Jump to content

பிரிவினைவாத அமைப்புகளுக்கு என்றும் ஆதரவு கிடையாது: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதி


Recommended Posts

பிரிவினைவாத அமைப்புகளுக்கு என்றும் ஆதரவு கிடையாது: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதி

 

 
22-JUSTIN

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலில் தமது குடும்பத்தினருடன் வழிபடும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.   -  PTI

இந்தியா மட்டுமின்றி உலகின் வேறு எந்தப் பகுதியில் செயல்படும் பிரிவினைவாத அமைப்புகளுக்கும் தனது நாடு என்றும் ஆதரவளிக்காது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி போராடி வரும் காலிஸ் தான் பிரிவினைவாத அமைப்புக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், அவரது இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 17-ம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். இந்தியாவில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பஞ்சாப் மாநிலத்துக்கு நேற்று சென்றார். அப்போது, அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலுக்கு தமது குடும்பத்தினருடன் சென்று அவர் வழிபட்டார்.

இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்து ஜஸ்டின் ட்ரூடோ ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்வில், பஞ்சாப் உள்ளாட்சித் துறை அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, கனடா ராணுவ அமைச்சர் ஹர் ஜித் சஜ்ஜன் ஆகியோர் உடனி ருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, இந்தியாவில் செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புக்கு கனடாவிலிருந்து செயல்படும் சில சக்திகள் ஆயுத, நிதியுதவி அளித்து வருவதாக ஜஸ்டின் ட்ரூடோவிடம் அமரீந்தர் சிங் தெரிவித்தார். மேலும், பஞ்சாபில் உள்ள இளைஞர்களையும், குழந்தைகளையும் தீவிரவாதத்தின் பாதையில் அந்த சக்திகள் அழைத்துச் செல்ல முயற்சிப்பதாகவும், இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமரீந்தர் சிங் வலியுறுத்தினார்.

இதனை கவனமாகக் கேட்டறிந்த ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியா மட்டுமின்றி உலகின் வேறு எந்தப் பகுதியில் செயல்படும் பிரிவினைவாத அமைப்புகளுக்கும் கனடா ஆதரவளிக்காது என திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், பிரிவினைவாத அமைப்புகளால் உருவாகும் ஆபத்தை தாம் உணர்ந்துள்ளதாகவும் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இதையடுத்து, இந்தியா - கனடா இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து அமரீந்தர் சிங்கும், ஜஸ்டின் ட்ரூடோவும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, இந்தியாவுடன் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட தாம் ஆர்வமுடன் இருப்பதாகவும் ட்ரூ டோ தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/india/article22821805.ece?homepage=true

Link to comment
Share on other sites

வைரலாகும் பழைய படம்! சர்ச்சையில் கனடா பிரதமரின் மனைவி

 
 

னடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ இந்தியா வருகை தந்துள்ளார். குடும்பத்துடன் இந்தியாவில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் அவருக்கு இந்திய அரசு முறையான வரவேற்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசுமுறை இல்லாத தனிப்பட்ட சுற்றுப்பயணம் என்றே இது சொல்லப்படுகிறது. காலிஸ்தான் பிரிவினைவாத சக்திகளுக்கு உதவி வரும் கனடாவில் செயல்பட்டு வரும் சீக்கிய அமைப்புகளுக்கு ஜஸ்டின் ஆதரவாக இருப்பதால் மத்திய அரசு பாராமுகம் காட்டுகிறது எனவும் கூறப்படுகிறது. 

காலிஸதான் பிரிவினைவாதியுடன் கனடா பிரதமர் மனைவி

 

இந்நிலையில், காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான ஜஸ்பால் அத்வாலுடன் மும்பையில் பிப்ரவரி 20-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் கனடா பிரதமரின்  மனைவி ஷோபியா ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்த பத்திரிகைககளும் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளன. ஏ.என்.ஐ செய்தி நிறுவனமும் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட சர்வதேச சீக்கிய இளைஞர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த அத்வால், 1986-ம் ஆண்டு பஞ்சாப் அமைச்சர் மல்கிரத் சிங் சித்துவை கனடாவின் வான் கூவர் நகரில் வைத்துக் கொலை செய்ய முயன்ற வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர். இவருடன் சேர்த்து நான்கு பேர் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றனர். கனடா உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் அம்ஜீத் ஜோகியைச் சந்தித்து அவருடனும் அத்வால் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இந்தப் புகைப்படத்தையும் ஏ.என்.ஐ வெளியிட்டுள்ளது.

