Jump to content

உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் 2018


Recommended Posts

                                                                                 உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் 2018

 

மூன்று கட்டங்களில் வாக்கெண்ணும் பணி

 

 

340 உள்ளூராட்சிமன்றங்களுக்காக இன்று நடைபெறவுள்ள தேர்தல் பெறுபேறு முதற்கட்டமாக இரவு 7 மணியளவில் வெளிவரும் சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கெண்ணும் பணி 3 கட்டங்களாக இடம்பெறும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 

 உள்ளுராட்சி மன்றத்திற்குட்பட்ட ஒரு வட்டாரத்திற்கான வாக்குகள் வட்டார வாக்களிப்பு நிலையத்திலேயே எண்ணப்படும். பல வாக்களிப்பு நிலையங்கள் இருக்குமாயின் கணிசமாக வாக்குகள் உள்ள நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு ஒரே இடத்தில்வைத்து எண்ணப்படும். இருப்பினும் வாக்குகள் வெவ்வேறாகவே எண்ணப்படும். இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தலின் போது மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் பெட்டிகள் ஒரு இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு கதவுகள் மூடப்பட்ட அறைக்குள் எண்ணப்படும். மறுநாள் காலையில் முடிவுகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.  இம்முறை அவ்வாறான நடைமுறை இடம்பெறமாட்டாது. 

இன்று நடைபெறும் தேர்தலில் வரலாற்றில் முதன்முறையாக அளிக்கப்பட்ட வாக்குகள் குறிப்பிட்ட உள்ளுராட்சி மன்றத்தில் வட்டார வாக்களிப்பு நிலையங்களிலேயே எண்ணப்படவுள்ளன. வாக்குகள் எண்ணும் பணி 3 கட்டங்களாக இடம்பெறும். முதலாவது கட்டத்தில் ஒவ்வொரு வாக்குப்பெட்டிகளிலுமுள்ள வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். இரண்டாம் கட்டத்தின் கீழ் அந்த வட்டாரத்திற்கு உட்பட்ட தபால் மூல வாக்குகள் எண்ணப்படும். இந்த தபால் மூல வாக்குகளின் எண்ணிக்கை 50இற்கு அதிகமாக இருந்தால் தனியாகவும் , 50க்கு குறைவாக இருப்பின் அவற்றை ஏனைய வாக்குகளுடன் கலந்து எண்ணப்படும்.

மூன்றாம் கட்டத்தின் கீழ் ஒவ்வொரு கட்சி அல்லது சுயேட்சை குழுக்களினால் பெற்ற வாக்குகள் வெவ்வேறாக எண்ணப்படும். வாக்குகள் எண்ணப்படும்போது சந்தேகம் தொடர்பாக ஏதேனும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுக்களின் முகவரினால் முன்வைக்கப்படும் கோரிக்கைக்கு அமைவாக வாக்குகள் எண்ணும் முகவரினால் வாக்குகள் மீள எண்ணப்படும் . இந்த கோரிக்கைகளுக்கு அமைவாக வாக்குகள் இரண்டு தடவை மாத்திரமே மீள எண்ணப்பட முடியும்  என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

http://www.virakesari.lk

 

இதே திரியில் தொடர்ந்து  தேர்தல் முடிவுகள் பதியப்படும்

Link to comment
Share on other sites

  • Replies 142
  • Created
  • Last Reply

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்

 

 

வாக்குச் சாவடிகளில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கர அறிவித்துள்ளார்.

ELECTION.JPG

இன்னும் இரண்டு முதல் இரண்டரை மணி நேரங்களில் முதலாவது பெறுபேற்றை வெளியிட முடியும் எனத் தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.

கொழும்பில் மட்டுமன்றி, ஏனைய சில மாவட்டங்களிலும் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரியவருகிறது.

இதேவேளை, வாக்களிப்பு அமைதியான முறையில் நிறைவடைந்திருப்பதாக தேர்தல் திணைக்கள மேலதிக ஆணையாளர் எம்எம்மொஹமட் தெரிவித்தார்.

 

வாக்களிப்பு வீதங்கள் தொடர்பில் அந்தந்த மாவட்டங்களிலேயே அவை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும். பெரும்பாலான வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்க்பபட்டுள்ளன.

தபால் மூலம் அளிக்க்பபட்ட வாக்குகள் மற்றும் மத்திய நிலையங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் பணிகள் சில மத்திய நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உள்ளுராட்சி மன்ற வட்டார வாக்குகள் எண்ணப்பட்டு முதலில் அறிவிக்கப்படும். அதன்பின்னர் மாவட்டரீதியிலான வாக்குகள் அறிவிக்கப்படுமென தெரிவித்தார்

http://www.virakesari.lk/article/30491

Link to comment
Share on other sites

அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதப் பெறுமதி

 

 

நான்கு மணியுடன் நிறைவுற்ற வாக்களிப்பில், மாவட்டங்கள் தோறும் அளிக்கப்பட்டுள் வாக்குகளின் சதவீதங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன.

 

அதன்படி, களுத்துறையில் 70%, காலியில் 75%, மாத்தறையில் 70%, அனுராதபுரத்தில் 75%, மாத்தளையில் 80%, கேகாலையில் 70%, அம்பாறையில் 70%, மொனராகலையில் 75%, பதுளையில் 65% மற்றும் ஹம்பாந்தோட்டையில் 70% என வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 62%, கண்டியில் 65%, பொலனறுவையில் 70%, நுவர எலியவில் 70% மற்றும் குருணாகலையில் 78% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதன்படி, நாடளாவிய ரீதியில் சுமார் அறுபது சதவீதத்துக்கு மேலான வாக்குப் பதிவு இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/30493

26168671_1127291690740873_6407918806534726168671_1127291690740873_640791880653477118_n.jpg

Link to comment
Share on other sites

கிளிநொச்சியில் 76 வீத வாக்களிப்பு….

76.jpg?resize=400%2C400

கிளிநொச்சியில் 76 வீத வாக்களிப்பு – மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுராட்சி தேர்தல் வாக்களிப்பு 76 வீதமாக காணப்படுகிறது என கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலா் குறிப்பிட்டுள்ளார்.

நூறு வாக்களிப்பு நிலையங்களில் 86734 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளுக்கான வாக்களிப்புகளில் மக்கள் ஆர்வத்துடன் காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணி வரை வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

கிளிநொச்சியில் மிகமிக அமைதியான முறையில் வாக்களிப்பு நடந்து முடிந்துள்ளது எனத் தெரிவித்த மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்

மொத்தம் 57 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகிறது இதில் 17 நிலையங்கள் தபால் மூலம் வாக்களிப்பு நிலையங்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்

http://globaltamilnews.net/2018/66282/

  •  
  • வடக்கில் பதிவு செய்யப்பட்ட வாக்கு வீதங்கள்
Vote-750x400.jpeg

வடக்கில் பதிவு செய்யப்பட்ட வாக்கு வீதங்கள்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்கு வீதங்கள் வெளிவந்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் 62 வீதமும்,   முல்லைத்தீவில் 78 வீதமும், கிளிநொச்சியில் 74.24 வீதமும், மன்னாரில் 77 வீதமும், வவுனியாவில் 72 வீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஏனைய மாவட்டங்கள்

திருகோணமலை 65 %

 
 

மாத்தளை  80 %

கொழும்பு 50 % அதிகம்

அம்பாந்தோட்டை 70 %

நுவரெலியா  70 %

பதுளை  65 %

கண்டி  65-70 %

கம்பஹா  73 %

மாத்தறை  64 %

இரத்தினபுரி 70-80 %

மொனராகலை 75 %

பொலநறுவை  68 %

புத்தளம்  70 %

கேகாலை  70 %

அம்பாறை  70 %

களுத்துறை  75 %

அனுராதபுரம்  75 %

காலி 75 %

http://newuthayan.com/story/68025.html

Link to comment
Share on other sites

உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவது எவ்வாறு?

