Jump to content

நான் பதவி விலகப்போவதில்லை! பிரதமர் அறிவிப்பு


Recommended Posts

நான் பதவி விலகப்போவதில்லை! பிரதமர் அறிவிப்பு

 

 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலக வேண்டும், ஜனாதிபதி இவரை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்ற கருத்துக்கள் தென்னிலங்கையில் பலமாக எழுந்தன.

புதிய பிரதமராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்க வேண்டும் என்ற தகவல்களும் அப்பப்போது வெளிவந்துகொண்டு இருந்தன.

பிரதமர், ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி, கட்சி உறுப்பினர்கள் என அடுத்தடுத்து இடம்பெற்ற விசேட கூட்டங்களால் கொழும்பு அரசியல் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

இவ்வாறான இக்கட்டான நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பை அலரி மாளிகையில் நடத்திவருகின்றார்.

இதில் கருத்து தெரிவித்த பிரதமர்,

“2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும், நான் பதவிவிலகப் போவதில்லை.

அப்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

19ஆவது திருத்தச்சட்டத்தின் படி பிரதமரை பதவி விலக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. அவ்வாறு பதவி விலக்க வேண்டுமானால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர வேண்டும்.

அவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்தால் அதற்கு முகம்கொடுக்கவும் தயாராக இருக்கின்றோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டை நாம் கூறினோம். அவர்களது கட்சியின் நிலைப்பாட்டை அவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் பிரிந்து செல்லவில்லை. நல்லாட்சி தொடரும்” என குறிப்பிட்டார்.

 

http://www.tamilwin.com/politics/01/174471?ref=home-latest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் பிரதமர்  பதவியிலிருந்து  விலகினால்  சம்பந்தர் ஐயாவின் பதவிக்கும் ஆபத்து. மற்றும்படி எந்த மாற்றத்தினாலும்  தமிழர்களுக்குப் பாதிப்பில்லை  

Link to comment
Share on other sites

பிரதமரின் அதிரடி அறிவிப்பு.!

 

 

தனது பிரதமர் பதவி தொடரும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சற்று முன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி முடித்தார். அதில் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்படி தெரிவித்தார்.

Ranil_Wickremesingheee.jpg

சந்திப்பின்போது சரமாரியாக எழுந்த கேள்விக்கணைகளுக்கு இன்முகம் மாறாமல் பதிலளித்தார் பிரதமர்.

நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி பற்றிக் கேட்கப்பட்டபோது, இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து நடத்தும் ஆட்சி எனும்போது இவ்வாறான பிரச்சினைகள் தோன்றுவது இயல்பே என்று கூறிய அவர், இதுபோன்ற பிரச்சினைகள் எழாவிட்டால் ஊடகங்களுக்கு சுவாரசியம் இல்லாமல் போய்விடுமே என்று குறிப்பிட்டார்.

ஆட்சி மாற்றம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தனது நிலைப்பாட்டை பிரதமருக்கும் தெளிவாக எடுத்தியம்பியிருப்பதாகவும் எனினும் கூட்டாட்சிக்கு பங்கம் வரும் வகையில் எவ்விதமான ஆலோசனைகளோ, முடிவுகளோ எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மஹிந்தவைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, மஹிந்த குடும்பத்தினர் மீது நானூறுக்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிந்திருப்பதாகவும் இதன் அடிப்படையில் தாம் மஹிந்தவைக் காப்பாற்றியதாகக் கூறப்படுவது அபத்தமானது என்றும் தெரிவித்தார்.

பிணைமுறி விவகாரமே அண்மைய தேர்தல் தோல்விக்குக் காரணமாக இருந்திருக்குமா என்று கேட்கப்பட்டதற்கு, அந்த விவகாரத்தில் மக்கள் உடனடித் தீர்ப்பை எதிர்பார்ப்பதாகவும் என்றபோதும் சட்ட நடவடிக்கைகளுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாகவும் எதிர்காலத்தில் அந்த வழக்கை விரைந்து முடிக்க பரிந்துரைகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். எவ்வாறெனினும் அந்த விவகாரத்தின் தாக்கம் தேர்தல் முடிவுகளைப் பாதித்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமா என்றும் அதை நீங்கள் எதிர்கொள்ளத் தயாரா என்றும் கேட்கப்பட்டபோது, அப்படியொரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் தமக்கான ஆதரவை மன்றில் காட்ட முடியும் என்று தெரிவித்தார்.

