Jump to content

உலக கிண்ண கால்பந்தாட்டம் 2018 செய்திகள், ஆய்வுகள், கருத்து பகிர்வுகள்


Recommended Posts

     உலக கிண்ண கால்பந்தாட்டம் 2018 செய்திகள், ஆய்வுகள், கருத்து பகிர்வுகள்
 
 
 
கால்பந்தாட்ட உலகக் கிண்ணம் 2018 - ரஷ்யா
 

image_a1ee2caa5d.jpgimage_2f609978e1.jpgimage_54801d83f0.jpgimage_a8540c1327.jpg

- ச. விமல்

கால்பந்தாட்ட உலகக் கிண்ணம், இவ்வாண்டு ஜூன் மாதம்  ஆரம்பிக்கவுள்ள நிலையில்  ஒவ்வொரு அணி பற்றிய விபரங்களும் தமிழ் மிரரின்  விளையாட்டு கட்டுரைகள் பகுதியில் தொடர்ச்சியாக வெளியாகவுள்ளன. அதன்படி 32 அணிகளது கடந்த காலங்கள், இம்முறை உலகக் கிண்ணம் எவ்வாறு அமையப்போகிறது என்ற விடயங்கள் அடங்கலான தகவல்களை  தரவுள்ளோம். இந்த கட்டுரையின் முதல் அணியாக உலகக் கிண்ணத்தை நடாத்தும் ரஷ்ய அணி பற்றிய கட்டுரை இங்கே தொடர்கிறது.

முதற் தடவையாக ரஷ்யா உலகக் கிண்ணத் தொடரை நடாத்துகின்றது. 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் சோவியத் ஒன்றியமாக இருந்த கலாத்திலும் அவர்களால் உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரை நடாத்த முடியவில்லை. பலமான பெரிய நாடாக திகழ்கின்ற போதும் சோவியத் ஒன்றியமாகவும் சரி, ரஷ்யாவாகவும் சரி உலகக் கிண்ணத்தில் இவர்கள் மிகப் பெரிய சிகரம் தொடவில்லை.

1930ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரை  சோவியத் ஒன்றியமாக விளையாடிய இவர்கள் ஏழு தடவைகள் உலகக் கிண்ண தொடரில் விளையாடியுள்ளார்கள். இவற்றுள் 1966ஆம் ஆண்டு நான்காமிடத்தைப் பெற்றுக்கொண்டார்கள். மூன்று தடவைகள் காலிறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். 1994ஆம் ஆண்டு ரஷ்யாவாகப் பிரிந்த பின்னர்  உலக கிண்ணத் தொடரில் விளையாடினார்கள். அதன் பின்னர் 2002ஆம் ஆண்டும் 2014 ஆம் ஆண்டு உலக கிண்ணத் தொடர்களில் விளையாடி முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

  ஆனாலும் கூட இம்முறை பலமான அணியாகவே இவர்கள் தென்படுகிறார்கள். தரப்படுத்தல்களில் 62 ஆம் இடத்தில் காணப்படும் இவர்கள் கடந்தாண்டு போட்டிகளில் விளையாடியது குறைவு. இது அவர்களுக்கு பின்னடைவைத் தந்தாலும், விளையாடிய போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார்கள்.  இறுதியாக ஸ்பெய்ன் அணியுடன் நடைபெற்ற சிநேகபூர்வ போட்டியொன்றில் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலை முடிவைப் பெற்றார்கள்.

கடந்தாண்டு விளையாடிய 11 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்கள். நான்கு போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்துளார்கள். நான்கு அணிகளுமே பலமான அணிகள். ஆர்ஜென்டீனா, மெக்ஸிக்கோ, ஐவரி கோஸ்ட், போர்த்துக்கல் ஆகிய அணிகள் அவை. நான்கு போட்டிகளை சமநிலையில் நிறைவு செய்தனர். எனவே சொந்த  நாட்டில் போட்டிகள் நடைபெறுகின்றன என்ற பலமே தவிர மற்றைய காரணங்களால் இவர்கள் பெரியளவில் சாதிப்பது கடினம். இரண்டாம் சுற்றுடன் வெளியேற்றப்படுவார்கள் என்பது நிச்சயம். அவர்களின் குறிக்கோள் கூட இரண்டாம் சுற்றுவரை செல்வதே.

இரண்டாம் சுற்றுவரை செல்லவேண்டும் என்ற இவர்களின் குறிக்கோளுக்கு ஏற்றால் போல் அவர்களுக்கான குழுவும் அமைந்துள்ளது. போட்டியை நடாத்தும் நாடாக குழு ஏயில் இடம்பிடித்துள்ளமையால் இவர்களுக்கு கிடைத்துள்ள மற்றைய அணிகள் ஓரளவு இலகுவான அணிகளாகக் காணப்படுகின்றன. இதுவும் கூட இவர்கள் அடுத்த சுற்றுக்கு செல்வார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் இக்குழுவில் இடம்பெற்றுள்ள நான்கு அணிகளுள் தரப்படுத்தலில் மூன்றாவது இடத்திலிருப்பது ரஷ்ய அணி. உருகுவே அணி 21ஆவது இடத்திலும், எகிப்து அணி 3ஆவது இடத்திலும், சவுதி அரேபியா அணி 63ஆவது இடத்திலும் உள்ளன. ரஷ்ய அணி 62 ஆம் இடத்திலுள்ளது. எனவே முதலிரு இடங்களுக்குள் வந்து அடுத்த சுற்றுக்குச் செல்வார்களா என்பது கேள்வியே. அவ்வாறு அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றாலும் இடண்டாவது சுற்றில் போர்த்துக்கல் அல்லது ஸ்பெய்ன் அணியைச் சந்திக்க வேண்டும். அதன் காரணமாக இவர்கள் இரண்டாவது சுற்றுக்கு மேல் செல்ல மாட்டார்கள் என நிச்சயம் அடித்துக் கூற முடியும்.

ஐரோப்பா கண்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ரஷ்ய அணி போட்டிகளை நடாத்தும் நாடு என்ற காரணத்தால் தகுதிகாண் போட்டிகளில் விளையாடவில்லை.  2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய கிண்ண தொடரிலும் இவர்கள் முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டார்கள் என்பது இங்கு முக்கியமான விடயமாக அமைகிறது.  ஆனால் ரஷ்ய அணி மாத்திரமே ஐரோப்பிய வலைய அணியாக குழு ஏயில் இடம்பிடித்துள்ளது.  முதல் சுற்றுப் போட்டிகளில் மற்றைய வலைய நாடுகளுடன் மோதுவதாலேயே ரஷ்ய அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெறுமென நம்பப்படுகிறது.

ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியமாக இணைந்து உலகக் கிண்ண தொடரில்  40 போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். இவற்றுள் 17 வெற்றிகள், எட்டு சமநிலை முடிவுகள், 15 தோல்விகள் என்ற பெறுபேற்றைக் கொண்டுள்ளார்கள். இந்த முடிவுகளின்படி 59 புள்ளிகளைப்  பெற்று  உலகக் கிண்ணத் தரப்படுத்தலில் 11ஆவது இடத்தைப் பெற்றுள்ளனர்.  ரஷ்ய அணியாக விளையாடிய மூன்று உலக கிண்ணத் தொடரின் ஒன்பது போட்டிகளில் இரண்டு வெற்றிகளையும் இரண்டு சமநிலை முடிவுகளையும் ஐந்து தோல்விகளையும் பெற்றுள்ளார்கள்.

உத்தியோகபூர்வ பந்தயக்காரர்கள் ரஷ்ய அணி உலகக் கிண்ணத்தை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை 12ஆம் இடத்தில் வழங்கியுள்ளார்கள். அவ்வாறு பார்த்தால் அவர்கள் உலகக் கிண்ணத் தொடரில் 12ஆவது இடத்தைப் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. அதாவது இரண்டாவது சுற்றுக்கு தெரிவாகுமணிகள்  16 இடங்களுக்குள் வருவார்கள். இரண்டாம் சுற்றில்  தோல்வியடைபவர்கள் எட்டு தொடக்கம் 16 வரையான இடங்களை பிடிப்பார்கள். அதன்படி ரஷ்ய அணிக்கான இடம் 12ஆவதாக  வழங்கப்பட்டுள்ளது. அதே குழுவிலுள்ள உருகுவே 11ஆவது இடத்தை பிடித்துள்ளது. அவ்வாறு பார்த்தால் குழு ஏயில் ரஷ்ய அணி இரண்டாமிடத்தைப் பிடிக்குமென நம்பப்படுகிறது.

சொந்த நாட்டில் போட்டிகள் நடைபெறுவதனால் முழு ரஷ்யாவுமே உலக கிண்ண ஆரம்ப போட்டிக்காக காத்திருக்கும். அதிலும் மைதானம் நிரம்பி வழியும். மிகப்பெரிய கொண்டாட்டத்துக்காக காத்திருக்கும் ரஷ்ய அணியின் ரசிகர்களுக்கு அவர்களது அணி ஏமாற்றத்தை வழங்காமல் நல்ல விறுவிறுப்பான போட்டியை வழங்கினாலே அது மிகப்பெரிய வெற்றியாக அமையும்.

 

ரஷ்யாவின் முதல் சுற்று போட்டிகள்

14 ஜூன் - சவுதி அரேபியா - இரவு 8.30

19 ஜூன்  - எகிப்து  - இரவு 11.30

25 ஜூன்  - உருகுவே  - இரவு 7.30

(இலங்கை நேரப்படி)

http://www.tamilmirror.lk/sports-articles/கால்பந்தாட்ட-உலகக்-கிண்ணம்-2018-ரஷ்யா/139-211190

Link to comment
Share on other sites

  • Replies 262
  • Created
  • Last Reply
கால்பந்தாட்ட உலகக் கிண்ணம்: மொரோக்கோ
 

- ச.விமல்

image_9dc07dfa77.jpg

கால்பந்தாட்ட உலகக் கிண்ணம், இவ்வாண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், தொடர்ச்சியாக அணிகள் பற்றிய விபரங்கள் வெளியாகுகின்றன.   

இவ்வரிசையில் முதல் அணியாக   உலகக் கிண்ணத்தை இம்முறை நடாத்தும் ரஷ்ய அணி பற்றிய விபரங்கள் முதலாவதாக வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இரண்டாவது அணியாக மொரோக்கோ அணி பற்றி இங்கு குறிப்பிடப்படுகிறது.  

மொரோக்கோ அணி ஆபிரிக்க வலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓரணி. 30 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் உலகக் கிண்ண தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள். 1998 ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற உலக கிண்ண தொடரில் குழு நிலை தொடருடன் வெளியேற்றபப்ட்ட பின்னர் மீண்டும் கடுமையான போராட்டத்துக்கு பின்னர் இம்முறை உலகக் கிண்ண வாய்ப்பை பெற்றுள்ளார்கள்.

 53 அணிகள் மோதும் ஆபிரிக்கா கண்டத்திலிருந்து இவர்கள் குழு நிலை போட்டிகளில் முதலிடத்தை பெற்று உலக கிண்ணத்துக்கு தெரிவானார்கள். ஆபிரிக்க வலய அணிகளில் இறுதி 26 இடங்களைப் பெற்ற அணிகள் மோதி அவற்றில் 13 அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகின.  அந்த 13 அணிகள் முதல் 27 அணிகளுடன் இணைந்து 40 அணிகளாகின. அவை ஒவ்வொன்றும் தமக்குள் தங்கள் நாட்டிலும் வெளிநாட்டிலும் என மோதி வென்ற 20 அணிகள் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டன.

இத்தொடரில் முதற் போட்டியில் 2-0 என வெற்றி பெற்ற மொரோக்கோ அணி இரண்டாவது போட்டியில் ஈகுவோட்டோரியல் குயினியா அணியிடம் 1-0 என தோல்வியடைந்த போதும் மொத்த கோல்களின் படி வெற்றி பெற்றது. குழு நிலையில் ஐவரிகோஸ்ட், கபோன், மாலி ஆகிய அணிகளுடன் இடம்பிடித்தது. இந்த அணிகளுடன் விளையாடிய ஆறு போட்டிகளில் மூன்று வெற்றிகளையும் மூன்று சமநிலை முடிவுகளையும் பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றதன் மூலம் உலகக் கிண்ண தொடருக்கு தெரிவானது. ஐந்து குழுக்களிலும் முதலிடங்களை பெறுமணி உலக கிண்ண தொடருக்கு தகுதி பெறும்.

1970 ஆம் ஆண்டு உலக கிண்ண தொடருக்கு தகுதிபெற்ற மொரோக்கோ அணி இதுவரை நான்கு உலக கிண்ணth தொடர்களில் மட்டுமே பங்குபற்றியுள்ளது. இது ஐந்தாவது உலகk கிண்ண தொடராகும். 1986 ஆம் ஆண்டு உலக கிண்ணத் தொடரில் இரண்டாம் சுற்றுக்கு தெரிவானார்கள். மற்றைய மூன்று உலக கிண்ண தொடர்களிலும் முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டார்கள்.  நான்கு உலகக் கிண்ண தொடர்களில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள மொரோக்கோ அணி இரண்டு வெற்றிகளை மாத்திரமே பெற்றுள்ளது. நான்கு சமநிலையான முடிவுகளை பெற்றுள்ள அதேவேளை ஏழு தோல்விகளை சந்தித்துள்ளார்கள். உலக கிண்ண தரப்படுத்தல்களின் படி 10 புள்ளிகளை பெற்று 44வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

குழு பியில் இடம்பிடித்துள்ள மொரோக்கோ அணி போர்த்துக்கல், ஸ்பெய்ன் ஆகிய மிகப் பலமான அணிகளுடன் இடம்பிடித்துள்ளது.  நான்காவது அணியாக ஈரான் அணி இந்தக் குழுவில் இடம் பிடித்துள்ளது. மொரோக்கோ அணியிலும் பார்க்க மற்றைய மூன்று அணிகளும் பலமானவையாகவே காணப்படுகின்றன. மொரோக்கோ அணி தரப்படுத்தலில் 39 வது இடத்திலுள்ள அணி. ஈரான் அணி 34 ஆம் இடம். போர்த்துக்கல் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய அணிகள் முறையே மூன்றாம் மற்றும் ஆறாமிடங்களிலுள்ள அணிகள். இந்த இரண்டு அணிகளும் இம்முறை உலகக் கிண்ணத்தை வெற்றி பெறுமென நம்பப்படுகிற அணிகள். எனவே இம்முறையும் மொரோக்கோ அணி முதல் சுற்றுடன் வெளியேற்றப்படுவார்கள் என்பதனை தாண்டி எதனையும் கூற முடியாது. கட்ந்தாண்டு விளையாடிய 13 போட்டிகளில் எட்டு போட்டிகளில் இவர்கள் வெற்றிபெற்றுள்ளார்கள். பலமான அணிகளை இவர்கள் சந்திக்கவுமில்லை. எனவே இவர்கள் பெரியளவில் சாதிப்பார்கள் என கூற முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.

உலகக் கிண்ண குழு நிலையில் வெற்றிபெற்ற அதாவது முதலிடத்தை பெற்ற முதலாவது ஆபிரிக்க கண்ட அணி என்ற பெயரை மொரோக்கோ அணி கொண்டுள்ளது. 1986 ஆம் ஆண்டு போர்த்துக்கல், இங்கிலாந்து மற்றும் போலந்து அணிகளை தாண்டி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.  1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் போர்த்துக்கல் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றதன் மூலம் உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாம் சுற்றுக்கு தெரிவான முதலாவது ஆபிரிக்க அணி என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டது.  1986 ஆம் ஆண்டு மற்றைய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது போல இம்முறையும் வழங்க முடியுமா என்ற எதிர்பார்ப்பு கூட மிகப் பெரியதே.

பந்தயக் காரர்கள் 1-500 என்ற மிகப் பெரிய உலக கிண்ண வெற்றி வாய்ப்பை இவர்களுக்கு வழங்கியுள்ளார்கள். ஈரானுக்கு முன்னதாக வாய்ப்புகளை இவர்களுக்கு வழங்கியுள்ளதனால் ஈரானை இவர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மாத்திரமே காணப்படுகிறது. உலகக் கிண்ணத்தை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ள அணிகளில் மொரோக்கோ அணிக்கு 24ஆம் இடம் வழங்கப்பட்டுள்ளது.  இது இவர்கள் முதல் சுற்றுடன் வெளியேற்றப்படுவார்கள் என்ற நிலையைக் காட்டுகிறது.

ஆபிரிக்காவின் பலமான அணியாக திகழ்ந்த மொரோக்கோ அணி கடந்த காலங்களில் பலமற்று காணப்பட்ட போதும் இப்போது மீண்டும் உலக கிண்ணத்தில் கால் பதித்துள்ளார்கள். இவர்களால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனாலும் எதிராணிகளுக்கு கடும் சவால்களை வழங்கினாலே அது வெற்றியாக அவர்களுக்கு அமையும்.

http://www.tamilmirror.lk/sports-articles/கால்பந்தாட்ட-உலகக்-கிண்ணம்-மொரோக்கோ/139-211658

Link to comment
Share on other sites

காயமடைந்துள்ள நெய்மார் உலகக் கிண்ணத்தில் ஆடுவதில் நெருக்கடி

Neymar-JR-696x457.jpg

பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (PSG) கால்பந்து அணியின் முன்கள வீரர் நெய்மார் JR இற்கு காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மூன்று மாதங்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிரேசிஸ் கால்பந்து அணியின் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரபல பார்சிலோனா கழகத்தில் இருந்து வெளியேறி கடந்த ஓகஸ்ட் மாதம் PSG அணியில் 222 மில்லியன் யூரோவுக்கு (271 டொலர்கள்) ஒப்பந்தம் செய்து கொண்ட 26 வயதுடைய நெய்மார் உலகில் விலை உயர்ந்த வீரராக பதிவானார். அவர் தனது முன்பாதத்தில் ஏற்பட்டிருக்கும் எலும்பு முறிவு மற்றும் கணுக்கால் தசைப்பிடிப்புக்கு இந்த வாரம் சத்திரசிகிச்சை செய்துகொள்ளவுள்ளார்.

 

இந்த காயத்தில் இருந்து சுகம்பெற நெய்மாருக்கு மூன்று மாதங்கள் தேவைப்படும் என பிரேசில் அணியின் மருத்துவர் ரொட்ரிகோ லாஸ்மார் குறிப்பிட்டுள்ளார்.  

கடைசி சத்திரசிகிச்சை (பிரேசிலின்) பெலோ ஹொரிசொன்டேவிலுள்ள மாடெர் டெய் மருத்துவமனையில் சனிக்கிழமை (03) காலை நடைபெறும் என்று லாஸ்மார், ‘கிளோபோதொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.    

