Jump to content

சுதந்திரக் கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கை - இந்தியா


Recommended Posts

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை அணியை பழிதீர்க்குமா இந்தியா? இன்று மீண்டும் மோதல்

 

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மீண்டும் மோதுகின்றன. முந்தைய தோல்விக்கு நமது அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

 
முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை அணியை பழிதீர்க்குமா இந்தியா? இன்று மீண்டும் மோதல்
 
கொழும்பு:

இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் ரவுண்ட் முடிந்து விட்டது.

இலங்கை அணி தனது தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை பதம் பார்த்தது. வங்காளதேச அணியோ 215 ரன்கள் இலக்கை சேசிங் செய்து, இலங்கைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. ஆக, மூன்று அணிகளும் தலா ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி என்று சமநிலை வகிப்பதால் இந்த போட்டித் தொடர் இப்போது கூடுதல் சுவாரஸ்யத்தை உருவாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் 4-வது லீக்கில் இந்திய அணி, மறுபடியும் இலங்கையை சந்திக்கிறது. முந்தைய ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு, இலங்கையை பழிதீர்ப்பதற்கு இந்திய அணிக்கு இது அருமையான வாய்ப்பாகும். அது மட்டுமின்றி இதில் வெற்றி பெற்றால், நெருக்கடியும் ஓரளவு தணியும்.

விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதால் இந்திய அணியை வழிநடத்தும் ரோகித் சர்மா பார்ம் இன்றி தவிப்பது தான் கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது. கடைசியாக அவர் விளையாடிய ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் 21, 0, 11, 0, 17 ரன் வீதமே எடுத்துள்ளார். மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் அட்டகாசப்படுத்தி வரும் நிலையில் (கடைசி 5 ஆட்டத்தில் 72, 24, 47, 90, 55 ரன்) ரோகித் சர்மாவும் மிரட்டினால் அணி வலுவான ஸ்கோரை எட்ட முடியும். மிடில் வரிசையில் சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே ஆகியோரின் பங்களிப்பை அணி நிர்வாகம் அதிகம் எதிர்பார்க்கிறது.

இலங்கை அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கிறது. குசல் பெரேரா தொடர்ச்சியாக இரு அரைசதங்களை விளாசியுள்ளார். எல்லா வகையிலும் சவால் கொடுக்க இலங்கை அணி தயாராக இருப்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் மூன்று ஆட்டங்களிலும் 2-வது பேட் செய்த அணியே வெற்றி கண்டிருப்பதால் இன்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, ரிஷாப் பான்ட் அல்லது லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், ஜெய்தேவ் உனட்கட், ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை: குணதிலகா, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, ஷனகா, திசராபெரேரா (கேப்டன்), தரங்கா, ஜீவன் மென்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா, அகிலா தனஞ்ஜெயா, சமீரா, நுவான் பிரதீப்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டி ஸ்போர்ட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/12101401/1150360/Nidahas-Trophy-Sri-Lanka-vs-India-today-match.vpf

Link to comment
Share on other sites

இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 153

 

 

இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு - 20 போட்டியில் இலங்கை அணி வெற்றி இலக்காக 153 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.

sss.jpg

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறும் இரு அணிகளுக்குமிடையிலான சுதந்திரக் கிண்ண இருபதுக்கு - 20 போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

DSC_1917.JPG

மழை காரணமாக போட்டி குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்காமையால் போட்டி 19 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.

DSC_2288.JPG

குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

தரங்க 22 ஓட்டங்களையும் சானக்க 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

S3.JPG

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் தாகூர் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் வொஷிங்டன் சுந்தர் 2விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தற்போது இந்திய அணி 153 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

http://www.virakesari.lk/article/31568

Link to comment
Share on other sites

பதிலடி கொடுத்த இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றது

 

 

இலங்கை அணிக்கு எதிரான சுதந்திரக் கிண்ணத் தொடரின் 4 ஆவது போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளைப் பெற்று முன்னிலை பெற்றது.

india-won.jpg

பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் சுதந்திரக் கிண்ண முக்கோணத் தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன.

சுதந்திரக்கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் 4ஆவது  முக்கிய போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

இத்தொடரில் 3 அணிகளுமே 2 போட்டிகளில் விளையாடிய நிலையில் 3 அணிகளும் தலா 2 புள்ளிகளைப்பெற்றுள்ளன.

இருப்பினும் புள்ளிப்பட்டியலில் ஓட்டசராசரியில் இலங்கை அணி முதலிடத்திலும் இந்திய அணி 2 ஆவது இடத்திலும் பங்களாதேஷ் அணி 3 ஆவது இடத்திலும் உள்ளன.

S3.JPG

இந்நிலையில் இன்றைய முக்கிய போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகள் ஒன்றையொன்று சந்தித்தன.

இன்றைய போட்டியில் மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்புக்கள் இருந்ததால் போட்டி தாமதமாகியே ஆரம்பித்தது.

இதனால் போட்டி 19 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

 

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.

குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். தரங்க 22 ஓட்டங்களையும் சானக்க 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் தாகூர் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் வொஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

153 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

 

இந்திய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் பாண்டியா  ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் டினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

http://www.virakesari.lk/article/31571

Link to comment
Share on other sites

இந்தியா - பங்களாதேஷ் இன்று களத்தில்... நெருக்கடியில் இலங்கை..!

