Jump to content

நடந்தாய் வாழி காவேரி - வ.ஐ.ச.ஜெயபாலன்

poet

Recommended Posts

எதையும் கறுப்பு வெள்ளையாக பார்க்கிற அரசியல் தமிழ்நாட்டின் பின்னடைவு.  
நீதிமன்றத் தீர்ப்பு ’கிடைக்கும் நீர் அளவு அதிகரிக்கப்படவேண்டும்’ என்கிற மேல்முறையீட்டுடன் வரவேற்க்கப்படவேண்டும். அதுதான் தடை தாமதமின்றி காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்தமைக்கும் அடிப்படைப் பணியை துரிதமாக்கும் வழியாய் அமையும்.  நீர் அளவைத்தவிர்த்து இந்த தீர்ப்பு வரவேற்க்கப் படவேண்டியது. காவிரி தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும்  பொதுவானது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பவைபோன்ற  தமிழகத்தின்   நீண்ட நாட்கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உள்ளது. மத்திய அரசை அழுத்தி காவிரி மேண்மை வாரியத்தையும்  நிலமேல் நிலத்தடி நீராதாரங்களை கட்டி எழுப்ப அவசியமான நிதியையும் சர்வதேச நிதி நிறுவனங்களின் கடன் வசதிகளையும் பெற்றுவதில் தமிழகம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்..   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, poet said:

இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது.. சீராய்வு மனு மட்டுமே கொடுக்க இயலும். அப்படி கொடுத்தாலும் இப்போதிருக்கும் கர்நாடக அரசியல் சூழலையும், வழக்கின் காலத்தையும் கருத்தில் கொண்டு சீராய்வு மனு நிராகரிக்கப்படவே வாய்ப்புள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டுமென்றால் பாராளுமன்றத்தைக் கூட்டி அங்கீகாரம் வாங்கித்தான் செய்ய முடியுமென மத்திய அரசு பொறுப்பை தட்டிக்கழித்து சொல்லிவிட்டது.

இரு தேசிய கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் தலைகீழ் நின்றாலும் வாக்குகள் விழாது. ஆனால் கர்நாடகத்தில் நிலைமை அப்படியல்ல. ஆகவே காவிரி மேலாண்மை வாரியம் அமைவது, வலு கடினம்.

இந்த தீர்ப்பில் முரண்பாடு, நிலத்தடி நீராதரங்கள் பற்றிய பார்வை மாண்டியா பகுதிக்கும், கேரளத்திற்கும், புதுச்சேரிக்கும் இல்லையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"காவிரி நதிநீர் விவகாரத்தில் மெட்ராஸ் - மைசூர் இடையேயான ஒப்பந்தம் செல்லும் என்றும், அதன்படி, 1892, 1924ம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தங்கள் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களின்படி, தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா காவிரி நதியின் குறுக்கே புதிய அணைகளை கட்ட முடியாது"

மேலேயுள்ள தீர்ப்பு மட்டுமே தமிழர்களுக்கு சிறு ஆறுதல்..!

ஆனால் ஏற்கனவே காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கட்டியுள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கபினி அணைகளினாலும் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் என்பதை மறுக்க இயலாது.

இப்பொழுது வந்துகொண்டிருக்கும் மேகதாது அணையின் பணிகளாவது நிறுத்தப்படுமா என்பதை இனிமேல்தான் கவனிக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டு அரசியல் தந்திரோபாய அணுகுமுறையற்ற மூலோபயாய அணுகுமுறையாக (Stratergy with out tactics) உள்ளது. இதன்பாதிப்பு எமது அரசியலில் இப்போ புலம்பெயர்ந்த தமிழ் அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறது. படிப்படியாக வெற்றி பெறுவதை நிராகரித்து எல்லா கோரிக்கைகளையும் ஒரேயடியாக வெற்றி பெறுதல் அல்லது நிராகரித்தல் தான் தமிழரின் அரசியலாகிவிட்டது. மூலோபாயத்தை அடைவதற்கான தந்திரோபாயங்கள் அனுகுமுறைதான் கொசோவோ எரித்திரியா தென் சூடான் கிழக்கு தீமோர் அணுகுமுறையாக வெற்றிபெற்றது.  தமிழ் நாட்டு அரசியலின் தந்திரோபாயமற்ற முலோபாய அரசியலின் பெறுபேறு தமிழ் சமத்துவம் தமிழ் மொழி பயன்பாடு தமிழ்வழிக் கல்வி போன்ற அடிப்படை விடயங்களில் சிங்கப்பூர் இலங்கை நிலமையைவிட பின்னடைந்த நிலையில் இருப்பதற்க்குக் காரணம்.  நீரின் அளவை உயர்த்துவது சம்பந்தமான அம்சம் தவிர்த்து காவிரி உரிமை, காவேரி மேலாண்மை போன்ற விடயங்களை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த  அழுத்தம் கொடுப்பது இன்றைய காலத்தின் தேவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, poet said:

என்னவோ விடை தருவீர்கள் என்று பார்த்தால் சைனா தத்துவமேதை சன் ஸூ வின் தத்துவத்தை தேவையில்லாத இடங்களில் வீசும் வாளை போல் வீசி சென்றுள்ளீர் .

