Jump to content

உலக கிண்ண கால்பந்தாட்டம் 2018 செய்திகள், ஆய்வுகள், கருத்து பகிர்வுகள்


Recommended Posts

ஃபிஃபா உலகக் கோப்பையின் பயிற்சியாளர்கள்

 

 

fifajpg

 

textJPG
   
 
 

பிரிவு ஏ

1%20hectorJPG
2stanislovJPG
3bissiJPG
4%20oscarJPG

பிரிவு பி

b1%20hervJPG
b2%20fernandoJPG
b3%20carlosJPG
b4%20julianJPG

பிரிவு சி

c1JPG
c2JPG
c3JPG
c4JPG

பிரிவு டி

d1JPG
d2JPG
d3JPG
d4JPG

பிரிவு இ

e1JPG
 
e2JPG
 
e3JPG
e4JPG

பிரிவு எஃப்

 

f1JPG

 

f2JPG

 

f3JPG

 

f4JPG

பிரிவு ஜி

 

g1JPG

 

g2JPG

 

g3JPG

 

g4JPG

பிரிவு ஹெச்

 

h1JPG

 

h2JPG

 

h3JPG

 

h4JPG

http://tamil.thehindu.com/sports/article24120534.ece

Link to comment
Share on other sites

  • Replies 262
  • Created
  • Last Reply

2018 உலகக் கிண்ணம்: ஸ்பெயின் அணியின் முன்னோட்டம்

Spain-world-cup-2018-696x392.jpg
 

பிஃபா உலகத் தரவரிசையில் 6 ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் இம்முறை தொடர்ச்சியாக 11 ஆவது உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ளது. இதுவரை பிஃபா உலகக் கிண்ணத்தை வென்ற எட்டு நாடுகளில் ஒன்றாக இருக்கும் ஸ்பெயின் இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்ல அதிக வாய்ப்புகள் கொண்ட அணிகளில் ஒன்றாகவும் உள்ளது.

 

 

உலகக் கிண்ண வரலாறு

1934 ஆம் ஆண்டு முதல் முறை உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்ற ஸ்பெயினின் கால்பந்து வரலாறு நீண்டது. அந்த அணி இரண்டு முறை அரையிறுதிக்கு முன்னேறியதோடு அதில் முதல் முறை 1950 ஆம் ஆண்டு அந்த அணி தொடரில் 4 ஆவது இடத்தை பெற்றது.

ஐரோப்பிய சம்பியன்களாக, 2010 தென்னாபிரிக்காவில் நடந்த உலகக் கிண்ண போட்டியில் ஆடிய ஸ்பெயின், இறுதிப் போட்டியில் அன்ட்ரஸ் இனியஸ்டாவின் வெற்றி கோல் மூலம் நெதர்லாந்தை 1-0 என வீழ்த்தி சம்பியனானது.    

  • 1934 – காலிறுதி
  • 1950 – 4ஆம் இடம்
  • 1962 – குழு நிலை
  • 1966 – குழு நிலை
  • 1978 – குழு நிலை
  • 1982 – குழு நிலை
  • 1986 – காலிறுதி
  • 1990 – 16 அணிகள் பங்குகொள்ளும் சுற்று
  • 1994 – காலிறுதி
  • 1998 – குழு நிலை
  • 2002 – காலிறுதி
  • 2006 –16 அணிகள் பங்குகொள்ளும் சுற்று
  • 2010 – சம்பியன்
  • 2014 – குழு நிலை

2014 ஆம் ஆண்டு ஸ்பெயினுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அதனைஒரு உலகக் கிண்ண பேரழிவுஎன்று அழைப்பார்கள். நடப்புச் சம்பியனாக களமிறங்கிய அந்த அணி தொடரில் நெதர்லாந்து மற்றும் சிலியிடம் முறையே 5-1 மற்றும் 2-0 என தோல்வி அடைந்தது

 

இம்முறை எவ்வாறு தகுதி பெற்றது?

தகுதிகாண் போட்டியின்போது ஸ்பெயின் லைச்டன்ஸ்டைன் (8-0) அணிக்கு எதிராக மிகப் பெரிய வெற்றியை பெற்றதோடு அது அந்த அணி 2018 பிஃபா உலகக் கிண்ண போட்டிக்கு தகுதிபெற உதவியது. தகுதிகாண் போட்டிகளில் இத்தாலி மற்றும் அல்பேனிய அணிகளை தலா 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  

எனினும் ஐரோப்பாவின் தகுதிகாண் சுற்றுகளின்போது அரசியல் தலையீடு காரணமாக ஸ்பெயின் அணி உலகக் கிண்ணத்தில் தகுதி இழப்பு செய்வது குறித்து பிஃபாவின் எச்சிரிக்கைக்கு முகம்கொடுத்தது. எனினும் அந்த அணி போட்டிகளில் வீழ்த்தப்படாத அணியாக தொடர்ந்து நீடித்தது.

பின்னர் இஸ்ரேலுக்கு எதிரான போட்டியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று ஸ்பெயின் உலகக் கிண்ணத்திற்கான தகுதியை உறுதி செய்து கொண்டது. அண்மைய நட்புறவு போட்டிகளில் ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தை சமநிலை செய்த ஸ்பெயின் ஆர்ஜன்டீனாவுக்கு எதிராக 6-1 என்ற கோல் வித்தியாசத்தில் பாரிய வெற்றியை பெற்றது.

முகாமையாளர் மற்றும் ஆட்ட பாணி

2014 உலகக் கிண்ண போட்டிக்கு பின்னர் விசென்டே டெல் பொஸ்குவுக்கு பதில் ஸ்பெயின் அணியின் முகாமையாளராக இணைந்த ஜுனல் லொபடிகியு அந்த அணியில் சில மாற்றங்களை கொண்டுவந்தார். இளைய மற்றும் மூத்த வீரர்களிடையே நாளுக்கு நாள் மாற்றங்களை கொண்டுவந்து பரீட்சாத்தங்களில் ஈடுபட்டார்.

 

 

19 வயது மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட ஸ்பெயின் இளம் அணிகளுக்கு பயிற்சியாளராகவும் அனுபவம் பெற்ற அவர் உயர்மட்ட அளவில் ஒரு பயிற்சியாளராக ரஷ்யாவில் முதல் முறை ஸ்பெயின் அணியை வழிநடத்தவுள்ளார்.

லொபடிகியுவின் பயிற்றுவிப்பின் கீழ் முன்களத்தின் எல்லையில் ஆடும் வீரர்களின் பற்றாக்குறை காரணமாக கடந்த உலகக் கிண்ணத்தின் 4-3-3 இலிருந்து 4-5-1 ஆக அணியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. ரஷ்யா செல்லும் குழாம் குறித்து அவரது முடிவுகள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலமும் பலவீனமும்

மைதானத்தில் கையாளும் உத்திகள் மற்றும் தனித்துவமான ஆட்டமே அந்த அணியின் பலமாக உள்ளது. பார்சிலோனா மற்றும் ரியெல் மெட்ரிட் அணிகளின் அதிகமான வீரர்களை உள்ளடக்கி இருப்பது அந்த அணிக்கு வலுச் சேர்க்கிறது. கெரார்த் பிகு மற்றும் செர்ஜியோ ரமோஸ் பின்களத்தில் ஆதிக்கம் செலுத்துவது அணிக்கு பலமாகும்.

லொபடிகியுவின் அணித்தேர்வு சரிசமமாக இருக்கும் பட்சத்தில் அந்த அணிக்கு உண்மையான பலமாக அமையும். செர்ஜியோ புஸ்கெட்ஸ் கால் பெருவிரல் காயத்தில் அவதிப்படுவதோடு அவரது உடல் தகுதி அணியின் 11 வீரர்களுக்குள் அவரை இணைப்பதாக இருக்கும்.

சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அல்வாரோ மொராடா ஒரு மாற்று வீரராக டியாகோ காஸ்டாவுக்கு பதில் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட்டு அவர் தொடர்ந்து ஆட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். எவ்வாறாயினும் அவர் அணிக்கு திரும்பினால் அது மோர்டாவுக்கு சவாலாக அமைய வாய்ப்பு உள்ளது. இவர்கள் அணியின் முன்கள இரு வீரர்களுக்கான தேர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

முக்கிய வீரர்கள்

ஸ்பெயின் அணிக்காக அதிக கோல்கள் பெற்றிருக்கும் முன்னாள் அணித்தலைவர் டேவிட் வில்லா போன்ற பொற்கால தலைமுறையின் பல வீரர்களும் ஓய்வு பெற்றுள்ளனர். 2010 உலக சம்பியன் அணியில் இருந்த எக்சாவி ஹெர்னான்டஸ் மற்றும் எக்சாபி அலொன்சோவுடன் பெர்னாண்டோ டொரஸ் மற்றும் கார்லஸ் புயோல் ஆகிய பெரிய பெயர்கள் ஓய்வு பெற்றிருக்கும் நிலையில் அவர்கள் ரஷ்யாவில் இடம்பெற மாட்டார்கள்.

எவ்வாறாயினும் மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ணத்தை கைப்பற்ற புதிய குழாம் ஒன்று அணிதிரண்டுள்ளது. செர்ஜியோ ரமோஸ் ஸ்பெயின் அணியின் இரண்டாவது அனுபவம் மிக்க வீரராக இருப்பதோடு அணித்தலைவராக மிக முக்கிய வீரராகவும் முதன்மை வீரராகவும் உள்ளார். ரியெல் மெட்ரிட் அணியின் பின்களத்தின் மத்தியில் ஆடும் வீரரான ராமோஸ் பந்தை உயரச் செலுத்துவது மற்றும் பரிமாற்றும் திறன்கள் மூலம் எதிரணிக்கு சவாலாக இருப்பார் என்று நம்பப்படுகிறது. பெனால்டி எல்லைக்குள் தீர்மானிக்கப்பட்ட வீரராக கடைசி கட்டம் வரையில் நிலைத்திருப்பது அவரது பலவீனமாக பார்க்கலாம்.

ஸ்பெயின் சம்பியனாக பட்டம் வெல்ல வெற்றி கோல் அடித்த பார்சிலோனாவின் முன்னாள் அணித்தலைவரும் மத்திய கள வீரருமான அன்ட்ரஸ் இனியெஸ்டா மற்றொரு முக்கிய வீரராவார்

 

 

பார்க்க வேண்டியது

ரியெல் மெட்ரிட் நட்சத்திரமான இஸ்கோ, ஒரு தாக்குதல் மத்திய கள வீரராக இத்தாலிக்கு எதிரான தகுதிகாண் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தியவராவார். அவருடன் லொபடிகியுவின் பயிற்சியின் கீழ் அதிகப்படியாக 11 கோல்கள் பெற்ற டேவிட் சில்வா பார்க்கப்பட வேண்டிய வீரராக உள்ளார்.

ரியெல் மெட்ரிட் நட்சத்திரம் மார்கோ அசென்சியோவும் ரஷ்யாவில் ஒரு திருப்புமுனை வீரராக இருக்க வாய்ப்பு உள்ளது.   

இறுதிக் குழாம்

கோல்காப்பாளர்கள்: கெபா அரிசபலங்கா, டேவிட் டி கீ, பெபெ ரெய்னா

பின்கள வீரர்கள்: ஜோர்டி அல்பா, நசோ மொன்ரியல், சீசர் அஸ்பிலிகியுடா, டானி கர்வஜால், நசோ, அல்வாரோ ஒட்ரியோசோலா, கெரார்ட் பிகு, செர்கியோ ரஜிஸ்

மத்தியகள வீரர்கள்: மார்கோ அசன்சியோ, செர்கியோ புஸ்கியுட், அன்ட்ரஸ் இனியஸ்டா, இஸ்கோ, கோகே, சவுல் நிகுவஸ், டேவிட் சில்வா, தியாகோ அல்சன்டாரா, லூகாஸ் வாஸ்குவஸ்

முன்கள வீரர்கள்: இகோ அஸ்பாஸ், டிகோ கொஸ்டா, ரொட்ரிகோ

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

யார் வெல்வார் என குறி சொல்லும் ரஷிய பூனை

 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எந்த அணி வெல்லும் என ரஷியாவைச் சேர்ந்த காது கேளாத அச்சிலீஸ் என்ற பெயர் கொண்ட பூனை குறி சொல்ல அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் போதும் விலங்குகளைக் கொண்டு பட்டம் வெல்லும் அணி எது என முன்கூட்டியே கணித்து கூறப்படுகிறது.
இதன்படி கடந்த 2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் பால் என்ற பெயர் கொண்ட ஆக்டோபஸ் குறி சொல்லியது. ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என சரியாக கணித்தது.
அதற்கடுத்து 2014 பிரேசில் கால்பந்து போட்டியின் போது ஐக்கிய அரபு நாட்டில் பாலைவனத்தில் இருந்த ஷாகின் என்ற ஓட்டகம் எந்த அணி வெல்லும் என குறி சொல்லியது. அதன் முன்பு கால்பந்து ஒன்றையும், இரு அணிகளின் கொடிகளையும் வைத்து அது தனது பல்லால் எந்த அணி என கணித்து கூறியது. 
அச்சிலீஸ் பூனை
அதே போல் தற்போது ரஷிய உலகக் கோப்பை போட்டிக்கும் காது கேளாத அச்சிலீஸ் பூனை அதிகாரப்பூர்வ குறி கூறும் பூனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அச்சிலீஸ் பூனை முன்பு இரு அணிகளின் கொடிகள் அடங்கிய கிண்ணம் வைக்கப்பட்டு எந்த அணி வெல்லும் என அது குறிப்பிடும்.

http://www.dinamani.com/sports/sports-news/2018/jun/10/யார்-வெல்வார்-என-குறி-சொல்லும்-ரஷிய-பூனை-2936668.html

Link to comment
Share on other sites

கொலம்பியாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்துவாரா ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ்?

