Jump to content

புன்­னகை இரா­ஜ­தந்­தி­ரத்தால் வட­கொ­ரிய, தென்­கொ­ரிய பிணக்கை தீர்த்­து­வைக்க முடி­யுமா?


Recommended Posts

புன்­னகை இரா­ஜ­தந்­தி­ரத்தால் வட­கொ­ரிய, தென்­கொ­ரிய பிணக்கை தீர்த்­து­வைக்க முடி­யுமா?

 

இவ்­வாரம் தென்­கொ­ரிய தலை­ந­கரம் சியோலில் ஆரம்­ப­மான குளிர்­கால ஒலிம்பிக் போட்டி கொரிய தீப­கற்ப மக்­க­ளுக்கு அதிர்ச்­சி­யுடன் மகிழ்ச்­சி­யையும் கொடுத்­துள்­ளது. எப்போ யுத்தம் மூளும் என்ற அச்­ச­வு­ணர்­வுடன் வாழ்­கின்ற மக்கள் யுத்த முஸ்­தீ­பு­க­ளினால் அழிய வேண்­டுமா என்ற ஏக்­கத்­துடன் வாழ்­கின்­றனர். ஒருபுறம் வட­கொ­ரிய தலை­வரின் அணு ஆயுத நிகழ்ச்­சித்­திட்டம் மறு­புறம் விட­மாட்டேன் பார் என்­கின்ற அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்மின் கர்ச்­ச­னைகள் கொரிய மக்­க­ளுக்கு இத­மான செய்­தி­க­ளாக அமை­ய­வில்லை. மாசி முதல் 9–25 திக­தி­களில் நடை­பெ­ற­வுள்ள ஒலிம்பிக் போட்டி ஆரம்ப நிகழ்­வுக்கு வடகொரிய தலைவர் கிம்யொங் உன் தமது நெருங்­கிய அர­சியல் சகாவும் சொந்த சகோ­த­ரி­யு­மா­கிய கிம்யோ யொங்கை தனது பிரத்­தி­யேக தூது­வ­ராக சியோ­லுக்கு அனுப்­பி­யுள்ளார். இவ் விடயம் வடகொரிய -– தென்­கொ­ரிய முறுகல், கொதி நிலைக்கு சற்று குளிர்ச்சி தரும் விட­ய­மாக அமைந்­துள்­ளது என விட­ய­ம­றிந்த சர்­வ­தேச அவ­தா­னிகள் கருத்து தெரி­வித்­துள்­ளனர். வட­கொ­ரிய ஜனா­தி­பதியின் தங்­கை­ தென்­கொ­ரிய ஜனா­தி­ப­திக்கு தனிப்­பட்ட அழைப்­பிதழ் தாங்­கிய கடிதம் ஒன்­றையும் அனுப்­பி­யுள்ளார். கொரிய பிரச்­சி­னைகளுக்கு தீர்வு காணும் முக­மாக வடகொரி­யாவில் நிகழ்த்த உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள உச்­சி­மா­நாட்­டுக்கு வரு­மாறு தென்­கொ­ரிய ஜனா­தி­ப­திக்கு அழைப்­பிதழ் அனுப்­பி­யுள்ளார். இவ்­வ­ழைப்பை தென்­கொ­ரிய ஜனா­தி­பதி ஏற்­பாரா பங்­கு­பற்­று­வாரா என்­பது இன்னும் தெளிவா­க­வில்லை. எவ்­வா­றி­ருப்­பினும் வட­கொ­ரிய ஜனா­தி­ப­தியின் தங்கை தென்­கொ­ரி­யா­வுக்கு விஜயம் செய்­தமை மிக முன்னேற்றகர­மான விடயம் என்­பதில் இரண்டு கருத்­து­கட்கு இட­மில்லை. ஒலிம்பிக் ஆரம்­ப­வி­ழாவில் அமெ­ரிக்க உப ஜனா­தி­பதி மைக்பென்ஸ், ஜப்­பா­னிய பிர­தமர் அபே, வட­கொ­ரிய பிர­தி­நிதி கிம்யோ யொங், தென்­கொ­ரிய ஜனா­தி­பதி மூன் ஆகியோர் பங்­கு­பற்­றி­யமை குறிப்­பி­டத்­தக்­கது. பல்­லாண்­டு­கட்கு பின்னர் வட­கொ­ரிய உயர்­மட்டத் தலைவர் சியோ­லுக்கு விஜயம் செய்­தமை சமா­தான முயற்­சி­க­ளுக்கு ஆறு­தலைத் தரும் விட­ய­மா­கும்.

