Jump to content

யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் விளையாட்டு நகரம்…

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

மண்டை தீவில் சர்வதேச விமான நிலையம் ஒன்றை அமைக்க உத்தேசம் இருப்பதாக எங்கோ படித்த ஞாபகம் உள்ளது..
இந்த விளையாடு மைதானம் அமையாவிட்டாலும் விமான நிலையம் அமைய அதற்கு வாய்ப்புள்ளதா..?

12 minutes ago, புங்கையூரன் said:

மண்டை தீவினர மொத்த நிலப்பரப்பே...மூன்று சதுர மைல்களுக்குள் தான்!

அதுக்குள்ளே..சர்வதேச விமானநிலையம்...விளையாட்டு மைதானம் எண்டு எல்லாத்தையும் எங்கை வைக்கிறது?

Bildergebnis für runway in sea

புங்கை... மண்டை தீவை சுற்றியுள்ள கடல் அதிக ஆழம் இல்லாதது.
விமான ஓடுதளத்தை... கடலுக்குள் கட்டி விட்டு, சர்வதேச  விமான நிலையத்தை.... மண்டை தீவில் அமைக்கலாம் தானே... 
பலாலியில் சர்வதே விமான நிலையம் வருவதை விட, மண்டைதீவில் சர்வதே விமான நிலையம் வந்தால்... அடிக்கடி ஊருக்கு போய் வரலாம். :)
இதை... ராஜவன்னியனிடம் சொல்லி, இந்தியாவின்  காதுக்குள் போட்டு விட வேணும். :grin:

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 28/01/2018 at 5:06 AM, நவீனன் said:

ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதி, tw_blush:திடல் உள்ளிட்ட இடங்கள் இதற்காக முன்மொழியப்பட்டன.

உது நான் அரைக்காற்சட்டை போட்டுக்கொண்டு கிரிக்கட் விளையாடும் பொழுது கேள்விபட்டமாதிரி இருக்கு....எதோ எங்கன்ட காலத்தில் அமைத்தால் ,புலம்பெயர்ந்தவர்கள் தங்களது வாரிசுளை கூட்டிசென்று தாயக மக்களுக்கு கலர்காட்டலாம்....tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மைதானத்திற்குரிய planning approval கூட தமிழர் வசம்( யாழ் மாநகர சபை) இல்லை,

UDA தான் அதனை கூட கையாளப் போகிறது.

இதனை முன்நின்று செயற்படுத்துபவர்கள் 50% ற்கு குறையாமல் அடித்து விடுவார்கள், கட்டுமானம் தெற்கிற்கு கொடுக்கப்படும், பராமரிப்பு ஒப்பந்தமும் தெற்கிற்கே, தெற்கு வாசிகளின் குடியேற்றம் என்று முழுவதும் தென் சிறீலங்காவிற்கே.

பிறங்கையை வழிக்க கூட தமிழருக்கு சந்தர்ப்பம் அமையுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, MEERA said:
13 minutes ago, MEERA said:

பிறங்கையை வழிக்க கூட தமிழருக்கு சந்தர்ப்பம் அமையுமா?

அபிவிருத்தி...அபிவிருத்தி...அபிவிருத்தி.....tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für runway in sea

புங்கை... மண்டை தீவை சுற்றியுள்ள கடல் அதிக ஆழம் இல்லாதது.
விமான ஓடுதளத்தை... கடலுக்குள் கட்டி விட்டு, சர்வதேச  விமான நிலையத்தை.... மண்டை தீவில் அமைக்கலாம் தானே... 
பலாலியில் சர்வதே விமான நிலையம் வருவதை விட, மண்டைதீவில் சர்வதே விமான நிலையம் வந்தால்... அடிக்கடி ஊருக்கு போய் வரலாம். :)
இதை... ராஜவன்னியனிடம் சொல்லி, இந்தியாவின்  காதுக்குள் போட்டு விட வேணும். :grin:

பிரச்சனயில்லைப் போல் தான் இருக்கு!

