Jump to content

உலக கிண்ண கால்பந்தாட்டம் 2018 செய்திகள், ஆய்வுகள், கருத்து பகிர்வுகள்


Recommended Posts

கிண்ணத்தைத் தக்க வைக்குமா ஜேர்மனி?
 

image_9efd610b92.jpgகால்பந்தாட்ட உலகக் கிண்ணம், 21ஆவது தடவையாக ரஷ்யாவில் அடுத்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்கின்ற நிலையில், உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றக் கூடிய அணிகளிலொன்றாக, ஜேர்மனி காணப்படுகின்றது.

ஆயினும் 2006, 2010, 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணங்களில் இறுதி நான்கு அணிகளுக்குள் ஒன்றாக வந்து, நடப்புச் சம்பியன்களாக ஜேர்மனி காணப்படுகின்றபோதும், பிரேஸில் அணி 1962ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிக் கிண்ணத்தை தக்க வைத்ததன் பின்னர், முதலாவது அணியாக கிண்ணத்தைத் தக்கவைக்குமா என்பது, தொக்கி நிற்கும் கேள்வியாகவே  உள்ளது.

பிரேஸிலுக்கு அடுத்ததாக அதிகபட்சமாக நான்கு தடவைகள் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ள ஜேர்மனி, எந்தவோர் உலகக் கிண்ணத்தையும் தனிநபர் நட்சத்திரத்தையும் நம்பி எதிர்கொண்டல்ல அணியல்ல. இம்முறையும் அதே நிலைமை தான் காணப்படுகிறது.

தனிநபரில் தங்கியிருக்காதபோதும், அணியின் தலைவரும் முதன்மை கோல் காப்பாளருமான மனுவல் நோயரின் உடற்றகுதி குறித்த சந்தேகங்கள், ஜேர்மனிக்குத் தலையிடியை வழங்குகின்றன.

கடந்த உலகக் கிண்ணத்தில் அபாரமான கோல் காப்பில் ஈடுபட்டிருந்த மனுவல், 27 பேர் கொண்ட ஆரம்பகட்ட அணியில் இடம்பெற்றிருக்கின்றபோதும், காயம் காரணமாக நீண்ட நாட்களாக விளையாடமல் இருக்கின்ற நிலையில், தொடரில் ஜேர்மனியின் முதலாவது போட்டியான மெக்ஸிக்கோவுக்கெதிராக அடுத்த மாதம் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள போட்டிக்கு முன்னர் உடற்றகுதியை அடைந்து விடுவாரா என்ற சந்தேகம் காணப்படுகின்றது.

இதேவேளை, அவ்வாறு உடற்றகுதியை அடைந்தாலும் நீண்ட காலம் விளையாடாமல் இருந்து, உலகக் கிண்ணம் போன்ற முக்கியமான தொடரில் நேரடியாகக் களமிறங்கும்போது அவரின் கோல் காப்பு எவ்வாறிருக்கும் என்ற சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

இருப்பினும், அவருக்கான பிரதியீடாக பார்சிலோனாவின் கோல் காப்பாளரான மார்க் அன்ட்ரே டி ஸ்டீகன் குழாமில் காணப்படுகின்றார். எவ்வாறெனினும், நோயரைப் பிரதியீடு செய்ய முடியுமா என்பது கேள்வியே.

இது இவ்வாறிருக்க, ஜேர்மனியின் ஏனைய வீரர்கள் தத்தமது கழகங்களுக்காக அண்மைய காலங்களில் சிறப்பான திறமை வெளிப்பாடுகளை வெளிப்படுத்தி, நல்ல நிலையில் காணப்படுகின்றனர். அது, சம்பியன்ஸ் லீக்கில் சம்பியனான றியல் மட்ரிட்டின் டொனி க்றூஸிலிருந்து ஆரம்பித்து, இங்கிலாந்து பிறீமியர் லீக் சம்பியன்களாக மன்செஸ்டர் சிற்றி முடிசூட துணைபுரிந்த லெரோய் சனே, இல்கி குன்டோகன் ஆகியோரில் தொடர்ந்து, பெயார்ண் மியூனிச்சின் நம்பிக்கைக்குரிய வீரர்களாகவிருக்கும் தோமஸ் முல்லர், மற் ஹம்மெல்ஸ், ஜெரோம் போட்டாங் ஆகியோர் வரை நீள்கிறது. இதற்கு மேலதிகமாக மத்தியகளத்தில் ஜுவென்டஸின் சமி கெதீராவும் காணப்படுகின்றனர்.

ஆக, ஜேர்மனியின் அண்மைய ஆண்டுகள் முன்னேற்றத்துக்கான காரணியாய் இருக்கும் டொனி க்றூஸின் தலைமையில் மத்திய களத்தில் மேசூட் ஏஸில் ஆகியோருடன் கட்டமைக்கப்படும் அணி, கட்டமைப்பானதாக பலமானதாகவே காணப்படுகின்றது.

அதுவும், உலகக் கிண்ணத்துக்கு முன்னோடியான, கண்டங்களுக்கிடையேயான கிண்ணத் தொடரில் லியோன் கொரெட்ஸ்கா உள்ளிட்ட வீரர்களை உள்ளடக்கிய ஜேர்மனியின் இரண்டாம் தர அணியே சம்பியனாகியிருந்த நிலையில், முன்னணி வீரர்களுக்கான பிரதியீடும் பலமானதாகவே காணப்படுகின்றது.

இதேவேளை, உலகக் கிண்ணத்தில் இதுவரை 10 கோல்களைப் பெற்றுள்ள தோமஸ் முல்லர், தனது முன்னாள் சக வீரரான மிரோஸ்லவ் க்ளோஸின், உலகக் கிண்ணத்தில் அதிகூடியதாக 16 கோல்களைப் பெற்றுள்ள சாதனையை முறியடிக்கக் கூடிய வாய்ப்பும் காணப்படுகின்றது.

அந்தவகையில், அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் ஜேர்மனி, இறுதி நான்கு அணிகளுக்குள் ஒன்றாக முன்னேறும் என்பது நிச்சயமாக இருக்கின்றபோதும் பின்னர் பிரேஸில், பிரான்ஸ், ஸ்பெய்ன், பெல்ஜியம் ஆகிய அணிகளிலொன்றுடன் தோற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image_aca3562538.jpg

http://www.tamilmirror.lk/sports-articles/கிண்ணத்தைத்-தக்க-வைக்குமா-ஜேர்மனி/139-216808

Link to comment
Share on other sites

  • Replies 262
  • Created
  • Last Reply

இழந்த பெருமையை மீட்குமா பிரான்ஸ்?

 

Boxcol
SAN-GRIEZMANN

அன்டோய்ன் கிரீஸ்மேன்.   -  Getty Images

SAN-MAPPE

பவுல் போக்பாவுடன் கைலியன் மாப்பே   -  REUTERS

SAN-MBAPPE

கைலியன் மாப்பே.   -  Getty Images

 

 

 

1998-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கோப்பையைக் கைப்பற்றியது பிரான்ஸ். ஆனால் அதன் பிறகு ஒரு கோப்பையை வெல்ல அந்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2006-ம் ஆண்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறியபோதும் இத்தாலியிடம் பரிதாபமாக தோற்று வெளியேறியது பிரான்ஸ். ஆனால் தற்போது அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர்களின் உத்வேகத்தால் கோப்பையை வென்று இழந்த பெருமையை மீட்கும் முனைப்பில் பிரான்ஸ் அணி உள்ளது.

 

இந்த ஆண்டு ரஷ்யாவில் உலகக் கோப்பை போட்டிகள் கோலாகலமாக நடைபெறவுள்ளன. உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்னேறியுள்ள 32 அணிகளில் பிரான்ஸ் அணி சி பிரிவில் ஆஸ்திரேலியா, டென்மார்க், பெருவுடன் இணைந்துள்ளது.

உலகக் கோப்பைத் தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஐரோப்பாவின் குரூப் பி பிரிவில் பிரான்ஸ் அணி முதலிடம் பிடித்தது. இந்த குரூப்பில் நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகிய அணிகளும் இடம்பெற்றிருந்தன. ஆனால் நெதர்லாந்தையும், ஸ்வீடனையும் விட கூடுதலாக 4 புள்ளிகளைப் பெற்ற பிரான்ஸ் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு முன்னேறியது.

பிரான்ஸ் அணியின் சொத்தாகக் கருதப்படும் வீரர்கள் பவுல் போக்பா, கைலியன் மாப்பே, அன்டோய்ன் கிரீஸ்மேன் ஆகியோர்தான். அதிரடி ஆட்டத்துக்கும், அட்டகாசமாக கோல் போடுவதற்கும் பெயர் பெற்றவர்கள் இந்த மூவர். இந்த மூவர் கூட்டணிதான் பிரான்ஸ் அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தரப்போகிறது என்று பிரான்ஸ் ரசிகர்கள் கருதுகின்றனர்.

நடுகள ஆட்டக்காரரான பவுல் போக்பா, பிரான்ஸ் அணிக்காகவும் மான்செஸ்ட் யுனைடெட் அணிக்காகவும் விளையாடிய அனுபவ ஆட்டக்காரர். 25 வயதாகும் போக்பா, 2011-ம் ஆண்டில் பிரான்ஸ் 16 வயதுக்குட்பட்டோர் அணிக்காகத் தேர்வானார். அதைத் தொடர்ந்து 17, 18, 19, 20 வயதுக்குட்பட்டோர் அணிகளில் ஆடினார். 2013 முதல் தேசிய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார். மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்காக 4 ஆண்டு காலமாக ஆடி வருகிறார். இடையில் ஜுவன்டெஸ்ட் அணிக்காக 6 ஆண்டுகள் விளையாடினார்.

19 வயதாகும் கைலியன் மாப்பே களத்தில் இறங்கினால் புயல்தான். கோல் மழை பொழியும் வரை தனது முயற்சியைக் கைவிடமாட்டார். 2017 முதல் பிரான்ஸ் தேசிய அணியில் இடம்பிடித்து வருகிறார். முன்கள ஆட்டக்காரரான கைலியன் மாப்பே தொடக்கத்தில் ஏஎஸ் பான்டி, ஐஎன்எப் கிளையர்பான்டெய்ன், மொனாக்கோ அணிகளுக்காக ஆடியிருக்கிறார். இவரது தந்தை வில்பிரைட் கால்பந்து பயிற்சியாளர். தந்தையின் ஊக்கத்தால் கால்பந்துக்கு வந்து சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ளார். இவரது அனல் பறக்கும் முன்கள ஆட்டம் பிரான்ஸ் ரசிகர்களை மட்டுமல்லாமல் உலக ரசிகர்களையும் கவர்ந்து இழுத்துள்ளது.

மூவர் அணியில் உள்ள மற்றொரு வீரரான அன்டோய்ன் கிரீஸ்மேன் அடிலெடிகோ மேட்ரிக் கிளப் அணிக்காகவும், பிரான்ஸ் தேசிய அணிக்காகவும் ஆடி வருகிறார். 27 வயதாகும் கிரீஸ்மேன் ஒரு சிறந்த முன்கள ஆட்டக்காரர். 2014-ம் ஆண்டு முதல் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக ஆடி வருகிறார். பிரான்ஸ் தேசிய அணியில் 2010-ம் ஆண்டு இடம்பிடித்துவிட்டார். 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் தேசிய அணியில் இடம்பிடித்து விளையாடினார். பராகுவே அணிக்கெதிரான தனது முதல் சர்வதேச கோலடித்தார்.

போக்பா, கீரிஸ்மேன் ஆகியோர் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களாக இருக்கிறார்கள். போக்பா, கிரீஸ்மேன், மாப்பேவுடன் களமிறங்குவது மற்ற வீரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும் என்று கால்பந்து விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸின் சீரிய மேற்பார்வையில் இவர்கள் மூன்று பேரும் பட்டை தீட்டப்பட்ட வைரமாய் பிரான்ஸ் அணிக்காக களமிறங்கவுள்ளனர். 1998 உலகக் கோப்பை, 2000-ம் ஆண்டில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டத்தை பிரான்ஸ் அணி டெஸ்சாம்ப்ஸ் தலைமையில்தான் வென்றது. நீண்ட காலமாக பயிற்சியாளராக இருக்கும் டெஸ்சாம்ப்ஸ் தலைமையில் மீண்டும் கோப்பையை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையில் பிரான்ஸ் ரசிகர்கள் உள்ளனர். மூவர் அணி கூட்டணியின் மூலம் பிரான்ஸ் தனது இழந்த பெருமையை மீட்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

http://tamil.thehindu.com/sports/article24029971.ece

Link to comment
Share on other sites

மரடோனா செய்த மாயாஜாலம்

 

 
maradona-1986

உலகக் கோப்பையுடன் மைதானத்தை வலம் வரும் மரடோனா (கோப்புப் படம்)

 

 

பதிமூன்றாவது உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி மெக்ஸிகோவில் 1986-ம் ஆண்டு மே 31 முதல் ஜூன் 28 வரை கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக இந்த உலகக் கோப்பை போட்டியை நடத்துவதற்கு கொலம்பியா தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் பொருளாதாரச் சிக்கல் காரணமாக உலகக் கோப்பையை நடத்த முடியாது என அந்நாடு தெரிவித்துவிட்டது.

 

மொத்தம் 24 நாட்டின் அணிகள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டன. காலிறுதியில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும், பெல்ஜியம் 5-4 என ஸ்பெயினையும், பிரான்ஸ் 4-3 என பிரேசிலையும், மேற்கு ஜெர்மனி 4-1 என மெக்ஸிகோவையும் வீழ்த்தின. அரை இறுதியில் அர்ஜென்டினா, மேற்கு ஜெர்மனி அணிகள் வென்றன.

