Jump to content

Recommended Posts

சுவாரஸ்யமில்லாத சன்ரைசர்ஸ் ஆட்டம்: ராயுடு சதத்தால் சிஎஸ்கே எளிதான வெற்றி

 

 
rr

சென்னை சூப்பர் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த அம்பதி ராயுடு, வாட்ஸன் கூட்டணி   -  படம்உதவி: ஐபிஎல்ட்விட்டர்

ராயுடுவின் சிறப்பான சதத்தால் புனேயில் இன்று நடந்த ஐபிஎல் போட்டியின் 46-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுவாரஸ்யமில்லாத பேட்டிங், எதிரணிக்கு சிரமம் கொடுக்காத பந்துவீச்சு, குழப்பமடைந்த களவியூகம், பீல்டிங் ஆகியவை சிஎஸ்கே அணிக்குச் சாதகமாக மாறி வெற்றியை எளிதாக்கியது.

     
 

முதலில் பேட்டிங் செய்து 118 ரன்கள் அடித்து, தனது கட்டுக்கோப்பான, துல்லியமான பந்துவீச்சால் மும்பை அணியைச் சுருட்டி வெற்றிபெற்றதும் இந்த சன்ரைசர்ஸ் அணிதான்.

இதேபோல இந்த சீசனில் முதல்பேட்டிங் செய்து, தனது சிறப்பான பந்துவீச்சால் எதிரணியை 4 முறை சுருட்டி வெற்றிபெற்றதும் இதே சன்ரைசர்ஸ் அணிதான். ஆனால், இந்தப் போட்டியில் மட்டும் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் ஆகியவை சொத்தையாக இருந்தது ஏனோ தெரியவில்லை.

ஒருவேளை ப்ளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டோம் என்ற மெத்தனத்தால் விளையாடினார்களா சன்ரைசர்ஸ் அல்லது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மேலும் வலுத்துபடுத்துவதற்கான 'உஷ் கண்டுக்காதீங்க' தருணமா எனத் தெரியவில்லை.

வாட்ஸன், ராயுடு பேட்டிங்கின் போது தொடக்கத்தில் பீல்டிங் முறை மிகவும் மோசமாக அமைக்கப்பட்டு இருந்தது. லாங் ஆன் திசையில் பீல்டர்களை நிறுத்துவதற்குப் பதிலாக மிட்ஆஃப்பில் அதிகமான பீல்டர்களை நிறுத்தி பவுண்டரிகள் அதிகமாகச் செல்வதற்கு சன்ரைசர்ஸ் அணி வழிவகுத்துக் கொடுத்தது.

அதிலும் தோனி அடித்த பந்தை லெக் திசையில் மணிஷ் பாண்டே கோட்டை விட்ட கேட்ச்சை ஏற்றுக் கொள்ளவே முடியாது. கையில் விழுந்த பந்தை, தெரியாமல் பிடித்துவிட்டோம் என உதறியதுபோல் கேட்சை விட்டார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்கள் வாட்ஸ், ராயுடுவின் பேட்டிங் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மோசமாகப் பந்துவீசிய சென்னை அணி அதில் பாடம் கற்றுக்கொண்டு இந்தப் போட்டியில் ஓரளவு சிறப்பாகவே பந்துவீசியது.

சாஹரும், தாக்கூரும் எதிரணிக்கு நெருக்கடி தரும் விதத்திலேயே பந்துவீசியது சிறப்பாகும். இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ப்ளே ஆப் சுற்று உறுதியாக்கப்பட்டுள்ளது. ஆட்டநாயகன் விருதை ராயுடு பெற்றார்.

இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 8 வெற்றிகள், 4 தோல்விகள் என 16 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் அணி 9 வெற்றி, 3 தோல்வி என 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

டாஸ்வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. சிஎஸ்கே அணியில் கரண் சர்மாவுக்கு பதிலாக சாஹர் சேர்க்கப்பட்டு இருந்தார். சன்ரைசர்ஸ் அணியில் யூசுப் பதானுக்கு பதிலாக தீபக் ஹூடா வாய்ப்புப் பெற்றார்.

சன்ரைசர்ஸ் அணியின் ஷிகார் தவாண், ஹேல்ஸ் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். சென்னை அணியின் பந்துவீச்சு தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக இருந்தது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மோசமாக வீசிய சென்னை பந்துவீச்சாளர்கள் இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசினர். குறிப்பாக சாஹர், தாக்கூர் ஆகிய இருவரும் கட்டுக்கோப்பாக தொடக்கத்தில் இருந்து பந்துவீசி சன்ரைசர்ஸ் ரன்குவிப்பை கட்டுப்படுத்தினார்கள்.

முதல் ஓவரை நெருக்கடியாக வீசிய சாஹர், ஒரே ஒரு ரன் மட்டுமே கொடுத்து அசத்தினார். தாக்கூர் வீசிய 2-வது ஓவரில் தவாண் ஒரு பவுண்டரி விளாசினார். வில்லி வீசிய 3-வது ஓவரில் தவாண் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து ரன்ரேட்டை உயர்த்த முனைந்தார்.

4-வது ஓவரை மீண்டும் சாஹர் வீசினார். தொடக்கத்தில் இருந்தே சாஹர் பந்துக்கு திணறிய ஹேல்ஸ் 2 ரன்களில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடக்கத்திலேயே சன்ரைசர்ஸ் அணி விக்கெட்டை இழந்து தடுமாறியது.

அடுத்து கேப்டன் வில்லியம்ஸன் களமிறங்கி தவாணுடன் இணைந்தார். தாக்கூர் வீசிய 5-வது ஓவரில் பவுண்டரி அடித்து வில்லியம்ஸன் ரன் கணக்கைத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 29 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

srhjpg

தவாண், வில்லியம்ஸ் கூட்டணி

 

ஹர்பஜன் 7-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் தவாண் பவுண்டரி அடித்தார். வில்லியம்ஸன் 2 ரன்கள் சேர்த்தபோது, இந்த சீசனில் 500 ரன்கள் எட்டினார் 9-வது ஓவரை வாட்சனும் தனது பங்கிற்கு கட்டுக்கோப்பாக வீசிய ரன்வேகத்தை குறைத்தார்.

பிராவோ வீசிய 10-வது வில்லியம்ஸன் 2 பவுண்டரிகள் அடித்து ரன்ரேட்டை வேகப்படுத்தினார். 11-வது ஓவரை வீச ஜடேஜா அழைக்கப்பட்டார். சரியான நேரத்துக்காகக் காத்திருந்த தவாண் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்து அரைசதத்தை நெருங்கினார். வாட்ஸன் வீசிய 12-வது ஓவரில் ஒருசிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார் வில்லியம்ஸன்.

ஜடேஜா வீசிய 13-வது ஓவரில் தவாண் சிக்ஸர் அடித்து, அரைசதத்தை நிறைவு செய்தார். ஹர்பஜன் வீசிய 14-வது ஓவரில் தவாணும், வில்லியம்ஸணும் ஆளுக்கு ஒரு சிக்ஸர் பறக்கவிட்டனர்.