இது­மட்­டு­மல்ல ஒலிம்பிக் போட்­டியில் இரு நாடு­களும் இணைந்து ஒரே அணி­யாக ஹொக்கி விளை­யாட்டில் பங்­கு­பற்­று­வது மேலும் நம்­பிக்­கையை ஊட்­டு­கி­றது. விளை­யாட்டு நாடு­களை இணைக்­கி­றது. சமா­தா­னத்தை ஊக்­கு­விக்­கி­றது என்­ப­தற்கு ஒலிம்பிக் போட்டி ஒரு உதா­ர­ண­மாகும். 1972 இல் சர்­வ­தேச அர­சியல் பிரச்­சி­னை­களில் ''பிங்பொங் இரா­ஜ­தந்­திரம்'' என்­கின்ற சொற்­பி­ர­யோகம் முதன்­மை­பெற்­றது. மக்கள் சீனாவை அங்­கீ­க­ரிக்­காமல் மக்கள் சீனா­வுடன் இரா­ஜ­ரீக தொடர்­பு­களை பேணாத அமெ­ரிக்கா 1971 இல் சீனா­வுக்கு பிங்பொங் (ரென்னிஸ்) அமெ­ரிக்க விளை­யாட்­டுக் குழுவை அனுப்­பி­யி­ருந்­தது. ஜனா­தி­பதி நிக்­சனும் பீஜிங் சென்றார். அவ­ருக்கு மகத்­தான வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது. அமெ­ரிக்க ஜனா­தி­பதி சீனாவே ஒரே சீன­நாடு என அங்­கீ­க­ரித்தார். அதன் பிறகே ஐ.நா . சபையில் மக்கள் சீனா அங்­கத்­துவம் பெற்று பாது­காப்புச் சபையில் நிரந்­தர நாடா­கி­யது. ஒலிம்பிக் ஹொக்கி போட்­டியில் விளை­யாடும் இரு நாடு­க­ளையும் சேர்ந்த வீரர்­களின் அணி பகை­மையை மறந்து சகோ­த­ரத்­து­வத்­துடன் கொரிய மக்கள் வாழ­மு­டியும் என்­ப­தற்கு வழி­வ­குக்கும் என சில இரா­ஜ­தந்­தி­ரிகள் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளனர்.

இது இவ்­வாறிருக்க தென்­கொ­ரி­யாவின் நெருங்­கிய நட்­பு­றவு நாடான அமெ­ரிக்கா அர­சியல், பொரு­ளா­தார, இரா­ணுவ உத­வி­களை தென்­கொ­ரி­யா­வுக்கு 1950 இலி­ருந்து வழங்கி வரு­கின்­றது. தென்­கொ­ரி­யாவை வட­கொ­ரி­யாவின் அச்­சு­றுத்­தலி­லி­ருந்து பாது­காக்க தென்­கொ­ரி­யாவில் படைத்­த­ளத்­தினை பரா­ம­ரித்து வரு­கின்­றது.

