Jump to content

தென்னிலங்கையின் மாறாத விசுவாசம்! இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக கோத்தபாய!

Recommended Posts

தென்னிலங்கையின் மாறாத விசுவாசம்! இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக கோத்தபாய!

இலங்கையின் அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல திரும்புமுனைகளுடன் இன்றைய மணித்துளிகள் நகர்ந்து செல்கின்றன.

2015ல் ஏற்பட்ட பாரிய தோல்வியை அடுத்து கடந்து மூன்று வருடங்களாக ராஜபக்ஷர்களினால் வகுக்குப்பட்ட மாற்று நடவடிக்கைகளுக்கு இன்று மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.

பறிபோன அதிகாரங்களை பெற்றுக்கொள்ள தீவிர முயற்சியில் ஈடுபட்ட ராஜபக்ஷகள் அதற்கான ஆணையை முழுமையாக பெற்றுள்ளதாகவே இன்றைய தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன.

ராஜபக்ஷ மீண்டும் இலங்கையை முழுமையாக ஆட்சி செய்வதற்கு தென்னிலங்கை மக்கள் விரும்பம் கொண்டுள்ளதாக தமது ஜனநாயக கடமைகள் மூலம் நிரூபித்துள்ளனர்.

இந்நிலையில் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவை போட்டியிட வைப்பது இன்றுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி ஆரம்பித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிலங்கை மக்களின் ஆணையை அடுத்து கோத்தபாய ராஜபக்ஷ மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது அமெரிக்க குடியுரிமையை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளில் கோத்தபாய தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் தற்போது வரையில் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

இலங்கையின் அரசியலமைப்புக்குட்ட சிறிய தேர்தலாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் உள்ளபோதும், ஒரு ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தும் அளவுக்கு ஆதீக்கம் செலுத்தியுள்ளது.

நேற்றைய வாக்களிப்பில் மொத்தமாக சுமார் 65 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. இதில் சுமார் 45 வீதமான வாக்குகளை மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பெற்றுள்ளது.

இந்நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் போட்டியிட்டால் வெற்றி பெறுவது உறுதி என ராஜபக்ஷ தரப்பு நம்புகிறது.

கோத்தபாய இராணுவத்தினருடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளமையால் ஜனாதிபதி கனவு ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டதொன்றாக ராஜபக்ஷ ரெஜிமென்ட் நம்புவதாக அவர்களுக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த நிலையில், அவரின் ஒட்டுமொத்த குடும்பம் அரசியல் ரீதியில் பின்னடைவை சந்தித்தனர்.

அப்படியானதொரு மாற்றியமைக்கும் முகமாக இன்றை பாரிய வெற்றி ராஜபக்ஷ குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எனி ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ராஜபக்ஷர்களின் ஒவ்வொரு நகர்வும் அமைந்திருக்கும் என்பது யதார்த்தமாகும்.

http://www.tamilwin.com/politics/01/173993?ref=home-feed

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தில் பதவி கிடைக்கணும் என்றால் இனவாதியாய் காட்டிகொண்டால் போதும் இல்லை தமிழனை அழித்தவராய் இருத்தல் வேணும் இந்த அடிப்படை யான கூற்று மாறுமட்டும் தமிழனுக்கு எந்த காலமும் விமோசனம் கிடையாது .

இனி மேற்குலகு நித்திரையில் இருந்து எழும்பி பயனில்லை மைத்திரி வரும்போது தலைதலையாய் அடித்து சொன்னது இங்குள்ள படித்த மேதாவிகள் எங்களுக்கு விளக்கம் குறைவு என்று கடிந்து கொண்டது நினைவுக்கு வருது .

Link to comment
Share on other sites

7 minutes ago, பெருமாள் said:

இனி மேற்குலகு நித்திரையில் இருந்து எழும்பி பயனில்லை மைத்திரி வரும்போது தலைதலையாய் அடித்து சொன்னது இங்குள்ள படித்த மேதாவிகள் எங்களுக்கு விளக்கம் குறைவு என்று கடிந்து கொண்டது நினைவுக்கு வருது .

மேற்குலகுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதே தேவையானது. அதற்கு நீங்கள் "தலைதலையாய் அடித்து சொன்னது" என்னது  என்று மீண்டும் ஒரு முறை நினைவு படுத்துகிறீர்களா?  தமிழ் மக்களுக்கு இடைக்கால ஆட்சி வழங்க இணங்கியதற்காக ஆட்சி கவிழ்க்கப் பட்ட   ரணில் ஜனாதிபதி தேர்தலில் நின்ற போது   அந்த தேர்தலை புறக்கணித்து மகிந்தவை ஆட்சிக்கு கொண்டு வந்தது தான் எனக்கு நினைவு இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Jude said:

திரும்பவும் அ வில் இருந்தா முடியலை .

Link to comment
Share on other sites

47 minutes ago, பெருமாள் said:

சிங்களத்தில் பதவி கிடைக்கணும் என்றால் இனவாதியாய் காட்டிகொண்டால் போதும் இல்லை தமிழனை அழித்தவராய் இருத்தல் வேணும் இந்த அடிப்படை யான கூற்று மாறுமட்டும் தமிழனுக்கு எந்த காலமும் விமோசனம் கிடையாது .

இனி மேற்குலகு நித்திரையில் இருந்து எழும்பி பயனில்லை மைத்திரி வரும்போது தலைதலையாய் அடித்து சொன்னது இங்குள்ள படித்த மேதாவிகள் எங்களுக்கு விளக்கம் குறைவு என்று கடிந்து கொண்டது நினைவுக்கு வருது .

மஹிந்த வெல்லவில்லை வென்றது போல் ஒரு பிரம்மை ஏற்படுத்தபட்டுள்ளது, அவருக்கு என்று ஒரு அசைக்க முடியாத வாக்குத்தளம் உள்ளது. அவர்கள் வழக்கம் போல் அவருக்கு வாக்களித்துள்ளனர்.

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிட்டால் மகிந்தவுக்கு குறைவான   வீதமான வாக்குகளே  கிடைத்துள்ளன.

Link to comment
Share on other sites

7 hours ago, பெருமாள் said:

திரும்பவும் அ வில் இருந்தா முடியலை .