 

 
Player%20Namecol
07CHPMUJAMESRODRIGUEZ2

ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ்   -  AFP

 
 
 

கொலம்பியா அணி உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதி பெறுவது இது 5-வது முறையாகும். தென் அமெரிக்க கண்டங்களுக்கு இடையிலான தகுதி சுற்றில் கொலம்பியா 4-வது இடம் பிடித்து ரஷ்ய உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. தகுதி சுற்றில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே, சிலி ஆகிய அணிகளுக்கு எதிராக ஒரு ஆட்டத்தில் கூட கொலம்பியா வெற்றி பெறவில்லை. அதேவேளையில் இரு முறை ஈக்வேடார் அணியை வீழ்த்தியது. கடைசி ஆட்டத்துக்கு முன்பு வரை கொலம்பியா அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதை உறுதி செய்யாமலேயே இருந்தது. பெரு அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தை 1-1 என்ற கணக்கில் டிரா செய்ததால் ரஷ்ய உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றது.

 

1990-ம் ஆண்டு காலகட்டத்துக்கு பிறகு ரேடமெல் ஃபல்காவோ கேப்டனாக இருக்கும் தற்போதைய கொலம்பியா அணி வலுவானதாகக் கருதப்படுகிறது. நட்சத்திர வீரர்களான ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், குயின்டெரோ ஆகியோர் முன்னாள் சிறந்த வீரர்களான கார்லோஸ் வால்டர்ராமா, ஃபாஸ்டினோ அஸ்பிரில்லா ஆகியோருடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகின்றனர். பிரேசிலில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் கொலம்பியா அணி கால் இறுதி வரை முன்னேறியிருந்தது.

கொலம்பியா வீரர் ரோட்ரிக்ஸ் தற்போது பேயர்ன் முனிச் கிளப் அணிக்காக விளையாடி தனது வாழ்வின் சிறந்த வடிவத்தில் உள்ளார். கொலம்பியா அணியின் 4-2-3-1 என்ற பார்மட்டில் ரோட்ரிக்ஸால் மீண்டும் ஒரு அற்புதமான ஆட்டத்திறனை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும். ரோட்ரிக்ஸ் போன்றே குயின்டெரோவும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன் கொண்டவர். ரிவர் பிளேட் கிளப் அணிக்காக விளையாடி வரும் அவர், தனது இடது கால் மந்திரத்தால் ஆல்ரவுண்ட் திறனை வெளிப்படுத்தக்கூடிய வீரராக திகழ்கிறார்.

நடுகளத்தில் அபெல் அகுய்லார், கார்லோஸ் சான்செஸ் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். இவர்களுடன் ஸ்டிரைக்கர்களான லூயிஸ் முரியல், குவாடரடோ, வில்மார் பரியோஸ், எட்வின் கார்டோனா ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். கேப்டன் ரேடமெல் ஃபல்காவோ இந்த சீசனில் பிரெஞ்ச் லீக்கில் மோனாக்கோ கிளப் அணிக்காக 18 கோல்கள் அடித்து அற்புதமான பார்மில் உள்ளார். டிபன்ஸில் கிறிஸ்டின் ஸபாடா, டேவின்சன் சான்செஸ், யெர்ரி மினா ஆகியோர் பலமானவர்களான உள்ளனர்.

ஆர்சனல் கிளப் அணிக்காக விளையாடி வரும் டேவிட் ஒஸ்பினா கோல்கீப்பராக உள்ளார். ரஷ்ய உலகக் கோப்பையில் ஹெச் பிரிவில் இடம் பெற்றுள்ள கொலம்பியா அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதில் எந்தவித சிரமமும் இருக்காது என்றே கருதப்படுகிறது. இதே பிரிவில் ஜப்பான், செனகல், போலந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

68 வயதான பயிற்சியாளரான ஜோஸ் பெக்கர்மனின், களயுத்திகள் கடந்த காலத்தில் சில முக்கியமான ஆட்டங்களில் வெற்றியை தேடித்தரும் வகையில் அமைந்ததில்லை. முக்கியமாக 2006-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பெக்கர்மன் அர்ஜென்டினா அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். அப்போது ஜெர்மனி அணிக்கு எதிரான கால் இறுதியில் 1-0 என முன்னிலை வகித்த நிலையில் தேவையில்லாமல் 2-வது பாதியில் முன்னணி வீரரான ஜூவான் ரோமன் ரிக்யூல்மியை வெளியே அமரவைத்தார்.

இதனால் 80-வது நிமிடத்தில் ஜெர்மனி கோல் அடிக்க ஆட்டம் டிரா ஆகி பெனால்டி ஷூட் அவுட்டுக்கு சென்றது. இதில் அர்ஜென்டினா 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டிருந்தது. இந்த தோல்விக்கு ஜோஸ் பெக்கர்மனின் மோசமான களவியூகமே கார ணம் என கடும் விமர்சனங்கள் எழுந்தது.

தற்போது கொலம்பியா அணியிலும் ஜோஸ் பெக்கர்மன் உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டங்களில் சில சந்தர்ப்பங்களில் அணியின் வெற்றிக்கான பாணிகளை மாற்ற முயன்றார். ஆனால் அவை தோல்விகளையே கொடுத்தது. இதனால் ஊடகங்களின் கடும் விமர்சனத்துக்கும் ஆளானார் ஜோஸ் பெக்கர்மன்.

கடந்த கால கசப்பான அனுபவங்களில் இருந்து ஜோஸ் பெக்கர்மன் பாடம் கற்றுக் கொண்டு, தற்போதைய பார்முலாவை சரியாக கடைபிடிக்கும் பட்சத்தில் கொலம்பியா அணி தனது திறனுக்கு தகுந்தபடி நிச்சயம் ரஷ்ய உலகக் கோப்பையில் சாதனை படைக்க முயற்சிக்கலாம்.

http://tamil.thehindu.com/sports/article24127025.ece

Link to comment
Share on other sites

கோப்பைக் கனவில் டென்மார்க் அணி

SAN-CHRISTIAN-ERIKSEN-3

கிறிஸ்டியன் எரிக்சன்.   -  REUTERS

SAN-CHRISTIAN-ERIKSEN-2

கிறிஸ்டியன் எரிக்சன்.   -  REUTERS

 

 

உலகக் கோப்பை போட்டிக்கு முன்னேறுவது டென்மார்க் அணிக்கு இது 5-வது முறையாகும். முதன்முறையாக 1958-ல் உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் டென்மார்க் விளையாடியது. ஆனால் தகுதிச் சுற்று 4 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு வெளியேறியது. இதைத் தொடர்ந்து முதன்முறையாக 1986-ல் உலககக் கோப்பை கால்பந்து தொடருக்கு முன்னேறியது. 1986-ல் முதல் சுற்றில் 3 ஆட்டங்களையும் வென்று கம்பீரமாக முன்னேறியது டென்மார்க். ஆனால் 2-வது சுற்றில் பலம் வாய்ந்த ஸ்பெயினிடம் தோற்று வெளியேறியது அந்த அணி.

 

அதைத் தொடர்ந்து 98-ல் அபாரமாக விளையாடி கால் இறுதி வரை ஏற்றம் கண்டது அந்த அணி. ஆனால் கால் இறுதியில் அசுர பலம் கொண்ட பிரேசிலிடம் 3-2 என்ற கணக்கில் தோல்வி கண்டு வெளியேறியது டென்மார்க்.

இதுநாள் வரை உலகக் கோப்பையில் டென்மார்க்கின் அதிகபட்ச முன்னேற்றம் கால் இறுதி வரைதான் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதன்பிறகு 2002-ல் 2-வது சுற்றுடனும், 2010-ல் முதல் சுற்றுடனும் மூட்டைக் கட்டியது டென்மார்க்.

இந்த முறை உலகக் கோப்பைத் தொடரின் தகுதி முதல் சுற்று ஆட்டங்களில் குரூப் இ பிரிவில் 2-வது இடத்தைப் பிடித்தது டென்மார்க். முதலிடத்தை 25 புள்ளிகளுடன் போலந்து பிடித்தது. 20 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பெற்ற டென்மார்க் ஒரு பிளே-ஆப் ஆட்டத்தில் அயர்லாந்து அணியுடன் மோத வேண்டியிருந்தது. இந்த ஆட்டத்தில் டென்மார்க் கால்பந்து வீரர்கள் தங்களது வாழ்நாளில் அற்புதமான ஆட்டம் ஆடினார்கள். இதனால் ஆட்டத்தை 5-1 என்ற கணக்கில் டென்மார்க் அணியினர் வெற்றியுடன் முடித்து ரஷ்யாவுக்கு பயணம் செய்ய ஆயத்தமாகிவிட்டனர்.

அயர்லாந்துடனான ஆட்டத்தில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன், தனது உயர்மட்ட ஆட்டத் திறனை வெளிப்படுத்தினார். அவர் அடித்த ஹாட்ரிக் கோல்களால் அணி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த முறை உலகக் கோப்பை கால்பந்துத் தொடரில் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில்தான் பலம்வாய்ந்த பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பெரு அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பிரான்ஸ் அணியை வீழ்த்த டென்மார்க் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும்.

டென்மார்க்கின் பலமாக இருப்பது கிறிஸ்டியன் எரிக்சன், நிக்கோலய் ஜோர்கென்சன், ஆந்திரயஸ் கார்னீலிய்ஸ், தாமஸ் டெலானி, வில்லியம் கிவிஸ்ட் ஆகியோர் அடங்கிய ஐவர் கூட்டணி. முன் களத்தில் எரிக்சன் ஜோராகக் கடத்திச் செல்ல நடுகளப் பகுதியில் தாமஸ் டெலானியும், வில்லியம் கிவிஸ்டும் ஜோடி போட்டு அரணாக நிற்கின்றனர். இவர்களை ஒருங்கிணைக்கும் கேப்டனாக சைமன் ஜாயேர், நடுகளத்தில் நங்கூரமிட்டு நிற்கிறார்.

அயர்லாந்துக்கு எதிரான பிளே-ஆப் சுற்றின்போது ஆந்திரியஸ், கிறிஸ்டியன் எரிக்சன் ஆகியோர் ஜோடி போட்டு பந்துகளைக் கடத்திச் சென்று அற்புதம் புரிந்தனர்.

அதைப் போலவே ஸ்டிரைகர் லார்சன், பீட்டர் ஆங்கர்சன், ஹென்றிக் டால்ஸ்கார்ட் ஆகியோரும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து களத்தில் பரிமளித்தால் அது டென்மார்க் வெற்றிக்கு உதவும்.

அதேபோல கிவிஸ்டும், டெலானியும் களத்தில் இணைந்து பந்தைக் கடத்துவதில் தீவிரம் இல்லாத நிலை உள்ளது. இதையெல்லாம் சீர்படுத்தும் முயற்சியில் பயிற்சியாளர் ஏஜ் ஹரீட் இறங்கியுள்ளார்.

நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வரும் கிறிஸ்டியன் எரிக்சனை பெரும்பாலும் நம்பி களம் காண்கிறது டென்மார்க். இந்த முறை முதல் சுற்றில் டென்மார்க் எளிதில் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று கால்பந்து விமர்சகர்கள் கணித்துள்ளனர். ஆனால் 2-வது சுற்று அந்த அணிக்கு கடினமாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கோப்பையை வெல்லும் தீவிரத்துடன் களமிறங்குகிறது டென்மார்க்.

http://tamil.thehindu.com/sports/article24127021.ece

Link to comment
Share on other sites

சாதிக்கத் தயாராகும் போலந்து

 

 
Player%20Name-11-6-2018col
11-ch-SAN-ROBERT-1

லெவன்டோவ்ஸ்கி   -  AFP

11-ch-SAN-ROBERT-2

ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி   -  REUTERS

 

 

 

உலக கால்பந்து அரங்கில் செல்லமாக கழுகுகள் (தி ஈகிள்ஸ்) என்று அழைக்கப்படும் போலந்து அணி உண்மையிலேயே கோப்பையை வெல்வதற்குத் தேவையான வீரர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. தரம் வாய்ந்த வீரர்கள், அதி அற்புதமான ஒருங்கிணைக்கும் திறன், திறமையான பயிற்சியாளர், வீரர்கள் மீது உயிரையே வைத்திருக்கும் ரசிகர் கூட்டம் என போலந்து கால்பந்து அணிக்கு ஏகப்பட்ட சிறப்பு அம்சங்கள் உள்ளன.

 

இந்த முறை உலகக் கோப்பைக்கான கால்பந்து தகுதிச் சுற்றில் ஐரோப்பாவின் குரூப் ஈ பிரிவில் போலந்து இடம்பெற்றிருந்தது. மொத்தம் 10 தகுதிச் சுற்று ஆட்டங்களில் 8-ல் அட்டகாசமான வெற்றியைப் பறித்தது போலந்து.

ஒரு போட்டியில் டிராவும், ஒரு போட்டியில் தோல்வியையும் அந்த அணி சந்திக்க வேண்டியிருந்தது.

மேலும் 28 கோல்களைச் செலுத்திய போலந்து, எதிரணியிடம் 14 கோல்களை மட்டுமே வாங்கியிருந்தது. மொத்தம் 25 புள்ளிகளைப் பெற்ற போலந்து, குரூப் ஈ பிரிவில் முதலிடம் பெற்று ரஷ்ய உலகக் கோப்பை போட்டிக்கு தகுதியைப் பெற்றது.

தகுதிச் சுற்று ஆட்டங்களின்போது மோன்டெனக்ரோ, ருமேனியா, அர்மீனியா, கஜகஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் அமர்க்களமான வெற்றியைப் பெற்றது. ஆனால் கோபன்ஹேகனில் நடைபெற்ற டென்மார்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 0-4 என்ற கணக்கில் மோசமான தோல்வியைப் பதிவு செய்தது. ஆனால் அதே நேரத்தில் டென்மார்க் அணிக்கு எதிரான மற்றொரு ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் வெற்றி கண்டது போலந்து. தகுதிச் சுற்றின் முடிவில் மற்ற வெற்றிகளின் காரணமாக எளிதில் ரஷ்ய உலகக் கோப்பைக்குள் போலந்து நுழைந்தது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது கேப்டன் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கியின் அசகாய ஆட்டம்தான்.