 

 
 

சுதந்­திரக் கிண்ண இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரில் இந்­திய அணி தனது கடைசி லீக் ஆட்­டத்தில் பங்­க­ளா­தே­ஷுடன் இன்று மோது­கி­றது.

இலங்கை, இந்­திய, பங்­க­ளா தேஷ் ஆகிய நாடுகள் பங்­கேற் கும் முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரின் 5-வது ‘லீக்’ போட்டி இன்று நடை­பெ­ற­வுள்­ளது. 

இதில் இந்­தியா –- பங்­க­ளா தேஷ் அணிகள் பலப்­ப­ரீட்சை நடத்­து­கின்­றன. இந்­திய அணிக்கு இது கடைசி ‘லீக்’ ஆட்­ட­மாகும். அவ்வணி 3 போட்­டி­களில் விளை­யாடி இரண்டில் வென்­றது. ஒன்றில் தோற்­றது. ஏற்­க­னவே பங்­க­ளா­தேஷை இந்­திய அணி வீழ்த்தியிருந்­ததால் நம்­பிக்­கை­யுடன் உள்­ளது.

அதே­நே­ரத்தில் இலங்­கைக்கு எதி­ரான போட்­டியில் 5 விக்­கெட்டுக்­களை இழந்து 214 ஓட்­டங்­களை சேஸ் செய்து அபா­ர­மான வெற்­றியை பங்­க­ளாதேஷ் பதி­வு­செய்­தி­ருந்­தது. 

இதனால், பங்­க­ளாதேஷ் அணி ஒரு வெற்றி, 1 தோல்­வி­யுடன் விளை­யாடி வரு­கி­றது.

தற்­போது வரை முடிந்­துள்ள  நான்கு லீக் போட்­டி­களின் அடிப்­ப­டையில் புள்­ளிகள் பட்­டி­யலில் இந்­திய அணி 4 புள்­ளி­க­ளுடன் முத­லி­டத்தைப் பிடித்­துள்­ளது.

தொடரில் ஒரு வெற்றி, இரண்டு தோல்­வி­க­ளுடன் புள்­ளிப்­பட்­டி­யலில் 2 புள்­ளி­க­ளோடு இரண்­டா­வது இடத்­திற்கு தள்­ளப்­பட்­டி­ருக்கும் இலங்கை அணி இறுதிப் போட்­டிக்கு முன்­னேற கடு­மை­யாக போராட வேண்டியேற்­பட்­டுள்­ளது. 

இலங்கை அணிக்கு பங்­க­ளா­தே­ஷுடன் இன்னும் ஒரு போட்டி மாத்­தி­ரமே எஞ்­சி­யுள்ள நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேற இப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/31604

Link to comment
Share on other sites

டி20 தொடர்: வங்கதேசம் டாஸ் வென்றது; இந்திய அணியில் ஒரு மாற்றம்

 

 
bangladesh-v

கோப்புப்படம்

கொழும்பு நகரில் நடந்து வரும் நடாஹஸ் கோப்பை டி20 தொடரில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன.

இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் கொழும்பு பிரேமதேசா அரங்கில் நடந்து வருகிறது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 2 வெற்றிகளுடன் முன்னணியில்இருக்கிறது. இலங்கை, வங்கதேசம் தலா வெற்றியுடன் உள்ளன. வங்கதேசத்துக்கு இது 3-வது போட்டியாகும்.

இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் முகமதுல்லா பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். வங்கதேச அணியில் வீரர் டஸ்கினுக்கு பதிலாக அபு ஹைதருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கத்துக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றவகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

http://tamil.thehindu.com/sports/article23245271.ece

 

6.png&h=42&w=42

176/3
 

25.png&h=42&w=42

4/0 * (0.4/20 ov, target 177)
Link to comment
Share on other sites

இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி ; முக்கிய போட்டியில் பங்களாதேஷ் - இலங்கை மோதல்

 

 
 

 

தனது இறுதி லீக் போட்டியில் பங்களாதேஷ் அணியை 17 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இந்திய அணி சுதந்திரக் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் விளையாடும் முதல் அணியாக தன்னை உறுதிசெய்தது.

bav.jpg

சுதந்­திரக் கிண்ண இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரில் இந்­திய அணி தனது கடைசி லீக் ஆட்­டத்தில் பங்­க­ளா­தே­ஷுடன் இன்று மோதியது.

 

இலங்கை, இந்­தியா, பங்­க­ளா தேஷ் ஆகிய நாடுகள் பங்­கேற் கும் முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரின் 5 ஆவது ‘லீக்’ போட்டி இன்று ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

 

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணி சார்பாக அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா 89 ஓட்டங்களையும் தவான் 35 ஓட்டங்களையும் ரெய்னா 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் ரூபெல் ஹுசெய்ன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் 177 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி இறுதிவரை போராடி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று 17 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

பங்களாதேஷ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் முஸ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்கது 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் வொஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி ஒரு போட்டியில் தோல்வியுற்று 6 புள்ளிகளுடன் முதலாவது அணியாகவும் 3 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி ஒரு போட்டியில் வெற்றி 2 போட்டியில் தோல்வியுற்று 2 புள்ளிகளுடன் 2 ஆவது அணியாகவும் 3 போட்டிகளில் விளையாடியுள்ள பங்களாதேஷ் அணி ஒரு போட்டியில் வெற்றி 2 போட்டிகளில் தோல்வியடைந்து 2 புள்ளிகளுடன் 3 ஆவது அணியாகவும் உள்ளன.