இந்திய விஜயத்தை இரத்துச் செய்தமை குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர், நாட்டின் தற்போதைய சூழலில், அரசில் நடக்கும் விவரங்களைத் தம் மூலமாகத் தெரிந்துகொள்ள உறுப்பினர்களும் மக்களும் ஆவலாக இருப்பதாகவும் இந்த நிலையில் தாம் இந்தியா மட்டுமன்றி எந்தவொரு நாட்டுக்கும் செல்வது பொருத்தமாக இருக்காது என்றும் கூறினார்.

அமைச்சரவையில் எவ்வாறான மாற்றங்கள் கொண்டுவரப்படவிருக்கின்றன என்று கேட்கப்பட்டதற்கு, இன்னும் அது குறித்த ஆலோசனைகளே முன்வைக்கப்பட்டு வருவதாகவும் முடிவுகள் குறித்து போகப் போகத் தெரியும் என்றும் கூறினார்.

http://www.virakesari.lk/article/30689

Link to comment
Share on other sites

கெடுகுடி சொல் கேளாது. தோல்வியின் நாயகன் ஒரு போதும் திருந்தப் போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அரசியலில் பிரதமர் பதவிக்கும் ரணிலுக்கும் எட்டா பொருத்தம், இத்துடன் மூன்றாவது தடவையாக பிரதமர் பதவி வாய்த்தும் ஒருமுறைகூட முழுமையாக அனுபவிக்கமுடியாத துரதிர்டசாலி... 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

கெடுகுடி சொல் கேளாது. தோல்வியின் நாயகன் ஒரு போதும் திருந்தப் போவதில்லை.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த கட்டத்திலே தலைமைப் பதவியை விட்டுக் கொடுத்திருக்க வேண்டும்.

இனி கட்டி எழுப்புவது ரொம்ப கஸ்டம்.

Link to comment
Share on other sites

பதவி விலகமாட்டேன்

sf-92fbe519ee876f0d8f7da05a7f0a0d474665f0d1.jpg

 

அரசாங்கம் தொடரும்; அரசியலமைப்பின்படி செயற்படுவேன் என்கிறார் ரணில்

(எம்.எம்.மின்ஹாஜ்)

நான் தான் தொடர்ந்தும் பிர­த­ம­ராக பத­வியில் இருப்பேன். அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் ஆட்­சியை முன்­னெ­டுத்து செல்வேன். 2015 ஆம் ஆண்டு ஜன­வரி எட்டாம் திகதி மக்கள் ஆணையை பெற்றுத் தரு­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய அனைத்து தரப்­பினையும் ஒன்­றி­ணைத்து தேசிய அர­சாங்கம் தொடர்ந்து பய­ணிக்கும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். 

அத்­துடன் பிர­தமர் பத­வியில் இருந்து நீக்க வேண்­டு­மாயின் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வர வேண்டும். அதுவும் முடி­யா­விடின் அரசின் வரவு செல­வுத்­திட்­டத்தை தோற்­க­டிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அலரி மாளி­கையில் நேற்று மாலை நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்­டின்­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

நாடு­பூ­ரா­கவும் தேர்­தலை ஒரு தட­வையில் நடத்­தினோம். இந்த தேர்­தலின் பின்னர் இன்­றுதான் (நேற்று) ஊட­கங்­களை சந்­திக்­கின்றேன். இதன்­படி உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் மூலம் நாட்டு மக்கள் வழங்­கிய தீர்ப்­பினை நாம் ஏற்­கின்றோம். இந்த பெறு­பேறு அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் கட்­சி­க­ளுக்கு பெரும் பின்­ன­டை­வாகும். இந்த பின்­ன­டைவு தொடர்­பாக ஆராய்ந்து வரு­கின்றோம்.