அந்த அணி செலுத்திய 28 கோல்களில் 16 கோல்களை செலுத்தியவர் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கிதான் என்பது இங்கு குறிப்பிடத் தகுந்த விஷயமாக அமைந்துள்ளது.

ருமேனியா, டென்மார்க் அணிக்கெதிரான ஆட்டங்களின்போது ஹாட்ரிக் கோல்களைச் செலுத்தினார் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி. இதனால் உலகக் கோப்பைக்கு அணியைத் தகுதி பெறச் செய்ததில் முக்கியமான காரணமாக ராபர்ட் அமைந்தார்.

அணியின் முதுகெலும்பாகவும், தலைமை வீரனாகவும் இருப்பவர் ராபர்ட்தான். அவர்தான் அணிக்கு முக்கிய பலமாக இருக்கிறார் என்று பயிற்சியாளர் ஆதம் நவால்கா புகழ்ந்துள்ளார்.

பேயர்ன் மூனிச் அணிக்காக ஆடி வருபவர்தான் ராபர்ட். பேயர்ன் மூனிச் கிளப் அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் ராபர்ட், அந்த அணிக்காக 2014-ம் ஆண்டு முதல் ஆடி வருகிறார். பேயர்ஸ் மூனி அணி சார்பில் 126 முறை களமிறங்கி அவர் 106 கோல்களை அடித்து அசத்தியுள்ளார்.

போலந்து தேசிய அணிக்காக 2008 முதல் களமிறங்கி கலக்கி வருகிறார் ராபர்ட். இதுவரை போலந்து அணிக்காக 93 போட்டிகளில் விளையாடியுள்ள ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி 52 கோல்களை அடித்துள்ளார். பல விருது களையும், கோப்பைகளையும் போலந்து அணிக்காக அவர் பெற்றுத் தந்துள்ளார். போலந்து நாட்டின் ரசிகர்கள் ஒட்டுமொத்தத்தையும் கவர்ந்திருப்பவர் ராபர்ட்.

உலகக் கோப்பைத் தகுதி சுற்று ஆட்டங்களில் ஐரோப்பிய பிரிவில் அதிக கோல்கள் அடித்தவரும் இவர்தான். மொத்தம் 16 கோல்களை அடித்த இவர், 2 முறை ஹாட்ரிக் கோல்களும் அடித்தார். அணியின் ஸ்டிரைக்கரான ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி அணி வீரர்களை கட்டுக்கோப்பாகவும், திறமையாகவும் வழிநடத்துவதில் வல்லவர். அணியின் பாரத்தை மொத்தமாக சுமந்து கொண்டு ரஷ்யாவுக்குச் சென்றுள்ளார் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி. போலந்து நாட்டின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளார் ராபர்ட்.

அதே நேரத்தில் அணியின் முக்கிய வீரர்கள் சிலர் காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. அர்க்காடியுஸ் மிலிக், குபா பிளாஸ்சைக்கோவ்ஸ்கி ஆகியோர் காயமடைந்துள்ளனர். மேலும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் எதிர்பார்த்த உயர்மட்ட அளவிலான திறனை போலந்து அணி வெளிப்படுத்தவில்லை. கேப்டன் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கியும் கூட தனது திறமையை அங்கு நிரூபிக்கத் தவறியது பயிற்சியாளர் நவால்காவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

1938, 1974, 1978, 1982, 1986, 2002, 2006 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றது போலந்து. தற்போது 8-வது முறையாக உலகக் கோப்பைத் தொடரில் நுழைந்துள்ளது. 1974, 1982-ம் ஆண்டுகளில் 3-வது இடத்தைப் பிடித்ததே போலந்து அணியின் உலகக் கோப்பையில் அதிகபட்ச வெற்றியாகும். இந்த முறை உலகக் கோப்பையில் குரூப் எச் பிரிவில் செனகல், ஜப்பான், கொலம்பியா அணிகளுடன் இணைந்துள்ளது போலந்து. பார்ப்பதற்கு எளிதான அணிகள் போன்று இருந்தாலும் செனகல், ஜப்பான், கொலம்பியா அணிகள் போலந்தின் திறமைக்குச் சவால் விடும் அணிகளாக இருக்கின்றன. எனவே போலந்து அணிக்கு முதல் சுற்று கடுமையாக இருக்கப் போகிறது.

ஆனால், போலந்து கால் இறுதி வரை முன்னேறும் என கால்பந்து விமர்சகர்கள் கணித்துள்ளனர். கோப்பைக் கனவில் போலந்து வீரர்கள் ரஷ்யாவுக்குச் சென்றுள்ளனர். கோப்பையை வென்று சாதிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

http://tamil.thehindu.com/sports/article24133242.ece

Link to comment
Share on other sites

ஆஸ்திரியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பிரேசில் அபார வெற்றி

 

உலக கோப்பை கால்பந்து போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் பிரேசில், ஆஸ்திரியா மோதின. இந்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது. #FIFO2018 #Brazil #Austria

 
 
 
 
ஆஸ்திரியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பிரேசில் அபார வெற்றி
 
வியன்னா:

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி, தனது முதலாவது லீக்கில் சுவிட்சர்லாந்தை 17-ந்தேதி சந்திக்கிறது.

இதையொட்டி பிரேசில் அணி தனது கடைசி பயிற்சி ஆட்டத்தில் நேற்று ஆஸ்திரியாவுடன் வியன்னா நகரில் மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் வசமே பந்து அதிகமாக (65 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தது. பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் கேப்ரியல் ஜீசஸ் 36-வது நிமிடத்திலும், நெய்மார் 63-வது நிமிடத்திலும், பிலிப் காட்டினோ 69-வது நிமிடத்திலும் கோல் போட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினர். இறுதியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை எளிதில் வீழ்த்தியது. நெய்மார், பிரேசில் அணிக்காக அடித்த 55-வது கோல் இதுவாகும். இதன் மூலம் அதிக கோல் அடித்த பிரேசில் வீரர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கும் ரொமாரியோவை சமன் செய்தார். பிரேசில் அணி கடைசியாக ஆடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி உலக கோப்பை போட்டிக்குள் நுழையும் பிரேசிலுக்கு புத்துணர்ச்சியையும், கூடுதல் நம்பிக்கையையும் அளித்துள்ளது.

மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, துனிசியாவை எதிர்கொண்டது. முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி, முதல் பாதியில் இலக்கை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்கவில்லை. எப்படியோ 84-வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் லகோ அஸ்பாஸ் அடித்தகோலின் உதவியுடன் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. #FIFO2018 #Brazil #Austria

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/11091929/1169261/Brazil-beats-Austria-in-World-Cup-warmup.vpf

Link to comment
Share on other sites

உலகக் கோப்பைக் கால்பந்து... முதல் போட்டியில் சவுதியை துவம்சம் செய்த ரஷ்யா!

உலகக் கோப்பை கால்பந்து 2018 ஆம் ஆண்டின் முதல் போட்டியில் ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி  அரேபியாவை வீழ்த்தி 3 புள்ளிகளைப் பெற்றது.

உலகக்கோப்பை கால்பந்து தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். முந்தைய தொடர் 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்தது. அதில், ஜெர்மனி அணி வாகை சூடியது. 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நேற்று இரவு 8.30 மணிக்குத் தொடங்கியது. 

உலகக் கோப்பை கால்பந்து

நேற்று இரவு 8 மணிக்கு கோலாகலமான தொடக்க விழாவுடன் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. விழாவில் இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோ பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைத்தார்

 
உலகக் கோப்பை கால்பந்து 2018 ஆம் ஆண்டின் முதல் போட்டியில் ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி  அரேபியாவை வீழ்த்தி 3 புள்ளிகளைப் பெற்றது.

உலகக்கோப்பை கால்பந்து தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். முந்தைய தொடர் 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்தது. அதில், ஜெர்மனி அணி வாகை சூடியது. 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நேற்று இரவு 8.30 மணிக்குத் தொடங்கியது. 

உலகக் கோப்பை கால்பந்து

நேற்று இரவு 8 மணிக்கு கோலாகலமான தொடக்க விழாவுடன் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. விழாவில் இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோ பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

 
Advertisement
 
 

உலகக் கோப்பையில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றான நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

21-வது உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் மோதின. போட்டி தொடங்கிய 12-வது நிமிடத்தில் ரஷ்ய அணியின் கசின்ஸ்கீ கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 43-வது நிமிடத்தில் டென்னிஸ் செரிஷேவ் இரண்டாவது கோல் அடித்தார். இதனால் போட்டியின் முதல்பாதியில் ரஷ்யா 2-0 என முன்னிலையில் இருந்தது.

AP18165601723404_01431.jpg

போட்டியின் இரண்டாவது பாதியில் 71-வது நிமிடத்தில் ரஷ்யாவின் டிசியூபா கோல் அடித்தார். போட்டியின் இறுதி நேரத்தில் ரஷ்யாவின் டென்னிஸ் செரிஷேவ் தனது இரண்டாவது கோலை அடித்தார். அதன்பின் ரஷ்யாவின் கோலோவின் ஒரு கோல் அடித்தார். சவுதி அரேபியா அணியினர் இறுதிவரை முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளைப் பெற்றது.

Vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாவு கிராக்கி,
அது,  சவூதிக்கு,  துவம்சம்  அல்ல,  அதுதான்...   திவசம். 

Link to comment
Share on other sites

ஹாட்ரிக் கோல் அடித்த ரொனால்டோ - டிராவில் முடிந்தது

ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடிக்கப் பரபரப்பான போர்ச்சுக்கல் - ஸ்பெயின் டிராவில் முடிந்தது. 

ரொனால்டோ

உலகக் கோப்பைக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் போர்ச்சுக்கல் - ஸ்பெயின் அணிகள் மோதின. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பைக் கால்பந்து தொடர் ரஷ்யாவில் நேற்று தொடங்கியது. இதன் முதல் போட்டியில் ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி 3 புள்ளிகளைப் பெற்றது. இதையடுத்து இன்று 3 போட்டிகள் நடைபெற்றன. இதில் முக்கிய மற்றும் கடைசி ஆட்டமாகப் புகழ்பெற்ற போர்ச்சுக்கல் - ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் பலத்த எதிர்ப்பார்க்கிடையில் போர்ச்சுக்கல் கேப்டனும்,  நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறங்கினார்.

ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க அதைச் சரியாக பயன்படுத்தி ரொனால்டோ கோல் அடித்தார். இதனையடுத்து ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் தியாகோ கோஸ்டா கோல் அடிக்க 1 - 1 ஆட்டம் சமமானது. பின்னர்  44-வது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 2 - 1 என்ற கணக்கில் போர்ச்சுக்கல் முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியதும், ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. 55-வது நிமிடத்தில் தியாகோ கோஸ்டா மீண்டும் கோல் அடிக்க, 58-வது நிமிடத்தில் நாச்சோ ஒரு கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் 3- 2 முன்னிலை பெற்றது.

AP18166694353658_03271.jpg

இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. கடைசிக்கட்டத்தை எட்டிய போது ஆட்டம் முடிய 2 நிமிடமே இருந்த நிலையில், பிரீ- கிக் மூலம் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடிக்க ஆட்டம் 3 - 3 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. முன்னதாக நடந்த முதல் ஆட்டத்தில்  எகிப்தைவீழ்த்தி உருகுவேவும் , இரண்டாவது ஆட்டத்தில் மொராக்கோவை வீழ்த்தி ஈரானும் வெற்றிபெற்றது. 

Vikatan

Link to comment
Share on other sites

FIFA 2018 - நைஜீரியாவை வீழ்த்தியது குரோசியா

FIFA 2018 - நைஜீரியாவை வீழ்த்தியது குரோசியா

 

உலக கிண்ண கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற டி பிரிவில் இடம்பிடித்துள்ள குரோசியா, நைஜீரியா அணிகள் மோதின. 

இப்போட்டியின், முதல் பாதிநேர ஆட்டத்தின் 32 வது நிமிடம் குரோசியா வீரர் ஒருவர் கோல் அடிக்க முயற்சித்தார். அந்த பந்து நைஜீரியா வீரர் எடிபோவின் காலில் பட்டு சுய கோலாக மாறியது. இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் குரோசியா அணி 1-0 என முன்னிலை பெற்றது. 

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 71 வது நிமிடம் குரோசியா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் குரோசியா வீரர் மோட்ரிச் கோல் அடித்தார். இதனால் குரோசியா அணி 2-0 என முன்னிலை பெற்றது. 

இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இறுதியில், குரோசியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

இன்று மூன்று லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கோஸ்டா ரிக்கா - செர்பியா, ஜெர்மன் - மெக்சிகோ, பிரேசில் - சுவிட்சர்லாந்து அணிகள் பலப்பரீட்சை களம் இறங்க உள்ளன.
Link to comment
Share on other sites

திணறிய பிரேசில்..! நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup

ரஷ்யாவில் நடந்துகொண்டிருக்கும் 2018-ம் ஆண்டின் கால்பந்து உலகக் கோப்பையில், பிரேசில் மற்றும் ஸ்விட்சர்லாந்து இடையில் நடைபெற்ற போட்டியில் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த உலகக் கோப்பையின் தொடக்கத்திலிருந்தே வலுவான அணிகள் அனைத்தும் அடிகள் பல வாங்கிக் கொண்டிருப்பது உலகளாவிய கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர்ச்சுகல், அர்ஜென்டைனா போன்ற அணிகள் எவ்வளவு சிரமப்பட்டும் வெற்றிக்கான கோலை அடிக்க முடியாமல் ஆட்டத்தை டிராவில் தான் முடிக்க முடிந்தது. ஞாயிறு ஆட்டத்தில்கூட சென்ற உலகக் கோப்பையின் சாம்பியனான ஜெர்மனியே இந்தமுறை முதல் ஆட்டத்திலேயே தோல்வியைத் தழுவியிருப்பது மற்ற அணிகள் புத்துயிர் பெற்றுக்கொண்டிருப்பதைக் காட்டுகிறது. இதுவரை பிரசில் பங்கேற்ற 20 உலகக் கோப்பைத் தொடரின் முதல் ஆட்டங்களில் 16 முறை வெற்றியை பதிவு செய்துள்ளது. அத்தகைய வலிமையான அணியை இன்றைய ஆட்டத்தில் டிராவில் முடிக்கவைத்து தன்னை வலிமையான அணியாக நிருபித்துள்ளது ஸ்விட்சர்லாந்து.  

