Jump to content

Recommended Posts

புனேவில் இன்று மோதல்: சென்னையை சமாளிக்குமா மும்பை இந்தியன்ஸ்?; தோல்வியடைந்தால் பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிப்பது கடினம்

 

 
28CHPMUDHONI

தோனி   -  PTI

28CHPMUROHITSHARMA

ரோஹித் சர்மா   -  AFP

 

ஐபில் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால் மும்பை அணி ஏறக்குறைய பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும்.

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் மோசமாக விளையாடி வருகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான அந்த அணி 6 ஆட்டத்தில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று 2 புள்ளிகளுடன் பட்டியலில் 7-வது இடம் வகிக்கிறது. கடைசியாக சொந்த மைதானத்திலேயே ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 119 ரன்கள் இலக்கைக்கூட எட்டிப்பிடிக்க முடியாமல் வெறும் 87 ரன்களில் சுருண்டு தோல்வி கண்டிருந்தது. அந்த அணி தொடரில் உயிர்பிப்புடன் இருக்க வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. சூர்யகுமார் யாதவ் தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களுமே ரன்கள் சேர்க்க தடுமாறி வருகின்றனர். ரோஹித் சர்மா 6 ஆட்டங்களில் 5-ல் சோபிக்க தவறினார்.

பெங்களூரு அணிக்கு எதிராக 94 ரன்கள் விளாசி அணியை சரிவில் இருந்து காப்பாற்றியதுடன் வெற்றிக்கும் பெரிய அளவில் பங்களிப்பு செய்த ரோஹித் சர்மா, மற்ற 5 ஆட்டங்களிலும் ஒட்டுமொத்தமாக 20 ரன்களே சேர்த்தார். இதேபோல் போல் கெய்ரன் பொலார்டும், 6 ஆட்டங்களில் பங்கேற்று வெறும் 63 ரன்களே எடுத்துள்ளார். இந்த சீசனில் ஆல்ரவுண்டராக அவரிடம் இருந்து இதுவரை பெரிய அளவிலான திறன் வெளிப்படவில்லை. சூர்யகுமார் யாதவுடன் இணைந்து ரோஹித் சர்மா, எவீன் லிவீஸ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஒருங்கிணைந்து விளையாடி ரன்கள் சேர்த்தால் மட்டுமே பெரிய அளவிலான இலக்கை கொடுக்கவோ அல்லது எட்டிப்பிடிக்கவோ முடியும். ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசையில் 4-வது தள்ளப்படுவார். பந்து வீச்சிலும் கூட மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு குழுவாக செயல்படுவதில் தேர்ச்சி பெறவில்லை. ஒரு வீரர் சிறப்பாக பந்து வீசினால், அவருக்கு மறுமுனையில் எந்தவித ஆதரவும் இல்லாமல் உள்ளது. 20 வயதான லெக் ஸ்பின்னர் மயங்க் மார்க்கண்டே இந்தத் தொடரில் அற்புதமாக வீசி வருகிறார். அவர் 6 ஆட்டங்களில் 10 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்திவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறார். ஆனால் அவருக்கு உறுதுணையாக மற்ற பந்து வீச்சாளர்களிடம் இருந்து சிறந்த திறன் வெளிப்படாதது பெரிய பின்னடைவாக உள்ளது.

கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்படக்கூடியவர் என பெயரெடுத்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வங்கதேச வீரர் முஸ்டாபிஸூர் ரஹ்மான் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தவில்லை. வலுவான சென்னை அணியின் பேட்டிங் வரிசையை பெரிய அளவில் ரன் குவிக்கவிடாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் பும்ரா, முஸ்டாபிஸூர் ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறந்த முறையில் வழங்கியாக வேண்டும். கடைசி கட்ட ஓவர்களில் அதிக ரன்களை தாரை வார்க்கும் மிட்செல் மெக்லீனகன் இன்றைய ஆட்டத்தில் நீக்கப்படக்கூடும். 4 ஆட்டத்தில் விளையாடி உள்ள அவர், 13 ஓவர்கள் வீசி 122 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு நியூஸிலாந்து வீரரான ஆடம் மில்னே இடம்பெறக்கூடும்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் அபார திறனை வெளிப்படுத்தி வருகிறது. 6 ஆட்டத்தில் விளையாடி உள்ள சென்னை அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த சொந்த மைதான ஆட்டங்கள் புனேக்கு மாற்றப்பட்டுள்ள போதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திறன் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. ராஜஸ்தான் அணிக்கு எதிராக புனேவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

கடைசியாக பெங்களூருவில் அந்த அணிக்கு எதிரான ஆட்டத்தில் 206 ரன்கள் இலக்கை துரத்திய போது தோனி, அம்பாட்டி ராயுடு ஆகியோரது அசாத்தியமான பேட்டிங்கால் 2 பந்துதுகள் மீதமிருக்க அபார வெற்றி கண்டிருந்தது சென்னை அணி. ஷேன் வாட்சன், டுவைன் பிராவோ, ஷேம் பில்லிங்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் வலு சேர்ப்பவர்களாக உள்ளனர். சுரேஷ் ரெய்னாவின் பார்ம் மட்டுமே சற்று கவலை அளிப்பதாக உள்ளது. இதேபோல் ரவீந்திர ஜடேஜாவிடம் இருந்தும் ஆல்ரவுண்டராக பெரிய அளவிலான திறன் வெளிப்படவில்லை. இதனால் இருவரும் சிறந்த பங்களிப்பு செய்ய வேண்டிய கட்டத்தில் உள்ளனர். பந்து வீச்சில் இளம் வீரரான தீபக் ஷகார் சிறப்பான வடிவத்துக்கு வந்துள்ளது பலம் சேர்த்துள்ளது. சுழலில் இன்றைய ஆட்டத்தில் இம்ரன் தகிருடன், கரண் சர்மா இடம்பெறக்கூடும்.

இந்த சீசனில் சென்னை - மும்பை அணிகள் மோதுவது இது 2-வது முறையாகும். கடந்த ஏப்ரல் 7-ம் தேதி இரு அணிகளும் மோதிய தொடக்க ஆட்டத்தில் ஒரு பந்து மீதம் இருக்க சென்னை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தோல்விக்கு மும்பை அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். அதேவேளையில் மீண்டும் ஒருமுறை மும்பை அணியை வீழ்த்தும் முனைப்புடன் செயல்பட சென்னை அணி ஆயத்தமாகி உள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 பந்தில் 70 ரன்கள் விளாசிய தோனி மற்றும் இந்த சீசனில் 283 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்துள்ளவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அம்பாட்டி ராயுடு ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

http://tamil.thehindu.com/sports/article23706065.ece

Link to comment
Share on other sites

  • Replies 592
  • Created
  • Last Reply

டெல்லி அணியில் கவுதம் கம்பீர் ஓரம்கட்டப்பட்டாரா? - ஒதுங்கிக்கொண்டாரா?: கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் விளக்கம்

 

 
Shreyas-Iyer-Gautam-G

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், கவுதம் கம்பீர்   -  படம் உதவி: ஐபிஎல் ட்விட்டர்

ஐபில் போட்டியில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் முன்னாள் கேப்டனும், அனுபவ வீரரான கவுதம் கம்பீர் கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் விளையாடாதது ஏன் என்று சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதற்கு கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது நடந்து வரும் 11-வது ஐபிஎல் சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கேப்டனாக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.

கொல்கத்தா அணிக்கு இருமுறை கோப்பையை வென்றுகொடுத்த வெற்றிக் கேப்டன் என்ற அடிப்படையில் அவரை அணி நிர்வாகம் தேர்வு செய்தது. இதனால், டெல்லி டேர்டெவில்ஸ் அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

கவுதம் கம்பீர் மட்டும் அந்த எதிர்பார்ப்புக்குக் காரணம் இல்லை, அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த மற்ற வீரர்களும் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.

குறிப்பாக, ஸ்ரேயாஸ் அய்யர், பிரத்வி ஷா, முன்ரோ, ரிஸ்பா பந்த், கிறிஸ்டியன், ஜெயந்த் யாதவ், டிரன்ட் போல்ட், மேக்ஸ்வெல், முகமது ஷமி, விஜய் சங்கர்,அமித் மிஸ்ரா, ஆவேஷ்கான், பிளங்கெட் என அற்புதமான வீரர்கள் இருக்கின்றனர்.

ஆனால், 6 போட்டிகளுக்குக் கவுதம் கம்பீர் தலைமை ஏற்று செயல்பட்டதில் ஒருபோட்டியில் மட்டுமே டெல்லி அணி வெற்றி பெற்றது. மற்றபோட்டிகளில் மோசமான தோல்விகளைச் சந்தித்து.

இதனால், வேறுவழியின்றி கவுதம் கம்பீர் தானாகவே தனது கேப்டன் பதவியைத் துறந்தார். மேலும், இந்த சீசன் முழுவதும் சம்பளம் வாங்காமல் விளையாடப் போவதாக அறிவித்தார். புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யரை பரிந்துரை செய்தார் கம்பீர்.

இதனால், கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கம்பீர் களமிறங்கி பேட்டிங்கில் வெளுத்துகட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராமல் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கான காரணங்களும் கூறப்படவில்லை. அவர் நீக்கப்பட்டாரா அல்லது தானாக ஓய்வில் இருந்தாரா என்ற கேள்வியும் எழுந்தது.

கம்பீர் இல்லாத நிலையில், மிகப்பெரிய அளவில் பேட்டிங்கில் டெல்லி அணிக்கு நெருக்கடி ஏற்படப்போகிறது, புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதல் போட்டியிலேயே கம்பீரை நீக்கி தவறு செய்துவிட்டார் என்று ரசிகர்கள் தரப்பில் பேசப்பட்டது.

ஆனால், நினைத்து ஒன்று நடந்தது வேறு, அதிரடியாக டெல்லி அணி 2019 ரன்களைக் குவித்து, கொல்கத்தா அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அனுபவ வீரர் கம்பீர் இல்லாமல் டெல்லி அணி ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் வெற்றி பெற்று விட்டது. இதனால், அடுத்துவரும் போட்டிகளுக்கும் கம்பீர் பெஞ்சில் உட்கார வைக்கப்படுவாரா? அல்லது, வாய்ப்புகள் அளிக்கப்படுமா? என்ற தொடர் சந்தேகங்கள் எழுந்தன.

ஏனென்றால், ப்ளேஆப் சுற்றுக்கு டெல்லி அணி தகுதி பெற அடுத்துவரும் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

மேலும், ஸ்ரேயார்ஸ் அய்யர் தலைமையில் வீரர்கள் அனைவரும் உற்சாகமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளதால், பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாத கம்பீர் அணியில் இடம் பெறு வேண்டுமா என்ற கருத்தும் மிதந்தது.

அதுமட்டுமல்லாமல், கேப்டன் பொறுப்புக்கு பரிந்துரை செய்த கம்பீரை முதல் போட்டியிலேயே களை எடுத்தது மாதிரி நீக்கிவிட்டார் ஸ்ரேயாஸ் அய்யர் என்ற விமர்சனங்களும் சமூக ஊடகங்களில் அதிகமாக எழுந்தன.

அதேசமயம், கொல்கத்தாவுக்கு எதிரான இந்தப் போட்டியில் கவுதம் கம்பீர் தானாக ஓய்வில் இருந்து கொண்டாரா அல்லது அணி நிர்வாகம் ஓய்வில் அமரவைத்ததா என்பது ரசிகர்கள் மத்தியில் எழுந்த கேள்விக்கு விடைதெரியாமல் இருந்தது.

gautam-gambhir-jpg

ஸ்ரேயாஸ் அய்யர், கம்பீர்

 

ஆனால், இதுகுறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரிடம் போட்டி முடிந்தபின் கம்பீர் நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

கவுதம் கம்பீர் போன்ற அனுபவ வீரர்கள் அணிக்கு மிகவும் அவசியம். ஆனால் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அவர் கேப்டனாக இல்லாவிட்டாலும் பேட்ஸ்மேனாக பங்களிப்பு செய்வார் என எதிர்பார்த்தேன்.

ஆனால், தானாக முன்வந்து இந்தப்போட்டியில் நான் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துவிட்டார். கம்பீரை அணியில் எடுக்காமல் நீக்கியது என்னுடைய சொந்த முடிவு அல்ல. இது கம்பீர் தானாக அணி நிர்வாகத்திடம் கூறிவிட்டார். உண்மையிலேயே துணிச்சலான முடிவு.

கேப்டனாக கடந்த 6 போட்டிகளிலுக்கு செயல்பட்டு, அந்தப் பதவியை தானாக உதறித்தள்ளி, போட்டியிலும் விளையாடாமல் இருப்பதற்குத் துணிச்சல் வேண்டும். கம்பீர் மீது அதிகமான மரியாதையும், நம்பிக்கையும் வைத்திருக்கிறேன்.

அவரின் இந்த முடிவு நிச்சயம் ஏதோ காரணத்துக்காகவே இருக்கும். நன்றாக பேட் செய்யாவிட்டாலும் அவரை கேப்டனாகப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அனைத்து வீரர்களும் கூட்டு உழைப்பை வெளிப்படுத்தினார்கள். அணியின் ஒட்டுமொத்த உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன்.

என்னுடைய பேட்டிங், பிரித்வி ஷாவின் பேட்டிங் மட்டும் காரணமல்ல. ஒவ்வொருவரும் தானாக முன்வந்து பொறுப்பெடுத்து விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது.

இவ்வாறு ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article23708945.ece

Link to comment
Share on other sites

2018 ஐபிஎல்-லில் அதிக சிக்ஸர்கள்: டாப்-10ல் மூன்று சிஎஸ்கே வீரர்கள்!

 

 
dhoni_blore717111

 

1-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப். 7-ம் தேதி தொடங்கி 51 நாள்கள் நடக்கிறது. மொத்தம் 60 போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், தில்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் இதுவரை அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் டாப் 10 பட்டியல் இது. இந்த 10 பேரில் மூன்று சிஎஸ்கே வீரர்கள் இடம்பிடித்துள்ளார்கள்.

ஐபிஎல் 2018 - அதிக சிக்ஸர்கள்

வரிசை எண்  பெயர்  இன்னிங்ஸ்   ரன்கள்   ஸ்டிரைக்   ரேட்   அதிக   ரன்  சிக்ஸர்கள் 
 1  கிறிஸ் கெயில்   (பஞ்சாப்)  4  252  161.53  104*  23
 2  டிவில்லியர்ஸ்   (பெங்களூர்)  6  280  184.21  90*  23
 3  ஆண்ட்ரே   ரஸ்ஸல் (கொல்கத்தா)  6  207  204.95  88*  23
 4  ஷ்ரேயஸ்   ஐயர்  (தில்லி)  7  244  162.66  93*  16
 5  அம்பட்டி   ராயுடு   (சென்னை)  6  283  158.98  82  15
 6  தோனி   (சென்னை)  6  209  165.87  79*  14
 7

 சஞ்சு சாம்சன் 

 (ராஜஸ்தான்)

 6  239  150.31  92*  12
 8

 ஷேன்வாட்சன்   (சென்னை) 

 

 6  191  161.86  106  12
 9

 கே.எல். ராகுல்

 ( பஞ்சாப்)

 7  268  170.70  60  12
 10  எவின் லீவிஸ்   (மும்பை)  6  147  148.48  65  11

 

http://www.dinamani.com/sports/special/2018/apr/28/most-sixes-2909299.html

Link to comment
Share on other sites

சிஎஸ்கே வெற்றிகளில் பிராவோ மும்முனைப் பங்களிப்பு அதிகம்: பவுலிங் ஆலோசகர் சிம்மன்ஸ்

 

 
BRAVOjpg

படம். | பி.ஜோதிராமலிங்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் பவுலர்களுக்கு டிவைன் பிராவோ எப்படி ஒரு அனுபவமிக்க அறிவுரையாளராக செயல்படுகிறார் என்று அந்த அணியின் பந்துவீச்சு ஆலோசகர் எரிக் சிம்மன்ஸ் விளக்கமளித்துள்ளார்.

பிராவோ முதல் ஐபிஎல் போட்டியில் பேட்டிங்கில் வெளுத்து வாங்கியதில் நம்பமுடியாத இடத்திலிருந்து சென்னை வெற்றி பெற்றது, அந்த உத்வேகத்திலும் தோனியின் அபாரமான பேட்டிங், கேப்டன்சி, விக்கெட் கீப்பிங் என்ற ஆல்ரவுண்ட் ஆட்டத்தினாலும், ராயுடுவின் அயராத பங்களிப்பினாலும் வெற்றிகளைப் பெற்றுவருகிறது.

முதல் போட்டியில் பேட்டிங்கில் பிராவோ பங்களிப்பு செய்தது பெரிய அளவில் பேசப்பட்டாலும் அன்று பந்து வீச்சில் 4 ஓவர்களில் 25 ரன்களையே கொடுத்து கட்டுப்படுத்தியதும் வெற்றிக்கு ஒரு அங்கமாக அமைந்தது.