இறுதிச் சுற்றில் அர்ஜென்டினாவும், மேற்கு ஜெர்மனியும் பலப்பரீட்சையில் இறங்கின. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் 80-வது நிமிடத்தின்போது 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. ஆட்டம் முடிய கடைசி 7 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது ஜாம்பவான் மரடோனா அழகான கோல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அதை சரியாகப் பயன்படுத்திய ஜார்ஜ் புருசாஹா கோலடிக்க, அர்ஜென்டினா 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

உலகக் கோப்பையில் 5 கோல்களை அடித்த மரடோனா சிறந்த வீரராக தேர்வானார். அவருக்கு கோல்டன் பால் விருதும், அதிக கோலடித்தவரான இங்கிலாந்து வீரர் கேரி லினிகெருக்கு கோல்டன் பூட்ஸ் விருதும் வழங்கப்பட்டன. மரடோனாவின் மாயாஜால ஆட்டத்தால் கோப்பையை வென்றது அர்ஜென்டினா.

காலிறுதியின்போது இங்கிலாந்தும், அர்ஜென்டினாவும் மோதின. அதில் அர்ஜென்டினா கேப்டன் டீகோ மரடோனா தலையால் முட்டி முதல் கோலை அடித்தார். அப்போது அவருடைய கையும் பந்தின் மீது பட்டதை கவனிக்கத் தவறிய நடுவர் அதை கோல் என அறிவித்தார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த கோலை கடவுளின் கையால் கிடைத்த கோல் என மரடோனா கிண்டலாகக் கூறினார். இன்று வரை அந்த கோல் “ஹேன்ட் ஆப் காட்” கோல் என்றே அழைக்கப்படுகிறது.

http://tamil.thehindu.com/sports/article24029990.ece

Link to comment
Share on other sites

பழி தீர்த்த மேற்கு ஜெர்மனி

 

 
ScoreBoad%20Finalcol
31CHPMULOTHARMATTHAEUS

சாம்பியன் கோப்பையுடன் மேற்கு ஜெர்மனி அணியின் கேப்டன் லோதர் மேத்யூஸ். (கோப்பு படம்)   -  AFP

13col

1990ம் ஆண்டு 14- வது உலகக் கோப்பை தொடர் இத்தாலியில் நடைபெற்றது.

 

இந்தத் தொடர் விறுவிறுப்பாகவே தொடங்கியது. முதல் ஆட்டத்திலேயே கத்துக்குட்டியான கேமரூன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த கேமரூன் அணி தனது பிரிவில் முதலிடம் பிடித்து 2-வது சுற்றில் கால்பதித்தது. அந்த அணியின் வெற்றியில் 38 வயதான ரோஜர் மிலா பிரதான பங்குவகித்தார்.

அந்த அணியின் வெற்றிக்கு கால் இறுதியில் இங்கிலாந்து அணி முற்றுப்புள்ளி வைத்தது.

மேற்கு ஜெர்மனி - நெதர்லாந்து அணிகள் இடையிலான கால் இறுதி சுற்றுக்கு முந்தைய ஆட்டத்தில் வீரர்கள் இடையிலான மோதல் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேற்கு ஜெர்மனி வீரரான ரூடி வோலருடன், நெதர்லாந்தின் முன்கள வீரரான பிராங்க் ரிஜ்கார்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், இருமுறை ரூடி மீது எச்சில் உமிழ்ந்தார். இதனால் ஆட்டத்தின் பரபரப்பு அதிகமாக மேற்கு ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கால் இறுதியில் செக்கோஸ்லோவியாவையும், அரை இறுதியில் இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது மேற்கு ஜெர்மனி.

மறுபுறம் அர்ஜென்டினா அணி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பிரேசிலை 1-0 என்ற கோல் கணக்கிலும், கால் இறுதியில் 3-2 என்ற கணக்கில் யுகோஸ்லோவியாவையும், அரை இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் இத்தாலியையும் பந்தாடி இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்தது. பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மேற்கு ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி 3-வது முறையாக பட்டம் வென்றது. 1986 -ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவிடம் அடைந்த தோல்விக்கு இந்த வெற்றியின் மூலம் மேற்கு ஜெர்மனி பதிலடி கொடுத்தது. அந்த உலகக் கோப்பையில் ஆனந்த கண்ணீர் சிந்திய அர்ஜென்டினாவின் டிகோ மரடோனா இம்முறை ரோம் நகரில் கண்ணீர் ததும்ப சோகமயமாக மைதானத்தில் இருந்து வெளியேறி னார்.

http://tamil.thehindu.com/sports/article24042510.ece

Link to comment
Share on other sites

கொலம்பிய வீரரின் உயிரைக் குடித்த ஓன் கோல்

 

ScoreBoad%20Okcol
01CHPMUANDRESESCOBAR

ஆன்ட்ரஸ் எஸ்கோபர்   -  Getty Images

 
 

15-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. அர்ஜென்டினாவின் நட்சத்திர நாயகன் டிகோ மரடோனாவின் கால்பந்து வாழ்க்கை இந்த உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் தொடரின் பாதியிலேயே மரடோனா வெளியேற்றப்பட்டார். இந்தத் தொடரில் அர்ஜென்டினா நாக் அவுட் சுற்றில் ருமேனியாவிடம் தோல்வியடைந்தது.

இந்த உலகக் கோப்பையில் கொலம்பியா அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த அணி லீக் சுற்றை கூட தாண்ட முடியவில்லை. அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொலம்பியா வீரர் ஆன்ட்ரஸ் எஸ்கோபர் ஓன் கோல் அடித்தார். இந்த ஆட்டத்தில் கொலம்பியா 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. அந்த அணி லீக் சுற்றுடன் மூட்டை கட்டியதற்கு இந்த தோல்வி முக்கிய காரணமாக அமைந்தது. இந்த ஆட்டம் முடிவடைந்த 10 நாட்களில் ஆன்ட்ரஸ் எஸ்கோபர், கொலம்பியாவின் மெட்லின் புறநகரில் உள்ள ஒரு மதுபான விடுதிக்கு வெளியே மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

 

இந்த உலகக் கோப்பையின் இறுதியாட்டத்தில் பிரேசிலும், இத்தாலியும் மோதின. போட்டி நேரத்தில் கோல் எதுவும் அடிக்கப்படாத நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் கோல் கிடைக்காததைத் தொடர்ந்து வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் பிரேசில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலியைத் தோற்கடித்தது. இதன் மூலம் 4-வது முறையாக பட்டம் வென்று சாதனை படைத்தது பிரேசில். பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்ட முதல் உலகக் கோப்பை இறுதிப்போட்டியாக இது அமைந்தது.

http://tamil.thehindu.com/sports/article24053372.ece

Link to comment
Share on other sites

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்- செக் குடியரசை 4-0 என வீழ்த்தியது ஆஸ்திரேலியா

 

உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் செக் குடியரசை 4-0 என வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. #worldCup

 
 
உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்- செக் குடியரசை 4-0 என வீழ்த்தியது ஆஸ்திரேலியா
 
உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்காக 32 அணிகள் தயாராகி வருகின்றன. தற்போது அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியா இன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் செக் குடியரசை எதிர்கொண்டது. இதில் 4-0 என ஆஸ்திரேலியா வீழ்த்தியது. ஆட்டத்தின் 32-வது மேத்யூ லெக்கி முதல் கோலை பதிவு செய்தார். ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் அன்ட்ரிவ் நப்அவுட் ஒரு கோல் அடித்தார். 72-வது நிமிடத்தில் மேத்யூ லெக்கி மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் 3-0 என ஆஸ்திரேலியா முன்னிலைப் பெற்றது. 80-வது நிமிடத்தில் ஓன் கோலால் மேலும் ஒரு கோல் கிடைக்க ஆஸ்திரேலியா 4-0 என வெற்றி பெற்றது.

201806011955108929_1_australia002-s._L_styvpf.jpg

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலயா கடைசியாக 2016 செப்டம்பர் மாதம் அபுதாயில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 1-0 என வீழ்த்தியிருந்தது. அதன்பின் தற்போதுதான் வெற்றி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், டென்மார்க், பெரு ஆகிய அணிகள் ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/01195511/1167219/Australia-beats-Czechs--republic-4-goals-different.vpf

Link to comment
Share on other sites

உலகக் கோப்பை திருவிழாவுக்கான ஆடுகளங்கள்

 

 
02CHPMULUZHNIKISTADIUM

லுஸ்னிக்கி மைதானம்   -  AFP

 

21-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 14-ம் தேதி ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த கால்பந்து திருவிழாவில் 64 ஆட்டங்களை நடத்துவதற்காக மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், சோச்சி, சமரா, ரோஸ்டவ், நிஷ்னி நோவ்கோரோட், சரன்ஸ்க், யெகாடெரின்பர்க், கலினின்கிராட், வோல்கோகிராட், கசான் ஆகிய 11 நகரங்களில் 12 மைதானங்கள் தயார் நிலையில் உள்ளன. இதில் லூஸ்னிக்கி, யெகாடெரின்பர்க், சோச்சி ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்கள் புனரமைக்கப்பட்டவையாகும். மற்ற 9 மைதானங்களும் புதிதாக கட்டப்பட்டுள்ளன. மைதான செலவுக்காக மட்டும் சுமார் ரூ.34 ஆயிரம் கோடியை ரஷ்யா செலவழித்துள்ளது. இவற்றில் மாஸ்கோ நகரில் கட்டப்பட்டுள்ள லூஸ்னிக்கி மைதானம்தான் மிகப்பெரியது. 81 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட இந்த மைதானத்தில் மட்டும் 12 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் தொடக்க ஆட்டமும், இறுதி ஆட்டமும் அடங்கும். போட்டி நடைபெறும் மைதானங்கள் குறித்த ஒர் அலசல்...

   
 
a269277dc215460b1mrjpg

காஸ்மோஸ் அரினா மைதானம்

a269277d049c1d46102mrjpg
a269277de16c5c1b1mrjpg

சென்ட்ரல் மைதானம்

a269277df5e42596101mrjpg
a269277de3267e731mrjpg

பிஸ்ட் ஒலிம்பிக் மைதானம்

a269277d4ad0aef4101mrjpg
a269277d434e368e1mrjpg

கஸான் அரினா மைதானம்

 
a269277d89a04283101mrjpg
a269277dc91de8841mrjpg

ரோஸ்டோவ் அரினா மைதானம்

a269277d2f158d43101mrjpg
a269277d6a634d4c1mrjpg

கலினின்கிராட் மைதானம்

a269277da0c21844101mrjpg
a269277da07babff1mrjpg

மோர்டோவியோ அரினா மைதானம்

a269277df935f925101mrjpg
a269277db25738581mrjpg

ஸ்பார்டக் மைதானம்

a269277da1a206b4101mrjpg
a269277d8a0142e21mrjpg

வோல்கோகிராட் அரினா

a269277d4ef1c9a2101mrjpg
a269277d358e4b851mrjpg

கிரேஸ்டோவ்ஸ்கி மைதானம்

a269277d267448c8101mrjpg
a269277d3c61f57b1mrjpg

நிஸ்னி நாவ்கராட்

a269277d25a9da23101mrjpg

http://tamil.thehindu.com/sports/article24063930.ece

Link to comment
Share on other sites

மொராக்கோவின் தற்காப்பு ஆட்டம் கைகொடுக்குமா?

 

 
02CHPMUMEDHIBENATIA

மெதி பெனட்டியா   -  AFP

 

மொராக்கோ அணி 20 வருடங்களுக்குப் பிறகு தற்போது உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. அட்லஸ் லயன்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் மொராக்கோ அணி இதற்கு முன்னர் 4 முறை உலகக் கோப்பை தொடரில் விளையாடி உள்ளது. 1970, 1994, 1998 ஆகிய ஆண்டுகளில் முதல் சுற்றுடன் வெளியேறிய மொராக்கோ 1986 உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுவரை முன்னேறி ஆச்சர்யம் கொடுத்தது.

 

மொராக்கோ அணி இம்முறை ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் 2010-ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயின், ஐரோப்பிய சாம்பியனான போர்ச்சுக்கல், ஈரான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதனால் மொராக்கோ அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கு கடுமையாக போராட வேண்டியதிருக்கும். இதற்கு தகுந்தபடியே அந்த அணி சிறந்த முறையில் தயாராகியிருப்பதாக கருதப்படுகிறது. கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது அந்த அணி தற்காப்பு ஆட்டத்தை கையில் எடுக்கும் பாணியை சமீபகாலமாக கடைப்பிடித்து வருகிறது.

தகுதி சுற்றில் கடைசி கட்டத்தில் மொராக்கோ அணி 6 ஆட்டங்களில் ஒன்றில் கூட தோல்வியை சந்திக்கவில்லை. இதில் அந்த அணி 3 ஆட்டங்களை கோல்களின்றி டிராவில் முடித்த நிலையில் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. இந்த 3 ஆட்டங்களில் 11 கோல்களை அடித்த மொராக்கோ அணி ஒரு கோல் கூட வாங்கவில்லை என்பதுதான் சிறப்பம்சம். தொழில்ரீதியான போட்டிகளில் ஜூவென்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வரும் 31 வயதான மெதி பெனட்டியா ‘சென்டர் பேக்’ பொசிஷனில் சிறப்பாக விளையாடும் திறன் கொண்டவர். களத்திலும், களத்துக்கு வெளியேயும் சிறந்த பண்புகளை கொண்ட அவரை அணி நிர்வாகம் பெரிதும் நம்பி உள்ளது. இதேபோல் பேக் லைனில் கரீம் எல் அஹ்மதி அசத்தக் கூடியவர்.

