Jump to content

சங்கரன் வாழ்வில் ஆறு சுளைகள்


Recommended Posts

சங்கரன் வாழ்வில் ஆறு சுளைகள் - ஆதிரன்

 

னகமணிக்கும் அவளின் மகன் சங்கரனுக்கும் சுமுகமான உறவு அற்றுப் போய் வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. சிறுசிறு காரணங்கள் இருந்தாலும் மொத்தமான வெறுப்புக்கு செண்பகராணி பொறுப்பாயிருந்தாள். அவள் அவனுக்கு முறையில் சித்தியாகவும் இன்னொரு முறையில் அத்தை மகளாகவும் இருந்தாள். அவனை மாமா என்று அழைக்கும் அளவுக்கு அவள் சின்னப் பெண்ணாகவே இருந்தாள். சங்கரனுக்குப் புத்தி மந்தம். பெரிய உதட்டில் இடது ஓரத்தில் சதா எச்சில் ஒழுகும். மெலிந்த தேகம் என்றாலும் கைகளும் பாதங்களும் பெருத்து அவனது உடல்வாகுக்கு ஒவ்வாத ஒரு தினுசில் இருக்கும். ஊரில் தப்பையன் என்றே அவனை அழைத்தார்கள். சிலர் வாத்துக்காலு என்றும். அடங்காத தலைமுடியும் லேசான மாறுகண்களும் அவனை மனிதர்களிடமிருந்து தனிமைப்படுத்தியது. அம்மாளுக்கு பாய் வியாபாரம். சில நேரங்களில் வீட்டில் முறம் பின்னி விற்பாள். ராசக்காபட்டியிலிருந்து போடி நாயக்கனூருக்குச் சென்று வியாபாரம் செய்வாள். கணவன் ராஜாமணி கிணற்று வேலையில் இருக்கும்போது மண் சரிந்து புதைந்துபோனான். பதினாறு வயதில் திருமணமாகி அடுத்த வருடமே சங்கரனை ஈன்று ஏழாவது மாதத்தில் தாலியை அறுத்துக்கொண்டாள். கனகமணி முதன் முதலில் புகையிலையுடன் வெற்றிலையைப் போட்டுக்கொண்டபோது நாலு வயது சங்கரன் இரவெல்லாம் தும்மிக் கொண்டிருந்தான். சில நாள்களிலேயே அவனருகில் பாயில் படுப்பதை நிறுத்தி விட்டிருந்தாள். என்ன காரணத்தாலோ அவளைப் பார்க்கவே பிடிக்காமல் போனது அவனுக்கு. காலத்தில் அவளது வியாபாரம் இரவுகளிலும் நீடிக்கத் தொடங்கியது. அவள் வீட்டில் இல்லாத நேரத்தில் மூன்றாம் வீட்டின் அத்தை அடைக்கலம் தருவாள். அத்தை வீட்டில் செண்பகராணி வளர்ந்து வந்தாள். இவன் ஏழாம் வகுப்பில் படிக்கும்போது பொம்பளப்பிள்ளைகள் மூத்திரம் பெய்வதை எட்டிப்பார்த்ததற்காக பிச்சை வாத்தியார் போட்ட போடில் பள்ளிக்குப் போவதை நிறுத்திவிட்டிருந்தான். பிறகான காலத்தில் அவன் ஊர்பராரி ஆகி அலைந்து கொண்டிருந்தான். சில்லறைகள் வாங்குவதிலும் சோற்று