அ வில் தானே மீண்டும் வந்து நிற்கிறோம்? முடியலை என்று தான் எத்தனயோ பேர் விட்டு விட்டு மௌனித்து போனார்கள். நீங்களும் சேரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த ஆட்சியில் இருந்தபோதும் சிங்களவர்களையோ ராணுவத்தையோ விட்டுகொடுக்கவில்லை, தமிழர்களுக்கு தீர்வு எதுவும் தரவில்லை.

மைத்திரி ஆட்சிக்கு வந்தபோதும் சிங்களவர்களயோ ராணுவத்தையோ விட்டுகொடுக்கவில்லை தமிழர்களுக்கு தீர்வு எதையும் தரவில்லை.

இதில் கோத்தபாய ஆட்சிக்கு வரபோகிறார் என்று பதட்டபடுவதற்கோ, மைத்திரியின் ஆட்சி பறிபோகபோகிறது என்று பயம் கொள்வதற்கோ என்ன இருக்கிறது?

இறுதி யுத்தம் நடத்தி முடிக்கப்பட்டபோது மஹிந்த பதவியில் இருந்தார், மைத்திரி ஜனாதிபதியாக இருக்கவில்லை என்ற வேறுபாட்டைதவிர,மனதளவில் அவர்களுக்குள் சிறுபான்மையினர்விடயத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.

மைத்திரி தமிழர்களின் பேராதரவை பெற்று ஆட்சிக்கு வந்தார் என்பதே அவருக்கும் இவருக்கும் உள்ள வித்தியாசம்,

என்னதான் தமிழர்களின் ஆதரவுடன் பதவிக்கு வந்தாலும் சிங்களவர்களை பகைத்துக்கொண்டு எமக்கு எதுவும் செய்துவிடமுடியாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது, ஆக கடந்த தேர்தலில் நாம் அடைந்த ஒரு நன்மை தமிழர்கட்சி ஒன்று இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாய் அமர்ந்தது ஒன்று மட்டுமே,

அந்த கட்சிகூட சிங்களவர்களுடன் நல்லிணக்கம்,ஒத்துழைப்பு,புரிந்துணர்வு,ஒரே இலங்கைக்குள் தீர்வு,முஸ்லிம்களுடன் விட்டுகொடுப்பு,நட்புறவு என்று எது எதெல்லாமோ செய்து பார்த்தும் ஏதுமே ஆகவில்லை, அப்படி ஒரு எதிர்கட்சி எமது பக்கம் இருப்பதைவிட சிங்களவனே அந்த பதவியிலும் இருந்துவிட்டுபோகலாமே எதுதான் பறிபோய்விடும்?

சிங்கள பெரும்பான்மை கட்சிகளின் கைகள் இருபக்கமுமே கூரான கத்திகள்,இதில் எந்த கட்சிகளின் கைகளை இறுக்கி பிடித்தாலும் தமிழர் தரப்பிற்குத்தான் எப்போதும் காயம் வரும்.

Link to comment
Share on other sites

31 minutes ago, valavan said:

அதை விட முக்கியம்  மஹிந்த 2015இல் பெற்ற வாக்குகள் 47 % இந்த முறை 45% அதாவது அவரது வாக்கு வங்கி மாறவில்லை, வித்தியாசம் எதிர் கட்சிகள் தனித்து போட்டிய்ட்டமை. 

2015 போல் இப்போதும் 2017இல் அவர் தான் வென்ற சிங்கள பிரதேசங்களை வென்று  வடக்கு கிழக்கு , கொழும்பு மலையகம் போன்ற பிரதேசங்களில் தோற்றுள்ளார்

Link to comment
Share on other sites

சிங்களத்தின் அரசியல் எப்போதும் பேரினவாதத்தை அடிப்படையாகக் கொணடதே. கட்சிகள் தலமைகள் ஆட்சிகள் மாறலாம் ஆனால் பேரினவாத அடிப்படை மாறுவதில்லை. மாறவேண்டிய அவசியம் , தேவை,  நெருக்கடி என்று எதுவும் இல்லை. எத்தனை தேர்தல்கள் வந்தாலும் அதனால் தமிழர்களுக்கு விமோசனம் வந்ததும் இல்லை வரப்போவதும் இல்லை.. புலிகளின் முடிவு என்பது தமிழர்களின் அரசியலின் முடிவாகவே இன்றுவரை உள்ளது. முடிவில் இருந்து சில ஆரம்பங்கள் வழமையாக இருக்கும் ஆனால் தமிழர்கள் அதற்கு விதிவிலக்காக இருக்கின்றார்கள். 

Link to comment
Share on other sites

2 hours ago, valavan said:

இதில் கோத்தபாய ஆட்சிக்கு வரபோகிறார் என்று பதட்டபடுவதற்கோ, மைத்திரியின் ஆட்சி பறிபோகபோகிறது என்று பயம் கொள்வதற்கோ என்ன இருக்கிறது?

கோத்தபாய  காலத்தில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்? ஊடகவியலாளர் சிவராம், நிமல்ரஞ்சன் போன்றவர்களை உங்களுக்கு நினைவு இருக்கிறதா? இராணுவ முகாம்களில் இறக்கி சோதிக்கப்பட்ட காலங்கள் நினைவு இருக்கிறதா? தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக ஆண்டுக்கணக்காக சிறைக்கு போனவர்கள் எத்தனை? சிறிலங்கா விமான நிலையத்தில் கால்வைக்க பயந்த எங்கள் மக்கள் இன்று அங்கு மாளிகைகள் கட்டி வாழ்கிறார்களே? இன்று நீதிமன்றங்கள் இராணுவத்தினருக்கு தமிழரை கொன்றதற்காக கடூழிய சிறைத்தண்டனை விதிக்கின்றன. அதுவும் தமிழ் பகுதிகளில் தமிழ் நீதிபதிகள் இந்த தண்டனைகளை வழங்குகிறார்கள். மைத்திரி வந்து தான் இதெல்லாம் சாத்தியமானது. கோத்தபாய வந்தால் முடியுமா?