 

 

News%2BVedio32.jpg
உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்­கான வேட்­பு­மனு தாக்­க­லுக்­கு­ரிய தினங்கள் விரைவில் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளன. கட்­சிகள் தற்­போது தேர்­த­லுக்கு மும்­மு­ர­மாக தயா­ரா­கி­வ­ரு­கின்­றன. இம்­முறை தேர்­த­லா­னது புதிய முறையில் நடை­பெ­ற­வுள்­ள­மையே விசேட அம்­ச­மா­க­வுள்­ளது.
 
இந்­நி­லையில் புதிய வட்­டாரம் மற்றும் விகி­தா­சார முறை என கலப்பு முறையில் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ள­மையே விசேட அம்­ச­மாகும். அதன்­படி தேர்தல் எவ்­வாறு நடக்கும்? இரண்டு முறை­க­ளிலும் எவ்­வாறு பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள்? வாக்­கா­ளர்கள் எவ்­வாறு வாக்­க­ளிப்­பது? இது­போன்ற கேள்­விகள் தற் போது சமூ­கத்தில் எழுந்­து­கொண்­டி­ருக்­கின் ­றன. எனவே இது தொடர்­பி­லான ஒரு விப­ரத்தை வாச­கர்­க­ளுக்கு வழங்­க­வேண்டும் என்­பதால் மேல­திக தேர்­தல்கள் ஆணை­யாளர் மொஹ­மட்­டுடன் ஒரு சந்­திப்பை நடத்­தினேன். மிகவும் தெளிவான முறையில் அவர் இந்த விட­யங்­க­ளுக்­கான விளக்­கங்­களை அளித்தார். பல்­வேறு கட்­டங்­க­ளாக அவர் இந்த விப­ரங்­களை வழங்கினார். அவற்றை உங்­க­ளுக்­காக தரு­கின்றோம்.
 
கட்­டுப்­பணம்
 
வேட்­பு­மனு தாக்­க­லுக்­கான காலப்­ப­கு­தியின் இறு­தித்­தி­னத்­திற்கு முதல்நாள் 12 மணிக்கு முதல் அர­சியல் கட்­சி­களும் சுயேட்­சைக்­கு­ழுக்­களும் தங்­க­ளது கட்­டுப்­ப­ணத்தை செலுத்­த­வேண்டும். இம்­முறை ஒரு புதிய ஏற்­பாடு அமு­லுக்கு வரு­கி­றது. அதா­வது 2017 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க உள்­ளூ­ராட்சி தேர்தல் திருத்த சட்­ட­மூ­லத்தின் பிர­காரம் சுயேட்­சைக்­கு­ழுக்கள் மட்­டு­மன்றி அர­சியல் கட்­சி­களும் தமது வேட்­பா­ளர்­க­ளுக்­காக கட்­டுப்­ப­ணத்தை செலுத்­த­வேண்டும்.
 
சுயேட்­சைக்­குழு சார்பில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் ஒருவர் 5000 ரூபா வீதம் கட்­டுப் பணம் செலுத்­த­வேண்டும். அர­சியல் கட்­சி­களின் வேட்­பாளர் ஒரு­வ­ருக்கு 1500 ரூபா வீதம் கட்­டுப்­பணம் செலுத்­த­வேண்டும். இம்­முறை இது கலப்பு தேர்தல் முறை என்­ப­தனால் வட்­டா­ர­மு­றையில் போட்­டி­யி­டு­ப­வர்­களும் பிர­தேச வாரி பட்­டியல் முறையில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களும் கட்­டுப்­ப­ணத்தை செலுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மா­னது.
 
இலங்­கையில் செல்­லு­ப­டி­யாகும் நாணயம் ஊடாக இந்த கட்­டுப்­பணம் செலுத்­தப்­ப­ட­வேண் டும். அர­சியல் கட்­சி­களைப் பொறுத்­த­வ­ரையில் கட்­சியின் செய­லாளர் அல்­லது அவரால் அங்­கீ­காரம் அளிக்­கப்­பட்ட முக­வ­ரினால் கட்­டுப்­பணம் செலுத்­தப்­ப­ட­வேண்டும். சுயேட்­சைக்­கு­ழு­வாயின் சுயேட்­சைக்­கு­ழுவின் தலைவர் அல்­லது அவ­ரினால் அங்­கீ­காரம் அளிக்­கப்­பட்ட முக­வ­ரினால் கட்­டுப்­பணம் செலுத்த முடியும். கட்­டுப்­பணம் செலுத்­திய அர­சியல் கட்­சிகள் அல்­லது சுயேட்­சைக்­கு­ழுக் கள் தேர்­த­லில்­ஒரு ஆச­னத்­தை­யேனும் பெற்­றுக்­கொண்டால் அவர்­களின் கட்­டுப்­பணம் மீள் செலுத்­தப்­படும். வேட்­பு­மனு நிரா­க­ரிக்­கப்­பட்­டாலும் கட்­டுப்­பணம் மீள் செலுத்­தப்­படும்.
 
வேட்­பு­ம­னுத்­தாக்கல்
 
இம்­முறை வேட்­பு­ம­னுக்கள் ஒரே வேட்­பு­ம­னுப்­பத்­தி­ரத்தில் இரண்டு பகு­தி­க­ளாக தாக்கல் செய்­யப்­ப­ட­வேண்டும். அதா­வது ஒரே பத்­தி­ரத்தில் இரண்டு வேட்­பு­மனு பகு­திகள் இருக்கும். வேட்­பு­ம­னுப்­பத்­தி­ரத்தின் முத­லா­வது பகு­தி­யா­னது வட்­டா­ரங்­களில் போட்­டி­யி­டு­கின்ற வேட்­பா­ளர்­க­ளுக்­கு­ரி­ய­தாகும். நாம் தற்­போது வேட்­பு­மனு செயற்­பாடு தொடர்பில் கொழும்பு மாந­க­ர­ச­பையை உதா­ர­ண­மாக எடுத்து நிலை­மையை ஆராய்வோம்.
 
அதா­வது புதிய தேர்தல் முறை­மை­யின்­படி உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான வட்­டார எல்லை நிர்­ண­யங்கள் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே இந்த வட்­டா­ரங்­க­ளுக்கு வேட்­பா­ளர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. கொழும்பு மாந­க­ர­ச­பையை எடுத்­துக்­கொள்வோம்.
23130988_1480774191990687_6546752935561743760_n.jpg
 
கொழும்பு மாந­க­ர­ச­பையில் தனி அங்­கத்­த­வர்கள் தெரிவு செய்­யப்­படும் வட்­டா­ரங்கள் 31 ஆக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அந்­த­வ­கையில் அந்த 31 வட்­டா­ரங்­க­ளுக்கும் கட்­சிகள் மற்றும் சுயேட்­சைக்­கு­ழுக்கள் சார்பில் 31 வேட்­பா­ளர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும்.
 