விசயத்திலும் தாய்-மகன் சச்சரவுகள் சகஜமாகியிருந்தன. செண்பகராணி தாவணி போட்டு பள்ளிக் கூடத்துக்குப் போன தினம் முதல் அவன் அவளின் ஐம்பதடிச் சுற்று வட்டாரத்தில் வாழத் தொடங்கி னான். மூர்க்கம் அவனது மூலையில் காய்ந்த மரத்தினிடையில் வளரும் புற்றுபோல கரும்பத் தொடங்கியிருந்தது. அவனது மூளை நரம்பின் ஒவ்வொன்றிலும் செண்பகராணியின் உருவம் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை விடியும்போது வீட்டில் பால் மணத்தை உணர்ந்தான். எழுந்து பார்த்தபோது கனகமணி முனங்கியபடி பாயில் படுத்திருந்தாள். அடுப்படியில் செண்பகராணி முழங்கால் வரை பாவாடையைத் தூக்கி இடுப்பில் செருகிக்கொண்டு ஒரு பாத்திரத்தைச் சுரண்டிக் கொண்டிருந்தாள். அவனின் கண்கள் அவளது கெண்டைக் காலாய் மாறிப்போனது. கனகமணி அவனை விளக்குமாறால் வெளுத்துக்கொண்டிருந்தபோது லேசாக அவனுக்கு சொரணை வந்தது. காரியத்தைக் கெடுத்துவிட்டாள். அவன் கையை நீட்டித் துழாவியபோது அவனது கையில் அகப்பட்டது மத்து. ஓர் அடியில் முன்னந்தலையில் இருந்து ரத்தம் பீறிட்டது கனகமணிக்கு. மயக்கமானாள். செண்பகராணியைக் காணவில்லை. ஆங்காரத்தில் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது அவனுக்கு. வீட்டைவிட்டு வெளியேறினான். மலையடிவாரத்தில் இரண்டு நாள்கள் சுற்றிக் கொண்டிருந்தான். கனகமணி அவன் வந்தால் வீட்டில் சேர்க்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்திருந்தாள். மூன்றாம் நாள் இரவு ஊருக்கு வெளியே சாலையோரத்திலிருந்த பாலத் திட்டில் அவன் படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்தவாறு பீடியைப் பற்றவைத்தான். இரண்டு நாளில் அவன் பீடி குடிக்கக் கற்றிருந்தான். ஒவ்வோர் உறிஞ்சலிலும் அவனது அம்மாவின் உயிரை உறிஞ்சுவதுபோல கற்பனை செய்துகொண்டான். அவன் அவளைக் கொல்ல வேண்டும் என்று முடிவுசெய்திருந்தான். அப்போது அவனைக் கடந்து சென்ற வாகனம் சற்றுத் தொலைவு கடந்து நின்றது. பிறகு, பின்னோக்கி வந்து அவனருகில் நின்றது. இரண்டு பேர் இறங்கினார்கள். அதில், ஒருவன் அவனைப் பார்த்து ஏறுடா வண்டியில என்றான். சங்கரன் அவனது வாழ்வில் முதல் முதலில் காக்கி உடை அணிந்தவர்களை மிகமிக அருகில் பார்த்தான். 