இருவரையும் பிரிக்க கேப்டன் தோனி பல பந்துவீச்சாளர்களையும் மாறி,மாறி வீசச் செய்தும் அதற்குப் பலன் கிடைக்கவில்லை. வில்லி வீசிய 15-வது ஓவரில் வில்லியம்ஸன் ஒரு பவுண்டரியும், தவாண் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளும் அடித்து ஸ்கோரை உயர்த்தினார்கள்.

16-வது ஓவரை வீச பிராவோ அழைக்கப்பட்டதற்குப் பலன் கிடைத்தது. அந்த ஓவரில் வில்லியம்ஸன், தவாண் ஆளுக்கொரு பவுண்டரி அடித்தனர். வில்லியம்ஸன் தனது அரைசதத்தை நிறைவு செய்தார்.

bravojpg

தவாண் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியை கொண்டாடும் பிராவோ

 

ஆனால் பிராவோ வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் ஹர்பஜனிடம் கேட்ச் கொடுத்து தவாண் ஆட்டமிழந்தார். தவாண் 49 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இதில் 3 சிக்ஸர்களும், 10 பவுண்டரிகளும் அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 123 ரன்கள் சேர்த்து, பிரிந்தனர். ஆனால், அடுத்த ஓவரிலேயே வில்லியம்சனும் ஆட்டமிழந்தார்.

9 ஓவர்கள் வரை ரன்சேர்க்க சிரமப்பட்ட சன்ரைசர்ஸ் அணி 10 ஓவரில் இருந்து 16-வது ஓவர் வரை 79 ரன்கள் சேர்த்தனர்.

தாக்கூர் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் பிராவோவிடம் கேட்ச் கொடுத்து 39 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்த நிலையில் வில்லியம்ஸன் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்து தீபக் ஹூடாவும், மணிஷ் பாண்டேவும் பேட்டிங்கில் சொதப்பினர். மணிஷ் பாண்டே 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. ஹூடா 21 ரன்களிலும், சஹிப் அல்ஹசன் 8 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சென்னை அணித் தரப்பில் சாஹர் 2 விக்கெட்டுகளையும் தாக்கூர், பிராவோ தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

180 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. வாட்ஸன், ராயுடு ஆட்டத்தைத் தொடங்கினர். வாட்ஸன் அதிரடியான தொடக்கத்தை அளித்தார். புவனேஷ் குமாரின் முதல் ஓவரில் ஒரு சிக்ஸரும், சந்தீப் சர்மா வீசிய 2-வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸரும் வாட்ஸன் விளாசினார்.

தன்னுடைய பங்கிற்கு புவனேஷ்குமார் வீசிய 3-வது ஓவரில் ராயுடு ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார். ரன்ரேட்டை கட்டுப்படுத்தவும், கூக்ளி பந்துவீச்சில் மிரட்டவும் ராஷித்கான் அழைக்கப்பட்டார். ராஷித்கான் வீசிய 5-வது ஓவரில் ராயுடு ஒரு பவுண்டரி அடித்தார்.

சஹிப் அல்ஹசன் வீசிய 6-வது ஓவரில் வாட்ஸனும், ராயுடுவும் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். பவர்ப்ளே முடிவில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன் சேர்த்திருந்தது.

கவுல் வீசிய 7-வது ஓவரை ராயுடு ’பொளந்துகட்டினார்’. 2 பவுண்டரி, ஒருசிக்ஸர் என ராயுடு வெளுத்து வாங்கினார். கவுல் வீசிய 10-வது ஓவரை மீண்டும் வெளுத்துவாங்கினார் ராயுடு. ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்து 31 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

சிறப்பாக பேட் செய்த வாட்ஸன் 31 பந்துகளில் அரைசதம் எட்டினார். ராஷித்கான் வீசிய 12-வது ஓவரில் ராயுடு சிக்ஸர் அடித்தார். புவனேஷ்குமார் வீசிய 13-வது ஓவரில் ராயுடு ஒரு சிக்ஸரும், வாட்ஸன் ஒரு பவுண்டரியும் விளாசினர்.

இவர்களைப் பிரிக்க சகிப் அல்ஹசன் பந்துவீச அழைக்கப்பட்டார். சகிப் வீசிய 14-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸருக்கு பறக்கவிட்ட ராயுடு அடுத்த பந்தில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ராயுடு 35 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். அதில் 5பவுண்டரி, 3 சிக்ஸர் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து வந்த ரெய்னா 2 ரன்கள் சேர்த்த நிலையில், சந்தீப் சர்மா பந்துவீச்சில் வந்த வேகத்தில் வெளியேறினார். அடுத்து கேப்டன் தோனி களமிறங்கினார்.

சகிப் அல்ஹசன் வீசிய 16-வது ஓவரில் தோனி அடித்த பந்தை லாங் ஆன் திசையில் நின்றிருந்த மணிஷ் பாண்டே கேட்ச் பிடிக்காமல் தவறவிட்டார். கிரிக்கெட் கற்றுக்கொள்பவர் கூட எளிதாக இந்த கேட்சை பிடிக்க முடியும், ஆனால், மணிஷ் பாண்டே தோனிக்கு கேட்சை நழுவவிட்டது “உஷ் கண்டுகாதீங்க” தருணத்தை நினைவு படுத்துகிறது.

(அதுமட்டுமல்ல பந்தைபிடித்துவிட்டு தெரியாமல் கேட்ச் பிடித்துவிட்டோமோ என்று நினைவு வந்து கேட்சை மணீஷ்பாண்டே நழுவவிட்டாரா அல்லது, தோனியின் ஷாட் வேகத்தில் கேட்ச்சை பிடிக்க முடியவில்லையா, விளக்கு ஒளி கண்களை கூசியதா என்பது தெரியவில்லை. இப்படியும் இருக்கலாமே..) அந்த ஓவரில் ராயுடு ஒரு சிக்ஸரும், பவுண்டரியும் விளாசி சதத்தை நெருங்கினார்.

கவுல் வீசிய 18-வது ஓவரில் தோனி ஒரு சிக்ஸர் அடித்து ரன்ரேட்டை வேகப்படுத்தினார். கடைசி 2 ஓவர்களில் 8 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஷ் குமார் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தில் ராயுடு ஒரு ரன் எடுக்க, தோனி பவுண்டரி அடித்து, அடுத்த ரன்னுக்கு ராயுடுவிடம் கொடுத்தார். ராயுடு ஒரு ரன் எடுத்து ஐபிஎல் போட்டியில் இந்த சீசனில் முதல் சதத்தை நிறைவு செய்தார். கடைசிப் பந்தில் வழக்கம் போல் தோனி வின்னிங் ஷாட் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார்.

rayudujpg

சதம் அடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ராயுடு

 

19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராயுடு 62 பந்துகளில் 100 ரன்களும்(7 சிக்ஸர், 7 பவுண்டரி) தோனி 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சன்ரைசர்ஸ் தரப்பில் சந்தீப் சர்மா ஒருவிக்கெட் வீழ்த்தினார்.

