Jump to content

"அரசியல் பயணத்தைத் துவங்கிவிட்டேன்": கமல்ஹாசன்


Recommended Posts

‘வா ராசா.. வா ராசா கமலஹாசா’:

 

நடிகர் கமல்ஹாசன் நாளை அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நிலையில், யூரியூபில் கமலின் அரசியல் பயணத்தை வரவேற்கும் வகையில், ‘வா ராசா.. வா ராசா கமலஹாசா’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நாளை தனது அரசியல் பயணத்தை துவக்குகிறார். ராமேசுவரத்தில் இருந்து தனது  பயணத்தைத் அவர் தொடங்குகிறார். பின்னர், மாலையில் மதுரையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அங்கு கட்சியின் கொடியையும், பெயரையும் அவர் அறிமுகப்படுத்தவுள்ளார்.

முன்னதாக, தான் அரசியல் பயணத்தை துவக்குவதை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை நேரில் சந்தித்தார்.

நாளை அரசியல் பயணத்தை அவர் தொடங்கவுள்ள நிலையில், இணையத்தில் கமலின் அரசியல் பயணத்தை வரவேற்கும் வகையில், ‘வா ராசா.. வா ராசா கமலஹாசா… தமிழ்நாட்டை ஆளப் பொறந்தவரே மவராசா’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

கண்மணிராஜா என்பவர் இசையமைத்துள்ள இப்பாடலை திவ்யாநாயர் என்ற பெண் பாடியுள்ளார். செங்கதிர்வாணன் என்பவர் பாடலை எழுதியுள்ளார். இந்தப் பாடல் கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

http://globaltamilnews.net/2018/67590/

 

Link to comment
Share on other sites

"அரசியல் பயணத்தைத் துவங்கிவிட்டேன்": கமல்ஹாசன்

கமல்படத்தின் காப்புரிமைARUN SANKAR/GETTY IMAGES

தனது கட்சியின் பெயரையும் கொடியையும் மதுரையில் நாளை அறிமுகப்படுத்துகிறார் கமல்ஹாசன்.

இந்தப் பொதுக்கூட்டத்திற்கான பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார் கமல்ஹாசன்.

அரசியல் கட்சியைத் துவங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன், பிப்ரவரி 21ஆம் தேதியன்று ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் இல்லத்திற்கு காலை ஏழே முக்கால் மணியளவில் செல்கிறார். அதற்குப் பிறகு அப்துல் கலாம் படித்த பள்ளிக்கூடத்திற்குச் சொல்லும் கமல், ராமேஸ்வரத்தில் உள்ள கணேஷ் மகாலில் மீனவர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.

கமல்ஹாசன்

இதன் பிறகு காலை பதினொன்றே கால் மணியளவில் அப்துல் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் கமல், அங்கிருந்து மதுரைக்குப் புறப்படுகிறார். செல்லும் வழியில் ராமநாதபுரம் அரண்மனை வாயில், பரமக்குடி ஐந்து முனை சாலை, மானாமதுரை ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

மலை ஐந்து மணியளவில் மதுரை ஒத்தக்கடைக்கு அருகில் உள்ள பொதுக்கூட்ட மைதானத்திற்கு வரும் கமல்ஹாசன், 6 மணியளவில் கட்சியின் கொடியை ஏற்றுகிறார். இதன் பிறகு, இரவு 8 மணியவில் உரையாற்றுகிறார். அப்போது தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரையும் கொள்கைகளையும் அறிவிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

கமல்ஹாசன்

மதுரையில் கமல்ஹாசனின் பொதுக்கூட்டம் ஒத்தக்கடை வேளாண்மைக் கல்லூரிக்கு எதிரில் உள்ள மைதானத்தில் நடக்கிறது. இந்தக் கூட்டத்திற்கான பணிகள் தற்போது மிக வேகமாக நடந்துவருகின்றன.

இந்தக் கூட்டத்திற்கென பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுவருகிறது. கமல்ஹாசனின் ரசிகர்கள் பலர், கமல்ஹாசனை வாழ்த்தி பேனர்களையும் பதாகைகளையும் மைதானத்தைச் சுற்றி வைத்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கென குடிநீர், கழிப்பறை வசதிகளும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.

கமல்ஹாசன்

இந்தக் கூட்டத்திற்குச் செல்வதற்காக இன்று காலையில் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் புறப்பட்டார் கமல்ஹாசன். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என்னுடைய அரசியல் பயணத்தைத் துவங்கிவிட்டேன். நாளை நடைபெறும் கூட்டத்தில் என் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பார்கள்" என்று தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பங்கேற்கிறாரா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.

மதுரைக்குப் புறப்படுவதற்கு முன்பாக கமல்ஹாசனை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கமல் தன்னை வந்து சந்திக்க விரும்பியதாகவும், ஆனால், அவர் மூத்தவர் என்பதால் தானே வந்து சந்தித்ததாகவும் தெரிவித்தார். அங்கு பேசிய கமல்ஹாசன், அ.தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்து வருவதால், அந்தக் கட்சியைச் சேர்ந்த யாரையும் சந்திக்கவில்லையென்று தெரிவித்தார்.

கமல்ஹாசனை அரசியலுக்கு வரவேற்கும் விதத்தில், "வா ராசா, வா ராசா கமலஹாசா" என ஒரு வீடியோ பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.

 

http://www.bbc.com/tamil/india-43123937

Link to comment
Share on other sites

`வருங்கால முதல்வர் வாழ்க!’ - ராமேஸ்வரத்தில் பட்டாசு வெடித்து கமலை வரவேற்ற ரசிகர்கள்

 
 

நாளை (21.2.2018) தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ள நடிகர் கமல்ஹாசன் இன்று (20.2.2018) இரவு ராமேஸ்வரம் வந்தார். 

 

WhatsApp_Image_2018-02-20_at_9.52.26_PM_

 

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த கமல்ஹாசன், அங்கிருந்து சாலை வழியாக ராமேஸ்வரம் சென்றார். ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு வந்த கமல்ஹாசனை, அவரது ரசிகர்கள் வானவெடி வெடித்து வரவேற்றனர். தங்கும் விடுதி முன் கமல்ஹாசனை காணக் குவிந்திருந்த ரசிகர்கள் அவரைக் கண்டதும், `வருங்கால முதல்வர் வாழ்க’ எனக் கோஷமிட்டனர். கமல்ஹாசன்,  தனது அறைக்குச் சென்ற பின்னரும், அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கலைந்துசெல்லவில்லை.

WhatsApp_Image_2018-02-20_at_9.52.26_PM_

 

இதையடுத்து, அறையை விட்டு வெளியே வந்த கமல்ஹாசன் ஹோட்டல் வளாகத்தின் முன் திரண்டிருந்த ரசிகர்களைச் சந்தித்து சைகையால் நாளை பேசுகிறேன். எல்லோரையும் நாளை சந்திக்கிறேன் என்றவாறே ஹோட்டலுக்குள் சென்றார். இதையடுத்து அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கலைந்துசென்றனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/117031-fans-welcomes-kamalhassan-in-rameshwaram.html

Link to comment
Share on other sites

கலாம் பள்ளிக்குள் நுழைய கமல்ஹாசனுக்கு தடை - பள்ளி கல்வித்துறை உத்தரவு

 
அ-அ+

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படித்த பள்ளியில் நுழைவதற்கு நடிகர் கமல்ஹாசனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #KamalhaasanPoliticalEntry

 
கலாம் பள்ளிக்குள் நுழைய கமல்ஹாசனுக்கு தடை - பள்ளி கல்வித்துறை உத்தரவு
 
ராமேசுவரம்:

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படித்த பள்ளியில் நுழைவதற்கு நடிகர் கமல்ஹாசனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் களமிறங்க இருக்கிறார். இன்று ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்கலாம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்கவிருக்கிறார். அங்கிருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.

தனது கட்சிப் பெயர், கொடி, கொள்கை உள்ளிட்டவற்றை தனது ரசிகர்கள் முன்பு இன்று அறிவிக்கிறார். பின்னர் இன்று மாலை 6.30 மணிக்கு மதுரையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் இரவு 8 மணி முதல் 9 மணி வரை கமல் உரையாற்றுகிறார்.

