற பனாமா அணி இம்முறை இறுதியிடத்தை பெற்ற அணியாக உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்கள். பலமான இரண்டு அணிகளை சந்தித்தால் என்ன நடக்குமோ அதுதான்  நடந்துள்ளது. முக்கிய அணிகளை சந்திக்க இவர்கள் இன்னமும் கடுமையான முறையில் போட்டியிடவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

புள்ளிப்பட்டியல்

1 பெல்ஜியம்                               3              3              0              0              9              2              7              9

2 இங்கிலாந்து                          3             2              0              1              8              3              5              6

3 டுனீசியா                                   3              1              0              2              5              8              -3            3

4 பனாமா                                      3              0              0              3              2              11           -9            0

 

போட்டி முடிவுகள்

பெல்ஜியம்                   vs            பனாமா                        3 - 0

துனிசியா                     Vs           இங்கிலாந்து              1 - 2

பெல்ஜியம்                   Vs           துனீசியா                      5 - 2

இங்கிலாந்து              Vs           பனாமா                         6 - 1

இங்கிலாந்து              Vs           பெல்ஜியம்                   0 - 1

பனாமா                         vs           துனிசியா                    1 – 2

 

இரண்டாம் சுற்றுப்போட்டிகள்

ஜூலை 2, பெல்ஜியம் Vs ஜப்பான் - 23: 30

ஜூலை 3, கொலம்பியா Vs இங்கிலாந்து - 23: 30

http://www.tamilmirror.lk/sports-articles/உலகக்-கிண்ணம்-குழு-ஜி/139-218444

Link to comment
Share on other sites

உலக கோப்பை போட்டியில் அதிக கோல்கள் அடித்து பிரேசில் அணி சாதனை

 
அ-அ+

88 ஆண்டு கால உலக கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த அணி என்ற சாதனையை பிரேசில் அணி நேற்று படைத்தது. #FIFA2018 #Brazil #FootballWorldCup2018

 
 
 
 
உலக கோப்பை போட்டியில் அதிக கோல்கள் அடித்து பிரேசில் அணி சாதனை
 
88 ஆண்டு கால உலக கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த அணி என்ற சாதனையை பிரேசில் நேற்று படைத்தது. மெக்சிகோவுக்கு எதிரான 2-வது சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணி 2 கோல் அடித்தது. இதன் மூலம் அந்த அணி உலக கோப்பையில் மொத்தம் 228 கோல்கள் அடித்து இருக்கிறது. இதற்கு முன்பு ஜெர்மனி அணி 226 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை பிரேசில் அணி தகர்த்து புதிய சாதனையை உருவாக்கியது.

பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் நேற்று ஒரு கோல் அடித்தார். பிரேசில் அணிக்காக 89-வது போட்டியில் ஆடிய அவர் அடித்த 57-வது சர்வதேச கோல் இதுவாகும். ஒட்டுமொத்த உலக கோப்பை போட்டி தொடரில் அவர் அடித்த 6-வது கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது. #FIFA2018 #Brazil #FootballWorldCup2018

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/03101119/1174080/Brazils-team-record-for-the-highest-goals-in-World.vpf

Link to comment
Share on other sites

நெய்மரின் நடிப்பு கால்பந்தாட்டத்துக்கு நல்லதல்ல: மெக்சிகோ பயிற்சியாளர் கடும் தாக்கு

 

 
lpng

நெய்மரின் நடிப்பு கால்பந்தாட்டத்துக்கு நல்லதல்ல என்று மெக்சிகோ பயிற்சியாளர் ஜுவான் கேர்லோஸ் கூறியுள்ளார்.

சமாராவில்  திங்கட்கிழமை  நடந்த ஆட்டத்தில் மெக்சிகோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது பிரேசில்.

