Jump to content

யாழ்ப்பாணம் வந்தார் மைத்திரி!! தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்பு


Recommended Posts

  •  
  • யாழ்ப்பாணம் வந்தார் மைத்திரி!!
27337320_1588781947876836_83193935287122

யாழ்ப்பாணம் வந்தார் மைத்திரி!!

தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்பு

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில்  தற்போது நடைபெற்று வருகிறது.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலமையில் நடைபெறும் கூட்டத்தில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டுள்ளார்.

அதில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயும் கலந்து கொண்டுள்ளார்.

27657442_2336449563049293_7734191423505327332686_2336449436382639_4509598421419727545655_2336449489715967_1634296639985727654655_2336449629715953_80448053318751

 
 

27545525_1588782101210154_5728646358659727458888_1588782014543496_5742054252280427657408_1588781941210170_83455939592581

http://newuthayan.com/story/67081.html

Link to comment
Share on other sites

காணாமல்போனோரின் தேடுதல் நடவடிக்கைக்கு எச் சந்தர்ப்பத்திலும் நான் தயார் : யாழில் ஜனாதிபதி

 

காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைகேற்ப தேவையான கலந்துரையாடல், தேடுதல் நடவடிக்கைகளுக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

maithri-jaffna.jpg

யாழ். மாநகர சபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற இம்மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி இங்கு மேலும்  உரையாற்றுகையில்,

1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ள காங்கேசன்துறையிலிருந்து பருதித்துறை வரையிலான ஏ பீ 21 வீதியை மக்களுக்காக திறந்து வைக்கவுள்ளேன்.

இவ்வீதியை திறந்து வைப்பதன் மூலம் மக்களுக்கு சுமார் 50 கிலோமீற்றர் பயணத்தூரம் குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், எவ்வித பேதங்களுமின்றி யாழ் மக்களுக்கு அபிவிருத்தியின் நன்மைகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி என்றவகையில் தான் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.

நாட்டில் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்காக செய்யமுடியுமான அனைத்து அர்ப்பணிப்புக்களையும் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

வடக்கிலும் தெற்கிலும் உள்ள அனைத்து மக்களும் இணைந்து தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தது சுதந்திர ஜனநாயக சமூகமொன்றை கட்டியெழுப்பும் எதிர்பார்ப்புடனேயாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு கடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் தான் பல்வேறு முக்கிய பணிகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்காக காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தற்போது சுமார் 75 வீதம் நிறைவுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய காணிகளையும் விடுவிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் நீண்டகாலமாக மக்கள் குரல் எழுப்பி வருவது தொடர்பாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இது தொடர்பில் நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாக தெரிவித்தார். 

காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன்பேணுவதற்காக எடுக்க முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுடன், அவர்களின் கோரிக்கைகேற்ப தேவையான கலந்துரையாடல், தேடுதல் நடவடிக்கைகளுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ். மாநகர சபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற இம்மக்கள் சந்திப்பில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்துகொண்டதுடன் அம்மக்கள் ஜனாதிபதியை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

வட மாகாண ஆளநர் ரெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு போட்டியிடும் அபேட்சகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

http://www.virakesari.lk/article/30301

காணமல் போனோர் எவரும் இல்லை – மைத்திரி யாழில் கைவிரிப்பு

kili-missing1.jpg?resize=800%2C558
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணமல் போனோர் எவரும் மறைத்து வைக்கப்படவில்லை என பொறுப்புடன் கூறுகின்றேன் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா யாழில் தெரிவித்துள்ளார். யாழில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று யாழ். மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும்தெரிவிக்கையில் ,

வடக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் அவர்களின் பெற்றோர்கள் என்னை சந்தித்து பேசினார்கள். அதன் போது காணாமல் போனவர்கள் இந்த நாட்டில் ஒழித்து வைக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள். இராணுவ முகாம்களில் பொலிஸ் நிலையங்களில் அதேபோல காடுகளில் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தார்கள். ஜனாதிபதி எனும் வகையில் அது தொடர்பில் தெளிவாக தேடி பார்த்தேன்.