பண்ணைப் பாலத்தை ஓடு பாதை ஆக்கி விட்டால் போச்சுது

செலவும் மிசசம்!

Link to comment
Share on other sites

இதுவும் புரியாவிட்டால் - நானும் கொஞ்சம் எழுதுகின்றேனே 

இப்படியான முதலீடு + புலம்பெயர்ந்தவர்களின் மீள் வருகை பற்றி ஒரு பொருளாதாரரீதியில்  மக்களின் செழிப்பை பற்றி எ ஒரு கட்டுரையாக எழுத ஆரம்பித்திருந்தேன். பாதியில்   நிற்குது.

இந்த ஸ்டேடியம் பற்றி கொஞ்சம் பார்ப்பமே.

எவனோ கட்டுகின்றான் - ஓகே

எமது மக்களும் அந்த கட்டுமான பணியில் வேலை பார்த்து நாலு காசு சம்பாதிப்பார்கள் / பாவம் ஏழைகள் - நமக்கென்ன கவலை

சரி இந்த ஸ்டேடியம் கட்டி முடிந்து ஒரு சர்வதேச போட்டி நடைபெறுகின்றது என்று வைப்போமே. Windsor Park (Dominica) ஸ்டேடியம்தான் சர்வதேச  கிரிக்கெட் சபையின் அங்கீகாரம் பெற்ற மிகச் சிறிய ஸ்டேடியம் - 12 000 இருக்கைகள். அதேபோல இங்கும் 12 000 இருக்கைகள் என்று வைப்போமே.

இந்த போட்டியை பார்க்க வரும் 12 000 பேரில் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் 2000,  மிகுதி 10000 வெளிநாட்டவர் + வெளி மாகாணத்தில் இருந்து     வந்தவர்கள் என்றும் வைத்துக் கொள்வோம். இவர்கள் எங்கு தங்குவார்கள். யாழ்ப்பணத்தில் உள்ள ஹோட்டல்களில் அனைத்தும் தமிழருடையதுதான் + வேலை செய்பவர்களும் தமிழர்கள்தான். எங்காவது ஒரு சிங்களவரும் இருக்கலாம் - அது தென் இலங்கை பயணிகளை கவர. அதுவும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே. ஆனால்  Jet Wing யாருடையது என்பது  என்பது எனக்கு தெரியாது.

இங்கிருந்தே ஆரம்பிப்போம் 

அனைத்து அறைகளும் நிரம்பினால் - லாபம் சிங்களவனுக்கா

அங்கு வேலை செய்பவர்கள் அதிகமாகி அவர்களும் உழைத்தால் - லாபம் சிங்களவனுக்கா 

ஆட்டோ முதல் வாகன சாரதிகள் அதிகமா உழைத்தால் அதுவும் சிங்களவனா

அதிகமா உழைத்தவன் தன் குழந்தைக்கு புதிய உடையை குமாரசாமியில் வாங்கினால் அங்கும் வருமானம் அதிகமாகும் - அதுவும் சிங்களவனுக்கா

அதிக வருமானம் பெறும் குமாரசாமி டேக்ஸ்ட்டைல்ஸ் இன்னும் ஒருவரை வேலைக்கு அமர்த்தினால் + அதுவும் சிங்களவனா 

அன்றாடம் உழைத்து வாழும் மக்களை பட்டினி போடும் ஹர்த்தாலுக்கு ஜே என்று கூவும் இவர்களுக்கு இது புரியாதது ஆச்சரியமில்லை.

Money Circulation பற்றிய அறிவே இல்லாதவர்களுக்கு இதை எழுத எனது மனமும் ஒப்பவில்லைத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஜீவன் சிவா said:

ஜீவன் சிவா உங்களை மீண்டும் கண்டது சந்தோசம்.

“மைதான கட்டுமானத்திலிருந்து தமிழரின் உழைப்பும் உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும்.”

இதுதான் நான் சொல்வது.

