Jump to content

சிறையில் சசிகலா - விதிமுறை மீறல்களின் முழுவிவரம் #RTI


Recommended Posts

சிறையில் சசிகலா - விதிமுறை மீறல்களின் முழுவிவரம் #RTI

 
 

சசிகலா

 

சசிகலா சிறைக்குச் சென்ற நாளான 15.2.2017-லிருந்து 12.06.2017 வரை சிறையிலிருந்த போது யார் யாரெல்லாம் வந்து பார்த்தார்கள். எத்தனை முறை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. என்னென்ன விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன என்ற தகவல்கள் ஆர்டிஐ மூலம் வெளிவந்துள்ளன. ஆர்டிஐ ஆர்வலரான நரசிம்ம மூர்த்தி பெற்ற ஆர்டிஐ தகவல்கள் இதோ...

 

ஆர்டிஐ தகவல்கள் பெறப்பட்ட நாள்களின் அளவு 117 நாள்கள். கர்நாடக உயர்நீதி மன்ற விதிகளின் படி இந்தக் காலத்தில் 15 நாள்களுக்கு ஒரு சந்திப்பு என்ற அடிப்படையில் 8 முறை மட்டுமே நபர்கள் பார்க்க அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் 32 பார்வையாளர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பார்வையாளர் சந்திப்புக்கு 4 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் அதன்படி பார்த்தால் வெறும் 32 பார்வையாளர்கள் மட்டுமே சசிகலாவைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், சசிகலாவை சந்தித்தவர்களின் எண்ணிக்கை 82.

601வது சட்டப்பிரிவின் படி சிறையிலிருக்கும் நபரைச் சந்திக்க வழங்கப்படும் கால அவகாசம் 45 நிமிடங்கள்.  ஆனால், இந்தக் கால அவகாசங்கள் சிறை அதிகாரிகளின் உதவியோடு பார்வையாளர்களுக்கு அதிகமாக வழங்கபட்டுள்ளது.

சிறையில் உள்ள சசிகலாவைப் பார்க்க வரும் பார்வையாளர்கள் காலை 11 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.  மூர்த்தி ராவ் எனும் வழக்கறிஞர் சசிகலாவைப் பார்க்கச் சென்ற போது மணி மாலை 6:40 வெளியே வந்த நேரம் இரவு 7:20. 

மாத வாரியாக வழங்கப்பட்ட பார்வையாளர் அனுமதி

பிப்ரவரி 16-28
மொத்த நாள்கள் = 13
அனுமதி வழங்கப்பட்ட சந்திப்புகள் = 7

மார்ச் மாதம்
மொத்த நாள்கள் = 31
அனுமதி வழங்கப்பட்ட சந்திப்புகள் = 12

ஏப்ரல் மாதம்
மொத்த நாள்கள் = 30
அனுமதி வழங்கப்பட்ட சந்திப்புகள் = 5

மே மாதம்
மொத்த நாள்கள் = 31
அனுமதி வழங்கப்பட்ட சந்திப்புகள் = 5

ஜூன் மாதம் 12ம் தேதி வரை
மொத்த நாள்கள் = 12
அனுமதி வழங்கப்பட்ட சந்திப்புகள் = 3

சசிகலாவை சிறையில் அதிக முறை சந்தித்தவர்கள்

விவேக் - 8 முறை
அசோகன் - 7 முறை
செந்தில் - 5 முறை
டிடிவி தினகரன் - 5 முறை

இதுமட்டுமில்லாமல் அக்டோபர் மாதம் 19 தேதிகளுக்குள்ளாகவே 3 சந்திப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த மூன்று சந்திப்புகளின் விவரம்

6.10.2017 - அனுராதா
17.10.2017 - சுரேஷ் பாபு
24.10.2017 - அனுராதா 

பெறப்பட்ட இந்தத் தகவல்கள் அனைத்திலுமே சசிகலா விதிமுறைகள் மீறியுள்ளார் என்பது தெரிகிறது.

