Jump to content

அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு என ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு


Recommended Posts

அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு என ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு

 
அ-அ+

அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு என பேசினார். #KamalHaasan #HarwardUniversity

 
 
 
 
அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு என ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு
 
நியூயார்க்:

அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு என பேசினார்.

அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் பிசினஸ் ஸ்கூல் ஆப் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்தியா குறித்த கருத்தரங்கில் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து பங்கேற்றார். தமிழில் வணக்கம் எனக்கூறி பேச்சை தொடங்கிய அவர், நாளை நமதே எனக்கூறி தனது உரையை நிறைவு செய்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் நடிகர் கமல்ஹாசன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 37 ஆண்டுகளாக நான் அரசியலில் இருந்து வருகிறேன். காந்தி, பெரியார் போல நேரடி அரசியலில் ஈடுபட வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால், தற்போது நேரடி அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன்.

தேர்தல் அரசியலை தாண்டி காந்தி, பெரியார் எனது ஹீரோக்கள். இவர்கள் தேர்தல் அரசியலுக்கு செல்லவில்லை. ஆனால் அவர்கள் மக்களுக்காக பாடுபட்டார்கள்.

நான் வித்தியாசமானவன் என கூறவில்லை. அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன். நான் உங்களிடம் கையேந்தி வந்திருக்கிறேன். பணத்திற்காக அல்ல -மிக சிறந்த கருத்துக்களை தாருங்கள்.   

2018-ல் அரசியல் பயணத்தை தொடங்கும் நான் கிராமங்களில் இருந்து மாற்றத்தை தொடங்குகிறேன். இந்த மாற்றத்துக்கு அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து பணியாற்ற போகிறேன்.

நானும் ரஜினியும் நண்பர்களாக இருக்கலாம். ஆனால் அரசியல் என்பது வேறு. எனது நோக்கமும் ரஜினியின் நோக்கமும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது தான். ரஜினியின் அரசியல் கொள்கையின் நிறம் காவி இல்லை என நினைக்கிறேன். ஆனால், எனது அரசியல் கொள்கையின் நிறம் கருப்பு.

திராவிடம் என்பது கட்சிகளை சார்ந்ததல்ல. அது தேசிய அளவிலானது. நான் சைவம் அல்ல. மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன். அதற்காக மற்றவர்களை மாட்டுக்கறி சாப்ப்பிடக் கூடாது எனவும் சொல்ல மாட்டேன். மக்கள் இதைத்தான் சாப்பிட வேண்டும் என அரசு சொல்லக்கூடாது.

எனக்கு என்ன வேண்டும் என தேர்வு செய்வது எனது உரிமை. அதனை பிறர் தீர்மானிக்கக் கூடாது. ஒரு கல்லூரி விழாவில் கையெழுத்திட்டு என்னை அரசியல்வாதி என அறிவித்துக் கொண்டேன். இந்த விழாவில் இரண்டாவது முறையாக என்னை அரசியல்வாதி என அறிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில் அடுத்த தேர்தலுக்காக காத்திருப்பேன்.

எனது கட்சி தனி மனித கட்சி அல்ல. 2, 3, 4-வது கட்ட தலைவர்களும் இருப்பார்கள். தமிழன் என்பது முகவரி தான், தகுதி அல்ல என பேசினார்.  #KamalHaasan #HarwardUniversity #tamilnews 

https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/11060658/1145284/actor-kamal-haasan-says-we-have-the-right-to-question.vpf

 

 

’ரஜினியும் நானும் நண்பர்கள் தான், ஆனால் அரசியல் களம் வேறு’ -ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல் பேச்சு

 

நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளார். அதற்கான ஆயத்த பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல துறை நிபுணர்களை சந்தித்து உரையாடி வருகிறார். 

kamal

 

