Jump to content

Recommended Posts

மும்பை இந்தியன்ஸ் அணியிடம் போராடி வீழ்ந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. #IPL2018 #MIvKXIP #VIVOIPL

 
மும்பை இந்தியன்ஸ் அணியிடம் போராடி வீழ்ந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
 
 
மும்பை:
 
ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முக்கியமான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
 
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. குருணால் பாண்டியா 23 பந்தில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பொல்லார்டு 23 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி பந்துவீச்சில் ஆண்ட்ரூ டை 4 விக்கெட் வீழ்த்தினார். இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 187 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.
 
அதைத்தொடர்ந்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். ஹர்திக் பாண்டியா வீசிய 3-வது ஓவரில் பஞ்சாப் வீரர்கள் ஒரு சிக்ஸர் மற்றும் மூன்று பவுண்டரிகள் உட்பட 19 ரன்கள் கிடைத்தது. 4-வது ஓவரை மிச்செல் மெக்லினெகன் வீசினார். அந்த ஓவரில் கிறிஸ் கெயில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 
 
அதன்பின் ஆரோன் பிஞ்ச் களமிறங்கினார். அவர் ராகுலுடன் இணைந்து பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தார். சிறப்பாக விளையாடிய ராகுல் 36 பந்தில் அரைசதம் அடித்தார். பிஞ்ச் 35 பந்தில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அக்ஸார் பட்டேல் களமிறங்கினார். பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 3 ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்டது.
 
ராகுல் 60 பந்தில் 94 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். அதன்பின் யுவராஜ் சிங் களமிறங்கினார். கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. 
 
கடைசி ஓவரை மிச்செல் மெக்லினெகன் வீசினார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்து கொண்டது. மும்பை அணி பந்துவீச்சில் பும்ரா 3 விக்கெட்களும், மிச்செல் மெக்லினெகன் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். #IPL2018 #MIvKXIP #VIVOIPL

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/17001315/1163633/IPL-Mumbai-Indians-beat-Kings-XI-Punjab-by-3-runs.vpf

Link to comment
Share on other sites

  • Replies 592
  • Created
  • Last Reply

ஐபிஎல் போட்டிக்கு பின்னர் அணி மாறிய பஞ்சாப், மும்பை வீரர்கள்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி முடிந்த பின்னர் பஞ்சாப் அணியின் ராகுலும், மும்பை அணியின் ஹர்திக் பாண்டியாவும் தங்களது ஜெர்சிக்களை மாற்றி அணிந்து கொண்டனர். #IPL2018 #KLRahul #HardikPandya #MIvKXIP

 
ஐபிஎல் போட்டிக்கு பின்னர் அணி மாறிய பஞ்சாப், மும்பை வீரர்கள்
 
 
மும்பை:
 
மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை செய்தன. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 
 
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ராகுல் 94 ரன்கள் எடுத்தார். இருப்பினும் அவரால் பஞ்சாப் அணியை வெற்றி பெற செய்ய முடியவில்லை. இந்த போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் சந்தித்து பேசிக்கொண்டனர்.
 
அப்போது பஞ்சாப் அணியின் ராகுலும், மும்பை அணியின் ஹர்திக் பாண்டியாவும் சிறிது நேரம் உறையாடினர். அதைத்தொடர்ந்து இரு வீரர்களும் தங்களது ஜெர்சிக்களை மாற்றிக்கொண்டனர். ராகுல் மும்பை அணியின் ஜெர்சியையும், பாண்டியா பஞ்சாப் அணியின் ஜெர்சியையும் அணிந்து கொண்டனர்.
 
201805170611154193_1_DdV7bDkWkAA3k6Q._L_styvpf.jpg
 
பொதுவாக கால்பந்து போட்டிகளில் வீரர்கள் இதுபோன்று ஜெர்சிக்களை மாற்றிக்கொள்வது வழக்கம். ஆனால் கிரிக்கெட் போட்டியில் இரு வீரர்களும் இதுபோன்ற செயலில் ஈருபட்டதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். #IPL2018 #KLRahul #HardikPandya #MIvKXIP 

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/17061115/1163653/IPL-KL-Rahul-Hardik-Pandya-change-shirts-after-the.vpf

Link to comment
Share on other sites

ராகுல் 94 ரன் வீண்: அஸ்வினின் கேள்விக்குரிய கேப்டன்சியில் பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்த மும்பை

 

 
bumrah

அற்புத வீச்சாளன் பும்ரா.   -  படம். | ஏ.பி.

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 2018-ன் 50வது போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் கே.எல்.ராகுலின் தனிப்பட்ட முயற்சி வீணாக கிங்ஸ் லெவன் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.

இதன் மூலம் ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது, அடுத்த போட்டியையும் கிங்ஸ் லெவன் தோற்றால் இதுவும் 12 புள்ளிகளுடன் மற்ற அணிகளுடன் கும்மியடிக்க வேண்டியதுதான், ஆனால் பிளே ஆஃப் வாய்ப்பு மும்பை இந்தியன்ஸுக்கே செல்லும். அதைத்தான் சில கேள்விக்குரிய கேப்டன்சியில் அஸ்வின் தலைமை கிங்ஸ் லெவன் பஞ்சாப் செய்தது.

     
 

டாஸ் வென்று முதலில் மும்பையை பேட் செய்ய அழைத்தார் அஸ்வின் அந்த அணி 59/3, 71/4 என்ற நிலையிலிருந்து பொலார்ட் அரைசதம் குருணால் பாண்டியாவின் 32 ரன்களினால் 186/8 என்ற ஸ்கோரை எட்டியது. தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் அணியில் கே.எல்.ராகுல் (94), ஏரோன் பிஞ்ச் (46) இணைந்து 2வது விக்கெட்டுக்கு 111 ரன்களைச் சேர்த்த போது 16 ஓவர்களில் 145 ரன்கள் என்று வெற்றிபெறும் நிலையில்தான் இருந்தது. ஆனால் அப்போது ஜஸ்ப்ரித் பூம் பூம் பும்ரா பிஞ்ச், ஸ்டாய்னிஸ், ராகுல் ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்ற கிங்ஸ் லெவன் 183/5 என்று பரபரப்பான ஆட்டத்தை ஆடி கடைசியில் தோல்வியில் முடிந்தது. ஆட்ட நாயகன் பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்களுக்கு 3 விக்கெட்.

பொலார்ட் அதிரடித் திருப்பு முனையும் அஸ்வினின் புரியாத புதிர் முடிவும்:

மும்பை பேட் செய்யத் தொடங்கிய போது அதிக ரன்களை இலக்காக வைக்க வேண்டும் என்ற அவசரம் தெரிந்தது, எவின் லூயிஸ் 9 ரன்களில் பவுல்டு ஆனார்.

சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் ரன் விகிதத்தை உயர்த்தினர். 3வது ஓவரிலேயே சூரியகுமார் யாதவ் மட்டைத்தாண்டவம் நடத்தினார் அங்கிட் ராஜ்புத் வீசிய ஓவரைப் புரட்டி எடுத்தார். 2 ஆப் திசை, 2 லெக் திசை ஷாட்கலில் 2 நான்குகள் 2 ஆறுகள் என்று 21 ரன்களை விளாசினார் சூர்யா.

மோஹித் சர்மா வீசிய 5-வது ஓவரை இம்முறை இஷான் கிஷன் அதிர்ஷ்டகரமான எட்ஜ் பவுண்டரிக்குப் பிறகு மோஹித்தின் ஆமை வேகப்பந்து இரண்டு சிக்சர்களுக்குப் பறந்தது. 18 ரன்கள் இந்த ஓவரில் வர 5 ஓவர்களில் 57/1 என்று பறந்தது மும்பை இந்தியன்ஸ்.

அப்போதுதான் ஆண்ட்ரூ டை வீச வந்தார் மிக அருமையான அந்த ஓவரில் மும்பைக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. விரலிடுக்கு பந்தை வீச இஷான் கிஷன் மிட் ஆனில் கேட்ச் கொடுத்தார். 20 ரன்னில் இஷான் கிஷன் நடைகட்டினார், அடுத்த பந்தே மீண்டும் விரலிடுக்கிலிருந்து பந்தை வெளியேற்ற சூர்ய குமார் யாதவ் பேட்டின் அடிவிளிம்பில் பட்டு ராகுலிடம் கேட்ச் ஆனது. பவர் பிளே முடிவில் 60/3 என்று மும்பை இந்தியன்ஸ் திணறியது.

ரோஹித் சர்மா, குருணால் பாண்டியா களத்தில் இருந்தனர். அக்சர் படேல், அஸ்வின் வீச வந்தனர். அக்சர் ஒரு ஓவரில் 6 ரன்களையும், அஸ்வின் ஒரு ஓவரில் 5 ரன்களையும் கொடுத்தனர். அடுத்த ஓவரில் ராஜ்புத் ரோஹித்சர்மாவை வீட்டுக்கு அனுப்பினார், யுவராஜ் கேட்சுக்கு எந்தவித கொண்டாட்டமும் இல்லை.

polardjpg
 

பொலார்டும் குருணாலும் இணைந்தனர், அப்போது அஸ்வின் மீண்டும் பந்து வீச வரவேயில்லை, ஒரு ஓவரில் 5 ரன் கொடுத்தவர், களத்தில் இடது கை வீரர் குருணால் நின்ற போதும் பந்து வீச வரவில்லை, இது ஏன்? என்பது புரியாத புதிர். ஐபிஎல் தர்க்கங்களில் ஒன்று. நமக்குத்தான் புரியாது, அவர்களுக்குப் புரியும். இந்தப் பிட்சில் ஸ்பின் தான் வீசியிருக்க வேண்டும், ஏனெனில் பேட்ஸ்மென்கள் வேகப்பந்தை விரும்புகின்றனர்.

krunaljpg
 

ஒன்று அஸ்வின் மிடில் ஓவரில் குருணால், பொலார்டுக்கு வீசியிருந்தால் அவர்கள் இவர் ஓவரை அடிக்காமல் நிதானம் காட்டியிருந்தால் ரன் விகிதம் குறைந்திருக்கும் நெருக்கடி அதிகரித்திருக்கும், அப்படியில்லையெனில் அஸ்வினை அடிக்கப் போயிருந்தால் அவுட் ஆகியிருக்கவும் வாய்ப்பு இருந்தது, இத்தகைய பலதரப்பட்ட சாத்தியங்களை விடுத்து ராஜ்புத், ஸ்டாய்னிஸ், அக்சர் படேலை நம்பியிருந்தது ஏன் என்று புரியவில்லை. ஏன் இந்தக் கேள்வி எழுகிறது எனில் ஸ்டாய்னிஸின் ஒரு ஓவரில் குருணால் பாண்டியா 2 சிக்ஸ் ஒரு பவுண்டரியுடன் 19 ரன்களை விளாச, அங்கிட் ராஜ்புத்தை பொலார்ட் 14வது ஓவரில் 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் உட்பட 18 ரன்கள் விளாசினார். 6 ஓவர்களில் 60/3 என்று இருந்த மும்பை 14வது ஓவரில் 134/4 என்று ஆனது. ஸ்டாய்னிஸ் குருணால் பாண்டியாவை வீழ்த்தினாலும் அவர் சேதங்களை ஏற்படுத்தி 32 ரன்களில் வெளியேறினார். அவர் விக்கெட்டை வீழ்த்திய அதே ஓவரில் ஸ்டாய்னிஸை பொலார்ட் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் வெளுத்து வாங்கினார். 15 ஓவர்களில் 151 என்று போன பிறகு 16வது ஓவரில் அஸ்வின் தன் 2வது ஓவரை வீச வருகிறார். இதற்கு என்ன அர்த்தம்?

ashwinjpg
 

கடைசியில் பொலார்டை 50 ரன்கள் எடுத்த பிறகு அஸ்வின் வீழ்த்தினார், பென் கட்டிங்கையும் அஸ்வின் வீழ்த்தி 3 ஓவர்கள் 18 ரன்களுக்கு 2 விக்கெட் என்றாலும் தன் 4வது ஓவரை அவரால் வீச முடியவில்லை, அப்படியும் கடைசி ஓவரை அவர் வீசியிருக்கலாம் காரணம் மெக்லினாகன், மார்க்கண்டேதான் கிரீசில் இருக்கின்றனர். மோஹித் சர்மாவிடம்தான் கொடுத்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 186/8 என்று வலுவான ஸ்கோரை எட்டியது. ஆண்ட்ரூ டை மீண்டுமொரு அற்புத ஸ்பெல்லில் 16 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அக்சர் படேல் 3 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்தார் அவரையும் முடிக்கவில்லை, அஸ்வின் 3 ஓவர்கல் 18 ரன்கள் தானும் முடிக்கவில்லை. இருவரும் 6 ஓவர்களில் 42 ரன்களைத்தான் விட்டுக் கொடுத்தனர், வேகப்பந்து வீச்சாளர்கள் மீதமுள்ள 10 ஓவர்களில் 123 ரன்களைக் கொடுத்துள்ளனர், என்ன கேப்டன்சி இது? ஆனால் கேட்கக்கூடாது, உஷ் கண்டுக்காதீங்கதான்!

ராகுல் அருமை... ஆனால் வீண்:

இந்தப் பிட்சில் தேவைக்கும் அதிகமான ஸ்கோரை மும்பை எடுக்க அனுமதித்தது அஸ்வினின் கேப்டன்சி. விரட்டும் போது ராகுல் சிக்சருடன் தொடங்கினார். ஆனால் பும்ரா மிக அருமையாக 1 ரன் தான் கெய்ல், ராகுலுக்கு தன் முதல் ஓவரில் கொடுத்தார்.

உடனேயே ஹர்திக் பாண்டியாவைக் கொண்டு வந்தாக வேண்டுமே? கொண்டு வந்தார், கெய்ல், ராகுல் 3 பவுண்டரிகள் 1சிக்சரை விளாச 19 ரன்கள் வந்தது. இன்னுமாடா இந்தப் பாண்டியாவை ஊர் நம்புகிறது? மெக்லினாகன் பவுன்சரில் ஹூக் ஷாட்டில் 18 ரன்களுக்கு கெய்ல் வெளியேறினார்.

அப்போது இணைந்தனர் ராகுலும், பிஞ்ச்சும், விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு தந்திரமாக கட்டுப்பாடுடன் கூடிய ரன் ஸ்கோரிங் ஆட்டத்தை வெளிப்படுத்தினர், ராகுல் இலக்கை விரட்டுவதன் தாரக மந்திரத்தைக் கற்றுக் கொண்டு விட்டார், இன்னிங்ஸை கட்டமைக்கும் விதத்தையும் தேர்ந்துள்ளார். 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் அரைசதம் கண்டார். 16 ஓவர்கள் முடிவில் 145/1 என்று அருமையாகவே இருந்தது. பிஞ்ச் திடீரென பொங்கி எழுந்தார் தவறான பவுலரை அடிக்கத் தேர்ந்தெடுத்தார், அது பும்ரா, லெந்த் பந்தை கண்ணைமூடிச் சுற்ற பந்து வானில் இருளில் புள்ளியாக மறைந்தபோது எங்கோ மைதானத்துக்கு வெளியே என்றுதான் நினைத்தோம், ஆனால் அது இறங்கும் போது மைதானத்துக்குள் அருகிலேயே இறங்கியது ஹர்திக் பாண்டியா அதனை பிடித்தார், கடினமான கேட்ச். பிஞ்ச் வெளியேறினார்.

ஆட்டம் ராகுலின் கையில் இருந்தது. கடைசி 5 ஒவர்களில் 60 எனும்போது கிங்ஸ் லெவனுக்கு வாய்ப்பிருந்தது. அப்பொதுதான் மயங் மார்க்கண்டே ஓவரில் ராகுலும் பிஞ்ச்சும் 18 ரன்கள் சேர்க்க 24 பந்துகளில் 42 என்று இலக்கு சாதகமானது. ஆனால் பும்ரா பிஞ்ச் உட்பட அருமையான ஸ்பெல்லில் 2 ஒவர்களில் 10 ரன்களுகு 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதில் ராகுலும் 60 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 94 ரன்கள் எடுத்து பும்ராவின் விக்கெட்டாக கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் கிங்ஸ் லெவன் 3 ரன்கள் குறைவாக முடிந்தது. அக்சர் படேல் 10 ரன்களில் நாட் அவுட்டாக முடிந்தார், யுவராஜ் சிங் பாவம் கால்காப்புடன் நீண்ட நேரம் காத்திருந்து கடைசியில் இறக்கப்பட்டார், அவரை ஆஜானுபாகுவாக உலக பவுலர்களை அச்சுறுத்திய வீரராகப் பார்த்து விட்டு இப்படி பந்து மட்டையில் சிக்காமல் திண்டாடுவதைப் பார்க்க வருத்தமாக இருந்தது. 1 ரன்னில் மெக்லினாகனிடம் அவர் ஆட்டமிழந்து வெளியேறிய போது பாவம் இன்னும் ஏன் அவருக்கு இந்தக் கிரிக்கெட் பிணைப்பு என்ற கேள்வியே வருத்தத்துடன் எழுந்தது. மும்பை இந்தியன்ஸ் 12 புள்ளிகளைப் பெற்றது, இதற்கு அஸ்வினின் கேப்டன்சி உதவியது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/17103825/1163693/sunrisers-hyderabad-vs-royal-challengers-bangalore.vpf

Link to comment
Share on other sites

பிளேஆப் சுற்று வாய்ப்பில் பெங்களூர் அணி நீடிக்குமா? ஐதராபாத்துடன் இன்று மோதல்

 

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.#IPL2018 #RCBvSRH #RCB #SRH

 
 
பிளேஆப் சுற்று வாய்ப்பில் பெங்களூர் அணி நீடிக்குமா? ஐதராபாத்துடன் இன்று மோதல்
 
பெங்களூர்:

ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய 2 அணிகள் மட்டுமே ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

எஞ்சிய 2 இடத்துக்கான போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 5 அணிகள் உள்ளன. டெல்லி அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது.