வட­கொ­ரி­யா­வுக்கு எதி­ராக வான் ,கடல் முனை­களில் பாது­காப்பை அதி­க­ரித்­துள்­ளது. ஐ.நா. சபையில் தொடர்ச்­சி­யாக பொரு­ளா­தார தடை­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யது. கிழக்­கா­சிய பிராந்­தி­யத்தில் வட­கொ­ரி­யா­வுக்கு எதி­ரான கூட்­ட­ணியை அமைக்க முற்­ப­டு­கி­றது. இவ்­வா­றான சூழ்­நி­லையில் தென்­கொ­ரியா வட­கொ­ரி­யா­வுடன் இணக்­க­மான அணுகு முறையைப் பின்­பற்­று­வது அமெ­ரிக்க தந்­தி­ரோ­பா­யத்­துக்கு கிடைத்த தோல்­வி­யாக அமை­ய­மு­டியும். வட­கொ­ரிய அதிபர் தங்­கையை சியோ­லுக்கு அனுப்­பி­வைத்­தது அமெ­ரிக்­காவை தென்­கொ­ரி­யா­வி­லி­ருந்து சற்று தள்­ளி­வைப்­ப­தற்­கான தந்­தி­ரோ­பாயம் என டைம்ஸ் பத்­தி­ரிகை கருத்து தெரி­வித்­துள்­ளது. கொரிய சகோ­த­ரர்கள் ஒரு­வ­ரை­யொ­ருவர் மோதக்­கூ­டாது என்­கின்ற நிலைப்­பாட்டை அடி­யொற்­றியே தென்­கொ­ரிய ஜனா­தி­பதி முன்­னைய தேர்தல் பிர­சா­ரங்­களில் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்த வேண்­டுமென எடுத்­து­ரைத்தார். வட­கொ­ரி­யா­வுடன் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என்­கின்ற நிலைப்­பாட்டில் தொடர்ந்தும் இருக்­கின்றார் என்­பதை அண்­மைய போக்­குகள் காட்­டு­கின்­றன.

அமெ­ரிக்க உப­ஜ­னா­தி­பதி மைக்பென்ஸ் வட­கொ­ரிய அதி­பர் தங்­கை­யுடன் ஒன்­றாக அமர்ந்­தி­ருந்­தாலும் அவ­ருடன் கைகு­லுக்­கவோ பேசவோ இல்லை. அதே­போன்று பெண்­மணி கிம்யோ யொங்கும் அமெ­ரிக்க உப­ஜ­னா­தி­ப­தியின் பக்கம் திரும்பி பார்க்­கவே இல்லை. எவ்­வா­றா­யினும் அமெ­ரிக்க உப­ஜ­னா­தி­பதி வாஷிங்டன் போஸ்ட் பத்­தி­ரி­கைக்கு வழங்­கிய செய்­தியில் அமெ­ரிக்கா வட­கொ­ரி­யா­வுடன் பேச்­சினை ஆரம்­பிக்­கலாம் என்ற சமிக்ஞை காட்­டி­ய­தாக குறிப்­பிட்டார். ஐ.நா. தடை­களோ சர்­வ­தேச எதிர்ப்­புக்­களோ தடை­யாக அமை­ய­மாட்­டாது எனக் கூறினார். அமெ­ரிக்க வெளிநாட்டு, பாது­காப்பு அமைச்­சர்கள் வட­கொ­ரியா விட­யத்தில் கடும் போக்கை கொண்­டி­ருந்­தாலும் சில சமா­தான நகர்­வு­களை மேற்­கொள்ள வேண்டும் என்ற உப­ஜ­னா­தி­ப­தியின் கருத்தை ஆத­ரிக்­கின்­றார்கள். வட­கொ­ரியா தொடர்ந்தும் மூன்று அமெ­ரிக்­கர்­களை சிறையில் வைத்­தி­ருப்­பதும் அணு­குண்டு நிகழ்ச்­சித்­திட்­டத்தில் விட்­டு­க்கொ­டுப்­புக்கு தயா­ராக இல்­லா­மையும் அமெ­ரிக்­கா­விற்கு சீற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. பெண்­மணி கிம்யோ யொங் வரு­கையால் வட­கொ­ரியா தென்­கொ­ரியா உயர்­மட்டத் தலை­வர்கள் எதிர்­கா­லத்தில் தொடர்­பா­டலை தொடர்­வ­தற்கு சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. இதனால் இரு பக்­கத்­திலும் சில விட்­டுக்­கொ­டுப்­புக்கள் ஏற்­ப­ட­லா­மென்றும் கரு­தப்­ப­டு­கி­றது. வட­கொ­ரிய ஜனா­தி­பதியின் தங்­கைக்கு தென்­கொ­ரி­யாவில் கிடைத்த வரவேற்­பினால் மகிழ்ச்­சி­ய­டைந்­த­வ­ராக தென்­கொ­ரிய வர­வேற்­பிற்கும் விருந்துப­சா­ரத்­திற்கும் இராஜ மரி­யாதைக்கும் நன்றி செலுத்­து­கிறேன் என உணர்ச்சி பொங்கக் கூறினார்.