நாட்டின் பொரு­ளா­தாரம் பெரு­ம­ளவில் பாதிப்­ப­டைந்­தது. அதனை முகா­மைத்­துவம் செய்­வ­தற்கு நாம் உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தோம். இதன்­படி 5.5 வீத பொரு­ளா­தார வளர்ச்­சியை நாம் எதிர்­பார்த்தோம். எனினும் வெள்­ளப்­பெ­ருக்கு மற்றும் வறட்சி கார­ண­மாக நாட்டின் பொரு­ளா­தாரம் பெரும் பாதிப்­புக்கு உள்­ளா­னது. 

குறிப்­பாக விவ­சாயம் பெரு­ம­ளவில் பாதிக்­கப்­பட்­டது. இதனால் உணவு உற்­பத்தி துறைக்கு பாதிப்­புகள் ஏற்­பட்­டன. இதன்­கா­ர­ண­மாக அத்­தி­யா­வ­சிய பொருள்­களின் விலை அதி­க­ரித்­தது. இதன்­படி தேர்­தலில் ஏற்­பட்ட சரி­விற்கு இது ஒரு­கா­ர­ண­மாகும். இது­போன்று இன்னும் பல கார­ணங்கள் உள்­ளன. 

 நாம் நாட்­டுக்கு வழங்­கிய பல வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றி­யுள்ளோம். அதே­போன்று இன்னும் பல வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்டி உள்­ளது. அதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.இதனை அடிப்­ப­டை­யாக கொண்டு தேர்தல் முடி­வினை நாம் ஏற்­கின்றோம். இதன்­படி எமது வேலைத்­திட்­டங்­களை மறு­சீ­ர­மைக்­க­வுள்ளோம். அர­சாங்­கத்­திற்குள் உள்ள மறு­சீ­ர­மைப்பு தொடர்பில் தற்­போது பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்றோம். மேலும் இந்த தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி பெரும் பின்­ன­டைவை சந்­தித்­தது. 

இதன்­படி கட்­சியில் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும். நான் 70 ஆவது கட்சி மாநாட்டில் கூறி­யதன் பிர­காரம் கட்­சியின் தலை­மைத்­து­வத்தை புதிய தலை­மு­றைக்கு வழங்க வேண்­டிய காலம் உரு­வா­கி­யுள்­ளது. புதிய தலை­மைத்­துவ தலை­மு­றையை உரு­வாக்­கு­வது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்றோம். இதன்­படி உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான பட்­டியல் நட­வ­டிக்­கைகள் நிறை­வ­டைந்த பின்னர் அதற்­கான நட­வ­டிக்கை முன்­னெ­டுப்போம். 

அர­சாங்கம் தொடரும்

 அர­சாங்­கத்தை நாம் தொடர்ந்து கொண்டு செல்வோம். இது தொடர்­பாக நான் ஜனா­தி­ப­தி­யுடன் நேற்று முன் தினம் பேச்­சு­வார்த்தை நடத்­தினேன். அத்­துடன் கூட்டு எதி­ரணி தன்­னுடன் பேசு­வ­தற்கு சந்­தர்ப்பம் கோரி­யுள்­ள­தாக ஜனா­தி­பதி கூறினார். இதன்­படி சுதந்­திரக் கட்­சியும் கூட்டு எதி­ர­ணியும் பொலன்­ன­று­வையில் வைத்து சந்­திப்­பொன்றை நடத்­த­வுள்­ளன. இதன்­படி அடுத்த வாரம் பாரா­ளு­மன்றம் ஒன்று கூடும். இதன்­போது புதிய சட்­ட­மூ­லங்கள் பல நிறை­வேற்­றுவோம். அத்­துடன் மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான விவாத்தை முடி­வுக்கு கொண்டு வருவோம். ஜன­வரி எட்டாம் ஆம் திகதி மக்கள் ஆணையை பெற்று தந்த அனைத்து தரப்­பு­டனும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்து கொண்டு செல்வோம் என்றார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கருத்து தெரி­வித்த பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்­வி­களை எழுப்­பினர். இந்த கேள்­வி­க­ளுக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதில் வழங்கும் போது,

கேள்வி - கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு பணிகள் எவ்­வாறு அமையும்? 

