Jump to content

சரிவும் சரித்திரமும்


Recommended Posts

சரிவும் சரித்திரமும்

 

இலங்­கையின் தேர்தல் சரித்­தி­ரத்தில் ஆட்­சி­யி­லுள்ள கட்­சி­களை விடவும் மூன்றாம் நிலைக் கட்­சிக்கு மக்கள் அதிகூடிய வாக்­க­ளித்­த­தொரு தேர்தலாக நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் ேதர்தல் நோக்­கப்­ப­டு­கி­றது.

இத்தேர்தல் பெறு­பே­றுகள் ஸ்ரீலங்­கா சுதந்­தி ரக் கட்­சி­, அதன் கூட்­ட­மைப்­பான ஐக்­கிய மக் கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பு, ஐக்­கிய தேசியக் கட்­சி­ ஆகியவற்றின் வாக்கு வங்­கியில் கணி­ச­மான சரிவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் சரித்­தி­ர­மா­கவும் மாற்­றி­யி­ருக்­கி­றது. அத்­துடன் இந்­நாட்டில் அர­சியல் ஸ்திரத்­தன்­மையைக் கேள்­விக்­கு­றி­யாக்­கி­யுள்­ள­தோடு, அதிருப்­தி­களின் ெவளிப்­பாட்­டையும் தென்­னி­லங்­கையின் எதிர்­கால நிலைப்­பாட்­டையும் துல்­லி­ய­மாக தெளிவு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இந்­நி­லை­யில், கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்­பட்ட ஆட்­சி­மாற்றம் குறித்து பின்­னோக்­கிப்­பார்க்க வேண்­டிய தேவையும் தற்­கால அர­சியல் சூழலில் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. எந்­த­வொரு விட­யத்­திலும் காலத்­துக்குக் காலம் மாற்றம் ஏற்­ப­டு­வது அவ­சியம். ஆனால், அம்­மாற்றம் ஆரோக்­கி­ய­மா­ன­தாக முன்­கொண்டு செல்­லப்­பட வேண்டும். மாற்றம் ஆரோக்­கி­ய­மா­ன­தா­கவும், எழுச்­சி­மிக்­க­தா­கவும் முன்­ந­கர்த்திச் செல்­லப்­ப­டு­ம்­போது அம்­மாற்றம் ஏமாற்­ற­மா­காது.

ஆனால், 2015இல் ஏற்­பட்ட மாற்றம் கடந்த மூன்று வரு­ட­கா­ல­மாக மக்கள் எதிர்­பார்த்த மாற்­றத்தை ஏற்­ப­டுத்­த­வில்லை என்ற மனப்­ப­திவின் விளை­வுதான் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற தேர்தலில் ஏறக்­கு­ைறய 45 சதவீத­ வாக்­கா­ளர்கள் ஐக்­கிய மக்கள் சுதந்திரக் கூட்­ட­மை­ப்பி­லி­ருந்தும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்தும் பிரிந்து சென்ற ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவுக்கு வாக்­க­ளித்­துள்­ளனர். தேசிய அர­சாங்­கத்­தி­லுள்ள இரு பெரும் கட்­சி­களும் தனித்­த­னியே கள­மி­றங்­கி­யி­ருந்­தாலும், இத்தேர்­தலில் அளிக்­கப்­பட்ட வாக்­கு­களில் ஏறக்­கு­றைய 33 சதவீத­ வாக்­கு­களை ஐக்­கிய தேசியக் கட்­சியும் 9 சதவீதத்­தை ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பும் 4 சதவீதத்­தை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் பெற்­றி­ருப்­பது இவ்­விரு கட்­சி­யி­னதும் அர­சியல் செயற்­பா­டு­களை மீள்­வா­சிப்­புக்கு உட்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இருப்­பினும், வாக்குச் சரிவைக் கண்ட இரு பிர­தான கட்­சி­க­ளி­னாலும் உரு­வாக்­கப்­பட்ட இக்­கூட்­டாட்சி தொட­ர­வுள்­ளது. இதனை வலி­யு­றுத்­து­மு­க­மாக இக்­கூட்டு அர­சாங்­கத்தை தொடர்ந்து முன்­கொண்டு செல்­லவும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் மாற்­றங்­களை மேற்­கொள்­ளவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக கடந்த வியா­ழக்­கி­ழமை ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச் செய­லாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்­தி­ருந்­ததை சுட்­டிக்­காட்ட வேண்டும். இந்­நி­லை­யில்தான் இலங்­கையின் அர­சியல் சரித்­தி­ரத்தில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அதி­கார மாற்­றத்தை அல்­லது அர­சியல் கட்­சிகள் மீது மக்கள் கொண்­டி­ருந்த நம்­பிக்கைச் சரி­வையும் ேதர்தல் தோல்­வி­க­ளுக்­கான வாக்குச் சரி­வையும் பின்­நோக்கி பார்க்க வேண்­டி­யுள்­ளது.

