Jump to content

மத ஸ்தலங்கள் மீதான தாக்­கு­தல்­களை நிறுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை தேவை


Recommended Posts

மத ஸ்தலங்கள் மீதான தாக்­கு­தல்­களை நிறுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை தேவை -

 

 

 

இன, மதங்­க­ளுக்­கி­டையே முறு­கலை ஏற்­ப­டுத்தி    மக்­க­ளுக்­கி­டையே  பிரச்­சி­னை­களை  ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள்  வடக்கு, கிழக்கு  மாகா­ணங்­களில்   தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றன.  வடக்கு, கிழக்கில்  புத்தர் சிலை­களை  தமி­ழர்கள் செறிந்­து­வாழும் பகு­தி­களில்  வைப்­பதும்  இந்­துக்கள், முஸ்­லிம்கள், கிறிஸ்­த­வர்­களின்      மதஸ்­த­லங்கள் மீது   தாக்­குதல் நடத்­தப்­ப­டு­வதும்   தெய்­வ­சி­லைகள்  உடைக்­கப்­படும் நிகழ்­வு­களும் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்றன. 

religious-place-attack-sri-lanka.jpg

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம்  பத­வி­யி­லி­ருந்­த­போது   சிறு­பான்மை   மக்கள்  மீதான வன்­மு­றைகள்  கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டன.   இஸ்­லா­மிய   மதஸ்­த­லங்கள் மீது  தாக்­கு­தல்கள் தொடர்ச்­சி­யாக நடத்­தப்­பட்­டன.  தம்­புள்ளை பள்­ளி­வாசல் முதல் கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் வரை  தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன.   சிங்­கள பௌத்த தேசி­ய­வாத அமைப்­புக்கள்  புதி­து­ பு­தி­தாக உரு­வாக்­கப்­பட்டு   வன்­மு­றைகள்   கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டன. 

இந்­தக்­கா­லப்­ப­கு­தியில் வடக்கு, கிழக்கு  இந்து மதஸ்­த­லங்கள் மற்றும்  கிறிஸ்­தவ மதஸ்­த­லங்கள் மீதும்  தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன.  தமிழ் மக்கள் செறிந்­து­வாழும் பகு­தி­களில் புத்தர் சிலைகள்  அமைக்­கப்­பட்டு  இரா­ணு­வத்­தி­னரின் துணை­யுடன்  அங்கு   குடி­யேற்­றங்­களை மேற்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.  இவ்­வாறு மதங்­க­ளுக்­கி­டையே முறுகல் நிலையை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான செயற்­பா­டுகள் அன்று இடம்­பெற்­றன.   மதங்­க­ளுக்­கி­டையே  உரு­வாகும் முறுகல்  இனங்­க­ளுக்­கி­டை­யி­லான  முரண்­பா­டாக உரு­வா­கி­யி­ருந்­தன. 

நல்­லாட்சி அர­சாங்கம்  பத­வி­யேற்­ற­ பின்னர்  மதஸ்­த­லங்கள் மீதான  திட்­ட­மிட்­ட­வ­கை­யி­லான தாக்­கு­தல்கள்   தடுத்து நிறுத்­தப்­பட்­டன.  ஆனாலும் இந்த அர­சாங்க காலத்­திலும்  முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள்  மீது சில இடங்­களில் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன.  வடக்கு, கிழக்கில்  புத்தர் சிலை­களை நிறுவும்  முயற்­சி­களும்   அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக இடம்­பெற்று வரு­கின்­றன. 