51-வது ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

பெங்களூர் அணி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளியுடன் 7-வது இடத்தில் உள்ளது. வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி ‘பிளே ஆப்’ வாய்ப்பில் நீடிக்க இயலும். தோல்வி அடைந்தால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

பெங்களூர் அணி வாய்ப்பில் நீடிக்குமா? வெளியேறுமா? என்று இன்றைய ஆட்டத்தில் தெரிய வரும். இதனால் அந்த அணி வீரர்கள் முழு திறமையை வெளிபடுத்துவார்கள். பஞ்சாப்புக்கு எதிராக அந்த அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசி இருந்தனர்.

ஐதராபாத் அணியிடம் ஏற்கனவே 5 ரன்னில் தோற்று இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலையும் உள்ளது.

சொந்த மண்ணில் விளையாடுவதால் நம்பிக்கையுடன் இருக்கிறது. கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ், உமேஷ் யாதவ், யசுவேந்திர சாஹல் ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.

ஐதராபாத் அணி 9 வெற்றி, 3 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஏற்கனவே ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்ற அந்த அணி பெங்களூரை வீழ்த்தி 10-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

ஐதராபாத் அணியின் தொடர் வெற்றிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த ஆட்டத்தில் முற்றுப் புள்ளி வைத்தது. இதனால் மீண்டும் வெற்றி வேட்கையில் அந்த அணி உள்ளது.

ஐதராபாத் அணியில் கேப்டன் வில்லியம்சன், தவான், யூசுப் பதான், மனிஷ் பாண்டே, ரஷ்த்தாரி, புவனேஷ்வர்குமார் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.#IPL2018 #RCBvSRH #RCB #SRH
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/17103825/1163693/sunrisers-hyderabad-vs-royal-challengers-bangalore.vpf

Link to comment
Share on other sites

பொலார்டுக்குப் போட்டுக்கொடுத்த பஞ்சாப்... பும்ராவுக்கு பயந்த பேட்ஸ்மேன்... மும்பை சலோ! #MIvKIXP

 
 

செம ஈஸியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருக்க வேண்டிய கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பையை முன்னால் விட்டுவிட்டு தத்தளித்துக்கொண்டிருக்கிறது. பஞ்சாபின் பெளலர்கள் 71 ரன்களுக்குள் மும்பையின் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தும், சேஸிங்கில் ராகுல் 94 ரன்கள் அடித்தும், மும்பையை வெற்றிபெற வைத்திருக்கிறது அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்! #MIvKIXP

#MIvKIXP

 

2018 - ஐபிஎல் சீசனின் பாதிப் போட்டிகள், அதாவது 7 போட்டிகள் எல்லா அணிகளும் ஆடி முடித்தபோது புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். முதல் ஆறு போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்திருந்தது பஞ்சாப். முதல் ரவுண்டில் வெற்றி தந்த உற்சாகமா அல்லது ஓவர் கான்ஃபிடன்ஸா எனத் தெரியாது, இரண்டாவது ஹாஃபில் தொடர்ந்து நான்கு தோல்விகளைச் சந்தித்திருக்கிறது பஞ்சாப்.

மும்பை என்பது பேட்டிங் பிட்ச் என்பதால் டாஸை வென்றதும் ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் பஞ்சாப் கேப்டன் அஷ்வின். ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே மும்பை அணியில் இருக்கும் பொலார்டை, கடைசியாக நடந்த போட்டிகளில் பெஞ்சில் உட்காரவைத்த  மும்பை நிர்வாகம், இந்தப் போட்டியில் ஜேபி டுமினிக்குப் பதிலாக பொலார்டை அணிக்குள் அழைத்துவந்தது. பஞ்சாபின் மாயாஜால ஸ்பின்னர் முஜீப் இன்னும் காயத்திலிருந்து குணமடையாததால் அவர் அணியில் இடம்பெறவில்லை. மாயங்க் அகர்வால், கருண் நாயருக்குப் பதிலாக யுவராஜ் சிங், மனோஜ் திவாரி பிளேயிங் லெவனில் இடம்பிடித்தனர்.

சொதப்பிய டாப் ஆர்டர்!

லூயிஸ், சூர்யகுமார் யாதவ் ஓப்பனிங் இறங்க, அங்கித் ராஜ்புத் முதல் ஓவரை வீசினார். முதல் இரண்டு ஓவர்களில் மும்பை 9 ரன்கள் மட்டுமே அடிக்க, அங்கித் வீசிய மூன்றாவது ஓவரில் பவுண்டரிகள் பறந்தது. இந்த ஓவரில் மட்டும் இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரி என மொத்தம் 21 ரன்கள் அடித்தது மும்பை. ஆனால், அடுத்த ஓவரிலேயே பெளலிங் சேஞ்ச் கொண்டுவந்தார் அஷ்வின். ஆண்ட்ரு டை வீசிய முதல் பந்திலேயே லூயிஸ் காலி. ஐந்தாவது ஓவர் மீண்டும் மொஹித் ஷர்மாவின் கையில் வந்தது. இந்த முறை இஷான் கிஷன். 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என இந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள். பவர் ப்ளேவின் கடைசி ஓவர் மீண்டும் ஆண்ட்ரு டையிடம் வந்தது. அடுத்தடுத்த பந்துகளில் இஷான் கிஷன், சூர்யகுமார் இருவரையும் அவுட்டாக்கினார் டை. பவர் ப்ளே முடிவில்மும்பையின் ஸ்கோர் 60/3.

#MIvKIXP

 

ஹிட்மேனுக்குக் கட்டம் சரியில்லை!

தொடர்ந்து அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும் மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மாவின் சோகம் இந்த மேட்ச்சிலும் தொடர்ந்தது. ராஜ்புத் வீசிய பந்தில் யுவராஜ் சிங்கிடம் சிம்பிள் கேட்ச் கொடுத்து 6 ரன்களுக்கு அவுட்டானார் ரோஹிட் மேன். கீரோன் பொலார்டு கிரீஸுக்குள் வந்தார்!

அஷ்வினின் கேப்டன்ஸி கோல்மால்!

இந்த மேட்ச்சில் 8-வது ஓவரை வீசினார் கேப்டன் அஷ்வின். விக்கெட்டுகள் விழவில்லை என்றாலும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அடுத்த ஓவரில் ரோஹித் அவுட். இந்த சீசன் முழுவதுமே எந்த மேட்ச்சிலும் ரன்கள் அடிக்காத, அவுட் ஆஃப் ஃபார்மில் மட்டுமல்ல, கடந்த சில போட்டிகளாக பெஞ்சில் உட்காரவைக்கப்பட்ட பொலார்டு களத்துக்குள் வருகிறார். இந்த நேரத்தில் அனுபவம் வாய்ந்த கேப்டன் என்ன செய்வாரோ அதை செய்யத் தவறினார் அஷ்வின்.

நம்பிக்கையை இழந்திருந்த பொலார்டுக்கு ஸ்லிப், ஷார்ட் மிட் விக்கெட், சில்லி பாயின்ட், கல்லி என ஃபீல்டர்களை அருகில் நிறுத்தி இருக்கலாம்; பொலார்டு சுழற்பந்தில் திணறுவார் என்பதால் அஷ்வினே பந்துவீசி கூடுதல் பிரஷர் கொடுத்து அவுட்டாக்கியிருக்கலாம். ஆனால், அஷ்வின் அசால்ட்டாக வாய்ப்பை நழுவவிட்டார். பொலார்டு களத்துக்குள் வந்ததும் ஸ்டாய்னிஸுக்கும், அக்ஸர் பட்டேலுக்கும் ஓவர்கள் கொடுத்தார். அட்டாக்கிங் ஃபீல்டிங் பொசிஷன் எதுவுமே இல்லை. இரண்டு ஓவர்களில் சிங்கிள் மட்டுமே அடித்து பொலார்டும், க்ருணால் பாண்டியாவும் செட் ஆனார்கள்.

#MIvKIXP

கான்ஃபிடன்ஸ் வந்தபிறகு பாண்டியாவும், பொலார்டும் அடிக்க ஆரம்பித்தார்கள். ஸ்டாய்னிஸின் 12-வது ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்தார் பாண்டியா. மிடில் ஓவர்கள் முழுக்கவே பெளலிங் ரொட்டேஷனில் மிஸ் செய்தார் அஷ்வின். தன்னைத் தானே டெத் ஓவர் பெளலராக நினைத்துக்கொண்ட அஷ்வின், அந்த பெளலிங் ரொட்டேஷனையும் சரியாகச் செய்யவில்லை.

ஸ்டாய்னிஸ் வீசிய 15-வது ஓவரில் க்ருணால் பாண்டியா அவுட். ஆனால், பொலார்டு  பெளலர்களை வெளுக்க ஆரம்பித்தார். 4,4,6... என பொலார்டு 22 பந்துகளில் 50 ரன்கள் அடித்து ``நான் வந்துட்டேன்டா'' எனக் கொக்கரித்தார்.

8-வது ஓவரிலிருந்து அடுத்த 7 ஓவர்கள் வரை பந்து வீசாத அஷ்வின், 16-வது ஓவரை வீச வந்தார். வந்ததுமே பொலார்டு விக்கெட் விழுந்தது. ஆனால், அதற்குள் 50 ரன்கள் அடித்து, மும்பையை பேட்டிங் சரிவிலிருந்து மீட்டுவிட்டார் பொலார்டு. மீண்டும் 18-வது ஓவரில் அஷ்வினுக்கு பென் கட்டிங் விக்கெட் கிடைத்தது. 19-வது ஓவரை ஆண்ட்ரு டை வீசினார். இந்த ஓவரிலும் 1 விக்கெட் என மொத்தம் 4 விக்கெட்டுகளைச் சாய்த்து 4 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார் டை. கடைசி ஓவரை அஷ்வின் வீசுவார் என எல்லோரும் எதிர்பார்க்க, வேகப்பந்து வீச்சாளரான மொஹித் ஷர்மாவிடம் ஓவரை கொடுத்தார் அஷ்வின். 

டெய்லெண்டர் களத்தில் இருக்க, கடைசி ஓவரில் 1வைடு 1 நோ பால் என 11 ரன்கள் கொடுத்தார் மொஹித் ஷர்மா. இந்தக் கடைசி ஓவர் 11 ரன்கள்தாம் பஞ்சாபுக்கு வேட்டுவைத்தது! 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் அடித்தது மும்பை. 

#MIvKIXP

சூப்பர் ஓப்பனிங்!

முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்து சேஸிங்கைச் சிறப்பாகத் தொடங்கிவைத்தார் கே.எல் ராகுல். ஹர்திக் பாண்டியாவின் மூன்றாவது ஓவரை கெய்ல், ராகுல் என இருவருமே அடித்து விளையாடினர். கெய்ல் 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடிக்க, ராகுல் தொடர்ந்து 2 பவுண்டரிகள் அடித்தார். இந்த ஓவரில் மட்டும் பஞ்சாப் 19 ரன்கள் அடித்தது. நான்காவது ஓவருக்கு மெக்ளீனிகன் வந்தார். பவுன்ஸர்கள்தாம் கெயிலை வீழ்த்தும் ஆயுதம் என்பதால் தொடர்ந்து பவுன்ஸர்களை வீசினார் மெக்ளீனிகன். செம ஸ்ட்ரேட்டஜி. கெய்ல் ஒரு பவுன்ஸரில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 11 பந்துகளில் 18 ரன்கள் அடித்திருந்தார் கெய்ல்.

கே.எல் ராகுல் - ஆரோன் ஃபின்ச் எனப் பிரமாதமான கூட்டணி. மோசமான பந்துகளை மட்டுமே அடித்து ஆடி இருவருமே சிறப்பான பேட்டிங் திறமைகளை வெளிப்படுத்தினர். 10 ஓவர் முடிவில் 86 ரன்கள் அடித்து, 1 விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது பஞ்சாப். விக்கெட்டுகள் இருப்பதால் அடுத்த 10 ஓவர்களில் 101 ரன்கள் அடிக்க வேண்டும் என்கிற அடிக்கக்கூடிய டார்கெட்தான் என்பதால் பஞ்சாப் வலுவாகவே இருந்தது. 

#MIvKIXP

ஆனால், பும்ராவின் ஓவர்களை ராகுல், ஃபின்ச் இருவராலுமே அடிக்க முடியவில்லை. ஆக்ஸலரேட் செய்ய வேண்டிய நேரத்தில் பும்ராவின் பந்துவீச்சில் திணற ஆரம்பித்தது பேட்டிங் கூட்டணி. இதனால் அடிக்கவேண்டிய ரன்ரேட் கூடிக்கொண்டே போனது. 15 ஓவர்கள் முடிந்துவிட்டது. விக்கெட் விழவில்லை என்றாலும் ரன்ரேட் கூடவில்லை. கடைசி 30 பந்துகளில் 60 ரன்கள் தேவை, ஓர் ஓவருக்குக் குறைந்தபட்சம் 12 ரன்கள் அடிக்கவேண்டும் என்கிற நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்தியது கேஎல் ராகுல்- ஃபின்ச் பார்ட்னர்ஷிப். மார்க்கண்டே வீசிய 16-வது ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்து பஞ்சாபின் பிரஷரைக் குறைத்தார் ராகுல். இந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் கிடைத்தது. 

பும்ரா வீசிய 17-வது ஓவர்தான் பஞ்சாபை மொத்தமாகக் கவிழ்த்தது. 46 ரன்களில் ஃபின்ச் அவுட்டாக, இதே ஓவரின் முடிவில் ஸ்டாய்னிஸும் அவுட்டானார். இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே அடித்து 2 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது பஞ்சாப். இங்குதான் இன்னொரு கேப்டன்ஸி சொதப்பல். யுவராஜ் சிங் என்னும் பேட்ஸ்மேனை அணிக்குள் எடுத்துவிட்டு, முக்கியமான தருணத்தில் அவரை இறக்காமல் பெளலரான அக்ஸர் பட்டேலை இறக்கியது பஞ்சாப். யுவராஜ் சிங் வந்திருந்தால் அவர் செட்டாக நான்கைந்து பந்துகள் கிடைத்திருக்கும். அதன்பிறகு அவர் அடிக்க ஆரம்பித்திருப்பார். ஆனால், இது நடக்கவில்லை. 

#MIvKXIP

18-வது ஓவரை பென் கட்டிங் வீசினார். ஃபுல் ஃபார்மில் இருந்த ராகுல் இந்த ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்தார். ஸ்கோர் 164 ரன்களைத் தொட்டது. கடைசி 12 பந்துகளில் 23 ரன்கள் தேவை. 19-வது ஓவர் பும்ராவின் ஓவர். அடிக்க ஆசைப்பட்டார் ராகுல். ஆனால், பந்து பேட்டிலேயே மீட் ஆகவில்லை. இந்த ஓவரின் மூன்றாவது பந்தில் கட்டிங்கிடம் கேட்ச் கொடுத்து 94 ரன்களில் அவுட்டானார் ராகுல். இவர் இதை 60 பந்துகளில் அடித்திருந்தார். கடைசி 9 பந்துகள், 20 ரன்கள் அடிக்கவேண்டும் என்கிற எக்ஸ்ட்ரா பிரஷரில் விளையாட வந்தார் யுவராஜ் சிங். இந்த ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிங்கிள்.

கடைசி ஓவரில் 17 ரன்கள் அடிக்கவேண்டும். மெக்ளீனிகனை கொண்டுவந்தார் ரோஹித் ஷர்மா. முதல் பந்தில் அக்ஸர் பட்டேல் சிங்கிள் அடித்துவிட, யுவராஜ் சிங் பேட்டிங். அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப்பில் போட்டார் மெக்ளீனிகன். செம ஈஸியாக பவுண்டரிக்கோ அல்லது சிக்ஸருக்கோ அடிக்கக்கூடிய இந்தப் பந்தை அடிக்காமல் கோட்டைவிட்டார் யுவராஜ் சிங். மூன்றாவது பந்து வைடு. எக்ஸ்ட்ரா டெலிவரி கிடைக்கிறது. லைன் அண்ட் லென்த்தை மாற்றாமல் மீண்டும் அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப்பில் பந்தை வீசுகிறார் மெக்ளீனிகன். தூக்கி அடித்திருக்க வேண்டிய பந்தை எக்ஸ்ட்ரா கவரில் இருந்த ஃபீல்டருக்குக் கொடுத்தார் யுவராஜ் சிங். 3 பந்துகளைச் சந்தித்து 1 ரன் மட்டுமே அடித்து பரிதாபமாக வெளியேறினார் யுவராஜ். அநேகமாக இதுதான் கிரிக்கெட்டில் இவரது கடைசி இன்னிங்ஸாக இருக்கும்.

கடைசி மூன்று பந்துகளில் 1 சிக்ஸர், ஒரு பவுண்டரி என அடித்து ஆறுதல் அடைந்தனர் பட்டேலும் திவாரியும். மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது பஞ்சாப். கையில் இருந்த மேட்சை பஞ்சாப் நழுவவிட்டது போல் இருந்தது.

