Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

கருப்புபட்டை அணிந்து விளையாடுவீர்களா?- தினேஷ்கார்த்திக் மவுனம்

 

காவிரி போராட்டத்திற்கு ஆதரவாக இன்றைய ஆட்டத்தில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவீர்களா? என்று நிருபர்கள் கேள்விக்கு தினேஷ் கார்த்திக் மவுனமாக சென்றுவிட்டார். #IPL #DineshKarthik

 
கருப்புபட்டை அணிந்து விளையாடுவீர்களா?- தினேஷ்கார்த்திக் மவுனம்
 
சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

இதனால் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சில அமைப்புகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஆனாலும் ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டப்படி பலத்த பாதுகாப்புடன் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை- கொல்கத்தா அணிகள் இன்று இரவு சேப்பாக்கத்தில் மோதுகின்றன.

ஐ.பி.எல். போட்டிக்கு திரை உலகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் கூறும்போது, “ஐ.பி.எல். போட்டி நடக்காமல் இருந்தால் நல்லது. அப்படி இல்லையென்றால் சென்னை அணி வீரர்கள் கறுப்பு பேட்ஜ் (பட்டை)அணிந்து விளையாடலாம்.

இதேபோல ரசிகர்களும் கறுப்பு துணி அணியலாம் என்று கூறி இருந்தார்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ளார். அவரிடம் காவிரி போராட்டத்திற்கு ஆதரவாக இன்றைய ஆட்டத்தில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடுவீர்களா? உங்கள் எதிர்ப்பை பதிவு செய்வீர்களா? என்று நிருபர்கள் கேட்டபோது, தினேஷ் கார்த்திக் பதில் அளிக்காமல் மவுனமாக சென்றுவிட்டார்.

ஐ.பி.எல். போட்டிக்காக சென்னை வருவது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. என்னை சுற்றி பலத்த பாதுகாப்பு இருக்கிறது என்று தினேஷ்கார்த்திக் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #IPL
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/10133000/1156208/Dinesh-Karthik-keep-silence-about-playing-with-black.vpf

Link to comment
Share on other sites

  • Replies 592
  • Created
  • Last Reply

27 பந்துகளில் நோ பவுண்டரி... மிரட்டல் பெளலிங் யூனிட்... ஹைதராபாத் வென்றது எப்படி?! #SRHvRR

 
 

டி-20 பேட்ஸ்மேன்களுக்கான கேம். அதை பெளலர்களைக் கொண்டு வெல்வது சாதனை. 11-வது ஐ.பி.எல் சீசனின் நான்காவது போட்டியில் அந்தச் சாதனையைச் செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். முழுக்கமுழுக்க பக்காவான பெளலிங் யூனிட்டை வைத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ். #SRHvRR

இந்தப் போட்டியில் ஷிகர் தவன் சேஸிங்கில் அரைசதம் அடித்தது பெரிய விஷயமில்லை. ஏனெனில், முதல் மூன்று போட்டிகளிலேயே அதிவேக அரைசதங்களை, இமாலய சிக்ஸர்களை, த்ரில்லிங் சேஸ்களைப் பார்த்துவிட்டனர் ஐ.பி.எல் ரசிகர்கள். இரண்டாவது விக்கெட்டுக்கு தவன் - வில்லியம்சன் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்ததும் பெரிய விஷயமில்லை. பின்னே... எப்போதும் போல, இப்போதும் ஹைதராபாத்தின் பெளலிங் யுனிட்தான் பாராட்டுக்குரியது. பிளேயிங் லெவனில் இடம்பிடித்த புவி, ஸ்டேன்லேக், ஷகிப் அல் ஹசன், சித்தார்த் கவுல், ரஷித் கான் ஆகிய ஐந்து பெளலர்களும் ஒவ்வொரு விதத்தில் மிரட்டல்!

SRHvRR

எந்தவொரு அணிக்கும் புவனேஸ்வர்குமார் கீ பெளலர். அவர் பந்தில் சஞ்சு சாம்சன் இரண்டு பவுண்டரிகள் அடித்ததுமே சுதாரித்த வில்லியம்சன், ஷகிப் அல் ஹசனைக் கொண்டு வந்தார். இப்போதெல்லாம் பவர் பிளேவில் பிரைமரி ஸ்பின்னர்களைக் கொண்டு ரன்களைக் கட்டுப்படுத்துவதுதான் டி-20 போட்டியின் சிறந்த டெக்னிக். ஸ்டேன்லேக் ஓவரில் சாம்சன், ரகானே இருவரும் மாறிமாறி பவுண்டரி அடித்தபோது ராஜஸ்தான் ரன் ரேட் எட்டைத் தொட்டது. ஷகிப் வீசிய ஆறாவது ஓவரிலும் எட்டு ரன்கள் வந்தது என்றாலும், பவர் பிளேவில் அவர் 2 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததும், அதில் 5 டாட் பால்களை வீசியதும் கவனிக்கத்தக்கது. டி-20-யில் வீணடிக்கப்படும் ஒவ்வொரு டாட் பாலும் பேட்ஸ்மேனுக்கு நெருக்கடியைக் கொடுக்கும். ஷகிப் முதல் இரண்டு ஓவர்களில் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும், ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு ஒருவித நெருக்கடியைக் கொடுத்தார். பெரிய ஷாட் ஆடுவதற்கான உந்துதலைக் கொடுத்தார்.

சித்தார்த் கவுல் வீசிய 7-வது ஓவரில் ரகானே ஒரு பெரிய ஷாட்டுக்கு முயன்றார்.  டீப் மிட்விக்கெட் திசையில் தூக்கி அடித்தார். முந்தைய பந்தில் தேர்ட்மேன் ஏரியாவில் இருந்த ஸ்டேன்லேக் செய்த தவற்றை ரஷித் கான்  செய்யவில்லை. அழகான கேட்ச். ரகானே 13 ரன்களில் அவுட். மிடில் ஓவர்களில் ஸ்டேன்லேக், சித்தார்த் கவுல், ரஷித் கான் ரன்களைக் கட்டுப்படுத்தினர். மிடில் ஓவர்களில் 27 பந்துகளில் ராஜஸ்தான் ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை. ஆரம்பத்தில் வெளுத்துக்கட்டிய சஞ்சு சாம்சன், ஸ்ட்ரைக் ரேட் அதிகம் வைத்திருக்கும் திரிபாதி இருவரும் எவ்வளவு முயன்றும் பந்து எல்லை தாண்டவில்லை. இவர்கள் இருவரையும், தன் கடைசி ஓவரில் நான்கு பந்து இடைவெளியில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் ஷகிப். ஆம், வங்கதேச ஆல் ரவுண்டர் வீசியது அட்டகாசமான ஸ்பெல். 4 ஓவர்களில் 23 ரன்கள், 2 விக்கெட் என்பது பிரமிக்கும் எண்கள் இல்லை. ஆனால், ஷகிப் பெளலிங் செய்தது சஞ்சு சாம்சன், ரஹானே, ராகுல் திரிபாதி, ஜாஸ் பட்லர் என்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு என்பதுதான் விஷயம். 

SRHvRR

ஸ்பின்னர்களை வைத்து முதல் ஓவரைத் தொடங்கும் இந்தக் காலத்தில், அணியின் பிரைமரி ஸ்பின்னருக்கு எட்டாவது ஓவரில்தான் பந்தைக் கொடுத்தார் வில்லியம்சன். இதற்கும் காரணம் இருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் - ரஷித் இருவருக்கும் ஏழாம் பொருத்தம். இந்தப் போட்டிக்கு முன்புவரை ரஷித் வீசிய ஏழு பந்துகளில் இரண்டு முறை அவுட்டாகியிருக்கிறார் ஸ்டோக்ஸ். இந்தமுறையும் அவரிடமே அவுட்டாக வாய்ப்பிருக்கிறது என கணிக்கப்பட்டது. நடந்தது வேறு. ஸ்டேன்லேக் பந்தில் லாங் ஆனில் இருந்த வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஸ்டோக்ஸ் (5) வெளியேறினார். ஆனால், அதற்கு முந்தைய ஓவரில் ரஷித் கான் வீசிய நான்கு பந்துகளைச் சந்தித்த ஸ்டோக்ஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இந்த நெருக்கடி அடுத்த ஓவரில் அவரை பெரிய ஷாட் அடிக்கத் தூண்டியது. ஏற்கெனவே சொன்னதுபோல, டாட் பால் நெருக்கடி மீண்டும் கைகொடுத்தது.

ஷகிப், ரஷித் தவிர்த்து ஸ்டேன்லேக் 29 ரன்களுக்கு 1 விக்கெட், சித்தார்த் 17 ரன்களுக்கு 2 விக்கெட், புவி ஒரு விக்கெட் என சன்ரைசர்ஸின் எல்லா பெளலர்களும் பாஸ் எனில், சந்தீப் சர்மா, பாசில் தம்பி என பெஞ்ச் பெளலிங்கும் அவ்வளவு ஸ்ட்ரென்த்தாக இருக்கிறது. கேன் வில்லியம்சனின் துல்லிய த்ரோ ரன் அவுட், ரஷித் கானின் அட்டகாச கேட்ச் என ஃபீல்டிங்கிலும் அவர்கள் சோடை போகவில்லை. ஆக, இந்த சீசனிலும் ஹைதராபாத் பெளலிங்கில் மற்ற அணிகளுக்கு தண்ணி காட்டும் என்பதை மறுப்பதற்கில்லை. டேவிட் வார்னர் இல்லாத குறையை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் எளிதாக சமாளித்துவிட்டது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்மித் இல்லாதது அப்பட்டமாக தெரிந்தது.

SRHvRR

 

டாப் ஆர்டரில் வெளுத்துக் கட்டும் திரிபாதிக்கு முன்னதாக சஞ்சு சாம்சனை இறக்கிவிட்டது, பிக்பாஷ் லீக்கில் அதிக ரன்கள் எடுத்த ஷார்ட்டின் அவசரம், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் போன்ற சீனியர் பிளேயர்களின் மோசமான பெர்ஃபாமன்ஸ், இந்தியாவுக்கு எதிராக லிமிட்டெட் ஓவர்களில் வெளுத்துக் கட்டிய கிளாசனை பிளேயிங் லெவனில் இறக்காதது, ஸ்லிப்பில் ரகானே கேட்ச்சை விட்டது என ராஜஸ்தான் தோல்விக்குப் பல காரணங்களை அடுக்கலாம். ஒட்டுமொத்தமாக அவர்கள் அணியை ஓவராயில் பார்க்க வேண்டிய நேரம் இது!

https://www.vikatan.com/news/sports/121760-sunrisers-wins-rajasthan-royals-by-9-wickets.html

Link to comment
Share on other sites

மும்பை அணிக்கு பின்னடைவு: ஐபிஎல் தொடரில் இருந்து ஆஸி.வீரர் பாட் கம்மின்ஸ் திடீர் விலகல்

 

 
i

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ்: கோப்புப் படம்   -  படம்: ஏஎப்ஃபி

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் முதுகு வலி காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஏற்கெனவே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து மிட்ஷெல் ஸ்டார்க் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், இப்போது ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் 2-வது ஆஸ்திரேலியவர் கம்மின்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு 11-வது ஐபிஎல் சீசனுக்காக வலதுகை வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸை ரூ.5.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு எதிராக மும்பையில் நடந்த முதல்போட்டியிலேயே பாட் கம்மின்ஸ் முதுகுவலி காரணமாக விளையாடவில்லை. இப்போது ஒட்டுமொத்தமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் உடல்தகுதி வல்லுநர் டேவிட் பீக்லே கூறுகையில் ‘‘ தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்தே பாட் கம்மின்ஸ்க்கு முதுகு வலி இருந்தது. இதைத் தொடர்ந்து அவரை ஸ்கேன் செய்து பார்த்ததில் இடுப்புப்பகுதியில் எலும்பு தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் தொடர்ந்து அவரால் விளையாட முடியாது. அவ்வாறு விளையாடுவது அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். மிகப்பெரிய காயம் உருவாகும் முன்பாக அவர் சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இதனால், ஐபிஎல் போட்டித் தொடரில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகியுள்ளார். இவர் குணமாக இன்னும் 3 வாரங்கள் ஆகும்’ ’எனத் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article23488644.ece

Link to comment
Share on other sites

பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் கண்டார், பட்லர் வீழ்ந்தார், அபார கேட்ச்கள்: ரஷீத் கான் எனும் அற்புதன்

 

 
rashid%20khanjpg

ரஷித் கான்.   -  படம். | கே.வி.எஸ். கிரி

சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சுவாரசியமற்றதாகப் போனாலும் ரஷீத் கான் என்ற ஆப்கான் அற்புதனின் அர்ப்பணிப்பு, மற்றும் பன்முகத்திறன் ரசிகர்களை வியக்க வைத்தது.

