Jump to content

முன்னாள் போராளியை கொழும்புக்கு திருப்பி அனுப்புகிறது அவுஸ்ரேலியா


Recommended Posts

முன்னாள் போராளியை கொழும்புக்கு திருப்பி அனுப்புகிறது அவுஸ்ரேலியா

 

deportedஐ.நாவின் கோரிக்கைகளையும் நிராகரித்து, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவரை அவுஸ்ரேலிய அரசாங்கம் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பவுள்ளது.

2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்ரேலியா சென்றிருந்த சாந்தரூபன் என்பவரே, வரும் 22ஆம் நாள் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார்.

அவுஸ்ரேலிய அரசாங்கம் இவரது புகலிடக் கோரிக்கையை நிராகரித்திருந்தது.

எனினும்,  விடுதலைப் புலிகள் இயக்கத்தில், கடற்புலிகளின் படகுகள் கட்டுமானப் பிரிவில் முக்கிய உறுப்பினராக இருந்த சாந்தரூபன் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால், உயிராபத்தை எதிர்கொள்ளலாம் என்று அகதிகளுக்கான ஐ.நா முகவரகம் எச்சரித்திருந்தது.

அவரை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று ஐ.நா விடுத்திருந்த கோரிக்கையை நிராகரித்து, எதிர்வரும் 22ஆம் நாள் கொழும்புக்கு அனுப்பி வைக்க அவுஸ்ரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது

கடும் பாதுகாப்புடன் அவர் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார். இதுதொடர்பான அறிவித்தல் சாந்தரூபனுக்கு அவுஸ்ரேலியா எல்லை பாதுகாப்புப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது.

சாந்தரூபன் தற்போது அவுஸ்ரேலிய தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/02/13/news/29087

Link to comment
Share on other sites

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர் நாடுகடத்தப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மெல்பேர்ன் புறநகர்ப் பகுதியான Dandenongஇல் ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“விடுதலைப் புலிகள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு சுயாதீனமான தமிழ் தாயகத்திற்கு போராடினார்கள்.

இந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் "இலங்கை பாதுகாப்புப் படைகளால் காணாமல் போயுள்ளனர், தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டுள்ளனர்" என தமிழ் அகதி மன்றத்தின் (TRC) அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பில் கடற்புலிகளின் படகுகள் கட்டுமானப் பிரிவில் முக்கிய உறுப்பினராக இருந்த சாந்தரூபன் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ளார்.

இவர் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு நாடுகடத்தப்பவுள்ளார். இவரது புகலிட கோரிக்கையை அவுஸ்திரேலிய அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில், அவர் தற்போது நாடுகடத்தலை எதிர்நோக்கியுள்ளார்.

இந்நிலையில், சாந்தரூபன் நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புலம்பெயர் தமிழர்கள் உள்ளடங்களாக பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாந்தரூபனுடன் பிற தமிழர்கள் நாடு கடத்தப்படக்கூடும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்.

பாதுகாப்பு விசாக்கள் மறுக்கப்பட்ட 1400 தமிழர்கள் தற்போது நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளார்கள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.tamilwin.com/diaspora/01/174417?ref=home-feed

Link to comment
Share on other sites

முன்னாள் போராளியை நாளை நாடுகடத்துகிறது அவுஸ்ரேலியா

 

australiaவிடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான சாந்தரூபன் தங்கலிங்கம் (வயது-46) நாளை அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளார்.

இந்த நிலையில், தாம் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், சித்திரவதை செய்யப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும் கூட வாய்ப்புகள் உள்ளதாக, சாந்தரூபன் அச்சம் வெளியிட்டுள்ளார்.

தம்முடன் இணைந்து போராடிய இரண்டு முன்னாள் போராளிகளுக்கு, விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்தமைக்காக அவுஸ்ரேலியா அடைக்கலம் அளித்துள்ள அதேவேளை, தமக்கு அடைக்கலம் மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இவர் தாம் விடுதலைப் புலிகளுக்காக சண்டைப்படகுகளை வடிவமைத்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால், சாந்தரூபனின் பின்னணி தொடர்பாக சந்தேகம் கொண்டுள்ளதாகவும், அவர் விடுதலைப் புலிகளால் பயிற்சி அளிக்கப்பட்டவர் என்பதற்கோ, படகுத் தளத்துக்குப் பொறுப்பானவராக இருந்தார் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று அவுஸ்ரேலிய அரசாங்கம் கூறியுள்ளது.

அதேவேளை, தங்கலிங்கம் சாந்தரூபன் ஆபத்தில் இருக்கிறார் என்பதில் எந்தக் கேள்விக்கும் இடமில்லை என, தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.