இதற்கிடையே, கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், இன்று துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். இன்று மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புது யுகம் படைக்க என்று பதிவிட்டுள்ளார்.  

இந்நிலையில், கலாம் படித்த பள்ளிக்கு செல்ல கமல்ஹாசனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசியல் நோக்கத்தோடு பள்ளிக்கு வருவதாக நிறைய புகார்கள் வந்தன. மாணவர்களுடன் அரசியல்வாதிகள் கலந்துரையாட இடமில்லை என்பதால் அவருக்கு அப்துல் கலாம் படித்த பள்ளியில் நுழைவதற்கு தடை விதிக்கப்படுகிறது என விளக்கம் அளித்துள்ளனர். #KamalhaasanPoliticalEntry #tamilnews

https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/21002827/1146902/educational-officers-ordered-kamalhasan-donot-entry.vpf

Link to comment
Share on other sites

'வாக்குறுதியை நிறைவேற்றாமல் திசைதிருப்பும் அரசுகள்' - மீனவர்களிடம் கமல் பேச்சு  : #LiveUpdates

 
 

new1_08510.jpg

 

kamal_2_09411.jpg

 

செய்தியாளர்களைச் சந்திக்கிறார் கமல் : இன்று தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கும் நடிகர் கமல்ஹாசன், மீனவர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து, தற்போது செய்தியாளர்களைச் சந்திக்கவிருக்கிறார். ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடக்கும் இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், கலாம் பயின்ற பள்ளிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கலாம் வீட்டுக்குச் சென்ற அனுபவம் மற்றும் இன்றைய பயணங்கள்குறித்து பேசவிருக்கிறார். கமலின் அரசியல் பிரவேசம்குறித்து ஸ்டாலின், தமிழிசை ஆகியோர் விமர்சித்துள்ள நிலையில், அதற்கும் கமல்ஹாசன் பதிலளிப்பார் எனச் சொல்லப்படுகிறது.

கமல்

வாக்குறுதியை நிறைவேற்றாமல் திசை திருப்பும் அரசுகள் : மீனவர்களுடனான உரையாடலைத் தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன். "ஏன் இங்கு வந்தேன் என்றால், தமிழகத்தில் மிக முக்கியமான தொழில்களில் உங்கள் தொழிலும் ஒன்று. அது, பாதுகாக்கப்பட வேண்டும். பாதுகாப்பாக நீங்கள் செய்ய வேண்டும். உங்கள் சுக துக்கங்களைப் பத்திரிகை வாயிலாக அறிந்துகொள்வதற்குப் பதில், உங்களைச் சந்தித்து அறிந்துகொள்ளவே வந்திருக்கிறேன். இனி அப்படித்தான் நடக்கும். இந்த வாய்ப்பை நீங்கள் தர வேண்டும். வெவ்வேறு அரசுகள் வாக்குறுதியை அள்ளி வீசிவிட்டு, அதை ஏன் நீங்கள் நிறைவேற்றவில்லை எனக் கேட்கும்போது, அதைத் திசைதிருப்ப வேறு பிரச்னைகளை வைப்பது வாடிக்கையாகிவிட்டது. கேள்வி கேட்பவர்களையும், தங்கள் உரிமை கோருபவர்களையும் தடியடி செய்து பதில் சொல்ல முடியாது. தன்னை விட பணிந்து மன்னிப்போ, நன்றியோ கேட்க வேண்டியது அரசின் கடமை. கடல் மேலான்மை, நீங்கள் செயல்பட வேண்டிய விதம் அரசு செயல்பட வேண்டிய விதம் பற்றி மீண்டும் கலந்தாலோசித்து முடிவுசெய்ய வேண்டும். உங்களுக்கு புரியும் என நம்புகிறேன். மீண்டும் சந்தித்து உங்கள் பிரச்னைகளைப் பற்றி பேசுகிறேன்,'' என்றார்

 

 

தனியொருவராக கமல் : தனது அரசியல் பயணத்தைத் துவக்கியிருக்கும் நடிகர் கமல்ஹாசன், சற்று நேரத்தில் மீனவர்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார். இதற்கான கூட்டத்துக்கு, 'நம்மவர் மீனவர்கள் சந்திப்பு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள மேடையில், ஒரே ஒரு இருக்கை போடப்பட்டுள்ளது. தனியொருவராக மேடையில் அமர்ந்து மீனவர்களிடம் பேசவிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். 

'பெரும்பேறு' - கமல் பெருமிதம் :  'கலாம் இல்லத்தில் தனது அரசியல் பயணத்தைத் துவங்கிய நடிகர் கமல்ஹாசன், அதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார். "பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்." என ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

kamal_5_09041.jpg

நான்கு பொதுக்கூட்டங்களில் பேசுகிறார் கமல் : மீனவர்கள் சந்திப்பைத் தொடர்ந்து, அப்துல் கலாம் நினைவிடம் செல்கிறார், நடிகர் கமல்ஹாசன். அங்கு அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கிருந்து மதுரை நோக்கி புறப்படுகிறார். மதுரை செல்லும் வழியில், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகிய இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். தொடர்ந்து, மதுரையில் இரவு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன், தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்திப் பேசுகிறார். இந்தக் கூட்டத்தில், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார்.

kamal

நம்மவர் மீனவர் சந்திப்பு : கலாம் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய கமல்ஹாசன், அடுத்து ராமேஸ்வரத்தில் மீனவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு, 'நம்மவர் மீனவர்கள் சந்திப்பு' என்று பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசனுடனான சந்திப்புக்காக, ராமேஸ்வரம் கணேஷ் மஹாலில் மீனவர்கள் காத்திருக்கிறார்கள். அங்கு கலை நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன.

kamal visit

வருகிறார் கெஜ்ரிவால் : கமல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, காலை 11 மணிக்கு டெல்லியிலிருந்து சென்னை வருகிறார், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால். இன்று மாலை சென்னையிலிருந்து மதுரை செல்லும் அவர், இரவு மதுரையில் நடக்கும் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். இரவு மதுரையில் தங்கி, நாளை காலை மதுரையிலிருந்து சென்னை வந்து, பின்னர் டெல்லி செல்கிறார்.

kamal_1_08089.jpg

மீனவர்களைச் சந்திக்கிறார் கமல் :  கலாம் இல்லத்திலிருந்து புறப்பட்ட நடிகர் கமல்ஹாசன், அடுத்து மீனவர்களைச் சந்தித்து  உரையாடவிருக்கிறார். ராமேஸ்வரம், கணேஷ் மஹாலில் மீனவர்களைச் சந்தித்து அவர் பேசவிருக்கிறார். 

அரசியல் இருக்கிறது - கமல் :  கலாம் பயின்ற பள்ளிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டத்துக்குட்பட்டு தான் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்ப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். இதில் அரசியல் இருப்பதாகவும் கமல்ஹாசன் விமர்சித்திருக்கிறார்.

கலாம் பள்ளிக்கு செல்லும் பயணம் ரத்து : கலாம் இல்லத்துக்குச் சென்ற நடிகர் கமல்ஹாசன், கலாம் அண்ணன் மற்றும் பேரன்களைச் சந்தித்துப் பேசிவிட்டு, தற்போது கலாம் இல்லத்திலிருந்து வெளியேறினார். தொடர்ந்து, கலாம் பயின்ற பள்ளிக்குச் செல்வதாகத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. ஆனால், கல்வித்துறை அதற்குத் தடை விதித்திருப்பதையடுத்து, அந்தப் பயணத்தை ரத்துசெய்திருக்கிறார் கமல்ஹாசன். கலாம் வீட்டிலிருந்து 'நாளை நமதே' எனும் அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் கமல்ஹாசன்.

kalam_1_08392.jpg

மதுரை முழுக்க 'நாளை நமதே' கொடி : இன்று மாலை மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்துகிறார் கமல்ஹாசன். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக, மதுரையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் பொதுக்கூட்டம் நடக்கும் பகுதி மற்றும் மாநகரின் சில பகுதிகளில்,  'நாளை நமதே' என்ற பெயரில் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. தமிழக வரைபடத்தின் மேல் 'நாளை நமதே' என அச்சிடப்பட்டுள்ளது. கட்சியின் அதிகாரபூர்வ கொடியை மாலையில் கமல் அறிவிக்க உள்ளார்.