முன்களத்தில் அசத்தக்கூடிய வீரராக 25 வயதான ஹக்கிம் ஸியெக் உள்ளார். தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் திறன் கொண்ட அவர், நெதர்லாந்து கிளப் அணிக்காக இந்த சீசனில் 15 கோல்கள் அடிக்க உதவி செய்துள்ளார். மேலும் தகுதி சுற்று ஆட்டத்தில் மொராக்கோ அணி 6-0 என மாலி அணியை பந்தாடிய ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்து முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். இதேபோல் வளர்ந்து வரும் வீரரான அச்ராஃப் ஹக்கிமியும் அனைவரது கவனத்தையும் ஈர்க்க காத்திருக்கிறார். சமீபத்தில் சாம்பியன்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணியில் அச்ராஃப் ஹக்கிமியும் அங்கம் வகித்தார். தகுதி சுற்றில் கபான் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்த காலித் பியூட்டிப், இந்த சீசனில் துருக்கி லீக் கால்பந்து தொடரில் 12 கோல்கள் அடித்து சிறந்த பார்மில் உள்ளார்.

1986 உலகக் கோப்பையில் மொராக்கோ அணி லீக் சுற்றில் இங்கிலாந்து, போலந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தை கோல்களின்றி டிராவில் முடித்த நிலையில் பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது பிரிவில் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. இம்முறை நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அங்கம் வகிக்கும் போர்ச்சுக்கல் அணியை மொராக்கோ அணி வீழ்த்துவது அவ்வளவு எளிதானதாக இருக்காது. எனினும் கால்பந்தில் எதுவேண்டுமானாலும் நடைபெறலாம். காத்திருப்போம் கால்களின் திருவிழா தொடங்கும் வரை.

http://tamil.thehindu.com/sports/article24071235.ece

Link to comment
Share on other sites

52 வருடங்களாக போராடும் இங்கிலாந்து

SAN-HARRY3

ஹாரி கேன்.   -  REUTERS

கிரிக்கெட்டைப் போன்று கால்பந்தும் இங்கிலாந்தில் பிரபலம். இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் மீது எல்லை கடந்த அன்பைப் பொழிபவர்கள் அந்த நாட்டைச் சேர்ந்த ரசிகர்கள். இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இங்கிலாந்து சில நாட்களுக்கு முன்பு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடவுள்ள அணியை அறிவித்தது. எதிர்பார்த்ததைப் போலவே இந்த முறை அணியை வழிநடத்திச் செல்லும் கேப்டனாக ஹாரி கேன் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை தனது தோளி (காலி)ல் சுமக்கவுள்ளார் கேன்.

 

மின்னல் வேக கிக், புயல் வேகத்தில் பந்தைக் கடத்தும் திறன் ஆகியவற்றால் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர் ஹாரி கேன். இந்த முறை உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் 10 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 2 டிராக்களுடன் மொத்தம் 26 புள்ளிகளை குவித்து தனது பிரிவில் முதலிடம் பிடித்து அசத்தியது. தகுதிச் சுற்றில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்காத இங்கிலாந்து அணி 18 கோல்களை அடித்த நிலையில் 3 கோல்கள் மட்டுமே வாங்கியது.

தகுதிச் சுற்று ஆட்டங்களில் 5 கோல்களை அடித்து அசத்தினார் ஹாரி கேன். அணியின் தூணாகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் கலக்கி வருகிறார் ஹாரி கேன். இளம் வீரர்களுடன் இங்கிலாந்து அணி களமிறங்குவதால் அந்த அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஹாரி கேனிடமிருந்து அதிக மாக ரசிகர்கள் எதிர்பார்ப்பதாக கால்பந்து விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

அணிக்கு பக்கபலமாக ரஹீம் ஸ்டெர்லிங், ஜேமி வார்டி, மார்க்கஸ் ராஷ்போர்ட், டேனி ரோஸ், ரயான் பெர்டிரான்ட், கைல் வாஸ்கர், கைரன் டிரிப்பியர் போன் றோர் உள்ளனர். அதே நேரத்தில் இங்கிலாந்து அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் தனது திறமையை நிரூபிக்காமல் இருப்பது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. பலமுறை பெனால்டி ஷூட்-அவுட் சமயங்களில் இங்கிலாந்து சொதப்பி இருப்பது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

அணியினரை ஒருங்கிணைத்தும், எதிரணியைச் சமாளித்தும் இங்கிலாந்தை வெற்றி அடையச் செய்யவேண்டிய நெருக்கடியில் ஹாரி கேன் இருக்கிறார். உலகின் மிகச் சிறந்த ஸ்டிரைக்கர், அருமையான பினிஷர் என்று சொல்லப்படும் ஹாரி கேன் இந்த முறை உலகக் கோப்பை போட்டியில் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மட்டுமே ஜொலிக்காமல் மற்ற வீரர்களையும் பிரகாசிக்க வைப்பது ஹாரி கேனுக்கு கைவந்த கலையாகும். மற்ற வீரர்களுக்கு கோலடிக்க அழகான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில் ஹாரி கேன் மிளிர்கிறார்.

அனைத்து வீரர்களையும் பயிற்சியாளர் சவுத்கேட் ஒருங்கிணைத்து அருமையான பயிற்சியாளராக உலக அரங்கில் வலம் வருகிறார். வீரர்களை ஒருங்கிணைத்தல், அவர்களுக்கு போதுமான ஆலோசனைகள் வழங்குதல் போன்றவற்றில் நேர்த்தியாக செயல்படுகிறார். இந்த முறை இங்கிலாந்து அணி ஜி பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பிரிவில் பனாமா, பெல்ஜியம், துனீசியா அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் பெல்ஜியம் அணி இங்கிலாந்துக்கு கடும் சவால் அளிக்கக்கூடும்.

இங்கிலாந்து அணி உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறுவது இது 14-வது முறையாகும். 1950-ம் ஆண்டு முதன்முறையாக அறிமுகமான அந்த அணி 1966-ல் சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின்னர் 52 வருடங்களாக கோப்பையை வெல்ல போராடி வருகிறது. இம்முறை அந்த தேசத்தின் கனவை நினைவாக்கும் கூடுதல் சுமையுடன் ஹாரி கேன் இந்தத் தொடரை சந்திக்கிறார்.

http://tamil.thehindu.com/sports/article24071224.ece

Link to comment
Share on other sites

ஆஸ்திரியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த நடப்புச் சம்பியன் ஜெர்மனி

rsz_pic_-_afp-696x463.jpg @AFP
 

பிஃபா உலகக் கிண்ண போட்டிக்கு தயாராகி வரும் நடப்புச் சம்பியன் ஜெர்மனி தனது பயிற்சிப் போட்டியில் ஆஸ்திரியாவிடம் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது.

ஜெர்மனி கோல் காப்பாளர் மானுவல் நெவர் காயத்தில் இருந்து மீண்டு ஒன்பது மாதங்களுக்கு பின்னர் அணிக்கு திரும்பிய நிலையிலேயே அந்த அணி இந்த தோல்வியை எதிர்கொண்டுள்ளது.

 

 

கடந்த செப்டெம்பரில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட பின்னர் ஒரு உத்தியோகபூர்வ போட்டியிலும் ஆடாத நிலையில், தற்பொழுது அணிக்கு திரும்பியுள்ள நெவருக்கு அணித் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்ட போட்டியில் ஆஸ்திரிய அணி இரண்டாவது பாதியில் இரட்டை கோல்கள் புகுத்துவதை ஜெர்மன் தரப்பினரால் தடுக்க முடியாமல் போனது.

ஆஸ்திரியாவில் கடந்த சனிக்கிழமை (03) நடைபெற்ற இந்த போட்டியில் ஜெர்மனி தோற்றதன் மூலம் அந்த அணி கடந்த ஐந்து போட்டிகளில் வெற்றி ஒன்றை பெற தவறியுள்ளது. அந்த அணி 1987-88 பருவத்திற்கு பின்னர் இவ்வாறான பின்னடைவை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். அதேபோன்று கடந்த 32 ஆண்டுகளில் தனது அண்டை நாடான ஆஸ்திரியாவிடம் தோல்வியை சந்திப்பது இது முதல் முறையாகும்.

பல முன்னணி வீரர்கள் இன்றி களமிறங்கிய ஜெர்மனி 11 ஆவது நிமிடத்தில் முன்னிலை பெற்றது. மெசுத் ஒசில் பந்தை வளைந்து செல்லும் வகையில் உதைத்து கோல் காப்பாளரை தாண்டி கோலாக மாற்றினார்.     

எனினும் 53 ஆவது நிமிடத்தில் பின்கள வீரர் மார்டின் ஹின்டரகர் மற்றும் மேலும் 16 நிமிடங்கள் கழித்து மத்தியகள வீரர் அலெசன்ட்ரோ செப் ஆகியோர் கோல்களை பெற்று ஆஸ்திரிய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்

 

 

இம்முறை உலகக் கிண்ணத்தில் F பிரிவில் ஆடும் ஜெர்மனி தனது முதல் போட்டியில் வரும் 17 ஆம் திகதி மெக்சிகோவை எதிர்கொள்ளவுள்ளது. ஆஸ்திரிய அணி ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறவில்லை.

இதேவேளை போர்த்துக்கல் அணியுடனான நட்புறவு போட்டியை பெல்ஜியம் அணி கோலின்றி சமநிலையில் முடித்துக் கொண்ட போதும் அதன் பின்கள வீரர் வின்சன்ட் கொம்பனி உபாதைக்கு உள்ளாகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மன்செஸ்டர் யுனைடெட்டைச் சேர்ந்த கொம்பனி, ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதோடு அவர் உலகக் கிண்ணத்தில் ஆடுவது பற்றி அடுத்த 48 மணி நேரத்திலேயே தெரியவரும்.

கடந்த சனிக்கிழமை நடந்த இந்த போட்டியில் போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்கவில்லை. சம்பியன்ஸ் லீக் பட்டம் வென்ற ரியெல் மெட்ரிட்டுக்காக இறுதிப் போட்டியில் ஆடிய பின் அவர் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளார்.

 

இந்நிலையில் பெல்ஜியம் அணிக்காக 100 போட்டிகளில் ஆடிய முதல் வீரராக பாதிவான ஜான் வெர்டொகன் இரண்டாவது பாதியில் கோல் ஒன்றை புகுத்தும் வாய்ப்பு நூலிழையில் தவறிப்போனது.

உலகக் கிண்ணத்தில் பெல்ஜியம் அணி G குழுவில் வரும் ஜுன் 18 ஆம் திகதி பனாமா அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ணத்திற்கான மற்றொரு பயிற்சிப் போட்டியில் கேரி காஹில் மற்றும் அணித்தலைவர் ஹரி கேன் ஆகியோர் முதல் பாதியில் பெற்ற கோல்கள் மூலம் இங்கிலாந்து அணி நைஜீரியாவை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வென்றது.

கோணர் திசையில் இருந்து காஹில் தலையால் முட்டி அடித்த கோல் மூலம் இங்கிலாந்து போட்டியின் 7 ஆவது நிமிடத்திலேயே முன்னிலை பெற்றதோடு பின்னர் 39 ஆவது நிமிடத்தில் கேன் பெனால்டி எல்லையின் விளிம்பில் இருந்து மற்றொரு கோலை புறுத்தினார். இயவோபி 47 ஆவது நிமிடத்தில் நைஜீரியாவுக்கு ஆறுதல் கோல் ஒன்றை போட்டார்.

இங்கிலாந்து வரும் வியாழக்கிழமை (7) கொஸ்டாரிக்காவுடன் தனது இரண்டாவது நடம்புறவு போட்டியில் ஆடவுள்ளது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

ரஷ்யாவால் முதல் சுற்றை தாண்ட முடியுமா?

 

 
03CHPMUIGORAKINFEEV

இகோர் அகின்பீவ்   -  AFP

 

உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெற்றதால் தகுதி சுற்றில் விளையாடாமல் நேரடியாக பிரதான சுற்றுக்குள் நுழைகிறது ரஷ்ய அணி. ரஷ்ய கால்பந்து வரலாற்றில் தற்போதுள்ள அணிதான் மிகவும் வலிமையற்றது என கடுமையான விமர்சனத்துடனே உலகக் கோப்பை திருவிழாவில் களம் காண்கிறது இகோர் அகின்பீவ் தலைமையிலான குழு. கடைசியாக நடைபெற்ற பெரிய அளவிலான 3 தொடர்களான 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை, 2016-ம் ஆண்டு யுரோ சாம்பியன்ஷிப், 2017-ம் ஆண்டு கான்பெடரேஷன் கோப்பை ஆகியவற்றில் ரஷ்ய அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 3 ஆட்டங்களை டிரா செய்த அந்த அணி 5-ல் தோல்வி கண்டுள்ளது. இந்த 9 ஆட்டங்களிலும் 7 கோல்கள் அடித்த ரஷ்ய அணி 12 கோல்களை வாங்கியது.

 

ஸ்டானிஸ்லாவ் செர்செஸோவ் பயிற்சியாளராக உள்ள ரஷ்ய அணி சமீபத்தில் நடைபெற்ற நட்பு ரீதியிலான கால்பந்து போட்டிகளிலும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தவில்லை. பிரான்ஸ், பிரேசில், அர்ஜென்டினா அணிகளுக்கு எதிராக தோல்விகளை சந்தித்த ரஷ்ய அணி ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தை 3-3 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது. கடந்த அக்டோபர் மாதம் தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ரஷ்ய அணி அதன் பின்னர் தனது சொந்த மண்ணில் நடைபெற்ற 6 ஆட்டங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. எனினும் உலகக் கோப்பை தொடரை நடத்தும் ரஷ்ய அணி முதல் சுற்றை கடப்பதற்கு இது தடையாக இருக்காது என கருதப்படுகிறது.