ஆனால் பிராவோ எப்படி இளம் சிஎஸ்கே வீச்சாளர்களுக்கு ஒரு அனுபவ அறிவுரையாளராகத் திகழ்கிறார் என்று பவுலிங் ஆலோசகர் எரிக் சிம்மன்ஸ் விளக்கினார்:

பிராவோ ஒரு அபாரமான அனுபவமிக்க வீரர், மும்பைக்கு எதிராக புதைந்துதான் போனோம். ஆனால் பிராவோ நான் பார்த்ததிலேயே சிறந்த டி20 இன்னிங்ஸ்களில் ஒன்றை ஆடினார். அந்தப் போட்டியை வெல்வோம் என்று கூட எதிர்பார்க்கவில்லை. தோனி கூட தோற்றாலும் சேத அளவைக் குறைப்பது பற்றித்தான் பேசினார்.

பிராவோவின் பவுலிங் பங்களிப்பு நடு ஓவர்களில் அபரிமிதமானது. பீல்டிங்குக்குத் தக்கவாறு வீசுகிறார் இது பார்ப்பதற்கு ஆச்சரியகரமாக உள்ளது.

அவர் பந்துகளில் ஒரு ரன் வரும் பந்துகள் அதிகம் உள்ளன. என்ன நடக்கப்போகிறது என்பதை பிராவோ புரிந்து வைத்துள்ளார்.

அவர் ஆலோசகராக இளம் பவுலர்களுக்கு இருப்பது நாம் பார்த்து தெரிந்து கொள்வதல்ல. இளம் வீச்சாளர்களிடம் நிறைய பேசுகிறார், நிறைய அறிவுரை வழங்குகிறார். கிரிக்கெட்டில் சிலவேளைகளில் சிறந்த தெரிவு சில பேட்ஸ்மென்களுக்கு சிங்கிள் கொடுத்து விடுவதுதான்.

இளம் பவுலர்கள் தங்கள் பந்து வீச்சுக்கான களவியூகத்துக்கு வீசுகிறார்களா என்பதை உறுதி செய்வதில் பிராவோவின் பங்கு அபரிமிதமானது. அணியைப் பொறுத்தவரையில் 3 முக்கியப் பங்குகளில் பிராவோ செயலாற்றுகிறார் என்றே எனக்குப் படுகிறது.

இவ்வாறு கூறினார் எரிக் சிம்மன்ஸ்.

http://tamil.thehindu.com/sports/article23710718.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018- மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு - பொல்லார்டு, முஷ்டாபிஜூர் அவுட்

 
 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #IPL2018 #CSKvMI

 
 
ஐபிஎல் 2018- மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு - பொல்லார்டு, முஷ்டாபிஜூர் அவுட்
 
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசனின் 27-வது ‘லீக்’ ஆட்டம் புனேயில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதற்கான டாஸ் சரியாக 7.30 மணிக்கு சுண்டப்பட்டது. டோனி டாஸ் சுண்ட ரோகித் சர்மா ‘டெய்ல்’ என அழைத்தார். ரோகித் அழைத்ததுபோல் ‘டெய்ல்’ விழ, டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லார்டு, முஷ்டாபிஜூர் ரஹ்மான் நீக்கப்பட்டு பென் கட்டிங், டுமினி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. வாட்சன், 2. அம்பதி ராயுடு, 3. சுரேஷ் ரெய்னா, 4. சாம் பில்லிங்ஸ், 5. டோனி, 6. ஜடேஜா, 7. பிராவோ, 8. ஹர்பஜன் சிங், 9. தீபக் சாஹர், 10. சர்துல் தாகூர், 11. இம்ரான் தாஹிர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. சூர்யகுமார் யாதவ், 2. எவின் லெவிஸ், 3. இஷான் கிஷான், 4. ரோகித் சர்மா, 5. டுமினி, 6. குருணால் பாண்டியா, 7. ஹர்திக் பாண்டியா, 8. பென் கட்டிங், 9. மெக்கிளேனகன், 10. மயாங்க் மார்கண்டே, 11. பும்ரா.

சென்னை அணி 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத், பெங்களூர் அணிகளை வீழ்த்தி இருந்தது. பஞ்சாப்பிடம் மட்டும் தோற்று இருந்தது. மும்பை இந்தியன்சை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. அந்த அணி 1 வெற்றி, 5 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. பெங்களூர் அணியை மட்டும் வென்று இருந்தது. ஐதராபாத் அணியிடம் 2 முறையும் சென்னை, டெல்லி, ராஜஸ்தான் அணிகளிடம் தலா ஒரு முறையும் தோல்வியடைந்துள்ளது. #IPL2018 #MI #CSK #CSKvMI

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/28193628/1159631/IPL-2018-Mumbai-Indians-won-toss-bowl-first.vpf

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018- மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை

 

ரெய்னாவின் அரைசதத்தாலும், அம்பதி ராயுடு, டோனியின் பொறுப்பான ஆட்டத்தாலும் மும்பை இந்தியன்ஸ்க்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை #IPL2018 #CSKvMI

 
 
ஐபிஎல் 2018- மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை
 
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 27-வது லீக் ஆட்டம் புனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்க்கு இடையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெக்கிளேனகன் முதல் ஓவரை வீசினார். முதல் பந்தில் வாட்சன் ஒரு ரன் அடித்தார். 3-வது பந்தை அம்பதி ராயுடு சிக்சருக்கு தூக்கினார். இதனால் அம்பதி ராயுடு இன்று பவர்பிளேயில் வாணவேடிக்கை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அம்பதி ராயுடுவால் அதிரடியாக விளையாட முடியவில்லை. முதல் ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன்கள் எடுத்தது.

2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் அம்பதி ராயுடுவை திணற வைத்தார். பும்ரா இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 3-வது ஓவரை மெக்கிளேனகன் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை வாட்சன் பவுண்டரிக்கு விரட்டினார். அதன்பின் பந்து பவுண்டரி கோட்டிற்கு பறக்காததால் 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

201804282140581531_1_rayudu-swq._L_styvpf.jpg

4-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இதில் ராயுடு ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. 5-வது ஓவரை குருணால் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் வாட்சன் ஆட்டமிழந்தார். அவர் 11 பந்தில் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் அடித்தார். அடுத்து ரெய்னா களம் இறங்கினார்.

3-வது பந்தை அம்பதி ராயுடு சிக்சருக்கு தூக்க, கடைசி பந்தை ரெய்னா சிக்சருக்கு தூக்கினார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 5-வது ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது.

6-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். முதல் நான்கு பந்து சென்னைக்கு கிளிக் ஆகவில்லை. ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கும், 6-வது பந்தை சிக்சருக்கும் விரட்டினார் அம்பதி ராயுடு. சென்னை சூப்பர் கிங்ஸ் பவர்பிளே-ஆன முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்தது.

7-வது ஓவரை குருணால் பாண்டியா வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் சென்னை 9 ரன்கள் எடுத்தது. 8-வது ஓவரை மயாங்க் மார்கண்டே வீசினார். இந்த ஓவரில் சென்னை அணிக்கு 3 ரன்கள்தான் கிடைத்தது. 9-வது ஓவரை பென் கட்டிங் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ராயுடு இமாலய சிக்ஸ் விளாசினார். 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் 14 ரன்கள் கிடைத்தது. 10-வது ஓவரை மார்கண்டே வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கும், 5-வது பந்தை சிக்சருக்கும் விரட்டினார் ரெய்னா. இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது.

11-வது ஓவரை மெக்கிளேனகன் வீசினார். இந்த ஓவரில் ரெய்னா பவுண்டரி ஒன்று அடிக்க 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 12-வது ஓவரை குருணால் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் அம்பதி ராயுடு பென் கட்டிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 35 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 11.2 ஓவரில் 97 ரன்கள் எடுத்திருந்தது. அம்பதி ராயுடு - ரெய்னா ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது.

3-வது விக்கெட்டுக்கு ரெய்னா உடன் கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தார். 12-வது ஓவரில் விக்கெட் வீழ்த்தியதுடன் குருணால் பாண்டியா 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

13-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ரெய்னா ஒரு ரன் அடித்தார். அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் 100 ரன்னைத் தொட்டது. அதன்பின் சந்தித்த நான்கு பந்துகளிலும் டோனி ரன் அடிக்கவில்லை.

14-வது  ஓவரை குருணால் பாண்டியா வீசினார். இந்த ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 ரன்கள் எடுத்தது. 15-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் 4-வது மற்றும் ஐந்தாவது பந்தை டோனி பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் 11 ரன்கள் கிடைத்தது. 15 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது.

201804282140581531_2_dhoni002-ssss._L_styvpf.jpg

16-வது ஓவரை மார்கண்டே வீசினார். 2-வது பவுண்டரிக்கு விரட்டிய டோனி, 3-வது பந்தில் ஹெலிகாப்டர் ஷாட் மூலம் இமாலய சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது.

17-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை ரெய்னா பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 35 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் 12  ரன்கள் கிடைத்தது. 15-வது ஓவருக்குப் பின் சராசரியாக 10 ரன்கள் கிடைத்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 150 ரன்களை தாண்டும் நிலை ஏற்பட்டது.

18-வது ஓவரை மெக்கிளேனகன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் டோனி ஆட்டமிழந்தார். அவர் 21 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டோனி அவுட்டாகும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 17.1 ஓவரில் 143 ரன்கள் எடுத்திருந்தது. ரெய்னா- டோனி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்தது.

4-வது விக்கெட்டுக்கு ரெய்னா உடன் பிராவோ ஜோடி சேர்ந்தார். பிராவோ தான் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரன் ஏற்றத்தில் சறுக்கல் ஏற்பட்டது. 5-வது விக்கெட்டுக்கு ரெய்னா உடன் சாம் பில்லிங்ஸ் ஜோடி சேர்ந்தார். இரண்டு விக்கெட்டுக்கள் இழந்ததால் 18-வது ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது.

19-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2 பந்தை சிக்சருக்கு தூக்கினார் ரெய்னா. இதனால் 11 ரன்கள் கிடைத்தது. சென்னை அணியின் ஸ்கோரும் 150-ஐ தாண்டியது.

கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். முதல் மூன்று பந்தில் தலா ஒரு ரன் அடித்தது சென்னை. 4-வது பந்தில் சாம் பில்லிங்ஸ் ஆட்டமிழந்தார். 5-வது பந்தில் ரெய்னா இரண்டு ரன்கள் அடித்தார். கடைசி பந்தை ரெய்னா சிக்சருக்கு தூக்கினார். இதனால் சென்னை 20 ஒவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ரெய்னா 47 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/28214058/1159641/IPL-2018-CSK-170-runs-targets-to-mi-indians.vpf

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018: இவர்களை அணியிலிருந்து நீக்கலாமா?

 

 
jadeja%20yuvraj

யுவ்ராஜ், ஜடேஜா.   -  கோப்புப் படம். | கே.ஆர்.தீபக்.

ஐபிஎல் கிரிக்கெட் அதன் உச்சக்கட்டத்துக்குச் சென்று கொண்டிருக்கும் வேளையில் சில அணிகள் 7 போட்டிகளில் ஆடியுள்ளது. சில அணிகள் 6 போட்டிகளில் ஆடியுள்ளன.

இந்நிலையில் ஒரு சில அணிகளில் சில வீரர்கள் சுமையாக இருந்து வருவதோடு பிற வீரர்களின் வாய்ப்பையும் இந்த வீரர்கள் தடுத்து வருகின்றனர்.

அந்த வீரர்கள் பட்டியலில் ஜடேஜா, ஏரோன் பிஞ்ச், ஜெயதேவ் உனாட்கட், கெய்ரன் பொலார்ட், யுவராஜ் சிங் போன்ற வீரர்கள் உள்ளனர். ரோஹித் சர்மாவும் இந்தப் பட்டியலில்தான் உள்ளார், ஆனால் அவர் மும்பை இந்தியன்ஸ் கேப்டன். ஆனால் இவருக்கும் முன்னுதாரணமாகியுள்ளார் கம்பீர், தனது கேப்டன்சியையும் துறந்து போட்டியிலிருந்தும் தன்னை விலக்கிக் கொண்டதோடு இந்த ஐபிஎல் சீசனில் சம்பளம் வேண்டாம் எனுன் அளவுக்கு உணர்ச்சிகர முடிவை எடுத்துள்ளார்.

நீக்கப்பட வேண்டிய வீரர்களைப் பார்ப்போம்:

ஜடேஜா:

இவருக்கு கேப்டன் தோனியின் அதீத ஆதரவு இருக்கிறது, சென்னை சூப்பர் கிங்ஸ் இவரைத் தக்கவைத்தது. இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் பேட்டிங்கில் ரன்கள் எடுத்த பிறகு தான் இனி பேட்டிங்கில்தான் கவனம் செலுத்தப் போகிறேன் என்று கூறி தன் பவுலிங் வாய்ப்பையும் ஆல்ரவுண்டர் என்ற தகுதியையும் தானே கேள்விக்குட்படுத்திக் கொண்டார்.

தோனியும் இவரைப்பற்றி பேட்டியிலெல்லாம் விதந்தோதினாலும் இவர் ஒரு விதத்திலும் தேறுபவராகத் தெரியவில்லை. சில பத்திரிகைகள் ‘ஜடேஜாவில் புதிய பினிஷரை இனம் காணும் தோனி’ என்று கிண்டலாகக் கூட தலைப்பு வைத்து செய்திகளை ஆங்கிலத்தில் வெளியிட்டன.

இந்த சீசனில் ஜடேஜா 6 போட்டிகளில் 47 ரன்களைத்தான் எடுத்துள்ளார். சராசரி 15.66. ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார், சரி, சிக்கன விகிதமாவது சாதகமாக இருக்கிறதா என்றால் இல்லை. ஓவருக்கு 8.40 ரன்கள் கொடுத்து வருகிறார். இவருக்குப் பதிலாக துருவ் ஷோரி என்ற வலது கை பேட்ஸ்மென், வலது கை ஆஃப் பிரேக் பவுலரைக் கொண்டு வரவேண்டும். அல்லது மோனு குமார் என்ற பவுலிங் ஆல் ரவுண்டர் இருக்கிறார். முடிவெடுக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

ரூ.11.5 கோடி ஜெயதேவ் உனாட்கட்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த ஏலத்தில் அதிக விலை கொடுத்து எடுத்த இரண்டு வீரர்களில் ஜெயதேவ் உனாட்கட் ஒருவர். ஏலத்துக்கு முன்பாக உண்மையிலேயே அருமையாக வீசி வந்த உனாட்கட் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் சாத்துமுறை வாங்கி வருகிறார்.

6 போட்டிகளில் ஆடிய உனாட்கட் 3 விக்கெட்டுகள்தான் எடுத்துள்ளார், சிக்கன விகிதம் ஓவருக்கு 10.05 ரன்கள் கொடுத்துள்ளார். முதலில் ஓரிரு போட்டிகளில் 4 ஓவர்கள் கோட்டாவையே அவரால் முடிக்க முடியவில்லை.

இவர் அணியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர். இவருக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் அனுரீத் சிங் எடுக்கலாம் அல்லது லெக் பிரேக் கூக்ளி பவுலரான பிரசாந்த் சோப்ராவை எடுக்கலாம்.

ஏரோன் பிஞ்ச்:

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆஸ்திரேலிய அதிரடி தொடக்க வீரர் ஏரோன் பிஞ்ச்சை ரூ.6.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இந்த ஐபிஎல் தொடரில் இவரது ஸ்கோர் 0 0 14 நாட் அவுட், 2 மற்றும் 8. இவரும் அணியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர் இவருக்குப் பதிலாக டேவிட் மில்லர் அணியில் இடம்பெற வேண்டும்.

யுவராஜ் சிங்:

நிச்சயமாக யுவராஜ் சிங் நல்ல பார்மில் இருந்து ஆடினால், இவரது ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம், ஆனால் பார்ம் அவுட் ஆகிவிட்டால் இவர் கடுமையாகச் சொதப்பி விடுவார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் 4 போட்டிகளில் வெறும் 50 ரன்களைத்தான் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 89, சராசரி 12.50. கேப்டன் அஸ்வின் கூட இவரை விட 3 ரன்கள் கூட எடுத்துள்ளார்.

இதே நிலைமைதான் கிங்ஸ் லெவனின் தொடக்க வீரர் டியார்க்கி ஷார்ட் என்பவருக்கும் உள்ளது.

கெய்ரன் பொலார்ட்:

2010 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடிவருபவர் பொலார்ட், அருமையான சில இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். சில முக்கியமான கட்டங்களில் முக்கியமான ஓவர்களை வீசியுள்ளார், அனைத்துக்கும் மேலாக ஐபிஎல் கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த கேட்ச்களை எடுத்தது பொலார்ட்தான், இவரது கேட்சை முறியடித்தவர் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் ட்ரெண்ட் போல்ட்தான், விராட் கோலிக்கு போல்ட் அந்த திகைக்கவைக்கும் கேட்சை எடுத்துள்ளார்.

ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் 63 ரன்கள்தான் எடுத்துள்ளார். டுமினி இவருக்குப் பதிலாக இறக்கப்பட வேண்டும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.

ரோஹித் சர்மா:

இது மிகக் கடினமான வேலைதான், ரோஹித் சர்மாவை நீக்குவது என்பது சாதாரணமல்ல, மிகப்பெரிய லாபி இவருக்கு உண்டு. ஆனால் இந்த ஐபிஎல் போட்டியில் இவரது டவுன் ஆர்டரில் ஏகப்பட்ட குழப்பங்கள் நடந்து வருகின்றன.

இவர் தொடக்கத்தில் களமிறங்குவதுதான் சரி என்று முன்னாள் மும்பை பேட்ஸ்மென் லால்சந்த் ராஜ்புத் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் இவரது டவுன் ஆர்டர் குழப்பம் தொடர்கிறது, கேப்டன்சியும் சொல்லிக் கொள்ளும் படியில்லை, களவியூகம் பந்து வீச்சு மாற்றம் என்று சொதப்பி வருகிறார். ஒருவேளை டுமினியிடம் கேப்டன்சியைக் கொடுத்துப் பார்த்தால் டெல்லி அணிக்கு ஏற்பட்ட மாற்றம் போல் ஏற்படலாம்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிராக பெற்ற வெற்றியில் அடித்த 94 ரன்கள் தவிர 20 ரன்களை மற்ற இன்னிங்ஸ்களில் தாண்டவில்லை.

http://tamil.thehindu.com/sports/article23711698.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018- சென்னைக்கு எதிராக 205 எடுத்தும் தோல்வி அடைந்தது உண்மையிலேயே பேரழிவு- ஏபிடி

 

205 ரன்கள் எடுத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக தோல்வியடைந்தது உண்மையிலேயே பேரழிவு என ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். #RCBvCSK

 
ஐபிஎல் 2018- சென்னைக்கு எதிராக 205 எடுத்தும் தோல்வி அடைந்தது உண்மையிலேயே பேரழிவு- ஏபிடி
 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 24-வது லீக் ஆட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டி காக் (53), டி வில்லியர்ஸ் (68) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.

பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அம்பதி ராயுடு (53 பந்தில் 82 ரன்கள்), டோனி (34 பந்தில் 70 ரன்கள் அவுட்டில்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 19.4 ஓவரில் 207 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டில் அசத்தல்  வெற்றி பெற்றது.

200 ரன்களுக்கு மேல் அடித்தும் தோல்வியை சந்தித்ததால், ஆர்சிபி அணிக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன டி வில்லியர்ஸ் இந்த தோல்வி பேரழிவு என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான தோல்வி குறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த போட்டியை எப்படி தோற்றோம்?. இரண்டு இன்னிங்சிலும் முதல் 15 ஓவர்களில், நாங்கள் வலுவான எதிரணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஆனால், எங்களுடைய இன்னிங்ஸ் இறுதியில் தோல்வியை சந்தித்தோம்.

201804282014514261_1_devilliers-s._L_styvpf.jpg

இந்த தொடரின் தொடக்கத்தில் நாங்கள் முழு நம்பிக்கையாக இருந்தோம். இது ஒவ்வொருவருக்கும் இடையில் நம்பிக்கையை வளரச் செய்தது. பயிற்சியாளர் வெட்டோரி எங்களிடம் பேசுகையில் அமைதியான நின்று, அவநம்பிக்கையுடன், 205 ரன்கள் அடித்தும் தோல்வியடைந்தது உண்மையிலேயே பேரழிவு என்று உணர்ந்தோம். அதன்பின் எந்த வகையில் சரியாக சென்றோம். எந்த வகையில் தவறாக சென்றோம் என்பதை விராட் கோலி கண்டறிந்தார்.

குறிப்பிட்ட பகுதியில் நாங்கள் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதை சரி செய்து கொல்கத்தாவிற்கு எதிராக நாளை சரியான திசையில் செல்ல வேண்டும்’’ என்றார். #IPL2018 #ABD #RCB

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/28201451/1159636/IPL-2018-Losing-to-Chennai-Super-Kings-after-scoring.vpf

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018 - சென்னையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை

 
 
 

ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவின் பொறுப்பான ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. #IPL2018 #CSKvMI

 
 
 
 
ஐபிஎல் 2018 - சென்னையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை
 
புனே:
 
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 27-வது லீக் ஆட்டம் புனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்க்கு இடையில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது.
 
சென்னை அணியின் அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷேன் வாட்சன் 12 ரன்களில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ரெய்னா ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சேர்ந்து 71 ரன்கள் சேர்த்த நிலையில் ராயுடு 46 ரன்களில் அவுட்டானார்.
 
அடுத்து இறங்கிய கேப்டன் தோனி நீண்ட நேரம் நிலைக்கவில்லை 26 ரன்களில் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுக்ள் வீழ்ந்தாலும் ரெய்னா சிறப்பாக ஆடினார். இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. ரெய்னா 47 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரியுடன் 75 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
 
மும்பை அணி சார்பில் மெக்கிளேனகன், க்ருணால் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
201804282359103845_1_raina-3._L_styvpf.jpg
 
இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவும், எவின் லெவிசும் களமிறங்கினர்.
 
முதலில் இருந்தே இருவரும் அடித்து விளையாடினர். பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடித்தனர். சூர்யகுமார் யாதவ் 34 பந்துகளில் ஒரு சிக்சர், 5 பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ரோகித் சர்மா இறங்கினார். இதனால் மும்பை அணி 10 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்திருந்தது.
 
அதன்பின் லெவிசும், ரோகித் சர்மாவும் பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடியும் அரை சதம் கடந்தது. இதையடுத்து 15 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. 
 
பொறுப்பாக ஆடிய லெவிஸ் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார். அவர் ரோகித்துடன் சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். ரோகித் சர்மா 56 ரன்களுடனும், பாண்ட்யா 16 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.
 
இறுதியில், மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை ரோகித் சர்மா பெற்றார்.
 
சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங், பிராவோ ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர். #IPL2018 #CSKvMI
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/28234434/1159651/mumbai-indians-beat-chennai-super-kings-by-8-wickets.vpf

Link to comment
Share on other sites

சுரேஷ் ரெய்னாவின் அதிரடி நாட் அவுட்டிலும் 15-20 ரன்கள் குறைவு: சென்னையை வீழ்த்தியது மும்பை

 

 
rohit

ஆட்ட நாயகன் ரோஹித்தின் பவுண்டரி.   -  படம். | பி.ஜோதிராமலிங்கம்

புனேயில் நடைபெற்ற 27வது ஐபிஎல் போட்டியில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரோஹித் சர்மா தலைமை மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 11 ஓவர்களில் 97/1 என்ற சிறப்புக்கட்டத்திலிருந்து 20 ஒவர்களில் 169/5 என்று சரிந்தது. பிறகு இலக்கைத் துரத்திய மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா (56), சூரியகுமார் யாதவ் (44), எவின் லூயிஸ் (47) ஆகியோரது ஆதிக்கத்தினால் 170/2 என்று வெற்றி பெற்றது.

சுரேஷ் ரெய்னா தொடக்க ஷார்ட் பிட்ச் சோதனைகளைக் கடந்து வந்து 47 பந்துகளில் 75 ரன்கள் என்று இறுதி வரை நின்ற போதும் சென்னை எப்படி 185-190 ரன்களை எட்டாமல் போனது என்பது புரியாத புதிர்! தோனி மீண்டும் வைடான யார்க்கர் முயற்சி புல்டாஸை நீட்டிக் கொண்டு அடிக்க கவரில் எவின் லூயிஸ் கையில் போய் விழுந்தது, இது ஒரு திருப்புமுனை என்றால் மெக்லினாகன் இதே ஓவரில் பிராவோவுக்கு ஒரு ஏத்து ஏத்த பாயிண்டில் முடிந்தார், டக் அவுட்.

இந்த இரண்டு விக்கெட்டுகளினால் 143/2 என்று இருந்த சென்னை 144/4 என்று ஆனது.

அன்று பவன் நெகியிடம் எப்படி விக்கெட் கொடுக்க மனம் வந்ததோ ஷேன் வாட்சனுக்கு நேற்று 1 பவுண்டரியுடன் 11 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து 5வது ஓவரின் 2வது பந்தில் குருணால் பாண்டியா பந்தை ஸ்கொயர்லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், தொடக்கத்தில் ஜஸ்பிரீத் பும்ரா தன் பவுன்ஸ் மூலம் அம்பாத்தி ராயுடுவின் பேட்டிங் தரத்தை சோதித்தார். ஆனால் பும்ராவை பிறகு வீசுவதற்காக உடனே கட் செய்தார் ரோஹித் சர்மா, ஒருவேளை தொடர்ந்து கொடுத்திருந்தால் வேறு ஒரு தரநிலை பவுலிங்கிற்கு எதிரான ராயுடுவின் பலம் தெரிந்திருக்கும், அவுட் கூட ஆகியிருப்பார்.

ஆனால் அதன் பிறகு ராயுடு அற்புதமாக ஆடினார், அப்படித்தான் அவர் ஆடி வருகிறார். பாண்டியா உண்மையில் நன்றாகவே வீசினார், பவர் ப்ளேயில் அவரது சிக்கன விகிதம் ஓவருக்கு 10 ரன்கள் என்றாலும் ரோஹித் அவரைக் கொண்டுவந்தார். 4 பந்துகள் 2 ரன்கள்தான், ஆனால் கடைசியில் ஒரு கூடுதல் பவுன்ஸ் கொண்ட பந்துக்கு எட்ஜ் பவுண்டரி ஒன்றையும் கடைசியில் மிக அருமையாக புல் லெந்த் பந்தை லாங் ஆஃப் மேல் சிக்ஸரும் அடிக்க ஸ்கோர் 6 ஓவர்களில் 51/1 என்று இருந்தது. முன்னதாக குருணால் பாண்டியாவையும் ஒரு பிளிக் சிக்ஸ் அடித்திருந்தார் ராயுடு, ரெய்னா இறங்கி தன் பாணியில் ஒரு குறுக்குசால் ஓட்டி மிட்விக்கெட்டில் குருணாலை ஒரு சிக்ஸ் அடித்திருந்தார்.

ரெய்னாவுக்கு கடும் ஷார்ட் பிட்ச் சோதனை கொடுக்கப்பட்டது, அருகில் 3 பீல்டர்களை நிறுத்தி அவரை குதிக்க வைத்தனர். ஆனாலும் நேராக அவரது உடலுக்கு ஷார்ட் பிட்ச் வீசவில்லை. இதனால் ஷார்ட் பைன் லெக் தாண்டி 2 பவுண்டரி அடித்தார், ஷார்ட் பிட்ச் சரியாக வீசத் தெரியவில்லை அல்லது நேற்று அமையவில்லை, இதனால் ரெய்னா செட்டில் ஆகி தனக்குச் சாதகமான, தூக்கத்தில் எழுந்து அடிக்கச் சொன்னால் கூட அடிக்கும் லாங் ஆன் மிட்விக்கெட் பகுதிகளில் ஒரு 40 ரன்கள் பக்கம் அடித்தார். மயங்க் மார்க்கண்டேயை ரெய்னா நேராக ஒரு பவுண்டரி பிறகு ஏறி வந்து லாங் ஆனில் ஒரு சிக்ஸ் விளாசினார். முதல் ஓவரில் 3 ரன்கள் கொடுத்த மார்க்கண்டே இந்த ஓவரில் 14 ரன்கள் கொடுத்தார். 10 ஓவர்களில் 91/1 என்று இருந்த போது ரெய்னா 17 பந்துகள்ல் 31 என்றும் ராயுடு 32 பந்துகளில் 45 என்றும் இருந்தனர்.

அதன் பிறகு மும்பை நடுஓவர்களை இறுக்கிப் பிடித்தது. ராயுடு 46 ரன்களில் குருணால் பாண்டியா பந்தை மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 11வது ஓவரில் 6 ரன்கள், 12 வது ஓவரில் ராயுடு விக்கெட்டுடன் 2 ரன்கள், 13வது ஓவரில் பும்ரா அபாரமாக வீச தோனி, ரெய்னா இருந்தும் 1 ரன் மட்டுமே வந்தது. மீண்டும் 14வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே. 15வது ஓவரில்தான் தோனியிடம் சிக்கினார் பாண்டியா, லாங் ஆஃபில் பந்து நசுங்கிவிடும் போல் ஒரு அறை, பிறகு அசட்டுத்தனமாக தோனிக்கு ஒரு ஷார்ட் பிட்ச் முயற்சி செய்ய மிட்விக்கெட்டில் விளாசினார்.

மயங்க் மார்க்கண்டே ஓவரில் தோனிக்கு ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பை இஷான் கிஷன் விட்டார்.. (உஷ்!) மறுபடியும் கிரிக்கெட்டின் எழுதப்படாத விதியின் படி கேட்ச் விட்டாலோ, ஸ்டம்பிங் விட்டாலோ என்ன ஆகும், தோனி அடுத்த பந்தை ஒரு ஸ்டெப் எடுத்து வைத்து லாங் ஆன் ஸ்டாண்ட்சுக்கு அனுப்பினார். அடுத்த ஓவரில் ரெய்னா பும்ராவின் இரண்டு மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 35 பந்துகளில் அரைசதம் கண்டார்.

மெக்லினாகன் திருப்பு முனை ஓவர்:

17 ஓவர்கள் முடிவில் 143/2. ரெய்னா, தோனி என்ற இறுதி ஓவர் விளாசல் ஜோடி களத்தில், ஆனால் மெக்லினாகன் வேறு சில யோசனைகளைத் தன் வசம் வைத்திருந்தார்.

18வது ஓவரில் தோனிக்கு அனைவரும் செய்யும் வைடு ஆஃப் திசை பந்தை வீசினார், இம்முறை இது புல்டாஸ், தோனி நீட்டிக்கொண்டு அடித்தார் டீப் கவரில் கேட்ச் ஆகி 26 ரன்களில் வெளியேறினார்

ரெய்னா ஒரு ரன் எடுத்து பிராவோவிடம் ஸ்ட்ரைக் கொடுக்க மெக்லினாகன் கூடுதல் பவுன்ஸ் செய்தார், பிராவோவின் புல்ஷாட் மார்க்கண்டேயிடம் லெக் சைடில் கேட்ச் ஆனது, டக் அவுட் ஆனார் பிராவோ. கடைசியில் பும்ரா ஷார்ட் பிட்ச்சை ரெய்னா ஒரு சிக்சர், மீண்டும் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியாவின் கடைசி பந்தில் இன்னொரு சிக்சரை ரெய்னா அடிக்க சென்னை அணி 169/5 என்று முடிந்தது. ரெய்னா 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 75 நாட் அவுட்.

ரோஹித், சூரியகுமார் யாதவ் அபாரம்:

காட்டடி மன்னன் எவின் லூயிஸ் சரியாக ஆடவில்லை, அவரது பேட்டிங் எடுபடவில்லை. 26 பந்துகளில் 21 ரன்களை எடுத்தார், ஆனால் அவருக்கென்றே வந்து சிக்கிய இம்ரான் தாஹிரை கவரில் ஒரு அரக்க சிக்சரையும் அதேஓவரில் லாங் ஆனில் பந்து இறங்குமா என்ற சந்தேகம் எழுமாறு இன்னொரு சிக்சரையும் அடித்தார் லூயிஸ்.

அடுத்த வாட்சன் ஓவரில் ரோஹித் சர்மா லாங் ஆஃபில் ஒரு கையில் சிக்ஸ் அடித்தார். அவரது பாட்டம் ஹேண்ட், மட்டையின் பவர் ஆகியவற்றினால் சிக்ஸ் ஆனது. பிறகு வாட்சனை ஸ்வீப் சிக்ஸ். இது ஸ்வீட் சிக்ஸ்.

முன்னதாக சூரிய குமார் யாதவ், எவின் லூயிஸ் திணறலுக்கு ஈடு கட்டி தனது அபாரமான பார்மைத் தொடர்ந்து பயன்படுத்தி 34 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 44 ரன்கள் விளாசி ஹர்பஜன் பந்தை புல் ஷாட் ஆட ஜடேஜா இடது புறம் ஓடி பிறகு டைவ் அடித்து கிளாஸ் கேட்சை எடுக்க ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் 71/1 என்று நல்ல நிலையில் இருந்தது மும்பை.

அதன் பிறகு தோனியின் களவியூகத்துடன் விளையாடினார் ரோஹித் சர்மா, பிராவோவை ஒரு புல்ஷாட் பவுண்டரி, வாட்சனை தூக்கி அடித்த ஒரு பவுண்டரி என்று ரோஹித் தன்னை வெளிப்படுத்தினார். ஹர்திக் பாண்டியா வாட்சனின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சி லாங் ஆனில் அனாயசமாக ஒரு சிக்ஸ் அடித்தார்.