அதி­கார மாற்­றங்கள்

இலங்கை அர­சி­யலை 1970ஆம் ஆண்­டி­லி­ருந்து உற்று நோக்­கு­ேவா­மாயின் 1970ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி 18,12,849 வாக்­கு­களைப் பெற்­றுக்­கொண்­டதன் மூலம் ஸ்ரீமாவோ பண்­டாரநாயக்க இந்­நாட்டின் பிர­த­ம­ரானார். தனித்தே ஆட்­சி­ய­மைக்கக் கூடிய பலம் இருந்தும் லங்கா சம­ச­மா­ஜக்­கட்சி, கம்­யூனிஸ்ட் கட்சி ஆகி­ய­வற்­றுடன் இணைந்து ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்­க­வினால் அமைக்­கப்­பட்ட ஆட்சி 7 வரு­டங்கள் நிலைத்­தி­ருந்­தது.

இந்த 7 வருட ஆட்­சி­யி­னூ­டாக மக்­க­ளுக்கு ஏற்­பட்ட அதி­ருப்­தி­யா­னது இவ்­ ஆட்­சியில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்ற சிந்­தனைப் போக்கை மக்கள் மத்­தியில் தோற்­று­வித்­தது. அதன் ெவளிப்­பாடாக 1977ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத்தேர்­த­லி­னூ­டாக ஐக்­கிய தேசியக் கட்­சியை ஆட்­சியில் அமர்த்­தி­யதன் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. இத்தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி 31,79,221 வாக்­கு­களைப் பெற்­றுக்­கொண்­ட­துடன் ஜே.ஆர்.ஜய­வர்­தன இலங்­கையின் 7ஆவது பிர­த­ம­ரானார்.

இலங்­கையின் பாரா­ளு­மன்ற வர­லாற்றில் முதல் ­த­ட­வை­யாக சிறு­பான்மைச் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய கட்சி எதிர்க்­கட்­சி­யான வர­லாறும் இப்­ப­ாரா­ளு­மன்­றத்­திற்கு உண்டு. 1977ஆம் ஆண்டு முதல் 1978ஆம் ஆண்டு­வரை அமரர் அமிர்­த­லிங்கம் எதிர்­க் கட்சித் தலை­வ­ராக இருந்தார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் அரசு, ஆட்சி மாற்­ற­மில்­லாது 17 வரு­டங்கள் தொடர்ந்­தது. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஆட்சி முறை, தொகு­தி­வாரி பிர­தி­நி­தித்­துவ தெரிவு முறை மற்றும் விகி­தா­சாரப் பிர­தி­நி­தித்­துவ தெரிவு முறை ஆகி­யன ஐக்­கிய தேசியக் கட்­சியின் இப்­ப­தி­னேழு வருட கால ஆட்­சி­யி­லேயே ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

இருப்­பி­னும், மக்கள் இவ் ஆட்­சியில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த நினைத்­தனர். மக்­களின் மனங்­களில் குறிப்­பாக சிறு­பான்மை மக்­களின் மனங்­களில் ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்ற சிந்தனையின் பின்­ன­ணியில் பல நியா­ய­பூர்­வ­மான கார­ணங்கள் காணப்­பட்­டன. சிறு­பான்மை மக்கள் மனங்­களில் மாத்­தி­ர­மின்றி பெரும்­பான்மை சிங்­கள மக்கள் மத்­தி­யிலும் ஆட்சி மாற்­றத்­திற்­கான அவ­சியம் ஏற்­பட்­டி­ருந்­தது. இதன்­கா­ர­ண­மாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் 17 வருட கால ஆட்சி 1994 ஆம் ஆண்டு நிறை­வுக்கு வந்­தது.

