Jump to content

Recommended Posts

ஐபிஎல் 2018 - சென்னை அணிக்கு 206 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 206 ரன்களை இலக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயித்துள்ளது. #VIVOIPL #RCBvCSK #ChennaiSuperKings #RoyalChallengersBangalore

 
 
 
 
ஐபிஎல் 2018 - சென்னை அணிக்கு 206 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
 
 
பெங்களூரு:
 
ஐபிஎல் தொடரின் இன்றைய 24-வது ஆட்டம் பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கியது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
 
201804252150392833_1_PTI4_25_2018_000167B._L_styvpf.jpg
 
இதற்கான டாஸ் போடப்பட்டதில் சென்னை அணி கேப்டன் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டான் டி காக், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். கோலி 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சர்துல் தாகூர் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் டி வில்லியர்ஸ் களமிறங்கினார். டிவில்லியர்ஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்.  
 
முதலில் பொறுமையாக விளையாடிய டி காக், அதன்பின் அதிரடியாக விளையாட தொடங்கினார். டிவில்லியர்ஸ் - டி காக் ஜோடி சென்னை அணி வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டது. சிறப்பாக விளையாடிய இரண்டு பேட்ஸ்மேன்களும் அரைசதம் கடந்தனர். டி காக் 37 பந்தில் 53 ரன்கள் ( 4 சிக்ஸர், 1 பவுண்டரி) எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது. அவரைத்தொடர்ந்து டி வில்லியர்ஸ் 30 பந்தில் 68 ரன்கள் (2 பவுண்டரி, 8 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். 
 
201804252150392833_2_rcbvcsk-devilliers._L_styvpf.jpg
 
டிவில்லியர்ஸ் அவுட் ஆன அடுத்த பந்திலேயே, கோரி ஆண்டர்சன் ஆட்டமிழந்தார். இந்த இரண்டு விக்கெட்களையும் இம்ரான் தாஹிர் வீழ்த்தினார். இறுதியில் மந்தீப் சிங் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். அவர் 17 பந்தில் 32 ரன்கள் ( 1 பவுண்டரி, 3 சிக்ஸ்ர்0 எடுத்து ஆட்டமிழந்தார். பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. சென்னை அணி பந்துவீச்சில் சர்துல் தாகூர், இம்ரான் தாஹிர், வெய்ன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 
 
இதன்மூலம் சென்னை அணியின் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்துள்ளது. #VIVOIPL #RCBvCSK #ChennaiSuperKings #RoyalChallengersBangalore

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/25215039/1159042/IPL-Royal-Challengers-Bangalore-set-206-runs-as-target.vpf

Link to comment
Share on other sites

  • Replies 592
  • Created
  • Last Reply

தொடர் தோல்வி: ரன் எடுப்பதில் சொதப்பல்: ரோகித் சர்மாவை ‘கலாய்த்த ரசிகர்கள்’

 

 
rohit-sharma-7592

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா : கோப்புப்படம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வி அடைந்தது. இதனால் வெறுப்படைந்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கேப்டன் ரோகித் சர்மாவை ட்விட்டரில் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.

11-வது ஐபில் போட்டி சீசன் தொடங்கியதில் இருந்தே நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி படுமந்தமாக விளையாடி வருகிறது. திறமையான பேட்ஸ்மன்களான சூரியகுமார் யாதவ், இசான் கிஷான், ரோகித்சர்மா, ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, கிரன்பொலார்ட் உள்ளிட்ட பல வீரர்கள் இருந்தும் பேட்டிங்கில் சோடை போனது.

மும்பையில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 18.4 ஓவர்களுக்கு 118 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 119 ரன்களை இலக்காக வைத்து துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 18.5 ஓவர்களில் 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

அந்த அணியில் குருணால் பாண்டியா 24 ரன்கள், சூரிய குமார் யாதவ் 39 ரன்கள் ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்களைச் சேர்த்தனர். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் ரன் சேர்த்து வீணாக விக்கெட்டை இழந்தனர்.

அதிலும் கேப்டன் ரோகித் சர்மா 6 பந்துகளைச் சந்தித்து 2 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த 4 போட்டிகளிலும் இதேபோலவே சொற்ப ரன்களில் ரோகித் ஆட்டமிழந்து ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளார். இதுவரை ரோகிர்சர்மா ஒரு போட்டியில் மட்டுமே சிறப்பாக விளையாடியுள்ளார். மற்ற போட்டிகளில் எல்லாம் 20 ரன்களைக் கூட தாண்டவில்லை என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.

சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்களும், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்களும், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 18 ரன்களும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டக்அவுட்டும், நேற்றைய ஆட்டத்தில் 2ரன்களும் சேர்த்து ரோகித் சர்மா மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் பேட்டிங், பந்துவீச்சு நாளுக்கு நாள் மோசமாக இருப்பதை அவர்களின் ரசிகர்களை வெறுப்பேற்றி இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் மும்பை அணி உள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த அவரின் ரசிகர்கள் ட்விட்டர், பேஸ்புக்கில் ரோகித் சர்மாவை கடுமையாகச் சாடியுள்ளனர். சில ரசிகர்கள் ‘ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி்யில் இருப்பது பாரமாகும். உடனடியாக அவர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லலாம். 11பேர் கொண்ட அணியில் இருக்கத் தேவையில்லை’ என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

rohitjpg
 

‘சிலர் ஓட்டை கண்ணாடி கிளாசில் தண்ணீர் ஊற்றுவதுபோல் படத்தை பதிவிட்டு. இப்படித்தான் ரோகித்சர்மாவின் உழைப்பு இருக்கிறது’ என்று கிண்டல் செய்துள்ளனர்.

இன்னும் சிலர் ‘ரோகித் சர்மா ஏன் மணீஷ் பாண்டேபோல் விளையாடுகிறீர்கள்’ என்று கேட்டுள்ளனர். சிலரோ, ‘சன்ரைசர்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் மிகக்குறைந்த ஸ்கோர் செய்துள்ளது. அதை சவாலாக எடுத்துக்கொண்டு அதைக் காட்டிலும் குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்து சாதித்துவிட்டீர்கள்’ என்று தெரிவித்துள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/article23668921.ece

Link to comment
Share on other sites

ஐபிஎல் போட்டியில் ராயுடு, தோனியின் அதிரடியில் பெங்களூருவை வீழ்த்தியது சென்னை அணி

 

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அம்பதி ராயுடு, தோனியின் அதிரடியால் பெங்களூர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #VIVOIPL #RCBvCSK #ChennaiSuperKings #RoyalChallengersBangalore

 
 
ஐபிஎல் போட்டியில் ராயுடு, தோனியின் அதிரடியில் பெங்களூருவை வீழ்த்தியது சென்னை அணி
 
பெங்களூரு:
 
ஐபிஎல் தொடரின் 24-வது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி டாஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டான் டி காக், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். கோலி விரைவில் அவுட்டானார்.
 
201804260000343026_1_rayudu-2._L_styvpf.jpg
 
அந்த அணியின் டிவில்லியர்ஸ் - டி காக் ஜோடி சென்னை அணி வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டது. சிறப்பாக விளையாடிய இரண்டு பேட்ஸ்மேன்களும் அரைசதம் கடந்தனர். டி காக் 37 பந்தில் 53 ரன்கள் (4 சிக்ஸர், 1 பவுண்டரி) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது. அவரைத்தொடர்ந்து டி வில்லியர்ஸ் 30 பந்தில் 68 ரன்கள் (2 பவுண்டரி, 8 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். 
 
அதன்பின்னர் இறங்கிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில் மந்தீப் சிங் அதிரடியாக விளையாடி 17 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.
 
சென்னை அணி சார்பில் சர்துல் தாகூர், இம்ரான் தாஹிர், வெய்ன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 
 
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சனும், அம்பதி ராயுடுவும் இறங்கினர். வாட்சன் முதல் ஓவரில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
 
அடுத்து இறங்கிய ரெய்னா, சாம் பில்லிங்ஸ், ஜடேஜா ஆகியோர் விரைவில் வெளியேறினர். இதனால் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்து தத்தளித்தது. அதன்பின் களமிறங்கிய கேப்டன் தோனி  ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார்.
 
இருவரும் பெங்களூர் அணியினரின் பந்து வீச்சை சிக்சர், பவுண்டரியாக விளாசினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இருவரும் அரை சதமடித்து அசத்தினர். ராயுடு 82 ரன்களில் அவுட்டானார். இறுதியில், சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. தோனி ஆட்டமிழக்காமல் 70 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
 
பெங்களூர் அணி சார்பில் சாஹல் 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், நெகி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #VIVOIPL #RCBvCSK #ChennaiSuperKings #RoyalChallengersBangalore #Tamilnews
 

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/26000034/1159060/chennai-super-kings-beats-royal-challangers-bangalaore.vpf

Link to comment
Share on other sites

‘சூப்பர் கிங்ஸ்’ தோனி, ராயுடு! சிக்சர் மழையில் மூழ்கியது கோலியின் பெங்களூரு

 

 
dhoni

பினிஷர் தோனியை தூக்கும் ஹர்பஜன் சிங். அருகில் பிராவோ.   -  படம்.| ஏ.பி.

ஒரே போட்டியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் வென்ற ஆரஞ்சு தொப்பியை அவரிடமிருந்து பறித்த அம்பாத்தி ராயுடுவின் 53 பந்து 82 ரன்களினாலும் தோனியின் 34 பந்து 70 ரன்களினாலும், இருவரும் சேர்ந்து எடுத்த மேட்ச் வின்னிங் 101 ரன்களினாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூருவின் 205 ரன்களை ஊதித்தள்ளி மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது.

ராயுடு 8 சிக்ஸ், தோனி 7 சிக்ஸ், வாட்சன், பிராவோ தலா 1 சிக்ஸ் மொத்தம் 17 சிக்ஸ்களில், கடைசியில் கோரி ஆண்டர்சனை வைடு ஆஃப் ஸ்டம்பில் வீசுவார் என்று எதிர்பார்த்து நகர்ந்த தோனி லாங் ஆனில் மேல் அடித்த வெற்றி சிக்ஸ் நாட்கள் பல பேசும். ஆட்ட நாயகனாகவும் தோனி தேர்வு செய்யப்பட்டார்.

அதுவும் 74/4 என்று தோல்வியை எதிர்நோக்கிய போது தோனி, ராயுடு கூட்டணி மேற்கொண்ட அதிரடி ஆட்டத்தையே மாற்றியது. இதற்குக் காரணம் பவன் நெகி 3 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்தார் அதில் 5 சிக்சர்கள், தோனி இவரைப் புரட்டி எடுத்தார்.

அருமையாக வீசும் நியூஸிலாந்தின் கொலின் டி கிராண்ட்ஹோமுக்கு கோலி ஏன் பவுலிங் தரவில்லை? (உஷ்! கண்டுக்காதீங்க-1) கோரி ஆண்டர்சன் வாங்க வாங்க அவருக்கு கொடுத்தது ஏன்? (உஷ்! கண்டுக்காதீங்க-2), 3.4 ஓவர்களில் 58 ரன்களைக் கொடுத்தார் கோரி ஆண்டர்சன். நியூஸிலாந்து அணியிலேயே இவர் இல்லை என்பது வேறுகதை. இன்னொருவர் மொகமது சிராஜ் கடைசியில் 19-வது ஓவரில் தொடர்ச்சியாக 3 வைடுகள் வீசியது எப்படி? (உஷ்! கண்டுக்காதீங்க-3).

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுக்க தொடர்ந்து அடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவர்களில் 207/5 என்று ஆதிக்க வெற்றியை ஈட்டியது.

பந்து வீச்சில் நன்றாகத் தொடங்கிய ஆர்சிபி பிறகு சொதப்பியது எப்படி?

பந்துவீச்சில் சென்னை சூப்பர் கிங்சின் சிறந்த பேட்ஸ்மென்களான ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, சாம் பில்லிங்ஸ் ஆகியோரை 7 ஓவர்களுக்குள் பெவிலியன் அனுப்பியது, வாட்சன், நெகி ஷார்ட் பந்தை புல் ஆட முயன்று மிட் ஆனில் முடிந்தார். ரெய்னாவை தன் வேகத்தினால் திணறடித்த உமேஷ் யாதவ், கடைசியில் ரெய்னா விக்கெட்டை வீழ்த்தினார். மீண்டும் லெக் திசையில் ஒதுங்கினார் ரெய்னா, உமேஷ் ஃபுல் லெந்தில் வீசி ரெய்னாவின் கால்களுக்கு ஸ்விங் செய்தார் ரெய்னா பிளிக் ஷாட் ஆடிய போது எட்ஜ் ஆகி பாயிண்டில் கேட்ச் ஆனது. ரெய்னா 11 அவுட். சாம் பில்லிங்ஸ் 9 ரன்களில் சாஹல் காற்றில் ஒரு பந்தை மெதுவாகத் தூக்கி வீச மேலேறி வந்து பந்தைக் கோட்டை விட்டார் டி காக் மீதி வேலையை முடித்தார். 59/3 என்று 7வது ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தடுமாறியது. 59 ரன்கள் வந்ததற்குக் காரணம் ஒரு முனையில் ராயுடு அற்புதமாக ஆடிவந்ததே.

தோனி மீண்டும் ஜடேஜாவை நம்பி இறக்கி மோசம் போனார். ஜடேஜாவுக்குத்தான் வரவில்லையே பிறகு என்ன அடம்? 3 ரன்களில் சாஹலின் அதிதிருப்ப பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். 9 ஓவர்களில் 76/4. ஜடேஜா பந்துவீச்சில் பந்தைத் திருப்புவதை மறந்து 3 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியிருப்பதால் சாஹல் பந்தைத் திருப்பக் கூடியவர் என்பதை மறந்திருக்கலாம்.

உமேஷ் யாதவ் மிக அருமையாக வீசி 4 ஓவர்களை முடித்து 23 ரன்களுக்கு 1 விக்கெட். சாஹலும் 15 ஓவர்களுக்குள் தன் ஸ்பெல்லை முடித்தார் 4 ஓவர்கள் 26 ரன்கள் 2 விக்கெட். இவர்கள் இருவரும் ஓவர்களை முடித்ததன் விளைவு தோனியும், ராயுடுவும் மைதானம் நெடுக பந்துகளை தூக்கித் தூக்கி அடித்தனர். அதன் பிறகு ஒரு 10-11 ஓவர்களில் 12 சிக்சர்கள் விளாசப்பட்டது. ராயுடு சிராஜையும், வாஷிங்டன் சுந்தரையும் நன்றாகக் கவனித்தார். சுந்தர் 1 ஓவர் வீசியதோடு சரி அதிலேயே 14 ரன்கள். அதன் பிறகு கொடுக்கவில்லை.

தோனி முதலில் நெகியை மிட்விக்கெட் மேல் ஒரு சிக்ஸ் அடித்தார். அதன் பிறகு கோரி ஆண்டர்சன் தோனியின் ஹிட்டிங் பகுதிக்குள் கிறுக்குத் தனமாக வீச பந்து லாங் ஆனில் ஸ்டாண்ட்சில் போய் விழுந்தது. இதற்கு முந்தைய பந்தில் ராயுடுவுக்கு எதிராக ஒரு உரத்த எல்.பி.முறையீடு, ரிவியூ செய்தார் கோலி, ஆனால் நாட் அவுட்.

14வது ஓவரில் நெகி மீண்டும் வந்தார், தோனியைப் பார்த்தவுடனேயே அவர் கைகள் நடுங்க ஆரம்பித்தன. ஒரு ஓவர் பிட்ச் பந்தை வீசினார் தோனி அதனை சைட் ஸ்க்ரீனுக்கு மேலாக முறையாக தூக்கி சிக்ஸ் அடித்தார், பிரஸ் பாக்ஸ் கண்ணாடியைப் பதம் பார்த்தது. மீண்டும் ஒரு ஃபுல் லெந்த் பந்து இம்முறை லாங் ஆனில் சிக்ஸ். ஆப்கான் ஸ்பின்னர் ரஷீத் கான் விரைவில் கற்றுக் கொண்டார், அவர் கற்றுக் கொண்டதைக் கூட இவர் கற்றுக் கொள்ளவில்லை, தோனிக்கு பேக் ஆஃப் லெந்தில் ரூம் கொடுக்காமல் வீச வேண்டும். இதே ஓவரில் ராயுடுவுக்கு வீசினார் ஆனால் ஷார்ட் பிட்ச், ராயுடு அதை தூக்கி ஆன் திசையில் ஒரு சிக்ஸ் அடிக்க ராயுடு 41 பந்துகளில் இன்னொரு அருமையான அரைசதத்தை எட்டினார். இந்த ஓவரில் நெகி 19 ரன்களைக் கொடுத்தார்.

36 பந்துகளில் 80 ரன்கள் சென்னை வெற்றிக்குத் தேவை, இது சாதாரண விஷயமல்ல. 15வது ஓவரை சிராஜ் வீசினார். இறங்கி வந்து ராயுடு கவரில் சிக்ஸ் விளாசினார், இது அவருடைய 6வது சிக்ஸ்.

உமேஷ் விட்ட கேட்சும் அதன் பிறகான சிக்சர்களும்:

16வது ஓவரை கோரி ஆண்டர்சன் வீசினார், பெரிய ஷாட்டை ராயுடு ஆட எட்ஜ் ஆனது. வானில் கொடியேற்றினார், உமேஷ் யாதவ் மெதுவாக ஒரு டீ சாப்பிட்டு விட்டுக் கூட பிடிக்கலாம் அவ்வளவு உயரம் சென்ற பந்து. ஆனால் உமேஷ் கையில் வாங்கி விட்டார். எப்போதும் கிரிக்கெட்டில் கேட்ச் விட்டால் அடுத்து என்ன நடக்கும்? அதுதான் நடந்தது. ஷார்ட் பவுண்டரியான கவரில் ஒரு சிக்ஸ். பிறகு ஆஃப் ஸ்டம்பிற்கு நகர்ந்து டீப் மிட்விக்கெட்டில் ரசிகர்களிடம் தூக்கி அடித்தார், சிக்ஸ்!

24 பந்துகள் 55 ரன்கள் தேவை என்ற போது சிராஜ் அந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் கொடுத்தார், காரணம் தோனியின் வேகமான ஓட்டம். 18வது ஓவரில் மீண்டும் கோரி ஆண்டர்சன் நேராக ஃபுல்லாக வீசினார், ஒரு வேரியேஷனே கிடையாது, தோனி அதனை நேராகத் தூக்கி அடித்து சிக்ஸருக்கு அனுப்பி 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்து ராயுடுவுக்கு ஒரு ஷார்ட்பிட்சைப் போட்டுக் கொடுக்க நான்கானது.

அப்போது 53 பந்துகளில் 3 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 82 ரன்கள் விளாசிய ராயுடு ஷார்ட் தேர்ட் மேனில் தட்டி விட்டு மிஸ்பீல்டுக்கு 2வது ரன் ஓடும் முயற்சியில் உமேஷ் யாதவ் நேராக ஸ்ட்ம்பைப் பெயர்க்க ரன் அவுட் ஆனார்.

12 பந்துகளில் 30 ரன்கள் தேவை. சிராஜ் வீச வந்தார், ஒரு தாழ்வான புல்டாஸை பாயிண்ட் மேல் தோனி சிக்ஸ் அடித்தார். அடுத்து பதற்றமடைந்த சிராஜ், ஒரு ஸ்லோ பவுன்சரை தோனி தலைக்கு மேல் வீச வைடு ஆனது. அடுத்த பந்து ஆஃப் சைடில் வைடு, மீண்டும் ஒரு வைடு, மொத்தம் 3 வைடுகள், ஒரு சிக்ஸ் ஏற்கெனவே வந்து விட்டது.