82p1.jpg

02

அவர்கள் சங்கரனை சிறையில் அடைத்தார்கள். சைக்கிள்களைத் திருடியதற்காக. சிறையின் அறையில் அடைக்கப்பட்டபோது அவனுக்கு ஒருவிதமான புரியாத குழப்பம் இருந்தாலும் பழக்கமில்லாத, ஒருவகையான பாதுகாப்பு உணர்வை அடைந்தான். கம்பிகளின் பின்னால் போடப்பட்டிருந்த பூட்டை இதற்கு முன்னர் அவன் பார்த்ததே இல்லை. சுவருக்கும் கதவுக்கும் இடையே நீண்ட இரும்புக் கம்பி போட்டுப் பிணைத்திருந்தார்கள். சுவர் இடிந்தாலொழிய கதவு திறக்க வாய்ப்பே இல்லை. சாவி போன்ற ஒரு பொருளை அந்த கதவைத் திறப்பதற்கு அவர்கள் உபயோகப்படுத்தினார்கள். அறை, ஏறக்குறைய சதுரமாய் இருந்தது. அவர்கள் அவனுக்குக் கொடுத்த உடையில் சற்று தளர்வை அடைந்திருந்தான். அவன் நிதானமாக இருப்பதாக நம்பினான். காற்றில் வைக்கோல் மற்றும் கரப்பானின் வாசனைகள் கலந்திருந்தது. சொரசொரப்பான சுவர்கள். கதவின் எதிர்த் திசைச் சுவரில் மேல் பக்கம் ஓர் ஆள் நுழைய முடியாத அளவு சதுரத்தில் ஒரு ஜன்னல் கம்பிகளால் பின்னப்பட்டு ஒளியைச் சல்லடை செய்துகொண்டிருந்தது. அந்தச் சுவர் கிழக்கா, மேற்கா என யூகிக்க முடியவில்லை. அவனுக்கு இடது பக்கம் மூன்றடிச் சுவரின் தடுப்பில் கழிப்புக் கோப்பை பதிக்கப் பட்டிருந்தது. ஈய வாளியும் செம்பும் கவுந்து கிடந்தன. அறையில் அவனைத் தவிர நான்கு பேர் இருந்தார்கள். வலது பக்கம் கதவு மூலையில் ஒருவன் தனியே அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிராக அவர்கள் ஆயுத எழுத்துபோல முக்கோணமாக அமர்ந்திருந்தார்கள். அந்த அறையில் சங்கரனைத் திணித்தது பற்றி அவர்கள் எதுவும் அறியாதவர்கள்போலக் காணப் பட்டார்கள். செய்வதற்கு எதுவும் இல்லாமல் அமர்ந்திருந்தான். நீண்ட நேரத்துக்குப் பிறகு சன்னல் வெளிச்சம் வழியாக அறையின் திசையமைப்பை ஒருவாறாக யூகித்தான். ஜன்னலின் திசை மேற்கு. கதவு கிழக்கு. எழுந்து நின்றான். வலது கைப்பக்கம் வடக்கு. இடது கைப் பக்கம் தெற்கு. கண்களை மூடிக்கொண்டு கையை உயர்த்திப் பிடித்தவாறு ஒரு சுற்று சுற்றினான். மீண்டும் ஒரு முறை. மெதுவாகத் தொடங்கி கரகரவெனச் சுற்றுதலின் வேகத்தை அதிகரித்தான். கண்களுக்குள் செண்பகராணியின் முகமும் அவளது கத்தரிப்பூ வண்ணச் சீட்டித்துணிப் பாவாடையும் பிம்பங்களாக மிதந்தது. சட்டென்று கண்ணைத் திறந்தான். அவனுக்கு மீண்டும் திசைகள் மறந்து போனது. மனம் லேசாகி உடனே பெரும் மலையைக் கட்டி இழுக்கும்படியான பாரத்தை உணர்ந்தான். கைகள் நடுங்கத் தொடங்கியது. அவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தது கேட்காமல் உடல் ஒருவிதமாக உதறத் தொடங்கியது. அவனது மனநிலை சமனிழக்க, மெதுவாக வாயிலிருந்து வார்த்தைகள் 82p4.jpgவெளியேறின. அனைத்தும் அவனது அம்மா கனகமணியைப் பற்றிய வசவுகள். வார்த்தைகள் தன்னிச்சையாக வெளியேற, சூழல் மறந்தான். அவனது கண்களில் வெப்பம் கசிவதாக உணர்ந்தவன் பீதியடைந்து மேலும் உளறத் தொடங்கினான். சிறிது நேரம்தான்; பிடறியில் ஓர் அறை விழுந்தது. பிறகு முதுகில் இரண்டு மிதியும் முடியைக் கொத்தாகப் பிடித்துச் சுவற்றில் ஓர் இடியும் கிடைக்க, அவனது நெற்றியில் தோல் தெறித்து வலது கண்ணை மறைத்து ரத்தம் ஒழுகியது. சங்கரனின் மனநிலை உடனடியாகச் சீரானது. மகனே சும்மா இருக்க மாட்டியா.. என்றான் அவர்களில் ஒருவன். அனிச்சையாக நிமிர்ந்தபோது அவன் முன்னால் நின்றுகொண்டிருந்த மஸ்தான் அலி அபுபக்கர் அல்லது சுருக்கமாக அலியை முதன்முதலில் பார்த்தான் சங்கரன். திட்டியது மட்டும்தான் அவன், அடித்தது அவன் அல்ல என்று சங்கரனுக்கு பின்னால் தெரியவந்தது. ரத்த வாசத்துடன் விடியும் வரை