அவர்கள் சொன்னது போல காணாமல் போன எவரும் அவ்வாறு மறைத்து வைக்கப்படவில்லை என்பதனை கூறுகின்றேன். அந்த பெற்றோர்களுக்கு நிதி உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளேன். காணமல் போனார் என்பது வடக்கில் மாத்திரம் இல்லை. தெற்கிலும் சிங்கள முஸ்லீம் என பலர் காணாமல் போயுள்ளனர். எனவே அரசாங்கம் எனும் வகையில் என்னால் செய்ய கூடியதனை செய்வேன். எனக்கு ஒழிப்பதற்கு மறைப்பதற்கு எதுவும் இல்லை. நான் பகிரங்கமாக எது என்றாலும் பேசுவேன்.என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/65431/

Link to comment
Share on other sites

27 வருடங்களாக மூடப்பட்டிருந்த காங்கேசன்துறை -பருத்தித்துறை வீதி திறக்கப்படும் : யாழில் ஜனாதிபதி

 

 
 

27 வருடங்களாக மூடப்பட்டிருந்த காங்கேசன்துறை -பருத்தித்துறை வீதி திறக்கப்படும் : யாழில் ஜனாதிபதி

1990ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ள காங்கேசன்துறையிலிருந்து பருதித்துறை வரையிலான ஏ பீ 21 வீதியை மக்களுக்காக இன்று திறந்து வைப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இவ்வீதியை திறந்து வைப்பதன் மூலம் மக்களுக்கு சுமார் 50 கிலோமீட்டர் பயணத்தூரம் குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி எவ்வித பேதங்களுமின்றி யாழ் மக்களுக்கு அபிவிருத்தியின் நன்மைகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி என்றவகையில் தான் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் (05) இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதற்காக செய்யமுடியுமான அனைத்து அர்ப்பணிப்புக்களையும் மேற்கொள்வதாக தெரிவித்தார்.27459251_10159816664030567_5162156476314610135_n
வடக்கிலும் தெற்கிலும் உள்ள அனைத்து மக்களும் இணைந்து தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தது சுதந்திர ஜனநாயக சமூகமொன்றை கட்டியெழுப்பும் எதிர்பார்ப்புடனேயாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு கடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் தான் பல்வேறு முக்கிய பணிகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்காக காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தற்போது சுமார் 75வீதம் நிறைவுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய காணிகளையும் விடுவிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் நீண்டகாலமாக மக்கள் குரல் எழுப்பி வருவது தொடர்பாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இது தொடர்பில் நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாக தெரிவித்தார். காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன்பேணுவதற்காக எடுக்க முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுடன், அவர்களின் கோரிக்கைகேற்ப தேவையான கலந்துரையாடல், தேடுதல் நடவடிக்கைகளுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
யாழ் மாநகர சபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற இம்மக்கள் சந்திப்பில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்துகொண்டதுடன் அம்மக்கள் ஜனாதிபதி அவர்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
வட மாகாண ஆளநர் ரெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு போட்டியிடும் அபேட்சகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேநேரம் இன்று முற்பகல் வவுனியா பிரதேசத்தில். இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார். இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் வவுனியா மாவட்ட அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்தவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் சந்திப்பு வவுனியா யங் ஸ்டார் விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இனம், மதம் என்ற பேதமின்றி மாவட்டத்திலுள்ள மக்கள் பெரும் எண்ணிக்கையாக இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் மக்களுக்கு சேவை செய்வதில் ஒருபோதும் தான் கட்சி, இனம், சமயம், நிறம் என்ற வேறுபாடுகளை கவனத்திற்கொள்வதில்லை என்று தெரிவித்தார்.
வவுனியா மக்களுக்கு ஒரே ஒரு அரசியல் கட்சியே சேவை செய்துள்ளதாக குறிப்பிட்டு மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரம் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், வவுனியா உள்ளிட்ட வடக்கின் அபிவிருத்திக்கு ஜனாதிபதி செயலணியை தாபித்து, அதில் அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மக்கள் பிரதிநிதிகளை நியமித்து, கட்சி பேதமின்றி அனைத்து மக்களுக்கும் சமமான அபிவிருத்தியை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை தான் நடைமுறைப்படுத்தியதாக தெரிவித்தார்.
அபிவிருத்தி என்ற போர்வையில் அரசியல் ரீதியாக மக்களை வேறுபடுத்த வேண்டாம் என வடக்கிலும் தெற்கிலுமுள்ள அனைத்து அரசியல்வாதிகளிடமும் தான் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். -(3)27744767_559212821106351_1545743369_o

http://www.samakalam.com/செய்திகள்/27-வருடங்களாக-மூடப்பட்டிர/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கூட்டம் பருத்தி துறை வீதி விடுவிக்கப்படதில் மகிழ்ச்சி 