சன் ரைசர்ஸ் அணி மிகச் சாமர்த்தியமாக தேர்வு செய்த வீரர்களுல் ஆப்கான் லெக்ஸ்பின்னர் ரஷீத் கான் முதன்மையானவர்.

ரஷீத் கான் 44 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள சிக்கன விகிதம் ஓவருக்கு 3.96 தான். ஒருமுறை 18 ரன்களூக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே இவரது சிறந்த பந்து வீச்சு. சர்வதேச டி20 போட்டிகளில் 29 போட்டிகளில் 47 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் இதில் ஒருமுறை 3 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். சிக்கன விகிதம் 5.86தான். மொத்தம் 92 டி20 போட்டிகளில் 136 விக்கெட்டுகள் சிக்கன விகிதம் ஓவருக்கு 5.80.

இவரது பிளைட், ட்ரிஃப்ட் ஆகியவற்றை சரியாக ஆடிய வீரர்கள் எண்ணிக்கைக் குறைவு, இவர் பல்வேறு டி20 தொடர்களில் பலதரப்பட்ட அதிரடி வீரர்களுக்கும் பந்து வீசி தன்னை நிரூபித்துள்ளார். கரீபியன் பிரிமியர் லீகில் மே.இ.தீவுகளின் இளம் அதிரடி வீரர்கள் அங்கு ஆடும் பிற நாட்டு சர்வதேச அதிரடி வீரர்களும் ரஷீத் கானை இதுவரை சரியாக ஆடியதில்லை என்பதே உண்மை.

இந்நிலையில் இங்கிலாந்தின் அபாய அதிரடி வீரர் பென் ஸ்டோக்ஸுக்கு நேற்று ஐபிஎல் கிரிக்கெட்டில் வீசிய ஓவர் பிரமாதத்தின் ரகத்தைச் சேர்ந்தது.

பவர் ப்ளே முடிந்தவுடன் 8-வது ஒவரில் ரஷீத் கானைப் பந்து வீச அழைத்தார் சன்ரைசர்ஸ் கேப்டன் வில்லியம்சன். முதல் பந்து லெக் திசையில் வீசப்பட்டது ஸ்டோக்ஸினால் மட்டையை பந்துடன் தொடர்பு படுத்த முடியவில்லை.

2வது பந்தே ஸ்டோக்ஸ் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று அவருக்கு குறுக்காகச் சென்ற பந்தில் பீட் ஆனார். அடுத்த பந்தும் சறுக்கிக் கொண்டு வந்து லேசாக திரும்பியது மிடில் ஸ்டம்புக்கு நேராக காலில் வாங்கினார். ஆனால் மட்டையின் உள்விளிம்பில் பட்டதால் பிழைத்தார். அடுத்த பந்தும் இன்சைடு எட்ஜ், ஆனால் ஸ்டோக்ஸ் 1 ரன் எடுத்து எதிர்முனைக்குச் சென்றார். 6வது பந்தில் சஞ்சு சாம்சன், ரஷீத் கானின் கூக்ளியைக் கணிக்காமல் ஆடி அனைத்து ஸ்டம்புகளும் தெரிய கட் ஆட முயன்றார் அதிர்ஷ்டவசமாக பந்து மட்டையின் உள்விளிமிபில் பட்டு பேடில் பட்டது.

இதற்கு முன்னர் பென் ஸ்டோக்ஸை இருமுறை வீழ்த்தியுள்ளார் ரஷீத் கான். சஞ்சு சாம்சனும் இன்னொரு முறை எட்ஜ் செய்தார், திரிபாதி இவரை பவுண்டரி அடித்தாலும் பிளைட்டில் பீட் ஆனார். திரிபாதியின் தவறான ஸ்வீப் ஷாட் ஒன்று பீல்டருக்கு முன்னால் விழுந்தது. தவறைத் தூண்டியவர் ரஷீத் கான். பிறகு பட்லரை பவுல்டு செய்தார். பட்லரையும் 3வது முறை வீழ்த்துகிறார் ரஷீத் கான். மொத்தம் 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்ததில் 3 பவுண்டரிகளை மட்டுமே கொடுத்தார். அதிலும் இரண்டு பவுண்டரிகள் திருப்தியற்ற பவுண்டரிகள் ஆகும். மொத்தம் 11 டாட் பால்கள்.

முன்னதாக ரஹானே அடித்த ஹை பிளிக் ஷாட்டை டீப் ஸ்கொயர்லெக்கில் பிடித்த கேட்சும் சஞ்சு சாம்சன் நன்றாக ஆடிக் கொண்டிருந்த போது ஸ்வீப்பர் கவரில் சறுக்கியபடி வந்து பிடித்த கேட்சும் அற்புதமானது. மொத்தத்தில் இந்த ஐபிஎல் தொடரிலும் அடுத்த உலகக்கோப்பையிலும் எதிர்கொண்டு முறியடிக்க வேண்டிய ஒரு சக்தியாக ரஷீத் கான் எழுச்சியுறுவார் என்று எதிர்பார்க்கலாம்.

http://tamil.thehindu.com/sports/article23492063.ece

Link to comment
Share on other sites

டாஸ் வென்றது சென்னை அணி... பவுலிங்கைத் தேர்வு செய்தார் தோனி.

Dhoni: "Had a bit of dew the last few days so we'd like to chase. The fans are eager, I was here for the TNPL, so the locals are excited. As a group, I hope we bat better. Individual performance took us over the line that time. Billings and Shardul are in for Jadhav and Mark Wood.

Karthik: "I'm a local here, so this is familiar territory. One change: Tom Curran's in for Mitchell Johnson.

Link to comment
Share on other sites

இன்னிங்ஸ் முடிவில் கொல்கத்தா 202 ரன்னுக்கு 6 விக்கெட்.. சென்னை அணிக்கு 203 ரன்கள் டார்கெட்...

Link to comment
Share on other sites

ஆந்த்ரே ரஸல் சிக்சர் மழையில் சென்னையைப் பிளந்து கட்டினார்: கொல்கத்தா 202 ரன்கள் குவிப்பு

 

 
Russeljpg

ரஸலின் காட்டடி சிக்சர்களுல் ஓன்று.   -  படம். | கே.பிச்சுமணி

சென்னையில் சேப்பாக்கதில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆந்த்ரே ரஸலின் காட்டடி சிக்சர் மழையில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.

ஆந்த்ரே ரஸல் 1 பவுண்டரி 11 பயங்கர சிக்சர்களுடன் 36 பந்துகளில் 88 ரன்கள் அடித்து சென்னை ரசிகர்களையும் கேப்டன் தோனியையும் அதிர வைத்தார், காரணம் டாஸ் வென்று ரன் மழை பிட்சில் முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய அழைத்தது தவறோ என்று தோனி வருந்தும் அளவுக்கு ஆந்த்ரே ரஸல் அதிரடி அமைந்தது.

உண்மையில் 10 ஓவர்களில் 89/5 என்று ரன் விகிதத்தில் நன்றாக இருந்தாலும் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து கொல்கத்தா கவலையில்தான் இருந்தது. ஆனால் அதன் பிறகு தினேஷ் கார்த்திக் (26), ரஸலுடன் இணைந்து 7.4 ஓவர்களில் அதாவது 46 பந்துகளில் 76 ரன்களை விளாசித் தள்ள ஆட்டம் மாறிப்போனது.

முதல் போட்டியில் 25 ரன்களையே விட்டுக் கொடுத்த டிவைன் பிராவோ இன்று 3 ஓவர்களில் 50 ரன்கள் விளாசப்பட்டார், அதிலும் 7 சிக்சர்களை இவரே கொடுத்தார், இதில் ஒரு சிக்ஸ் மட்டுமே தினேஷ் கார்த்திக் அடித்தது. மற்ற 6 சிக்சர்களும் ரஸல் அடித்தது. ஒரு பந்து மைதானத்தை விட்டு தொலைந்து புதுப்பந்து வரவழைக்கப்பட்டது. 17வது ஓவரில் அடிக்கப்பட்ட 3 சிக்சர்களில் ஒன்றுதான் சேப்பாக்கத்தைத் தாண்டி வெளியில் போய் விழுந்தது.

ரஸலின் அலட்சியமான காட்டடி, ஓர் வர்ணனை:

13 ஓவர்கள் முடிவில் கேகேஆர் 108/5, ஆந்த்ரே ரஸல் 9 பந்துகளில் 9 ரன்கள்தான் எடுத்திருந்தார். 14வது பிராவோ ஓவரின் 5வது பந்து லாங் ஆனுக்கு மேல் மிகப்பெரிய சிக்ஸ் ஆனது.

பிறகு 16வது ஓவரில் தாக்கூர் வீச லெந்த் மிஸ் ஆக லாங் ஆனில் சிக்ஸ். அடுத்த பந்து மீண்டும் லெந்த் மிஸ், புல்டாஸ் மீண்டும் சிக்ஸ்.

17வது ஓவரை பிராவோ வீச வர 2வது பந்து நேராக 105மீ தூர சிக்ஸ். மீண்டும் ஒரு தாழ்வான புல்டாஸ் மீண்டும் லாங் ஆனில் அரக்க சிக்ஸ். கடைசி பந்து ஒரு மாறுதலுக்காக தினேஷ் கார்த்திக் வேகம் குறைந்த லெந்த் பந்தை பார்த்து நின்று ஒரே தூக்குத் தூக்கினார் சிக்ஸ். வாட்சன் வந்தார் எக்ஸ்ட்ரா கவரில் சிக்ஸ், பீல்டர் முன்னால் வந்ததால் கணிக்கத் தவறினார். அடுத்த வாட்சன் ஓவரில் தினேஷ் கார்த்திக் 26 ரன்களில் யார்க்கரில் எல்.பி.ஆனார்.

19வது ஓவரை பிராவோ வீச முதல் பந்து அருமையான பிளிக்கில் ரஸல் சிக்ஸ், அடுத்த பந்து மீண்டும் ஸ்லோ பந்து சிக்ஸ் இதுவும் மைதானத்துக்கு வெளியே சென்றிருக்க வேண்டியது. அடுத்த பந்து ஷார்ட் பிட்ச், புல்ஷாட் சிக்ஸ்.

கடைசி ஓவரை தாக்கூர் வீச முதல் பந்து டீப் எக்ஸ்ட்ரா கவரில் சிக்ஸ். பிறகு சிங்கிள் எடுக்க டாம் கரன் ஸ்ட்ரைக்குக்கு வந்து படுத்தினார் அவருக்கு மாட்டவில்லை கடைசியில் 5வது பந்து தோனியிடம் செல்வதற்குள் ஒரு ரன் ஓட, கடைசி பந்து ஆஃப் திசையில் வீச காலை மடக்கிக் கொண்டு லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்தார் ரஸல். 26 பந்துகளில் 53 என்று இருந்த ரஸல் அடுத்த 10 பந்துகளில் 35 ரன்களை விளாசி 36 பந்துகளில் 1 பவுண்டரி 11 சிக்சருடன் 88 நாட் அவுட், கேகேஆர் 202 ரன்கள் குவித்தது. கடைசி 14 பந்துகளில் 37 ரன்கள். கடைசி 10 ஓவர்களில் 113 ரன்கள்.

தோனியின் கேப்டன்சியில் பெரும் தவறு இருந்தது. ஹர்பஜன் சிங் 2 ஓவர்கள் 11 ரன்கள் ஒரு விக்கெட், ஆனால் ரஸல் அந்த சாத்து சாத்தும்போது ஒரு ஓவர் கொடுத்துப் பார்த்திருக்கலாம். தீபக் சாஹர் முதல் ஓவரில் 18 ரன்கள் கொடுத்து விட்டார் என்பதற்காக அவருக்குக் கடைசி வரை கொடுக்கவேயில்லை. ஜடேஜாவும் 2 ஓவர்களில் 19 ரன்கள் 1 விக்கெட்டைக் கைப்பற்றினாலும் அவருக்கும் கொடுத்து முயற்சிக்கவில்லை, அடி வாங்க அடி வாங்க பிராவோவுக்குக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.

மொத்தத்தில் 89/5 என்ற நிலையில் கிடுக்கிப் பிடி போடுவதிலிருந்து தவறவிட்டார் தோனி. களவியூகமும் கேள்விக்குறியானதே. எப்போதுமே எதிரணி வீரர்கள் அடித்து நொறுக்கும் போது கேப்டன் தோனி வெறும் பார்வையாளராகி விடுவதைத்தான் அவரது கேப்டன்சி வரலாற்றில் நாம் பார்த்து வருகிறோம்.

முன்னதாக...