இனி எதுவும் நடக்கும்! 

https://www.vikatan.com/news/sports/125239-mumbai-indians-beat-kxip-by-3-runs.html

Link to comment
Share on other sites

கோலி அசத்தினால்... அஷ்வினுக்கு தோனி சர்ப்ரைஸ் தந்தால்... ப்ளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு?!

 
 

கர்நாடகாவில் யாருக்கு எத்தனை எம்.எல்.ஏ என அரசியல் கணக்கு உச்சத்தில் நடந்துகொண்டிருக்க, ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் கணக்கு ஆரம்பித்துவிட்டது. ஐதராபாத், சென்னை அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டன. ஆனால், மூன்றாவது, நான்காவது இடத்துக்கு ஐந்து அணிகள் போட்டிபோடுவதுதான் 2018 ஐபிஎல்-ன் ஸ்பெஷல். கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப் என ஐந்து அணிகளுக்குமே ப்ளே ஆஃப்க்குள் நுழையும் வாய்ப்பு இருக்கிறது.

Play off

 

மும்பைக்கு வாய்ப்பு!
பஞ்சாபுடனான வெற்றியின் மூலம் மும்பையின் ப்ளே ஆஃப் கனவு நிஜமாகும் சூழல் உருவாகியிருக்கிறது. மும்பை, ராஜஸ்தான், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மூன்று அணிகளும் 12 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கின்றன. கொல்கத்தா 14 புள்ளிகளுடன் இருக்கிறது. இந்த நான்கு அணிகளுக்குமே இன்னும் ஒரேயொரு போட்டிதான் உள்ளது.

மும்பை இப்போது புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில், அதாவது ஐதராபாத், சென்னை, கொல்கத்தாவுக்கு அடுத்ததாக இருக்கிறது. டெல்லி டேர்டெவில்ஸ் அணியை கடைசிப் போட்டியில் சந்திக்கிறது மும்பை. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மும்பை ப்ளே ஆஃப்க்குள் நுழைந்துவிடும். அப்படியே தோல்வியடைந்தாலும் மும்பைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் ஹைலைட். பஞ்சாப்  சென்னையிடமும், ராஜஸ்தான் பெங்களூரிடமும் தோல்வியடைந்தால் மும்பை உள்ளே சென்றுவிடும். அதேபோல் ஐதராபாத், பெங்களூரைத் தோற்கடிக்க வேண்டும். இது நடந்தால் டெல்லியுடனான போட்டியில் தோல்வியடைந்தாலும் 12 புள்ளிகளுடன் மும்பை டாப் -4 இடத்துக்குள் வந்துவிடும்.

ப்ளே ஆஃப்

பஞ்சாப் பஞ்சாயத்து!

பஞ்சாப் இந்த லீகின் கடைசிப் போட்டியாக சென்னையை வரும் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறது. அந்தப் போட்டியில் சென்னையை வீழ்த்தினால் மட்டுமே பஞ்சாப் ப்ளே ஆஃப்க்குள் நுழைந்துவிட முடியாது. மும்பை டெல்லியிடம் தோல்வியடைய வேண்டும். பெங்களூரு அணி ராஜஸ்தான், ஐதராபாத் என அடுத்து ஆடும் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும். அப்படி நடந்தால் மும்பையும், ராஜஸ்தானும் 12 புள்ளிகளுடன் பின்தங்க, 14 புள்ளிகளுடன் பஞ்சாப் ப்ளே ஆஃப்க்குள் நுழையும்.

Play off கோலி

கோலிக்குக் கடைசி வாய்ப்பு!
ரன்ரேட் அடிப்படையில் மும்பையைப் பின்னுக்குத் தள்ளும் வாய்ப்பு பெங்களூரு அணிக்குத்தான் இருக்கிறது. பஞ்சாபை 88 ரன்களுக்குள் சுருட்டி, 8 ஓவர்களில் சேஸ் செய்து வென்றதுபோல, அடுத்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றிபெறவேண்டும். அப்படி நடந்தால் 12 புள்ளிகளே எடுத்திருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் மும்பையை பெங்களூரு முந்தும். அப்படி இல்லையெனில் ஐதராபாத், ராஜஸ்தானுடனான இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 14 புள்ளிகள் பெறவேண்டும். அப்படி 14 புள்ளிகள் பெற்றாலும் பெங்களூரு ப்ளே ஆஃப்க்குள் நுழைய முடியாது. அப்படி நுழைய வேண்டும் என்றால் மும்பை டெல்லியிடமும், கொல்கத்தா ஐதராபாத்திடமும் தோல்வியடைய வேண்டும். 

ராஜஸ்தானுக்கும் ராசி உண்டு!
ராஜஸ்தான் கடைசிப் போட்டியில் பெங்களூரை வென்று 14 புள்ளிகள் பெறவேண்டும். அதற்கு மும்பை அடுத்த போட்டியில் டெல்லியிடம் தோல்வியடைய வேண்டும். பெங்களூரு ஐதராபாத்திடம் தோல்வியடைய வேண்டும். 

Play off

என்னவாகும் கொல்கத்தா?!
ஐதராபாத்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் வெற்றிபெற்றால் கொல்கத்தா 16 புள்ளிகளுடன் ஈஸியாக மூன்றாவது அணியாக ப்ளே ஆஃப்க்குள் நுழைந்துவிடும். ஆனால், ஐதராபாத்திடம் தோல்வியடைந்தால் கொல்கத்தாவின் கதை சிக்கலில் முடியும். மும்பை, டெல்லியிடம் வெற்றிபெற்றால், பெங்களூரு அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் ரன் ரேட் அடிப்படையில் இரண்டு அணிகளும் கொல்கத்தாவைப் பின்னுக்குத்தள்ளி உள்ளே நுழைந்துவிடும்!

கணக்குகள் தொடரும்!

https://www.vikatan.com/news/sports/125252-who-will-go-to-ipl-playoffs.html

Link to comment
Share on other sites

வயதான அணியா? தோனியைப் பாருங்கள் எவ்வளவு சுதந்திரமாக ஆடுகிறார்: ரெய்னா பதில்

 

 
raina-dhoni

ரெய்னா, தோனி.   -  படம். | ஏ.எஃப்.பி.

ஹரியாணா குருகிராமில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா நிகழ்ச்சிகளுக்கு இடையில் சிஎஸ்கே அணி பற்றி பேட்டி கொடுத்தார்.

“எங்கள் அணியை வயதான அணி என்று கூறுகின்றனர். ஆனால் அனுபவம் தேவை. அனைத்துப் பெருமைகளும் தோனையையே சாரும், பாருங்கள் அவர் எவ்வளவு சுதந்திரமாக ஆடுகிறார் என்று. 35-36 வயதிலும் சிறப்பாக ஆட முடியும் என்பதை அவர் இந்த ஐபிஎல்-ல் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

 
 

கிரிக்கெட்டில் யாரும் ரன்னர்-அப் ஆக ஆட மாட்டார்கள், ஏனெனில் அனைவரது கவனமும் வெற்றி பெறும் அணி மீதுதான். இந்தமுறை கோப்பையை வென்றால் முந்தைய ஐபிஎல் போட்டிகளில் இறுதிகளில் தோற்ற கசப்பான நினைவுகள் மறையும்.

தோனியும் விராட் கோலியும் இருப்பது இந்திய கிரிக்கெட் அணியின் உத்வேகத்தையே மாற்றியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் டி20, ஒருநாள் தொடரை வென்றோம், ஒரு டெஸ்ட் போட்டியையும் வென்றோம்.

விராட் கோலிக்கு தோல்வி பிடிக்காது. கோலியின் தலைமையில் நடப்பு இந்திய கிரிக்கெட் பயமற்ற ஒரு அணுகுமுறையுடன் ஆடி வருகிறது.

இங்கிலாந்தில் உலகக்கோப்பையை வெல்ல அணி அதற்கு முன்பாக வெற்றிகளுடன் உத்வேகம் பெறுவது அவசியம்” என்றார் ரெய்னா.

http://tamil.thehindu.com/sports/article23916621.ece?homepage=true

Link to comment
Share on other sites

பெங்களூரு அணி 20 ஓவரில் 218 ரன்கள் குவிப்பு

 

 

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு 219 ரன் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

டி வில்லியர்ஸ், மொயீன் அலி அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். #IPL2018 #RCBvSRH

 
சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு 219 ரன் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
 
ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பார்தீவ் பட்டேல், விராட் கோலி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பார்தீவ் பட்டேல் 1 ரன்னிலும், விராட் கோலி 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். எதிர்முனையில் டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், விராட் கொலி அவுட்டாகும்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 4.5 ஓவரில் 38 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து டி வில்லியர்ஸ் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இருவரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்கள். இதனால் ரன்ரேட் சராசரியாக 10-ஐ தொட்டது. 12-வது ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி டி வில்லியர்ஸ் 32 பந்தில் அரைசதம் அடித்தார்.

மறுமுனையில் விளையாடிய மொயீன் அலி 13-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி 25 பந்தில் அரைசதம் அடித்தார். இருவரின் அதிரடியால் 13-வது ஓவரில் 18 ரன்களும், 14-வது ஓவரில் 14 ரன்களும் குவித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14 ஓவரில் முடிவில் 144 ரன்கள் குவித்திருந்தது.

இன்னும் 6 ஓவர் இருந்ததால் ஸ்கோர் 225 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 15-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவர் ராயல் சேலஞ்சர்ஸ்க்கு பேரிடியாக அமைந்தது. 2-வது பந்தில் டி வில்லியர்ஸும், 4-வது பந்தில் மொயீன் அலியும் ஆட்டமிழந்தனர்.

201805172158277146_1_RCBvSRH002-s._L_styvpf.jpg

டி வில்லியர்ஸ் 36 பந்தில் 12 பவுண்டரி, 1 சிக்சருடன் 69 ரன்களும், மொயீன் அலி 34 பந்தில் 2 பண்டரி, 6 சிக்சருடன் 65 ரன்களும் குவித்தனர். இருவரும் ஆட்டமிழக்கும்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14.4 ஓவரில் 149 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 200 ரன்னைத் தாண்டுமா? என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால் கொலின் டி கிராண்ட்ஹோம் அதிரடியாக விளையாடி 17 பந்தில் ஒரு பவண்டரி, 4 சிக்சருடன் 40 ரன்களும், சர்பராஸ் கான் 8 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 22 ரன்களும் குவிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபத்திற்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/17215827/1163874/IPL-2018-Royal-challengers-bangalore-219-runs-targets.vpf

Link to comment
Share on other sites

முக்கிய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

 

 
 

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். #IPL2018 #VIVOIPL #RCBvSRH

 
முக்கிய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
 
 
பெங்களூரு:
 
ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.
 
அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பார்தீவ் பட்டேல், விராட் கோலி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பார்தீவ் பட்டேல் 1 ரன்னிலும், விராட் கோலி 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 
 
அடுத்து டி வில்லியர்ஸ் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இருவரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்கள். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14 ஓவரில் முடிவில் 144 ரன்கள் குவித்திருந்தது. ரஷித் கான் வீசிய 15-வது ஓவரின் 2-வது பந்தில் டி வில்லியர்ஸும், 4-வது பந்தில் மொயீன் அலியும் ஆட்டமிழந்தனர்.
 
டி வில்லியர்ஸ் 36 பந்தில் 12 பவுண்டரி, 1 சிக்சருடன் 69 ரன்களும், மொயீன் அலி 34 பந்தில் 2 பண்டரி, 6 சிக்சருடன் 65 ரன்களும் குவித்தனர். 
 
அடுத்து வந்த கொலின் டி கிராண்ட்ஹோம் அதிரடியாக விளையாடி 17 பந்தில் ஒரு பவண்டரி, 4 சிக்சருடன் 40 ரன்களும், சர்பராஸ் கான் 8 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 22 ரன்களும் குவிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபத்திற்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
 
இதையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் களமிறங்கினர். 2-வது ஓவரை சவுத்தி வீச அந்த ஓவரில் தவான், ஹேல்ஸ் இருவரும் தலா ஒரு சிக்ஸர் அடித்தனர். ஐதராபாத் அணி 5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்தது.
 
5-வது ஓவரை சஹால் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் தவான் ஆட்டமிழந்தார். அவர் 18 ரன்கள் எடுத்தார். மோயின் அலி வீசிய 8-வது ஓவரின் கடைசி பந்தை ஹேல்ஸ் தூக்கி அடித்தார். அந்த பந்து சிக்ஸர் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பவுண்டரி கோட்டில் நின்று கொண்டிருந்த டி வில்லியர்ஸ் அந்த பந்தை கேட்ச் பிடித்தார். இதனால் ஹேல்ஸ் 24 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 
 
வில்லியம்சனின் சிறப்பான ஆட்டத்தால் ஐதராபாத் அணி 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் 28 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து வில்லியம்சன், மணிஷ் பாண்டே இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் குவித்தனர். இதனால் ஐதராபாத் அணி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 67 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக விளையாடிய மணிஷ் பாண்டேவும் அரைசதம் கடந்தார்.
 
17-வது ஓவரை வீசிய சவுத்தி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 18-வது ஓவரை மொகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணி 14 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி இரண்டு ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை சவுத்தி வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணி 15 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது.
 
கடைசி ஓவரை சிராஜ் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் வில்லியம்சன் ஆட்டமிழந்தார். அவர் 42 பந்தில் 81 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத்தொடர்ந்து தீபக் ஹூடா களமிறங்கினார். இறுதியில் பெங்களூர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்து கொண்டது. #IPL2018 #VIVOIPL #RCBvSRH

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/17234407/1163890/IPL-Royal-Challengers-Bangalore-beat-Sunrisers-Hyderabad.vpf

Link to comment
Share on other sites

‘டெவில்’லியர்ஸ் மேஜிக்; வில்லியம்சன் ‘சப்லைம்’: ஆர்சிபி வெற்றி; இரு அற்புத பேட்டிங்குகள்

 

 
rcb

சன் ரைசர்ஸை 14 ரன்களில் வீழ்த்திய ஆர்சிபி.   -  படம். | ஏ.எஃப்.பி.

பெங்களூரு போன்ற மட்டைப் பிட்ச்களில் நமக்குக் கிடைப்பதெல்லாம் சில கண்கொள்ளாக் காட்சி பேட்டிங்குகள்தான், உலகின் சிறந்த பேட்ஸ்மென்களில் நேற்று டிவில்லியர்ஸ், வில்லியம்சன் பேட்டிங் கோபுரங்களைக் காட்ட விராட் கோலி சோபிக்கவில்லை. மொயின் அலி, பாண்டேவும் அசத்தினர். இறுதியில் ஆர்சிபி 14 ரன்களில் வெற்றி பெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்டது ஆர்சிபி. சன் ரைசர்ஸின் பலமே குறைந்த இலக்கை வைத்துக் கொண்டு எதிரணியினரை மிரட்டுவதுதான், அந்த அனுகூலத்தைத் துறக்கும் விதமாக பெங்களூருவை முதலில் பேட் செய்ய அழைத்தார் கேன் வில்லியம்சன். டிவில்லியர்ஸ், மொயின் அலி, கடைசியில் கொலின் டி கிராண்ட்ஹோம் மைதானம் நெடுக சன் ரைசர்ஸ் வீரர்களை ஓடவிட்டு 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தனர்.

     
 

தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணியில் கேன் வில்லியம்சன் தன் சப்லைம் பேட்டிங்கில் டிவில்லியர்ஸை மேட்ச் செய்து 42 பந்துகளில் 81 ரன்கள் என்று விளாச, மணீஷ் பாண்டேயும் சில திகைக்கவைக்கும் புதிதான ஷாட்களில் 38 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார் ஆனாலும் மொகமது சிராஜ் கடைசி ஓவரில் 19 ரன்களை அருமையாக வீசித் தடுத்தார். ஆர்சிபி 12 புள்ளிகள் பெற்றுவிட்டது.

கேன் வில்லியம்சன் இந்த ஐபிஎல் தொடரில் தன் 8வது அரைசதத்தை எடுத்தார்.