அடுத்­த­தாக கொழும்பு மாந­க­ர­ச­பையில் 13 வட்­டா­ரங்­க­ளுக்கு இருவர் வீதம் தெரி­வு­செய்­யப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. அதா­வது இந்த 13 வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து இரண்டு பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள். அதற்கும் இந்த 13 வட்­டா­ரங்­க­ளுக்கும் இருவர் வீதம் 26 பேரை அர­சியல் கட்­சிகள், சுயேட்­சைக்­கு­ழுக்கள் வேட்­பா­ளர்­க­ளாக கள­மி­றக்­க­வேண்டும்.
 
அதே­போன்று கொழும்பு மாந­க­ர­ச­பையில் ஒரு வட்­டா­ரத்தில் மூவர் தெரிவு செய்­யப்­ப­டக்­கூ­டிய வகையில் மூன்று வட்­டா­ரங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அவற்­றுக்கு ஒரு­வட்­டா­ரத்­திற்கு மூவர் வீதம் ஒன்­பது வேட்­பா­ளர்­களை அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேட்­சைக்­கு­ழுக்கள் நிய­மிக்­க­வேண்டும்.
 
அந்­த­வ­கையில் ஒரு அர­சியல் கட்சி அல்­லது சுயேட்­சைக்­கு­ழு­வா­னது கொழும்பு மாந­க­ர­ச­பையின் வட்­டா­ரங்­க­ளுக்கு 31 + 26 + 9 என்­ற­வ­கையில் 66 வேட்­பா­ளர்­களை கள­மி­றக்­க­வேண்டும். இந்த 66 பேரும் வேட்பு மனுப்­பட்­டி­யலில் முதல் பகு­தியில் கட்­சிகள் மற்றும் சுயேட்­சைக்­கு­ழுக்­க­ளினால் நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். ஒன்று கூட குறைய முடி­யாது. இந்த 66 வேட்­பா­ளர்­களை 60 வீத­மா­ன­வர்கள் என எடுத்­துக்­கொண்டால் மீதம் 40 வீதமே விகி­தா­சார முறையில் தெரி­வு­செய்­யப்­ப­டு­வார்கள். உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் 60 வீத தொகுதி முறை­மை­யிலும் 40 வீதம் விகி­தா­சார முறை­யிலும் நடை­பெ­ற­வுள்­ளமை இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.
 
அது ஒரு முறை­மையின் அடிப்­ப­டையில் கணக்­கி­டப்­பட்டு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு வழங்­கப்­படும். அதா­வது ஒரு உள்­ளூ­ராட்சி மன்­றத்தில் 60 வீத­மான வட்­டார முறை­மையில் எத்­த­னைபேர் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள்? விகி­தா­சார முறை­மையில் எத்­த­னைபேர் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள் என்­பது ஒவ்­வொரு உள்­ளூ­ராட்­சி­மன்றம் தொடர்­பா­கவும் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அத­னைத்தான் அண்­மையில் அமைச்சர் பைஸர் முஸ்­தபா வர்த்­த­மானி அறி­வித்­தலில் வெளி­யிட்­டி­ருந்தார்.
 
அந்த சட்­டத்தின் படி கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு விகி­தா­சா­ர­மூ­ல­மாக 44 உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வேண்டும். எனவே இந்த 44 பேருடன் இன்னும் மூன்­று­பேரை கூடுத­லாக சேர்த்து கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு ஒவ்­வொரு கட்சி மற்றும் சுயே­ச்­சைக்­குழு சார்பில் 47 பேர் வேட்­பா­ளர்­க­ளாக தாக்கல் செய்­யப்­ப­ட­வேண்டும்.
 
அந்த வகையில் கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு வட்­டார முறை­மையில் 66 மற்றும் விகி­தா­சார முறை­மையில் 47 பேரு­மாக 113 வேட்­பா­ளர்கள் கட்சி மற்றும் சுயேட்சை குழுக்கள் சார்பில் நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். அதன்­படி வட்­டார முறை­மையில் 66 பேரும் விகி­தா­சார முறை­மையில் 44 பேரு­மாக 110 பேர் கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.
 
அர­சியல் கட்­சி­யொன்று கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு வேட்­பு­ம­னுத்­தாக்கல் செய்­யப்­ப­டும்­போது ஒரு வேட்­பா­ள­ருக்கு 1500 ரூபா வீதம் 1 இலட்­சத்து 69 ஆயி­ரத்து 500 ரூபாவை கட்­டுப்­ப­ண­மாக செலுத்­த­வேண்டும். சுயேட்­சைக்­கு­ழுவைப் பொறுத்­த­வ­ரையில் ஒரு வேட்­பா­ள­ருக்கு 5000 ரூபா வீதம் 5 இலட்­சத்து 65 ஆயிரம் ரூபா கட்­டுப்­ப­ண­மாக செலுத்­த­வேண்டும்.
 
பெண் வேட்­பா­ளர்கள்
 
இதற்­கி­டையே புதிய சட்­ட­மூ­லத்­திற்கு அமை­வாக ஒரு கட்­சியின் சார்பில் அல்­லது சுயேட்­சைக்­கு­ழுவின் சார்பில் இரண்டு பகு­தி­களைக் கொண்ட இந்த வேட்­பு­ம­னுப்­பத்­தி­ரத்தில் உள்­ள­டக்­கப்­ப­ட­வேண்­டிய பெண் வேட்­பா­ளர்­களின் எண்­ணிக்கை வரை­யறை செய்­யப்­பட்­டுள்­ளது. அதா­வது கொழும்பு மாந­க­ர­ச­பையை எடுத்­துக்­கொண்­டோ­மானால் வட்­டார முறை­மூலம் 66 பேர் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்ள நிலையில் அதில் 11 பேர் கட்­டாயம் பெண் வேட்­பா­ளர்­க­ளாக கள­மி­றக்­கப்­ப­ட­வேண்டும்.
 
அதே­போன்று விகி­தா­சார முறை­மையில் கள­மி­றக்­கப்­படும் வேட்­பா­ளர்­களில் 50 வீத­மா­ன­வர்கள் பெண்­க­ளாக இருக்­க­வேண்டும். அதா­வது கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு விகி­தா­சாரம் மூலம் 47 வேட்­பா­ளர்கள் கள­மி­றக்­க­வேண்­டிய நிலையில் அதில் 23 பேர் பெண்­க­ளாக இருக்­க­வேண்­டி­யது சட்­ட­மாகும்.
 
அப்­ப­டி­யாயின் மொத்­த­மாக கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு 66+47 என்­ற­வ­கையில் 113 வேட்­பா­ளர்கள் கள­மி­றக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்ள நிலையில் அதில் 34 பேர் பெண்­க­ளாக இருக்­க­வேண்டும் என்­பது சட்டம். இந்த விகிதம் மாறி­ய­மைந்தால் வேட்­பு­மனு நிரா­க­ரிக்­கப்­பட்­டு­விடும் என்­பதை மிகவும் தெளிவாக குறிப்­பி­டு­கின்றோம்.
 