ஏனெனில் ரஷ்ய அணி சற்று பலவீனமான பிரிவிலேயே இடம் பிடித்துள்ளது. ரஷ்யா இடம் பிடித்துள்ள ஏ பிரிவில் சவுதி அரேபியா, எகிப்து, உருகுவே அணிகள் உள்ளன. இதில் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள உருகுவே அணி மட்டுமே ரஷ்யாவுக்கு கடும் நெருக்கடி தரக்கூடும். அதேவேளையில் தரவரிசையில் 63-வது இடத்தில் உள்ள சவுதி அரேபியாவை ரஷ்ய அணி எளிதில் வெல்ல வாய்ப்பிருப்பதாகவே விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்தத் ஆட்டம் தான் தொடரில் முதல் ஆட்டமாக நடைபெறுகிறது. மேலும் தரவரிசையில் 46-வது இடத்தில் உள்ள எகிப்து அணியில் நட்சத்திர வீரரான முகமது சாலா காயம் அடைந்துள்ளதால் அந்த அணியையும் ரஷ்யா பதம்பார்க்க வாய்ப்பிருக்கிறது.

இந்த இரு ஆட்டங்களிலும் ரஷ்ய அணி வென்றால் அந்த அணியின் நம்பிக்கை அதிகரிக்கக்கூடும். இந்த நம்பிக்கையானது பலம் வாய்ந்த உருகுவே அணியை லீக் சுற்றில் கடைசியாக எதிர்கொள்வதற்கு பெரிய அளவில் ஊக்கம் அளிக்கும். இது விசித்திரமான சிந்தனையாக இருந்தாலும் இதற்கு களத்தில் செயலாக்கம் கொடுக்கும் பட்சத்தில் ரஷ்ய அணி நாக் அவுட் சுற்றில் கால்பதிக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல. ரஷ்ய அணியில் உலகத் தரம் வாயந்த திறன் இல்லை. மேலும் முன்னணி வீரர்களான விக்டர் வாசின், ஜார்கி டிஹிகியா, அலெக்சாண்டர் கொக்கரின் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர்.

இதில் டிபன்டர்களான வாசின், டிஹிகியா ஆகியோர் கான்பெடரேஷன் கோப்பையில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டனர். அதேவேளையில் கொக்கரின், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கிளப் அணிக்காக இந்த சீசனில் 35 ஆட்டங்களில் 19 கோல்கள் அடித்து சிறந்த பார்மில் இருந்தார். இம்முறை ரஷ்ய அணியானது சென்டர் பேக்கில் விளையாடக்கூடிய பெடோர் குர்ட்யஸோவ், வலது புற பேக் லைனில் விளையாடக்கூடிய மரியோ பெர்னாண்டஸ், நடுகள வீரரான ஆலன் ஸகோவ் மற்றும் இளம் வீரர்களான அலெக்சாண்டர் கொலுவின், ரோமன் ஸோபின், அலெக்ஸி, அன்டன் மிரன்ச்சுக் ஆகியோரை பெரிதும் நம்பி உள்ளது. கிளப் அணிக்காக கடந்த 3 சீசன்களில் 63 கோல்கள் அடித்துள்ள ஃபியோடார் ஸ்மோலோவும் சற்று பலம் சேர்க்கக் கூடும்.

2014-ம் ஆண்டு உலகக் கோப்பை, 2017-ம் ஆண்டு கான்பெடரேஷன் கோப்பை ஆகியவற்றில் சிறந்த திறனை வெளிப்படுத்தத் தவறிய போதும் கோல்கீப்பிங் பணி மீண்டும் கேப்டன் இகோர் அகின்பீவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் ரஷ்ய அணி லீக் சுற்றை கடக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான். அதேவேளையில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு மற்றும் முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை வெல்லும் பட்சத்தில் ரஷ்ய அணிக்கு நாக் சுற்று சாத்தியப்பட வாய்ப்பு உள்ளது.

http://tamil.thehindu.com/sports/article24075989.ece

Link to comment
Share on other sites

பந்து கோல் வலையைத் தாக்கிய போது... - குரேஷியாவை வீழ்த்தியது குறித்து நெய்மர் நெகிழ்ச்சி

 

 

 
NEYMARKB1

குரேஷியாவுக்கு எதிராக முதல் கோலை அடித்த நெய்மர். | ராய்ட்டர்ஸ்.

வலது பாதத்தில் அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டு கடும் உடல் மற்றும் கால்பந்தாட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் மீண்டும் வந்து குரேஷியாவுக்கு எதிராக கோல் அடிக்க, பிரேசில் 2-0 என்று வெற்றி பெற்றதை பிரேசில் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்,

உலகக்கோப்பைக்குத் தான் முழுதும் தயார் என்பதை ஆட்டம் தொடங்கி 23வது நிமிடத்திலேயே நெய்மர் நிரூபித்தார்.

 

ஆன்பீல்டில் நடைபெற்ற இந்த சர்வதேச நட்புக் கால்பந்தாட்டத்தில் இடைவேளை வரை பெரிய அளவில் பிரேசில் வீரர்களை குரேஷிய வீரர்கள் ‘மார்க்’ செய்தனர். ஆனால் பெர்னாண்டினியோவுக்குப் பதில் நெய்மர் களமிறங்கியவுடன் வில்லியன், கேப்ரியல் ஜீசஸ் ஆகியோருடன் இனைந்து கொஞ்சம் கலகலப்பூட்டினார், குரேஷியாவுக்குப் பிரச்சினைகள் தொடங்கின.

நெய்மர், வில்லியன், கேப்ரியல் ஜீசஸ் ஆகியோர் முன்களத்தில் உலகக்கோப்பை கால்பந்தில் என்ன நடக்கும் என்பதற்கான அறிகுறியைக் காட்டினர்.

முதல் பாதியில் பெரும்பாலும் அமைதிகாத்த பிரேசில் ரசிகர்கள் நெய்மர் களம் கண்டவுடன் பெரிய அளவுக்கு ஆரவாரத்தில் இறங்கினர்.

பிரேசில் அணியாகத் திரண்டு எழுந்து ஆடியதிலும் பெரிய முன்னேற்றம் காணப்பட்டது, நெய்மரின் தனிப்பட்ட திறமையிலும் பெரிய முன்னேற்றம், வேகம் தெரிந்தது.

ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் பெனால்ட்டி பாக்சின் இடது ஓரத்தில் பந்தைப் பெற்ற நெய்மர் குரேஷிய தடுப்பணை வீரர்களான சிமி வ்ரசாலைகோ, டூஜே கலேட்டா-கர் ஆகியோரை அனாயசமாகக் கடைந்து கடந்து வலது காலால் வலையில் தூக்கி விட்டு கோலாக்கினார் நெய்மர்.

ஆட்டம் முடிந்து நெய்மர் கூறுகையில், “3 மாதகால கடினப்பாட்டிலிருந்து மீண்டுள்ளேன். பந்து கோல் வலையைத் தாக்க்கியபோது எனக்கு உதவி செய்தவர்களை நினைத்துக் கொண்டேன். டாக்டர் லஸ்மார், என் குடும்பம் மற்றும் நண்பர்க்ளை நினைத்துக் கொண்டேன். மீண்டும் கால்பந்தாட்டத்தில் நான்... இதற்காகத்தான் காத்திருந்தேன்.

லிவர்பூல் அணிக்கு ஆடும் பிரேசில் வீரர் ரொபர்ட்டோ பர்மினோ 2வது கோலை அடிக்க அதுவே வெற்றி கோலாக அமைந்தது.

நெய்மரின் மீள்வருகை எதிர்பார்ப்புகளையும் கடந்து விட்டது, இதனால்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது, உலகக்கோப்பையில் அவர் உச்சத்துக்குச் செல்ல வேண்டும். நெய்மரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து விட்டோம். ஏனெனில் அவர் வித்தியாசமான ஒரு வீரர்.

உலகக்கோப்பைக்கு முன்னதாக வரும் ஞாயிறன்று வியன்னாவில் ஆஸ்திரியாவுக்கு எதிராக இன்னொரு நட்புமுறை போட்டியில் ஆடுகிறது பிரேசில்.

http://tamil.thehindu.com/sports/article24079079.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஜெர்மனி அணியில் மானுல்

 
அ-அ+

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஜெர்மனி அணியில் கோல் கீப்பரான மானுல் நுவர் இடம் பிடித்துள்ளார். #ManuelNeuer #WorldCupFootball

 
 
 
 
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஜெர்மனி அணியில் மானுல்
 
முனிச்:

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 14-ந் தேதி ரஷியாவில் தொடங்குகிறது.

உலக கோப்பை போட்டிக்கான 23 பேர் கொண்ட ஜெர்மனி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆச்சரியம் அளிக்கும் வகையில், தாக்குதல் ஆட்டத்தில் சிறந்த நடுகள வீரரான லராய் சானேவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எந்த போட்டியிலும் ஆடாமல் இருந்த கோல் கீப்பர் மானுல் நுவர் கடந்த வாரம் நடந்த ஆஸ்திரியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆடினார். இந்த நிலையில் அவர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணியில் கோல் கீப்பர் பெர்ட் லினோ, முன்கள வீரர் நில்ஸ் பீட்டர்சன், பின்கள வீரர் ஜோனதன் ஆகியோருக்கும் இடம் கிடைக்கவில்லை. ஜெர்மனி அணி ‘எப்’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

23 பேர் கொண்ட பெரு அணியில் நடுகள வீரர் செர்ஜியோ பெனோவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ‘உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடிக்க முடியாமல் போனது தனது விளையாட்டு வாழ்க்கையில் கடினமான தருணமாகும்’ என்று செர்ஜியோ பெனோ கருத்து தெரிவித்துள்ளார்.

ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி 14 மாத தடை விதிக்கப்பட்டு, பின்னர் உலக விளையாட்டு தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்து தண்டனையில் இருந்து தற்காலிகமாக விலக்கு பெற்ற கேப்டன் பாலோ குர்ரேரோ பெரு அணியில் இடம் பிடித்து இருக்கிறார். பெரு அணி ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.

எகிப்து அணியில், கடந்த மாதம் நடந்த சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் தோள்பட்டையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் முன்கள வீரர் முகமது சலா சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஆனால் அவர் உடல் தகுதி பெற்று லீக் ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் விளையாடாமல் இருக்கும் நடுகள வீரர் முகமது எல்னெனி அணியில் இடம் பிடித்துள்ளார். 45 வயதான கோல் கீப்பர் இஸ்சாம் எல் ஹடாரி அணியில் இடம் பெற்றுள்ளார். இந்த போட்டியில் இஸ்சாம் எல் ஹடாரி ஆடினால், உலக கோப்பை போட்டியில் விளையாடிய அதிக வயதுடைய வீரர் என்ற சிறப்பை பெறுவார். #ManuelNeuer #WorldCupFootball

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/05091733/1167932/Germany-announce-final-World-Cup-squad-with-Manuel.vpf

Link to comment
Share on other sites

போர்ச்சுக்கலுக்கு பெருமை சேர்ப்பாரா ரொனால்டோ ?

 

 
BOXcol
05CHYPMUCRISTIANORONALDO3

கிறிஸ்டியானோ ரொனால்டோ   -  AFP

17CHPMUMASCOT

உலகக் கோப்பை போட்டி சின்னம் ஸபிவகா.   -  AFP

உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்றில் பி பிரிவில் இடம் பிடித்த போர்ச்சுக்கல் அணி தனது முதல் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்திடம் தோல்வி கண்டது. ஆனால் அதன் பின்னர் விளையாடிய 9 ஆட்டங்களிலும் வெற்றிகளை குவித்து 27 புள்ளிகளுடன் எந்தவித சிரமமும் இல்லாமல் ரஷ்ய உலகக் கோப்பை தொடருக்குள் நுழைந்தது. தகுதி சுற்று ஆட்டங்களில் 32 கோல்கள் அடித்த போர்ச்சுக்கல் அணி வெறும் 4 கோல்களை மட்டுமே வாங்கியது. கேப்டனும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஆந்த்ரே சில்வா கூட்டணி 24 கோல்களை அடித்து மிரளச் செய்திருந்தது.

 

கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சான்டோஸ் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு போர்ச்சுக்கல் அணி இதுவரை 24 ஆட்டங்களில் விளையாடி 20 வெற்றிகளை பெற்றுள்ளது. அதிலும் முக்கியமாக 2016-ம் ஆண்டு நடைபெற்ற யூரோ கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது போர்ச்சுக்கல் அணியின் நம்பிக்கையை மேலும் அதிகமாக்கி உள்ளது.

2014-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் போர்ச்சுக்கல் அணி 2 ஆட்டங்களில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. இந்த இரு ஆட்டங்களிலும் காயம் காரணமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறங்கவில்லை. இது ஒட்டுமொத்த அணியும் ரொனால்டோவை மட்டுமே பிரதானமாக நம்பியிருப்பதையே வெட்டவெளிச்சமாக்குகிறது. உலகக் கோப்பை தொடரில் எதிரணியினர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிராக சரியான களவியூகம் அமைத்து அவரை கோல் அடிக்க விடாமல் செய்தால் போர்ச்சுக்கல் அணி தடுமாற்றத்துக்குள்ளாகிவிடும்.

சமீபகாலமாக போர்ச்சுக்கல் அணி தற்காப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்துவதால் புதிய படைப்பாற்றல் இல்லாமல் உள்ளது. சென்டர் பேக் பொசிஷனில் விளையாடக்கூடிய 35 வயதான பெபெ, உலகக் கோப்பை தொடரில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். அவருடன் புரூனோ ஆல்வ்ஸ் (36), ஜோஸ் போன்டி (34) ஆகியோர் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது. விங்கரான ரிக்கார்டோ குரேஷ்மாவும் (34) சிறந்த பங்களிப்புச் செய்யக்கூடும். கடந்த 4 வருடங்களில் அணியில் உள்ள மற்ற வீரர்களைவிட இவர்தான் கோல் அடிக்க அதிகளவில் உதவி புரிந்துள்ளார்.

நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தேசிய அணிக்காக இதுவரை 148 ஆட்டங்களில் விளையாடி 81 கோல்கள் அடித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு யூரோ கோப்பையை போர்ச்சுச்கல் அணி வென்றதில் ரொனால்டோ முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். தொழில் ரீதியான போட்டிகளில் ரியல் மாட்ரிக் அணிக்காக அற்புதமாக விளையாடும் ரொனால்டோ, முதன்முறையாக தேசிய அணிக்காக பெரிய அளவிலான தொடரில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தது அனைவரையும் சற்று வியக்க வைத்திருந்தது. 5 முறை ஃபிபாவின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ள 33 வயதான ரொனால்டோ இம்முறை தேசத்தின் கனவை நிறைவேற்ற சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக 5 முறை சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்று கொடுத்துள்ள ரொனால்டோ அந்த அணிக்காக 153 ஆட்டங்களில் விளையாடி 120 கோல்கள் அடித்துள்ளார். இதில் கடந்த சீசனில் அடித்த 15 கோல்களும் அடங்கும். ஆனால் உலகக் கோப்பை தொடர்களில் ரொனால்டோ இதுவரையிலும் பெரிய அளவில் சோபித்தது இல்லை. 2006, 2010 மற்றும் 2014 என மூன்று உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 13 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர் வெறும் 3 கோல்கள் மட்டுமே அடித்துள்ளார். தொழில் ரீதிரியான போட்டியுடன் ஒப்பிடு ம் போது இது அவரது தரநிலைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடியதுதான்.

தொழில் ரீதியிலான போட்டிகளில் ரொனால்டோ இந்த சீசனில் பிரி கிக்கில் சோபிக்கவில்லை. அதாவது பாக்ஸூக்கு வெளியே வைத்து பந்தை அவர் உதைத்ததில் ஒருமுறை கூட கோல் விழவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கக்கூடிய விஷயம்தான். ஆனால் அதேவேளையில் ஜூவெண்டஸ் அணிக்கு எதிரான கால் இறுதியில் ‘பைசைக்கிள் கிக்’ முறையில் கோல் அடித்து அனைவரையும் திகைக்க வைத்தார். உலகின் சிறந்த வீரர் என்ற புகழை பெற்ற ரொனால்டோவுக்கு உலகக் கோப்பை தொடர் என்பது இதுவரை எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. இந்த சோகத்துக்கு அவர், இம்முறை முடிவு கட்ட முயற்சிக்கக் கூடும்.

http://tamil.thehindu.com/sports/article24085209.ece

Link to comment
Share on other sites

அரும்பாடுபட்ட ஆஸ்திரேலியா

 

 
Players%20Namecol
04CHPMUTIMCAHILL

டிம் காஹில்   -  REUTERS

17chpmuLogo
8col
 
 

டிம் காஹில்   -  REUTERS

 

ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறுவது இது 4-வது முறையாகும். அந்த அணி 1974-ல் ஜெர்மனியில் நடைபெற்ற கால்பந்து தொடரில் முதன்முறையாக விளையாடியது. அந்தத் தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறிய ஆஸ்திரேலிய அணி அதன் பின்னர் 32 வருடங்களுக்கு பிறகு 2006-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாடுவதற்கு தகுதி பெற்றது. ஜெர்மனியில் நடைபெற்ற இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி நாக் அவுட் சுற்றுவரை முன்னேறியது. அந்தத் தொடரில் பலம் வாய்ந்த இத்தாலியுடன் மோதி 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டு ஆஸ்திரேலிய அணி வெளியேறியிருந்தது. இதன் பின்னர் 2010 மற்றும் 2014-ம் ஆண்டு தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் சுற்றுடன் மூட்டை கட்டியிருந்தது.

 

இம்முறை உலகக் கோப்பை தொடருக்கு படாதபாடுபட்டே ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது. ஆசிய அளவிலான தகுதிச் சுற்று போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்திருந்த ஆஸ்ரேலியா 3-வது இடத்தையே பிடித்திருந்தது. இதனால் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறுவதற்கு இரு பிளே ஆஃப் ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதில் சிரியா அணியை 2-1 என்ற கோல் கணக்கிலும், ஹோண்டூராஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரஷ்ய உலகக் கோப்பைக்கு தொடருக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலிய அணி. சிரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டிம் காஹில் இரு கோல்களை அடித்த நிலையில் ஹோண்டூராஸ் அணிக்கு எதிராக கேப்டன் மைல் ஜெடினக் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தியிருந்தார்.

ஹோண்டூராஸ் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற உடனேயே பயிற்சியாளராக இருந்த போஸ்ட்கோக்ளோ தனது பதவியை ராஜினாமா செய்தார். தகுதிச் சுற்று ஆட்டங்களின் போது கள யுத்தியில் போஸ்ட்கோக்ளோ, சென்ட்ரல் டிபன்ஸில் 3 வீரர்களை பயன்படுத்தினார். இந்த வியூகத்தை தகவமைத்துக் கொண்டு விளையாடுவதில் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாற்றம் கண்டனர். ஆசிய கண்டத்தில் இருந்து எளிதாக தகுதி வாய்ப்பிருந்ததும் ஆஸ்திரேலிய அணி நெருக்கடியை சந்தித்ததற்கு இதுவே காரணம் என கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாகவே போஸ்ட்கோக்ளோ பதவியில் இருந்து விலக நேரிட்டது.

இதன் பின்னர் இடைக்கால பயிற்சியாளராக பெர்ட் வான் மார்விஜ் நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ்தான் ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடரை சந்திக்கிறது. வான் மார்விஜ் பொறுப்பேற்ற பின்னர் ஆஸ்திரேலிய அணி நட்புரீதியிலான ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் நார்வே அணியிடம் தோல்வி கண்டது. அதன் பின்னர் கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தை கோல்களின்றி டிரா செய்திருந்தது.

இது குறித்து வான் மார்விஜ் கூறும்போது, “நான் மந்திரவாதி ஒன்றும் இல்லை. இரண்டே நாட்களில் அணி வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் அனைத்தையும் கற்றுக் கொடுத்துவிட முடியாது. நிறைய நேரம் செலவாகும். தற்போது துருக்கியில் 4 வார காலங்கள் தீவிர பயிற்சி எடுத்து வருகிறாம். உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இரு பயிற்சி ஆட்டங்கள் போதுமானது. என்னை பொறுத்தவரையில் முதல் சுற்றை கடந்தாலே மகிழ்ச்சியடைவேன். அதை செய்ய முடியாவிட்டால் நான் என்னை நிலைப்படுத்திக் கொள்ள முடியாது. நான் ஒரு யதார்த்தவாதி, அதேவேளையில் சிறிது நம்பிக்கையும் கொண்டவன். சிறந்த திறனை வெளிப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேவேளையில் அழுத்தம் அதிகமாக இருந்துவிடக்கூடாது. அழுத் தம் இல்லாமல் சிறந்த திறனை வெளிப்படுத்தவும் முடியாது” என்றார்.

ரஷ்ய உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி கடினமான ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் பலம் வாய்ந்த பிரான்ஸ், டென்மார்க், பெரு அணிகள் இடம் பிடித்துள்ளன. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பெரும்பாலானோர் ஐரோப்பா மற்றும் ஆசிய அளவில் நடைபெறும் தொழில் ரீதியிலான கால்பந்து தொடர்களில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளனர். நடுகள வீரரான ஆரோன் மூய், கோல்கீப்பர் மேம் ரேயான், டாம் ரோஜிக், 38 வயதான டாம் காஹில், கேப்டன் மைல் ஜெடினக், இளம் வீரர்களான டேனியல் அர்ஸானி, பிரான் கார்சிக் ஆகியோரை ஆஸ்திரேலிய பெரிதும் நம்பியுள்ளது. இவர்களில் டாம் காஹில் தகுதி சுற்று ஆட்டங்களில் 11 கோல்கள் அடித்து அசத்தியிருந்தார். தலையால் முட்டி கோல் அடிப்பதில் பிரபலம் வாய்ந்த அவர், இம்முறை சிறந்த பங்களிப்பை வழங்கக்கூடும்.

http://tamil.thehindu.com/sports/article24085204.ece

Link to comment
Share on other sites

2018 பிஃபா உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்த பிரபலங்கள்

Football-2-696x464.jpg Image Courtesy - Getty Images
 

இம்மாதம் 14 ஆம் திகதி ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண போட்டிகளில் காயம் மற்றும் உலகக் கிண்ண போட்டிகளுக்கு தகுதி பெறாததன் காரணமாக விளையாடும் வாய்ப்புக்களை இழந்த பிரபல வீரர்கள் பற்றிய விபரங்களை அவதானத்தை செலுத்துகிறது. 

 

கியன்லூகி புஃபன் (Gianluigi Buffon)

ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில் இத்தாலி அணி, சுவீடன் அணியுடனான ப்லே ஓஃப் (Playoff) போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து உலகக் கிண்ண போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.   இதனால் இம்முறை உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இத்தாலி அணித்தலைவரும் கோல் காப்பாளருமான புஃபன் இழந்தார்.  பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் 2006 ஆம் ஆண்டு உலகக் கிண்ண சம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

கரத் பேல் (Gareth Bale)   

ரியல் மட்ரிட் மற்றும் வேல்ஸ் அணியின் நட்சத்திர வீரரான கரத் பேல் இம்முறை உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.  கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐரோப்பிய கிண்ண போட்டிகளில் வேல்ஸ் அணி கரத் பேல் இன் அபாரமான ஆட்டத்தின் மூலம் அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் கடந்த மாதம் இடம்பெற்ற ஐரோப்பிய சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் பேல் இரண்டு கோல்கள் பெற்று ரியல் மட்ரிட் அணியின் வெற்றிக்கு வழிவகுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் இப்போட்டியில் சிறந்த வீரருக்கான விருதையும் பெற்றிருந்தார். 

அலெக்சிஸ் சன்சேஸ் (Alexis Sánchez)

சிலி மற்றும் மென்செஸ்டர் யுனைடட் அணி வீரரான இவரும் இம்முறை உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் கோப்பா அமெரிக்க கிண்ணத்தை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சிலி அணி இம்முறை உலகக் கிண்ண போட்டிகளுக்கு தகுதி பெறத் தவறியதன் காரணமாக உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடும் வாய்பபை இழந்துள்ளார். 

டிமிட்ரி பயட் (Dimitri Payet)

பிரான்ஸ் அணியின் மத்தியகள வீரரான பயட் தொடைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக பிரான்ஸ் அணியின் இவ்வருட உலகக் கிண்ண குழாமில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2016 ஆண்டு இடம் பெற்ற ஐரோப்பிய கிண்ண போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருந்தார். மேலும் அத்தொடரில் பிரான்ஸ் அணி இறுதிப்போட்டியில் போர்த்துக்கல் அணியிடம் தோல்வியைடந்து இரண்டாம் இடத்தைப் பெற்றது. 

ரெனாட்டோ சன்சேஸ் (Renato Sanches)

போர்த்துக்கல் அணியின் இளம் வீரரும் 2016 ஆண்டு இடம்பெற்ற ஐரோப்பிய கிண்ண போட்டித்தொடரில் சிறந்த இளம் வீரருக்கான விருதை வென்ற ரெனாட்டோ சன்சேஸ் இம்முறை உலகக் கிண்ண தொடருக்கான போர்த்துக்கல் குழாமில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்பது அவருக்கு பெறும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஐரோப்பிய கிண்ண போட்டிகளின் பின்னர் ஜேர்மனியின் பயேர்ன் மியுனிச் கழகத்துடன் ஒப்பந்தமான இவர் தற்போது இங்கிலாந்தின் சுவன்ஸி சிட்டி கழகத்துக்கு விளையாடி வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கழக மட்ட போட்டிகளில் சோபிக்கத் தவறியதன் காரணமாகவே அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மரியோ கொட்சே (Mario Götze)

2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் மரியோ கொட்சேயின் கோலின் மூலம் ஆர்ஜென்டீனா அணியை 1 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது ஜேர்மனி அணி. ஆனால், இம்முறை ஜேர்மனியின் உலகக் கிண்ண குழாமில் அவர் இடம் பெறாதது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

டெனி அல்வெஸ் (Dani Alves)

பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான இவர் இம்முறை உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடுவது சாத்தியமில்ல என பிரேசில் கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. உலகின் சிறந்த பின்கள வீரர்களில் ஒருவரான இவர் பிரான்ஸ் நாட்டின் பிரபல அணியான பி.எஸ்.ஜி (PSG) அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த கோப்பா டி பிரான்ஸ் இறுதிப்போட்டியில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறியதுடன், உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடுவதற்கான சந்தர்ப்பத்தையும் இழந்துள்ளார்.  