கடைசி 2 ஓவர்களீல் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோஹித் சர்மா, ஷர்துல் தாக்கூரை 4 பவுண்டரிகள் விளாசினார். அன்று பந்தை சாத்துக்குடியாகப் பிழிந்து டிவில்லியர்ஸுக்குக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டார், நேற்று ஃபுல் லெந்த்தில் வீசி ரோஹித்திடம் சிக்கினார். அதுவும் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற பந்தை ஸ்வீப் அடித்து பவுண்டரிக்கு அனுப்பியது தாக்கூர் ரக பவுலிங்கிற்கு ஒரு பாடம். இந்த ஷாட் ரோஹித் சர்மாவின் அரைசதமானது. 20வது ஓவரில் வெற்றி வந்தது. சாஹர் காயமடைந்ததும் ஒரு பின்னடைவுதான். ரோஹித் சர்மா ஆட்ட நாயகன்.

http://tamil.thehindu.com/sports/article23716625.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு தடை போடும் முனைப்பில் ராஜஸ்தான்

 

SAN-RAHANE

ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன், ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரகானே.   -  PTI

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன.

இந்த ஆட்டம் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. ஹைதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளை யாடி 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் உள்ளது. அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வி என 6 புள்ளிகளைப் பெற் றுள்ளது.

கடைசி 2 ஆட்டங்களில் குறைந்த அளவு ஸ்கோரை எட்டியபோதிலும் தனது திறமையான பவுலிங்கால் ஹைதராபாத் அணி அபார வெற்றி கண்டது. அணியின் நட்சத்திர பவுலர் புவனேஸ்வர் குமார் இல்லாதபோதிலும் ரஷித் கான், சித்தார்த் கவுல், பசில் தம்பி, சந்தீப் சர்மா, ஷகிப் அல் ஹசன் ஆகியோர் அபாரமாக பந்து வீசி எதிரணியை மிரளச் செய்தனர்.

குறிப்பாக ரஷித் கான், அனைத்து அணி வீரர்களையும் இந்தத் தொடரில் மிரட்டி வருகிறார். அவரது அபாரமான லெக் ஸ்பின்னுக்கு பெரும்பாலான ஆட்டக்காரர் மிரள்கின்றனர் என்றால் அது மிகையல்ல.

அதே நேரத்தில் ஹைதரபாத் அணியின் பேட்டிங் கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது. கடந்த 2 ஆட்டங்களில் அந்த அணியின் பேட்டிங் சுத்தமாக எடுபடவில்லை. கேப்டன் கேன் வில்லியம்ஸன் மட்டுமே சிறப்பாக விளையாடி வருகிறார். இன்றைய ஆட்டத்திலும் அவரிடமிருந்து ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவாண் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அந்த அணிக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு எளிதாகிவிடும். மணீஷ் பாண்டே, யூசுப் பதான், தீபக் ஹூடா, ஷகிப் அல் ஹசன் ஆகியோரும் எதிரணியை மிரட்டக் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ஹைதராபாத் அணி யின் வெற்றி வேகத்துக்கு தடை போடும் முனைப்பில் ராஜஸ் தான் களமிறங்கவுள்ளது.

மும்பையுடன் ராஜஸ்தான் மோதிய கடைசி லீக் ஆட்டத்தில், அந்த அணியின் ஆட்டத்திறன் சிறப்பாக இருந்தது. குறிப்பாக கடைசி நேரத்தில் கிருஷ்ணப்பா கவுதம் அபாரமாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். அதேபோல பவுலிங்கிலும் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், பென் லாலின், தவால் குல்கர்னி, ஜெய் தேவ் உனத்கட் ஆகியோர் பரிமளிக்க வேண்டும்.

http://tamil.thehindu.com/sports/article23713279.ece

Link to comment
Share on other sites

இப்படிப்பட்ட தோல்விகள் நம்மை அடக்கமானவர்களாக்கும்: தோனி கூல்

 

 
dhonijpg

படம். | ஏ.எஃப்.பி.

ஒரு சேஞ்சுக்கு மும்பை வெற்றி பெற ஒரு சேஞ்சுக்கு நேற்று புனேயில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது.

10 ஓவர்களுக்குப் பிறகு ஒரு 3-4 ஓவர்களை ரெய்னா, தோனி சரியாகக் கையாளவில்லை, இதனால் 15-20 ரன்கள் குறைவாக எடுத்தது, பிறகு பந்துவீச்சில் சாஹர் காயத்தில் பாதியில் வெளியேற, சூரியகுமார் யாதவ், ரோஹித் சர்மா ஆகியோர் தோனியின் களவியூகத்தை பகடி செய்யுமாறு ஆடியதில் சென்னைக்குத் தோல்வி, மும்பைக்கு வெற்றி.

 

இதனையடுத்து ஆட்டம் முடிந்த பிறகு தோனி கூறும்போது, “இத்தகைய தோல்விகள் நம்மை அடக்கமானவர்களாக்கும். வெற்றி பெற்றுக் கொண்டேயிருந்தால் எந்தத்துறையில் நாம் கடினமாக உழைக்க வேண்டுமென்பது தெரியாமல் போய்விடும்.

இது நல்ல ஆட்டம். இத்தகைய சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் போட்டி எங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. அதாவது இன்னும் 20 ரன்களை அதிகம் எடுத்திருக்க வேண்டுமா போன்றவற்றை நாங்கள் யோசிக்க வேண்டும். ஆனாலும் இந்தத் தொடரில் இன்னும் ஆரம்பக்கட்டத்தில்தான் இருக்கிறோம்.

தவறு எங்கு நடந்தது என்பதை உணர வேண்டும். எப்போதும் சில தனிவீரர்களின் தனிப்பட்ட திறன்களை நம்பியே இருக்கிறோம். நாங்கல் 10-15 ரன்கள் குறைவாக எடுத்தோம். மும்பை இந்தியன்ஸ் மிடில் ஓவர்களை சிறப்பாக வீசினர். பேக் ஆஃப் லெந்தில் வீசினர். ஆகவே பந்துகள் மட்டைக்கு வரவில்லை.

அதே போல் வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல வேகம் வீசினால் பேட்ஸ்மென்களை பின்னால் சென்று ஆட வைக்க முடியும். கிராஸ் பேட் ஷாட்கள் இந்தப் பிட்சில் எளிதல்ல. அவர்கள் ஸ்பின்னர்கள் நன்றாக வீசினர், எங்கள் பவுலர்கள் வீச முடிவு செய்த பந்துகள் இன்னும் கொஞ்சம் நல்ல பந்துகளாக அமைந்திருக்கலாம்” என்றார் தோனி.

http://tamil.thehindu.com/sports/article23716772.ece?homepage=true

Link to comment
Share on other sites

பவர் இல்லா பேட்டிங்... எனர்ஜி இல்லா பெளலிங்... மும்பைக்கு தோனியின் பரிசு! #CSKvsMI

 
 

பேட்டிங் பிட்ச்சில் பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்கத்திணறினால் என்ன ஆகும் என்பதே சென்னை வெர்ஸஸ் மும்பை மேட்சின் ஒன்லைன்! #CSkvsMI 

சென்னையைவிட அதிகப் பிரஷருடன், அதிக டென்ஷனுடன் புனேவுக்கு விளையாடவந்தது மும்பை. ஆறு போட்டிகளில் 5-ல் தோல்வி, இனியும் தோல்வியடைந்தால் முன்னாள் சாம்பியன்கள் என்கிற பெருமையோடு ஓரங்கட்டவேண்டியதுதான் என்கிற நிலையிலேயே போட்டியைத் தொடங்கியது.

#CSKvsMI

டாஸ் தந்த வெற்றி!

டல்லாக டாஸ் போட கிரவுண்டுக்குள் வந்தவருக்கு முதல் நல்ல செய்தி டாஸ் வென்றதுதான். டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா சென்னையை முதலில் பேட்டிங் விளையாட அழைத்தார். கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து கீரான் பொலார்ட் இல்லாத அணியாக மும்பை ஆடும் லெவனைத் தேர்ந்தெடுத்திருந்தது. பொலார்டுக்கு பதிலாக தென் ஆப்ரிக்க பேட்ஸ்மென் ஜேபி டிமினியையும், முதல் மேட்சில் பிராவோ அடித்து நொறுக்கிய வங்கதேச பெளலர் முஸ்டஃபைசூருக்கு பதிலாக பென் கட்டிங்கையும் அணியில் சேர்த்திருந்தது மும்பை.

சென்னை அணியில் எந்த மாற்றமும் இல்லை.பெங்களூரு அணிக்கு எதிராக ஆடிய அதே லெவன். டுப்ளெஸ்ஸி சேர்கக்ப்படவில்லை. பெங்களூரு அணிக்கு எதிராக டுப்ளெஸ்ஸி சேர்க்கப்படாததற்கு காரணம் பெங்களூருவின் பேட்டிங்கை சமாளிக்க கூடுதல் பெளலர்கள் இருந்தால்போதும் என்பதுதான். ஆனால் மும்பையை சமாளிக்க கூடுதல் பேட்ஸ்மேன்கள் வேண்டும் என்கிற நிலையிலும் தோனி எந்த மாறுதலும் இல்லாமல் களமிறங்கியது ஆச்சர்யமே.

நினைச்சா ரன் அடிப்போம்!

முதலில் பேட்  செய்யும் அணி குறைந்தபட்சம் 180 ரன்களுக்கு மேல் அடித்தால்தான் வெற்றிபெற முடியும் என்கிற இலக்கைத் தெரிந்துகொண்டே ஆட்டத்தை தொடங்கியது சென்னை. வாட்ஸன், அம்பதி ராயுடு ஓப்பனிங் இறங்க, மும்பை  மெக்லீனெகனுடன் பெளலிங்கை ஆரம்பித்தது. ஆட்டத்தின் மூன்றாவது பந்திலேயே பிட்ச்சில் இருந்து இறங்கிவந்து ஸ்ட்ரெய்ட் சிக்ஸருக்கு அடித்தார் ராயுடு. ஆனால் அடுத்தடுத்தப் பந்துகளில் மெக்லீனெகன் மீண்டு வந்தார். முதல் ஓவர் முடிவில்  8 ரன்கள் அடித்தது சென்னை. 

இரண்டாவது ஓவரை ஜஸ்பிரித் பும்ரா வீசினார். முதல் ஓவரில் அட்டகாச சிக்ஸர் அடித்த ராயுடு பும்ராவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார். முதல் நான்கு பந்துகளுமே டாட் பால். இந்த ஓவரில் சென்னையால் 2 சிங்கிள் மட்டுமே எடுக்க முடிந்தது. மீண்டும் மெக்லீனெகன். 1 பவுண்டரி அடிக்க முடிந்ததே தவிர பவர்பிளேவின் மூன்றாவது ஓவரிலும் சென்னையின் பவர் எடுபடவில்லை. 8 ரன்கள் மட்டுமே எடுத்தது. இரண்டாவது ஓவரை சூப்பராக  வீசிய பும்ராவுக்கு ஓவர் கொடுக்காமல் ஹர்திக் பாண்டியா கையில் பந்தைக் கொடுத்தார் ரோஹித் ஷர்மா. இந்த ஓவரில் கல்லி திசையில் ஒரு பவுண்டரி ராயுடு அடித்தார் அவ்வளவுதான். 6 ரன்கள் மட்டுமே பாண்டியாவின் ஓவரில்.  

#CSKvsMI

அடுத்த ஓவர் பாண்டியாவின் சகோதரர் க்ருணால் பாண்டியா கையில். இரண்டாவது பாலிலேயே விக்கெட் எடுத்து சென்னையின் தடுமாற்றத்தை ஆரம்பித்துவைத்தார் க்ருணால்.

ரெய்னா  உள்ளே வந்த உற்சாகத்தில், விக்கெட் விழுந்ததற்கு அடுத்தப் பந்தையே சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ராயுடு. இந்த ஓவரின் கடைசிப் பந்து ரெய்னாவுக்கு அல்வாவாக மாட்டியது. கேஷுவலாகத் தட்டியதுபோல்தான் இருந்தது ஆனால் பந்து டீப்மிட் விக்கெட்  ஏரியாவில் போய் விழுந்தது. பவர் ப்ளேவின் ஐந்தாவது ஓவரில் 1 விக்கெட் விழுந்திருந்தாலும் சென்னை 15 ரன்கள் அடித்ததால் ரன் ரேட் கொஞ்சம் உயர்ந்தது.

பவர் ப்ளேவின் கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். முதல் நான்கு பந்துகளுமே செம டைட்டாகப் போட்டார் பாண்டியா. அடித்து ஆட வேண்டும் என்று நினைத்த ராயுடு, ரெய்னா இருவராலுமே பந்தை சரியாக கனெக்ட் செய்யமுடியவில்லை. ஆனால், கடைசி ரெண்டு பந்துகளை ஹர்திக் கொஞ்சம் லூஸ் பாலாகப் போட ராயுடு அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடிக்க, பவர்ப்ளேவின் முடிவில் 51 ரன்கள் எடுத்தது சென்னை.

ரெய்னா ஃபார்முக்கு வந்தார்... ஆனால் ரன்?

எட்டாவது ஓவரை மார்க்கண்டே வீச ராயுடு, ரெய்னா இருவருமே ஜூனியர் பேட்ஸ்மேன்கள் போல சரியான ஷாட்களை அடிக்கமுடியாமல் திணறினர். இந்த ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை. முஸ்டஃபைசருக்கு பதிலாக வந்த பென் கட்டிங் பந்துவீசினார். கடைசி 12 பந்துகளாக வெறும் சிங்கிள் மட்டுமே எடுத்துகொண்டிருந்த சென்னை கட்டிங்கின் இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு வெளுத்தது. இந்த சிக்ஸரை ராயுடு அடிக்க, இரண்டு பந்துகள் கழித்து பவுண்டரி அடித்தார் ரெய்னா. 10வது ஓவர் மார்க்கண்டே கையில். முதல் ஓவரில் வெறும் 3 ரன்களே  எடுக்க முடிந்ததால் மார்க்கண்டேவின் இந்த ஓவரில் அடி  வெளுக்க வேண்டும் என ரெய்னா முடிவெடுத்திருந்தது அவரது பேட்டிங் ஸ்டைலில் தெரிந்தது. அடுத்தடுத்து 1 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்தார் ரெய்னா.

#CSKvsMI

10 ஓவர்களின் முடிவில் சென்னை 91 ரன்கள் அடித்து 1 விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. எப்படியும் 200 ரன்கள் அடித்துவிடலாம் என்கிற நம்பிக்கை சென்னையின் பேட்டிங்கில் தெரிந்தது. ஆனால் ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது என்கிற கதைதான்.  முதல் 10 ஓவர்களில் 91 ரன்கள் அடிக்கமுடிந்த சென்னையால், விக்கெட்டுகள் இருந்தும், பவர் ஹிட்டர்கள் இருந்தும், ரெய்னா கடைசி ஓவர் வரை இருந்தும் 60 பந்துகளில் 72 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த 10 ஓவர்கள்தான் சென்னையின் தோல்விக்கும், மும்பையின் வெற்றிக்கும் காரணம்.

பும்ரா வீசிய 13வது ஓவரில் அநியாயத்துக்கு கட்டைபோட்டார் தோனி. இந்த ஓவரின் கடைசி 4 பந்துகளையுமே டாட் பாலாக்கினார். பும்ராவின் இந்த ஓவரில் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்தது சென்னை. அடுத்த ஓவர் க்ருணால் பாண்டியா. தோனியும், ரெய்னாவும் ரசித்து ரசித்து சிங்கிள்ஸ் ஆடிக்கொண்டிருந்தனர். இந்த ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை.

ஹர்திக் பாண்டியா வீசிய பதினைந்தாவது ஓவரில்தான் கொஞ்சம் ஃபார்முக்கு வந்தார் தோனி. அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடிக்க 15 ஓவர்களின் முடிவில் சென்னை 117 ரன்கள் எடுத்திருந்தது. கையில் 8 விக்கெட்டுகள், தோனி-ரெய்னா என பவர்ஃபுல் பார்ட்னர்ஷிப்போடு மிரட்டலாகவே இருந்தது சென்னை. மார்க்கண்டேவின் 16வது ஓவரில் மீண்டும் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்தார் தோனி. 

தோனி பேக் டு பெவிலியன்!

'தோனி இஸ் பேக்' என ரசிகர்கள் எல்லோரும் விசில் போட, பும்ராவின் அடுத்த ஓவரில் ரெய்னா இரண்டு பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை கொஞ்சம் உயர்த்தினார். கடைசி 3 ஓவர்கள்தான் இருக்கின்றன. ஸ்கோர் 143. 18 பந்துகளில் குறைந்தபட்சம் இன்னும் 40 ரன்களாவது அடித்தால் தப்பிக்க முடியும் என்கிற நிலையில் கடைசி மூன்று ஓவர்களில் செம சொதப்பு சொதப்பியது சென்னை.