Link to comment
Share on other sites

மஹிந்த ஆட்சியில் பத்திரிகையாளர்கள் நடுவீதியில் சுடப்பட்டார்கள் – மைத்திரி :

maithri.jpg?resize=600%2C499

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மஹிந்த ஆட்சி காலத்தில் உண்மையை எழுதிய பத்திரிகையாளர்கள் நடுவீதியில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்  என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார்.  யாழில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று யாழ். மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

 
மேலும்தெரிவிக்கையில்.
 
நான் ஜனாதிபதியான பின்னர் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளேன். இந்த மூன்றாண்டில் காணமல் போனவர்கள் என யாரும் இல்லை.  நாட்டில் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் மஹிந்த ஆட்சி காலத்தில் இந்த நாட்டில் வடக்கு தெற்கு என எல்லா இடங்களிலும் காணாமல் போதல் அதிகரித்து காணப்பட்டது.
 
அதேபோல பத்திரிகைகளில் உண்மையை எழுதியவர்களை நடு வீதியில் சுட்டு படுகொலை செய்தார்கள். பத்திரிகையாளர்கள் இங்கே வாழ முடியாது என நாட்டை விட்டு வெளியேறினார்கள். முழு நாடுகளும் எங்கள் மீது கோபப்பட்டன. நாங்கள் தனிமை ஆக்கப்பட்டோம்.
 
நான் ஜனாதிபதியான பின்னர் உலகம் முழுவதும் சென்று நாடுகளின் தலைவர்களை சந்தித்தேன். அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரை சந்தித்தேன். அவரிடம் இந்த நாட்டில் மனித உரிமைகள் பேணப்பட வேண்டும். சுதந்திரமாக வாழ வேண்டும் அதற்கு உங்கள் ஒத்தாசைகள் தேவை என கேட்டேன்.
 
இன்று எமது நாட்டை உலக நாடுகள் பெருமையாக பார்க்கின்றன. இந்த மூன்று வருடங்களில் காணாமல் போனோர் என யாரும் இல்லை அரசியல் கொலை இடம்பெறவில்லை. யாரும் நாட்டை விட்டு வெளியேறவில்லை. என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/65442/

மக்கள் பணத்தை கையாடல் செய்தவர்கள் பாகுபாடின்றி தண்டிக்கபடுவார்கள் :

 

மக்கள் பணத்தை கையாடல் செய்த அனைவரும் தண்டிக்கபடுவார்கள்.  களவெடுத்தவர்கள் எனது கட்சியா , சொந்தமா என நான் பார்க்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார்.  யாழில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று யாழ். மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

 
மேலும்தெரிவிக்கையில்,
 
கடந்த ஆட்சி காலத்தில் எவ்வளவு மக்கள் பணம் கையாட பட்டது என்பது உங்களுக்கு தெரியும் அது தொடர்பில் விசாரணைகளை செய்வதற்கு ஆணைக்குழுக்களை நியமித்து உள்ளோம்.  மத்திய வங்கி கொள்ளை தொடர்பில் விசாரணை செய்த ஆணைக்குழு எமது அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கும் அதில் தொடர்பு உண்டு என கூறப்பட்டு உள்ளது.
எனக்கு முன்னைய அரசாங்கம்,  எனது அரசாங்கம் என எந்த வேறுபாடும் இல்லை களவெடுத்தவர்கள் தண்டிக்க படவேண்டும். களவெடுத்தவர்கள் எனது கட்சியா , சொந்தமா என நான் பார்க்க மாட்டேன்.
 