2 hours ago, valavan said:

என்னதான் தமிழர்களின் ஆதரவுடன் பதவிக்கு வந்தாலும் சிங்களவர்களை பகைத்துக்கொண்டு எமக்கு எதுவும் செய்துவிடமுடியாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது,

சிங்களவர்களை பகைத்துக்கொண்டு தரும் தீர்வை இலங்கை பாராளுமன்றம் எப்படி நிறைவேற்றும்? அப்படி நிறைவேற்றினாலும் கூட சிங்களவர்களை பகைத்துக்கொண்டு எத்தனை ஆண்டு காலம் இந்த தீவில் தமிழர்கள் போர் இல்லாமல் அழிவு இல்லாமல் வாழ முடியும்? நீங்கள் கேட்பது உங்களுக்கே சாத்தியமாக தெரிகிறதா?

2 hours ago, valavan said:

சிங்கள பெரும்பான்மை கட்சிகளின் கைகள் இருபக்கமுமே கூரான கத்திகள்,இதில் எந்த கட்சிகளின் கைகளை இறுக்கி பிடித்தாலும் தமிழர் தரப்பிற்குத்தான் எப்போதும் காயம் வரும்.

கூரான கத்திகள் என்றால் ஏன் வெறும் கைகளால் தான் இறுக்கி பிடிப்போம் என்று பிடிவாதம் பிடிக்கிறீர்கள்? 
 இரும்பு சங்கிலிகளால் ஆன கைக்கவசம் அணிந்து பிடியுங்கள். கத்திகள் செயல் இழக்கும். அசையாது.

ஜி ஜி பொன்னம்பலம் ஐக்கிய தேசிய கட்சியில் அமைச்சராக இருந்த காலத்தில் தான் கிழக்கில் காகித தொழிற்சாலையும் வடக்கில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையும் கட்டப்பட்டன. துரையப்பா ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மேயராக இருந்து தான் துரையப்பா விளையாட்டு அரங்கு, பூங்கா, யாழ்ப்பாண புகையிரத நிலையம், மாநகரசபை கட்டடம் மற்றும் நூலகம் ஆகியவற்றை கட்டினார். பகைத்து கொண்டு எதை உருவாக்கினோம்? வன்னியிலும் கிளிநொச்சியிலும் பிச்சை எடுக்கும் மக்களையும் விபச்சாரம் செய்யும் விதவைகளையும் தான் உருவாக்கினோம். இல்லையா?

Link to comment
Share on other sites

52 minutes ago, சண்டமாருதன் said:

சிங்களத்தின் அரசியல் எப்போதும் பேரினவாதத்தை அடிப்படையாகக் கொணடதே. கட்சிகள் தலமைகள் ஆட்சிகள் மாறலாம் ஆனால் பேரினவாத அடிப்படை மாறுவதில்லை. மாறவேண்டிய அவசியம் , தேவை,  நெருக்கடி என்று எதுவும் இல்லை. எத்தனை தேர்தல்கள் வந்தாலும் அதனால் தமிழர்களுக்கு விமோசனம் வந்ததும் இல்லை வரப்போவதும் இல்லை.. புலிகளின் முடிவு என்பது தமிழர்களின் அரசியலின் முடிவாகவே இன்றுவரை உள்ளது. முடிவில் இருந்து சில ஆரம்பங்கள் வழமையாக இருக்கும் ஆனால் தமிழர்கள் அதற்கு விதிவிலக்காக இருக்கின்றார்கள். 

புலிகளின் அரசியல் அரசியல் முடிவுடன் புதிய ஆரம்பம் வேண்டும் என்றால் புலிகளின் அரசியல் தீர்வை நாம் தொடர்ந்தும் பிடித்து கொண்டு இருக்க கூடாது. அது முடிந்து போனதாகி புதிய ஆரம்பத்துக்கு இடம் விட வேண்டும்,. தமிழ் தேசியம் மறைந்து மனிதம் பிறக்க வேண்டும். நாம் எல்லோரும் மனிதர்கள், எல்லா மனிதருக்கும்   வாழ்வாதாரமே தேவையானதும் போதுமானதும் என்ற நிலைப்பாட்டுக்கு நாம் வர வேண்டும். அவர்கள் புத்தருக்கு முதல் இடம் என்றால் நாம் ஏன் அதற்கு போய் அடிபட வேண்டும்? இங்கே விதவைகள் விபச்சாரம் செய்து பிழைக்கும் நிலை. மக்கள் பிச்சை எடுக்கிறார்கள். கூட்டாக வாழ வழி இல்லாமல் தற்கொலை செய்கிறார்கள். புத்தருக்கு முதல் இடமா இரெண்டாவது இடமா என்பதா முக்கியம்?

Link to comment
Share on other sites

2 minutes ago, Jude said:

தமிழ்த்தேசீயம் மறைந்து மனிதம் பிறக்கவேண்டும் என்கின்றீர்கள் அப்படி என்றால் தமிழ்த்தேசீயம் மானுடத்துக்கு விரோதமானதா ? சிங்கள பெருந்தேசீயம் என்ற ஒன்றின் எதிர்வினைதான் தமிழ்த்தேசீயம் . தமிழ்த்தேசீயம் என்பது அடிப்படையில் நாங்கள் எங்கள் நிலத்தில் வாழ்வது எங்கள் வழங்களை எங்கள் அடிப்படைத்தேவைகளுக்கு பயன்படுத்துவது எங்கள் மொழியில் கதைப்பது. எங்கள் பழக்கவழக்கங்களை நாம் தொடர்வது. இவை அனைத்தும் சிங்கள பெருந்தேசீயத்தால் சிதைக்கப்படுகின்றது.  நீங்கள் மனிதம் பிறக்க வேண்டும் என்பது அடிமைத்தனத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள் என்கின்றது. அம்மா என்பதற்கு பதிலாக அம்மே என்று செல் என்கின்றது. புத்தரை முதலிடத்தில் வைத்தால் போல் பொருளாதராக் கஸ்டங்கள் மாறப்போவதில்லை ஏனெனில் இப்போது முதலிடத்தில் தான் புத்தர் உள்ளார். முதலிடம் என்பதற்கும் அப்பால் புத்தர் அரசனாக உள்ளார் தமிழர்கள் அடிமைகளாக உள்ளனர். புலம்பெயர்ந்தவர்கள் கனேடியர்களாக இங்கிலாந்துக்காரர்களாக ஜெர்மன்காரர்களாக மாறுவதுபோல் ஈழத்தமிழர்கள் இலங்கையர்களாக மட்டும் மாறினால் போதாது சிங்களவர்களாகவும் மாறவேண்டும் என்பதே உங்கள் கருத்தின் உள்ளடக்கம். இதற்கு அரசியல் என்ற ஒன்றே தேவையில்லை. அதையேதான் எனது கருத்தில் புலிகளின் முடிவு தமிழர்களின் அரசியலின் முடிவு என்று கூறியுள்ளேன். அதுதான் முள்ளிவாய்க்காலில் முடிந்து விட்டது . தமிழீழத்தை நாங்கள் கேட்கவில்லை என்று சம்மந்தர் அடிக்கடி கூறுகின்றார். மனிதம் மலர்வதில் எந்த தடையும் இல்லை. சிங்கத்துக்கு முன்னால் புலியில்லை. சிங்கத்திற்கு முன்னால் மனிதர்களாக நிற்போம் !!.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Jude said:

அ வில் தானே மீண்டும் வந்து நிற்கிறோம்? முடியலை என்று தான் எத்தனயோ பேர் விட்டு விட்டு மௌனித்து போனார்கள். நீங்களும் சேரலாம்.

இங்கு கனபேருக்கு விளங்குவது உங்களுக்கு மட்டும் விளங்காது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய ஜனாதிபதியாகவும் மகிந்த பிரதமராகவும் பின்னர் செங்கோலை நாமலிடம் கொடுக்கலாம். எனவே சிறிலங்கா கடும்போக்குக்கொண்ட சிங்களப் பெருந்தேசிய ஆட்சிக்குள்தான் எதிர்காலத்தில் இருக்கப்போகின்றது.

அமெரிக்காவில் ட்ரம்பும், இந்தியாவில் மோடியும் பலமாக இருக்கும்போது அவர்களுடனும் சீனாவோடும் சேர்ந்து தமிழரையும், முஸ்லிம்களையும் ஒடுக்கி இலங்கைத் தீவானது சிங்களவர்களுக்கேயானது என்ற தம்மதீபக் கொள்கையை நனவாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

தமிழர்கள் வாழ்வாதாரத்திற்காகவும் இருப்புக்காகவும் சிங்களவர்கள், இந்தியா, மேற்கு நாடுகள், சீனாவின் தயவுக்காக காத்திருக்கவேண்டும். வேறு வழிகள் இருக்கின்றனவா என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இங்கு கனபேருக்கு விளங்குவது உங்களுக்கு மட்டும் விளங்காது .

என்னை மறந்து கொஞ்சம் சத்தமாய் சிரிச்சுப்போட்டன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Jude said:

கோத்தபாய  காலத்தில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்? ஊடகவியலாளர் சிவராம், நிமல்ரஞ்சன் போன்றவர்களை உங்களுக்கு நினைவு இருக்கிறதா? இராணுவ முகாம்களில் இறக்கி சோதிக்கப்பட்ட காலங்கள் நினைவு இருக்கிறதா? தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக ஆண்டுக்கணக்காக சிறைக்கு போனவர்கள் எத்தனை? சிறிலங்கா விமான நிலையத்தில் கால்வைக்க பயந்த எங்கள் மக்கள் இன்று அங்கு மாளிகைகள் கட்டி வாழ்கிறார்களே? இன்று நீதிமன்றங்கள் இராணுவத்தினருக்கு தமிழரை கொன்றதற்காக கடூழிய சிறைத்தண்டனை விதிக்கின்றன. அதுவும் தமிழ் பகுதிகளில் தமிழ் நீதிபதிகள் இந்த தண்டனைகளை வழங்குகிறார்கள். மைத்திரி வந்து தான் இதெல்லாம் சாத்தியமானது. கோத்தபாய வந்தால் முடியுமா?

சிங்களவர்களை பகைத்துக்கொண்டு தரும் தீர்வை இலங்கை பாராளுமன்றம் எப்படி நிறைவேற்றும்? அப்படி நிறைவேற்றினாலும் கூட சிங்களவர்களை பகைத்துக்கொண்டு எத்தனை ஆண்டு காலம் இந்த தீவில் தமிழர்கள் போர் இல்லாமல் அழிவு இல்லாமல் வாழ முடியும்? நீங்கள் கேட்பது உங்களுக்கே சாத்தியமாக தெரிகிறதா?

கூரான கத்திகள் என்றால் ஏன் வெறும் கைகளால் தான் இறுக்கி பிடிப்போம் என்று பிடிவாதம் பிடிக்கிறீர்கள்? 
 இரும்பு சங்கிலிகளால் ஆன கைக்கவசம் அணிந்து பிடியுங்கள். கத்திகள் செயல் இழக்கும். அசையாது.

ஜி ஜி பொன்னம்பலம் ஐக்கிய தேசிய கட்சியில் அமைச்சராக இருந்த காலத்தில் தான் கிழக்கில் காகித தொழிற்சாலையும் வடக்கில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையும் கட்டப்பட்டன. துரையப்பா ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மேயராக இருந்து தான் துரையப்பா விளையாட்டு அரங்கு, பூங்கா, யாழ்ப்பாண புகையிரத நிலையம், மாநகரசபை கட்டடம் மற்றும் நூலகம் ஆகியவற்றை கட்டினார். பகைத்து கொண்டு எதை உருவாக்கினோம்? வன்னியிலும் கிளிநொச்சியிலும் பிச்சை எடுக்கும் மக்களையும் விபச்சாரம் செய்யும் விதவைகளையும் தான் உருவாக்கினோம். இல்லையா?

முதலில் ஊடகவியலாளர் சிவராம், நிர்மலராஜன் கொல்லப்பட்டது மஹிந்த& கோத்தபாய ஆட்சி காலத்தில் அல்ல, அவர்கள் கொல்லப்பட்டது சந்திரிக்கா ஆட்சிகாலத்தில்! நீங்கள் நிமல்ரஞ்சன் என்று யாரையோ குறிப்பிட்டிருக்கிறீர்கள் அவர்பற்றி நான் அறியவில்லை!

மற்றும்படி நீங்கள் சொன்ன வெள்ளைவான் கடத்தல்,கொலைகள்,ராணுவ கெடுபிடி என அனைத்துமே யுத்தம் நடந்தகாலத்தில் இலங்கையில் இருந்த அத்தனை ஜனாதிபதிகளின் கீழும் நடந்தேறின, இப்போ யுத்தம் இல்லை இருந்திருந்தால் இப்போது இருக்கும் ஆட்சியிலும் நீங்கள் சொன்ன அத்தனையுமே தொடர்ந்திருக்கும் இதில் எந்தவித சலுகைகளும் தமிழர்கள்மீது காட்டப்பட்டிருக்காது!