 மெக்லீனெகனின் முதல் பந்திலேயே தோனி அவுட். ஃபுல் டாஸை சரியான பவரில் அடிக்காததால் கேட்ச் ஆனது. இந்த ஓவரில் பிராவோ சந்தித்த முதல் பந்திலேயே அவுட். பாயின்ட்டில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் பிராவோ. 19வது ஓவர் மீண்டும் பும்ரா கையில். ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே ரெய்னாவால் அடிக்க முடிந்தது. ஹர்திக் பாண்டியாவின் கடைசி ஓவரில் பில்லிங்ஸ் அவுட் ஆக, ஆட்டத்தின் கடைசிப் பந்தை சிக்ஸருக்கு அடித்து தனது ஸ்கோரை 75 ரன்களுக்கு உயர்த்தினார் ரெய்னா. ஆனால் அணியின் ஸ்கோர் வெறும் 169 ரன்கள்தான். பவர்ஹிட்டரான ரெய்னா 75 ரன்கள் அடிக்க 47 பந்துகளை எடுத்துக்கொண்டார். கடைசி 3 ஓவர்களில் வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை.

மும்பையின் பொறுத்திரு பேட்டிங்!

120 பந்துகளில் 170 ரன்கள் என ஈஸி டார்கெட். அதுவும் பேட்டிங் பிட்ச்சில். நிதானமான ஆட்டத்துடன் கணக்கைத் தொடங்கியது மும்பை.  ரோஹித் ஓப்பனிங் வருவார் என எதிர்பார்க்கப்பட, அவருக்கு பதில் சூர்யகுமார் வந்தார். லூயிஸ்- சூர்யகுமார் பார்ட்னர்ஷிப் அவசரப்படாமல் ஆடியது. பெளலிங் அட்டாக்கை சாஹர், தாக்கூர், வாட்ஸன் என வேகப்பந்து வீச்சாளர்களுடனேயே ஆரம்பித்தார் தோனி. முதல் நான்கு ஓவர்களில் விக்கெட் இழக்காமல் 34 ரன்கள் எடுத்தது மும்பை. 

#CSKvsmi

ஐந்தாவது ஓவர் மீண்டும் சாஹர் கையில் வந்தது. ஆனால் முதல் பந்து வீசிய கையோடு, காயம் ஏற்பட்டதால் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார் சாஹர். வேகப்பந்து வீச்சாளரிடம் இருந்து ஸ்பின்னுக்கு மாற்றினார் தோனி. ஹர்பஜன் சிங் ஐந்தாவது ஓவரின் இரண்டாவது பந்தில் இருந்து தனது பெளலிங்கை தொடங்கினார். இந்த ஓவரில் மும்பையால்  7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது என்றாலும் விக்கெட் விழவில்லை.பவர்ப்ளேவின் முடிவில் விக்கெட் இழக்காமல் 50 ரன்கள் எடுத்தது மும்பை. அவசரப்பட்டு அடித்து அவுட் ஆகும் லூயிஸ் சென்னைக்கு எதிராக மிக மிக நிதானமான ஆட்டத்தை ஆடினார்.

ஹர்பஜனின் மூன்றாவது ஓவரில் முதல் விக்கெட் விழுந்தது. ரவீந்திர ஜடேஜாவால் நிகழ்ந்த ஒரே நன்மை. டீப் மிட்வெக்கெட்டில் அற்புதமாக கேட்ச் பிடித்து சூர்யகுமார் யாதவை அவுட் ஆக்கினார் ஜடேஜா. சூர்யகுமார் 44 ரன்கள் அடித்தார். 10 ஓவர்களின் முடிவில் சென்னையைவிட 20 ரன்கள் குறைவாக அதாவது 71 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது மும்பை. ஆனால், சென்னையின் பெளலர்களிடம் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கை இல்லை.

பலன் அளிக்காத தோனியின் பெளலிங் மாற்றம்!

ரோஹித் ஷர்மா, இம்ரான் தாஹிரின் ஸ்பின்னில் திணறுவார் என்பதால் 11வது ஓவரை தாஹிரிடம் கொடுத்தார் தோனி. ஆனால், தோனி எதிர்பாராத ட்விஸ்ட். முதல் பந்தில் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை லூயிஸிடம் கொடுத்துவிட்டார் ரோஹித். 2 சிக்ஸர்கள் அடித்து தாஹிரை விரட்டினார் லூயிஸ்.ஹர்பஜன் சிங்கை 12வது ஓவரோடு முடித்தார் தோனி. இந்த ஓவரின் 6 பந்துகளிலுமே ரோஹித், லூயிஸ் இருவரும் மாறி மாறி 6 சிங்கிள் எடுத்தனர்.

டெத் ஓவர்களின் ஸ்பெஷலிஸ்ட் பிராவோ வந்தார். முதல் 5 பந்துகளை சிறப்பாக வீசிய பிராவோவின் 6வது பந்தை  பவுண்டரியாக்கினார் லூயிஸ். வாட்ஸனின் 14வது ஓவரில் ரோஹித் ஷர்மா நீண்ட நாள்கள் கழித்து மீண்டும் ரோ'ஹிட்'மேன் ஆனார். முதல் பந்தில் ஒற்றைக்கையால் அடித்த சிக்ஸர் லாங் ஆஃபில் போய் விழுந்தது. இந்த ஓவரின் நான்காவது பந்திலும் பெரிய எஃபர்ட் எதுவுமே இல்லாமல் சிக்ஸர் அடித்தார் ரோஹித். ஆனால், அடுத்த 2 ஓவர்களையும் பிராவோ, தாக்கூர் இருவரும் அற்புதமாக வீசினார்கள். இந்த இரண்டு ஓவர்களிலும் மும்பை 14 ரன்கள் மட்டுமே எடுத்தது.

#CSKvsmi

கடைசி 24 பந்துகளில் 42 ரன்கள் தேவை என்கிற நிலையில் பிராவோவின் முதல் பந்தில் விக்கெட் விழுந்தது. லூயிஸ் அவுட் ஆக, இந்த ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார் பிராவோ. ஆனால் வாட்ஸனின்  18வது ஓவர் மும்பை பக்கம் ஆட்டத்தை மாற்றியது. ரோஹித் 1 பவுண்டரி அடிக்க, பாண்டியா 1 சிக்ஸர் அடித்தார். கடைசி ஓவர் வீசுவதற்காக 19வது ஒவரை பிராவோவிடம் கொடுக்காமல் தாக்கூரிடம் கொடுத்தார் தோனி.

தாக்கூரின் இந்த ஓவரில் சென்னையின் கதையை முடித்தார் ரோஹித் ஷர்மா. தொடர்ந்து ஹாட்ரிக் பவுண்டரி அடித்தவர் இந்த ஓவரில் மொத்தம் 4 பவுண்டரிகள் அடித்தார். ஆட்டம் கடைசி ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டும் போதும் என்கிற நிலைக்கு வந்தது.

மும்பையின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் பிராவோவிடம் பந்தை கொடுக்காமல் மீண்டும் இம்ரான் தாஹிரிடம் கொடுத்தார் தோனி. நான்காவது பந்தில் பவுண்டரியோடு ஆட்டத்தை முடித்தார் பாண்டியா.

7 போட்டிகளில் சென்னை சந்தித்த இரண்டாவது தோல்வி இது. ''இந்தத்தோல்வி எங்களை அடக்கமானவர்களாக இருக்க உதவுகிறது. தொடர்ந்து வெற்றிபெற்றுக்கொண்டேயிருந்தால் நீங்கள் எங்கே தவறு செய்கிறீர்கள் என்பது தெரியமாலேயே போய்விடும். இதுவரை தனிப்பட்ட வீரர்களின் அபாரமான ஆட்டத்தால் வெற்றிபெற்றோம். இன்றைய போட்டியில் 20 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம்'' என்றார் தோல்விக்குப் பின் தோனி! #CSKvsMi

7 போட்டிகள் முடிந்தபின்னும் சென்னை அணியில் இன்னும் புரியாத புதிராக இருப்பது ரவீந்திர ஜடேஜாவின் இடம்தான். இன்றைய போட்டியிலும் அவர் பந்துவீசவில்லை. இதுவரை ஆடிய 6 போட்டிகளிலுமே விளையாடி 47 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார் ஜடேஜா.பெளலிங்கில் இதுவரை 1 விக்கெட் மட்டுமே எடுத்திருக்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து சென்னை அணியில் இடம்பெற்றுவருகிறார் என்பதுதான் ஆச்சர்யம். 

 

ஜடேஜாவின் இடத்துக்கு டெல்லி பேட்ஸ்மென் துருவ் ஷோரி அல்லது ஆல்ரவுண்டர் டேவிட் வில்லியை தோனி பயன்படுத்தலாம். பெளலிங், பேட்டிங் என இரண்டையுமே இன்னும் வலுவாக்கினால்தான் ப்ளே ஆஃப்களில் சென்னை வெற்றிபெறும்!

https://www.vikatan.com/news/sports/123622-chennai-gifts-an-easy-win-to-mumbai.html

Link to comment
Share on other sites

சிஎஸ்கேவுக்கு அடுத்த சிக்கல்: 2 வாரத்துக்கு ‘சாஹர் அவுட்’

 

 
-deepak-chahar

சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர்   -  படம் உதவி: ஐபிஎல் ட்விட்டர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் தசைப்பிடிப்பு காரணமாக அடுத்த 2 வாரங்களுக்கு விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11-வது ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்து 8 அணிகளிலும்வீரர்களுக்கு காயம் ஏற்படுவதும், விலகுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா, டூப்ளசிஸ், கேதார் ஜாதவ் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு தற்போதுதான் மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் ஒரு வீரர் காயத்தால் விழுந்துள்ளார்.

இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாச்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. இந்தப் போட்டியில் விளையாடும் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் 3-வது ஓவரின் முதல்பந்தை வீசும்போது, காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து களத்தில் விளையாட முடியவில்லை, அவருக்கு பதிலாக மாற்றுவீரர் பீல்டிங் செய்தார்.

இது குறித்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், ’’வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு காலில் தசைபிடிப்பு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் குணமடைய ஏறக்குறைய 2 வாரங்கள் ஆகும். அதுவரை அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என அணியின் மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார். இது அணிக்கு சற்று பின்னடைவான விஷயம்தான். இருந்தபோதிலும் இதிலும் ஒரு ஆறுதலான தகவல் என்னவென்றால், தனது தந்தையின் மறைவுக்கு தென் ஆப்பிரிக்கா சென்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். விரைவில் அணியில் வந்து இணைந்துகொள்வார். அவரின் வருகை சாஹரின் இடத்தை நிரப்பும் என நம்புகிறேன். மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர் நிகிடி, அதிகமான வேகத்திலும், துல்லியமாகவும் பந்துவீசக்கூடியவர்’’ எனத் தெரிவித்தார்.

சாஹர் இதுவரை அனைத்துப் போட்டிகளிலும் தொடக்க ஓவர்களை சிறப்பாக வீசியுள்ளார். இதுவரை 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article23717522.ece?homepage=true

Link to comment
Share on other sites

'ஃபீல்டிங் சென்டிமென்டுக்கு குட்பை’ - முதன்முறையாக பேட்டிங் தேர்வு செய்த ஹைதராபாத்! #RRvsSRH

 
 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். 

ஹைதரபாத் கேப்டன் கேன் வில்லியம்சன்

ஜெய்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இந்தபோட்டி நடைபெறுகிறது. கடந்த இரண்டு போட்டிகளிலும் குறைவான ஸ்கோர் அடித்தும், சிறப்பான பந்துவீச்சால் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றிருந்தது. அந்த நம்பிக்கையில் உற்சாகமாக அந்த அணி களம் காண்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஆஃப்கானிஸ்தான் வீரர் முகமது நபிக்குப் பதிலாக இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் இது அவருக்கு முதல் போட்டி ஆகும். அதேபோல், ராஜஸ்தான் அணி சார்பாக நியூஸிலாந்து சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி மற்றும் ராஜஸ்தான் அணிக்காக உள்ளூர் தொடர்களில் விளையாடிய மஹிபால் லோமர் ஆகிய இருவரும் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் களம்காண்கின்றனர். 

நடப்பு ஐபிஎல் தொடரின் பெரும்பாலான போட்டிகளில் டாஸ்வென்ற அணி, ஃபீல்டிங்கே தேர்வு செய்து வந்தது. அந்த நடைமுறை மிகச்சில போட்டிகளிலேயே மாறியிருந்தது. அந்த வகையில் ஐபிஎல் தொடரின் ஃபீல்டிங் சென்டிமென்டிலிருந்து வெளியேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் டாஸ் வென்று ஹைதராபாத் அணி முதன்முறையாக பேட்டிங் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

https://www.vikatan.com/news/sports/123636-ipl-2018-srh-have-won-the-toss-and-have-opted-to-bat-first-against-rr.html

Link to comment
Share on other sites

ஐபிஎல் போட்டி: ‘சென்ட் ஆப்’ செய்த ஷிவம் மவி, ஆவேஷ் கானுக்கு எச்சரிக்கை

 

 
ipl

டெல்லி அணி வீரர் ஆவேஷ் கான், கொல்கத்தா வீரர் ஷிவம் மவி   -  படம் உதவி: ஐபிஎல் ட்விட்டர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஷிவம் மவி, டெல்லி டேர்டெவில்ஸ் வீரர் ஆவேஷ் கான் ஆகியோர் எதிரணி வீரர்களை சென்ட் ஆஃப் செய்து, களத்தில் தவறான நடத்தையை வெளிப்படுத்தியதால், அவர்களுக்கு ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் நடந்தது. இதில் கொல்கத்தா அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் வெற்றி பெற்றது.

இதில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஷிவம் 4 ஓவர்கள் வீசி 58 ரன்கள் வாரி வழங்கினார். இவர் டெல்லி வீரர் காலின்முன்ரோவை ஆட்டமிழக்கச் செய்து அவரைத் பார்த்து வெளியே போ என்று சைகையில் ‘சென்ட் ஆப்’செய்தார். இது கேமிராவில் பதிவானது.

அதேபோல, கொல்கத்தா அணி வீரர் ஆன்ட்ரூ ரஸல் ஆட்டமிழந்தவுடன் டெல்லி அணியின் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான், சைகையால் வெளியே போ என்று ‘சென்ட் ஆப்’ செய்தார். இதைப் பார்த்த ரஸல் ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டுவிட்டார் அதன்பின், அவரிடம் ஓடிச் சென்ற ஆவேஷ் கான் மன்னிப்பும் கேட்டார். இந்த காட்சிகளும் கேமிராவில் பதிவானது.

இதையடுத்து, இரு வீரரும் ஐசிசி வீரர்கள் ஒழுங்கு நடத்தை விதிமுறைகளில் லெவன்-1 தவறைச் செய்தது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் இருவரும் முதல்முறையாக இதுபோன்ற தவறை செய்ததால், அவர்களுக்கு கடும் எச்சரிக்கை மட்டும் செய்து அனுப்புவது என ஐசிசி போட்டி நடுவர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஷிவம் மவி, ஆவேஷ் கான் ஆகியோருக்கு அபராதமும் விதிக்கப்படவில்லை.

http://tamil.thehindu.com/sports/article23712033.ece

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018- பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தானை 11 ரன்னில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

 

அபாரமான பந்து வீச்சால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 11 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத். #IPL2018 #RRvSRH

 
ஐபிஎல் 2018- பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தானை 11 ரன்னில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
 
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 28-வது லீக்கான முதல் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சொந்தமான ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது. கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 63 ரன்கள் சேர்த்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஜாஃப்ரா ஆர்சர் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. ரகானே, ராகுல் திரிபாதி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராகுல் திரிபாதி 4 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் ஷர்மா பந்தில் க்ளீன் போல்டானார்.

அடுத்து ரகானே உடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் 9.4 ஓவரில் 72 ரன்னாக இருக்கும்போது சஞ்ச சாம்சன் 30 பந்தில் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் யூசுப் பதான் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் வேகத்தில் மந்தநிலை ஏற்பட்டது. அடுத்து வந்த பட்லர் 10 ரன்னில் வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் வீழந்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியதால் அதிரடியாக விளையாட முடியவில்லை. அந்த அணிக்கு கடைசி 5 ஓவரில் 50 ரன்கள் தேவைப்பட்டது.

201804291933258773_1_rashidkhan-s._L_styvpf.jpg

16-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் 7 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி 4 ஓவரில் 43 ரன்கள் தேவைப்பட்டது. 17-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதற்கிடையே ரகானே 17-வது ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார்.

கடைசி 3 ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை ரகானே சிக்சருக்கு தூக்கினார். ஆனால் அடுத்த ஐந்து பந்துகளையும் பிரமாண்டமாக வீசினார். இந்த ஓவரில் சிக்ஸ் சென்றாலும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடைசி இரண்டு ஓவரில் 27 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரில் லாம்ரோம் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி கூட விட்டுக்கொடுக்காமல் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் கவுல். இதனால் கடைசி ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது.