பீர்ரா எமரிக் ஔபமியங் (Pierre-Emerick Aubameyang)

ஆபிரிக்க நாடுகளுள் ஒன்றான காபொன் நாட்டின் தேசிய உதைப்பந்தாட்ட அணியின் தலைவரான இவர் தற்போது இங்கிலாந்தின் பிரபல கழகமான ஆர்சனல் அணியின் முன்கள வீரராவார். ஆபிரிக்க கண்ட நாடுகளுக்கான தகுதிகாண் போட்டிகளில் சோபிக்க தவறியதன் காரணமாக இம்முறை இவருக்கு உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் தனது தேசிய அணிக்காக அதிக கோல்கள் போட்ட வீரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 

மௌரோ இகார்டி (Mauro Icardi)

ஆர்ஜென்டீனா அணியின் முன்கள வீரரான இவர் இத்தாலியின் இன்டர் மிலான் கழகத்துக்காக விளையாடி வருகிறார். இம்முறை ஆர்ஜென்டீனா அணியின் 35 பேர் கொண்ட உலகக் கிண்ண குழாமில் இடம்பெற்றிருந்த போதும் கடைசியாக வெளியிட்ட 23 பேர் கொண்ட குழாமில் அவர் இடம்பெறவில்லை. மேலும் இவர் இப்பருவகாலத்தில் இத்தாலியின் சியெரெ A (Serie A) தொடரில் 29 கோல்கள் பெற்று அதிக கோல்கள் போட்ட வீரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

லேரோய் சேன் (Leroy Sané)

ஜேர்மனி அணியின் இளம் வீரர்களில் ஒருவரான 22 வயதுடைய சேன் இங்கிலாந்தின் மென்செஸ்டர் சிட்டி கழகத்துக்காக விளையாடி வருகிறார். இவர் இம்முறை ஜேர்மனி அணியின் உலகக் கிண்ண குழாமில் இடம்பெற்றிருந்த நிலையில் கடந்த காலங்களில் காயம் காரணமாக போட்டிகளில் விளையாடாமல் இருந்த ஜேர்மனி அணியின் தலைவரும் உலகின் தலைசிறந்த கோல் காப்பாளருமான மெனுவல் நியோர் அண்மையில் ஒஸ்ட்ரியா அணியுடன் நடந்த சினேகபூர்வ போட்டியில் விளையாடி தனது உடற் தகுதியை நிரூபித்ததன் மூலம் அவர் அணியில் சேர்க்கப்பட்டு சேன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

உலக கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் சிலி அணியிடம் செர்பியா தோல்வி

 
அ-அ+

உலக கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் செர்பியா அணி 0-1 என்ற கோல் கணக்கில் சிலியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

 
 
 
 
உலக கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் சிலி அணியிடம் செர்பியா தோல்வி
 
கிராஸ்:

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 14-ந் தேதி ரஷியாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அணிகள் வெவ்வேறு அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இதில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள மொராக்கோ அணி, சுலோவக்கியாவை சந்தித்தது. இதில் மொராக்கோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் சுலோவக்கியாவை வீழ்த்தியது. சுலோவக்கியா அணி வீரர் ஜான் கிரிக்ஸ் 59-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். மொராக்கோ அணி தரப்பில் அயூப் எல் காபி 63-வது நிமிடத்திலும், யூனஸ் பெல்ஹன்டா 74-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

ஆஸ்திரியாவில் உள்ள கிராஸ் நகரில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள செர்பியா, தகுதி பெறாத சிலி அணியுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் செர்பியா அணி 0-1 என்ற கோல் கணக்கில் சிலியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. சிலி வீரர் குல்லெர்மோ மாரிபன் 89-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். செர்பியா அணியினர் கோல் அடிக்க கிடைத்த நல்ல வாய்ப்புகளை வீணடித்தனர். 

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/06085938/1168137/Serbia-stumbled-to-a-10-home-defeat-by-Chile-in-a.vpf

Link to comment
Share on other sites

எதையும் சாத்தியமாக்கும் ஜெர்மனி

 

 
Match-3col
05CHPMUMANUELNEUER

மனுவேல் நெவர்   -  REUTERS

06CHPMUJOACHIMLOEW

ஜோச்சிம் லோவ்   -  AFP

06CHPMUJOACHIMLOEW2

ஜோச்சிம் லோவ்   -  AFP

17CHPMUMASCOT

உலகக் கோப்பை போட்டி சின்னம் ஸபிவகா.   -  AFP

17chpmuLogo
DATE2col

 

 

அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளின் பட்டியலில் 2-வது இடத்தில் இருப்பது ஜெர்மனிதான். அந்த அணி 1954, 1974, 1990, 2014 ஆகிய ஆண்டுகளில் மகுடம் சூடியது. 13 அரை இறுதிகள், 8 இறுதிப் போட்டிகளை சந்தித்துள்ள ஜெர்மனி உலகக் கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தும் முதன்மையான அணிகளுள் ஒன்றாக திகழ்கிறது. ரஷ்ய உலகக் கோப்பை தொடரை நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் சந்திக்கிறது ஜெர்மனி. தகுதி சுற்றில் 10 ஆட்டங்களிலும் அபார வெற்றிகளை அந்த அணி குவித்தது. வடக்கு அயர்லாந்து, செக். குடியரசு, நார்வே, அஜர்பைஜான், சன் மரினோ ஆகிய அணிகளை தலா இரு முறை பந்தாடிய ஜெர்மனி 43 கோல்களை அடித்து மிரட்டியது. மேலும் 10 ஆட்டங்களிலும் வெறும் 4 கோல்களையே வாங்கியது.

 

மேலும் 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஃபிபா கான்பெடரேஷன் கோப்பையையும் ஜெர்மனி வென்று அசத்தியது. உலகக் கோப்பை தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் இந்தத் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த போதும் ஜெர்மனி சாதித்துக் காட்டியதில் பயிற்சியாளர் ஜோச்சிம் லோவின் பங்கு அளப்பரியது. இந்தத் தொடரில் நடுகள வீரரான லியோன் கோரட்ஸ்கா சிறந்த திறனை வெளிப்படுத்தினார். மீண்டும் ஒருமுறை நட்சத்திர வீரர்கள் என்று யாருமே அணியில் இல்லாமல் ரஷ்ய உலகக் கோப்பை தொடரை சந்திக்க உள்ளது ஜெர்மனி. ஒட்டுமொத்த குழுவாக இணைந்து உத்வேகத்துடன் செயல்படுவதுதான் அந்த அணியின் வெற்றிக்கான தாரக மந்திரம்.

இம்முறை அந்த அணி பட்டத்தை தக்க வைத்து சாதனை படைக்க வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குகிறது. கடைசியாக பிரேசில் அணி 1958 மற்றும் 1962-ம் ஆண்டு தொடர்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்து சாதனை படைத்திருந்தது. 56 வருடங்களுக்குப் பிறகு இந்த சாதனையை தற்போது நிகழ்த்த ஜெர்மனி தீவிரம் காட்டக்கூடும். இதுதொடர்பாக ஜோச்சிம் லோவ் கூறும்போது, “இம்முறை நாங்கள் வரலாற்று சாதனை படைக்க முடியும். உலகக் கோப்பை தொடர், கான்பெடரேஷன் கோப்பை அதன் பின்னர் மீண்டும் உலகக் கோப்பை என தொடர்ச்சியாக 3 கோப்பைகளை எந்த அணியும் இதுவரை வெல்லவில்லை. இதனால் நாங்கள் கோப்பையை தக்க வைத்துக் கொண்டால் வரலாற்று சாதனை படைக்கலாம். பட்டம் வெல்ல வேண்டும் என்பதே எங்களது அனைவரது இலக்கு” என்றார்.

பிரேசில் அணி சாதனை படைத்த பிறகு இந்த அரை நூற்றாண்டில் அதிகளவு மாற்றங்கள் நடந்துவிட்டது. உலகக் கோப்பையில் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் பெரிய அணிகள் இடையிலான இடைவெளி மிகவும் குறுகலானது என்பதால் ஜெர்மனி அணி கோப்பையை தக்க வைத்துக் கொள்வதற்கான சாதனையை அடைவது சற்று கடினமாகவே இருக்கக்கூடும். ஆனால் இதற்கு மிக தெளிவான திட்டங்கள் வைத்திருப்பதாக கூறும் 58 வயதான ஜோச்சிம் லோவ், “நாங்கள் வெற்றியாளராக இருக்க வேண்டுமென்றால் ஒரு அணியாக நாங்கள் மேலும் முன்னேற்றம் காணவேண்டும். 2014 உலகக் கோப்பையில் விளையாடியதை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்” என்கிறார்.

ஜோச்சிம் லோவ் இரு முக்கிய காரணிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். ஒன்று அணியில் தேவையான மாற்றங்களை செய்வது. மற்றொன்று பிரேசிலில் கோப்பையை கைப்பற்றியது போன்று மீண்டும் மகுடம் சூடுவதற்கு வெற்றியை துரத்துவதற்கான வேட்டையில் ஈடுபடுவது. 2006 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு ஒவ்வொரு பெரிய அளவிலான தொடரிலும் ஜெர்மனி அணியை குறைந்தது அரை இறுதி வரையாவது கொண்டு சென்றுள்ளார் ஜோச்சிம் லோவ். அந்த அணியின் வெற்றிக்கு அடித்தளம் என்பது இளம் தலைமுறை வீரர்களின் வளர்ச்சி மற்றும் கள வியூகங்களுக்கான தந்திரங்களை மேம்படுத்திக் கொள்வதில் சார்ந்திருக்கிறது.

2008-ம் ஆண்டு யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்ததில் இருந்து ஜெர்மனி அணி சிறந்த பாடத்தை கற்றுக்கொண்டது. இந்தத் தொடரில் எதிரணியினர் பந்துகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க எந்த மாதிரியான பாணிகளை கடைப்பிடிக்கிறார்கள் என உற்று நோக்கி ஆராய்ந்தது ஜெர்மனி அணி. அதன் பின்னர் பந்துகளை கடத்துவதில் வேகத்தையும், வீரர்களின் உடல் நலம் மற்றும் வலிமையையும் மேம்படுத்தியது. மேலும் புதிய மட்டத்தில் திறன் மிகுந்த அளவில் பந்துகளை கடத்திச் செல்வதுடன் உயர்மட்ட அளவிலான தற்காப்பு ஆட்டத்தையும் தொடர்ச்சியாக சரிவர கடைப்பிடித்து வெற்றியின் தருணங்களை வியாபிக்கச் செய்தது.

2016-ம் ஆண்டு யுரோ கால்பந்து தொடரில் ஜோச்சிம் லோவ் புதிய தந்திரங்களை கையாண்டார். லீக் சுற்றில் ஸ்பெயின் அணியை இத்தாலி வெற்றி பெற்றதும் தனது அணியின் வழக்கமான பார்மேட்டான 3-4-3 என்பதை 5-3-2 என மாற்றியமைத்தார். டிபன்ஸ் மற்றும் தாக்குதல் ஆட்டத்துக்கு தகுந்தபடி மாற்றியமைக்கப்பட்ட இந்த கள யுத்தியை கொண்டு அந்தத் தொடரில் இத்தாலியை வென்றது ஜெர்மனி அணி. இதன் மூலம் பெரிய அளவிலான தொடரில் முதன்முறையாக இத்தாலியை தோற்கடித்து ஜெர்மனி சாதனை படைத்தது. எனவே ரஷ்ய உலகக் கோப்பையில் பல்வேறு எதிரணிகளை எதிர்கொள்ளும் போது ஜெர்மனி தனது கள யுத்திகளை மாற்றுவதில் எந்தவித சிரமத்தையும் சந்திக்காது என்றே கருதப்படுகிறது.

கான்பெடரேஷன் கோப்பைத் தொடரில் விளையாடிய 10 வீரர்கள் உலகக் கோப்பை தொடருக்கான அணியிலும் இடம் பெற்றுள்ளனர். மேலும் கேப்டனும் கோல்கீப்பருமான மனுவேல் நெவர் காயத்தில் இருந்து குணமடைந்து 8 மாதங்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பி உள்ளார். ஆஸ்திரியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஜெர்மனி அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்தது. இந்த ஆட்டத்தின் 2-வது பாதியில் நெவர் சிறப்பாக செயல்படத் தவறினார். எனினும் மழைக்குறுக்கீடு உள்ளிட்ட சில பாதகமான விஷயங்களும் ஜெர்மனி அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இந்தத் தோல்வியில் இருந்து ஜெர்மனி விரைவிலேலேய மீண்டெழுந்துவிடும். இளம் வீரர்களான ஜோஸ்வா கிம்மிச், டிமோ வெர்னர் ஆகியோர் தகுதி சுற்று ஆட்டங்களில் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர். அணியின் முதுகெலும்பாக திகழும் ஜெரோம் போட்டெங், மட்ஸ் ஹம்மல்ஸ், ஷமி கெதிரா, மெசூட் ஓஸ்வில், தாமஸ் முல்லர், டோனி க்ரூஸ் ஆகியோரும் தங்களது அனுபவத்தால் எதையும் சாத்தியமாக்கும் முனைப்பில் மீண்டும் ஒரு முறை கோப்பையை வெல்ல ஆயத்தமாகி உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/article24093775.ece

Link to comment
Share on other sites

50 நாடுகளில் பயணத்தினை முடித்துக் கொண்டு மொஸ்கோவைச் சென்றடைந்தது உலக கால்பந்துக் கிண்ணம்

world-cup-trophy.jpg?resize=768%2C432

உலக கால்பந்துக் கிண்ணம் 50 நாடுகளில் சுமார் 1,43,000 கிலோ மீட்டர் பயணத்தை முடித்துகொண்டு போட்டி நடைபெவுள்ள மொஸ்கோ நகரை சென்றடைந்துள்ளது. இந்த ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்துப் போட்டித் தொடர் எதிர்வரும் வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை ரஸ்யாவில் நடைபெறவுள்ளது.

 

32 அணிகள் பங்கேற்கும் 64 போட்டிகளை கொண்ட இத்தொடர் ரஸ்யாவின் 11 முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ளதுடன் இறுதிப்போட்டி மொஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் ஜூலை 15-ம் திகதி நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு முறையும் உலக கிண்ணம், உலகை சுற்றி எடுத்து வரப்படுவது வழக்கம் என்ற வகையில் இந்தாண்டுக்கான சுற்றுப்பயணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

அந்தவகையில் தற்போது ரஸ்யா சென்றடைந்துள்ள குறித்த கிண்ணமானது அங்குள்ள நகரங்களை சுற்றி வருகிறது. இந்த பயணம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் அதன்பின் இறுதிப்போட்டி நடைபெறும் மைதானத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

http://globaltamilnews.net/2018/82568/

Link to comment
Share on other sites

உருகுவே அணியை கரையேற்றுவார்களா லூயிஸ் சுவாரெஸ், எடிசன் கவானி

 

 
05CHPMULUISSUAREZ2

லூயிஸ் சுவாரெஸ்   -  REUTERS

 

உருகுவே அணி உலகக் கோப்பை தொடருக்கு 13-வது முறையாக தகுதி பெற்றுள்ளது. 1930-ல் உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்த உருகுவே, 1950-ல் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அதன் பின்னர் கோப்பையை வெல்ல 68 ஆண்டுகளாக போராடி வருகிறது. எனிம் அந்த அணி கடந்த 10 ஆண்டுகளில் பயிற்சியாளர் ஆஸ்கார் தபரேஸ் வழிகாட்டுதலில் ஒரு நிலையான மற்றும் வளமான காலக்கட்டத்துக்குள் நுழைந்துள்ளது. ரஷ்ய உலகக் கோப்பையில் உருகுவே அணி எளிதான ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் தொடரை நடத்தும் ரஷ்யா, எகிப்து, சவுதி அரேபியா ஆகிய அணிகளும் உள்ளன. நாக் அவுட் சுற்றில் நுழைவதில் உருகுவே அணிக்கு எந்தவித சிரமும் இருக்காது.