2 சிக்சர்களுக்குப் பிறகு சுனில் நரைனை அனுப்பினார் ஹர்பஜன்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் டி20 போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா அணியை பேட் செய்ய அழைத்தார்.

சென்னை அணியில் முரளி விஜய் இல்லை, சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். மார்க் உட் இல்லை அவருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் வந்துள்ளார்.

முதல் ஓவரை தீபக் சாஹர் வீச முதல் பந்தையே பளார் என்று ஆஃப் திசையில் அறைந்தார் கிறிஸ் லின், நான்குக்குப் பறந்தது.

பிறகு கடைசி 2 பந்துகளில் சுனில் நரைன் லெக் திசையில் இரண்டு மிகப்பெரிய சிக்சர்களைத் தூக்க முதல் ஓவரிலேயே 18 ரன்கள்! அடுத்த ஓவரை ஹர்பஜன் சிங்கிடம் தோனி கொடுக்க சுனில் நரைனுக்கு கொஞ்சம் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீச அதை ஒரே சுற்று சுற்றினார் நரைன் பந்து சரியாகச் சிக்காமல் கொடியேற்றினார் ரெய்னா கேட்சைப் பிடித்தார்.

சற்று முன் கிறிஸ் லின் 22 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தில் பவுல்டு ஆகி வெளியேறியுள்ளார். உத்தப்பா 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 16 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். ராணா இறங்கியுள்ளார், கொல்கத்தா அணி 5.2 ஓவர்களிலேயே 51/2 என்று நல்ல தொடக்கம் கண்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23495164.ece?homepage=true

Link to comment
Share on other sites

சென்னை அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது. 
கொல்கத்தா அணி 20 ஓவரில் 203 ரன்கள் எடுத்தது.
36 பந்தில் 88 ரன்கள் எடுத்தார் ரசல்...
வாட்சன் அதிகபட்சமாக 2 விக்கெட் எடுத்தார்..

சென்னை அணி 19.5 ஓவரில் 205 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
23 பந்தில் 56 ரன்கள் எடுத்தார் பில்லிங்ஸ்..
குர்ரன் அதிகபட்சமாக 2 விக்கெட் எடுத்தார்...  
கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் ஜடேஜா த்ரில் சிக்ஸர் அடித்து வெற்றி

https://www.vikatan.com/cricket/ipl-2018/live-score

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். போட்டி - பில்லிங்ஸ் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

 
அ-அ+

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பில்லிங்ஸ் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #IPL2018 #CSKvKKR

 
 
 
 
ஐ.பி.எல். போட்டி - பில்லிங்ஸ் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி
 
சென்னை:

ஐ.பி.எல். 11-வது சீசனின் ஐந்தாவது ஆட்டம் இன்றிரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் இருஅணி வீரர்களும் பலத்த பாதுகாப்புடன் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
 
201804110012260236_1_v3xswvea._L_styvpf.jpg


டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் களமிறங்கினர்.
 
201804110012260236_2_o352wqzi._L_styvpf.jpg


நரேன் 4 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஹர்பஜன் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய உத்தப்பா நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். லின் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய உத்தப்பா 29 ரன்னில் ரன் அவுட் ஆனார். ரிங்கு சிங் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் கேப்டன் தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரசல் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடி ரன் குவித்தனர். ரசல் 26 பந்தில் அரைசதம் அடித்தார். தினேஷ் கார்த்திக் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
 
201804110012260236_3_borv7hk1._L_styvpf.jpg


கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய ரசல் 36 பந்தில் 88 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதில் 11 சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும். சென்னை அணியின் வாட்சன் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, சென்னை அணி 203 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு இறங்கினர்.

முதலில் இருந்தே இருவரும் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.
ஷேன் வாட்சன் 19 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரியுடன் 42 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது அணியின்  எண்ணிக்கை 73 ஆக இருந்தது. அவரை தொடர்ந்து அம்பதி ராயுடுவும் 39 பந்துகளில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 14 ரன்னில் அவுட்டானார். அப்போது சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து களமிறங்கிய தோனியும், சாம் பில்லிங்சும் நிதானமாக ஒன்று, இரண்டாக சேர்த்தனர். இதனால் அந்த அணி 15 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் 58 ரன்கள் தேவைப்பட்டது.

முக்கியமான தருணத்தில் தோனி 25 ரன்களில் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 4 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது. 21 பந்துகளில் 53 ரன் தேவைப்பட்டது. அவரையடுத்து ரவீந்திர ஜடேஜா இறங்கினார். அதிரடியாக ஆடிய பில்லிங்ஸ் அரை சதமடித்தார். அவர் 23 பந்துகளில் 5 சிக்சர், 2 பவுண்டரியுடன் 56 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து அதிரடி வீரர் பிராவோ களமிறங்கினார்.

இறுதி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. பிராவோவும், ஜடேஜாவும் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணி சார்பில் டாம் கர்ரன் 2 விக்கெட்டும், சுனில் நரேன், குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #IPL2018 #CSKvKKR

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/10235635/1156307/Chennai-super-kings-beat-kolkatta-kinght-riders-in.vpf

Link to comment
Share on other sites

`இரண்டு இன்னிங்ஸையும் ரசிகர்கள் அணுவணுவாக ரசித்தனர்’ தோனி நெகிழ்ச்சி!

 
 

`இரண்டு இன்னிங்ஸையும் ரசிகர்கள் அணுவணுவாக ரசித்தனர்’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறினார்.

11-வது ஐபிஎல் தொடரில், நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்கள் குவித்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய அந்த அணியின் ரஸ்ஸல், 36 பந்துகளில் 88 ரன்களைக் குவித்தார்.

தோனி

photo credit: @BCCI

இதையடுத்து, 203 ரன்கள் வெற்றி இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. சிஎஸ்கே அணி வீரர்கள் நிதானமாக விளையாடினாலும், சாம் பில்லிங்க்ஸ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாம் பில்லிங்க்ஸ் 23 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றார். கடைசியில் 2 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில், ஜடேஜா சிக்ஸ் அடித்து அணியை வெற்றிபெறச்செய்தார். 19.5 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.

போட்டி முடிந்த பிறகு பேசிய தோனி, ``சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு ஆண்டுகள் கழித்து வந்து சென்னையில் வெற்றிபெற்றிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஒரு நல்ல போட்டியாக இருந்தது. இரண்டு இன்னிங்ஸையும் ரசிகர்கள் அணுவணுவாக ரசித்தனர். பேட்டிங் செய்பவர்கள் மீதும், பௌலர்கள் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். நேர்மறையான ஆற்றல் எங்கள் அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. போட்டியில் ஏமாற்றம் ஏற்படுமோ என்று உணரும்போது, அதை வெளிக்காட்டிக்கொள்ளக் கூடாது. நாங்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் அதுபோல உணர்ந்தோம். அதை நாங்கள் வெளிக்காட்டியிருந்தால், வர்ணனையாளர்களுக்கு நாங்கள் தீனி போட்டது போலாகியிருக்கும். அதனால், அதை மறைத்துக்கொண்டோம்.

 

அனைவரும் நன்றாக விளையாடினார்கள், குறிப்பாக சாம் பில்லிங்ஸின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சிறப்பாக விளையாடினார்கள். நாங்களும் ரன் கொடுத்தோம். இரு அணியின் பந்து வீச்சாளர்கள்தான் அதிகமாக கஷ்டப்பட்டார்கள். ஆனால், மொத்தத்தில் ரசிகர்களுக்கு இப்போட்டி நல்ல விருந்தாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்’’ என்று கூறினார்.

https://www.vikatan.com/news/sports/121827-the-crowd-deserved-every-bit-of-both-the-innings-said-csk-skipper-ms-dhoni.html

Link to comment
Share on other sites

ரஸலின் அத்தனை சிக்ஸ்... ஜடேஜாவின் ஒற்றை சிக்ஸ்... சொந்த குகையில் கர்ஜித்த சென்னை! #CSKvsKKR #IPL

 
 

2 ஆண்டுகள் கழித்து சென்னையில் முதல் மேட்ச். முதல் போட்டியில் மும்பையை வென்ற சந்தோஷம். நேற்றைய போட்டியும் ரொம்பவே ஸ்பெஷல்.  வழக்கம் போல, கொல்கத்தாவையும் 20வது ஓவரில் விரட்டி விரட்டி வென்றது சென்னை. அந்த வீரதீர கதையை பார்த்துவிடலாம்.

வழக்கம் போல நரேன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடிக்க ஆரம்பித்ததுதான் கொல்கத்தாவின் நல்ல நேரம். சந்தித்த முதல் 3 பந்துகளில் 2 சிக்ஸர்கள். எதுவும் கேட்ச்சோ என்றெல்லாம் யோசிக்க வைக்கவில்லை. வல்லரசை தைரியமாக வசூலரசு என கேப்டன் டேக்லைன் போட்டு ஹிட் அடித்தது போல க்ளியர் சிக்ஸ். ஆனால், நரேனின் நல்ல நேரத்துக்கு எண்ட் கார்டு போட்டார் தமிழ்ப்புலவர் ஹர்பஜன் சிங். 

அதன் பின் உத்தப்பா உக்கிர தாண்டவமாடினார். 3 சிக்ஸர்களுடன்29 ரன் எடுத்திருந்த நிலையில் ரெய்னாவின் ஒரு அபாரமான டைரக்ட் ஹிட்டில் ரன் அவுட் ஆனார். லின்னும் தன் பங்குக்கு ரன் சேர்த்தார். பர்த்டே பேபி அவர். 

சென்னை சூப்பர் கிங்ஸ்

10 ஓவரில் 89 ரன்கள் எடுத்திருந்தாலும் 5 விக்கெட்டுகளை கொல்கத்தா இழந்திருந்தது. ஆனால், அதன்பின்னர்தான் ஆட்டமே ஆரம்பம் ஆனது. ரஸலும் தினேஷ் கார்த்திக்கும் ஜோடி சேர்ந்தார்கள். எந்த சூழலிலும் கொல்கத்தாவின் ரன்ரேட் பெரிதாக குறையவில்லை. ஒரு ஹை ஸ்கோரிங் மேட்ச்சுக்கு சென்னை ரசிகர்கள் அப்போதே தயாராகிவிட்டார்கள். 

பிராவோ போட்ட 17வது ஓவர் கொல்கத்தாவுக்கு தீபாவளி போனஸ். “நானும் வெஸ்ட் இண்டீஸ்காரந்தாண்டா” என ரஸல் அடித்த சிக்ஸ் மைதானத்தை விட்டு வெளியே போய் விழுந்தது. கிரவுண்டில் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்த ஷாரூக் அது எங்கே போகிறது என கழுத்தைத் திருப்பி பார்த்தும் பயனில்லை. அது போய்க்கொண்டேயிருந்தது. அடுத்த பந்தில் ரஸல் சிங்கிள் தட்ட, “நானும் சென்னைக்காரந்தாண்டா” என தினேஷ் கார்த்திக் இன்னொரு சிக்ஸ் அடிக்க, கொஞ்சம் அடங்கிப்போனது யெல்லோ ஆர்மி. கொஞ்சம் கீழே விழுந்த ரன் கிராஃபை மீண்டும் நிமிர்த்தி வைத்தார் பிராவோ, இந்த முறை எதிரணிக்காக. 

ரஸல்

வாட்ஸன் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தையும் 6 அடித்து 50 ரன்களைக் கடந்தார் ரஸல்.  ஆனால், அந்த ஓவரில் தினேஷ் கார்த்திக் எல்.பி.டபிள்யூ ஆக, கொஞ்சம் அதிர்ந்தது சேப்பாக்கம். ஆனால் அப்போதே ஸ்கோர் 165 என்பதால் சென்னை வீரர்கள் அந்த விக்கெட்டை அதிகம் கொண்டாடவில்லை. ரஸலுக்கு என்ன வலைவிரிக்கலாம் என்பதிலே கவனமாக இருந்தார்கள். 

இன்னொருமுறை பிராவோவை நம்பினார் தோனி. ஆனால், பயனில்லை. முதல் மூன்று பந்துகளும் சிக்ஸர். அதில் ஒன்று ஜஸ்ட் மிஸ் ஆகி திரும்ப மைதானத்துக்கே வந்தது. இல்லையேல், இன்னொரு பந்து பிசிசிஐக்கு நஷ்டம் ஆகியிருக்கும். இந்த முறை திரும்பி பார்க்காமலே சிக்ஸர் என்பதை உறுதி செய்துகொண்டார் ஷாரூக்.