வடக்கு, கிழக்கில்  மத பிரி­வி­னர்­க­ளுக்­கி­டை­யேயும் முரண்­பா­டுகள் தலை­தூக்­கி­யுள்­ள­மை­யினால்  அங்கு   பல இடங்­களில்  வணக்­கஸ்­த­லங்கள் மீது தாக்­கு­தல்கள்  நடத்­தப்­பட்­டுள்­ள­துடன்  திரு­வு­ரு­வச்­சி­லை­களும்   உடைக்­கப்­பட்­டுள்­ள­துடன் கள­வா­டப்­பட்­டுள்­ளன. இதனால் மதப்­பி­ரி­வி­ன­ருக்­கி­டையே   முறுகல் நிலை ஏற்­படும் சூழல்   ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. குறிப்­பாக  மன்னார் மாவட்­டத்தில்    கடந்த  12ஆம் திகதி இரவு  மூன்று இந்­துக்­களின் வணக்­கஸ்­த­லங்கள் உடைக்­கப்­பட்டு   திரு­வு­ரு­வச்­சி­லைகள்  சேத­மாக்­கப்­பட்­டுள்­ள­துடன் கள­வா­டப்­பட்டும் உள்­ளன.    தலை­மன்னார் பிர­தான வீதியில் அமைந்­துள்ள  லிங்­கேஸ்­வரர் தேவஸ்­தா­னத்தின்  மூல­மூர்த்­தி­யான  சிவனின்   திரு­வு­ரு­வச்­சிலை உடைக்­கப்­பட்டு   கள­வா­டப்­பட்­டுள்­ளது.  தள்­ளாடி  திருக்­கே­தீஸ்­வரம் வீதியில் அமைந்­துள்ள   விநா­யகர் ஆல­யத்தின் விக்­கி­ர­கமும்   உடைக்­கப்­பட்டு   கள­வா­டப்­பட்­டுள்­ளது. அதே­போன்று   தாழ்­வுப்­பா­டு­வீதி   கீரி சந்­தி­யி­லுள்ள  ஆல­ம­ரத்தின் கீழ் காணப்­ப­டு­கின்ற  விநா­யகர் விக்­கி­ரகமும் உடைத்து சேத­மாக்­கப்­பட்­டுள்­ளது. 

சிவ­ராத்­திரி தின­மான 13ஆம் திக­திக்கு முதல் நாளான 12 ஆம்­தி­கதி இரவே இந்த  மூன்று  ஆல­யங்­க­ளிலும்   விக்­கி­ர­கங்கள்  உடைக்­கப்­பட்­டுள்­ளன.  இந்த சம்­ப­வங்கள் இந்து மக்கள் மத்­தியில்   பெரும் அதிர்ச்­சியை  ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.  

மன்னார் மாவட்­டத்தைப் பொறுத்­த ­வ­ரையில்  மதப்­பி­ரி­வி­னர்­க­ளுக்­கி­டையே   முரண்­பா­டான நிலைமை  நீடித்தே வரு­கின்­றது.   அங்கு  கிறிஸ்­தவ, முஸ்லிம், இந்து மக்கள்  ஒன்­றி­ணைந்து வாழ்ந்து வரு­கின்­றனர்.  இந்த நிலையில் சகோ­தர  மதப்­பி­ரி­வி­ன­ருக்­கி­டையே  முரண்­பா­டுகள்   நில­வி ­வ­ரு­கின்­றன.  இதன்  ஒரு­கட்­ட­மா­கவே  இந்து ஆல­யங்­க­ளி­லுள்ள   விக்­கி­ர­கங்கள் உடைக்­கப்­பட்ட   சம்­ப­வங்கள் நிகழ்ந்­தே­றி­யுள்­ளன. 

இதற்கு முன்­னரும்  மன்னார் மாவட்­டத்தில்  பல இடங்­களில் கிறிஸ்­த­வர்­களின்  வணக்­கஸ்­த­லங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.  திரு­வு­ரு­வச்­சி­லைகள் உடைக்­கப்­பட்­டி­ருந்­தன.  இதே­போன்றே  இந்­துக்­க­ட­வுள்­களின் விக்­கி­ர­கங்­களும்   உடைக்­கப்­பட்டு சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. தற்­போது சிவ­ராத்­தி­ரிக்கு முதல்நாள்   இத்­த­கைய வன்­மு­றைச்­சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளமை   இந்து மக்கள் மத்­தியில்   பெரும் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. 

இந்த சம்­ப­வங்­களை கண்­டித்து   இந்து மக்கள் சார்பில்   புதன்­கி­ழமை  மன்­னாரில்  ஆர்ப்­பாட்டப் பேர­ணி­யொன்று நடத்­தப்­பட்­ட­துடன்  மன்னார் மாவட்ட   அர­சாங்க அதி­ப­ரிடம் மக­ஜரும் கைய­ளிக்­கப்­பட்­டது.   மன்னார் மாவட்ட  செய­ல­கத்­திற்கு முன்­பாக  ஒன்று கூடிய மக்கள்   பதா­தை­களை ஏந்­தி­ய­வாறு   பேர­ணி­யாக  சென்­ற­துடன்  அர­சாங்க அதி­ப­ரி­டமும்  மன்னார் பிர­தேச செய­லா­ள­ரி­டமும் மக­ஜர்­களை  கைய­ளித்­துள்­ளனர். 