இன்று அமெரிக்காவில் ஹார்வார்டு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடினார். இந்த நிகழ்ச்சியில் கமல் வேஷ்டி, சட்டையில் வந்து அசத்தினார். ’வணக்கம்’ என தமிழில் தனது உரையை துவங்கிய கமல், “இந்தாண்டு அரசியல் பயணத்தை துவங்கும் நான், கிராமங்களில் இருந்து மாற்றத்தை துவங்குகிறேன். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை தத்தெடுக்கப்போகிறோம். நாங்கள் தேர்ந்தெடுக்கும் கிராமத்தை முன்னோடி கிராமங்களாக மாற்றுவோம். இந்த மாற்றத்துக்கு அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன். உங்களிடம் கையேந்தி வந்திருக்கிறேன். ஆனால் பணத்திற்காக அல்ல. கருத்துக்காக. மிக சிறந்த கருத்துக்களை தாருங்கள். 

ஓட்டுக்கு நாம் பணம் வாங்கினால், நம்மிடம் இருந்து அரசியல்வாதிகள் பணம் எடுக்கும்போது கேள்வி கேட்க முடியாது. பெரியார், காந்தி ஆகியோர் தேர்தல் அரசியலுக்குள் வரவில்லை. ஆனால் மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தனர். தேர்தல் அரசியலை கடந்து, அவர்கள் இருவரும் எனது ஹீரோக்கள். 

தற்போது எந்த கட்சிகளுடனும் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பில்லை. அதனால்தான் கட்சியில் இணையாமல், புதுக்கட்சியைத் தொடங்குகிறேன். திராவிடம் என்றால் இரு கட்சி சார்ந்தது என நினைக்கிறார்கள். திராவிடம் என்பது தேசியம் சார்ந்தது. 

 

நான் வித்தியாசமானவன் என கூறவில்லை. அரசியல் களத்தில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன். அரசியலில் எனது நிறம் நிச்சியம் காவியாக இருக்காது. எனக்கும் ரஜினிக்கும் நோக்கம் என்பது அரசியலில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான். நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள். ஆனால் அரசியல் களம் என்பது வேறு. அரசியலில் வித்தியாசப்பட்டு இருக்கவே விரும்புகிறேன்” என பேசினார்.

https://www.vikatan.com/news/politics/116071-actor-kamalhaasan-delivered-a-speech-in-harvard-university.html

Link to comment
Share on other sites

அமெரிக்காவில் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டியில் அசத்திய கமல்ஹாசன்

 
அ-அ+

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பிசினஸ் பள்ளியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டி வந்து அசத்தினார். #KamalHaasan #KamalHaasanSpeaksAtHarvard

 
 
 
 
201802111251352668_Kamalhaasan-came-to-H
 
படப்பிடிப்பு பணிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் அங்கு ஹார்வர்டு பிசினஸ் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
 
அங்கு தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டி வந்து அசத்தினார். அமெரிக்க பயணம் என்றாலே ‘கோட்-சூட்’ அணிந்து செல்பவர்கள் மத்தியில், வேட்டியில் கமல்ஹாசனை பார்த்த அமெரிக்க வாழ் தமிழர்களும், அமெரிக்கர்களும் வியந்து பாராட்டினார்கள்.
 
வேட்டி கட்டி மிடுக்காக கமல்ஹாசன் நடந்து வந்த போது பார்வையாளர்கள் கரகோ‌ஷம் எழுப்பி வரவேற்றனர்.
 
பின்னர் நிருபர்கள் அவரை பேட்டி கண்டனர். ரஜினியுடன் கூட்டணி சேருவீர்களா? என்று கேட்டதற்கு கமல்ஹாசன் பதில் அளிக்கையில் அரசியலில் ரஜினியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு இல்லை என்று சூசகமாக தெரிவித்தார்.
 
201802111251352668_1_Kamalhaasan-Dhoti1.
 