 

டெல்லியில் கனடா தூதரகம் சார்பில் ஜஸ்டினுடன் இரவு விருந்தில் பங்கேற்க ஜாஸ்பால் அத்வாலுக்கு அழைப்பும் விடுத்து, பின்னர் அதை ரத்து செய்துள்ள தகவல் உள்ளது. இதற்கிடையே, பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்கை நேற்று ஜஸ்டின் சந்தித்துப் பேசினார். அப்போது, 'எந்த பிரிவினைவாத இயக்கங்களுக்கும் கனடா நாடு ஆதரவளிக்காது' என்று உறுதியளித்தார். 

https://www.vikatan.com/news/tamilnadu/117166-khalistan-separatist-jaspal-atwal-seen-with-trudeau-family.html

Link to comment
Share on other sites

காலிஸ்தான் ஆதரவாளருக்கு விடுத்த அழைப்பை திரும்பப் பெற்றது கனடா

இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடனான விருந்தில் கலந்து கொள்ள சீக்கிய பிரிவினைவாதக் குழுவை சேர்ந்தவர் என்று கூறப்படும் ஜஸ்பால் அட்வாலுக்கு விடுத்த அழைப்பை கனடா திரும்பப் பெற்றுள்ளது.

காலிஸ்தான் ஆதரவாளருக்கு விடுத்த அழைப்பை திரும்ப பெற்றது கனடாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள ட்ரூடோ, "ஜஸ்பாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கக் கூடாது" என தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் எனினும் கனடா நாட்டு குடியுரிமை பெற்றவர் ஜஸ்பால் அட்வால், 1986ஆம் ஆண்டு இந்திய அமைச்சர் ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டவர்.

தற்போது தடை செய்யப்பட்டிருக்கும் சீக்கிய பிரிவினைவாத குழுவின் உறுப்பினராக அவர் இருந்தார் என அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதற்கு முன்னதாக அவர் ட்ரூடோவின் மனைவி சோஃபியுடன் புகைப்படம் ஒன்றில் காணப்பட்டார்.

அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து தீவிரமாக தாங்கள் கருத்தில் கொள்வதாகவும், இந்த விஷயம் தங்களின் கவனத்திற்கு வந்தவுடன் அழைப்பை உடனடியாக திரும்பப் பெற்றுள்ளதாகவும், டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார் ட்ரூடோ.

இந்திய சுற்றுப்பயணம் வந்திருக்கும் ட்ரூடோ, சீக்கிய பிரிவினைவாத குழுவுடன் இலகுவான போக்கை கடைபிடிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

காலிஸ்தான் ஆதரவாளருக்கு விடுத்த அழைப்பை திரும்ப பெற்றது கனடாபடத்தின் காப்புரிமைREUTERS

தங்கள் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் "இந்த அழைப்பிற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாகவும்" அவர் தெரிவித்தார்.

கனடாவில் தொழிலதிபராக இருக்கும் ஜஸ்பால் அட்வால், தனியாக இந்தியா வந்துள்ளார். அவருக்கும் இந்தியா வந்த கனடா அதிகாரிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவருக்கு விசா கிடைத்தது எப்படி என்று விசாரணை மேற்கொள்ளப்படும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"தான் மும்பையில் இருப்பதால் கனடாவின் உயர் ஆணையரால் கொடுக்கப்படும் விருந்தில் கலந்துக் கொள்ள போவதில்லை" என கனடா ஊடகத்திடம் ஜஸ்பால் தெரிவித்துள்ளார்.

இந்திய அமைச்சர் மல்கியாத் சிங் சித்து கனடாவிற்கு விஜயம் மேற்கொண்ட போது ஜஸ்பால் மற்றும் மேலும் மூவர் அவரை சுட முயற்சி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

அமைச்சர் இரண்டு முறை தாக்கப்பட்டு உயிர் பிழைத்தார். பின்பு இந்தியாவில் 1991ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.

தாக்குதலின் போது ஜஸ்பால் அட்வால் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்தார் என சிபிசி செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.பின்பு அது இந்தியா மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகளில் தடை செய்யப்பட்டது.

முன்னதாக இந்தியா வந்த கனடா பிரதமர் சரியான முறையில் வரவேற்கப்படவில்லை என ஊகங்கள் இருந்த நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் பெருமளவில் சீக்கியர்கள் வசிக்கின்றனர். கனடாவின் அமைச்சரவையில் நான்கு சீக்கிய அமைச்சர்கள் உள்ளனர்.

மேலும் காலிஸ்தான் இயக்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுடன் இணக்கத்துடன் செயல்படுவதாக ட்ரூடோ நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

ட்ரூடோ இந்திய வந்த ஒரு வாரத்திற்கு பிறகு மோதி அவரை இன்று சந்தித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/india-43166318

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.