அங்கேயே கிடந்தான். விடியலின் ஏதோவொரு கணத்தில் அலி அவனை எழுப்பினான். “எலே மாப்ள எந்திரிடா...” என எழுப்பி விட்டு ஒரு பீடியைக் கொடுத்தான். கஞ்சா அடைக்கப்பட்ட அந்த பீடியின் இரண்டாவது இழுப்பிலேயே சங்கரனுக்கு அலி கடவுளானான். அடுத்த பதினைந்தாவது நாளில் அவர்களிடம் திட்டும் அடிகளையும் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு ஏவல் புரியும் அணுக்கமானதோர் அடிமையாகி விட்டிருந்தான். அவனுக்குச் சூழல் பிடித்துப் போனது. அலியிடமிருந்து தேவையான அளவில் கஞ்சா கிடைத்தது. சிறைக்குள் கஞ்சா கிடைக்கும் சூட்சுமத்தை அவனும் அறியத் தொடங்கி இருந்தான். அவர்கள் அவனது மன நிலை மற்றும் உடல்வாகைப் பார்த்து அவன் திருடனே இல்லை என்று சுலபமாக முடிவுக்கு வந்திருந்தார்கள். ஒரு நாள் அலி கேட்டான், “ஏண்டா மாப்ள உன்ன இங்க கொண்டு வந்தாய்ங்க?” போலீஸ்காரர்கள் அவனை நீதிமன்றத்தில் ‘தொடர் சைக்கிள் திருடன்’ என நடுவரிடம் அறிமுகம் செய்தார்கள். பழையதும் புதியதுமாக மொத்தமாய் நூற்றிப் பதினேழு சைக்கிள்களை அவர்கள் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தியிருந்தார்கள். ஆச்சர்யமும் துக்கமுமாக அவற்றைப் பார்த்தான் சங்கரன். பல மாதங்களாக பல்வேறு இடங்களில் அவனால் திருடப்பட்டவை என முன்மொழிந்தார்கள். சைக்கிள் திருடுவதில் அவனுக்கு  அபரிதமான திறமை என அவர்களாக ஒப்புக்கொண்டார்கள். அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு கஞ்சா சிகரெட்டுக்காக அவன் திருடியதாக ஒப்புக்கொண்டான். மேலும் அவனது அம்மா கனகமணி அவன் திருடன்தான் என சாட்சி சொல்ல ஆயத்தமாக இருந்தாள்.  “திருட்டுப் பயலுக்குப் பொறந்தது வேற எப்படி இருக்கும் என்றாள். அவளைக் கொன்றே தீர வேண்டும் என சங்கரன் மனதுக்குள் சபதமெடுத்தான். அலி மறுபடியும் கேட்டான், ‘‘ஏண்டா மாப்ள அத்தன சைக்கிளையும் எப்டிறா தூக்குன?” சங்கரன் சொன்னான்: ‘‘அவங்கதான் மாமா சொன்னாங்க நான் திருடிட்டேனு... நானும் ஆமானுட்டேன். ஆனா நெசத்துல எனக்கு சைக்கிள் ஓட்டக்கூடத் தெரியாது...” நான்கு பேரும் மூன்று நாட்களுக்குச் சிரித்துத் திரிந்தார்கள். இதில் சிரிக்க என்ன எழவு இருக்கிறது என சங்கரனுக்கு விளங்கவில்லை. அவன் சைக்கிள் ஓட்டுவதற்கான வாய்ப்பு வாழ்வில் ஏற்பட்டதே இல்லை. உண்மையில் அவனை அவர்கள் ஒப்புக்கொள்ளச் சொன்னபோது அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதை ஞாபகம் கொண்டான். நடுவர் அவனை சைக்கிள் ஓட்டத்தெரியுமா என்று கேட்டுவிடுவாரோ எனக்கூடப் பயந்தான். ஒரு சைக்கிள் ஓட்டியின் முகமும் அவனது முகமும் எவ்விதத்திலும் வித்தியாசப்படவில்லை என அவர்கள் அவனை சிறையில் அடைத்ததிலிருந்து உறுதியானது. அந்த மகிழ்ச்சியான தருணத்தை நினைத்துப்பார்க்கும் போதெல்லாம் அவனுக்குக் குழந்தைப் பருவ ஞாபகமும் செண்பகராணியின் நினைவும் வரும். துயரம் அப்பும். அலி ஒரு சிகரெட்டைத் தருவான். வாங்கிக்கொண்டு அவனை கடவுளின் சாயல் எனச் சொல்லிக் குழறுவான். ஒரு போதையான நேரத்தில் சங்கரன் அலியிடம் சொன்னான், ‘‘மாமா.. நானும் முஸ்லீமுக்கு மாறிக்கிறேன்.” அலியிடம் கேனத்தனமான ஒரு சிரிப்பு வந்தது. அலியின் பிரத்தியேகச் சிரிப்பு அது. மற்றொரு நாளில் சங்கரன் இனி நான் சங்கரன் இல்லை சதக்கத்துல்லா எனத் தன்னைப் பிரகடனப் படுத்திக்கொண்டான். அலி அதேபோல சிரிப்பொன்றுடன் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டான். மாறாக சதக்கத்துல்லா வேணாம்டா முல்லான்னு வெச்சுக்க என்றான் கணேசன். அவனது பெயர் முல்லாவென்று மாறிப்போனது.