இந்நிலையில் நாளை மறுதினம் இடம்பெறும் போட்டி இறுதிப் போட்டியை விட முக்கியமானதொரு போட்டியாக இலங்கை மற்றும் பங்களாஷே் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.

இப் போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்த்தாடவுள்ளது.

http://www.virakesari.lk/article/31638

Link to comment
Share on other sites

இலங்கையுடன் வங்கதேசம் இன்று மோதல்

 

 
16CHPMUASHAKIBALHASAN

BENGALURU, KARNATAKA, 22/03/2016: Shakib Al Hasan of Bangladesh addressing a press conference at the M. Chinnaswamy Stadium, on the eve of the ICC World Cup Twenty20 cricket match against India, in Bengaluru on March 22, 2016. Photo: K. Bhagya Prakash   -  K_BHAGYA PRAKASH

முத்தரப்பு டி 20 தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் அணிகள் இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 18-ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்தும்.

இந்திய அணி 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இந்த சூழ்நிலையில் தான் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் தொடரை நடத்தும் இலங்கை, வங்கதேச அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்தது. இரு அணிகளும் ஏற்கெனவே தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இலங்கைக்கு எதிராக 215 ரன்கள் இலக்கை துரத்தி வெற்றி கண்டுள்ளதால் வங்கதேசம் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. காயத்தில் இருந்து மீண்டுள்ள ஷாகிப் அல் ஹசன் அணியுடன் இணைந்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்கும் பட்சத்தில் வங்கதேச அணி கூடுதல் பலம் பெறும். அதேவேளையில் வங்கதேச அணிக்கு பதிலடி கொடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது இலங்கை அணி.

http://tamil.thehindu.com/sports/article23268065.ece

Link to comment
Share on other sites

பங்களாதேஷுக்கு வெற்றி இலக்கு 160 : இந்திய அணியுடன் மோதப்போகும் அணி எது ?

 

 
 

சுதந்திரக்கிண்ணத் தொடரின் முக்கியமான இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி இலக்காக 160 ஓட்டங்களை பங்களாதேஷ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.

ban.jpg

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இன்று இடம்பெறும் முக்கியமான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இப் போட்டியில் ஆரம்பம் முதல் இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிக்கப்பட ஒருகட்டத்தில் 41 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்நிலையில் அதிரடியாக விளையாடிய குசல் ஜனித் பேரேராவும் திஸர பெரேராவும் ஓட்ட எண்ணிக்கையை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வந்தனர்.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா 61 ஓட்டங்களையும் திஸர பெரேரா ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்தபிகுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பங்களாதேஷ் அணி வெற்றிபெற வேண்டுமாயின் 20 ஓவர்களில் 160 ஓட்டங்களைப் பெறவேண்டும்.

பொறுத்திருந்து பார்ப்போம் எந்த அணி வெற்றிபெற்று இந்திய அணியுடன் இறுதிப் போட்டியில் சுதந்திரக் கிண்ணத்திற்காக மோதப்போகின்றதென.

http://www.virakesari.lk/article/31694

Link to comment
Share on other sites

சுதந்திர கிண்ண முத்தரப்பு போட்டியில் பங்களாதேஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

bamgaladesh.jpg?resize=300%2C168

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் பங்குபற்றும் சுதந்திர கிண்ண முத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரின் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பங்களாதேஸ் அணி வெற்றியீட்டியுள்ளது. நாயணச்சுழற்சியில் வென்ற பங்களாதேஸ் அணி களத்தடுப்பினை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களைப் பெற்றது

 

பின்னர் 160 என்ற வெற்றி இலக்குடன் களமிங்கிய பங்களாதேஸ ;அணி வெற்றியீட்டியுள்ளது.  இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் இந்திய அணியுடன் பங்களாதேஸ் போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது

http://globaltamilnews.net/2018/71151/

Link to comment
Share on other sites

சுதந்திரக் கிண்ணத்தொடரில் இருந்து வெளியேறியது இலங்கை : இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் - இந்தியா

 

சுதந்திரக்கிண்ணத் தொடரின் முக்கியமான இன்றைய போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் தோற்கடித்த பங்களாதேஷ் அணி இலங்கையின் சுதந்திரக் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.

DSC_4937__1_.JPG

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இன்று இடம்பெறும் முக்கியமான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

274016.jpg

இப் போட்டியில் ஆரம்பம் முதல் இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிக்கப்பட ஒருகட்டத்தில் 41 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்நிலையில் அதிரடியாக விளையாடிய குசல் ஜனித் பேரேராவும் திஸர பெரேராவும் ஓட்ட எண்ணிக்கையை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வந்தனர்.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா 61 ஓட்டங்களையும் திஸர பெரேரா ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

274013.jpg

இப்போட்டியில் குசல் ஜனித் பெரேரா இருபதுக்கு - 20 போட்டியில் அதிவிரைவில் 1000 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த இலங்கை வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் 34 போட்டிகளில் 1000 ஓட்டங்களைக் கடந்துள்ளார்.

இதற்கு முதல் குமார் சங்கக்கார 38 போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்ததே சாதனையாக இருந்தது.