வட­கொ­ரிய – தென்­கொ­ரிய பகை­மைகள் சற்று தளர்ச்­சி­யுறும் நிலையில் ஜப்­பா­னிய பிர­தமர் அபே ஒரு எச்­ச­ரிக்­கை­யையும் விடுத்­துள்ளார். புன்­னகை இரா­ஜ­தந்­தி­ரத்தில் மயங்­கக்­கூ­டாது என தென்­கொ­ரி­யா­வுக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் ஒரு எச்­ச­ரிக்கை சமிக்­ஞையை விடுத்­துள்ளார். வட­கொ­ரியா அணு­ஆ­யுத திட்­டங்­களை கைவிடும் வரை அவற்றை சர்­வ­தேச பரி­சோ­த­னை­க­ளுக்கும் மேற்­பார்­வை­க­ளுக்கும் உட்­ப­டுத்தும்வரை வட­கொ­ரி­யா­வுடன் சமா­தான பேச்­சுக்­களை முன்­னெ­டுப்­பது ஆபத்­தா­னது எனக் கூறி­யுள்ளார்.  

கடந்த கால நிகழ்­வு­களை மீள பார்ப்­பது அவ­சி­ய­மா­கும். இதற்கு முன்­ன­தாக இவ்­வாண்டின் நடுப்­ப­கு­தியில் கொரியப் பிராந்­தி­யத்தில் பதற்ற நிலை அதி­க­ரித்­தது. அமெரிக்கா சக்­தி­மி­குந்த ஆயு­தந்­தாங்­கிய கப்­பலில் தாட் என்னும் ஏவு­கணை எதிர்ப்பு ஆயு­தங்கள் பொருத்­தப்­பட்ட நிலையில் தென்­கொ­ரியக் கடல் பிர­தே­சத்­திற்கு நகர்த்­தி­யது. ஆனால் வட­கொ­ரியா தனது நிலைப்­பாட்டை மாற்­ற­வில்லை. அமெரிக்காவின் எத்­தாக்­கு­த­லையும் எதிர்­கொள்­வோ­மென அறை­கூவல் விடுத்­தது. புதிய அதிபர் ட்ரம்ப் வாயால் உரத்துப் பேசிய அள­வுக்கு வட­கொா­ரி­யா­வுக்கு பாடம் கற்­பிற்க முடி­ய­வில்லை. வட­கொ­ரி­யாவின் எண்ணெய்த் தேவை­களை சீனா, ரஷ்யா ஆகி­ய­வையே நிறை­வேற்­றின. அத்­துடன் இவ்­விரு நாடு­களும் எண்ணெய்த் தேவை­களை நிறை­வேற்­றா­விடின் ஈரான் நிறை­வேற்றும் என்ற நிலையே காணப்­ப­டு­கி­றது. முன்னாள் அமெரிக்க ஜனா­தி­பதி ஒபா­மாவின் ஆட்சிக்காலத்தில் ஈரான் மீதான தடைகள் பெரு­ம­ளவில் தளர்த்­தப்­பட்­டன. ஈரான் தனது அணு உற்­பத்தி, செறி­வாக்கல் திட்­டங்­க­ளுக்கு வட­கொ­ரி­யாவின் உத­வியை பெறக்­கூடும். இதனால் வட­கொ­ரி­யா­வுக்கு பெரு­ம­ளவு அந்­நியச் செலா­வணி கிடைக்க வாய்ப்­புக்கள் உண்டு. ஈரா­னுக்கும் வட­கொ­ரி­யா­வுக்கும் இடையே இரா­ஜ­தந்­திர உற­வுகள் அண்­மையில் பல­ம­டைந்து வரு­வதை இரா­ஜ­தந்­தி­ரிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். அமெரிக்காவின் ஏற்­பாட்டில் ஐ.