• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

மகிந்த -– மைத்திரி இணைவுக்கான இரகசியப் பேச்சுக்கள் ஆரம்பம்

Recommended Posts

  •  
  • மகிந்த -– மைத்திரி இணைவுக்கான இரகசியப் பேச்சுக்கள் ஆரம்பம்
 
mahi.jpg

மகிந்த -– மைத்திரி இணைவுக்கான இரகசியப் பேச்சுக்கள் ஆரம்பம்

 

உள்ளூராட்­சி­மன்­றத் தேர்­த­லில் அமோக வெற்­றி­யீட்­டிய முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான பொது­மக்­கள் முன்­னணி மற்­றும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி ஆகி­யன இணைந்து செயற்­ப­ட­வுள்­ள­தாக அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளி­லிருந்து தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இது தொடர்­பான இர­க­சியப் பேச்­சுக்­கள் தற்­பொ­ழுது நடைபெற்று வரு­வ­தா­க­வும், முதற்­கட்டப் பேச்­சுக்­கள் நேற்­றுமுன்­தி­னம் இரவு நடை­பெற்­ற­தா­க­வும் தெரி­ய­வந்­துள்­ளது.

உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­த­லில் பெரிய வீழ்ச்சி கண்­டுள்ள அரச தலை­வர் மைத்­திரி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் அமைச்­சர்­கள் சிலர், அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து விலகிப் பொது­மக்­கள் முன்­ன­ணி­யு­டன் இணை­ய வுள்­ள­தாக வெளி­யான தக­வலை அடுத்து, அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ வுக்கு, மகிந்த ராஜ­பக்­ச­வு­டன் இணை­யு­மாறு கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­க­ளி­ட­மி­ருந்து பெரிய அழுத்­தங்­கள் பிர­யோ­கிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மைத்­து­வத்­தை­யும், எதிர்க்­கட்­சித் தலை­மைத்­து­வத்­தை­யும் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு வழங்­கு­மாறு பொது­மக்­கள் முன்­ன­ணி­யி­லி­ருந்து அரச தலை­வ­ருக்கு அழுத்­தங்­கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளன.

 
 

இதே­வேளை, தனித்து ஆட்சி நடத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை ஐக்­கிய தேசிய கட்சி முன்­னெ­டுத்­துள்­ள­தா­க­ வும் தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்­சி­யின் முக்­கிய அமைச்­சர்­கள் நேற்­று­முன்­தி­னம் மாலை தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைச் சந்­தித்து இது தொடர்­பில் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­னர்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, சுதந்­தி­ரக் கட்­சி­யி­னரை நேற்றுமுன்­தி­னம் சந்­தித்­த­போது கூறி­ய­தைப் போன்று இன்­னும் ஓரிரு தினங்­க­ளில் நாட்­டில் பெரிய அர­சி­யல் மாற்­ற­மொன்று இடம்­பெ­று­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் காணப்­ப­டு­வ­தாக அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

http://newuthayan.com/story/68521.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this