கமல் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். முதல்கட்டமாக அப்துல்கலாம் இல்லத்துக்குச் சென்ற நடிகர் கமல்ஹாசன், அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயரிடம் ஆசிபெற்று, தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். அப்துல் கலாம் இல்லத்தில், அவரது உறவினர்களிடம் தற்போது கமல் பேசிக்கொண்டிருக்கிறார்.

kalaam

பள்ளிக்குச் செல்ல கமலுக்குத் தடை : அப்துல் கலாம் படித்த பள்ளிக்குள் கமல் செல்ல தடை விதிக்கப்பட்டதையடுத்து, கலாம் பயின்ற பள்ளி முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளி முன்பு தடுப்பு வைத்துத் தடுக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன், கலாம் வீட்டிலிருந்து பள்ளி வழியாகச் செல்ல உள்ள நிலையில், அவர் பள்ளிக்குள் செல்ல முயலக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. பள்ளிக்குள் செல்ல கமலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

letter_07510.jpg

* இன்று காலை 8.15 மணிக்கு, கலாம் பயின்ற பள்ளிக்கு சென்று மாணவர்கள் மத்தியில் அவர் உரையாட திட்டமிட்டிருந்தது. மாணவர்களிடம் கமல் அரசியல் பேச எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி புகார் அளித்ததால் அப்துல் கலாம் பயின்ற பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாட கல்வித்துறை தடை விதித்தது. இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

கமல்

 

தமிழ் திரைப்பட உலகின் முக்கிய நாயகரான நடிகர் கமலஹாசன் தனது அரசியல் பயணத்தை துவங்கியிருக்கிறார். ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை கமலஹாசன் துவக்கியிருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்துல்கலாமின் உறவினர்கள் அவரை வரவேற்றனர். அப்துல்கலாமின் சகோதரர், உறவினர்களிடம் பேசி வருகிறார். 

 

 

https://www.vikatan.com/news/tamilnadu/117042-kamal-haasan-set-to-launch-party-today.html

Link to comment
Share on other sites

தமிழக அரசியலில் மற்றொரு சூப்பர் ஸ்டார் - கிரிக்கெட் வீரர் அஸ்வின் கருத்து

 
அ-அ+

நடிகர் கமல்ஹாசன் அரசியல் பயணம் குறித்து இந்திய அணி வீரர் ரவிசந்திரன் அஸ்வின் ட்விட்டரில் கருத்து தெரிவிரித்துள்ளார். #KamalHaasan #KamalPartyLaunch

 
 
 
 
தமிழக அரசியலில் மற்றொரு சூப்பர் ஸ்டார் - கிரிக்கெட் வீரர் அஸ்வின் கருத்து
 
தமிழக அரசியல் களத்தில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் இன்று தனது கட்சியின் பெயர் கொள்கைகளை அறிவிக்க உள்ளார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார். முதல்கட்டமாக இன்று காலை அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை நடிகர் கமல் தொடங்கினார்.

தனது கட்சிப் பெயர், கொடி, கொள்கை உள்ளிட்டவற்றை இன்று தனது ரசிகர்கள் முன்பு இன்று அறிவிக்கும் கமல், மாலை 6.30 மணிக்கு மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார்.
 
201802210841227099_1_ashwin._L_styvpf.jpg


இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் அரசியல் பயணம் குறித்து தமிழகத்தை சேர்ந்தவரும், இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிசந்திரன் அஸ்வின் ட்விட்டரில் கூறியிருப்பதாவது.

“தமிழகத்தில் இருந்து மற்றொரு சூப்பர் ஸ்டார் நடிகர் கமல்ஹாசன் இன்று மாலை தனது அரசியல் கட்சியை தொடங்குகிறார். அவரது வருகை அரசியல் களத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுமா?” என அவர் பதிவிட்டுள்ளார்.
#KamalHaasan #KamalPartyLaunch #Ashwin #RavichandranAshwin #RAshwin

https://www.maalaimalar.com/News/Sports/2018/02/21084123/1146935/Ashwin-comment-about-Kamal-Haasan-political-start.vpf

Link to comment
Share on other sites

ஆட்சியாளர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை: கமல்ஹாசன் அதிரடி பேச்சு

 

 
kamal1

ராமேசுவரம்: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன், தமிழக மீனவர்கள் பாதுகாப்புடன் தொழில் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம் என தெரிவித்துள்ளார்.

ராமேசுவரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் இல்லத்துக்கு இன்று புதன்கிழமை காலை 7.45 மணியளவில் கமல்ஹாசன் சென்றார். கமல்ஹாசனை அப்துல் கலாமின் பேரன் சலீம் நடிகர் வரவேற்று இல்லத்திற்குள் அழைத்துச் சென்றார். அங்கு அப்துல் கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்காயரிடம் கமல்ஹாசன் ஆசி பெற்றார். கலாமின் குடும்பத்தினரிடம் சிறிது நேரம் பேசினார். 

பின்னர் கலாம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் வழியில் கலாம் படித்த பள்ளியின் முன்பு நின்று பார்த்துவிட்டு, கணேஷ் மஹாலில் மீனவர்களை சந்தித்து பேசினார். 

அப்போது: எனது உயிரினும் மேலான மீனவர்களை சந்திக்க வந்திருக்கிறேன். தமிழகத்தில் முக்கியமான தொழில்களில் ஒன்று மீன்பிடித் தொழில். அப்படிப்பட்ட தொழிலை தமிழக மீனவர்கள் பாதுகாப்புடன் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம் என தெரிவித்தார்.

மேலும் மீனவர்களின் பிரச்னையை பற்றி பேசும்போது, வேறு முன்னிலைப்படுத்தப்படுகிறது. ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, அதை நிறைவேற்றவில்லை என கமல் குற்றம்சாட்டினார்.

http://www.dinamani.com/latest-news/2018/feb/21/ஆட்சியாளர்கள்-அளித்த-வாக்குறுதிகளை-நிறைவேற்றுவதில்லை-கமல்ஹாசன்-அதிரடி-பேச்சு-2867672.html

 

 

கலாமின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது ஏன்? ராமேஸ்வரத்தில் கமலிடம் செய்தியாளர் கேள்வி

 

 
kamalhasan

 

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமின் வீட்டில் இருந்து கமலஹாசன் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பிறகு மீனவப் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார்.

ராமேஸ்வரத்தில் மீனவ மக்களுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீனவப் பிரதிநிதிகளை மேடையேற்றிய கமல், அவர்களது பிரச்னைகளைப் பற்றி கேட்டறிந்தார்.

தங்களது பிரச்னைகள் குறித்து பேசிய மீனவப் பிரதிநிதிகளின் பேச்சினை முழுவதும் கேட்ட கமலஹாசன், யாருக்கும் பொன்னாடை போத்தும் பழக்கம் எங்களுக்கு இல்லை. எனவே, பொன்னாடைக்குப் பதிலாக தன்னைப் போற்றுவதாகக மீனவப் பிரதிநிதிகளை கட்டிப் பிடித்து வாழ்த்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது, பன்னாட்டு தாய்மொழி நாள் என்பதால் இன்று எனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளேன்.

அரசியலில் எனக்கு பிடித்தவர்களில் ஒருவர் சந்திரபாபு நாயுடு. அவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். கொள்கைகள் பற்றி கவலைப்பட வேண்டாம். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மட்டும் சிந்திக்குமாறு கூறினார்.

கடந்த 50 ஆண்டுகளில் ராமேஸ்வரம் முன்னேறவில்லை. உலக நாயகனாக இருந்த நான் நம்மவராக இருக்கவே ஆசைப்படுகிறேன்.