ஐபிஎல் அணிகளில் சிறந்த பந்துவீச்சு கொண்டதாக கருதப்படும் சன்ரைசர்ஸ் அணி 179 ரன்கள் சேர்த்தும் இந்த முறை சிஎஸ்கேவை சுருட்டமுடியாமல் போனது ஏனோ?

http://tamil.thehindu.com/sports/article23874205.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • Replies 592
  • Created
  • Last Reply

ஐபிஎல் போட்டியில் பட்லர் அதிரடியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #IPL2018 #MIvRR

 
 
ஐபிஎல் போட்டியில் பட்லர் அதிரடியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
 
மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 47-வது மற்றும் இன்றைய 2-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரகானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.
 
மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடினர்.
 
அணியின் எண்ணிக்கை 87 ரன்னாக இருந்தபோது சூர்யகுமார் யாதவ் 38 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரோகித் சர்மா முதல் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
 
மறுமுனையில் சிறப்பாக ஆடிய எவின் லெவிஸ் 42 பந்தில் 60 ரன்னிலும், இஷான் கிஷான் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். குருணால் பாண்டியா 3 ரன் எடுத்து அவுட்டானார். ஹர்திக் பாண்ட்யா 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 36 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
 
201805132355106198_1_lewis-2._L_styvpf.jpg
 
இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது.
 
ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும், தவால் குல்கர்னி, உனத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷார்ட்டும், ஜோஸ் பட்லரும் இறங்கினர்.
 
ஷார்ட் 4 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் ரகானே பட்லருக்கு ஓரளவு கம்பெனி கொடுத்தார். இருவரும் இணைந்து 95 ரன்கள் சேர்த்தனர். ரகா8னே 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.
 
மறுமுனையில் ஜோஸ் பட்லர் தூணாக நின்று சிக்சர், பவுண்டரியுமாக விளாசி அரை சதம் கடந்தார். அவருக்கு சஞ்சு சாம்சன் ஈடுகொடுத்தார். சாம்சன் 26 ரன்னில் அவுட்டானார்.
 
இறுதியில், ராஜஸ்தான் அணி 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் 53 பந்துகளில்  5 சிக்சர், 9 பவுண்டரியுடன் 94 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
மும்பை அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #IPL2018 #MIvRR

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/13235042/1162767/rajasthan-royals-beat-mumbai-indians-by-7-wickets.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்குத்தான் எனக்கு திரு விழா இருக்கு.?

Link to comment
Share on other sites

சேவாகை சமன் செய்த ஜோஸ் பட்லர் பவர் ஹிட்டிங்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

 

 
butler

வெற்றியைக் கொண்டாடும் பட்லர். இயலாமையில் பார்க்கும் ஹர்திக் பாண்டியா.   -  படம். | ஏ.எஃப்.பி.

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 2018-ன் 47வது போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் ஜோஸ் பட்லரின் 53 பந்து 94 ரன்களில் 171/3 என்று 12 பந்துகள் மீதம் வைத்து அபார வெற்றி பெற்றது. சேவாக் சாதனையை ஜோஸ் பட்லர் சமன் செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெறுவதற்காக மற்ற அணிகள் பாடுபடும் அளவுக்குக் கூட மும்பை இந்தியன்ஸ் பாடுபடுவதில்லை என்பது நேற்றும் தெரியவந்தது, ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் பேட் செய்யும் போது ராஜஸ்தான் ராயல்ஸ் முக்கியமான தருணங்களில் கேட்ச்களை விட்டு மும்பைக்குச் சாதக சூழ்நிலைகளை ஏற்படுத்தியது, ஆனாலும் மும்பை நாங்கள் தோற்கத்தான் செய்வோம் என்று அடம்பிடித்தனர்.

 
 

ஜோஸ் பட்லர் மும்பை இந்தியன்ஸ் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சினார். தொடர்ச்சியாக 5 அரைசதங்களை எடுத்துள்ளார் பட்லர், இதற்கு முன்னால் சரவெடி சேவாக்தான் 5 அரைசதங்களை தொடர்ச்சியாக எடுத்துள்ளார். அவர் சாதனையை ஜோஸ் பட்லர் சமன் செய்தார். பட்லர் தன் 53 பந்து 94 ரன்களில் 9 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் அடங்கும்.

எவின் லூயிஸ், சூரிய குமார் யாதவ், ராஜஸ்தான் ராயல்ஸின் தவற விடப்பட்ட கேட்ச்களினால் 64 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தனர், ஆனால் இந்த அடித்தளத்தை மும்பை நன்றாகப் பயன்படுத்தவில்லை. சூரிய குமாரும், ரோஹித் சர்மாவும் ஜோஃப்ரா ஆர்ச்சரின் அடுத்தடுத்த பந்துகளில் உனாட்கட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேற மும்பை ஸ்கோர் விகிதம் குறைந்தது. இதில் மும்பை வென்றிருந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவது மற்ற போட்டிகளின் கணக்கீட்டுகளுக்குச் சென்றிருக்கும். எனவே அதனை முதலில் நேற்று சன் ரைசர்ஸ் தோல்வி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னை வலுப்படுத்திக் கொண்டது, மும்பை தோல்வி மூலம் சிஎஸ்கேவின் பிளே ஆப் தகுதி உறுதியானது.

ஆனாலும் இன்னும் கூட சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் அணிகள் தவிர மற்ற அணிகளுக்கும் இடையே பிளே ஆஃப் சுற்றுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

சூரியகுமார், எவின் லூயிஸ் நல்ல தொடக்கம்:

பவர் பிளேயில் நன்றாக வீசி விக்கெட்டுகளையும் எடுத்து வந்த கவுதம் நேற்று முதல் ஓவரிலேயே 14 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதன் பிறகு 12வது ஓவர்தான் வந்தார் கவுதம், அப்போது எவின் லூயிஸ் இவரை சிக்ஸ் அடிக்க 3வது ஓவரும் கவுதமுக்கு வழங்கப்படவில்லை (ஸ்ட்ராடஜியாமாம்!). ராயல்ஸின் சமீபத்திய வெற்றியில் பங்களிப்பு செய்த இஷ் சோதி உடல் நலமின்மை காரணமாக நேற்று ஆடவில்லை(?!) இந்த சாதக நிலையையும் மும்பை பெரிய அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஷ்ரேயஸ் கோபாலும் 17 ரன்களை ஒரு ஓவரில் விட்டுக் கொடுக்க மொத்தமே ஸ்பின்னர்கள் 4 ஓவர்கள்தான் வீசினர் இதில் 44 ரன்கள் வந்தது. சூரியகுமார் யாதவ் 31 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து ஆர்ச்சர் பந்தை புல்ஷாட் ஆடி உனாட்கட்டின் நல்ல கேட்சுக்கு வெளியேறினார், அடுத்த பந்தே ஆர்ச்சர், ரோஹித் சர்மாவுக்கு ஷார்ட் பிட்ச் சோதனை கொடுக்க அதே இடத்தில் உனாட்கட் இன்னொரு நல்ல கேட்சை எடுத்தார்.