03

இரண்டு வாரங்கள் கழித்து கணேசன் விடுதலைசெய்யப்பட்டான். மற்றவர்கள் நெடிய மெளனத்தில் இருந்தார்கள். வெளியில் போய் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை முற்பிறவியிலேயே தெரிந்து கொண்டிருப்பதுபோல இருந்தது அவர்களது தலையசைப்புகளும் வழியனுப்புதலும். சங்கரனிடம் முடிந்தால் அவனது அம்மாவைப் போய்ப் பார்க்கிறேன் என்றான் கணேசன். அவன் ஒன்றும் சொல்லவில்லை. ஒரு கணம் கணேசனும் கனகமணியும் உறவுகொள்வதுபோல ஒரு காட்சி மனதில் தோன்றி மறைந்தது. அவளைக் கொல்லும் சபதம் மேலும் உறுதியாயிற்று அவனுக்கு. நால்வரில் கணேசன் மட்டும் அவனுக்கு அண்ணனாக இருந்தான். அலியும் கணேசனும் தவிர மூன்றாவது நாகலிங்கம், நான்காவது அழகு சுந்தரம்.  அதிகம் பேச்சில்லாத அழகுசுந்தரம்தான் முதல் நாளில் அவனை அடித்தவன். அவன் பேசும்போது திக்கும் என்பதால், அதிகம் பேச மாட்டான். நால்வரில் வயதில் மூத்தவன் நாகலிங்கம். நரைத்த மயிர். மெலிந்த தேகம். சிவந்த கண்கள் மற்றும் தெளிவான மூளைச் சிந்தையோடு இருந்தான். இனிமேலான வாழ்வுத் திட்டங்களில் அவனது அறிவை நம்ப, மற்றவர்கள் முடிவுசெய்திருந்தார்கள். சில நாள்கள் கழித்து, சிறையதிகாரி அமானுல்லா பொறுப்பேற்ற பின் சிறைக்குள் கெட்ட பொருள்களின் நடமாட்டம் தடைபட்டது. பீடிக்கே வழியற்ற நிலையில் கஞ்சாவுக்குத் துப்புரவாக வழியில்லாமல் போனது. மெள்ள மீண்டும் அவனது உடல் நடுக்கமும் வாய் உளறல்களும் கிளம்பத் தொடங்கின. அடிக்கடி கனகமணியைத் திட்டுவதும் சுவற்றில் அறைவதும் அடிவாங்கிச் சரிவதுமாய் அவனது பொழுதுகள் கரையத் தொடங்கின. அடுத்த மூன்று மாதங்களில் மற்ற மூன்று பேரும் வேறுவேறு தேதிகளில் விடுதலை செய்யப் பட்டார்கள். அவனுக்கு இன்னும் நாற்பது நாள்கள் மீதமிருந்தன.

82p2.jpg

04

இரும்புக் கட்டிலில் படித்திருந்த கனகமணியின் மூக்கு நல்ல பாம்பாய் மாறி சங்கரனைப் பார்த்து ஊர்ந்தது. அதன் சீறல் அவனது காதில் யானையின் பிளிறலாய் பாய்ந்தது. சுவரோரம் கிடந்த அம்மிக் கல்லைத் தூக்கி அவளது தலையில் போட்டான். அவளது உடல் காற்றில் கரைந்து சாம்பலாய்ச் சிதறியது. அதே கட்டிலில் செண்பகராணி படுத்திருந்தாள். அவளது தாவணியை மூர்க்கத்தனமாக இழுத்தபோது அவனை எழுப்பி வெளியில் போகச் சொன்னார்கள் சிறைக் காவலர்கள். சங்கரனுக்கு விடுதலை என்பது ஒரு சோர்வைத் தந்தது. நேராகப்போய் கனகமணியைக் கொன்றுவிட்டு மீண்டும் இங்கு வந்துவிட வேண்டும் என்கிற ஒற்றைக் குறிக்கோள் தவிர அவனுக்கு மனதில் வேறெந்த எண்ணமும் இல்லை. சிறையதிகாரி அமானுல்லா அவனை அழைத்தார்: ‘‘சங்கரராமன்… மறுபடியும் எதையாச்சும் செஞ்சு இங்க வந்த கொன்னுருவேன்…” சங்கரன், “சரிங்கைய்யா…” என்றான். “எதுக்கு சரிங்கிற... கொல்றதுக்கா?” என்று சிரித்தபடி,  போகச் சொல்லித் தலையசைத்தார்.  போடிநாயக்கனூர் பஸ் நிலையத்தில் இறங்கும்போது இரவு ஒன்பதாகி இருந்தது. தியேட்டருக்குப்  பின்னால் இருக்கும் ஒயின்ஷாப்பில் நுழைந்து, குவாட்டர் மானிட்டரை வாங்கிக் குடித்துவிட்டு, ஒரு கஞ்சா பொட்டலத்தைச் சிகரெட்டில் ஏற்றி இழுத்தான். சற்று நேரத்தில் மலையளவு தைரியம் பிறந்திருந்தது அவனுக்கு. ‘இன்னைக்கு அவ செத்தா…’ என்றவாறு பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தான்.