பதில் - கட்சி மறு­சீ­ர­மைப்பு பணிகள் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படும். இதன்­படி புதிய தலை­மைத்­துவ தலை­மு­றை­யினை நாம் உரு­வாக்க வேண்டும். இளை­ஞர்கள் தலை­மு­றைக்கு நாம் கட்சி தலை­மைத்­து­வத்தை வழங்க வேண்டும்.

கேள்வி - கட்சி தலை­வ­ராக 24 வரு­டங்கள் பத­வியில் உள்­ளீர்கள். இதன்­படி கட்­சியின் தலை­மைத்­து­வத்தை வழங்­கு­வ­தற்கு உரிய சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளதே?

பதில் - புதிய தலை­மைத்­து­வத்தை உரு­வாக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். இதன்­படி தேர்தல் ஆணைக்­கு­ழுவில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான பட்­டியல் நட­வ­டிக்­கைகள் நிறை­வ­டைந்த பின்னர் அதற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும். இதனை 24 மணி­நே­ரத்­திற்குள் நிறைவு செய்ய முடி­யாது. காலம் தேவை­யாகும்.

கேள்வி - பிர­தமர் பத­வியில் இருந்து வில­கு­மாறு உங்­க­ளுக்கு குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது. குறிப்­பாக சுதந்­திரக் கட்­சி­யினர் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கின்­றனர். ஜனா­தி­ப­தியும் அவ்­வாறு கோரு­கின்றார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் - அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் நாம் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து செல்வேன். 

கேள்வி - சுதந்­திரக் கட்­சி­யி­னரும் கூட்டு எதி­ர­ணியும் இணைந்து தனி ஆட்சி ஒன்றை உரு­வாக்­க­வுள்­ள­தா­கவும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் சில­ரையும் இணைத்து கொண்டு செல்­ல­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இது பற்றி நீங்கள் அறிந்­துள்­ளீரா?

பதில் - ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பல­ருடன் சுதந்­தி­ரக்க கட்­சி­யினர் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தாக சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் என்­னிடம் கூறினர். எனினும் அவர்கள் அதனை நிரா­க­ரித்­துள்­ளனர். எமது குழு கூட்டம் நான்கு நாட்கள் கூடி­யது. ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யு­டனும் பேசினேன். இன்னும் இரண்டு நாட்­க­ளிலும் கூடி பேசி உரிய தீர்­மானம் எடுப்போம். நாம் தொடர்ந்து ஒற்­று­மை­யாக உள்ளோம்.

கேள்வி - உள்­ளூ­ராட்சி மன்ற மக்கள் ஆணை குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் - உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் மக்கள் ஆணையின் பிர­காரம் எமது தவ­று­களை திருத்­திக்­கொண்டு செல்வேன். பொரு­ளா­தார நிலை­மைகள் பெரும் பாதிப்பை செலுத்­தி­யது. இதன்­படி பொரு­ளா­தார நிலை­மை­களை சீராக்­குவோம்.

கேள்வி - தேர்தல் பெறு­பே­று­களை அடிப்­ப­டை­யாக கொண்டு பிர­தமர் பத­வியில் இருந்து விலக வேண்டும் என சுதந்­திரக் கட்­சி­யினர் தீர்­மா­னித்­துள்­ளனர். ஜனா­தி­ப­தியும் அறி­வித்­துள்ளார். இது பற்றி பேச்­சு­வார்த்­தைகள் பல நடை­பெ­று­கின்­றன?

பதில் - சுதந்­திரக் கட்­சியின் நிலைப்­பாட்டை என்­னிடம் கூறி­யுள்­ளனர். எமது நிலைப்­பாட்­டையும் ஜனா­தி­ப­திக்கு தெரி­வித்­துள்ளோம். கூட்டு எதி­ர­ணி­யுடன் ஜனா­தி­பதி பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். அது பொலன்­ன­று­வையில் நடை­பெ­ற­வுள்­ளது. அது பற்றி எனக்கு தெரி­யாது. தற்­போ­தைக்கு எந்த பிரச்­சி­னை­யும இல்லை.

கேள்வி - முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உங்­க­ளுடன் தொலை­பே­சியில் கதைத்­தாரா?

