• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
யாழிணையம்

அறிவித்தல்: யாழ் இணையம் 20ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்

Recommended Posts

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,


எதிர்வரும் 30.03.2018 அன்று யாழ் இணையம் தனது 20ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.

யாழ் இணையம் 20 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

எனினும் இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 20ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 20 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் இரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

விதிமுறைகள்:

 1. யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
 2. ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
 3. கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு  உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
 4. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
 5. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
 6. ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
 7. ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.

"நாமார்க்கும் குடியல்லோம்"

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

 • Like 8
 • Thanks 4

Share this post


Link to post
Share on other sites

யாழ். களத்துக்கு.... 20 வயசு.:love:
 நம்ப முடியாத, வேகமான வளர்ச்சி.

எனக்கும்.... எழு,த வேண்டும் போல்....  உள்ளது.
இரண்டு மாத, இடைவெளி உள்ளதால்... தலைப்பிற்கு,  "பஞ்சம்"   இருக்காது.:)

 • Like 3

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, தமிழ் சிறி said:

யாழ். களத்துக்கு.... 20 வயசு.:love:
 நம்ப முடியாத, வேகமான வளர்ச்சி.

எனக்கும்.... எழு,த வேண்டும் போல்....  உள்ளது.
இரண்டு மாத, இடைவெளி உள்ளதால்... தலைப்பிற்கு,  "பஞ்சம்"   இருக்காது.:)

என்ன கசமுசா எழுதினாலும் நாங்க வாசிப்பம் tw_blush:

Share this post


Link to post
Share on other sites

ஒரு வருடம் வேகமாக ஓடிவிட்டது!

இந்தமுறை சொந்தமாக எழுதமுடியுமா தெரியவில்லை. ஆனால் வாசிக்க ரெடி😀

Share this post


Link to post
Share on other sites

கொஞ்சம் முயற்சித்து பார்க்கத்தான் இருக்கு.....!

குறைந்தபட்சம்  கவிதையாவது கொட்டிட வேண்டும்....!  tw_blush:

எங்கு கொட்டுவது ப்ளீஸ்.....!  tw_blush:

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்,

யாழ் களம் அகவை 20 சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பகுதி திறக்கப்பட்டுள்ளது.

https://www.yarl.com/forum3/forum/205-யாழ்-20-அகவை-சுய-ஆக்கங்கள்/

கள உறுப்பினர்கள் சுய ஆக்கங்களை இணைத்து அகவை 20 ஐ சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.

நன்றி

 

Share this post


Link to post
Share on other sites

xzsGpjOs3odYPX_sx8hiaBM25jAMZs_6jXqqzhGg

 

இம்முறை நான் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்துவிட்டேனே....

 

 • Like 4

Share this post


Link to post
Share on other sites

சிறப்புப் பகுதியில் யாழ் கள உறவுகளால் இதுவரை பதியப்பட்ட 8 ஆக்கங்களில் 5 ஆக்கங்கள் பெண் உறுப்பினர்களால் பதியப்பட்டதில் யாழுக்கும் பெருமை.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்,

இதுவரை "யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

நன்றி.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this