நா. பாது­காப்புச் சபையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­துக்­கான வட­கொ­ரி­யாவின் பதில் அமெரிக்­கர்­களை ஆச்­ச­ரி­யத்தில் மூழ்­க­வைத்­துள்­ளது. நாம் அமெரிக்காவை ஆயிரம் மடங்­குகள் பழி­வாங்­குவோம் என தெரிவித்­துள்­ளது. கொரியத் தீப­கற்பப் பிரச்­சினை 1950இல் ஏற்­பட்டு வட­கொ­ரியா, தென்­கொ­ரியா என பிரிக்கும் இரா­ணுவ சூனி­ய­மற்ற பிர­தேசம் 1953இல் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. வட­கொ­ரி­யா­வுக்கு சீன, சோவியத் ஒன்றியத்தின் ஆத­ரவும் தென்­கொ­ரி­யா­வுக்கு அமெரிக்காவின் ஆத­ரவும் காணப்­பட்­டது. இன்னும் தென்­கொ­ரி­யாவில் அமெரிக்க படைகள் நிலை கொண்­டுள்­ளன. இருப்­பினும் தென்­கொ­ரி­யாவின் புதிய ஜனா­தி­பதி இரு நாட்டுப் பிரச்­சி­னை­க­ளையும் பேச்­சு­வார்த்தை மூலம் தீர்க்க விரும்­பு­கிறார். ஜனா­தி­பதி தேர்தல் பரப்­பு­ரை­களில் இதைத்தான் வலி­யு­றுத்­தினார். தென்­கொ­ரிய மக்­களின் ஆத­ரவைப் பெற்றார். தென்­கொ­ரிய மக்கள் யுத்­தத்தை விரும்­ப­வில்லை. ஒபா­மாவின் கொள்கை தந்­தி­ரோ­பாய ரீதி­யான பொறுமை என வர்­ணிக்­கப்­பட்­டது. தென்­கொ­ரிய ஜனா­தி­ப­தியின் ஆலோ­சகர் ஜனா­தி­பதி டரம்பின் கொள்­கையை தந்­தி­ரோ­பாய ரீதி­யான தடு­மாற்றம் எனக் கூறி­யுள்ளார். தென்­கொ­ரிய ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாடு அமெரிக்காவால் வட­கொ­ரி­யா­வுக்கு எதி­ராக யுத்தம் ஆரம்­பிக்க முடி­யா­தென்­பதைக் காட்­டு­கி­றது. எமது சார்பில் யுத்தம் செய்­வதை தென்­கொ­ரி­யாதான் முதலில் சம்­மதம் தெரிவிக்க வேண்டும் என தென்­கொ­ரிய ஜனா­தி­பதி கூறி­யுள்­ளமை அமெரிக்க அதி­பரின் சீற்­ற­மான கருத்­துக்குத் தடை­யாக அமைந்­துள்­ளது. இவ­ரது அரச பயணம் அர­சியல், இரா­ணுவ, பொரு­ளா­தார விட­யங்­களை உள்­ள­டக்­கி­ய­தாகும். உல­கிற்கு அச்­சு­றுத்தல் என மேற்கு ஊட­கங்­களில் அழுத்திக் கூறப்­படும் வட­கொ­ரிய தலை­வரின் அணு­வா­யுத முயற்­சி­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அல்­லது வட­கொ­ரி­யாவை அதன் நட்பு நாடான சீனா­வுடன் பேச்­சு­வார்த்தை நடாத்தி அணு­வா­யுத அச்­சு­றுத்­தலை இல்­லா­தொ­ழிப்­பது ஆகி­யவை அர­சியல், இரா­ணுவ நோக்­கங்­க­ளாகும். அதே­வேளை கொரிய பிராந்­தியக் கடலில் அமெ­ரிக்க யுத்தக் கப்­பல்கள் ஆயு­தங்­தாங்கி பிர­சன்­ன­மாக இருப்­பதும், தென்­கொ­ரியா யுத்­தத்தை விரும்­பாமல் இரா­ஜ­தந்­திர ரீதியில் பிரச்­சி­னையை தீர்க்க முயல்­வதும் டொனால்ட் ட்ரம்­புக்கு மகிழ்ச்சி தரும் விட­ய­மல்ல. வட­கொ­ரிய ஜனா­தி­ப­தியோ அமெ­ரிக்கா அழிந்­து­விடும் என வெருட்­டல்­களை விடுத்­துக்­கொண்­டி­ருக்­கிறார்.