கலாம் எனது ஆதர்ச மனிதர். கலாம் வீட்டில் இருந்து பயணத்தைத் தொடங்கியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. கலாம் பயின்ற பள்ளிக்குச் செல்ல நினைத்ததில் அரசியல் இல்லை. பள்ளிக்குச் செல்வதைத் தான் தடுக்க முடியுமே தவிர, பாடம் கற்பதைத் தடுக்க முடியாது.

தடைகளைக் கடந்து சரித்திரம் படைக்க வேண்டும் என்றாலும் அதற்கு நான் தயார். சினிமாவை விட அரசியலில் பொறுப்புகள் அதிகம்.

கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்காதது பற்றிய கேள்விக்கு பதிலளித்த கமல், நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை. எனது நம்பிக்கை அப்படி என்று கூறினார்.

இதுவரை ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்த நான் இனி அவர்களது இல்லங்களில் வாழ ஆசைப்படுகிறேன். மதுரையில் என் கொள்கைகள் உங்களுக்குப் புரியும் வகையில் பேசுவேன் என்று கூறினார்.

http://www.dinamani.com/tamilnadu/2018/feb/21/கலாமின்-இறுதி-ஊர்வலத்தில்-பங்கேற்காதது-ஏன்-ராமேஸ்வரத்தில்-கமலிடம்-செய்தியாளர்-கேள்வி-2867695.html

Link to comment
Share on other sites

'பள்ளிக்குச் செல்வதைத் தான் தடுக்க முடியும். பாடம் படிப்பதை அல்ல' - கமல் பேட்டி  : #LiveUpdates

 

new1_08510.jpg

 

'பள்ளிக்குச் செல்வதை தான் தடுக்க முடியும். பாடம் படிப்பதை அல்ல' : கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எளிமையான வீட்டில் இருந்து வந்த கலாம். அவர் வீட்டுக்குச் சென்றதில் மகிழ்ச்சி. அதில் அரசியல் ஏதுமில்லை. அவர் உணர்வு, நாட்டுப்பற்று எல்லாம் என்னை கவர்ந்தவை. என் பாடத்தில் ஒரு பகுதி அவரது வாழ்க்கை. அவர் பயின்ற பள்ளிக்குச் செல்ல திட்டமிட்டேன். வேண்டாம் என தடை போட்டு விட்டார்கள். நான் பள்ளிக்குச் செல்வதை தான் தடுக்க முடியுமே தவிர. பாடம் படிப்பதைத் தடுக்க முடியாது. 'தடைகளை வென்றே சரித்திரம் படைப்பவன்' என என் படத்தின் பாடல் வரும். அப்படித்தான் படிக்க வேண்டும் என்றால் அதையும் செய்யலாம். 

 

நேற்று இரவு சந்திரபாபு நாயுடு என்னிடம் போனில் பேசினார். அப்போது அவர், 'கொள்கையைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதை விட, மக்களுக்கு என்ன செய்ய முடியும் என பட்டியல் போட்டுக்கொள்ளவும்' என்றார். அவர் எனக்கு முக்கியமான மனிதர். அரசியல் களத்தில் உள்ள பல ஹீரோக்களில் அவரும் ஒருவர். கலாம் இறுதி சடங்கில் ஏன் பங்கேற்கவில்லை என கேட்கிறார்கள். யாருடைய இறுதி ஊர்வலங்களிலும் பங்கேற்பதில்லை என்பதை நான் கடைபிடிக்கிறேன். இதுவரை ரசிகர்களின் உள்ளங்களில் இருந்த நான் இனி அவர்களின் இல்லங்களில் இருக்க விரும்புகிறேன்," என்றார்.

https://www.vikatan.com/news/tamilnadu/117042-kamal-haasan-set-to-launch-party-today.html

Link to comment
Share on other sites

'நான் சினிமா நட்சத்திரமல்ல. உங்கள் வீட்டு விளக்கு. என்னைப்பொத்தி பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு' - கமல் : #LiveUpdates

 
 

new1_08510.jpg

 

kamal

 

'நான் சினிமா நட்சத்திரம் அல்ல. உங்கள் வீட்டு விளக்கு' : ராமநாதபுரத்தில் மக்கள் மத்தியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "நான் 45 ஆண்டுகள் கழித்து இந்த ஊருக்கு வருகிறேன். ஊர் கொஞ்சம் மாறியிருக்கிறது. ஆனால் மக்கள் அப்படியே இருக்கிறார்கள். இங்கே என்னுடைய சித்தப்பா இருந்தார். நான் எப்போதும் நினைத்துக்கொள்வேன். ராமநாதபுரத்தில் எனக்கு ஒரு வீடு இருக்கு. எப்போதாவது அங்கு போகவேண்டும்' என்று. ஆனால் எனக்கு ஒரு வீடு இல்லை. இந்த ஊரே என் வீடு தான். 

உங்கள் அன்பை பார்த்து இங்கே ஒன்றைச் சொல்ல தோன்றுகிறது. இதை மதுரையில் சொல்லலாம் என நினைத்தேன். உங்கள் அன்பால் இங்கு சொல்கிறேன். என்னை இதுவரை சினிமா நட்சத்திரமாக பார்த்துக்கொண்டிருந்தீர்கள். இனி நான் உங்கள் வீட்டு விளக்கு. என்னைப் பொத்திப்பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. என்னை ஏற்றி வைக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பு. மேடைக்கு வரும் போது கூட்டத்தை பார்த்து கொஞ்சம் பயம் இருந்தது. யாருக்கும் எதுவும் ஆகிவிடக்கூடது என்று. ஆனால் மேடையில் வந்து நிற்கும் போது இந்த வாய்ப்பை நழுவ விடலாமா என்று தோன்றுகிறது. இந்த அன்பு நீச்சலில் நீந்த தான் வந்தேன். வெவ்வேறு இடங்களில் நீந்த வேண்டியிருக்கிறது," என்றார்.

kamal_6_12537.jpg

கலாம் நினைவிடத்தில் கமல் : தனது அரசியல் பயணத்தை கலாம் இல்லத்தில் இருந்து துவங்கிய கமல்ஹாசன், மீனவர்கள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பையடுத்து, கலாம் நினைவிடம் சென்றார். பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் கமல்ஹாசன் மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து மதுரை நோக்கி புறப்படும் கமல்ஹாசன், செல்லும் வழியில் 3 இடங்களில் உரை நிகழ்த்த உள்ளார்.

கமல் அரசியல் மேடை

சரிந்தது எல்.இ.டி. ஸ்கிரீன் : மதுரையில் கமல் பொதுக்கூட்ட மேடையில் அமைக்கப்பட்டிருந்த மெகா எல்இடி ஸ்கிரீன் திடீரென சரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விழா பந்தலில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ச்சியாக அதை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து, மாலையில் மட்டுமே ரசிகர்கள் அனுமதிககப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/117042-kamal-haasan-set-to-launch-party-today.html

Link to comment
Share on other sites

``மக்கள் நீதி மய்யம்’’ - அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் கமல் - #LiveUpdates

 

new1_08510.jpg

 

 

 

WhatsApp_Image_2018-02-21_at_8.21.45_PM_

 

கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து:

`என் அன்பார்ந்த வணக்கம். மதிப்பிற்குரிய தமிழ் மக்களுக்கு என் வணக்கம்’ என்று தமிழில் கூறி வீடியோ மூலம் கமலின் அரசியல் பிரவேசத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

உயர்மட்டக் குழு நிர்வாகிகள் அறிவிப்பு - மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்மட்டக் குழு அறிவிக்கப்பட்டது. இதில், கமலின் நண்பரும், பேராசிரியருமான கு.ஞானசம்பந்தன், சுகா, தங்கவேலு, பாரதி கிருஷ்ணகுமார், ஸ்ரீப்ரியா ராஜ்குமார், கமீலா நாசர், சவரிராஜன், ராஜசேகர், மூர்த்தி, மௌரியா, ராஜநாராயணன், ஆர்.ஆர்.சிவராம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், அகில இந்தியப் பொறுப்பாளராக தங்கவேலு நியமிக்கப்பட்டுள்ளார். 