பிரேசில்

அந்த வரிசையில் தற்போது பிரேசிலும் ஸ்விட்சர்லாந்திற்கு எதிராக ஆடிய ஆட்டத்தில் அதே நிலையைச் சந்தித்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான நெய்மர் மீதே எதிரணியினரின் குறி இருந்தது. ஆட்டத்தின் நடுவே பல சூழ்நிலைகளில் பந்தைச் சரியாகக் கொண்டுசேர்க்க விடாமல் தடுக்கப்பட்டார். பிலிப் கொடினோஹ் முதல் பாதியின் இறுதியில் ஒரு கோல் அடித்து பிரேசில் ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்தார்.

ஆனால், இரண்டாவது ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டீவன் ஸூபர் ஒரு கோல் அடித்துச் சமன்செய்தார். அதன்பிறகான ஆட்டத்தில் இரண்டு அணியிரும் தங்களைத் தற்காத்துக் கொள்ள முனைந்ததில் டிராவில் முடிந்தது ஆட்டம். ஐந்து முறை உலகக் கோப்பை சாம்பியனாக இருந்த பிரேசில் அணி இன்றைய ஆட்டத்தில் வளர்ந்துவரும் ஸ்விட்சர்லாந்திற்கு எதிராக வெற்றியடைய முடியாமல் திணறியதும், பல்வேறு சூழல்களில் நெய்மர் வீழ்த்தப்பட்டதும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan

Link to comment
Share on other sites

இங்கிலாந்து வெற்றி..! தோற்றாலும் கெத்துகாட்டிய துனிசியா #Worldcup

இரண்டாவது முறையாகக் கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிக்குள் நுழைந்திருக்கும் துனிசியா கடந்த ஆண்டுகளில் ஆப்பிரிக்கக் கோப்பைக்கான போட்டிகளில் காங்கோ, எகிப்து, அல்ஜீரியா போன்ற ஆப்பிரிக்க முக்கிய அணிகளை வென்று தனது வலிமையை உணர்த்தியிருந்தது. இருப்பினும், இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் துனிசியா மீதிருந்த எதிர்பார்ப்பைவிட இங்கிலாந்து வென்றுவிடுமென்ற மனநிலையே பெரும்பாலான பார்வையாளர்கள் கொண்டிருந்தனர். முதல் ஆட்டத்திலேயே வலிமையான அணியோடு மோதுவது துனிசியா ரசிகர்களுக்கும் சிறிது கலக்கத்தைத்தான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், ஆட்டத்தின் முதல் பாதி முடிந்துவிட்ட நிலையில் ரசிகர்களின் மனநிலை மாறியிருக்க வாய்ப்புகள் உண்டு. எதிரணி எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும் இது எங்கள் ஆட்டம் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதுபோல் விளையாடிய துனிசியாவின் தற்காப்பு வியூகம், தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்ட இங்கிலாந்து பலமுறை கோல் போட முயன்றபோதும் உத்வேகத்தோடு தடுத்தது.

துனிசியா

Photo Courtesy: Reuters

 
இவர்கள்்களை தடுத்துப் போராடிய துனிசியா கோல் கீப்பர் மோயிஸ் ஹஸன் 11-வது நிமிடத்தில் ஜான் ஸ்டோன்ஸ் தலையால் தட்டிக் கோல் போட முயல திறமையாகத் தட்டிவிட்டார். துருதிரஷ்டவசமாக அருகே நின்றுகொண்டிருந்த இங்கிலாந்து அணியின் கேப்டனான ஹாரி கேன், ஹஸன் தட்டிவிட்ட பந்தை மீண்டும் உதைத்துக் கோல் போட்டார். அதைத் தடுக்க முயன்றபோது ஏற்பட்ட காயத்தால் வெளியேறிய ஹஸன் தன்னால் ஏற்பட்ட பின்னடைவை நினைத்துக் கண்ணீர் வடித்தவாறு களத்தைவிட்டுச் சென்றார். அவருக்கு மாற்றாக வந்த பென் முஸ்தஃபா, அதற்குப் பிறகு இங்கிலாந்தின் கேன், லிங்கார்டு, ஸ்டெர்லிங் போன்ற ஆட்டக்காரர்களை  கோல் போட விடவில்லை. 35-வது நிமிடத்தில் பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்து.

ஃபெர்ஜானி சஸ்ஸி கோல் போட்டார். அந்த பெனால்டி மூலம் முதல் பாதி முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமமாக இருந்தது. இரண்டாவது சுற்றில் இங்கிலாந்து அணி கோல் போடுவதற்குத் தன் அனைத்து சக்தியையும் திரட்டிப் போராடியது. லிங்கார்டு, ஆல்லி டெலே, கேன் ஆகிய வீரர்கள் துனிசிய வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டார்கள். துனிசிய வீரர்களின் தற்காப்பு வியூகத்தை நன்றாக வகுத்துள்ளார் அவர்களின் பயிற்சியாளர் நபில். ஆனால், ஆட்ட நேரம் முடிந்து கூடுதலாக நான்கு நிமிடம் கொடுக்கப்பட்டபோது, இரண்டாவது நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக் மூலம் வந்த பந்தைத் தலையில் தட்டிவிட்டு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் தனது இரண்டாவது கோலை அடித்து வெற்றியைத் தேடித்தந்தார். துனிசியா அணி தோல்வியைத் தழுவியிருந்தாலும், இங்கிலாந்திற்கு இறுதிவரை தோல்வி பயத்தைக் காட்டும் அளவிற்கு அதன் தற்காப்பு ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. ஆட்ட இறுதியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Vikatan

Link to comment
Share on other sites

 

 

உலகக்கோப்பை கால்பந்து : எகிப்து அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது ரஷ்யா!

21-வது உலகக்கோப்பை கால்பந்துத் தொடர் தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. குரூப் 'ஏ' பிரிவில், ரஷ்யா மற்றும் எகிப்து அணிகள் மோதிய ஆட்டம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணி, எகிப்தை எளிதாகத் தோற்கடித்தது.

உலகக்கோப்பை கால்பந்து : எகிப்தை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரஷ்ய வீரர்கள்

5-0 என்ற கோல் கணக்கில் தனது முதல் போட்டியில் சவுதி அரேபியாவை துவம்சம் செய்த ரஷ்ய அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் உத்வேகத்தில் இன்று களமிறங்கியது.

எகிப்து தனது முதல் போட்டியில் உருகுவே அணியிடம் தோல்வியுற்றிருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் முகமது சலா முதல் போட்டியில் ஆடவில்லை. இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் களமிறங்கியதால், எகிப்து அணி கடுமையான சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆட்டம் தொடங்கியதிலிருந்து இரு அணிகளும் டிஃபன்ஸில் கூடுதல் கவனம் செலுத்தின. அவ்வப்போது கிடைத்த வாய்ப்புகளை இரு அணிகளும் கோல் ஆக்கத் தவறின. இதனால், முதல்பாதி கோல் எதுவுமின்றி முடிந்தது.

இரண்டாம் பாதி தொடங்கிய சில நிமிடங்களிலேயே, ரஷ்ய வீரர் அடித்தப் பந்தை அஹமத் ஃபாதி தடுக்க முயற்சித்தபோது, பந்து அவரின் காலில் பட்டு சேம் சைடு கோல் ஆனது. 1-0 என்ற முன்னிலை பெற்றதும் விறுவிறுப்பாக ஆடிய ரஷ்ய அணி அடுத்தடுத்து இரண்டு கோல்கள் போட்டு எகிப்தை நிலைகுலைய செய்தது. 59-வது நிமிடத்தில் டென்னிஸ் செரிஷேவ் ரஷ்யாவுக்காக கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து 62-வது நிமிடத்தில் டிசியூபா அடுத்த கோலை பதிவுசெய்தார். 3-0 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணி ஆட்டத்தில் முன்னிலை பெற்றது.

பெனால்டி வாய்ப்பில் கோல் அடிக்கும் முகமது சலா

இந்நிலையில், 73-வது நிமிடத்தில் ரஷ்ய அணியின் டிஃபண்டர் செய்த தவறால், எகிப்து அணியின் நட்சத்திர வீரர் முகமது சலாவுக்கு பெனால்டி வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட சலா, உலகக்கோப்பையில் தனது முதலாவது கோலை பதிவுசெய்தார். எனினும், எகிப்து அணியால் அதன்பிறகு கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணி வெற்றி பெற்று குரூப் 'ஏ' பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியுற்றதால், அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது எகிப்து அணி.

Vikatan

Link to comment
Share on other sites

போலந்தை வீழ்த்தியது செனகல்..! ரஷ்யாவில் முதல் ஆப்பிரிக்க வெற்றி #WorldCup #POLSEN

 

உலகக் கோப்பை H பிரிவு லீக் போட்டியில் செனகல் அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று போலாந்து அணிக்கு அதிர்ச்சியளித்தது. இதன்மூலம் இந்த உலகக் கோப்பையில் வெற்றியைப் பதிவு செய்த முதல் ஆப்பிரிக்க அணியானது செனகல். 

POLSEN

முதல் சுற்றின் கடைசி லீக் போட்டியில் போலாந்து, செனகல் அணிகள் இன்று மாலை மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் கோலடிக்கும் நோக்கத்தோடு அதிரடியாக விளையாடின, ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் செனகல் நடு கள வீரர் இட்ரிசியா கயி கோல் நோக்கி அடித்த ஷாட், போலாந்து வீரர் தியாகோ சியோனக்கின் காலில் பட்டு கோலானது. ஒரு கோல் மூலம் முன்னணி பெற்றது செனகல். முதல் பாதி 1-0 என முடிவடைந்தது.

ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில், போலாந்து வீரர் தன் பாக்ஸ் நோக்கி மைனஸ் பாஸ் கொடுக்க, போலாந்து டிஃபண்டருக்கும் கோல்கீப்பருக்கும் இடையிலான கம்யூனிகேஷன் சரியாக இல்லாமல் போக, அதைப் பயன்படுத்தி மின்னல் வேகத்தில் யோசித்து அசத்தல் கோலடித்தார் செனகல் ஃபார்வேர்டு எம்பாயே நியாங். செனகல் 2-0 என முன்னிலை பெற்றது. 

POLSEN

அதைத் தொடர்ந்து போலாந்து வீரர்கள் தொடர்ச்சியாக அட்டாக் செய்தனர். ஆனால், செனகல் டிஃபண்டர்கல் திடமாக இருந்ததால் கோல் போடமுடியவில்லை. ஒருவழியாக 86-வது நிமிடத்தில் போலாந்து வீரர் கிரிசோவியாக் கோலடித்து ஆட்டத்தை மேலும் விருவிருப்பாக்கினார். கடைசி நிமிடங்களில் போலாந்து வீரர்கள் கடுமையாக முயற்சி செய்தும் கோலடிக்க முடியவில்லை. ஆட்டம் 2-1 என முடிவடைந்தது. அனைத்து ஆப்பிரிக்க அணிகளும் தங்களின் முதல் போட்டியில் தோற்றிருந்த நிலையில், செனகல் அதை மாற்றி எழுதியது.

Vikatan

 

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை 2018- ஆஸ்திரேலியா- டென்மார்க் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது

உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - டென்மார்க் இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. #WorldCup2018

 
 
உலகக்கோப்பை 2018- ஆஸ்திரேலியா- டென்மார்க் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது
 
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இதில் ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா - டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. டென்மார்க் அணியின் எரிக்சன் கோல் அடித்து அசத்தினார். இதனால் தொடக்கத்திலேயே டென்மார்க் 1-0 என முன்னிலைப் பெற்றது.

ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா வீரர் லெக்கி ரோஸ் தலையால் அடித்த பந்தை டென்மார்க் வீரர் யூசுப் பவுல்சன் தடுக்க முயன்றபோது பந்து கையில் பட்டது. நடுவர் VAR உதவியுடன் பெனால்டி வாய்ப்பு கொடுத்தார்.

201806211957491526_1_denmark-s._L_styvpf.jpg

இதை பயன்படுத்தி 38-வது நிமிடத்தில் ஜெடினாக் கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலை அடைந்தது. அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

‘சி’ பிரிவில் டென்மார்க் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் 1 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது. 8.30 மணிக்கும் தொடங்கும் ஆட்டத்தில் பிரான்ஸ் பெரு அணியை எதிர்கொள்கிறது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/21195749/1171819/World-Cup-2018-Australia-vs-denmark-match-draw.vpf

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை கால்பந்து - பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வென்றது

 
அ-அ+

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. #WorldCup2018

 
 
 
 
உலகக்கோப்பை கால்பந்து - பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வென்றது
 
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு சி பிரிவில் இடம் பிடித்துள்ள பிரான்ஸ் மற்றும் பெரு அணிகள் மோதின.
 
போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 34-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் கில்லான் மொபாபே ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
 
இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதையடுத்து, ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இறுதியில், பிரான்ஸ் அணி பெரு அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #FIFA2018 #WorldCupRussia2018 #WorldCup2018

https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/21224318/1171843/France-beat-Peru-10-in-Group-C-world-cup-football.vpf

Link to comment
Share on other sites

இளம் வீரரின் அதிரடி கோல் மூலம்  2ஆம் சுற்றுக்குள் நுழைந்தது பிரான்ஸ்

 

 
 

இவ் வருட உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடும் இளம் வீரர்களில் வயதில் குறைந்த இரண்டாவது வீரரான எம்பாப்பே போட்ட கோல் மூலம் 1 க்கு 0 என பெருவை வெற்றிகொண்ட பிரான்ஸ் சி குழுவிலிருந்து உலகக் கிண்ண முன்னோடி கால் இறுதிச் (இரண்டாவது) சுற்றுக்கு முன்னேறிய முதலாவது அணியானது.

