Jump to content

தை மாதம் முழுவதும் பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு தமிழர்களின் தாய் மொழியாம் தமிழ், பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் ஆகியவற்றை பூண்டோடு அழித்திட உதயமாகியுள்ள நாசகார கும்பல்!!!


Recommended Posts

தை மாதம் முழுவதும் பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு தமிழர்களின்
தாய் மொழியாம் தமிழ், பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் ஆகியவற்றை பூண்டோடு அழித்திட உதயமாகியுள்ள நாசகார கும்பல்!!!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஆட்களுக்கு, உணர்வு பூர்வமான   பண்டிகைகள் எல்லாம்... பணம் சம்பாதிக்கும் இலகுவான வழி என்றாகி விட்டது.  

கிறிஸ்தவர்களுக்கு....  டிசம்பர் 24, 25, 26  தான், நத்தார் பண்டிகை.
அதற்கு.. மேல் அவர்கள் அதனை, கொண்டாட மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nunavilan said:

தை மாதம் முழுவதும் பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு தமிழர்களின்
தாய் மொழியாம் தமிழ், பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் ஆகியவற்றை பூண்டோடு அழித்திட உதயமாகியுள்ள நாசகார கும்பல்!!!

 

 

பிரச்சனை சரி பிழைக்கு அப்பால் நியாயம் கதைக்க வரும் போது கொஞ்சம் கெளரவமாக கதைத்தால் நல்லது.

Link to comment
Share on other sites

10 hours ago, ஈழப்பிரியன் said:

பிரச்சனை சரி பிழைக்கு அப்பால் நியாயம் கதைக்க வரும் போது கொஞ்சம் கெளரவமாக கதைத்தால் நல்லது.

நான் இவரது பிரசங்கத்தை கேட்டுக்கொண்டு இருந்தேன் நாய் பூனை சொல்லவெளிக்கிட்டதும் நிறுத்திவிட்டேன்.

தமிழர் திருநாள் தைப்பொங்கல் என்று சொல்கின்றார்கள். இதற்குள் தைப்பூசம் எப்படி நுழைகின்றது? தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்தரம் இவை எல்லாம் தமிழர் வாழ்வியலுக்குள் அடங்குகின்றனவா?

பிள்ளையை பேரப்பிள்ளையை ஒழுங்காய் வளர்த்தால் அவை தாயையோ தகப்பனையோ பேரன் பேத்தியையோ நையாண்டி செய்யமாட்டுதுகள். பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் நையாண்டி செய்துபோட்டார்களாம் எனவே இவர் தைப்பொங்கல் கொண்டாடியவர்களை நாயே பேயே என்று திட்டி தீர்ப்பாராம். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லமுன்னர் உங்கள் வீட்டில் பிள்ளைகளை முதலில் ஒழுங்காய் வளருங்கள். 

Link to comment
Share on other sites

தாயகததை பிரிந்து என்னுமொரு தேசத்தில் குடியேறி வழ்பவர்கள் கலச்சரம் பண்பாடு மொழி என எதையும் ஒரு குறிப்பிட்ட காலத்தை கடந்து தக்கவைப்பது சாத்தியமில்லை. ஒரு இனமாக அடயாளப்படுத்தியவர்கள் இன்று ஊர்ச்சங்கங்களாக பல்கிப் பெருகி நாளை தெருச்சங்கங்களாக என்னும் சிதைந்து அடுத்த தலைமுறையுடன் இவைகள் எல்லாம் இருந்த சுவடுகள் இல்லாமல் காணாமல் போய்விடும். குடியேறிய இடங்களில் இவற்றை தக்கவைப்பதானால் பின்புலத்தில் தாயகம் தமிழகத்தின் நிகழ்வுகள் பண்பாடுகளுடன் ஐக்கியப்பட்டு செல்வது அவசியம். அந்த அவசியத்தை சுயநல  வியாபார நோக்கத்திற்காக சிதைக்கின்றார்கள். இது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை, எரியிறவீட்டில் புடுங்குவது வரை லாபம் என்பதே நிலைப்பாடு, அது தேசீயமானாலும் சரி மாவீரர் தினமானமாலும் சரி கோயில் பொங்கல் எந்த நிகழ்வானாலும் சரி.. எதைவதத்தும் நாலு காசுபார்த்தல் அல்லது அடயாளம் தேடுதல் அதைக் கடந்து சிந்திக்கும் நிலையில் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திட்டிய தவறை தவிர்த்துப்பார்த்தால், இந்த ஐயா கூறுவதில் நியாயம் இருக்கிறதுதானே..?

ஒற்றுமையாக ஒரு இணைப்பில் சேர்ந்து சாதிப்போமென என வேண்டுவது தவறாகுமா..?
 
தைப் பொங்கலை குறிப்பிட்ட நாளில் கொண்டாடாமல் நினைத்த நாட்களில் கொண்டாடுவது சரியானதல்ல.

பிறந்தநாள், நினைவு தினம், தீபாவளி போன்றவற்றை இப்படி கண்ட நாட்களில் யாரும் கொண்டாடினால் கேலிப் பொருளாகிவிடுவார்கள்..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, சண்டமாருதன் said:

.... அந்த அவசியத்தை சுயநல  வியாபார நோக்கத்திற்காக சிதைக்கின்றார்கள். இது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை, எரியிறவீட்டில் புடுங்குவது வரை லாபம் என்பதே நிலைப்பாடு, அது தேசீயமானாலும் சரி மாவீரர் தினமானமாலும் சரி கோயில் பொங்கல் எந்த நிகழ்வானாலும் சரி.. எதைவதத்தும் நாலு காசுபார்த்தல் அல்லது அடயாளம் தேடுதல் அதைக் கடந்து சிந்திக்கும் நிலையில் இல்லை. 

இந்த வரிகளை வாசித்துவிட்டு மேலேயுள்ள காணொளியை பார்த்தவுடன், நான் கூட 'நம்ம யாழ் 'சண்டமாருதன்' டொரெண்டோவில் காரில் அமர்ந்து பேசுகிறாரோ..?' என சற்றே அசந்துவிட்டேன்.. vil-heureux.gif  Such a matching sync!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.