ஊருக்குள் இறங்கி வீட்டை நோக்கி நடந்தான். இத்தனை வருடம் புழங்கிய ஊர் புதிதாக இருந்தது. காற்றில் நல்ல குளிர் ஏறியிருந்ததால், மனம் புத்துணர்வுடன் இருப்பதாக உணர்ந்தான். அவனாக ஒரு முறை சிரித்துக்கொண்டான். தெருவில் நுழைந்தவுடன் ஒரு நாய் சற்று முனகலுடன் புரண்டு படுத்தது. வீட்டினருகில் சென்றான். ஒரு தயக்கம் வந்தது. நிதானித்து கதவைத் தட்டினான். நீண்ட நேரம் கழித்து “யாரது இன்னேரத்துல...” என்று கனகமணியின் குரல் ஈனமாகக் கேட்டது. ‘‘நான்தான்…” என்றான். உள்ளே பரபரப்பானது. ‘எவனோ உள்ளே இருக்கிறான். எவனா இருந்தா என்ன... இன்னைக்கு மட்டும்தான அவ உயிரோட இருக்கப் போறா’ என்று நினைத்துக் கொண்டான். நிமிடங்களுக்குப் பிறகு அதே கேனத்தனமான சிரிப்புடன் கதவைத் திறந்தான் அலி. சங்கரனின் கோபமும் வெறியும் நொடியில் அடங்கியது. ஆச்சர்யமும் சந்தோசமுமாக ஓர் ஆசுவாசம் அவனுள் பரவியது. ‘‘அட... மாமா நீதானா?” என்றான் சந்தோசத்துடன். விநோதமான இந்தத் திருப்பத்தால் வாழ்நாள் முழுவதும் சங்கரனிடமிருந்து கனகமணி தப்பித்துக்கொண்டாள். இரண்டு மாதங்களில் நிலை முற்றிலுமாக மாறிப் போனது. அவனது நடுக்கங்கள், சுய புலம்பல்கள் அனைத்தும் மறைந்துவிட்டன. கனகமணியைக் கண்டுகொள்வதே இல்லை. அவளும் அவனுக்கான உணவுகளைத் தயாரிப்பதுடன் விலகிக்கொண்டு ஏதோ ஒரு வகையில் அலியிடம் முற்றிலுமாக தன்னை இணைத்துக்கொண்டாள். அடுத்த நான்காவது மாதத்தில் நாகலிங்கத்தின் தலைமையில் ஒரு கோயில் சிலையைத் திருடப்போகும் திட்டத்தில் அவர்கள் சங்கரனையும் சேர்த்துக்கொண்டார்கள். சிலையைத் திருடி புரோக்கரிடம் சேர்த்தால் கொள்ளைப் பணம். சித்திரையின் மூன்றாம் பிறை இருட்டில் கோயிலுக்குள் நுழைந்தார்கள். காவல்காரன் கிழவன். அவனை லேசாகத் தட்டி அழுக்குத் துணியை வாயில் திணித்து கருங்கல் தூணில் கட்டிப் போட்டார்கள். கிழவர் மிரள மிரள விழித்துக்கொண்டிருந்தார். அவர்களுக்கிடையில் பேசுவதற்குத் தேவை ஏதுவும் இல்லை. கருவறை சின்னப் பூட்டால் பூட்டப்பட்டிருந்தது பார்த்ததும் உள்ளே எதுவும் இல்லை எனத் தெரிந்துபோயிற்று. பூட்டை உடைத்து உறுதிசெய்து கொண்டார்கள். திருட்டு தோல்வியில் முடிந்தாலும் அங்கிருந்த உண்டியலில் சற்று தேறியது. பெரிய அளவில் போட்ட திட்டம் வெறும் சில்லறை எண்ணுவதில் முடிந்திருந்தாலும் தொடர்ந்து அவர்கள் தங்களின் திட்டங்களைச் செயல்படுத்த அந்தத் திருட்டு தோதாக அமைந்தது. அவனது பதற்றமின்மை காரணமாக சங்கரன் அந்தக் குழுவின் நிரந்தர இடத்தைப் பெற்றிருந்தான். வருடத்துக்குள் ஏழு திருட்டுகள் வெற்றிகரமானவை. அவர்கள் பிரபல்யமானார்கள். சங்கரனும் அலியும் தங்கள் பங்குகளைக் கனகமணியுடன் பகிர்ந்துகொண்டார்கள். வாழ்நாள்கள் அவர்கள் பார்வையில் சந்தோசமாக இருந்தது. 