கடைசி ஓவர் 16 ரன்கள் தேவை. அப்போது கோரி ஆண்டர்சனை விட்டால் வேறு பவுலர் இல்லை, அவர் வந்தார். டி காக் எம்பியும் பிடிக்க முடியாமல் ஒரு பவுண்டரி பறந்தது. மீண்டும் ஒரு ஷார்ட் பிட்ச் பந்து இம்முறை பிராவோ ஒரு சக்தி வாய்ந்த ஷாட்டில் ஆஃப் திசையில் சிக்ஸ் விளாசினார். பிறகு ஒரு ரன் எடுத்து தோனியிடம் ஸ்ட்ரைக்கைக் கொடுக்க, ஆண்டர்சன் எப்படியும் தன் பலவீனமான வைடு ஆஃப் ஸ்டம்பில் வீசுவார் என்று எதிர்பார்த்த தோனி ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்தார் ஆனால் அது மீண்டும் ஒரு புல் லெந்த் பந்து லாங் ஆனில் மிகப்பெரிய சிக்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது, தோனி 34 பந்துகளில் 1 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 70 நாட் அவுட், ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். ஸ்ட்ரைக் ரேட் 205.88!!

கொலின் டி கிராண்ட்ஹோம் ஆல்ரவுண்டர், பந்து வீசுவார் என்று கோலிக்கு யாராவது கூறியிருக்கலாம், பாவம் மறந்துவிட்டார் போலும் இதனால் கடைசி 6 ஓவர்களை 2 பவுலர்கள் மட்டும் வீசினர், இதை எப்போதாவது குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் பார்க்க முடியுமா? பார்க்கலாம் கோலி கேப்டனாக இருந்தால். நெகி 3 ஓவர் 36 ரன், சிராஜ் 4 ஓவர் 48 ரன்கள், ஆண்டர்சன் 3.4 ஓவர் 58 ரன்கள்.

ஏ.பி.டிவில்லியர்ஸுக்கு பந்தை சாத்துக்குடி போல் பிழிந்து பிழிந்து கொடுத்த ஹர்பஜன், ஷர்துல், தாஹிர்!

முன்னதாக விராட் கோலி தொடக்கத்தில் இறங்கி 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுக்க டி காக் வெளுத்துக் கட்ட 4.2 ஓவர்களில் 35 ரன்கள் என்ற நல்ல தொடக்கம் கண்டது ஆர்சிபி. அப்போது தாக்குர் பந்தை மிட் ஆன் மேல் தூக்கி அடிக்க நினைத்தார் கோலி, சரியாக ஆடவில்லை, மிட் ஆனிலேயே ஜடேஜா டைவ் அடித்துக் கேட்ச் எடுத்தார். இதே ஓவரில் டிவில்லியர்ஸ் இறங்கியும், தாக்குர் கோலி, டிவில்லியர்ஸ் ஆடிய டி20 ஓவரை மெய்டனாக்கியது அவருக்கு உத்வேகம் அளித்திருக்கும், ஆனால் இந்த உத்வேகம் சில நிமிடங்கள்தான் நீடித்தது.

imran%20tahirjpg

டிவில்லியர்ஸிடம் சிக்கி விட்டோமே! தலையில் கை வைத்த இம்ரான் தாஹிர்.   -  படம். | பிடிஐ.

 

ஹர்பஜன் பந்து வீச வந்தார், இடது கையில் அடிக்காத குறைதான். 2வது பந்தை நடந்து வந்து லாங் ஆனில் சிக்ஸ் அடித்தார் டிவிலியர்ஸ், அடுத்ததாக கவருக்கு மேல் ப்பூ! என்று இன்னொரு சிக்சரை ஊதினார். பிறகு ஒதுங்கிக் கொண்டு ஒரு பவுண்டரி. 17 ரன்கள் வந்தது. ஜடேஜா வீச வந்தார் ஸ்வீப்பில் ஒரு சிக்ஸ். ஸ்வீப் ஷாட்டில் சிக்ஸ் அடித்த பிறகுதான் ஓகோ! ஜடேஜாவா என்று பவுலரையே பார்த்தார் டிவில்லியர்ஸ். அந்த ஓவரில் 11 ரன்கள். பிராவோவை டிகாக் நேராக மிக அழகான சிக்ஸ் ஒன்றை அடிக்க 10 ஒவர்களில் ஆர்சிபி 87/1.

இம்ரான் தாஹிர் வந்தார், டிவில்லியர்ஸ் விடுவாரா, இடது கையில் ஒரு பவுண்டரி, பிறகு ஸ்வீப் சிக்ஸ். அடுத்த பந்துக்கு ஆஃப் ஸ்டம்பில் ஒதுங்கிக் கொண்டு லாங் ஆனுக்கு மேல்... இல்லை கிரவுண்டுக்கு வெளியே சிக்ஸ். பந்தை எடுத்து வர ஆள் சென்ற போது கூலாக ஒரு ட்ரிங்க்ஸ் அருந்தினார் டிவில்லியர்ஸ். 20 பந்துகளில் 45. வாட்சனை மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடித்து டி காக் 35 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

அதன் பிறகுதான் தாக்கூரின் ‘சாத்துக்குடி’ ஓவர். மிட்விக்கெட் மேல் ஒரு சிக்ஸ், டிவில்லியர்ஸின் 23 பந்து அரைசதம் வந்தது. அடுத்த பந்து விரல் மூலம் வேகம் குறைத்தார், பயனில்லை நேராக ஒரு சிக்ஸ். அடுத்து கவர்திசையில் கேட்டு ஒரு சிக்ஸ் விளாசி தொடர்ச்சியாக 3 சிக்ஸ் அடித்தார். டி காக், டிவில்லியர்ஸ் 9 ஓவர்களில் 103 ரன்கள் விளாசினர்.

ஆனால் தோனியின் ஸ்மார்ட் கேப்டன்சியினால், டி காக் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 37 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து பிராவோவிடம் அவரிடமே கேட்ச் கொடுத்தார், டிவில்லியர்ஸிடம் பந்து காணாமல் போன இம்ரான் தாஹிர் மீண்டும் எழுச்சியுற்று டிவில்லியர்ஸ் (30 பந்து 68, 2 பவுண்டரி 8 சிக்ஸ்) மற்றும் கோரி ஆண்டர்சனை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்த ஆர்சிபி 14வது ஓவரில் 138/1 என்ற நிலையிலிருந்து மந்தீப் சிங்கின் 17 பந்து 32 ரன்களினாலும் கிராண் ஹோம், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது சிறு அதிரடியினாலும் 205 ரன்களை எட்டியது, ஆனால் ஸ்கோர் 220-225 ரன்கள் சென்றிருக்க வேண்டியது, மீண்டும் இம்ரான் தாஹிரைக் கொண்டு வந்து களவியூகத்தில் தன் கேப்டன்சி அனுபவத்தை தோனி வெளிப்படுத்தினார். கோரி ஆண்டர்சனுக்கு ஸ்லிப்பைக் கொண்டு வந்தது மாஸ்டர் ஸ்ட்ரோக்.

205/8 என்பது ஆர்சிபிக்குப் போதவில்லை, காரணம் கொலின் டிகிராண்ட்ஹோம் பவுலிங் போடுவார் என்பதை மறந்து தோற்க வழிதேடிக் கொண்டார் விராட் கோலி. சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடம், தோனி ஆட்ட நாயகன்.

http://tamil.thehindu.com/sports/article23678073.ece?homepage=true

Link to comment
Share on other sites

‘இறுதி ஓவர்களில் இவ்வளவு ரன்களைக் வாரி வழங்குவது கிரிமினல்’ - விராட் கோலி காட்டம்

kohlijpg

படம்.| ஏ.பி.

சிஎஸ்கே அணிக்கு எதிராக 205 ரன்கள் எடுத்தும் தோல்வி தழுவியதற்கு தன்னுடைய கேப்டன்சி கோளாறுகள் மீது கவனம் செலுத்த வேண்டிய கோலி, கடைசி ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியதை சாடுகிறார்.

சாஹல், உமேஷ் யாதவ் இருவரையுமே 15 ஒவர்களுக்குள் முடித்து விட்டு கடைசியில் இரண்டு பவுலர்கள் மட்டுமே வீசினால், என்ன ஆகும், வெரைட்டி இல்லாத பந்து வீச்சை தோனி என்ன செய்வார் என்று தெரியாதா கோலிக்கு? அதுதான் நடந்தது. கொலின் டி கிராண்ட்ஹோம் என்று ஒருவர் பந்து வீசுவார் என்ற நினைப்பேயில்லாத ஒரு கேப்டன்சி எப்படி வெற்றி பெற முடியும்?

 

ஆட்டம் முடிந்து விராட் கோலி கூறியதாவது:

இந்த ஆட்டத்திலிருந்து பல விஷயங்களைப் பார்க்கிறோம். நாங்கள் பந்து வீசிய விதம் ஏற்றுக் கொள்ளவே முடியாதது. இறுதி ஓவர்களில் இவ்வளவு ரன்களை வாரி வழங்கியது கிரிமினல்.

அடுத்தக்கட்டத்துக்கு நகரும் போது இந்த விவகாரத்தை விவாதித்து தீர்வு காண வேண்டும். 72/4 என்ற பிறகு 200 ரன்களை வெற்றிகரமாகத் தடுக்க முடியவில்லை, பின்நடுவரிசை வீரர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

வீரர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும், அவர்கள் மேல் போதுமான நம்பிக்கை வைக்க வேண்டும் அவர்களும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தெளிவுடன் செயல்பட வேண்டும்.

பிட்ச் நன்றாகத்தான் ஆடியது. ஸ்பின் ஒரு பெரிய காரணியாக இந்தப் பிட்சில் அமைந்தது. இரு அணிகளும் 200 ரன்கள் எடுக்கிறது என்றால் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினோம் என்று பொருள்.

ராயுடு இளம் வீரர் அல்ல, அவரும் 15 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். தரமான வீரர் அவர், இந்தியாவுக்காகவும் ஆடுகிறார். யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாது, ஆனால் ராயுடுவுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.

தோனி உண்மையில் நல்ல ‘டச்’சில் இருக்கிறார். பந்தை இந்த ஐபிஎல்-ல் நன்றாக அடிக்கிறார். ஆனால் எங்களுக்கு எதிராக எனும்போது பார்க்க நன்றாக இல்லை (சிரித்தபடி).

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

http://tamil.thehindu.com/sports/article23678838.ece

Link to comment
Share on other sites

பினிஷர் வேலை ஆட்டத்தை முடிப்பது அனுபவத்தை பகிர்வது: வெற்றிக்குப் பிறகு தோனி கூல்

dhoni3

தோனி அடித்த வின்னிங் சிக்ஸ்.   -  படம். | பிடிஐ

ஆர்சிபி அணிக்கு எதிராக தங்களது ஆதிக்கத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டுமொருமுறை நிலைநாட்டியது. தோனி 34 பந்துகளில் 70 ரன்கள், 7 சிக்சர்கள் என்று தாண்டவமாடியதோடு, ராயுடுவுடன் இணைந்து 101 ரன்கள் கூட்டணி அமைத்து விரட்டலை அபாரமாகத் திட்டமிட்டு வெற்றி பெற்றார்.

இதனையடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்ற தோனி கூறியதாவது:

 

ஏ.பி.டிவில்லியர்ஸ் அடியில் ஆர்சிபி 200 ரன்களுக்கும் மேல் சென்ற போது நான் விரட்டல் கடினமாக இருக்கும் என்று நினைத்தேன். 15-20 ரன்கள் அதிகம்தான்.

தொடக்கத்தில் முக்கிய பேட்ஸ்மென்களை இழந்தோம். ஆனால் இது சிறிய மைதானம், பந்துகள் பறக்கின்றன. மொத்தத்தில் திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தன. ஆனால் நாங்கள் நினைத்தபடி நடக்கவில்லை இருந்தாலும் நன்றாகவே நடந்தன.

இது சற்றே மந்தமான பிட்ச்தான். ஏ.பி.டிவில்லியர்ஸ் இன்னிங்ஸ் சிற்ப்பு வகையைச் சேர்ந்தது. தரமான ஸ்பின்னர்களுக்கு எதிராக டிவில்லியர்ஸ் ரன் வேகத்தைக் கூட்டியது அபாரம்.

அனைவரும் பங்களிக்கின்றனர், நாங்கள் பெரிய இலக்குகளை விரட்டுகிறோம். தாக்கூர் நன்றாக வீசுகிறார், முதலில் கொஞ்சம் வாங்கினார். இலக்கை விரட்டும் போது எதிரணியின் எந்த பவுலர்களுக்கு ஓவர்கள் மீதமிருக்கின்றன, இதில் கேப்டன் யாரைக் கொண்டு வருவார் என்று எதிர்நோக்கி அதற்குத் தக்கவாறு விளையாட வேண்டும்.

நாம் சிலவற்றை வெல்வோம், சிலவற்றை தோற்போம் ஆனால் பினிஷர் வேலை பணியை முடிப்பதே, பிறருக்கு உதவுவதே, அனுபவத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதே ஏனெனில் நான் பேட்டிங் இறங்க வேண்டிய தேவையே கூட இருக்காது. விரட்டலில் 2-3 பந்துகள் மீதம் வைத்தது விநோதம்தான்.

இந்த வரிசையில் ராயுடு மிக முக்கியமானவர். ரன்களை விரைவில் எடுத்து ஸ்கோர்போரடை நகர்த்துபவர் அவரே. சிறிய மைதானம் அவருக்கு வாகாக அமைந்தது. பெரிய மைதானங்களில் அவர் இதே ஷாட்டை ஆடும்போது கொஞ்சம் அவர் தடுமாறிவிடுகிறார்.

இவ்வாறு கூறினார் தோனி.

http://tamil.thehindu.com/sports/article23678544.ece

Link to comment
Share on other sites

வயது ஒரு தடையல்ல: கால்காப்பு, கையுறைகளுடன் ஓடியே ரன்களைத் தடுத்த ‘ஆல்ரவுண்ட்’தோனி; ‘தல’ ரசிகர்கள் உற்சாகம்

 

 
dhoni4

கோப்புப் படம். | ஏ.எப்.பி.

கிரிக்கெட் விளையாட வயது ஒரு தடையல்ல என்பதையும் உடல்தகுதி எவ்வளவு முக்கியம் என்பதையும் நிரூபிக்கும் விதமாக தோனி ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங், விக்கெட் கீப்பிங், பீல்டிங் என்று ஆல்ரவுண்டராகத் திகழ்ந்தார்.

வயது ஒரு எண்ணிக்கைதான், அதற்கும் மன உற்சாகத்துக்கும் உடல் ஒத்துழைப்புக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று தோனி தன்னை நிரூபித்து வருகிறார்.

 

எந்த அணிக்காக ஆடினாலும் தனது அர்ப்பணிப்பையும் கடப்பாட்டையும் வெளிப்படுத்தி 100% தன்னை ஈடுபடுத்தி ஆடக்கூடியவர் தோனி. நேற்று ஆர்சிபிக்கு எதிராக கால்காப்புடனேயே ஓடிச் சென்று பவுண்டரி வரை சென்று கூட ரன்களைத் தடுத்தார் சிஎஸ்கே கேப்டன் தோனி.

ஆர்சிபி இன்னிங்ஸின் 3வது ஓவரில் டி காக் ஆடிய புல் ஷாட் ஒன்று டாப் எட்ஜ் எடுக்க பந்து தோனியின் தலைக்கு மேல் பறந்து கொஞ்ச தூரம் சென்றது, தன் கால்காப்புகளுடன் விறுவிறுவென்று பந்தின் பின்னால் ஓடிய தோனி பவுண்டரி செல்லாமல் தடுத்து கையுறையைக் கழட்டிவிட்டு த்ரோ செய்தது ரசிகர்களிடையே பெரிய பாராட்டுதலையும் கரகோஷத்தையும் எழுப்பியது.

மேலும் ஒருமுறை பந்து ஸ்கொயர் திசையில் செல்ல அங்கு பீல்டர்கள் யாரும் இல்லை, விக்கெட் கீப்பிங்கிலிருந்து தோனியே ஓடினார், 40-50 அடி தூரம் ஓடிச்சென்று பந்தை பீல்ட் செய்து த்ரோ செய்தார், 2 ரன்கள் எடுக்கலாமா என்று யோசித்த பேட்ஸ்மென்கள் முடிவை மாற்றிக் கொண்டனர்.

சமீப காலங்களாக இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் அவரது இடத்தை சிலர் கேள்விக்குட்படுத்தி வரும் நிலையில் பேட்டிங், விக்கெட் கீப்பிங், விக்கெட் கீப்பிங்கிலேயே ஓடிச்சென்று பீல்டிங், அதிரடி சிக்சர்கள், சாதுரியமான பவுலிங் மாற்றம், புத்திசாலித்தனமான களவியூகம் என்று பழைய உத்வேக தோனியை நினைவூட்டியது ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.

ஆர்சிபி ரசிகர்கள், சென்னை ரசிகர்கள் என்று அனைவருமே தோனியின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

http://tamil.thehindu.com/sports/article23679265.ece

%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
 
Link to comment
Share on other sites

விராட் கோலிக்கு ரூ. 12 லட்சம் அபராதம்!#RCBvCSK

 
 

பெங்களூருவில் நேற்று நடந்த போட்டியில், தாமதமாகப் பந்துவீசியதன் காரணமாக, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் கோலிக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோலி

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று இரவு நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 206 ரன்கள் என்ற இமாலய இலக்கை, ராயுடு மற்றும் தோனியின் அதிரடியால் வெற்றிபெற்றது சென்னை அணி. இந்த வெற்றியின்மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது. 

 

இந்நிலையில், நேற்று பெங்களூரு பந்துவீச்சாளர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக, கேப்டன் கோலிக்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் ரூபாய் அபராதமாக அறிவித்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில், பெங்களூரு அணி முதல் முறையாக நடத்தை விதிகளை மீறிப் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது என ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி, 2 வெற்றி மற்றும் 4 தோல்விகளுடன்  புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

https://www.vikatan.com/news/sports/123343-virat-kohli-fined-for-slow-over-rate.html

Link to comment
Share on other sites

கோலி - 20/20 கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் இல்லை... ஏன்? #RCBvCSK

 
 

உங்கள் அணி 200 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டது. உங்களின் ஓப்பனிங் பெளலர்கள் 80 ரன்களுக்குள் எதிரணியின் 4 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டனர். ஆனாலும், உங்களால் வெற்றிபெறமுடியவில்லை என்றால் தவறு எங்கேயிருக்கிறது கோலி?

Virat Kohli - விராட் கோலி

விராட் கோலி இந்திய அணிக்குத் தலைமை தாங்கி பல வெற்றிகளைப் பெற்றுத்தந்திருக்கலாம். ஆனால், அந்த வெற்றிகளுக்குத் தன்னுடைய கேப்டன்ஸிதான் காரணம் என அவர் உரிமை கொண்டாட முடியாது என்பதை உலகுக்குச் சொல்லியிருக்கிறது கேப்டன் கோலியின் சமீபத்திய சொதப்பல்கள்.

ஒரு தலைவன் என்றால் அவனுக்கு இலக்கு என்பது இருக்க வேண்டும். இலக்கில்லாத தலைவன் தலைவனே கிடையாது. எது டார்கெட் என்று தெரிந்தால்தான் நீங்கள் டார்கெட்டை அடைவதற்கான பயணத்தில் பயணிக்க முடியும். தலைவன் என்பவன் சர்ப்ரைஸ்களைச் சந்திக்கலாம். ஆனால், சர்ப்ரைஸ்களை எப்படிச் சாமாளிக்க வேண்டும் என்று தெரிந்திருக்கவேண்டும். ஒரு பிளான் சொதப்பினால், அடுத்த பிளான், அதற்கு அடுத்த பிளான் எனத் தாவ வேண்டும். ஆனால் கோலிக்கு டார்கெட் என்னவென்றே தெரியவில்லை.

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறவேண்டும் என்பது முக்கியம்தான். ஆனால், ஐபிஎல் சாம்பியன்ஸ் என்கிற பட்டத்தை பெங்களூரு அணிக்கு வென்றுதரவேண்டும் என்பதுதான் கோலியின் இலக்கு. ஒரு போட்டியில் தோற்கலாம், ஒரு போட்டியில் வெற்றிபெறலாம். ஆனால், அந்தப் பிராசஸில் தோல்வியில் கற்றுக்கொண்ட பாடங்களை வைத்துக்கொண்டு, அடுத்தடுத்த போட்டிகளில் அதைச் சரிசெய்ய வேண்டும். 