காயத்தில் இருந்து சுகம்பெறும் காலம் இரண்டரை மாதம் தொடக்கம் மூன்று மாதங்களாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், அது சத்திர சிகிச்சைக்கு பின்னர் அவர் மீண்டு வருவதை பொறுத்தது. செயல்முறைக்கு பின்னர் எமக்கு விபரம் தெரியவரும் என்றும் தெரிவித்தார்.

நெய்மார் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள, உலகக் கிண்ணத்தை நடத்தும் ரஷ்யாவுக்கு எதிரான நட்புறவு போட்டி மற்றும் நடப்புச் சம்பியன் ஜெர்மனிக்கு எதிரான போட்டிகளில் பிரேசில் அணிக்கு ஆடமாட்டார். எனினும் எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி ஆரம்பமாகும் உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு அவர் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்ப்பதாகவும் லாஸ்மார் குறிப்பிட்டார்.

ஐந்து முறை உலக சம்பியனான பிரேசில், உலகக் கிண்ணத்தில் தனது முதல் போட்டியில் ஜூன் 17 ஆம் திகதி சுவிட்சர்லாந்தை எதிர்கொள்ளவிருப்பதோடு தொடர்ந்து கொஸ்டா ரிக்கா மற்றும் செர்பிய அணிகளை சந்திக்கும்.  

அவர் மீண்டு வருவதற்கு எமக்கு நேரம் இருக்கிறது. அதற்காக கூடிய விரைவில் செயற்படுவது தொடருக்கு நல்ல நிலையில் போதுமானவரை தயாராக அவருக்கு அவகாசத்தை ஏற்படுத்தும் என்று லாஸ்மார் சுட்டிக்காட்டினார்.    

 

 

நெய்மார் குழப்பத்துடனும் கவலையுடனும் இருக்கிறார் என்பது உண்மையே. கூடிய விரைவில் சுகம் பெறுவதற்கு தம்மை தியாகம் செய்வதை தவிர தனக்கு வேறு தேர்வு இல்லை என்பதை அவர் புரிந்து வைத்துள்ளார் என்று பிரேசில் அணி மருத்துவர் காயமுற்ற முன்னணி வீரரின் நிலைமையை விபரித்தார்.

நெய்மார் காயமடைந்திருப்பதை PSG அணி கடந்த புதன்கிழமை (28) உறுதி செய்தது. இதனால் ஸ்பானிய சம்பியனான ரியல் மெட்ரிட்டுக்கு எதிரான சம்பியன்ஸ் லீக் தொடரின் கடைசி 16 அணிகள் போட்டியில் நெய்மாருக்கு ஆட முடியாமல் போனது.

கடந்த மாதம் நடைபெற்ற ரியல் மெட்ரிட்டுக்கு எதிரான முதல் சுற்று போட்டியில் பிரான்ஸின் PSG அணி 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.   

மருத்துவ சோதனைக்கு பின் வீரரின் உடன்பாட்டுடன் சத்திரசிகிச்சை மேற்கொள்வதே சிறந்தது என தீர்மானிக்கப்பட்டதுஎன்று அந்த கழகம் குறிப்பிட்டது. ‘வார இறுதியில் பிரேசிலில் அவர் சத்திரசிகிச்சை செய்து கொள்வார்என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காயத்தால் தனது மகன் ஆறு முதல் எட்டு வாரங்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போகும் என்று நெய்மாரின் தந்தை ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனால் அவருக்கு உலகக் கிண்ணத்திற்கு தயாராக அதிக காலம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

இந்த பருவத்தின் பிரான்ஸ் லீக் வன் போட்டியில் நெய்மார் 28 கோல்களை புகுத்தியதோடு கோல் பெற 16 தடவைகள் உதவி புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

உலகக் கிண்ணத்தில் காணொளி உதவி மத்தியஸ்தர்கள்
 

image_11794ed8ff.jpg

ரஷ்யாவில் இவ்வாண்டு நடைபெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில், காணொளி உதவி மத்தியஸ்தர்கள் பயன்படுத்தப்படவுள்ளனர்.

சுவிற்ஸர்லாந்தின் சூரிச்சில் நேற்று  இடம்பெற்ற சர்வதேச கால்பந்தாட்ட சங்க அமைப்பின் சந்திப்ப்பின்போது காணொளி உதவி மத்தியஸ்தர்களை நிரந்தரமாகப் பயன்படுத்துவதற்கு ஏகமனதாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காணொளி உதவி மத்தியஸ்தர்களை உலகக் கிண்ணத்தில் பயன்படுத்துவதா என்ற முடிவு இம்மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பில் எடுக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்பான்டினோ தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/உலகக்-கிண்ணத்தில்-காணொளி-உதவி-மத்தியஸ்தர்கள்/44-212250

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
கால்பந்தாட்ட உலகக் கிண்ணம்: பெரு
 

- ச. விமல்

image_8f6eceb53b.jpg

1927ஆம் ஆண்டு தென்னமெரிக்கா சம்பியன்ஷிப் தொடரில்  பெரு அணி அறிமுகத்தை மேற்கொண்ட போது.

உலக கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் பங்குபெறும் அணிகள் தொடர்பான விவரங்களில் நான்காவது அணியாக குழு சியில் இடம்பிடித்துள்ள பெரு அணி பற்றிய விவரங்களை இக்கட்டுரை நோக்குகிறது.

இவ்வாண்டு உலகக் கிண்ணத் தொடருக்கு 31ஆவது அணியாக தெரிவு செய்யப்பட்ட அணி பெரு அணி. பலமான தென்னமரிக்க கண்டத்தின் ஓர் அணி பெரு. தகுதிகாண் போட்டிகளில் ஐந்தாவது இடத்தைப் பெற்றமையால் நியூசிலாந்து அணியுடனான தகுதிப் போட்டியில் மோதி அதில் வெற்றிபெற்று உலக கிண்ண வாய்ப்பை பெற்றுக்கொண்டார்கள்.

தென்னமரிக்க கண்டத்தில் பிரேஸில் அணி இலகுவாக உலகக் கிண்ண வாய்ப்பைப் பெற்ற பின்னர் நேரடியான தகுதியைப் பெறும் அடுத்த மூன்று அணிகளுக்கான போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. தென்னமரிக்க வலயத்தில் விளையாடிய 10 அணிகளில் நான்கு அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. ஒரு புள்ளியால் நான்காமிடத்தைத் தவறவிட்ட பெரு அணி நியூசிலாந்து அணியுடனான தெரிவுகாண் போட்டியில் வெற்றிபெற்று ஐந்தாவது அணியாக தெரிவானது.

தென்னமரிக்கா வலய தெரிவுகாண் போட்டிகளின் புள்ளி விவரம்

பிரேஸில்                              18           12           5              1              41           11           30           41          

உருகுவே                              18           9              4              5              32           20           12           31          

ஆர்ஜென்டீனா                    18          7              7              4              19           16           3              28          

கொலம்பியா                     18           7              6              5              21           19           2              27          

பெரு                                    18           7              5              6              27           26           1              26          

சிலி                                      18          8              2              8              26           27           -1            26          

பராகுவே                             18           7              3              8              19           25           -6            24          

ஈக்குவடோர்                        18           6              2              10           26           29           -3            20          

பொலிவியா                          18          4              2              12           16           38           -22          14          

வெனிசுவேலா                      18           2              6              10           19           35           -16          12          

(அணி, போட்டிகள், வெற்றி, சமநிலை, தோல்வி, பெற்ற கோல்கள், எதிரணி பெற்ற கோல்கள், கோல் வித்தியாசம், புள்ளிகள்)

image_595e9d5e14.jpg

1930 ஆம் ஆண்டு உலக கிண்ண தொடரில் றொமேனியா அணிக்கெதிராக, பெரு அணி விளையாடுகிறது

1930ஆம் ஆண்டு அழைப்பிதழ் நாடாக முதலாவது உலகக் கிண்ணத் தொடரில் பெரு அணி விளையாடியது. விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. அதன்பின்னர் 1970ஆம் ஆண்டு வரை உலகக் கிண்ணத் தொடருக்கு பெரு அணியால் தெரிவாக முடியவில்லை.

image_ec2a3237ee.jpg

1970ஆம் ஆண்டு சிறந்த ஒழுக்கமான அணிக்கான விருதை வெற்றி பெற்ற பெரு அணி

ஆனால், 70ஆம் ஆண்டு உலக கிண்ண தொடரில் இவர்கள் மிக சிறப்பான வருகையை கொடுத்தார்கள். காலிறுதி வரை முன்னேறினார்கள். விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றிகளைப் பெற்றதுடன் இரண்டு தோல்விகளைச் சந்தித்தனர். ஒன்பது கோல்களைப் பெற்ற அதேவேளை ஒன்பது கோல்களை எதிரணிகள் பெற அனுமதித்திருந்தார். இவர்கள் காலிறுதி வரை தெரிவானது மட்டும் முக்கியமானதல்ல. ஒழுக்கமாக விளையாடிய அணிக்கான விருது 70ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வேளையில் அதைப் பெற்றார்கள்.

ஒரு சிவப்பு அட்டையோ, மஞ்சள் அட்டையோ வாங்காமல் ஒழுக்க சீலர்களாக விளையாடினார்கள். இது இலகுவான விடயமல்ல. ஆனால் விளையாட்டில் சாதித்த அணி. ஒழுக்கமாகவும் விளையாடிய அணி அடுத்த உலக கிண்ணத்துகு தெரிவாகவில்லை. இது ஆச்சரியமான விடயமாக அமைந்தது.

1978ஆம் ஆண்டு உலக கிண்ணத்துக்கு மூன்றாவது தடவையாக தெரிவான இவர்கள் இரண்டாம் சுற்று வரை முன்னேறினார்கள். அதன்பின்னர் 1982ஆம் ஆண்டும் உலக கிண்ணத்துக்கு தெரிவானரகள். ஆனால் 24 அணிகள் பங்குபற்றிய தொடரில் 20ஆவது இடத்தைப் பெற்று முதல் சுற்றுடன் வெளியேறினார்கள். அதன்பின்னர் இவர்கள் உலக கிண்ணத் தொடருக்குத் தெரிவாகவில்லை.

35 ஆண்டுகளின் பின்னர் பெரு அணி உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவாகியுள்ளது. இம்முறை இவர்கள் பலமான அணியாகவே காணப்படுகிறார்கள். தகுதிகாண் போட்டிகளில் மிகவும் கடுமையான போட்டிகளை பலமான பிரேஸில், ஆர்ஜென்டீனா அணிகளுக்கு இவர்கள் வழங்கியிருந்தார்கள். ஆர்ஜென்டீனா அணியுடன் விளையாடிய இரண்டு போட்டிகளையும் சமநிலையில் இவர்கள் நிறைவு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

17 உலகக் கிண்ணத் தொடர்களில் நான்கு தொடர்களில் இவர்கள் விளையாடியுள்ளார்கள். 15 போட்டிகளில் விளையாடிய இவர்கள் நான்கு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார்கள். மூன்று சமநிலை முடிவுகளையும் எட்டுத் தோல்விகளையும் சந்தித்துள்ளார்கள். உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் தரப்படுத்தல்களில் 37ஆவது இடத்தில் காணப்படுகின்றனர்.

பெரு அணி இம்முறை தரப்படுத்தல்களின்படி உலகக் கிண்ணத்தில் 11ஆவது இடத்தில் காணப்படுகிறது. இது அவர்களுக்கு மிகவும் பலமான நிலையை வழங்கியுள்ளது.

இவர்களுடைய குழு சியிலுள்ள பலமான அணியாக பிரான்ஸ் அணி காணப்படுகிறது. பிரான்ஸ் ஒன்பதாமிடத்தில் காணப்படுகிறது. டென்மார்க் அணி 12ஆவது இடத்தில இருக்கின்றது. அவுஸ்திரேலிய அணி 39ஆ வது இடத்தில் காணப்படுகிறது. எனேவ இக்குழுவில் யார், யார் எந்த இடங்களை பெறுவார்கள் என்பது மிகப் பெரிய சந்தேகமான நிலை. நான்கு அணிகளில் இரண்டு அணிகள் ஐரோப்பிய அணிகள் என்பது பெரு அணிக்கு கடினமான நிலையைத் தரலாம்.

அதனை அவர்கள் சமாளித்துக் கொண்டால் இரண்டாம் சுற்று அவர்களுக்கு நிச்சயம் உண்டு. ஆர்ஜென்டீனா அணி குழு டியில் பலமான அணி. இவர்கள் இரண்டாமிடத்தைப் பெற்றால் அவர்களைச் சந்திக்க நேரிடும். ஆனால் ஆர்ஜென்டீனா அணியுடன் சமநிலை முடிவுகளை பெற்றுள்ளார்கள். முதலிடத்தைப் பெற்றால் இவர்கள் இரண்டாம் சுற்றையும் தாண்டும் வாய்ப்புகளுள்ளன. ஆனால் பந்தயக்காரர்கள் இவர்களுக்கு 22வது இட வாய்ப்பை வழங்கியுள்ளார்கள். அதன்படி இவர்கள் முதல் சுற்றில் மூன்றாமிடத்தை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பின்றி வெளியேறுவார்கள் என்ற எதிர்வு கூறலே கூறப்பட்டுள்ளது. இவை மாற்றம் பெறும் வாய்ப்புகளும் அதிகமுள்ளன.

புதிய அணியாக களமிறங்குகிறார்கள். இம்முறை வாய்ப்புகள் குறைவு என கருதப்படும் அணிகள் பலமாகவே காணப்படுகிறனறன. பெரு அணியும் அவ்வாறான நிலையிலேயே காணப்படுகிறது. இவர்கள் உலகக் கிண்ணத்தை வெற்றி பெறுவார்கள் என கூறிவிட முடியாது. ஆனால் எதிராணிகளுக்கு இலகுவாக இருக்கப் போவதில்லை. இரண்டாம் சுற்று வரை முன்னேறுவார்கள் என உறுதியாக நம்பலாம். இவர்கள் விளையாடும் போட்டிகள் விறு விறுப்பாக அமையப் போகின்றன என்பதும் உறுதி.

http://www.tamilmirror.lk/sports-articles/கால்பந்தாட்ட-உலகக்-கிண்ணம்-பெரு/139-212779

Link to comment
Share on other sites

கால்பந்தாட்ட உலகக் கிண்ணம்: டென்மார்க்
 
 

image_7e03bf06e3.jpg

தகுதிகாண் போட்டிகளில் வெற்றி பெற்று உலக கிண்ண வாய்ப்பை பெற்ற மகிழ்ச்சியில் டென்மார்க் அணி

கால்பந்தாட்ட உலகக் கிண்ணம், இவ்வாண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், உலகக் கிண்ணத் தொடரில் பங்குபற்றவுள்ள அணிகள் பற்றிய விவரங்களின் வரிசையில் குழு சியில் இடம்பிடித்துள்ள டென்மார்க் அணி பற்றி இங்கு தரப்படுகிறது.

டென்மார்க் அணி ஐந்தாவது தடவையாக உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் பங்குபற்றுகிறது. ஐரோப்பா வலயத்திலிருந்து பங்குபற்றுமணி. ஐரோப்பிய வலயத்திலிருந்து 13 அணிகள் உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் அவற்றுள் ஒரு அணியாக இம்முறை டென்மார்க் அணி தெரிவாகியுள்ளது.

image_a9dee2d97d.jpg

1908 - குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் முதற் தடவையாக வெளிப்பதக்கத்தை வென்ற டென்மார்க் அணி

கடந்த முறை உலகக் கிண்ணத் தொடரில் இவர்கள் பங்குபற்றவில்லை. 1958ஆம் ஆண்டு முதற் தடவையாக உலகக் கிண்ணத் தொடரின் தகுதிகாண் போட்டிகளில் விளையாடினார்கள்.  ஆனால் அவர்கள் தகுதி பெறவில்லை. 62ஆம் ஆண்டு இவர்கள் விண்ணப்பிக்கவில்லை. மீண்டும் 66 ஆம் ஆண்டு தகுதிகாண் போட்டிகளில் விளையாடினார்கள். தொடர்ச்சியாக நான்கு உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் விளையாடியவர்கள். 1986ஆம் ஆண்டு முதற் தடவையாக உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெற்றார்கள்.

image_fccaf8a6fb.jpg

முதற் தடவையாக உலக கிண்ண தொடரில் விளையாடிய டென்மார்க் அணி

முதலாவது உலகக்கி ண்ணமே இவர்களுக்கு சிறப்பாக அமைந்தது. இரண்டாம் சுற்று வரை முன்னேறினார்கள். மேற்கு ஜேர்மனி, உருகுவே, ஸ்கொட்லாந்து அணிகளை வென்று குழு நிலையில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அடுத்த சுற்றில் ஸ்பெய்ன் அணியிடம் மிக மோசமான 1-5 என்ற கோல் கணக்கில் தோல்வியினை சந்தித்து இரண்டாம் சுற்றோடு வெளியேறினார்கள்.

1990, 94ஆம் ஆண்டுகளில் பெரியளவில் இவர்களால் வெற்றிகளைப் பெறமுடியவில்லை. அதனால் தகுதிகாண் போட்டிகளோடு இவர்களின் உலகக் கிண்ணம் நிறைவடைந்தது.

1998 ஆம் ஆண்டு உலக கிண்ணம் இவர்களுக்கு சிறப்பாக அமைந்தது. அதுவே அவர்களின் உயரிய உலக கிண்ணக் தொடராகவும் அமைந்தது. காலிறுதிப் போட்டி வரை முன்னேறினார்கள். உலகக் கிண்ணத் தொடரை நடாத்திய பிரான்ஸ் அணியுடன் குழு சியில் இடம்பிடித்தவர்கள் பிரான்ஸ் அணியுடன் தோல்வியைச் சந்தித்தனர். சவுதி அரேபியா அணியை வென்றவர்கள், தென்னாபிரிக்க அணியுடன் சமநிலை முடிவை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து இரண்டாம் சுற்றான காலிறுத்திக்கு முந்தைய சுற்றுக்குத் தெரிவானார்கள்.

