Jump to content

அடுத்து நடக்கப்போவது என்ன?


Recommended Posts

அடுத்து நடக்கப்போவது என்ன?

pp1-5c676c2b05dc6310105034e160d1b1c4e42e26b0.jpg

 

சில மாதங்­க­ளாக அர­சியல் ரீதி­யாகப் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் நடந்து முடிந்­தி­ருக்­கி­றது. இந்தப் பத்தி வெளி­வரும் போது, பெரும்­பாலும் யாருக்கு வெற்றி -யாருக்குத் தோல்வி என்­பது தெரி­ய­வந்­தி­ருக்கும்.

பல­முனைப் போட்டி நில­விய உள்­ளூ­ராட்சித் தேர்­தலில், வடக்­கிலும், கிழக்­கிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே பிர­தான போட்­டி­யா­ள­ராக எல்லாக் கட்­சி­க­ளுக்கும் இருந்­தது.

ஏற்­க­னவே நடந்த பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபைத் தேர்­தல்­களில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், உள்­ளூ­ராட்சித் தேர்­த­லிலும் பல­மான தரப்­பா­கவும், பிர­தான அர­சியல் சக்­தி­யா­கவும் கூட்­ட­மைப்பே கரு­தப்­பட்­டது.

அதனால், உள்­ளூ­ராட்சி சபை­களைக் கைப்­பற்­று­வ­தற்­காக மாத்­தி­ர­மன்றி வாக்­கு­களைப் பிரிப்­ப­தற்­கா­கவும் கள­மி­றங்­கிய கட்­சிகள், சுயேட்சைக் குழுக்கள் எல்­லாமே, கூட்­ட­மைப்பை நோக்கித் தான் தமது எதிர்ப்­பி­ர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தன.

சம்­பந்­தனை ரணிலின் பொக்கட் என்று மஹிந்த ராஜபக் ஷ விமர்­சித்தார்.

கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லுக்குப் பின்னர், கூட்­ட­மைப்­பையும் அதன் தலை­மை­யையும் விமர்­சிக்­காமல், அவ்­வப்­போது துதி­பா­டிய ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அங்­கஜன் கூட, கூட்­ட­மைப்பு அர­சிடம் விலை போய் விட்­டது என்றார்.

கூட்­ட­மைப்­புடன் சேரு­வ­தற்குப் பேச்சு நடத்­தப்­பட்டுக் கொண்­டி­ருந்த போது, கூட்­ட­மைப்­புக்கும் அர­சுக்கும் இடை­யி­லான உறவு முறையை சரி­யா­ன­தென்ற பாணியில் கருத்து வெளி­யிட்ட வர­த­ரா­ஜப்­பெ­ருமாள், அவர்­களால் கைவி­டப்­பட்ட பின்னர், “ கொழும்­பிடம் சோரம் போய் விட்­ட­தாக“ விமர்­சித்தார்.

இப்­ப­டி­யாக, வடக்கு, கிழக்கில் போட்­டி­யிட்ட அத்­தனை கட்­சி­களும், குழுக்­களும் கூட்­ட­மைப்­புக்கும் அதன் தலை­மைத்­து­வத்­துக்கும் எதி­ரான கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்­தன.

தமிழ் மக்­களின் ஆத­ர­வுடன் ஆட்­சி­பீ­ட­ மே­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, கொடுத்த வாக்­கு­று­தி­களைக் காப்­பாற்றத் தவ­றி­விட்டார் என்று பெரி­தாக யாருமே கேள்வி எழுப்­பி­ய­தாகத் தெரி­ய­வில்லை.

ஆனால் அர­சாங்கம் செய்­யாமல் போன­வைக்கும், அர­சாங்­கத்தின் வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­டாமல் போன­தற்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிடம் கேள்­விகள் கேட்­கப்­பட்­டன.

ஒட்­டு­மொத்­த­மாக கூறு­வ­தானால், இந்தத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான ஒரு திரட்­சி­யா­கவே இருந்­தது. எல்லாத் தரப்­பி­னதும் எதிர்ப் பிர­சா­ரங்­களும், தமிழ் மக்­களைச் சென்­ற­டைந்­தி­ருந்தால், அவை உண்­மை­யா­னவை என்று நிரூ­பித்­தி­ருந்தால் இந்தத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பெரும் அடியைச் சந்­தித்­தாக வேண்டும்.