1994ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத் ேதர்தலினூடாக பொது­ஜன ஐக்­கிய முன்­னணி 38,87,823 வாக்­கு­களைப் பெற்ற போதிலும் தனித்து ஆட்­சி­ய­மைக்க முடி­யாத நிலை உரு­வா­ன­போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், மலை­யக மக்கள் முன்­னணி என்­பவற்றின் பங்­க­ளிப்­புடன் பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியின் ஆட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. அப்போது நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்தலி­னூ­டாக சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க 62 சதவீத வாக்­கு­களைப் பெற்று இலங்­கையின் 5ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வானார்.

ஸ்ரீலங்­கா சுதந்­திரக் கட்­சி­யை பிர­தா­னப்­ப­டுத்தி உரு­வாக்­­கப்­பட்ட பொதுஜன ஐக்­கிய முன்­ன­ணியின் ஆட்­சியில் ஆட்­சி­மாற்றம் ஏற்­ப­டா­த­போ­திலும் 2005 மற்றும் 2010ஆம் ஆண்­டு­களில் இலங்­கையின் ஆட்­சி­யா­னது ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பி­னூ­டாக மஹிந்த ராஜ­ப­க் ஷவின் கரங்­க­ளுக்கு மாறி­யது. அவ­வாறு கைமா­றிய முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் எட்டு வருட ஆட்­சிக்­காலம் இந்­நாட்டில் பல்­வேறு நிகழ்­வு­களை வர­லா­றாக மாற்­றி­யி­ருந்­த­போ­திலும், அவை ஒட்­டு­மொத்த இந்­நாட்டுப் பிர­ஜை­க­ளி­னதும் மனங்­களை வெற்­றி­கொண்­ட­தாக அமை­ய­வில்லை.

அவரின் ஆட்­சிக்­கா­லத்தில் சிறு­பான்மை மக்­களை நோக்கி ேமற்­கொள்­ளப்­பட்ட திட்­ட­மிட்ட இன­வாத நெருக்­க­டிகள் அம்­மக்­களின் இயல்பு வாழ்க்­கையை பெரிதும் பாதித்­தி­ருந்­தன. இந்­நெ­ருக்­க­டிகள் கடந்த ஆட்­சி­யா­ளர்கள் மீதான நம்­பிக்­கையை சிறு­பான்மை மக்­க­ளி­ட­மி­ருந்து இழக்கச் செய்­தது. அவற்­றோடு கடந்த ஆட்­சியில் அங்கம் வகித்த அமைச்­சர்கள் பல­ரி­ன் செயற்­பா­டு­களில் உச்­ச­பட்ச தலை­யீ­டுகள் அவ­ர்களது குடும்ப அங்­கத்­த­வர்­க­ளால் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தான குற்­றச்­சாட்­டுகள் அதி­க­ரித்­தன.

அவ்­ ஆட்சி அதி­கா­ரத்­தினால் கட்­டுப்­பட்­ட­வர்­களைத் தவிர, ஏனை­யோ­ருக்கு ஒருவித அதி­ருப்­தி­யையும் அமை­தி­யற்ற, நெருக்­கடி மிக்­க­தொரு அர­சியல் சூழலையும் ஏற்­ப­டுத்­தி­யதன் கார­ண­மாக இவ் ஆ­ட்­சி­யிலும் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டுமென்ற உள­நி­லையை அவ் ஆட்­சியில் அங்கம் வகித்­த­வர்­க­ளி­டை­யேயும் மக்­க­ளி­டை­யேயும் சிவில் அமைப்­புக்­க­ளி­டை­யேயும் தோற்­று­வித்­தது. இவ்­வாறு கடந்த கால ஆட்சி அதி­கார மாற்றக் கதையின் தொடரில் தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தலில் பொது வேட்­பா­ள­ராக கள­மி­றப்­பட்டு ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­ன­தும் 50க்கும் மேற்­பட்ட சிவில் அமைப்­புக்­க­ளி­னதும் ஆத­ரவு மற்றும் சிறு­பான்மைக் கட்­சி­களின் பங்­க­ளிப்­புடன் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டது.

ஆனால், 2015இல் ஏற்­பட்ட அர­சியல் மாற்றம் மக்கள் எதிர்­பார்த்த மாற்­றங்­களை கிராம மட்­டத்திலும் தேசிய மட்­டத்திலும் ஏற்­ப­டுத்த தவ­றி­யி­ருக்­கி­றது. இம்­மாற்றம் மூன்று வருட காலம் ஆட்சி மாற்­ற­மாக மாத்­திரம் இருந்­ததே தவிர மக்­களின் பொரு­ளா­தார, சமூக வாழ்வின் சுமை­களைக் களைய தவ­றி­விட்­டது என்ற அதி­ருப்தி பெரும்­பான்மை சிங்­கள பௌத்த மக்கள் மத்­தியில் காணப்­பட்­டது. அர­சியல் மாற்றம் ஆட்சி மாற்­ற­மாக மாத்­தி­ர­மல்­லாது மக்­களின் சமூக, பொரு­ளா­தா­ரத்­திலும் அபி­வி­ருத்­தி­யையும் ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்­பதே அதி­ருப்தி கொண்ட மக்­களின் வாக்­க­ளிப்­புக்­கான கார­ணங்­களில் ஒன்­றா­க­வுள்­ளது.