மன்னார் மாவட்­டத்தில்   இந்து  ஆல­யங்கள் மீதான  அடா­வ­டித்­தனம்  தொடரும் பட்­சத்தில்  அது இன­மத முறு­கலை உரு­வாக்கி   சக­வாழ்வு  கேள்­விக்­கு­றி­யாகும் நிலை  ஏற்­பட வாய்ப்புக்கள் உள்­ளன.  ஆகவே இத்­த­கைய சம்­ப­வங்­களை தடுத்து நிறுத்த   ஆவன செய்­ய­வேண்டு­மென்று இந்த மக­ஜரில்   கோரப்­பட்­டுள்­ளது. 

இந்து ஆல­யங்கள் மீதான  தாக்­குதல் யாவும்  திட்­ட­மிட்­டு­ பு­ரி­யப்­பட்­ட­துபோல் ஒரே இரவில் இடம்­பெற்­றுள்­ளன.  இச்­சம்­ப­வங்கள்   மன்னார் வாழ் இந்து மக்­களின்   மனதை மிகுந்த வேத­னைக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. மகா சிவ­ராத்­திரி கொண்­டா­டப்­படும் புனித நாளில் இடம்­பெற்ற அநா­க­ரி­க­மான  காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான  செயற்­பா­டா­கவே இதனைக் கரு­த­வேண்­டி­யுள்­ளது.  இங்கு அனைத்து மதப்­பி­ரி­வி­னரும் இன­மத நல்­லி­ணக்­கத்­தோடு வாழ்ந்து வரு­கின்ற   சூழ்­நி­லையில்  கடந்த சில காலங்­க­ளாக   இந்து ஆல­யங்­களும் விக்­கி­ர­கங்­களும் உடைக்­கப்­பட்டு வரு­கின்­றன.   இதன் கார­ண­மாக   இந்து மக்­க­ளுக்கும்  ஏனைய சகோ­தர  மதத்­த­வர்­க­ளுக்­கு­மி­டையில் ஒரு கசப்­பான உறவு ஏற்­பட்டு வரு­கின்­றது.  இந்­துக்­களின் உணர்­வு­களை தூண்டி   அவர்­க­ளது  சுமுக வழி­பா­டு­க­ளுக்கு இடை­யூறு செய்­வது  எந்த சந்­தர்ப்­பத்­திலும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய செயற்­பாடு அல்ல என்றும்   இந்த மக­ஜரில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. 

இதே­வேளை இந்தத் தாக்­குதல் சம்­ப­வங்­களை அகில இலங்கை இந்­து­மா­மன்­றமும்  கடு­மை­யாக கண்­டித்­துள்­ளது.  கடந்­த ­கா­லங்­களில் இந்­து­ ஆ­ல­யங்கள் மற்றும் தெய்­வ ­விக்­கி­ர­கங்கள் மீது­தொ­டர்ச்­சி­யா­க ­ந­டத்­தப்­பட்­டு­வரும் தாக்­கு­தல்கள் இந் நாட்டில் வாழும் இந்­து­ மக்­க­ளை­மி­கவும் வேத­னை­கொள்ளச் செய்­துள்­ளன.