இரண்டாம் சுற்றில் குழு டியில் முதலிடம் பிடித்த நைஜீரிய அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறி பிரேஸில் அணியைச் சந்தித்தார்கள். பலமான பிரேஸில் அணியை இவர்கள் இலகுவாக விட்டு வைக்கவில்லை. கடுமையான போட்டியொன்றுக்கு மத்தியில் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியைச் சந்தித்தார்கள். அந்த உலகக் கிண்ணத் தொடரில் பிரேஸில் அணி இறுதிப் போட்டி வரை சென்றது.

image_df1f62d7ea.jpg

2002ஆம் உலக கிண்ணத்தில் விளையாடிய அணி

அடுத்த உலகக் கிண்ண தொடரிலும் சிறப்பாக விளையாடியவர்கள் இரண்டாம் சுற்று வரை முன்னேறினார்கள். பிரான்ஸ் அணியை குழுயில் தோற்கடித்து முதலிடத்தைப் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றார்கள். ஆனால் இங்கிலாந்து அணியிடம் தோற்றுப் போனார்கள். 2006 ஆம் ஆண்டு தகுதி பெறத் தவறியவர்கள், 2010 ஆம் ஆண்டு முதல் சுற்றோடு வெளியேறினார்கள்.

உலக கிண்ண தொடருக்கு வருவதும் போவதுமாக உள்ளவர்கள் உலகக் கிண்ண தரப்படுத்தல்களில் 25ஆம் இடத்தில் காணப்படுகிறார்கள். 16 போட்டிகளில் எட்டு வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள். இரண்டு சமநிலை முடிவுகளையும் பெற்றுளார்கள். ஆறு போட்டிகளில் தோல்வி. வெற்றி சதவீதம் என்பது இவர்களுக்கு சிறப்பாகவே காணப்படுகிறது. முக்கிய போட்டிகளில் சோபிக்கத் தவறுவது இவர்களுக்கான மிகப் பெரிய பிரச்சினையாக காணப்படுகிறது.

இம்முறை இவர்களுக்கான உலகக் கிண்ண வாய்ப்பு இலகுவாக கிடைக்கவில்லை. குழு ஈயில் இடம்பிடித்திருந்தவர்கள் இரண்டாமிடத்தையே பெற்றார்கள். இக்குழுவில் முதலிடம் பிடித்த போலந்து அணி நேரடி வாய்ப்பை பெற்றது. விளையாடிய 10 போட்டிகளில் ஆறு வெற்றிகள், இரண்டு சமநிலை, இரண்டு தோல்விகள் என்ற முடிவைப் பெற்றுக் கொண்டார்கள். இதன் காரணமாக அயர்லாந்து அணியுடன் இரண்டாவது தகுதிகாண் சுற்றில் மோதினார்கள். டென்மார்க் அணியிலும் பார்க்க அயர்லாந்து அணிக்கான வாய்ப்புகள் இருப்பதாகவே எதிர்வு கூறப்பட்டது. ஆனால் அயர்லாந்தில் வைத்து 5-1 என்ற கோல் கணக்கில் பெரிய வெற்றியைப் பெற்றதன் மூலம் உலக கிண்ண வாய்ப்பை ஏற்படுத்தினார்கள். தங்கள் நாட்டில் நடைபெற்ற போட்டியில் சிரமப்படாமல் கோல்களின்றி சமநிலையில் நிறைவு செய்து உலக கிண்ண வாய்ப்பை பெற்றுக் கொண்டார்கள்.

மீண்டுமொரு தடவை பிரான்ஸ் அங்கம் வகிக்கும் குழுவில் இவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. பிரான்ஸ் அணியை இவர்களால் இம்முறை வீழ்த்த முடியுமா என்பது கேள்வியே. பெரு அணி இன்னுமொரு பலமான அணியாக இவர்களது குழுவில் இடம் பிடித்துள்ளது. பெரு அணி இவர்களிலும் பார்க்க ஒரு இடம் முன்னணியில் காணப்படுகிறது. அடுத்த அணி அவுஸ்திரேலியா. அவுஸ்திரேலிய அணி இவர்களுக்கு பெரியளவில் சவாலாக இருக்கப்போவதில்லை.

இவர்கள் இரண்டாமிடத்தைப் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புள்ள கணிப்பின் படி பார்த்தால் அடுத்த சுற்றில் ஆர்ஜென்டீனா அணியை எதிர்கொள்ள வேண்டி வரலாம்.  ஆர்ஜென்டீனா அணி பலமான அணியென்பதால் இரண்டாம் சுற்றை இவர்கள் தாண்டுவது கடினமாக இருக்கும். ஆனால் முதலிடத்தை பெற்றால், குழு டியிலுள்ள குரேஷியா, நைஜீரியா, ஐஸ்லாந்து அணிகள் இவர்களிலும் பார்க்க பலம் குறைந்தவர்களே. அவ்வாறான நிலை ஏற்பட்டால் காலிறுதிப் போட்டிகளுக்கு செல்லலாம். தகுதிகாண் போட்டிகளை வைத்து பார்க்கும் போது இவர்கள் மிகப் பெரிய பலத்திலுள்ளார்கள் எனவும் கூற முடியாத நிலை காணப்படுகிறது. பெரு அணியும் இலகுவாக விட்டுக்கொடுக்காது என்ற நிலையில் இவர்களுக்கு இரண்டாம் சுற்று சந்தேகம்தான்.

பந்தயக் காரர்கள் இவர்களுக்கு 14 ஆம் இட வாய்ப்பை வழங்கியுளார்கள். அவர்கள் பெரு அணியிலும் பார்க்க இவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற கணிப்பையே வெளியிட்டுள்ளார்கள். இவர்களது கடந்த காலங்கள், கடந்த உலக கிண்ண தொடர்களில் விளையாடிவரும் விதம், ஐரோப்பா கண்டத்தில் போட்டி நடைபெறுகிறது என்ற காரணங்களை வைத்து இரண்டாம் சுற்று வாய்ப்புள்ளதாக கணிப்பிடலாம். தொடர்ச்சியான பெறுபேறுகளை காட்டி, தொடந்தும் நல்ல முறையில் விளையாடினாள் இவர்கள் சவால் மிக்க அணியே.

முதல் சுற்று போட்டி விபரங்கள்

ஜூன் 16 இரவு 9.30 -   பெரு எதிர் டென்மார்க்

ஜூன் 21 இரவு 5.30 -   டென்மார்க் எதிர் அவுஸ்திரேலியா

ஜூன் 26 இரவு 9.30 - டென்மார்க் எதிர் பிரான்ஸ்

http://www.tamilmirror.lk/sports-articles/கால்பந்தாட்ட-உலகக்-கிண்ணம்-டென்மார்க்/139-213067

Link to comment
Share on other sites

கால்பந்தாட்ட உலகக் கிண்ணம்: ஐஸ்லாந்து
 
 

- ச. விமல்

image_1cd8da17b6.jpg

கால்பந்தாட்ட உலக கிண்ணம், இவ்வாண்டு ஜூன் மாதம் ரஷ்யாயாவில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இவ்வாண்டு உலகக் கிண்ணத் தொடரில் பங்குபற்றும் அணிகளின் வரிசையில் குழு டியில் இடம்பிடித்துள்ள ஐஸ்லாந்து அணி பற்றி இப்பத்தி நோக்குகிறது.  

ஐஸ்லாந்து அணி முதற் தடவையாக கால்பந்தாட்டத் உலகக் கிண்ணத் தொடரில் கால்பதித்துள்ளது. உலகக் கிண்ண வரலாற்றில் குறைந்த சனத்தொகை உள்ள நாடொன்று உலக கிண்ண தொடரில் பங்குபற்றுகிறது என்ற சாதனையோடு உலக கிண்ண தொடருக்கு தெரிவாகியுள்ளார்கள்.

இவர்கள் உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவானதே மிகப் பெரும் கொண்டாட்டமாக அந்நாட்டு அரசாங்கத்தாலும் மக்களாலும் கொண்டாடப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிசெம்பர் 31ஆம் திகதி இவர்களது சனத்தொகை 348,580. இந்தளவு சிறிய நாட்டிலிருந்து உலகக் கிண்ணம் வருவதென்பது மாபெரும் சாதனையே. இதற்கு முதலில் ட்ரினிடாட் அன்ட் டொபாகோ அணியே சிறிய நாடாக காணப்பட்டது. அவர்கள் 1,300,000 மக்கள் தொகையை கொண்ட நாடாக உலகக் கிண்ண தொடரில் விளையாடும்போது காணப்பட்டார்கள். உலகக் கிண்ணத் தொடரில் பங்குபற்றும் 78ஆவது நாடாக ஐஸ்லாந்து அணி தன்னை பதிவு செய்துள்ளது.

தொடர்ச்சியான 44 ஆண்டுகள் போராடி ஐஸ்லாந்து அணி இவ்வாய்ப்பை பெற்றுக் கொண்டுள்ளது.  1974ஆம் ஆண்டு முதல் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இவர்கள் விளையாடி வருகிறார்கள்.  இவர்கள் தகுதிகாண் போட்டிகளில் பெற்றுக் கொண்ட வெற்றிகள் மற்றும் தோல்விகள் ஒரே மாதிரியாக இருந்து வந்தாலும், கடந்த உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளிலும் இம்முறை தகுதிகாண் போட்டிகளிலும் சிறப்பாக உயர்வடைந்துள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட அணியின் வளர்ச்சியே இம்முறை உலகக் கிண்ணம் வரை அவர்களை அழைத்து வந்துள்ளது. இவர்களது தரப்படுத்தல் கூட சிறப்பாகவே காணப்படுகிறது. சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் இவ்வாண்டு பெப்ரவரி மாதத்துக்கான தரப்படுத்தலில் 18ஆவது இடத்தில் காணப்படுகிறது. ஐரோப்பிய அணிகளில் 12ஆவது இடத்தில் காணப்படுகிறது.

ஐரோப்பிய வலயத்திலிருந்து 13 அணிகள் தகுதிகாண் போட்டிகள் மூலம் தெரிவு செய்யப்படும் நிலையில் இவர்கள் தெரிவானது கூட நியாயமானதே.

இவர்கள் முதற்தடவையாக 1954ஆம் ஆண்டு உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்காக விண்ணப்பித்தபோதும் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சர்வதேசக் கால்பந்தாட்ட சம்மேளனம் ஐஸ்லாந்து அணியின் விண்ணப்பத்தை நிராகரித்திருந்தது.

அதன் பின்னர் 1958ஆம் ஆண்டு உலக கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகளில் விளையாடியவர்கள் நான்கு போட்டிகளிலும் தோல்விகளை சந்தித்தார்கள். அடுத்த மூன்று உலக கிண்ண தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் இவர் பங்குபற்றியிருக்கவில்லை. 1974ஆம் ஆண்டு தகுதிகாண் போட்டிகளுக்காக களமிறங்கியவர்கள் ஆறு போட்டிகளிலும் தோல்விகளைச் சந்தித்தார்கள். ஆனால் அதன்பின்னர் நடைபெற்ற போட்டிகளில் குறைந்தது ஒரு வெற்றியையாவது ஒவ்வொரு தொடர்களிலும் பெற்றுள்ளார்கள். 2014ஆம் ஆண்டுக்கான தகுதிகாண் போட்டிகளில் கடுமையாக போராடியவர்கள் மயிரிழையில் வாய்ப்பை இழந்தார்கள். குழு நிலையில் இரண்டாமிடத்தை பெற்றவர்கள் இரண்டாம் கட்ட தகுதிகாண் போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்து உலகக் கிண்ண வாய்ப்பை பெற்றார்கள்.

ஐஸ்லாந்து அணி தகுதிகாண் போட்டிகளில் பெற்ற முடிவுகள்

 

1958       4              0              0              4              6              26

1974       6              0              0              6              2              29

1978       6              1              0              5              2              12

 1982      8              2              2              4              10           21

 1986      6              1              0              5              4              10

 1990      8              1              4              3              6              11

 1994      8              3              2              3              7              6

 1998      10           2              3              5              11           16

 2002      10           4              1              5              14           20

 2006      10           1              1              8              14           27

 2010      8              1              2              5              7              13

2014       12           5              3              4              17           17

(ஆண்டு, போட்டிகள், வெற்றி, சமநிலை, தோல்வி, அடித்த கோல்கள், எதிரணி அடித்த கோல்கள்)

இந்தாண்டு தகுதிகாண் போட்டிகளிலேயே ஐஸ்லாந்து அணி   கூடுதல் வெற்றிகளைப் பெற்றுளது. இதன் காரணமாகவே ஐஸ்லாந்து அணி ஐரோப்பிய வலய குழு ஐ-இல் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. குரோஷியா, உக்ரேன், துருக்கி ஆகிய அணிகளை பின்தள்ளி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.

இதன் காரணமாக குரோஷிய அணி தகுதிகாண் போட்டிகளில் விளையாடி உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஐஸ்லாந்து அணிக்கு ஓரளவு இலகுவான குழு கிடைத்தமையும் கூட அவர்களுக்கான அதிர்ஷ்டமாக மாறிப் போனது. ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பலமான அணிகள் மற்றைய குழுக்களில் இடம்பிடித்திருந்தன. அதுமட்டுமல்லாமல் இத்தாலி, நெதர்லாந்து போன்ற அணிகள் உலக கிண்ண வாய்ப்பை இழந்துள்ளன.

ஐரோப்பிய வலைய குழு ஐ முடிவுகள்

 

ஐஸ்லாந்து                   10           7              1              2              16           7              9              22          

குரேசியா                     10           6              2              2              15           4              11           20          

யுக்ரைன்                       10           5              2              3              13           9              4              17          

துருக்கி                           10           4              3              3              14           13           1              15          

பின்லாந்து                   10           2              3              5              9              13           -4            9             

கொசோவோ            10           0              1              9              3              24           -21          1

(நாடுகள், வெற்றி, சமநிலை, தோல்வி, புள்ளிகள், அடித்த கோல்கள், எதிரணி அடித்த கோல்கள்)

ஐஸ்லாந்து அணி உலக கிண்ணத்துக்கு தெரிவாகிவிட்டது. 32 அணிகளில் ஒன்று. இனி என்ன செய்யப்போகிறார்கள்? குழு டியில் இடம் பிடித்துள்ளார்கள். ஆர்ஜென்டீனா அணி பலமான அணியாக காணப்படுகிறது. ஆனால் இவர்களை இரண்டாவது பலமான அணியாக குறிப்பிடலாம். ஐரோப்பிய வலய தகுதிகாண் போட்டிகளில் இவர்கள் யாருக்கு தலையிடி கொடுத்தார்களோ அவர்கள் மீண்டும் உலக கிண்ண தொடரலிலும் ஐஸ்லாந்து அணியுடன் இடம் பிடித்துள்ளார்கள்.  குரோஷிய அணியே அவ்வணி. குரோஷிய அணி தரப்படுத்தல்களில் 15ஆம் இடத்தில் காணப்படுகிறது. இவர்கள் தகுதிகாண்ண் போட்டிகளில் மோதிய போது தங்களது சொந்த நாடுகளில் வெற்றி பெற்றுளார்கள்.  இம்முறை பொது மைதானம். யார் வெல்லப்போகிறார்கள் என்பதில் அடுத்த சுற்று காணப்படுகிறது. 

இக்குழுவில் இடம்பிடித்துள்ள நைஜீரிய அணி நான்காவது அணி. இவர்கள் 52ஆம் இடத்தில் காணபப்டுகிறார்கள். எனவே இவர்களால் பெரியளவில் அச்சுறுத்தல் இல்லை என்ற நிலைக்கு வரலாம். எனவே முதற் தடவையாக உலக கிண்ணத்துக்கு தெரிவான ஐஸ்லாந்து அணி இரண்டாம் சுற்று வரை முன்னேறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இவர்கள் இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டால் அடுத்த சுற்றில் பிரான்ஸ் அணியைச் சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. ஆகையால் இவர்கள் அதிகப்படியாக இரண்டாம் சுற்று வரை முன்னேறும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

பந்தயக்காரர்கள், ஐஸ்லாந்து அணியினர் உலகக் கிண்ணத்தை வெற்றி பெறுவதற்கான 21ஆவது இட வாய்ப்பை வழங்கியுளார்கள்.  குரோஷிய அணிக்கு 11ஆவது இட வாய்ப்பையும், நைஜீரிய அணிக்கு 20ஆவது இட வாய்ப்புகளையும் வழங்கியுள்ளார்கள். எனவே அவர்களது கணிப்பில் ஐஸ்லாந்து அணி முதல் சுற்றுடன் வெளியேறுமென்பதும் குழு நிலையில் இறுதி இடத்தை பெறுவார்கள் என்பதுமாக காணப்படுகிறது.

ஐஸ்லாந்து அணி முதலாவது உலக கிண்ணத் தொடரில் விளையாடுகிறது. போதியளவு அனுபவமில்லை. மற்றைய அணிகள் உலக கிண்ண தொடரில் விளையாடிய அணிகள். இவற்றை காரணமாக வைத்து இந்த எதிர்வு கூறலை வழங்கியிருக்கலாம். சிறிய நாடாக இருந்த போதும் மிகப் பெரிய உயரம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஐஸ்லாந்து அணி, அவர்களால் முடிந்தளவு உயரத்தை தொடவும் பலமான அணிகளிடம் மோசமாக தொற்றுப் போகாமல் அச்சுறுத்தல் வழங்கக்கூடியவர்களாக சிறப்பாக விளையாடவும் வாழ்த்துக்களை கூறுவோம்.

http://www.tamilmirror.lk/sports-articles/கால்பந்தாட்ட-உலகக்-கிண்ணம்-ஐஸ்லாந்து/139-213160

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
உலகக் கிண்ணத்தில் யார் யார் விளையாடுவர்?
 
 

image_fa656dd0da.jpgimage_513281a7e0.jpg

 

ரஷ்யாவில் இவ்வாண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கான அணிகளை அறிவிப்பதற்கு முன்னராக இறுதிச் சுற்று சிநேகபூர்வ கால்பந்தாட்ட போட்டிகள் இவ்வாரம் முடிவடைந்திருந்தன.

 

இந்நிலையில், ஏறத்தாழ உலகக் கிண்ணத்தில் தாம் களமிறக்கப் போகும் அணிகளையே இவ்வார, கடந்த வார போட்டிகளில் அணிகள் களமிறக்கியிருந்தன.

அந்தவகையில், யார் யார் உலகக் கிண்ண அணிகளில் தமது இடங்களை உறுதி செய்துள்ளார்கள், யார் யாரின் இடங்கள் சந்தேகத்துக்குரியதாக இருக்கின்றன என்பதை இப்பத்தி ஆராய்கின்றது.

தற்போதைய நிலையில், எந்த அணியினதும் விளையாடும் பதினொருவரில் இடம்பெறக்கூடிய பிரேஸிலின் நட்சத்திர முன்கள வீரர் நேமர், உலகக் கிண்ணத்தில் விளையாடுவது சந்தேகத்துக்குரியதாகவே காணப்படுகின்றது.