மாவட்டவாரியாக நிர்வாகிகள் அறிவிப்பு: பொதுக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டவாரியான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு, மேடையேற்றப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவராக மேடையில் வந்து நேரடியாகக் கமலைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றுவிட்டு சென்றனர். 

WhatsApp_Image_2018-02-21_at_7.59.09_PM_

பொதுக்கூட்ட மேடையில் கமல்: கட்சிப் பெயரை அறிவித்த பின்னர் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசனுடன் பொதுக்கூட்ட மேடையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சோம்நாத் பாரதி மற்றும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் ஆகியோர் அமர்ந்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் பொதுக்கூட்டம் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. 

NEW21_19408.jpg

``மக்கள் நீதி மய்யம்’’  -  அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் கமல் 

பொதுக்கூட்ட மைதானத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்த நடிகர் கமல், ரசிகர் மத்தியில் தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். அரசியல் கட்சியின் பெயர் ``மக்கள் நீதி மய்யம்’’ என ரசிகர்கள் மத்தியில் அவர் அறிவித்தார். 

WhatsApp_Image_2018-02-21_at_7.29.18_PM_

 

’தூய வெள்ளையில் இணைந்த கைகள்!’ - பொதுக்கூட்ட மைதானத்தில் கொடியேற்றிய கமல்! 
 

மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்று வரும் அரசியல் பிரகடன மேடைக்கு கமல்ஹாசன் வந்தார். அவருடன் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் மேடைக்கு வந்துள்ளனர். பொதுக்கூட்ட மேடைக்கு வருவதற்கு முன்பாக பொதுக்கூட்ட மைதானத்தில் அவரது கட்சிக் கொடியை கமல் ஏற்றிவைத்தார். விஸ்வரூபம் படத்தின் யாரென்று தெரிகிறதா பாடல் இசை பின்னணியில் ஒலிக்க கமல், தனது அரசியல் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார். 

 

அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சந்திப்பு: மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்ட மேடைக்குச் செல்வதற்கு முன்பாக அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர்கள் இருவரும் ஒரே காரில் பொதுக்கூட்ட மேடைக்குப் புறப்பட்டுச் சென்றனர். 

kamal_19247.jpg

 

 

 

 

'இளைஞர்களுக்கு முக்கியமானத்திட்டம் வைத்திருக்கிறேன்' - கமல்

மதுரை செல்லும் வழியில் திருப்புவனத்தில் பொதுமக்கள் திரண்டு நிற்க அங்கு காரில் இருந்தபடியே ஒரு நிமிடம் பேசினார் நடிகர் கமல்ஹாசன். அப்போது அவர், "திருப்புவனம் எப்போதுமே வளமான ஊர். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊர். இந்த ஊருக்கும், இங்கே இருக்கும் இளைஞர்களுக்கும் முக்கியமான திட்டம் வைத்திருக்கிறேன். அதை இங்கு சொல்லவில்லை.ஒத்தக்கடை கூட்டத்தில் அறிவிக்கிறேன் அங்கே வாருங்கள்," என்றார்.

கமல்

ஒரே நாளில் இத்தனை நிகழ்வுகளா? நேர நெருக்கடியில் சிக்கிய கமல்ஹாசன் 

நேர நெருக்கடியால் அப்துல்கலாம் இல்லத்துக்குச் செல்லும் நிகழ்வு தவிர, கமல்ஹாசனின் மற்ற அனைத்து நிகழ்வுகளும் முழுமைப்பெறாமல் போனது.

நடிகர் கமல்ஹாசன் தன் அரசியல் பயணத்தை இன்று தொடங்கினார். ராமேஸ்வரம் அப்துல்கலாமின் இல்லத்தில் அரசியல் பயணத்தைத் தொடங்கிய கமல், அங்கிருந்து கலாம் பயின்ற பள்ளி, கலாம் நினைவிடம்,  ராமேஸ்வரம் மீனவர்களுடன் கலந்துரையாடல், செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகிய 3 இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றில் பங்கேற்று, பின்னர் மாலை மதுரையில் நடக்கும் அரசியல் பிரவேசப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச திட்டமிடப்பட்டிருந்தது. இதில் கலாம் படித்த பள்ளிக்கு சென்று உரை நிகழ்த்த கமல்ஹாசனுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அனுமதி மறுத்தது. இதனால் அந்த நிகழ்வு மட்டும் ரத்தானது.

காலை 7.45 மணிக்குத் துவங்கிய இந்த பயணத்தில் முதல் நிகழ்வான அப்துல் கலாமின் இல்லத்துக்கு செல்லும் நிகழ்வு மட்டும் முறையாக நடந்தது. மற்ற நிகழ்வுகள் நேர நெருக்கடியால் வேக வேகமாக முடிக்கப்பட்டன. 2 நாட்களுக்கு திட்டமிடப்பட வேண்டிய பணிகள் ஒரே நாளில் திட்டமிடப்பட்டதால், ஒரே நாளில் இத்தனை நிகழ்வுகளிலும் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. காலையில் துவங்கிய நேரச்சிக்கல், மாலை வரை நீடிக்கிறது. இதனால் மீனவர்களுடனான சந்திப்பு மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு உரிய நேரத்தை கமல்ஹாசனால் ஒதுக்க முடியவில்லை.

மானமதுரையிலும் 30 விநாடிகள் பேசிவிட்டு கிளம்பினார் கமல்ஹாசன்."உங்கள் அன்பில் நீந்தி வந்து கொண்டிருக்கிறேன். அடுத்த முறை உங்களை சந்தித்து நீண்ட நேரம் பேசுகிறேன். மதுரை பொதுக்கூட்டத்தில் பேசவேண்டியிருப்பதால் உங்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்கிறேன்," என்று மட்டும் பேசி விடைபெற்றார் கமல்ஹாசன்.

மீனவர்கள் கமலிடம் முறையிட பல கோரிக்கைகளுடன் வந்திருந்த நிலையில், மீனவர்களை பின்னர் சந்திப்பதாகச் சொல்லி விடை பெற்றார் கமல்ஹாசன். அதேபோல், சொந்த ஊரில் கமல்ஹாசன் உரை நிகழ்த்தப்போவதை ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர் பரமக்குடி மக்கள். மேடையில் அவரை அசத்த சில நிகழ்வுகளோடு அப்பகுதியினர் காத்திருந்த நிலையில்,  நேர நெருக்கடி காரணமாக மேடை கூட ஏறாமல் காரில் இருந்தபடி ஒரு நிமிடம் பேசி விடைபெற்றார் கமல்ஹாசன்.

கெஜ்ரிவாலை வரவேற்க விரையும் கமல்

ராமேஸ்வரம் அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், மதுரை செல்லும் வழியில் மூன்று இடங்களில் மக்கள் மத்தியில் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே கமல் அரசியல் பிரவேசப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுரை வரவுள்ள நிலையில், அவரை வரவேற்க கமல் செல்வதால் இந்த இடங்களில் விரிவாக பேசாமல் ஓரிரு நிமிடங்களில் பேசி கடக்கிறார் கமல்ஹாசன்.

பரமக்குடியில் கமல்ஹாசன் பேசுவதற்காக இவருக்கு தனி மேடை அமைத்திருந்தனர். முதலில் மேடையை கடந்து சென்ற கமல்ஹாசன், சில நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் வந்தார். மேடையில் ஏறாமல் காரில் இருந்தபடியே பேசினார். அப்போது அவர் பேசுகையில், "எவ்வளவு அன்பு இருந்தால் இந்த வெயிலிலும் உங்கள் ஊர் பையனை பார்க்கக் காத்திருப்பீர்கள். இதற்கு என்ன கை மாறு செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை. நிறைய வேலை இருக்கிறது. மீண்டும் உங்களிடம் வருவேன். மதுரையில் நடக்கும் நிகழ்வுக்கு வரும் டெல்லி முதல்வரை வரவேற்க செல்வதால் உடனடியாக கிளம்பிச்செல்கிறேன். மீண்டும் உங்களிடம் பேசுவேன்," என்றார். 