ஸ்ரீலங்கன் , மிஹின் லங்கா  விமான சேவையில் கோடிக்கணக்கில் கையாடல் செய்துள்ளார்கள். அந்த களவு தொடர்பில் விசாரணை செய்ய புதிய ஆணைக்குழுவை நியமித்து உள்ளேன். அதில் இருந்து யார் கள்வர்கள் என அடையாளம் காண முடியும்.  யார் தவறு செய்தாலும் அவர்கள் சட்டத்தால் தண்டிக்க படுவார்கள். நங்கள் ஒன்று பட்டு குடும்பமாக செயற்படுவோம். எமது நாட்டை கட்டி எழுப்புவோம் என மேலும் தெரிவித்தார்.

 

 

http://globaltamilnews.net/2018/65450/

ஜனாதிபதி மைத்திரியின் கனவு

 

அரசியலுக்காக மக்களை பிரிக்க வேண்டாம். நாங்கள் சமாதானமான சமூகமாக இந்த நாட்டில் வாழ வேண்டும்.  என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார்.  யாழில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று யாழ். மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

 
மேலும்தெரிவிக்கையில்
 
எனக்கு ஒரு கனவு உண்டு அதனை நனவாக்கக எனக்கு உதவுங்கள். அது என்னவெனில் இந்த நாட்டில் வாழும் தமிழ் சிங்கள முஸ்லீம் பறங்கியர் என அனைத்து சமூகங்களும் ஒன்றாக சகோதரர்களாக கைகோர்த்து பயம் சந்தேகம் இல்லாமல் வாழ வேண்டும் அதுவே என் கனவு.
 
எனவே வடக்கு கிழக்கு தலைவர்களிடம் கோருகிறேன். உங்கள் அரசியலுக்காக மக்களை பிரிக்க வேண்டாம். நாங்கள் சமாதனமான சமூகமாக இந்த நாட்டில் வாழ வேண்டும்.
 
எனக்கு எப்போதும் உங்களுடன் நெருக்கமாக இருந்து பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம். அது சிலருக்கு பிடிக்க வில்லை. நான் ஜனாதிபதி என உங்களுக்கு சேவையாற்ற விரும்பிகின்றேன். அதற்கு உங்களுக்கும் எனக்கும் ஒரு பாலம் அமைக்க ப்பட வேண்டும். அதனை பெப்ரவரி 10ஆம் திகதி அமைத்து தாருங்கள்.
 
தேர்தலில் வென்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர்கள் தனியே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவாளர்களுக்கு மட்டும் சேவையாற்ற கூடாது. அனைத்து மக்களுக்கும் தமது சேவைகளை ஆற்ற வேண்டும்.  வாக்குகளை மக்கள் தந்தாலும் தரா விட்டாலும் அனைவருக்கும் சேவையாற்ற வேண்டும். அது தான் சமவுரிமை. சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமைகளை எமது மதங்கள் சொல்ல தந்துள்ளன. அதன் பிரகாரம் நடவுங்கள்.
 
நாங்கள் நன்றாக சேவை செய்தால் இறைவனின் ஆசி எமக்கு கிடைக்கும். அரசியல் செய்யும் போது களவாட கூடாது. மக்களின் பணத்தை களவு செய்ய கூடாது. ஏழை மக்களுக்கு சேவை செய்ய ஒதுக்கப்பட்ட பணத்தை கடந்த காலங்களில் சில அரசியல் வாதிகள் கையாடல் செய்துள்ளனர். அவ்வாறு செய்ய கூடாது என மேலும் தெரிவித்தார்

http://globaltamilnews.net/2018/65454/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சுட்டு கொன்றார்

மைதிரி வெட்டி கொல்லுகிறார்

ஆக மொத்தம் இரண்டுமே கொலை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:

எனவே வடக்கு கிழக்கு தலைவர்களிடம் கோருகிறேன். உங்கள் அரசியலுக்காக மக்களை பிரிக்க வேண்டாம். நாங்கள் சமாதனமான சமூகமாக இந்த நாட்டில் வாழ வேண்டும்.

அட கோதாரி மீண்டும் தமிழ் அரசியல் வாதிகளில் பிழை.....சிங்கள அரசியல்வாதிகள் மட்டும் தான் பிரிவினைகதைக்காமல் பிரிவினைக்கு மக்களையும்  இளைஞர்களையும் தூண்டலாம்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.