இங்கேதான் கோலி, தோனியிடமிருந்து பாடம் கற்க வேண்டும்.

விராட் கோலி

தோனி என்ன செய்தார் தெரியுமா?

2010 தென் ஆப்பிரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. அதில் ஒரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அணியுடன் மோதுகிறது. முதலில் ஆடும் சென்னை 162 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடும் விக்டோரியா அணியும் 162 ரன்கள் எடுக்க ஆட்டம் `டை’ ஆகிறது. போட்டி சூப்பர் ஓவருக்குப் போகிறது. சென்னையின் பெளலர்களில் அன்று சிறப்பாகப் பந்துவீசியவர் முத்தையா முரளிதரன். 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட் எடுத்து 17 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார்.

ஆட்டம் `டை’ ஆனதும் சென்னையின் பெளலர்கள் சூப்பர் ஓவர் வீசத் தயங்குகின்றனர். யார் சூப்பர் ஓவர் போடுகிறீர்கள் என்று தோனி கேட்கும்போது சீனியர்கள் எல்லோருமே சைலன்ட்டாக இருக்க அஷ்வின் மட்டும் நம்பிக்கையுடன் முன்னே வருகிறார். தோனி அஷ்வினிடம் பந்தைக் கொடுக்கிறார். டேவிட் ஹஸி மூன்று சிக்ஸர்கள் வெளுக்க, தோனியின் தவறான முடிவால் சென்னை அணி தோல்வியடைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுகின்றன.

ஆனால், தோனி இந்த விமர்சனங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. மாறாக, அஷ்வினுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தார். `சீனியர்கள் எல்லோரும் இருக்க ஜுனியரான உன்மேல் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறேன்' என்பதை அஷ்வினுக்கு உணர்த்தினார் தோனி. அந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் அஷ்வின்தான். 13 விக்கெட்டுகள் எடுத்து `கோல்டன் விக்கெட் அவார்டு’ மட்டுமல்லாது தொடர் நாயகன் விருதையும் வெல்கிறார் அஷ்வின். அதுதான் தோனியின் தலைமை!

நம்பிக்கையைக் கெடுத்த கோலி!

 பெங்களூரில் நேற்று நடந்த சென்னைக்கு எதிரான போட்டியில் சாஹலை 13-வது ஓவரோடு கோலி முடித்துவிட்டார். அதன்பிறகு பந்து வீசப்போகிறவர்கள் சிராஜும், கோரி ஆண்டர்சனும்தான் என்பது தோனிக்கும், சென்னை டீமுக்கும் தெரியும் வகையில்தான் தன்னுடைய பெளலிங் பிளானை வைத்திருந்தார் கோலி. பெளலிங் அட்டாக்கில் ஒரு சின்ன சர்ப்ரைஸ் கூட கோலி, தோனிக்குத்தரவில்லை. 

18-வது ஓவரின் இறுதியில் அம்பதி ராயுடு அவுட்டாகிறார். இன்னும் 2 ஓவர்கள்தாம் இருக்கின்றன. 12 பந்துகளில் 30 ரன்கள் எடுக்கவேண்டும் என்கிற நிலை. பிராவோ களம் இறங்குகிறார். பிராவோ வேகப்பந்து வீச்சாளர்களை ஈஸியாக அடித்துவிடுவார். ஆனால், ஸ்பின்னர்களிடம் திணறுவார் என்பது எல்லோருக்குமே தெரிந்த உண்மை. பெங்களூருவின் முக்கியமான ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தருக்கு 3 ஓவர்கள் மீதம் இருக்கிறது. பிராவோவுக்கு எதிராக வாஷிங்டன் சுந்தரைக் களமிறக்கலாம். ஆனால், கோலி அதைச் செய்யவில்லை. 

``உனக்கு ஒரு ஓவர் கொடுத்தேன். 14 ரன்கள் அடித்துவிட்டார்கள். அவ்ளோதான்... ஓரமாய் போய் உட்காரு'' என்பதுபோலத்தான் இருந்தது கோலியின் ஆட்டியூட். 

விராட் கோலி

சுந்தரை இழக்காதீர்கள் கோலி!

மிகப்பெரிய கான்ஃபிடன்ஸுடன் ஐபிஎல் தொடரைத் தொடங்கினார் வாஷிங்டன் சுந்தர். இலங்கைக்கு எதிரான 20/20 தொடரில் வாஷிங்டன் மிகச்சிறந்த பெளலராகப் புகழப்பட்டார். கான்ஃபிடன்ஸ் லெவலில் உச்சத்திலிருந்த சுந்தரின் கான்ஃபிடன்ஸை ஐபிஎல்-ல் வைத்து சிதைத்துவிட்டார் கோலி. வெற்றியோ, தோல்வியோ 19-வது ஓவரில் பிராவோவுக்கு எதிராக கோலி, சுந்தரைக் களமிறக்கியிருக்க வேண்டும். அது வாஷிங்டன் சுந்தருக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கும். அடுத்தடுத்த போட்டிகளில் கேப்டன் நம்மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார் என அவர் ஆடியிருப்பார். மார்க்கண்டே, முஜீப், ரஷித் கான் என ஸ்பின்னர்கள்தாம் இந்த ஐபிஎல்லின் ஹீரோஸ். பெங்களூரு அணிக்குள் இருக்கும் அப்படிப்பட்ட ஹீரோதான் வாஷிங்டன் சுந்தர். ஆனால் வாஷிங்டனின் நம்பிக்கையை மொத்தமாக காலி செய்துவிட்டார் கோலி. 

தன்னம்பிக்கை... தன்முனைப்பு வெர்சஸ் தலைமைப்பண்பு!

ஒரு பேட்ஸ்மேனாக கோலிக்குத் தன்னம்பிக்கை, தன் முனைப்பு என எல்லாமே உண்டு. ஆனால், கேப்டனாக இருப்பவர் தன்னை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கக் கூடாது. `200 ரன்கள் அடித்தாலும் கவலையில்லை; நான் அடித்துவிடுவேன்' என்று தன்னம்பிக்கையோடு இருக்கலாம். ஆனால், நான் அடிக்கவில்லை என்றால் யார் அடிப்பார்கள் என்கிற பிளான் வேண்டும். சிறந்த பெளலர்களை ஓப்பனிங்கிலேயே முடித்துவிட்டால், டெத் ஓவர்களில் யார் பந்துவீசுவார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும். ஆனால், இது எதுவுமே கோலியிடம் இல்லாததே தொடர் தோல்விகளுக்குக் காரணம்.

இலக்கில்லாத தலைவர்கள் ஒருபோதும் மற்றவர்களுக்கு இலக்குகளை நிர்ணயிக்க முடியாது.

https://www.vikatan.com/news/sports/123371-virat-kohli-is-not-the-best-t20-captain.html

Link to comment
Share on other sites

ஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்! #RCBvCSK #MatchAnalysis

 
 

ராயல் சேலஞ்சர்ஸ் நிர்ணயித்த 205 ரன்களை சேஸ் செய்து மிரட்டலாக வென்றுவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். வெற்றிக்குக் காரணம் என்ன? ராயுடுவின் அதிரடி..? தோனியின் சரவெடி..? பிராவோவின் டெத் பௌலிங்..? இவற்றையெல்லாம் 'இதர காரணங்கள்' பட்டியலில்தான் சேர்க்கவேண்டும். அப்போ, முக்கிய காரணம்... இன்னுமும் பெங்களூரு அணியில் கோரி ஆண்டர்சன் இருக்கிறார். ஆனால், பௌலர் வோக்ஸ் இல்லை; கோரிக்கு 4 ஓவர்; அதிலும் கடைசி ஓவர்... வாஷிங்டனுக்கு ஒரே ஓவர், 8-வது ஓவர் முடிவில் உமேஷ் யாதவின் ஸ்பெல் முடிந்தது... - ஜஸ்ட் கேப்டன் கோலி திங்ஸ்..!

தோனி

பெங்களூருக்கு தண்ணி காட்டிய சென்னை சூப்பர்கிங்ஸ்! - மீம்ஸ் மேட்ச் ரிப்போர்ட்

டாஸ் வென்றதும் பௌலிங் செய்த தோனி, அணியில் இரண்டு மாற்றங்கள் என்று அறிவிக்கிறார். கரண் ஷர்மாவுக்கு பதில் ஹர்பஜன். ஆர்.சி.பி-யில் இரண்டு இடதுகை பேட்ஸ்மேன்கள். அதற்காக பாஜி! இன்னொரு மாற்றம்தான் சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை வியக்க வைத்தது. டு ப்ளெஸ்ஸிக்குப் பதிலாக தாஹிர். `எதுக்கு ஒரு பேட்ஸ்மேனுக்குப் பதில் எக்ஸ்ட்ரா பௌலர்?' குழம்பினார்கள். அதற்கு இரண்டு காரணங்கள் : பேட்ஸ்மேன் கோலி, டி வில்லியர்ஸ் இருவரையும் சமாளிக்க ஒரு கூடுதல் பௌலர் தேவை. ஆர்.சி.பி-யின் பந்துவீச்சுக்கு ஐந்து பேட்ஸ்மேன்களே போதும்! பிளான் சக்சஸ். 

தோனியின் மாற்றங்கள் கிரிக்கெட் நிபுணர்களுக்குத் தெளிவாகப் புரிந்திருக்கும். ஆனால், கோலி செய்த மாற்றங்கள்..? வோக்ஸ், வோஹ்ரா நீக்கப்பட்டு டி கிராந்தோம், பவன் நெகி..! 

'வோக்ஸ் இல்லனா யாரு டெத் ஓவர் பொடுறது?
'அதான் கோரி இருக்கான்ல'
'அப்போ மிடில் ஓவர் யாரு போடறது?'
'அதான் வோஹ்ரா-க்குப் பதில் நெகி எடுத்திருக்கேன்ல'
'அப்போ ஓப்பனிங்?'
'அதான் நான் இறங்குவேன்ல'

இப்படி நானும் ரௌடிதான் ஆனந்த்ராஜ் பேசுவது மாதிரிதான் இருந்தது கோலியின் டீம் செலக்ஷன்.

கோலி

ஆட்டத்தைக் கொஞ்சம் மெதுவாகத்தான் தொடங்கியது கோலி-டி காக் ஜோடி. சஹார் வீசிய முதல் ஓவரில் தன் டிரேட்மார்க் ஃப்ளிக்  ஷாட் மூலம் முதல் பௌண்டரியை விளாசினார் கோலி. அடுத்த ஓவரில் தாக்கூர் வீசிய அவுட் ஸ்விங்கை கோலி அடித்த ஷாட்..! ஆசம். ஃபுல் லென்த் பந்தில் மிட் ஆஃப் ஏரியாவில் சூப்பராக விளாசினார் விராட். ஆனால், ஐந்தாவது ஓவரில் தாக்கூரின் ஸ்லோ பாலில் டைமிங் மிஸ்ஸாகி ஜடேஜாவிடம் கேட்ச்சாகி வெளியேறினார் (18 ரன்கள்) கோலி.

இரு ஜாம்பவான்களில் ஒருவர் அவுட். இன்னொரு ஜாம்பவானுக்கு நெருக்கடி. 15 ஓவரும் தாக்குப்பிடிக்கவேண்டிய நெருக்கடியுடன் களமிறங்கினார் ஏ.பி. முதல் நான்கு பந்துகளும் டாட். ஷர்துல் தாக்கூர் வாழ்க்கையில் எத்தனை சாதனைகள் படைத்தாலும், இதுதான் அவரது மிகச்சிறந்த ஓவராக இருக்கும். கோலி, டி வில்லியர்ஸ் இருவரையும் வைத்து டி-20 ஃபார்மட்டில் ஒரு மெய்டன் வீசுவதென்றால் சாதாரண விஷயமா!

5 ஓவர்களில் ஆர்.சி.பி 35/1. குதூகலமாக இருந்த சென்னை ரசிகர்களை சைலன்ட் மோடுக்குக் கொண்டுவந்தார் டி வில்லியர்ஸ். ஹர்பஜன் வீசிய அடுத்த ஓவரிலேயே 2 சிக்ஸர், 1 பௌண்டரி அடித்து 'இட்ஸ் ஜஸ்ட் தி பிகினிங்' என்று தன் விஸ்வரூபத்துக்கு டைட்டில் கார்டு போட்டார். அடுத்த ஓவர் ஜடேஜா, அதுவரை அமைதி காத்த டி காக், 'நானும் சவுத் ஆஃப்ரிக்காக்காரன்தாண்டா' என ஸ்கொயர் திசையில் சிக்ஸர் பறக்கவிட்டார். அடுத்தடுத்த ஓவர்களில் ஓவருக்கு ஒரு பௌண்டரி, சிக்ஸர் அடித்து ரன்ரேட்டை சீராக உயர்த்தியது இந்த தென்னாப்பிரிக்க ஜோடி. 10 ஓவர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் 87/1.

டி வில்லியர்ஸ்

இவர்களைப் பிரிக்க, தன்னிடம் இருக்கும் தென்னாப்பிரிக்க ஆயுதத்தைப் பயன்படுத்தினார் தோனி. முதல் பால் ரிவர்ஸ் ஸ்வீப்பில் பௌண்டரி. அதற்கு முன்பு டி காக் ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் முயற்சி செய்தார். ஆனால், டைமிங் சரியாக இல்லை. பால் கனெக்ட் ஆகவில்லை. ஆனால், ஏ.பி..! டைமிங்னா டைமிங்... அப்படியொரு டைமிங். மூன்றாவது பால் ஸ்வீப் செய்து சிக்ஸர். அடுத்த பந்தும் அதே மாதிரி... ஸ்வீப் செய்து லாங் ஆன் திசையில் பறக்கவிட்டார். ஃப்ளைட் மோடுக்குச் சென்ற பந்து சின்னசாமி ஸ்டேடியத்தைத் தாண்டியும் பறந்துகொண்டிருந்தது. 

அடுத்து வாட்சன் வீசிய ஓவரில் மிட்விக்கெட் ஏரியாவில் சிக்ஸர் அடித்து அரைசதம் அடித்தார் டி காக். 'இவ்வளவு நேரம் நான் ஏ.பி-ய மட்டும்தான பாத்துட்டு இருந்தேன்' என்பதுபோல் ஃபீல் செய்தார்கள் ரசிகர்கள். அவர் ஆடிய ஆட்டத்தில் இந்த மனிதனை மறந்துதான் போயிருந்தார்கள். ஆட்டம் அப்படி, அடி அப்படி. அடுத்த ஓவர் ஷர்துல் தாக்கூர். போன ஓவரில் வைத்த டாட் பாலுகளுக்கெல்லம் இந்த ஓவரில் சிக்ஸர் அடித்து 'காம்பன்சேட்' செய்தார் ஏ.பி. முதல் பந்து மிட்விக்கெட்டில் சிக்ஸ். 23 பந்துகளில் அரைசதம். சின்னசாமி மைதானம் அதிர்ந்தது! அடுத்தடுத்த பந்துகளையும் சிக்ஸர் அடித்து அலறவைத்தார். பந்து போட்டவுடன் 'யாரு சாமி இவன், எங்கிருந்து வந்தான்' என்றுதான் சென்னை பௌலர்கள் ஃபீல் செய்தனர். 

பிராவோ

அடுத்த ஓவர் பிராவோ. முதல் பந்திலேயே டி காக்கை தானே கேட்ச் செய்து, ஒரு சாம்பியன் டான்ஸ் ஆடி, அதுவரை அமைதியாய் இருந்த மஞ்சள் கொடிகளை பறக்கவிட்டார். அடுத்து யார்? மந்தீப் சிங் நல்ல ஃபார்மில் இருக்கிறார். கிராந்தோம் நன்றாக ஆடுவார். யார் களமிறங்குவார்கள். இப்படி நினைத்துக்கொண்டிருந்த பெங்களூரு ரசிகர்களுக்கு 'பிம்பிளிக்கி பிலாப்பி' என கோரி ஆண்டர்சனை களமிறக்கினார் கேப்டன் கோலி. 'பாய்சன் கிடைச்சாலே பாயாசம் மாதிரி குடிப்பேன். பாயாசமே கிடைச்சிருக்கு' என்று குஷியானார் பிராவோ. ஐந்து டாட் பால்கள். இவர் ஸ்லோ பால்களாக உருட்ட, அவர் விருட்டு விருட்டு என்று சுத்த, ஐந்து பந்துகளையும் ஃபேஸ் பண்ணியது என்னவோ கீப்பர் தோனிதான். 

இதையெல்லாம் பார்த்து ஏ.பி டென்ஷன் ஆகிவிட்டாரோ என்னவோ. அதுவரை ஒரு தவறான ஷாட்கூட ஆடாதவர், தாஹிர் வீசிய வைட் பாலை அடிக்க, ஸ்வீப்பர் கவரில் நின்ற பில்லிங்ஸ் நோக்கிப் பறந்தது பந்து. அதைக் கொஞ்சம் முன்னாடி வந்து அவர் பிடித்துவிட்டு அன்னார்ந்து பார்த்தால் தன் கண் முன்னால் நிற்கிறார் தாஹிர். மனுஷன் பந்து போட்டதுமே ஓடத் தொடங்கிவிட்டார். பந்துக்கும் அவருக்கும் கொஞ்சம்தான் தூரம். இல்லையேல் பில்லிங்ஸுக்குப் பதில் அவரேகூட கேட்சைப் பிடித்திருப்பார். அடுத்த பந்தில் கோரி ஆண்டர்சனையும் அவுட்டாக்கி தடைபட்டிருந்த தன் மாரத்தானை வெற்றிகரமாக முடித்தது பராசக்தி எக்ஸ்பிரஸ்.

தாஹிர் 

தோனியின் சிக்ஸர்கள், அம்பதி ராயுடுவின் விளாசல்... CSK-ன் வின்னிங் மொமன்ட்ஸ்!

அடுத்து வந்த மன்தீப் நன்றாகவே ஆடினார். ஒரு பௌண்டரி, 3 சிக்ஸர்கள்.. 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார். 230 ரன்களுக்கு மேல் போகும் என்று நினைத்த ஆர்.சி.பி-யின் ஸ்கோர் 19 ஓவர்களில் 191/5. கடைசி ஓவரில் பேட்டிங் செய்ய வந்தார் பவன் நெகி. நன்றாக பேட்டிங் செய்துகொண்டிருக்கும் வாஷிங்டனுக்கு முன்னால் அவர் வந்ததால், டி வில்லியர்ஸ் மாதிரி ஆடுவார் என்று எதிர்பார்த்தனர் பெங்களூர் ரசிகர்கள். ஆனால், அவரோ ரோஹித் ஷர்மாவாக மாறினார். முதல் பந்தில் கிராந்தோம்மை ரன் அவுட்டாக்கி, அடுத்த பந்தில் தானும் அவுட்டானார். ஏதோ கடைசி 3 பந்துகளில் வாஷி 12 ரன்கள் எடுக்க 205 ரன்கள் எடுத்தது ஆர்.சி.பி!

சென்னை சேஸ் செய்ய இது பெரிய டார்கெட். ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பௌலிங் டிஃபண்ட் செய்ய இது சின்ன டார்கெட். அதனால் சென்னை ரசிகர்களின் நம்பிக்கை அதிகமாகவே இருந்தது. அந்த நம்பிக்கையில் முதல் ஓவரிலேயே வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார் வாட்டோ. நெகி பந்துவீச்சில் கோலியைப் போலவே டைமிங் மிஸ்ஸாகி மிட் ஆனில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னாவை, ஸ்லோ ஷார்ட் பால்களாகப் போட்டு வரவேற்றார் உமேஷ் யாதவ். 3-வது ஓவர்... சூப்பர் கிங்ஸின் சேஸ் இங்குதான் கிக் ஸ்டார்ட் ஆனது. வாஷிங்டன் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் விளாசினார் ராயுடு. அடுத்து யாதவ் ஓவரிலும் ஒரு சிக்ஸர் என மிரட்டல் ஃபார்மில் இருந்தார்.