கோலி ஏமாற்றம்

முதல் பந்திலேயே சந்தீப் சர்மா பந்தில் பார்த்திவ் படேலுக்கு ஹூடா கவரில் கேட்சை விட்டார். ஆனால் அதே ஓவரில் பார்த்திவ் படேல் லெக் திசையில் பெரிய ஷாட்டை ஆடினார் ஆனால் லீடிங் எட்ஜ் எடுத்து தேர்ட்மேனில் கொடியேற்ற வேண்டியதாயிற்று அங்கு கவுல் கேட்ச் எடுத்தார் பார்த்திவ் 1 ரன்னில் வெளியேறினார்.

viratjpg
 

விராட் கோலி சந்தீப் சர்மாவை மிக அழகாக நேராக ஒரு பவுண்டரியும், ரஷீத் கான் வீசிய லெந்த்தை சட்டென புரிந்து கொண்டு பின்னால் சென்று மிட்விக்கெட்டில் பவுண்டரியும் விளாசினார், ஆனால் ரஷீத் கானின் இதே ஓவரில் அடுத்த பந்தில் அதிர்ச்சிகரமாக பவுல்டு ஆனார். பந்து கூக்ளியானது ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே பிட்ச் ஆனது கோலி அதனை லெக் திசையில் விளாச நினைத்தார், பந்து சிக்கவில்லை ஆஃப் அண்ட் மிடில் ஸ்டம்பை பந்து தொந்தரவு செய்தது. 12 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

டிவில்லியர்ஸ் மேஜிக், மொயின் அலி விளாசல்; பேசில் தம்பி(யை) 17 பந்துகளில் அரைசதம்

டிவில்லியர்ஸ் கிரீசில் நகர்ந்து நகர்ந்து பந்துவீச்சைக் கொல்வது பவுலர்களுக்கு ஒரு துர்சொப்பனம்தான். லெக் திசையில் ஒதுங்கிக் கொண்டு பேக்வர்ட் பாயிண்டில் பவுண்டரி அடித்துத் தொடங்கினார். ஷாகிப் அல் ஹசனை மாஸ்டர்லியாக இரண்டு ஸ்லாக் ஸ்வீப்கள், சித்தார்த் கவுல் பந்தில் இரண்டு அடுத்தடுத்த அதிரடி பவுண்டரிகள் என்று வில்லியம்சனின் களவியூகத்துடன் போக்குக் காட்டி விளையாடினார். முன்னால் கொண்டு வந்தால் பின்னலும் பின்னால் கொண்டு சென்றால் அதற்கும் பின்னாலும் அடித்து பவுலர்களை நெட் பவுலர்களாக்கினார் 32 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

devilliersjpg
 

மொயின் அலி, பேசில் தம்பியை ஒரு ஓவரில் 2 சிக்சர்கள் விளாச, டிவில்லியர்ஸுக்கு ஷார்ட் பிட்ச் வீசும் தைரியம் எப்படி தம்பிக்கு வந்தது என்று தெரியவில்லை, தம்பி வெட்டோத்தி சுந்தரத்தின் பந்துகள் பவுண்டரியில் தெறித்தன. அரைசதம் அடித்த பிறகு பேசில் தம்பி வீசிய மிடில் அண்ட் லெக் புல்டாஸை டிவில்லியர்ஸ் ‘சீ போ’ என்று கொசு விரட்டியதில் 105-110மீ சிக்ஸ் ஆனது. மைதானத்தின் மேற்கூரையைக் கடந்து வெளியே சென்றது. இதே பேசில் தம்பி பந்து மீண்டும் பவுண்டரி பீல்டர்களைத் தொந்தரவு செய்ய மொயின் அலி 25 பந்துகளில் அரைசதம் கண்டார். 2 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்த தம்பி, கொலின் டிகிராண்ட்டுக்கு நேர் பந்து ஒன்றை வீச லாங் ஆஃப் மேல் சிக்ஸ் அடிக்க 2.5 ஓவர்களில் தம்பி அரைசதம் அடித்தார். பிறகு 4 ஓவர்களில் 70 என்று முடிந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டின் ஆக மோசமான பவுலிங்.

ஆர்சிபி 14 ஒவர்களில் 144/2 என்று அபாரமாகத் திகழ்ந்தது. அப்போதுதான் அற்புதன் ரஷீத் கான், டிவில்லியர்ஸையும், மொயின் அலியையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார், டிவில்லியர்ஸ் 39 பந்துகளில் 12 பவுண்டரி ஒரு சிக்சருடன் 69 எடுத்து ஷிகர் தவனின் துல்லிய பவுண்டரி கேட்சில் வெளியேறினார். மொயின் அலி இதே ஓவரில் 34 பந்துகளில் 2 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 65 ரன்கள் எடுத்து கோஸ்வாமியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். 15 ஓவர்கள் முடிவில் 149/4. அதன் பிறகு

கொலின் டி கிராண்ட்ஹோம் 17 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 40 ரன்களையும், சர்பராஸ் கான் பந்துகளில் 22 ரன்களையும் எடுக்க கடைசி 5 ஓவர்களில் 69 ரன்கள், 20 ஒவர்களில் 218/6 என்று பெங்களூரு முடிந்தது. ’

சப்லைம் வில்லியம்சன், பொங்கி எழுந்த பாண்டே

அலெக்ஸ் ஹேல்ஸ் 24 பந்துகளில் 37 ரன்கள் என்ற அதிரடித் தொடக்கம் கொடுத்தார், ஆனால் ஏனோ உமேஷ் யாதவ் பந்தில் அவருக்கு சவுதி மிக அருமையாக டீப் ஸ்கொயர் லெக்கில் பிடித்த கேட்சை டிவி நடுவர் இல்லை என்றார். அதன் பிறகு மிட் ஆனில் விராட் கோலி கடினமான இன்னொரு கேட்ச் வாய்ப்பை விட்டார். கடைசியில் டிவில்லியர்ஸ் டீப்பில் அற்புதமாக ஒரு கேட்சைப் பிடித்து ஹேல்ஸை வெளியேற்றினார். மேலெழும்பி ஒரு கையில் பிடித்த திகைப்புக் கேட்ச் ஆகும் அது. ஷிகர் தவன் 15 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து சாஹல் பந்தில் அவரிடமே கேட்ச் ஆனார்.

williamson-afpjpg

சப்லைம் வில்லியம்சன் ஷாட்.   -  படம். | ஏ.எஃப்.பி.

 

வில்லியம்சனுக்கு உண்மையில் கோலியினால் பீல்ட் செட் செய்ய முடியவில்லை, ஹேல்ஸ் ஆட்டமிழந்தவுடன், வில்லியம்சனுக்கு களவியூகம் பற்றிய நல்ல நினைவாற்றல், அதனால் 5 பவுண்டரிகள் ஒரு சிக்ஸை சடுதியில அடித்தார். 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். பாண்டே அதுவரை பந்துக்கு ஒரு ரன் என்று கூட எடுக்காமல் இருந்தவர் திடீரென பொங்கி எழுந்தார். கொலினை 2 பவுண்டரி ஒரு சிக்ஸ் அடித்து 16 பந்துகளில் 21 என்று ஆக்ரோஷம் காட்டினார். சாஹலை ஒரு பவுண்டரி அடித்ததன் மூலம் 4 ஒவர்களில் 55 தேவை என்று கொஞ்சம் ஆர்சிபிக்கு அடிவயிறு கலங்கியது.

ஆனால் டிம் சவுதி மிக அருமையாக ஒரு ஓவரை வைடு யார்க்கர்களாக வீசி கட்டுப்படுத்த 18 பந்துகளில் 49 என்று சமன்பாடு மாறியது. வில்லியம்சனுக்குக் கடைசியில் அதிகம் ஸ்ட்ரைக் கிடைக்கவில்லை. 42 பந்துகளில் 81 ரன்கள் என்று அவர் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். மணீஷ் பாண்டே 38 பந்துகளில் 62 ரன்களை மிகவும் சின்சியராக ஆடி எடுத்தாலும் கடைசியில் நேராக ஆடியிருந்தாலே பவுண்டரி வந்திருக்கும்  பந்துகளையெல்லாம் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஷாட் ஆடப்போய் பீட்டன் ஆகி டாட்பால்களைக் கொடுத்தார், இதனால் கடைசி ஓவரில் 19 தேவை என்ற நிலை வில்லியம்சன் ஆட்டமிழந்த பிறகு முடியாமல் போக 204 ரன்களில் முடிந்தது. ஆட்ட நாயகனாக டிவில்லியர்ஸ் தேர்வு.

http://tamil.thehindu.com/sports/article23922564.ece?homepage=true

Link to comment
Share on other sites

9-வது வெற்றியை பெறும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி அணியுடன் இன்று மோதல்

 
அ-அ+

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது வெற்றி பெறும் முனைப்புடன் டெல்லி டேர் டெவில்சை சந்திக்கிறது.#IPL2018 #DDvCSK #DD #CSK

 
 
 
 
9-வது வெற்றியை பெறும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி அணியுடன் இன்று மோதல்
 
புதுடெல்லி:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், டெல்லி டேர்டெவில்சும் மோதுகின்றன.

டோனி தலைமையிலான சென்னை அணி 8 வெற்றி, 4 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் தற்போது பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை எட்டிவிட்ட சென்னை அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் டாப்-2 இடத்தை உறுதி செய்துவிடும்.

அம்பத்தி ராயுடு (சதம் உள்பட 535 ரன்), ஷேன் வாட்சன் (சதம் உள்பட 424 ரன்), கேப்டன் டோனி (3 அரைசதத்துடன் 413 ரன்), சுரேஷ் ரெய்னா (3 அரைசதத்துடன் 315 ரன்) ஆகியோர் பேட்டிங்கில் கலக்குகிறார்கள். பேட்டிங் தான் சென்னை அணியின் பிரதான பலமாக இருக்கிறது.

பந்து வீச்சில் ஷர்துல் தாகூர் (11 விக்கெட்), வெய்ன் பிராவோ (9 விக்கெட்), தீபக் சாஹர் (7 விக்கெட்) ஆகியோர் ஓரளவு கைகொடுக்கிறார்கள். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங் (தலா 7 விக்கெட்) இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத்துக்கு எதிராக 180 ரன்கள் இலக்கை எளிதில் சேசிங் செய்த சென்னை அணி 5 நாட்கள் ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் 9-வது வெற்றியை நோக்கி களம் இறங்க காத்திருக்கிறது.

ஐ.பி.எல். வரலாற்றில் இறுதிப்போட்டிக்கு முன்னேறாத ஒரே அணி டெல்லி டேர்டெவில்ஸ் தான். அந்த சோகம் இந்த முறையும் தொடருகிறது. 3 வெற்றி, 9 தோல்விகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட டெல்லி அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. ஆனாலும் அந்த அணி வீரர்கள் தொடரை உயர்ந்த நிலையில் முடிக்க விரும்புவார்கள். அதுவும் உள்ளூரில் ஆடுவதால் எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்க தீவிரம் காட்டுவார்கள்.

டெல்லி அணிக்கு பேட்டிங் வரிசை வலுவாகவே காணப்படுகிறது. நடப்பு தொடரில் அந்த அணி 6 முறை 180 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கிறது. ரிஷாப் பான்ட் (582 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (386 ரன்), பிரித்வி ஷா (216 ரன்) ஆகியோர் நன்றாக ஆடுகிறார்கள். ஆனால் பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் (15 விக்கெட்) தவிர மற்றவர்கள் பார்மில் இல்லை. இதே போல் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லும் (10 ஆட்டத்தில் 142 ரன்) ஜொலிக்காதது டெல்லிக்கு பின்னடைவாக அமைந்து விட்டது.

இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, டேவிட் வில்லி அல்லது நிகிடி, ஹர்பஜன்சிங் அல்லது கரண் ஷர்மா, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர்.

டெல்லி: பிரித்வி ஷா, ஜாசன் ராய், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷாப் பான்ட், விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா, ஹர்ஷல் பட்டேல், அமித் மிஸ்ரா அல்லது ஷபாஸ் நதீம், சந்தீப் லாமிச்சன்னே, ஜூனியர் டாலா, டிரென்ட் பவுல்ட்.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. #IPL2018 #DDvCSK #DD #CSK 

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/18084324/1163933/chennai-super-kings-vs-delhi-daredevils-match-on-today.vpf

Link to comment
Share on other sites

ஸ்பைடர்மேனை நேரில் பார்த்தேன்- விராட் கோலி

 
அ-அ+

ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் போது அலெக்ஸ் ஹால்ஸ் அடித்த பந்தை எல்லை கோட்டில் டிவில்லியர்ஸ் பாய்ந்து கேட்ச் பிடித்தது ‘ஸ்பைடர்மேன்’ போல் இருந்ததாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.#IPL2018 #RCBvSRH #ABD #AbdeVilliers #viratkohli

 
 
ஸ்பைடர்மேனை நேரில் பார்த்தேன்- விராட் கோலி
 
பெங்களூர்:

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ‘லீக்’ ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூர் 6-வது பெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 218 ரன் குவித்தது.

டிவில்லியர்ஸ் 39 பந்தில் 69 ரன்னும், மொய்ன் அலி 34 பந்தில் 65 ரன்னும், கிராண்ட் ஹோம் 17 பந்தில் 40 ரன்னும் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 204 ரன்னே எடுத்தது. இதனால் பெங்களூர் 13 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் பிளேஆப் சுற்று வாய்ப்பில் பெங்களூர் நீடிக்கிறது.

ஐதராபாத் அணி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹால்ஸ் அடித்த பந்தை எல்லை கோர்ட்டில் நின்ற டிவில்லியர்ஸ் பாய்ந்து ஒரு கையில் கேட்ச் பிடித்து பிரமிக்க வைத்தார்.
 
201805181116277629_1_pr9dapdg._L_styvpf.jpg


வெற்றி குறித்து பெங்களூர் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

வெற்றி உணர்வு மகிழ்ச்சி அளிக்கிறது. பனியின் தாக்கம் இருந்தது. ஆனால் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். டிவில்லியர்ஸ், மொய்ன் அலி, கிராண்ட் ஹோம் பேட்டிங் அபாரமாக இருந்தது.

எல்லை கோட்டில் டிவில்லியர்ஸ் பாய்ந்து கேட்ச் பிடித்தது ‘ஸ்பைடர்மேன்’ போல் இருந்தது. இதை நீங்கள் சாதாரண மனிதனாக இருந்தால் செய்ய முடியாது. அவரது பீல்டிங் நம்ப முடியாத வகையில் இருந்தது.
 
201805181116277629_2_1lhpg5wj._L_styvpf.jpg


அவரது ஷாட்டுகள் இன்னமும் எனது பிரமிப்பில் இருந்து செல்லவில்லை. இந்த வெற்றி உத்வேகத்தை கடைசி போட்டியில் (ராஜஸ்தானுக்கு எதிராக) கொண்டு செல்வோம்.

தற்போது 11 பேர் கொண்ட ஆடும் லெவன் அமைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மொயின் அலி தனது பணியை நன்றாக செய்தார். அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை இரு கைகளிலும் நன்றாக பிடித்து கொண்டுள்ளார்.

எங்களது சொந்த மைதானமான பெங்களூரில் இது கடைசி ஆட்டம். ரசிகர்களின் ஆதரவு அற்புதமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.#IPL2018 #viratkohli #AbDeVilliers

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/18105409/1163970/Virat-Kohli-Compares-AB-de-Villiers-To-A-Spiderman.vpf

Link to comment
Share on other sites

4 ஓவரில் 70 ரன்களை வாரி வழங்கிய ஐதராபாத் அணியின் தம்பி

 
அ-அ+

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி வீரர் பசில் தம்பி 4 ஓவர் வீசி 70 ரன்களை எதிரணிக்கு விட்டுக்கொடுத்தார். #IPL2018 #VIVOIPL #RCBvSRH #BasilThampi

4 ஓவரில் 70 ரன்களை வாரி வழங்கிய ஐதராபாத் அணியின் தம்பி
 
 
பெங்களூரு:
 
ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 
 
இப்போட்டியில், பெங்களூரு அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஐதராபாத் அணி வீரர் பசில் தம்பி பந்து வீசினார். பொதுவாக ஐதராபாத் அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள். ஆனால் நேற்றைய போட்டியில் பசில் தம்பி எதிரணிக்கு ரன்களை வாரி வழங்கினார். 
 
பசில் தம்பி வீசிய 8-வது ஓவரில் பெங்களூர் அணி 19 ரன்கள் எடுத்தது. அதன்பின் அவர் வீசிய 12-வது ஓவரில் 18 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதைத்தொடர்ந்து 15-வது ஓவரை தம்பி வீசினார். அந்த ஓவரில் பெங்களூர் அணி 14 ரன்கள் எடுத்தது. இறுதியில் 19-வது ஓவரும் அவரிடம் கொடுக்கப்பட்டது. அந்த ஓவரையும் எதிரணியினர் விட்டு வைக்கவில்லை. 19-வது ஓவரில் 19 விட்டுக்கொடுத்தார். 
 
201805180609415561_1_thampi175._L_styvpf.jpg
 
இதன்மூலம் அவர் வீசிய 4 ஓவர்களில், பெங்களூர் அணியினர் 70 ரன்கள் அடித்தனர். இதில் 6 சிக்ஸர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். ஐபிஎல் போட்டிகளில் ஒரு பந்துவீச்சாளர் 4 ஓவரில் விட்டுக்கொடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவேயாகும். #IPL2018 #VIVOIPL #RCBvSRH #BasilThampi

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/18060941/1163922/Basil-Thampi-records-Most-expensive-spell-in-IPL.vpf

Link to comment
Share on other sites

டி வில்லியர்ஸின் ஸ்டன்னிங் கேட்ச், மிரட்டல் பேட்டிங்... கோலி செம ஹேப்பி! #RCBvSRH

 
 

பெங்களூரு சின்னசாமி மைதானம் அளவில் சிறியது. அங்கு 200 ரன்கள் அடிப்பது பெரிய விஷயேமே இல்லை. ஆனால், இந்த சீசனின் பெஸ்ட் பெளலிங் என வர்ணிக்கப்பட்ட ஹைதராபாத்துக்கு எதிராக 218 ரன்கள் அடித்தது பாராட்டுக்குரியது. தேங்ஸ் டு ஏபிடி- மொயின் அலி. ஆனால், 218 ரன்கள் எடுத்தும்  அதை டிஃபண்ட் செய்யத் தடுமாறியதற்காக ஆர்.சி.பி-க்கு ஒரு கொட்டு. எப்படியோ, ஆர்.சி.பி-யின் ப்ளே ஆஃப் கனவு இன்னும் கலையவில்லை. 