இம்மாத ஆரம்பத்தில் சத்திர சிகிச்சையை மேற்கொண்ட உலகக் கிண்ணத்துக்கு தயாராகி விடுவார் எனக் கூறப்படுகின்றபோதும் நேமர் களத்துக்குத் திரும்பிய பின்னரே உலகக் கிண்ணத்தில் அவரது பங்களிப்பை உறுதிப்படுத்தக் கூடியதாகவிருக்கும்.

எவ்வாறெனினும், கடந்த காலங்களைப் போலல்லாது நேமரிடம் தனித்து தங்கியிருக்காத பிரேஸில் அணியில், உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியின் இறுதிப் பகுதியில் பிரகாசித்த கப்ரியல் ஜெஸூஸ், பிலிப் கோச்சினியோ, றொபேர்ட்டோ பெர்மினோ, டனி அல்விஸ், தியாகோ சில்வா, மார்ஷெல்லோ, கஸேமீரோ, வில்லியன், பெர்ணான்டின்ஹோ, எடெர்ஸன், போலின்ஹோ உள்ளிட்ட வீரர்கள் தமது இடங்களை உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

இவ்வாறாக முக்கியமான வீரர்கள் தமது இடங்களை உறுதிப்படுத்தியிருக்கின்ற நிலையில், காயமடைந்துள்ள இடது பின்கள வீரரான பிலிப் லூயிஸ் அணியில் இடம்பெறமாட்டார் எனத் தெரிகின்றது.

இதேவேளை நடப்பு சம்பியன்களான ஜேர்மனியில் டொனி க்றூஸ், மற்ஸ் ஹம்மெல்ஸ், மார்க் அன்ட்றே டியர் ஸ்டீகன், ஜெரோம் போட்டாங், ஜோஷுவா கிம்மிச், சமி கெதீரா, மெசுட் ஏஸில், இல்கு குன்டோகன், எம்ரே கான், தோமஸ் முல்லர், லெரோய் சனே, மார்கோ றெயுஸ், ஜூலியாட் ட்ரெக்ஸ்லர், டிமோ வேர்னர் ஆகியோர் தமது இடங்களை உறுதிப்படுத்தியிருக்கிறதோடு சிரேஷ்ட முன்கள வீரரான மரியோ கோமிஸும் அணியில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேர்மனிக்குரிய முக்கிய பிரச்சினையாக அவ்வணியின் தலைவரான கோல் காப்பாளர் மனுவல் நோயர் காணப்படுகின்றார். கடந்தாண்டு செப்டெம்பருக்குப் பின்னர் போட்டியெதிலையும் விளையாடியிருக்காத மனுவல் நோயர், ஜேர்மனியின் முதலாவது போட்டியில் விளையாடக் கூடிய உடற்றகுதியை அடைவாரெனின் மாத்திரமே அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெய்னில், அன்றே இனியஸ்டா, சேர்ஜியோ றாமோஸ், டேவிட் டி கியா, பிகே, ஜோர்டி அல்பா, சேர்ஜியோ புஷ்கட்ஸ், டேவிட் சில்வா, இஸ்கோ, டியகோ கொஸ்டா ஆகியோர் தமது இடங்களை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், முன்கள வீரர் அல்வரோ மொராட்டா, தனது கழகமான செல்சிக்காக எதிர்வரும் போட்டிகளில் பிரகாசித்தாலே அணியில் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது.

பெல்ஜியத்தில், கெவின் டி ப்ரூனே, ஈடின் ஹஸார்ட், றொமேலு லுக்காக்கு, ட்ரைஸ் மேர்ட்டன்ஸ், ஜான் வெர்டொங்கன், டொபி அல்டர்வெய்ல்ட், வின்செட் கொம்பனி, மிச்சி பச்சுவார் ஆகியோர் தமது இடங்களை உறுதிப்பத்திய நிலையில், கிறிஸ்டியான் பென்டெகே அணியில் இடம்பெறுவாரா என்பது சந்தேகத்துக்கிடமானதாகவேயுள்ளது.

போர்த்துக்கல்லில், கிறிஸ்டியானோ ரொனால்டோ, பெப்பே, றிக்கார்டோ குவார்ஸ்மா, பெர்னார்டோ சில்வா உள்ளிட்டோர் தமது இடங்களை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அண்மைய காலத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் இளம் முன்கள வீரரான றெனோட்டோ சஞ்சேஸ் அணியில் இடம்பெறமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸில், ஹியூகோ லோரிஸ், ரபேல் வரானே, சாமுவேல் உம்டிட்டி, போல் பொக்பா, என்கலோ கன்டே, பிளெய்ஸி மத்தியூடி, அட்ரியன் றபியோட், அன்டோனி கிறீஸ்மன், கிலியான் மப்பே, ஒலிவர், லோரன்ட் கொஷியென்ஸி உள்ளிட்ட வீரர்கள் தமது இடங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மறுபக்கம், அன்டோனி மார்ஷியல், பெஞ்சமின் மென்டி, அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே, உஸ்மான் டெம்பிலி, கிங்ஸ்லி கோமன், நபில் பெகிர், பக்காயோ உள்ளிட்ட வீரர்கள் தங்களது கழகங்களுக்காக அண்மைய காலங்களில் சிறப்பாக விளையாடியுள்ளபோதும் ஏற்கெனவே தமது இடங்களை உறுதிப்படுத்திய வீரர்களுடனும் இதிலுள்ள சக வீரர்களுடனும் ஏறத்தாழ ஒரே மாதிரியான விளையாடும் பாணியைக் கொண்டிருக்கின்ற நிலையில் இவர்களின் இடங்கள் சந்தேகத்துக்குரியவையாகவே காணப்படுகின்றன.

இங்கிலாந்து அணியில், ஹரி கேன், ரஹீம் ஸ்டேர்லிங், மார்க்கஸ் றஷ்போர்ட், எரிக் டயர், டெலே அல்லி, கைல் வோக்கர், ஜக் புட்லன்ட், ஜேமி வார்டி, ஜெஸி லிங்கார்ட் ஆகியோர் தத்தமது இடங்களை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஜக் வில்ஷையர், அடம் லலானா, டனி றோஸ், கரி காகில், ஜோன் ஸ்டோன்ஸ், அலெக்ஸ் ஒக்ஸ்லேட் சம்பர்லின், றொஸ் பார்க்லி ஆகியோர் எஞ்சியுள்ள இங்கிலாந்து பிறீமியர் லீக் பருவகாலத்தில் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பதைப் பொறுத்தே அணியில் இவர்களின் இடங்கள் தீர்மானிக்கப்படவுள்ளன. ஜொஸே மொரின்யோவுடனான முரண்பாட்டால் மன்செஸ்டர் யுனைட்டெட் அணியில் தொடர்ச்சியாக இடம்பெறாமலிருக்கும் லுக் ஷா அணியில் இடம்பெறுவது சந்தேகத்துக்கிடமானதாகவேயிருக்கின்றது.

ஆர்ஜென்டீனாவில், லியனல் மெஸ்ஸி, கொன்ஸலோ ஹியூகைன், சேர்ஜியோ அகுரோ, ஸ்கேவியர் மஷரானோ, சேர்ஜியோ றொமேரோ, போலோ டிபாலா, நிக்கொலஸ் ஒட்டமென்டி, எவர் பனீகா ஆகியோரின் இடங்கள் அணியில் தவிர்க்கமுடியாததாக காணப்படுகின்றன.

இவ்வாறாக முன்னணி அணிகளின் உலகக் கிண்ணத்துக்கான தெரிவுகள் காணப்படுகின்ற நிலையில், இம்மாதம் முதல் மே மாதத்துக்கிடையில் அணிகள் அறிவிக்கப்படவுள்ளன.

http://www.tamilmirror.lk/sports-articles/உலகக்-கிண்ணத்தில்-யார்-யார்-விளையாடுவர்/139-214158

Link to comment
Share on other sites

உலகக்கோப்பையில் பிரேசில் அணியை நெய்மர் வழி நடத்துவார்- பீலே நம்பிக்கை

 
அ-அ+

காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நெய்மர் உலகக்கோப்பையில் பிரேசில் அணியை வழி நடத்திச் செல்வார் என்று பீலே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 
 
 
 
உலகக்கோப்பையில் பிரேசில் அணியை நெய்மர் வழி நடத்துவார்- பீலே நம்பிக்கை
 
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர். ரஷியாவில் ஜூன் மாதம் தொடங்கும் உலகக்கோப்பையில் பிரேசில் அணி இவர் தலைமையில்தான் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பிரான்ஸ் அணியின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வந்த நெய்மருக்கு கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் களம் இறங்கவில்லை.

உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு முன் நெய்மர் முழுவதுமாக குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரேசில் அணியை நெய்மர் வழி நடத்துவார் என்று பீலே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

201804161934354357_1_neymar001-s._L_styvpf.jpg

நெய்மர் குறித்து பீலே கூறுகையில் ‘‘சரியாக என்ன நிகழப்போகிறது என்பது எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை. ஆனால், உலகக்கோப்பைக்கு முன் நெய்மர் தயாராகிவிடுவார். அவரது காயம் மிகப்பெரிய அளவில் மோசமானதல்ல. உலகக்கோப்பையில் நான் பெற்ற அதிர்ஷ்டம் நெய்மரும் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’’ என்றார்.

லீக்-1 கால்பந்து தொடரில் பிப்ரவரி 25-ந்தேதி நடைபெற்ற போட்டியின்போது நெய்மர் காயம் அடைந்தார். ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இதற்கு முன் நெய்மர் குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/16193435/1157360/Pele-Confident-Neymar-Can-Lead-Brazil-at-World-Cup.vpf

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
கால்பந்தாட்ட உலகக் கிண்ணம்: பனாமா
 

- ச. விமல்

image_f614a60d4c.jpg

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெறும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடர் இம்முறை ரஷ்யாவில் இவ்வாண்டு ஜூன் மாதம்    ஆரம்பிக்கவுள்ளது. கால்பந்தாட்ட உலக கிண்ணத் தொடரே உலகில் நடைபெறும் விளையாட்டுத் தொடர்களில் அதிகம் பேரால் பார்க்கப்படுவதும் ரசிக்கப்படுவதுமாகும்.

எனவே அவ்வாறான தொடரில் பங்குபற்றும்   32 அணிகளது விடயங்களில், ஏற்கெனவே ஆறு அணிகளைப் பற்றிய கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ள நிலையில், இக்கட்டுரை உலகக் கிண்ண அறிமுகத்தை மேற்கொள்ளும்   குழு ஈ அணியான பனாமா அணி பற்றி நோக்குகிறது.  

பனாமா இம்முறை உலகக் கிண்ண அறிமுகம் பெறும் நாடு. இவர்களது 40 ஆண்டுப் போராட்டத்துக்கு கிடைத்தை வெற்றியாக இது அமைந்துள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில் இன்னுமொரு சிறிய நாடாக கருதலாம். 2016ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி கிட்டத்தட்ட 40 இலட்சம் பேராக பனாமா நாட்டின் மக்கள் தொகை காணப்படுகிறது,

பனாமா, மத்திய அமெரிக்க நாடு. இதன் காரணமாக கொன்ககப் (CONCAF) என அழைக்கப்படும் வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள் இணைந்த வலையத்தை பனாமா அணி பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

பனாமா கால்பந்தாட்ட அணி 1938ஆம் ஆண்டு முதல் சர்வதேசப் போட்டியில் விளையாடியது. 80 ஆண்டுகளில் உலக கிண்ணத்துக்கு தகுதி பெற்றுள்ளார்கள். 1978 ஆம் ஆண்டு வரை உலக கிண்ண தகுதிகாண் போட்டிகளில் விளையாட இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. 1978 ஆம் ஆண்டு முதற் தடவையாக தகுதிகாண் போட்டிகளில் களமிறங்கியவர்கள் வெற்றியொன்றைப் பெற்றார்கள். அடுத்த மூன்று உலகக்கிண்ண தொடர்களிலும் ஒரு தகுதிகாண் போட்டியிலும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.

1994ஆம் ஆண்டு தகுதிகாண் போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றிபெற்றவர்கள் 1998ஆம் ஆண்டு முதல் முன்னேற்றகரமான நிலைக்குச் சென்றனர். 2002 மற்றும் 2006 ஆம் ஆண்டு இவர்களுக்கு முன்னேற்றமான ஆண்டுகளாக அமைந்தன. அடுத்தடுத்த சுற்றுகளுக்கு இவர்களால் முன்னேற முடிந்தது. அதிக போட்டிகளில் விளையாடியமையால் அனுபவத்தையும் பெற்றிருப்பார்கள். ஆனால் 2010 ஆம் ஆண்டு முதலாவது சுற்றுடன் வெளியேறினார்கள்.  இனி இவர்கள் சரிவரமாட்டார்கள் என்ற நிலை காணப்பட 2014 ஆம் ஆண்டுக்கான தகுதிகாண் போட்டிகள் இவர்களுக்கு நம்பிக்க்கையை  தந்தது. தகுதிகாண் போட்டிகளின் இறுதிக்கட்டம் வரை முன்னேறினார்கள். அந்த முன்னேற்றம் மற்றும் நம்பிக்கையே இம்முறை உலகக் கிண்ணம் வரை  வந்துள்ளது என நம்பலாம்.

ஒரு அணி உலக கிண்ணத்துக்கு தகுதி பெறவே இத்தனை வருடங்கள் போராட வேண்டுமென்றால், உலக கிண்ண ஜாம்பவான்களை வீழ்த்த எவ்வளவு போராட வேண்டும்? அதே காலத்தில் அந்த ஜாம்பவான்கள் தங்களை பாதுகாக்க, வளர்த்துக்கொள்ள எவ்வளவு முக்கியத்துவம் வழங்குவார்கள்? உலகின் முன்னணி விளையாட்டு என்றால் சும்மாவா?  பனாமா அணியை கால்பந்தாட்ட உலக கிண்ணத்தில் கால்பதிக்கும் 79ஆவது நாடாக நாம் குறிப்பிடலாம். இதுவரை 77 நாட்டு அணிகள் உலக கிண்ண தொடரில் விளையாடியுள்ளன. கடந்த கட்டுரையில் நாங்கள் ஐஸ்லாந்து அணியினை 78 வது நாடக தந்துள்ளமையினால் பனாமா 79 வது நாடு.

கொன்ககப் என அழைக்கப்படும் வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள் வலயத்தின் தகுதிகாண் போட்டிகள் ஆறு சுற்றுக்களாக நடைபெறும். அவற்றிலிருந்து மூன்று அணிகள் இம்முறை தெரிவாகியுள்ளன. இந்த வலயத்திலிருந்து மூன்று அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. நான்காவது இடத்தை பெற்ற ஹொண்டூரஸ் அணி அவுஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்து உலக கிண்ண வாய்ப்பை இழந்தது.

இந்த வலயத்தில் 35 அணிகள் மொத்தமாக போட்டியிட்டன. இந்த அணிகளுள் சர்வதேச தரப்படுத்தல்களுக்கிணங்க, குறித்த வலயத்தின்    இறுதி 14 இடங்களைப் பெற்ற அணிகள் விலகல் சுற்றில் மோதி, 7 அணிகள் அடுத்த கட்ட வாய்ப்பைப் பெற்றன. இந்த 14 அணிகளுள் பனாமா அணி இடம்பெற்றிருக்கவில்லை.  வெற்றிபெற்ற அணிகளும் தரப்பப்படுத்தல்களில் ஒன்பதாவதிடத்திலிருந்து 21ஆவது இடம் வரை இருந்த 13 அணிகளுகமாக 20 அணிகள் விலகல் முறையில் மோதி 10 அணிகள் மூன்றாம் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டன. இந்த 10 அணிகள் ஏழாம், எட்டாமிட அணிகளுடன் இணைந்து 12 அணிகளாக விலகல் முறையில் மோதி நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றன. அந்த ஆறு அணிகளும், முதல் ஆறு இட அணிகளுடன் இணைந்தன. பனாமா அணி முதல் ஆறிடத்துக்குள் காணப்பட்டது.

12 அணிகளும் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதலிரு இடங்களை பெற்ற அணிகள் அடுத்த ஐந்தாவது சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டன.  குழு பியில் பனாமா அணி இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது.  இந்த ஆறு அணிகளும் குழு நிலைப் போட்டிகளில் சொந்த நாட்டிலும் எதிரணியின் நாட்டிலுமென விளையாடின. இந்த ஆறு அணிகளில் முதல் மூன்றிடங்களை பெறுமணிகள் நேரடியாக உலகக் கிண்ண வாய்ப்பை பெறுவார்கள். முதலிடத்தை மெக்சிகோ அணியும் இரண்டாமிடத்தை கொஸ்டரிக்கா அணியும் மூன்றாமிடத்தை பனாமா அணியும் பெற்றுக் கொண்டன.

பனாமா அணி குழு ஜியில் இடம்பிடித்துள்ளது. இரண்டு பலமான ஐரோப்பிய அணிகளுடன் இடம்பிடித்துள்ளது. இவற்றுள் இங்கிலாந்து அணியே மிகவும் பலமான அணி. பெல்ஜியம் அணி பலமான அணியாக அண்மைக் காலமாக திகழ்ந்தாலும் உலக கிண்ணம் என பார்க்கும் போது பலமான அணியாக இல்லை. இன்னுமொரு அணி துனீஷிய அணி. எனவே பனாமா அணிக்கு இலகுவான ஒரு குழு கிடைத்துள்ளது என யோசிக்க தோன்றினாலும், தரப்படுத்தல்கள் இந்நிலையை தலை கழாக மாற்றியுள்ளது. ஆகவே இவர்கள் வெற்றிகளை பெறாவிட்டாலும் சிறப்பாக விளையாடி தமக்கான ஒரு பெயரை நிலைநாட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது. புதிய அணிகள் வெற்றிபெறுவது என்பது இலகுவான விடயம் கிடையாது. ஆனால் நல்ல முறையில் விளையாடி தங்கள் பெயரைத் தக்கவைத்துக் கொள்வது அல்லது நல்ல பெயரை ஏற்படுத்துவது என்பது முக்கியமானது. அதனை பனாமா அணியினர் சரியாகச் செய்யவேண்டும்.