Link to comment
Share on other sites

3 minutes ago, MEERA said:

“மைதான கட்டுமானத்திலிருந்து தமிழரின் உழைப்பும் உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும்.”

எவனாவது கட்டட்டும் - லாபம் எமக்கே

இதுதான் நான் சொல்ல வருவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für runway in sea

புங்கை... மண்டை தீவை சுற்றியுள்ள கடல் அதிக ஆழம் இல்லாதது.
விமான ஓடுதளத்தை... கடலுக்குள் கட்டி விட்டு, சர்வதேச  விமான நிலையத்தை.... மண்டை தீவில் அமைக்கலாம் தானே... 
 
நல்ல யோசனை..

ஈழப்பகுதிக்கும், மீதமுள்ள இலங்கை பகுதிக்குமாக இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் இருந்தால் தமிழகத்துடன் உறவுப்பாலம் மேம்படும்...

ஆனால் மத்தல விமான நிலையத்தில் மாடுகள், வைக்கோல் காயப்போட்டாது மாதிரி ஈழத்தமிழர்கள் இங்கே மீன் உலர்த்த ஓடுபாதையை பயன்படுத்தும் நிலைக்கு மண்டைத்தீவு விமான நிலையத்தை கொண்டுசெல்லக்கூடாது! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு எந்த ஒரு திட்டத்தை வடபகுதியில் ஆரம்பித்தாலும், அது எம்மை சுரண்ட பார்க்கிறான், என்னமோ சதிதிட்டம் போட பார்க்கிறான் எனும் மனநிலை தமிழ் அரசியல் கட்சிகளில் இருந்து தமிழ் மக்கள்வரை அடிமனதில் ஆழமாக பதிந்த ஒரு விடயமாகிவிட்டது,

சரி அவனோடது வேண்டாம் நாங்களாக எம்மை கட்டியெழுப்புவோம் என்றால், அந்த வலிமையும்,பொருளாதார வசதியும், ஒற்றுமையாய் ஒரு காரியத்தை சாதிக்கும் சக்தியும் எம்மில் எவரிடமுமே இல்லை, எதிர்ப்புகள் ,விமர்சனங்கள் என்ற ஒன்றைத்தவிர வலுவான மாற்றுவழிகள் ஏதாவது எம் பிரதேச கட்டுமானங்களின் பங்களிப்பில் இருக்கிறதா?

யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்ககூடாது என்று ஒட்டுமொத்த மக்களும் கொதித்தால், ஒருவேளை அதை அவன்கொண்டுபோய் புத்தளத்திலோ, மன்னாரிலோ,திருகோணமலையிலோ அமைக்கலாம், அப்போது அதன் மூலமாக வரகூடிய சிறுபயனையாவது அனுபவிக்கபோவது அங்கு ஆதிக்கம் செலுத்தும் சிங்களவர்களும் , முஸ்லீம்களே.

காலம் நகர, கொஞ்சம் மறக்கவிட்டுவிட்டு  எமது மக்களே ஆரம்பிப்பார்கள்’’ சிங்கள அரசு எமது பகுதிக்கு எதுவுமே செய்யவில்லை,எல்லாவற்றையும் அவங்கட இடத்திலேயே செய்கிறான், தமிழ்பகுதிகள் புறக்கணிக்கப்படுகிறது’’ என்று.

இன்று இதனால் ஒரு பயனும் இல்லையென்று எதிர்ப்புகொடி காட்டும் பிரதேசவாசிகளும் நாளை எமக்கு எதுவும் தருகிறார்கள் இல்லை என்று குரல் எழுப்பும் கூட்டத்தில் இருக்ககூடும்.

சிங்களவனுடனான எதிர்ப்பு அரசியலோ, அல்லது சார்பு அரசியலோ ஒருபக்கம் நகர்ந்துபோகட்டும், அதேநேரம் யாழில் ஒன்றோ இரண்டோ என உருவாகும் கட்டுமானங்கள் அதுபாட்டில் நடக்கட்டும்.