இதேவேளை, 6 விக்கெட்டுகக்காக குசல் ஜனித் பெரேராவும் திஸர பெரேராவும் இணைந்து இணைப்பாட்டமாக 97 ஓட்டங்களைப்பெற்று இலங்கையின் இருபதுக்கு - 20 போட்டியில் சாதனையைப் படைத்தனர். 

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்தபிகுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் 160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு தமிம் இக்பால் நல்ல ஆரம்பத்தினை வழங்க முதலாவது விக்கெட் 11 ஓட்டங்களைப் பெற்றபுாது பறிக்கப்பட்டது.

274010.jpg

சீரான இடைவெளிகளில் பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுகள் பறிக்கப்பட்டாலும் இறுதிவரை போராட்டிய பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து 2 விக்கெட்டுகளால் பங்களாதேஷ் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச்சென்றனர்.

இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் இறுதியில் 2 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலையேற்பட்டது. இறுதிபந்திற்கு முதல் பந்தில் 6 ஓட்டங்களைப் பறக்கவிட்ட மகமதுல்லா பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

பங்களாதேஷ் அணிசார்பில் துடுப்பாட்டத்தில் தமிம் இக்பால் 50 ஓட்டங்களையும் இறுதிவரை போராடிய மஹமதுல்லா 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இலங்கை அணியை 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி சுதந்திரக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.

http://www.virakesari.lk/article/31696

Link to comment
Share on other sites

மோதல், வாக்குவாதம், சர்ச்சை: பரபரப்பான போட்டியில் மஹ்முதுல்லா அதிரடியில் வ.தேசம் வெற்றி: இறுதியில் இந்தியாவைச் சந்திக்கிறது

 

 
mahmudulla

ஏகப்பட்ட உணர்ச்சி மோதல்களுக்கிடையே வெற்றி பெற்ற மஹ்முதுல்லாவைப் பாராட்டும் தருணம்.   -  படம். | ஏ.பி.

கொழும்புவில் நடைபெறும் நிதாஹஸ் டிராபி டி20 முத்தரப்பு தொடரில் இரு அணி வீரர்களிடையேயான கடைசி நேர மோதல்களை மீறி வங்கதேச வீரர் மஹ்முதுல்லா கடைசி ஓவரில் 4 பந்துகளில் தேவையான 12 ரன்களை விளாசி தன் அணியை இறுதிப்போட்டிக்கு இட்டுச் சென்றார்.

இறுதியில் இந்தியாவும் வங்கதேசமும் மோதுகின்றன.

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய இலங்கை அணி குசல் பெரேரா (61) திசர பெரேரா (58) நிமிரலினால் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்களை எடுக்க முடிந்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் மோதல்கள், வாக்குவாதங்களுக்கிடையே 19.5 ஒவர்களில் 160/8 என்று பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

கடைசி ஓவர் நாடகம்: நோ-பால் சர்ச்சை, பாம்பு டான்ஸ், வாக்குவாதம்

வங்கதேச பதிலி வீரருக்கும் இலங்கை வீரருக்கும் மோதல் ஏற்பட்டது, ஷாகிப் அல் ஹசன் வீரர்களை திரும்பி அழைப்பதில் குறியாக இருந்தார். அப்படிச் செய்திருந்தால் அது ஆட்டத்தைக் கைவிட்டதாகக் கருதப்பட்டு இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் கலீத் மஹ்மூத். மஹ்முதுல்லாவிடம் போட்டியை முடித்து விட்டு வருமாறு செய்கை செய்தார்.

nagin%20dancejpg

இலங்கை வீரர்களை கேலி செய்யும் பாம்பு டான்ஸ்.   -  படம். | ஏ.எப்.பி.

 

இலங்கை அணி வங்கதேசத் தொடருக்குச் சென்ற போது ஒருவிதமான பாம்பு டான்ஸ் ஆடி இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் கேலி, கிண்டல் செய்து வந்ததிலிருந்து இந்தப் பகைமை வளர்ந்து வந்துள்ளது. இதோடு கடைசி ஓவரை உதனா வீச முதல் பவுன்சர் முஸ்தபிசுர் ரஹ்மான் தோள்பட்டைக்கு மேல் சென்றது நோ-பால் கொடுக்கவில்லை, ரன் இல்லை. 2வது பந்தும் அதே மாதிரி செல்ல நடுவர் உயரமாகச் சென்றதற்கான நோ-பால் கொடுக்கவில்லை. உண்மையில் நோ-பால் கொடுத்திருக்க வேண்டும்.

கேப்டன் மஹ்முதுல்லா நடுவர்களிடம் நோ-பால் கொடுக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்படிக் கொடுத்திருந்தால் 5 பந்துகளில் 11 ரன்கள் தேவை என்று ஆகியிருக்கும் ஆனால் மாறாக 4 பந்துகளில் 12 ரன்கள் என்ற இக்கட்டு ஏற்பட்டது. லெக் அம்பயர் நோ-பால் சிக்னல் செய்ததாக ஆட்டம் முடிந்தவுடன் தமிம் இக்பால் கூறினார். சர்ச்சையான அதே 2ம் பந்தில் முஸ்தபிசுர் ரஹ்மான் ஒரு ‘பை’ ரன் எடுக்கலாம் எனும் முயற்சியில் ரன் அவுட் ஆக 4 பந்துகளில் 12 ரன்கள் தேவை. மஹ்முதுல்லா சாமர்த்தியமாக முஸ்தபிசுர் ரஹ்மானை அழைத்து ஒரு ரன் ஓடியதால் ஸ்ட்ரைக் இவர் கைக்கு வந்தது.