சரி விடயத்துக்கு வருவம் தந்திரோபாயங்கள் இல்லாமல் மூலோபாயம்மூலமே வெல்லுவதுக்கு முதலாவது இதே     தீர்ப்பை சரி என்று மண்டையை     ஆட்டி சரி சொல்ல தமிழக பக்கம் எவ்வளவு   வேண்டி இருப்பார்கள் ?

நம்மடை பக்கம் கேட்க்கவே வேண்டாம் கடைசியாக வேண்டின இரண்டு கோடிக்கு கணக்கு கேட்டுபாருங்க ?

Sun Tzu

அதாவது தந்திரோபாயங்கள் இல்லாமல் மூலோபாயம்மூலமே வெல்லுவதுக்கு எங்கலுக்கு ஒரு   பலம்  அல்லது பலமிக்க நாட்டின் அனுசாரனை இருக்கணும்    இருக்கா புலவரே ?

Link to comment
Share on other sites

தந்திரோபாயமுள்ள மூலோபாயம் செயல்படுமென்றால் மிதி எல்லாம் கைகூடும். மூல உபாயமற்ற சுத்த தந்திரோபாயம் சந்தர்ப்ப வாதம். தந்திரோபாயமற்ற சுத்த மூல உபாய அனுகுமுறை தனிமைப்படுத்தி அழிக்கும். பெரிய நாடுகளின் ஆதரவு இல்லையே என்கிற ஏக்கமும் இதுனால் ஏற்படுவதுதான்.   வரலாற்றில் பெரும் சாதனைகள் புரிந்து அழிந்த விடுதலை போராட்டங்கள்பலவற்றின் வரலாறு இதனை மீண்டும் மீண்டும் நிருபித்திருக்கிறது.  சுத்த மூல உபாய   அணுகுமுறை தீவிர எழுச்சியின்பின் பின்னடைவும் தோல்வியும்தான் என்பதை நமது வரலாறுகள் தெளிவுபடுத்தியுள்ளது. இது உங்களோடு இப்ப ஆரம்பித்த விவாதமில்லை. 1996ல் இருந்து வன்னியில் நான் முன்வைத்த விவாதங்கள்தான்.

மூல உபாய அடிப்படையில் அவசியமான தந்திரோபாயங்களை சந்தர்ப்பவாதம் என அஞ்சுவது அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை 2000 த்துக்குபின்னர் அன்ரன்பாலசிங்கம் நன்கு உணர்ந்திருந்தார். ஆனால் கஸ்றோ அணியினர் அன்ரன்பாலசிங்கத்துக்கு குறுக்கே நின்றனர். 

Strategy without tactics is the slowest route to victory. Tactics without strategy is the noise before defeat.
Sun Tzu

Link to comment
Share on other sites

18 hours ago, ராசவன்னியன் said:

"காவிரி நதிநீர் விவகாரத்தில் மெட்ராஸ் - மைசூர் இடையேயான ஒப்பந்தம் செல்லும் என்றும், அதன்படி, 1892, 1924ம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தங்கள் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களின்படி, தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா காவிரி நதியின் குறுக்கே புதிய அணைகளை கட்ட முடியாது"

மேலேயுள்ள தீர்ப்பு மட்டுமே தமிழர்களுக்கு சிறு ஆறுதல்..!

ஆனால் ஏற்கனவே காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கட்டியுள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கபினி அணைகளினாலும் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் என்பதை மறுக்க இயலாது.

இப்பொழுது வந்துகொண்டிருக்கும் மேகதாது அணையின் பணிகளாவது நிறுத்தப்படுமா என்பதை இனிமேல்தான் கவனிக்கவேண்டும்.

தமிழ்நாடு அடுத்த மாநிலத்திடம் தண்ணிக்கு கையேந்தி நிற்பதில் எந்த பிரயோசனமும் இல்லை. மாறாக குளங்கள் குட்டைகளை உருவாக்கி தடுப்பணைகளை கட்டி மழை நீரை சேமிப்பதும்  மரங்களை வளர்த்து நீர்வளத்தை உருவாக்குவது ஒன்றே வழி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, சண்டமாருதன் said:

தமிழ்நாடு அடுத்த மாநிலத்திடம் தண்ணிக்கு கையேந்தி நிற்பதில் எந்த பிரயோசனமும் இல்லை. மாறாக குளங்கள் குட்டைகளை உருவாக்கி தடுப்பணைகளை கட்டி மழை நீரை சேமிப்பதும்  மரங்களை வளர்த்து நீர்வளத்தை உருவாக்குவது ஒன்றே வழி..