வேட்பு மனுக்கள் நிரா­க­ரிக்­கப்­படல்
 
இங்கு நாம் வேட்­பு­ம­னுக்கள் நிரா­க­ரிக்­கப்­படும் சந்­தர்ப்­பங்­க­ளையும் மக்­க­ளுக்கு எடுத்துக் கூற வேண்­டி­யுள்­ளது. புதிய சட்­டத்­தின்­படி இரண்டு முறை­களில் வேட்­பு­ம­னுக்கள் நிரா­க­ரிக்­கப்­படும். அதா­வது முழு­மை­யான வேட்­பு­மனு நிரா­க­ரிக்­கப்­ப­டு­கின்­றமை ஒரு சந்­தர்ப்­ப­மா­கவும் ஒரு வேட்­பு­ம­னுவில் ஒரு வேட்­பாளர் மட்டும் நிரா­க­ரிக்­கப்­ப­டு­கின்­றமை மற்­று­மொரு சந்­தர்ப்­ப­மா­கவும் சட்­டத்­தினால் வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளன.
 
முழு வேட்பு மனுவும் நிரா­க­ரிக்­கப்­ப­டுதல்
 
வேட்­பு­மனு முழு­மை­யாக நிரா­க­ரிக்­கப்­படும் சந்­தர்ப்­பங்­களை முதலில் பார்ப்போம். கொழும்பு மாந­க­ர­ச­பையை உதா­ர­ண­மாக எடுத்­தோ­மானால் 113 வேட்­பா­ளர்கள் மொத்­த­மாக வேட்பு மனுவின் இரண்டு பகு­தி­க­ளிலும் உள்­ள­டக்­கப்­ப­டா­விடின் குறித்த வேட்­பு­மனு முழு­மை­யாக நிரா­க­ரிக்­கப்­படும்.
23130988_1480774191990687_6546752935561743760_n.jpg
 
தேவை­யான பெண் பிர­தி­நி­தித்­து­வங்கள் குறிப்­பிட்ட வீதத்தில் இடம்­பெ­றா­விடின் வேட்­பு­மனு முழு­மை­யாக நிரா­க­ரிக்­கப்­படும். அதா­வது கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு வட்­டா­ர­மு­றையில் 11 பெண் வேட்­பா­ளர்­களும் விகி­தா­சார முறையில் 23 பெண் வேட்­பா­ளர்­களும் நிய­மிக்­கப்­ப­டா­விடின் வேட்­பு­மனு முழு­மை­யாக நிரா­க­ரிக்­கப்­படும்.
 
கட்­டுப்­பணம் உரிய முறையில் செலுத்­தப்­ப­டா­விடின் அப்­போதும் முழு­மை­யான வேட்­பு­ம­னுவும் நிரா­க­ரிக்­கப்­படும்.
 
அடுத்­த­தாக அர­சியல் கட்­சி­யாக இருப்பின் செய­லா­ளரும் சுயேட்­சைக்­கு­ழு­வாக இருப்பின் அதன் தலை­வரும் கைச்­சாத்­தி­ட­வேண்டும். இல்­லா­விடின் முழு­மை­யாக வேட்­பு­மனு நிரா­க­ரிக்­கப்­படும். இவர்­களின் கையொப்­பத்தை ஒரு சமா­தான நீதிவான் முறை­யாக அத்­தாட்­சிப்­ப­டுத்த வேண்டும். இல்­லா­விடின் அப்­போதும் வேட்­பு­மனு முழு­மை­யாக நிரா­க­ரிக்­கப்­படும்.
 
வேட்­பு­ம­னுவை கட்­சி­யென்றால் செய­லா­ளரும், அல்­லது அவரால் அதி­காரம் அளிக்கப்­பட்ட முக­வரும், சுயேட்­சைக்­கு­ழு­வென்றால் அதன் தலை­வரும் தெரி­வத்­தாட்சி அலு­வ­ல­ரிடம் கைய­ளிக்­க­வேண்டும். இவர்­களைத் தவிர்த்து வேறு­யா­ரா­வது கைய­ளித்தால் அந்த வேட்­பு­மனு முழு­மை­யாக நிரா­க­ரிக்­கப்­படும்.
 
வேட்பு மனுவில் ஒருவர் மட்டும் நிரா­க­ரிக்­கப்­ப­டுதல்
 
தற்­போது தனிப்­பட்ட ரீதியில் வேட்­பா­ளர்­களின் வேட்­பு­மனு நிரா­க­ரிக்கும் சந்­தர்ப்­பத்தை பார்ப்போம். 113 வேட்­பா­ளர்­களும் வேட்­பு­ம­னுவில் கையொப்­ப­மி­ட­வேண்டும். அதில் ஒருவர் கையெ­ழுத்­தி­டா­விடின் அவ­ரு­டைய பெயர் மட்டும் வேட்­பு­ம­னு­வி­லி­ருந்து நிரா­க­ரிக்­கப்­படும். ஏனை­ய­வர்­க­ளுக்கு அதில் பாதிப்பு ஏற்­ப­டாது. அதே­போன்று இந்த நாடு இரண்­டாக பிள­வு­ப­டு­வ­தற்கு எதி­ராக வேட்­பாளர் ஒரு உறு­தி­யுரை செய்­ய­வேண்டும். அதனை வழங்­கத்­த­வ­றினால் அந்த வேட்­பாளர் மட்டும் நிரா­க­ரிக்­கப்­ப­டுவார்.
 
அந்த உறு­தி­யு­ரையை வழங்கி அதில் அவர் கையொப்­ப­மி­டா­விடின் அவ­ரு­டைய பெயர் மட்டும் நிரா­க­ரிக்­கப்­படும். அதே­போன்று கடந்த தேர்தல் முறையில் இளை­ஞர்கள் 40 வீதம் உள்­ளீர்க்­கப்­ப­ட­வேண்டும் என்ற சட்டம் இருந்­தது. இம்­முறை அது 30 வீத­மாக மாறி­யுள்­ளது. ஆனால் அது கட்­டா­ய­மாக்­கப்­ப­ட­வில்லை. எனினும் ஒரு கட்சி தான் ஒரு இளை­ஞரைக் கள­மி­றக்­கு­வ­தாக குறிப்­பிட்டால் அந்த வேட்­பு­ம­னுவில் பிறப்­புச்­சான்­றி­த­ழிலில் அவர் இளை­ஞ­ராக இருக்­காவிடின் (வயது மட்டம் சட்­டத்தில் உள்­ளது) அவர் மட்டும் வேட்­பு­ம­னு­வி­லி­ருந்து நிரா­க­ரிக்­கப்­ப­டுவார். இத­னுடன் வேட்­பு­மனு விவ­காரம் முடி­வுக்கு வரு­கி­றது.
 
வாக்­க­ளிப்பு முறை
 
அடுத்­த­தாக வாக்­க­ளிப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணி மற்றும் தெரிவு செய்யும் பணி என்­ப­வற்றைப் பார்ப்போம். வாக்­குச்­சீட்­டா­னது இது­வரை காலம் இருந்­த­தைப்­போன்று இருக்­காது. அதா­வது முதல் பகுதி மட்­டுமே இருக்கும். கீழ் பகுதி இருக்­காது. சரி­யாக கூறு­வ­தென்றால் வாக்­குச்­சீட்டில் வட்­டா­ரத்தில் போட்­டி­யிடும் கட்­சி­களின் பெயர்கள் (மும்­மொ­ழியில்), சின்­னங்கள், வாக்­க­ளிப்­ப­தற்­கான ஒரு வெற்­றுக்­கூடு ஆகி­யவை இருக்கும். கட்­சி­களின் பெயர்கள் சிங்­கள அக­ர­வ­ரி­சைப்­ப­டியே அமையும். கட்­சி­களின் பெயர்­க­ளுக்கு கீழ் சுயேட்­சைக்­கு­ழுக்­களின் இலக்­கங்­களும் இருக்கும்.
 