82p3.jpg

05

எப்பொழுதுமான கதைகளில் வரும் அந்த முடிவு நாள் ஒன்றும் வந்தது. போடியிலிருந்து அது தொலைவான கிராமம். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலை ஒட்டிய ஊர். காற்றில் உப்பு தெரிந்தது. இருட்டு ஒருவரைக் காட்டிக் கொடுத்துவிடும். அப்படிப்பட்ட கண்ணுடைய ஓர் இரவு அது. அந்த ஊர் விழித்துக்கொண்டிருப்பது தெரியாமல்,  ஒரு பெரிய வீட்டில் அவர்கள் நுழைந்தார்கள். கணேசன் சுதாரிக்கும் முன்னால் அனைத்தும் விபரீதமாகி விட்டது. அவர்களால் அந்த வீட்டை விட்டுத்தான் வெளியே வர முடிந்தது. விளக்குகள் இருளைத் தின்னத் தொடங்கின. ஒரு சிறு மனிதக் கூட்டம் அவர்களைத் துரத்தியது. அவர்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். பரிச்சயமற்ற கிராமத்தின் சந்துகள் அவர்களை ஏளனம் செய்தன. திசைகள் மறிக்கப்பட்டன. என்ன நடந்தாலும் தனியாகப் போய்விடக்கூடாது என்று நாகலிங்கம் சொல்லியிருந்தான். அந்த முடிவு அவர்கள் மொத்தமாகச் சிக்கிக்கொள்ள உதவியது. ஏறக்குறைய 70 பேர். சிறுவர்களும் பெண்களும்கூட சேர்ந்து அவர்களை வேட்டையாடினர். சில கற்களும் கம்புகளும் அவர்கள் மேல் விழுந்தன. கணேசனுக்கு எங்கிருந்தோ ரத்தம் கசிந்தது. சிறிது நேரத்தில் வட்டம் இறுகி நிமிடங்களில் ஐந்து பேரும் அவர்கள் கைகளில் அடக்கமாகிப்போனார்கள். துளி நேரம் தாமதிக்காமல் ஊர்ச் சந்தியில் விளக்குக் கம்பத்தருகில் இழுத்துவந்து அவர்களின் ஆடைகளைக் கிழித்தெறிந்தார்கள். ஐந்து பேரும் நிர்வாணமாக நின்றார்கள்.  அவர்கள் யாரும் எதையும் தங்களுக்குள் பேசிக்கொள்ளவில்லை. எல்லாம் நியதிப்படி நடப்பதுபோல தொடர்ச்சியாக நிகழ்ந்தது. அழகுசுந்தரம் கூட்டத்தைப் பார்த்து அழுதுகொண்டிருந்தான். அலி உடல் நடுங்கியவாறு தனது கைகள் இரண்டையும் சேர்த்து குறியை மறைத்துக்கொண்டு நின்றிருந்தான். சங்கரன் அவனைப் பார்க்கும்போது அந்த கேனத்தனமான சிரிப்பை அவன் முகம் கொண்டிருந்தாகப் பட்டது. உடல் நடுக்கம் மட்டும் அதிகமாகிக் கொண்டிருந்தது. அவ்வப்போது விக்கல் போன்ற வினோத ஒலி ஒன்றை வெளியேற்றிக் கொண்டிருந்தான். திசையில்லாத திசைகளிலிருந்தும் சிலபல அடிகள் அவர்கள் மேல் விழுந்து கொண்டிருந்ததன. சில குரல்கள் அவர்களைச் சுற்றி நியாயங்களைக் கத்திக்கொண்டிருந்தன. ஒரு பெண் நாகலிங்கத்தின் தலையில் சட்டி ஒன்றைக் கவிழ்த்தாள். அவன் தலை சாணியால் மெழுகப்பட்டது. நான்காவது நிமிடத்தில் அவன் மயங்கி விழுந்தான். “மத்தவங்களுக்கும் மெழுகுங்கடா…” குரல்களில் ஒன்று அதிகாரத்தை அளித்தது. அடிகள் அதிகரித்தன. கூட்டத்தில் சிறுவர் சிறுமிகள் அதிகமாயினர். அவர்களில் சிலர் சிறுகற்களை எறிந்தார்கள். அவர்கள் ஐந்து பேரில் நாகலிங்கத்தைத் தவிர மற்றவர்கள் திமிறிக்கொண்டு ஓட எத்தனித்து, மேலதிக அடிகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள். சங்கரன் தடுமாறி நாகலிங்கத்தின் மீது விழுந்தான். அவனது உடம்பில் உயிர் இல்லை என்று தெரிந்து போனது. 