இவ் ஆட்­சி­மாற்றக் கதை திரை­யேறி மூன்று வரு­டங்கள் முடி­வ­தற்­கி­டையில் மற்று மொரு கதையை எழுதி திரை­யேற்­று­வ­தற்­கான முயற்சி தற்­போ­தைய தென்­னி­லங்கை அர­சி­யலில் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது. மூன்று வருட நல்­லாட்சி அர­சாங்கம் நடந்து முடிந்த தேர்தலி­னூ­டாக தென்­னி­லங்கை மக்­களின் ஆத­ரவை பெரு­ம­ளவில் பெற­வில்லை என்ற சூழலில் தேசிய அர­சியல் பர­ப­ரப்­ப­டைந்­தி­ருக்­கி­றது. எதுவும் நடக்­கலாம் என்­ற­தொரு சூழல் ஏற்­பட்­டுள்ள நிலையில் அமைச்­ச­ர­வையில் பாரிய மாற்­ற­மொன்று ஏற்­ப­ட­வுள்­ள­தா­கவே இக்­கட்­டுரை எழுதும் நேரம் வரை கிடைத்த தக­வல்­க­ளா­க­வுள்­ளன.

இந்­நி­லையில், தென்­னி­லங்கை பெரும்­பான்மை பௌத்த சிங்­கள மக்­களின் அதிக ஆத­ரவைப் பெற்ற தலை­வ­ராக மீளவும் மஹிந்த ராஜ­பக் ஷ தேசிய அர­சி­யலில் புடம்­போ­டப்­பட்­டி­ருக்­கி­றார். அதி­க­ள­வி­லான அரச ஊழி­யர்கள் தங்­க­ளது தபால் வாக்­கு­களை ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவுக்கு அளித்­துள்­ளனர். அத்­தோடு பெரு­ம­ள­வி­லான பௌத்த தேரர்­களும் இக்­கட்­சிக்கே வாக்­க­ளித்­துள்­ளனர். தென்­னி­லங்­கையில் அரச ஊழி­யர்­களில் அதி­க­ள­வி­லானோர் தபால் வாக்­கு­களை பொது­ஜன பெர­மு­னவுக்கு அளித்­தி­ருப்­ப­தற்குக் காரணம் அவர்­களின் நலன்­களில் நல்­லாட்சி அர­சாங்கம் போதிய அக்­க­றை­ கொள்ளவில்­லை­ என்பதால்தான் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஆட்­சியும் அதி­கா­ரமும் கைமாற வேண்டும் என்ற ரீதியில் நடை­பெற்று முடிந்த தேர்தலில் வாக்­க­ளிக்கத் தகைமை பெற்ற 15.8 மில்­லியன் வாக்­க­ாளர்­களில் 49,41,952 வாக்­கா­ளர்கள் தங்­க­ளது வாக்­கு­களை ஸ்ரீலங்கா பொது­ஜன ெபர­முனவுக்கு ­ வழங்கி, கிரா­மங்­களின் அபி­வி­ருத்­திக்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பொருத்­த­மா­னவர் என்­பதை முதற்­ப­டி­யாகத் தெரி­வித்­துள்­ள­னரா என்ற வினாவும் எழு­கி­றது.

இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் ஆட்சி அதி­கா­ரங்­களில் காலத்­துக்குக் காலம் மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. அம்­மாற்­றத்தின் ஆடு­க­ள­மாக தேர்தல்கள் அமை­கின்­றன. அத்தேர்­தல்களூடாக மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும் மகான்­க­ளாக வாக்­காளர்கள் உள்­ளனர். நடை­பெற்று முடிந்த உள்­ளூராட்சி மன்றத் ேதர்தலினூ­டாக ஐக்­கிய தேசியக் கட்சி மீதும் சுதந்­திரக் கட்சி மீது­மான தமது நிலைப்­பாட்டை தென்­னி­லங்கை பௌத்த சிங்­கள மக்கள் எவ்­வாறு புடம்­போட்­டி­ருக்­கி­றார்­களோ அவ்­வாறே வடக்கு, கிழக்கு மற்றும் மலை­யக மக்­க­ளும் தமது சமூ­கம்சார் நிலைப்­பாட்டை வாக்­குகள் மூல­ம் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்­சி­க­ளுக்கும் தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள்.