கடைசி ஒவர் தாகூர். இந்த ஓவரின் முதல் பந்தும் சிக்ஸ். “எவனாயிருந்தாலும் வெட்டுவேன்” மோடிலே இருந்தார் ரஸல். மூன்றாவது பந்தை எகிறி குதித்து தோனி தடுக்க, “நாங்களாம் ஸ்டேடியம்லதான் இருக்கோம்” என சத்தம் போட்டது சென்னை. அடுத்த பந்து டாட் பால். அடுத்த பந்தும் தோனி வசம் போனது. “அவுட் ஆனாலும் தப்பில்லைடா” என ஓடி வந்த ரஸுலுக்கு லக் அடித்தது. கடைசிப் பந்தை சிக்ஸருக்கு பார்சல் அனுப்பினார். அந்த சிக்ஸரின் உதவியால் 200 ரன்னை கடந்தது கொல்கத்தா.

 

200லாம் அடிக்க முடியாது என்ற சென்னை ஹேட்டர்ஸ் ட்வீட்ஸ்களுக்கு இடையில் களம் இறங்கியது ராயுடு - வாட்ஸன் ஜோடி. சினங்கொண்ட சிங்கம் என்ன செய்யும் தெரியுமா? சிக்ஸரா அடிக்கும் என்பது போல இருந்தது சூப்பர் கிங்ஸ் ஓப்பனிங் ஜோடியின் ஆட்டம். ஐந்து ஓவரில் 62 ரன்களை விளாசினர். சென்னையின் வேகமான 50 ரன்கள் இந்தப் போட்டியில்தான் அடிக்கப்பட்டிருக்கிறது. 6வது ஓவரில் இன்னொரு சிக்ஸ் அடிக்க நினைத்த வாட்ஸன் எல்லையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால், அப்போதே போதுமான டேமேஜை கொல்கத்தாவுக்கு ஏற்படுத்தியிருந்தார் அந்த ஆறடி ஆஸ்திரேலியன். 

வாட்சன்

எக்ஸ்பிரஸ் வேகத்தில் சென்ற ரன் ரேட்டை செயின் இழுத்து நிப்பாட்டினார் சுனில் நரேன். அவர் வீசிய எட்டாவது ஓவரில் நான்கே ரன்கள். மொத்தம் 83. ஸ்பின் எடுக்கிறது என அடுத்து குல்தீப் யாதவிடம் பந்தைக் கொடுத்தார் தினேஷ் கார்த்திக். பரிசு, ராயுடுவின் விக்கெட். எந்த எஃபர்ட்டும் இல்லாமல் அடிக்கப்பட்ட ஷாட் அழகாக கேட்ச் ஆனது. அதில் பவுலருக்கு எந்த கிரெடிட்டும் இல்லை. எல்லாம் ராயுடுவின் ராங் கால்குலேஷன். 

அவுட் ஆனது நல்லதுக்கு என நினைத்தது சென்னை. காரணம், களம் இறங்கியது தோனி. வந்ததும் ஏறி வந்து லாங் ஆனில் ஒரு ஷாட். ஆனால், ஒரு ரந்தான். 10வது ஓவரின் முடிவில் சென்னை 90 ரன் மட்டுமே அடித்திருந்தது. முதல் 5 ஒவரில் 62 ரன். அடுத்த ஐந்தில் 28 ரன். அதற்குள் சுரேஷ் ரெய்னாவுக்கு ஹேம்ஸ்டிரிங் பிரச்னை. அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்தவர் 12வது ஒவரில் இன்னொன்றை அடிக்க முயன்று அவுட். 12 ஓவரில் சென்னை 103க்கு 3. தோனியும் சாம் பில்லிங்க்ஸும் களத்தில்.

தோனி

பல ஓவர் சோதனைக்கு பிறகு 14வது ஓவரில் ஆக்டிவ் மோடுக்கு மாறினார் தோனி. குல்தீப் யாதவின் ஓவரில் ஒரு ஸ்டிரெயிட் பவுண்டரி, அடுத்தபால் மெகா சிக்ஸ். 200 ரன்னை சேஸ் செய்யும் உணர்வே அப்போதுதான் வந்தது. அந்த ஓவரில் 16 ரன்கள். 

அடுத்த ஓவருக்கு ஸ்பின்னர் வேண்டாம் என நினைத்தது கொல்கத்தா.குர்ரான் வீசிய ஓவரில் பில்லிங்க்ஸின் இரண்டு சிக்ஸர் உள்பட அடித்து 17 ரன் அடித்தது சென்னை. 30 பந்துகளில் 58 ரன் என்ற அடிக்கக்கூடிய சமன்பாட்டுக்கு அப்போதுதான் மேட்ச் வந்தது. அடுத்த ஓவர் மறுபடியும் நரேன். ஏழே ரன்கள். கடைசி 24 பந்துகளில் 51 ரன் தேவை. இதுவரை ஐபிஎல்லில் சுனில் நரேனின் 51 பந்துகளை எதிர்கொண்டிருக்கிறார் தோனி. அடித்தது 25 ரன்கள். அதில் ஃபோரோ, சிக்ஸோ கிடையாது.

அடுத்து, சாவ்லா ஓவர். ஹெல்மெட் இல்லாத தோனி. சென்னை ரசிகர்களின் நகங்கள் தேய்பிறை ஆகின. ஒரு ரன், வைடு என சுருதி இறங்க, பிரஷரில் தோனி அடித்த பந்து பேட்டின் விளிம்பில் பட்டு கார்த்திக்கின் கிளவுஸூக்குள் ஒளிந்துகொண்டது. தோனி அவுட். சென்னை சைலண்ட். வந்தவர் ஜடேஜா. வந்த முதல் பாலே எல்பி அப்பீல். அதே பந்தில் ஒரு ரன் அவுட் மிஸ் என ஜடேஜாவுக்கு ஏழரை சனி. 

18வது ஓவரில் இரண்டு சிங்கிளுக்கு பின் விக்கெட் கீப்பரின் தலைக்கு மேல் ஸ்கூப் சிக்ஸ் ஒன்று, பவுலரின் தலைக்கு மேல் சிக்ஸ் ஒன்று என இரண்டு சிக்ஸர்களை அடித்தார் பில்லிங்க்ஸ். ஆனால், இன்னொரு பக்கம் டாட் பாலாக தந்து வாங்கிக் கட்டிக்கொண்டார் ஜடேஜா. 13 பந்துகள். 27 ரன். அப்போதா டாட் பால் வைப்பது?

ஷாரூக்

19வது ஓவரின் முதல் பந்தில் 1 ரன் எடுத்து 50ஐ(21 பந்துகள்) தொட்டார் பில்லிங்க்ஸ். 

11 - 26 : ஜடேஜா ‘டொக்’ வைத்து 1ரன்.

10 - 25: சிக்ஸர்

 9 - 19 : பில்லிங்க்ஸ் அவுட்.

 8 - 19 : ஜடேஜா  சிங்கிள்

 7 - 18 : பிராவோ சிங்கிள்

இத்தனை சிங்கிள்ஸ் அடிக்கிற ஓவரா இது என ரசிகர்கள் புலம்பித் தள்ள, டென்ஷன் எகிறியது. கடைசி ஓவரில் 17 ரன். ஒரே ஆறுதல், ஸ்டிரைக்கர் பிராவோ. இன்னொரு ஆறுதல் பவுலிங் செய்யப் போவது வினய் குமார்

ஆபத்பாந்தவன் பிராவோ முதல் பாலே சிக்ஸ். எங்கு பட்டது, எப்படி  போனதெல்லாம் தேவையில்லை. சிக்ஸ். சேப்பாக்கம் சிதறியது. ஷாருக்கே சிரித்துவிட்டார். அது நோ பால் வேறு. ஃப்ரீ ஹிட்டை ஓங்கி அடித்தாலும் போகவில்லை. கேட்ச். ஆனால், 2 ரன்கள் ஓடிவிட்டார்கள். அடுத்த பந்தில் 2 ரன் முயல, ஜடேஜா “நான் பாத்துக்கிறேன்” என்பது போல பிராவோவைத் தடுக்க, டென்ஷன் ஆனார் பிராவோ. அங்கு வேறு யாராவது இருந்தால் ஜடேஜா மண்டையைப் பிளந்திருப்பார்கள். 4 பந்தில் 7 ரன். சென்னை டீமுக்கு ஜடேஜா என்றால் கொல்கத்தாவுக்கு வினய் குமார். வைடு போட்டார். 4 பந்தில் 6 ரன்கள் தேவை. ஜடேஜா தனக்கு தெரிந்த சிங்கிளைத் தட்ட, மீண்டும் பிராவோ. 3 பந்தில் 5. பால் மாட்டவில்லை. இன்னொரு சிங்கிள்.

தான் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்ய ஜடேஜாவுக்கு கிடைத்தது வாய்ப்பு. அதைச் சரியாக பயன்படுத்தினார். லாங் ஆனில் சிக்ஸ். சென்னை வென்றது. சேப்பாக்கம் சிரித்தது. 

ஜடேஜா

இந்தப் போட்டியில் சென்னை செய்த 3 தவறுகளை சொல்ல வேண்டும். ஹர்பஜனுக்கு இரண்டே ஓவர்கள் தான் தரப்பட்டன. வேகப்பந்தை வேகவைத்து சாப்பிட்ட ரஸலை அடக்க பஜ்ஜியை ஒருமுறை முயன்று பார்த்திருக்கலாம். இரண்டாவது, தோனி செகண்ட் டவுன் வந்தது. அதுகூட பரிசோதனை முயற்சி என சொல்லலாம். ஆனால், 17வது ஓவரில் பிராவோவை இறக்காமல் ஜடேஜாவை இறக்கியது மாபெரும் தவறு. “ஓ இதுதான் பந்தா” என்ற ரீதியிலே ஆடினார் ஜடேஜா. வின்னிங் ஷாட் அடித்தார் என்பதற்காக அதை மன்னிக்க முடியாது.

தினேஷ் கார்த்திக்கும் ஏகப்பட்ட சொதப்பல்கள். சென்ற போட்டியிலே கடைசி ஓவரில் சொதப்பிய வினய்குமாரிடம் கடைசி ஓவரைத் தந்தார். ரிவ்யூக்கள் கேட்பதில் தொடங்கி எல்லாவற்றிலும் பதற்றமாகவே இருந்தார். 200க்கு மேல் ரன், நல்ல ஸ்பின்னர்கள் கிடைத்தும் வாய்ப்பை நழுவவிட்டார் என்றே சொல்லலாம்.

போட்டியின் முடிவில் தோனியின் மனைவியிடம் சிரித்தப்படி ஏதோ சொன்னார் ஷாரூக். அது “உங்க ஏரியா… நாங்க என்ன செய்றது” என்பதாகத்தான் இருக்கும்.

https://www.vikatan.com/news/sports/121840-ipl-match-report-of-csk-versus-kkr.html

Link to comment
Share on other sites

கோலி தலைமை ஆர்சிபி அணி ஒரு ‘ஜோக்’;கமெண்ட் அடித்த இங்கிலாந்து வீரர்: காய்ச்சி எடுத்த நெட்டிசன்ஸ்

 

 
kohli

படம். | ஏ.எஃப்.பி.

இந்தியாவில் கிரிக்கெட் ஒரு கடவுள் என்பதை விட கிரிக்கெட் ஆளுமைகளை கடவுளாக வழிபடும் ரசிகர் வழிபாட்டுக் கூட்டம் உள்ளதாகவே கருத முடியும். இந்நிலையில் தங்கள் ஆளுமைகள் நிரம்பிய ஆர்சிபி அணியை ஜோக் என்று கூறினால் விட்டு விடுவார்களா சமூகவலைப் பதிவர்கள். மாட்டிக் கொண்டார் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்.

"RCB's team is a joke #IPL", என்று கோலி தலைமை சூப்பர்ஸ்டார்கள் நிரம்பிய ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஜோக் என்று வர்ணித்துள்ளார் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்.

அவ்வளவு பெரிய வீர்ர்களை வைத்துக் கொண்டு அன்று கொல்கத்தாவிடம் தோல்வி கண்டதையடுத்து அவர் இவ்வாறு கூறினாரா என்பது தெரியவில்லை.

ட்விட்டர் போட்டு முடித்து கையை எடுத்திருப்பாரோ இல்லையோ ரசிகர்கள் பென் டக்கெட்டை காய்ச்சி எடுத்துள்ளனர். ஆனால் பெரிய வீரர்கள் கொண்ட அணியை புகழ்ந்து கூறுவதற்காகவே ஜோக் என்று கூறியதாக அவர் பிற்பாடு திருத்தினாலும் ரசிகர்கள் திருப்தியடையவில்லை.

இதோ அவரை காய்ச்சி எடுத்த சில வாசகங்கள்:

“இங்கிலாந்து ஒரு தேநீர் கோப்பையாவது வென்றுள்ளதா?”

“எந்த அணி 263, 248, 235 ரன்களை எடுத்தது?”