எவின் லூயிஸ் 5 ரன்களில் இருந்த போது ஸ்டூவர்ட் பின்னி நீண்ட நேரம் வானில் இருந்து இறங்கிய பந்தை கேட்ச் ஆக்காமல் விட்டார். இதுவும் ஆர்ச்சர் பந்தில்தான். இதே ஆர்ச்சர் கடைசியில் பென் கட்டிங்குக்கு கையில் விழுந்த கேட்சை விட்டார். இதனால் கட்டிங் 2 ரன்களில் ஆட்டமிழக்க வேண்டியவர் 10 ரன்கள் எடுத்தார்.

எவின் லூயிஸ் 42 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து தவல் குல்கர்னி பந்தில் சாம்சனிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இஷான் கிஷன் 12 ரன்களில் பென் ஸ்டோக்ஸின் ஷார்ட் ஆஃப் லெந்த் ஸ்லோ பந்தில் சாம்சனின் டைவிங் கேட்சுக்கு வெளியேறினார்.

குருணால் பாண்டியா 3 ரன்களில் உனாட்கட்டிடம் வெளியேற மும்பை இந்தியன்ஸ் அணி 17வது ஓவரி முடிவில் 132/5.

ஹர்திக் பாண்டியா 21 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 36 ரன்கள் எடுக்க மும்பை இந்தியன்ஸ் 10 ஓவர்களில் 87/0 என்ற நிலையிலிருந்து 168/6 என்று முடிந்தது, ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் ஸ்டோக்ஸ் 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். குல்கர்னி, உனாட் கட் அதிக ரன்களைக் கொடுத்து தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

பட்லர் அதிரடி:

ராஜஸ்தான் ராயல்ஸ் இலக்கு விரட்டல் டியார்க்கி ஷார்ட்டின் மோசமான பார்மினால் கொஞ்சம் தடுமாறியது, இந்த ஐபிஎல்-ல் இவர் 7 இன்னிங்ஸ்களில் 116 ரன்களை 16 ரன்கள் சராசரியில் எடுத்துள்ளார். 5 பந்தை நேற்று ஆடினாலும் திருப்திகரமாக ஆடவில்லை. தடவல்தான். 4 ரன்களில் பும்ராவின் பந்தில் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்தார். முதல் ஓவரில் 9/1 பிறகு 13/1, ஆனால் அதன் பிறகு விக்கெட்டுகளை வீழ்த்த மும்பை திணறியது, என்னென்னவோ செய்தும் பட்லரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

பவர் பிளேயில் பட்லர் அவர் விரும்பியபடி அடிக்க முடியாவிட்டாலும் க்ருணால் பாண்டியா வீசிய 5வது ஓவரில் ஒரு சிக்சும் பவுண்டரியும் அடித்தார். ரஹானே ஒரு முனையில் இறுக்கிப் பிடிக்க இருவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்காக 95 ரன்களைச் சேர்த்தனர். ரஹானே 36 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போது ராயல்ஸுக்கு வெற்றிக்கான தேவை ஓவருக்கு 9 ரன்களுக்கும் சற்று கூடுதலாக தேவைப்பட்டது.

ஆனால் பட்லரும், சாம்சனும் இணைந்து அடித்து ஆடத் தொடங்கினர், 4.4 ஓவர்களில் ஸ்கோர் 165 ரன்களை எட்டியது. சாம்சன் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போது வெற்றிக்கு அருகில் வந்தது ராஜஸ்தான். ஹர்திக் பாண்டியாவை சாம்சன் 2 சிக்சர்களை விளாசினார். அதுவும் முதல் சிக்ஸ் உண்மையில் பாண்டியாவை டோன்ட் பவுல் என்பது போல்தான் இருந்தது காலரியில் சுமார் 15-20 வரிசை தாண்டி போய் விழுந்தது பந்து. அடுத்த பாண்டியா பந்தும் டோன்ட் பவுல் ரக சிக்ஸ்தான். அதே ஒவரில் பாண்டியாவிடம் சாம்சன் ஆட்டமிழக்க கிராஸ் செய்த பட்லர் பாண்டியாவின் பந்தை ‘நான் தான் போடாதே என்றேனே’ என்று கூறுவது போல் மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடித்தார், இதுவே வெற்றி ரன்களாக அமைந்த்து. ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களில் 52 ரன்கள் விளாசப்பட்டார். மும்பையின் சிறந்த ஸ்பின்னர் மயங் மார்க்கண்டேவும் நேற்று சோபிக்கவில்லை. அவர் 3 ஓவர்களில் 2 டாட்பால்களையே வீச முடிந்து 32 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

2 ஒவர்கள் மீதம் வைத்து ராயல்ஸ் வெற்றி பெற்றது, ஆட்ட நாயகன் ஜோஸ் பட்லர்.

http://tamil.thehindu.com/sports/article23878550.ece

Link to comment
Share on other sites

மும்பைக்கு எதிரான ஆட்டம்: ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

 

 
ajinkya-rahane

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே : கோப்புப்படம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை வான்ஹடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கும் இடையிலான லீக் ஆட்டம் நேற்று நடந்தது.

 

இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் அதிரடியாக பேட்செய்து 94 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகப் பந்துவீச ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டனர். இதனால், ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானேவுக்கு போட்டு நடுவர் அமைப்பு அபராதம் விதித்துள்ளது.

இது குறித்து ஐபிஎல் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், ''மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்அணிக்கு எதிராகப் பந்துவீச ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைக்காட்டிலும் அதிகமான நேரம் எடுத்துக்கொண்டனர். இது ஐபிஎல் போட்டி விதிமுறைகளை மீறிய செயலாகும். ஆதலால், அந்த அணியின் கேப்டன் அஜின்கயே ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டது.

http://tamil.thehindu.com/sports/article23880113.ece?homepage=true

Link to comment
Share on other sites

சிறந்த பெளலிங் படையை சிக்சர்களால் சிதறடித்த சி.எஸ்.கே.! #CSKvSRH

 
 

இந்த சீசனின் சிறந்த பௌலிங் யூனிட்டான சன்ரைசர்ஸை நாராகக் கிழித்துத் தொங்கவிட்டு, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். முதலில் பேட்டிங் செய்த 4 போட்டிகளிலும் எதிரணிகளை சுருட்டி, அசத்தலாக வென்றிருந்தது ஹைதராபாத் அணி. ஆனால், வாட்சன் - ராயுடு இணையின் அதிரடி சூறாவளியில் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் கதிகலங்க, அவர்களின் 'டிஃபண்டிங் ரெக்கார்ட்' நேற்று புனேவை மையம் கொண்டிருந்த மேகங்கள் போல் கலைந்துபோனது. #CSKvSRH

