Jump to content

மாலைதீவு அரசியல் குழப்ப நிலையின் எதிரொலி – சீன யுத்தக் கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் நிலைநிறுத்தம்


Recommended Posts

மாலைதீவு அரசியல் குழப்ப நிலையின் எதிரொலி – சீன யுத்தக் கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் நிலைநிறுத்தம்

Chinese-warships-3.jpg?resize=768%2C435
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாலைதீவில் இடம்பெற்று வரும் அரசியல் குழப்ப நிலைமையின் எதிரொலியாக சீன யுத்தக் கப்பல்கள், இந்து சமுத்திரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்தின் கிழக்குப் பகுதியில் சுமார் பதினொரு கப்பல்கள் தற்போதைக்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன. சீன செய்தி ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

மாலைதீவில் தற்பொழுது அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில் எதற்காக இந்த சீன கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன, எவ்வளவு காலம் கடலில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. மாலைதீவு விவகாரத்தில் சீனாவைப் போன்றே இந்தியாவும் அதிக கரிசனை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Chinese-warships-2.jpg?resize=518%2C388Chinese-warships.jpg?resize=715%2C476

http://globaltamilnews.net/2018/67711/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியா தனது கவட்டுக்கிடையில் கூட வாலை சுருட்டிக்கொண்டிருக்க முடியாத நிலை, அமெரிக்காவின் ஆதரவும் உதவியும் இல்லாமல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு விரைவாக எமை கொன்றவர்களின் வல்லரசு கனவு தரைமட்டம்ஆகும் என்று கனவு கண்டு இருக்க மாட்டார்கள் .

இதை விட கொடிய கதையும் உண்டு 

 

இந்திய முன்னாள் ராணுவ அதிகாரியின் மகள் சாலையில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் லக்னோவில் உள்ள இந்திராநகர் பகுதியில் மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது மேஜர் பிபின் சந்திராவின் குடும்பம்.

திடீரென ஒருநாள், 2004-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் மேஜர் மற்றும் அவரது மனைவி பலியாகிவிட, அனாதையாக கதறி அழுதுள்ளனர் பிபினின் குழந்தைகள்.

மேஜர் இறந்த ஒரு சில தினத்தில் வீட்டிற்கு வழங்கப்பட்டு வந்த மின்சார இணைப்பு, தண்ணீர் இணைப்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டதால் செய்வதறியாது தவித்து நின்ற மேஜரின் முதல் மகள் இந்த துயரம் தாங்க முடியாமலே தன் உயிரைவிட்டுள்ளார்.

army_daughter_begging_5_1.jpg

https://daily.bhaskar.com/news/TOP-HDLN-army-officer-daughter-5815708-PHO.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன போர்க்கப்பல் குழுமம், அமெரிக்காவின்  விமானந்தாங்கி சண்டை அல்லது  அடி குழுவை (CBG or CSG), கனவில் கூட எட்டிப் பிடடிப்பதற்கு நினைக்க முடியாதாயினும், இதை சீனாவின் வளரும் கடல் அரங்க தன்ந ம்பிக்கையை எடுத்து காட்டுகிறது.   

சமீபத்தில், சீனாவின் டீசல் நீர்மூழ்கி (பொதுவாகவே இவை மிகவும் சத்தமுடையவை) அமெரிக்காவின்  விமானந்தாங்கி சண்டை அல்லது  அடி குழுவை சத்தமின்றி ஜப்பான் கடலில் நெருங்கியது.

மற்றது, இவ்வளவு போர்கப்பல்களை சீன தன்னுடைய கடல் வலயத்தை தாண்டி இன்னுமோர் அரசிசன் செல்வாக்குள்ள  கோளத்திற்கு துணிந்து அனுப்பிக்கிறதென்றால், இந்துசமுத்திரத்தில் சீனாவின் உளவு சேகரிக்கும் துல்லியமும் ,மற்றும் அந்த செல்வாக்குள்ள அரசின் உளவு நடவடிக்கையை முறியடிக்கும் திறனும் மிகவும் விஞ்சி விட்டது என்பதே இந்த சீன  போர்கப்பல்களின் வரவு பறைசாற்றுகிறது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலதீவு எல்லாம் சும்மா பயிற்சி.

மகிந்தவை திரும்பவும் பதவில ஏத்தீற்று, பாய விரித்து படுத்தான் எண்டால்... ஓரு இருநூறு வருசத்துக்கு அசையான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா சீனாவின் இந்த ஆழ்சமுத்திர அரங்க பாய்ச்சலை சகித்து கொள்ள விரும்பதாயினும், இதை நிச்சயமாக எதிர்காது, அதாவது கிந்தியவிற்கு மறைமுக ஆதரவுக்கேனும் கரம் கொடுக்காது.