201804291933258773_2_rahane-s._L_styvpf.jpg

கடைசி ஓவரை பாசில் தம்பி வீசினார். முதல் பந்தில் கிருஷ்ணப்பா கவுதம் பவுண்டரி அடித்தார். அடுத்த இரண்டு பந்துகளில் தலா ஒரு ரன்கள் அடித்தது ராஜஸ்தான். கடைசி 3 பந்தில் 15 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 3 ரன்கள் மட்டுமே எடுத்ததால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 11 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ரகானே 65 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/29193326/1159775/IPL-2018-RRvSRH-sunrisers-Hyderabad-beats-rajasthan.vpf

Link to comment
Share on other sites

சன் ரைசர்ஸ் மீண்டும் முதலிடம்; பந்துவீச்சு பிரமாதம்: முதுகெலும்பில்லாத ராஜஸ்தான் பேட்டிங்

 

 
cane

பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்ஸன்   -  படம்உதவி: ஐபிஎல் ட்விட்டர்

கட்டுக்கோப்பான பந்துவீச்சு, வலுவான பீல்டிங் மூலம், ஜெய்ப்பூரில் இன்று நடந்த ஐபிஎல் போட்டியின் 28-வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

ஐபிஎல் அணிகளிலேயே பந்துவீச்சில் மிகுந்த வலு உள்ளதாக இருக்கும் அணி என்பதை சன் ரைசர்ஸ் மீண்டும் நிரூபித்துள்ளது. குறிப்பாக அந்த அணியின் சந்தீப் சர்மா, பாசில் தம்பி, ராஷித் கான்,சாஹிப் அல்ஹசன் ஆகியோரின் பந்துவீச்சு இன்று துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் இருந்தது.

தொடக்கத்திலேயே சன் ரைசர்ஸ் அணி விக்கெட்டை இழந்தாலும் கேப்டன் வில்லியம்சன் நிதானமான அரைசதம் அடித்து கவுரமாக ஸ்கோர் குவிக்க உதவியது. வில்லியம்சனுக்கு பின்னால் களமிறங்கிய வீரர்கள் பேட் செய்த விதமும் வேடிக்கையாக இருந்தது. கடைசி 35 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்ததை என்ன சொல்ல முடியும். வில்லியம்சனும் விரைவாக ஆட்டமிழந்திருந்தால், சன் ரைசர்ஸ் நிலைமை கவலைக்கிடமாகி இருக்கும். ஆட்டநாயகன் விருதை கேன் வில்லியம்சன் பெற்றார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் ரஹானேவுக்கு ஒத்துழைப்பு அளித்து விளையாட அந்த அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட இல்லாதது தோல்விக்கு முக்கியக் காரணமாகும். கடந்த 6 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நடுவரிசை வீரர்கள் மிக மோசமாக பேட்டிங் செய்து வருவது இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது. தோற்றுப்போவோம் என்ற நினைப்போடு விளையாடுபவர்களை என்ன செய்ய முடியும்?

எட்டிக்கூடிய இலக்கு என்கிற போதிலும், முதுகெலும்பில்லாத பேட்டிங், களத்தில் வெற்றிக்காக போராடக்கூடிய குணம் இல்லாத வீரர்கள் இன்மையே ராஜஸ்தானின் தொடர் தோல்விக்கு காரணமாக அமைக்கின்றன. ரஹானேவுக்கு துணையாக சாம்ஸனுக்கு அடுத்ததாக ஸ்டோக்ஸ், பட்லர், ஆர்மர் ஆகியோரில் ஒருவர் நிலைத்து ஆடி இருந்தாலே வெற்றி கிடைத்திருக்கும்.

கடந்த 7 போட்டிகளில் இதுவரை ஆல்ரவுண்டர் எனச் சொல்லிக்கொள்ளும் பென் ஸ்டோக்ஸ் ஒருபோட்டியில் கூட உருப்படியாக விளையாடவில்லை, சிறந்த பேட்ஸ்மனான பட்லரும் குறிப்பிடும்படியாக ரன்கள் குவிக்கவில்லை.

மீண்டும் முதலிடம்

இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சன் ரைசர்ஸ் அணி 2 தோல்வியும், 6 வெற்றிகளையும் பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 5-ம் இடத்தில் உள்ளது.

பந்துவீச்சு ஆடுகளம்

ஜெய்பூர் ஆடுகளம் பந்துவீச்சு சாதகமாக குறிப்பாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால், டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. சன் ரைசர்ஸ் அணியில் முகமது நபிக்கு பதிலாக அலெக்ஸ் ஹேல்ஸ் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இஷ் சோதி அழைக்கப்பட்டு இருந்தார்.

முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் சேர்த்தது. 152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்இழப்புக்கு 140 ரன்கள் சேர்த்து 11 ரன்களில் தோல்வி அடைந்தது.

ஏமாற்றம்

ஷிகர் தவாண், ஹேல்ஸ் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். சுழற்பந்துவீச்சாளர் கவுதம் வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டும் சேர்த்தனர். குல்கர்னி வீசிய 2-வது ஓவரில் ஹேல்ஸ் 3 பவுண்டரிகள் அடித்து ரன் ரேட்டை உயர்த்தினார்.

கடந்த 2 போட்டிகளாக ஏமாற்றிவந்த ஷிகார் தவாண் இந்த போட்டியிலும் விரைவாக ஆட்டமிழந்தார். 6 ரன்கள் சேர்த்த நிலையில், கவுதம் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.

2-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன், ஹேல்ஸுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்து விக்கெட் சரிவைத் தடுத்ததால் ரன் வேகமும் குறைந்தது. இதனால் பவர்ப்ளே ஓவரில் 39 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

கவுதமின் சுழற்பந்துவீச்சுக்கு இருவரும் பயந்தனர். இதனால், இவரின் ஓவரில் 3 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், பென் ஸ்டோக்ஸ், சோதி, உனத்கத் ஆகியோரின் பந்துவீச்சிலும் இருவரும் அதிகமான ரன் சேர்க்க முடியாமல் திணறினர். இதனால் 10 ஓவர்களில் 70 ரன்களையே எட்டியது சன் ரைசர்ஸ் அணி.

பொறுப்பான பேட்டிங்

உனத்கட் வீசிய 12 ஓவரை வில்லியம்சன் சந்தித்தார். கடந்த 10 ஓவர்கள் பொறுமை காட்டியதே இந்த ஓவரில் உடைத்து விட்டார். 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து உனத்கட் பந்துவீச்சை விளாசிவிட்டார் வில்லியம்சன். அதுமட்டுமல்லாமல், 32 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.

ஆர்ச்சர் வீசிய 13-வது ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் வில்லியம்சன். கவுதம் வீசிய 14-வது ஓவரில் ஹேல்ஸ் 45 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 93 ரன்கள் சேர்த்தனர்.

ஆனால், அடுத்த ஓவரிலேயே வில்லியம்சனும் விக்கெட்டை பறிகொடுத்தார். சோதி வீசிய 15-வது ஓவரில் வில்லியம்சன் 63 ரன்களில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பேட்டிங் சொதப்பல்

அதன்பின் வந்த கடைசி வரிசையில் களமிறங்கிய வீரர்கள் மிகுந்த பொறுப்பற்ற நிலையில் வருவதும், போவதுமாக இருந்தனர். ஆர்ச்சர் வீசிய 18-வது ஓவரில் சஹிப்அல் ஹசன் 6 ரன்னிலும், யூசுப் பதான் 2 ரன்னிலும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். உனத்கட் வீசிய 19 ஓவரில் 16 ரன்கள் சேர்த்த நிலையில், மணீஷ் பாண்டே ஆட்டமிழந்தார். ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரில் ராஷித்கான் 2 ரன்னில் வெளியேறினார்.

20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. விர்திமான் சாஹா 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு கட்டத்தில் 109 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஹைதராபாத் அணி அடுத்த 42 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பொறுப்பற்றதனமாக இழந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணித்தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், கவுதம் 2 விக்கெட்டுகளையும், உனத்கட், சோதி தலா ஒருவிக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

சோர்வடைந்த பேட்டிங்

152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. ரஹானே, திரிபாதி ஆட்டத்தைத் தொடங்கினார்கள்.

சந்தீப் சர்மா, சகிப் அல் ஹசன் ஆகியோரின் தொடக்க ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தார் ரஹானே.தொடக்கத்தில் இருந்தே வேகப்பந்துவீச்சுக்கு திணறிவந்த திரிபாதி 4 ரன்கள் சேர்த்த நிலையில், சந்தீப் சர்மா வீசிய 3-வது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து அதிரடி வீரர் சஞ்சு சாம்ஸன் களமிறங்கினார்.

தான் சந்தித்த முதல் ஓவரிலேயே விளாசலில் ஈடுபட்டார் சாம்ஸன். பாசில் தம்பி வீசிய 4-வது ஓவரில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்து ரன் வேகத்தை அதிகப்படுத்தினார் சாம்ஸன். பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி 43 ரன்கள் சேர்த்தது.

திருப்புமுனை விக்கெட்

 

sunrisersjpg

மகிழ்ச்சியில் சன் ரைசர்ஸ் அணி வீரர்கள்

 

நிதானமாக பேட் செய்து வந்த சாம்ஸன் 40 ரன்கள் சேர்த்த நிலையில், கவுல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் சன் ரைசர்ஸ் அணிக்கு திருப்பு முனையாக அமைந்தது. அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரஹானேவை தவிக்கவிட்டனர்.

அடுத்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதும் சேர்க்காமல், பதான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோஸ்பட்லர் 10 ரன்களில் ராஷித் கானிடம் விக்கெட்டை இழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகளை இழந்தாலும் ரஹனே மனம் தளறாமல் பேட் செய்து 42 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

கடைசி 2 ஓவர்களுக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. வெற்றி பெறக்கூடிய இலக்குதான் என்கிற போதிலும், அதை எதிர்கொண்டு விளையாடுவதற்கு வீரர்கள் இல்லை, ரஹானேவுக்கு துணையாகவும் இல்லை.

கவுல் வீசிய 19-வது ஓவரில் லாம்ரோர் 11 ரன்கள் சேர்த்த நிலையில், விக்கெட்டை சாஹாவிடம் பறிகொடுத்தார். இந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. பாசில் தம்பி பந்துவீச, கவுதம், ரஹானே இருவரும் களத்தில் இருந்தனர்.

ஒரு திறமையான கேப்டனாக ரஹானே இருந்திருந்தால், ரஹானேவே அனைத்து பந்துகளையும், எதிர்கொண்டு வெற்றிக்கு முயன்றிருக்கலாம். ஆனால், கவுதம் எதிர்கொண்டார். முதல் பந்தில் பவுண்டரியும், 2-வது பந்தில் ஒரு ரன்னும் எடுத்து ரஹானேவிடம் கொடுத்தார். அதை ரஹானை விளாசி இருந்தால், ஆட்டம் பரபரப்பாக அமைந்திருக்கும். ஆனால், ஒரு ரன் எடுத்து மீண்டும கவுதமிடம் கொடுக்க, அடுத்த பந்தில் அவர் விக்கெட்டை இழந்தார். கடைசி ஓவரில் 9 ரன்கள் சேர்த்த நிலையில் ராஜஸ்தான் அணி 11 ரன்களில் தோல்வி அடைந்தது.

ரஹானே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 65 ரன்களும், ஆர்ச்சர் ஒரு ரன்னும் சேர்த்து களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் சேர்த்து 11 ரன்களில் தோல்வி அடைந்தது.

சன் ரைசர்ஸ் தரப்பில் கவுல் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

http://tamil.thehindu.com/sports/article23720732.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018 - கிறிஸ் லின்னின் பொறுப்பான ஆட்டத்தால் கொல்கத்தா 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது

கிறிஸ் லின்னின் பொறுப்பான ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. #IPL2018 #RCBvKKR

 
ஐபிஎல் 2018 - கிறிஸ் லின்னின் பொறுப்பான ஆட்டத்தால் கொல்கத்தா 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது
 
பெங்களூர்:
 
ஐபிஎல் தொடரின் 29-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூர் அணியின் குயின்டான் டி காக், பிராண்டன் மெக்கல்லம் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தது.
 
டி காக் 29 ரன்னிலும், மெக்கல்லம் 38 ரன்னிலும், மனன் வோரா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அடுத்து ஆடிய விராட் கோலி நிதானமாக ஆடினார். அவருக்கு மந்தீப் சிங் ஒத்துழைப்பு அளித்தார். இந்த ஜோடி 65 ரன்கள் எடுத்தது. மந்தீப் சிங் 19 ரன்னில் அவுட்டானார்.
 
இறுதியில், பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 68 ரன்னுடனும், கிராண்ட்ஹோம் 11 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 
கொல்கத்தா அணி சார்பில் ஆண்ட்ரூ ரஸ்ஸெல் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
201804300013591896_1_kohli-2._L_styvpf.jpg
 
இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் ஆகியோர் இறங்கினர்.
 
கொல்கத்தா அணி 6.3 ஓவரில் 55 ரன்கள் எடுத்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. 
 
அணியின் எண்ணிக்கை 59 ஆக இருக்கும்போது சுனில் நரேன் 27 ரன்களில் அவுட்டானார். அடுத்து ஆடிய உத்தப்பா 21 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 108 ஆக இருந்தது.
 
நிதிஷ் ரானா 15 ரன் எடுத்தபோது காயத்தால் பெவிலியன் திரும்பினார். அடுத்து ஆடிய ஆண்ட்ரூ ரஸ்ஸெல் டக் அவுட்டானார். தினேஷ் கார்த்திக் 23 ரன்னில் அவுட்டானார்.
 
இறுதியில், கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. கிறிஸ் லின் 62 ரன்னுடனும், ஷுப்மன் கில் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
 
பெங்களூரு அணி சார்பில் முருகன் அஷ்வின், மொகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். #IPL2018 #RCBvKKR 
 

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/30001359/1159799/kolkatta-knight-riders-beat-royal-challangers-banglore.vpf

Link to comment
Share on other sites

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்

 
அ-அ+

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.#IPL2018 #CSK #DD

 
 
ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்
 
புனே:

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

முன்னாள் சாம்பியனான சென்னை அணி 7 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வி (பஞ்சாப், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில்) கண்டுள்ளது. முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் வீழ்ந்தது. அந்த மோசமான தோல்வியில் இருந்து மீண்டுவர வேண்டிய நெருக்கடி சென்னை அணிக்கு உள்ளது. அந்த ஆட்டத்தில் சென்னை அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு எதிர்பார்த்தபடி அமையவில்லை.

சென்னை அணியின் பேட்டிங்கில் ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ்ரெய்னா, டோனி ஆகியோர் வலுவான நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஹர்பஜன்சிங், வெய்ன் பிராவோ கச்சிதமாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆட்டத்தில் ஷர்துல் தாகூர் பந்து வீச்சு எடுபடவில்லை. தீபக் சாஹர் காயம் காரணமாக அடுத்த 2 வாரம் விளையாட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை அணியில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கரண்ஷர்மா களம் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அணி 7 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி (மும்பை, கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில்), 5 தோல்வியுடன் பின்தங்கி இருக்கிறது. புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பேற்ற முதல் ஆட்டத்திலேயே டெல்லி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. அந்த நம்பிக்கையுடன் டெல்லி அணி இந்த ஆட்டத்தில் களம் காணும்.

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் அடுத்தடுத்து அரை சதம் அடித்து நல்ல பார்மில் இருக்கிறார். பிரித்வி ஷா, ரிஷாப் பான்ட், மேக்ஸ்வெல், காலின் முன்ரோ ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் பதவியில் இருந்து விலகிய சீனியர் வீரர் கம்பீர் கடந்த ஆட்டத்தில் ஆடவில்லை. அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்பது சந்தேகம் தான். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் (11 விக்கெட்டுகள்), ராகுல் திவேதியா (6 விக்கெட்) சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

முந்தைய தோல்வியை மறந்து வெற்றிப்பாதைக்கு திரும்ப சென்னை அணி முயற்சிக்கும். அதேநேரத்தில் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க வெற்றி பெற வேண்டியது அவசியமானது என்பதால் தனது வெற்றியை நீட்டிக்க டெல்லி அணி தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இந்த சீசனில் இரு அணிகளும் சந்திப்பது இது முதல்முறையாகும். ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் சென்னை அணி 11 முறையும், டெல்லி அணி 5 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேன் வாட்சன், அம்பத்திராயுடு, சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), வெய்ன் பிராவோ, சாம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங், கரண்ஷர்மா, ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர் அல்லது டேவிட் வில்லி.

டெல்லி டேர்டெவில்ஸ்: பிரித்வி ஷா, காலின் முன்ரோ, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷாப் பான்ட், மேக்ஸ்வெல், விஜய் சங்கர், ராகுல் திவேதியா, பிளங்கெட், அமித்மிஸ்ரா, அவேஷ்கான், டிரென்ட் பவுல்ட். 

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/30101947/1159849/chennai-super-kings-vs-delhi-daredevils-match-on-today.vpf

Link to comment
Share on other sites

முயற்சியற்ற பீல்டிங், உத்வேகமில்லா கேப்டன்சி: கொல்கத்தாவிடம் மீண்டும் தோற்றது கோலியின் ஆர்சிபி

 

 
kohli

களவியூகத்தில் சொதப்பிய கோலியின் பாடிலாங்வேஜ் உதார்!   -  படம். | பிடிஐ.