ஒருவேளை போர் நடந்த காலங்களில் இந்த முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொண்டிருந்தால், தமிழர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று சொல்லி சர்வதேசத்தை திசை திருப்புவதற்காக இதை பண்ணுகிறான் என்று எதிர்ப்பு குரல் கொடுக்கலாம், கொடுத்தாலும் அதில் கண்டிப்பாக ஒரு நியாயம் இருக்கும்.

ஆனால் போர் அற்ற இந்த சூழலில், ஒருபகுதி எமது மக்கள் பணப்புழக்கம், பைக்,கார்,பார்ட்டி என்று ஓஹோ என்று வாழவும், மறுபகுதி மக்கள் ஒருவேளை உணவுக்காகவும்,கைகால் இழந்தவர்களாகவும்,போதிய வருமானம் இல்லாதவர்களாகவும், வறுமையுடன் தினமும் போராடுகிறவர்களாவும்,மற்றவர்களை பார்த்து எமக்கு ஒரு சிறு வசதியான வாழ்வு இல்லையே என்று ஏங்குகிறவர்களாகவும் வாழும் சூழலில்....

கிடைக்கின்ற சிறு வருவாய் என்றாலும் ஈட்டகூடிய எத்தனங்களை தவறவிடகூடாது என்பதே என் எண்ணமன்றி சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்குவதல்ல.

35/40 வருஷங்கள் முன்னாடி யாழ்ப்பாணத்தின் பிரமாண்டங்கள் என்று இருந்தது நூலகமும்,வீரசிங்கம் மண்டபமும்தான், எதிர்ப்பு கோஷங்கள் தொடர்ந்தால் இன்னும் 50 வருஷங்களுக்கும் அவ்வளவுதான் வளர்ச்சி என்ற நிலையிலேயே இருக்கும்.

எமக்காக தலைமைதாங்கும், கட்சிகளோ தலைவர்களோ தங்கள் குடும்பத்தைதவிர யாழில் வேறு எதையும் தரமுயர்த்தபோவதில்லை.!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவா உங்களை மீண்டும் கண்டது சந்தோசம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜீவன் சிவா said:

இதுவும் புரியாவிட்டால் - நானும் கொஞ்சம் எழுதுகின்றேனே 

இப்படியான முதலீடு + புலம்பெயர்ந்தவர்களின் மீள் வருகை பற்றி ஒரு பொருளாதாரரீதியில்  மக்களின் செழிப்பை பற்றி எ ஒரு கட்டுரையாக எழுத ஆரம்பித்திருந்தேன். பாதியில்   நிற்குது.

இந்த ஸ்டேடியம் பற்றி கொஞ்சம் பார்ப்பமே.

எவனோ கட்டுகின்றான் - ஓகே

எமது மக்களும் அந்த கட்டுமான பணியில் வேலை பார்த்து நாலு காசு சம்பாதிப்பார்கள் / பாவம் ஏழைகள் - நமக்கென்ன கவலை

சரி இந்த ஸ்டேடியம் கட்டி முடிந்து ஒரு சர்வதேச போட்டி நடைபெறுகின்றது என்று வைப்போமே. Windsor Park (Dominica) ஸ்டேடியம்தான் சர்வதேச  கிரிக்கெட் சபையின் அங்கீகாரம் பெற்ற மிகச் சிறிய ஸ்டேடியம் - 12 000 இருக்கைகள். அதேபோல இங்கும் 12 000 இருக்கைகள் என்று வைப்போமே.

இந்த போட்டியை பார்க்க வரும் 12 000 பேரில் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் 2000,  மிகுதி 10000 வெளிநாட்டவர் + வெளி மாகாணத்தில் இருந்து     வந்தவர்கள் என்றும் வைத்துக் கொள்வோம். இவர்கள் எங்கு தங்குவார்கள். யாழ்ப்பணத்தில் உள்ள ஹோட்டல்களில் அனைத்தும் தமிழருடையதுதான் + வேலை செய்பவர்களும் தமிழர்கள்தான். எங்காவது ஒரு சிங்களவரும் இருக்கலாம் - அது தென் இலங்கை பயணிகளை கவர. அதுவும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே. ஆனால்  Jet Wing யாருடையது என்பது  என்பது எனக்கு தெரியாது.