ராயுடு

அடுத்த பந்துவீசிய முகமது சிராஜையும் விடவில்லை. இரண்டு பௌண்டரி அடித்து சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை உற்சாகமாகவே வைத்திருந்தார் ராயுடு. ரெய்னாவும் அந்த ஓவரில் பௌண்டரி அடிக்க, 'ஈசியா ஜெயிச்சிடலாம்' என்று மனக்கோட்டை கட்டினார்கள் யெல்லோ ஆர்மி சோல்ஜர்ஸ். ஆனால், உமேஷ் வீசிய ஃபுல் லென்த் பந்தில் லீடிங் எட்ஜாகி ரெய்னா அவுட்டாக, சிவப்புக் கொடியும் பறக்கத் தொடங்கியது.  ஸ்பின்னில் திணறும் பில்லிங்ஸை, அடுத்த ஓவரே சஹாலைக் கொண்டுவந்து காலி செய்தார் கோலி. '3 விக்கெட் போயிருச்சு... இப்போ தோனிதான்' என்று எதிர்பார்த்தால், 82 பந்துகளில் 147 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கினார் ஜடேஜா. ஆமா, ஜடேஜா..!

7 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளுக்கு 61 ரன் எடுத்துள்ளது சென்னை. ஒரு இடதுகை பேட்ஸ்மேன் வேறு களத்தில். இப்போது வாஷிங்டனுக்கு மீண்டும் பௌலிங் கொடுத்திருந்தால், அவரும் ஓரளவு நம்பிக்கை பெற்றிருப்பார். ஏற்கெனவே 3 ஓவர்கள் போட்டிருந்த உமேஷ் கையில் பந்தைக் கொடுத்தார் கோலி. வோக்ஸ் இல்லை. அணியில் இருக்கும் இன்னொரு அனுபவ ஃபாஸ்ட் பௌலரின் ஸ்பெல் எட்டாவது ஓவரிலேயே முடிகிறது. எங்கிருந்துதான் இப்படி ஐடியாக்கள் பிடிக்கிறாரோ கோலி..?

தோனி

அடுத்த ஓவர் சஹால்... 'சரி நம்ம இருந்தா நம்ம டீம் ஜெயிக்காது' என அணியின் நலனுக்காக தன் விக்கெட்டைத் தியாகம் செய்து வெளியேறினார் ஜட்டு. தோனி வந்தார். சிங்கிள், டபுள் என ரன் சேர்த்தது தோனி - ராயுடு கூட்டணி. அவசரம் காட்டவில்லை. 13-வது ஓவர் முடிகிறது. 107/4. பெங்களூரு அணியின் டாப் 2 பௌலர்களான உமேஷ், சஹால் இருவருக்கும் இனி ஒரு ஓவர் கூட இல்லை. இனி இருக்கும் பந்துவீச்சாளர்கள் சிராஜ், நெகி, வாஷிங்டன், கிராந்தோம் அண்ட் தி கிரேட் கோரி ஆண்டர்சன் மட்டும்தான். செங்கிஸ்கான் மோடுக்கு மாறினார்கள் கோலி, ராயுடு இருவரும். 

பெங்களூரு அணியின் முக்கிய ஆயுதங்களுக்கு ஓவர் காலியானதும், அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள். சரியாக அப்போதென்று பார்த்து நெகி கையில் பந்தைக் கொடுத்து, 'நல்லா வாட்டமா போட்டுக் கொடு' என்று அனுப்பி வைத்தார் கோலி. 
'தோனி எப்படிப் போட்டா நல்லா அடிப்பாரு?'
'ஃபுல் லெந்த் பால், நல்ல ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போட்டா ஸ்ட்ரெய்ட்டா விட்டு விளாசுவாரு'
'ஃபைன்..போட்டுடலாம்'
அதே மாதிரி வீசினார் நெகி. முதல் இரண்டு பந்துகளுமே சிக்ஸர். அதுவும் தோனியின் பலத்துக்கு, பேட்டில் பட்ட மறுநொடி ரசிகர்களை அடைந்தது பந்து. தோனிக்கு வாட்டமாக ஆஃப் சைடில் போட்ட நெகி, ராயுடு ஸ்டிரைக் வந்ததும், அவருக்கு வாட்டமாக லெக் சைடில் போட, அவரும் அதை சிக்ஸராக்கி, அரைசதம் அடித்தார். அடுத்தது சிராஜ். நன்றாக லென்த்தை வேரி செய்தார். ஒரு சிக்ஸர் போனது. ஆனாலும், மற்ற 5 பந்துகளையும் நன்றாகவே வீசினார். தேவையான ரன்ரேட் 13.33 என இருக்கும்போது 9 ரன் ஓவரெல்லாம் சிறப்பானதே. 

தோனி

அடுத்து கோரி ஆண்டர்சன். ராயுடு ஒரு பந்தை காற்றில் பறக்கவிட, கேட்சை மிஸ் செய்தார் உமேஷ். அதைப் பயன்படுத்திய ராயுடு, கவர் திசையில் ஒன்றுமாக, மிட்விக்கெட்டில் ஒன்றுமாக அந்த ஓவரிலேயே இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டார். அடுத்த ஓவர் சிராஜ். மீண்டும் நன்றாகவே பந்துவீசினார். கடைசி பந்து மட்டும் பௌண்டரி போக, அந்த ஓவரில் 10 ரன்கள் எடுக்கப்பட்டது. 3 ஓவர்களில் 45 ரன்கள் தேவை. இப்போதாவது வாஷிங்டனைப் பயன்படுத்தியிருக்கலாம். குறைந்தபட்சம் கிராந்தோமையாவது. 'மாட்டேன்..மாட்டவே மாட்டேன்' எனக் கூறி மீண்டும் கோரி ஆண்டர்சனை அழைத்தார் கோலி.

'ஓவருக்கு எத்தனை ரன் வேணும்? 15 தான'... சரியாக அதைக் கொடுத்தார் கோரி. தோனி எங்கு போட்டால் அடிப்பாரென்று நெகி வீசினாரோ அதே லைன், அதே லென்த்... பாரபட்சமின்றி பறக்கவிட்டார் தோனி. 29 பந்துகளில் அரைசதம். பெங்களூரு மிரண்டது! தன் பங்குக்கு ஒரு பௌண்டரி அடித்து ராயுடு ரன் அவுட் ஆனார். இரண்டு ஓவர்களில் 30 ரன்கள். சிராஜ்... முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கிடைக்க ஆட்டம் கொஞ்சம் சூடு பிடித்தது. சென்னை ரசிகர்கள் கொஞ்சம் பதற்றப்பட, 'நான் இருக்கேன்' என ஃபுல் டாஸ் பந்தை பாயின்ட் திசையில் சிக்ஸர் அடித்து கூலாக்கினார் தோனி. அடுத்து தொடர்ந்து 3 வைட்கள். படுமோசம்தான். ஆனால், மற்ற பௌலர்களெல்லாம் தோனி அடிக்கும் இடமாகப் பார்த்து பந்துவீசையில், அவர் எங்கு போட்டால் அடிக்கமாட்டார் என்று யோசித்து, அதை முயற்சி செய்ததற்காகவாவது அவரைப் பாராட்டவேண்டும். 

#RCBvCSK

 

கடைசி ஓவரில் 15 ரன்கள் வேண்டும். யார் பௌலர்? அதிலென்ன சந்தகேம், கோரி தான். முதல் பந்து பௌண்டரி, அடுத்து சிக்ஸர், மூன்றாவது பால் சிங்கிள், அடுத்த பால் சிக்ஸர். முடிஞ்சிருச்சு... இதுக்கு எதுக்கு இவ்ளோ டென்ஷன் என கூலாக ஆட்டத்தை முடித்தார் கோரி ஆண்டர்சன்... ஸாரி கோலி! கடைசி 7 ஓவர்களில் 99 ரன்களை டிஃபண்ட் செய்ய முடியாமல் தோற்றுள்ளது பெங்களூரு. தோனி, ராயுடு ஆகியோரின் ஆட்டம் நிச்சயம் வெற்றிக்குக் காரணமானவைதான். ஆனால், அதை சாத்தியப்படுத்த பேருதவி செய்தது கோலி எடுத்த முடிவுகள் மட்டுமே! 

https://www.vikatan.com/news/sports/123356-kohlis-poor-decisions-leads-to-csks-thumping-victory.html

Link to comment
Share on other sites

சிஎஸ்கே-பெங்களூரு மோதல்: 5,000 ரன்களைக் கடந்த தோனி, கோலிக்கு 100-வது போட்டி: 12 சுவாரஸ்யத் தகவல்கள்

 

 
koli%20vs%20dono

பெங்களூரில் நேற்று போட்டிதொடங்கும் முன் தோனியை கட்டித்தழுவிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி   -  படம் உதவி: ட்விட்டர்

பெங்களூரு நகரில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பல்வேறு சுவராஸ்யமான புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன.

பெங்களூரு நகரில் ஐபிஎல் போட்டியில் 24-வது லீக் ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிரடியாக விளையாடிய ராயுடு 52 பந்துகளில் 82 ரன்களும், கேப்டன் தோனி 34 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். இந்தப் போட்டி குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.

1. டி20 கிரிக்கெட் போட்டியில் கேப்டன் பொறுப்பு ஏற்ற விராட் கோலிக்கு நேற்று 100-வது போட்டியாகும். இதையடுத்து 100 போட்டிகளுக்கும் மேல் கேப்டன் பதவி வகித்த 3-வது வீரர் எனும் பெருமையை கோலி பெற்றார். இதற்கு முன் தோனி (245), கம்பீர் (170) போட்டிகளில் கேப்டனாகப் பணியாற்றியுள்ளனர்.

2. பெங்களூரு சின்னச்சாமி அரங்கில் நடந்த போட்டிகளில் மட்டும் விராட் கோலி விளையாடி நேற்றைய போட்டியின் மூலம் 2,000 ரன்கள் சேர்த்துள்ளார். ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் ஒருவர் 2,000 ரன்கள் சேர்ப்பது இதுதான் முதல் முறையாகும்.

3. டி20 போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் நேற்றைய போட்டியில் 100-வது விக்கெட்டை வீழ்த்தினார்.

4. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ஐபிஎல் போட்டிகளில் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைப்பது நேற்றுடன் 4-வது முறையாகும்.

5. இதற்கு முன் 2008-ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக முரளிகார்த்திக் வீசிய பந்தில் சிக்ஸர் அடித்து தோனி அணியை வெற்றி பெறவைத்தார்.

6. 2-வதாக 2010-ம் ஆண்டு தர்மசாலாவில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இர்பான் பதான் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்தார் தோனி.

7. 3-வதாக 2016-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அக்சர் படேல் பந்துவீச்சில் தோனி சிக்ஸர் அடித்து அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றார். இந்தமுறை புனே அணியில் தோனி இருந்தார்

8. டி20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக 5 ஆயிரம் ரன்களை நேற்றைய போட்டியில் மூலம் தோனி கடந்தார். கவுதம் கம்பீர் (4,242ரன்கள்) 2-வது இடத்திலும் விராட் கோலி (3591) 3-வது இடத்திலும் உள்ளனர்.

9. பெங்களூரில் நேற்று நடந்த பெங்களூரு, சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. ஐபிஎல் வராலாற்றில் ஒரே போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும்.

10. ஐபிஎல் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்ட ஸ்கோரை வெற்றிகரமாக சென்னை சூப்பர் கிங்ஸ் சேஸிங் செய்தது இது 3-வது முறையாகும்.

11. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில் அதாவது பெங்களூரு சின்னச்சாமி அரங்கில் நேற்றுடன் 32-வது முறையாக தோல்வி அடைந்தது. இதற்கு முன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி டெல்லி பெரஷோ கோட்லா மைதானத்தில் 33 முறை தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

12. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் இம்ரான் தாஹிர் பந்தில் 111 மீட்டர் உயரத்துக்கு சிக்ஸர் அடித்ததில்  பந்து காணாமல் போனது.

http://tamil.thehindu.com/sports/article23684081.ece

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்

 

ஐபிஎல் தொடரில் ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் தனது சிறப்பான பந்து வீச்சால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீழ்த்தியது. #VIVOIPL #SRHvKXIP #SunrisersHyderabad #KingsXIPunjab

 
 
ஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்
 
ஐதராபாத்:
 
ஐபிஎல் தொடரின் 25-வது ஆட்டம் ஐதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து ஐதராபாத் அணியின் ஷிகர் தவான், கேன் வில்லியம்சன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
 
பஞ்சாப் அணியின் அன்கித் ராஜ்பூட் முதலில் இருந்தே சிறப்பாக பந்துவீசினார். இதனால் ஐதராபாத் அணியின் விக்கெட்டுகள் 
விரைவில் வீழ்ந்தன.
 
மணீஷ் பாண்டே மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. யூசுப் பதான் 21 ரன்களுடன் களத்தில் இருந்தார். பஞ்சாப் அணி சார்பில் அன்கித் ராஜ்பூட் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.
 
201804262343092684_1_ankit-2._L_styvpf.jpg
 
இதையடுத்து, பஞ்சாப் அணி 133 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெயிலும் களமிறங்கினர். இருவரும் இணைந்து பஞ்சாப் அணி அரை சதம் கடக்க உதவினர்.
 
ஆனால், ஐதராபாத் அணியினர் துல்லியமான பந்துவீச்சு மற்றும் சிறப்பான பீல்டிங்கால் பஞ்சாப் அணியை கட்டுப்படுத்தியது.
கெயில் 23 ரன்னுடனும், ராகுல் 32 ரன்னுடனும் அவுட்டாகினர். அடுத்து வந்தவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.
 
இதனால் பஞ்சாப் அணி 15.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து தத்தளித்தது. இறுதியில் பஞ்சாப் அணி 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும், சந்தீப் சர்மா, ஷகிப் அல் ஹசன், பாசில் தம்பி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதையடுத்து, ஐதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. #VIVOIPL #SRHvKXIP #SunrisersHyderabad #KingsXIPunjab 

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/26234309/1159258/sunrisers-hyderabad-beat-kingsXI-punjab-by-13-runs.vpf

Link to comment
Share on other sites

ஒட்டுமொத்த அரங்கையும் வியக்க வைத்த தோனி

 

 
27CHPMUDHONI

தோனி   -  AFP

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 34 பந்துகளில், 7 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 70 ரன்கள் விளாசியது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. கடைசி 8 பந்துகளில் அணியின் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முகமது சிராஜ் தந்திரமாக வைடு யார்க்கர் நுட்பத்தை பயன்படுத்தினார். இந்த வகையிலான பந்து வீச்சை பயன்படுத்திதான் பஞ்சாப் அணி வீரர் மொகித் சர்மா இந்த சீசனில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தோனியை கடைசி ஓவரில் திணறடித்திருந்தார்.

ஆனால் இம்முறை தோனி இந்த விஷயத்தில் தெளிவுடன் செயல்பட்டார். சிராஜ் வீசிய வைடு யார்க்கரானது தாழ்வான புல்டாசாக எதிர்கொள்வதற்கு சற்று கடினமான வகையிலேயே இருந்தது. ஆனால் களத்தில் வலுவாக வேரூன்றியிருந்த தோனிக்கு அது கடினமானதாக அமையவில்லை. தனது பின்னங்காலை வளைத்து, மட்டையின் முழுபகுதியையும் பயன்படுத்தி பாயிண்ட் திசையில் அற்புதமாக சிக்ஸராக மாற்றினார். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அதை சரியான நேரத்தில் சாமர்த்தியமாக தோனி கையாண்டதுதான் சிறப்பம்சம். பாயிண்ட் திசையில் அவர், அடித்த இந்த ஷாட்டால் முகமது சிராஜ் ஒரு கணம் அசந்தே போனார்.

அவர் மட்டும் அல்ல பெங்களூரு மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தின் பெரும் பகுதியும், ஏன் எல்லைக் கோட்டுக்கு வெளியே குழுமியிருந்த சிஎஸ்கே வீரர்களும் கூட அசந்தே போனார்கள். தோனியின் திறன் மீது சந்தேகம் கொண்டவர்களையும் அதிசயிக்க வைத்த தருணமாகவே அது அமைந்ததாக கருதப்படுகிறது. கடைசி ஓவரில் கோரே ஆண்டர்சனின் பந்தில் லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசி தோனி வெற்றிக் கனியை பறித்தது, 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியை கண்முன் கொண்டுவர தவறவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறும்போது, “இது தோனியின் சிறப்பு வாய்ந்த ஆட்டம் மற்றும் அற்புதமான வெற்றி. சில அனுபவம் வாய்ந்த வீரர்களை நாங்கள் முதன்முறையாக அணியில் இம்முறை கொண்டுள்ளோம். அவர்கள் அசந்து போகும் அளவுக்கு ஆட்டத்தை முடித்துள்ளனர். ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் பாயிண்ட் திசையில் தோனி அடித்த ஷாட், மிகச்சிறப்பாக அடிக்கப்பட்ட 3 ஷாட்களில் இதுவரை நான் பார்க்காத ஒன்றாகும்” என்றார்.

தோனி விளாசிய அந்த சிக்ஸரால் தான் முகமது சிராஜ் பதற்றத்துக்கு உள்ளாகி அடுத்த பந்தை பவுன்சராக வீச அது வைடானது. அடுத்தடுத்து இரு வைடு யார்க்கர்களை வீச முயன்று மேலும் இரு உதிரிகளை வைடு வழியாக வழங்கினார். பொதுவாக இந்த மாதிரியான நேரத்தில் சில பேட்ஸ்மேன்கள் வழியச் சென்று பந்தை தட்டுவார்கள். ஆனால் தோனியோ சமயோஜித புத்தியால் பந்தை எக்காரணத்தைக் கொண்டும் தொட முயற்சிக்கவில்லை.

தோனியின் இந்த சமயோஜித திறன் குறித்து பிளெமிங் கூறுகையில், “பந்து வைடாக வீசப்படும் போது அதை எப்படி அணுக வேண்டும் என்ற திறன் தோனிக்கு உள்ளது. வைடு பந்துகளை அவர், தேடிச் சென்று அடிக்கமாட்டார். இந்த சீசனில் தோனியின் பேட்டிங் அற்புதமாக உள்ளது. பெங்களூரு அணிக்கு எதிராக அவர் விளையாடிய விதம் நான் பார்த்ததிலேயே சிறந்த ஒன்றாகும்” என்றார்.

யுவேந்திரா சாஹல் தனது சிறப்பான மணிக்கட்டு பந்து வீச்சால் சீரான இடைவெளியில் 2 விக்கெட்களை வீழ்த்திய நிலையில்தான் தோனி களம் புகுந்தார். 9 ஓவர்களில் 74 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்த நிலையில் அணியின் வெற்றிக்கு 11 ஓவர்களில் 132 ரன்கள் தேவையாக இருந்தது. வழக்கமாக டி 20 ஆட்டங்களில் தோனி தனது பேட்டிங்கை மந்தமாகவே தொடங்குவார். சில ஓவர்கள் களத்தில் நிலைகொண்ட பிறகே அதிலும் கடைசி 3 ஓவர்களிலேயே மட்டையை சுழற்றுவார். ஆனால் வழக்கத்துக்கு மாறாக தான் சந்தித்த 2-வது பந்தையே சிக்ஸருக்கு விளாசிய அவர், எந்த ஒரு கட்டத்திலும் ஆட்டம் தொய்வு நிலையை அடையாமல் பார்த்துக் கொண்டார்.