அடுத்த உதனா பந்து வைடாக வீசப்பட்டது, விட்டிருந்தால் அது வைடுதான் ஆனால் மஹ்முதுல்லா அதனை கவர் திசையில் பவுண்டரி விளாசினார். அடுத்த பந்து தாழ்வான புல்டாஸ் 2 ரன்கள். வெற்றிக்குத் தேவை 6 ரன்கள், கைவசம் 2 பந்துகள் மீதமுள்ளன, இப்போது மிடில் அண்ட் லெக்கில் ஒரு ஃபுல் பந்து விழ பேகவர்ட் ஸ்கொயர் லெக் மேல் சிக்ஸ் தூக்கினார் மஹ்முதுல்லா புயலுக்குப் பின்னே அமைதி, இறுதிப் போட்டிக்கு வங்கதேசம் முன்னேறியது.

மஹ்முதுல்லா நடுவர்களிடம் நோ-பாலுக்காக வாதிட்டுக் கொண்டிருந்த போது வங்கதேச பதிலி வீரர் குளிர் பானத்துடன் களத்துக்குள் வந்தார், அவர் சும்மாயில்லாமல் இலங்கை வீரர்களுடன் ஏதொ வாக்குவாதம் புரிந்தார். இதனால் பொறுக்கமாட்டாமல் இலங்கை வீரர் அந்த பதிலி வீரரை தள்ளினார். இது வங்கதேச வீர்ர்களை கொதிப்படையச் செய்ய கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மாடியிலிருந்து இறங்கி எல்லைக்கோட்டருகே வந்தார். அங்கு ஏதோ வாக்குவாதம் நிகழ களத்திலிருந்த மஹ்முதுல்லாவையும் ரூபல் ஹுசைனையும் மைதானத்தைவிட்டு வெளியேறுமாறு அழைத்தார். அப்போதுதான் கலீத் மஹ்மூத் ஆட்டத்தை முடித்து விட்டு வாருங்கள் என்று மஹ்முதுல்லாவுக்கு அறிவுறுத்தினார். இத்தோடு முடிந்ததா? மஹ்முதுல்லா வென்றவுடன் வங்கதேச வீரர்கள் குழுமி அதே நாகின் டான்ஸை ஆட இம்முறை இலங்கையின் குசல் மெண்டிஸ் வங்கதேச வீரர்களை நோக்கி கோபமாகச் செய்கை செய்ய தமிம் இக்பால் அவரைச் சமாதானப்படுத்தினார், மொத்தத்தில் தெருக்கிரிக்கெட்டில் நடக்கும் சண்டை போல் இருந்தன இந்தக் காட்சிகள்.

இலங்கை மோசமான தொடக்கம்:

பேட் செய்ய அழைக்கப்பட்ட இலங்கை மோசமாகத் தொடங்கியது, ஷாகிப் அல் ஹசன் பந்தை லாங் ஆனில் கேட்ச் கொடுத்து குணதிலக வெளியேறினார். முஸ்தபிசுர் ரஹ்மானின் மிக அருமையான ஓவரில் குசல் மெண்டிஸ் ஷார்ட் பிட்ச் பந்துக்கு டைமிங் கிடைக்காமல் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்தார். உப்புல்தரங்கா மெஹிதி ஹசன், பவுலர் முஸ்தபிசுர் கூட்டணியில் ரன் அவுட் ஆனார். அதே ஓவரில் ஷனகா எட்ஜ் செய்து டக் அவுட் ஆக 32/4. ஜீவன் மெண்டிஸ், மெஹிதி ஹசன் மிராஸிடம் விழ இலங்கை 9வது ஓவரின் முதல் பந்தில் 41/5 என்று மோசமான நிலையை அடைந்தது.

ஆனால் அதன் பிறகு குசல், திசர பெரேராக்கள் இணைந்தனர் 10 ஓவர்கள் அதிரடி கூட்டணி அமைத்து 97 ரன்களை விளாசினர். குசல் பெரேரா 40 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 61 ரன்கள் எடுக்க, திசர பெரேரா 37 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 58 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி கடைசி 6 ஓவர்களில் 69 ரன்கள் எடுத்து ஒரு வழியாக மரியாதைக்குரிய 159/7 என்ற ஸ்கோரை எட்டியது. வங்கதேச அணியில் முஸ்தபிசுர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மெஹிதி ஹசன் 4 ஒவர்களில் 16 ரன்களையே கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். சவுமியா சர்க்கார், ரூபல் ஹுசைன் ஷாகிப் ஆகியோரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

தமிம் இக்பால் அரைசதம், மஹ்முதுல்லா விளாசல்:

இலங்கைப் பந்து வீச்சில் வங்கதேசம் 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, லிட்டன் தாஸ் டக் அவுட் ஆக, சபீர் ரஹ்மான் 3 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுக்க இருவருமே அகிலா தனஞ்ஜயாவின் அருமையான பவுலிங்குக்கு ஆட்டமிழந்தனர்.