 

kamal

'நான் சினிமா நட்சத்திரம் அல்ல. உங்கள் வீட்டு விளக்கு' : ராமநாதபுரத்தில் மக்கள் மத்தியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "நான் 45 ஆண்டுகள் கழித்து இந்த ஊருக்கு வருகிறேன். ஊர் கொஞ்சம் மாறியிருக்கிறது. ஆனால், மக்கள் அப்படியே இருக்கிறார்கள். இங்கே என்னுடைய சித்தப்பா இருந்தார். நான் எப்போதும் நினைத்துக்கொள்வேன். ராமநாதபுரத்தில் எனக்கு ஒரு வீடு இருக்கு. எப்போதாவது அங்கு போக வேண்டும்' என்று. ஆனால், எனக்கு ஒரு வீடு இல்லை. இந்த ஊரே என் வீடுதான். 

உங்கள் அன்பை பார்த்து இங்கே ஒன்றைச் சொல்ல தோன்றுகிறது. இதை மதுரையில் சொல்லலாம் என நினைத்தேன். உங்கள் அன்பால் இங்கு சொல்கிறேன். என்னை இதுவரை சினிமா நட்சத்திரமாகப் பார்த்துக்கொண்டிருந்தீர்கள். இனி நான் உங்கள் வீட்டு விளக்கு. என்னைப் பொத்திப்பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. என்னை ஏற்றி வைக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பு. மேடைக்கு வரும் போது கூட்டத்தை பார்த்து கொஞ்சம் பயம் இருந்தது. யாருக்கும் எதுவும் ஆகிவிடக் கூடது என்று. ஆனால், மேடையில் வந்து நிற்கும் போது இந்த வாய்ப்பை நழுவ விடலாமா என்று தோன்றுகிறது. இந்த அன்பு நீச்சலில் நீந்தத்தான் வந்தேன். வெவ்வேறு இடங்களில் நீந்த வேண்டியிருக்கிறது," என்றார்.

kamal_6_12537.jpg

கலாம் நினைவிடத்தில் கமல் : தனது அரசியல் பயணத்தை கலாம் இல்லத்திலிருந்து தொடங்கிய கமல்ஹாசன், மீனவர்கள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பையடுத்து, கலாம் நினைவிடம் சென்றார். பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் கமல்ஹாசன் மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து மதுரை நோக்கிப் புறப்படும் கமல்ஹாசன், செல்லும் வழியில் 3 இடங்களில் உரை நிகழ்த்த உள்ளார்.

https://www.vikatan.com/news/tamilnadu/117042-kamal-haasan-set-to-launch-party-today.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் பெயரிலேயே மய்யம் என்று உள்ளது.

ஊரில் மய்யம் என்றால் இறந்த உடல்.

இறந்த உடல் எப்படி பறக்கின்றதென பொறுத்திருந்து பார்ப்போம்.i

40 minutes ago, நவீனன் said:

மக்கள் நீதி மய்யம்’’  -  அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்

 

Link to comment
Share on other sites

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குவாட்டரும், ஸ்கூட்டரும் நீடிக்காது: கமல் திட்டவட்டம்

 

 
kamjpg

கமல் | படம் உதவி: மக்கள் நீதி மய்ய ட்விட்டர் பக்கம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குவாட்டரும், ஸ்கூட்டரும் நீடிக்காது. இலவசம் இருக்காது என்று கமல்ஹாசன் பேசினார்.

மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தன் கட்சியின் பெயரை கமல்ஹாசன் இன்று அறிவித்தார்.

தொடர்ந்து கமல்ஹாசன் பேசியதாவது:

''எங்கள் தண்டவாளமும் உங்கள் வண்டவாளமும் வெளிவரும் நாள் இன்று. 37 ஆண்டுகளாக அமைதியாக நற்பணி செய்த கூட்டத்தை நீங்கள் பார்த்தீர்கள். இன்று பேசும் நாள், நாளை செயல்படும் நாள்.

இங்கு பணத்திற்கு பஞ்சமில்லை, நல்ல மனதிற்குதான் பஞ்சம். எங்கள் நற்பணிகளுக்கு இடைஞ்சலாக சில அரசுகள் இருந்தன அதனை மறக்க மாட்டோம். நல்ல கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்றால் ஆண்டுக்கு ரூ.6000 இல்லை ரூ.6 லட்சம் கிடைத்திருக்கும். நாங்கள் சமூக சேவகர்களாக வந்துள்ளோம். செய்ய வேண்டியதை செய்தாலே போதுமானது.

கல்வியை தனியாரிடம் கொடுத்துவிட்டு மது வியாபாரத்தை அரசு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. சாராயத்தை யார் வேண்டுமானாலும் விற்கலாம். கல்வியை அப்படி விடமுடியுமா? எல்லா தரப்பினருக்கும் தரமான கல்வி போய்ச் சேர வேண்டும்.

படித்த இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பின்றி உள்ளார்கள். அதை மாற்ற முடியும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

சாதி, மதம் அறவே நீக்கப்பட வேண்டும். ஊழலை குறைத்தால் மின்சாரம் வரும். நான் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது; நீங்களும் வாருங்கள் சேர்ந்து ஊழலை ஒழிப்போம்.

எனக்கு வயது 63; நான் 40 வருட ஆட்சிக்காக வரவில்லை. மக்கள் நீதி மய்யத்தில் யாரும் நிரந்தர முதல்வராக இருக்க மாட்டார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குவாட்டரும், ஸ்கூட்டரும் நீடிக்காது. இலவசம் இருக்காது. ஆனால், மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கித் தரும் பொருளாதாரத்தை ஏற்படுத்துவேன்'' என்று கமல் பேசினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22817980.ece?homepage=true

கட்சிக்கொடி உணர்த்துவது என்ன?- கமல் விளக்கம்

 

 
kamal1jpg

மக்கள் நீதி மய்யத்தின் கட்சிக்கொடி குறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்டத்தில் கமல் தன் கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார். அதற்குப் பிறகு கமல்ஹாசன் பேசுகையில், ''கட்சியின் கொடியில் உற்றுப்பார்த்தால் புதிய தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும். ஆறு கைகள் ஆறு மாநிலங்களைக் குறிக்கும். நடுவில் இருக்கும் நட்சத்திரம் மக்களாகிய நீங்கள்தான். மக்களையும் நீதியையும் மய்யமாகக் கொண்டு இணைக்கும் கட்சி என்பதால் மக்கள் நீதி மய்யம் என்று பெயர் வைத்திருக்கிறோம்.

தராசின் நடுமுள் நாம். எந்தப் பக்கமும் சாயமாட்டோம். நீங்கள் வலதா, இடதா என்று கேட்கிறார்கள். அதனால்தான் கட்சியின் பெயரிலேயே மய்யம் என்று வைத்திருக்கிறோம்'' என்றார் கமல்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22817790.ece?homepage=true

Link to comment
Share on other sites

தனது கட்சியின் இலக்கு என்ன? - கமல் ஹாசன் விளக்கம்

மதுரையில் இன்று (புதன்கிழமை) மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்று தனது கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் கமல் ஹாசன், தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தனது கட்சியின் கொள்கைகளை விளக்கி உரையாற்றினார்.

மதுரை பொதுக்கூட்டத்தில் கமல் Image captionமதுரை பொதுக்கூட்டத்தில் கமல்

''37 ஆண்டுகளாக அமைதியாக நற்பணி செய்து கொண்டிருந்த கூட்டத்தை தற்போது நீங்கள் பார்த்து கொண்டிருந்தீர்கள்'' என்று உரையின் தொடக்கத்தில் தனது ரசிகர்கள் குறித்து கமல் ஹாசன் பேசினார்.

''இன்று கட்சியின் பெயரை மட்டும் அறிவித்து சென்றுவிட நான் எண்ணியிருந்தேன். ஆனால், நண்பர் கேஜ்ரிவால் இன்றே நம் கட்சியின் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அதற்கு நான் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என்று கமல் தெரிவித்தார்.