இங்கிருந்தே ஆரம்பிப்போம் 

அனைத்து அறைகளும் நிரம்பினால் - லாபம் சிங்களவனுக்கா

அங்கு வேலை செய்பவர்கள் அதிகமாகி அவர்களும் உழைத்தால் - லாபம் சிங்களவனுக்கா 

ஆட்டோ முதல் வாகன சாரதிகள் அதிகமா உழைத்தால் அதுவும் சிங்களவனா

அதிகமா உழைத்தவன் தன் குழந்தைக்கு புதிய உடையை குமாரசாமியில் வாங்கினால் அங்கும் வருமானம் அதிகமாகும் - அதுவும் சிங்களவனுக்கா

அதிக வருமானம் பெறும் குமாரசாமி டேக்ஸ்ட்டைல்ஸ் இன்னும் ஒருவரை வேலைக்கு அமர்த்தினால் + அதுவும் சிங்களவனா 

அன்றாடம் உழைத்து வாழும் மக்களை பட்டினி போடும் ஹர்த்தாலுக்கு ஜே என்று கூவும் இவர்களுக்கு இது புரியாதது ஆச்சரியமில்லை.

Money Circulation பற்றிய அறிவே இல்லாதவர்களுக்கு இதை எழுத எனது மனமும் ஒப்பவில்லைத்தான்.

வணக்கம் ஜீவன்!

மீண்டும் கண்டது மிகவும் மகிழ்ச்சி.

நாங்கள் சில அனுமானங்களை..நாங்களாகவே அனுமானிக்கிறோம்!

அறுகம் குடா ஒரு நல்ல உதாரணம்!

இங்கிருக்கும் தங்கு விடுதிகள் எத்தனை தமிழர்களுடையவை என்று எனக்குத் தெரியாது! கூகிளில் தேடிய போது...பாலாஜி என்று ஒரு தமிழ்ப் பெயருள்ள ஹோட்டல் தான் இருந்தது!

இவ்வாறான திட்டத்தை மண்டை தீவில் முன்னெடுப்பவர்கள்....யாழ்ப்பாணத்திலிருந்து பார்வையாளர் சென்று வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை!

அவர்கள் குறைத்து பத்து உல்லாச விடுதிகளையாவது மண்டைதீவில் நிச்சயம் கட்டுவார்கள்! அவற்றைக் கட்டுமளலவுக்குப் பொருளாதார பலம் புலம் பெயர்ந்தவர்களிடம் மட்டும் தான் இப்போதைக்கு இருக்கின்றது! அனேகமாக முஸ்லிம்களும், சிங்களவர்களும் தான் அந்த விடுதிகளைக் கட்டுவார்கள!

உங்கள் அனுமானங்கள் சரியாக இருந்தால்....மிகவும் மகிழ்ச்சியே!

Link to comment
Share on other sites

13 hours ago, புங்கையூரன் said:

அறுகம் குடா ஒரு நல்ல உதாரணம்!

இங்கிருக்கும் தங்கு விடுதிகள் எத்தனை தமிழர்களுடையவை என்று எனக்குத் தெரியாது! கூகிளில் தேடிய போது...பாலாஜி என்று ஒரு தமிழ்ப் பெயருள்ள ஹோட்டல் தான் இருந்தது!

இதன் பூவியல் அமைவிடம் + சனவிகிதாரம் பற்றி அக்கினி அல்லது தனிதான் விடையளிக்க வேண்டும்.

ஆனால் இது யாழ்ப்பாணம்

ஆனாலும் surfing போக நல்ல இடம்.:grin:

4ftpqp.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, valavan said:

எமக்காக தலைமைதாங்கும், கட்சிகளோ தலைவர்களோ தங்கள் குடும்பத்தைதவிர யாழில் வேறு எதையும் தரமுயர்த்தபோவதில்லை.!!