இந்­துக்கள் மிகப்­பு­னி­த­மா­ன­ சி­வ­ராத்­தி­ரி­ வி­ர­தத்­தை­ தி­ருக்­கே­தீச்­ச­ர­ ஆ­ல­யத்தில் கடந்­த ­செவ்வாய் அனுட்­டித்துக் கொண்­டி­ருக்­கும்­போ­து­மன்­னா­ரி­லே­யே ­அ­மைந்­துள்ள மூன்று இந்­து­ஆ­ல­யங்­களின் தெய்­வ­விக்­கி­ர­கங்­க­ளை­ வி­ஷ­மிகள் திட்­ட­மிட்­டு ­சே­தப்­ப­டுத்­தி­யுள்­ள ­செ­ய­லா­ன­து ­மி­கவும் கண்­ட­னத்­துக்­கு­ரி­யது. இந்­துக்­களின் வழி­பாட்டுத் தலங்கள் மீதும் தெய்­வ ­விக்­கி­ர­கங்கள் மீதும் ­மேற்­கொள்­ளப்­பட்­ட­ம­னி­தத்­தன்­மை­யற்­ற­திட்­ட­மிட்­ட­சே­தப்­ப­டுத்­த­லா­ன­து­ மன்னார் மாவட்­டத்தில் வாழும் இந்­துக்­க­ளையும் இலங்­கைவாழ் இந்­துக்­க­ளையும் மிகவும் வேத­னைக்­குள்­ளாக்­கி­யுள்­ளது என்று இந்து மாமன்றம்  விசனம் தெரி­வித்­துள்­ளது. 

 இவ்­வா­றான நிலையில் மன்னார் மறை­மா­வட்ட ஆயர் இமா­னுவேல் பெர்­னாண்டோ  இந்த  தாக்­குதல்  சம்­ப­வங்­களை  கண்­டித்­தி­ருக்­கின்றார்.  மன்­னாரில் இந்து ஆல­யங்­களில் சிலைகள்  உடைக்­கப்­ப­டு­வதை  பார்த்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாது. இன்று  ஒரு மதத்­திற்கு நடை­பெறும்  இச்­செயல் நாளை  இன்­னொரு மதத்­திற்கு  நடை­பெற  வாய்ப்­பாக அமையும்.  ஆகவே நாம் அனை­வரும் ஒன்­று­சேர்ந்து    இத்­த­கைய சம்­ப­வங்­களை    தடை­செய்ய  நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். இதற்கு மதத்­த­லை­வர்கள் மாத்­தி­ர­மல்ல   மதங்­களை சார்ந்த  ஒவ்­வொ­ரு­வரும்   ஒன்­றாக  செயற்­ப­ட­வேண்டும்.   அவ்­வாறு செயற்­பட்­டால்தான்   நாம்  வெற்­றியைக் காண முடியும் என்று   மன்னார் மறை­மா­வட்ட ஆயர்  கருத்து தெரி­வித்­துள்ளார். 

உண்­மை­யி­லேயே இந்து ஆல­யங்­களில் திரு­வு­ரு­வச்­சி­லைகள்  சேத­மாக்­கப்­பட்­ட­மையை   மன்னார் மறை மாவட்ட ஆயர் கண்டித்துள்ளமை  வரவேற்கத்தக்க  செயலாகும்.  மதத் தலைவர்களிடையே இவ்வாறான புரிந்துணர்வும்   சகவாழ்வும்    நிலவுமானால்  இத்தகைய  மத முரண்பாடுகளை  தவிர்க்கக்கூடிய நிலைமை ஏற்படும்.   மன்னாரில்  இந்து  ஆலயங்கள் மீது இடம்பெற்ற  தாக்குதல் சம்பவம் தொடர்பில்  பொலிஸார் உரிய விசாரணைகளை நடத்தி   குற்றவாளிகளை  கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த முன்வரவேண்டும். 

எதிர்காலத்தில்  மன்னாரில் இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறாத வகையில் மதத்தலைவர்களும் மதஸ்தாபனங்களின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து  செயற்படவேண்டும்.  மத  பிரிவினர் களுக்கிடையே ஏதாவது  கருத்து முரண்பாடுகள்   ஏற்பட்டி­­ருந்தால்  அந்த விடயங்கள் தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.   மதத்தலைவர்கள்  அனைவரும் ஒன்றிணைந்து இதற்கென  சமாதானக்குழுக்களை அமைத்து செயற்பாடுகளை முன்னெடுப்பதே பயனுள்ள நடவடிக்கையாக அமையும்.   மன்னார் மாவட்டத்தில்  இனியும்   எந்தவொரு  மதஸ்தலம் மீதும் தாக்குதல்கள்   இடம்பெறாத வகையில்   மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த சகல தரப்பினரும் முன்வரவேண்டுமென்று வலியுறுத்த விரும்புகின்றோம். 

வீரகேசரி பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம்

http://www.virakesari.lk/article/30705

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.