“உங்கள் ஒரு நாள் அணி போல்...உலகக்கோப்பையை வென்றிருக்கிறீர்களா?”

“நீங்கள்தான் ஜோக் ப்ரோ, பக்குவமடையுங்கள் கிரேட் பிளேயர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளூங்கள். ஏனெனில் நீங்கள் கிரேட் ப்ளேயர் அல்ல”

“ஐபிஎல் கிரிக்கெட்டில் 11 ஆண்டுகளாக ஆர்சிபி ஆடிவருகிறது. உங்களால் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட ஆட முடியவில்லை. உங்கள் ‘ஷிட்லேண்ட்’ க்குக் கூட நீங்கள் 11 ஆட்டங்களில் ஆடியதில்லை. யார் ஜோக்”

என்று அவரை பின்னி எடுத்து விட்டார்கள். உடனேயே அவர் மன்னிப்புக் கோரும் விதமாக அந்தர் பல்டி அடித்து, “பயங்கரமான வசைகளுடன் விழித்தேன். ஆர்சிபியை ஜோக் என்றேன் அதாவது டி காக், டிவில்லியர்ஸ், மெக்கல்லம் மற்றும் பல உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளதைத்தான் நல்ல அணி என்பதை அவ்வாறு குறிப்பிட்டேன். எனக்கு எதிராக எழுந்த பதிவுகள் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல” என்று கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article23493417.ece

Link to comment
Share on other sites

ரஸல் அதிரடிக்கு பதிலடி கொடுத்த சென்னை: மகா விரட்டலில் கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே

jadeja

சிக்ஸ் அடித்து வென்ற ஜடேஜா, பாராட்டும் பிராவோ.   -  படம். | ஏ.எஃப்.பி.

பலத்த காவிரிப் போராட்டத்துக்கு நடுவே சேப்பாக்கத்தில் மீண்டும் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவின் 203 ரன்கள் என்ற மிகப்பெரிய வெற்றி இலக்கை அபாரமாக விரட்டி 205/5 என்று வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட கொல்கத்தா அணியில் முதலில் அதிரடி வீரர் சுனில் நரைன், தீபக் சாஹரை 2 மிகப்பெரிய சிக்சர்கள் அடித்து ஹர்பஜனிடம் அவுட் ஆகி வெளியேற கிறிஸ் லின் 16 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தை மேலேறி வந்து ஆட முயன்று பவுல்டு ஆனார். ராபின் உத்தப்பா லின் பவுல்டு ஆன அதே ஓவரிலேயே ஜடேஜாவை 2 சிக்சர்கள் வெளுத்துக் கட்டினார், அவர் மொத்தம் 16 பந்துகளையே சந்தித்து 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 29 ரன்கள் சாத்தினார். கடைசியில் ரெய்னாவிடம் ரன் அவுட் ஆனார். ராணா 16 ரன்களில் தோனியிடம் கேட்ச் ஆக ஆர்.கே.சிங் 2 ரன்களில் தாக்கூரிடம் காலியாக, 89/5 என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் (26) ரஸல் (88) ஆகியோர் அடித்துத் துவைத்து ஸ்கோரை 202 ரன்களுக்குக் கொண்டு வந்தனர்.

   
 

தொடர்ந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயுடு (39), வாட்சன் (42) மூலம் பவர் பிளே முடிவில் 75 ரன்களைக் குவித்து நல்ல அதிரடித் தொடக்கம் அமைத்து கொடுக்க சாம் பில்லிங்ஸ் 23 பந்துகளில் 2 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 56 ரன்களை வெளுத்துக் கட்டி டாம் கரனிடம் ஆட்டமிழந்தார்.

சென்னை ரசிகர்களின் பிரார்த்தனையை நிறைவேற்றிய வினய் குமாரின் படுமோசமான கடைசி ஓவர்: நடுவரின் திருவிளையாடல் நோ-பால்

கடைசி ஓவரில் 17 ரன்கள் என்ற இக்கட்டான நிலையில் பிராவோவிடம் ஸ்ட்ரைக். ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய வினய் குமார் பந்தை இடுப்புயர புல்டாஸாக வீச பிராவோ மட்டை முன் விளிம்பில் பட்டு லாங் லெக்கில் 3-4 வரிசைகள் சென்று தள்ளி விழுந்தது சிக்ஸ், இது இடுப்புக்கு மேல் வந்ததாக நோ-பாலும் கொடுக்கப்பட்டு, அது ஃப்ரீ ஹிட்டாகவும் ஆக அதில் 2 ரன்கள், ஆக 1 பந்தில் 8 ரன்கள் கொடுத்தார். ஆனால் அது நோபால் அல்ல, நடுவர் ஏன் நோ-பால் கொடுத்தார் என்பது சர்ச்சைக்குரியதே. நாம் முன்பே குறிப்பிட்டது போல் தோனி, கோலி, ரோஹித் சர்மா அணிகள் மோதும்போது நடுவர்களின் செயல்பாட்டை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று. இந்த நோ-பால் சூப்பர் கிங்ஸ் வெற்றியில் சாம் பில்லிங்ஸ் இன்னிங்ஸுக்கு சரிசமமான பங்களிப்பு செய்துள்ளது என்றே கூற வேண்டும்.

அடுத்த பந்து ஒரு ரன். அடுத்த பந்தை வைடு வீசினார் வினய் குமார். மீண்டும் அடுத்தடுத்து 1 ரன். 2 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி, வினய் குமார் ஒன்றுமில்லாத ஒரு லெந்த் பந்தை வீச ஜடேஜா தன் முன் காலை ஒதுக்கிக் கொண்டு ஒரே விளாசல் சிக்ஸ் ஆனது சென்னை வெற்றி பெற்றது, ரசிகர்கள் முழுதும் கடைசியில் சென்னை வெற்றிக்காக பிரார்த்தித்தபடியே இருந்தனர். அவர்கள் பிரார்த்தனையை வினய் குமார் நிறைவேற்றினார். 205/5 என்று வெற்றி பெற்றது சென்னை.

வாட்சன், ராயுடு எதிர்பாரா அதிரடித் தொடக்கம்:

வினய் குமார் முதல் ஓவரின் முதல் 2 பந்துகளில் அதிர்ஷ்டம் இல்லாதவரானார், முதல் பந்து இன்ஸ்விங்கரில் வாட்சன் பேடில் வாங்க்கினார் தப்பினார், அடுத்த பந்தே புல் ஷாட் ஆடப்பார்த்தார் பந்து மட்டையின் அடியில் பட்டு ஸ்டம்புக்கு சற்று மேல் சென்றது. ஆனால் கடைசி 3 பந்துகள் ஷார்ட் பிட்ச், புல் பிட்ச் பந்தாக அமைய 1 சிக்ஸ் 2 பவுண்டரிகள் என்று வாட்சன் பிய்த்து உதற முதல் ஓவரிலேயே 16 ரன்கள்.

watsonjpg

வாட்சன். | ஏ.பி.

 

சாவ்லா அடுத்த ஓவரை தொடங்க தினேஷ் கார்த்திக்கின் த்ரோ ஓவர் த்ரோவாக அமைய 5 ரன்களானது. அதே ஓவரில் வாட்சன் மீண்டும் ஒரு சிக்ஸ் அடிக்க 14 ரன்கள், ஆகவே முதல் 2 ஓவர்களிலேயே 30 ரன்கள். ஆந்த்ரே ரசல் அடுத்த ஓஅரில் 6 ரன்களையே கொடுத்தார், ஆனால் மீண்டும் சாவ்லாவிடம் கொடுக்க ராயுடு அழகாக கால்களைப் பயன்படுத்தி சாவ்லாவை 2 சிக்ஸ் ஒரு பவுண்டரி விளாசினார். அந்த ஓவரிலும் 17 ரன்கள், சாவ்லா 2ஓவர்களில் 31 ரன்கள். அடுத்த ரஸல் ஓவரும் 10 ரன்களுக்குச் செல்ல பவர் ப்ளே கடைசி ஓவரை டாம் கரன் வீச ஒரு புல்ஷாட் பிறகு மிடாஃபுக்கு மேல் ஒரு சிக்ஸ் என்று வெளுத்தார். ஆனால் அதே ஓவரில் புல்ஷாட்டில் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஆனால் என்ன சேதமேற்படுத்த முடியுமோ அதை ஏற்படுத்திய வாட்சன் 19 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 6 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 75 ரன்களுக்கு ஒரு விக்கெட்.

அதன் பிறகு ரஸல் ராயுடுவுக்கும், நரேன், ரெய்னா, ராயுடுவுக்கும் டைட்டாக வீச 2 ஓவர்களில் 8 ரன்கள்தான் வந்தது. 9வது ஓவரில் குல்தீப் யாதவ் வர 26 பந்துகளில் 39 எடுத்த ராயுடு ஆட்டமிழந்தார். நரைன் மீண்டும் 4 ரன்களையே கொடுக்க 10 ஓவர்களில் 90/2 என்று ஆனது. ரெய்னாவுக்கு அடுத்த ஓவரில் குல்தீப் பந்தில் டாம் கரன் கேட்சை விட்டார். அதன் பலன் கடைசி பந்தை சிக்சருக்குத் தூக்கினார் ரெய்னா.

தோனி வந்தவுடனேயே நரைன் பந்தில் கால்காப்பில் வாங்கினார். கடும் முறையீடு நடுவர் நாட் அவுட் என்றார், அன்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பிளம்ப் அவுட்டை நாட் அவுட் என்று நடுவர் கூற 3வது நடுவரிடம் தான் அவுட் வாங்க முடிந்தது, ஆனால் இன்று பந்து உயரமாகச் செல்வதாக ரீப்ளே காட்டியது. ரெய்னா நரைன் பந்தில் 14 ரன்களில் புல் ஆட முயன்று கேட்ச் ஆனார். தோனி 14 பந்துகளில் 7 ரன்கள் என்று அறுக்க ஸ்கோர் 12 ஓவர்கள் முடிவில் 103/3 என்று தடுமாறியது. 48 பந்துகளில் 100 ரன்கள் வெற்றிக்குத் தேவை.

சாம்பில்லிங்ஸ் இறங்க, தோனி அதன் பிறகு குல்தீப் யாதவ்வை நேராக ஒரு பவுண்டரியும் லாங் ஆன் மேல் ஒரு சிக்சரையும் அடித்து சென்னை ரசிகர்களை உசுப்பேற்றினார். சாம் பில்லிங்ஸ் அடுத்த ஓவரில் டாம் கரணை ஒதுங்கிக் கொண்டு எக்ஸ்ட்ரா கவரில் அடித்த சிக்ஸ் அசாதாரணமானது, பிறகு டாம் கரனும் ஒரு புல்டாஸ் வீச அதுவும் சிக்ஸ் ஆனது. சாம்பில்லிங்ஸ் வெளுத்துக் கட்ட தொடங்கினார்.

samjpg

சாம் பில்லிங்ஸ். | படம். | ஏ.எஃப்.பி.

 

இடையில் நரைன் தன் 4வது ஓவரை சிக்கனமாக வீசி 17/1 என்று முடித்தார். அன்று போலவே 4 ஓவர்களில் வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்ட போது தோனி சாவ்லா பந்தை கட் செய்ய முயன்று எட்ஜ் ஆக தினேஷ் கார்த்திக் அற்புதமாகப் பிடித்தார், தோனி நடுவர் தீர்ப்புக்காக காத்திருக்காமல் வெளியேறினார். ஆனால் தோனி 28 பந்துகளில் 25 ரன்களையே எடுத்து ஆட்டமிழந்தார், ஒருவேளை சென்னை தோற்றிருந்தால் தோனியின் ஆட்டம் மந்தமானது ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்.