''எத்தனை நாட்கள் ஊமையாக இருப்பது? இன்று பேசும் நாள்'' என்று குறிப்பிட்ட கமல் தனது கட்சியின் கொள்கைகள் குறித்தும் விளக்கினார்.

கட்சியின் கொள்கைகள் பின்வருமாறு:-

நல்ல மற்றும் தரமான கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.

அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்.

சாதி, மதம் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

வாக்குக்கு பணம் கொடுக்கும் அரசியல் இருக்காது.

''நாங்கள் ததத்தெடுக்கும் 8 கிராமங்களில் அனைத்து பணிகளையும் நாங்கள் நிச்சயமாக செய்து முடிப்போம்'' என்று கமல் மேடையில் சூளுரைத்தார்.

''நல்ல கட்சிக்கு வாக்களித்து இருந்தால் 6000 ரூபாய் அல்ல ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் ரூபாய் சம்பாதிக்க முடியும்'' என்று அவர் மேலும் கூறினார்.

மய்யம் என்ற பெயர் ஏன்?

''மக்களின் நீதியை மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி இது. நீங்கள் வலதா, இடதா என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள்; எந்த பக்கமும் ஒரேடியாக சாய்ந்து விடமாட்டோம். அதற்குதான் மய்யம் என்று கட்சிக்கு பெயர் வைத்துள்ளோம்'' என்று கமல் தெரிவித்தார்.

பொதுக்கூட்ட மேடை Image captionபொதுக்கூட்ட மேடை

தேர்தல் ஆணையத்தில் இந்த கட்சி பதிவாகி விட்டது. குறைந்தது மூன்று அல்லது நான்கு தலைமுறைகள் நீடிக்கும் எண்ணத்தில் இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

வருங்கலத்துக்கான விதையை தேடுகிறேன்

''எனது வயது 63. அடுத்த 40 ஆண்டுகள் ஆளும் கனவோடு நான் இங்கு வரவில்லை. எதிர்காலத்தின் விதையை தேடி இங்கு நான் வந்துளேன். என் வயதை கிண்டலடிக்கிறார்கள். ஆயுள் குறைவாக உள்ள சிலர்'' என்று கமல் ஹாசன் தனது உரையில் குறிப்பிட்டார்.

காவிரி பிரச்சனை தொடர்பாக பேசிய அவர் , ''முறையான பேச்சுவார்த்தை நடத்தினால் எந்த மாநிலத்திடமும் நமக்கு தேவையானதை கேட்டு பெற முடியும்'' என்று குறிப்பிட்டார்.

கட்சியின் சின்னம் குறித்து விளக்கம்

கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்படத்தின் காப்புரிமைTWITTER Image captionகட்சியின் பெயரை அறிவித்தார் கமல்

தனது கட்சியின் சின்னம் குறித்து பேசிய அவர், '' இதில் உள்ள 6 கைகள், தென்னிந்தியாவில் உள்ள 6 மாநிலங்களைக் குறிக்கும். இதை நன்கு உற்று பார்த்தால் தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும். அதேபோல், இதில் உள்ள நட்சத்திரம் மக்களை குறிக்கும்'' என்றும் கமல் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய டெல்லி மாநில முதல்வர் கேஜ்ரிவால், ''இந்த பொதுக்கூட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் மாற்றத்தை கமல் ஹாசன் தொடங்கியுள்ளார். ஒரு திரையுலக பிரபலமாக நான் எப்போதுமே அவரது ரசிகனாக இருந்துள்ளேன் ஆனால், இப்போது அவர் களத்தில் நின்று போராடும் நிஜ கதாநாயகனாக திகழ்கிறார்'' என்று தெரிவித்தார்.

தமிழக மக்கள் கமலின் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கேஜ்ரிவாலுடன் கமல் Image captionகேஜ்ரிவாலுடன் கமல்

முன்னதாக, இன்று காலையில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் கமல்.

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் இல்லம், பின் மீனவர்களுடன் சந்திப்பு, பரமக்குடியில் பொதுகூட்டம் என தொடர்ந்த இந்த பயணத்தில் மாலை மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

http://www.bbc.com/tamil/india-43142597

தொடங்கியது கமலின் அரசியல் பயணம் (புகைப்பட தொகுப்பு)

இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் கமல். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் இல்லம், பின் மீனவர்களுடன் சந்திப்பு, பரமக்குடியில் பொதுகூட்டம் என தொடர்ந்த இந்த பயணத்தில் அடுத்ததாக மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் தனது கட்சி பற்றியை அறிவிப்பு வெளியிடுகிறார் கமல்.

கலாம் வீட்டில் தொடங்கிய அரசியல் பயணம் Image captionராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் கமல் கலாம் வீட்டில் தொடங்கிய அரசியல் பயணம் Image captionஅப்துல் கலாமின் குடும்பத்தினருடன் கலாம் குடும்பத்துடன் சிறிது நேரம் உரையாடிய கமல், அவர்களுடன் சிற்றுண்டி அருந்தினார் Image captionகலாம் குடும்பத்துடன் சிறிது நேரம் உரையாடிய கமல், அவர்களுடன் சிற்றுண்டி அருந்தினார் கலாம் வீட்டில் தொடங்கிய அரசியல் பயணம் Image captionஇந்த சந்திப்புகளில் 'நம்மவர்' என்று அழைக்கப்பட்டார் கமல் மீனவ பிரதிநிதிகளை சந்தித்த கமல் பொன்னாடை போர்த்த வந்தபோது, `வேண்டாம்` என்று மறுத்து அவர்களை ஆரத்தழுவினார். Image captionமீனவ பிரதிநிதிகளை சந்தித்த கமல் பொன்னாடை போர்த்த வந்தபோது, `வேண்டாம்` என்று மறுத்து அவர்களை ஆரத்தழுவினார். மீனவர்கள் சந்திப்புக்கு பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நிகழ்த்தினார் கமல் Image captionமீனவர்கள் சந்திப்புக்கு பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நிகழ்த்தினார் கமல் ராமநாதபுரம் செல்லும் வழியில் பாம்பன் பாலம் மற்றும் மண்டபம் பகுதியில் ரசிகர்கள் திரண்டு இருந்தனர். Image captionராமநாதபுரம் செல்லும் வழியில் பாம்பன் பாலம் மற்றும் மண்டபம் பகுதியில் ரசிகர்கள் திரண்டு இருந்தனர். ராமேஷ்வரத்தில் ரசிகர்களை பார்த்து கையசைத்த கமல் Image caption"நான் உங்கள் வீட்டு விளக்கு இந்த விளக்கை ஏற்றி வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு" என்று ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தில் பேசினார் கமல். கமலை வரவேற்க நடந்த கொண்டாட்டம் Image captionகமலை வரவேற்க நடந்த ஆட்டம் பாட்டம் கமலை வரவேற்க நடந்த கொண்டாட்டம் Image captionபரமக்குடியில் அமைக்கப்பட்டிருந்த மேடை கமலை வரவேற்க நடந்த கொண்டாட்டம் Image captionராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையின் இரண்டு பக்கத்திலும் 'நாளை நமதே` என்று பெயர் பொறித்த கொடிகள் கட்டப்பட்டிருந்தன இன்று உலக தாய் மொழி தினம் என்பதால் இந்த நாளை தேர்ந்தெடுத்ததாக கமல் தெரிவித்தார் Image captionஇன்று உலக தாய் மொழி தினம் என்பதால் இந்த நாளை தேர்ந்தெடுத்ததாக கமல் தெரிவித்தார்

 

http://www.bbc.com/tamil/india-43141187

Link to comment
Share on other sites

நெட்டிசன் நோட்ஸ்: கமல் பெட்ரோமாஸ் விளக்கா? குத்து விளக்கா?

 

 
juijpg

‏கமலஹாசன் மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்டத்தில் புதன்கிழமை தனது கட்சியின் கொடியை  அறிமுகம் செய்து ’மக்கள் நீதி மய்யம்'  என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். இது தொடர்பாக நெட்டிசன்கள் தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸீல்....