#CSKvSRH

 

டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த தோனி, 5 கோடிக்கு எடுத்தும் பெரிய அளவில் பயன்படுத்தாமலேயே வைத்திருக்கும் கரண் ஷர்மாவுக்குப் பதில் தீபக் சாஹரைக் களமிறக்கினார். முதல் ஓவரின் முதல் பந்தில் மட்டும் ஒரு ரன் கொடுத்த சாஹர், அடுத்த ஐந்து பந்துகளையும் 'டாட் பால்'களாக வீசி அசத்தினார். இதுவரை நல்ல ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைக்காததால் ஹேல்ஸ் - தவான் கூட்டணி மிகவும் பொறுமையாகவே ஆட்டத்தை எதிர்கொண்டது. ஆனால், இருவரும் 'ரொடேட்' செய்வதில்கூட கவனம் செலுத்தாததால் ஸ்கோர் மிகவும் மந்தமாக உயர்ந்தது. ஷர்துல் தாக்கூர் ஓவரில், தவான் pad-ல் பந்து பட, தாக்கூர் அப்பீல் செய்தார். இன்சைடு எட்ஜ் போலத் தெரிந்ததால் அம்பயர் அதை நிராகரித்தார். தாக்கூர் அதற்கு ரிவ்யூ வேண்டும் என்று சொல்ல, தோனி அதில் விருப்பம் காட்டவில்லை. ரிவ்யூ எடுக்கப்படவில்லை. ரீப்ளேவில் தவான் அவுட் என்பது தெளிவாகையில், `தோனி எப்படி தப்பான முடிவெடுத்தாரு' என்று அதிர்ந்துபோனார்கள் சென்னை ரசிகர்கள்!

சாஹர் வீசிய இரண்டாவது ஓவரில், பாயின்ட் திசையில் அடிக்க ஆசைப்பட்டு 2 ரன்களில் (9 பந்துகள்) ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அலெக்ஸ் ஹேல்ஸ். கடந்த போட்டியில் டேர்டெவில்ஸைப் பதம் பார்த்த தவான் - வில்லியம்சன் பார்ட்னர்ஷிப் மீண்டும் இணைந்தது. ஆனால், இப்போதும் டாட் பால்கள் எண்ணிக்கை குறையவில்லை. நடுநடுவே தவான் மட்டும் டேவிட் வில்லி, ஹர்பஜன் சிங் ஓவர்களில் பௌண்டரிகள் அடித்தார். சிக்கனமாகப் பந்து வீசிய சாஹருக்கு 4 ஓவர்களையும் ஒரேமூச்சில் கொடுத்து முடித்தார் தோனி. 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட். 24 பந்துகளில் 14 டாட் பால்கள். காயத்திலிருந்து மீண்டு வந்த முதல் போட்டியிலேயே பட்டையைக் கிளப்பினார் சாஹர். 9 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி வெறும் 51 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 

dhawan

டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டான டுவைன் பிராவோ இந்த சீசனில் எடுபடவில்லை. 'சரி மிடில் ஓவர் கொடுத்துப் பார்ப்போமே' என்று 10-வது ஓவரிலேயே அவரை அழைத்தார் தோனி. அதுவரை அமைதியாக இருந்தவர்கள், அங்கிருந்துதான் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். ஃபைன் லெக் திசையில் முதலில் வில்லியம்சன் ஒரு பௌண்டரி அடித்தார். பிறகு தவான் அதே ஏரியாவில் அடிக்க, ஷார்ட் ஃபைன் லெக்கில் நின்றுகொண்டிருந்த பஞ்சாப் தமிழர் கால் சறுக்கி, பந்தையும் வழுக்கவிட்டு பௌண்டரிக்கு அனுப்பிவைத்தார். அடுத்த ஓவர் அசகாய சூரன் ஜடேஜா... சும்மாவே ஆஃப் சைடில் வெளுத்து வாங்கும் தவானுக்கு, ஸ்டம்புகளுக்கு வெளியே ஷார்டாகப் பந்துவீசிக்கொண்டிருந்தார். வாட்டமாக வரும் பந்துகளை அவர் விடுவாரா என்ன? கவர் திசையில் ஒரு பௌண்டரியும், லாங் ஆனில் ஒரு சிக்ஸரும் அடித்து ரன்ரேட்டைத் தட்டி எழுப்பினார். 

அடுத்த ஓவர் வாட்சன்... முதல் பந்தை லாகவமாக பாயின்ட் திசையில் பௌண்டரி அடித்தார் வில்லி. அடுத்த பந்தை ஜடேஜாவைப் போலவே ஷார்ட் & அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வாட்டோ ஸ்லோ பாலாக வீச, ஆன் சைடில் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் சன்ரைசர்ஸ் கேப்டன். "This is Kane Williamson 2.0" என்று சிலாகித்தார் ஹர்ஷா போக்ளே. வார்னர் என்ற மிகச்சிறந்த டி-20 பேட்ஸ்மேனை அந்த அணி இழந்த நிலையில், தன் ஆட்டத்தை முழுதுமாக மெருகேற்றி, வார்னரின் இடத்தை அப்படியே நிரப்பியுள்ள வில்லியம்சன் நிச்சயம் புது அவதாரம் எடுத்துள்ளார். இடது கை பேட்ஸ்மேன் களத்தில் இருக்கும்போது, மீண்டும் ஜடேஜாவை நம்பி ஓவர் கொடுத்தார் தோனி. இந்த முறை அரவுண்ட் தி ஸ்டம்ப்ஸ்... ஆனால், அதே லைன், அதே லென்த்... மிட் விக்கெட் திசையில் 'ஃப்ளாட்டாக' ஒரு அற்புதமான சிக்ஸர் பறக்கவிட்டு அரைசதம் கடந்தார் 'கபார்' தவான். 

#CSKvSRH

ஹர்பஜன் ஓவரில் வில்லியம்சன் இறங்கி வந்து ஒரு சிக்ஸர் பறக்கவிட, 'எனக்கும் ஒண்ணு' என்று மிட் விக்கெட் ஏரியாவில் தவான் ஒன்று பறக்கவிட்டார். கடைசி 5 ஓவர்களில் 65 ரன்கள் எடுக்கப்பட, வேறு வழியில்லாமல் மீண்டும் வில்லி கையில் பந்தைக் கொடுத்தார் தோனி. வில்லியம்சன் ஒரு பௌண்டரி, தவான் இரண்டு! அதிலும் ஃபுல் லென்த் பந்தை பௌலரின் தலைக்கு மேல் அடித்த அந்தக் கடைசி பௌண்டரி வேற லெவல்! அந்த ஓவரிலும் 14 ரன்கள். கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்கு அடித்து நொறுக்கியது அந்தக் கூட்டணி. தன் 37-வது பந்தில் சிங்கிள் அடித்து ஐபிஎல் தொடரில் தன் 10-வது அரைசதம் அடித்தார் வில்லியம்சன். ஆனால், அந்த ஓவரிலேயே அந்த பார்ட்னர்ஷிப்பைப் பிரித்தார் பிராவோ. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட ஸ்லோ பாலை, பக்கத்து ஊர் வரை சென்று ஃபைன் லெக் திசையில் அடித்தார் தவான். இம்முறை ஹர்பஜன் விடவில்லை. கேட்ச். அவர் 79 ரன்களில் (49 ரன்கள்) வெளியேறியபோது சன்ரைசர்ஸின் ஸ்கோர் 141/2.