82p4.jpgகலவரமாகிப்போனான். ‘‘மாமா நாகலிங்கம் செத்துட்டான் மாமா...” என்று அலறினான். கூட்டம் சற்று நிதானித்தது. நாலு பேரும் கிடைத்த திசையில் ஓட ஆரம்பித்தார்கள். ‘‘எல்லாத்தையும் போடுங்கடா…’’ கூட்டத்தில் குரல்கள் ஒன்று கூடின. மீண்டும் சில நிமிட அழிச்சாட்டியங்களில் கணேசனும் அழகுசுந்தரமும் அடங்கிப்போனார்கள். கிராமத்தின் விளிம்பில் தெரிந்த இருட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்தான் அலி. அவனைப் பின்தொடரப் பிடிக்காமல் மற்றொரு இருளுக்குள் புகுந்தான் சங்கரன். அவனுக்கு ஓடுவது என்பது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்பது தெளிவாகிப்போனது. ஓடும்போது உடம்பில் பட்ட காயங்களின் வலியை அவனால் உணர முடியாமல் போனது, அதை நினைத்து ஆச்சர்யப்பட்டான். அலி எப்படியும் தப்பித்துவிடுவான் என்று நினைத்தான். அவனை சிலர் இன்னும் துரத்திக் கொண்டிருந்தார்கள். குத்துமதிப்பாக நிலத்தில் மிதித்து ஓடிக்கொண்டிருந்தான். அவனால் தொடர்ந்து ஓட முடியவில்லை. மாட்டிக்கொள்ளப் போகிறோம் என்று பயந்தான். பின்னால் சத்தம் குறைந்திருந்தது. மெள்ள ஓடுவதை நிறுத்தி நடக்கத் தொடங்கினான். நடக்கும்போது அவனது நிர்வாணம் அவனைத் தடுத்தது. அதுவரை அவனது நிர்வாணம் அவனுக்கு தடையாக இல்லை என்று உணர்ந்தபோது விநோதமான குற்றவுணர்ச்சிக்கு ஆளானான். மீண்டும் ஆளரவம் கேட்டது. சங்கரனின் உடல் நடுக்கத்தில் துள்ளியது. இருள் கண்களுக்கு நன்றாகப் பழகிவிட்டிருந்தது. எதிரில் தெரிந்த மரத்தின் அருகில் சென்று அமர்ந்தான். கையில் நீண்ட மட்டை ஒன்று சிக்கியது. எடுத்துக் கையில் வைத்துக்கொண்டான். அவர்கள் அவனை கண்டுகொண்டார்கள். குழுவில் சலசலப்பு அதிகமானது. ஐந்தாறு பேர் அவனை நெருங்க, மரமட்டையுடன் சங்கரனின் எதிர்தாக்குதலை யாரும் எதிர்பார்க்கவில்லை. அடிபட்டவன் அலறலுடன் கீழே சரிந்தான். மற்றவர்கள் பயந்து பின்வாங்கினார்கள். சில நிமிடங்களில் அங்கு யாரும் இல்லாமல் போய்விட்டார்கள். சங்கரன் விழுந்து கிடந்தவனை அசைத்துப் பார்த்தான். பிணம்போலக் கிடந்தான். விழுந்துகிடந்தவனின் வேட்டியை உருவிக் கட்டிக்கொண்டு மெள்ள நடக்கத் தொடங்கினான். எல்லாம் ஒரு மாயமான நிகழ்வு போல த்தோன்றியது. சம்பந்தம் இல்லாமல் சிறை அதிகாரி அமானுல்லாவை நினைத்துக்கொண்டான். ‘‘ஏதாவது செஞ்சிட்டு மறுபடியும் இங்க வந்த கொன்னுபோடுவேன்…” என்று அவர் சொன்னது நினைவுக்கு வந்தது. அவன் சிரித்துக் கொண்டான். அந்தச் சிரிப்பு அலியினுடைய கேனத்தனமான சிரிப்பாகத்தான் இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. ஏனென்றால், அமானுல்லாவால் அவனைக் கொல்லவே முடியாது என்று அவனுக்குத் தெரியும். 

06

புதியதாகச் சிறையில் ஏதுமில்லை அவனுக்கு. உயிரற்ற உடலாகவோ, உயிருள்ள உடலாகவோ அலி இதுவரையில் தென்படவில்லை.  கைகளால் குறி மறைத்து நின்ற அவனின் உருவம் சங்கரனின் ஞாபகத்தில் உறைந்துவிட்டிருந்தது. வருடங்கள் போய்க்கொண்டிருக்கின்றன. இப்போதெல்லாம் பார்வையாளர் வரிசையில் தூக்குவாளியில் சாப்பாட்டுடன் தென்படுகிறாள் கனகமணி. சங்கரன் அந்த உணவில் என்றாவது விஷத்தைக் கலந்துவிட மாட்டாளா என்ற ஏக்கத்துடன் ஒவ்வொரு முறையும் உணவைத் தின்கிறான். சிறைவார்டன்கள் அவனை முல்லா என்றே அழைக்கின்றனர்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் பிறழ்ந்தவன் கிடைத்தால் பொலிஸாருக்கு வசதியாகப் போய்விடுகிறது.சைக்கிள் திருடன் இன்னும் சுதந்திரமாய் வெளியே.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.