• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
poet

வெண்ணிலவே எரிக்காதே - வ.ஐ.ச.ஜெயபாலன்

Recommended Posts

நீயேன் எரித்தாய் மீனாட்ச்சி, உன் நிழலில் வாழும் மதுரையடி,
.
ஆடுகளம் திரைப்படத்திற்காக வெற்றிமாறனின் கேட்டுக்கொண்டதால் ஜி.வி.பிரகாஸ் இசையில் சினிமா பாடலொன்று எழுதினேன். 

.

2010 ஆரம்பமென நினைவு ஒருநாள் வெற்றிமாறனோடு ஜி.வி.பிரகாசின் கலையகம் சென்றபோது ஒரு சிறுவன் ’கீபோட்டை’  அற்புதமாக இசைத்துக்கொண்டிருந்தான். நான் அவரை ஜி.வி.பிரகாசின் மகனாக்கும் என நினைத்தேன்.  இவர்தான் ஜிவி.பிரகாஸ் என வெற்றிமாறன் அறிமுகப் படுத்தியபோது வியப்பாக இருந்தது. அவர்  இனிமையான மனிதர்.   என் வெண் நிலவே எரிக்காதேஎன்ற பாடலை அவரது இசைக்கு எழுதினேன். இசைந்த சொற்களை இசைக்காக மாற்ற நேர்ந்தபோதெல்லாம் மனசு வலித்தது. அதனால் பின்னர் பாடல் எழுதுவதை மறந்துவிட்டேன். இப்ப மீண்டும் எழுதும்படி சொல்கிறார்கள்.
.

பாடல்

.

என் வெண்ணிலவே எரிக்காதே

என் கனவுகளை சிதைக்காதே.

உன்னில் படர்ந்த என்னுயிரை

மண்ணில் ஏனோ வீசிவிட்டாய்.

.

பனியில் இலையற்ற தனி மரம் நான்

பாலையில் துடித்திடும் சிறு புழுநான்.

காதல் தேவதை போல்வந்து

கழப்பலி கேட்பதேன் மோகினியே

நீயேன் எரித்தாய் மீனாட்ச்சி

உன் நிழலில் வாழும் மதுரையடி

மழையா கனலா நீ

.

கள்ளிப்பாலை ஊற்றிவிட்டு

வெள்ளி நிலவாய் போனவளே

என்னில் வளர்த்த பொற்சிறகு

ஒடிந்திட நடந்திடும் கொடும் புயலே.

அழகரைத் தொட்டதால் வைகைநதி

அலைகடல் சேரா மதுரையடி.

என் விடிவா முடிவா நீ….

.

https://www.saavn.com/s/artist/v.i.s.-jayapalan-songs/GsaE23yseM0_

 

.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

கவிஞர், இந்த பாடல் வெளிவந்துவிட்டதா அல்லது இனித்தான் வெளிவரப்போகின்றதா?

Edited by கலைஞன்
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இது ஆடுகள திரை பாடல். 2010ல் வெளிவந்தது

 

Share this post


Link to post
Share on other sites

ஐயா, கிடைக்கும் சந்தர்ப்பங்களை மறுக்காமல் எழுதுங்கள்.... ஒரு கவிஞனோ கலைஞனோ எப்போதும் சமூகத்தில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பேசுபொருளாக இருக்கவேண்டும் அதுதான் அவரை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.....!  tw_blush:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this