இறுதியாக இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட தரப்படுத்தல்களின் படி பனாமா அணி இடம்பிடித்துள்ள குழுவிலுள்ள பெல்ஜியம் அணி மூன்றாமிடத்திலுள்ளது. இங்கிலாந்து அணி 13ஆம் இடத்தில் காணப்படுகிறது. பனாமா அணிக்கு போட்டியாக இருக்குமென எதிர்பார்க்கும் துனீஷிய அணி முன்னணி அணிகளுக்கு சவால் விடுக்குமிடத்திலுள்ளது. இங்கிலாந்து அணிக்கு ஒரு இடம் மாத்திரமே பின்னிலையுள்ளது. பனாமா அணி 55ஆம் இடத்தில் காணப்படுகிறது. இதன் காரணமாகவே பனாமா அணி உலக கிண்ணத்தை வெல்வதற்கான 31ஆம் இட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் குழு நிலையில் இறுதியிடத்தை பிடிப்பது மாத்திரமல்ல விளையாடும் 32 அணிகளில் 31வது இடத்தையே பெறுவார்கள் என பந்தயக்காரர்கள் தங்கள் தரப்படுத்தல்களை வெளியிட்டுள்ளார்கள்.

ஒரு புதிய அணி. உலக கிண்ணத்தில் இவர்களை நாம் பார்க்கும் போது இவர்கள் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதனை கணிக்க முடியும். ரசிகர்களை தங்கள் பக்கமாக இழுக்கப்போகிறார்களா அல்லது ஏன் இவர்களெல்லாம் உலகக் கிண்ண பக்கம் வருகிறர்கள் என சலிப்பை ஏற்படுத்தப்போகிறார்களா என்பது தெரிய வரும்.

 

 

Link to comment
Share on other sites

ஸ்வீடன் அணிக்கு ஏமாற்றம் அளித்த இப்ராஹிமோவிக்

Getty-Images-2-696x473.jpg Image Courtesy - Getty Images
 

ஸ்வீடன் முன்கள வீரர் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் (Zlatan Ibrahimović) இந்த ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் விளையாடமாட்டார் என அந்நாட்டு கால்பந்து சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் முன்கள வீரரான இப்ராஹிமோவிக் தான் சர்வதேச போட்டிகளில் பெற்ற ஓய்வில் இருந்து விலகி ரஷ்யா செல்லும் ஸ்வீடன் உலகக் கிண்ண குழாமில் அங்கம் வகிப்பார் என்று ஊகங்கள் இருந்து வந்தன.

எனினும் தான் மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்புவதில்லை என்று அவர் தீர்மானித்துள்ளார்.   

ஸ்வீடன் அணி முகாமையாளர் லார்ஸ் ரிச்ட் கூறியதாவது, நான் ஸ்லாடனுடன் செவ்வாயன்று (24) பேசினேன். தேசிய அணி பற்றிய தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை என்று அவர் என்னிடத்தில் கூறினார் – அவர் மறுத்துவிட்டார்.  

 

முந்திய தேசிய அணி ஒன்று கூடல்களிலும் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் விடயத்தில் இதே நிலைமை தான் இருந்தது. தேசிய அணி பயிற்றுவிப்பாளர் ஜன்னே அண்டர்சன் எதிர்வரும் மே மாதம் 15 இல் அறிவிக்கும் உலகக் கிண்ண குழாமில் அவர் கருத்தில் கொள்ளப்படமாட்டார்.

ஸ்வீடன் ஆடவர் கால்பந்து அணியின் உத்தியோகபூர்வ இன்ஸ்டக்ராம் (Instagram) பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பிலும், ”ஒரு இறுதி முடிவு: ஸ்லாடன் உலகக் கிண்ணத்தில் விளையாடமாட்டார்” என்று தேசிய தேர்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

36 வயதான இப்ராஹிமோவிக் அண்மையில் மென்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விடைபெற்று அமெரிக்காவில் தனது கால்பந்து வாழ்வை தொடரும் நோக்கில் எல்.ஏ. கெலக்சி அணியில் இணைந்து கொண்டார்.

ஸ்வீடன் அணிக்காக 116 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். எனினும் இந்த பருவத்தில் மீண்டும் ஸ்வீடன் அணிக்கு திரும்புவது பற்றி அவர் பல சந்தர்ப்பங்களிலும் சூசகமாக கூறி இருந்தார்.

இம்மாத ஆரம்பத்தில் கூட அவர் பதிவிட்ட ட்வீட்டில் (Tweet), இந்த பருவத்தில் ரஷ்யாவில் தான் இடம்பெறுவதற்கு வானளவு வாய்ப்பு உள்ளதென தான் நம்புவதாக கூறியிருந்தார்.

பின்னர் தொலைக்காட்சி பேட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், ”ஆம், நான் உலகக் கிண்ணம் செல்வேன்” என்று உறுதியாகக் கூறியிருந்தார்.

2002 மற்றும் 2006 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளில் ஸ்வீடன் அணியில் இடம்பிடித்திருந்த இப்ராஹிமோவிக் தேசிய அணிக்காக 62 கோல்களை பெற்றிருப்பதோடு. அஜக்ஸ், ஜுவான்டஸ் மற்றும் இன்டர் மிலான் கழகங்களுக்காகவும் விளையாடியுள்ளார்.  

மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக தனது இறுதிப் பருவத்தில் முழங்கால் காயத்தால் அவதியுற்றபோதும் கடந்த மாதம் எல்.ஏ. கெலக்சி அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடியபோது இரண்டு கோல்களைப் பெற்று அந்த அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.    

 

எனினும் இப்ராஹிமோவிக் இன்றியே ஸ்வீடன் அணி இத்தாலியுடனான பிளே ஓப் போட்டியில் அந்த அணியை வீழ்த்தி 2018 உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றது. இது அந்த அணி 2006 இற்கு பின் விளையாடும் முதல் உலகக் கிண்ணமாக உள்ளது. ஸ்வீடன் அணி 2010 மற்றும் 2014 உலகக் கிண்ண போட்டிகளுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை உலகக் கிண்ணத்தில் குழு F இல் விளையாடும் ஸ்வீடன் அணி தனது முதல் போட்டியில் ஜுன் 18 ஆம் திகதி தென் கொரியாவை எதிர்கொள்ளவிருப்பதோடு அதனைத் தொடர்ந்து ஜெர்மனி மற்றும் மெக்சிகோ அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.  

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
கால்பந்தாட்ட உலகக் கிண்ணம்: சுவீடன்
 

- ச. விமல்

image_a164d6a69a.jpg

கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடர் ரஷ்யாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், குழு எப்பில் இடம்பெற்றுள்ள சுவீடன் அணியை இக்கட்டுரை நோக்குகின்றது.

சுவீடன் அணி ஐரோப்பிய கண்ட அணி. சுவீடனும் கூட பலமான அணி என்றாலும் அண்மைய காலங்களில் சொல்லக்கூடியளவில் இல்லை. கடந்த இரண்டு உலக கிண்ண தொடர்களுக்கும் தகுதி பெறாதவர்கள் இம்முறை தகுதி பெற்றுள்ளார்கள். இவர்களது உலகக்கிண்ண வரலாறு 1934 ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்தது. முதல் உலக கிண்ண தொடரில் விளையாடவில்லை. 16 அணிகள் விளையாடிய 34 ஆம் ஆண்டு உலக கிண்ண தொடரில் காலிறுதிக்கு முன்னேறினார்கள். எட்டாவது இடம் இவர்களுக்கு கிடைத்தது. அடுத்த உலகக் கிண்ணத் தொடரில் நான்காமிடத்துக்கு முன்னேறினார்கள்.  இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நடைபெற்ற 1950 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் மூன்றாமிடதத்துக்கு முன்னேறினார்கள்.

image_38b076d359.jpg

1954 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் தகுதிகாண் போட்டிகளில் ஒரு வெற்றியை மாத்திரமே பெற்று உலகக் கிண்ண வாய்ப்பை இழந்தார்கள். ஆனால் அடுத்த 58ஆம் ஆண்டு உலக கிண்ணத் தொடரில் மிக அபாரமான மீள் வருகையை மேற்கொண்டார்கள். இறுதிப் போட்டிவரை முன்னேறியவர்கள் இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டார்கள். உலகக் கிண்ணத் தொடரில் சுவீடன் அணி பெற்றுக்கொண்ட உயரிய இடம் இதுவே.

image_e4fd50251f.jpgimage_05c55bbe6c.jpg

இதுவரையிலும் பலமாக காணப்பட்ட சுவீடன் அணியின் பலம் வீழ்ச்சி கண்டது. பெரியளவில் இவர்களால் உலக கிண்ண தொடரில் சாதிக்க முடியவில்லை. 94ஆம் ஆண்டு அமெரிக்க உலகக் கிண்ணத் தொடரில் மூன்றாமிடத்தை பெறும் வரையில் இவர்கள் எதனையும் பெரிதாக சாதிக்கவில்லை. 62, 66, 82, 86 ஆகிய ஆண்டுகளில் உலக கிண்ணத்துக்குத் தகுதி பெறவில்லை. இந்த பகுதியில் மூன்று உலக கிண்ண தொடர்களில் இரண்டு தொடர்களில் முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டார்கள். 74ஆம் ஆண்டு இரண்டாம் சுற்றுடன் வெளியேற்றப்பட்டார்கள். 1994ஆம் ஆண்டின் பின்னர் நடைபெற்ற ஐந்து உலக கிண்ண தொடர்களில் மூன்றில் தகுதி பெறவில்லை. 2002, 2006 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர்களில் இரண்டாம் சுற்றுடன் வெளியேற்றப்பட்டார்கள்.

சுவீடன் அணி வெற்றியுடன் தங்கள் சர்வதேச கால்பந்தாட்ட பயணத்தை ஆரம்பித்த அணி. 1908 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் நோர்வே அணியை 11-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றார்கள். ஆனால் அதேயாண்டு நடைபெற்ற மிகுதி போட்டிகளில் ஐந்திலும் மோசமான தோல்விகளை அடைந்தார்கள். அதேயாண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 1-12 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது அவர்களின் மோசமான தோல்வியாக இன்று வரை திகழ்கிறது.

 சுவீடன் அணி ஐரோப்பிய வலயத்தின் முதலாவது சுற்றுப் போட்டிகளில் குழு ஏயில் இரண்டாமிடத்தைப் பெற்றது. பிரான்ஸ், சுவீடன் அணிகளுக்கிடையில் கடும் போட்டியொன்று நிலவிய போதும் பிரான்ஸ் அணி முதலிடத்தை பெற்றுக் கொண்டது. ஆனாலும் நெதர்லாந்து, சுவீடன் அணிகளுக்கிடையிலான போட்டியே மிகவும் கடுமையாக இருந்தது. இரண்டு அணிகளும் சம புள்ளிகளை பெற்றுக் கொண்டன. கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ற சுவீடன் அணி இரண்டாம் கட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றது. 

image_1df12760aa.jpg

குழு நிலைப்போட்டிகளில் இரண்டாமிடங்களை பெற்றுக்கொண்ட முதல் 8 அணிகள் இரண்டாம் கட்ட தெரிவுகாண் போட்டிகளில் மோதின. இந்த எட்டணிகளில் நான்கு அணிகள் இவ்விரு அணிகளாக போட்டியிட்டன. சொந்த நாட்டிலும் வெளிநாட்டிலுமாக போட்டிகளாக நடைபெற்றன.   சுவீடன் அணி பலமான இத்தாலி அணியை இரண்டாம் கட்ட தெரிவுகாண் போட்டிகளில் சந்தித்தது. யாரும் எதிர்பார்த்த விதமாக இத்தாலி அணியை சுவீடன் அணி வீழ்த்தி உலகக் கிண்ண வாய்ப்பை தனதாக்கியது. இத்தாலி, சுவீடன் அணிகளுக்கிடையில் இத்தாலியில் நடைபெற்ற போட்டியை கோல்களின்றி சமன் செய்து தங்கள் நாட்டில் நடைபெற்ற போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுக் கொண்டார்கள்.

 

தெரிவுகாண் போட்டிகளில் குழு A

1  பிரான்ஸ்                      10           7              2              1              18           6              12           23          

2  சுவீடன்                        10           6              1              3              26           9              17           19          

3   நெதர்லாந்து              10           6              1              3              21           12           9              19          

4    பல்கேரியா                 10           4              1              5              14           19           -5            13          

5    லக்ஸம்பேர்க்            10           1              3              6              8              26           -18          6             

6    பெலாரஸ்                     10           1              2              7              6              21           -15          5

 

சுவீடன் அணி உலகக் கிண்ண 46 போட்டிகளில் 16 வெற்றிகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள். 13 போட்டிகளில் சமநிலை முடிவுகளை பெற்றுள்ளார்கள்.  17 போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்துள்ளார்கள். இந்த முடிவுகளின் படி 61 புள்ளிகளைப் பெற்று உலகக் கிண்ண தரப்படுத்தல்களில் 10ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்கள். ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட தரப்படுத்தல்களின் படி சுவீடன் அணி 23 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

பலமான அணியாக காணப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் குழு பலமான குழு. இம்முறை உலகக் கிண்ணத்தை வெற்றி பற வாய்ப்புகள் உள்ளது என எதிர்பார்க்கப்படும் ஜேர்மனி அணி குழு எவ்வில் இடம்பிடித்துள்ளது. மெக்சிக்கோ அணி தரப்படுத்தல்களில் 15ஆம் இடத்தில் காணப்படுகிறது. நான்காவது அணியான தென்கொரிய அணி 61ஆம் ஆமிடத்தில் காணப்படுகிறது. சுவீடன் அணிக்கும் மெக்சிக்கோ அணிக்குமிடையிலேயே அதிகமான போட்டி காணப்படும். கடந்த கால போட்டிகள், குழு நிலையை பார்க்கின்ற வேளையில் சுவீடன் அணிக்கான இரண்டாம் கட்ட வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன. சுவீடன், ஒவ்வொரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாட வேண்டும். ஒவ்வொரு கோலும் சுவீடன் அணிக்கு முக்கியமாக அமையப்போகிறது.

சுவீடன் அணிக்கான வெற்றி வாய்ப்புகள் 17ஆம் இடத்தில் வழங்கப்பட்டுள்ளது. எனவே இவர்கள் இந்த உலகக் கிண்ணத்தில் 17ஆம் இடத்தைப் பெறுவார்கள் என்பதே அந்த எதிர்பார்ப்பு. எனவே இவர்கள் முதல் சுற்றுடன் வெளியேறுவார்கள். ஆனால் முதல் சுற்றுடன் வெளியேறும் அணிகளில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. பலமான அணி. ஆனால் மற்றைய பலமான அணிகள் இவர்களை வீழ்த்தும். இதுவே 1950ஆம் ஆண்டு காலமென்றால் சுவீடன் அணிக்கு வாய்ப்புகளை வழங்கலாம். இவர்களின் அண்மைக்கால போட்டிகளின் முடிவுகள் இவர்களுக்கு அதிக சாதகமான நிலையை வழங்க முடியவில்லை.

சுவீடன் அணி எந்தளவுக்கு சிறப்பாக விளையாடப் போகிறார்கள் என்பது இவர்களுக்கு முக்கியமானது. ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய இன்னுமொரு முக்கிய விடயமுள்ளது. பலமான நெதர்லாந்து மற்றும் இத்தாலி அணிகளை வெளியேற்றி உலக கிண்ணத்துக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.  எனவே பலமான அணிகளை இவர்கள் தோற்கடிக்க மாட்டார்கள் எனவும் கூற முடியாது. சுவீடன் அணியால் நிச்சயம் இந்த குழுவில் மாற்றங்களை செய்ய முடியும் என நம்பலாம்.

சுவீடன் அணியின் குழு நிலை போட்டிகள்

18 ஜூன்  - 17:30 எதிர் தென்கொரியா

23 ஜூன் - 23.30 எதிர் ஜேர்மனி

27 ஜூன்  - 19:30 எதிர் மெக்சிக்கோ

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை: களமிறங்கும் நெய்மர், டேனி ஏல்வியஸ் `அவுட்!’ #worldcup2018

 
 

ஷ்ய உலகக்கோப்பைத் தொடருக்கான பிரேஸில் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக, டேனி ஏல்வியஸ் அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக, ரைட் பேக் பொசினில் ஆட ஃபாக்னர், மான்செஸ்டர் சிட்டியின் டேனிலோ ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

நெய்மர்

 

பிப்ரவரி 25-ம் தேதி காயமடைந்து போட்டிகளில் விலகியிருக்கும் நெய்மருக்கு, அணியில் இடம் கிடைத்துள்ளது. ஜூன் மாதத்துக்குள் நெய்மர் முழு உடல் தகுதியை எட்டிவிடுவார் என்று பிரேஸில் அணியின் டாக்டர் ரோட்ரிகோ லாஸ்மர் தெரிவித்துள்ளார்.
ஈ பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேஸில் அணி, ஜூன் 17-ம் தேதி, முதல் ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. முன்னதாக, லிவர்லில் ஜூன் 3- ம் தேதி குரோஷியாவுடனும் ஜூன் 10-ம் தேதி வியன்னாவில் ஆஸ்திரியாவுடனும் இரு பயிற்சி ஆட்டங்களில் பிரேஸில் ஆடுகிறது. 

பிரேஸில் அணியின் 23 வீரர்கள் விவரம்

கோல்கீப்பர்கள் - அலிஸன், எடர்ஸன், கேஸினோ

தடுப்பாட்டம் - மார்ஸிலோ, டேனிலோ, ஃபிலிஃப் லூயிஸ், ஃபாக்னர், மெர்கியூன்கோஸ், தியாகோ சில்வா, மிராண்டா, பெட்ரோ, ஜெர்மோயல்.

நடுகளம் - வில்லியன், ஃபெர்டினான்டோ, பவுலின்கோ, காஷ்மீரா, பவுலின் ஹட்டின்ஹோ, ஃப்ரெட், அகஸ்டோ

முன்களம் - நெய்மர், கேப்ரியல் ஜீஸஸ், ராபர்ட்டோ ஃபிர்மினோ, டக்ளஸ் கோஸ்டா, டைசன்.

பயிற்சியாளர் : டிடே

https://www.vikatan.com/news/tamilnadu/125068-neymar-confirmed-in-brazils-world-cup-team.html

Link to comment
Share on other sites

ஜெர்மனி  ஷ்ய உலகக்கோப்பைத் தொடருக்கான உத்தேச அணியை அறிவித்துள்ளது.