பிராவோ ஓவரின் கடைசிப் பந்தில் தவான் வெளியேற, ஷர்துல் வீசிய அடுத்த பந்திலேயே வில்லியம்சனும் வெளியேறினார். தேர்ட் மேன் திசையில் அவர் அடித்த ஷாட்டை, பேக்வேர்ட் பாயின்ட்டில் இருந்து ஓடிச்சென்று சூப்பராகக் கேட்ச் செய்தார் பிராவோ. அடுத்தடுத்த பந்துகளில் இரு முக்கிய பேட்ஸ்மேன்களை இழந்ததால், சன்ரைசர்ஸ் அணியின் ரன்ரேட் மீண்டும் குறையத் தொடங்கியது. கடைசி 23 பந்துகளில் இரண்டு பௌண்டரி, 1 சிக்ஸர் மட்டுமே. அதுமட்டுமின்றி default-ஆக விழும் மணிஷ் பாண்டேவின் விக்கெட். இங்கயே இப்படி ஆட்டம் காணுகிறார் இங்கிலாந்தில் என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை. இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ். 

#CSKvSRH

இதுவரை அவர்கள் 'டிஃபண்ட்' செய்தபோது தோற்றதில்லை. எதிரணியை 141 ரன்களுக்கு மேல் அடிக்கவிட்டதேயில்லை. அவர்கள்தான் இந்த சீசனின் சிறந்த பௌலிங் யூனிட். அதுக்கு...? எதைப் பற்றியும் கவலைப்படவில்லை ராயுடு - வாட்சன் ஜோடி. முதல் ஓவரிலிருந்தே அடித்துத் துவைக்கத் தொடங்கிவிட்டார்கள். சந்தீப் ஓவரில் சூப்பர் கட் ஷாட் மூலம் பௌண்டரி அடித்த வாட்சன், புவனேஷ்வர் குமார் வீசிய அடுத்த ஓவரில் தன் ஃபேவரிட் புல் ஷாட் மூலம் சிக்ஸர் அடித்தார். சந்தீப் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள். முதலில் ஃபைன் லெக் திசையில் ஒரு 'ஸ்லாக் ஸ்வீப்'... அடுத்து மீண்டும் ஒரு வாட்டோ ஸ்பெஷல் புல் ஷாட்!

நான்காவது ஓவர் முடிந்தபோது, ராயுடு சதம் அடிப்பார் என்றெல்லாம் யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள். சென்னை அடித்திருந்த 28 ரன்களில் அவரின் பங்கு 2 ரன்கள் மட்டுமே. மற்ற 26 ரன்களையும் 36 வயது வாட்சன்தான் அடித்திருந்தார். ஆனால், அடுத்த ஓவரிலேயே தன் தாண்டவத்தைத் தொடங்கினார் ராயுடு. புவி பந்தை சூப்பராக கவர் திசையில் சிக்ஸர் அடித்தவர், ரஷித் கான் வீசிய அபாயகரமான 'Wrong-urn' பந்தை அசால்டாக டீல் செய்து பௌண்டரி அடித்தார். பவர்பிளேவின் கடைசி ஓவரில் ஆளுக்கு ஒரு பௌண்டரி அடிக்க, 6 ஓவர் முடிவில் 56 என்ற நல்ல நிலையில் இருந்தது சி.எஸ்.கே. 'சரி, பவர்பிளே முடிஞ்சிருச்சு... ரன் வேகம் குறையும்' என்று பார்த்தால், 7-வது ஓவரில் எடுக்கப்பட்டது 16 ரன்கள்! சித்தார்த் கௌல் ஓவரில் வெறியாட்டம் ஆடிட ராயுடு இரண்டு பௌண்டரிகளும், ஒரு சிக்ஸரும் பறக்கவிட்டார். அடுத்த 3 ஓவர்களில் மட்டும் இருவரும் கொஞ்சம் பொறுமையாக ஆடினார்கள். அந்த 3 ஓவர்களில் மொத்தமே 24 ரன்களே வந்திருந்தபோதிலும், ஓவருக்கு ஒரு பௌண்டரியாவது வந்துகொண்டே இருந்தது. வாட்சனும் 31 பந்துகளில் அரைசதம் கடந்திருந்தார். 

#CSKvSRH

ரன் வேகம் கொஞ்சம் குறைந்த நிலையில், 'இது தப்பாச்சே' என மீண்டும் சித்தார்த் கௌல் கையில் பந்தைக் கொடுத்தார் வில்லி. பௌன்சர் பந்தை மிட்விக்கெட் திசையில் சிக்ஸர் அடித்து அதே 31 பந்துகளில் ராயுடுவும் அரைசதம் அடித்தார். ஐந்தாவது பந்தில் ஒரு பௌண்டரியும் அடிக்க, அந்த ஓவரில் 13 ரன்கள். ரஷீத் ஓவரில், அவர் ஸ்வீப் செய்ய முற்பட எட்ஜாகி பந்து எகிறியது. ஆனால், அதுவும் ஸ்டேண்டில்தான் விழுந்தது. சன்ரைசர்ஸ் பௌலர்களும் ஃபீல்டர்களும் 'வேடிக்கை பார்ப்பவனா'கவே தெரிந்தார்கள். அடுத்த ஓவரில், ராயுடு சிக்ஸ் அடிக்க, வாட்சன் ஃபோர் அடிக்க, நொந்துபோனார் பௌலர் புவி! ரிசப் பன்ட் தொடங்கி வைத்தது, இரண்டு போட்டிகளாக அவரது பந்துவீச்சை வாட்டி எடுக்கிறார்கள். 