இந்­நி­லையில் அண்­மையில் கிழக்­கா­சிய பிராந்­தி­யத்தில் ஐந்து நாடு­க­ளுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு வட­கொ­ரி­யா­வுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்கு உத­வியும் பலமும் சேர்க்கும் பேச்­சுக்­களில் ஈடு­பட்டார். வட கொரியா நீண்­ட­தூர ஏவு­க­ணைகள் மற்றும் அணு­வா­யு­தங்­களை விண்ணில் ஏவி தனது செயல்­களை உல­குக்கு காட்டிக் கொண்டு இருக்­கி­றது. அமெ­ரிக்க அதி­பரோ இது­பற்றி பல விட­யங்­க­ளையும் பேசிக்­கொண்டிருக்­கிறார். புதிய வருடம் பிறந்­த­வு­ட­னேயே வட­கொ­ரிய தலைவர் தனதுரையில் ஒரு வாழ்த்­து­ரையை அறி­வித்­துள்ளார். தனது மேசையில் பொருத்­தி­யுள்ள பட்­டனை அழுத்­து­வதன் மூலம் அணு­குண்டை வெடிக்கச் செய்வேன் என மிகச் சாதா­ர­ண­மாகக் கூறி­யுள்ளார். அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்­க­னவே வட­கொ­ரிய தலை­வரின் மிரட்­டல்­களால் தலையைச் சொறிந்து கொண்­டி­ருக்கும் வேளையில் வட­கொ­ரிய தலை­வரின் புத்­தாண்டுச் செய்தி பெரும் சங்­க­டத்தை அமெ­ரிக்க அதி­ப­ருக்குத் தந்­துள்­ளது. அதே­வேளை, தென்­கொ­ரிய அதிபர் வட­கொ­ரி­யா­வுடன் பேச்­சு­வார்த்­தை­களை மீள ஆரம்­பிக்க சில சமிக்­ஞைகளைக் காட்­டி­யுள்ளார். அமெ­ரிக்க அதிபர் வட­கொ­ரி­யா­வுக்கு எதி­ராக பிராந்­திய கூட்­ட­ணியை நிறுவும் நோக்கில் தென்­கி­ழக்­கா­சிய பிராந்­தி­யத்தில் ஐந்து நாட்களுக்கு அரச பயணத்தை மேற்கொண்டார் என்பது வாசகர்கள் அறிந்ததே. தென்கொரியாவின் நிலைப்பாடு அமெரிக்க அதிபரின் கோபாவேஷத்துக்கு உரம் போடுவதாக அமையவில்லை. தென்கொரிய தீபகற்ப பிராந்தியத்தை யுத்த சூனியமாக்கி கொரிய மக்கள் அழிவதை தென்கொரியத் தலைவரும் மக்களும் விரும்பவில்லை. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் 1945இல் ஜேர்மனி கிழக்கு, மேற்கு ஜேர்மனிகளாகப் பிரிந்தது. அன்றைய காலகட்டத்தில் சர்வதேச அரசியல் ஆதிக்கம் அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றின் கைகளில் இருந்தமையாலும் சோசலிஸம், முதலாளித்துவம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் அவை பிரிந்தன. ஆனால் சோவியத் ஒன்றியம் பலமிழந்த பின்னர் மீண்டும் 1990இல் ஒரே ஜேர்மனியாக மக்கள் இணைந்து வாழ்வது உலக அரசியலுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். 1950 களில் சீனா, சோவியத் ஒன்றியம் ஆகிய கம்யூனிஸ நாடுகளின் உதவியுடன் கொரியாவில் கம்யூனிஸ ஆட்சியை அமைப்பதற்கு கம்யூனிஸ்டுகள் போராடிய போது அமெரிக்கா தென்கொரியாவிற்கு உதவியாக தனது படைகளை நகர்த்திய யுத்தம் கொரிய தீபகற்பப் போர் என வரலாற்றாசிரியர்களால் வர்ணிக்கப்படுகின்றது.அப்போரில் வடகொரியா, தென்கொரியா என கொரிய நாடு பிரிந்தது. வடகொரிய தலைவரின் மகள் சியோல் சென்று தென்கொரிய அதிபரைச் சந்தித்து உறவாடியதை புன்னகை இராஜதந்திரம் என வர்ணிக்கப்படுகின்றது. மீண்டும் கொரிய மக்களை சமாதானமாக இணைய வேண்டும் என்பதே சமாதானத்தை விரும்பும் கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையாகும்.

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்  
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.)

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-02-17#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.