 

இடைவேளைக்குப் பிறகு வில்லியன் நெய்மர் கூட்டணியில் 51-வது நிமிடத்தில் நெய்மர் மிக அருமையான கோலை அடித்தார், பிறகு கடைசியில் 88-வது நிமிடத்தில் ஃபர்மினோ இன்னொரு கோலை அடிக்க பிரேசில் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் பிரேசில் வீரர் நெய்மர் மெக்சிகோ வீரர்களின் தடுப்பாட்டத்தால் கீழே விழுந்து வலியால் துடித்தார். எனினும் நெய்மரின் இந்த செயல் சற்று மிகைப்படுத்தும் வகையில் இருந்ததாக சமூக வலைதளங்களிலும் கால்பந்து உலகிலும் விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து  மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் ஜுவான் கேர்லோஸ் கூறும்போது,  "நெய்மரின் இந்த நடிப்பு கால்பந்தாட்டத்துக்கு நல்லதல்ல. இது கால்பந்தாட்டத்துக்கு அவமானம். அந்த ஒரு வீரரால் நாங்கள் நிறைய  நேரங்களை இழந்தோம். கால்பந்தாட்டம் ஆழ்ந்து சிந்தித்து விளையாட வேண்டிய விளையாட்டு. இரைச்சலுடன் விளையாடக் கூடாது. எல்லா மக்களும், குழந்தைகளும் பார்க்கும் ஆட்டத்தில் நடிப்பு இருக்கக் கூடாது. இதனால் எங்களது ஆட்ட வேகத்தில் தாக்கம் ஏற்பட்டது. நேற்றைய ஆட்டம் முழுவதும் பிரேசிலுக்கு சாதகமாக இருந்தது” என்றார்.

மெக்சிகோவுடனான ஆட்டம் மட்டுமில்லாமல் இந்த ஆண்டின் உலகக் கோப்பை பிரேசில் ஆடிய முந்தைய போட்டிகளில் நெய்மர் மீது அவரது அணியினர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/article24319489.ece

Link to comment
Share on other sites

நெட்டிசன் நோட்ஸ்: பிரேசிலின் சிவாஜி நெய்மர்...  உலக நடிப்புடா சாமி ...

 

 
netpng

சமாராவில் நடந்த இறுதி 16 ஆட்டத்தில் மெக்சிகோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது பிரேசில். நேற்றைய ஆட்டத்தில் பிரேசில் வீரரின் நெய்மர் மெக்சிகோ வீரர்களின் தடுப்பட்டாத்தால் கீழே விழுந்து வலியால் துடித்தார். எனினும் நெய்மரின் இந்த செயல் சற்று மிகைப்படுத்தியதாக இருந்தது.  சமூக வலைதளங்களில், கால்பந்து உலகிலும் பெரும் விமர்சனம் ஏற்பட்டது.  இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைட நெட்டிசன் நோட்ஸில்...

திரு

   
 

‏உலக நடிகன்டா நீ... @neymarjr

கார்த்திக்

‏#NEYMAR தட் தில்லானா மோகனாம்பாள் கத்தி குத்து சீன்..

சிவாஜிக்கே டப் கொடுப்பான் போல

Andez Raj A

‏நெய்மர் இன்னைக்கு நேத்திக்காடா நடிக்கிறான் ...அவனைலாம் அப்படியே போக விட்ரணும் ..

விவிகா சுரேஷ்

‏யார்டா இந்த நெய்மர்...சிவாஜியவிட அதிகமா நடிக்கிறான்

jnhupng

Prasannaboon

‏பிரேசிலின் சிவாஜி #நெய்மர்  உலக நடிப்புடா சாமி .....

மணிகண்டன் மணி

‏பிரேசில் பூரா பிராடு பசங்க..

அடெய் நெய்மர்..

ரெனால்டோன்னு ஒரு நல்ல பிரபலம் விளையாடிய அணிடா பிரேசில்....

கயல்விழி

‏சிவாஜி

கமல்

நெய்மர்

Bharath

‏நெய்மர் ஆஸ்கர் லெவல் பெர்பார்மென்ஸ்கள்

THALA அரவிந்த்

‏ஆஸ்கர் நாயகன் நெய்மர்

jopng

சீனு முதலி

இன்னைக்கு தான்டா ஒழுங்கா ஆடினான் #Neymar, கூடவே எக்ஸ்ட்ரா நடிப்பும்.

roja

ஹே ..நல்ல நடிக்குற மேன் Neymar

hjpng

Srikanth Govind

‏வில்லியன் ஆட்ட நாயகன் .....