தோனி ஆட்டமிழந்த பிறகு ரஸல் வீச வர சாம் பில்லிங்ஸ் மீண்டும் புல்டாஸை ஒரு சிக்சரும் பிறகு லெக் திசை பந்து ஒன்றை இன்னொரு சிக்சரும் அடித்தார். 18 ஓவர்கள் முடிவில் 176/4. பில்லிங்ஸ் 49 ரன்களில் இருந்து அடுத்த ஓவரில் டாம் கரனின் மட்டமான ஷார்ட் பிட்ச் பந்தை மிட்விக்கெடில் சிக்ஸ் தூக்க அரைசதத்தை 23 பந்துகளில் அடித்து 2 பவுண்டரிகள் 5 அசகாய சூர சிக்சர்களுடன் 56 ரன்கள் எடுத்து கரன் பந்தை லாங் ஆஃபில் உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 19 ஓவர்கள் முடிவில் 186/5. பிராவோ 1 ரன்னுடனும் ஜடேஜா 4 ரன்களுடனும் இருக்க, ஓவர் வினய் குமாரிடம் வந்தது கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்கு வினய்குமாரின் மோசமான முதல் புல்டாஸ் சிக்ஸ் அதைவிட மோசடியாக அதனை நடுவர் நோ-பால் என்று கூற இலக்கு எளிதானது ஜடேஜா சிக்ஸ் அடித்து வெற்றி பெறச் செய்தார். சாம் பில்லிங்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

வினய் குமார் 1.5 ஓவர்களில் 35 ரன்கள். 2 டாட்பால்கள், ஒரு வைடு, ஒரு நோ-பால் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்கள். இவரை உட்கார வைத்தால்தான் கொல்கத்தா இனி வெற்றி பெற முடியும்.

http://tamil.thehindu.com/sports/article23497253.ece?homepage=true

Link to comment
Share on other sites

சிஎஸ்கே அணியின் பாதியில் முடிந்த தாயகம் திரும்புதல்: சென்னை ஐபிஎல் போட்டியை நடத்த 4 நகரங்கள் தயார்:


 

 

all-ipl-2018-matches-moved-out-of-chennai

 

சென்னையில் அடுத்து நடக்கும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் நடத்த 4 முக்கிய நகரங்கள் தயராக உள்ளன.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக தமிழகத்தில்  பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.

சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால், போராட்டம் திசை திரும்பும் வகையில் அமைந்துவிடும் எனக் கூறி போட்டிகளை நடத்த அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த  சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலும் செருப்பு வீசி இடையூறு செய்யப்பட்டது.  

, சென்னையில் அடுத்து நடக்கும் ஐபிஎல் போட்டிகளை நடத்தவிடமாட்டோம் என அரசியல்கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால், சென்னையில் இருந்து போட்டிகளை வேறு நகரங்களுக்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்த தொடங்கிவிட்டனர்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகி வினோத் ராய் டெல்லியில் நிருபர்களிடம்  கூறுகையில்,  

சென்னையில் அடுத்து நடக்கும் ஐபிஎல் போட்டிகளை வேறு நகரங்களுக்கு மாற்ற ஆலோசனை செய்து வருகிறோம்.

இதற்காக 4 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. விசாகப்பட்டிணம், திருவனந்தபுரம், புனே, மற்றும் ராஜ்கோட் ஆகிய நகரங்கள் தாயாராக இருக்கின்றன  எனத் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் மாற்றப்பட்டால், போக்குவரத்து சூழலைக் கருத்தில் கொண்டும், ரசிகர்கள் எளிதாக வந்து செல்லவும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் நடத்தவே அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

 

 

http://www.kamadenu.in/news/sports/1770-all-ipl-2018-matches-moved-out-of-chennai.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner

Link to comment
Share on other sites

ஐபிஎல்-இல் விதிமீறலா?: சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டி செல்லாது என அறிவிக்கப்படுமா?: என்ன காரணம்?

 

 
RR-scoreboard0

12-வது ஓவரில் 7 பந்துகள் வீசப்பட்டதற்கு அம்புகுறியீட்டு காட்டப்பட்டுள்ள இடம்   -  படம்உதவி: ட்விட்டர்

ஹைதராபாத்தில் திங்கள்கிழமை நடந்த சன்ரைசர்ஸ் ஐதாராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெரிய விதிமீறல் நடந்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

கிரிக்கெட் விதிமுறைகளின்படி அந்த விதிமீறல் குறித்து ஏதேனும் ஒரு அணி முறையீடு செய்தால் கூட போட்டி செல்லாதாக அறிவிக்க வாய்ப்புள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிக எளிதான இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 15.5 ஓவர்களில் இலக்கை அடைந்தது.

இந்த போட்டியில் 2-வது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீசியது. அப்போது, 12-வது ஓவரை அந்த அணி வீரர் பென் லாஹ்லின் வீசினார். அப்போது, வழக்கமாக ஒரு ஓவருக்கு 6 பந்துகள் வீச வேண்டும் என்பதே கிரிக்கெட் விதிகளில் இருக்கும் முறையாகும். மற்றவகையில் வைய்ட், நோபால், ஆகியவற்றுக்கு மட்டுமே கூடுதலாக ஒரு பந்துவீசலாம். மற்றவகையில் ஒவருக்கு 6 பந்துகள் வீசுவதற்கு மட்டுமே அனுமதியாகும்.

ஆனால், பென் லாஹ்லின் வீசிய 12-வது ஓவரில் 7 பந்துகள் வீசப்பட்டுள்ளன. இந்த 7 பந்துகளிலும் ஒரு வைய்டு, நோபால் கூட வீசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் இதுவரை இரு அணிநிர்வாகத்தினராலும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படாவிட்டாலும் கிரிக்கெட் விதிமுறைகளின்படி இதுமிகப்பெரிய தவறாகும்.

களத்தில் இருக்கும் நடுவர் இதை தடுத்திருக்க வேண்டும், அல்லது லெக் அம்பயர் கவனத்திருக்க வேண்டும். மேலும், இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறைந்த ஸ்கோர் செய்ததால், எந்தவிதமான பாதிப்பும் ஒருபந்து கூடுதலாக வீசியதால் பாதிப்பு ஏற்படப்போவதில்லை.

ஒருவேளை மிகப்பெரிய ஸ்கோரை ராஜஸ்தான் அணி அடித்திருந்து, கூடுதலாக வீசப்பட்ட ஒருபந்தின் மூலம் ரன், அல்லது, விக்கெட் கிடைத்திருந்தாலோ அது போட்டியின் முடிவை மாற்றி இருக்கும்.

கிரிக்கெட் விதிமுறைப்படி ஒரு ஓவருக்கு மேல் தொடர்ச்சியாக அவரே கூடுதலாக ஒரு பந்துவீசுவது குற்றமாகும். 12-வது ஓவரில் முதல் இரு பந்துகளை வில்லியம்ஸனுக்கும், அடுத்த பந்துகளை தவாணுக்கும், அடுத் பந்தை வில்லிம்ஸனுக்கும், கடைசி இரு பந்துகள் தவாணுக்கும் வீசப்பட்டு. ஒட்டுமொத்தமாக 7 பந்துகள் வீசப்பட்டன. இந்த ஓவரில் ஒருபவுண்டரி உள்ளிட்ட 8 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதில் கூடுதலாக வீசப்பட்ட ஒருபந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து வர்ணனையிலும், இணைதளத்திலும் விவாதிக்கப்பட்டாலும், இரு அணிகளின் நிர்வாகம் தரப்பிலும் இதுவரை எந்தப் புகாரும் கூறப்படவில்லை. ஐபிஎல் நிர்வாகம், அல்லதுபிசிசிஐ அமைப்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒருவேளை யாரேனும் புகார் அளிக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

http://tamil.thehindu.com/sports/article23503032.ece

Link to comment
Share on other sites

ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்சர்கள் கொடுத்த பவுலர் யார் தெரியுமா? ரஸல் சிக்சர்கள்: சுவையான தகவல்கள்

 

 
russell

படம். | பிடிஐ

நேற்று ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான உணர்வுபூர்வமான ஆட்டத்தில் ஆந்த்ரே ரசல் புரட்டி எடுத்தார் மீண்டும் ஷேன் வாட்சன், ராயுடு, சாம் பில்லிங்ஸ் புரட்டி எடுத்தனர், இந்தப் போட்டியின் சில சுவாரசியமான புள்ளி விவரங்கள் இதோ:

ஆந்த்ரே ரஸல் நேற்று அடித்த 11 சிக்சர்களுடன் கொல்கத்தா அணி அடித்த 17 சிக்சர்கள் சேப்பாக்கத்தில் அதிகபட்சமான சிக்ஸர்களாகும், 2010-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி 17 சிக்சர்கள் அடித்தது, அப்போது முரளி விஜய் 11 சிக்சர்கள் விளாசினார்.

 

7ம் நிலையில் இறங்கி ஐபிஎல் டி20-யில் 88 ரன்கள் எடுத்த வகையில் அதிக ரன்கள் சாதனையையும் ரஸல் நிகழ்த்தினார்.முதல் போட்டியில் டிவைன் பிராவோ எடுத்த 68 ரன்கள்தான் 7-ம் நிலையில் அதிக ரன்களாக இருந்தது ரஸல் உடனடியாக பிராவோவை முறியடித்தார்.

டிவைன் பிராவோ தன் டி20 வாழ்வில் 50 ரன்களைக் கொடுத்தது இது 4வது முறையாகும். 2007 உலகக்கோப்பை டி20-யில் பிராவோவை வங்கதேசம் 2 ஓவர்களில் 34 ரன்கள் விளாசியதே பிராவோவின் படுமோசமான பந்து வீச்சாகும்.

பிராவோ நேற்று மட்டும் 7 சிக்சர்கள் விளாசப்பட்டார். இதற்கு முன்பாக 5 சிக்சர்கள்தான் அதிகபட்சமாக விளாசப்பட்டிருந்தார்.

இது மட்டுமல்லாது ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசப்பட்ட பவுலர் என்ற எதிர்மறைச் சாதனைக்கும் பிராவோ சொந்தக்காரரானார், இதுவரை பிரவீண் குமாரைத்தான் 104 சிக்சர்கள் புரட்டி எடுத்துள்ளனர், பிரவீண் குமாரை நேற்று கொடுத்த 7 சிக்சர்கள் மூலம் பிராவோ பின்னுக்குத் தள்ளி 107 சிக்சர்கள் வழங்கிய அபூர்வ சிந்தாமணியானார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 200க்கும் மேலான இலக்கை வெற்றிகரமாக விரட்டியது நேற்று 2வது முறையாகும். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிதான் இதில் முன்னிலை வகிக்கிறது, இந்த அணி 3 முறை 200க்கும் மேற்பட்ட இலக்கை வெற்றிகரமாக விரட்டியுள்ளது.

இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை நடந்த 5 போட்டிகளுமே 2வதாக பேட் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் மொத்தம் 31 சிக்சர்கள் விளாசப்பட்டன. இது ஏற்கெனவே உள்ள ஐபிஎல் சாதனையை சமன் செய்துள்ளது.

7ம் நிலையில் ரஸல் எடுத்த 88 ரன்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில்தான் அதிகபட்சமானது, சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கான் வீரர் மொகமது நபி 7ம் நிலையில் ஒரு முறை அயர்லாந்தைப் புரட்டி எடுத்து 89 ரன்கள் விளாசியது தனிக்கதை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அதிகபட்ச இலக்கை விரட்டி வெற்றி பெற்ற அணி என்ற சாதனையையும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிகழ்த்தியது.

http://tamil.thehindu.com/sports/article23501725.ece

Link to comment
Share on other sites

‘டேக் இட் ஈஸி’: கேகேஆர் தோல்விக்குக் காரணமான வினய் குமார் கூல்

 

 
vinay%20kumar

கடைசி ஓவரில் ‘பேமஸ்’ ஆன வினய் குமார்.   -  கோப்புப் படம். | கே.ஆர்.தீபக்

சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதல் ஓவரையும், கடைசி ஓவரையும் மோசமாக வீசி தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தாவுக்கு தோல்வி தேடித்தந்த வினய் குமார் தன்பவுலிங் குறித்து கூலாக டிவீட் செய்துள்ளார்.

சிஎஸ்கே அணி 203 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய போது முதல் ஓவரை வீசிய வினய் குமார் 16 ரன்களை கொடுத்தார். அதன் பிறகு அவரை தினேஷ் கார்த்திக் பந்து வீச அழைக்கவில்லை. பிறகு கடைசி ஓவரை வீச அழைக்கப்பட்டார், இது கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் அனுபவமின்மையைக் காட்டியதாக கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டாம் கரன் கடைசி ஓவர்களை நன்றாக வீசுபவர், ஆனால் சாம் பில்லிங்சும் இங்கிலாந்து என்பதால் டாம் கரனை நன்றாக அறிந்திருந்தார், ஆனால் புதிதாக இறங்கிய பிராவோ, தடுமாறிய ஜடேஜா நிச்சயம் டாம் கரனை அடித்திருக்க முடியாது என்ற கருத்துகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் டாம் கரன் தன் 4 ஓவர்கள் கோட்டாவை முடிக்கவில்லை, அவரை கடைசி ஓவர் வீசுமாறு தினேஷ் கார்த்திக் ஓவர்களை அளித்திருக்க வேண்டும், ஆனால் தினேஷ் கார்த்திக் அப்படிச் செய்யவில்லை.