உண்மை

அதேபோல்

எதை  கட்டினாலும்

எதைக்கொண்டுவந்தாலும்

அதில் தமிழர்கள் வேலைக்கு  போகப்போவதில்லை

இது  தான் தாயக  நிலவரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/30/2018 at 5:59 AM, புங்கையூரன் said:

அறுகம் குடா ஒரு நல்ல உதாரணம்!

இங்கிருக்கும் தங்கு விடுதிகள் எத்தனை தமிழர்களுடையவை என்று எனக்குத் தெரியாது! கூகிளில் தேடிய போது...பாலாஜி என்று ஒரு தமிழ்ப் பெயருள்ள ஹோட்டல் தான் இருந்தது!

தமிழர்களுக்கு பெரிதாக இல்லை மகிந்தர் ஆட்சி செய்த போது கோட்டபாயவினால் சில கொட்டல்கள் கட்டப்பட்டது சில முஸ்லீம்களுடையது 

Link to comment
Share on other sites

விமான நிலையம் அமைப்பதற்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும் மண்டைதீவு பொருத்தமான இடமில்லை!

இன்னொரு (இரண்டாவது வெற்றிகரமான) சர்வதேச விமானநிலையம் அமைவதற்கு வவுனியா தான் பொருத்தமான இடம் என நினைக்கிறன்! காரணம் இது மன்னர், யாழ்ப்பாண தீபகற்பம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, அனுராதபுரம், தம்புள்ளை போன்ற பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வசதியாக அமையும்.

இல்லையென்றால் கிளிநொச்சியில் உள்ள விடுதலைப்புலிகளின் ஓடுதளத்தை விரிவாக்கி  அமைக்கலாம். இது தமிழர்களுக்கு அனுகூலமாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

உள்ளூர் விமான சேவைக்காக அமைக்கலாம் சர்வதேச ரீதியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க  அவர்கள்  தயார் இல்லை ஹிங்ராகொட திருகோணமலை , இரணைமடு ,மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இருக்கு  உள்ளூர் சேவைக்கான விமான நிலையங்கள் வவுனியாவில் கூட உள்ளுர் விமான சேவைக்கானதுதான் ஆனால் அதுவும் சிறப்பாக இல்லை வான் ப்டையின் விமானங்கள் மட்டும் வந்து செல்கின்றன 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டையிலை மயிர் புடுங்க வெளிக்கிட்டால் அங்கை ஒண்டுமே நடக்காது....மசூதி கட்டக்கு முதல் ஸ்ரேடியத்தை கெதியாய் கட்டுங்கப்பா....

பிறகு   கோவேறு கழுதையை  ஒட்டகமாய் மாத்திப்போடுவாங்கள். :27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

முட்டையிலை மயிர் புடுங்க வெளிக்கிட்டால் அங்கை ஒண்டுமே நடக்காது....மசூதி கட்டக்கு முதல் ஸ்ரேடியத்தை கெதியாய் கட்டுங்கப்பா....

பிறகு   கோவேறு கழுதையை  ஒட்டகமாய் மாத்திப்போடுவாங்கள். :27_sunglasses:

அதான் கிழக்கில தொடங்கிட்டாங்கள் இனி வடக்கிலும் வருமாம் எங்களின்ட ஒருத்தர் ஆரோ வீடும்கட்டி கொடுக்க போறாறாம் என்ற செய்தியும் உலாவுது 

Link to comment
Share on other sites

On 2/1/2018 at 12:04 AM, தனிக்காட்டு ராஜா said:

உள்ளூர் விமான சேவைக்காக அமைக்கலாம் சர்வதேச ரீதியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க  அவர்கள்  தயார் இல்லை

அதாவது அவர்கள் தயார் இல்லையென்றால் உங்களுக்கு எதுவும் வேண்டாம் என்றும், அவர்கள் தருவதை பல்லை இளித்துக் கொண்டு வாங்கிக்கொள்ளலாம் என்றும் நீங்கள் சொல்வது தெளிவா விளக்குகிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2018 at 7:29 AM, போல் said:

அதாவது அவர்கள் தயார் இல்லையென்றால் உங்களுக்கு எதுவும் வேண்டாம் என்றும், அவர்கள் தருவதை பல்லை இளித்துக் கொண்டு வாங்கிக்கொள்ளலாம் என்றும் நீங்கள் சொல்வது தெளிவா விளக்குகிறது!