இது நம்ம யாழ் குடாவுக்கு சரிவரும் ஓரளவுக்கு இல்லை இஸ்ரேலிய பயிர்செய்கை க்கு மாறனும் அது ஒரு இரவில் நடைபெறும் மாற்றம் அல்ல . ஒரு tmc தண்ணீர் பாசன பகுதி 6500 ஏக்கர் நிலப்பகுதி  இப்போது குறைக்கும் தண்ணீர் 18 என்றால் 18*6500-117000ஏக்கர் நிலப்பகுதி விவசாயத்தில் இருந்து நேரடியாக நிறுத்தி வைக்கபடுது இப்ப இதன் தாக்கம் புரியும் என நினைக்கிறன் யாழில் ஒரு கட்டத்தில் 9000 ஏக்கர் அளவில் மட்டுமே உணவு பயிர் சாகுபடி நடந்தது பிரச்சனையான நேரம்களில் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, சண்டமாருதன் said:

தமிழ்நாடு அடுத்த மாநிலத்திடம் தண்ணிக்கு கையேந்தி நிற்பதில் எந்த பிரயோசனமும் இல்லை. மாறாக குளங்கள் குட்டைகளை உருவாக்கி தடுப்பணைகளை கட்டி மழை நீரை சேமிப்பதும்  மரங்களை வளர்த்து நீர்வளத்தை உருவாக்குவது ஒன்றே வழி..

காவிரி இரு மாநிலத்திற்குள்ளும் செல்வதால் அது கர்நாடகத்திற்கே உரிய சொத்து அல்ல. உலக நீர்வளக் கொள்கையை பார்த்தல் புரியும். தமிழ்நாடு வெள்ளம் வரும்போது மட்டும் திறந்துவிட வடிகால் பகுதி அல்ல. கர்நாடகாவை விட அதிக பாசனம் பெறும் நிலவளம் கொண்டதாகும்.

உங்களுக்குள்ள தாயக உரிமையை அடாத்தாக சிங்களன் கைப்பற்றும்போது நீங்கள் வாளாவிருக்கவில்லையே..?

எமக்கான உரிமையை விட்டுக்கொடுக்காமல், போராடுவது கையேந்துதல் ஆகுமா..?

உங்கள் விளக்கம் வியப்பாக உள்ளது. Sorry to say..!

Link to comment
Share on other sites

1 minute ago, ராசவன்னியன் said:

 நீங்கள் புரிந்துகொண்ட அர்த்தத்தில் நான் எழுதவில்லை.  கர்நாடக மாநிலத்தில் இருந்து முற்றாக நீர் மறிக்கப்பட்டால் தான் அவர்கள் வடிகாலாக பயன்படுத்தமுடியாது என்று தமிழ்நாடுபேரம் பேச முடியும் என நினைக்கின்றேன். ஆனால் காவிரிப்பிரச்சனையில் கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் நீரின் அளவில்தான் பிரச்சனை தவிர முற்றாக மறுக்கப்படவில்லை. 

அடுத்தாக இலங்கையில் சிங்கள தமிழ் பிரச்சனை சார்ந்த உரிமைப் பிரச்சனையாக இது இல்லை. இந்தியா என்று பார்த்தால் இது ஒரு நாட்டுக்குள் நடக்கும் பிரச்சனை. இருதரப்பு விவசாயிகளுக்கும் பற்றாக்குறை என்பதும் உண்மையே. நீர் பறறாக்குறை என்பது உரிமை  சார்ந்த பிரச்சனையாக அணுகப்பட்டால் அது தீர்வை எட்டாது. அதுவே இவ்வளவு காலமும் நடந்துகொண்டுள்ளது. கையேந்துதல் என்பது உரிமையை விட்டுக்கொடுத்தல் என்ற அர்த்தத்தில் எழுதவில்லை. பற்றாக்குறை என்ற அடிப்படையை வைத்தே எழுதப்பட்டது. காவிரிப்பிரச்சனையில் உள்ள அரசியலுக்குள் நான் செல்லவில்லை. ஆனால் மாற்று வழிகளின் அவசியத்தை உணரவிட்டால் தமிழக விவசாய நிலங்கள் மீதேன் கைரோ காபன் மற்றும் எண்ணை எடுக்கும் இடமாக மாறும் நிலையை நோக்கி நகர்கின்றது. இந்தப் பிரச்சனையில் காலநீட்சியோ எதிர்பார்த்துக்காத்திருப்பதோ தமிழகத்துக்கு ஆரோக்கியமானதில்லை. அதனலேயே மாற்று வழிகள் அவசியமாகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, சண்டமாருதன் said:

ஆனால் மாற்று வழிகளின் அவசியத்தை உணரவிட்டால் தமிழக விவசாய நிலங்கள் மீதேன் கைரோ காபன் மற்றும் எண்ணை எடுக்கும் இடமாக மாறும் நிலையை நோக்கி நகர்கின்றது. இந்தப் பிரச்சனையில் காலநீட்சியோ எதிர்பார்த்துக்காத்திருப்பதோ தமிழகத்துக்கு ஆரோக்கியமானதில்லை. அதனலேயே மாற்று வழிகள் அவசியமாகின்றது.