நெய்மர் நடிகர் திலகம்!!  

Loshan - ARVLOSHAN

‏நெய்மர் கொஞ்சமாவது தனுஷ் மாதிரி இருக்கிறானே என்று அடிக்கடி நினைப்பேன்...

என்னமா அந்த performance..

5 டாலர் குடுத்தா 50000 டாலருக்கு கிடந்து துடிப்பான், உருளுவான்..

 
 

http://tamil.thehindu.com/opinion/blogs/article24319279.ece

Link to comment
Share on other sites

சுவிட்சர்லாந்துக்கு எதிரான வெற்றியுடன்  கால் இறுதிக்குள் நுழைந்தது சுவீடன்

சுவீடனுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் இன்று இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான முன்னோடி கால் இறுதிப் போட்டியில் 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் இறுக்கமான வெற்றியை ஈட்டிய சுவீடன் ஏழாவது நாடாக உலகக் கிண்ண கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

sweden_vs_swiss_action_1.jpg

செய்ன்ட் பீட்டர்ஸ்பேர்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியின் 66ஆவது நிமிடத்தில் சுவீடன் வீரர் எமில் போர்ஸ்பேர்க் ஓங்கி உதைத்த பந்து சுவிட்சர்லாந்து பின்கள வீரர் ஒருவர் மீது பட்டு திசைதிரும்பி கோலினுள் சென்றது.

இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட இப் போட்டியின் 9ஆவது நிமிடத்தில் சுவீடனுக்கு கிடைத்த வாய்ப்பை மார்க்கஸ் பேர்க் வீணாக்கினார். இதே வீரரது 28ஆம் நிமிட முயற்சியை சுவிட்சர்லாந்து கோல்காப்பாளர் யான் சொமர் கையால் தட்டி திசை திருப்பினார்.

பத்து நிமிடங்கள் கழித்து சுவிட்சர்லாந்து வீரர் ப்ளேரின் டிஸெமய்லி உதைத்த பந்து சுவீடனின் குறுக்கு கம்பத்துக்கு மேலாக சென்றது.

sweden_celebrates_entry_into_lasst_8.jpg

41ஆவது நிமிடத்தில் போட்டியின் முதலிரண்டு  கோர்ணர் கிக்குகளும் சுவீடனுக்கு பலனளிக்காமல் போயின.

இடைவேளைக்கு ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இரண்டு அணிகளும் கோல் எதனையும் போட்டிருக்கவில்லை.

இடைவேளையின் பின்னர் போட்டி சுவாரஸ்யம் குன்றி காணப்பட்டது.

போட்டியின் 66ஆவது நிமிடத்தில் ஒலா டொய்வோனென் பரிமாறிய பந்தைப் பெற்றுக்கொண்ட சுவீடன் வீரர் போர்ஸ்பேர்க், பெனல்டி எல்லையில் இருந்து படுவேகமாக கோலை நோக்கி உதைத்த பந்து சுவிட்சர்லாந்தின் பின்களவீரர் மீது பட்டு திசைதிரும்பி கோலினுள் சென்றது. அந்த சந்தர்ப்பத்தில் கோல்காப்பாளர் யான் சொமர் செய்வதறியாது திகைத்தவராக நின்றார்.

அதன் பின்னர் கோல் நிலையை சமப்படுத்த சுவிட்சர்லாந்தும் கோல் எண்ணிக்கையை அதிகரிக்க சுவீடனும் முயற்சித்தபோதிலும் அந்த முயற்சிகள் எதுவும் பலிதமளிக்கவில்லை.

போட்டியின் உபாதையீடு நேரத்தில் சுவிட்சர்லாந்தின் கடைசி முயற்சியை சுவீடன் கோல்காப்பாளர் தடுத்தார். 