விருப்பு வாக்கு இல்லை
 
மாறாக விருப்­பு­வாக்­குக்­கான வெற்­றுக்­கூடோ, மற்றும் வேட்­பா­ளர்­களின் பெயர்­களோ வாக்­குச்­சீட்டில் இருக்­காது. இதன்­போது தன்­னு­டைய வட்­டா­ரத்தில் எந்­தக்­கட்­சியின் சார்பில் எந்­த­வேட்­பாளர் போட்­டி­யி­டு­கின்றார் என்­பது மக்­க­ளுக்குத் தெரியும். அது வாக்­க­ளிப்பு நிலை­யத்­துக்கு வெளி­யிலும் காட்­சிப்­ப­டுத்­தப்­படும். வாக்­காளர் அட்­டை­யிலும் இந்த விப­ரங்கள் சில வேளை­களில் வீடு­க­ளுக்கு அனுப்­பப்­படும். எனவே வாக்­கா­ளர்கள் இதன்­போது தான் விரும்­பிய கட்­சிக்கு அல்­லது சுயேட்­சைக்­கு­ழுவுக்கு மட்­டுமே வாக்­க­ளிக்­க­வேண்டும்.
 
வாக்கு எண்ணும் நிலை­யங்­க­ளாக மாறும் வாக்­க­ளிப்பு நிலை­யங்கள்
 
குறித்த வட்­டா­ரத்தில் ஒரு கட்­சிக்கு ஒரு வாக்­காளர் வாக்­க­ளிக்­கும்­போது அந்த கட்­சியின் சார்­பாக போட்­டி­யிடும் வேட்­பா­ள­ருக்கே அந்த வாக்கு செல்லும். வாக்­க­ளிப்பு முடிந்­ததும் மாலை 4.00 மணிக்கு பிறகு அனைத்து வாக்­க­ளிப்பு நிலை­யங்­களும் வாக்கு எண்ணும் நிலை­யங்­க­ளாக மாறி­விடும். மாலை 4.00 மணிக்கு பிறகு வாக்­குகள் எண்­ணப்­படும். காலையிலி­ருந்து மாலை வரை வாக்­க­ளிப்பு உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக இருந்­த­வர்கள் மாலை 4.00 மணிக்குப் பிறகு வாக்கு எண்ணும் உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக மாறி­வி­டுவர். அந்த இடத்­தி­லேயே வாக்­குகள் எண்­ணப்­படும்.
 
வட்­டார முடிவு உட­ன­டி­யாக அறி­விக்­கப்­படும்
 
அதன்­படி வாக்­குகள் எண்­ணப்­பட்டு அந்த வட்­டா­ரத்தில் எந்தக் கட்சி வெற்­றி­பெற்­றுள்­ளது என உயர் அதி­காரி அறி­விப்பார். அதன்­படி வெற்­றி­பெற்ற கட்­சியின் சார்பில் குறித்த வட்­டா­ரத்தில் போட்­டி­யிட்­டவர் வெற்­றி­பெற்­ற­தாக எடுத்­துக்­கொள்­ளப்­ப­டுவார். சில­வேளை ஒரு வட்­டா­ரத்­திற்கு இரண்டு மூன்று வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் உரு­வாக்­கப்­ப­டலாம். அப்­ப­டி­யான சந்­தர்ப்பம் வந்தால் அனைத்து வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளிலும் வாக்­குகள் எண்­ணப்­பட்டு ஒன்­றாக சேர்க்­கப்­பட்டு வெற்­றி­பெற்ற கட்சி அறி­விக்­கப்­படும்.
 
வட்­டா­ரத்­திற்­கான வாக்­குப்­பட்­டியல் உடைக்­கப்­படும் போது அதற்குள் அந்த வட்­டா­ரத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்ள தபால் வாக்­கு­களும் கொட்­டப்­பட்டு முழு­மை­யா­கவே எண்­ணப்­படும். இதன்­படி மாந­க­ர­ச­பையில் வட்­டா­ரங்­க­ளுக்­கான வெற்­றிகள் அறி­விக்­கப்­படும். இதன்­படி வெற்­றி­பெற்ற 66 பேரும் அறி­விக்­கப்­ப­டு­வார்கள்.
 
விகி­தா­சார தெரிவு
 
எஞ்­சிய 44 பேரை இப்­போது நாம் விகி­தா ­சார முறை­மையில் தெரி­வு­செய்­ய­வேண்­டி­யுள்­ளது. தற்­போது கொழும்பு மாந­க­ர­ச­பையில் 31+13+3 என்­ற­வ­கையில் 47 வட்­டா­ரங்கள் உரு­வாக்­கப்­பட்டு அவற்­றுக்­காக 66 பேர் தெரிவு
 
செய்­யப்­ப­டு­வார்கள் என்­பது உங்­க­ளுக்குத் தெரியும். எனினும் விகி­தா­சார முறை­மையில் 44 பேர் தெரி­வு­செய்­யப்­ப­டு­வ­தற்­காக இந்த 47 வட்­டா­ரங்­க­ளுக்கும் அளிக்­கப்­பட்ட வாக்­குகள் முழு­மை­யாக எண்­ணப்­படும்.
 
கொழும்பு மாந­க­ர­ச­பைக்­கான இந்த நட­வ­டிக்கை ஒரு பாட­சா­லையில் இடம்­பெறும். உதா­ர­ண­மாக கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு செல்­லு­ப­டி­யான 220000 வாக்­குகள் கிடைத்­துள்­ளன என வைத்­துக்­கொள்வோம். இந்த 220000 வாக்­கு­களில் மொத்த உறுப்­பி­னர்­க­ளான 110 பிரித்தால் 2000  என விடை­வரும்.
 
இப்­போது 47 வட்­டா­ரங்­களில் 'ஏ' என்ற கட்சி 25 வட்­டா­ரங்­களை வென்­றுள்­ளது என்றும் பி என்ற கட்சி 15 வட்­டா­ரங்­க­ளையும் சி என்ற கட்சி 7 வட்­டா­ரங்­க­ளையும் வெற்­றி­பெற்­றுள்­ளது என்றும் உதா­ர­ணத்­திற்கு வைத்­துக்­கொள்வோம். அதன்­படி 25 வட்­டா­ரங்­களில் வெற்­றி­பெற்ற ஏ என்ற கட்­சிக்கு 30 உறுப்­பி­னர்கள் கிடைத்­துள்­ளார்கள் என்றும் 15 வட்­டா­ரங்­களை வென்ற பி என்ற கட்­சிக்கு 24 உறுப்­பி­னர்கள் கிடைத்­துள்­ளார்கள் என்றும் ஏழு வட்­டா­ரங்­களை வென்ற சி என்ற கட்­சிக்கு 12 பேர் கிடைத்­துள்­ளார்கள் என்றும் வைத்­துக்­கொள்வோம். ( சில தொகு­தி­களில் இரண்டு அல்­லது மூன்று பேர் தெரிவு செய்­யப்­ப­டு­வதால் வட்­டா­ரங்­க­ளை­விட உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அதி­க­மாக இருக்­கலாம்) இது உதா­ரணம் மட்­டு­மே­யாகும். உண்­மை­யாக வீதங்கள் மாறலாம்.
 