John

     

‏ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை. ‘மக்கள் நீதி மய்யம்’

தமிழகம் விழித்தெழட்டும்.

ஆல்தோட்டபூபதி

‏ரஜினியெல்லாம் இப்படி கட்சி ஆரம்பிக்கிற நாளுல தொடர்ந்து கமல் மாதிரி 2 மணி நேரம் பேசினா, கட்சி அன்னைக்கே கலைஞ்சிடும்

 மக்கள் நலன் மையம்ன்னு வச்சு இருந்திருக்கலாம்ன்னு தோணுது, ஆனா மக்கள் நல்வாழ்வு மையம்ன்னு வைக்காதவரைக்கும் பரவாயில்லன்னும் தோணுது..

hngpng

BoogeyMan 

‏மய்யம்.. #Maiam = Palindrome

பின்னால் இருந்து வாசித்தாலும் அதே உச்சரிப்பு...

Undoubtedly #KamalHaasan touch

அருண்

ஆண்டவரின் ஆட்டம் ஆரம்பம்..தொடரும் எங்கள் பணி.. நல்ல மாற்றம் வரும் இனி..

02png
 

Poovai ksr.pa.janarthanam

‏ஒத்தகடை கூட்டத்த வைச்சு எதும் முடிவு பண்ண முடியாது

வண்டலூர் மாநாட்டுல பாமக கூடுன கூட்டத்துக்கு சிஎம் ஆகி இருக்கனும் அன்புமணி...!

ஆனா டெபாசிட் போச்சு

பூரியார்

‏கூட்டத்துக்கு வந்தவனுகள பாத்தா இவனுக வேற எதோ சொல்லி ஏமாத்தி அங்க கூட்டிட்டு வந்துட்டானுக போல அனைவரும் கர கோஷம் எழுப்புங்கள்னு சொல்லி சொல்லி கை தட்ட வச்சுருக்கானுக

     

03png

சாந்தகுமார்

இன்று இத்தனை பிரச்சனை மக்களிடம் உள்ளதுனு பட்டியலிட்டு.இதையெல்லாம் #KamalHaasan சரி பண்ணுவாரானு கேக்குற கட்சிகாரங்க யாருமே,இதை சரி செய்தவர்கள் இல்லை..அவர்களுக்கான வாய்ப்பிலும் சரிசெய்யவில்லை என்பதாலயே அடுத்த தலைவன் உருவாகிறான் என்ற குற்றணர்ச்சி இல்லை?

சங்கர்

கமல்ஹாசன் என்கிற 'அரசியல் மாயை'  ஊதப்படும் வெற்று காற்று பலூன் போன்றது...

ஒரு கட்டத்தில் அழுத்தம் தாங்காமல் வெடித்து இருந்த சுவடு தெரியாமல் போகும்

HARIKRISHNAN

‏பூவை - பூஸ்பம் என்று சொல்லலாம்..

பூய்பம் என்றும் சொல்லலாமே..

        #செந்தில்*

மையம் - மைய்யம் என்று செல்லலாம்...

மய்யம் என்றும் சொல்லலாமே..

           #கமல்* ...

இப்போதே ஆரம்பித்து விட்டார்......

அவதார்

‏தாய் மொழி தினத்தில் பிறந்த "தமிழக அரசியலின் புதிய குழந்தை" #மக்கள்நீதிமய்யம்   

white and Red

‏மையமா? மய்யமா? தமிழே இங்க குழப்பமா இருக்கே #மய்யம் #மக்கள்நீதிமய்யம்

Naresh Cheenu

‏என்று ஒரு சாமானியத் தந்தை தம்பிள்ளையின் கல்விச்செலவு போக தன் குடும்பப்பொறுப்பை கடனில்லாமல் கவனக்கின்றானோ அன்றே நாடு வல்லரசாகும். அந்தநாளை எதிர்நோக்கிய பயணமாக #மக்கள்நீதிமய்யம் செயல்பட வாழ்த்துக்கள்...

rajessh 

‏யாருக்கும் அடிமையில்ல இவன் யாருக்கும் அரசனில்லை...விதை ஒன்று முளைக்கயில் வெளிப்படும் ரூபம் "விஸ்வருபம்"

நா.குமரேசன்

‏ஊழலை எப்படி ஒழிப்பது?!

நீங்கள் சரியாக இருந்தால் ஒழியும்!!

அதான் சரியா இல்லையே.. நெக்ஸ்டு..!! #மக்கள்நீதிமய்யம்

Sai Aravind

‏ஆளப்போறார் ஆண்டவர்!

பூபாலன்

‏அறிக்கை அரசியலாக இல்லாமல் அறம் சார்ந்த அரசியலாக இருந்தால் நன்று. வந்தால் வரவேற்பது மாண்பு , ஆனால் மக்கள் ஏற்பது உன் மதிப்பை பொருத்தே.

சி.சரவணகார்த்திகேயன்

‏என் வரையில் இன்றைய கமலின் பேச்சு ஏமாற்றமளித்தது. வரலாற்றில் இடம் பெறக்கூடிய ஒரு பேரியக்கத்தின் துவக்க விழாவில் அதன் தலைவர் ஆற்றும் உரையின் உயரத்தில் இல்லை இது.

ரோகிணி ராமதாஸ்

‏MBA படிச்ச எவனோ தான் கட்சி கொடிய டிசைன் பண்ணியிருக்கனும்..        எல்லா மேனேஜ்மெண்ட் ஃபெஸ்ட்லயும் இந்த கை சிம்பல் இருக்கும் .. பேரு நல்லாத் தான் இருக்கு, திராவிட மக்கள்ன்னு இருந்துருக்கலாம்...#மக்கள்நீதிமய்யம்

இறைவா

பிக்பாஸ் நிகழ்ச்சி வழியா ஒரு குரூப்பு அரசியல் ஆசையில என்ட்ரி குடுத்திருக்கு.. ம்ம்ம்

சண்டியர்

‏இணைந்த கரங்கள் கொடி..

இதுவே சின்னம் கிடைச்சா நல்லாருக்கும்..  

juiolpng

சால்ட்&பெப்பர் தளபதி

‏ஒரு நாள் முதல்வர் கிட்ட மக்கள் கேள்வி கேக்குற மாதிரி இருக்கு , கமல்

RasanaiBot

‏சந்தானபாரதியா தேசிய தொடர்பாளரா போடலாம். அமித் ஷா டைப்புல நேஷனல் மீடியாவுக்கு மேட்சிங்கா இருப்பாப்ல.

90png
 

Kaushik Seshadri

‏தசாவதாரம் உட்பட பல அவதாரங்களை எடுத்த உலக நாயகனின் புது அவதாரம்.

மற்ற அரசியல்வாதிகளை போல் வசூல் ராஜாவாக இல்லாமல் தமிழ்நாட்டின் நேர்மையான ஆளவந்தனாக அரசியலில் வெற்றி விழா காண வாழ்த்துக்கள்

Nellaiseemai

‏ஏதன் சாயலும் இல்லாமல் கட்சி கொடியோ, சின்னமோ வர முடியாது.

அதுவும் இப்போதைய இணைய உலகில் எங்கிருந்தாவது தேடி எடுத்து அது போல, இதுபோல என எளிதாக சொல்லி விடலாம்.

sdpng
kamalPNG
 

svenkadesh‏

காவிரி நீர் பிரச்சனையில் கமல், நீதிமன்றங்களில் நடந்த எந்தவொரு தீர்ப்பையும் படிக்கல என தெரிகிறது!!பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்கிறார், எந்த காலத்தில் இவர் இருக்கிறார் என புரியவில்லை 

Ramana

‏கட்சி பேர் உருவானது இப்படித்தான்!

நீட் தேர்வு மய்யம்

நீட் பயிற்சி மய்யம்

மாணவர் நீட் மய்யம்

மக்கள் நீட் மய்யம்

"மக்கள் நீதி மய்யம்"

jaleel

நான் சினிமா நட்சத்திரமல்ல, உங்கள் வீட்டு விளக்கு... கமல் பெட்ரோமாஸ் விளக்கா? குத்து விளக்கா???

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.