என் கருத்தும் அதுதான் . கிட்டத்தட்ட 70000 ஆயிரத்தில் இருந்து 150000 ஏக்கர் நிலப்பகுதி தண்ணியில்லாமல் அடிமாட்டு விலைக்கு விலைப்பட போவுது .

ஆனால் உடனே மாற்றம் கொண்டு வருவது சிரமம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, சண்டமாருதன் said:

 நீங்கள் புரிந்துகொண்ட அர்த்தத்தில் நான் எழுதவில்லை.  கர்நாடக மாநிலத்தில் இருந்து முற்றாக நீர் மறிக்கப்பட்டால் தான் அவர்கள் வடிகாலாக பயன்படுத்தமுடியாது என்று தமிழ்நாடுபேரம் பேச முடியும் என நினைக்கின்றேன். ஆனால் காவிரிப்பிரச்சனையில் கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் நீரின் அளவில்தான் பிரச்சனை தவிர முற்றாக மறுக்கப்படவில்லை. 

அடுத்தாக இலங்கையில் சிங்கள தமிழ் பிரச்சனை சார்ந்த உரிமைப் பிரச்சனையாக இது இல்லை. இந்தியா என்று பார்த்தால் இது ஒரு நாட்டுக்குள் நடக்கும் பிரச்சனை. இருதரப்பு விவசாயிகளுக்கும் பற்றாக்குறை என்பதும் உண்மையே. நீர் பறறாக்குறை என்பது உரிமை  சார்ந்த பிரச்சனையாக அணுகப்பட்டால் அது தீர்வை எட்டாது. அதுவே இவ்வளவு காலமும் நடந்துகொண்டுள்ளது. கையேந்துதல் என்பது உரிமையை விட்டுக்கொடுத்தல் என்ற அர்த்தத்தில் எழுதவில்லை. பற்றாக்குறை என்ற அடிப்படையை வைத்தே எழுதப்பட்டது. காவிரிப்பிரச்சனையில் உள்ள அரசியலுக்குள் நான் செல்லவில்லை. ஆனால் மாற்று வழிகளின் அவசியத்தை உணரவிட்டால் தமிழக விவசாய நிலங்கள் மீதேன் கைரோ காபன் மற்றும் எண்ணை எடுக்கும் இடமாக மாறும் நிலையை நோக்கி நகர்கின்றது. இந்தப் பிரச்சனையில் காலநீட்சியோ எதிர்பார்த்துக்காத்திருப்பதோ தமிழகத்துக்கு ஆரோக்கியமானதில்லை. அதனலேயே மாற்று வழிகள் அவசியமாகின்றது.

முற்றாக மறிக்கப்பட்டாலும், கசியவிட்டு தடுத்தாலும் நீர் உரிமை மறுப்புதான். இது உரிமை பிரச்சனையாகி இப்பொழுது அரசியலாகிவிட்டது.

பாசனம் பெறும் பகுதிகளின் பரப்பளவிற்கேற்றவாறே நதிநீர் பங்கீடும் இருக்க வேண்டும்.. இன்னும் சொல்லப்போனால் கடைமடை விவசாயப் பகுதிகளுக்குத்தான் அதிக உரிமையுள்ளது, ஏனெனில் வெள்ளம் வந்தால் கடுமையாக பாதிக்கப்படபோவது அப்பகுதிகளே. இதன்படியே உலக நதிநீர் பங்கீட்டுக்கொள்கையும் வகுக்கிறது. அவ்வாறே 1970 முன்னர் வரை போடப்பட்ட ஒப்பந்தங்களும் இருந்தன. கண்ட பக்கம் காவிரி நீர் திருப்பிவிடப்படவில்லை.தடுத்து நிறுத்தப்படவும் இல்லை. இடையில் புகுந்த இரு மாநில, மத்திய அரசியல்வாதிகள் தங்கள் செல்வாக்கை நிறுத்த உணர்ச்சிபூர்வ ஓட்டு வங்கிகளாக இப்பிரச்சனையை மாற்றிவிட்டார்கள்.

தடுப்பணைகள் பற்றிய மாற்று வழிகளை இனிமேல்தான் தமிழகம் சிந்திக்குமென எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.