பதில் - கடந்த திங்­கட்­கி­ழமை என்­னுடன் பேசினார். 

கேள்வி - பிர­தமர் பத­வியில் இருந்து விலக வேண்டாம் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உங்­க­ளிடம் கூறி­ய­தாக அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கூறினார். இதனை முன்னாள் ஜனா­தி­பதி நிரா­க­ரித்­துள்ளார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் - என்­னுடன் திங்­கட்­கி­ழமை பேசினார். அப்­போது நான் பாரா­ளு­மன்­றத்தில் இருந்தேன். அப்­போது பிர­தமர் பத­வியில் இருந்து விலக போவ­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளன. இது உண்­மையா என என்­னிடம் கேட்டார். நான் இல்லை என்று கூறினேன். தற்­போது என்­னு­டைய காரி­யா­லய வேலை­களை செய்து வரு­கின்றேன். எந்­த­வொரு பிரச்­சி­னையும் இல்லை என்று நான் கூறினேன். நல்­லது நல்­லது என்று கூறினார். இன்னும் பல விட­யங்­களை பேசினோம்.

கேள்வி - மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் தொடர்பு வைத்­தி­ருந்­த­தா­கவும் அவரை பாது­காத்­த­தாக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன. இது பற்றி கருத்து என்ன?

பதில் - நான் யாரையும் பாது­காக்­க­வில்லை. நாங்கள் இடைக்­கி­டையே பேசுவோம். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வ­ரு­டனும் நல்ல தொடர்பு உள்­ளது. நான் எதிர்க்­கட்சி தலை­வ­ரா­கவும் சபை முதல்­வ­ரா­கவும் பிர­த­ம­ரா­கவும் அனைத்து எம்.பிக­ளுடன் நல்ல தொடர்­பினை வைத்­துள்ளேன். 

கேள்வி - எனினும் முன்­னைய ஆட்­சி­யினர் மீதான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்­லையே?

பதில் - நாங்கள் முன்­னைய ஆட்­சி­யினர் மீதும் ராஜ­பக்ஷ குடும்­பத்­தினர் மீதும் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். தற்­போ­தைக்கு பலர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர். 400க்கும் மேற்­பட்ட முறைப்­பா­டுகள் கிடைக்­க­பெற்­றுள்­ளன.இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்­குழு ரீதி­யாக பல நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனினும் மக்கள் வேகத்தை எதிர்­பார்க்­கின்­றனர். தற்­போது பல வழக்­குகள் தாம­த­மாக உள்­ளன. இதற்­காக நாம் புதிய மேல் நீதி­மன்­ற­மொன்றை உரு­வாக்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். ஆகவே குறித்த நீதி­மன்­றத்­தினால் வழக்கு விசா­ர­ணை­களை துரி­த­மாக முடித்­துக்­கொள்ள முடியும்.

கேள்வி - ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் தனி ஆட்சி அமைக்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றனர். தற்­போதும் பேச்­சு­வார்த்­தைகள் நடந்த வண்­ண­முள்­ளன. இந்த சவா­லுக்கு தேசிய அர­சாங்­கத்தின் ஐக்­கிய தேசியக் கட்சி தரப்பு எப்­படி முகங்­கொ­டுக்கும்?

பதில் - எமக்கு எந்­த­வொரு சவாலும் இல்லை. தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்து கொண்டு செல்வோம். 

கேள்வி - பிர­த­மரே உங்­க­ளுக்கு பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையை நிரூ­பிக்க முடி­யுமா? ஐ.தே.கவுக்கு பெரும்­பான்மை என்று சிலர் கூறு­கின்­ற­னரே?

பதில் - இந்த விட­யத்தில் அர­சி­ய­ல­மைப்பின் பிர­கா­ரமும் சம்­பி­ர­தாய பூர்­வ­மாக நாம் நடப்போம்.

கேள்வி - அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­ததின் பிர­காரம் பிர­த­மரை எப்­படி பதவி நீக்க முடியும் என சட்­டமா அதி­ப­ரிடம் ஜனா­தி­பதி ஆலோ­சனை கோரி­யுள்­ளாரே?