மேலும் தோனி, சரியான வகையில் திட்டமிட்டார். எதிரணியில் எந்தெந்த பந்து வீச்சாளருக்கு எவ்வவு ஓவர்கள் மீதம் உள்ளது, எந்த நேரத்தில், யார் பந்து வீச அழைக்கப்படக்கூடும் என யூகம் செய்து கொண்டார். சாஹல் நன்கு வீசிக் கொண்டிருந்ததால் அவரது பந்து வீச்சை தோனி அடித்து விளையாட முயற்சிக்கவில்லை. தோனி களத்தில் நின்ற நேரத்தில் சாஹல் இரு ஓவர்களை வீசி முறையே 7 மற்றும் 6 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதில் தோனி மட்டும் 7 பந்துகளை சந்தித்து 7 ரன்களே எடுத்தார். சாஹல் தனது 4 ஓவர்களை முடித்த பிறகு மற்ற பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தோனி ஆதிக்கம் செலுத்தினார்.

குறிப்பாக பவன் நெகி வீசிய ஓவரில் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இந்த இரு ஷாட்களும் டி வில்லியர்ஸ் அடித்தது போன்று ஸ்வீப் ஆகவோ, ஸ்கூப் ஷாட்டாகவோ இல்லாமல் நிலையாக ஒரே இடத்தில் நின்றவாறு தோனி விளாசியதாகும். அவருக்கு அம்பாட்டி ராயுடுவும் ஒத்துழைக்க அதன் பின்னர் ஒவ்வொரு ஓவரிலும் குறைந்தது ஒரு சிக்ஸராவது விளாசப்பட்டது. முக்கியமாக தோனி மிட்விக்கெட், லாங் ஆஃப் திசைகளை நன்கு பயன்படுத்தினார். ஒரு நிலையான தளம் மற்றும் மென்மையான பந்து வீச்சின் உதவியால் தோனி தனது வலுவான திறனை மீண்டும் புதுப்பித்துக் கொண்டுள்ளதாகவே கருதப்படுகிறது.

கோரே ஆண்டர்சன் ஒவ்வொரு முறையும் பந்தை ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசிய போதெல்லாம் லாங் ஆன் திசையை நோக்கி தோனி பெரிய அளவிலான ஷாட்களை மேற்கொண்டார். அதிலும் கடைசி ஓவரின் 4-வது பந்தை ஆண்டர்சன் வைடு யார்க்கராக வீச முயன்ற போது தோனி ஸ்டெம்புகளை விட்டு நகர்ந்து சென்று லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசிய விதம், அவர் இன்னும் ஒரு பெரிய இன்னிங்ஸூக்காக காத்திருப்பது போன்ற தோற்றத்தையே வெளிப்படுத்தியது. உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தோனியின் அதிரடி பார்ம் அனைவரையும் சற்று திரும்பி பார்க்க வைத்துள்ளது.

‘அனுபவ பகிர்வு’

வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்த தோனி கூறும்போது, “இலக்கை விரட்டும் போது எதிரணியில் எந்த பந்து வீச்சாளர்களுக்கு எத்தனை ஓவர்கள் மீதமிருக்கின்றன. இதில் கேப்டன் யாரைக் கொண்டு வருவார் என்று எதிர்நோக்கி அதற்குத் தக்கவாறு விளையாட வேண்டும். நாம் சிலவற்றை வெல்வோம், சிலவற்றை தோற்போம். ஆனால் பினிஷர் வேலை பணியை முடிப்பதும், பிறருக்கு உதவுவதும், அனுபவத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதும்தான். விரட்டலில் 2 பந்துகள் மீதம் வைத்தது விநோதம்தான்” என்றார்.

‘சத்தமே உறுமல்’

பெங்களூரு அணியை வீழ்த்திய பின்னர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பதிவில், “வாடிவாசல் திறந்தவங்ககிட்டயே வரிஞ்சுக்கட்டறதா. யாரு திமில யாரு அடக்கப்பாக்குறது. மூச்சுவிட்ற சத்தமே இங்க உறுமல்தான்” என்று தமிழில் பதிவிட்டு அசத்தியிருந்தார்.

5 ஆயிரம் ரன்கள்

டி 20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக 5 ஆயிரம் ரன்களை, பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் மூலம் தோனி கடந்தார். கவுதம் கா ம்பீர் (4,242ரன்கள்) 2-வது இடத்திலும், விராட் கோலி (3591) 3-வது இடத்திலும் உள்ளனர். மேலும் இந்த ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பிலும் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. ஐபிஎல் வராலாற்றில் ஒரே போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும்.

கோலியின் தவறு

சாஹல், உமேஷ் யாதவ் ஆகியோரை 15 ஒவர்களுக்குள் முடித்து விட்டு கடைசியில் இரண்டு பந்து வீச்சாளர்கள் மட்டுமே வீசினால், என்ன ஆகும், வித்தியாசம் இல்லாத பந்து வீச்சை வலுவான பேட்ஸ்மேன்கள் எந்த முறையில் கையாள்வார்கள் என்பதை சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தின் வாயிலாக விராட் கோலி உணர்ந்திருக்கக்கூடும். காலின் டி கிராண்ட்ஹோம் அணியில் இருந்த போதிலும் அவரை பந்து வீச்சில் சரியாக பயன்படுத்திக் கொள்ளவும் தவறினார் கோலி.

இது தந்தையின் கடமை

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய தோனியைப் பலரும் பாராட்டி சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள் ஜிவாவின் கூந்தலை உலர்த்தும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில் போட்டி முடிந்துவிட்டது. நல்ல தூக்கம் தூங்கினேன். தற்போது இது தந்தையின் கடமை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

http://tamil.thehindu.com/sports/article23691280.ece

Link to comment
Share on other sites

கிங்ஸ் லெவன் பஞ்சாபை சுற்றி வளைத்த ரஷீத், ஷாகிப்: குறைந்த இலக்கை தடுத்து சன் ரைசர்ஸ் மீண்டும் வெற்றி

 

 
rashid%20khanjpg

மீண்டும் அபாரம். ரஷீத் கான்.   -  படம். | கிரி.

அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 118 ரன்களை வெற்றிகரமாகத் தடுத்து நம்பமுடியாத வெற்றியை ஈட்டிய சன்ரைசர்ஸ், நேற்று மீண்டும் 132 ரன்கள் என்ற குறைந்த இலக்கை வெற்றிகரமாகத் தடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு அதிர்ச்சித் தோல்வி அளித்தது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் கேப்டன் அஸ்வின் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார், அங்கிட் ராஜ்புத் பிரமாதமான வேகத்தில் வீசி 14 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைச் சாய்க்க சன் ரைசர்ஸ் அணி மணீஷ் பாண்டே (54), ஷாகிப் அல் ஹசன் (28), யூசுப் பத்தான் (21) ஆகியோரது பங்களிப்பினால் 132/6 என்று முடிந்தது.

தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் கிறிஸ் கெய்ல் (23), ராகுல் (32) ஆகியோர் மூலம் 47 பந்துகளில் 55/0 என்ற வெற்றித்தொடக்கம்தான் கண்டது. ஆனால் ரஷீத் கான் மிக அருமையான ஒரு பந்தில் ராகுலை அதிர்ச்சி பவுல்டு செய்ய ஆட்டம் மாறிப்போனது. 55/0-லிருந்து பஞ்சாப் 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 64 ரன்களுக்கு 10 விக்கெட். மீண்டும் ரஷீத் கான் 11 டாட்பால்களுடன் 4 ஓவரக்ள் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சந்தீப் ஷர்மா, பசில் தம்பி, ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சித்தார்த் கவுல் நல்ல எனெர்ஜியுடன் வீசினார். 19.2 ஓவர்களில் 119 ரன்களுக்குச் சுருண்டு 13 ரன்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் தோல்வியடைந்தது.

ராஜ்புத் பவுன்ஸில் வீழ்ந்த ஹைதராபாத்; கிங்ஸ் லெவன் பீல்டிங் மோசம்

சன் ரைசர்ஸ் அணியின் ஃபார்மில் உள்ள கேன் வில்லியம்சன் ஆட்டம் தொடங்கிய 4வது பந்தில் ராஜ்புத் பவுன்சருக்கு வெளியேறினார். ஷார்ட் பிட்ச் என்றவுடன் புல் ஷாட்டுக்குத் தயார் ஆனார் வில்லியம்சன், ஆனால் போதிய இடம் இல்லை அடித்தார் மிட் ஆஃபில் அஸ்வினுக்கு எளிதான கேட்ச் ஆனது. டக் அவுட் ஆனார். வில்லியம்சன்.

ஷிகர் தவண் அன்று சரண் ஷார்ட் பிட்சில் முழங்கையில் அடி வாங்கினார், நேற்று அன்கிட் ராஜ்புத், பந்தை வெளியே ஸ்விங் செய்து ஷார்ட் பிட்ச் பந்தாக்கினார், நிலைமாறிய தவண் என்ன செய்வதென்று தெரியாமல் பந்தைப் போய் இடித்தார். ஸ்லிப்பில் கருண் நாயர் அருமையான கேட்ச் எடுத்தார்.

விருத்திமான் சஹா படுமோசமான ஒரு ஸ்லாக் செய்து 6 ரன்களில் மிட்விக்கெட்டில் கொடியேற்றினார்.

சரண் பந்துகளில் கூடுதல் பவுன்ஸ் இருந்தாலும் அவரிடம் கட்டுக்கோப்பு இல்லை. ஷாகிப் அல் ஹசன் தேர்ட்மேனில் கேட்ச் கொடுத்த போது ரன் எண்ணிக்கையை அவர் ஆரம்பிக்கவில்லை, ஆனால் கேட்ச் நோ-பாலால் வீணானது. மணீஷ் பாண்டே விக்கெட்டையும் சரண் வீழ்த்தியிருப்பார், அஸ்வின் மிட் ஆஃபில் கேட்சை விடவில்லை என்றால்...

ஷாகிப் அல் ஹசன், மணீஷ் பாண்டே 52 ரன்கள் கூட்டணி அமைத்தாலும் புதிர் ஸ்பின்னர் முஜீப் உர் ரஹ்மான், அஸ்வின் ஆகியோரது லெக் பிரேக், கேரம் பந்துகள், விரலிடுக்கில் வீசும் பந்துகள் ஆகியவற்றினால் எழும்ப முடியவில்லை, ஆண்ட்ரூ டை ஒரு புறம் அடிக்க முடியாமல் வீசிக் கொண்டிருந்தார். மணீஷ் பாண்டே 48 பந்துகளில் இந்த சீசனின் மந்தமான அரைசதம் எடுத்தார். ஆனால் இது மேட்ச் வின்னிங்ஸ் என்று அப்போது பாண்டேவுக்குத் தெரிந்திருக்காது. மணீஷ் பாண்டே 54 ரன்களில் 3 பவுண்ட்ரிகள் 1 சிக்சருடன் அங்கிட் ராஜ்புத்தின் துல்லியமான யார்க்கரில் பவுல்டு ஆனார். ஷாகிப் அல் ஹசன் 28 ரன்களில் முஜீபிடம் வீழ்ந்தார், யூசுப் பத்தான் 19 பந்துகளில் 21 ரன்களுடன் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். நபியை கடைசியில் ராஜ்புத் வீழ்த்தினார். சன் ரைசர்ஸ் 132/6 என்று முடிந்தது.

ராகுல், கெய்லுக்குப் பிறகு ரஷீத், ஷாகிப் அபாரம்:

ராகுலும் கெய்லும் நிதானத்துடன் தொடங்கினர், சந்தீப் சர்மா வேகத்துடன் வீசுவதுடன் அவ்வப்போது விரலிடுக்கில் பந்தை வைத்து வீசும் பந்துகளும் அதிரடி தொடக்கத்தைத் தடுத்தன. ஆனாலும் ராகுல் அபாரமான ஒரு கவர் டிரைவ், நேர்மறையான கிரிக்கெட் ஷாட்களை ஆடிக்கொண்டிருந்தார். கெய்ல், மொகமது நபியை ஏறி வந்து ஒரு சிக்ஸ் விளாசினார். இருவரும் மெதுவே 7 ஓவர்களி 53 என்ற வெற்றிபெறத் தேவையான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

அப்போது ரஷீத் கான் வந்துதான் பிரேக் போட வேண்டும் என்று எதிர்பார்த்த போது ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் ஆவதற்கு முன்னால் காற்றில் உள்ளே வந்த பந்து பிட்ச் ஆன பிறகு லேசாக வெளியே ஸ்பின் ஆக ராகுலின் தடுப்பாட்டம் தவறான லைனில் அமைய முழுதும் பீட் ஆகி பவுல்டு ஆனார். டெஸ்ட் கிளாஸ் பந்து வீச்சு அது.

rahuljpg

திருப்பு முனை ஏற்படுத்திய ரஷீத் கான் விக்கெட். ராகுல் பவுல்டு.   -  படம். | ஏ.பி.

 

அடுத்த ஓவரில் பசில் தம்பி, அருமையான ஒரு ஷார்ட் பிட்ச் பந்தில் கெய்லை அவசரப்படுத்த புல் ஷாட் மேலே ஏற தம்பியே ஓடி வந்து கேட்ச் எடுத்தார்.

புதிய பேட்ஸ்மென்கள் இருவர் இருக்கும் போது ரஷீத் கானைத் தொடராமல் பந்து வீச்சில் மாற்றம் செய்த கேன் வில்லியம்சன் களவியூகத்தில் வட்டத்துக்குள் பீல்டர்களை நிறுத்தாமல் ஆடியதால் மயங்க் அகர்வால், கருண் நாயர் சிங்கிள்கள், இரண்டுகள் என்று ஓரளவுக்கு நிலைபெறுமாறு ஆடினர்.

கேன் வில்லியம்சன் பவுண்டரி போய் விடக்கூடாது என்று டீப்பில் ஆட்களை நிறுத்த அதே சிங்கிள், இரண்டுகள் என்று எடுத்தாலே ஓரு ஓவர் மீதம் வைத்தாவது வென்றிருக்கலாம் ஆனால் இந்த நுட்பம் இல்லாமல் மயங்க் அகர்வால், ஷாகிப் அல் ஹசனை தூக்கி அடித்து குறிபார்த்து லாங் ஆனில் கேட்ச் அளித்தார்.

கருண் நாயர் மிக அழகாக லெக் பிரேக்குக்கான தடுப்பாட்ட உத்தியைக் கடைபிடித்தார், ஆனால் பந்து அதே லெந்தில் கூக்ளியாக ரஷீத் கானின் கை சாதுரியத்தில் எல்.பி.ஆனார். பிஞ்ச் இறங்கினார் ஒரு சிக்ஸ் விளாசினார், பிறகு அதை ரிபீட் செய்யும் முயற்சியில் டீப்பில் மணீஷ் பாண்டேயின் அபாரமான நூலிழை கேட்சுக்கு வெளியேறினார்.

சந்தீப் சர்மா ஸ்லோயர் பந்தில் மனோஜ் திவாரியைக் காலி செய்தார். பிறகு அண்ட்ரூ டையையும் வீழ்த்தினார் சந்தீப் சர்மா. அஸ்வின் 4 ரன்களில் ரஷீத் கானின் இன்னொரு சாதுரியத்துக்கு அவுட் ஆக 101/9 என்று ஆனது, கடைசியில் முஜீப் 10 ரன்களையும், அங்கிட் ராஜ்புத் 8 ரன்களையும் எடுத்து லேசாக சம்பிரதாயத்தை ஒத்தி வைத்தனர். கடைசியில் பசில் தம்பி ராஜ்புத் ஸ்டம்ப்களைப் பெயர்க்க, விஷயம் முடிந்தது, கிங்ஸ் லெவன் 119 ரன்களுக்குச் சுருண்டது.

இந்த ஐபிஎல் தொடரில் சிறந்த பந்து வீச்சு அணி என்று ஒன்றைக் கூற வேண்டுமென்றால் அது சன் ரைசர்ஸ்தான்.

http://tamil.thehindu.com/sports/article23692286.ece

Link to comment
Share on other sites

அதிரடி கேம் பிளான், மிரட்டும் ஃபினிஷிங்... - Welcome Back தோனி! #IPL2018

 
 

'CSK will be back in 2018' எனக் கடந்த ஆண்டின் மத்தியில் ஒரு அறிவிப்பு வெளியாகிறது. அடுத்த நாள் மஞ்சள் டி-ஷர்ட்டில் ஏழாம் நம்பர் பளபளக்க ஸ்டைலாக திரும்பி நின்று போஸ் தருகிறார் தோனி. பற்றிக்கொண்டது மஞ்சள் ஜுரம். பத்து மாதங்கள் கழித்து இப்போது தெர்மாமீட்டரில் உச்சம் தொடுகிறது அந்தக் காய்ச்சல். காரணம்? - தோனியும் அவரது டீமும்தான்.

ஐபிஎல்லில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டிலும் பேவரைட் கிளப் சென்னை சூப்பர்கிங்ஸ்தான். உலகின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவர் வழிநடத்துகிறார். டி20க்காகவே அளவெடுத்து செய்த பிளேயர்களான ரெய்னா, பிராவோ, டு ப்ளெஸ்ஸி போன்றவர்கள் விளையாடுகிறார்கள். டி20 லீக்களில் அதிக வெற்றி சதவிகிதத்தைக் கொண்ட அணி (60.71 சதவிகிதம்). எல்லா ஆண்டும் ப்ளே ஆஃப் வரை செல்லும் கன்சிஸ்டன்ஸி கொண்ட அணி. 'கோப்பையை ஜெயிக்கணும்' என்பதைவிட 'சி.எஸ்.கே-வை ஜெயிக்கணும்' என்பதுதான் மற்ற அணி ரசிகர்களின் நினைப்பாக இருக்கிறது. இவை எல்லாமே இரண்டு ஆண்டுகள் முன்புவரை பாசிட்டிவ் விஷயங்கள்தான்! ஆனால் இந்த ஆண்டு?

எல்லாராலும் கொண்டாடப்படும் ஒரு பைசா வசூல் ஹீரோ திடீரென ஒருநாள் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரேக்கில் செல்கிறார். அவர் விட்டுச் சென்ற வெற்றிடம் அப்படியே இருக்கிறது. சில ஆண்டுகள் கழித்து அவர் திரும்பி வருகையில் ஹைப் ஏறுகிறது. 'முன்னாடி மாதிரியே நடிப்பாரா? போட்ட காசு வருமா? பிரேக்ல இருந்தப்போ அவர் திறமை மங்கியிருந்தா? ஒருவேளை தோத்துட்டா திரும்ப ஏன்டா வந்தோம்னு இருக்குமே? இவ்ளோ பில்டப்புக்கும் அவர் வொர்த்தா? என எக்கச்சக்க பயம், தயக்கம் கலந்த கேள்விகள் குடையத்தானே செய்யும்! அந்த ஹீரோவின் இடத்தில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு இசைக்கலைஞர், ஒரு ஓவியர், ஒரு குத்துச்சண்டை வீரர் என அந்த இடத்தில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். சி.எஸ்.கேவாகவும் கூட இருக்கலாம்.

இத்தனை கேள்விகளும் சேர்ந்து ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பை ஏற்றுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல்லின் பிசினஸ் பிராண்டே சி.எஸ்.கே-தான். முதல் லீக் மேட்ச் தொடங்கி இறுதி லீக் மேட்ச் வரை இந்த பிராண்ட் வேல்யூ எதிரொலிக்கும்படிதான் மொத்தத் தொடரும் வடிவமைக்கப்படுகிறது. பல்லாயிரம் கோடிகள் புழங்கும் தொடர், இவ்வளவு ஹைப்பிற்கும் தாங்கள் வொர்த் என நிரூபித்தாகவேண்டிய கட்டாயம், பழசும் புதுசும் கலந்த டீமை ஒன்றிணைத்து வெற்றியை நோக்கி ஓடவைக்க வேண்டும் - இத்தனையையும் சுமந்துகொண்டு ஏழாம் நம்பர் டி-ஷர்ட் தொடரில் களமிறங்குகிறது.