நானும் ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்கள். ஆனால் நட்பு வேறு. அரசியல் என்பது வேறு. எங்களுடைய நோக்கங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. ஆனால் சில வழிகள் மூலம் தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
 
ரஜினிகாந்தின் தேர்தல் அறிவிக்கைக்காக காத்திருப்போம். நானும் விரைவில் அறிவிக்க உள்ளேன். ரஜினியின் முதல் அறிவிப்பு குறித்து யோசிக்க வேண்டி இருக்கிறது. அது காவிக்கான அரசியலாக இருக்காது என்று நம்புகிறேன். ரஜினியின் கொள்கையின் அடிப்படையிலேயே அவருடனான கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். என்றார். #KamalHaasan #KamalHaasanSpeaksAtHarvard #KamalHaasanInDhoti

https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/02/11125135/1145316/Kamalhaasan-came-to-Harvrd-Business-School-with-Tamilnadu.vpf

Link to comment
Share on other sites

ரஜினியின் நிறம் காவியாக இருந்தால் கூட்டணி இல்லை: கமல் திட்டவட்டம்

 

 
AMALHASSAN

நடிகர் கமல் ஹாசன்: கோப்புப் படம்

ரஜினியின் நிறம் காவியாக இருந்தால், அவருடன் கூட்டணி இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் பிசினஸ் ஸ்கூல் ஆப் நிகழ்ச்சியிலும், வருடாந்திர இந்திய மாநாட்டிலும் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார்.

தமிழரின் பாரம்பரிய வேட்டி, சட்டையில் நிகழ்ச்சிக்கு வந்த கமல்ஹாசனை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராகப் பங்கேற்று நடிகர் கமல்ஹாசன் பேசியபோது,  ரஜினிகாந்துடன் அரசியல் கூட்டணி வைப்பீர்களா என கேட்கப்பட்டது.

அதற்கு கமல் பதிலளித்துப் பேசுகையில், ''நானும், ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்கள். ஆனால்,அரசியல் என்பது வேறு. என்னுடைய நிறம் கறுப்பு, நடிகர் ரஜினியின் நிறம் காவியாக இருக்காது என நம்புகிறேன்.

அப்படி ஒருவேளை ரஜினி அரசியலின் நிறம் காவியாக இருந்தால், அவர் அதை மாற்றிக்கொள்ளாவிட்டால், அவருடன் நான் கூட்டணி வைக்கமாட்டேன்.

தமிழகத்தில் ஊழல் இல்லாத அரசியல் சூழலை நான் விரும்புகிறேன், அரசியல்வாதிகளும் அவ்வாறே இருக்க ஆசைப்படுகிறேன். என்னுடைய படங்கள் எப்படி வித்தியாசமாக இருக்கின்றனவோ அதுபோலவே, என்னுடைய அரசியலையும் மற்றவர்களுடன் வேறுபட்டு வைத்து இருக்க விரும்புகிறேன்.

கருத்து சுதந்திரம் என்பது, ஜனநாயகத்தின் அடித்தளமாகும். அனைவருக்கும் முக்கியமான தேவையான கருத்து சுதந்திரத்தை அனைவரும் பாதுகாக்க வேண்டும்.

என்னுடைய அரசியல் கட்சியின் பெயரை வரும் 21-ம் தேதி ராமேஸ்வரத்தில் அறிவிக்கிறேன். அதன்பின் மாநிலம் முழுவதும் நாளை நமதே என்ற பெயரில் சுற்றுப்பயணம் நிகழ்த்த இருக்கிறேன். இந்த பயணத்தில் மக்களின் தேவைகளையும், அபிலாஷைகளையும், ஆசைகளையும் கேட்டு அறிவேன்.

என்னுடைய அரசியல் பயணத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மாநிலமும், நாடும் வலிமை பெற, சக்தி பெற இந்த பயணத்தில் என்னுடன் மக்கள் கைகோக்க வேண்டும்'' என்றார்

http://tamil.thehindu.com/tamilnadu/article22720852.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.