AB devilliers Scoops the ball #RCBvSRH

 

விராட் அண்ட் கோ வின்னிங் மொமன்ட்ஸ்! 

வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த பெங்களூரு பிளேயிங் லெவனை மாற்றவில்லை. புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக கேரளாவைச் சேர்ந்த பசில் தம்பி வாய்ப்பு பெற்றார். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. சந்தீப் ஷர்மா வீசிய முதல் ஓவரிலேயே திருப்புமுனை. முதல் பந்திலேயே ஹைதராபாத்துக்கு ஒரு வாய்ப்பு. தீபக் ஹூடா அதைப் பயன்படுத்தவில்லை. பார்த்திவ் பட்டேல் கண்டம் தப்பினார். ஸ்ட்ரைக் வந்த முதல் பந்திலேயே கோலி தன் ஸ்டைலில் ஸ்ட்ரெய்ட் டிரைவ் மூலம் பவுண்டரி அடித்தார். சன்ரைசர்ஸ் கொடுத்த சான்ஸை பயன்படுத்ததத் தவறி, கடைசி பந்தில் வெளியேறினார் பார்த்திவ். ஒருபுறம் வருத்தம் இருந்தாலும் அடுத்து, கோலி – டி வில்லியர்ஸ் பார்ட்னர்ஷிப்பை நினைத்து பூரிப்படைந்தனர் ஆர்சிபியன்ஸ். அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ரஷித் கான் வீசிய கூக்ளியை ஸ்லாக் ஸ்வீப் அடிக்கிறேன் போல்டானார் விராட் (12).

ஏலியன் ஏபிடி!

சந்திக்கும் முதல் பந்திலிருந்தே பெளலர்களுக்கு நெருக்கடி கொடுப்பதில் வல்லவர் ஏபிடி.ஷகிப் அல் ஹசன் அந்த பிரஷ்ஷரை உணர்ந்தார். முதல் பந்திலேயே ஃபிரன்ட் ஃபுட்டில் போக்குகாட்டி, பேக் ஃபுட்டில் அழுத்தம் கொடுத்து ஒரு கட். எந்த ஃபீல்டருக்கும் வசப்பாடமல் பந்து பவுண்டரிக்குச் சென்றது. அடுத்த பந்து, இன் சைட் அவுட். அதுவும் பவுண்டரி. டி வில்லியர்ஸ் பேட்டிங்செய்யும்போது எட்ஜ், மிஸ்ஹிட்டைப் பார்ப்பது அரிது. டைமிங், ஃபுட் வொர்க், ஷாட் செலக்ஷன் எல்லாமே பக்காவாக இருக்கும். ஷகிப் பந்தில் விராட் மிஸ் செய்த ஸ்லாக் ஸ்வீப்பை, ஏபிடி அழகாக பவுண்டரிக்கு அனுப்பி இருந்தார். சித்தார்த் கவுல் பந்தில் லாங் ஆனில் பறந்த பவுண்டரி பெர்ஃபெக்ட் கிரிக்கெட் ஷாட். 

AB de villiers Plays a Shot #RCBvSRH

விராட் அண்ட் கோ வின்னிங் மொமன்ட்ஸ்! 


மொயின் அலியை அடிக்கவிட்டு வேடிக்கை பார்த்த இந்த ஏலியன், பசில் தம்பி பந்தில் டீப் மிட்விக்கெட்டில் பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தபோது, விராட் கோலி தானே 50 அடித்தது போல உணர்ந்தார். `என்னடா இன்னும் சிக்ஸே அடிக்கலையே...!’  என எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தீனியாக, பசில் தம்பி பந்தில் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார் டி வில்லியர்ஸ். ஃபுல் லென்த்தில் மிடில் ஸ்டம்ப் நோக்கி வரும் பந்தையே ஸ்லாக் ஸ்வீப் செய்வார். அவருக்கு லோ ஃபுல்டாஸ் போட்டால் விடுவாரா? அதுவும் தன் டிரேட்மார்க் ஸ்டைலில் ஸ்டம்புக்கு வலதுபுறம் ஒதுங்கி, மண்டி போட்டு ஒரு இழுப்பு. கமென்டேட்டர்கள் Marvelous என கர்ஜித்தனர். ரசிகர்கள் ஏபிடி ஏபிடி ஏபிடி என குதூகலித்தனர்! 

எல்லோரும் டி வில்லியர்ஸ் அடிப்பார் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, மொயின் அலி அமர்க்களப்படுத்தினார். இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் பெஞ்ச்சில் இருந்தவர், எல்லாவற்றுக்கும் சேர்த்து நேற்று பிரித்து மேய்ந்துவிட்டார். டி வில்லியர்ஸுக்கு நெருக்கடி இல்லாமல் பார்த்துக்கொண்டார். பசில் தம்பி பந்தில் சிரமமே இல்லாமல் பேக் டு பேக் சிக்ஸர் அடித்தவர், சந்தீப் ஷர்மா பந்தில் லாங் ஆனில் தூக்கி அடித்ததை ஷிகர் தவன் பிடித்துவிட்டார். ஆனாலும், அது சிக்ஸர். 

Moeen Ali Plays a Pull shot #RCBvSRH

இவை எல்லாவற்றையும்விட ரஷித் கான் பந்தில் டவுன் தி லைன் வந்து மிட் ஆஃபில் அடித்த சிக்ஸர்தான் அல்டிமேட். மொயின் அலி நேற்று சப்போர்ட்டிங் ரோலை செவ்வனே செய்தார். அரைசதம் கடந்தார். பொல்லார்டை பஞ்சாப் ஃபார்முக்கு கொண்டுவந்ததுபோல, மொயின் அலிக்கு சன்ரைசர்ஸ் பெளலர்கள் நம்பிக்கை கொடுத்தனர். ஏபிடி - மொயின் அலி ஜோடி மிடில் ஓவர்களில் டெத் ஓவர் ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி 57 பந்துகளில் 107 ரன்கள் சேர்த்தது. இதனால் ஆர்.சி.பி.யின் ரன்ரேட் எந்த இடத்திலும் பத்துக்கு குறையவே இல்லை. போதாக்குறைக்கு கிரந்தோம் 4 சிக்ஸர்களுடன் 17 பந்துகளில் 40 ரன்கள் விளாச, சர்ஃப்ராஸ் கானும் 8 பந்தில் 22 ரன்கள் சேர்த்தார். முடிவில் ஆர்.சி.பி 6 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. 

Tampi top scorers for RCB as ABD and Moeen Ali Play the supporting roles... இது புவனேஸ்வர் குமாருக்கு மாற்றாக களமிறங்கி, 4 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 70 ரன்கள் கொடுத்த பசில் தம்பியின் பெளலிங்கை மெச்சி சமூகவலைதளத்தில் போட்டப்பட்ட பதிவு. தம்பியை களமிறக்கியதற்கு ஹைதராபாத்துக்கு கிடைத்த சன்மானம். 

செகண்ட் இன்னிங்ஸில்...  `218 ரன்களை ஈஸியா டிஃபண்ட் பண்ணலாம்’ என கெத்தாக களமிறங்கியது ஆர்சிபி. சின்னசாமி மைதானத்துக்கும் ஷிகர் தவனுக்கும் அப்படி ஒரு ராசி. அதனால இன்னிக்கும் அவர்தான் அடிப்பார் என எதிர்பார்த்துக்கொண்டிருக்க, அலெக்ஸ் ஹேல்ஸ் வேகமெடுத்தார். ஆனால், அவர் ஒருமுறை கண்டம் தப்பினார். அதுதான் இந்த மேட்ச்சின் உச்சபட்ச டிராமா!

வர்ணனையாளர்/விமர்சகர் ஹர்ஷா போக்ளே கிண்டல் பேர்வழி. அவரின் விமர்சனம் மெல்லிய காது திருகலாக இருக்கும். குற்றச்சாட்டை வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவதைப் போல குத்திக்காட்டும் அவர், போட்டியைத் தொடங்குவதற்காக அம்பயர்கள் நடந்து வரும்போதே இப்படிச் சொன்னார், ``ஒவ்வொரு நாளும் வேண்டிக்கொள்கிறேன் இது அம்பயர்களுக்கு நல்ல நாளாக இருக்க வேண்டும் என்று....’’ இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்த சீசன் முழுவதுமே அம்பயரிங் லட்சணம் அப்படி!

AB de villiers's stunning catch #RCBvSRH1

விராட் அண்ட் கோ வின்னிங் மொமன்ட்ஸ்! 


உமேஷ் யாதவ் பந்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் அடித்த புல் ஷாட்டை டீப் ஸ்கொயர் லெக்கில் இருந்த டிம் செளதி அருமையாக கேட்ச் பிடித்தார். ஏனோ, களத்தில் இருந்த நடுவர்களுக்கு அதில் சந்தேகம். பந்து தரையில் பட்டதா என தேர்ட் அம்பயரிடம் கேட்கின்றனர். அதற்கான அவசியமும் இல்லை என்பது வேறு விஷயம். ஏகப்பட்ட கோணங்களில் Replay பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வருகிறார், ஸாரி, முட்டாள்தனமான முடிவுக்கு வருகிறார் தேர்ட் அம்பயர் சம்சுதின். நாட் அவுட். டிம் செளதியால் நம்பமுடியவில்லை. கோலியால் நம்பமுடியவில்லை. `நல்லா தெரியுது இது கேட்ச்டா…’ என கதறுகிறார்கள் ரசிகர்கள். ``Someone who has played the game knows it’s clearly out’’ என ஒரே போடாகப்போட்டு விட்டார் மைக்கேல் கிளார்க். ஹர்ஷா போக்ளே கெக்கெபெக்கேவென சிரிக்கிறார். அம்பயரிங் லட்சணத்தைப் பார்த்து ஊரே சிரிப்பாய் சிரித்தது. Please BCCI Have a look on it ASAP.

தவன் - ஹேல்ஸ் ஜோடியை வேகப்பந்துவீச்சாளர்களால் பிரிக்கமுடியவில்லை. சாஹலிடம் பந்தைக் கொடுத்தார் கோலி. தவன் அவுட் (18). வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்த ஹேல்ஸ் மறுபுறம் வேகமெடுத்தார். அவரை ஒரு அட்டகாசமான கேட்ச் மூலம் வெளியேற்றினார் டி வில்லியர்ஸ். வெறுமனே அட்டகாசமான கேட்ச் என அதைக் கடந்துவிட முடியாது. கிட்டத்தட்ட சிக்ஸ் போனதாகவே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், பாய்ந்து வந்த, ஸாரி, பறந்து வந்த டி வில்லியர்ஸ், அந்தரத்தில் மிதந்தபடியே பவுண்டரி லைனுக்கு அப்பால் சென்ற பந்தை வலது கையில் பிடித்தார். எப்போதுமே டி வில்லியர்ஸ்  கேட்ச் பிடிப்பதைவிட, பந்தைப் பிடித்துவிட்டு பேலன்ஸ் செய்யும்விதம்தான் அழகு. ஹேல்ஸ் கேட்ச்சைப் பிடித்தபோதும் அப்படித்தான். கேட்ச் பிடித்துவிட்டு உடம்பு கீழிறங்கும்போது ஒட்டுமொத்த பலத்தையும் வலதுகாலில் நிறுத்தி, தடுமாறாமல், கீழே விழாமல் ஜஸ்ட் லைக் தட் என ஓடிவந்தார். பெங்களூரு மைதானமே விக்கித்து நின்றது. ஏதோ ஒரு மூலையில் இருந்து டி வில்லியர்ஸை கட்டியணைக்க ஓடோடி வந்தார் கோலி.

கேட்ச் அல்ல மேஜிக் அது! பேஸ்கட்பால் பிளேயர்கள் போல இருந்த இடத்தில் இருந்தே அட்டகாசமான ஜம்ப். அடுத்து கேட்ச். அடுத்து பேலன்ஸ் மிஸ்ஸாகாமல் லேண்டிங் என ஒரு கேட்ச்சில் எத்தனை எத்தனை வித்தைகளைப் புகுத்தி விட்டார். அதனால்தான் அவரை சூப்பர்மேன் என்றும் ஏலியன் என்றும் அழைக்கின்றோம். தவிர, நேற்று ஈஸியான கேட்ச்களை மிஸ் செய்த விராட் கோலி, வில்லியம்சன், ஷிகர் தவனுக்கு  `கேட்ச்னா இப்படி பிடிக்கணும்’ என பாடம் எடுக்கும் வகையில் இருந்தது அந்த கேட்ச்.  

வில்லியம்சன் மாஸ்டர் 

Kane Williamson

வார்னர் இல்லாத சுவடே இல்லாமல் பார்த்துக்கொள்கிறார் கேன் வில்லியம்சன். தேவையான நேரத்தில் கேப்டன் இன்னிங்ஸ் ஆடவும் அவர் தவறியதில்லை. டார்கெட் அதிகம் என்பதால் முதல் பந்தில் இருந்தே அடிக்க ஆரம்பித்தார். ஹேல்ஸ் அவுட்டானபின், சந்தித்த ஆறில் ஐந்து பந்துகளை (4,4,1,4,4,6 ) பவுண்டரிக்கு அனுப்பியிருந்தார். 28 பந்துகளில் அரைசதம் அடித்தபின், உமேஷ், கிரந்தோம், சிராஜ் என பாரபட்சம் பார்க்காமல் எல்லோர் பந்திலும் அடித்து வெளுக்க, வெற்றி சன்ரைசர்ஸ் பக்கம் வந்தது. 

 

ஆரம்பத்தில் மந்தமாக இருந்த மணீஷ் பாண்டேவுக்கு பூஸ்ட் அப் கொடுத்தார் 15-வது ஓவரை வீசிய கிரந்தோம். அந்த ஓவரில் வில்லியம்சன் - பாண்டே இருவரும் வெச்சு செய்ய, 22 ரன்கள் கிடைத்தது. ஆட்டத்தின் போக்கும் மாறியது. ஒரு கட்டத்தில் 12 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற சூழல். டிம் செளதி வீசிய 19-வது ஓவரில் மணீஷ் 3 பவுண்டரி அடித்தார். ஆனாலும், முக்கியமான கட்டத்தில் ஃபார்மில் இருந்த வில்லியம்சனுக்கு ஸ்ட்ரைக் தராமல், தடவிக்கொண்டிருந்தார் மணீஷ். 17.4 - 19.1 ஓவர் இடைவெளியில் வில்லியம்சன் சந்தித்தது இரண்டு பந்துகள் மட்டுமே. கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்றபோது, முதல் பந்திலேயே அவுட்டானார் வில்லியம்சன் (81 ரன், 42 பந்து).  தீபக் ஹூடா, மணீஷ் இருவராலும் அடுத்த 5 பந்துகளில் 20 ரன்கள் எடுக்க முடியவில்லை. ஆர்.சி.பி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஏபிடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆர்.சி.பி 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது.

https://www.vikatan.com/news/sports/125323-rcb-beat-srh-by-14-runs.html

Link to comment
Share on other sites

`ஜூனியர்’ பட்டாளத்தை சமாளிக்க என்ன பிளான் வைத்திருக்கிறார் தோனி?! #DDvCSK

 
 

பேட்ஸ்மேன்களையே பேராயுதமாகக் கொண்ட இரண்டு அணிகள் இன்று மோத இருக்கின்றன. டெல்லி, சென்னை என இரண்டு அணிகளுக்குமே இது வாழ்வா, சாவா மேட்ச் அல்ல. சென்னை ப்ளே ஆஃப்க்கு தகுதிபெற்றுவிட்டது. டெல்லி முதல் ஆளாக  ப்ளே ஆஃப்க்குள் நுழையும் வாய்ப்பை இழந்துவிட்டது. ஆனால், இன்றைய மேட்ச்சில் டெல்லியைக் குறைவான ரன்களுக்குள் சுருட்டினால், பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால், ஐதராபாத்தை பின்னுக்குத்தள்ளி டேபிள் டாப்பராக முதல் இடத்தைப்  பிடிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ். #DDvCSK

#DDvCSK

 

தெறிக்கவிடும் டெல்லி பேட்ஸ்மேன்கள்!

ஐபிஎல்-ன் முதல் சுற்றில் புனேவில் நடந்த மேட்ச்சில் டெல்லியை தோற்கடித்திருக்கிறது சென்னை. ஆனால், அந்த வெற்றியைப் பெறுவதற்குள் தலையால் தண்ணீர் குடித்துவிட்டது சென்னை. சூப்பர் கிங்ஸின் பெளலர்களை பன்ட் அடித்த அடி மறக்கமுடியாதது. பன்ட் மட்டுமல்ல எந்த மேட்ச்சிலுமே அதிரடி ஆட்டம் ஆடாத தமிழகத்தின் விஜய் ஷங்கர்கூட, அன்று சென்னை பெளலர்களை வெளுத்தார். 5 சிக்ஸர் எல்லாம் அடித்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டார் விஜய் ஷங்கர். சென்னை அன்று 211 ரன்கள் அடிக்க, 198 ரன்கள் வரை அடித்து சென்னையை அச்சுறுத்தியது டெல்லி. இப்போது மீண்டும் பன்ட், ப்ரித்வி, ஷ்ரேயாஸ் என்பவர்களோடு சென்னையை மிரட்ட பொடியன் அபிஷேக் ஷர்மாவும் இணைந்திருக்கிறான். 17 வயதேயான டெல்லி கில்லி அபிஷேக், பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 19 பந்துகளில் 46 ரன்கள் அடித்து மிரட்டினான். இன்றைய மேட்ச்சிலும் ப்ரித்வி ஷா, அபிஷேக் ஷர்மா, லாமிசேன் என்கிற இந்த மூன்று அண்டர் 19 ப்ளேயர்கள் அணிக்குள் இருப்பார்கள்.