தோனி

முதல் போட்டி மும்பையுடன். கிட்டத்தட்ட தோல்வியை சோகத்தோடு முத்தமிட நெருங்கிவிட்டது சென்னை. முத்தம் கசக்குமா என்ன? கசந்தது அன்று! உதடுகள் நெருங்க நெருங்க தோனி பதற்றமாகிறார். ஒவ்வொரு பால் முடியும்போதும் டிரெஸ்ஸிங் ரூமில் குறுக்கே மறுக்கே நடந்துகொண்டேயிருக்கிறார். பிராவோ சிக்ஸர் அடிக்க அடிக்க டக் அவுட் மொத்தமும் குதூகலிக்கிறது. தோனியோ பதற்றமாக டி.வி-யைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார். மருந்துக்கும் சிரிப்பில்லை. தோல்வி முத்தமிட்டுவிடக்கூடாது என உதடுகளை இறுக்கிப் பிடித்திருப்பதால் யாருடனும் பேசவும் இல்லை. தோனியின் பாடி லாங்குவேஜை கூர்ந்து கவனிக்கும் எல்லாருக்குமே தெரியும் அன்று அவர் உருவில் இருந்தது வேறு யாரோ என! மற்றவர்களுக்கு முதல் மேட்ச்சாக இருக்கலாம். ஆனால், அவருக்கோ இது கம்பேக்கை கெத்தாக நிரூபிக்கவேண்டிய களம். முந்தைய பத்தியில் சொன்ன அத்தனை பிரஷரும் சேர்ந்து அவரை அப்படி மாற்றியிருக்கிறது. ஆயிரம் டன் சுமை! பிராவோ புண்ணியத்தில் கடைசியாக இறக்கி வைக்கிறார். ஆனால், நிலைமை மாறுமா?

இரண்டாவது ஆட்டம் கொல்கத்தாவுடன். சி.எஸ்.கே-வில் ஐந்தாவது, ஆறாவதுதான் தோனி ஆடும் இடம். இந்த முறை மிடில் ஆர்டர் வீக் லிங்க்காக இருப்பதால் தன்னை டூ டவுன் இடத்துக்கு ப்ரொமோட் செய்துகொள்கிறார். மறுபடியும் நெருக்கடி! கடந்த சில ஆண்டுகளாகவே பழைய பார்ம் மிஸ்ஸிங்! பெரிய இடைவேளைக்குப் பின் சென்னை ஹோம் க்ரவுண்டில் களமிறங்குகிறது அணி. பெரிய டார்கெட். வெற்றி பெற வேண்டும். இரண்டு ஓபனிங் பேட்ஸ்மேன்கள் அவுட்! ஆரவாரங்களுக்கு இடையே களமிறங்குகிறார் தோனி. ஆனால், பந்தைக் கணிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. இவர் கட்டை போடப் போட டார்கெட் தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது. சாம் பில்லிங்ஸ் மறுபக்கம் அடித்து நொறுக்க திரும்பவும் 'முத்தமெல்லாம் வேணாம்' என தோல்வியை விரட்டுகிறது சென்னை. சென்னைக்காக சந்தோஷப்பட்டாலும் தோனிக்காக வருத்தப்பட்டபடி வெளியேறுகிறான் 'தோனீ......' என ஒரு மூலையில் இருந்து கத்திய சிறுவன். பழைய தோனியை இனி பார்க்கவே முடியாதா?

தோனி

மூன்றாவது ஆட்டம் பஞ்சாப்புடன்! பாலூட்டி வளர்த்த கிளிதான் எதிரணி கேப்டன். அஸ்வினுக்காவது சென்னை அணி மேல்தான் கோபம், கெயிலுக்கோ ஏழு அணிகளின் ஓனர்கள் மீதும் கோபம். அடித்து வெளுக்கிறார். வழக்கமாக அடித்து வெளுக்கும் பேட்ஸ்மேன்களை சமாளிக்க எக்கச்சக்க ட்ரிக்களை மூட்டை கட்டி வைத்திருப்பார் தோனி. ஆனால், அந்த மேட்ச்சில் எதுவுமே பலனளிக்கவில்லை. பேட்டிங்கில் முதல் பந்திலிருந்தே அடித்து வெளுப்பதுதான் தோனி ஸ்டைல். இந்த ஆட்டத்தில் கொஞ்சம் நேரமெடுத்துக்கொள்கிறார். தசைபிடிப்பு வேறு படுத்துகிறது. கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை. இதற்கு முன்னால் நிறைய தடவை ஜெயிக்கவைத்த தோனியால் இப்போது முடியவில்லை. The world's dangerous batsman is no more a finisher? World's successful cricket captain lost his bundle of tricks?  கேலியும் கேள்விகளும் துரத்துகின்றன.

நான்காவது ஆட்டம் ராஜஸ்தானுடன்! பேட்டிங்கில் வாட்டோ வேகத்தில் 204 ரன்கள் எடுக்கிறது சென்னை. ஃபர்ஸ்ட் ஆஃப்பில் தோனிக்கு வேலையில்லை. செகண்ட் ஆஃப்பில் சாம்சன் களமிறங்கியவுடன் சஹார் கையில் பந்தைக் கொடுக்கிறார் தோனி. ஷார்ட் பிட்ச் பால்களை லெக் சைட் தூக்கியடிப்பது டிபிக்கல் சாம்சன் ஷாட். அதே பால், பீல்டர் கையில் தஞ்சமடைகிறது பந்து. 200-ஐ ராயல்ஸ் சேஸ் செய்தால் அது சாம்சன் பங்களித்தால் மட்டுமே முடியும் என்பது எல்லாருக்குமே தெரியும். 'இது அதுல்ல' என பழைய ரெக்கார்ட்களை ஓட்டிப் பார்க்கிறது ரசிகர்களின் மனம். தாக்கூர், சஹார், வாட்சன், தாஹிர், திரும்ப வாட்சன், அடுத்து பிராவோ என குறிப்பிட்ட பவுலர்களை டார்கெட் செய்து எதிரணியினர் ரன் அடிக்காமல் இருக்க பவுலர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார் தோனி. ரிசல்ட் - வெற்றி! தோனியின் பழைய மேஜிக் ட்ரிக்குகள் பலனளிக்கத் தொடங்குகின்றன.

ஐந்தாவது ஆட்டம் சன்ரைஸர்ஸோடு! இந்தத் தொடரில் பவுலிங்கில் பேய் பலத்தோடு இருக்கும் அணி. சட்டென ஒரு பவுலரை கழற்றிவிட்டுவிட்டு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனான டுப்ளெஸ்ஸியை உள்ளே கொண்டு வருகிறார். இதற்கு முன் சன்ரைஸர்ஸ் ஆடியிருந்த ஆட்டங்களில் எல்லாம் முறையே 9, 8, 5 விக்கெட்கள் எதிரணிகள் பறிகொடுத்திருந்தன. எனவே, சர்வதேச அனுபவமுள்ள எட்டு பேட்ஸ்மேன்கள். இந்த டெப்த் அளித்த நம்பிக்கையில் கடைசி பத்து ஓவர்கள் பந்தை வதம் செய்கிறார்கள் சென்னை பேட்ஸ்மேன்கள். ஹைதராபாத்தில் தவானும் இல்லை. டாப் ஆர்டரை பவர் ப்ளே முடிவதற்குள் சஹார் காலி செய்கிறார். பிராவோ வீசிய 16-வது ஓவரில் 14 ரன்கள். அப்படியும் 18-வது ஓவர் தருகிறார். அதில் ஆபத்தான கேன் வில்லியம்சன் நடையைக் கட்ட, 20-வது ஓவரும் பிராவோவுக்கே! 19 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் 5 பந்துகளில் 13 ரன்கள்! சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலை! அனுபவம் வாய்ந்த பிராவோ யார்க்கர் போட சென்னை வெற்றிக்கோட்டை தொடுகிறது.

கடைசியாக பெங்களூருவுடன்! சென்னை - மும்பைக்கு அடுத்து சென்னை - பெங்களூருதான் எல்லாரும் எதிர்பார்க்கும் மேட்ச். பவுலிங் வீக் என்பதால் டுப்ளெஸ்ஸி வெளியே! டி காக்கை சமாளிக்க ஆஃப் ஸ்பின்னரான ஹர்பஜன் உள்ளே! ஆனாலும் சமாளித்து ஆடுகிறார் டி காக்! மறுபுறம் லெக் சைடில் ஸ்வீப் செய்தே சிக்ஸர்கள் குவிக்கிறார் டிவில்லியர்ஸ். ஜோடியை பிரித்தே ஆகவேண்டும் என பிராவோவை கொண்டுவருகிறார் தோனி. டிகாக் அவுட்! அதன்பின் வரும் ஆண்டர்சன் ஐந்து பால்களை சாப்பிட ரன்ரேட் பிரஷர் டிவில்லியர்ஸ் மேல் எகிறுகிறது. 

தாஹிர் பந்துபோட வருகிறார். அதற்கு முந்தைய ஓவரில்தான் தாஹிரை போட்டுப் பொளந்திருந்தார் டிவில்லியர்ஸ். 17 ரன்கள். ஆனால், அவுட்டாக தேவையான பிரஷர் போன ஓவரிலேயே உருவாகியிருந்தது. ஆஃப் சைட் வந்த பாலை கேட்ச் கொடுத்து அவர் வெளியேற ரன்கள் மட்டுப்பட்டன. செகண்ட் இன்னிங்ஸில் நான்காவதாக இல்லை.. ஐந்தாவதாக இல்லை, ஆறாவதாக களமிறங்குகிறார் தோனி. சாஹலை சமாளிக்க இடது கை ஆட்டக்காரர் ஜடேஜாவை அவர் இறக்கிய முடிவு பலன் தராமல் போக, பொறுப்பு தோனி தலையில். 74/4. 66 பந்துகளில் 133 ரன்கள். வழக்கம்போல கேலிகளும் கேள்விகளும் தலைதூக்கின. ஆனால் Dhoni had other ideas!

சந்தித்த இரண்டாவது பந்தையே மிட் விக்கெட் பக்கம் ஓங்கிப் பறக்க விடுகிறார். அனுபவம் வாய்ந்த உமேஷ் யாதவின் கோட்டா முடிந்தது. சாஹல் ஓவரிலும் டீசன்ட்டாக ரன்ரேட் தேற்றினால் அடுத்து ருத்ரதாண்டவம் ஆடலாம் என்பதுதான் பிளான். 13 ஓவர்களில் அணியின் சூப்பர் பவுலர்கள் இரண்டு பேரின் கோட்டா முடிந்தது. களத்தில் இருப்பதோ நன்றாக செட்டிலாகி இருந்த அம்பதி ராயுடுவும் தோனியும். 42 பந்துகளில் 99 ரன்கள் தேவை. அந்த ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ்கள் தோனிக்கு. Welcome back dhoni! அதற்கடுத்த ஓவர் 9 ரன்கள், அதற்கடுத்த ஓவர் 16 ரன்கள் என பிரித்தெடுக்கிறது இந்த ஜோடி. சிக்ஸ் அடித்து அரைசதம் கடக்கிறார் தோனி. அதற்கடுத்து ராயுடு அவுட்! 8 பந்துகளில் 27 ரன்கள் தேவை. லோ புல்டாஸ் வைட் லென்த் பால் அது! சிக்ஸுக்குப் பறக்கிறது. முழுக்க முழுக்க ஹேண்ட் பவரால் மட்டுமே இது சாத்தியம்! ஸோ, தோனியால் மட்டுமே சாத்தியம். இந்தப் பந்தையே விரட்டினால் புல் டாஸ் யார்க்கர் எல்லாம் போட்டால் கட்டாயம் கூரைக்குச் செல்லும் என்பதால் ரொம்பவே கஷ்டப்பட்டு பந்து போடுகிறார் சிராஜ். ஆனாலும் டார்கெட் குறைந்தது.

தோனி

கடைசி மூன்று பந்துகளில் ஐந்து ரன்கள் தேவை. கோரி ஆண்டர்சன் க்ரீஸ் தொடும் முன்பே ஆப் சைட் விலகி நிற்கிறார் தோனி. லேசாக இறங்கி பந்தை பேட்டில் வாங்கி மிட் - விக்கெட் பக்கம் திருப்புகிறார். 'Dhoniiiiiiiiiii………. finishes off in style….. a magnificent strike into the crowd' - அந்தக்குரலும் வசனமும் திரும்பவும் மனதுக்குள் ஓடுகிறது. Yes, He is back! தன் அணி மீதான பிரஷர், பேட்டிங் ஸ்டைல் மற்றும் சொதப்பல், பினிஷிங் தடுமாற்றம், கேப்டன்ஷிப் குறித்த கேள்விகள் என முதல் மூன்று போட்டிகளில் வந்த அத்தனை விமர்சனங்களுக்கும் அடுத்த மூன்று போட்டிகளில் பதில் சொல்லியிருக்கிறார் தோனி.

 

தன் அணி வீரர்கள் மேல் அளவு கடந்த நம்பிக்கை வைப்பது (ஜோகிந்தர் சர்மா முதல் சஹார் வரை), தனக்கிருக்கும் பிரஷரை தன் டீமிற்குக் கடத்தாதது( 2007 டி20 உலகக்கோப்பை தொடங்கி இப்போது வரை), ரோஹித் சர்மா, கம்பீர், கோலி போன்றவர்கள் சொதப்பும்போது முறையான கேம் பிளான்களோடு களமிறங்குவது (கேப்டனான நாள் முதல் இன்று வரை) என தோனியிடம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. முதல் ஆட்டத்தில் இருந்த பதற்றமான பாடி லாங்குவேஜ் நேற்றைய ஆட்டத்தில் இல்லை. கடைசிப் பந்து வரை கூலாக தோள் குலுக்கிக்கொண்டே பவுலர்களை பதற்றப்படுத்தி பயங்காட்டும் தோனிதான் நேற்று க்ரீஸில் இருந்தார். ''You will win some, you'll lose some but the job of the finisher is to finish the job and help others, sharing the experience with others, all those things really matter because I may not batting tomorrow.'' - இது கடந்த போட்டியில் மேன் ஆஃப் தி மேட்ச் விருதுக்குப் பின் தோனி சொன்ன வார்த்தைகள். நாளை அவர் இல்லாமல் கூட போகலாம். ஆனால், நேற்று கேட்ட 'Dhoniiiiiiiiiii………. finishes off in style' கடைசி தடவையாக இருக்கக்கூடாது என்பதுதான் ரசிகர்களின் ஆசை!

https://www.vikatan.com/news/sports/123436-dhoni-returns-to-his-form-in-a-stylish-manner.html

Link to comment
Share on other sites

புதிய கேப்டன் தலைமையில் டெல்லி அணி எழுச்சி பெறுமா? கொல்கத்தாவுடன் இன்று மோதல்

 
 
 

ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் புதிய கேப்டன் தலைமையில் களம் இறங்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் கொல்கத்தா அணியின் மோதுகின்றனர். #IPL #DD #KXIP

 
 
 
 
புதிய கேப்டன் தலைமையில் டெல்லி அணி எழுச்சி பெறுமா?  கொல்கத்தாவுடன் இன்று மோதல்
 
11–வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி இதுவரை 6 ஆட்டத்தில் விளையாடி ஒன்றில் மட்டும் (மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக) வெற்றி பெற்றது. மற்ற 5 ஆட்டங்களில் தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. மோசமான தோல்விக்கு பொறுப்பு ஏற்று டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அனுபவமிக்க கவுதம் கம்பீர் விலகினார். புதிய கேப்டனாக இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் டெல்லி அணி சந்திக்கும் முதல் போட்டி இதுவாகும்.

டெல்லி அணி ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான வாய்ப்பில் இருக்க வேண்டும் என்றால் தனது எஞ்சிய 8 லீக் ஆட்டங்களில் 7–ல் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. டெல்லி அணியை பொறுத்தமட்டில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஒருசேர சிறப்பாக அமையாமல் அடம்பிடித்து வருகிறது. மோசமான பார்ம் காரணமாக ரன் எடுக்காமல் திணறியதால் கேப்டன் பதவியில் இருந்து விலகிய கம்பீர் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பாரா? என்பது பலத்த கேள்விக்குறியாகவே இருக்கிறது.

‘சவாலை சந்திக்க விரும்புகிறவன். கேப்டன் பொறுப்பை பயன்படுத்தி அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்வேன்’ என்று சூளுரைத்துள்ள இளம் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் டெல்லி அணி சரிவில் இருந்து மீண்டு தலை நிமிருமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 4–வது இடம் வகிக்கிறது. கொல்கத்தா அணியின் பேட்டிங் மெச்சும் வகையில் சிறப்பாக இருந்தாலும், அந்த அணியின் பந்து வீச்சு சிறிய தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. அதனை சரி செய்ய வேண்டிய நிலையில் அந்த அணி இருக்கிறது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான டெல்லி ஆடுகளத்தில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சுனில் நரின், குல்தீப் யாதவ், பியுஷ் சாவ்லா ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

இந்த சீசனில் கொல்கத்தாவில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் வீழ்ந்து இருந்தது. அந்த தோல்விக்கு சொந்த மண்ணில் பதிலடி கொடுக்க டெல்லி அணி முயற்சிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. #IPL #DD #KXIP

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/27114245/1159323/delhi-daredevils-vs-kings-11-punjab-match-on-today.vpf

Link to comment
Share on other sites

நல்ல பிட்ச் அல்ல.. பந்துகள் நின்று வந்தன: தோல்விக்குப் பிறகு கேப்டன் அஸ்வின்

 

 
ashwinjpg

அஷ்வின். | படம். | ஏ.எஃப்.பி.

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக குறைந்த வெற்றி இலக்கான 133 ரன்களை எடுக்க முடியாமல் சொதப்பலான பேட்டிங், அருமையான பவுலிங் என்ற இரண்டன் கூட்டணியில் வீழ்ந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் தோல்வியினால் கடும் ஏமாற்றமடைந்தார்.

132 ரன்கள் இலக்கை எதிர்த்து டெஸ்ட் போட்டி போல் நிதானமாக ஆடியிருந்தால் போதும் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் தேவையில்லாமல் பதற்றமடைந்து பாசிட்டிவ் ஆக ஆடுகிறேன் பேர்வழி என்று கையில் கொடுத்தனர் கிங்ஸ் லெவன் வீரர்கள்.

 

முதலில் அங்கிட் ராஜ்புத் 14 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற பிட்சில் கொஞ்சம் புற்கள் விட்டுவைக்கப்பட்டிருந்ததுதான் காரணம், ஆனால் அஸ்வினோ இது பெரிய பிட்ச் அல்ல என்கிறார்.

அதிர்ச்சித் தோல்வி ஏற்பட்டது. இதனையடுத்து ஆட்டம் முடிந்து கிங்ஸ் லெவன் கேப்டன் அஸ்வின் கூறியதாவது:

இருந்த நிலைமைக்கு இந்தப் போட்டியில் வென்றிருக்க வேண்டும். ஏமாற்றமாக இருக்கிறது. இது நல்ல பிட்ச் அல்ல. பந்துகள் நின்று வந்தன.

இந்த வடிவத்தில் இப்படியெல்லாம் நடக்கும். நாங்கள் நன்றாக ஆடிவரும் போது இப்படி ஏற்பட்டுள்ளது, ஆனால் இப்படி நடப்பது சகஜம்தான்.

பீல்டிங்கிலும் நாங்கள் சொதப்பினோம், இதனால் 20-25 ரன்கள் கூடுதலானது. விளக்கொளியில் கேட்ச்கள் கடினமே, ஆனால் சாக்குப்போக்கு கிடையாது. தொழில் நேர்த்தியான கிரிக்கெட் வீரர்களாக நாங்கள் கடினமாக உழைத்து மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்ப வேண்டும்

7 நாட்கள் ஆஃப். தோல்வி ஒருவிதத்தில் நல்லதுதான். ரஷீத் கான் சிறப்பாக வீசினார். இத்தகைய பிட்சில் அவரிடமிருந்து நாம் இந்தப் பந்து வீச்சை எதிர்பார்க்க வேண்டும். அவர் பயனுள்ள ஒரு வீரர்.

இவ்வாறு கூறினார் அஸ்வின்.

http://tamil.thehindu.com/sports/article23692527.ece

Link to comment
Share on other sites

கிறிஸ் கெய்ல் விக்கெட்டை வீழ்த்த சந்தீப் சர்மா கொடுத்த ஆலோசனை என்ன?