35922697_10209737766955638_1939761269875

மேலும் ரஷ்யா, உருகுவே ஆகிய நாடுகளுடன் மூன்றாவது அணியாக பிரான்ஸ் இரண்டாம் சுற்று வாய்ப்பை உறுதிசெய்துகொண்டது.

எக்கெத்தரின்பேர்க் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியின் 34ஆவது நிமிடத்தில் அன்டொய்ன் க்றீஸ்மான் பரிமாறிய பந்தை ஒலிவியர் கிரூட் ஓங்கி உதைக்க அப் பந்து க்றிஸ்டியன் ரமோஸ் மீது பட்டு பெரு கோல்காப்பாளர் பெட்ரோ கொலெசிக்கு மேலாக சென்றது. அந்த சந்தர்ப்பத்தில் துரிதமாக நகர்ந்த கிலியான் எம்பாப்பே வெறுமனே இருந்த கோலுக்குள் பந்தை தட்டிவிட்டார்.

இதன் மூலம் பிரான்ஸ் சார்பாக உலகக் கிண்ணப் போட்டியில் மிக இளவயதில் கோல் போட்டவர் என்ற பெருமைக்குரியவரானார். 

35893253_10209737768635680_8185280528765

அவஸ்திரேலிய வீரர் டெனியல் அர்ஸானி என்பவரே உலகக் கிண்ணப் போட்டிககளில் இம்முறை விளையாடும் மிகக் குறைந்த வயதுடைய வீரராவார். அர்ஸானிக்கும் எம்பாபேக்கும் 19 வயதானபோதிலும் எம்பாபேயை விட அர்ஸானி 15 தினங்கள் இளையவராவார்.

பிரான்ஸுடனான நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றால் அல்லது போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்தால் மாத்திரமே இரண்டாம் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு உருவாகும் என்பதை மனத்தில் நிறுத்தி பெரு விளையாடியது.

மறுபுறத்தில் முன்னாள் சம்பியனான பிரான்ஸும் வெற்றியைக் குறிவைத்தே விளையாடியது. இதன் காரணமாக போட்டியில் விறுவிறுப்பும் பரபரப்பும் ஏற்பட்டது. 

ஒவ்வொரு அணியும் எதிரணியின் கோல் அருகே பந்தை நகர்த்திச் செல்லும் போதெல்லாம் இருபக்க வீரர்கள் மத்தியிலும் படபடப்பு காணப்பட்டது.

போட்டியின் 30ஆவது நிமிடத்தில் பெருவுக்கு கோல் போடுவதற்கான அருமையான வாய்ப்பு ஒன்று கிடைத்தது. எடிசன் ப்ளோரெஸ் பரிமாறிய பந்தை பெனல்டி எல்லைக்குள்ளிருந்து கோலாக்க பாவலோ குரேரோ முயற்சித்தார். ஆனால் அவர் உதைத்த பந்து நேராக பிரான்ஸ் கோல்காப்பாளர் ஹியூகொ லோரிஸின் கைகளில் தஞ்சம் புகுந்தது.

நான்கு நிமிடங்கள் கழித்து பிரான்ஸ் வீரர் எம்பாப்பே தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் போட்டார்.

இதனைத் தொடர்ந்து இரண்டு அணியினரும் கோல் போட எடுத்த முயற்சிகள் ஒன்றில் முறியடிக்கப்பட்டன அல்லது கைகூடாமல் போயின.

இடைவேளையின் பின்னரும் இரண்டு அணியினரும் கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தனர். ஆனால் முயற்சிகள் அனைத்தும் இலக்கு தவறியவண்ணம் இருந்தன.

65ஆவது நிமிடத்திலிருந்து பெரு தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய போதிலும் கோல் போடும் அதிர்ஷ்டம் கிட்டவில்லை. 

35826249_10209737767475651_3395287736159

போட்டியின் 81ஆவது நிமிடத்தில் எடிசன் ப்ளோரெஸுக்கு மத்தியஸ்தரினால் மஞ்சள் அட்டைக் காட்டப்பட்டது. ஆனால் அந்த மஞ்சள் அட்டை தனக்கு ஏன் காட்டப்பட்டது என ப்ளோரெஸ் குழம்பியபோதிலும் மத்தியஸ்தர் மொஹமத் அப்துல்லாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. எனினும் வீடியோ உதவி மத்தியஸ்தரினால் சரியான தகவல் கொடுக்கப்பட்டதும் ப்ளோரெஸுக்கு காட்டிய மஞ்சள் அட்டையை வாபஸ் பெற்ற மத்தியஸ்தர், மஞ்சள் அட்டைக்கு உரியவரான அக்கினோவுக்கு காட்டினார்.

இப் போட்டியில் தோல்வி அடைந்த பெரு, நான்காவது நாடாக முதல் சுற்றுடன் வெளியேறுவது உறுதியானது.

http://www.virakesari.lk/article/35370

Link to comment
Share on other sites

கோஸ்டா ரிகாவுடன் இன்று மோதல்: மாற்றம் தருவாரா நெய்மர்?

 

 
22CHPMUNEYMAR

பயிற்சியில் ஈடுபட்ட நெய்மர்.   -  REUTERS

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பிரேசில் - கோஸ்டா ரிகா அணிகள் மோதுகின்றன. முதல் ஆட்டத்தை டிரா செய்திருந்த பிரேசில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியுடன் களமிறங்குகிறது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21-வது உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரேசில் அணி தனது முதல் லீக் ஆட்டத்தை சுவிட்சர்லாந்து அணிக்கு எதிராக 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடித்திருந்தது. இந்த ஆட்டத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மரை, எதிரணி வீரர்கள் சுமார் 10 முறை பவுல் செய்தனர். இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகாலத்தில் உலகக் கோப்பை தொடரில் ஒரு ஆட்டத்தில் தனிப்பட்ட வீரர் ஒருவர் எதிரணியினரால் அதிக முறை பவுல் செய்யப்பட்டது இதுதான் முதன்முறை என்ற மோசமான சாதனை நிகழ்த்தப்பட்டது.

 

ஏற்கெனவே காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள நெய்மர், சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் காலில் அடிபட்டு சில நிமிடங்கள் நொண்ட ஆரம்பித்தார். எனினும் ஒரு வழியாக சமாளித்து ஆட்டம் முழுவதும் களத்தில் இருந்தார். இந்நிலையில் பிரேசில் அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் இன்று கோஸ்டா ரிகாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்துக்கான பயிற்சியை கடந்த செவ்வாய்கிழமையன்று பிரேசில் அணி தொடங்கியது. ஆனால் அன்றைய தினம் காலில் வலி ஏற்பட்டதால் நெய்மர் பயிற்சியில் கலந்துகொள்ளவில்லை.

ஆனால் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பயிற்சியில் நெய்மர் பங்கேற்றார். முழு உடல் தகுதியுடன் உள்ள அவர் இன்று களம் இறங்குவார் என பயிற்சியாளர் டைட் நேற்று உறுதிபடுத்தினார். சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெய்மர், இறுதி கட்டத்தின் போது சிறப்பாக செயல்படத் தவறினார். மேலும் அவரை அதிக முறை பவுல் செய்து சுவிட்சர்லாந்து வீரர்கள் ஆட்டம் முழுவதும் கட்டுக்குள் வைத்திருந்தனர். அந்தத் தடுப்பு அரண்களை லாவகமாக உடைத்து அணிக்கு வெற்றி தேடித்தரும் வழிகளை நெய்மர் கண்டறியத் தவறினார்.

மேலும் சுவிட்சர்லாந்து அணி கோல் அடித்த விதமும் சர்ச்சைக்குரிய வகையில் அமைந்தது. அந்த அணியின் வீரர் ஸ்டீவன் ஸூபர், பிரேசில் வீரர் மிராண்டாவை கைகளால் தள்ளிவிட்டபடி கோல் அடித்திருந்தார். இதனால் இந்த கோலுக்கு பிரேசில் அணி ஆட்சேபம் தெரிவித்த போதிலும் ரெப்ரீ, விஏஆர் தொழில்நுட்பத்தின் உதவியை நாட மறுத்தார். இதுவும் ஆட்டம் டிராவில் முடிவடைய முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

எப்படி இருப்பினும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் பிரேசில் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். மாறாக தோல்வி அடைந்தாலோ அல்லது டிரா செய்தாலோ அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கடினமானதாகிவிடும். இதனால் நெய்மரை உள்ளடக்கிய பிரேசில் அணி கவனமாக விளையாடக்கூடும். அந்த அணியின் வீரரான பிலிப் கோடின்ஹோ கூறும்போது, “உலகின் சிறந்த வீரர்களில் நெய்மரும் ஒருவர். அவர், எங்கள் அணியில் இருப்பது மிகப்பெரிய பலம். எப்போதுமே அவர், கோல் அடிப்பதற்கான இடைவெளியை சிறப்பாக கண்டறியக்கூடியவர்” என்றார்.

பிரேசில் - கோஸ்டா ரிகா அணிகள் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 1960-ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டத்தில் மட்டுமே பிரேசில் அணியை கோஸ்டா ரிகா வீழ்த்தியுள்ளது. இம்முறை ரஷ்ய உலகக் கோப்பை தொடரில் கோஸ்டா ரிகா தனது முதல் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவிடம் தோல்வி அடைந்திருந்தது. இதனால் இன்றைய ஆட்டம் அந்த அணிக்கும் முக்கியத்தும் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. - ஏஎப்பி

http://tamil.thehindu.com/sports/article24224476.ece

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை கால்பந்து : அர்ஜென்டினாவை வீழ்த்தியது குரோஷியா #ARGCRO

 

21-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. 'டி' பிரிவில் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதிய ஆட்டம் நீஸ்னி நோவ்கராட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் அர்ஜென்டினா அணியை 3-0 என்ற கோல் கணக்கில், குரோஷியா துவம்சம் செய்தது.

2018 உலகக்கோப்பை கால்பந்து

தனது முதல் போட்டியில் நைஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 'டி' பிரிவு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த குரோஷியா இன்று அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. ஐஸ்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனதால், வெறும் ஒரு புள்ளி மட்டுமே பெற்றிருந்த அர்ஜென்டினா இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆக்ரோஷமாக ஆடியது.

உலகக்கோப்பை கால்பந்து - அர்ஜென்டினா குரோஷியா

முதல் போட்டியில் பெனால்டி கிக் வாய்ப்பு உள்பட 11 ஷாட்கள் அடித்தும், அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் இப்போட்டியில் அவர் ஒரு கோலாவது அடிப்பார் என அவர்மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவரால் இந்தப் போட்டியில் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

முதல்பாதியில் இரு அணிகளின் டிஃபன்ஸூம் கடுமையாக இருந்தன. இதனால் எவ்வளவு முயன்றும் இரு அணிகளாலும் முதல்பாதியில் கோல் அடிக்க முடியவில்லை.

கோல் விட்ட சோகத்தில் அர்ஜென்டினா வீரர்கள்

இரண்டாம் பாதி தொடங்கி சிறிது நேரத்தில் (53'-வது நிமிடத்தில்) சக வீரர் பேக்-பாஸ் செய்த பந்தை, கோல் கம்பத்துக்கு அருகிலிருந்து தவறுதலாக குரோஷியா அணியின் ஆன்ட்டி ரெபிச் பக்கம் பாஸ் செய்தார் அர்ஜென்டினா கோல் கீப்பர் கேபயாரோ. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ரெபிச், அதனை அற்புதமான கோல் ஆக்கினார். இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் இரண்டாம் பாதி தொடங்கிய சிறிது நேரத்திலேயே குரோஷியா முன்னிலை பெற்றது.

80-வது நிமிடத்தில் குரோஷியா அணியின் லூகா மோட்ரிச் மேலும் ஒரு கோல் அடித்து, அந்த அணியின் வெற்றிப்பாதைக்கு வழிவகுத்தார். ஆட்டநேர இறுதியில் இவான் ராகிடிச் மேலும் ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர இறுதிவரை அர்ஜென்டினா அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதன்மூலம் 3-0 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினா அணியை துவம்சம் செய்தது குரோஷியா.

சோகத்தில் மெஸ்ஸி

இப்போட்டியில் வென்றதன் மூலம் 6 புள்ளிகளுடன் 'டி' பிரிவில் முதலிடத்தைத் தக்க வைத்திருக்கிறது குரோஷியா. வெறும் ஒரு புள்ளியுடன் அர்ஜென்டினா அணி தற்போது புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.vikatan.com/news/sports/128451-2018-fifa-football-world-cup-match-report-argentina-vs-croatia.html

Link to comment
Share on other sites

சவாலின்றி சரணடைந்த அர்ஜெண்டினா; வெளியேறும் அபாயம்: அபாரமாக ஆடிய குரேஷியாவிடம் படுதோல்வி- சாமானிய வீரராக ஆடிய மெஸ்ஸி

 

 
croatia

அர்ஜெண்டினாவுக்கு 3-0 என்று அதிர்ச்சியளித்த குரேஷியா வீரர்கள் வெற்றியக் கொண்டாடும் காட்சி   -  படம். | ஏ.எஃப்.பி.

உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியின் நேற்றைய கடைசி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி குரேஷியாவிடம் 3-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வியடைந்தது. இதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு நெருக்கடிக்குள்ளாகியுள்ளது, குரேஷியா அணி இறுதி 16 அணிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இடைவேளை வரை இரு அணிகளு 0-0 என்று இருந்தன, இரு அணிகளுக்குமே கோல் அடிக்கும் வாய்ப்பு இருந்தது, மெஸ்ஸி ஒன்றுமே செய்யவில்லை.

   
 

இடைவேளைக்குப் பிறகு ஆன்ட்டே ரெபிக் 53வது நிமிடத்திலும் லுகா மோட்ரிக் 80வது நிமிடத்திலும் கடைசியில் இவான் ராகிடிக் 90 நிமிடங்கள் 46 விநாடியிலும் 3 கோல்கள் திணித்து அதிர்ச்சியளித்தது.