#DDvCSK

சென்னையின் பெளலிங்!

2018 ஐபிஎல்-ன் டாப் பெளலர்கள் லிஸ்ட்டில் 18-வது இடத்துக்கு மேல்தான் சென்னையின் பெளலர்கள் இருக்கிறார்கள். ஷர்துல் தாக்கூர்தான் சென்னையின் அதிகபட்ச விக்கெட் டேக்கர். இதுவரை 9 மேட்ச்களில் விளையாடி 11 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்.

#DDvCSK

இன்றைய மேட்சில் சென்னையின் பெளலிங் லைன்-அப்பில் நிச்சயம் மாற்றம் இருக்கும். தீபக் சாஹர் அணியில் இருப்பார். ஆனால், ஷர்துல் தாக்கூருக்குப் பதில் லுங்கி எங்கிடி அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கலாம். லுங்கி எங்கிடி அணிக்குள் வருவதால் மற்றொரு வெளிநாட்டு பெளலரான டேவிட் வில்லி அணிக்குள் இடம்பெறுவது சிரமம். டேவிட் வில்லி ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் 2 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்தார். அதனால் வில்லியை இன்று தோனி அணிக்குள் எடுக்கமாட்டார் என்றே தெரிகிறது.

இந்த ஐபிஎல்-ல் மிகச்சிறந்த பெளலிங் அட்டாக்கை கொண்ட ஐதராபாத் பெளலர்களையே வெளுத்தவர் ரிஷப் பன்ட். புவனேஷ்குமார் ஓவர்களை எல்லாம் அசால்ட்டாக அடித்தார். பிராவோவின் பெளலிங் ஃபார்ம்தான் சென்னைக்கு பெரும்கவலை. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டான பிராவோ, டெத் ஓவர்களில் அதிக ரன்களைக் கொடுக்கும் மோசமான பெளலர்களில் ஒருவராக மாறியிருக்கிறார். புவனேஷ்குமாரையே அடித்தவர் பன்ட் என்பதால் இன்று பன்ட்டை சமாளிக்க ஸ்பின்னர்களையும், வேகப்பந்து வீச்சாளர்களையும் மாற்றி மாற்றி இறக்குவார் தோனி. 

ஸ்பின்னர்களைப் பொறுத்தவரை, ரவீந்திர ஜடேஜா ஃபுல் ஃபார்முக்கு வந்திருப்பதால் அவருடன் ஹர்பஜன், கான் ஷர்மா என இரண்டு பெளலர்களையும் தோனி பயன்படுத்துவார். லுங்கி எங்கிடி, தீபக் சாஹர், ஷேன் வாட்ஸன், ஹர்பஜன், கான் ஷர்மா, டிவெய்ன் பிராவோ என்பதுதான் சென்னையின் பெளலிங் லைன் அப் ஆக இருக்கும். 

டெல்லியின் பெளலிங்!

டிரென்ட் பெளல்ட் மட்டும்தான் டெல்லிக்கு நம்பிக்கை தரக்கூடிய ஒரே பெளலர். ஆனால், கடைசியாக நடந்த மேட்சில் நேபாளத்தின் இளம்வீரர் சந்தீப் லாமிசேனை அணிக்குள் கொண்டுவந்தது டெல்லி. கோலி, டிவில்லியர்ஸ் என உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக மிகச்சிறப்பாகவே பந்துவீசினார் லாமிசேன். பார்த்திவ் பட்டேலின் விக்கெட்டையும் எடுத்ததோடு 4 ஓவர்களில் வெறும் 25 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதனால் இன்று அவர் களமிறங்க வாய்ப்புள்ளது. அமித் மிஸ்ராவும், லாமிசேனும்தான் முக்கிய ஸ்பின்னர்களாக இருப்பார்கள். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களில் அவேஷ் கான் இன்றைய டெல்லி அணியில் இடம்பிடிக்க வாய்ப்பிருக்கிறது. 

டெல்லி பிட்ச் எப்படி?!

டெல்லி ஃபெரோஷா கோட்லா பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச். இதுவரை இந்த சீசனில் 5 போட்டிகள் டெல்லியில் நடைபெற்றுள்ளன. இதில் முதலில் ஆடிய அணிகள்தான் மூன்றுமுறை வெற்றிபெற்றிருக்கின்றன. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக இந்த மைதானத்தில் 219 ரன்கள் அடித்திருக்கிறது டெல்லி. ஆனால், கடைசியாக இங்கு நடந்த இரண்டு போட்டிகளிலும் சேஸ் செய்த  ஐதராபாத், பெங்களூரு அணிகள் வெற்றிபெற்றிருக்கின்றன.

சென்னையின் பேட்டிங்கைப் பொறுத்தவரை வாட்ஸன், ராயுடு, ரெய்னா, தோனி, பில்லிங்ஸ், ஜடேஜா, பிராவோ என்பதுதான் லைன் அப்- ஆக இருக்கும். டெல்லி மைதானத்தில் யார் முதலில் ஆடினாலும் ஸ்கோர் 180 ரன்களுக்கு மேல் எதிர்பார்க்கலாம். இன்றைய போட்டி பேட்ஸ்மேன்களுக்கு இடையே நடக்கப்போகும் யுத்தம் என்பதால் விசில் போடத் தயாராவோம்!

https://www.vikatan.com/news/sports/125328-delhi-daredevils-vs-chennai-super-kings-match-preview.html

Link to comment
Share on other sites

சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

 
அ-அ+

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #IPL2018 #DDvCSK

 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
 
ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் சுண்ட, எம்எஸ் டோனி ‘ஹெட்’ என அழைத்தார். எம்எஸ் டோனி அழைத்தபடி ‘ஹெட்’ விழ, டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டேவிட் வில்லே நீக்கப்பட்டு, லுங்கி நிகிடி சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஷேன் வாட்சன், 2. அம்பதி ராயுடு, 3. சுரேஷ் ரெய்னா, 4. சாம் பில்லிங்ஸ், 5. டோனி, 6. வெயின் பிராவோ, 7. ஜடேஜா, 8. ஹர்பஜன் சிங், 9. தீபக் சாஹர், 10. சர்துல் தாகூர். 11. லுங்கி நிகிடி

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/18193933/1164112/chennai-Super-Kings-won-toss-select-bowl-first.vpf

18/0 * (3/20 ov)
Link to comment
Share on other sites

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது டெல்லி டேர்டெவில்ஸ்

 
அ-அ+

டெல்லியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி டேர்டெவில்ஸ். #IPL2018 #DDvCSK

 
 
 
 
சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது டெல்லி டேர்டெவில்ஸ்
 
ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ப்ரித்வி ஷா 17 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

201805182144272231_1_DDvCSK002-s._L_styvpf.jpg

அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட ரிஷப் பந்த் 26 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர், பந்த் இருவரையும் ஒரே ஓவரில் லுங்கி நிகிடி வீழ்த்தினார். அதன்பின் வந்த கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்னிலும், அபிஷோக் ஷர்மா 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க டெல்லி அணியின் ஸ்கோர் அப்படியே படுத்தது.

201805182144272231_2_DDvCSK003-s._L_styvpf.jpg

அதன்பின் வந்த விஜய் சங்கர், எச்.பட்டேல் தாக்குப்பிடித்து ஓரளவிற்கு ரன்கள் அடிக்க டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது டெல்லி டேர்டெவில்ஸ். விஜய் சங்கர் 28 பந்தில் 36 ரன்களும், ஹர்ஷல் பட்டேல் 16 பந்தில் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/18214427/1164129/IPL-2018-delhi-daredevils-163-runs-targets-to-chennai.vpf

Link to comment
Share on other sites

நேரத்தை விரயம் செய்து தவறான தீர்ப்பு: ஐபிஎல்-ல் நடுவர்கள் மீது தொடரும் சர்ச்சை

 

 
ABD

ஏ.பி.டிவில்லியர்ஸ் அடித்த சிக்ஸரை நீண்ட நேரம் ரீப்ளே பார்த்து தவறாக நான்கு என்று தீர்ப்பளித்த நடுவர்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நடுவர்களின் பிழைகள், மோசடித் தீர்ப்புகள், தவறான நோ-பால்கள், வைடுகள், சில வேளைகளில் நோ-பால்களைக் கொடுக்காமல் இருப்பது என்று பலவிதமான தவறுகளை இழைத்து வருவது சர்ச்சைக்குள்ளானது நாம் அறிந்ததே.

ஆனால், தேவையற்று, சாதாரணமாக வெளிப்படையாகத் தெரியும் தீர்ப்புகளுக்கும் 3வது நடுவரை அழைத்து, அவரும் தப்பும் தவறுமாக தீர்ப்பளிக்க நேரத்தை விரயமாக்குவது தற்போது இன்னொரு சர்ச்சையாகியுள்ளது.

 
 

நேற்று ஆர்சிபி அணிக்கும் சன் ரைசர்ஸ் அணிக்கும் நடைபெற்ற போட்டியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் சன் ரைசர்ஸின் களவியூகத்துடன் தன்பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட ஒரு கணத்தில் ஒரு பந்தை லாங் ஆனில் தூக்கி அடிக்க பந்து எல்லைக்கோட்டு கயிற்றில் பட்டுத் திரும்பியது, அது சிக்ஸ் அவ்வளவுதான்.

ஆனால் கள நடுவருக்கு ஐயம் எழுந்தது, பந்து ஒரு பவுன்ஸ் ஆகிச் சென்றதா? நேரடியாக கயிற்றில் பட்டு வந்ததா? என்று. 3-வது நடுவரை அழைத்தார் கள நடுவர். 3வது நடுவர் சி.ஷம்சுதீன். இவர் ரீப்ளேயைப் போட்டுப் போட்டு பார்க்கிறார், கிட்டத்தட்ட 3 ரீப்ளேக்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து 3 நிமிடங்கள் காலவிரயம் செய்தார்.

ரசிகர்களே பொறுமை இழந்து கேலிக்கூக்குரல் எழுப்பினர். திரும்பத் திரும்பப் பார்த்தால் ஏதாவது புதிதாகத் தெரியுமா? பிறகு பெரிதாக்கப்பட்ட இமேஜ் காண்பிக்கப்பட்டது, அது சிக்ஸ் என்று நன்றாகத் தெரிந்தது. ஆனால் பவுண்டரிதான் வழங்கப்பட்டது. திரும்பத் திரும்பப் பார்த்து கடைசியில் தவறான தீர்ப்புதான் சாத்தியமானதா என்று தற்போது பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. கவுல் பந்தில் இன்னிங்சின் 6வது ஓவரில் இது நடந்தது.

இதே 3வது நடுவர் ஷம்சுதின் மீண்டும் டிம் சவுதி பிடித்த அபாரமான கேட்சை, கேட்ச் இல்லை என்று ரீப்ளே பார்த்து தீர்பளித்தார். களநடுவர் லேசாக அவுட் என்று சந்தேகத்துடன் கொடுத்து ரெஃபர் செய்ததை இதே போல் ரீப்ளேக்களாகப் பார்த்துப் பார்த்து கடைசியில் தவறான தீர்ப்பு வழங்கினார். இது விராட் கோலி, சவுதி, வர்ணனையாளர் கிளார்க் ஆகியோருக்கும் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

http://tamil.thehindu.com/sports/article23928298.ece

Link to comment
Share on other sites

சென்னை சூப்பர் கிங்சை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்

 

டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீழ்த்தியது. #IPL2018 #DDvCSK #VIVOIPL

 
சென்னை சூப்பர் கிங்சை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்
 
 
ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ப்ரித்வி ஷா 17 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
 
201805182348405283_1_PTI5_18_2018_000225B._L_styvpf.jpg
 
அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட ரிஷப் பந்த் 26 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர், பந்த் இருவரையும் ஒரே ஓவரில் லுங்கி நிகிடி வீழ்த்தினார். அதன்பின் வந்த கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்னிலும், அபிஷோக் ஷர்மா 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க டெல்லி அணியின் ஸ்கோர் அப்படியே படுத்தது.
 
அதன்பின் வந்த விஜய் சங்கர், எச்.பட்டேல் தாக்குப்பிடித்து ஓரளவிற்கு ரன்கள் அடிக்க டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது டெல்லி டேர்டெவில்ஸ். விஜய் சங்கர் 28 பந்தில் 36 ரன்களும், ஹர்ஷல் பட்டேல் 16 பந்தில் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை அணி பந்துவீச்சில் நிகிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.
 
201805182348405283_2_DdfT-2QU8AA3zNS._L_styvpf.jpg
 
இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன், ராயுடு ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடினர். இதனால் 5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 22 ரன்கள் மட்டுமே எடுத்தது. 6-வது ஓவரை அவேஷ் கான் வீசினார். அந்த ஓவரில் ராயுடு 3 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 22 ரன்கள் எடுத்தார். 
 
நிதானமாக விளையாடிய வாட்சன், அமித் மிஷ்ரா வீசிய 7-வது ஓவரின் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரெய்னாவுக்கு முதல் பந்திலேயே கேட்ச் மிஸ் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ராயுடு 28 பந்தில் அரைசதம் அடித்தார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே ராயுடு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் டோனி களமிறங்கினார். சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்தது.
 
201805182348405283_3_9S6A2579._L_styvpf.jpg
 
டோனி, ரெய்னா இருவரும் நிதானமாக விளையாடினர். 14-வது ஓவரை டெல்லி அணியின் சந்தீப் லமிசானே வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ரெய்னா ஆட்டமிழந்தார். அதன்பின் சாம் பில்லிங்ஸ் களமிறங்கினார். அமித் மிஷ்ரா வீசிய 15-வது ஓவரின் 3-வது பந்தில் பில்லிங்ஸ் ஆட்டமிழந்தார். 15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்தது. 
 
18-வது ஓவரை போல்ட் வீசினார். அந்த ஒவரின் கடைசி பந்தில் டோனி ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 17 ரன்கள் எடுத்தார். அவரைத்தொடர்ந்து பிராவோ களமிறங்கினார். அவர் போல்ட் வீசிய 20-வது ஓவரின் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி பந்துவீச்சில் போல்ட், அமித் மிஷ்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். #IPL2018 #DDvCSK #VIVOIPL
 
 

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/18234840/1164144/Delhi-Daredevils-beat-Chennai-Super-Kings-by-34-runs.vpf

Link to comment
Share on other sites

53 ‘டாட்’பால்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சித் தோல்வி: டெல்லிக்கு ஆறுதல் வெற்றி

 

 
delhi%202

சிஎஸ்கேவை வீழ்த்திய மகிழ்ச்சியில் டெல்லி டேர் டெவில்ஸ்.   -  படம். | ஏ.பி.

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் 2018-ன் 52வது போட்டியில் தொடரிலிருந்து வெளியேறிய டெல்லி டேர் டெவில்ஸிடம் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் வென்று முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்புக்காக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லியின் 162 ரன்களை விரட்ட முடியாமல் 10 ஓவர்களில் 70/1 என்ற நிலையிலிருந்து அடுத்த 10 ஓவர்களில் வெறும் 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 128/6 என்று முடிந்து தோல்வி தழுவியது.

   
 

210 ரன்களையெல்லாம் அனாயசமாக விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் 162 ரன்களை விரட்ட முடியாமல் 70/1 என்ற நிலையிலிருந்து தோனி, பிராவோ, ரெய்னா, பில்லிங்ஸ் ஆகிய அதிரடி வீரர்களுடன் தோற்றுள்ளது?! நேபாளத்தின் புதிர் ஸ்பின்னர் சந்தீப் லாமிச்சானே (1/21), அமித் மிஸ்ரா (2/20), ஹர்ஷல் படேல் (1/23), போல்ட் (2/20) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் குழி தோண்டினர்.

சந்தீப் லாமிச்சானேவுக்கு ஏன் அதிக வாய்ப்புகள் வழங்கவில்லை! கேக்காதீங்க. 24 பந்துகளில் 58 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்பது வெகுமந்தமான பிட்சில் திறமை வாய்ந்த பந்து வீச்சை ஆடும் கடினமான நிலைமைகளில் பெரிய அளவுக்கு ஷாட்களில் ரேஞ்சும், உயர்ந்தபட்ச பேட்டிங் உத்தி இல்லாவிட்டாலும் அனுபவசாலியான, ‘கிரேட் பினிஷர்’ தோனிக்கே கொஞ்சம் டூ மச் ஆகப் போய்விட்டது. வலைப்பயிற்சியில் நாளொன்றுக்கு ஆயிரம் பந்துகளை விளையாடி தூக்கித் தூக்கி அடிக்கலாம், ஆனால் தரமான, சிக்கலான பந்து வீச்சுக்கு எதிராகவும், வெகுமந்தமான பிட்சில் ஆடுவது பற்றி உத்தி அளவில் கூர்மையடைவது என்பது வேறு விதமான கிரிக்கெட் மனநிலை வேறொரு கிரிக்கெட் கலை!!