ஆனால் முஷ்பிகுர் ரஹிம் (28), தமிம் இக்பால் இணைந்து 8.4 ஒவர்களில் 64 ரன்கள் எடுத்தனர். தமீம் இக்பால் தனக்கேயுரிய பாணியில் ஆடி 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 42 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். முஷ்பிகுர் ரஹ்மான் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அபான்சோவிடம் 13வது ஓவரில் வெளியேறினார். தமிம் இக்பாலும் அடுத்த ஓவரில் அவுட ஆக, சவுமியா சர்க்கார் 10 ரன்களில் ஜீவன் மெண்டிஸிடம் வெளியேற 15வது ஓவர் முடியும் தறுவாயில் வங்கதேசம் 109/5 என்று ஆட்டம் பரபரப்பானது. 31 பந்துகளில் 51 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

மஹ்முதுல்லா முதலில் குணதிலகவை ஒரு பவுண்டரி அடித்தார், பிறகு ஜீவன் மெண்டிஸ் பந்தை மேலேறி வந்து சக்தி வாய்ந்த ஷாட்டில் சிக்ஸ் விளாசினார். உதனா பந்தில் ஷாகிப் உல் ஹசன் 7 ரன்களில் அவுட் ஆக 12 பந்துகளில் 23 ரன்கள் என்று டென்ஷன் ஆனது. 19வது ஓவரில் மஹ்முதுல்லா ஒரு பவுண்டரி அடிக்க, மெஹிதி ஹசன் ரன் அவுட் ஆனார். அப்போதுதான் கடைசி 5 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி உதனா ஓவரில் சர்ச்சைகள், தகராறுகள், உணர்ச்சி மோதல்கள், வாக்குவாதங்கள் ஏற்பட்டது, ஆனாலும் மஹ்முதுல்லா குறிக்கோளில் திடமாக இருந்து வெற்றியைச் சாதித்தார். இவர் 18 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 43 நாட் அவுட்.

ஆட்ட நாயகனாக மஹ்முதுல்லா தேர்வு செய்யப்பட்டார், இறுதியில் இந்தியாவுடன் வங்கதேசம் மோதுகிறது, சொந்த மண்ணில் இலங்கைக்கு பெரும் ஏமாற்றத்துடன் வங்கதேச வீர்ர்களின் நாகின் டான்ஸ் வேறு இலங்கை வீரர்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23275427.ece

Link to comment
Share on other sites

வங்காள தேச வீரர்கள் அணியாக போராடும் உத்வேகம் படைத்தவர்கள்- தினேஷ் கார்த்திக்

 

வங்காள தேச வீரர்கள் அணியாக போராடும் உத்வேகம் படைத்தவர்கள் என்று இந்திய அணி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். #nidahasTrophy #INDvBAN

 
வங்காள தேச வீரர்கள் அணியாக போராடும் உத்வேகம் படைத்தவர்கள்- தினேஷ் கார்த்திக்
 
இலங்கையில் இந்தியா, வங்காள தேசம், இலங்கை அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நிதாஹாஸ் என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் அடிப்படையில் இந்தியா மூன்று வெற்றிகளுடனும், வங்காள தேசம் இரண்டு வெற்றிகளுடனும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இறுதிப் போட்டி நாளை இரவு 7 மணிக்கு கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. வங்காள தேச அணி இதுவரை டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை வீழ்த்தியது கிடையாது. நாளையும் இந்த சாதனை தொடரும் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் இருக்கும் நிலையில், வங்காள தேச அணியை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம் என்று இந்திய அணி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

201803172030154489_1_dineshkarthik1-s._L_styvpf.jpg

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘‘வங்காள தேச வீரர்கள் ஒரு அணியாக போராடும் உத்வேகம் உடையவர்கள். அவர்கள் கடின முயற்சியை மேற்கொள்வார்கள். அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு டெஸ்ட் அந்தஸ்து பெறவில்லை. குறுகிய காலத்திற்குள் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் முன்னேறியுள்ளனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வங்காள தேச வீரர்கள், துணைக் கண்டத்தில் அபாரமான ஆடக்கூடியவர்கள். அவர்கள் சிறந்த அணி. நாங்கள் எங்களுடைய வழக்கமான பணிகள் மீது கவனம் செலுத்த முயற்சி செய்து வருகின்றோம். தற்போதுவரை இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது’’ என்றார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/17203015/1151603/INDvBAN-Bangladesh-very-good-team-Dinesh-Karthik.vpf

Link to comment
Share on other sites

இந்திய அணி சிறந்ததொரு அணி: ஷாகிப் அல் ஹசன் ‘சர்டிஃபிகேட்’

 

 
shakibjpg

வ.தேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன்   -  படம்: ஏ.எஃப்.பி.

இந்தியாவுடனான இறுதிப் போட்டிக்கு உத்வேக அளவில் தங்கள் அணி முன்னணியில் இருப்பதாகக் கூறிய கேப்டன் ஷாகிப் அல் ஹசன், இந்திய அணி சிறந்ததொரு அணி என்று சான்றிதழ் வழங்கியுள்ளார்.

“இந்தியா சிறந்ததொரு அணி, ஆனால் எங்கள் அணியிடம்தான் உத்வேகம் உள்ளது. எனவே இலங்கைக்கு எதிரான அதே ஆட்டத்தைத் தொடருவோம் என்று நம்புகிறேன்.