அது நடந்­ததா- இல்­லையா என்று, இந்தப் பத்­தியைப் படிக்கும் போது ஓர­ள­வுக்­கா­வது தெரிய வந்­தி­ருக்கும்.

இந்தத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பல­மான வேட்­பா­ளர்­களை நிறுத்­தி­யி­ருப்­பதும், பல­மான தளம் ஒன்றைக் கொண்­டி­ருப்­பதும் அதற்கு வலுவைக் கொடுத்­தி­ருப்­பது உண்­மையே.

என்­றாலும், வலு­வான வேட்­பா­ளர்­க­ளையும், கட்சிக் கட்­ட­மைப்­பையும் மாத்­திரம் வைத்துக் கொண்டு தமிழ் மக்­களின் ஏகோ­பித்த ஆத­ரவைக் கூட்­ட­மைப்­பினால் பெற்றுக் கொள்ள முடி­யுமா என்ற கேள்­விக்கு இந்தத் தேர்­தலில் தான் பதில் கிடைக்கும்.

இந்தத் தேர்­தலில், அதி­க­ளவு வேட்­பா­ளர்கள் போட்­டி­யிடும் நிலையில், அவர்­களின் தனிப்­பட்ட செல்­வாக்குத் தான் கூடுதல் ஆளுமை செலுத்தும் என்­பது இந்தப் பத்­தியின் வலு­வான கருத்து.

ஆனால், அர­சியல் கட்­சிகள் இதனை தேசிய முக்­கி­யத்­துவம், சர்­வ­தேச முக்­கி­யத்­துவம் என்று வேறொரு தளத்­துக்குக் கொண்டு சென்று விட்­டன. அவ்­வாறு கொண்டு சென்­ற­வர்­களே, தேர்தல் முடி­வு­களின் விளை­வு­க­ளுக்கும் பொறுப்­பேற்க வேண்­டி­யி­ருக்கும்.

இந்தத் தேர்­தலில் போட்­டி­யிட்ட எல்லாக் கட்­சி­க­ளி­னதும் கடு­மை­யான எதிர்ப் பிர­சா­ரங்­க­ளையும் சவால்­க­ளையும் முறி­ய­டித்து கூட்­ட­மைப்­பினால் இந்தத் தேர்­தலில் வெற்­றியை உறு­தி­செய்ய முடிந்­தி­ருந்தால், அது கூட்­ட­மைப்புத் தலை­மையின் தற்­போ­தைய அணு­கு­மு­றை­க­ளுக்குக் கிடைத்த அங்­கீ­கா­ர­மா­கவே கொள்­ளப்­படும்.

இந்தத் தேர்­தலில், கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான கட்­சி­களால், முற்­றிலும் அர­சியல் நலன்­சார்ந்த உள்­நோக்­கத்­துடன் கையா­ளப்­பட்ட விவ­கா­ரங்கள் இரண்டு. ஒன்று 2 கோடி ரூபா அபி­வி­ருத்தி நிதி ஒதுக்­கப்­பட்ட விவ­காரம். இன்­னொன்று, அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை.

இந்த இரண்­டையும் பயன்­ப­டுத்தி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பையும், அதன் தலை­மை­யையும் எந்­த­ள­வுக்கு

கீழ்த்­த­ர­மாக விமர்­சிக்க முடி­யுமோ அந்­த­ள­வுக்கு மாற்றுக் கட்­சிகள் விமர்­சித்­தி­ருந்­தன. வர­த­ரா­ஜப்­பெ­ருமாள் போன்­ற­வர்கள் தமது கடந்த காலத்தை மறந்து, கூட இதனை விமர்­சித்­தி­ருந்­தார்கள். 

அர­சியல் நாக­ரிகம், யதார்த்தம் என்­ப­ன­வற்றைப் பற்­றி­யெல்லாம் கவ­லைப்­ப­டாமல், எந்தக் கூச்­சமும் இல்­லாமல் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன.