கடைசியாக 14-வது ஓவரில் இந்த பார்ட்னர்ஷிப்பைப் பிரித்தது சன்ரைசர்ஸ். வழக்கமாக ராயுடுதான் ரன் அவுட் ஆவார். நேற்று ஒரு மாற்றத்துக்கு வாட்சனை அவுட்டாக்கிவிட்டார் ராயுடு. அவர் அடித்த பந்து கவர் திசையில் நின்றிருந்த வில்லியம்சன் கைக்கே செல்ல, யோசிக்காமல் ஓடிவிட்டார். அவர்தான் ஓடினார்... வாட்சனோ ஜாகிங் செய்துகொண்டிருந்தார். வில்லியம்சன் சரியாக கீப்பருக்குத் த்ரோ செய்ய, வாட்சன் (35 பந்துகளில் 57 ரன்கள்) அவுட். 81 பந்துகளில் 134 ரன்கள் எடுத்து அமர்க்களப்படுத்தியிருந்தது அந்தக் கூட்டணி. அடுத்து மிஸ்டர் ஐபிஎல் ரெய்னா, இரண்டே ரன்களில் வெளியேறினார். ரெய்னாவை வீழ்த்திய சந்தீப், அந்த ஓவரில் இன்னொரு சாதனையையும் படைத்தார். சூப்பர் கிங்ஸ் இன்னிங்சில் பௌண்டரியே அடிக்கப்படாத முதல் ஓவர் அதுதான். ஆனால், அடுத்த ஓவரில் அதற்கும் சேர்த்து ஒரு பௌண்டரி, ஒரு சிக்ஸர் என்று வெளுத்தார் ராயுடு. ஷகிப்பின் அந்த ஓவரில் அதற்கு முன் தோனி கொடுத்த கேட்ச் வாய்ப்பை, லாங் ஆனில் நின்றிந்த மணிஷ் தவறவிட்டார். நல்ல வீரர்... ஆனால் யார் கண் பட்டதோ, இந்த சீசனில் அனைத்திலும் சொதப்புகிறார்.

#CSKvSRH

90-யைத் தொட்டுவிட்டதாலும், வெற்றி நிச்சயமாகிவிட்டதாலும் அடுத்த இரண்டு ஓவர்களையும் நிதானமாக எதிர்கொண்டார் ராயுடு. 14 ரன்கள் தேவை... ராயுடு 98... தோனி சிக்ஸர். 7 ரன்கள் தேவை... ராயுடு 99... தோனி பௌண்டரி! ரசிகர்களுக்குக் கொஞ்சம் பக்கென்றுதான் இருந்தது. சச்சின் 200 அடித்த அந்த ஆட்டம் அனைவரின் கண் முன்னேவும் வந்துபோனது. அந்த இன்னிங்ஸைப் போலவே கடைசியில் ஒரு சிங்கிள் தட்டினார் தோனி. ராயுடு ஆன் 99... சிங்கிள்.. ராயுடு சதம்! வாட்டே இன்னிங்ஸ்..! வாட்சன், ராயுடு இருவருமே வெற்றியைத் தீர்மானித்துவிட்ட இந்தப்போட்டியில், கடைசியாக சிங்கிள் அடித்து ஆட்டத்தை முடித்தார் 'ஃபினிஷர்' தோனி! மிகச்சிறந்த பௌலிங் யூனிட்டைப் பந்தாடி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்.இந்த வெற்றியினாலும் மும்பையை ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தியதாலும் 9-வது ஆண்டாக பிளே ஆஃப் சுற்றுக்கு நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

https://www.vikatan.com/news/sports/124966-csk-beats-srh-to-increase-their-play-off-chances-in-ipl.html

 

 

 

தொடர்ந்து ஐந்து அரைசதம்… ராயல்ஸை மீட்டெடுத்த பாஸ்… ஜாஸ் பட்லர்! #MIvRR

 
 

மிடில் ஆர்டரில் இறங்கிக்கொண்டிருந்த ஜாஸ் பட்லரை ஓப்பனிங் இறக்கவிட்டது ராஜஸ்தான் ராயல்ஸ். அடுத்தடுத்து ஐந்து அரைசதங்கள். அதில் இரண்டுமுறை (95, 94) சதம் அடிக்க வாய்ப்பு. மூன்றுமுறை ஆட்ட நாயகன். 509 ரன்களுடன் டாப் ஸ்கோரர் பட்டியலில் ஐந்தாவது இடம். அணி தொடர்ந்து மூன்று முறை வெற்றி. பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் பிரகாசம். இதைவிட வேறென்ன வேண்டும்? ராஜஸ்தானின் இந்த ஒற்றை முடிவு அவர்களின் ஒட்டுமொத்த கிராஃபையே மாற்றிவிட்டது. #MIvRR

Jos Butler Celebrates after RR win  #MIvRR  

 

பிளே ஆஃப் நெருங்க நெருங்க லீக் சுற்றின் ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் பெறும். ஆரம்பத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்த அணி கூட, கடைசிக் கட்டத்தில் அடுத்தடுத்து வெற்றிபெற்று அதிர்ச்சி கொடுக்கும். புள்ளிகள் பட்டியலில் ஐந்து, ஆறாவது இடத்தில் இருந்த மும்பை, ராஜஸ்தான் அணிகளும் அப்படியொரு பலப்பரீச்சைக்கு நேற்று தயாரானது . வான்கடேவில் நடந்த இந்தப் போட்டியில் மும்பை அணி பிளேயிங் லெவனை மாற்றவில்லை. ராஜஸ்தான் அணியில் ஷ்ரேயாஸ் கோபால், தவல் குல்கர்னி, டார்சி ஷார்ட் இடம்பெற்றனர். டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார். ஸ்பின்னர் கெளதம் வீசிய முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள். ரஹானேவுக்கு அப்போதே ஏதோ நெருடியது.

மணிஷ் பாண்டே, குருனால் பாண்டியா, பென் ஸ்டோக்ஸ், டிரென்ட் போல்ட், மனோஜ் திவாரி, ஷர்துல் தாக்கூர் வரிசையில் ஸ்டூவர்ட் பின்னியும், இந்த சீசனில் சூப்பர் கேட்ச் பிடித்தவர்கள் வரிசையில் இணைந்திருக்கலாம். லீவிஸ் அடித்த பந்து தரையில் விழுவதற்கு முன், ஓடியே 3 ரன்களை எடுத்துவிட்டனர். அப்படியெனில் அந்த ஷாட்டின் உயரத்தை நீங்களே கணித்துக்கொள்ளலாம். பந்து வானத்தில் இருக்கும்போதே வர்ணனையில் இருந்த மஞ்சரேக்கர், `பிடித்துவிட்டால் இதுதான் இந்த மேட்ச்சின் சிறந்த கேட்ச்சாக இருக்கும்’ என்றார். பிடித்தால்தானே…! ஸ்டூவர்ட் பின்னியும் ரிவர்ஸ் கப்லாம் போட்டுப் பிடிக்க முயன்றார். அவரால் அந்த கேட்ச்சைப் பிடிக்கமுடியவில்லை. பெஸ்ட் ஃபீல்டர்கள் வரிசையிலும் இடம்பெறமுடியவில்லை. Lewis dropped on 5 by Stuart Binny off Archer. தலை மேல் கை வைத்தார் ரகானே. ஏனெனில், குல்கர்னி வீசிய முந்தைய ஓவரில் சூர்யகுமார் கொடுத்த கேட்ச்சை, மிட் ஆனில் இருந்த கெளதம் மிஸ் செய்திருந்தார். பவர்பிளே முடிவில் மும்பையின் ஸ்கோர் 51/0.