வடக்கு, கிழக்கும் தேர்தல் பெறு­பேறும்

இத்தேர்தல் முடி­வுகள் கட்­சி­களின் இருப்­பையும் செல்­வாக்­கையும் வெளிப்­ப­டுத்தும் என்­பதை இத்தேர்­த­லுக்­கான தினம் அறி­விக்­கப்­பட்ட நாள் முதல் எழு­தப்­பட்ட கட்­டு­ரை­களில் தொடர்ச்­சி­யாக குறிப்­பி­டப்­பட்டு வந்­ததை ஞாப­க­மூட்ட வேண்­டி­யுள்­ளது.

ஏனெனில், வடக்­கி­லும் கிழக்கிலும் குறிப்­பாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங­்கி­ரஸும் பல விமர்­ச­னங்­க­ளுக்குள்­ளாகி வந்­தன. அதனால், இவ்­விரு கட்­சி­களும் இத்தேர்தலில் பெற்­றுக்­கொண்ட வாக்­கு­களில் பெரி­ய­ளவில் சரி­ைவக் காணா­விட்­டாலும் கடந்த காலங்­களில் பெரு­ம­ளவு ஆத­ர­வா­ளர்களைக் கொண்ட பிர­தே­சங்­களில் இத்­தேர்தலூடாகப் பெற்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையைக் கொண்டு அறுதிப் பெரும்­பான்­மை­யுடன் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை ஆள­மு­டி­யாத நிலையை எதிர்­நோக்­கி­யுள்­ளன. தேர்தல் காலத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் ஏற்­பட்ட பிளவு, மாற்றுக் கட்சித் தலை­மை­க­ளினால் முன்­வைக்­கப்­பட்ட விமர்­ச­னங்கள், வட மாகாண சபை முத­ல­மைச்­சரின் நிலைப்­பாடு மற்றும் கருத்­துக்­கள் என்பன கூட்­ட­மைப்பின் வாக்குவங்­கியில் சரிவை ஏற்­ப­டுத்­த­ாவிட்­டாலும் ஆளும் அதி­கா­ரத்தை இழக்கச் செய்­துள்­ளன.

2011ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மொத்­த­மாக 2,55,078 வாக்­கு­களைப் பெற்று 275 உறுப்­பி­னர்­களைப் பெற்­ற­துடன் 32 உள்­ளூராட்சி மன்­றங்­க­ளையும் கைப்­பற்­றி­யி­ருந்­தது. ஆனால், நடை­பெற்று முடிந்த தேர்தலில் 6,93,875 வாக்­கு­களைப் பெற்று 38 உள்­ளூராட்சி மன்­றங்­களில் அதி­க­ள­வி­லான உறுப்­பி­னர்­களை பெற்­ற­போ­திலும் அறுதிப் பெரும்­பான்­மை­யுடன் ஆட்­சி­ய­மைக்க முடி­யாத திரிசங்­கு­ நிலைக்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தள்­ளப்­பட்­டுள்­ளது.

வட மாகா­ணத்தின் ஐந்து மாவட்­டங்­க­ளிலும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் இலங்கை தமிழரசுக் கட்சி 1,49,850 வாக்­கு­களைப் பெற்று 194 உறுப்­பி­னர்­களைப் பெற்­றி­ருக்­கி­றது. இருப்­பினும் கடந்த காலங்­களில் தமது ஆட்­சி­யி­லி­ருந்த சில உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் தற்­போது தனித்து ஆட்­சி­ய­மைக்க முடி­யாதநிலை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்புக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இச்­ச­பை­களில் அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ், ஈழ மக்கள் ஜன­ நாயகக் கட்சி போன்ற கட்­சி­களின் ஆத­ரவைப் பெற வேண்­டிய தேவை உரு­வா­கி­யி­ருப்­ப­தா­னது பொது­வான பார்வையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு ஏற்­பட்­டுள்ள அதி­காரச் சரி­வையே பறை­சாற்றுவ­தாகக் கொள்ள முடி­கி­றது.