 

நட்சத்திர வீரர்களான லூயிஸ் சுவாரெஸ், எடிசன் கவானி, டிகோ காட்வின், பெர்னாண்டோ முஸ்லெரா ஆகியோர் அணியின் தூண்களாக உள்ளனர். தகுதி சுற்றில் உருகுவே அணி 9 வெற்றி, 4 டிரா, 5 தோல்விகளை பதிவு செய்திருந்தது. உருகுவே அணி எப்போதும் களத்தில் 4-4-2 என்ற வடிவத்திலேயே வீரர்களை களமிறக்கும். இதில் சுவாரெஸ், கவானி சரியான கலவையாக இடம் பெறுவார்கள். அந்த அணிக்கு நடுகளம்தான் சற்று பின்னடைவாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. எனினும் பந்தை விரைவாக கடத்திச் செல்லும் திறன், சிறந்த தடுப்பாட்டம் ஆகியவற்றால் மற்ற விஷயங்களை சரி செய்துகொள்ள முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளது உருகுவே அணி.

அந்த அணியின் கோல் அடிக்கும் எந்திரமாக வர்ணிக்கப்படுபவர் கவானி. தொழில்முறை போட்டிகளில் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணிக்காக விளையாடி வரும் கவானி, உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டங்களில் 10 கோல்கள் அடித்திருந்தார். மற்றொரு நட்சத்திர வீரரான சுவாரெஸ் கோல்கள் அடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதில் வல்லவர். பார்சிலோனா அணியில் லயோனல் மெஸ்ஸிக்கு உறுதுணையாக இருந்து வரும் சுவாரெஸ் உலகக் கோப்பை தகுதி சுற்றில் 7 கோல்கள் அடிக்க உதவிபுரிந்துள்ளார்.

உலகின் தலை சிறந்த வீரர்களாக கருப்படும் கவானியும், சுவாரெஸூம் வலுவான திறனை களத்தில் வெளிப்படுத்தும் பட்சத்தில் எதிரணியின் தடுப்பு வியூகங்கள் குறித்து உருகுவே அணி அதிகம் பயம் கொள்ளத் தேவை இருக்காது. உருகுவே அணிக்காக சுவாரெஸ் 97 ஆட்டங்களில் 50 கோல்களும், கவானி 100 ஆட்டங்களில் 42 கோல்கள் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுவாரெஸ் உலகக் கோப்பை தொடரில் 5 முறை கோல்கள் அடித்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article24093735.ece

Link to comment
Share on other sites

அதிர்ச்சி கொடுக்கும் கோஸ்டாரிகா

06CHPMUKEYLORNAVAS4

கீலர் நவாஸ்   -  AFP

06CHPMUKEYLORNAVAS

கீலர் நவாஸ்   -  AFP

06CHPMUKEYLORNAVAS1

கீலர் நவாஸ்   -  REUTERS

06CHPMUKEYLORNAVAS4

கீலர் நவாஸ்   -  AFP

06CHPMUKEYLORNAVAS

கீலர் நவாஸ்   -  AFP

மத்திய அமெரிக்க கண்டத்தை சேர்ந்த கோஸ்டா ரிகா உலகக் கோப்பை தகுதி சுற்றில் 10 ஆட்டங்களில் 4 வெற்றி, 4 டிரா, 2 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 2-வது இடம் பிடித்திருந்தது. முதல் இரு ஆட்டங்களில் டிரினிடாட், அமெரிக்க அணிகளை வீழ்த்திய கோஸ்டாரிகா அடுத்த ஆட்டத்தில் மெக்சிகோவிடம் தோல்வி கண்ட நிலையில் ஹோண்டூராஸ், பனாமா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தது. இதையடுத்து டிரினிடாட், அமெரிக்கா அணிகளை மீண்டும் வீழ்த்தி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. ஆனால் அந்த அணி தகுதி சுற்றின் கடைசி ஆட்டங்களில் வெற்றி பெறத் தவறியது. இதில் இரு ஆட்டங்களை டிரா செய்த கோஸ்டாரிகா, கடைசி ஆட்டத்தில் பனாமாவிடம் வீழ்ந்திருந்தது.

 

கோஸ்டாரிகா அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறுவது இது 5-வது முறையாகும். அந்த அணி பிரேசிலில் நடைபெற்ற 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் கால் இறுதி வரை கால்பதித்து அசத்தியிருந்தது. அந்தத் தொடரில் கால் இறுதியில் பெனால்டி ஷூட் அவுட்டில் 3-4 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வி கண்டிருந்தது. முன்னதாக அந்த அந்த அணி லீக் சுற்றில் பலம் வாய்ந்த இத்தாலி, உருகுவே அணிகளை வீழ்த்தி தனது பிரிவில் முதலிடம் பிடித்திருந்தது. இம்முறை கோஸ்டா ரிகா அணி ‘இ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.

இதே பிரிவில் பிரேசில், சுவிட்சர்லாந்து, செர்பியா அணிகள் உள்ளன. இதில் தரவரிசையில் 35-வது இடத்தில் உள்ள செர்பியா மட்டுமே சற்று பலம் குறைந்த அணியாக கருதப்படுகிறது. எனினும் கடந்த உலகக் கோப்பை தொடரில் பலம் வாய்ந்த அணிகளை கோஸ்டாரிகா வீழ்த்தி உள்ளதால் இம்முறையும் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. பிரேசில் உலகக் கோப்பையில் விளையாடிய 12 வீரர்கள் இம்முறையும் அணியில் இடம் பிடித்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக ஒருங்கிணைந்து விளையாடி வருவதால் இவர்களது அனுபவம் பெரிதும் உதவக்கூடும்.

லிஸ்பன் கிளப் அணிக்காக விளையாடிய வரும் நடுகள வீரரான பிரையன் ரூயிஸ், ரியல் மாட்ரிட் அணியின் கோல் கீப்பரான கீலர் நவாஸ், முன்னாள் ஆர்சனல் ஸ்டிரைக்கர் ஜோயல் காம்ப்பெல், நடுகள வீரரான செல்ஸோ போர்ஜெஸ் ஆகியோர் கோஸ்டாரிகா அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட கெண்டல் வாட்சன், ஜியான்கார்லோ கோன்சலஸ், ஜானி அகோஸ்டா ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்க ஆயத்தமாகி உள்ளனர்.

இவர்களில் கீலர் நவாஸ், கோஸ்டாரிகா கால்பந்து வரலாற்றில் சிறந்த வீரராக கருப்படுகிறார். பிரேசில் உலகக் கோப்பையில் கோஸ்டாரிகா அணி கால் இறுதிவரை கால் பதித்ததில் கீலர் நவாஸ் முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். உலகில் சிறந்த கோல் கீப்பர்களில் ஒருவராக திகழும் கீலர் நவாஸ், உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடினார். இந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி, சாம்பியன்ஸ் லீக் தொடரில் கோப்பை வென்றதிலும் நவாஸின் பங்கு அளப்பரியது. இம்முறையும் பல முன்னணி அணிகளுக்கு கோஸ்டரிகா அணி அதிர்ச்சி கொடுக்கக்கூடும் என கருதப்படுகிறது.

http://tamil.thehindu.com/sports/article24093722.ece

Link to comment
Share on other sites

‘கோல்மால்’ பனாமா

 

Mothalgal01col
06CHPMUROMANTORRES

ரோமன் டாரேஸ்   -  AFP

இந்த உலகக் கோப்பை தொட ரில் 2-வது அறிமுக அணியாக களமிறங்குகிறது பனாமா. மத்திய அமெரிக்க நாடான பனாமா தகுதி சுற்று போட்டியல் கோஸ்டா ரிகாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்ல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதால் ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் தான் இருந்தது. ஆட்டம் முடிவடைய இரு நிமிடங்களே இருந்த நிலையில் பனாமாவின் கேப்ரியல் டோர்ரஸ் கோல் அடித்தார்.

 

ஆனால் பந்து கோல் எல்லைக் கோட்டை தொடவில்லை என்று கூறி கோஸ்டா ரிகா அணி நடுவரிடம் முறையிட்டது. இதற்கு செவிசாய்க்காத நடுவர் அதனை கோல் என்று அறிவித்தார். இந்த சர்ச்சை கோல் காரணமாகவே பனாமா அணி உலகக் கோப்பைக்குள் கால்பதித்துள்ளது. இந்த ஆட்டத்தில் பனாமா வெற்றி பெற்றதால் அமெரிக்க அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது.

ரஷ்ய உலகக் கோப்பை தொடரில் அதிக வயதான வீரர்களை உள்ளடக்கிய அணி பனாமாதான். கோல்கீப்பர் ஜெமி பெனேடோ (36), டிபன்டர் பெலிப் பலோய் (37), பிளாஸ் பெரேஷ் (37), கேப்டன் ரோமன் டாரேஸ் (32) ஆகியோருடன் இளம் வீரர்களாக மைக்கேல் காமர்கோ (24), மைக்கேல் முரில் (22), ரிக்கார்டோ ஆவிலா (21) இடம் பெற்றுள்ளனர்.

உலகக் கோப்பையில் விளையாடிய அனுபவம் இல்லாதது பனாமா அணிக்கு பெரிய பலவீனமாக உள்ளது. மேலும் அந்த அணி இடம் பெற்றுள்ள ஜி பிரிவில் ஐரோப்பாவில் பலம் வாய்ந்த அணிகளான பெல்ஜியம், இங்கிலாந்து இடம் பெற்றுள்ளன. இதே பிரிவில் உள்ள துனீசியா அணிகூட எதிரணிக்கு கடும் சவால் அளிக்கக்கூடியதுதான். இதனால் ‘ரெட் வேவ்‘ என செல்லமாக அழைக்கப்படும் பனாமா அணி முதல் சுற்றை கடப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது.

அணியின் நட்சத்திர வீரராக ஜெமி பெனேடோ உள்ளார். தேசிய அணிக்காக 128 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். தொழில்முறை போட்டிகளில் இவர் பங்கேற்ற டைனமோ கிளப் அணி ருமேனியாவில் உள்ள முதல் டிவிஷன் போட்டியில் கடந்த 2017-ம் ஆண்டு கோப்பை வென்றிருந்தது. மேலும் கோல்டு கோப்பையில் 2005 மற்றும் 2013-ம் ஆண்டு தொடர்களில் ஜெமி பெனேடோ சிறந்த கோல்கீப்பராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரு தொடர்களிலும் பனாமா அணி இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டிருந்தது.

http://tamil.thehindu.com/sports/article24101549.ece

Link to comment
Share on other sites

நாக் அவுட் தகராறில் மெக்சிகோ

 

 
06CHPMUJAVIERHERNANDEZ

ஜாவியர் ஹெர்னாண்டஸ்   -  AFP

 

பிரேசில், ஜெர்மனி ஆகிய அணிகளுக்கு பிறகு கடந்த 6 உலகக் கோப்பை தொடர்களிலும் முதல் சுற்றை கடந்த ஒரே அணி மெக்சிகோ மட்டுமே. எனினும் இந்த 6 தொடர்களில் மெக்சிகோ அணி நாக் அவுட் சுற்றுகளை கடந்தது இல்லை. அந்த அணி, லீக் சுற்றுகளில் சிறப்பாக விளையாடும் நிலையில் 4-வது ஆட்டமான நாக் அவுட்டில் தேர்ச்சி பெற முடியாமல் தவித்து வருகிறது. வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கூட்டமைப்புகளில் வலுவானதாக திகழும் மெக்சிகோ அணி முதன்முறையாக 1930-ம் ஆண்டு அறிமுக உலகக் கோப்பைத் தொடரில் களமிறங்கியது. ரஷ்ய தொடர் அந்த அணிக்கு 16-வது உலகக் கோப்பையாகும். அதிலும் அந்த அணி தொடர்ச்சியாக 7-வது முறையாக உலகக் கோப்பை தொடரை சந்திக்கிறது.

 

அதிகபட்சமாக மெக்சிகோ அணி 1970 மற்றும் 1986-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் கால் இறுதி வரை முன்னேற்றம் கண்டிருந்தது. ‘நாக் அவுட் சுற்றை தாண்டும் அதிர்ஷ்டம் கிடையாது’ என்ற விமர்சனத்துக்கு இம்முறை மெக்சிகோ அணி முடிவு கட்ட முயற்சிக்கக்கூடும். 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் மெக்சிகோ அணி லீக் சுற்றில் கடினமான பிரிவில் இடம் பிடித்திருந்த போதிலும் கேமரூன், குரோஷியா அணிகளை வீழ்த்தி 7 புள்ளிகள் பெற்றது. ஆனால் இதே பிரிவில் இடம் பெற்ற பிரேசில் அணி கோல்கள் வித்தியாசத்தில் மெக்சிகோவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்திருந்தது.

அந்தத் தொடரில் மெக்சிகோ அணியின் வெற்றிக்கு நாக் அவுட் சுற்றில் நெதர்லாந்து தடை போட்டது.