பதில் - அர­சி­ய­ல­மைப்பில் பிர­த­மரை நீக்க வாய்ப்­புகள் உள்­ளன. இதன்­படி நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மூலமும் வரவு செல­வுத்­திட்டம் தோற்­க­டிக்­கப்­பட்டால் மாத்­தி­ரமே பிர­த­மரை நீக்க முடியும்.

கேள்வி - அப்­ப­டி­யாயின் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வந்தால் அதற்கு முகங்­கொ­டுக்க நீங்கள் தயாரா? பெரும்­பான்மை உங்­க­ளிடம் உள்­ளதா? உங்­க­ளுக்கு 106 ஆச­னங்­களே உள்­ளன.

பதில் - நாம் தயார். பெரும்­பாமை எம்­மிடம் உள்­ளது. ஏனைய விட­யத்தில் பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக செய்ய முடியும்.

கேள்வி - இவ்­வாரம் இந்­திய,சீன, அமெ­ரிக்க தூது­வர்கள் உங்­க­ளுடன் பேசினர். இவர்­க­ளுடன் என்ன பேசி­னீர்கள்?

பதில் - புதிய சீன தூது­வரும் இந்­திய, அமெ­ரிக்க தூது­வர்கள் என்­னுடன் பேசினர். அத்­துடன் பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னி­கரும் என்­னுடன் பேசினார்.

கேள்வி - திரு­டர்­களை பிடிப்­ப­தற்கு எதி­ராக அமைச்­சர்கள் பலர் அழுத்தம் பிர­யோகம் செய்­வ­தாக குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. வசிம் தாஜூதீன் வழக்கின் போதும் அழுத்தம் பிர­யோகம் செய்­யப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றது. இதனை நிவர்த்தி செய்ய என்ன நட­வ­டிக்கை எடுப்­பீர்கள்? 

பதில் - அவ்­வாறு அழுத்தம் வந்தால் எமக்கு அறி­விக்­கு­மாறு பொலி­ஸிற்கு அறி­வி­றுத்­தி­யுள்ளோம்.

கேள்வி - ஜனா­தி­பதி, பிர­தமர் அழுத்தம் பிர­யோகம் செய்தால்?

பதில் - ஜனா­தி­ப­தியும் நானும் அவ்­வாறு செய்­வ­தில்லை. 

கேள்வி - ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேரவை கூட்­டத்­தொடர் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இதற்கு அர­சாங்கம் தயாரா? இந்­நி­லையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு பணிகள் செயற்­பா­டுகள் நிலைமை எந்த மட்­டத்தில் உள்­ளது?

பதில் - ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்­டத்­தொ­ட­ருக்கு எமது தூது­குழு பய­ணிக்கும். தேர்­தலின் பின்னர் புதிய அர­சி­ய­ல­மைப்பு பணி­களை ஆரம்­பிக்க இருந்தோம். இதன்­படி வழி­ந­டத்தல் குழு கூட்­டத்தின் பின்னர் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்போம். 

கேள்வி - அமைச்­ச­ரவை மாற்றம் தொடர்பில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளதா?

பதில் - தற்­போது பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்றோம். 

கேள்வி - தேசிய அர­சாங்­கத்தின் ஒப்­பந்தம் நீடிக்­கப்­ப­ப­டுமா?

பதில் - ஆம். பாரா­ளு­மன்­றத்தில் பிரே­ரணை நிறை­வேற்­றி­யதன் பின்னர் அதனை நீடிக்க முடியும்.

கேள்வி - தேசிய அர­சாங்­கத்தில் பல முரண்­பா­டுகள் நில­வு­கின்­றன. உங்­க­ளது தீர்­மா­னத்தை ஜனா­தி­பதி தடுப்­பதும் ஜனா­தி­ப­தியின் தீர்­மா­னங்­க­ளுக்கு ஐ.தே.க தடை விதித்தும் வரு­கின்­றது. தேசிய அர­சாங்­கத்தை முன்­னுக்கு கொண்டு செல்ல முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இது பற்றி கருத்து என்ன?

பதில் - தீர்­மானம் எடுக்கும் போது பிரச்­சி­னைகள் ஏற்­ப­டலாம். பல்­வேறு கட்­சி­களை இணைத்து அமைக்­கப்­பட்ட அர­சாங்­க­மாகும் என்­ப­தனை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். இதன்­போது பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வது வழக்­க­மாகும்.