அந்தக் குற்­றச்­சாட்­டு­களை முறி­ய­டிக்க கூட்­ட­மைப்பும் கடு­மை­யா­கவே போரா­டி­யது. இடைக்­கால அறிக்கை விவ­கா­ரத்தில் கூட்­ட­மைப்பின் நட­வ­டிக்­கை­களின் நியா­யப்­பாட்டை தெளி­வு­ப­டுத்­து­வ­தற்­கா­கவே எல்லா பிர­சாரக் கூட்­டங்­க­ளிலும் சுமந்­திரன் தோன்­றி­யி­ருந்தார்.

தமிழ் மக்­களை ஏமாற்றி விட­மாட்டோம், தமிழ் மக்கள் ஏற்­காத தீர்வு எதையும் ஏற்றுக் கொண்டு விட­மாட்டோம் என்ற வாக்­கு­று­தி­களை சம்­பந்தன் வழங்­கி­யி­ருந்தார்.

2 கோடி ரூபா விவ­கா­ரத்தை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒவ்­வொ­ரு­வரும் தம்மால் முடிந்­த­ள­வுக்கு கையாளப் பார்த்­தனர்.

இப்­ப­டி­யாக கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான இரண்டு பிர­தான விமர்­ச­னங்­க­ளையும், எதிர்­கொண்டு அவர்கள் வெற்றி பெற்­றி­ருந்தால், அது அவர்­க­ளுக்­கான அங்­கீ­கா­ர­மா­கவே இருக்கும்.

அத்­த­கைய நிலையில், இடைக்­கால அறிக்­கை­யையும், அர­சிடம் 2 கோடி ரூபா அபி­வி­ருத்தி நிதி ஒதுக்­கீட்டைப் பெற்­ற­தையும் தமிழ் மக்கள் அங்­கீ­க­ரித்­துள்­ளனர் என்­பதை ஏனைய கட்­சிகள் தவிர்க்க முடி­யாமல் ஏற்றுக் கொள்ள வேண்­டி­யி­ருக்கும்.

இடைக்­கால அறிக்­கையில் உள்­ள­வையே எமக்குப் போதும், என்­ப­தையும் கூட தமிழ் மக்கள் ஏற்­றுக்­கொண்டு விட்­டார்கள் என்ற பிர­சா­ரத்தை யாரா­வது முன்­னெ­டுத்­தாலும் கூட அதுவும் சரி­யா­ன­தா­கவே இருக்கும்.

இடைக்­கால அறிக்­கையை இந்தத் தேர்­தலில் ஒரு கருத்­துக்­க­ணிப்­பாக முன்­னி­றுத்­து­வதில் உள்ள ஆபத்தை உண­ரா­மையின் விளை­வா­கவும் அது கரு­தப்­படும்.

அது மாத்­தி­ர­மன்றி, கூட்­ட­மைப்பு வெற்றி பெற்றால், அபி­வி­ருத்தி நிதி ஒதுக்­கீட்டைப் பெற்­றதில் உள்ள நியா­யத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்றும், அதனை அவர்கள் அர­சிடம் பெற்ற இலஞ்­ச­மாக கரு­த­வில்லை என்­பதும் உறு­தி­யாகும்.

மாறாக, வேறு­த­ரப்­புகள்- (அவை கட்­சி­க­ளா­கவோ, சுயேட்சைக் குழுக்­க­ளா­கவோ இருக்­கலாம்,) வெற்றி பெற்றால், அது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ராகப் பெறப்­பட்ட வெற்­றி­யா­கவே அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும்.

கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக விழுந்த வாக்­கு­க­ளா­கவும், அதன் செயற்­பா­டு­களை எதிர்த்தும் அதன் கொள்­கை­களை நிரா­க­ரித்தும் அளிக்­கப்­பட்ட வாக்­கு­க­ளா­கவும் தான் கரு­தப்­படும்.