தமிழர்கள் மாடமாளிகையும், சொகுசு அடுக்குமாடி குடியிருப்புக்களும் வாங்கிதள்ளியது இப்போது நடப்பதல்ல, எப்போதோ இருந்து இது நடந்துகொண்டேயிருக்கிறது, அதுவும் சுவிஸ்,பிரித்தானியாவிலுள்ள தமிழர்கள் பிரேமதாஸ காலத்திலேயே கொழும்பில் இதெல்லாம் வாங்கிதள்ளிவிட்டார்கள், இப்போ அதனை விற்க ஓடி திரிகிறார்கள்.

இன்றுமட்டுமல்ல யுத்தகாலத்தில்கூட ராணுவத்தினருக்கு,காவல்துறையினருக்கு நீதிமன்றங்கள் தமிழர்களை கொலை பண்ணீயதற்காக கடும் தண்டனைகள் வழங்கியிருக்கு, ஆஅனால் அவை எந்த அளவு தூரத்திற்கு நிறைவேற்றப்பட்டிருக்கு என்பதுதான் சந்தேகமானது, அதில் கிருஷாந்தி கொலை, காலிமுகதிடலில் கடற்கரையில் மனநிலைபாதிக்கப்பட்ட ஒரு தமிழர் அடித்துகொலை என்பவையும் அடங்கும்.

இன்றைய அரசு தமிழர்களை தாக்கியவர்களுக்கு கடும் தண்டனை வழங்குகிறது என்றால், இறுதி யுத்தத்தில் கிடைத்த காணொளி ஆதாரங்களை வைத்து எத்தனையோ ராணுவத்தினரை தண்டித்திருக்கலாமே , ஏன் பண்ணவில்லையென்று நீங்கள் யோசித்ததுண்டா?

சிங்களவரை பகைத்துக்கொண்டு என்று நான் அர்த்தம் பண்ணியது, மாறி வரும் அரசுகள்,என்னதான் எமது ஆதரவுடனும் ஆட்சிக்கு வந்தாலும் எமக்காக தமது இனத்தை பகைக்காது என்ற அர்த்ததில்!

கூரான கத்திகள் கொண்ட கைகள் அவர்களிடம் என்று அர்த்தப்படுத்தியது, எமக்கான நட்புரீதியான கரங்கள் அவர்களிடம் எந்தகாலத்திலும் இருக்காது என்றரீதியில்தான், அப்புறம் இரும்பு கவசத்தினால் ஆன கைகளைகொண்டு அவர்கள் கரங்களை பற்ற சொன்னீர்கள், அது எந்தவகையான கவசம், எப்படி செய்யவேண்டும்,எங்கே கிடைக்கும் என்று நீங்கள்தான் கூறவேண்டும்!

மற்றது,இனங்களை பகைத்துக்கொண்டு தீர்வை தேடும்படி நான் எந்த இடத்திலும் கூறவில்லை, அது தங்களின் அதீத கற்பனை!

வன்னியிலும் கிளிநொச்சியிலும் பிச்சை எடுப்பவர்களும்,விபச்சாரிகளையும் உருவாக்கவேண்டுமென்று யாரும் ஒரு போரை நடத்தியிருக்கவில்லை, வேறு வழியே இன்றி ஒரு பெரும் ஆதிக்க பெரும்பான்மை சமூகத்துக்கெதிராக ஆயுதபோராட்டம் நடத்தினோம், துரதிஷ்டவசமாக அதில் தோற்றுபோய்விட்டோம்,வறுமையுடனும்,வாழ்வுக்காகவும் ஆதிக்க சக்திகளுக்கெதிராக போராடி தோற்றுப்போனவர்களின் தேசத்தில் இதுபோன்ற அவலங்கள் தவிர்க்கமுடியாததாகி போகின்றது என்ன செய்ய?

அவர்கள் மானத்தை விற்றும் யாசகம் வேண்டியும் பிழைக்கும் நிலையில் இருந்திருந்தால் , மானத்திற்காக தம் உயிரை ஈந்து போராடியவர்களுக்கு பின்னால் பக்கபலமாக நின்றிருந்து தம் வாழ்வை இழந்திருக்கமாட்டார்கள், நீங்கள் சொன்னவற்றை எப்போதோ செய்து தம் பிழைப்பை பார்த்திருப்பார்கள். 

ஒரு லட்சிய பயணத்திற்காக போராடியவர்களின் பின்னால் நின்றதால் பிச்சை எடுக்கும் நிலமைக்கு போனாலும், அவர்கள் ஒருகாலத்தில் உள்நாட்டிலேயே இருந்து பொது எதிரிக்கெதிராக போராடிய மிகபெரிய மானஸ்தர்கள், அவர்கள்பற்றிய உங்கள் விளிப்பு மிக மிக கொச்சையானது!

தமிழர்கள் இப்போது மாடமாளிகை சுதந்திரம், அது,இது எல்லாம் இப்போது ஆட்சியில் இருப்பவர்களினால் பெற்றார்கள் என்று கூறினீர்கள்,  அதே இப்போது இருக்கும் அரசு நினைத்தால் இந்த பிச்சை எடுப்பவர்களையும்,விபச்சாரத்தில் இறங்கியவர்களையும் காப்பாற்றி அவர்களுக்கு ஒரு கெளரவமான வாழ்க்கை அமைத்து தரலாமே, ஏன் செய்யவில்லை என்பதற்கு என்ன பதில் உங்களிடம் உண்டு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Jude said:

 இங்கே விதவைகள் விபச்சாரம் செய்து பிழைக்கும் நிலை. மக்கள் பிச்சை எடுக்கிறார்கள். கூட்டாக வாழ வழி இல்லாமல் தற்கொலை செய்கிறார்கள். புத்தருக்கு முதல் இடமா இரெண்டாவது இடமா என்பதா முக்கியம்?

இவ்வளவும்  பிரபாகரன்  காலத்தில் இல்லாதிருந்ததே

இன்று  நடக்கின்றதென்றால்

அதற்கு  அதன்  ஆட்சியாளர்கள்  தானே  காரணம்?