ஒரு முறை ஷார்ஜாவில் ஜாவேத் மியாண்டட் கடைசி பந்தில் சேத்தன் சர்மாவை சிக்ஸ் அடித்து வென்ற போது கபில்தேவுக்கு கணிதப்பாடத்தில் டியூஷன் தேவை என்று கிண்டல் செய்யப்பட்டது. மேலும் வினய் குமார் பந்து வீச்சு வரலாறு தெரிந்தவர்கள் கடைசி ஓவரை அவரிடம் அளித்திருக்க மாட்டார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தோல்விக்குக் காரணமான வினய் குமார் தன் டிவிட்டர் பதிவில்,

“டேக் இட் ஈசி கய்ஸ். இது ஒரு கேம் அவ்வளவுதான். ஆர்சிபி அணிக்கு எதிராக 9 ரன்களை விட்டுக் கொடுக்காமல் தடுத்த போதும், மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 10 ரன்களை விட்டுக் கொடுக்காமல் தடுத்த போதும் இப்போது என்னை விமர்சிப்பவர்கள் எங்கு இருந்தீர்கள்? சில வேளைகளில் தவறுகள் ஏற்படுவது சகஜம்” என்று ட்வீட் செய்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article23502598.ece

Link to comment
Share on other sites

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 153/5 - மழையால் ஆட்டம் நிறுத்தம்

 
அ-அ+

ஜெய்ப்பூரில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 17.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ள போது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. #IPL2018 #RRvsDD

 
 
 
 
ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 153/5 - மழையால் ஆட்டம் நிறுத்தம்
 
ஜெய்ப்பூர்:

ஐபிஎல் 11வது சீசனின் ஆறாவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற டேர் டெவில்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரகானேவும், டி ஷார்ட் ஆகியோர் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 11 ஆக இருந்தபோது ஷார்ட் 6 ரன்களில் ரன் அவுட்டானார்.

201804112301563571_1_exwhb0sa._L_styvpf.jpg

அடுத்து இறங்கிய பென் ஸ்டோக்ஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சனும், ரகானேவும் நிதானமாக ஆடினர். இதனால் இந்த ஜோடி 50 ரன்களை கடந்தது.

அணியின் எண்ணிக்கை 90 ஆக இருந்தபோது, சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். அவர் 22 பந்தில் 37 ரன்களில் அவுட்டானார். அடுத்து ஜோஸ் பட்லர் இறங்கினார். பொறுப்பாக ஆடிய ரகானே 45 ரன்களில் அவுட்டானார். பட்லர் 18 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்திருந்தது.

201804112301563571_2_wao0qgfb._L_styvpf.jpg

ராஜஸ்தான் அணி 17.5 ஓவரில் 153 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ராகுல் திரிபாதி 15 ரன்களுடனும், கவுதம் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

டெல்லி டேர் டெவில்ஸ் சார்பில் ஷபாஸ் நதிம் 2 விக்கெட்டும், போல்ட், ஷமி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/11230156/1156529/rain-stopped-play--rajasthan-royals-1535-in-175-overs.vpf

Delhi need 71 runs in six overs

டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 ஓவர்களில் 71 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

ராஜஸ்தான் ராயல்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது 

சென்னை அணியின் மைதானமாக புனே தேர்வா? என்ன சொல்கிறார் ராஜிவ் சுக்லா

 
 

சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தின் சொந்த மைதானமாக புனே தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

14_23295.jpg

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. அதன் ஒருபகுதியாக ஐ.பி.எல் போட்டிகளை தமிழகத்தில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று, சென்னை - கொல்கத்தா போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கத்தைச் சுற்றிலும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போட்டியின் இடையே, மைதானத்தின் உள்ளே செருப்பு வீசப்பட்டது. இதனால் பரபரப்பு நிலவுவதால் தொடர்ந்து சென்னையில் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தநிலையில், சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் புனே மைதானத்துக்கு மாற்றப்படலாம் என ஐ.பி.எல் சேர்மன் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,  ``ஐ.பி.எல் போட்டிகளுக்கு போதுமான அளவில் பாதுகாப்பு அளிக்கமுடியாது என்று சென்னை காவல்துறையினர் தெரிவித்தனர். அதனால், போட்டிகள் இடமாற்றம் செய்யப்படுகிறது.

 

பல இடங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் போட்டிகள் புனே மைதானத்துக்கு மாற்றப்படவே வாய்ப்பு அதிகம். இதுகுறித்து ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பின்னரே தகவல்கள்  தெரிவிக்கப்படும்' என்று தெரிவித்தார். முன்னதாக தலைமை பயிற்சியாளர் பிளமிங் மற்றும் கேப்டன் தோனி இருவருக்கும் மிகவும் பழக்கப்பட்ட மைதானமாக புனே மைதானம் திகழ்வதால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் பரவி வருகிறது.

https://www.vikatan.com/news/sports/121922-csks-matches-shifted-from-chennai-to-pune-due-to-unrest-over-cauvery-issue.html

Link to comment
Share on other sites

சுரேஸ் ரய்னா எதிர்வரும் இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார்

Suresh-Raina.jpg?resize=644%2C362
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான சுரேஸ் ரய்னா உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ரய்னா, எதிர்வரும் இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தசைப்பிடிப்பு உபாதையினால் ரய்னா பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை சுப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

இதன்படி, கிங்ஸ் இலவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ரய்னா பங்கேற்க மாட்டார். அண்மையில் கொல்கொத்த நைட் ரைடர்ஸ் அணியுடன் நடைபெற்ற போட்டியின் போது ரய்னா உபாதையினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

http://globaltamilnews.net/2018/74690/

Link to comment
Share on other sites

வெளுத்த சாம்சன்... ஒதுங்கிய கம்பீர்... ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது எப்படி?! #RRvsDD

 
 

டெல்லி, ராஜஸ்தான் என முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இரண்டு அணிகள்... இரண்டாவது போட்டியில் நிச்சயம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயம். குறிப்பாக சொந்த மண்ணில் வென்றுவிட வேண்டும் என்கிற ராஜஸ்தானின் துடிப்பு என கடுமையான மோதலை எதிர்பார்த்தே ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு #RRvsDD இடையேயான போட்டி தொடங்கியது! 

#RRvsDD

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் கெளதம் கம்பீர் முதலில் பெளலிங்கைத் தேர்ந்தெடுக்க, பேட்டிங் செய்ய வந்தது ராஜஸ்தான். ஒருநாள் போட்டிகளில் சர்வசாதாரணமாக 300 ரன்களுக்கு மேல் அடிக்கக்கூடிய பிட்ச் என்பதால்தான் கம்பீர் முதலில் பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. ட்ரென்ட் பெளல்ட், நதீம், கிறிஸ் மோரிஸ், ஷமி, டெவாட்டியா என வெரைட்டியான பெளலர்களுடன் களம் இறங்கியது டெல்லி.

இதனால் ஆரம்ப கட்ட ஓவர்களில் அதிகம் திணறியது ராஜஸ்தான். கேப்டன் அஜங்கியா ரஹானே மட்டும் கவனமாக பேட்டிங் செய்ய ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷார்ட் 6 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த இங்கிலாந்தின் சூப்பர் ஸ்டார் பென் ஸ்டோக்ஸால் டெல்லியின் பெளலிங்கை எதிர்கொள்ள முடியவில்லை. 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்த ஸ்டோக்ஸ், ட்ரென்ட் பெளல்ட்டிடம் சிக்கினார். 12 பந்துகளில் 17 ரன்கள் அடித்திருந்த நிலையில் நான்காவது ஓவரின் முதல் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ஸ்டோக்ஸ்.

இரண்டாவது டவுன் பேட்ஸ்மேனாக களத்துக்குள் வந்தவர் ராஜஸ்தான் அணியின் செல்லப்பிள்ளை சஞ்சு சாம்சான். ஆரம்பமே அதிரடிதான். பேட்டிங் வந்து முதல் பந்தை மிஸ் செய்தவர் இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். பேக்வேர்ட் பாயின்ட்டுக்குச் சென்றது பந்து. அடுத்த பந்து இன்னும் உக்கிரமாக எதிர்கொண்டார் சாம்சன். ஸ்விங்காகி வந்த பந்தை ஸ்கொயர் லெக்கில் பறக்கவிட்ட சாம்சனுக்கு சிக்ஸர் கிடைத்தது. 

இந்தப் பக்கம் சாம்சன் கொளுத்திக்கொண்டிருக்க அடுத்தப் பக்கம் பக்குவ ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார் ரஹானே. மோரிஸின் பந்துகளை சாம்சன், ரஹானே இருவருமே அடித்து ஆடவில்லை. 8-வது ஓவரை வீசிய டெல்லியின் டெவாட்டா மிகச்சிறப்பாக பந்துவீசினார். ரஹானே, சாம்சன் இருவராலும் சிங்கிள்ஸ்தான் எடுக்க முடிந்ததே தவிர அடித்து ஆட முடியவில்லை. 

#RRvsDD

ஆனால், 9-வது ஓவரில் மீண்டும் உக்கிரமானார் சாம்சன். நதீமின் முதல் பந்தே டீப் மிட்வெக்கெட் ஏரியாவுக்குப் பறந்து சிக்ஸர் ஆனது. அடுத்தபந்து ஸ்லிப் திசையில் உருண்டு பவுண்டரி ஆனது. ஆனால், 11-வது ஓவரில் நதீமின் பந்துவீச்சிலேயே அவுட் ஆனார் சாம்சன். பேட்டின் முனையில் பட்டுத் தெறித்த பந்து ஆஃப் ஸ்டம்ப்பில் போய் விழ விக்கெட்டை இழந்தார் சாம்சன். மீண்டும் நதீமின் ஓவரிலேயே ஆட்டம் இழந்தார் கேப்டன் ரஹானே. 40 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்தார் ரஹானே. ஆனால், இவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வருவதைவிட 2 டவுன் பேட்ஸ்மேனாக வருவதுதான் ஸ்பின்னர்களை அடித்து ஆட சிறப்பாக இருக்கும். அடுத்தடுத்த போட்டிகளில் ரஹானே கீழே இறக்கப்படுவார் என்றே எதிர்பார்க்கலாம்.

ரஹானே, சாம்சன் வீழ்ந்தாலும் ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டம் டெல்லியைக் கலங்கடித்தது. 2 சிக்ஸர், 2 பவுண்டரி என 18 பந்துகளில் 29 ரன்கள் குவித்தார் பட்லர். த்ரிபாதியும், கெளதமும் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோதுதான் மழை குறுக்கிட்டது. 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களில் இருந்தது ராஜஸ்தான். அப்போது நேரம் இரவு 9.23 மணி. மழை வெளுத்து வாங்க டெல்லியின் ஓவர்கள் குறைந்துகொண்டே போயின.

இறுதியாக மழை நின்று கவர்கள் பிட்ச்சில் இருந்து எடுக்கப்பட்டபோது நேரம் 11.30 மணி. மைதானம் உலர்ந்து விளையாடலாம் என டெல்லி பேட்டிங் ஆடவந்தபோது நேரம் நள்ளிரவு 11.55 மணி. 2 ஓவர்கள் மட்டுமே பவர்பிளே, 3 பெளலர்கள் அதிகபட்சம் 2 ஓவர்கள் வீசலாம் என்கிற நிலையில் டெல்லி அணிக்கு 6 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல்லும், நியூசிலாந்தின் காலின் முன்ரோவும் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர். 

#RRvsDD

சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாத, ஆனால், சீனியர் வீரரான பெங்களூருவின் கிருஷ்ணப்பா கெளதம்தான் ராஜஸ்தான் அணிக்காக முதல் ஓவரை வீசினார். மேக்ஸ்வெல்லுக்கு கெளதமா, மேக்ஸ்வெல் நிச்சயம் சிக்ஸர்களை சிதறவிடுவார் என கமென்ட்ரிகள் பறக்க, முதல் பந்திலேயே விக்கெட். கெளதம் வீசிய பந்து மேக்ஸ்வெல்லின் பேட்டில் பட்டு ஓட, ரன் எடுக்க ஓடிவந்தார் முன்ரோ. ஆனால், மேக்ஸ்வெல் அவரைப் பாதியிலேயே திருப்பி அனுப்ப, ஒரு பந்தைக்கூட சந்திக்காமலேயே டைமண்ட் டக்காகி ஆட்டத்தைவிட்டு வெளியேறினார் முன்ரோ. அடுத்துவந்தார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான 20 வயது ரிஷப் பன்ட். ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்பதால், எடுத்த உடனே அதிரடி ஆட்டம் ஆடினார் பன்ட். 2 பவுண்டரிகள் கிடைத்தன. முதல் ஓவரின் முடிவில் 10 ரன்கள் எடுத்தது டெல்லி. ஆனால், அடுத்த ஓவர்தான் ராஜஸ்தானின் வெற்றியை உறுதிசெய்த ஓவர்.