இந்­நி­லையில் முஸ்லிம் காங்­கி­ரஸின் தாயக பூமி­யான கிழக்கு மாகா­ணத்தில் கடந்த தேர்தல்­க­ளிலும் பார்க்க முஸ்லிம் காங்­கிரஸ் அதி­க­ள­வி­லான அர­சியல் அழுத்­தங்­களை எதிர்­நோக்க வேண்டியேற்­பட்­டது.

கிழக்கில் முஸ்லிம் காங்­கி­ரஸின் கோட்­டை­யெனக் கரு­தப்­படும் அம்­பாறை மாவட்­டத்தில் முஸ்லிம் பெரும்­பான்மைப் பிர­தேச சபை­களில் இறக்­காமம் பிர­தேச சபையைத் தவிர, எந்­த­வொரு முஸ்லிம் பெரும்­பான்மை உள்­ளூ­ராட்சி மன்­றத்தையும் ஆட்சி செய்­வ­தற்­கான அறு­திப்­பெ­ரும்­பான்மை உறுப்­பி­னர்­களை இத்தேர்தல் பெறு­பே­றுகள் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு பெற்­றுக்­கொ­டுக்­கவில்லை. இதனால், இச்­ச­பை­களில் தொங்கு சபை­களை அமைக்க கட்­சி­க­ளையும் சுயேச்­சைக்­கு­ழுக்­க­ளையும் அர­வ­ணைக்க வேண்­டிய தேவை முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு ஏற்­பட்­டுள்­ளது. இந்த அர­சியல் நெருக்­க­டிக்கு முஸ்லிம் காங்­கி­ரஸை முகம்­கொ­டுக்கச் செய்­த­மைக்கு பிர­தான காரணம் தற்­போதைய தலை­மைத்­து­வத்தின் ஒரு­த­லைப்­பட்­ச­மான செயற்­பாடு என்ற குற்­ற­ச்­சாட்டு தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கி­றது.

முஸ்லிம் காங்­கி­ரஸின் சம­காலம்

முஸ்லிம் காங்­கி­ரஸின் வளர்ச்­சி­யையும் சரி­வை­யையும் உற்­று­நோக்­கு­கையில், 1986ஆம் ஆண்டு அர­சியல் கட்­சி­யாக பதிவு செய்­யப்­பட்­டது முதல், முறை­யான வழி­காட்­டலின் பிர­காரம் முஸ்லிம் காங்­கிரஸ் வளர்ச்­சி­ய­டைய ஆரம்­பித்­தது. மக்­களின் செல்­வாக்கை பெற்­றுக்­கொண்­டது. இக்­கட்சி எதிர்­நோக்­கிய முத­லா­வது தேர்தலாக 1987ஆம் ஆண்டு நடை­பெற்ற இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது 17 ஆச­னங்­களை பெற்று பல­முள்ள எதிர்க்­கட்­சி­யாக விளங்­கி­யது. அஷ்ரப் என்னும் ஆளு­மை­யுள்ள தலை­மைத்­து­வத்தின் சிறப்­பான வழி­காட்­டலால் வளர்க்­கப்­பட்ட முஸ்லிம் காங்கிரஸ், வடக்கு கிழக்கில் மாத்­தி­ர­மல்­லாது இந்­நாட்டில் முஸ்­லிம்கள் வாழும் ஏனைய பிர­தே­சங்­க­ளிலும் செல்­வாக்குச் செலுத்­தி­யது. திற­மையும் முற்­போக்கு சிந்­த­னையும் சமூக நல­னையும் கொண்ட பலரை அஷ்­ர­ப்பினால் இக்­கட்­சிக்குள் உள்­வாங்க முடிந்­தது.

அர­சியல் கட்­சி­யாக பதிவு செய்யப்­பட்டு 3 ஆண்­டு­களில் அதா­வது 1989ஆம் ஆண்டு விகி­தா­சாரத் ேதர்தல் முறையின் கீழ் நடை­பெற்ற முத­லா­வது தேர்தலில் மரச்சின்­னத்தில் போட்­டி­யிட்ட ஸ்ரீலங்­கா முஸ்லிம் காங்­கிரஸ் 2,02,014 வாக்­கு­களைப் பெற்று தேர்தல் மாவட்ட ரீதி­யாக 3 ஆச­னங்­க­ளையும் தேசிய பட்­டியல் ரீதி­யாக ஒரு ஆச­னத்­தையும் பெற்று மொத்­த­மாக 4 ஆச­னங்­களை பெற்றுக் கொண்­டது. ஒரு கட்சி அர­சியல் கட்­சி­யாகப் பதிவு செய்­யப்­பட்டு குறு­கிய காலத்­திற்குள் மக்­களின் செல்­வாக்கைப் பெறு­வெதன்­பது சாதா­ரண விட­ய­மல்ல. இதற்குக் காரணம் சிறந்த வழி­காட்­ட­லி­னூ­டாக அக்­கட்சி வழி­ந­டத்­தப்­பட்­ட­தாகும்.