அதனை  நீங்கள் பாதை  மாற்றி  

மற்றவர் மீது ஏற்றி விடுவதும் ஒருவித  கபட அரசியலே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட்,

உங்களிடமிருந்து இப்படியான ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை. 

பெளத்தம் முக்கியம் என்று அவர்கள் சொல்வதை இன்று ஏற்றுக்கொள்ளும் நீங்கள், நாளையே தமிழர்களின் தாயகம் தேவையில்லாத ஒன்று அதையேன் பிடித்தூக்கொண்டி இன்னும் நிற்கிறீர்கள், கொடுத்துவிடுங்களேன், அவன் தனது நாடென்று சொல்கிறான், ஆகவே எல்லோரும் தமிழ்நாட்டுக்கே மூட்டை கட்டிவிடலாம் என்று கூட கேட்கலாம். 

ஏன் இந்த மாற்றம்? எம்மால் முடியாது என்பதாலா? 

விதவைகள் விபச்சாரம் செய்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். சரி, நீங்கள் சொல்வதுபோலவே பெளத்தம்தான் முக்கியம் என்று நாம் ஏற்றுக்கொண்டு, அனைத்துத் தமிழர்களும் பெளத்தர்களாக மாறிவிடலாம், அப்போது எமது விதவைகளின் பிரச்சினை தீர்ந்துவிடுமா? பெளத்தத்தை முதலாவது மதமென்று ஏற்றுக்கொண்டால், விதவைகளின் பிரச்சினை தீருமென்றால், இதுவரை பெளத்தர்களாக இருந்து தெற்கில் விபச்சாரம் செய்யும் சிங்களப் பெண்களின் பிரச்சினை தீர்ந்ததா? யுத்தம் தந்த பிரச்சினைகளும், வலிகளும் மாறுவதற்கு காலம் எடுக்கும். பெளத்தனாக இருந்தாலென்ன, இந்துவாக இருந்தாலென்ன அல்லது கிறிஸ்த்தவனாக இருந்தாலென்ன?

சரி, நாமாக எதுவுமே கேட்கவேண்டாம், நீங்கள் சொல்வதுபோலவே பெளத்தத்தை முதலாவதாக ஏற்றுக்கொண்டு, அவர்களைக் கோபப்படுத்தாமலே இருந்துவிடலாம். அப்போது சிங்களவர்கள் தாமாக விரும்பித்தரும் தீர்வு எதுவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நாட்டிலே எல்லோரும் பெளத்தத்தை ஏற்றுக்கொண்டு, சிங்களவர்களாக மாறிய பின்னர் அவன் யாருக்காக தீர்வொன்றைத்தரவேண்டும்?

அவன் விரும்பிய தீர்வென்று எதுவுமே இல்லையென்பதை எப்படி மறந்தீர்கள்? தமிழர்களுக்குப் பிரச்சனையே இல்லை, இருந்ததெல்லாம் புலிப் பயங்கரவாதிகளின் பிரச்சினை மட்டுமே, அதைக்கூட்ட இல்லாதோழித்து துட்டகைமுனுவுக்குப் பின்னர் இன்று இலங்கையை ஒரு ஆட்சிக்குள் கொண்டு வந்திருக்கிறோம் என்று கொக்கரிப்பவன் தமிழர்களுக்கு தாமாக விரும்பித் தரும் தீர்வென்ன என்பதை நீங்கள் சொன்னால் கேட்க விருப்பம். மற்றும்படி உங்களுடன் வாதாடும் நோக்கம் எனக்கு சிறிதளவேனும் இல்லை.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2018 at 4:47 PM, valavan said:

அவர்கள் மானத்தை விற்றும் யாசகம் வேண்டியும் பிழைக்கும் நிலையில் இருந்திருந்தால் , மானத்திற்காக தம் உயிரை ஈந்து போராடியவர்களுக்கு பின்னால் பக்கபலமாக நின்றிருந்து தம் வாழ்வை இழந்திருக்கமாட்டார்கள், நீங்கள் சொன்னவற்றை எப்போதோ செய்து தம் பிழைப்பை பார்த்திருப்பார்கள். 

ஒரு லட்சிய பயணத்திற்காக போராடியவர்களின் பின்னால் நின்றதால் பிச்சை எடுக்கும் நிலமைக்கு போனாலும், அவர்கள் ஒருகாலத்தில் உள்நாட்டிலேயே இருந்து பொது எதிரிக்கெதிராக போராடிய மிகபெரிய மானஸ்தர்கள், அவர்கள்பற்றிய உங்கள் விளிப்பு மிக மிக கொச்சையானது!

விடுங்கள் வலவன். . ஐயோ எங்கட நாட்டிலே போர் நடக்குது , அங்கே எங்களால் இருக்கமுடியாது என்று கையைத் தூக்கி கொண்டு வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்து அங்கே கிடைக்கும் சலுகைகளை நன்றாக அனுபவித்துக்கொண்டு அதுவும் போதாதென்று சில பெரும்பான்மையினர் வீசும் எலும்புத்துண்டுக்காக எமது இனத்தின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, அடிமைகளாக இருப்பதே மேலென்று வகுப்பெடுக்கும் இவர்களிடம் மனிதத்திற்கும் அடிப்படை உரிமைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்குவது என்பது வீண் நேர விரயமே. 

Link to comment
Share on other sites

On 2/12/2018 at 1:31 AM, Jude said:

 இங்கே விதவைகள் விபச்சாரம் செய்து பிழைக்கும் நிலை. மக்கள் பிச்சை எடுக்கிறார்கள். கூட்டாக வாழ வழி இல்லாமல் தற்கொலை செய்கிறார்கள். புத்தருக்கு முதல் இடமா இரெண்டாவது இடமா என்பதா முக்கியம்?

On 2/12/2018 at 10:49 AM, விசுகு said:

இவ்வளவும்  பிரபாகரன்  காலத்தில் இல்லாதிருந்ததே

இன்று  நடக்கின்றதென்றால்

அதற்கு  அதன்  ஆட்சியாளர்கள்  தானே  காரணம்?

அதனை  நீங்கள் பாதை  மாற்றி  

மற்றவர் மீது ஏற்றி விடுவதும் ஒருவித  கபட அரசியலே..