Der vorläufige WM-Kader des DFB im Überblick:

  • TOR: Manuel Neuer (Bayern München), Marc-André ter Stegen (FC Barcelona), Bernd Leno (Bayer Leverkusen), Kevin Trapp (Paris St. Germain)
  •  
  • ABWEHR: Jérôme Boateng (Bayern München), Matthias Ginter (Borussia Mönchengladbach), Jonas Hector (1. FC Köln), Mats Hummels (Bayern München), Joshua Kimmich (Bayern München), Marvin Plattenhardt (Hertha BSC), Antonio Rüdiger (FC Chelsea), Niklas Süle (Bayern München), Jonathan Tah (Bayer Leverkusen)
  •  
  • MITTELFELD/ANGRIFF: Julian Brandt (Bayer Leverkusen), Julian Draxler (Paris St. Germain), Mario Gomez (VfB Stuttgart), Ilkay Gündogan (Manchester City), Leon Goretzka (Schalke 04), Sami Khedira (Juventus Turin), Toni Kroos (Real Madrid), Thomas Müller (Bayern München), Mesut Özil (FC Arsenal), Nils Petersen (SC Freiburg), Marco Reus (Borussia Dortmund), Sebastian Rudy (Bayern München), Leroy Sané (Manchester City), Timo Werner (RB Leipzig)

 

நடப்பு சம்பியன் ஜெர்மனியின் உலகக் கிண்ண குழாம் அறிவிப்பு

Mario Goetze Germany's forward Mario Goetze (R) celebrates after scoring during the final football match between Germany and Argentina for the FIFA World Cup at The Maracana Stadium in Rio de Janeiro on July 13, 2014. AFP PHOTO / ODD ANDERSENODD ANDERSEN/AFP/Getty Images ORG XMIT: 491717433
 

இறுதியாக இடம்பெற்ற உலகக் கிண்ணத்தை வெல்லும் கோலை புகுத்திய ஜெர்மனி அணியின் மரியோ கொட்சே, ஜுன் மாதம் ரஷ்யாவில் ஆரம்பமாகும் அடுத்த உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான ஜெர்மனி குழாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் ஆர்ஜன்டீனாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கொட்சே மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் மூலமே ஜெர்மனி நான்காவது முறை உலகக் கிண்ணத்தை வென்றது.

 

கடந்த செப்டெம்பர் மாதம் தனது பாதத்தில் ஏற்பட்ட காயத்தால் எட்டு மாதங்களாக போட்டியில் பங்கேற்காமல் இருக்கும் பயெர்ன் முனிச் கோல் காப்பாளர் மனுவேல் நியுர், ஜேர்மனி குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.

ஜெர்மனி அணித்தலைவரும் கோல் காப்பாளருமான நியுர் அடுத்த வாரம் ஆரம்பமாகவிருக்கும் பயிற்சி முகாமில் தனது உடற் தகுதியை நிரூபிப்பது கட்டாயமாகும்.    

நடப்புச் சம்பியனான ஜெர்மனி தனது சம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் முயற்சியை வரும் ஜுன் 17 ஆம் திகதி மெக்சிகோ அணிக்கு எதிரான போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது. F குழுவில் இடம்பிடித்திருக்கும் அந்த அணி தென் கொரியா மற்றும் சுவீடனுடனும் முதல் சுற்றில் மோத வேண்டி உள்ளது.

 

ஜெர்மனி குழாம்

கோல் காப்பாளர்கள்

பெர்ன்ட் லெனோ (பயெர் லெவர்குசன்), மனுவேல் நுவெர் (பயெர்ன் முனிச்), மார்க் அன்ட்ரே டெர் ஸ்டெகன் (பார்சிலோனா), கெவின் டிரப் (PSG).

 

பின்கள வீரர்கள்

ஜெரோம் போடெங் (பயெர்ன் முனிச்), மத்தியஸ் கின்டர் (பொருசியா மொன்சன்லட்பஜ்), ஜோனஸ் ஹெக்டர் (கொலேன்), மட்ஸ் ஹம்மல்ஸ் (பயெர்ன் முனிச்), ஜோஷுவா கிம்மிச் (பயேர்ன் முனிச்), மர்வின் ப்ளட்டன்ஹார்ட் (ஹெர்தா பெர்லின்), அன்டோனியோ ருடிகர் (செல்சி), நிக்லஸ் சுலே (பயெர்ன் முனிச்), ஜொனதன் டாஹ் (பயெர்ன் லெவர்குசேன்).

மத்திய கள வீரர்கள்

ஜுலியன் பிரன்த் (பயெர் லெவர்குசன்), ஜுலியன் ட்ரெக்லர் (PSG), லியொன் கொரெட்ஸ்கா (ஷெல்கே), இல்கை குன்டொகன் (மன்செஸ்டர் சிட்டி), சமி கதிரா (ஜுவென்டஸ்), டோனி க்ரூஸ் (ரியெல் மெட்ரிட்), மெசட் ஒசில் (ஆர்சனல்), செபஸ்டியன் ருடி (பயெர்ன் முனிச்), லெரோய் சனே (மன்செஸ்டர் சிட்டி).

 

முன்கள வீரர்கள்  

மரியோ கோமஸ் (ஸ்டுட்கார்ட்), தோமஸ் முல்லர் (பயெர்ன் முனிச்), நில்ஸ் பீட்டர்ஸன் (எஸ்.சி. பிரைபேர்க்), மார்கோ ரியூஸ் (பொருசியா மொன்சன்லட்பஜ்), டிமோ வோர்னர் (ஆர்.பி. லிப்சிக்)

 

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

உலகக் கிண்ணத்திற்கான ரொனால்டோவின் போர்த்துக்கல் குழாம் அறிவிப்பு

Renato-Sanches-1-696x504.jpg
 

தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் குழாமில் 2016 யூரோ கிண்ணத் தொடரின் இளம் வீரருக்கான விருதை வென்ற ரெனாடோ சான்சஸ் இடம்பெற தவறியுள்ளார்.  

 

 

போர்த்துக்கல் அணி முகாமையாளர் பெர்னாண்டோ சான்டோஸ் வெளியிட்டிருக்கும் 35 பேர் கொண்ட உத்தேச குழாமிலேயே 20 வயதான சான்சஸுக்கு இடம் கிடைக்கவில்லை.   

சான்சஸ், வேல்ஸின்சுவான்சி சிட்டி கழகத்திற்காக இந்த பருவத்தில் ஆடியபோதும் அந்த கழகம் பிரீமியர் லீக் தொடரில் தரமிறக்கப்பட்டுள்ளது.

2016இல் பிரான்சில் நடந்த ஐரோப்பிய கிண்ணத்தை வென்ற போர்துக்கல் அணியின் ஏழு போட்டிகளில் அப்போது 18 வயதான சான்சஸ் ஆறு போட்டிகளில் ஆடினார். இதன்மூலம் பயெர்ன் முனிச் அணிக்கு பெரும் தொகைக்கு ஒப்பந்தமான அந்த இளம் வீரர் சரியாக சோபிக்காததால் சுவான்சி சிட்டி கழகத்திற்கு சென்றார்.   

எனினும், போர்த்துக்கல் குழாமில் மூத்த வீரர் ரிகார்டோ குவரெஸ்மா இணைக்கப்பட்டுள்ளார். 34 வயதான அவர் பசிக்டாஸ் கழகத்திற்காக இந்த பருவத்தில் சிறப்பாக ஆடி வருகிறார்.  

35 வீரர்கள் கொண்ட இந்த உத்தேச குழாம் எதிர்வரும் நாட்களில் 23 வீரர்களாக குறைக்கப்படவுள்ளது

 

ரஷ்யாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் உலகக் கிண்ண கால்பந்து தொடரில் B குழுவில் அங்கம் வகிக்கும் போர்த்துக்கல் அண்டை நாடான ஸ்பெயின், மொரொக்கோ மற்றும் ஈரானுடன் மோதவுள்ளது.

அதற்கு முன்னதாக ரொனால்டோ மற்றும் சகாக்கள் மே 28 ஆம் திகதி துனீசியாவுடனும், ஜுன் 2 ஆம் திகதி பெல்ஜியத்துடனும், ஜுன் 6 ஆம் திகதி அல்ஜீரியாவுடனும் பயிற்சி நட்புறவு போட்டிகளில் ஆடவுள்ளது.  

போர்த்துக்கல் உத்தேச குழாம்

கோல் காப்பாளர்கள்  

அன்தோனியோ லோபஸ் (லியோன்), பெடோ (கொஸ்டெபே), ருயி பெட்ரிசியோ (ஸ்போர்டிங்).

பின்கள வீரர்கள்

அன்டுனஸ் (கெடபே), ப்ரூனோ அல்வெஸ் (ரேன்ஜர்ஸ்), செட்ரிக் சோரஸ் (சௌதம்ப்டன்), ஜவோ கன்சலோ (இன்டர்), ஜோஸ் பொன்டே (டாலியன் யிபங்), லுவிஸ் நெடோ (பெனர்பாஸ்), மரியோ ருயி (நபோலஸ்), நெல்சன் சமடோ (பார்சிலோனா), பெபே (பெசிக்டஸ்), சபாயெல் குவரிரோ (டோர்ட்முண்ட்), ரியார்டோ பெரைரா (போர்டோ), ரொனால்டோ (மார்செல்ஹா), ருபேன் டயஸ் (பென்பிகா).

 

மத்தியகள வீரர்கள்

அட்ரியன் சில்வா (லிசஸ்டர்), அன்ட்ரே கோமஸ் (பார்சிலோனா), பிரூனோ பெர்னாண்டஸ் (ஸ்போர்டிங்), ஜோவோ மரியோ (வெஸ்ட் ஹாம்), ஜோவோ மௌடின்ஹோ (மொனாகோ), மனுவேல் பெர்னாண்டஸ் (லொகோமோடிவ் மொஸ்கோ), ருபென் நெவேஸ் (வோல்வஸ்), செர்கியோ ஒலிவைரா (போர்டோ), வில்லியம் கர்வல்ஹோ (ஸ்போர்டிங்).  

முன்கள வீரர்கள்

அன்ட்ரே சில்வா (.சி. மிலான்), பெர்னார்டோ சில்வா (மன்செஸ்டர் சிட்டி), கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியெல் மெட்ரிட்), எடெர் (லொகோமோடிவ் மொஸ்கோ), கெல்சன் மார்டின்ஸ் (ஸ்போர்டிங்), கொன்காலோ குவேடஸ் (வலென்சியா), நானி (லாசியோ), போலின்ஹோ (ப்ராகா), ரிகார்டோ குவரெஸ்மா (பசிக்டாஸ்), ரொன்னி லோபஸ் (மொனாகோ).

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழா கவுன்ட்டவுன் தொடக்கம்

 

 
foot-ball

ஜூன் 14-ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் குரூப் ஏ-வில் இடம்பிடித்த ரஷியாவும் சவுதி அரேபியாவும் மோதுகின்றன. ரஷியாவின் 12 விளையாட்டு தானங்களில், ஜூலை 15-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. 

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் 2018 ரஷியாவில் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ளது. உலகிலேயே பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா கால்பந்து போட்டிகள் தான் அதிகளவில் பார்வையாளர்களால் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டுகளில் முதலிடத்தை பெறுகிறது. கடந்த 1930-இல் முதல் உலகக் கோப்பை 
போட்டிகள் நடைபெற்றன. 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து போட்டிகளை சர்வதேச கால்பந்து சம்மேளனம் பிஃபா நடத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் போட்டிகளை நடத்த விண்ணப்பித்தாலும், அங்குள்ள விளையாட்டு அரங்குகள், வீரர்களுக்கான வசதிகள், போக்குவரத்து, செலவிடும் திறன் போன்றவற்றை பிஃபா குழு நேரில் சென்று ஆய்வு செய்யும். 

பின்னர் கூடும் அதன் பொதுக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வாக்களித்து உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாட்டை தேர்வு செய்வது வழக்கம். கடந்த 1930இல் 
தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இடையில் உலகப் போர்களால் 1942, 1946ஆம் ஆண்டுகளில் நடைபெறவில்லை. இறுதியாக 2014-இல் பிரேசிலில் நடைபெற்ற போட்டியில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்


ஆண்டு வென்ற அணிகள் நடந்த நகரம் நாடுகள்

1930 உருகுவே, மாண்டிவிடோ உருகுவே
1934 இத்தாலி ரோம் இத்தாலி
1938 இத்தாலி பாரிஸ் பிரான்ஸ்
1942 உலகப்போர் 1 
1946 உலகப் போர் 2 
1950 உருகுவே ரியோ டி ஜெனிரோ பிரேசில்
1954 மேற்கு ஜெர்மனி பெர்ன் சுவிட்சர்லாந்து
1958 பிரேசில் சோல்னா ஸ்வீடன்
1962 பிரேசில் சாண்டியாகோ சிலி
1966 இங்கிலாந்து லண்டன் இங்கிலாந்து
1970 பிரேசில் மெக்ஸிகோ சிட்டி மெக்ஸிகோ
1974 மேற்கு ஜெர்மனி முனிக் ஜெர்மனி
1978 ஆர்ஜென்டீனா பியனோஸ் அயர்ஸ் ஆர்ஜென்டீனா
1982 இத்தாலி மாட்ரிட் ஸ்பெயின்
1986 ஆர்ஜென்டீனா மெக்ஸிகோ சிட்டி மெக்ஸிகோ
1990 மேற்கு ஜெர்மனி ரோம் இத்தாலி
1994 பிரேசில் பúஸடனா அமெரிக்கா
1998 பிரான்ஸ் செயின்ட் டெனிஸ் பிரான்ஸ்
2002 பிரேசில் யோகாஹமா ஜப்பான்
2006 இத்தாலி பெர்லின் ஜெர்மனி
2010 ஸ்பெயின் ஜோகன்னஸ்பர்க் தென் ஆப்பிரிக்கா
2014 ஜெர்மனி ரியோடி ஜெனிரோ பிரேசில்

அதிக முறை பட்டம் வென்ற நாடுகள் 

பிரேசில்-5, ஜெர்மனி, இத்தாலி-4, ஆர்ஜென்டீனா, உருகுவே-2, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் தலா 1 முறை.

32 நாடுகள் பங்கேற்பு

2018 பிஃபா உலகக் கோப்பை (2018 ) சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் ஓர் பன்னாட்டு கால்பந்தாட்ட போட்டியாகும். 21வது முறையாக நடக்கும் இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் வரும் ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை ரஷியா ஏற்று நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 2006 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் நடைபெறும் முதலாவது கால்பந்து உலகக்கோப்பை இதுவாகும். இறுதிப் போட்டிகள் ஒரு போட்டி தவிர ஏனையவை ரஷியாவின் ஐரோப்பியக் கண்டப் பகுதியில் நடைபெறுகின்றன. 
இறுதிச் சுற்றில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. இவற்றில் 31 அணிகள் தகுதிப் போட்டிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டன. ரஷியா போட்டிகளை நடத்தும் நாடாக தகுதி பெற்றது. 
32 அணிகளில், ஐஸ்லாந்து, பனாமா ஆகிய நாடுகள் முதன் முதலாக உலகக்கோப்பையில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 அரங்குகளில் 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. இறுதிப் போட்டி வரும் ஜூலை 15 இல் மாஸ்கோவின் லூசினிக்கி அரங்கில் நடைபெறும். 


இத்தாலியின் புதிய பயிற்சியாளர் மான்சினி

இத்தாலி கால்பந்து அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ராபர்டோ மான்சினி பொறுப்பேற்றார்.
கால்பந்து விளையாட்டில் மிகவும் முக்கியமான அணிகளில் ஒன்று இத்தாலி ஆகும். அந்த அணி 4 முறை உலக கோப்பையை வென்றுள்ளது. மேலும் ஜுவென்டஸ், ரோமா, ஏசி மிலன், உள்ளிட்ட புகழ் பெற்ற கால்பந்து கிளப் அணிகளும் இயங்கி வருகின்றன. அனைத்து உலகக் கோப்பை போட்டிகளிலும் தகுதி பெற்ற இத்தாலி, நிகழாண்டு ரஷியாவில் நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறவில்லை. இது இத்தாலி கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மான்செஸ்டர் சிட்டி அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராபர்டோ மான்சினி புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இத்தாலி அணியின் செயல்திறனை மேம்படுத்தி, 6 மாதங்களுக்குள் மீண்டும் இழந்த இடத்தைப் பெறச் செய்யும் பொறுப்பு மான்சினியிடம் உள்ளது. 
ஜெர்மனியின் பயிற்சியாளர் பணிக்காலம் நீட்டிப்பு: ஜெர்மனி கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஜோசெம் லியுவின் ஒப்பந்த பணிக்காலம் வரும் 2022-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் லியு பயிற்சியாளராக நீடித்து வருகிறார். மேலும் 2014-ஆம் ஆண்டு ஜெர்மனி உலகக் கோப்பை வெல்ல உதவினார்.


போட்டியில் பங்கேற்றுள்ள அணிகளின் விவரம் வருமாறு

குரூப் ஏ ரஷ்யா, உருகுவே, எகிப்து, சவுதி அரேபியா
குரூப் பி போர்ச்சுகல், ஸ்பெயின், ஈரான், மொராக்கோ
குரூப் சி பிரான்ஸ், பெரு, டென்மார்க், ஆஸ்திரேலியா
குரூப் டி ஆர்ஜெண்டீனா, குரோஷியா, ஐஸ்லாந்து, நைஜீரியா
குரூப் இ பிரேசில், சுவிட்சர்லாந்து, கோஸ்டா ரிகா, செர்பியா
குரூப் எப் ஜெர்மனி, மெக்ஸிகோ, ஸ்வீடன், தென் கொரியா
குரூப் ஜி பெல்ஜியம், இங்கிலாந்து, துனிஷியா, பனாமா
குரூப் ஹெச் போலந்து, கொலம்பியா, செனகல், ஜப்பான்

http://www.dinamani.com/sports/sports-news/2018/may/16/உலகின்-மிகப்பெரிய-விளையாட்டுத்-திருவிழா-கவுன்ட்டவுன்-தொடக்கம்-2920363.html

Link to comment
Share on other sites

உலகக் கிண்ணத்தை கண்ணீரோடு மெருகேற்றும் இத்தாலி

pic-AFP-7-696x464.jpg
 

ரஷ்யாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியை வெல்லும் அணி அந்த கிண்ணத்தை தலைக்கு மேல் தூக்கிக் கொண்டாடும் காட்சியை ஜூலை மாதத்தில் பார்க்கத்தான் போகிறோம். ஆனால், உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் தகுதியை இழந்திருக்கும் இத்தாலிக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்க வாய்ப்பே இல்லை. என்றாலும், இத்தாலிக்கும் உலகக் கிண்ணத்திற்குமான உறவு இம்முறை போட்டிகளிலும் தொடர்கிறது.

 

 

நான்கு முறை உலகக் கிண்ணத்தை வென்ற இத்தாலி கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் பிளே ஓப் (Playoff) போட்டியில் சுவீடனிடம் தோற்று. 1958 ஆம் ஆண்டுக்கு பின்னர் இத்தாலியால் உலகக் கிண்ணத்தில் ஆட முடியாமல் போவது இதுவே முதல்முறை.  