நான்கு ஆச­னங்­க­ளுடன் பாரா­ளு­மன்­றத் தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் அங்கம் வகித்த போதிலும், பல சவால்­க­ளுக்கு முகம் கொடுத்த போதிலும், சமூ­கத்­திற்­கான தேசிய குர­லாக அக்­கட்சி செயற்­பட்­டது. சமூ­கத்தின் உரி­மை­க­ளுக்­காக சுய­ந­லன்­க­ளுக்கு அப்பால் வாக்­க­ளித்த மக்­களை ஏமாற்­றாது அவர்­களின் ஆத­ரவை மேலும் அதி­க­ரிக்கும் வகையில் செயற்­பட்­டது. மக்கள் சக்­தியினூடாக பலம் பெற்­றது.

இதன் தொடர்­ச்சி­யாக 1994ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத்தேர்தலின் ­போது 1989 ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்லிலும் பார்க்க மொத்த வாக்கில் ஓர­ளவு சரிவு காணப்­பட்ட போதி­லும், தேர்தல் மாவட்ட ரீதி­யாக 6 ஆச­னங்­க­ளையும் தேசியல் பட்­டியல் ரீதி­யாக ஒரு ஆச­னத்­தையும் பெற்று மொத்­த­மாக 7 ஆச­னங்­களை பெற்றுக் கொண்­டது. இந்த 7 ஆச­னங்­க­ளுமே தலைவர் அஷ்­ரபின் பேரம் பேச­லுக்­கான பல­மா­கவும் 17 வருட கால ஐக்­ கிய தேசியக் கட்சி ஆட்­சியின் வீழ்ச்­சிக்கு கார­ண­மா­கவும் இருந்­தது.

ஒரு ஆட்­சியை முடி­வுக்குக் கொண்டு வந்து மற்­று­மொரு ஆட்­சியை ஏற்­ப­டுத்தி அத­னூ­டாக தனது சமூகம் சார்ந்த பிரச்­சி­னை­க­ளுக்கும், தேவை­க­ளுக்கும் முடிந்­த­ள­வி­லான தீர்வைப் பெற்றுக் கொடுத்­தது மாத்­தி­ர­மின்றி, ஆன்­மீக ரீதி­யான செயற்­பா­டு­க­ளுக்கும் கல்வி ரீதி­யான வளர்ச்­சிக்கும் பொரு­ளா­தார ரீதி­யான விருத்­திக்­கு­மான அபி­வி­ருத்திப்பணி­களை இன, மத, வேறு­பா­டின்றி முஸ்லிம் காங்­கி­ரஸின் முது­கெ­லும்­பாகக் கரு­தப்­படும் வடக்கு, கிழக்கு மாகா­ணத்­திற்கு மாத்­தி­ர­மின்றி தேசிய ரீதி­யா­கவும் தனது ஆளு­மை­யுள்ள செயற்­பா­ட­்டினால் அர­சியல் சக்­தியின் பலத்தை அஷ்ரப் புடம்­போட்டுக் காட்­டினார். இத­னால்தான் கிழக்கு மக்­க­ளுக்கு அஷ்­ரப்பின் பின்னர் ஒரு தலைவர் உரு­வா­க­வில்லை. அந்த தலை­மைத்­துவ வெற்­றிடம் இன்னும் நிரப்­பப்­ப­ட­வில்லை என்ற ஆதங்கம் இன்றும் காணப்­ப­டு­கி­றது.