இதில் 47 வட்­டா­ரங்­களில் ஏ,பி, சி. என்ற கட்­சிகள் பெற்­றுக்­கொண்ட முழு வாக்­கு­களும் எண்­ணப்­படும். இங்கு ஏ என்ற கட்சி 1 இலட்­சத்து 10 ஆயிரம் வாக்­குகள் எடுத்­துள்­ளது என்று வைத்­துக்­கொள்வோம். அதனை முதலில் பெற்ற விடை­யான இரண்­டா­யி­ரத்தால் பிரித்தால் அந்த கட்­சிக்கு 55 உறுப்­பி­னர்கள் கிடைப்­பார்கள். அதில் ஏ என்ற அந்­தக்­கட்சி ஏற்­க­னவே வட்­டா­ர­மு­றை­மையில் 30 உறுப்­பி­னர்­களைப் பெற்­று­விட்­டதால் மீதி 25 உறுப்­பி­னர்கள் விகி­தா­சார முறையில் கிடைப்­பார்கள்.
 
பி என்ற கட்சி 80 ஆயிரம் வாக்­கு­களைப் பெற்­றி­ருந்தால் அவர்­க­ளுக்கு 40 உறுப்­பி­னர்கள் கிடைப்­பார்கள். அதில் பி என்ற கட்சி ஏற்­க­னவே 24 உறுப்­பி­னர்­களை வட்­டார முறையில் பெற்று விட்­டதால் அவர்­க­ளுக்கு விகி­தா­சார முறை­மையில் 16உறுப்­பி­னர்கள் கிடைப்­பார்கள். சீ என்ற கட்சி 26000 ஆயிரம் வாக்­கு­களைப் பெற்று அதனை இரண்­டா­யி­ரத்தால் பிரித்தால் 13 உறுப்­பி­னர்­கள் கிடைப்­பார்கள். அந்தக் கட்சி ஏற்­க­னவே வட்­டார முறையில் 12 உறுப்­பி­னர்­களை பெற்­று­விட்­டதால் விகி­தா­சார முறை­மையில் ஒரு உறுப்­பி­னரைப் பெற்­றுக்­கொள்­ளலாம். விகி­தா­சார முறையில் 44 உறுப்­பி­னர்­களே கொழும்பு மாந­கர சபைக்கு உள்­ளனர். இந்­நி­லையில் ஏ பி மற்றும் சி என்ற கட்­சிகள் பெற்ற ஆச­னங்­களை தவிர்த்து எஞ்­சி­யுள்ள 2 ஆச­னங்­களை குறைந்த ஆச­னங்­களை வென்ற கட்­சிகள் பெற்­றுக்­கொள்ளும். இந்த இடத்­தில்தான் சிறிய கட்­சி­க­ளுக்­கான சந்­தர்ப்பம் உறு­தி­செய்­யப்­படும். அதன்­படி விகி­தா­சார முறை­மையில் போட்­டி­யிட்ட கட்­சி­க­ளுக்கு எத்­தனை உறுப்­பி­னர்கள் கிடைத்­துள்­ளார்கள் என்­பதை நாங்கள் அறி­விப்போம். அவர்கள் அதன்­படி உறுப்­பி­னர்­களை எமக்கு அறி­விக்­கலாம். அதன்­படி விகி­தா­சார வேட்­பு­ம­னுப்­பட்­டி­யலில் பெய­ரி­டப்­பட்­ட­வர்கள் அல்­லது வட்­டா­ர­மு­றையில் தோற்­ற­வர்கள் கூட நிய­மிக்­கப்­ப­டலாம்.
 
பெண் பிர­தி­நி­தித்­துவம்
 
இவ்­வாறு கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு 110 உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­ப­டு­வார்கள். ஆனால் இங்கு பெண்­களின் பிர­தி­நி­தித்­ துவம் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும். பெண்கள் 25 சதவீதம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது சட்டம். அந்தவகையில் கொழும்பு மாநகர சபையை எடுத்துக் கொண்டால் குறைந்தது 110 பேரில் 27 பேராவது பெண்களாக இருக்கவேண்டும். இங்கு மொத்தமாக பெறப்பட்ட 220000 வாக்குகளிலிருந்து 20 வீதத்திற்கு குறைவாக பெற்ற கட்சிகளின் வாக்குகளை கழித்துவிட வேண்டும். அவர்களுக்கு பெண்களை நியமிக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது. அப்படி பார்க்கும் போது உதாரணமாக இரண்டு இலட்சம் வாக்குகளே கவனத்தில் கொள்ளப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.
 
அதனை இந்த 27 பெண் உறுப்பினர்களுக்காக வீதத்தினால் பிரித்தால் கிட்டத்தட்ட 7500 என்ற விடை வரலாம். இப்போது அந்த 7500 என்ற தொகையினால் ஏ பி மற்றும் சி என்ற கட்சிகள் பெற்ற வாக்குகளைப் பிரிக்க வேண்டும். உதாரணமாக ஏ என்ற கட்சி 1 இலட்சத்து 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தது. அதனை 7500 ரூபாவால் பிரித்தால் ஒரு தொகை வரும்.
 
உதாரணமாக ஏ என்ற கட்சிக்கு 14உம், பி என்ற கட்சிக்கு 8 உம் சி. என்ற கட்சிக்கு 3 உம் விடைகளாக கிடைத்துள்ளன என்று வைத்துக்கொள்வோம். இதுதான் குறித்த கட்சிகள் சார்பாக கொழும்பு மாநகரசபைக்கு செல்லவேண்டிய பெண் பிரதிநிதித்து வங்களின் எண்ணிக்கையாக அமையும். தொடர்ந்து இந்தக்கட்சிகளின் வட்டாரங்களில் எத்தனை பெண்கள் வெற்றிபெற்றுள்ளார்கள் என்று பார்க்கவேண்டும். உதாரண மாக ஏ என்ற கட்சி வட்டார முறையில் ஐந்து பெண் உறுப்பினர்களைப் பெற்றிருந்தால் மிகுதி 9 பெண் உறுப்பினர்களை விகிதாசார முறையில் தெரிவுசெய்யப்படவேண்டியுள்ளது. அதாவது ஏ என்ற கட்சியானது 9 பெண் உறுப்பினர்களை தனக்கு விகிதாசாரம் மூலம் கிடைத்த 25 உறுப்பினர்களிலிருந்து மாநகர சபைக்கு அனுப்பவேண்டும்.
 
இந்த முறைமையையே அனைத்துக் கட்சிகளும் செய்யவேண்டும். ஒரு வேளை ஒரு கட்சியின் சார்பில் வட்டார முறையில் ஒரு பெண் பிரதிநிதியும் வெற்றிபெறாவிடின் இங்கு விகிதாசாரத்தின்படி விகிதாசார முறையிலி ருந்து வெற்றிபெற்றவர்களிலிருந்து பெண்களை தெரிவு செய்து அனுப்ப வேண்டியது கட்டாயமாகும்.
 