பயிற்சியாளர் ஜோர்ஹே சாம்போலி தோல்வியில் சாய்ந்தார், லியோனல் மெஸ்ஸி தரையையே உற்றுப் பார்த்தபடி என்ன நடந்தது என்பதை யோசித்துக் கொண்டிருந்தார். மாறாக குரேஷியாவின் கொண்டாட்டம் வெடித்துக் கிளம்பியது. லூகா மோட்ரிக் உலகக்கோப்பையின் சிறந்த கோல் போட்டிக்குத் தேர்வாகும் கோலை அடித்தார்.

உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றதே கடவுள் புண்ணியம் என்று தகுதி பெற்ற அர்ஜெண்டினா அணியின் பலவீனம் முழுதும் நேற்று அம்பலமானது. மெஸ்ஸி ஒன்றுமே செய்யவில்லை, பல நேரங்களில் தன்னைச் சுற்றி நடக்கும் கால்பந்தாட்டத்தின் பார்வையாளராக இருந்தார். சரணடைந்தது அர்ஜெண்டினா, நடுக்களத்தில் பந்தைக் கடந்து ஓடியது, முன்னே செல்லும் போது கூட இலக்கில்லாமல் சென்றது.

messijpg

குரேஷியா 3வது கோலை அடித்த பிறகு துவண்டு போன மெஸ்ஸி. | ஏ.எப்.பி.

 

1958 உலகக்கோப்பையில் குரூப் பிரிவு ஆட்டத்தில் செக்கோஸ்லாவாகியாவுக்கு எதிராக 6-1 என்று தோற்ற பிறகு இதுதான் குரூப் பிரிவு ஆட்டத்தில் உலகக்கோப்பையில் அர்ஜெண்டினாவின் பெரிய தோல்வி. மேலும் 44 ஆண்டுகளில் உலகக்கோப்பையில் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெறத் தவறியுள்ளது. அர்ஜெண்டினா களத்தில் ஓடியதைவிட எல்லைக்கோட்டுக்கு அருகே மேலும் கீழும் முன்னும் பின்னும் அர்ஜெண்டினா பயிற்சியாளர் சாம்போலி அதிகம் ஓடியிருப்பார் போலிருக்கிறது.

ஆட்டம் தொடங்கி 2வது நிமிடத்திலேயே ஒரு அரை வாய்ப்பு கிடைத்தது, ஓட்டாமெண்டி வலது புறம் பாஸ் செய்தார் ஆனால் சால்வியோ அதனை கோலுக்குக் கொண்டு செல்ல முடியவில்லை.

5வது நிமிடத்தில் குரேஷியா ஒரு அச்சுறுத்தலை மேற்கொண்டது இடது புறம் குரேஷிய வீரர் பெரிசிச் பந்தை வேகமாகக் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது, அர்ஜெண்டினா கோல் எல்லைக்குள் புகுந்தார், கோலின் வலது புற ஓரத்தைக் குறிவைத்து ஷாட் ஆடினார், ஆனால் கபரெல்லோ அருமையாக அதனைத் தட்டி விட குரேஷியாவுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. மோட்ரிக் எடுத்த கார்னர் ஒரு விளைவையும் ஏற்படுத்தவில்லை. குரேஷியா மிகவும் கூர்மையாக ஆடினர். அர்ஜெண்டினா கஷ்டப்பட்டது.

13வது நிமிடத்தில் மேஸா வலது புறம் வேகமாக எடுத்துச் சென்றார் பிறகு சால்வியோவுக்கு பாஸ் செய்தார், பெனால்டி ஸ்பாட்டிலிருந்து சால்வியோ அடித்த ஷாட்டை லவ்ரென் கோல் போஸ்டுக்கு மேல் தள்ளிவிட்டார், கார்னர் வாய்ப்பு பெற்ற அர்ஜெண்டினா அதனை விரயம் செய்தது.

நிறைய முறை அர்ஜெண்டினா பந்தை தங்கள் வசம் வைத்திருந்தாலும் குரேஷியா அவர்கள் வேகமாக நகர இடமளிக்கவில்லை, இதனால் பல வேளைகளில் ஆட்டத்திலிருந்தே பந்தை வெளியேற்றும் நிலைக்கு அர்ஜெண்டினா தள்ளப்பட்டது.

19வது நிமிடத்தில் ஒரு சிறு சர்ச்சை. அர்ஜெண்டினா வீரர் பெரேஸை குரேஷிய வீரர் புரோசோவிக் கீழே தள்ளினார் ஃப்ரீ கிக் கொடுக்கப்படவில்லை, மாறாக மஸ்சாரானோ குரேஷிய வீரர் மோட்ரிக்கை கீழே தள்ளிய போது நடுவர் அர்ஜெண்டினாவை தண்டித்தார், அர்ஜெண்டினா வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து நடுவரைச் சூழ்ந்தனர், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. 20வது நிமிடத்தில் டாக்லியாஃபிகோ பந்தை தன் காலிலிருந்து பறிகொடுத்திருப்பார், ஆனால் நடுவர் ஃப்ரீ கிக் ஏன் கொடுத்தார் என்று பார்த்தால் குரேஷிய வீரர் மாண்டுஸிக்குடன் சிறு உரசல். ஆனால் இந்த ஃப்ரீகிக் அர்ஜெண்டினாவின் அதிர்ஷ்டம். ஏனெனில் ஃப்ரீ கிக் கொடுக்கவில்லையெனில் மோட்ரிக் பந்தை எடுத்து சென்றிருந்தால் அர்ஜெண்டினா கோல் கீப்பர் கபரெல்லோவுடன் ஒத்தைக்கு ஒத்தை நிலைமை ஏற்பட்டிருக்கும்.

26வது நிமிடத்தில் அகுயெரோ இடது புறம் ஆக்ரோஷம் காட்டி பந்தை எடுத்துச் சென்றார் ஆனால் ஸ்ட்ரைனிக் பந்தை தலையால் முட்டி வெளியே தள்ள கார்னர் வாய்ப்பு கிடைத்தது அர்ஜெண்டினாவுக்கு. கார்னர் வாய்ப்பை மேஸா பக்கவாட்டு வலையில் அடித்து விரயம் செய்தார். அர்ஜெண்டினா அபாயகரமாகத் திகழ்ந்த ஒரே கணம் அதுவும் கோலாகமல் வெஸ்ட் ஆனது. இதே போல் 30வது நிமிடத்தில் பந்து குரேஷியா கோல் எல்லைக்குள் வர லவ்ரென் கீழே விழுந்தார், இதனையடுத்து அர்ஜெண்டினாவின் சால்வியோ பந்தை அவரிடமிருந்து எடுத்தார், பாக்ஸில் அவருக்கு கோல் அடிக்கும் வாய்ப்புதான், ஆனால் கோணம் சரியாக இல்லை. அதனால் பந்தை பெரேஸுக்கு அனுப்பினார். அங்கு கோலில் கோல் கீப்பர் இல்லை, அருமையான வாய்ப்பு. ஆனால் பந்தை வைடாக அடித்தார், மற்றொரு வாய்ப்பு விரயம்.

32வது நிமிடத்தில் குரேஷியா ஒரு தாக்குதலை தொடுக்க வ்ரசாலிகோ மிக அருமையாக பந்தை வலது புறத்திலிருந்து அர்ஜெண்டினா கோல் பாக்ஸுக்குள் செலுத்த, அங்கு மேண்ட்சுகிக் கோல் அடிக்கும் நிலையில் வசதியாக இருந்தார், ஆனால் அவர் சுலபமாக தலையால் கோலுக்குள் அடிக்க வேண்டியதை இடது புறம் வெளியே அடித்தார், இன்னொரு வாய்ப்பை விரயம் செய்தது குரேஷியா. 42வது நிமிடத்திலும் வலது புறம் குரேஷிய வீரர் புரோசோவிக் ஒரு லாங் பாஸை ரெபிக்குக்கு அனுப்ப அவரால் பந்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை, சால்வியோவுடன் மோதல் ஏற்பட்டது, சால்வியோ சாய்ந்தர். ஆனால் ரெபிக்குக்கு இடது புறம் நிறைய இடம் கிடைத்தது அவர் பந்தை எடுத்துச் செல்ல நினைத்த போது ரெஃப்ரீ புதிராக ஃப்ரீ கிக் கொடுத்தார். இடைவேளை வரை இரு அணிகளும் கோட்டை விட்ட வாய்ப்புகளுடன் 0-0.

53வது நிமிடம் திரும்பிய வாய்ப்பும் அர்ஜெண்டினா கீப்பரின் அபத்தப் பிழையும்:

மெஸ்ஸி வலது புறம் பந்தை எடுத்து டாக்லியாபிகோவுக்கு அளிக்க அவர் அகுயெரோவுக்கு பந்தைப் பாஸ் செய்ய இறுக்கமான நிலையிலிருந்து அவர் ஒரு கோல் முயற்சி மேற்கொள்ள குரேஷியா கோல் கீப்பர் சுபாசிச் பந்தை எளிதில் பிடித்து விட்டார், உடனடியாகவே குரேஷியா எதிர்த்தாக்குதல் தொடுத்தது.

பந்து அர்ஜெண்டினா கோல் எல்லைக்குள் வர அர்ஜெண்டினா அணி வீரர் பந்தை மிகவும் சிம்ப்பிளாக கோல் கீப்பர் கப்ரெல்லோவுக்கு பிடித்துக் கொள் என்று தள்ளி விட்டார். கபரெல்லோவுக்கு அருகிலேயே குரேஷிய வீரர் ரெபிக் நிற்கிறார், பந்தைப் பிடித்து தூக்கி கோல் கிக் அடிப்பதை விட்டு மீண்டும் பந்தை அர்ஜெண்டினா வீரர் மெர்காடோவுக்கு வலது புறம் பாஸ் செய்கிறேன் பேர்வழி என்று கபரெல்லோ கடுமையாகச் சொதப்பலாக பந்தை தட்டி விட ஆஹா என்று திரும்பிய குரேஷிய வீரர் ரெபிக், புல்டாஸ் பந்தை வலது காலால் அர்ஜெண்டின கோலுக்குள் தூக்கி அடித்தார், படு அபத்தமான தவறிழைத்தார் கபரெல்லோ, குரேஷியாவுக்கு முதல் கோல் பரிசாக அளிக்கப்பட்டது. அன்று ஐஸ்லாந்துக்கு எதிராக நேராக வந்து பந்தை உதைத்து எல்லைக்குவெளியே அனுப்பாமல் அபாயகரமாக கையால் தடுக்கப்போய் அது கையிலிருந்து நழுவிச் சென்றது, நேற்று ஒரு சிம்பிள் பேக் பாஸை பிடிக்க முடியாமல் தானும் பாஸ் செய்கிறேன் பேர்வழி என்று சொதப்பலாக ஒரு ஆட்டத்தை ஆடி ரெபிக்கிற்கு பந்தை பரிசாக அளித்து கோல் பரிசு அளித்தது அர்ஜெண்டினா. ஒட்டுமொத்த ஸ்டேடியத்தின் அர்ஜெண்டினா ரசிகர்கள் நம்ப முடியாமல் திகைத்தனர்.

luka%20modrikjpg

லூகா மோட்ரிக் அந்த அபாரமான கோலை அடிக்கும் மும் பந்தை எடுத்துச் செல்லும் காட்சி. | ஏ.பி.

 

57வது நிமிடத்தில் கோல் அடித்த ரெபிக் காயம் காரணமாக உள்ளே சென்றார், 63வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவுக்கு கோல் வாய்ப்பு கிடைத்தது. இடது புறம் பெரெஸ், ஹிகுவெய்ன், மீஸா கூட்டணி அமைக்க 6 அடியிலிருந்து மீஸாவுக்கு கோல் வாய்ப்பு அவர் பக்கவாட்டு பாத உதையை கோல் கீப்பர் சுபாசிக் கையால் தள்ள அது கோலாக மாறியிருக்கும் ஆனால் அதற்குள் ராகிட்டிக் பந்தை வெளியே அனுப்ப கார்னர் வாய்ப்பு கிடைத்தது. கார்னர் ஷாட்டை ஓட்டமெண்டி வாங்கி கோல் போஸ்ட்டுக்கு மேல் அடித்தார்.

80வது நிமிடத்தில் ராக்கிடிக், கிரமாரிக் இடது புறம் கூட்டணி அமைத்து வேகம் காட்ட பாக்ஸின் ஓரத்திலிருந்து ராக்கிடிக் ஷாட்டை அடிக்க டாக்லியாஃபிகோ அருமையாகத் தடுத்தார். ஆனால் மீண்டும் குரேஷியத் தாக்குதல் நடத்த 25 அடியில் மோட்ரிக் அர்ஜெண்டின வீரரிடமிருந்து பந்தப் பெற்று வலது புறம் லேசாக பந்தைத் தூக்கி விட்டார், இதன் மூலம் ஓட்டமெண்டியைக் குழப்பி விட்டு, வலது புறத்திலிருந்து வலது மூலைக்கு ஒரு மிகப்பெரிய ஷாட்டை அடித்து கோலாக மாற்றினார் மோட்ரிக். 25 அடி தூரத்திலிருந்து கோலாக மாற்றிய அதிரடி ஷாட், திகைப்பூட்டும் கோல்.மெஸ்ஸி தலை தாழ்ந்தது. குரேஷியா 2-0.

85வது நிமிடத்தில் வெறுப்பில் ஒரு சர்ச்சை,  உத்வேகம் பெற்ற ராக்கிட்டிக்கின் 3வது கோல்

மஸ்செரானோ, குரேஷிய வீரர் ராக்கிடிக்கை கீழே விழச்செய்தார், இது ஃபவுல்தான், படுத்துக் கிடந்த ராக்கிடிக்கின் தலையில் பந்தை ஓட்டாமெண்டி உதைத்தது கீழ்த்தரமான செயல், இதற்காக அவர் தண்டிக்கப்பட்டார். இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் வாய்ப்பாக இது மாறியது. தகராறானது. ஆனால் விரைவில் பொங்கிய உணர்ச்சிகளுடன் ஆட்டம் தொடங்கியது.