பிராவோவுக்கு சாத்துமுறை

மேலும் டிவைன் பிராவோ மீது டெத் ஓவர் அழுத்தம் இருக்கிறதா என்று கேட்ட போதெல்லாம் நேரடியாக பதில் அளிக்காமல் சுற்றி வளைத்து பதில் அளித்து கேள்வியைத் தவிர்த்த தோனி நேற்று பிராவோவின் அழுத்தத்தை உணர்ந்திருப்பார். காரணம் ஹர்ஷல் படேல் டிவைன் பிராவோ வீசிய கடைசி ஓவரில் 3 சிக்சர்களைப் பறக்கவிட்டார். விஜய் சங்கர் ஒரு சிக்சர் விளாசினார். கடைசி ஓவரில் 26 ரன்கள் வாரி வழங்கினார் பிராவோ.

harshalpageljpg

பிராவோவை வெளுத்துக் கட்டிய ஹர்ஷல் படேல்.   -  படம். சந்தீப் சக்சேனா.

 

லெந்த் பந்துகளை வீசக் கூடாது ஆனால் அதைத்தான் முதல் 2 பந்துகளில் வீசினார் பிராவோ. சிக்ஸர்கள் பறந்தது. ஒரு புல்டாஸ் வேறு வீசினார் அதுவும் சிக்ஸ். இதில். 4 ஓவர்களில் 52 ரன்கள் சாத்துமுறை நடந்தது பிராவோவுக்கு. 3 ஓவர்கள் 14 ரன்கள் 2 விக்கெட் என்று அருமையாக வீசிய லுங்கி இங்கிடி கடைசி ஓவரை திறம்பட வீச மாட்டார் என்று தோனி ஏன் நினைத்தார்? இதுதான் அனுபவம் மீது எந்த ஒரு சந்தேகமும் இல்லாத அபத்தப் பிடிவாத உறுதிநிலை, சுய ஏக நிச்சயவாதம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அபாய வீரர் பிரித்வி ஷாவும், ஷ்ரேயஸ் ஐயரும் இறங்கினர். சென்னையில் சாஹர், இங்கிடி தொடங்கினர். புதிய பந்தில் கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் கிடைத்தது, ப்ரிதிவி ஷா எப்போதும் ரன்களை அடிப்பதில் கவனம் செலுத்துபவர் அதற்கான உத்தியும் அவரிடம் உள்ளது, ஆனால் நேற்று சாஹர் அவுட்ஸ்விங் சுல்தான் என்று அழைக்கும் அளவுக்கு பந்துகள ஸ்விங் செய்தார், அப்படியும் தன் மன உந்துததலினால் ஸ்கொயர்லெக்கில் ஒரு பவுண்டரி அடித்தார் ஷா. பிறகு சாஹர் ஒரு பந்தை வேகம் குறைக்க அதனை அருமையாக பிக் செய்து மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடித்தார் ஷா. அதன் பிறகு 17 ரன்களில் ஜடேஜா பந்தை அசிங்கமாக தூக்கி அடிக்க தாக்குர் கேட்சை விட்டார், அதன் பிறகும் அதிக நேரம் நீடிக்கவில்லை. அடுத்த ஓவரில் சாஹர் பந்தை தேவையில்லாமல் தூக்கி அடித்து லாங் ஆனில் கேட்ச் ஆகி வெளியேறினார் ஷா,

இன்னொரு முனையில் ஷ்ரேயஸ் ஐயரும் சரியாக ஆடவில்லை, ரிஷப் பந்த் இறங்கினார். ஒரு ரன் அவுட் வாய்ப்பில் தப்பி, பிறகு ஹர்பஜன் சிங்கை 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரியை பந்த் நொறுக்க 10 ஒவர்களில் 77/1 என்று மீண்டது டெல்லி. 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 38 ரன்களை பந்த் எடுத்த நிலையிலும் ஷ்ரேயஸ் ஐயர் திணறலான 19 ரன்களிலும் லுங்கி இங்கிடி வீசிய 11வது ஓவரில் வெளியேறினர், அதுவும் ஐயர், இங்கிடியை ஏதோ ஆஃப் ஸ்பின்னர் போல் ஒதுங்கிக் கொண்டு கட் ஆட முயன்று பவுல்டு ஆனார். பந்த்தும் தேவையற்ற மட்டைச் சுழற்றலில் கேட்ச் ஆனார்.

கிளென் மேக்ஸ்வெல் ஜடேஜாவை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று பவுல்டு ஆக, அபிஷேக் சர்மா 2 ரன்களில் தாக்குர் பந்தில் நடையைக் கட்ட 14.4 ஒவர்களில் 97/5 என்று இருந்த டெல்லி அணியை விஜய் சங்கர், ஹர்ஷல் படேல் தூக்கி நிறுத்தினர். விஜய் சங்கர் ஒரு பவுண்டரி அடிக்க இங்கிடி டைட்டாக வீச 16வது ஓவர் முடிவில் 110/5 என்றே இருந்தது. பிறகு 17வது ஓவரில் தாக்குர் பந்தை சங்கர் சிக்ஸ் அடித்து ரன் குவிப்பைத் தொடங்கினார். 18வது ஓவரில் பிராவோவின் ஸ்லோ பந்தை ஹர்ஷல் படேல் பிளிக் சிக்ஸ் அடித்தார். தாக்குர் 19வது ஓவரை வீச லுங்கி இங்கிடி 3 ஓவர்கள் 14 ரன்கள் 2 விக்கெட் எனும்போது கடைசி ஓவரை அவரிடம் கொடுக்காமல் பிராவோவிடம் கொடுத்த தோனியின் கேப்டன்சியை என்னவென்று சொல்வதாம்?

சிலவிஷயங்களில் தோனி முரட்டுப் பிடிவாதம் பிடித்தவர் என்பதை இந்திய அணியின் கேப்டனக இருந்த போதே பார்த்திருக்கிறோம். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல்தான் முடிவுகளை எடுப்பார், இதற்குப் பல உதாரணங்களில் ஒன்று தென் ஆப்பிரிக்காவில் ஒருமுறை 80 ஓவர்கள் முடிந்து புதிய பந்தை எடுக்காமல் பழைய பந்திலேயே சணல் வெளியே வரும் வரை மேலும் 66 ஓவர்களை வீசி 146 ஓவர்களை பழைய பந்தில் வீச எடுத்த முடிவும், அதனால் வெற்றி வாய்ப்பை இந்தியா இழந்ததும் அவர் கூறிய சால்ஜாப்புகளையும் எளிதில் மறந்து விட முடியுமா என்ன? அது போல்தான் நேற்றைய சிறந்த பவுலரான இங்கிடியை வீச அழைக்காமல் பிடிவாதமாக பிராவோவை வீச அழைத்தது ஏன்? பிராவோ 3 ஓவர் 26 விக்கெட் இல்லை, லுங்கி இங்கிடி 3 ஓவர் 14 ரன்கள் 2 விக்கெட். யாருக்கு பவுலிங் அளிப்பார் ஒரு நல்ல கேப்டன்? விளைவு பிஞ்ச் ஹிட்டரான ஹர்ஷல் படேல் 3 சிக்சர், விஜய் சங்கர் 1 சிக்சர் கடைசி ஓவரில் 26 ரன்கள், தோல்விக்குக் காரணமானது இந்த முடிவு. சங்கர், படேல் இருவரும் 36 நாட் அவுட், டெல்லி 162/5 என்று முடிந்தது.

சிஎஸ்கே தொடக்கம், விரட்டல் மந்தம்! 53 டாட்பால்கள்:

ராயுடு, வாட்சன் அனாயாச அதிரடி காட்டித் தொடங்குவதுதான் வழக்கம் ஆனால் நேற்று வாட்சன் நேற்று திணறினார். 20 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார், சிஎஸ்கேவும் முதல் 5 ஓவர்களில் 22 ரன்களைத்தான் எடுத்தது. டிரெண்ட் போல்ட் 2 ஓவர்களில் 11 ரன்கள்தான் கொடுத்தார் இதில் வாட்சனின் ஒரு புல் ஷாட் சிக்ஸும் அடங்கும்.

மீண்டும் ராயுடுதான் உத்வேகம் கொடுத்தார், ஆவேஷ் கான் வீசிய 6வது ஓவரில் முதல் பந்தை கிரீசில் நன்றாக பின்னால் சென்று வலது காலை ஒதுக்கிக் கொண்டு மிட்விக்கெட்டில் சிக்ஸ் விளாசினார். இறங்கி வந்து இன்னொரு சிக்ஸ், பிறகு லாங் ஆனில் ஒரு சிக்ஸ். 3 சிக்ஸ் ஒரு பவுண்டரியுடன் 6வது ஓவரில் 22 ரன்கள் வர பவர் ப்ளே முடிவில் 44/0 என்று மீண்டது சிஎஸ்கே. 23 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த வாட்சன் மிஸ்ரா பந்தை லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்தார்.

ரெய்னா இறங்கியதும் மிஸ்ராவின் முதல் பந்தையே நோண்டினார், மட்டையின் உள்விளிம்பில் பட்டு சென்ற கேட்சை நழுவ விட்டார் பண்ட். பிறகு மேக்ஸ்வெல் ஒரு ஓவரை இறுக்கிப் பிடிக்க அமித் மிஸ்ராவை அடுத்த ஓவரில் ராயுடு ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ் அடித்தார். ராயுடு 25 பந்துகளில் 44 என்று ஒரு முனையில் பிரமாதமாக ஆட மறுமுனையில் போராட்டம் தொடர, 9 ஓவர்களில் 62/1 என்று இருந்தது சிஎஸ்கே.

இந்நிலையில் ஹர்ஷல் படேலை சிங்கிள் தட்டி விட்டு ராயுடு 28 பந்துகளில் இன்னொரு ஐபிஎல் அரைசதத்தை எடுத்தார்.ஆனால் அதே ஓவரில் 50 ரன்களில் படேல் ஆஃப் கட்டரை கொடியேற்றி மேக்ஸ்வெலிடம் கேட்ச் ஆனார். நேபாள் புதிர் ஸ்பின்னர் லாமிச்சானே தோனிக்கும் ரெய்னாவுக்கும் கிடுக்கிப் பிடி ஓவரை வீச 2 ஓவர்களில் அவர் 8 ரன்களைத்தான் கொடுத்தார், அன்று பவன் நெகியை இறங்கியவுடன் சிக்சர்களாக வெளுத்துக் கட்டிய தோனி லாமிச்சானேவை அடிக்க வேண்டியதுதானே. மேக்ஸ்வெல் வீசிய 12வது ஓவரி ரெய்னா, தோனி ஆகியோர் தலா 1 பவுண்டரி அடிக்க 12 ஓவர்கள் முடிவில் 86/2 என்று தோனி, ரெய்னாவுடன் சிஎஸ்கே தோற்கும் என்று யாராவது நினைப்பார்களா?

dhonijpg

தோனி ஆட்டமிழந்து செல்லும் காட்சி.   -  படம்.| ஏ.பி.

 

மிஸ்ரா வீசிய ஓவரில் அடிக்கவே முயற்சி செய்யவில்லை சிங்கிள்களாக எடுக்க 4 ரன்கள்தான் 13வது ஓவரில் வந்தது, ஆனால் தோனி டி20 கிரிக்கெட்டில் 6,000 ரன்கள் மைல்கல்லை எட்டினார். 18 பந்துகளில் ட்ராப் கேட்சுடன் 15 எடுத்த ரெய்னா லாமிச்சானே பந்தை மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தோனி இறங்கி வந்து இறங்கி வந்து பந்தை சிங்கிளுக்குத்தான் அடிக்க முடிந்தது. லாமிச்சானே ஓவரில் 2 ரன்கள்தான் வந்தது பிளஸ் ரெய்னாவின் விக்கெட். 15வது ஓவரில் சாம் பில்லிங்ஸ் 1 ரன்னில் மிஸ்ராவின் பந்தை ஸ்வீப் ஆட டாப் எட்ஜ் ஆகி கேட்ச் ஆனார். 10 ஒவர்களில் 70/2 என்ற நிலையிலிருந்து 15 ஓவர்களில் 94/4. தோனி, ரெய்னா, சாம் பில்லிங்ஸ் போன்ற அதிரடி வீரர்கள் இருந்தும், மிஸ்ரா மற்றும் அனுபவமற்ற லாமிச்சானே வீசியும் 5 ஓவர்களில் 24 ரன்கள்தான் வந்தது!!

ஜடேஜா இறங்கியவுடன் லாமிச்சானேவை சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரில் 11 ரன்களை அவர் கொடுக்க 4 ஓவர்களில் 21/1 என்று முடித்தார் லாமிச்சானே. தோனி 16 பந்துகளில் 13. ஜடேஜா 5 பந்துகளில் 11. 4 ஓவர்களில் 58 ரன்கள் தேவை. ஆனால் 16வது ஓவரில் தோனி 2 டாட்பால்கள் ஜடேஜா ஒரு டாட் பால் 3 ரன்கள்தான் வந்தது, ஹர்ஷல் படேல் மிக அருமையாக வீசினார். போல்ட் வந்தார் தோனி 2 டாட்பால்கள். அடுத்து ஓவர் த்ரோவில் 3 ரன்கள். தோனிக்கும் அழுத்தம் கூடியது. எல்லா போட்டிகளிலும் நாம் நினைக்கும் போது சிக்ஸ் அடித்து வெற்றி பெற முடியுமா? அடிக்க வேண்டிய பந்துகளை அடிக்க வேண்டும், இல்லையெனில் பவுலர்களை தவறிழைக்க வைக்க வேண்டும், நினைத்த போது சிக்சர்கள் வரும் என்பதற்கு போல்ட் பவுலர் அல்ல மிக அருமையான அந்த ஓவரில் அவர் தோனியை வீழ்த்தினார். 23 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஷ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இத்துடன் மேட்ச் முடிந்தது என்றே கூற வேண்டும்.

பிராவோ 1 ரன்னில் வெளியேறி மறக்க வேண்டிய ஒரு போட்டியாக இது அமைந்தது. ஜடேஜா 18 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 27 நாட் அவுட். சிஎஸ்கே இன்னிங்ஸில் மொத்தம் 53 டாட்பால்கள். டெல்லி அணியும் டாட் பால்கள் விட்டதில் குறைவில்லை 49 டாட் பால்கள், ஆனால் அந்த அணியின் ஸ்மார்ட் ஸ்ட்ரைக் ரேட் வெற்றியை தீர்மானித்தது.

சிஎஸ்கே 128/6 என்று முடிந்தது. டிரெண்ட் போல்ட் 20 ரன்களுகு 2 விக்கெட்டுகளையும் மிஸ்ரா 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக ஹர்ஷல் படேல் தேர்வு செய்யப்பட்டார். ராயுடு, இங்கிடி தவிர சென்னை சூப்பர் கிங்ஸ் தேறவில்லை. சிஎஸ்கே ஒன்று விமரிசையாக வெற்றி பெறும், இல்லையெனில் எளிதில் வெல்ல வேண்டிய போட்டிகளில் சொதப்பலாக தோல்வியடையும். இடைப்பட்ட நிலையே அந்த அணியின் ஆட்டத்தில் இல்லை.

http://tamil.thehindu.com/sports/article23933661.ece?homepage=true

Link to comment
Share on other sites

பிளே ஆஃப் வாய்ப்பை பெறுமா கொல்கத்தா ?: ஹைதராபாத்துடன் இன்று மோதல்

 

 
SUNRISERSHYDERABAD

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

பிளே-ஆப் சுற்றுக்கு ஹைதராபாத் அணி ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. அதேவேளையில் 14 புள்ளிகளுடன் உள்ள கொல்கத்தா அணிக்கு இது கடைசி லீக் ஆட்டம். அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடும். மாறாக தோல்வியடைந்தால் 14 புள்ளிகளுடன் மற்ற ஆட்டங்களின் முடிவுக்காகக் காத்திருக்க வேண்டும்.

 

எனவே அந்த அணி வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். பேட்டிங்கில் தினேஷ் காரத்திக், சுனில் நரேன், ஆந்த்ரே ரஸ்ஸல், கிறிஸ் லின் சிறந்த பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் சிவம் மாவி. பிரசித் கிருஷ்ணா, பியூஷ் சாவ்லா, ரஸ்ஸல், சுனில் நரேன், குல்தீப் யாதவ் ஆகியோர் எதிரணிக்கு சவால் கொடுக்க காத்திருக்கின்றனர்.

கடந்த இரு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த ஹைதராபாத் அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப முயற்சிக்கக்கூடும். அந்த அணியின் வலுவான பந்து வீச்சு இரு ஆட்டங்களிலும் எதிரணியால் சிதைக்கப்பட்ட நிலையில் பேட்டிங்கில் எழுச்சி கண்டுள்ளது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

 

ராஜஸ்தான்-பெங்களூரு

முன்னதாக ஜெய்ப்பூரில் மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. தலா 12 புள்ளிகளுடன் உள்ள இந்த இரு அணிகளுக்கும் இதுதான் கடைசி லீக் ஆட்டம். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 14 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்ளும். தோல்வியுறும் அணி போட்டியிலிருந்து வெளியேறும். வெற்றிக்காக இரு அணிகளும் வரிந்துகட்டும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கக்கூடும்.

http://tamil.thehindu.com/sports/article23933309.ece?homepage=true

Link to comment
Share on other sites

2வது இன்னிங்சில் பிட்ச் கடினமாக இருந்தது: தோல்விக்குத் தோனியின் காரணம்

 

 
dhonijpg

தோனி. | ஏ.எஃப்.பி.

டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்று அதிர்ச்சித் தோல்வியடைந்தது. 163 ரன்களை விரட்ட முடியாமல் அதிசயமாக 128/6 என்று முடிந்தது.