கொழும்பு மாநகர சபையை பொறுத்தவரை ஒரு கட்சி வட்டார மற்றும் விகிதாசார முறை மைகளில் 56 உறுப்பினர்களைப் பெற்றால் மேயரையும் பிரதி மேயரையும் நியமனம் செய்யலாம். எனினும் கொழும்பு மாநகர சபையில் எந்தவொரு கட்சியும் 56 உறுப்பி னர்களைப் பெறாவிடின் கூட்டாட்சியே நடை பெறும்.
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிள் வெல்லத் தொடங்கியுள்ளது.

நெல்லியடி வீரமாகாளி அம்மன் கோவிலடி

Link to comment
Share on other sites

  • தேர்தல் முடிவு ; கரகராயன்குளம் தெற்கு
nnnnnn.jpg

தேர்தல் முடிவு ; கரகராயன்குளம் தெற்கு

 

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் கிளிநொச்சி மாவட்டம் கரகராயன்குளம் தெற்கு பகுதியின் தேர்தல் முடிவுகள்

மொத்தம் வாக்களிப்பு – 633
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 14
தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 208
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 205
தமிழர் விடுதலைக் கூட்டனி – 174

ஏனைய கட்சிகள் 20 இற்கும் குறைவு

http://newuthayan.com/story/68041.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல இடங்களில் சைக்கிள் முன்னேறிக் கொண்டிருப்பதாக உத்தியோகப்பற்றற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

Link to comment
Share on other sites

  •  
  • நெடுந்தீவில் நான்கு வட்டாரங்கள் ஈ.பி.டி.பி வசம்
oo.jpg

நெடுந்தீவில் நான்கு வட்டாரங்கள் ஈ.பி.டி.பி வசம்

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் நெடுந்தீவில் உள்ள எட்டு வட்டாரங்களில் இதுவரை நான்கு வட்டாரங்களை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு   ஒரு வட்டாரத்தில் முன்னிலையாகவுள்ளது.

http://newuthayan.com/story/68059.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்வதெல்லாம் உண்மை

யாழ் மாநகரசபையில் 5 இடங்களில் சைக்கிள் வெற்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

பல இடங்களில் சைக்கிள் முன்னேறிக் கொண்டிருப்பதாக உத்தியோகப்பற்றற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

5 minutes ago, ஈழப்பிரியன் said:

நான் சொல்வதெல்லாம் உண்மை

யாழ் மாநகரசபையில் 5 இடங்களில் சைக்கிள் வெற்றி.

சாமிகளே,

'சைக்கிள்' 'சைக்கிள்'னா அது இன்னா கட்சி..?  embaar.gif

தெளிவா சொன்னா தேவலை..!

 

 

Link to comment
Share on other sites

  • ஊர்காவற்றுறை ; 5 வட்டாரங்கள் ஈ.பி.டி.பி வசம்
kkkk.jpg

ஊர்காவற்றுறை ; 5 வட்டாரங்கள் ஈ.பி.டி.பி வசம்

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் ஊர்காவற்றுறை எட்டு வட்டாரங்களில் இதுவரை அறிவிக்கப்பட்டதில் 5 வட்டாரங்களை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது.

http://newuthayan.com/story/68065.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ராசவன்னியன் said:

சாமிகளே,

'சைக்கிள்' 'சைக்கிள்'னா அது இன்னா கட்சி..?  embaar.gif

தெளிவா சொன்னா தேவலை..!

 

 

இந்த தேர்தல் சின்னத்துக்கே வாக்குகள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு- வீடு

இகில இலங்கை தமிழ் காங்கிரஸ்- சைக்கிள்

இது வரை தேர்தல்களில் வீடே கதி என்றிருந்த மக்கள் வெறுப்பு தான் சைக்கிளின் வெற்றி

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு – தமிழ் காங்கிரஸ் இடையே கடும் போட்டி

 

local-election results (2)உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் பல இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அகில இலங்கை தமிழ் காங்கிரசுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்னமும் அதிகாரபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில், சில உள்ளூராட்சி சபைகளின் வட்டார ரீதியான முடிவுகள் தெரிய வந்துள்ளன.

இதற்கமைய, யாழ். மாநகரசபையின் குருநகர் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார் என்று தெரிய வருகிறது.

யாழ். மாநகரசபைத் தேர்தலில் நல்லூர் இராசதானி வட்டாரத்தில் தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாகவும், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில், நெல்லியடி வட்டாரத்திலும்  தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ். மாநகரசபைத் தேர்தலில் 8 ஆவது வட்டாரத்தில் போட்டியிட்ட தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் வரதராஜன் பார்த்திபன் வெற்றி பெற்றுள்ளார் என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லூர் பிரதேச சபையின் 4 ஆவது வட்டாரத்தில் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

அதேவேளை, பல வட்டாரங்களில் தமிழ் அரசுக் கட்சிக்கும், தமிழ் காங்கிரசுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுவதாகவும் தெரிய வருகிறது.

தீவகத்தில் நெடுந்தீவு பிரதேச சபையின் 8 வட்டாரங்களில் 7 வட்டாரங்களை ஈபிடிபி கைப்பற்றும் நிலையில் இருப்பதாகவும்,  ஊர்காவற்றுறை பிரதேசசபையின் 8 வட்டாரங்களில் 5 வட்டாரங்களில் ஈபிடிபி  முன்னணியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வலிகாமம் தெற்கு மேற்கு பிரதேச சபையின் 8ஆம், 9ஆம் வட்டாரங்களில் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

காரைநகர் பிரதேச சபையின் 1ஆம், 2ஆம், 3 ஆம் வட்டாரங்களை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியிருக்கிறது.

எனினும், இறுதியான அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னமும் வெளியாகவில்லை.

http://www.puthinappalakai.net/2018/02/10/news/28977

Link to comment
Share on other sites

சாவகச்சேரி , கல்வயல் ; ஸ்ரீ.சு.க முன்னிலை

 

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் சாவகச்சேரி, கல்வயல் பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னணி பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 253 வாக்குகள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 217 வாக்குகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 199 வாக்குகள்

 

சுயேட்சை – 131 வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சி – 68 வாக்குகள்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி – 65 வாக்குகள்

 

பரு.6 ஆம் வட்டாரம் ; த.தே.ம.மு முன்னிலை

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் பருத்தித்துறை பிரதேச சபை 6 ஆம் வட்டாரத்தில்,  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 561 வாக்குகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 551 வாக்குகள்

 

நல்லூர் ; த.தே.கூ வெற்றி

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் நல்லூர் பிரதேசசபை 4 ஆம் வட்டாரம் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

 

யாழ்ப்பாணம் 13 ஆம் வட்டாரம் ;  ஐ .தே.கட்சி முன்னிலை

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ்ப்பாணம் 13 ஆம் வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலையில் உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி – 377 வாக்குகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 288 வாக்குகள்

 

 