அதனைத் தொடர்ந்து சுவீடனுக்கு கோல்போடுவதற்கான நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. உபாதையீடு நேரத்தின் 3ஆவது நிமிடத்தில் நீண்ட பந்துபரிமாற்றத்தைப் பெற்றுக்கொண்ட சுவீடன் வீரர் மார்ட்டின் ஒல்சொன் பந்தை நகர்த்தியவாறு சுவீடன் கோலை நோக்கி வேகமாக ஓடினார். அந்த சந்தர்ப்பத்தில் அவரைப் பின்னால் துரத்திய மைக்கல் லெங் கையால் தள்ளி வீழ்த்தினார். உடனடியாகவே விசிலை ஊதிய மத்தியஸ்தர் பெனல்டி இலக்கை நோக்கி கையை நீட்டியதுடன் மைக்கல் லெங்குக்கு சிவப்பு அட்டையையும் காட்டினார்.

swedem_s_forsborg_s_forceful_kick_reflec

எனினும் வீடியோ உதவி மத்தியஸ்தரின் ஒத்துழைப்பை நாடிய மத்தியஸ்தர், தனது பெனல்டி தீர்ப்பை மாற்றி பெனல்டி விளிம்பில் ப்றீ கிக் ஒன்றை வழங்கினார். எனினும் கடைசி பின்கள வீரராக எதிரணி வீரரரை வீழ்த்திய மைக்கல் லெங்கின் சிவப்பு அட்டையில் மாற்றம் இல்லை என மத்தியஸ்தர் அறிவித்தார்.

தொடர்ந்து ஒலா டொல்வோனெனின் ப்றீ கிக்குடன் போட்டி முடிவுக்கு வந்தது.

பலம்வாய்ந்த பிரேசிலுடனான லீக் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட 

சுவிட்சர்லாந்தின் ஜம்பம் சுவீடனிடம் பலிக்காமல் போனது. உலகக் கிண்ண கால் இறுதியில் 24 வருடங்களின் பின்னர் சுவீடன் விளையாட தகுதிபெற்றுள்ளது.

http://www.virakesari.lk/article/35967

Link to comment
Share on other sites

உலக கோப்பை கால்பந்து - பெனால்டி ஷூட்டில் 4-3 என்ற கணக்கில் கொலம்பியாவை வென்றது இங்கிலாந்து

 
அ-அ+

உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் பெனால்டி ஷூட் முறையில் 4-3 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து. #WorldCup2018 #COLENG #ColombiavEngland

 
 
 
 
உலக கோப்பை கால்பந்து - பெனால்டி ஷூட்டில் 4-3 என்ற கணக்கில் கொலம்பியாவை வென்றது இங்கிலாந்து
 
உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
 
ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது. இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் 0-0 என சமனிலை வகித்துள்ளன.
 
இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 57வது நிமிடத்திக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து பயன்படுத்தி கொண்டது.
 
அந்த அணியின் ஹாரி கேன் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் முடிவில் 93வது நிமிடத்தில் கொலம்பிய வீரர் யெரி மினா ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.
 
கூடுதல் நேரத்திலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் முறை தரப்பட்டது.
இதில் முதல் வாய்ப்பில் கொலம்பியாவும், இங்கிலாந்தும் ஒரு கோல் அடித்தன. இரண்டாவது வாய்ப்பிலும் இரு அணிகளும் ஒரு கோல் அடித்தன.
 
மூன்றாவது வாய்ப்பில் கொலம்பியா அணி ஒரு கோல் அடிக்க 3-2 என முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியின் வாய்ப்பு தடுக்கப்பட்டது.
 
நான்காவதில் கொலம்பியா வாய்ப்பு தடுக்கப்பட்டது. இங்கிலாந்து ஒரு கோல் அடித்து 3-3 என சமனிலை ஆனது.
 
இறுதியாக, கடைசி வாய்ப்பில் கொலம்பியா கோல் அடிக்கவில்லை. இங்கிலாந்து அணி கோல் அடித்து 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup #COLENG #ColombiavEngland #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA

https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/04023536/1174261/england-beat-colombia-in-penalty-shoot-43-in-world.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.