2000ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத் தேர்தலில் பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணி­யுடன் முஸ்லிம் காங்­கி­ரஸை இணைந்து போட்­டி­யிடச் செய்த அஷ்ரப் தேசிய ஐக்­கிய முன்­ன­ணி­யையும் தேர்தல் களத்தில் இறக்­கினார். இருப்­பினும் அத்தேர்தலை அவரால் சந்­திக்க முடி­ய­வில்லை. ேதர்தல் நடை­பெ­று­வ­தற்கு ஒருசில நாட்­க­ளுக்கு முன்னர் அவரை அகால மரணம் அழைத்­துக் கொண்­டது. இருந்தும் அத்தேர்­தலில் 1,97,983 வாக்­குகள் தேசிய ரீதி­யாக தேசிய ஐக்­கிய முன்­ன­ணிக்குக் கிடைத்­த­துடன் ஒட்­டு­மொத்­த­மாக 11ஆச­னங்கள் முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் தேசிய ஐக்­கிய முன்­னணி ஊடாகக் கிடைக்­கப்­பெற்­றது.

அஷ்­ரபின் மர­ணத்தின் பின்­ன­ரான முஸ் லிம் காங்­கி­ரஸின் பிளவும் சரிவும் இக்­கட்­சிக்கு பல்­மு­னைகளில் அர­சியல் நெருக்­க­டியை ஏற்படுத்தியது. தேர்தல்­க­ளிலும் ஆச­னங்­களைப் பெறு­வதில் சிக்­கல்­களைத் தோற்­றுவித்­தது. இக்­கட்­சியின் வர­லாற்றுத் தொடரில் கடந்த 2011ஆம் ஆண்டு நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் பெறு­பே­று­களின் அடிப்­ப­டையில் சம்­மாந்­துறை, அக்­க­ரைப்­பற்று பிர­தேச சபைகள் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை தவிர்ந்த ஏனைய பொத்துவில், அட்டாளைச்சேனை, நிந்தவூர், இறக்காமம் ஆகிய பிரதேச சபைகளினதும் கல்முனை மாநகர சபையினதும் ஆட்சி அதி காரம் முஸ்லிம் காங்கிரஸ் வசமிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஆனால், நடந்து முடிந்த இத்தேர்தல் முடிவின் பிரகாரம் பொத்துவில் பிரதேச சபைக்காக 6 உறுப்பினர்களையும் அக்கரைப்பற்று மாநகர சபைக்காக 4 உறுப்பினர்களையும் அக்கரைப்பற்று பிரதேச சபைக்காக 2 உறுப் பினர்களையும் இக்கட்சி பெற்றுள்ளது. அதேபோல், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக 8 உறுப்பினர்களையும் நிந்தவூர் பிரதேச சபைக்காக 6 உறுப்பினர்களையும் சம்மாந்துறை பிரதேச சபைக்காக 8 உறுப்பி னர்களையும் இறக்காமம் பிரதேச சபைக்காக 5 உறுப்பினர்களையும் கல்முனை மாநகர சபைக்காக 12 உறுப்பினர்களையும் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின் னத்தில் போட்டியிட்டு வெற்றி கொண்டுள் ளதுடன் காரைதீவு பிரதேச சபையில் 2 உறுப்பினர்களை மரச்சின்னத்தில் போட்டி யிட்டு பெற்றுக்கொண்டுள்ளது. இருப்பி னும் இறக்காமம் பிரதேச சபையைத் தவிர எந்தவொரு சபையையும் அறுதிப் பெரும் பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாத சரி வுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் மீள்எழுச்சி பெற்றுள்ள துடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது கட்சியின் தடத்தை இத்தேர்தல் முடி வின் பிரகாரம் இம்மாவட்டத்தில் ஆழமாக பதித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் முஸ்லிம் சமூகம்சார் கட்சிகளின் இருப்பை புடம்போடச் செய்யும் என்று தெரி விக்கப்பட்டு வந்ததை இம்மாவட்டத்தின் அதிகார சபைகளை ஆட்சியமைப்பதில் கட்சி களுக்கு ஏற்பட்டுள்ள திரிசங்கு நிலை பறை சாற்றுகிறது.

இவ்வாறுதான் இத்தேர்தல் முடிவுகள் நல் லாட்சி அரசின் இரு பிரதான கட்சிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் சரிவை ஏற்படுத்தியிருப்பதோடு சரித்திரமாகவும் பதிவாக்கியிருக்கிறது. ஆக ஒட்டுமொத்தமாக இத்தேர்தல் முடிவுகள் ஐ.தே.கட்சி, ஸ்ரீல.சு.கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சி கள் தமது நடவடிக்கைகள் குறித்தான மீள் வாசிப்பை முன்னெடுக்க வேண்டும் என்ற முன்னெச்சரிக்கையை வழங்கியுள்ளன என் பது நிதர்சனமாகும். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-02-17#page-2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.