ஏனெனில் இதுவே அமெரிக்கா விரும்புகின்ற, அதாவது அமெரிக்கா கடற்படையின் பலமும் வினைத்திறனும் ஏனைய அரசுகள் கனவில் கூட எட்டிப்  பிடிப்பதற்கு கனவு காணும் வரையில், ஆழ் சமுத்திர வழி கண்டறிவதற்கான சுதந்திரமாகும்.   

சீன இந்த இந்து சமுத்திர வரவு மற்றும் பிரசன்னம் மூலம் தென் சீனாக கடலில் அமெரிக்காவிட்ற்கான ஆழ் சமுத்திர வழி கண்டறிவதத்திற்கான சுதந்திரத்தை சீன விரும்பியோ விரும்பாமலோ திறந்து விட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை கையகப்படுத்திய பின்பே  இவ்வளவு தன்நம்பிக்கை சீனாவிற்கு பிறந்திருக்கிறது.

ஆயினும், கடற்படைகளை மாலைதீவிதீவிற்கு அனுப்பி நிலைமைகளை முற்றாக  மாற்ற அல்லது கட்டுப்படுத்துவதற்கு சீனாவிடம் கடற்படை பலம் போதுமா என்பது  மிகவும் பாரதூரமான பிரச்சினையாகும்.  

தனிப்பட்ட மனித அல்லது தனியார் நிறுவனத்தின் பார்வையில் நோக்கினால் கூட, எவரேனும், பொதுநல நோக்கில் இவ்வளவு பாரிய முதலீடுகளை,  அதுவும் அடுத்த வல்லரசாக தோற்றமெடுப்பதற்கு அனைத்து தன்மைகளையும், பண்புகளையும், தகுதிகளையும் தன்னகத்தே கொண்ட சீனா அரசு,   அதுவும் இன்னோர் அரசின் (சொறி சிங்கள), அந்த அரசின் நிலப்பரப்பில் பூர்விகம் கொண்ட ஓர் பகுதி மக்களால் நிராகரிக்கப்படும அரசின்,  நலனுக்காக கடனாக கூட முதலிடுவார்களா? அண்ணன்  தம்பியர் கூட சிறிய உதவிக்கு கூட நூறு முறை சிந்திக்கும் அல்லது அப்படிப்பட்ட உதவி செய்வதை புறக்கணிப்பதத்திற்கு ஒரு முறையேனும் சிந்திக்காமால் முடிவெடுக்கும்  கால கட்டத்தில், இந்திய அரசு சீனாவின் இப்படி பட்ட மிகப் பெரிய கடன் 9அடிப்படையிலான முதலீடுகளை, ஏனையோரை விட தான் ஏதோ ஆட்சிக்கலையில் (statecraft )(கௌடில்யரை கனவில் கொண்டோ? ) விற்ப்பனர்கள் என்று தமக்குத்  தாமே ஓர் கனவுக்கோளம் கட்டி, சீனாவின் முதலீடுகளால் தமக்கு நன்மையே தவிர, வேறு எந்த வகையிலும் தமது நலன்களை பாதிக்காது என்று ஏனைய அரசுகள்ளிக்கு கூட கதை அளந்தனர். அதுவும் சீனா பில்லியன் டாலரை கொட்டி ஒப்பேற்ற சாத்தியக்கூறுகள் ஏனைய அரசுகள் மிகவும் சந்தேகப்பட்ட ஓர் துறைமுகத்தை அமைக்கும் போது.

ஒரேயொரு காரணம் தான், கிந்தியாவின் மதியிலும் மனதிலும் புரையோடி ஊறி இருந்ததது. அது ஈழத்தமிழ்  தேசத்தை, தனக்கு தலை போனாலும், கருவறுக்க வேண்டும் என்ற ஹிந்திய, மலையாள வெறுப்புணர்வு இந்திய அரசின் கொள்கையாக உருவெடுத்தது.

வேடிக்கை என்னெவென்றால், அப்போது சீனாவின் வருகையை குடம் குத்து விளக்கு வைத்து நல்வரவு என்று மற்றவர்களிட்கு பாடமெடுத்த அதே ராஜதந்திரிகளே (உண்மையிலேயே அவர்கள் ராஜா தந்திரிகளா?), தற்போது புலம்பித்த திரிகிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வெடி இல்லை பீரங்கி முழங்கவில்லை கிந்திய பாம்பாட்டி களின் வல்லரசு என்ற சொல் பதம் முளைக்கையிலே சிதைக்கபட்டு விட்டுது சீன தேசத்தால். இனி எங்கள் காலத்திலேயே இதே கிந்திய கூட்டாட்சி அரசு   உடைவதை    பார்க்கலாம் போல் உள்ளது (  இந்த கருத்து கொஞ்ச   பேருக்கு கோவத்தை கொண்டு வரும் அதுக்காக   நான் ஒன்றும் செய்ய இயலாது என்ன சிலவேளை லேற்றாக நடக்கும் அவ்வளவுதான் )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.