சசிகலா

சசிகலாவின் ஒருநாள்:

இதுமட்டுமில்லாமல் சசிகலாவின் ஒரு நாள் சிறையில் எப்படி இருக்கிறது என்று பார்த்தால் அவரது ஒருநாள் ஆச்சர்யமளிக்கும் விதமாக உள்ளது.

அதிகாலை 5 மணிக்கெல்லாம் கண் விழிக்கும் பழக்கம்கொண்ட சசி வழக்கமான நடைமுறைகளை முடித்துவிட்டு, ஒரு மணிநேரம் யோகா செய்யத் தொடங்குகின்றார். அதன்பிறகு சிறைவளாகத்தில் அரைமணி நேரம் நடைப்பயிற்சி, அதன்பிறகு குளித்து முடித்துவிட்டு சிறைக்குள் ஸ்பெஷலாகக் கொண்டுவரப்பட்ட சுமார் 5 கிலோ எடை கொண்ட லிங்கத்திற்கு, அன்றைய தினம் பறிக்கப்பட்ட வில்வ இலைகள், பூக்களைக் கொண்டு பூஜை செய்கின்றார். 

இந்தப் பூஜை மனஅமைதிக்காவும், இழந்த சக்தியை மீண்டும் சக்தி பெற ஆகமவிதிபடி இந்தச் சிவலிங்கத்திற்கு ரகசியமாக தேவதிராஜ் ஐயர் மந்திரங்களை ஓதி பூஜை செய்து கொடுத்து வருகின்றார். கடந்த 2018 ஜனவரி 30-ந் தேதி சிறையில் சிவலிங்கத்திற்குப் பூஜை செய்து கொடுத்துள்ளார். 

காலை 8 மணிக்கு சசிகலாவுக்கு ஸ்பெஷலாகத் தயார் செய்யப்பட்ட உப்புமா அல்லது ரவை இட்லி தயாராக இருக்கும். சுகர் பேஷன்ட்டுகளான சசி, இளவரசி இருவருக்கும் காலை உணவு 8 மணிக்கு எல்லாம் முடிந்துவிடும். 

காலை உணவை முடித்த பிறகு தமிழகத்திலிருந்து வெளியாகும் தினசரி செய்தித்தாள்கள் படிப்பார். 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே சந்திக்க முடியும் என்பதால் அன்றைய தேதிக்கு யார் யாரைச் சந்திக்க வேண்டும் என்று விவரம் கிடைத்தவுடன், அதை துண்டுச்சீட்டு மூலம் தகவல் அனுப்பி அவர்களைச் சந்திப்பார். 

சரியாக 11 மணிக்கு சுகர் இல்லாமல் டீ மற்றும் சுகர்ஃப்ரீ பிஸ்கெட் கிடைக்கும். மதியம் 1 மணிக்குப் பழங்கள் மற்றும் வேகவைத்த காய்கறி மட்டுமே உணவாக எடுத்துக்கொள்ளும் சசிகலா சில சமயம் வெறும் மோர்சாதம் சாப்பிடுவார். 

மாலை 5 மணிக்கு வேகவைத்த சுண்டல் அல்லது பருப்பு வகைகள் ஒரு கப், சுகர் இல்லாமல் டீ எடுத்துக்கொள்கிறார். எப்போதுமே இரவு 7 மணிக்கு இரண்டு சப்பாத்தி, ராகியில் செய்யப்பட்ட உணவு சாப்பிட்டு வருகின்றார். இதுதான் சசிகலாவின் சிறை மெனு லிஸ்ட். 

 

இப்படி ஒட்டுமொத்தமாக சிறை அதிகாரிகளின் உதவியோடு சொகுசாக வாழ்ந்து வந்த சசிகலாவுக்கு டிஜிபி ரூபா செக் வைத்தார். ஷாப்பிங் செல்லும் வீடியோ வெளியானது என ஊழல், விதிமீறல்களின் ஒட்டுமொத்த உருவமாகவே சிறைக்குள்ளும் வாழ்ந்து வருகிறார் சசிகலா. 

https://www.vikatan.com/news/coverstory/116526-misconduct-of-sasikala-in-jail.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.