 

 
sandeep

சந்தீப் சர்மா தோள் மீது கைவைத்துப் பாராட்டும் ஷிகர் தவன்.   -  படம். | ஏ.பி.

கிரிக்கெட்டே பேட்ஸ்மென்களின் ஆட்டமானது, மைதானங்களில் எல்லைக்கோடு குறுகிக் கொண்டே வந்தது, மட்டையின் பவர் அதிகரித்தது பவுலர்களுக்கு எதிராக ஏகப்பட்ட விதிமுறைகள், தடுப்புகள், பேட்டிங், பேட்ஸ்மென்களுக்கான ஸ்பான்சர்கள் வணிக நலன்கள் என்று பேட்டிங்கைச் சுற்றியே கிரிக்கெட் நடத்தப்பட்டு, அமைப்பளவிலேயே கிரிக்கெட் மட்டையாளர்களுக்கான ஆட்டமாகியிருக்கும் போது பந்து வீச்சு என்பது ‘ஒடுக்கப்பட்டதன் மீள்வருகை’ (Return of the repressed)யாகியுள்ளது.

அதில் குறிப்பாக ரிஸ்ட் ஸ்பின்னர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் கைகளிலேயே பல வித்தைகளைக் காட்ட பெரிய பெரிய ‘ஆபீசர்’ அதிரடி வீரர்களெல்லாம் திணறும் காலம் மீண்டு வந்துள்ளது.

சன் ரைசர்ஸ் அணியின் பவுலிங் யூனிட், எதிரணியினர் சும்மா 20 ஓவர் நின்றாலே போதும் தானாகவே வெற்றி பெற முடியும் என்ற இரண்டு இலக்குகளில் மடிந்த போதும் அப்போட்டிகளில் எதிரணியினரை சொற்பமாக வீழ்த்தியது பவுலிங்கிற்குக் கிடைத்த புத்துணர்ச்சியாகும்.

அதுவும் கைவித்தைக்காரர்களான புவனேஷ்வர் குமார், ஸ்டான்லேக் ஆகியோர் இல்லாமலேயே இளம் பவுலர்களைக் கொண்டு கிறிஸ் கெய்ல், ராகுல் போன்றவர்களையும் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா போன்ற ஹிட்டர்களையும் பதம்பார்ப்பது சாதாரணமல்ல.

சன்ரைசர்ஸ் அணிக்கு ஆடும் சந்தீப் சர்மா என்ற வேகப்பந்து வீச்சாளர் வேகத்துடன் அவ்வப்போது விரல்களிடுக்கில் பந்தைப் பிடித்து வீசும் பந்துகள் பேட்ஸ்மென்களைக் கடுமையாக திணறடிக்கின்றன.

இந்நிலையில் சந்தீப் சர்மா 2 மிகக்குறைந்த ரன் எண்ணிக்கைகளை வெற்றியாக மாற்றியது பற்றி கூறுகிறார்:

“அனைத்து பவுலர்களும் கொடுக்கப்பட்ட ரோல்களைக் கச்சிதமாகச் செய்கின்றனர், குறைந்த இலக்கை நிர்ணயித்த பிறகு வெற்றி பெற முடிந்தது இதனால்தான். இந்த 2 வெற்றிகள் மூலம் எங்கள் பந்து வீச்சு யூனிட் பெரிய அளவில் தன்னம்பிக்கை பெற்றுள்ளது.

முதல் ஓவரை நான் வீசுவதால் பிட்சின் தன்மை பற்றி மற்றவர்களுக்கு அறிவுறுத்தும் ரோல் எனக்குத் தரப்பட்டுள்ளது. மற்ற பவுலர்கள் எப்படி வீசினால் சரியாக இருக்கும் என்று நான் அறிவுரை வழங்க வேண்டும்.

கிங்ஸ் லெவனுக்கு எதிரான ஆட்டத்தில் விரலிடுக்கில் வைத்து வீசும் பந்தும், வேகம் குறைந்த பந்தும் கைகொடுக்கும், ஏனெனில் பிட்சில் இந்தப் பந்துகள் நின்று வருகின்றன என்று நான் கூறினேன். இப்பந்துகளை அடிக்க முடியாது. அதுதான் கிறிஸ் கெய்லை வீழ்த்த பாசில் தம்பி கடைபிடித்த உத்தியாகும். கிறிஸ் கெய்லுக்கு சற்றே வேகம் குறைந்த ஷார்ட் பிட்ச் பந்தை வீசினார் தம்பி. அந்தக் குறிப்பிட்ட பந்தை அப்போது வீசியது என் அறிவுரை இல்லையென்றாலும் பொதுவாக வேகம் குறைந்த பந்துகள் கைகொடுக்கும் என்பதை நான் பகிர்ந்து கொண்டேன்

எனவே என் வேலை பிட்சின் தன்மையை பிற பவுலர்களுக்கு அறுவுறுத்துவதாகும்.

குறைந்த இலக்கை எதிர்த்து ஆடுவதால் ஒரேயொரு திருப்பு முனை என்று கூற முடியாது. ரஷீத் கான் ராகுலை வீழ்த்தியதும், கெய்லை தம்பி வீழ்த்தியதும் முக்கியத் தருணங்கள்.

கேப்டன் வில்லியம்சன் மிகவும் அமைதியாக கேப்டன்சி செய்கிறார். ஆனால் பாசிட்டிவாக இருக்கிறார். ரன்கள் இல்லையென்றாலும் நாம் நம்மால் இயன்ற முயற்சிகளைச் செய்து வெற்றி பெறப் பாடுபடுவோம் என்றுதான் கூறுகிறார். தோற்றால் பரவாயில்லை, ஆனால் அது எளிதாக அமைந்து விடக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்.

விக்கெட்டுகளை வீழ்த்த எப்போதும் முயற்சி செய்து கொண்டேயிருக்க வேண்டும் வேறொன்றுமில்லை” என்றார் சந்தீப் சர்மா

http://tamil.thehindu.com/sports/article23696471.ece

Link to comment
Share on other sites

கேப்டன் பதவியிலிருந்து இப்படிப் பாதியிலேயே விலகுவது சரியா கம்பீர்?!

 
 

2009-ம் ஆண்டு நியூஸிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரின் 2-வது ஆட்டம் அது. இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் தோல்வியைத் தவிர்ப்பதற்காக ஃபாலோ ஆன் ஆடுகிறது. அன்று 11 மணி நேரம் ஆடி 436 பந்துகளைச் சந்தித்து இந்திய டெஸ்ட் வரலாற்றில் மிக நீண்ட போராட்டமான இன்னிங்ஸை ஆடிய கெளதம் கம்பீர்தான், ''இன்று என்னால் இக்கட்டான சூழலில் போராட முடியவில்லை. நான் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன்'' என்கிறார்.

2007-ம் ஆண்டில் டி20 உலகக்கோப்பையோ, 2011-ம் ஆண்டில் ஒருநாள் உலகக்கோப்பையோ இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் கம்பீர்தான். ''பேட்ஸ்மேனா ஓகே-தான். ஆனா, கேப்டனுக்குச் சரிபட்டுவருவாரா?'' இந்தக் கேள்விக்குப் பதிலாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக இரண்டு முறை சாம்பியன் பட்டம் வாங்கிக் கொடுத்தவர் கம்பீர். கங்குலி தலைமையில்கூட தடுமாறிய கேகேஆருக்கு கம்பீர்தான் பவர் பூஸ்டர்.

''நம்ம கம்பீருக்கு என்னதான் ஆச்சு?'' டெல்லி அணிக்கு கேப்டனாக 2018-ம் ஆண்டு களமிறங்கி மீண்டும் தன்னை நிரூபிப்பார் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியாக, அணி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 'இந்த முடிவு சரியா?' என்ற விவாதங்கள் தொடர்கின்றன. எப்படிப்பார்த்தாலும் இந்த முடிவு முற்றிலும் தவறானதுதான். 

கம்பீர்

ஐபிஎல் போட்டிகளில் ஒரு கேப்டனிடம் அவசியம் இருக்கவேண்டிய விஷயம், விடாமுயற்சி. எட்டு அணிகள் ஆடும் போட்டி என்பதால், 75 சதவிகித ஆட்டங்கள் முடிந்ததுமே, இரண்டு அணிகள் வெளியேறிவிடும் எனத் தெரிந்துவிடும். ஆனாலும் மீதமுள்ள ஆட்டங்களை அந்த அணிகள் வெறித்தனமாக ஆடி புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் கிடைக்காமல் இருக்க கடுமையாகப் போராடும். 

2010-ம் ஆண்டு அரை இறுதிச்சுற்றுக்குக் கிட்டத்தட்ட சிஎஸ்கே தகுதி பெற முடியாது என்கிற சூழலில், கடைசி ஐந்து போட்டிகளில் மூன்றை வென்று 3-வது அணியாக சிஎஸ்கே உள்ளே நுழையும். சிஎஸ்கே உள்பட நான்கு அணிகள் 14 புள்ளிகளைப் பெற்றிருக்கும். தரம்சாலாவில் தோனியின் சமயோஜித அதிரடி ஆட்டம், சென்னையை பிளே-ஆஃப் சுற்றுக்குக் கொண்டுசென்று கோப்பையை வெல்லவைக்கும். இதுதான் ஒரு கேப்டனிடம் அந்த அணி எதிர்பார்ப்பது.

ஆர்சிபி-யின் தோல்விகள் தொடர்ந்தாலும், கோலி என்றைக்கும் தன்னம்பிக்கையைத் தவறவிட்டது கிடையாது. இந்த சீசனில் ரோஹித் ஷர்மா தலைமையில் மும்பை அணி சொதப்பினாலும், அவர் சாம்பியன்களின் கேப்டன் என்பதை மறக்காதவர். களத்திலோ அல்லது களத்துக்கு வெளியேவோ ரோஹித்திடம் இந்த அணியை என்னால் நடத்த முடியாது என்ற மனநிலை இருக்காது. 

2018-ம் ஆண்டில் கம்பீர் கேப்டன்ஸி!

முதல் போட்டியில் கம்பீர் அரைசதம் அடித்தாலும் மற்ற யாருக்கும் பெரிய ஸ்கோர் இல்லை. கிங்ஸ் லெவன் கே.எல்.ராகுலின் ருத்ரதாண்டவத்தில் அடங்கியது டெல்லி. க்ளாஸ் பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது குறை என்றாலும் போல்ட், ஷமி என கேம் சேஞ்சர்கள் கைகொடுக்கத் தவறியது டெல்லியின் தோல்விக் கணக்கைத் தொடங்கிவைத்தது. 

ராஜஸ்தான் ஆட்டத்தில் மழை, டக்வெர்த் விதி என டெல்லிக்குச் சோதனைமேல் சோதனை. ஆனால், மூன்றாவது போட்டிதான் டெல்லியின் ரியல் கேம். மும்பை வைத்த 195 டார்கெட்டை, ஜேஸன் ராய், ஷ்ரேயாஸ் ஐயர், பண்ட் என பேட்டிங் பட்டாளம் காட்டிய அதிரடியில் கடைசிப் பந்தில் சேஸ் செய்து வென்றது டெல்லி. 

அதன்பிறகு ஆர்சிபி, கேகேஆர், கிங்ஸ் லெவன் என டெல்லிக்கு ஹாட்ரிக் தோல்விகள்தாம். களத்தில் கேப்டன் கம்பீர் என்ன செய்வது எனத் தெரியாமல் முழிப்பது, அக்ரசிவ் ஆட்டத்தை வெளிப்படுத்தாதது என கம்பீரின் செயல்பாடு மொத்தமும் மோசம்.

அணித்தலைவருக்கு இருக்கக் கூடாத தகுதி, அணியைப் பாதியில் விட்டுச்செல்வது. இந்தியாவோ, சிஎஸ்கே-வோ தோனி பெரிய ஸ்கோர் அடிக்காவிட்டாலும் தோனி களத்தில் இருந்தாலே போதும் வென்றுவிடலாம் என்பதுதான் தோனி எனும் கேப்டனின் பலம். இதை கம்பீர் செய்ய தவறியிருக்கிறார். களத்தில் குழப்பமான மனநிலையில் கேப்டன் இருந்தால், அது தோல்விக்கு மட்டுமே அழைத்துச் செல்லும். புதிய கேப்டன்களாகக் களமிறங்கியுள்ள அஷ்வின், தினேஷ் கார்த்திக் சரியாக முடிவெடுக்கிறார்கள். களத்தில் ஆக்ட்டிவாக இருக்கிறார்கள். 

கம்பீர்

ராஜஸ்தான் ராயல்ஸுடன் 6 ஓவரில் 71 ரன்கள் அடிக்க வேண்டும். மேக்ஸ்வெல்லையும் முன்ரோவையும் ஓப்பனிங் இறக்கிவிட்டதில் தவறில்லை. ஆனால், நான்கு விக்கெட்டுகள் விழும்போதுகூட கம்பீர் களமிறங்காததுதான் கம்பீரின் பிரச்னை. தன் மீதே நம்பிக்கை இல்லாதவர் கம்பீர் என்பதை, அவரது முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. முகத்தில் துளிகூட நம்பிக்கை ஒளி தெரியவில்லை. தோல்வி உறுதியானதால் வெறுப்பு, இக்கட்டான சூழலில் களமிறங்கத் தயக்கம் என, தான் ஒரு கேப்டன் மெட்டீரியல் அல்ல என்பதை கம்பீர் தெளிவாக நிரூபித்துள்ளார். 

கோலியுடன் சண்டை, அக்தரை முறைத்தது என, அக்ரசிவ் கம்பீரும் இப்போது இல்லை. ஒற்றை ஆளாக கடைசி வரை போராடி அணியைக் காப்பாற்றும் கம்பீரும் இப்போது இல்லை. டெல்லி அணியைப் பாதித் தொடரில் அப்படியே விட்டுச் செல்லும் கம்பீர்தான் இப்போது இருக்கிறார். அழுத்தம், கேப்டன்ஸியில் இல்லை கம்பீரிடம்தான். இந்நிலையில், நீங்கள் கேப்டன்ஸியை அல்ல தொடரைவிட்டே விலகி இருக்க வேண்டும்!

 

வருத்தம் கம்பீர்... வாழ்த்துகள் ஷ்ரேயாஸ்!

https://www.vikatan.com/news/sports/123470-will-gambhirs-captaincy-stepdown-is-acceptable.html

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018- டெல்லிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு

 
அ-அ+

டெல்லியில் இரவு 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் டெல்லிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #VIVOIPL #DDvKKR

 
 
 
 
ஐபிஎல் 2018- டெல்லிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு
 
 
புதுடெல்லி:
 
ஐபிஎல் தொடரின் இன்றைய 26-வது ஆட்டம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
 
இதற்கான டாஸ் போடப்பட்டதில் கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். 
 
டெல்லி டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
 
ப்ரித்வி ஷா, கொலின் மன்ரோ, கிளென் மேக்ஸ்வெல், ரிஷப் பாண்ட், ஷ்ரேயாஸ் அய்யர், விஜய் சங்கர், ராகுல் தெவாட்டியா, லியாம் பிளங்கீட், அமித் மிஷ்ரா, அவேஷ் கான், ட்ரெண்ட் போல்ட்.
 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
 
கிறிஸ் லைன், சுனில் நரேன், ராபின் உத்தப்பா, நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸல், ஷுப்மான் கில், மிட்செல் ஜான்சன், பியூஷ் சாவ்லா, ஷிவம் மாவி, குல்தீப் யாதவ். #VIVOIPL #DDvKKR
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/27194227/1159436/IPL-2018-Kolkata-opt-to-bowl-against-Delhi.vpf

Link to comment
Share on other sites

ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடி - கொல்கத்தாவுக்கு 220 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி டேர்டெவில்ஸ்

 
அ-அ+

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு 220 ரன்களை இலக்காக டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயித்துள்ளது.

 
 
 
 
ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடி - கொல்கத்தாவுக்கு 220 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி டேர்டெவில்ஸ்
 
 
புதுடெல்லி:
 
ஐபிஎல் தொடரின் இன்றைய 26-வது ஆட்டம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
 
இதற்கான டாஸ் போடப்பட்டதில் கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணியின் ப்ரித்வி ஷா, கொலின் மன்ரோ ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். இதனால் டெல்லி அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது. 
 
201804272140054184_1_prithvi._L_styvpf.jpg
 
 
மன்ரோ 18 பந்தில் 33 ரன்கள் (4 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து ஷிவம் மாவி பந்தில் போல்டாகி வெளியேறினார். அதன்பின் ப்ரித்வி ஷா உடன் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய ப்ரித்வி ஷா 38 பந்தில் அரைசதம் அடித்தார். இது அவரது முதல் ஐபிஎல் அரைசதம் ஆகும். அவரின் சிறப்பான ஆட்டத்தால் டெல்லி அணி 11.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது. பிரித்வி ஷா 44 பந்தில் 62 ரன்கள் (7 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து பியூஷ் சாவ்லா பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார். 
 
201804272140054184_2_kkr2704._L_styvpf.jpg
 
அதன்பின் களமிறங்கிய ரிஷப் பாண்ட் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து கிளென் மேக்ஸ்வெல் களமிறங்கினார். ஷ்ரேயாஸ் அய்யர் 29 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து இரு பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடினர். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மேக்ஸ்வெல் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார். அவர் 18 பந்தில் 27 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 93 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதில் 3 பவுண்டரிகளும், 10 சிக்ஸர்களும் அடங்கும்.
 
இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு 220 ரன்களை இலக்காக டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. #VIVOIPL #DDvKKR

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/27214005/1159448/IPL-2018-Delhi-set-220-runs-as-target-for-Kolkata.vpf

66/4
Link to comment
Share on other sites

என் பையிலும்தான் உப்புக் காகிதம் உள்ளது, எதற்குப் பயன்படுத்துகிறேன் தெரியுமா?- டிவில்லியர்ஸ்

 

 
devillers

ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், வார்னர், பேங்க்ராப்ட் பால் டேமப்ரிங் விவகாரத்தை உலகம் அந்த மூவரையும் தனிப்பட்ட முறையில் பாதிக்கும் அளவுகு ஊதிப்பெருக்கப்பட்டுள்ளது என்று தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் வருந்தியுள்ளார்.

தி கார்டியன் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘அவர்களுக்காக வருந்துகிறேன், குறிப்பாக ஸ்மித்துக்காக மிகவும் வருந்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் தென் ஆப்பிரிக்கா தொடர், பால் டேம்பரிங் சர்ச்சை, ஸ்லெட்ஜிங் பற்றி தன் கருத்துகளைக் கூறும்போது, “பால் டேம்பரிங் உள்ளிட்ட அந்தத் தொடரின் சர்ச்சைகள் மிகவும் தொந்தரவு தருபவை. ஆனால் நான் பங்காற்றியதில் சிறந்த டெஸ்ட் தொடர் அது. மோசடிகள் நடந்தன ஆனால் கிரிக்கெட் ஆட்டம், நாங்கள் செலுத்திய ஆதிக்கம் நினைவுகொள்ளத் தக்கது.

சில வேளைகளில் நாம் திரும்பிப் பார்க்கும் போதுதான் நம் சாதனைகள் நமக்குப் புரியவரும். டர்பன் போலவே நாங்கள் வீழ்ந்திருப்போம். ஆனால் அப்போது சிறப்பான ஒரு சதம் எடுத்தது, அதனால் அணி வெற்றிபெற்றது நம்பமுடியாத தருணமாக இப்போது தோன்றுகிறது. என்னுடைய சதங்களில் சிறந்தது அது.

அப்படிப்பட்ட பேட்டிங் எப்போதும் அமையாது, நான் பிட்சில் அமைதியாக இருந்தேன். விநோதமானது சில வேளைகளில் நம் மண்டைக்குள் அமைதி ஏற்படுகிறது. அது போன்ற நாட்கள் அடிக்கடி வருவதில்லை. அதனால் அத்தருணங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்.