இந்தியாவிடம் இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்ததையடுத்து நாங்கள் அதைப்பற்றி விவாதிக்கவில்லை, அழுத்தம் பற்றி நாங்கள் யோசிக்கவில்லை, அழுத்தம் பற்றி யோசித்தால்தான் அது அழுத்தமாக மாறும். அதைப்பற்றியே நினைக்கவில்லை எனில் பிரஷர் கிடையாது.

வீரர்கள் அனைவரும் கவலைப்படாமல் இருக்கின்றனர். இதே மனநிலையில் களமிறங்கினால் நல்லது. எங்கள் அணியில் யாருக்கும் மனத்தடை என்பது இல்லை. அதுதான் எங்களை நன்றாக ஆட வைக்கிறது. இந்தியாவுக்கு எதிராக இது மிகப்பெரிய இறுதிப் போட்டி என்று நினைத்தால் அடுத்த நிமிடம் அழுத்தம் நமக்கு சுமையாக மாறும்.

தொழில்நுட்ப உதவியினால் இந்திய வீரர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதை ஓரளவுகுத் தெரிந்து வைத்துள்ளோம். அனுபவசாலிகள் அவர்களுக்குக் களத்தில் வசதியாக விளையாட முடியாத அளவுக்கு நெருக்கடி கொடுப்போம். நன்றாக்த் தொடங்கி அதே நிலையைத் தக்க வைக்க வேண்டும்” இவ்வாறு கூறினார் ஷாகிப்

http://tamil.thehindu.com/sports/article23285508.ece?homepage=true

Link to comment
Share on other sites

இலங்கையின் சுதந்திரக்கிண்ணம் இறுதிப் பந்தில் இந்தியாவிடம் பறிபோனது

 
 

இலங்கையின் சுதந்திர கிண்ணத்திற்கான முக்கோணத்தொடரில் பங்களாதேஷ் அணியை 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இந்திய அணி சுந்திர கிண்ணத்தை கைப்பற்றியது.

india3.jpg

ஆரம்பம் முதல் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி ஒரு பந்தில் 6 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில் ஆடுகளத்தில் இருந்த டினேஷ் கார்த்திக் அந்த ஒரு பந்தை எதிர்கொண்டு 6 ஓட்டங்களுக்கு பந்தை விரட்ட இந்திய அணி திரிவெற்றியைப் பெற்றது.

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்த இருபதுக்கு - 20 முக்கோண கிரிக்கெட் தொடர் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் இந்த முக்கோண கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடின.

போட்டியை நடத்தும் இலங்கை இறுதிப்போட்டியில் விளையாடும் தகுதியை இழந்திருந்த நிலையில் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.

மார்ச் மாதம் 6 ஆம் திகதி சுதந்திரக் கிண்ணத்திற்கான போட்டித் தொடர் ஆரம்பமாகியது.

சுதந்திரக் கிண்ணத் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர் . பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றன.

அந்தவகையில் சுதந்திரக் கிண்ணத் தொடருக்கான இறுதிப் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி பங்களாதேஷ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுக்கள் ஆரம்பத்தில் விரைவில் சரிக்கப்பட்டாலும் மிகவும் நிமானமாக ஆட்டத்தை வெளிக்காட்டிய ஷபிர் ரஹ்மான் 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

ஏனைய வீரர்கள் பெரிதும் சோபிக்காத போதிலும் மஹமதுல்லா 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சஹால் 3 விக்கெட்டுகளையும் உண்கன்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் 167 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றிபெற்று இலங்கையின் சுந்திரக் கிண்ணத்தை பறிக்கும் நோக்குடன் களமிறங்கிய இந்திய அணி அணித் தலைவர் ரோஹித் சர்மாவின் பொறுப்பான ஆட்டத்துடனும் டினேஷ் கார்த்திக்கின் அதிரடியுடனும் இந்திய அணி வெற்றி இலக்கை அடைந்து 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா 56 ஓட்டங்களையும் பாண்டியா 28 ஓட்டங்களையும் இறுதிவரை ஆட்டமிழக்காது களத்திலிருந்து அதிரடி காட்டி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட டினேஷ் கார்த்திக் 8 பந்துகளை எதிர்கொண்டு 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில் ருபெல் ஹுசெய்ன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

http://www.virakesari.lk/article/31752

Link to comment
Share on other sites

முத்தரப்பு டி20 தொடர் - தினேஷ் கார்த்திக் அதிரடியால் கோப்பையை வென்றது இந்தியா

 
அ-அ+

நிதாஹாஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வங்காள தேசம் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. #NidahasTrophy #INDvBAN #DineshKarthik #WashingtonSundar

 
 
 
 
முத்தரப்பு டி20 தொடர் - தினேஷ் கார்த்திக் அதிரடியால் கோப்பையை வென்றது இந்தியா
 
கொழும்பு:

இலங்கையில் நடைபெற்று வரும் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் சிராஜ் நீக்கப்பட்டு உனத்கட் சேர்க்கப்பட்டுள்ளார். வங்காள தேச அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

201803182335381442_1_j7x5ml9p._L_styvpf.jpg

வங்காள தேச அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இக்பால், லித்தோன் தாஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் தமிம் இக்பால் பவுண்டரி அடித்தார். 2-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 3-வது ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரில் லித்தோன் தாஸ் சிக்ஸ் ஒன்று விளாசினார். இதனால் உனத்கட் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

முதல் மூன்று ஓவரில் வங்காள தேசம் 26 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் லித்தோன் தாஸ் ஆட்டமிழந்தார். அவர் 9 பந்தில் 11 ரன்கள் சேர்த்தார். சுந்தர் இந்த ஓவரில் ஒரு ரன் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அடுத்த ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரில் சாஹல் தமிம் இக்பாலையும், சவுமியா சர்காரையும் வீழ்த்தினார். இதனால் வங்காள தேசத்தின் ரன் வேகத்தில் மந்தநிலை ஏற்பட்டது.