குல்கர்னி வீசிய பவர்பிளேவின் இரண்டாவது ஓவரை சமாளிக்க முடியாமல் மேக்ஸ்வெல், பன்ட் இருவருமே திணறினர். வெறும் 5 ரன்கள் மட்டுமே இந்த ஓவரில் டெல்லி பேட்ஸ்மேன்களால் எடுக்க முடிந்தது. நான்கு ஓவரில் அதாவது 24 பந்துகளில் 56 ரன்கள், பவர்பிளே ஓவர்களும் முடிந்துவிட்டது என்பதால் அதிகப்படியான பிரஷரில் தத்தளித்தனர் மேக்ஸ்வெல்லும், பன்ட்டும். உனத்கட் வீசிய இந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளிலுமே ரன் எடுக்க முடியாமல் திணறினார் மேக்ஸ்வெல். அதனால் ரன்ரேட் இன்னும் உயர்ந்தது. ஆனால், அடுத்த மூன்று பந்துகளில் 4,6,4 என 14 ரன்கள் குவித்தார் மேக்ஸ்வெல். 

18 பந்துகளில் 42 ரன்கள் எடுக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் பென் லாலின் பந்துவீசினார். முதல் மூன்று பந்துகளில் 5 ரன்கள் கிடைக்க, நான்காவது பந்தை அடித்து ஆட முயன்றார் மேக்ஸ்வெல். திடீரென லாலின் ஸ்லோ பால் வீசியதால் வேகமாக சுழற்றிய மேக்ஸ்வெல்லின் பேட்டில் பந்து டாப் எட்ஜில் பட்டு கேட்ச்சானது. மேக்ஸ்வெல் விழ, டெல்லியின் வெற்றிக்கான முயற்சிகளும் விழுந்தன. 

 

#RRvsDD

12 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டது டெல்லி. பன்ட்டும், மோரிஸும் களத்தில் நிற்க பன்ட் மட்டும் சில பவுண்டரிகள் அடித்தார். ஐந்தாவது ஓவரின் இறுதியில் அவரும் தனது விக்கெட்டைப் பறிகொடுக்க, ஒரு ஓவருக்கு 25 ரன்கள் எடுக்க வேண்டும் எனக் கிட்டத்தட்ட வெற்றிபெற முடியாத நிலைக்குப் போனது டெல்லி. அடுத்துவந்த தமிழக வீரர் விஜய் ஷங்கரும் ஆட்டம் இழக்க 6 ஓவர்களின் முடிவில் 60 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது டெல்லி.

ஆக்ரோஷ வீரரும், கேப்டனுமான கெளதம் கம்பீர் பேட்டிங் ஆட வரவேயில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடி அரைசதம் அடித்த கம்பீர், இந்த 6 ஓவர் போட்டிக்கு பேட்டிங்குக்கே வராமல் ஒதுங்கிக்கொண்டார். ஃபார்மில் இருந்த பேட்ஸ்மேனான கெளதம் 6 ஓவரில் இந்த டார்கெட்டை அடிக்கமுடியாது என நம்பிக்கை இழந்ததுதான் டெல்லியின் முதல் தோல்வி.  

தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியடைந்திருக்கும் டெல்லி இப்போது புள்ளிகள் பட்டியலில் இறுதியிடத்தில் இருக்கிறது. டெல்லி மீண்டு வரவேண்டும் என்றால் முதலில் கெளதம் கம்பீருக்கு தன் மீதும், தன் அணியின் மீதும் நம்பிக்கை வர வேண்டும்!

https://www.vikatan.com/news/sports/121975-rajasthan-royals-beats-delhi-daredevils-in-rain-affected-game.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதையெல்லாம் மீண்டும் மீண்டும் அரைக்க வேண்டிய நிலையில் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள் எனும் போது..நேரம் விரயமாக்காமலே இருந்து விடத் தோன்றுகிறது😇.
    • படம் இல்லாத இலங்கைப் பயணம் - மூன்று ---------------------------------------------------------------------- இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமே கோவிலுக்கு போவது தான் என்று பல நாட்களாகவே மனதில் பதிய வைக்கப்பட்டிருந்தது. அம்மன் கோவிலின் 15 நாட்கள் திருவிழாவில் சரி நடுவில் போய் அங்கே இறங்கியிருந்தோம்.   எல்லா ஊர்களிலும் அவர்களின் ஊரையும், ஊர்க் கோவில்களைப் பற்றியும் பெருமையான கதைகள் இருக்கும். இங்கும் அதுவே. உலகிலேயே ஒரு சிவன் கோவிலும், ஒரு அம்மன் கோவிலும் அருகருகே இருந்து, ஒரே பொது வீதியை கொண்டிருப்பது இரண்டே இரண்டு இடங்களில் தான் இருக்கின்றது என்று சொல்வார்கள். அதில் ஒன்று இங்கு. அம்மன் கோவிலின் தெற்கு வீதியும், சிவன் கோவிலின் வடக்கு வீதியும் ஒன்றே. சிவன் கோவில் பிரமாண்டமானது. அது தலைவர் அவர்களின் குடும்பக் கோயில் என்ற வரலாறு கிட்டத்தட்ட எல்லோருக்குமே தெரியும். இன்றும் அவர்களின் குடும்பமே சிவன் கோவிலின் சொந்தக்காரர்களும், நிர்வாகிகளும்.   சிவன் கோவிலின் பிரமாண்டம் அதைக் கட்டியவர்கள் ஒரு காலத்தில் இருந்த செல்வாக்கான, மிக வசதியான நிலையைக் காட்டுகின்றது. இன்று அந்தக் கோவிலின் உள்ளே நிற்கும் போது, கோவிலுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய செய்யாமல் விடப்பட்டிருக்கின்றன என்றே தோன்றியது. இன்றைய நிலையில் அவர்களால் எல்லாப் பணிகளையும் செய்வது இயலாத காரியம். ஆட்பலமும் இல்லை, பலரும் இடம் பெயர்ந்து போய்விட்டனர். ஒரு தனியார் கோவிலாகவே சதாகாலமும் இருந்த படியால், பெரிய வரும்படியும் என்றும் இருந்ததில்லை என்று நினைக்கின்றேன். அவர்களும் அதை எதிர்பார்த்ததும் இல்லை. ஆனாலும் எக் காரணம் கொண்டும் அவர்கள் அந்தக் கோவிலை வேறு எவரிடமும் கொடுக்கமாட்டார்கள். புரிந்து கொள்ளக் கூடிய பெருமையே.   அம்மன் கோவில் பொதுக் கோவில். சிவன் கோவில் அளவிற்கு கட்டுமானத்தில் பிரமாண்டமானது இல்லை. ஆனால் இதுவும் ஒரு பெரிய கோவில். ஊரே பயந்து பணியும் தெய்வம் அங்கு குடியிருக்கின்றது என்பது பெரும்பாலான ஊரவர்களின் நம்பிக்கை. இங்கு வளரும் காலத்தில் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை, ஆனாலும் அடி மனதில் ஒரு பயம் என்றும் தங்கியிருந்தது. இருட்டில் பேய்க்கு பயப்படுவது போல. அம்மை, பொக்குளிப்பான் போன்ற நோய்கள் அதிகமாக வரும் சித்திரை, வைகாசி மாதங்களில் கோவில் திருவிழா நாட்கள் வருவதும் 'சாமி, கண்ணைக் குத்தும்' என்ற பயத்தை உண்டாக்கி வைத்திருந்தது.   இந்த ஊரவர்கள் படம் பார்க்க கடல் கடந்து தமிழ்நாடு போய் வருவார்கள், அம்மன் திருவிழாவிற்கு சேலைகள் எடுக்க போய் வருவார்கள், வேட்டைத் திருவிழா அன்று நடக்கும் வாண வேடிக்கைக்கு வெடிகளும், வாணங்களும் எடுத்து வர போய் வருவார்கள் என்பன பல வருடங்களின் முன்னர் நிகழ்ந்த உண்மையான நிகழ்வுகளே.   திருவிழா நாட்களில் பூசைகள் நீண்டவை. சில மணித்தியாலங்கள் எடுக்கும் ஒவ்வொரு பகல் பூசையும், இரவுப் பூசையும். மக்களில் எவருக்கும் நேரம் பற்றிய உணர்வு ஒரு துளி கூட இருக்கவில்லை என்றே எனக்குப் பட்டது. அத்துடன் பூசைகள் பல காரணங்களால் மிகவும் பிந்தி விடுகின்றது அல்லது அதிக நேரம் எடுத்து விடுகின்றது. ஆனாலும் 'இன்று கொஞ்சம் பிந்தி விட்டது...' என்ற ஒரு வரியுடன் எல்லோரும் கடந்து போகின்றனர். கோவிலை சுற்றி மூன்று மடங்களில் அன்னதானம் கொடுக்கப்படுகின்றது. நாங்கள் சிறு வயதில் இருந்த காலங்களில், பல திருவிழாக்களின் போது ஒரு மடத்தில் கூட அன்னதானம் கொடுக்கப்பட்டதில்லை. இன்று புலம் பெயர்ந்தவர்களே அன்னதான உபயம். அன்றைய உபயகாரர்களின் பெயர்கள் மடங்களிற்கு வெளியே அறிவிப்புக்களாக எழுதப்பட்டிருக்கின்றது.   மிகவும் ஆச்சாரம் பார்ப்பார்கள். கோவில் வீதியில் கூட மேல் சட்டை அணிய முடியாது. அப்படி மீறி அணிந்திருந்தால், யாராவது வந்து ஏதாவது சொல்லுவார்கள். தாங்க முடியாத வெக்கையும், வேர்வையும் என்று வெளியே முன் வீதியில் இருந்த வேப்ப மரத்தின் கீழ் வந்து நின்றேன். வேறு சிலரும், வயதானவர்கள், அங்கே இருந்த ஒரு திண்ணையில் ஏற்கனவே முடியாமல் அமர்ந்திருந்தனர். அதற்குப் பின்னே ஒரு மடம் இருந்தது. ஒருவர் வந்து அருகே நின்றார். சிறிது நேரம் பேசாமல் நின்றவர் மெதுவாக ஆரம்பித்தார்.   'தம்பி, இந்த மேல் சட்டை போடக் கூடாது என்று சொல்வது எல்லாம் அந்த நாட்களில் அவர்கள் செய்த சதி' என்றார். இவர் சொல்லும் அந்த 'அவர்கள்' யாராக இருக்கும் என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முதலில் இவர் யார் என்று எனக்குத் தெரியாது, நான் யாரென்றும் அவருக்கும் தெரிந்திருக்காது. ஆனாலும், எங்கள் இருவருக்குமிடையில் நிச்சயம் ஒரு தொடர்பு, உறவுமுறை இருக்கும். 'யார் பூணூல் போட்டிருக்கின்றார்கள், யார் போடவில்லை என்று பார்ப்பதற்கே இந்த மேல் சட்டையை கழட்டும் வழக்கம் வந்தது' என்றார். பெரியாரின் சீடர் ஒருவர்! சும்மா வெறுமனே இருவரும் பேசி விட்டு போக வேண்டியது தான், வெக்கை தெரியாமல் நேரம் போக இந்தப் பேச்சு உதவுமே தவிர ஒரு மாற்றமும் ஏற்படாத, ஏற்படுத்த முடியாத விடயங்களில் இதுவும் ஒன்று.   காலை பத்து மணிக்கு ஆரம்பித்த பூசை முடியும் போது கிட்டத்தட்ட இரண்டு மணி ஆகிவிட்டது. அதற்குப் பிறகு மடத்தில் அன்னதானம். மடத்தில் வயது போனவர்கள் இருப்பதற்கு சில கதிரைகளும், ஒன்றிரன்டு வாங்கில்களும் போட்டிருந்தனர். மற்றவர்கள் நிலத்தில் சம்மணம் போட்டே இருக்கவேண்டும். நிலத்தில் இருந்து சாப்பிட்டு விட்டு எழும்பும் போது சிரமமாகவே இருந்தது. போதாக்குறைக்கு அந்த வாரம் கரப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் அடிபட்டு இடது முழங்கால் சில்லில் ஒரு சிறிய வெடிப்பு ஏற்பட்டிருந்தது. விமானப் பயணம் நல்லதல்ல என்ற மருத்துவர்களின் ஆலோசனையை மீறியே பயணம் போய்க் கொண்டிருந்தது.   தினமும் மதியமும், இரவும் இதுவா நிலைமை என்ற நினைப்பு கண்ணைக் கட்டியது.   (தொடரும்..........)    
    • இல்லாத விடுதலை புலிகளை பார்த்து இன்னும் ஹிந்தியா வுக்கு பயம்...,  தமிழர்கள் Now: அந்த பயம் இருக்கனும்🔥🔥  
    • ஏதோ ஒரு நாட்டின் சரணாகதியாகத் தானே அரசு போகிறது. சீனாவாக இருந்துட்டு போனால் என்ன?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.