தாம் நாடு கடத்தப்பட்டால், சிறிலங்கா படைகளால் சித்திரவதை செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்படக் கூடும் என்று அவர் அச்சம் கொண்டுள்ளார் என்றும் தமிழ் அகதிகள் பேரவையின் தலைவர் ஆரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 19 வயதில் இணைந்த சாந்தரூபன், இனியவன் என்ற பெயரில் இயங்கியவர் என்றும் இவர் புலிகள் இயக்கத்தின் முன்னணி பங்கு வகித்து வந்தவர் என்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இவர் விடுதலைப் புலிகளின் படகு கட்டுமான முகாமைத்துவத்துக்கு பொறுப்பாக இருந்தார் என்றும், போரில் பங்கெடுத்தாரா என்பது தெளிவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, முன்னாள் போராளியான மனோகரன் தனபாலசிங்கமும், இனியவன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர் என்றும், அவர் படகுப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் தேடிய சாந்தரூபனின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர் தற்போது குடிவரவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார். அவரை நாளை நாடு கடத்தவுள்ளதாக அவுஸ்ரேலிய எல்லைப் படை அறிவித்துள்ளது.

http://www.puthinappalakai.net/2018/02/21/news/29251

Link to comment
Share on other sites

நாடு கடத்தப்பட்ட புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு விமான நிலையத்தில் நடந்தது?

இலங்கையில் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த 46 வயதுடைய சாந்தரூபன் என்ற இலங்கைத் தமிழ் அகதி அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு 10 மணியளவில் இலங்கையை வந்தடைந்த இவரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் அகதிகள் பேரவையால் கே.எஸ். ரத்னவேல் என்ற சட்டத்தரணியை ஏற்பாடு, அவரை விமான நிலையத்திற்கு அனுப்பி செய்து, சாந்தரூபனின் குடும்பத்தாரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிலையில் சாந்தரூபன் 4 மணிநேர விசாரணைகளுக்கு பின் குடும்பத்தாருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.

கடந்த 2012ஆம் ஆண்டு படகு வழியாக அவுஸ்திரேலியா சென்ற சாந்தரூபன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவில் படகு கட்டுபவராக இருந்துள்ளார்.

2009இல் யுத்தம் முடிவடைந்த நிலையில், இலங்கை இராணுவத்தின் உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அவர் அவுஸ்திரேலிய சமூகத்திற்குள் வாழ அனுமதிக்கப்பட்டு, 2015இல் குடிவரவுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு அவர் நாடுகடத்தப்பட இருப்பதற்கான உத்தரவுச் சான்றை வழங்கிய அவுஸ்திரேலிய எல்லைப் படை விமான நிலையத்தின் எந்த பார்வையாளர்களையும் சந்திக்க அவருக்கு அனுமதி கிடையாது என்றும், கொழும்பு விமானத்தில் பாதுகாவலர் உடன் அவர் அனுப்பி வைக்கப்படுவர் என்றும் தெரிவித்திருந்தது.

ஆனால் அந்த உத்தரவில் சாந்தரூபன் கையெழுத்திட மறுத்திருந்தார்.

“சாந்தரூபனின் புகார் பரிசீலணையில் இருப்பதால் அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது” என ஐ.நா.குழு அவுஸ்திரேலியாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த கோரிக்கையை நிராகரித்த அவுஸ்திரேலியா, சாந்தரூபனை வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்த முடிவு செய்துள்ளது.

சாந்தரூபன் உட்பட எந்த அகதிகளும் நாடுகடத்தப்படக் கூடாது என சில தினங்களுக்கு முன் அவுஸ்திரேலியாவில் போராட்டமும் நடைபெற்றிருந்தது. அவர் நாடுகடத்தப்பட்டால் கடுமையான ஆபத்தில் சிக்கக்கூடும் என அவுஸ்திரேலியாவில் செயல்படும் தமிழ் அகதிகள் மையம் கவலை தெரிவித்திருந்தது.

 

http://www.tamilwin.com/security/01/175075?ref=home-latest

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஆஸியிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு

santharuban.jpg?resize=259%2C195
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பலவந்தமான அடிப்படையில் கடந்த வாரம் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்  அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டிருந்தார். சாந்தரூபன் என்ற புகலிடக் கோரிக்கையாளரே இவ்வாறு துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

ஐந்து ஆண்டுகள் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த போதும் உரிய முறையில் தமது புகலிடக் கோரிக்கையை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை என சாந்தரூபன் தெரிவித்துள்ளார். நாடு கடத்தப்பட்டு இலங்கை சென்றடைந்ததன் பின்னர் விமான நிலையத்தில் வைத்தே சாந்தரூபன் கைது செய்யப்பட்டு நான்கு மத்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் விடுதலை செய்யப்பட்டாலும், அடிக்கடி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தி வருவதாகக் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். சாந்தரூபனின் மனைவி மற்றும் பிள்ளைகள் பற்றிய விபரங்களும் திரட்டப்பட்டு வருவாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/2018/69261/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.