நான் கேட்டது புத்தருக்கு முதல் இடம் பற்றிய விடயமா அல்லது வறுமையில் விபச்சாரம் மற்றும் தற்கொலை செய்வது பற்றிய விடயமா முக்கியம் என்பதே. மீண்டும் படியுங்கள். மேலே மீண்டும் ஒருமுறை உங்களுக்காக ஒட்டி இருக்கிறேன். நீங்கள் அதை விட்டு, பிரபாகரன் ஆட்சியை மைத்திரியின் ஆட்சியுடன் ஒப்பிட்டு கபட அரசியல் செய்கிறீர்கள். அவ்வளவுதானா மக்கள் மீதான உங்கள் அக்கறை? இந்த அளவுக்கு பரிதாபமான நிலையில் வாழும் மக்களில் மிகவும் பாதிக்கப் பட்டவர்கள் முன்னாள் போராளிகள். அவர்கள் மீதான உங்கள் அக்கறை வெறும் அரசியல் ஒப்பீட்டுடன் நிறைவுக்கு வருகிறதா?

Link to comment
Share on other sites

On 2/13/2018 at 11:01 AM, Eppothum Thamizhan said:

விடுங்கள் வலவன். . ஐயோ எங்கட நாட்டிலே போர் நடக்குது , அங்கே எங்களால் இருக்கமுடியாது என்று கையைத் தூக்கி கொண்டு வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்து அங்கே கிடைக்கும் சலுகைகளை நன்றாக அனுபவித்துக்கொண்டு அதுவும் போதாதென்று சில பெரும்பான்மையினர் வீசும் எலும்புத்துண்டுக்காக எமது இனத்தின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, அடிமைகளாக இருப்பதே மேலென்று வகுப்பெடுக்கும் இவர்களிடம் மனிதத்திற்கும் அடிப்படை உரிமைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்குவது என்பது வீண் நேர விரயமே. 

நீங்கள் இன்றல்ல, என்றும் அடிமைகளாக இருப்பதே உங்கள் சிந்தனை உங்களுக்கு விதித்த விதி. 

Link to comment
Share on other sites

On 2/12/2018 at 10:31 PM, ragunathan said:

ஜூட்,

உங்களிடமிருந்து இப்படியான ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை. 

பெளத்தம் முக்கியம் என்று அவர்கள் சொல்வதை இன்று ஏற்றுக்கொள்ளும் நீங்கள், நாளையே தமிழர்களின் தாயகம் தேவையில்லாத ஒன்று அதையேன் பிடித்தூக்கொண்டி இன்னும் நிற்கிறீர்கள், கொடுத்துவிடுங்களேன், அவன் தனது நாடென்று சொல்கிறான், ஆகவே எல்லோரும் தமிழ்நாட்டுக்கே மூட்டை கட்டிவிடலாம் என்று கூட கேட்கலாம். 

ஏன் இந்த மாற்றம்? எம்மால் முடியாது என்பதாலா? 

எம்மால் இன்றுவரை முடியவில்லை என்பதை நாங்கள் இருவருமே ஏற்று கொண்டு இருப்பது முதல் படி. அடுத்த படி ஏன் இன்றுவரை எம்மால் முடியவில்லை என்று பார்ப்பது ஆகும். ஏன் முடியவில்லை? சாத்வீகம் முதல் ஆயுத போராட்டம் வரை அனைத்தும் செய்தும் முடியவில்லை, ஏன்? ஒரு நாடு கூட முழுமையாக ஆத்ரவில்லையே? ஏன்? இதற்கான காரணங்களை நாம் ஆராயாமல் எப்படி செய்ய முடியும்?

காரணங்களை ஆராய்ந்தால், நீங்களும் முதலில் நின்ற அதே நிலைப்பாட்டில் நின்று அதுவே சாத்தியப்பபடும் என்ற நிலைப்பாட்டில் இருக்க மாட்டீர்கள். ஏனென்றால் நாம் நீண்டகாலமாக கொண்டுள்ள நிலைப்பாடு சாத்தியமற்ற சில கூறுகளை கொண்டுள்ளது. ஆகவே அது நடக்க போவதில்லை.

இந்த சாத்தியமற்ற கூறுகள் எவை?

1. உலகின் எல்லா நாடுகளிலும் பெரும்பான்மை மக்களின் சமயம், மொழி மற்றும் பண்பாடு அதிக சலுகைகளை கொண்டுள்ளன. ஆகவே அதற்கு மாறான நிலைப்பாட்டை இலங்கையில் நாம் எதிர்பார்ப்பது சாத்தியமற்றது. 

2. ஒரு சமயம் முதலிடம் பெறுகிறது என்பதற்காக மக்கள் எல்லோரும் அந்த சமயத்துக்கு மாற வேண்டும் என்று பெரும்பாலான நாடுகள் வற்புறுத்துவது இல்லை. இலங்கையில் புத்தம் நீண்ட காலமாகவே பெரும்பான்மை மக்களின் சமயம். சைவர்களோ கிறீஸ்தவர்களோ பௌத்தர்களாக மாறுவதிலும் பார்க்க பெருமளவு பௌத்தர்களும் சைவர்களும் கிறீஸ்தவர்களாக மாறுவதே இலங்கையில் நடக்கிறது. ஆகவே சைவர்களும் கிறீஸ்தவர்களும் பௌத்தம் முதலிடம் பெற்றால் தமது மதங்களை தொடர முடியாது என்பது வீணான பயம். 

3. மக்களுக்கான உரிமைகளை பெற்று எடுப்பதில் வெற்றி பெற வேண்டுமானால் சாத்தியமற்றதும் முக்கியமற்றவையும் அகற்றி முக்கியமான உரிமைகளை வென்று எடுப்பதில் அனைத்து சக்திகளினதும் கவனத்தை குவிய வைத்தால் வெற்றி பெறும் சாத்தியம் அதிகம்.

4. முக்கியமான உரிமைகள் எவை? பாதுகாப்பு. உறையுள், வாழ்வாதாரம். இவை அடிப்படை. அடுத்து வருபவை: மருத்துவம். கல்வி. பொருளாதாரம். இவை இன்று எம் மக்களுக்கு இல்லை. இங்கு சிலருக்கு இவை "எலும்பு துண்டுகளாக" தெரிகின்றன. ஆனால் மனிதருக்கு இவையே மிக முக்கியமான முதன்மையான உரிமைகள். 