இந்த கீழ்த்தரமான செயல் ராக்கிட்டிக்கை உசுப்பேற்ற மேற்கூறிய சம்பவத்தினால் விளைந்த ஃப்ரீகிக்கை வீரர்கள் சுவரைத் தாண்டி கோலின் இடது மேல் மூலைக்கு அனுப்ப முயற்சித்தார், ஆனால் பந்து கிராஸ்பாரில் பட்டு வெளியே சென்றது, கோல் கீப்பர் கபரெல்லோ ஒன்றுமே செய்ய முடியாமல் வாளாவிருந்தார்.

ஆட்டம் முடியும் தறுவாயில் காய நேரத்தில் ராக்கிட்டிக் நடுக்களத்தில் ஆக்ரோஷமும் வேகமும் காட்டி ஷாட்டை அடிக்க அர்ஜெண்டின கோல் கீப்பர் கபரெல்லோ அபாராமாகத் தடுத்தார். ஆனால் அவர் கையில் பட்டு பந்து கொவாசிச்சிடம் வர அவர் அதை ராக்கிடிக்கிற்கு பாஸ் செய்தார். ராக்கிடிக் இடது மூலையில் பந்தை கோலுக்குள் திணித்தார் 3-0 வெற்றி, இறுதி 16 சுற்றுக்கு உறுதியானது குரேஷியா.

அர்ஜெண்டினா குரூப் பிரிவுப் போட்டிகளுடன் வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இன்னொரு போட்டி நைஜீரியாவுடன் உள்ளது, அது அபாயகரமான அணியாகும்.

http://tamil.thehindu.com/sports/article24227349.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

அர்ஜெண்டின வீரர்கள் பெண்கள் போல் தரையில் விழுந்து அழுதனர்: குரேஷிய வீரர் வ்ரசாலிகோ கிண்டல்

 

 
vrazalikojpg

அர்ஜெண்டினாவைக் கேலி செய்த வ்ரசாலிக்கோ ஆட்டத்தின் போது பெற்ற மஞ்சள் அட்டை.| ஏ.எஃப்.பி.

வியாழனன்று நடைபெற்ற உலகக்கோப்பை 2018-ன் குரூப் டி ஆட்டத்தில் குரேஷியா 3-0 என்று அர்ஜெண்டினாவை வீழ்த்தியது, இதனால் அர்ஜெண்டினா அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதில் கடும் சிக்கல்கள் எழுந்துள்ளது.

53வது நிமிடத்தில் அர்ஜெண்டினா கோல் கீப்பர் கபரெல்லோ கிளப் மட்டத்துக்கும் கீழான ஒரு இமாலயத் தவறைச் செய்ய ஆன்ட்டே ரெபிச் அபாரமாக அதனை கோலாக மாற்றினார், பிறகு 80வது நிமிடத்தில் லுகா மோட்ரிக் அர்ஜெண்டின வீரர்கள் இருவருக்குக் கடும் போக்குக் காட்டி 25 அடியிலிருந்து அடித்த வளைந்த கோல் இந்த உலகக்கோப்பையின் சிறந்த கோலுக்கான போட்டியில் இடம்பெறத் தக்கதாகும், கடைசியில் ராக்கிடிச் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்ச 3-0 என்று அர்ஜெண்டினாவுக்கு அதிர்ச்சியளித்தது குரேஷியா.

 
 

அர்ஜெண்டினா அணி ஆதிக்கம் செலுத்தியது என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஜோர்ஹே சம்போலி தெரிவிக்க, அதனை கடுமையாக மறுத்த குரேஷிய தடுப்பாட்ட வீரர் வ்ரசாலிகோ குரேஷிய ஊடகம் ஒன்றில் கூறியதாவது:

அவர் இந்தப் போட்டியைத்தான் பார்த்தாரா அல்லது வேறு போட்டியையா என்று தெரியவில்லை.

அர்ஜெண்டின வீரர்கள் தரையில் விழுந்து பெண்கள் போல் அழுததைத்தான் நான் பார்த்தேன்.

அவர்களை விட நாங்கள்தான் உறுதியுடனும், சிறப்புடனும் ஆடினோம், எங்களுக்குத்தான் வாய்ப்புகள் அதிகம் இருந்தது, எனவே நாங்கள்தான் ஆதிக்கம் செலுத்தினோம்.

அர்ஜெண்டினா அடுத்த போட்டியில் நைஜீரியாவுக்கு எதிராகச் சிறப்பாக ஆடியேயாக வேண்டும். அதாவது அவர்கள் அடுத்தச் சுற்றுக்கு போக வேண்டுமென்றால், போவார்களா?

என்று நக்கலாகப் பேட்டியளித்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article24227513.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

புதிய வரலாறு: பெல்ஜியம்-பனாமா கால்பந்து போட்டியில் பங்கேற்ற தமிழக, பெங்களூரு குழந்தைகள்

 

 
rr

பனாமா, பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கும் போது, கையில் கால்பந்துடன் நடந்த வந்த பெங்களூரைச் சேர்ந்த சிறுவனி ரிஷி   -  படம் உதவி: ட்விட்டர்

ரஷியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில், பெல்ஜியம், பனாமா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்தியக் குழந்தைகள் இருவர் பங்கேற்று பந்தை வழங்கியுள்ளனர்.

இதில் 10வயதான பெங்களூரைச் சேர்ந்த ரிஷி தேஜ் என்ற சிறுவனும், 11-வயதான தமிழகத்தைச் சேர்ந்த நாதானியா ஜான் கன்டதில் என்ற சிறுமியும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.

 

பிபா ஓம்பிசி திட்டத்தின் கீழ் 64 நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் போட்டி தொடங்கும் முன் இரு அணி வீரர்களின் முன் அணிவகுத்து வந்து, அவர்களுக்கு பந்தை அளிப்பார்கள். அந்த வகையில் இந்த உலகக்கோப்பைப் போட்டியில்பங்கேற்க பெங்களூரு, தமிழகத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

இது குறித்து 10 வயதான ரிஷி கூறுகையில், நான் உலகக்கோப்பைப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன் என்ற செய்தி அறிந்ததும் கடந்த 10 நாட்களாக மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை. அதை அளவிட முடியாது. ரஷியாவில் ஒவ்வொரு வினாடியையும் நான் ரசித்து இருந்தேன். போட்டி நடக்கும் போது, நான் அதைப் பார்த்து மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல், எப்படி விளையாடுகிறார்கள் என்றும் பார்த்தேன் எனத் தெரிவித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த நாதானியா 50 சிறுவர்களுடன் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்று ரஷியா சென்றுள்ளார். நாதானியாவின் கால்பந்து ஆர்வம், அவரின் திறமைகளைப் பார்த்து ஒவ்வொருவரும் வியந்து அவரைத் தேர்வு செய்துள்ளனர்.

rishijpg

தமிழகத்தைச்சேர்ந்த நாதானியா, பெங்களூரைச் சேர்ந்த ரிஷி. உடன் கால்பந்து வீரர் சுனில் சேத்ரி

 

நாளை மறுநாள் பிரேசில், கோஸ்டாரிகா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கையில் பந்தை ஏந்தி வீரர்களுடன் நடந்து செல்லும் நாதானியா போட்டி தொடங்கும் வரை இருப்பார்.

இது குறித்து நாதானியா கூறுகையில், ஏறக்குறைய 1500 சிறுவர், சிறுமிகள் ரஷியாவுக்கு செல்லும் போட்டியில் பங்கேற்றனர். அதில் 50 குழந்தைகளில் ஒருவராக நான் தேர்வானேன். நான் ரஷியாவில் உலகக்கோப்பைப் போட்டியை பார்க்கப்போகிறேன் என்ற செய்தி அறிந்ததும் என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியவில்லை. அதிலும் பிரேசில் அணியுடனான போட்டியில் பங்கேற்பதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. முடிந்தவரை வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்க முயற்சிப்பேன் எனத் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article24210716.ece

Link to comment
Share on other sites

ரொனால்டோவிடம் வீழ்ந்துவிட்டார் மெஸ்ஸி! போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே? #WorldCup

 

உண்மையில் வீரர்களாக இருவரும் அதே அந்த சமநிலையில் நிற்கும் தராசில்தான் நிற்கிறார்கள். ஆனால், ஒரு தலைவனாக ரொனால்டோ தன்னை வேறுபடுத்திக்கொண்டார். மெஸ்ஸி அங்கு தேங்கிவிட்டார். 

ரொனால்டோவிடம் வீழ்ந்துவிட்டார் மெஸ்ஸி! போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே? #WorldCup
 

அர்ஜென்டினா ரசிகர்கள் ஒவ்வொருவரின் இதயத்தையும் நொறுக்கிக்கொண்டிருக்கிறார்கள் குரோஷிய வீரர்கள். முகத்தில் வரைந்திருந்த அர்ஜென்டினா கொடியின் நீல நிறம், வடியும் கண்ணீரால் அழிந்துகொண்டிருக்கிறது. சர்ச்சைக்குறிய கோலால் அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பை வென்றுதந்த டீகோ மரடோனாவின் கைகள் பதற்றத்தில் நகங்களைக் காவு கொடுத்துக்கொண்டிருக்கின்றன. மொத்த அர்ஜென்டினாவும் அந்த ஒருவரையே பார்த்துக்கொண்டிருக்கிறது... மரடோனா உள்பட. 22 ஆண்டுகள் முன்பு அர்ஜென்டினாவுக்கு கோப்பை வென்றுதந்த அந்த 10-ம் நம்பர் ஜெர்சி இன்று கையறு நிலையில். லயோனல் மெஸ்ஸி - உலகின் தலைசிறந்த வீரர் தலை நிமிர முடியாமல் மைதானத்தின் புற்களைப் பார்த்தபடியே நிற்கிறார். அவர் முகத்தைப் பார்த்த ஒவ்வொருவரின் மனதிலும் அந்தக் கேள்வி எழுந்திருக்கும் : 'Is Messi Greatest Of All Time?'

மெஸ்ஸி

Greatest Of All Time (GOAT) என்ற விஷயத்தை அணுகும்போது  அந்தத் தராசின் இன்னொரு புறம் இந்த வீரரையும் வைக்க வேண்டியிருக்கிறது - கிறிஸ்டியானோ ரொனால்டோ. கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் இந்த ரைவல்ரி, இப்போது முடிவுரையை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கோல் எண்ணிக்கை, டெக்னிக், ஸ்கில், விருதுகள் தாண்டி, GOAT என்ற அந்தஸ்தை அவர்கள் வென்ற பட்டங்களும் சேர்த்துத்தான் நிர்ணயிக்கிறது. அதனால்தான் ஜோயன் க்ரயுஃப், டி ஸ்டெஃபானோ போன்ற வீரர்களைவிட பீலே, மரடோனா ஆகியோர் அதிகம் பிரசித்தி பெற்றனர். ஏனெனில் அவர்கள் உலகக் கோப்பை வின்னர்கள்! அப்படிப் பார்த்தால் ரொனால்டோ, இந்த ரேஸின் கடைசி சுற்றில் முந்திக்கொண்டிருக்கிறார்.

 

 

அர்ஜென்டினா - குரோஷியா ஆட்டத்தின் 80-வது நிமிடம்... அதுவரை தன் வேற லெவல் ஆட்டத்தால் அர்ஜென்டினாவை அடக்கி வைத்திருந்த குரோஷியா கேப்டன் மோட்ரிச், ஒரு லாங் ரேஞ்ச் கோல் அடித்து அனைவரையும் அசரடிக்கிறார். "The legend have taken Croatia to the next round" என்கிறார் வர்ணனையாளர். 4 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள் வென்ற ரியல் மாட்ரிட் அணியின் மிகமுக்கிய கருவி. இதுவரை அவர் ஒவ்வொரு சாகசம் செய்யும்போதும் 'ஜீனியஸ்' என்றுதான் பாராட்டப்பட்டுள்ளார். இன்று, முதல் முறையாக 'லெஜண்ட்' என்ற வார்த்தை சொல்லப்பட்டுள்ளது. காரணம் - மிகப்பெரிய அணிக்கு எதிராக பெற்றுத்தந்த எதிர்பாராத வெற்றி... தேசிய அணிக்குப் பெற்றுத்தந்த வெற்றி! மெஸ்ஸியின் இமேஜ் இதே புள்ளியில்தான் சரியத் தொடங்குகிறது. ஏனெனில், அர்ஜென்டினாவுக்காக மெஸ்ஸி பெற்றுத்தந்த பட்டங்கள் - 0! 

ரொனால்டோ

ரொனால்டோ யாருமே எதிர்பார்க்காத வகையில் யூரோ கோப்பையை வென்றுவிட்டார். மெஸ்ஸி, கோபா அமெரிக்காவில் பெனால்டியை தவறவிட்டு ஓய்வுதான் பெற்றார். இந்த இடத்தில் எல்லோரும் வைக்கும் ஒரு வாதம் 'அர்ஜென்டினா வீரர்கள் மெஸ்ஸிக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை, அந்த வீரர்கள் சுமார்' என்பது. சீரி - ஏ தொடரின் டாப் ஸ்கோரருக்கே இடமில்லாத அளவுக்கு நட்சத்திரங்கள் நிறைந்திருக்கும் அணி அது. மறுபுறம் போர்ச்சுகல்..? ரொனால்டோவைத் தவிர கொஞ்சம் டெக்னிக்கலாக ஆடக்கூடியவர்கள் இரண்டே பேர் - வில்லியம், பெர்னார்டோ சில்வா. அவ்வளவுதான். மற்றபடி, வாய்ப்புகள் உருவாக்கவோ, பயன்படுத்திக்கொள்ளவோகூட அந்த அணியில் ஆள் இல்லை. அவர்களை வைத்துக்கொண்டு 194 நிமிடங்களில் ரொனால்டோ அடித்த கோல்கள் - 4. அகுவேரோ, ஹிகுவெய்ன், டி மரியா, டிபாலா போன்ற ஸ்டார்களுடன் விளையாடி 190 நிமிடங்களில் மெஸ்ஸி அடித்த கோல்கள் - 0!