ரஷ்ய உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்றில் பனாமா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதுமே மெக்சிகோ தனது இடத்தை உறுதி செய்துவிட்டது.

அந்தச் சூழ்நிலையில் மெக்சிகோ அணிக்கு 3 ஆட்டங்கள் மீதம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தகுதி சுற்றில் மெக்சிகோ அணி 16 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் மட்டுமே தோல்வி கண்டிருந்தது.

அந்த அணியின் வெற்றிகளில் ஜாவியர் ஹெர்னாண்டஸ் முக்கிய பங்கு வகித்தார். தொழில்முறை போட்டிகளில் மான்செஸ்டர் யுனைட்டெடு, ரியல் மாட்ரிட், பேயர் வெலர்குசன் ஆகிய கிளப் அணிகளுக்காக சிறப்பாக விளையாடி உள்ள அவர், கோல்கம்பத்துக்கு நெருக்கமாக சென்று கோல் அடிக்கும் திறன் கொண்டவர்.

எதிரணி வீரரிடம் பந்தை பிடிகொடுக்காமல் கடத்திச் செல்வது, பாக்ஸ் பகுதிக்குள் இடைவெளியை கண்டுபிடிப்பது ஆகியவற்றிலும் உலகத்தரம் வாய்ந்த வீரராக வலம் வருகிறார் ஜாவியர் ஹெர்னாண்டஸ். மான்செஸ்டர் அணியில் அவர், நிமிடத்துக்கு சராசரியாக ஒரு கோல் அடித்துள்ளது இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் இன்றளவும் வரலாற்று சாதனையாக உள்ளது.

கோல்கம்பத்துக்கு முன் பாக ஜாவியர் ஹெர்னாண்டஸ் செயல்படும் திறன் குறித்து ஜெர்மனி அணியின் ஜாம்பவானான ருடி வோலர் கூறும்போது, “கோல்கம்பத்துக்கு முன்பாக அவர் ஒவ்வொரு முறையும் வெற்றி கண்டதில்லை. ஆனால் பந்து எந்த இடத்துக்கு வந்து சேரும் என்ற அறிவை கொண்டுள் ளது வியக்கத்தகுந்த விஷயம்” என்றார்.

ஜாவியர் ஹெர்னாண்டஸ் போன்று அணியில் கவனிக்கத் தக்கவராக மாறி உள்ளார் வளர்ந்து வரும் இளம் வீரரரான ஹிர்விங் லோஸானோ (23). வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கூட்டமைப்பு சாம்பியன்ஸ் லீக்கில் கடந்த ஆண்டு தங்க ஷூ, இளம் வீரர் விருது வென்ற ஹிர்விங் லோஸானோவிடம் இருந்து சிறந்த பங்களிப்பு வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாவியர் ஹெர்னாண்டஸ், ஹிர்விங் லோஸானோ ஆகியோருடன் மிகுவல் லேயன், ரால் ஜிமினெஸ், டிகோ ரேயஸ் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கும் வீரர்களாக உள்ளனர். ரஷ்ய உலகக் கோப்பையில் மெக்சிகோ இடம் பிடித்துள்ள எஃப் பிரிவு மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது. இதே பிரிவில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி, சுவீடன், தென் கொரியா அணிகள் உள்ளன.

லீக் சுற்றில் மெக்சிகோ அணி 2-வது இடத்தை பிடிக்கும் பட்சத்தில் நாக் அவுட் சுற்றில் பிரேசில் அணியை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். மெக்சிகோ அணியின் பயிற்சியாளரான ஜுவான் கார்லோஸ் ஒசோரியோ கூறும்போது, “"ஐரோப்பாவின் மிகப்பெரிய லீக்கில் விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்களின் ஒரு திடமான குழு எங்களிடம் உள்ளது. ரால் ஜிமினெஸ், ஜாவியர் ஹெர்னாண்டஸ், ஹிர்விங் லோஸானோ ஆகியோர் உயர்மட்ட திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் எந்த அணிக்கு எதிராகவும் எங்களால் கோல் அடிக்க முடியும்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article24110809.ece

Link to comment
Share on other sites

குரோஷியாவை தாங்கிப்பிடிக்கும் நடுகள வீரர்கள்

 

 
SAN-MODRIC-1

லுகா மாட்ரிக்   -  AFP

ஐந்தாவது முறையாக குரோஷியா அணி, உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னேறியுள்ளது. ஃபிபா தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் குரோஷியா அணியில்உலகத் தரம் வாய்ந்த கால்பந்து வீரர்கள் நிறைந்திருந்தபோதிலும் அந்த அணியால் இதுவரை கோப்பையைக் கைப்பற்ற முடியவில்லை. அதிகபட்சமாக 1998-ல் அரை இறுதி வரை அந்த அணி முன்னேறியிருக்கிறது.

 

இந்த முறை உலகக் கோப்பைத் தொடரில் பலம் வாய்ந்த குரூப் டி-யில் குரோஷியா இடம்பெற்றுள்ளது. இந்த குரூப்பில் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாகக் கருதப்படும் அர்ஜென்டினாவும் உள்ளது. எனவே அந்த அணிக்கு முதல் சுற்றைத் தாண்டுவதே கடினமான இலக்காக இருக்கும் என்று கால்பந்து விமர்சகர்கள் கணித்துள்ளனர். ஆனாலும் பலம்வாய்ந்த நடுகள வீரர்கள் குரோஷியா அணியைத் தாக்கிப் பிடிக்கிறார்கள்.

அணியின் பலமாக இருப்பது ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் மாட்ரிக்கும், மட்டியோ கோவாசிக்கும். இதேபோல பார்சிலோனா அணிக்காக களமிறங்கி கலக்கி வரும் இவான் ராகிடிக்கும், இன்டர்மிலன் அணிக்காக விளையாடும் இவான் பெரிசிக்கும், மார்செலோ புரோசோவிக்கும் அணியின் தூண்களாக எதிரணியை மிரட்டுகின்றனர். இவர்கள் அனைவருமே உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமல்லாமல் ஜுவென்டஸ் அணிக்காக விளையாடும் மரியோ மான்ட்ஜுகிக், மிலனுக்காக ஆம் நிகோலா காலினிக், ஹோபன்ஹெய்ம் அணிக்காக சாதனை புரியும் ஆந்திரஜ் கிராமரிக்கும் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக உள்ளனர்.

நடுகளத்தில் மின்னலென பாயும் வீரர்களாக கேப்டன் லுகோ மாட்ரிக், கோவாசி, இவான் ராகிடிக், இவான் பெரிசிக், மார்செலோ புரோசோவிக் ஆகியோர் உள்ளனர். அணியைத் தாங்கிப் பிடிக்கும் அசகாய சூரர்களும் இவர்கள்தான். இவர்களை நம்பியே அணி உலகக் கோப்பை களத்தில் குதிக்கிறது. உலக கால்பந்து வீரர்களில் மிகச் சிறந்த நடுகள வீரர்கள் வரிசையில் லுகோ மாட்ரிக்கும் ஒருவர்.

அதே நேரத்தில் இதுவரை குரோஷியா அணி உலகக் கோப்பைத் தொடரில் அரை இறுதியைத் தாண்டியதில்லை. அது ஒரு பெரும் பலவீனமாக பார்க்கப்படுகிறது. யுகோஸ்லேவியாவிலிருந்து பிரிந்த பின்னர் முதன்முறையாக 1998-ல் உலகக் கோப்பையில் குரோஷியா பங்கேற்று அரை இறுதி வரை சென்றது. ஆனால் பலம்பொருந்திய பிரான்ஸிடம் தோல்வி கண்டு வெளியேறியது குரோஷியா. ஆனால் இம்முறை நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற வேகம் வீரர்களிடையே உள்ளது.

தற்போது பயிற்சியாளராக உள்ள டாலிக், போதிய அனுபவம் இல்லாதவர். மேலும் நெருக்குதலான ஆட்டத்தின்போது அவர் மிகவும் பதற்றமாக காணப்படுகிறார். அவர் பதற்றமாக இருக்கும் பட்சத்தில் அது அணியினரிடையே எதிரொலிக்கும். மேலும் குரோஷியா அணி தடுப்பாட்டத்தில் மிகவும் பலம் குறைந்த அணியாக பார்க்கப்படுகிறது. மூத்த வீரர் வேத்ரன் கோர்லுகா காயமடைந்து தற்போதுதான் அணிக்குத் திரும்பியுள்ளார். ஆனால் அணி வீரர்களை அரவணைத்துச் செல்லும் புதுப் புயலாக இருக்கிறார் கேப்டன் லுகோ மாட்ரிக். 32 வயது குரோஷிய சூப்பர் ஸ்டாரான லுகோ, தங்களது நாட்டுக்கு கோப்பையை வாங்கி வருவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

http://tamil.thehindu.com/sports/article24110793.ece

Link to comment
Share on other sites

திறமைக்கு பஞ்சம் இல்லாத ஐஸ்லாந்து

 

 
06CHPMUARONGUNNARSSON

நார்டிக் நாடு என அழைக்கப்படும் 3,30,000 மக்கள் தொகையைக் கொண்ட ஐஸ்லாந்து அணி உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறுவது இதுவே முதன்முறை. இதன் மூலம் குறைந்த மக்கள் தொகையை கொண்ட நாடு ஒன்று முதன்முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் பெருமையை பெற்றுள்ளது. ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த அந்த அணி தகுதி சுற்றில் 10 ஆட்டங்களில் 7 வெற்றி, ஒரு டிரா, 2 தோல்விகளுடன் 22 புள்ளிகள் குவித்து தனது பிரிவில் முதலிடம் பிடித்து ரஷ்ய உலகக் கோப்பைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. தகுதி சுற்று ஆட்டங்களில் அந்த அணி 16 கோல்கள் அடித்த நிலையில் 7 கோல்கள் வாங்கியது.

தனது அசாத்திய திறனால் தகுதி சுற்றில் முதன்மை அணியாகக் கருதப்பட்ட பலம் வாய்ந்த குரோஷியா அணியையே பிளே ஆஃப் சுற்றில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளியது ஐஸ்லாந்து. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற யூரோ கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றில் 2-1 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தி கால்பந்து உலகுக்கே அதிர்ச்சி கொடுத்திருந்தது ஐஸ்லாந்து அணி.

 

அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய ஐஸ்லாந்து அணியின் வெற்றிக்கு கால் இறுதியில், பிரான்ஸ் அணி முட்டுக்கட்டை போட்டிருந்தது. ரஷ்ய உலகக் கோப்பை தொடரில் ஐஸ்லாந்து அணி கடினமான ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் அர்ஜென்டினா, நைஜீரியா, குரோஷியா அணிகள் உள்ளன. ஒருவகையில் ஐஸ்லாந்து அணி இடம் பெற்றுள்ள பிரிவு ‘டெத் ஆப் குரூப்’ என்றே சொல்லலாம். அந்த அணி முதல் சுற்றை கடந்தால் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் அணியை சந்திக்கக்கூடும். பலம் பொருந்திய பிரான்ஸ் அணி, யூரோ கால்பந்து தொடரில் ஐஸ்லாந்து அணியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்லாந்து அணி 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை நூலிழையில் நழுவ விட்டிருந்தது. தனது பிரிவில் 2-வது இடம் பிடித்த ஐஸ்லாந்து அணி பிளே ஆஃப் சுற்றில் குரோஷியாவிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததால் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்திருந்தது. ஆனால் இம்முறை தகுதி சுற்றில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டது.

ரஷ்ய உலகக் கோப்பை தொடருக்கான ஐஸ்லாந்து அணியில், யூரோ கோப்பையில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் கில்பி சிகுர்ட்ஸன், அரோன் குனர்சன். தாக்குதல் ஆட்டம் மேற்கொள்வதில் அசத்தும் நடுகள வீரரான கில்பி சிகுர்ட்ஸன் (28), கடந்த மார்ச் மாதம் எவர்டன் கிளப் அணிக்காக விளையாடிய போது முழங்காலில் காயம் அடைந்தார். எனினும் உலகக் கோப்பை தொடரில் ஜூன் 16-ம் தேதி அர்ஜென்டினா அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னதாக அவர், முழு உடல் தகுதியை எட்டிவிடுவார் என அணி நிர்வாகம் நம்பிக்கைக் கொண்டுள்ளது.

மக்கள் தொகைக்கும் திறமைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என நிரூபித்துள்ள ஐஸ்லாந்து அணி சர்வதேச கால்பந்து உலகில் தன்னை வலுவாகவே நிலைப்படுத்திக் கொண்டுள்ளது. அந்த அணியானது தனிப்பட்ட வீரர்களின் திறனை மட்டும் எப்போதும் சார்ந்திருப்பதில்லை. அந்த அணியின் முக்கிய வலிமையே வீரர்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவதுதான்.

இந்த பிணைப்பு வீரர்களுக்குள் மட்டும் இல்லை அதை தாண்டி ரசிகர்கள் மட்டத்திலும் உள்ளது. கால்பந்து வீரர்களை உற்சாகப்படுத்துவதில் அந்நாட்டு ரசிகர்களுக்கு நிகர் யாருமில்லை என்றுதான் கூற வேண்டும்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு யூரோ கால்பந்து தொடரில் ஐஸ்லாந்து அணி வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக அந்நாட்டு ரசிகர்கள் சுமார் 33 ஆயிரம் பேர் போட்டி நடைபெற்ற பிரான்ஸ் நாட்டுக்கு படையெடுத்தனர். இது அந்நாட்டு ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் ஆகும். மைதானத்தில் அவர்கள் எழுப்பும் ‘வைகிங் கிளாப்’ மிகவும் பிரபலமானது. யூரோ கோப்பைக்கே அப்படி என்றால் இம்முறை உலகக் கோப்பைத் தொடருக்கு சொல்லவா வேண்டும்..

http://tamil.thehindu.com/sports/article24110737.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.