இத்தாலி உலகக் கிண்ணம் செல்லாது, ஆனால் உலகக் கிண்ணம் இத்தாலியை நோக்கி வரும்.

மிலான் நகருக்கு அருகில் இருக்கும் எந்த அடையாளமும் அற்ற கட்டடம் ஒன்றில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகக் கிண்ணத்தை மெருகேற்றுவதை பார்க்கலாம். அந்த இத்தாலிய நிறுவனத்தில் உலோக தூசிக்கு மத்தியில் அசல் உலகக் கிண்ணத்தை சுத்தியலால் அறையும் சத்தங்கள் கேட்கும்.

pic-AFP-1-1.jpg1970 ஆம் ஆண்டு பிரேசில் அணி மூன்றாவது முறையாகவும் உலகக் கிண்ணத்தை வென்றதை அடுத்து அசல் உலகக் கிண்ண பிரேசில் அணியிடமே நிரந்தரமாக வழங்கப்பட்டது. இதனை அடுத்தே 1971 ஆம் ஆண்டு மிலான் புறநகர் பகுதியான பாடெர்னோ டுக்னானோவில் 12 ஊழியர்களை கொண்ட ஜி.டி.. பெர்டோனி என்ற சிறிய நிறுவனம் புதிய உலகக் கிண்ணத்தை வடிவமைத்து உருவாக்கியது.

நகல் கிண்ணத்தை நாம் ஒவ்வொரு நாளும் பார்க்கின்றபோதும் உண்மையான கிண்ணம் எம்மிடம் வரும்போது அந்த உணர்வே தனியானது என்கிறார் அந்த நிறுவனத்தின் இயக்குனரான வலன்டினா லோசா. இவரது பூட்டனாரே 1938 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார்

 

 

இந்த கிண்ணம், நிறுவனத்தின் அப்போதைய கலை இயக்குனரும் சிற்பியுமான சில்வியோ கஸ்ஸானிகாவால் உருவாக்கப்பட்டது. அதற்கு வலன்டினாவின் தந்தை ஜியோர்ஜியோவும் உதவினார். அவரே கிண்ணத்தின் உச்சியில் உலக உருண்டையை வைக்க ஆலோசனை வழங்கினார்.  

அசல், அசல் தான். இது சரியாக மோனாலிசா அல்லது அதன் பிரதி ஒன்றுக்கு இடையிலான வித்தியாசம் போன்றது. ஒருபோதும் அது ஒரே வகையான உணர்வை ஏற்படுத்தாது என்கிறார் லோசா வலன்டினா.

சொல்ல முடியாத உணர்வு

புதிய உலகக் கிண்ணத்தை 1974இல் முதல் முறை வென்று அதனை சுமந்த ஜெர்மனி அணித்தலைவர் ப்ரான்ஸ் பெக்கன்பேவரின் கையொப்பத்துடனான அவரது புகைப்படத்திற்கு முன்னால் நின்று கொண்டிருந்த லோசா, தமது நிறுவனத்திற்கு உலகக் கிண்ணத்தை உருவாக்க எவ்வாறு சந்தர்ப்பம் கிடைத்தது என்பதை ஞாபமூட்டுகிறார்.

உலகெங்கும் இருந்து 53 விண்ணப்பங்கள் வந்தபோதும் நாம் மாத்திரமே மாதிரி கிண்ணம் ஒன்றை வழங்கி இருந்தோம் என்று விளக்கினார். வெறுமனே வரைபடமன்றி அது முன்னால் இருக்கும்போது தாக்கம் அதிகமாக இருக்கும் என்றார்.  

 

38 சென்டிமீற்றர் நீளம் கொண்ட ஆறு கிலோ கிராமுக்கு அதிக சுத்தமான தங்கம் மற்றும்  பச்சை நிற கனிமப்பொருளைக் உடைய இந்த  கிண்ணம் ஒவ்வொரு உலகக் கிண்ண போட்டிகள் நெருங்கும்போதும் மெருகேற்றுவதற்காக அதன் சொந்த நிறுவனத்திற்கு FIFA அனுப்புகிறது.

நான்கு ஆண்டுகள் உலகெங்கும் பயணிப்பதால் அதன் மூலப்பொருட்கள் வெளிப்பட ஆரம்பிக்கின்றன. அவை சிறு சேதங்களாக இருக்கும். நாம் அதனை சரியான வடிவத்திற்கு கொண்டு வருகிறோம் என்று உலகக் கிண்ணத்தை மெருகேற்றும் பணிகளில் ஈடுபடும் எட்டு சிறப்பு பணியாளர்களில் ஒருவரான பீட்ரோ பிரம்பில்லா குறிப்பிட்டார்.  

கால்பந்தில் அதிக ஆர்வம் காட்டாத பிரம்பில்லா, உலகக் கிண்ணத்தை வென்ற அணி அந்த கிண்ணத்தை உயர தூக்கும்போது அதிக உணர்ச்சிவசப்படுபவராக உள்ளார்.  

எனது கையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கிண்ணம் என்பதால் அந்த தருணத்தில் எப்போதும் எனது கண்ணில் இருந்து கண்ணீர் கொட்டும். அது சொல்ல முடியாத உணர்வு என்று குறிப்பிட்டார்.

தாம் உலகக் கிண்ணத்தை வென்றதாக அதிகமானவர்களுக்கு கூற முடியது என்கிறார் அவர்.

 

அசலும் நகலும்

உலகக் கிண்ணத்தை மெருகேற்றுவது மட்டுமன்றி பெர்டோனி நிறுவனம் நகல் உலகக் கிண்ணத்தையும் உருவாக்குகிறது. இந்த கிண்ணமே உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிக்கு தம்முடன் வைத்துக் கொள்ள வழங்கப்படுகிறது.

நகல் கிண்ணம் பித்தளையால் உருவாக்கப்படுகிறது. வெட்டப்பட்டு பளபளப்பு ஊட்டப்படும் இந்த நகல் கிண்ணம் 24 கரட் தங்கத்தால் குளிப்பாட்டப்படுகிறது.

இதனை நாம் கண்களால் செய்கிறோம். ஒருமுறை நாம் பார்க்கும்போது அவள் அழகாக இருப்பதை கண்டு அது தானாக வெளிவரும் என்று சுமார் ஒரு தசாப்தத்திற்கு கிண்ணத்தை பளபளப்பாக வைத்திருப்பதற்காக அதன் மீது சாயம் பூசும் அஹமது அயித் சிதி அப்தல்காதர் குறிப்பிட்டார்.

உலகக் கிண்ணம் ஏதோ வித்தியாசமானதுஎன்று கூறிய அவர், நாம் இங்கு ஆபிரிக்கா, வளைகுடா, ஐரோப்பா, மத்திய அமெரிக்காவுக்காக பல கிண்ணங்களை தயாரிக்கிறோம். ஆனால் இது அசாதாரணமான தாக்கம் செலுத்தக் கூடியதாகவும் ஏனையவற்றிலிருந்து மாறுமட்டதாகவும் உள்ளது என்றார்.

 

 

இத்தாலி அணித்தலைவர் கியன்லுயிகி பபோனினால் முடியாமல் போனாலும் ஜூலை 15 ஆம் திகதி இந்த உலகக் கிண்ணத்தை நெய்மார், லியோனல் மெஸ்ஸி, ஹுகோ ல்லொரிஸ், சேர்ஜியோ ராமோஸ் அல்லது மானுவேல் நெவர் என்று ஒருவர் தலைக்கு மேல் உயர்த்திக் கொண்டாடப்போகிறார். என்றாலும் சில மாதங்களுக்குப் பின்னர் அந்த உலகக் கிண்ணம் மீண்டும் தனது வழக்கமான சீர்செய்யும் செயல்முறைக்காக இத்தாலியில் தனது சொந்த இடத்திற்கு திரும்பி வரும்.

இது எல்லோராலும் எவ்வளவுக்கு விரும்பப்படும் கிண்ணம் என்றால் அதனை வெல்லும் அணியினர் அதன் மீது அதிக உரிமை கொண்டாடி சேதப்படுத்துகிறார்கள். சில நேரங்களில் அதிகம் சீர்செய்யப்பட வேண்டிய நிலையிலேயே அது திரும்பி வருகிறது. 2006இல் இத்தாலி அதனை அதிகம் கொண்டாடியது என்று வலன்டினா லோசா குறிப்பிட்டார்.  

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

2018 உலகக் கிண்ணத்தை பிரேசில் கைப்பற்றும் ; பெலே நம்பிக்கை !

 

brazil-18-1200x630.jpg

ரியோ டி ஜெனிரோ, ஜன.16 –

ரஷ்யாவில் நடைபெறவுள்ள 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில், பிரேசில் ஆறாவது முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றும் என அந்த நாட்டின் முன்னாள் கால்பந்து சகாப்தம், பெலே தெரிவித்துள்ளார்.

world-cup-770x450-768x449.jpg

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பிரேசிலில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அந்த அணி, அரையிறுதி ஆட்டத்தில் 1-  7 என்ற கோல்களில் ஜெர்மனியிடம் தோல்வி கண்டது.எனினும் அந்த தோல்விக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பிரேசில் இம்முறை நிச்சயம் உலகக் கிண்ணத்தை வெல்லும் என பெலே கூறினார்.

ஒவ்வொரு முறையும் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி நடைபெறும்போது, பிரேசில் கிண்ணத்தை வெல்லகூடிய தேர்வு அணிகளில் ஒன்றாக விளங்குகிறது என பெலே தெரிவித்தார். இம்முறை நெய்மார், பிலிப்பே கோத்தின்ஹோ, பாலின்ஹோ, விலியன், கப்ரியல் ஜீசஸ், டக்லஸ் கோஸ்தா, லுக்காஸ் மவ்ரா போன்ற திறமையான ஆட்டக்காரர்கள் இடம்பெற்றிருப்பதால் பிரேசில் நிச்சயம் அதிரடியைப் படைக்கும் என பெலே நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

 

tite-768x432.jpg

பிரேசில் கால்பந்து அணியின் தற்போதைய பயிற்றுனர் தித்தே பலம் வாய்ந்த அணியை உருவாக்கி இருப்பதால் நிச்சயம் கிண்ணத்தை வெல்வோம் என பெலே சூளுரைத்துள்ளார். 1958,  1962, 1970, 1994, 2002 என ஐந்து முறை பிரேசில் உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.

http://www.anegun.com/blog/2018-உலகக்-கிண்ணத்தை-பிரேசில/

Link to comment
Share on other sites

ரசிக்க வைக்க காத்திருக்கும் ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து

 

crowdcol
17CHPMULU22ZHNIKISTADIUM

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெறும் மாஸ்கோவில் உள்ள லூஸ்னிக்கி மைதானத்தின் எழில் மிகு வெளிப்புற தோற்றம்.   -  AFP

17CHPMUMASCOT

உலகக் கோப்பை போட்டி சின்னம் ஸபிவகா.   -  AFP

17CHPMUWC-TROPHY
17chpmuLogo
 
27fcol
FB-01col
FB-02col
FB-03col
FB-04col
Football32%20Printing%20Okcol
crowdcol
crowdcol
17CHPMULU22ZHNIKISTADIUM

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெறும் மாஸ்கோவில் உள்ள லூஸ்னிக்கி மைதானத்தின் எழில் மிகு வெளிப்புற தோற்றம்.   -  AFP

 

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை ரஷ்யாவில் நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பிய கண்டத்தில் உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. கடைசியாக 2006-ம் ஆண்டு ஜெர்மனி நாடு உலகக் கோப்பையை சிறப்பாக நடத்தியிருந்தது. தற்போது முதன்முறையாக கிழக்கு ஐரோப்பியாவில் அமைக்கப்பட்டுள்ள மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அணிகளின் பயண நேரத்தை சமாளிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

உலகக் கோப்பை திருவிழாவை ரஷ்யா நடத்துவதுவே இதுவே முதன்முறை. போட்டியை நடத்தும் உரிமை பெற்ற நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் வாயிலாகவே தேர்வாகி உள்ளன. இந்த 32 அணிகளில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி உள்ளிட்ட 20 அணிகள் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை மற்றும் அதற்கு முந்தைய தொடர்களிலும் களமிறங்கி உள்ளன. ஐஸ்லாந்து மற்றும் பனாமா அணிகள் முதன்முறையாக விளையாட தகுதி பெற்றுள்ளன. இந்த உலகக் கோப்பை திருவிழாவில் மொத்தம் 64 ஆட்டங்கள் 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் நடத்தப்பட உள்ளது.

இறுதிப் போட்டி ஜூலை 15-ம் தேதி மாஸ்கோவில் உள்ள லூஸ்னிக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இந்த மைதானம்தான் மிகப்பெரியது. இங்கு 81 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியானது 2021-ம் ஆண்டு நடைபெறும் ஃபிபா கான்ஃபெடரேஷன் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும்.

2018-ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்துவதற்கான உரிமையை வழங்குதற்கான நடைமுறைகளை ஃபிபா கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. இந்த திருவிழாவை நடத்துவதற்கான உரிமையை பெறுவதற்காக தொடக்கத்தில் 9 நாடுகள் போட்டியிட்டன. ஆனால் தொடக்க நிலையிலேயே மெக்சிகோ விலகிக் கொண்டது. தொடர்ந்து இந்தோனேஷியாவின் விண்ணப்பத்தை ஃபிபா நிராகரித்தது. போட்டியை நடத்துவதற்காக அந்த நாட்டு அரசின் ஆதரவு கடிதம் இல்லாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

உரிமம் வழங்குவற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் ஐரோப்பிய கால்பந்து சங்க கூட்டமைப்புகளை சேராத ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளும் பின்வாங்கின. இதனால் இறுதிகட்டத்தில் 4 நாடுகள் மட்டுமே இருந்தன. இதில் இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் தனித்தனியாக போட்டியை நடத்த உரிமம் கோரிய நிலையில் நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகள் இணைந்தும், போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் நாடுகள் இணைந்தும் போட்டியை நடத்த உரிமமம் கோரின. இதைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி சூரிச் நகரில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஃபிபா செயற்குழுவைச் சேர்ந்த 22 உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

முதல் சுற்றில் 9 வாக்குகளும், 2-வது சுற்றில் 13 வாக்குகளும் பெற்ற ரஷ்யா போட்டியை நடத்தும் உரிமை பெற்றது. போர்ச்சுக்கல் -ஸ்பெயின் அணிகளும் இரு சுற்றிலும் தலா 7 வாக்குகளும், பெல்ஜியம் - நெதர்லாந்து நாடுகள் முதல் சுற்றில் 4 வாக்குகளும், 2-வது சுற்றில் 2 வாக்குகளும் பெற்றன. இங்கிலாந்து முதல் சுற்றில் 2 வாக்கு பெற்ற நிலையில் அடுத்த சுற்றில் ஒரு வாக்கு கூட பெறவில்லை.

உலகக் கோப்பை நடத்தும் உரிமையை ரஷ்யா பெற்றதிலும் சர்ச்சை இல்லாமல் இல்லை. அந்த நாட்டுக்கு ஆதரவாக ஒட்டளிக்க செயற்குழுவில் உள்ள ஃபிபா உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக இங்கிலாந்து பகிரங்கமாக குற்றம் சாட்டியது. ரஷ்யாவுக்கு போட்டியை நடத்தும் உரிமையை வழங்குவது என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும் புகார் கூறியது. ஆனால் இவை அனைத்துக்கும் எந்வித ஆதாரமும் இல்லை என பின்னர் ஃபிபா அறிவித்தது.

உலகக் கோப்பை தொடரின் ஆட்டங்கள் மாஸ்கோ லூஸ்னிக்கி, ஸ்பார்டக், செயின்ட் பீட்டர்ஸ்பர்க், சோச்சி பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம், சமரா கோஸ்மோஸ், ரோஸ்டவ், நிஷ்னி நோவ்கோரோட், சரன்ஸ்க், யெகாடெரின்பர்க், கலினின்கிராட், வோல்கோகிராட், கசான் ஆகிய 12 மைதானங்களில் நடைபெறுகிறது. இதில் லூஸ்னிக்கி, யெகாடெரின்பர்க், சோச்சி பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம் ஆகிய மைதானங்கள் புனரமைக்கப்பட்டவையாகும். மற்ற 9 மைதானங்களும் புதிதாக கட்டப்பட்டுள்ளன. மைதான செலவுக்காக மட்டும் சுமார் ரூ.80 ஆயிரம் கோடியை ரஷ்யா செலவழித்துள்ளது.

64 ஆட்டங்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முதல் ஆட்டத்தில் ஜூன் 14-ம் தேதி போட்டியை நடத்தும் ரஷ்யா, சவுதி அரேபியாவுடன் மோதுகிறது. இந்தத் தொடரின் மொத்த பரிசுத்தொகை சுமார் ரூ.2,700 கோடி ஆகும். இது கடந்த ஆண்டைவிட 12 சதவீதம் அதிகம். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ரூ.257 கோடியை தட்டிச் செல்லும்.

 

முதன்முறையாக

உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இம்முறைதான் ஃபிபாவில் உறுப்பினர்களாக உள்ள 209 நாடுகளும் தகுதி சுற்றில் பங்கேற்றன. ஆனால ஜிம்பாப்வே, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் தங்களது முதல் ஆட்டத்துக்கு முன்னதாக தகுதியிழப்பு செய்யப்பட்டது. அதேவேளையில் கிப்ரால்டர், கொசோவா அணிகள் ஃபிபா கூட்டமைப்பில் 2016-ம் ஆண்டு மே 13-ம் தேதிதான் இணைந்தன. அந்த நேரத்தில் தகுதி சுற்று ஆட்டங்களுக்கான அட்டவணை ஏற்கெனவே வெளியாகியிருந்தது. அனால் ஐரோப்பிய கண்டங்களுக்கு இடையிலான தகுதி சுற்றில் இவர்கள் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.

 

சிறிய நாடுகள்

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் சிறிய நாடுகளான ஐஸ்லாந்து மற்றும் பனாமா ஆகியவை உலகத்தின் பார்வையை தங்களது மீது குவியச் செய்துள்ளது. ஐஸ்லாந்து நாட்டின் மக்கள் தொகை 3,50,710 தான். அதேவேளையில் பனாமா நாட்டின் மக்கள் தொகை 40,98,135.

 

28 வருடங்களுக்கு பிறகு

எகிப்து அணி 28 வருடங்களுக்கு பிறகு இம்முறைதான் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளது. அந்த அணி கடைசியாக 1990-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் விளையாடியிருந்தது. இதேபோல் மொராக்கோ அணி 1998-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது களமிறங்குகிறது. பெரு அணி 36 வருட இடைவெளிக்கு களத்தில் கால்பதிக்கிறது. அந்த அணி கடைசியாக 1982-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பங்கேற்றிருந்தது.