முதலில் பிராவோவுக்குக் கடைசி ஓவரைக் கொடுத்தது தவறானது, பிறகு மந்தமான, கடினமான பிட்சில் அடித்துப் பார்க்கக் கூட முடியாமல் சிங்கிள்களை எடுத்தது தோல்விக்குக் காரணமானது மொத்தம் 53 டாட்பால்களை விட்டுக் கொடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸின் பேட்டிங் வரிசை, ராயுடு மட்டும்தான் தேறினார். கடைசியில் ஜடேஜா ஸ்ட்ரைக் ரேட் 150,

 
 

இந்நிலையில் ஆட்டம் முடிந்தவுடன் பேசிய தோனி, “2வது பாதியில் பிட்ச் மேலும் கடினமானது. யாரும் மிடில் செய்ய முடியவில்லை. பவுலர்கள் நன்றாக வீசினர்.

இந்தப் பிட்ச் எப்படி நடந்து கொள்ளும் என்பதை கணிக்க முடியவில்லை. எது தவறாக முடிந்தது என்று பார்த்தோமானால் அது குறித்து நாம் மிகவும் எதார்த்த அணுகுமுறையே மேற்கொள்ள வேண்டும். அதாவது ஏன் ஏதோவொன்று தவறாகப் போகிறது என்பது பற்றி நாம் நடைமுறை ரீதியாகவே யோசிக்க வேண்டும்.

எங்களுக்குக் காரணங்கள் தெரியும். புள்ளிகள் அட்டவணையை பார்க்கக் கூடாது என்பது முக்கியம். மிடில் ஆர்டரிலும் கூட்டணி அமைக்க வேண்டும். உடல் ரீதியாக என்பதை விட மனரீதியாக தயாராக இருக்க வேண்டும்.

பவுலர்களுக்கு நாம் 100 வித்தியாசமான திட்டங்களை வழங்கலாம் ஆனாலும் சில வேளைகளில் பவுலர்களை மாற்றிப்பார்க்கவே வேண்டியுள்ளது.” என்றார்.

படம். | பிடிஐ.
 

இந்த வெற்றிக்காக ஏங்கினோம்: ஷ்ரேயாஸ்

டெல்லி டேர் டெவில்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறும்போது, “உண்மையில் இந்த வெற்றிக்காக ஏங்கினோம். திருப்திகரமான வெற்றி. இந்தப் பிட்சில் பேட் செய்வது சுலபமல்ல. கடைசி ஓவர் ரன்கள் மிக முக்கியமானது. எங்களுக்குத் தயாரிப்புகளில் எதுவும் பிரச்சினைகள் இல்லை. மாறாக செயல்படுத்துவதில் பிரச்சினை இருந்தது.

பேட்டிங், பீல்டிங், பவுலிங் கிளிக் ஆனது வென்றோம்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article23933837.ece

Link to comment
Share on other sites

பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தகுதி பெறுவது யார்? 2 இடங்கள்; 5 அணிகள்

 

 
kan

ஐபிஎல் கிரிக்கெட் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்களுக்கு தகுதி பெற ராஜஸ்தான், கொல்கத்தா, மும்பை, பெங்களூரு அணிகள் தீவிரமாக போராடி வருகின்றன.
தற்போதைய நிலவரத்தின் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஹைதராபாத், இரண்டாம் இடத்தில் உள்ள சென்னை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மேலும் 2 அணிகள் மட்டுமே அடுத்து தகுதி பெற முடியும் என்ற நிலையில் 14 புள்ளிகளுடன் கொல்கத்தா 3-வது இடத்திலும், 12 புள்ளிகளுடன் மும்பை 4-வது இடத்திலும், பெங்களூரு 5-வது இடத்திலும், 
ராஜஸ்தான் 6-வது இடத்திலும் உள்ளன.
துவக்கத்தில் சிறப்பாக ஆடி வந்த பஞ்சாப் அணி மூன்றாம் இடத்தில் நீடித்து வந்த நிலையில் தொடர் தோல்விகளால் தற்போது 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 
அந்த அணியும் 12 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் 7-வது இடத்தில் உள்ளது. தில்லி 8-வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா -ஹைதராபாத்
இந்நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் 2 இடங்களுக்கான போட்டியில் பெங்களூரு, ராஜஸ்தான், மும்பை, கொல்கத்தா போன்றவை உள்ளன. சனிக்கிழமை 
நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் ஹைதராபாத் அணியுடன் கொல்கத்தா மோதுகிறது. ஹைதராபாத் அணி எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. ஆனால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்ற அழுத்தத்துடன் கொல்கத்தா உள்ளது. 
பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 
கொல்கத்தா அணி இந்த ஆட்டத்தில் வென்றால் 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். 

பெங்களூரு-ராஜஸ்தான்

rahane.jpg
அதே வேளையில் சனிக்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு அணி-ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. தொடர் தோல்விகளால் துவண்டிருந்த பெங்களூரு அணி மீண்டும் தொடர் வெற்றிகளை பெற்று 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. 4-வது இடத்தில் இருந்த ராஜஸ்தான் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது.


வாழ்வா-சாவா ஆட்டம்
இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே வாழ்வா-சாவா ஆட்டமாக உள்ளது. ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரர்களான ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தங்கள் நாட்டு அணிக்கு விளையாடுவதற்காக திரும்பி விட்டனர். 
இது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத் அணியை வென்ற ஊக்கத்தில் உள்ள பெங்களூரு, முழு வீச்சில் ராஜஸ்தானை வீழ்த்த போராடும். ராஜஸ்தான் அணி சொந்த மைதானத்தில் ஆடுகிறது என்பதே அதற்கு சாதகமான அம்சமாக உள்ளது. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை உறுதி செய்து கொள்ளும் நிலை உள்ளது.

தலையெழுத்தை தீர்மானிக்கும் ஆட்டங்கள்
மேலும் 4-வது இடத்தில் உள்ள மும்பை அணி ஞாயிற்றுக்கிழமை தில்லி அணியையும், 7-வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி, சென்னையையும் எதிர்கொள்கின்றன. இவற்றில் பெறும் வெற்றிகளே 
அவற்றின் பிளே ஆஃப் சுற்று தலையெழுத்தை தீர்மானிக்கும்.

http://www.dinamani.com/sports/sports-news/2018/may/19/பிளே-ஆஃப்-சுற்று-ஆட்டங்கள்-தகுதி-பெறுவது-யார்-2-இடங்கள்-5-அணிகள்-2922366.html

Link to comment
Share on other sites

ஸ்லோ பிட்ச்... அசால்ட் ஆட்டிட்யூட்... பிராவோவின் `டெத்’ ஓவர்... சி.எஸ்.கே. தோற்றது ஏன்?! #DDvCSK

 
 

சூப்பர் ஹீரோக்கள் படத்தின் க்ளைமேக்ஸை போல பரபரப்பான கட்டத்தில் இருக்கிறது ஐபிஎல்! இனி வரும் ஒவ்வொரு மேட்ச்சுமே முக்கியம் என்ற நிலையில் யாருக்கும் பங்கமில்லை என்ற முன்முடிவோடு ஒரு மேட்ச் நடந்து முடிந்திருக்கிறது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லிக்கும் ஏற்கெனவே ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதிபடுத்திவிட்ட சென்னைக்குமான சம்பிரதாய மேட்ச் அது! #DDvCSK

டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி வழக்கம் போல பீல்டிங்கைத் தேர்வு செய்தார். சென்னை அணியில் எதிர்பார்த்தபடியே வில்லிக்கு பதில் எங்கிடி நுழைந்தார். டெல்லி அணியில் இரண்டு மாற்றங்கள். ஜேசன் ராய்க்கு பதில் மேக்ஸ்வெல், டாலாவுக்கு பதில் அவேஷ்! சர்ப்ரைஸாக அணியில் மேக்ஸ்வெல், போல்ட், லாமிசேன் என மூன்றே வெளிநாட்டு வீரர்கள்தான். இழக்க ஒன்றுமில்லை என்பதால் உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்திருக்கலாம். மொத்த ஐ.பி.எல்லில் நான்கு வெளிநாட்டு வீரர்களுக்கு குறைவாகக் கொண்டு ஒரு அணி களமிறங்குவது இது 14-வது தடவை.

 

ப்ரித்வி ஷாவும் கேப்டன் ஸ்ரேயாஸும் களமிறங்கினார்கள். முதல் ஓவரிலேயே இன்ஸ்விங், அவுட்ஸ்விங் என மிதக்கவிட்டார் சஹார். இதனால் கொஞ்சம் திணறித்தான் போனார் ஷா. ஓவர் முடிவில் ஐந்து ரன்கள்தான். எங்கிடியும் அதேபோல் தெறிக்கவிட ரன் எடுக்கவே சிரமப்பட்டனர் டெல்லி ஓபனர்கள். தட்டுத் தடுமாறி ரன் சேர்த்த ஷாவும் ஒருகட்டத்தில் சஹார் பந்தில் அவுட்டாக, நாளைய நம்பிக்கை நட்சத்திரமான ரிஷப் பன்ட் களமிறங்கினார்.

#DDvCSK

கேப்டன் தடுமாறுவதைப் பார்த்த பன்ட் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் பொறுப்பை கையிலெடுத்துக்கொண்டார். ஹர்பஜன் வீசிய 10-வது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி உள்பட 17 ரன்கள். மறுபக்கம், 'இந்தா அடிச்சுக்க' என ஏனோதானோவென வரும் பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்டினார் ஸ்ரேயாஸ். ஆனால் ரன்னிங்கில் இருவருமே இந்த தடவை உஷாராகவே இருந்தார்கள். பழசெல்லாம் கண்ணு முன்னால வந்து போகுமா இல்லையா?

பத்து ஓவர்கள் முடிவில் 77 ரன்கள். அதில் கேப்டனின் பங்கு வெறும் 19 ரன்கள்தான். 'பத்து ஓவர் முடிஞ்சுட்டா எனக்கு பசிக்கும். நான் போறேன்' என எங்கிடி பந்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்துவிட்டு வெளியேறினார் ஸ்ரேயாஸ். 'பன்ட் இருக்க பயமேன்' என தைரியமாக இருந்தார்கள் டெல்லி ரசிகர்கள். 'பனில ஆடுனா காய்ச்சல் வரும் பன்ட்' என அதே ஓவரில் அவரையும் பெவிலியன் அனுப்பினார் எங்கிடி. தடுமாறத் தொடங்கியது டெல்லி.

சும்மாவே தடுமாறிக்கொண்டிருந்த பேட்ஸ்மேன்களை மேலும் அலறவிட்டார் ஜடேஜா. சுழன்று சுழன்று வந்த பந்துகளை கணிக்கவே சிரமப்பட்டார்கள் டெல்லி வீரர்கள். இதில் பொறுப்பாக ஆடவேண்டிய மேக்ஸ்வெல் வேறு, 'நான் தலைகீழாகத்தான் குதிப்பேன்' என ஜடேஜா பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முற்பட, பந்து ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. ஜட்டு பாய் நான்கு ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் எடுத்து 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார்.

இப்போது எல்லாருடைய கவனமும் சென்ற மேட்ச்சில் அடித்து வெளுத்த அபிஷேக் சர்மா மீதுதான். ஆனால் பிரஷர் தாங்கமுடியாமல் தாக்கூரின் பவுன்ஸரில் பஜ்ஜியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அபிஷேக். 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள். இதற்குள் ஒன்பது பவுலிங் சேஞ்ச்களை நிகழ்த்தியிருந்தார் மேஜிக்கல் கேப்டன் தோனி. அதுதான் ரன்ரேட்டை குறைவாகவே வைத்திருந்தது. அது எல்லாவற்றையும் ஒரே ஓவரில் காலி செய்தார் பிராவோ! 19 ஓவர்கள் முடிவில் 136 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது டெல்லி அணி. கடைசி ஓவர் வீச தோனிக்கு மூன்று ஆப்ஷன்கள் இருந்தன. சஹார் மூன்று ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். பிராவோ 3 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்திருந்தார். எங்கிடி 3 ஓவர்களில் இரண்டு விக்கெட்கள் வீழ்த்தி வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். 

இந்தத் தொடரில் பிராவோவின் டெப்த் பவுலிங் அவ்வளவாக எடுபடவில்லை. ஆனாலும் பிராவோவிற்கு வாய்ப்பளித்தார் தோனி. விளைவு, கடைசி ஓவரில் மட்டும் நான்கு சிக்ஸ்கள். 26 ரன்கள் மொத்தம். ஸ்கோர் சட்டென 162 ரன்களுக்கு சென்றுவிட்டது. பாவம் பிராவோவைப் பார்க்க, 'அவர் ஒருகாலத்துல பெரிய ரவுடிடா, இப்பத்தான் இப்படி ஆயிட்டாரு' என மெட்ராஸ் பட வசனம்தான் ஞாபகத்திற்கு வந்தது. அதிரடியாக ஆடிய ஹர்ஷல் படேல் 16 பந்துகளில் 36 ரன்கள் வெளுத்தார். அதில் நான்கு சிக்ஸர்கள் அடக்கம்.

சென்னை

163 ரன்கள் இலக்கை முன்வைத்து இறங்கினார்கள் வெள்ளைக்கார வாட்டோவும் பாகுபலி ராயுடுவும். டெல்லியின் ஆஸ்தான பவுலரான போல்ட் முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அடுத்த ஓவரில் லாமிசேன் 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதே ரீதியில் ஐந்து ஓவர்கள் முடிவில் 22 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது சென்னை. ஆறாவது ஓவரில் அவேஷ் கானை குறிவைத்தார் ராயுடு. மூன்று சிக்ஸ், ஒரு பவுண்டரி என ஸ்கோரை படபடவென உயர்த்தினார். ஆறு ஓவர்கள் முடிவில் 44 ரன்கள்.

அடுத்த ஓவரில் மிஸ்ராவின் சுழல் வித்தையில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தார் வாட்சன். அடுத்துக் களமிறங்கிய ரெய்னா க்ரீஸில் தடுமாற ராயுடு விறுவிறுவென ரன்களை சேர்த்தார். 28 பந்துகளில் அரைசதம் அடித்தவர் அடுத்த பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். அதோடு சென்னையின் ரன்ரேட்டும் கொஞ்சம் கொஞ்சமாக அஸ்தனமாகத் தொடங்கியது. ரெய்னாவும் சரி, தோனியும் சரி ஸ்ட்ரைக் ரேட்டை மெயின்டைன் செய்ய நிறையத் தடுமாறினார்கள்.

சென்னை

அவர்கள் தடுமாறுவது போதாதென லாமிசேனும் தன் பங்கிற்கு பேட்ஸ்மேன்களை சோதித்தார். அவர் வீசிய நான்காவது ஓவரில் ஜடேஜா அடித்த ஒரு சிக்ஸ் மட்டும்தான். மற்றபடி எல்லாமே டாட் பால்களும் சிங்கிள்களும்தான். நான்கு ஓவர்கள் முடிவில் ரெய்னாவின் விக்கெட்டையும் வாங்கி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். மிஸ்ரா மறுபுறம் மிரட்ட மிடில் ஓவர்கள் முழுவதும் மேட்ச் ஸ்பின்னர்கள் கன்ட்ரோலில்தான் இருந்தது.

கடைசி நான்கு ஓவர்களில் 58 ரன்கள் தேவை. ஆனால் ஹர்ஷல் படேலின் அபார பவுலிங்கில் சென்னை பேட்ஸ்மேன்கள் எடுக்க முடிந்தது வெறும் 3 ரன்கள்தான். அதற்கடுத்த ஓவரில் ஐந்து ரன்கள். தோனியும் ஆட்டமிழந்தார். அதோடு மேட்ச்சும் கையைவிட்டுச் சென்றுவிட்டது. சம்பிரதாயமாக வீசப்பட்ட கடைசி இரண்டு ஓவர்களில் 15 ரன்கள் மட்டும் வர, 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டெல்லி அணி. தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த இளைஞர் பட்டாளம் இந்த வெற்றியின் மூலம் லிட்டர்கணக்கில் பூஸ்ட் குடித்திருக்கும்.

சென்னை அணியைப் பொறுத்தவரை இந்த மேட்ச்சில் வெற்றி பெற்றிருந்தால் முதல் இரண்டு இடங்களில் ஒன்றை உறுதி செய்திருக்கும். ஆனால் ஏனோ தொடக்கம் முதலே அசால்ட் ஆட்டிட்யூடில் இருந்தது போலவே தெரிந்தது. இரண்டாம் பாதியில் ஸ்லோவாக மாறக்கூடிய பிட்ச்சில் தோனி ஏன் செகண்ட் பேட்டிங் தேர்ந்தெடுத்தார் எனத் தெரியவில்லை. எங்கிடி, சஹார் ஆகியோரை விட்டுவிட்டு ஏன் பிராவோவிற்கு கடைசி ஓவரைக் கொடுத்தார் எனவும் தெரியவில்லை. சேஸிங்கிலும் ஸ்லோவாகவே ஆடினார்கள் சென்னை பேட்ஸ்மேன்கள். ப்ளே ஆஃப்பிற்கு முந்தைய டெஸ்டிங் க்ரவுண்டாக ஒருவேளை கேப்டன் கூல் இந்த மேட்ச்சை பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் பலன் என்னவென்று அடுத்த வாரம்தான் தெரியும்.

https://www.vikatan.com/news/sports/125403-delhi-beats-chennai-super-kings-by-34-runs.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.