பெங்களூருவில் நடைபெற்ற 29வது ஐபிஎல் போட்டியில் பெங்களூரு நிர்ணயித்த 176 ரன்கள் வெற்றி இலக்கை கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எடுத்தது. ஆர்சிபிக்கு மீண்டும் ஒரு தோல்வி.

ஏ.பி.டிவில்லியர்ஸ் ‘வைரல் காய்ச்சல்’ காரணமாக ஆட முடியவில்லை. மெக்கல்லம் ஆடினார். பீல்டிங்கில் தவறுகளைச் செய்த ஆர்சிபி கோலியின் உத்வேகமில்லா கேப்டன்சியினால் 7 வது போட்டியில் 5வது தோல்வியைச் சந்தித்தது.

கேப்டன் கோலியின் களவியூகப் பிரச்சினைகள்: கற்பனை வளமற்ற கேப்டன்சி!

முதலிலேயே நரைன், சவுதியின் ஒரு ஷார்ட் பிட்ச் எகிறு பந்தை தாறுமாறாக தடுத்தாட கோலி இடது புறம் ஓடி பிறகு முன்னால் ஓடி வந்து கேட்சைப் பிடிக்க முடியவில்லை.

பீல்டர்கள் சரியான இடத்தில் நிறுத்தப்படாததால் நரைன் உமேஷ் யாதவ் பந்தை ஸ்லைஸ் செய்ய ஷார்ட் மிட்விக்கெட்டில் ஒருவருமே இல்லை. உமேஷே பிடித்திருக்கலாம் ஆனால் அவருக்கு காலில் ஏதோ சிக்கல் ஏற்பட்டது.

நரைனுக்கு களவியூகம் சரியாக அமைக்கப்படவில்லை, இதனால் சவுதி ஓவரில் மீண்டும் 2 ரிஸ்க் பவுண்டரிகள் அடித்தார், இரண்டிலுமே அவரை வீழ்த்தியிருக்கலாம் ஆனால் களவியூகம் சரியாக இல்லை. ஒன்றில் பைன் லெக் இல்லை இன்னொன்றில் மிட் ஆன் டீப்பில் இல்லை. அதே ஒவரில் மீண்டும் ஒரு பவுன்சர், தடுத்தாடினார் ஷார்ட் லெக்கில் ஆளில்லை.

இன்பீல்டுக்கு மேல் தூக்கி அடித்த அவரது முயற்சிகளில் சில கேட்ச்கள்தான். ஒழுங்காகத் திட்டமிட்டிருந்தால் ஷார்ட் பிட் ச் உத்தியில் அவரை சடுதியில் பெவிலியன் அனுப்பியிருக்கலாம், ஷார்ட் பிட்ச் போடும் திட்டமிருந்தால் அதற்கான களவியூகம் கோலியிடம் இல்லை.

கிறிஸ் லின் 7 ரன்களில் இருந்த போது சாஹல் பந்தை ஆட முற்பட்டார் ஆனால் முன் விளிம்பில் பட்டு எக்ஸ்ட்ரா கவருக்குச் சென்றது அங்கு முருகன் அஸ்வின் கைக்கு வந்த கேட்சை விட்டார்.

கொலின் டி கிராண்ட்ஹோமுக்கு மீண்டும் பவுலிங் தரவில்லை. அது ஏன் என்பதையும் அவர் கூறுவதில்லை, அவரிடம் இது பற்றி கேள்வி எழுப்புவோரும் இல்லை.

மொத்தத்தில் பதற்றமாகவே இருக்கும் விராட் கோலி ஆட்டம் முழுதிலுமே களவியூகத்தை அமைப்பதில் திணறினார். சும்மா பவுண்டரி போகும்போதெல்லாம் பாடிலாங்குவேஜில் உதார் காட்டுகிறார் அவ்வளவுதான்!

பேட்டிங்கில் கோலி பிரமாதம்!

டிவில்லியர்ஸ் இல்லாததால் 200 ரன்களுக்கு அழுத்தம் கொடுத்து ஆடாமல் 175 ரன்களையே எடுத்தது, பெங்களூருவில் இவ்வளவு வருடங்கள் ஆடிய கோலியோ இது 10 ரன்கள் அதிகம் என்று கூறினார், இவருடைய புரிதலே நமக்கு தோல்வியின் காரணத்தைப் புரிய வைக்கிறது.

மெக்கல்லம், டி காக் இறங்கினர், டி காக் சரளமாக ஆடவில்லை, மெக்கல்லமும் இவரும் இணைந்து பவர் பிளேயில் 40 ரன்களையே எடுத்தனர். பவர் பிளேவுக்குப் பிறகுதான் மெக்கல்லம் 2 ஓவர்களில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாசி ரன் ரேட்டை 8க்கு உயர்த்தினார். 27பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 29 ரன்கள் எடுத்த டி காக், குல்தீப் யாதவ்வின் (1/20) பந்தை சரியாக அடிக்க முடியாமல் டீப் கவரில் இளம் வீரரின் ஷுப்மன் கில் கேட்சுக்கு இரையானார்.

4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த மெக்கல்லம், ரஸல் பந்தை புல் ஷாட் ஆடும் முயற்சியில் மட்டையின் அடியில் பட்டு கார்த்திக்கிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்த பந்திலேயே மனன் வோரா இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆக 67/0 என்பதிலிருந்து 75/3 என்று சரிந்தது பெங்களூரு.

டிவில்லியர்ஸ் இல்லாததால் கடைசி வரை நிற்பதை உறுதி செய்த விராட் கோலி முதலில் எச்சரிக்கையுடன் ஆடியதால் ரன் விகிதம் உயரவில்லை அவரே 18 பந்துகளில் 20 ரன்களையே எடுத்தார். இதனால் 10வது ஓவரில் 75/3 என்ற நிலையிலிருந்து 14வது ஓவரில் சொதப்பலான 100/3 என்று இருந்தது.

இந்நிலையில்தான் பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்று எழுந்தார் கோலி, 15வது ஓவரில் நரைனை எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரியுடன் தொடங்கினார். பிறகு ஷிவம் மாவியை ஒரு கட், பாயிண்டின் மேல் ஒரு ஷாட் என்று கோலி மேலும் 2 பவுண்டரிகளைக் கூட்டினார். அடுத்த நரைன் ஓவரில் மந்தீப் சிங் மிட்விக்கெட்டில் ஒரு அருமையான சிக்சையும் லாங் ஆனில் ஒரு சிக்சையும் அடித்தார், அதிகம் ஸ்ட்ரைக் கிடைக்காவிட்டாலும் கிடைக்கும் ஸ்ட்ரைக்கை பவுண்டரிகளாக மாற்றுவதில் மந்தீப் வல்லவர் என்பதை இந்த ஐபிஎல் தொடரில் நாம் பார்த்து வருகிறோம், இவரை இன்னும் கொஞ்சம் முன்னால் களமிறக்கலாம். இவர் 14 பந்துகளில் 19 ரன்களுடன் ரஸலிடம் ஆட்டமிழந்தார்

மந்தீப் ஆட்டமிழந்த ஓவரில்தான் கோலி 2 சிக்ஸ்களை ரஸலை விளாசினார். அதில் ஒரு பாட்டம் ஹேண்ட் சிக்ஸ் அடித்தாரே கோலி, அது அற்புதமான சிக்ஸ், கொசு அடிப்பது போல் மட்டையை சுழற்றினார். 38 பந்துகளில் 57 என்று இருந்தார் கோலி. ஜான்சனை கொலின் டி கிராண்ட்ஹோம் கவரில் ஒரு சிக்சரையும் கடைசி பந்தில் கோலி ஜான்சனை ஸ்கொயர்லெக்கில் ஒரு சிக்சரையும் அடிக்க ஸ்கோர் ஒருவழியாக 175 ரன்களை எட்டியது. கோலி 44 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். கிராண்ட் ஹோம் 6 பந்துகளில் 11 ரன்கள். கொல்கத்தா தரப்பில் சாவ்லா, மாவி, குல்தீப் டைட்டாக வீச ரஸல் 3 ஓவர்களில் 31 ரன்களை விட்டுக் கொடுத்தாலும் 3 விக்கெடுகளைக் கைப்பற்றினார்.

கிறிஸ் லின், நரைன், உத்தப்பா அதிரடியில் வெற்றி!

வழக்கம் போல் கிறிஸ் லின், நரைன் தர்பாரைத் தொடங்கினர். மழை வந்து 30 நிமிடங்கள் நீடித்தது. கிறிஸ் லின் பேட்டிங்கில் மாற்றம் தெரிந்தது. பொறுப்புடனும் யோசித்தும் நிதானித்தும் ஷாட்களை தேர்வு செய்தார். ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம் உதவிகரமான பிட்சில் கிறிஸ் லின் ஸ்வீப் ஷாட்டை தன் ஆயுதமாக்கி ஆர்சிபியின் 2 ஸ்பின்னர்கள் பந்து வீச்சில் 30 ரன்களை அடித்தார்.

வேகப்பந்து வீச்சில்தான் கிறிஸ் லின் ஆதிக்கம் செலுத்தினார் ஏனெனில் அப்போதுதான் அவர் கட், புல், டிரைவ் என்று சரளமாக ஆடினார். 14வது ஒவரில் தன் 42வது பந்தில் கிறிஸ் லின் அரைசதம் கண்டார். பொறுப்புடன் ஆடியதால் டி20-யில் இது அவரது மெதுவான அரைசதமானது.

கிறிஸ் லின் 7 ரன்களில் இருந்த போது முருகன் அஸ்வின் கேட்சைக் கோட்டை விட்டார், அதனை முழுதும் பயன்படுத்திய கிறிஸ் லின் 52 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

நரைன் 19 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார். களவியூகம் சரியில்லாததால் பீல்டர்களை சரியான இடத்தில் நிறுத்தாததால் நரைன் ஆடிய சில ஷாட்கள் பீல்டருக்கு அருகில் கேட்ச்களாக சில வேளைகளில் சென்றன.

உத்தப்பா இறங்கி அனாயசமாக 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். ஆனால் லாங் ஆனில் டிம் சவுதி எம்பிப் பிடித்த கேட்சுக்கு வெளியேறினார். ராணா 15 ரன்களில் முதுகு வலியால் ஆட முடியாமல் வெளியேற, அதே ஓவரில் ரஸல் தன் 30வது பிறந்த நாளில் முதல் பந்திலேயே சிராஜிடம் அவுட் ஆனார். புல் ஷாட் டாப் எட்ஜ் ஆகி டி காக் கேட்ச் எடுத்தார். 17 ஓவர்கள் முடிவில் 147/3 என்று இருந்த போது 3 ஓவர்களில் 29 ரன்கள் என்று ஆர்சிபி ரசிகர்கள் தரப்பில் கொஞ்சம் வெற்றி நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால் தினேஷ் கார்த்திக் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 10 பந்துகளில் 23 விளாசி வெற்றியை உறுதி செய்த பிறகு 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். உமேஷ் யாதவ் ஓவரில் கடைசியில் ஷுப்மன் கில் பவுண்டரி அடித்து வெற்றி ரன்களை எடுத்தார். ஆட்ட நாயகன் கிறிஸ் லின். கொல்கத்தா தரப்பில் முருகன் அஸ்வின், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

http://tamil.thehindu.com/sports/article23725447.ece?homepage=true

Link to comment
Share on other sites

பீல்டிங்கில் சொதப்பும் நாங்கள் வெற்றி பெற தகுதியில்லாதவர்கள்: விராட் கோலி காட்டம்

 

 
kohli2jpg

செய்வதறியாது நிற்கும் கோலி. | படம்.| ஏ.எஃப்.பி.

கொல்கத்தாவுக்கு எதிராக மேலும் ஒரு போட்டியைத் தோற்ற ஆர்சிபி கேப்டன் உள்முகமாக யோசிக்க நிறைய உள்ளது, டெல்லியின் கம்பீர் அப்படி யோசித்தார், ரோஹித் சர்மாவும் முடிந்த அளவு முயற்சி செய்து பார்க்கிறார், கேப்டன்சியில் தோனி வேறு ஒரு உயரத்தில் இருக்கிறார், ஆனால் கோலியிடம் உத்வேகம் இல்லை என்பது தெரிகிறது.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து விராட் கோலி கூறியதாவது:

 

ஒவ்வொரு முறை இங்கு ஆடும்போதும் பிட்ச் எங்களுக்கு சில ஆச்சரியங்களை அளித்து வருகிறது. 175 ரன்கள் உண்மையில் நல்ல ஸ்கோர். நாங்கள் 165 ரன்களை யோசித்துக் கொண்டிருந்தோம். விக்கெட்டுகள் விழுந்த பிறகு 10 ரன்களை போனஸாக எடுத்துள்ளோம்.

ஆனாலும் திரும்பிப்பார்க்கையில் நாங்கள் வெற்றி பெற தகுதியானவர்கள் அல்ல. கடினமாக முயற்சி செய்யவில்லை. எங்கள் மீது நாங்களே கடுமையாக இருக்க வேண்டியுள்ளது.

நாங்கள் 11 பேரும் ஒன்றிணைந்து களத்தில் உத்வேகத்தைக் கொண்டு வர வேண்டும். இப்படி பீல்டிங் செய்தால் நாங்கள் வெற்றி பெற தகுதியற்றவர்கள்.

சிங்கிள்களெல்லாம் பவுண்டரியாகும் விதத்தில் பீல்டிங் செய்தால் நாங்கள் எப்படி வெற்றி பெற முடியும்? இன்று நாங்கள் நன்றாக ஆடவில்லை. இனி வரும் 7 போட்டிகளில் 6-ல் வென்றால்தான் தகுதி பெற முடியும். நாம் அந்த மைண்ட் செட்டில் இருக்க வேண்டும். ஒவ்வொரு போட்டியும் இனி அரையிறுதிதான்.

இனி தவறுகளுக்கோ தயக்கங்களுக்கோ இடமில்லை. ஆட்டத்தின் தரத்தை உயர்த்தி இதைவிட இனி சிறப்பாக ஆடுவோம் என்று நம்புகிறேன்.

இவ்வாறு கூறினார் விராட்

http://tamil.thehindu.com/sports/article23725602.ece

Link to comment
Share on other sites

ப்ரித்வி ஷா... ஷ்ரேயாஸ் ஐயர்... சமாளிக்க என்ன செய்யலாம் தோனி? #CSKvDD

 

டெல்லிக்கு ஏன் இவ்வளவு பில்ட் அப் என்றுதான் நினைக்கத்தோன்றும்... ஆனால் கொல்கத்தாவை டெல்லிப் போட்டிப்புரட்டி எடுத்ததைப் பார்த்தவர்கள் டெல்லியெல்லாம் சென்னைக்கு ஜுஜூபி என ஜஸ்ட் லைக் தட் கடந்துவிடமுடியாது! #IPL2018 #CSKVSDD #MATCHPREVIEW

அணியின் புதிய கேப்டனாக டெல்லிக்கு பவர் பூஸ்ட் கொடுத்திருக்கிறார் ஷ்ரேயாஸ் ஐயர். ஜூனியர் சச்சின் போல பேட்டிங் ஸ்டைலில் மிரட்டும் ப்ரித்வி ஷா சூப்பர் ஃபார்மில் இருக்கிறார். காலின் முன்ரோ, ரிஷப் பன்ட், க்ளென் மேக்ஸ்வெல் என பேட்டிங்கிலும், ட்ரென்ட் பெளல்ட், ப்ளெங்கெட் என வேகப்பந்து வீச்சிலும் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது டெல்லி. ஆனால், அந்த அணியின் ஒரே பலவீனம் ஸ்பின். அமித் மிஷ்ராவைத் தவிர குவாலிட்டி ஸ்பின்னர்கள் இல்லை. க்ளென் மேக்ஸ்வெல்லின் சுழற்பந்துகளை சென்னை ஈஸியாக சமாளித்துவிடும். அதற்குமுன் சென்னையின் பெளலிங்தான் முதல் கவலை!

IPL2018


எனர்ஜி பத்தல ப்ரோ!
மும்பைக்கு எதிரான மேட்சில் பிராவோவைத் தவிர டெத் ஓவர்களில் யாரும் சரியாகப் பந்து வீசாதேதே சென்னையின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம். இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், வாட்ஸன், தாக்கூர் என இந்த பெளலிங் அட்டாக் டெல்லியின்  பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எடுபடுமா என்பது சந்தேமே. 

பெங்களூரு, பஞ்சாப், கொல்கத்தா என கடைசியாக விளையாடிய மூன்று அணிகளுக்கு எதிராகவுமே அரை சதம் அடித்திருக்கிறார் ஷ்ரேயாஸ் ஐயர். அதன் உச்சம் கொல்கத்தாவுக்கு எதிராக அடித்த 93 ரன்கள். வேகப்பந்து, சுழற்பந்து என இரண்டையுமே அடித்து ஆடக்கூடிய பேட்ஸ்மென் இவர். இந்தியாவின் அடுத்த ஷேவாக் என அழைக்கப்படும் ஷ்ரேயாஸ் ஐயரின் கான்ஃபிடன்ஸ்தான் பெரிய பலம். இன்றைய ஆட்டத்தில் ஷ்ரேயாஸின் பேட்டிங்கை சமாளிக்க ஸ்பின்னர்களை தோனி பயன்படுத்தலாம்.