கடினமான கிரிக்கெட்தான் ஆனால் டெஸ்ட் போட்டிகள் அதன் அனைத்து தன்மைகளுடன் ஆடப்படவேண்டும், ஸ்லெட்ஜிங் உட்பட. இன்னும் கூட தனிநபர் தாக்குதலுக்குச் செல்லாத கோடு ஒன்று உள்ளது என்று பேசுகின்றனர். ஆனால் தொடர் நடக்கிறது அதனை நாம் இழக்கவும் முடியாது.

ஆஸ்திரேலியர்கள் மிகவும் தனிநபர் அந்தரங்கத் தாக்குதல் தொடுப்பவர்கள். எங்கள் வீரர்களில் ஒருவரும் அப்படிச் செய்தார் (டி காக்), இது ஒரு பெரிய கதை. ஆனால் கிரிக்கெட்டை சவாலாக ஆடுவது எனக்குப் பிடிக்கும். மீதியெல்லாம் தேவையற்றது.

ஆம்! சாண்ட்பேப்பர், பால் டேம்பரிங் விவகாரம் ஊதிப்பெருக்கப்பட்டது. இது பொறுப்பான விஷயம்தான், ஆனால் அதற்காக அதைப் பெருக்கிய விதம் 3 வீரர்களின் சொந்த வாழ்க்கையையே பாதித்து விடும் அளவுக்குப் போகக்கூடாது. அவர்களுக்காக நான் வருந்துகிறேன். குறிப்பாக ஸ்மித். வீரர்களுக்காக தான் சரியான காரியத்தைத்தான் செய்தோம் என்று அவர் நம்பினார். ஆனால் அவரைத் தண்டித்த விதம் கொஞ்சம் கடுமையானது.

தவறென்றால் தவறுதான். பந்துகளை ரிவர்ஸ் ஸ்விங் செய்யவைக்க வீரர்கள் வழி கண்டுபிடிக்கலாம் ஆனால் அது விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். சாண்ட் பேப்பர்? நானும் என் பையில் வைத்திருக்கிறேன். ஆனால் என் மட்டையை சுத்தம் செய்வதற்குத்தான் அதைப் பயன்படுத்துகிறேன்.

(போர்ட் எலிசபெத் இன்னிங்ஸ் மாதிரி ஒன்றை ஆட முடியுமா?), ஆடலாம், ஆடாமலும் போகலாம். ஓய்வு பெற்றிருப்பேன். நான் மீண்டும் டெஸ்ட் போட்டிக்குள் வந்த போது எனக்கு 23 வயது என்றே நினைத்துக் கொண்டேன். அது ஒரு கனவு. அப்படித்தான் ஆட விரும்புகிறேன்.

‘ஐபிஎல் சம்பளம் உதவுகிறது’

மக்கள் உங்களை ஹீரோ என்ற இடத்துக்குக் கொண்டு செல்வார்கள், ஆனால் நான் என் குடும்பம் என்று நார்மலான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். ஐபிஎல் ஆட வந்த போது எனக்கு வசைதான் விழுந்தது. ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டை என்னால் மிஸ் செய்ய முடியாது. இந்த விஷயத்தில் நான் உங்களிடம் பொய் சொல்ல முடியாது. நிதியளவில் எனக்கும் என் குடும்பத்துக்கும் பெரிய அளவில் இது உதவுகிறது. 7 வாரங்கள் வெளியே இருப்பது கடினம்தான் ஆனாலும் தவிர்க்க முடியாது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள். அதனால் அவர்களுக்குத் தேவையிருக்காது. ஆனால் மற்றவர்களுக்கு ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டு நிதியளவில் மிக முக்கியமானது. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் போது சில டாலர்கள் வங்கியில் இருப்பது நல்லதுதானே.

2015-ல் நான் கற்றுக் கொண்ட மிகப்பெரிய பாடம், உலகக்கோப்பை என்பது ஒரு வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையைத் தீர்மானிக்கக் கூடாது என்பதுதான். அரையிறுதிக்குப் பிறகு மனம் உடைந்து போனேன், விடைகள் தேடியலைந்தேன். இப்போது மாறிவிட்டேன், 2019-ல் உலகக்கோப்பையை வெல்லும் தெ.ஆ.அணியில் வீரராக இருக்க விரும்புவேன், இல்லையென்றால் அது என் கரியரைத் தீர்மானிக்காது என்று முடிவுக்கு வந்துள்ளேன்.

http://tamil.thehindu.com/sports/article23699671.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். போட்டி- கொல்கத்தா அணிக்கு எதிராக 55 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி

 
அ-அ+

ஐ.பி.எல். தொடரில், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. #DDvKKR #IPL2018

 
 
 
 
ஐ.பி.எல். போட்டி-  கொல்கத்தா அணிக்கு எதிராக 55 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி
 
புதுடெல்லி:

ஐபிஎல் தொடரின் இன்றைய 26-வது ஆட்டம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

டெல்லி அணியின் ப்ரித்வி ஷா, கொலின் மன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். இதனால் டெல்லி அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது.

மன்ரோ 18 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஷிவம் மாவி பந்தில் போல்டாகி வெளியேறினார். அதன்பின் ப்ரித்வி ஷா உடன் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய ப்ரித்வி ஷா 44 பந்தில் 62 ரன்கள் எடுத்து பியூஷ் சாவ்லா பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 93 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

கொல்கத்தா அணி 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தொடக்க வீரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் களமிறங்கினர். மேக்ஸ்வெல் வீசிய இரண்டாவது ஓவரிலேயே அதிரடி வீரர் கிறிஸ் லின் 5 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய உத்தப்பா 1 ரன்கள் எடுத்த நிலையில் நடையை கட்டினார்.

அடுத்ததாக வந்த நிதிஷ் ரானா, நரேனுடன் ஜோடி சேர முயன்ற நிலையில் டிரெண்ட் போல்ட், நரேனை 26 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற்றினார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் 18 பந்தில் 18 ரன்கள் எடுத்து அவுட் ஆக கொல்த்தா அணி 9.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய சுப்மான் கில், ஆண்ட்ரே ரஸல் ஜோடி சேர்ந்தனர். இருவரும் மாறி,மாறி சிக்ஸ், பவுண்டரி என அடித்து அணியின் ரன்களை வேகமாக உயர்த்தினர். கொல்கத்தா அணி 141 ரன்கள் எடுத்த போது கில் 37 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த சிவம் மாவி டக் அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய ரஸல் 44 ரன்களில் அவேஸ் கான் பந்தில் போல்ட் ஆனார்.  பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் எடுத்தது.

இதனால், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான முதல் போட்டியிலேயே டெல்லி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி உள்ளது. #DDvKKR #IPL2018

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/27233737/1159460/IPL-2018-Delhi-Daredevils-won-by-55-runs-against-Kolkata.vpf

Link to comment
Share on other sites

கேப்டன் ஷ்ரேயஸ் அய்யரின் அதிரடி 93-ல் புத்தெழுச்சி; கொல்கத்தா நொறுங்கியது; டெல்லிக்கு புதிய அத்தியாயம் தொடக்கம்?

 

 
Iyer

93 ரன்களில் 10 சிக்சர்கள் விளாசி டெல்லியை தட்டி எழுப்பிய ஷ்ரேயஸ் ஐயர் (வலது).அருகில் விஜய் சங்கர்.   -  படம். | பிடிஐ.

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் 2018-ன் 26வது போட்டி புதிய கேப்டன் ஷ்ரேயஸ் அய்யரின் (93 நாட் அவுட்) காட்டடி தர்பாரில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி புத்தெழுச்சி கண்டு, தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி கண்டது.

இன்றைய போட்டியில் கம்பீர் ஆடவில்லை, அவர் நீக்கப்பட்டாரா? அவரை விளையாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனரா? அல்லது அவரே உட்கார்ந்து கொள்கிறேன் என்றாரா என்பது பற்றித் தெரியவில்லை. ஆனால் டெல்லி அணிக்கு இந்த வெற்றி புதிய அத்தியாயத்தின் தொடக்கமா என்பது போகப்போகத்தான் தெரியும், இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது. 24 வயது இளம் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யரும் இன்னும் நிறைய நிரூபிக்க வேண்டியுள்ளது.

 

ஆகச்சிறிய மைதானமான டெல்லியில் தினேஷ் கார்த்திக் எதிரணியை பேட் செய்ய அழைத்து தவறிழைத்தார், காரணம் கவுதம் கம்பீரை இழந்து பெரும் குழப்பத்தில் இருந்த டெல்லி அணிக்கு எதிராக ஒரு 200 ரன்கள் பக்க இலக்கை நிர்ணயித்து பிறகு அருமையான ஸ்பின்னர்களைக் கொண்ட கொல்கத்தா டெல்லிக்கு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். இந்த இடத்தில் தினேஷ் கார்த்திக் தன் முடிவில் ஏதோ தவறு செய்துவிட்டதாகவே படுகிறது. டெல்லி அணி முதலில் பேட் செய்து 14 ஓவர்களில் 127/2 என்று தான் இருந்தது. கடைசி 6 ஓவர்களில் 92 ரன்கள் விளாசியதற்குக் காரணம் ஷ்ரேயஸ் அய்யர், இவர் 10 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 40 பந்துகளில் 93 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் திகழ்ந்தார். 219/4 என்று முடிந்த டெல்லி அணி பிறகு கொல்கத்தாவை 77/5 என்று பின்னடைவு காணச்செய்து கடைசியில் 164/9 என்று மட்டுப்படுத்தியது.

ஷ்ரேயஸ் அய்யர் ரன்களைச் சேர்ப்பவராகத்தான் நாம் அறிந்திருக்கிறோம், அப்படித்தான் இன்று சேர்த்துக் கொண்டு வந்தார், ஆனால் திடீரென அரைசதம் கடந்த பிறகு வாங்கு வாங்கென்று வாங்கினார், ஷிவம் மாவி வீசிய கடைசி ஓவரில் 4 சிக்சர்களுடன் 28 ரன்களை விளாசித் தள்ளினார் அய்யர். இதனால் டெல்லி இந்த சீசன் ஐபிஎல்-ன் அதிகபட்ச ஸ்கோரான 219 ரன்களை எட்டியது.

கம்பீர் நீக்கம், கொலின் மன்ரோ, பிரிதிவி ஷா அபாரத் தொடக்கம்:

தான் பரிந்துரை செய்த கேப்டன் தன்னை அணியிலிருந்து நீக்குவார் என்று கம்பீர் எதிர்பார்த்தாரா என்பது தெரியவில்லை, கொலின் மன்ரோ சேர்க்கப்பட்டார். பவர் ப்ளேயிலேயே புதிய கூட்டணியின் அவசரம் தெரிந்தது, இதற்கு முன்பாக பவர் ப்ளேயில் 48 ரன்களைத்தான் அதிகபட்சமாகக் கண்ட டெல்லி இன்று மன்ரோ, பிரிதிவி ஷா மூலம் 57 ரன்கள் கூட்டணி கண்டது. இதில் 40-45 ரன்கள் பவுண்டரிகளிலேயே வந்தது. மன்ரோ 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 33 ரன்கள் அடிக்க பிரிதிவி ஷா 7 அருமையான பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 44 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார்.

மன்ரோ, ஷிவம் மாவியின் வேகத்துக்கு பவுல்டு ஆனவுடன் 3ம் நிலையில் இறங்கினார் ஷ்ரேயஸ் அய்யர். முதலில் ரன்களைச் சேகரித்தார், எதிர்முனையில் செட்டில் ஆன பிரிதிவி ஷா, மிட்செல் ஜான்சன் வேகத்தை அபாரமாக ஆடினார், மிட்விக்கெட்டில் ஒரு பவுண்டரி, எக்ஸ்ட்ரா கவர் மேல் ஒரு பவுண்டரி, ஸ்கொயர் லெக் மேல் அதியற்புதமான சிக்ஸ் என்று ஜான்சனை திகைக்க வைத்தார் பிரித்வி ஷா. பிறகு சாவ்லாவின் எழும்பாத ஷூட்டர் பந்தில் பவுல்டு ஆனார்.

2 பந்துகள் சென்று ரிஷப் பந்த் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார். ரஸலின் எகிறு பந்து இவரது கிளவ்வில் பட்டு தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனது. 129/3 என்ற நிலையில் மேக்ஸ்வெல், அய்யர் இணைந்தனர்.

கொல்கத்தா விட்ட கேட்ச்களும் அய்யர் புகுந்த கதையும்!

பந்த் அவுட் ஆகும் போது அய்யர் 23 பந்துகளில் 33 என்று இருந்தார். ஆனால் அதே 15வது ஓவரில் ரஸலின் கடைசி 2 பந்துகளில் ஒன்றை பேக்வர்ட் பாயிண்டில் திருப்பி விட்டு பவுண்டரியும் அடுத்த ஷார்ட் பிட்ச் பந்தை லாங் ஆஃபில் ஒரு டென்னிஸ் ஃபோர்ஹேண்ட் ஷாட்டில் சிக்ஸ் அடித்தார். சாவ்லா தன் 4வது ஓவரில் வெறும் 3 ரன்களையே கொடுத்தார்.

17வது ஓவரை ஷிவம் மாவி வீச ஷார்ட் பிட்ச் பந்தை லாங் ஆனில் தூக்கி அடித்தார் அங்கு உத்தப்பா கேட்சை விட்டதோடு பந்து பவுண்டரியைக் கடந்து சென்று 6 ரன்களானது. கையின் ஊடாக சிக்சருக்கு விட்டார் உத்தப்பா இதுதான் பெரிய காஸ்ட்லி மிஸ் ஆனது, 29 பந்துகளில் அரைசதம் கண்டார் அய்யர். அடுத்த பந்தை ஒதுங்கிக் கொண்டு லாங் ஆஃபில் தூக்கி சிக்ஸ் அடித்தார் ஷ்ரேயஸ். 18வது ஓவரை நரைன் வீச அதில் ஒரு பந்தை லாங் மேல் தூக்கி அடித்தார் ஷ்ரேயஸ், இம்முறை நிதிஷ் ராணா கையைத் தூக்கி பந்தை கேட்ச் ஆக்க நினைத்தார், ஆனால் பந்து கையைக் கடந்து சிக்ஸ் ஆனது. இதுவும் நல்ல வாய்ப்புதான். அதே ஓவரில் மேக்ஸ்வெல் ஒரு பந்தை உருப்படியாக மிடில் செய்து லாங் ஆனில் சிக்ஸ் அடித்தார். நரைன் 3 ஓவர்கள் 35 ரன்கள் என்று முடிந்தார்.

மிட்செல் ஜான்சன் 19வது ஓவரை வீச மேக்ஸ்வெல் ஷார்ட் பிட்ச் பந்தை லாங் லெக்கில் சிக்ஸ் அடித்து பிறகு கடைசி பந்தை பவுலர் தலைக்கு மேல் நான்கிற்குத் தூக்கினார். 190/3 என்ற நிலையில் ஷிவம் மாவி கடைசி ஓவரைத் தொடங்க ஷ்ரேயஸ் தாண்டவம் தொடங்கியது. முதல் பந்தை ஒதுங்கிக் கொண்டு எக்ஸ்ட்ரா கவர் மேல் சிக்ஸ் தூக்கினார். அடுத்த பந்து ஆஃப் ஸ்டம்ப் திசையில் ஒதுங்கி லாங் மேன் ஒரே தூக்கு சிக்ஸ் ஆனது. அடுத்த பந்து மேக்ஸ்வெல் 27 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். மீண்டும் ஒரு மாவி ஷார்ட் பிட்ச், இம்முறை மிட்விக்கெட்டில் சிக்ஸ். மீண்டும் ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து வந்து லாங் ஆஃபில் ஒரு நான்கு. கடைசி பந்து மீண்டும் ஷார்ட் பிட்ச், லாங் ஆஃபில் சக்தி வாய்ந்த சிக்ஸ். மாவி போன்ற இளம் வீரர்களிடம் கடைசி ஓவரிக் கொடுக்கலாமா? ஸ்கோர் 219 ரன்கள் ஆனது. மாவி 4 ஓவர்களில் 58 ரன்கள். ஐயர் 40 பந்துகளில் 10 சிக்சர்கள் 3 பவுண்டரிகள். இதில் மாவியை மட்டும் 6 சிக்சர்கள் விளாசினார் ஷ்ரேயஸ்.

கொல்கத்தா வீழ்ச்சி:

கொல்கத்தா அணி 2வது ஓவரில் கிறிஸ் லின் (5) விக்கெட்டை கிளென் மேக்ஸ்வெலின் ரவுண்ட் த விக்கெட் பந்துக்கு பவுல்டு முறையில் இழந்தது, அங்கு மேக்ஸ்வெலை கொண்டு வந்தது நல்ல கேப்டன்சி. பலன் அளித்தது. சுனில் நரைன் 1 பவுண்டரி 3 சிக்சர்கள் விளாசி 9 பந்துகளில் 26 ரன்கள் என்று குட்டிப்புலியாக ஆடினார், ஆனால் போல்ட் வீசிய ஷார்ட் பிட்ச் பந்துக்கு வேறு ஸ்ட்ரோக் எதுவும் ஆட முடியாத நரைன் ஒதுங்கிக் கொண்டு சுற்றினார் அய்யரிடம் கேட்ச் ஆனது, முன்னதாக டிரெண்ட் போல்ட் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தில் உத்தப்பாவை 1 ரன்னில் வீழ்த்த 3 ஓவர்களில் 33/3 என்று ஆனது கொல்கத்தா.

கொல்கத்தாவின் சிறந்த வீரர் நிதிஷ் ராணாவுக்கு இளம் வேகப்புயல் ஆவேஷ் கான் 142 கிமீ வேகத்தில் ஒரு பந்தை வீச பந்திலிருந்து கண்ணை எடுத்து ஷாட் ஆடினார், அது ஆவேஷ் கானிடமே கேட்ச் ஆனது. தினேஷ் கார்த்திக் அமித் மிஸ்ராவின் லெக் ஸ்பின் பந்தை ரீச் செய்து அடித்தார், பந்து சரியாகச் சிக்காமல் பாயிண்டில் கேட்ச் ஆனது. 77/5.

அண்டர்19 கண்டுபிடிப்பான ஷுப்மன் கில், ஆந்த்ரே ரஸல் இணைந்து 6 ஓவர்களில் 64 ரன்கள் சேர்த்தனர். ஷுப்மன் கில் தனது முழுத்திறமையைக் காட்டி 29 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 37 ரன்கள் எடுத்து அய்யர்/பந்த் கூட்டணியில் ரன் அவுட் ஆனார். இது ஒரு நல்ல இன்னிங்ஸ். வேறு ஒரு இலக்காக இருந்தால் இது நிச்சயம் பாராட்டத்தக்க ஒரு இன்னிங்ஸாகியிருக்கும்.

ரஸல் 30 பந்துகளில் 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தாலும் கடைசியில் ஆவேஷ் கான், பிளெங்கெட் ஆகியோரை ஒன்றும் செய்ய முடியவில்லை, மட்டையைச் சுத்து சுத்தென்று சுற்றினார் மாட்டவில்லை கடைசியில் ஒரு பந்து பவுல்டு ஆனது. ஆனால் ரஸல் அவுட் ஆகிச் செல்லும் போது தேவையில்லாமல் ஆவேஷ் கான் ஏதோ கூற ரஸல் என்ன இது? என்பது போல் பார்க்க ஆவேஷ் கானும் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பது போல் செய்தார். 164/9 என்று முடிந்தது.

டெல்லி தரப்பில் போல்ட், மேக்ஸ்வெல், ஆவேஷ் கான், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். லியான் பிளெங்கெட் விக்கெட் எடுக்காவிட்டாலும் 4 ஓவர்களில் 24 ரன்களையே விட்டுக் கொடுத்தார். ஆட்ட நாயகனாக ஷ்ரேயஸ் அய்யர் தேர்வு செய்யப்பட்டார்.

புது கேப்டன், புது உத்வேகம், புத்தெழுச்சி ஆகியவை டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் தொடரில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

http://tamil.thehindu.com/sports/article23703078.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.