யாழ்ப்பாணம் – 3 ஆம் வட்டாரம் ; த.தே.கூ முன்னிலை

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ் . மாநகரசபையின் 3 ஆம் வட்டாரத்தை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

http://newuthayan.com

Link to comment
Share on other sites

வல்வெட்டித்துறை நகரசபையின் 7 வட்டாரங்கள் கூட்டமைப்பு வசம்

 

tnaவல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக  வெற்றியைப் பெறும் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வல்வெட்டித்துறை நகரசபையின் 9 வட்டாரங்களில் 7 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. வல்வெட்டித்துறை நகரம், சிவன்கோவிலடி வட்டாரம், மயிலியதனை, கொம்மந்தறை, ரேவடி, பொலிகண்டி, வல்வெட்டி வடக்கு ஆகிய ஏழு வட்டாரங்களிலும் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தொண்டைமானாறு வட்டாரத்தை ஈபிடிபி கைப்பற்றியுள்ளது. ஆதிகோவிலடி வட்டாரத்தில் சுயேட்சைக்குழு வெற்றி பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.net/2018/02/10/news/28991

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த தேர்தல் சின்னத்துக்கே வாக்குகள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு- வீடு

இகில இலங்கை தமிழ் காங்கிரஸ்- சைக்கிள்

இது வரை தேர்தல்களில் வீடே கதி என்றிருந்த மக்கள் வெறுப்பு தான் சைக்கிளின் வெற்றி

தகவல்களுக்கு நன்றி ஈழப்பிரியன்...bjr2.gif

ஆனால் இந்த ரண களத்திலும், கண்டந்துண்டமாக தமிழர்களை கூறுபோட்டு கொன்னு போட்டாலும் சிங்களக் கட்சிகளுக்கு யாழ்ப்பாண மக்களே வாக்களித்து வெற்றிபெறச் செய்யும்போது, தமிழக தமிழர்களைப் பார்த்து 'எங்களுக்கு தார்மீக உதவி செய்யவில்லை' என குறைப்படுவதில் மதிப்பில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ராசவன்னியன் said:

ஆனால் இந்த ரண களத்திலும், கண்டந்துண்டமாக தமிழர்களை கூறுபோட்டு கொன்னு போட்டாலும் சிங்களக் கட்சிகளுக்கு யாழ்ப்பாண மக்களே வாக்களித்து வெற்றிபெறச் செய்யும்போது, தமிழக தமிழர்களைப் பார்த்து 'எங்களுக்கு தார்மீக உதவி செய்யவில்லை' என குறைப்படுவதில் மதிப்பில்லை!

சந்தில சிந்து பாடாமல் இருங்க தயவுசெய்து.

6 minutes ago, ராசவன்னியன் said:

ஆனால் இந்த ரண களத்திலும், கண்டந்துண்டமாக தமிழர்களை கூறுபோட்டு கொன்னு போட்டாலும் சிங்களக் கட்சிகளுக்கு யாழ்ப்பாண மக்களே வாக்களித்து வெற்றிபெறச் செய்யும்போது, தமிழக தமிழர்களைப் பார்த்து 'எங்களுக்கு தார்மீக உதவி செய்யவில்லை' என குறைப்படுவதில் மதிப்பில்லை

தார்மீக உதவி கிடைத்து இருந்தால் கதை வேறு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

தகவல்களுக்கு நன்றி ஈழப்பிரியன்...bjr2.gif

ஆனால் இந்த ரண களத்திலும், கண்டந்துண்டமாக தமிழர்களை கூறுபோட்டு கொன்னு போட்டாலும் சிங்களக் கட்சிகளுக்கு யாழ்ப்பாண மக்களே வாக்களித்து வெற்றிபெறச் செய்யும்போது, தமிழக தமிழர்களைப் பார்த்து 'எங்களுக்கு தார்மீக உதவி செய்யவில்லை' என குறைப்படுவதில் மதிப்பில்லை!

பணம், தலைவா பணம்.... இங்கும் பூந்திருச்சு tw_anguished:

Link to comment
Share on other sites

சகல கதவுகளையும் அடைத்தார் மஹிந்த

 

உள்ளூராட்சி மன்றங்களுக்கான, முதலாவது தேர்தல் பெறுபேறு இன்னும் சொற்ப நேரத்தில் வெளியிடப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், உத்தியோகபூர்வமற்ற பெறுபேறுகள், சமூக வலைத்தளங்களில், பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

உத்தியோகபூர்வமற்ற, தேர்தல் பெறுபேறுகள் எதனையும் பதிவிடவேண்டாமென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, சகலரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சகல-கதவுகளையும்-அடைத்தார்-மஹிந்த/175-211410

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

சந்தில சிந்து பாடாமல் இருங்க தயவுசெய்து.

தார்மீக உதவி கிடைத்து இருந்தால் கதை வேறு .

சிந்து பாடுவதில்லை, அங்கிருக்கும் யதார்த்தம் அதுதான்..!

 

9 minutes ago, Nathamuni said:

பணம், தலைவா பணம்.... இங்கும் பூந்திருச்சு tw_anguished:

அங்கேயுமா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

 

 

அங்கேயுமா..?

தகப்பன் வழியை பிள்ளைகள் பின்பற்றுகிறார்கள்.

Link to comment
Share on other sites

பருத்தித்துறை பிரதேச சபையில் கூட்டமைப்பு முன்னணி – நகரசபையில் இழுபறி

 

tnaபருத்தித்துறை பிரதேசசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை வகிக்கிறது. பிரதேசசபையின் மொத்தமுள்ள 12 வட்டாரங்களில், 8 வட்டாரங்களின் முடிவுகள் அதிகாரபூர்வமற்ற முறையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், 5 வட்டாரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.  2 வட்டாரங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், 1 வட்டாரத்தில் ஈ.பி.டி.பியும் வெற்றி பெற்றுள்ளன.

அதேவேளை, பருத்தித்துறை நகரசபைத் தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி,  தமிழ் தேசியக் கூட்டமைப்பும்,  தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தலா 02 ஆசனங்களைப் பெற்றுள்ளன.  ஈ.பி.டி.பி 1 ஆசனத்தைப் பெற்றுள்ளது.

 

 

கூட்டமைப்பின் வசமாகிறது வவுனியா நகரசபை

 

local-election results (4)வவுனியா  நகரசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா நகரசபையின் வட்டார அடிப்படையிலான 12 பிரிவுகளினதும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது. 4 வட்டாரங்களை ஐதேக கைப்பற்றியுள்ளது. 1 வட்டாரத்தை சிறிலங்கா சுதந்தி்ரக் கட்சி கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விகிதாசார முறைப்படியான உறுப்பினர்களின் தெரிவுடன் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

காரைநகர் பிரதேச சபையில் கூட்டமைப்பு – சுயேட்சைக் குழு சமபலம்

 

local-election results (2)காரைநகர் பிரதேச சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சுயேட்சைக் குழுவும் வட்டார ரீதியில் சமபலத்துடன் இருப்பதால், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

காரைநகர் பிரதேச சபைக்கு வட்டார ரீதியாக 6 உறுப்பினர்களும், விகிதாசார ரீதியாக 4 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இந்த நிலையில்,  வட்டார ரீதியான தேர்தல் முடிவுகளின் படி, 3 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டைமைப்பும், 3 வட்டாரங்களை  சுயேட்சைக் குழுவும் கைப்பற்றியுள்ளன.

சமபல நிலை காணப்படும் நிலையில், விகிதாசார ரீதியான முடிவுகளின் அடிப்படையிலேயே இங்கு ஆட்சியமைக்கப் போவது யார் என்பது தெரியவரும்.

http://www.puthinappalakai.net

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் சாவகச்சேரி கோவில் குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  கைப்பற்றியுள்ளது

http://newuthayan.com/story/68110.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.