அடிச்சு பெற முடியாது கிடைக்கிறத வைத்தே நாங்கள் ஏதாவது செய்யலாம் அது மக்களுக்கு கிடைக்கும் மாக இருந்தால் பல்லை இளித்து  என்ன பாய விரித்துக் கிடந்து கூட பெற்றுக்கொள்ளலாம்tw_blush: தற்போதுள்ள ஒட்டுக்குழு தமிழரசுக்கட்சி போல் அரசுடன் ஒட்டியிருப்பது  போல்tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாங்குளம்.. கிளிநொச்சி.. யாழ்ப்பாணம்.. இப்ப மண்டைதீவுன்னு வந்து நிற்குது.

முரளிதரன்.. இந்தா அமைக்கிறம் என்று பெரிய அறிவிப்பெல்லாம் விட்டார்.. இப்ப ஆளையும் காணம்.. மைதானத்தையும் காணம்.

இதெல்லாம்.. சொறீலங்காவில் சகஜமப்பா.

தமிழர்கள்.. வாய்ப்பார்த்து.. ஏமாற வேண்டியான். இதுதான் தமிழர்களுக்கு சொறீலங்காவில் நிரந்தரம். :rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

மாங்குளம்.. கிளிநொச்சி.. யாழ்ப்பாணம்.. இப்ப மண்டைதீவுன்னு வந்து நிற்குது...

இனி நாங்கள் வலு கவனமா இருக்கவேணுமென்டு சொல்லுறீங்கள்..!

புயல் நகர்ந்த மாதிரி மண்டைத்தீவு.. புங்கிடு தீவு.. நெடுந்தீவு என படிப்படியாக நகர்ந்து, இறுதியில் ராமேஸ்வரத்தில் மைதானம் அமைத்துவிடுவார்கள் போலிருக்கே...?  vil-cligne.gif

(அப்படியே மைதானம் அமைத்து, ரெண்டு நடிகைகளை அழைத்து திறப்பு விழா கொடுத்தால், எதையும் மறந்து ஏற்றுக்கொள்வான் தமிழக தமிழன்..!  டிசைன் அப்படி!   vil-rigole.gif )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/01/2018 at 5:06 AM, நவீனன் said:

"இது மட்டும் தான் தமிழன் நடத்தும் கடை வாங்க ஐயா வாங்க" என்று கோணேஸ்வரகோவிலின் முன் வீதியில் உள்ள வியாபாரியின் புலம்பலை நான் இந்த தடவை கேட்டு வந்தேன் .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ராசவன்னியன் said:

இனி நாங்கள் வலு கவனமா இருக்கவேணுமென்டு சொல்லுறீங்கள்..!

புயல் நகர்ந்த மாதிரி மண்டைத்தீவு.. புங்கிடு தீவு.. நெடுந்தீவு என படிப்படியாக நகர்ந்து, இறுதியில் ராமேஸ்வரத்தில் மைதானம் அமைத்துவிடுவார்கள் போலிருக்கே...?  vil-cligne.gif

(அப்படியே மைதானம் அமைத்து, ரெண்டு நடிகைகளை அழைத்து திறப்பு விழா கொடுத்தால், எதையும் மறந்து ஏற்றுக்கொள்வான் தமிழக தமிழன்..!  டிசைன் அப்படி!   vil-rigole.gif )

என்ன ஈழ‌த்தமிழன் மட்டும் நடிகையை கண்டால் சபலமடைய மாட்டானோ?tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.