201803182335381442_2_vvuufhgc._L_styvpf.jpg

3-வது வீரராக களம் இறங்கிய சபீர் ரஹ்மான் மட்டும் சிறப்பாக விளையாடினார். அவருக்கு மெஹ்முதுல்லா நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். ஆனால் மெஹ்முதுல்லா 21 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். சபிர் ரஹ்மான் 37 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய சபிர் ரஹ்மான் 50 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 77 ரன்கள் எடுத்து 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

உனத்கட் 19-வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தி வங்காள தேச அணியின் கடைசிகட்ட ரன்குவிப்பிற்கு முட்டுக்கட்டை போட்டார். இருந்தாலும் கடைசி ஓவரில் ஷர்துல் தாகூர் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ருடன் 18 ரன்கள் விட்டுக்கொடுக்க வங்காள தேசம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.

167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். தவான் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின் ரோகித் சர்மா உடன், கே.எல். ராகுல் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.

இந்த ஜோடி 51 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ராகுல் ஆட்டமிழந்தார். அவர் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். அதைத்தொடர்ந்து ரோகித் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் நிதானமாக விளையாடி வந்த ரோகித் சர்மா 35 பந்துகளில் அரைசதம் கடந்தார். ரோகித் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் தமிழக வீரர் விஜய் சங்கர் களமிறங்கினார். இதுவே சர்வதேச போட்டிகளில் விஜய் சங்கர் பேட்டிங் பிடிக்கும் முதல் தடவையாகும்.

201803182335381442_3_AP3_18_2018_000230B._L_styvpf.jpg

மணிஷ் பாண்டே 27 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். ஒரு கட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 2 ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தினேஷ் கார்த்திக் அதிரடியில் இறங்கினார். 19-வது ஓவரில் பேட்டிங் பிடித்த தினேஷ் கார்த்திக், இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரி, ஒரு இரண்டு ரன் உட்பட 22 ரன்கள் எடுத்தார்.

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. முதல் மூன்று பந்துகளில் இந்திய அணிக்கு 3 ரன்கள் கிடைத்தது. நான்காவது பந்தை விஜய் சங்கர் பவுண்டரிக்கு அனுப்பினார். ஐந்தாவது பந்தில் அவர் கேட்ச் ஆகி வெளியேறினார். இறுதி பந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த பந்தில் பேட்டிங் பிடித்த தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்தார். இதன்மூலம் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 29 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார்.

இந்த போட்டியின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற செய்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது வீரராக தினேஷ் கார்த்திக் இடம் பிடித்துள்ளார்.

201803182335381442_4_AP3_18_2018_000232B._L_styvpf.jpg

அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஐந்து போட்டிகளில் 8 விக்கெட் வீழ்த்திய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகன் விருது பெற்றார். #NidahasTrophy #INDvBAN #DineshKarthik #WashingtonSundar

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/18231547/1151739/India-Beat-Bangladesh-to-lift-Nidahas-Trophy-final.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையா நீங்கள் புதுப் பதிவு போட வேண்டிய  அவசியமே இல்லை........ அதுதான் அவர் போட்டி விதிகளில் வடிவாக சொல்லியிருக்கிறார் ....போட்டி விதி  04 ஐப் பின்பற்றி அவரின் அனுமதி பெற்று உங்களின் பதிவில் சில திருத்தங்கள் செய்யலாம்........ அவரின் அனுமதி பெறுவது உங்களின் கெட்டித்தனம் ...... ஏதோ என்னாலானது "புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்".....!  😁
    • அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்பநிலை! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது குறித்த  மக்கள் சந்திப்பின் போது செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அதனை காணொளியாக பதிவு செய்திருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காணொளி எடுக்க வேண்டாமென  அவரைத் தடுத்ததோடு அதனை மீறி எடுத்து செய்தி பிரசுரித்தால் வீடுதேடி வருவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்ததாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் பொலிஸார் அமைச்சருக்கு இது குறித்து தெரியப்படுத்தி இருந்ததாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் இது தொடர்பாக  எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1378726
    • இராணுவ வீரர்களின் கவனத்திற்கு! முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கை, 72 மணித்தியலங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அடையாள அட்டை அல்லது இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் அறிக்கையின் பிரதி, தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர பிரதி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் பிரதி ஆகியவற்றை கொண்டுவருமாறு இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காமை தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகமளிக்காது தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1378764
    • கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது! கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன ஏப்ரல் 2023 இல், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இதன் மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் மொத்தம் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பண கையிருப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378752
    • அமெரிக்கா உடனடி பதில் தாக்குதலை தான் ஆதரிக்கவில்லை என்று கூறிவிட்டது. அப்படியென்றால் முதல் பத்தியில் இருக்கும் 74% உம் பொருந்தும்தானே!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.