2002-ம் ஆண்டு கால் இறுதி வரை முன்னேற்றம் கண்டிருந்த செனகல் அணி 2-வது முறையாக தற்போதுதான் தகுதி பெற்றுள்ளது. நார்டிக் நாடுகளை சேர்ந்த டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியவையும், அரபு நாடுகளான எகிப்து, சவுதி அரேபியா, துனிசியா, மொராக்கோ ஆகியவை கூட்டாக தகுதி பெற்றுள்ளது இதுவே முதன்முறை.

 

இத்தாலி இல்லை

4 முறை சாம்பியனான இத்தாலி இந்தத் தொடருக்கு தகுதி பெறாததே ஒருவகையில் ஏமாற்றமே. அந்த அணி பங்கேற்ற 1958-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக உலகக் கோப்பையில் விளையாடி வந்த நிலையில் முதன்முறையாக தற்போதுதான் வெளியே இருந்து போட்டியை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதேபோல் 3 முறை 2-வது இடம் பிடித்த நெதர்லாந்து அணியும் தகுதி பெறவில்லை. இந்த பட்டியலில் 2017-ம் ஆண்டு ஆப்பிரிக்க கோப்பை சாம்பியனான கேமரூன், இருமுறை கோபா அமெரிக்கா சாம்பியன் மற்றும் 2017-ம் ஆண்டு கான்ஃபெடரேஷன் கோப்பையில் இறுதி போட்டி வரை கால்பதித்த சிலி, 2016-ம் ஆண்டு ஓசியானா கோப்பை சாம்பியனானா நியூஸிலாந்து, 2017-ம் ஆண்டு கான்கேப் கோல்டு கோப்பையை வென்ற அமெரிக்கா நாடுகளும் தகுதி பெறத் தவறின. மேலும் கடந்த 3 தொடர்களிலும் விளையாடிய கானா, ஐவரி கோஸ்ட் ஆகிய அணிகளும் இம்முறை தகுதி பெறாமல் போனது.

 

32 நாடுகள்

வழக்கம் போல் இம்முறையில் ஐரோப்பிய கண்டங்களை சேர்ந்த நாடுகளே அதிகளவில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளன. போட்டியை நடத்தும் ரஷ்யா, நடப்பு சாம்பியனான ஜெர்மனி, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுக்கல், செர்பியா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து ஆகிய 14 நாடுகள் களமிறங்குகின்றன.

தென் அமெரிக்க கண்டங்களில் இருந்து அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, பெரு, உருகுவே ஆகிய 5 அணிகளும், ஆப்பிரிக்க கண்டங்களில் இருந்து எகிப்து, மொராக்கோ, நைஜீரியா, செனகல், துனிசியா ஆகிய நாடுகளும், ஆசிய கண்டத்தில் இருந்து ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவுதி அரேபியா, தென் கொரியா ஆகிய நாடுகளும் வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கூட்டமைப்புகளை சேர்ந்த கோஸ்டா ரிகா, மெக்சிகோ, பனாமா ஆகிய நாடுகளும் என மொத்தம் 32 அணிகள் கால்பந்து யுத்தத்தில் களமிறங்குகின்றன. இதில் போட்டியை நடத்தும் ரஷ்யா மட்டுமே ஃபிபா தரவரிசை பட்டியலில் பின்தங்கிய (65-வது) இடத்தில் உள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23909206.ece?homepage=true

Link to comment
Share on other sites

2018 ரஷிய உலகக்கோப்பை: கால் பதித்த அணிகள் கால்பந்தில் சாதிக்குமா?

 

 
foot-ball

 

2018ம் ஆண்டின் ரஷிய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூலை 15ம் தேதி வரை நடைபெறுகிறது.1930ம் ஆண்டு தொடங்கி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் உலகளவில் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளது. கால்பந்து போட்டிகளை காண்பதற்காக இரவு நேரங்களில் கண் விழித்து பார்க்கும் அளவுக்கு உலகக்கோப்பை கிரிக்கெட்டை விட பிரபலமான தொடர் இந்த உலகக்கோப்பை கால்பந்து. 

இந்த உலகக்கோப்பையில் கவனிக்கத்தக்கது எதுவென்றால் ஐஸ்லாந்து மற்றும் பனாமா அணிகள் தான். கால்பந்து வரலாற்றில் இந்த இரு அணிகளும் முதன்முறையாக பிபா உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

ஐஸ்லாந்து:

பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு முதன்முறையாக தகுதிபெற்றுள்ள ஐஸ்லாந்து அணி, உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் சிறிய நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே சுமார் 3,50,000 தான். முன்னதாக, சுமார் 13 லட்ச மக்கள் தொகையை கொண்ட டிரினாட் டொபாகோ அணியே உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற மிகச் சிறிய கால்பந்து அணி என்ற பெருமையை பெற்றிருந்தது.  

தகுதிச்சுற்றில் 10 போட்டிகளில் விளையாடிய ஐஸ்லாந்து அணி 22 புள்ளிகள் பெற்று உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது. 

உலகக்கோப்பை போட்டியில் இந்த அணி குரூப் டி-யில் அர்ஜென்டினா, குரோஷியா மற்றும் நைஜீரியா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இதில், பலம் வாய்ந்த அர்ஜென்டினாவுடனான போட்டி மிகவும் ஐஸ்லாந்துக்கு மிகவும் கடினமாக இருக்கும். இந்த பிரிவின் மற்ற இரு அணிகள் ஐஸ்லாந்துக்கு கடினமாக இல்லாவிடிலும் சவாலான அணியாக திகழலாம். 

இந்த அணியின் பயிற்சியாளர் ஹெய்மிர் ஹால்கிரிம்சன் பல் மருத்துவராக இருப்பவர். இவரது பயிற்சியின் கீழ் தான் அந்த அணி உலகக்கோப்பைக்கு தகுதிபெற்றது. இதே வேகத்தில் அந்த அணி உலகக்கோப்பையிலும் நாக் அவுட் சுற்றுகளுக்கு தகுதி பெற்று சாதனை படைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது.

முதல் போட்டி: அர்ஜென்டினா - 16/06/18
2வது போட்டி: நைஜீரியா - 22/06/18
3வது போட்டி: குரோஷியா - 26/06/18

பனாமா:

இந்த உலகக்கோப்பை தொடரில் அறிமுக அணியாக களமிறங்கும் 2வது அணி பனாமா. பல ஆண்டு கால முயற்சிகளுக்குப் பிறகு முதன்முறையாக பிபா உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது பனாமா அணி. இந்த தகுதியை அந்த எளிதில் ஒன்றும் பெறவில்லை. 

மத்திய அமெரிக்க நாடான பனாமா தகுதிச்சுற்று போட்டியில் கோஸ்டா ரிகாவுக்கு எதிரான போட்டி ஒன்றில் 2-1 என வெற்றி பெற்று உலகக்கோப்பைக்கு தகுதிபெற்றது. இந்த போட்டியில் முதலில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் தான் இருந்தது. பின்னர், போட்டி முடிவதற்கு 2 நிமிடங்களே இருந்த நிலையில் பனாமாவின் கேப்ரியல் டோர்ரஸ் கோல் அடித்தார். 

அந்த பந்து கோல் எல்லைக் கோட்டை தொடவில்லை என்று கூறி கோஸ்டா ரிகா அணியினர் நடுவரிடம் முறையிட்டனர். ஆனால், நடுவர் அதனை கோல் என்று அறிவித்தார். இந்த சர்ச்சை கோல் தான் பனாமா அணியின் முயற்சிக்கு பலன் தேடி தந்து  உலகக்கோப்பைக்கு முதன்முறையாக தகுதி பெற வைத்தது. 

பனாமா அணி உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றதை அடுத்து அந்த நாடு அதனை கொண்டாடும் வகையில் தேசிய விடுமுறை அறிவித்தது. இந்த அணியின் நுழைவு காரணம், அமெரிக்காவால் 1986க்கு பிறகு முதன்முறையாக உலகக்கோப்பைக்கு தகுதிபெற முடியாமல் போனது.     

உலகக்கோப்பை கால்பந்தில் பனாமா அணி பெல்ஜியம், இங்கிலாந்து, துனிஷியா ஆகிய அணிகளுடன் ஜி குரூப்பில் இடம்பெற்றுள்ளது. 

முதல் போட்டி: பெல்ஜியம் - 18/06/18
2வது போட்டி: இங்கிலாந்து - 24/06/18
3வது போட்டி: துனிஷியா - 28/06/18

http://www.dinamani.com/sports/2018/may/17/2018-ரஷிய-உலகக்கோப்பை-கால்-பதித்த-அணிகள்-கால்பந்தில்-சாதிக்குமா-2921578.html

Link to comment
Share on other sites

இங்கிலாந்துக் குழாமில் ஹார்ட் இல்லை
 
 

image_c40553944d.jpg

ரஷ்யாவில் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துகான இங்கிலாந்தின் 23 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தின் கோல் காப்பாளராக கடந்த காலங்களில் கடமையாற்றிய ஜோ ஹார்ட் குழாமில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், இங்கிலாந்தின் அண்மைய போட்டிகளில் விளையாடியிருக்காத பின்கள வீரர் கரி காஹில், குழாமுக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஆர்சனலின் அண்மைய போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்டிருந்த மத்தியகள வீரர் ஜக் வில்ஷயர் குழாமில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை.

குழாம்:

கோல் காப்பாளர்கள்: ஜக் புட்லாண்ட், ஜோர்டான் பிக்போர்ட், நிக் போப்.

பின்கள வீரர்கள்: ட்ரெண்ட் அலெக்ஸான்டர்-அர்னோல்ட், கரி காஹில், பபியான் டெல்ப், பில் ஜோன்ஸ், ஹரி மக்குயிரி, டனி றோஸ், ஜோன் ஸ்டோன்ஸ், கெய்ரான் ட்ரிப்பியர், கைல் வோக்கர், அஷ்லி யங்.

மத்தியகள வீரர்கள்: டெலே அல்லி, எரிக் டயர், ஜோர்டான் ஹென்டர்சன், ஜெஸி லிங்கார்ட், றுபென் லொவ்டஸ்-சீக்.

முன்கள வீரர்கள்: ஹரி கேன், மார்க்கஸ் றஷ்போர்ட், ரஹீம் ஸ்டேர்லிங், ஜேமி வார்டி, டனி வெல்பக்.

தயார்நிலை வீரர்கள்: லூயிஸ் குக், டொம் ஹீட்டன், அடம் லலனா, ஜேக் லிவர்மோர், ஜேம்ஸ் டர்கெளஸ்கி.

துனீஷியாவுக்கெதிராக அடுத்த மாதம் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள போட்டியுடன் தமது உலகக் கிண்ணத் தொடரை இங்கிலாந்து ஆரம்பிக்கின்றது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/இங்கிலாந்துக்-குழாமில்-ஹார்ட்-இல்லை/44-216114

Link to comment
Share on other sites

பயத்தில் இருக்கிறேன்

 

 
18CHPMUNEYMAR

நெய்மர்   -  REUTERS

ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடர் தொடங்க இன்னும் 26 நாட்களே உள்ள நிலையில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மரின் உடல் தகுதியை பெறுவதில் கடும் போராட்டங்களை சந்தித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் பிரெஞ்சு லீக் தொடரில் பங்கேற்ற போது காலில் முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள அவர், தற்போது குணமடைந்து உடல் தகுதியை பெறுவதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் கவனம் செலுத்தி வருகிறார். அவர் விரைவில் முழு உடல் தகுதியை பெற்று அணியை வழிநடத்த வேண்டும் என பிரேசில் நாட்டு ரசிகர்களும் வேண்டியபடி உள்ளனர்.

இந்நிலையில் நெய்மர் கூறும்போது, “உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் நான் களமிறங்க வேண்டும் என்பதில் என்னை விட மக்கள் அதிக ஆர்வமாக உள்ளனர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதை விட நான் ஆர்வமாக இருக்கிறேன். காயத்திலிருந்து மீண்டு திரும்ப வந்ததில் அனைவரையும்விட நான் பதற்றமாக இருக்கிறேன். அதைப் போலவே மற்ற அனைவரையும்விட நான் பயத்தில் இருக்கிறேன்.

 

இது எனக்கு மிகவும் கடினமான நேரம். ஏனெனில் உலகக் கோப்பை எனும் கனவை நெருங்கும் வேளையில் கடினமான தருணங்களை கடக்க வேண்டிய நிலையில் உள்ளேன். எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ள கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது நாட்டுக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுக்க மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது என குழந்தைப் பருவம் முதல் நான் பெற்றிருக்கும் கனவு. இதுதான் எனது குறிக்கோள். இது எனது கோப்பை என்று நம்புகிறேன்” என்றார்.

26 வயதான நெய்மர் கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் கழுத்து பகுதியில் காயம் அடைந்தார். இதனால் ஜெர்மனிக்கு எதிரான அரை இறுதியில் அவரால் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. நெய்மர் களமிறங்காத அந்த ஆட்டத்தில் ஜெர்மனி 7-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை பந்தாடியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகக் கோப்பை தொடருக்கான அணியை பிரேசில் அறிவித்தது. 23 பேர் கொண்ட இந்த அணியில் நெய்மர் பிரதான வீரராக இடம் பெற்றிருந்தார். 6-வது முறையாக மகுடம் சூட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டும் பிரேசில் நெய்மரின் முழு உடல் தகுதிக்காக இன்னும் காத்திருக்கிறது. இதற்கிடையே பிஎஸ்ஜி கிளப் அணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நெய்மர் பயிற்சியை தொடங்கி உள்ளார். போட்டியில் விளையாடும் அளவுக்கான உடற் தகுதியை அவர் பெறும் பட்சத்தில் ஜூன் 3-ம் தேதி குரோஷியாவுக்கு எதிராக லிவர்பூல் நகரில் நடைபெறும் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கக்கூடும்.

உலகக் கோப்பை தொடரில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரேசில் தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 17-ல் சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது. இதே பிரிவில் கோஸ்டா ரிகா, செர்பியா அணிகளும் உள்ளன. -

http://tamil.thehindu.com/sports/article23921996.ece

Link to comment
Share on other sites

15 நாட்கள் கப்பல் பயணம்

 

Tablecol

 

18CHPMUFRENCHNATIONAL

உருகுவே உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காக கோன்ட் வெர்டி கப்பலில் பயணம் செய்த பிரான்ஸ் அணியினர். (கோப்பு படம்)   -  AFP

17CHPMUMASCOT
17chpmuLogo
26col
Tablecol
18CHPMUFRENCHNATIONAL

உருகுவே உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காக கோன்ட் வெர்டி கப்பலில் பயணம் செய்த பிரான்ஸ் அணியினர். (கோப்பு படம்)   -  AFP

1930-ல்தான் உலகக் கோப்பை கால்பந்து தொடரை ஃபிபா அறிமுகப்படுத்தியது. 1924 மற்றும் 1928-ல் ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வென்ற உருகுவே இந்தத் தொடரை நடத்தியது. தகுதி சுற்று போட்டிகள் இல்லாமல் ஃபிபா அமைப்பில் உள்ள 41 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 13 நாடுகள்தான் பங்கேற்றன. எகிப்து அணி கலந்து கொள்ள இருந்த நிலையில் அந்த அணி புறப்பட்ட வந்த கப்பல் மோசமான வானிலை காரணமாக உருகுவேவை வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டது. கடைசி நேரத்தில் எகிப்து விலகியதால் 13 அணிகளை கொண்டு தொடர் நடத்தப்பட்டது.

ஐரோப்பாவில் உள்ள ஏராளமான நாடுகளில் கால்பந்து அணிகள் இருந்த போதிலும், நீண்ட தூர பயணம் காரணமாக 4 அணிகளே கலந்து கொண்டன. உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது பிரான்ஸ் அணிதான். அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது. பிரான்ஸ் வீரர் லூசியன் லாரன்ட் உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் கோலடித்தவர் என்ற பெருமையை பெற்றார்.

 

இந்த உலகக் கோப்பையில் கோன்ட் வெர்டி என்ற நீராவி கப்பல் பயணம் பிரசித்தி பெற்றதாக அமைந்தது. பிரான்ஸ் நாட்டில் இருந்து புறப்பட்ட இந்த கப்பலில் ருமேனியா, பெல்ஜியம், பிரேசில் மற்றும் பிரான்ஸ் அணிகள் சுமார் 15 நாட்கள் பயணம் செய்து போட்டி நடைபெற்ற உருகுவே தலைநகர் மான்டிவிடியோவை வந்தடைந்தனர். இந்தத் தொடரில் கடைசி கட்டத்தில் பங்கேற்க முடிவு செய்த யுகோஸ்லோவியா ஒருவழியாக படாதபாடுப்பட்டு உருகுவேவை வந்தடைந்தது.

அந்த அணியில் இடம் பெற்றிருந்த வீரர்களின் சராசரி வயது 22 ஆகவே இருந்த போதிலும் பயணக்களைப்பு அவர்களது ஆட்டத்திறனை பாதிக்கவில்லை. சிறப்பாக விளையாடிய அந்த அணி அரை இறுதிக்கு முன்னேறியது. இதனால் ஐரோப்பிய கண்டத்தில் இருந்து அரை இறுதியில் கால்பதித்த ஒரே அணி என்ற பெருமையை பெற்றது. ஆனால் அரை இறுதியில் யுகோஸ்லோவியா 1-6 என்ற கோல் கணக்கில் உருகுவேயிடம் வீழ்ந்தது. ஆனால் இந்த ஆட்டம் உருகுவேக்கு சாதகமாக இருக்கும் வகையில் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மற்றொரு அரை இறுதியில் அர்ஜென்டினா 6-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை பந்தாடியது. இறுதிப் போட்டியில் பரமவைரிகளான அர்ஜென்டினா - உருகுவே மோதின.

1928 ஒலிம்பிக் போட்டியின் இறுதிச்சுற்றில் உருகுவே 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்ததால் இந்த ஆட்டம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. போட்டியை காண 93 ஆயிரம் ரசிகர்கள் குவிந்தனர். இறுதி ஆட்டத்தில் விளையாடப்படும் பந்தை யார் வழங்குவது என்பதில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து முதல் பாதியில் அர்ஜென்டினா வழங்கிய பந்தும், 2-வது பாதியில் உருகுவே வழங்கிய பந்தும் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆட்டத்தில் உருகுவே 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மகுடம் சூடியது.

http://tamil.thehindu.com/sports/article23922002.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.