இத்தனை வருடங்கள் இருவரிடத்திலும் தெரியாத இந்த மிகப்பெரிய வித்தியாசம், இப்போது மட்டும் புலப்படுவது எப்படி? சொல்லப்போனால் ரொனால்டோவைவிடவும் மெஸ்ஸி டெக்னிக்கலி கொஞ்சம் ஸ்ட்ராங். ஆனால் அவர் சறுக்கியது எங்கே? கிளப் போட்டிகளில் இருவரும் தராசில் சரிசமமாய் நிற்கும்போது, சர்வதேசப் போட்டிகளில் மெஸ்ஸி தடுமாறுவது ஏன்? சுயநல வீரர் என்று பலராலும் கருதப்பட்ட ரொனால்டோ எப்படி இந்த வெற்றிகளை சாத்தியமாக்கினார்? உண்மையில் வீரர்களாக இருவரும் அந்த சமநிலையில் நிற்கும் தராசில்தான் நிற்கிறார்கள். ஆனால், ஒரு தலைவனாக ரொனால்டோ தன்னை வேறுபடுத்திக்கொண்டார். மெஸ்ஸி அங்கு தேங்கிவிட்டார். 

மெஸ்ஸி

ஐந்தரை அடி உயர ஆள் ஒருவன், மூன்று வயது குழந்தையிடம் முத்தம் கேட்கிறான். அந்தக் குழந்தையின் உதடுகளால் அவன் கன்னத்தை அடைய முடியாது. குதித்துப் பார்க்கிறது, அப்போதும் முடியவில்லை. அவனோ குனிய மறுக்கிறான். "நீ என் உயரத்துக்கு வா. என்னால் குனிய முடியாது" என்கிறான். இப்போது அந்தக் குழந்தை பாவம் என்ன செய்யும்? குதிப்பதையும் நிறுத்திவிடும். அர்ஜென்டினா வீரர்கள் போராடுவதை, புதிய நுணுக்கங்களைப் பயன்படுத்துவதை, தங்களை மெருகேற்றிக்கொள்வதை நிறுத்திவிட்டார்கள். கோப்பை கடைசி வரை மெஸ்ஸிக்குக் கிடைக்கப்போவதில்லை. 

ரொனால்டோ - செல்ஃபிஷ் பிளேயர், ஆட்டிட்யூட் காட்டுபவர், ஈகோ கொண்டவர் என்று அவர் பெர்சனாலிட்டி மீது ஓரப்பார்வை கொண்டிருக்கிறது இந்த உலகம். ஆனால், ரொனால்டோவின் பார்வை வேறு மாதிரியானது: இந்தக் குழந்தை ரியல் மாட்ரிட் போல் சீக்கிரம் வளரக்கூடியது அல்ல. இது போர்ச்சுகல். வளர ஆண்டுகள் அல்ல, யுகங்களே ஆகும். புரிந்துகொண்டார். குனிந்து, அதைத் தன் தோள்களில் தூக்கிவைத்துப் பயணிக்கத் தொடங்கினார். முத்தங்கள் கிடைத்தது. யூரோ கோப்பை வசமானது, இந்த உலகக் கோப்பையில் நினைத்துப் பார்க்க முடியாத அசத்தல் துவக்கம், அதுமட்டுமல்லாமல், உலகின் தலைசிறந்த வீரனாக தன்னை... தன்னை மட்டும் உலகம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளது.

ரொனால்டோ

ஸ்பெய்ன், மொராக்கோ அணிகளுக்கு எதிரான போட்டிகள் இரண்டிலுமே 'கேப்டன்' ரொனால்டோவின் ஆட்டமும் அணுகுமுறையும் ஆச்சர்யமளித்தது. ரியல் மாட்ரிட் அணிக்கு ஆடும்போது, ஒவ்வொரு வீரரின் பாஸும் தன்னையே டார்கெட்டாகக் கொண்டிருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார் ரொனால்டோ. தான் கோலடிக்கவேண்டும் என்ற எண்ணம் கடைசி நிமிடம் வரை இருந்துகொண்டே இருக்கும். பாக்ஸுக்குள் சென்றுவிட்டால் சமயங்களில் பாஸ் எனும் ஆப்ஷன் இருப்பதையே மறந்துவிடுவார். ஏனெனில், குரூஸ், மோட்ரிச், இஸ்கோ, மார்செலோ என ஸ்டார்கள் நிறைந்த மாட்ரிட் அணியால், தான் தவறவிட்டாலும் வாய்ப்புகளை அடுத்தடுத்து உருவாக்கிட முடியும். ஆனால், போர்ச்சுகல் அணியால் நிச்சயம் முடியாது. ஒவ்வொரு வாய்ப்புக்கும் தவம் கிடக்கவேண்டும். ரொனால்டோவின் பிளான்... ரொனால்டோவின் போர்ச்சுகல் பிளான் ரொம்பவே மாறியிருந்தது. 

ஸ்பெய்ன் அணியுடனான போட்டியில் பாக்ஸுக்குள் ஒரு டிஃபண்டர் மட்டுமே இருக்கும்போது, கோலடிக்கத் தனக்கு 50 சதவிகித வாய்ப்பு இருக்கும்போது, இளம் வீரர் கிடஸுக்குப் பாஸ் கொடுத்தார் ரொனால்டோ. ஏனெனில், கோல் அடிக்க அவருக்கு தன்னைவிட வாய்ப்பு அதிகம். இதைத் தவறவிடக் கூடாது. யோசிக்காமல் மறு நோடியே பாஸ் செய்தார். ரசிகர்கள், போர்ச்சுகல் வீரர்கள், இவ்வளவு ஏன் கிடஸ் கூட அந்தப் பாஸை எதிர்பார்க்கவில்லை. அதேபோல் தான் கோல் அடிப்பதற்காக 'கிராஸ்கள் போட்டுக்கொண்டே இருக்கவேண்டும்' என்ற அஜெண்டாவை தன் அணிக்கு அவர் முன்வைக்கவில்லை. விங்குகளை விட போர்ச்சுகல் அணி சென்ட்ரல் மிட்ஃபீல்ட் வழியேதான் தன் ஆட்டத்தைக் கட்டமைத்திருந்தது. அதற்கு ஏற்றார்போல், தான் இடது விங்கில் ஆடாமல், சென்ட்ரல் ஸ்ட்ரைக்கர் பொசிஷனில் விளையாடினார் CR7. அதுமட்டுமல்ல, கார்னர் கிக்குளில் அசால்டாக கோலடிக்கும் அவர், மொராக்கோ அணிக்கெதிராக கடைசி நிமிடத்தில் கிடைத்த கார்னரைக் கூட எடுக்கவிடவில்லை. பொசஷனை இழந்துவிடக்கூடாது என்பதற்காக கார்னர் கொடிக்கு அருகிலேயே பாஸிங் செய்யவைத்தார்.

ரொனால்டோ

அதுமட்டுமல்ல, வழக்கமாக மாட்ரிட் வீரர்கள் கொஞ்சம் சொதப்பும்போது, முகத்தைச் சுளித்து தன் சங்கடத்தை வெளிப்படுத்துவார். ஆனால், இங்கு அதுவும் இல்லை. மிகப்பெரிய தவறுகள் செய்தாலும், அதை சகஜமாக எடுத்துக்கொள்கிறார். 'உன்னால முடிஞ்சது நீ பண்ணு, மத்தத நான் பாத்துக்குறேன்' என்பதுதான் அவர் தன் வீரர்களிடம் சொல்வது. இதுதான் ரொனால்டோ என்னும் கேப்டன் செய்தது. இங்கு போர்ச்சுகல் வீரர்கள் எந்த இடத்திலும் தங்களின் ஆட்டத்தை மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. ரொனால்டோவும் தன் ஆட்டத்தை மாற்றிக்கொள்ளவில்லை. தன் அணுகுமுறையை மட்டும் கொஞ்சம் மாற்றிக்கொண்டார். சக்சஸ்! சரியான திட்டமிடல், ரொனால்டோவுக்கும் மற்ற வீரர்களுக்கும் இடையில் ஒரு பாலமாய் அமைந்தது. இது இந்த இரண்டு போட்டிகளில் மட்டுமல்ல, கடந்த 2 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. அதனால்தான் இந்தப் போர்ச்சுகல் அணியால் யூரோ கோப்பை வெல்ல முடிந்தது. பலமான ஸ்பெய்ன் அணியின் டிஃபன்ஸுக்கு ஆட்டம் காட்ட முடிந்தது. 

மெஸ்ஸி..? தன் தரத்துக்கு தன் அணியினர் விளையாடவேண்டும் என்று எதிர்பார்த்தார். இன்னமும் எதிர்பார்க்கிறார். மெஸ்ஸி எல்லோரும் சொல்வதுபோல் 'Came from a different planet' தான். அவரது ஆட்டம் ஏலியன் லெவலில் இருக்கும். இந்த அர்ஜென்டினா வீரர்கள் மிகச்சிறந்த வீரர்கள்தான். ஆனால், அந்தத் தரத்துக்கு அவர்களால் ஆட முடியாது. பார்சிலோனாவின் ஜாவி, இனியஸ்டா போன்ற மகத்தான ஜாம்பவான்கள் மெஸ்ஸியின் ஆட்டத்தை நுணுக்கமாக அறிந்தவர்கள், மெஸ்ஸி எப்படிப் பாஸ் செய்வார், ஒரு பாஸுக்கு எப்படி நகர்வார் என்று நன்கு உணர்ந்தவர்கள். டி மரியாவோ, பனேகாவோ அப்படிப்பட்டவர்கள் கிடையாது. அவர்களால் அப்படி ஆகவும் முடியாது. ஆனால், அவர்கள் அப்படி ஆடவேண்டும் என்று மெஸ்ஸி எதிர்பார்க்கிறார். 

மெஸ்ஸி

அர்ஜென்டினா அணியின் ஒவ்வொரு திட்டமும் அவரைச் சுற்றியே வகுக்கப்படுகிறது. அது தவறில்லை. ஆனால், அதற்காக மற்ற வீரர்கள் தங்களின் ஸ்டைலை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதில்தான் பிரச்னை. மெஸ்ஸி இருப்பதால், மற்ற முன்கள வீரர்கள் செய்யக்கூடிய டிரிபிளிங், ஷாட்ஸ் என அனைத்தின் விகிதமும் குறையும். ஏனெனில், மெஸ்ஸிக்குப் பாஸ் போடுவதுதான் அவர்களின் வேலை. அந்த அணி இங்கேயே பாதி தோற்றுவிட்டது. சரி, களத்திலாவது ஒரு உத்வேகம் கொடுக்கிறாரா? அதுவும் இல்லை. எதிரணி ஒவ்வொரு கோல் அடிக்கும்போதும் தரையை குனிந்து பார்க்கிறார். தன் ஜெர்சியால் முகம் துடைக்கிறார். அவ்வளவுதான். பெஞ்சில் அமர்ந்திருந்த மார்கோஸ் ரோயோ கொடுத்த அளவுக்குக்கூட வீரர்களுக்கு கேப்டன் மெஸ்ஸி உத்வேகம் தரவில்லை.

குரோஷிய வீரர் ரகிடிச்சுடன் ஒடமெண்டி மோதலில் ஈடுபட, இரண்டு அணி வீரர்களும் மொத்தமாக வாக்குவாதம் செய்துகொண்டிருக்க, அதிலும் ஈடுபாடு காட்டாமல் ஓரமாக நிற்கிறார். ஆட்டம் முடிந்ததும் எந்த வீரரையும் பார்க்காமல்  வேகவேகமாக வெளியேறுகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்தார். நேற்றுக்கூட குரோஷிய வீரர் ஸ்ட்ரினிச் ஃபௌல் செய்தபோது, அவரிடம் தன் ஆதங்கத்தைக் கோபமாகக் காட்டினார் 'மிஸ்டர் கூல்'. ஒரு கேப்டன் என்ன செய்யவேண்டும். மோசமான தருணங்களில் தன் அணியின் பின்னால் நிற்கவேண்டும்.  ஆனால் நிற்பதில்லை.  இப்படியெல்லாம் தன் நடத்தையின் மூலமாகவே, தன் அணியினரின் மனதில் ஒரு குற்றவுணர்ச்சியை விதைத்துவிட்டார் மெஸ்ஸி.  

மெஸ்ஸி

மெஸ்ஸி கோப்பை வென்று தரவில்லை என்று குற்றம் சொல்லும் ஒவ்வொரு அர்ஜென்டின ரசிகனின் கருத்தோட்டம் இதுதான்: 'எந்த அர்ஜென்டினா வீரரும் தேசிய அணிக்காக ஜொலிப்பதில்லை. ஆனால், பார்சிலோனா அணிக்கு ஒற்றை ஆளாக போட்டியை வென்றுதரும் மெஸ்ஸியால் ஏன் அர்ஜென்டினாவுக்கு வென்று தர முடியவில்லை'. இந்த எண்ணம் உள்ளவர்கள் நாளையும் மெஸ்ஸியைத்தான் நம்புவார்கள். மெஸ்ஸி மீது கோபம் இருந்தாலும், நம்பிக்கை இருக்கிறது. ஆனால், மற்றவர்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கையே இல்லை. வென்று தந்தால் மெஸ்ஸிதான் வென்றுதரவேண்டும் என்று நினைப்பவர்கள். மற்ற வீரர்களின் இமேஜ் மெஸ்ஸியின் நடத்தைகளினால் சுக்குநூறாகி வருடங்கள் ஆகிறது. இனி அர்ஜென்டினா எனும் குழந்தை வளரப்போவதில்லை. அதைக் கூட்டாகத் தூக்கிச் சுமக்க, சில புதிய வீரர்கள் வரவேண்டும். அவர்கள் வேறு கிரகத்திலிருந்து வந்தவர்களாக இல்லாமல் இருக்கவேண்டும். இல்லையேல் ரொனால்டோபோல்  Greatest Of All Time-ஆக இருக்கவேண்டும்!

https://www.vikatan.com/news/sports/128480-messi-failed-again-for-the-national-team-whereas-cristiano-ronaldo-is-showing-his-new-colours.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.