கேள்வி - இரண்டு தலை­வர்கள் இருக்கும் போது பிரச்­சி­னைகள் ஏற்­படும் தானே? அதனை சிந்­திப்­பது இல்­லையா?

பதில் - கூட்­டாச்­சியில் இரண்டு மேற்­பட்ட தலை­வர்கள் இருப்­பது வழக்­க­மாகும். 

கேள்வி - வரவு செல­வுத்­திட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்க தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு 2 கோடி ரூபா வழங்­கப்­பட்­ட­தாக குற்­றம்­சு­மத்­தப்­ப­டு­கின்­றதே? இது­பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் - அப்­படி பாரி­ய­ள­வி­லான பணம் இருந்தால் நாங்கள் தேர்­த­லுக்கு செல­வி­டுவோம். அவ்­வ­ளவு தொகை வழங்­கப்­ப­ட­வில்லை.

கேள்வி - தேசிய அர­சாங்­கத்­தினால் எதுவும் செய்ய முடி­ய­வில்லை என ஐ.தே.க.வினர் குற்றம் சுமத்­து­கின்­ற­னரே?

பதில் - தனி ஆட்சி இருந்தால் மக்கள் பாரிய சேவை­களை முன்­னெ­டுக்க முடியும் என்றே ஐ.தே.க.வினர் கூறு­கின்­றனர். தேசிய அர­சாங்­கத்தில் இவ்­வா­றான பிரச்­சி­னைகள் ஏற்­படும்.

கேள்வி - பிரச்­சினை இருக்கும் போது எப்­படி முன்­னே­று­வது?

பதில் - இரண்டு வரு­டத்தில் எமது வேலைத்­திட்­டங்­களை விரை­வாக முன்­னெ­டுப்போம். பிரச்­சி­னைகள் வரும் போது அதனை தீர்க்க நட­வ­டிக்கை எடுப்போம். 

கேள்வி - மத்­திய வங்கி ஆளு­நரை நீங்­கள்தான் நிய­மித்­தீர்கள். தற்­போது அவருக்கு இரண்டாவது தடவைகள் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளதே? 

பதில் - மத்திய வங்கி ஆளுநர் நியமனத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று ஆணைக்குழு கூறியுள்ளது. நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது என்னுடைய காரியமல்ல.

கேள்வி - இனிமேலு்ம் உங்களது தலைமையில் தேர்தலை வெற்றிபெற முடியாது என கட்சியினர் கூறுகின்றனரே?

பதில் - 2014 ஆம் ஆண்டு மஹிந்தவின் ஆட்சியை கவிழ்ப்போம் என கூறினேன். ஆனால் யாரும் நம்பவில்லை. என்னை விமர்சனம் செய்தனர்.

கேள்வி - உங்களை பதவி நீக்க ஜனாதிபதி சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளாரே?

பதில் - இந்த அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இதுதான் எனது கருத்தாகும்.

கேள்வி - ஜனாதிபதியின் செயற்பாடுகள் ஒருமாதிரி இருக்கும் போது ஆட்சியை கொண்டு செல்ல முடியுமா?

பதில் - நான் அரசியலமைப்பின் பிரகாரம் ஆட்சியை முன்கொண்டு செல்வேன்.

கேள்வி - இந்த அரசியல் ஸ்திரமற்ற தன்மை எவ்வளவு காலம் நீடிக்கும். இதனால் ரூபாவின் பெறுமதி குறைந்துள்ளது. பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதே? ஊடகங்களுக்கும் வேறு துறை பக்கம் அவதானம் செலுத்த முடியாமல் உள்ளதே?

 

பதில் - ஆம் என்ன செய்வது. ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்ட வண்ணமுள்ளன. ஊடகங்கள் வெளியிடும் பெரும்பான்மை தகவல்கள் நாட்டுக்கு பாதிப்பையே ஏற்படுத்துகின்றன. பிரச்சினைகள் பல உள்ளன. எனினும் அதனை நிவர்த்தி செய்து முன்செல்வோம். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-17#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.