• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Kavi arunasalam

வெள்ளை, இளமை, மழலை, நிழலை

Recommended Posts

அன்று திரைப்பட இசையமைப்பாளர்கள் என்றால் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் இருவருமே கண்ணுக்குத் தெரிந்தார்கள்.

 

இவர்கள் இருவரையும் மேவி பாடல்களுக்கு இசை அமைத்த மேதாவிகளும் இருந்தார்கள். பிரபலமான நடிகர்களுக்கோ, பெரிய திரைப்பட நிறுவனங்களுக்கோ அவர்கள் இசையமைக்க முடியாமல் போனதால்  திரையுலகில் இருந்து சீக்கிரமே காணாமல் போனார்கள். அப்படி காணாமல் போன இசையுமைப்பாளர்களில் ஒருவர்தான் வி.குமார்.

 

ஆரம்பகால கே.பாலச்சந்தரனின் திரைப்படங்களுக்கு வி.குமார்தான் இசை அமைத்துக் கொண்டிருந்தார். “ஆடி அடங்கும் வாழ்க்கையடா”, “காதோடுதான் நான் பேசுவேன்”, “விண்ணுக்கு மேலாடை”, “நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்என பல நல்ல பாடல்கள் இவரது இசையில் கே.பாலச்சந்தர் திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கின்றன. திரையுலகில் கே.பாலச்சந்தர் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துக்கொண்டதன் பின்னர் தனது படங்களுக்கு இசை அமைக்க எம்.எஸ்.விஸ்வநாதனை பிடித்துக் கொண்டார். அதன் பிறகு அங்கொன்று இங்கொன்றாக சில திரைப்படங்களுக்கு வி.குமார் இசை அமைத்திருக்கிறார். அப்படி அவர் இசை அமைத்து வெளி வந்த வெகுளிப்பெண் திரைப்படத்தில் இடம்பெற்றஎங்கெல்லாம் வளை ஓசை கேட்கிறதோ அங்கெல்லாம் என் ஆசை பறக்கிறது”  என்ற பாடல் அன்று அடிக்கடி இலங்கை வானொலியில் ஒலித்தது. வணிகரீதியாக வெகுளிப்பெண் படம் வெற்றி பெறாததால் பாடலும் சில காலத்தில் மறைந்து போயிற்று.

 

கரை போட முடியாத புது  வெள்ளை ஆடை

கலைமானும் அறியாத விழி வண்ண ஜாடை!   

பார்வையில் இளமை வார்த்தையில் மழலை 

கூந்தலும் வணங்கும் காலடி நிழலை    

 

வெள்ளை,,விழி, மை, ழலை, நிழலை என்று கவிஞர்,,”  க்களை பாடலின் ஒவ்வொரு வரிகளிலும்  மாற்றி மாற்றி போட்டிருப்பார். ரி.எம்.சவுந்தரராஜன் அவர்களும் சளைக்காமல் ,, பேதங்களை அழகாக உச்சரித்து பாடி அசத்தி இருப்பார்.

 

ஆனால் இந்தப் பாடலை முழுவதுமாக வீடியோவில் பார்க்க  இன்று வாய்ப்பில்லை. இணையத்தில் தேடியதில் இந்த  http://picosong.com/CGCD/  இணைப்பில் mp3இல்தால் பாடலைக் கேட்க முடிகிறது.   

 

- கவி அருணாசலம் 

Edited by Kavi arunasalam

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் கூறிய கடைசி வரிகள் இதில் இல்லை. ஆனால் மாற்றவர்கள் பாடுவதில் இருக்கின்றது.....!  tw_blush:

 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this