அது தமிழர் அர­சி­யலில் தீர்க்­க­மான முடி­வு­க­ளுக்கும். திருப்­பங்­க­ளுக்கும் கூட கார­ண­மாக இருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கட்­ட­மைப்பு உடைந்து போவ­தற்கும் அது வழி­வ­குக்­கலாம். மாற்றுத் தலைமை ஒன்­றி­னது, மாற்று அர­சியல் கட்­ட­மைப்பு ஒன்­றி­னது எழுச்­சிக்கும் அது கார­ண­மாக அமையும்.

தமிழ் அர­சி­யலில் மென்­சக்­தியின் ஆதிக்கம் தளர்ந்து கடும்­போக்­கு­வாதம் மீண்டும் தலை­தூக்­கு­வ­தற்­கான அடித்­த­ள­மா­கவும் அமையும்.

கொழும்­புக்கும் தமிழர் தரப்­புக்கும் இடை­யி­லான இடை­வெ­ளிகள் குறுகி, முரண்­பா­டு­களும் மோதல்­களும் தீவிரம் பெறும்.

ஏனென்றால் இந்தத் தேர்­தலில் கூட்­ட­மைப்பு பல­வீ­ன­ம­டைந்தால், அடுத்து மாகா­ண­சபைத் தேர்­தலில் இதே போக்கைப் பயன்­ப­டுத்தி, வெற்­றி­பெற முனை­வார்கள். அதையே மாகா­ண­ச­பையைக் கைப்­பற்றும் ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்­து­வார்கள். அது அர­சியல் முறுகல் ஒன்­றுக்கு நிச்­சயம் வழி வகுக்கும்.

அவ்­வாறு கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான கட்­சி­களின் வெற்­றியை உணர்ச்­சிய மயப்­ப­டுத்த உள்­ளேயும் வெளி­யேயும் உள்ள சக்­திகள் முற்­படும் சூழலும் ஏற்­ப­டலாம்.

அத்­துடன், அத்­த­கைய வெற்­றி­யா­னது, இடைக்­கால அறிக்­கையை தமி­ழர்கள் நிரா­க­ரிக்­கி­றார்கள் என்ற அடை­யா­ளப்­ப­டுத்­த­லுக்கும் வழி­வ­குக்கும். அது ஒட்­டு­மொத்த அர­சி­ய­ல­மைப்பு மாற்ற முயற்­சி­க­ளையும் தோல்­வி­யுறுச் செய்­வ­தாக மாத்திரமன்றி, அரசியல் தீர்வு முயற்சிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கூட்டமைப்பு வெற்றி பெற்றால் கூட அது நிச்சயமானது என்று கூற முடியாது. ஆனால், கூட்மைப்புக்கு எதிரான தரப்புகளின் வெற்றியானது, நிச்சயமாக அரசியலமைப்பு மாற்ற முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும்.

அதற்கு அப்பால், என்ன நடக்கும் என்ற கேள்வியும் எழும். வெற்றிபெறும் தரப்புகள், எவ்வாறு மத்திய அரசுடன் உறவுகளை வைக்கப் போகிறது. அரசியல் விவகாரங்களை எப்படிக் கையாளப் போகிறது என்ற பிரச்சினைகளும் தோன்றும்.

கூட்டமைப்புடனேயே முட்டி மோதுகின்ற மத்திய அரசாங்கம், கூட்டமைப்பை விட கடும்போக்கைக் கொண்ட தரப்புகளுக்குப் பணிந்து போகும் என்று எதிர்பார்க்க முடியாது. அது ஒரு முடிவில்லா எதிர்ப்பு அரசியலுக்குள் தமிழர் அரசியலைக் கொண்டு செல்லும்.

இதில் எது நடக்கப் போகிறது? இந்தப் பத்தியை எழுதும் போது அது தெரியவராது போனாலும், இதனை வாசிக்கும் போது அது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-02-11#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் மிகுந்த மன வேதனைபட்டாலும் கூட்டமைப்பில் உள்ள டமில்அரசு கட்சியின் ஆணவத்துக்கு விழுந்த அடி இனி தமிழ்மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் கூட்டமைப்பின் பெயரில்  தும்புகட்டையை தேர்தலில் நிறுத்தினால் மக்கள் முறித்து எறிந்து விடுவார்கள் என்பது விளங்கும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.