கொல்கத்தாவுக்கு எதிரானப் போட்டியில் பியுஷ் சாவ்லாவின் பந்துகளை மட்டும்தான் ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர் இருவருமே அடிக்கத் தயங்கினர். அதனால் லெக் ஸ்பின்னரான கான் ஷர்மாவை இன்றைய மேட்சில் தோனி பயன்படுத்தலாம். அதேப்போல் 7 மேட்ச்களில் விளையாடி வெறும் 10 ஓவர்கள் மட்டுமே வீசியிருக்கும் லெக் ஸ்பின்னரான ரவீந்திர ஜடேஜாவையும் இன்றையப் போட்டியில் தோனி பயன்படுத்தலாம். ஷா, ஐயர் இருவருமே வலது கை பேட்ஸ்மேன்கள் என்பதால் இடது கை ஆர்தோடாக்ஸ்   ஸ்பின்னரான ஜடேஜாவின் பந்து வீச்சு இவர்களுக்கு எதிராக நிச்சயம் எடுபடும். 

IPL2018


சென்னையின் பேட்டிங்!
டெல்லியின் பலவீனம் பெளலிங் என்பதால் சென்னை முதலில் ஆடினால் 200 ரன்களுக்கு மேல் எதிர்பார்க்கலாம். வாட்ஸன், ராயுடு, ரெய்னா, தோனி என எல்லோருமே ஃபார்மில் இருப்பதால் இன்றைய மேட்சில் சென்னையின் பேட்டிங் களைகட்டும். இன்றைய போட்டியில் பில்லிங்ஸுக்கு பதிலாக டுப்ளெஸ்ஸி ஆடுவார் என்பதால் அவரது இன்னிங்ஸ் சென்னைக்கு போனஸ்தான். 

IPL2018



வாட்ஸனை சமாளிக்க ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்பின்னர்களை பவர் ப்ளே ஓவர்களிலேயே கொண்டுவரலாம். அதேப்போல் இன்றைய மேட்சில் ப்ளெங்கெட்டின் ஓவர்கள் மிக முக்கியமாக இருக்கும். இதுவரை 2 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகள்தான் இவர் எடுத்திருக்கிறார் என்றாலும் இவரின் லைன் அண்ட் லெங்த் மிகச்சிறப்பாக இருக்கிறது. எகானாமி ரேட்டிலும் கெத்துகாட்டுகிறார். அதனால் பவர்ப்ளே ஓவர்களில் பெளல்ட்டோடு, பளங்கெட்டும் பயம்காட்டுவார் என எதிர்பார்க்கலாம். 

IPL2018



இன்றைய மேட்சில் சென்னை அணியில் வெளிநாட்டு வீரர்களாக வாட்ஸன், டுப்ளெஸ்ஸி, டேவிட் வில்லி, பிராவோ ஆகியோர் இடம்பிடிப்பர்.

 

புனே பிட்ச்சில் சேஸ் செய்பவர்களே அதிகமுறை வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பதால் டாஸ் இன்று மிக முக்கியமானதாக இருக்கும். அதேப்போல் இன்று விளையாடும் இரண்டு அணிகளுமே பேட்டிங்கில் செம ஸ்ட்ராங் என்பதால் பெளலிங்தான் இன்றைய வெற்றியைத் தீர்மானிக்கும்!

https://www.vikatan.com/news/sports/123725-can-dhoni-dominate-delhi-daredevils.html

Link to comment
Share on other sites

சிக்ஸர் சீஸனில் பெளலிங்கில் மெர்சல் காட்டும் சன் ரைசர்ஸ்! #RRvSRH

 
 

டி20 போட்டிகள் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களை நம்பியே இருக்கும். இந்த ஐபிஎல்லிலும் எல்லா அணிகளுக்கும் அதே கதை தான். சென்னைக்கு வாட்சன், தோனி, ரெய்னா, ராயுடு ; பஞ்சாபுக்கு கெயில், ராகுல் ; கொல்கத்தாவுக்கு லின், நரேன், ரஸல், கார்த்திக், உத்தப்பா ; என டேபிள் டாப்பர்களின் ரகசியம் இதுதான். அணியின் வெற்றியில் இவர்களின் பங்கு அதிகம். ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் எல்லாம் அணிகள் இல்லை தேவையில்லாத ஆணிகள் என்பதாலும், அந்த ஆணியே பிடுங்க வேணாம் என்பதாலும், அடுத்த பாயின்ட்டுக்குப் போவோம்.  #RRvSRH

#RRvSRH

ஆனால், டேபிள் டாப்பரான ஐதரபாத் சன் ரைசர்ஸின் நிலையே வேறு. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரும், கேப்டனுமான டேவிட் வார்னர் சர்ச்சையில் சிக்கி, ஓராண்டு தடை வாங்க, ஐபிஎல்லிலும் தடை தொடர்ந்தது. இறுதி நிமிடத்தில் கேன் வில்லியம்சன் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். நன்றாக இருந்த தவானும் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு போட்டியில் ரிட்டயர் ஹர்ட், அடுத்த போட்டியில் ஓய்வு, அதற்கடுத்த போட்டியில் ஃபார்ம் அவுட் என ஒதுங்கிவிட்டார். ஐதரபாத் அணியின் பவுலிங் கேப்டனான புவனேஷ் குமாரும் கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால், என்ன நடந்தாலும் சரி என தொடர்ந்து அசத்துகிறது சன்ரைசர்ஸ். காரணம், அதன் பவுலிங் யூனிட்டும், கேப்டன் கேன் வில்லியம்சனின் பேட்டிங் திறமையும்தான். 8 போட்டிகளில் ஆறு வெற்றியென, பிளே ஆஃப் சுற்றுக்கான நுழைவு வாசலில் ஜம்மென்று உட்காந்திருக்கிறது ஐதராபாத் அணி. 

இந்தத் தொடர் முழுக்கவே டாஸ் வென்றால், சேஸிங்தான் தேர்வு செய்வார்கள். கேன் வில்லியம்ஸன் அவரது பவுலர்கள் மேல் வைத்த நம்பிக்கையில் பேட்டிங் தேர்வு செய்தார். மொஹம்மத் நபிக்குப் பதிலாக அலெக்ஸ் ஹேல்ஸை களமிறக்கினார் வில்லியம்சன். ராஜஸ்தானின் ரஹானேவும் தன் பங்குக்கு நாமும் யாரையாவது மாற்றலாம் என சோதியையும், லொம்ரோரையும் களமிறக்கினார். 


ஹேல்ஸும், தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் 33 ரன்கள் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த கிருஷ்ணப்ப கௌதம் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே அடித்தது ஐதராபாத். அடுத்து குல்கர்னி வீசிய ஓவரில் மூன்று பவுண்டரி அடித்து 14 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ். தவானின் சோக கீதம் இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது . கௌதம் பந்தில் 6 ரன்களில் போல்டானார் தவான். கடந்த ஐந்து போட்டிகளில் தவான் அடித்தது எல்லாமே ஒற்றை இலக்க ரன்கள்தான். ( 6 , 11 , 5 , 0* (ரிட்டயர் ஹர்ட் ), 7 ) 

#RRvSRH

சன்ரைசர்ஸின் நம்பிக்கை நாயகனான கேன் வில்லியம்சன் ஒன் டவுனில் களமிறங்கினார். வில்லியம்சனை அவுட் ஆக்கினாலே, ஆட்டம் பாதி முடிந்த நிலை தான். ஆர்ச்சர் வீசிய பந்தில் சுலபான கேட்ச்சை கோட்டைவிட்டார் ராகுல் த்ரிபாதி. கேன் வில்லியம்சன் போன்ற பேட்ஸ்மேன்கள் மிஸ்ஹிட் அடிப்பதெல்லாம் அரிதிலும் அரிதான ஒன்று. அதை மிஸ் செய்த போதே, ராஜஸ்தான் தன்னை தோல்வி பக்கம் ஒதுக்கிக்கொண்டது என்றுதான் தோன்றியது. பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது சன்ரைசர்ஸ். 

ஹேல்ஸ், வில்லியம்சன் இருவரும் எந்த அதிரடியிலும் ஈடுபடாமல், ரன்கள் சேர்த்து வந்தனர். சோதி வீசிய 9-வது ஓவரில், ஸ்டோக்ஸ் அட்டகாசமாக கேட்ச் பிடித்தார். ஒட்டுமொத்த கிரவுண்டும் ஆர்ப்பரிக்க, ஸ்டோக்ஸ் கூலாக NO என்றார். காரணம், பந்து தரையில் பட்டுவிட்டது. கிரிக்கெட் இன்னும் உயிர்ப்போடு இருப்பது , இதுபோன்ற சில ஜென்டில்மேன் நிகழ்வுகளால் தான்.   பத்து ஓவர் முடிவில் விக்கெட்டுகள் இருந்தும், 70 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.  160 ரன்கள் எடுத்துவிட்டாலே போதும் என்கிற நிலைதான். ரஷித் கான், ஷகிபுல் ஹசன், சந்தீப் ஷர்மா,  சித்தார்த் கவுல், யூசஃப் பதான், பசில் தம்பி என பவுலர்கள் ஐதராபாத்தில் எக்கச்சக்கம். 

#RRvSRH

ஐபிஎல் ஏலத்தில் 11.5 கோடிக்கு எடுக்கப்பட்ட ஜெய்தேவ் உனத்கட் தான் சோதனை செய்வார் என ராஜஸ்தான் நினைத்திருக்காது. 'பாயின்ட் வரட்டும் தம்பி பேசுவோம் ' என காத்துக்கொண்டிருந்த சன்ரைசர்ஸ் , உனத்கட் வீசிய 12-வது ஓவரை வெளுத்து வாங்கியது. நான் கொடுத்த கோடியெல்லாம் இப்படி பவுண்டரியா போகுதே என சோகத்தில் அமர்ந்திருந்தது ராஜஸ்தான் Dug Out.  (4 6 4 2 4 1 ) அடித்து 32 பந்தில் அரைசதம் கடந்தார் வில்லியம்சன். தேர்ட் மேன் திசையில் ஒரு பவுண்டரி, எக்ஸ்டிரா கவர் திசையில் ஒரு பவுண்டரி என அந்த ஓவரில் அசத்தினார் வில்லியம்சன். 

கௌதம் வீசிய பந்தில் ஹேல்ஸும், சோதி வீசிய பந்தில் வில்லியம்சனும் அடுத்தடுத்து அவுட்டாக, 15 ஓவர் முடிவில் 120 ரன்கள் எடுத்திருந்தது சன்ரைசர்ஸ். ஷகிபுல் ஹசனுடன் , மனிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். ஆர்ச்சர் பந்து வீச்சில் ஒரே ஓவரில் ஹசனும், யூசஃப் பதானும் அவுட். இறுதியாக 20 ஓவர் முடிவில் 151 ரன்கள் எடுத்தது சன் ரைசர்ஸ். டி20 போட்டிகளில் 151 ரன்கள் என்பது மிகவும் எளிய இலக்குதான். ஆனால், சன்ரைஸர்ஸ்க்கு எதிராக மிகவும் கடினம். 

#RRvSRH

தேவையான ரன்ரேட் குறைவு. கேப்டன் ரஹேனேவும், ராகுல் த்ரிபாதியும் ஓப்பனிங் இறங்கினார்கள். சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் த்ரிபாதி போல்ட். பசில் தம்பி வீசிய ஓவரை வெளுத்து வாங்கினார் ஒன் டவுனில் இறங்கிய சஞ்சு சாம்சன். ( 4 6 0 4 2 1) அந்த ஓவர் மட்டும்தான் ராஜஸ்தான் அடித்த ஒரே ஒவர். மற்ற எல்லா ஓவர்களிலும், ஏனோ 50 ஓவர் இருப்பதுபோல், விளையாடிக்கொண்டிருந்தது ராஜஸ்தான். பவர் பிளே இறுதியில் 41 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான். 

ரஷித் கான், ஷகிபுல் ஹசன், சித்தார்த் கவுல் என பவுலர்களை மாற்றிக்கொண்டே இருந்தார் கேன் வில்லியம்சன். அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த சஞ்சு சாம்சன், அவசரப்பட்டு ஆடி, சித்தார்த் கவுல் பந்துவீச்சில் அவுட்டானார். ஸ்டோக்ஸ் இந்தத் தொடரில் இரண்டு முறை 40 ரன்கள் எடுத்திருந்தாலும், பெரிய இன்னிங்ஸ் எதுவும் ஆடவில்லை. இந்த முறையும் சோபிக்கத் தவறினார் ஸ்டோக்ஸ். ரஷித் கான் பந்துவீச்சில் திணறுவார் என எதிர்பார்த்தால், பார்ட் டைம் பவுலரான யூசப் பதான் பந்தில் போல்டாகி டக் அவுட்டானார் ஸ்டோக்ஸ். இந்த சீசனில் முதல் முறையாக பந்துவீசினார் யூசப் . வில்லியம்சன் பந்தை யாரிடம் கொடுத்தாலும், அவர்கள் தங்களின் சிறப்பான பங்களிப்பைத் தந்தனர். 

#RRvSRH

தேவையான ரன் ரேட் ஏறிக்கொண்டே சென்றது . ஆனால், அதைப் பற்றி துளியும் கவலைப்படாமல், பொறுப்பின்றி ஆடினார் கேப்டன் ரஹானே. ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாபுக்கு எதிராக பார்த்த அதே வேலையைப் பார்த்தார் ரஹானே.  அந்தப் போட்டியில் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில், 45 பந்துகள் பிடித்து 57 ரன்கள் எடுத்தார் ஸ்ரேயாஸ். சிங்கிள்ஸ் தட்டிவிட்டு, எதிரே சென்று நின்றுகொள்வது என ஒரு பேட்ஸ்மேன் என்னென்னவெல்லாம் செய்யக்கூடாதோ, அதைச் செய்தார். அவராவது சின்னப் பையன். இந்திய அணியின் துணைக் கேப்டன், ராஜஸ்தான் அணியின் கேப்டன் நிலையில் இருக்கும் ரஹேனாவும் அதே மோடில்தான் விளையாடினார். 

ரஷித் கான் பந்தில் பட்லரும் 10 (11b 0x4 0x6) அவுட்டாக, தேவைப்படும் ரன்ரேட் பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ரஷித் கான் பந்துவீச்சில் ஒரு சிக்ஸ் தவிர, எல்லாமே சிங்கிள்தான். விளைவு இறுதி ஓவரில் 21 ரன்கள் தேவை. முதல் ஓவரிலேயே 17 ரன்கள் விட்டுக்கொடுத்த பசில் தம்பியை, ' தம்பி, நீயே கடைசி ஓவரை வீசு ' என அழைத்தார் வில்லியம்சன். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 11 பந்துகளில் 33 ரன்கள் (4x4 2x6 ) எடுத்து வெற்றி பெற வைத்த கிருஷ்ணப்ப கவுதம் ஸ்டிரைக் எடுத்து நின்றுகொண்டு இருந்தார்.

முதல் பந்திலேயே ஸ்குயர் லெக் திசையில் ஒரு பவுண்டரி. ரைட்டு, எல்லாம் முடிந்தது என நினைத்தால், அடுத்தடுத்து அட்டகாசமாக பந்து வீசினார் பசில். அடுத்த பந்தில் கவுதம் சிங்கிள் தட்டிவிட, ' என்னைய அடிக்க சொல்றியா' என்பதுபோல், மீண்டும் சிங்கிள் தட்டிவிட்டு, நான் - ஸ்டிரைக்கர் எண்டில் பாதுக்காப்பாக நின்றுகொண்டார். ஐந்தாவது பந்தில் கௌதமும் அவுட்டாக, ராஜஸ்தான் தோல்வியைத் தழுவியது. 53 பந்துகளில் 65 ரன்கள் (ஸ்டிரைக் ரேட் 122.64) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ரஹானே.

 

எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகள் பெற்று, சன்ரைசர்ஸ் முதலிடத்தில் இருக்கிறது. டேபிள் டாப்பில் இருக்கும் அணிகளுமே எதோவொரு வகையில் தமிழ்நாடு தான். கொல்கத்தா பஞ்சான் அணிகளின் கேப்டன் சென்னைப் பசங்க என்றால், சென்னை, ஐதராபாத் அணிகளின் உரிமையாளர்கள் சென்னைதான் . எப்படியெல்லாம் மேட்ச் பண்ண வேண்டியதிருக்கு!. 
இன்று நடக்க இருக்கும் சென்னை போட்டிக்காக காத்திருப்போம்.  

https://www.vikatan.com/news/sports/123708-sun-risers-bowlers-spell-the-magic-again.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.