5. அடிப்படை உரிமைகளும் முதன்மையான உரிமைகளும் இல்லாத நிலையில் அரசியல் உரிமைகள். மதங்களுக்கு சம உரிமை, மொழிக்கு சம உரிமை, ஒலிம்பிக்கில் ஓடும் உரிமை, ஐ. நா. வில் தமிழ் பேசும் உரிமை போன்றவற்றையும் சேர்த்து ஒன்றுமே இல்லாமல் இன்னும் எவ்வளவு காலத்துக்கு மக்கள் வாழ முடியும்?

6. தக்கன பிழைக்கும் என்பது உரியியல் கோட்பாடு. எமது மக்கள் தக்க மக்கள். பிழைப்பார்கள். தாமாகவே தேவை அற்ற உரிமைகள் பலவற்றை அவர்கள் விட்டு விடுவார்கள். இன்று யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் சிங்களம் கற்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். சிங்கள மக்களையும் வெளிநாட்டவரையும் வரவேற்கும் நிலை உருவாகி வருகிறது.ஆனால் இந்த தக்கன பிழைக்கும் என்ற கோட்பாட்டின் படி போனால் முதமைச்சர் அஞ்சுவது போல நீர்கொழும்பு பகுதிகளில் இடம்பெற்றது போல மக்கள் சிங்களவர்களாக மாறி விடுவார்கள். இவ்வாறு மாறுபவர்கள் தமது சமயங்களை மாற்ற வேண்டிய தேவை இல்லை. மொழி மாறிவிடும். தமிழ் வீட்டு மொழியாகி விடும். 

7. ஆகவே மக்களை தாமாகவே தமிழை கைவிட்டு சிங்களத்தை ஏற்று பிழைத்து போக முதல் அரசியல் தலைமைகள் மக்களுக்கு சரியான வழி காட்ட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

உலகின் எல்லா நாடுகளிலும் பெரும்பான்மை மக்களின் சமயம்மொழி மற்றும் பண்பாடு அதிக சலுகைகளை கொண்டுள்ளன. ஆகவே அதற்கு மாறான நிலைப்பாட்டை இலங்கையில் நாம் எதிர்பார்ப்பது சாத்தியமற்றது.

ஜனநாயகம் நிலவும் நாடுகளின் அரசியலமைப்புக்கள் மதச்சார்பில்லாமல்தான் உள்ளன.  ஆனால் இலங்கையின் அரசியல் சாசனப்படி பெளத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இது சிங்களப் பெளத்தர்களை தாம் மற்றையர்வர்களைவிட மேலானவர்கள் என்ற நிலைக்கு இட்டுள்ளதால்தான் இனவாத ஒடுக்குமுறை தொடர்கின்றது. ஆனால் இலங்கை ஒருபோதும் மதச்சார்பின்மையைக் கொண்ட அரசியலமைப்பை எதிர்காலத்திலும் உருவாக்கப்போவதில்லை.

அடிப்படை அரசியல் சாசனம் பிற மதங்களையும், மொழிகளையும் ஒரே சமநிலையில் பேணக்கூடியதாக மாற்றம் பெறாதவரை சிங்களமயமாக்கல் தொடரத்தான் செய்யும். 

Link to comment
Share on other sites

20 hours ago, கிருபன் said:

கிருபன், "ஜனநாயகம் நிலவும் நாடுகளின்" என்று நீங்கள் குறிப்பிடுவது எந்த நாடுகளை என்று சொல்வீர்களா? இந்த நாடுகளில் சட்டத்தில் நீங்கள் சொல்வது போல மதச்சார்பில்லாமல் இருந்தாலும் நடைமுறையில் பெரும்பான்மை மதங்கள் சலுகைகளை பெறவில்லையா? பிரித்தானியாவில் இங்கிலாந்தின் திருச்சபைக்கு  (Church of England) முடிக்குரிய இராணி அல்லது அரசரே தலைவர் இல்லையா? ஆட்சி அமைப்பவர்கள் இந்த சமயத்துக்கு பல வழிகளில் முன்னுரிமை வழங்கவில்லையா? இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அதே சலுகைகள் கிடைப்பது இல்லையே? ஜெர்மனி, பிரான்சு மற்றும் இத்தாலியில் கத்தோலிக்க சமயத்துக்கு வரிப் பணத்தில் இருந்து வாரி வழங்குவது போலவா இஸ்லாமுக்கும் இந்துக்களுக்கும் யூத சமயத்துக்கும் வழங்குகிறார்கள்? 

இந்த நாடுகள் போல இலங்கையும் சட்ட ரீதியாக மதச் சார்பற்ற நாடாக மாறி மேற்படி ஜனநாயக நாடுகள் போல நடைமுறையில் பௌத்தத்துக்கு  அபரீதமான அளவில் முதல் இடம் கொடுத்தால் நாம் அதை ஏற்றுக்கொள்ள தயாரா? நாம் தயார் என்றால் சுமேந்திரன் மகா நாயக்க தேரர்களிடம் சென்றே அதை ஏற்றுக்கொள்ள வைக்கும் சாத்தியம் இருக்கிறதே?

நீர்கொழும்பில் சிங்களவரான தமிழர்களில் சிலரை நான் தனிப்பட்ட முறையில் அறிந்து இருக்கிறேன். அந்த பிரதேசங்களுக்கு போய் வந்து இருக்கிறேன். அவர்கள் அனைவரும் தமிழ் கத்தோலிக்கர் சிங்கள கத்தோலிக்கராக கத்தோலிக்க பாதிரிகளால் மாற்றப்பட்டவர்கள். பௌத்தத்துக்கு அவர்கள் மாறவில்லை. ஆகவே அடிப்படை அரசியல் சாசனம் மதங்களுக்கு சமத்துவம் வழங்கினால்  சிங்கள மயமாக்கலுக்கு முடிவு வராது. தமிழர்களுக்கு தமது மொழியில் பயனுள்ள பாதுகாப்பான வாழ்வுக்கு வழி கிடைப்பாவிட்டால் சிங்கள மயமாக்கலை நீர்கொழும்பு தமிழர்கள் போல வட கிழக்கு தமிழர்களும் தாமாகவே ஏற்று கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.