Lewis Plays a shot  #MIvRR 

லீவிஸ் இந்த சீசனில் நிறைய டாட் பால்களை சந்திக்கிறார் என்ற பிரச்னை இருந்தது. அதனால்தான் அவர் ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடும் முனைப்பில் இருந்தார். அவருக்கு தோதான இடத்தில் போட்டுக் கொடுத்தார் ஷ்ரேயாஸ் கோபால். ஃபுல் லென்த்தில் வந்ததை பேக்வார்ட் ஸ்கொயர் பக்கம் ஃபிளாட் சிக்ஸ் விளாசிய லீவிஸ், அடுத்த பந்தில் டவுன் தி லைன் வந்து சிக்ஸர் அடித்த இடம் லாங் ஆஃப். பேக் டு பேக் சிக்ஸர். ஏனோ… Lewis dropped on 5 by Stuart Binny off Archer என்பது மீண்டும் நினைவுக்கு வந்தது. 10 ஓவர் முடிவில் முடிவில் 86 ரன்கள். விக்கெட் இழப்பின்றி…

இந்த விக்கெட் இழப்பின்றி என்ற வார்த்தைக்கு 11-வது ஓவரில் முடிவு கட்டினார் ஜோஃப்ரா ஆர்ச்சர். இரண்டு ஷார்ட் பால். இரண்டு முக்கிய விக்கெட்டுகள் காலி. ஷார்ட் பாலை புல் ஷாட் அடிக்கிறேன் என லாங் லெக்கில் இருந்த உனத்கட் கையில் கேட்ச் கொடுத்து சூர்யகுமார் (38) வெளியேற, அடுத்த பந்தில் கேப்டன் ரோகித் பெவிலியன் திரும்பினார். அதுவும் அதே ஷார்ட் பால். அதே புல் ஷாட். அதே இடம். அதே ஃபீல்டர். ரோகித் டக்  அவுட். 86 ரன்களை விக்கெட் இழப்பின்றி எடுத்த மும்பை அடுத்த 3 ரன்களை எடுப்பதற்குள் இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்களை இழந்திருந்தது. தேங்ஸ் டு ஆர்ச்சர். தேங்ஸ் டு உனத்கட். அவர் பிடித்த இரண்டும் அட்டகாசமான கேட்ச். அதிலும் ரோஹித் கேட்ச் ஒரு படி மேல். இடுப்பு உயரத்தில் வந்ததை ரிவர்ஸ் கப் போட்டுப் பிடிப்பதெல்லாம் பெஸ்ட் ஃபீல்டர்களுக்கே கைவராது. அதேநேரத்தில், கண்டம் தப்பிய ஓர் ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ன செய்ய வேண்டுமோ அதைக் கச்சிதமாக செய்திருந்தார் லீவிஸ். அதாவது அரைசதம் அடித்திருந்தார். கெளதம் புல் டாஸாக வீசியதை பிரஸ் பாக்ஸ் பக்கம் சிக்ஸர், குல்கர்னி பந்தில் சைட் ஸ்கிரினில் ஒரு சிக்ஸர் விளாசிய லீவிஸ் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.

#MIvRR 

ஆட்டத்தின் நடுவே Side line-ல் இருந்த ராஜஸ்தான் அணியின் ஆலோசகர் ஷேன் வார்ன், மைக்கேல் கிளார்க்கிடம், ``ஆரம்பத்தில் இரண்டு கேட்ச்களை மிஸ் செய்தது ஏமாற்றம் அளிக்கிறது’’ என்று சொல்லி வாயை மூடுவதற்குள், இஷன் கிஷான் கொடுத்த கேட்ச்சை டீப் மிட் விக்கெட்டில் இருந்த சஞ்சு சாம்சன் அட்டகாசமாக பிடித்து, அப்படியே கால்களை தலைக்கு மேலே புரட்டி போட்டு, பல்டி அடித்து எழுந்தபோது வார்ன் வாயடைத்து நின்றார். பிரில்லியன்ட் கேட்ச். அதுமட்டுமல்ல, லீவிஸ் அடித்ததை டீப் பாயின்ட்டில் ஓடிவந்தபடியே பிடித்ததும் சாட்சாத் சஞ்சு சாம்சனே!

இரண்டு கேட்ச் பிடித்த மிதப்பில் பந்துவீச்சின்போது லைன் அண்ட் லென்த்தை மிஸ் செய்தார் உனத்கட். அதுவும் டெத் ஓவரில்… விட்டுவைப்பாரா ஹர்டிக் பாண்டியா? குட் லென்த்தில் மிடில் ஸ்டம்ப் லைனில் வந்ததை அழகாக ஸ்ட்ரெய்ட்டில் கேலரியின் இரண்டாவது அடுக்கில் சிக்ஸருக்கு அனுப்பினார். அடுத்து லோ ஃபுல் டாஸ். அது பவுண்டரி. உனத்கட்டுக்கு உள்ளுக்குள் உதறல். அடுத்த பந்தை யார்க்கராக வீச முயன்றார். ஆனால், அதை எக்ஸ்ட்ரா கவர் பக்கம் சிக்ஸருக்கு அனுப்பினார் ஹர்டிக். அதே ஓவரில் பென் கட்டிங்கும் ஒரு சிக்ஸருக்கு முயன்றார். ஆனால், அதை ஆர்ச்சர் டிராப் செய்தார். மொத்தம் 3 கேட்ச்கள் டிராப்.

ஆர்ச்சர், கெளதம், ஸ்டூவர்ட் பின்னி மூவருக்கும் `கேட்ச்னா இப்படி பிடிக்கணும்’ என கிளாஸ் எடுப்பது போல ஒரு கேட்ச் பிடித்தார் சாம்சன். ஹர்டிக் பாண்டியா உசிரைக் கொடுத்து டீப் மிட் விக்கெட் பக்கம் அடித்த பந்தை சாம்சன் ஓட்டமாக ஓடி வந்து ஃபுல் லென்த் டைவ் அடித்து கேட்ச் பிடித்தது மட்டுமல்லாது, பேலன்ஸை மிஸ் செய்யாது பந்துடன் எழுந்து நின்றபோது வான்கடே மைதானமே விக்கித்து நின்றது. வாட்டே கேட்ச். கேட்ச் ஆஃப் தி மேட்ச். அல்டிமேட்!  இத்தனைக்கும் சாம்சன் ஒரு விக்கெட் கீப்பர். அப்படியிருந்தும் அவுட்ஃபீல்டில் சிட்டாகப் பறந்து கழுகுபோல கொத்துகிறார். விராட் இப்படிப்பட்ட ஃபீல்டர்களையே விரும்புகிறார். 

Jos Butler  #MIvRR 

மும்பை நிர்ணயித்த 168 ரன்களை நோக்கிக் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஷார்ட் – ஜாஸ் பட்லர் தொடக்கம் கொடுத்தனர். மீண்டும் ஒருமுறை ஷார்ட் ஏமாற்றினார். பும்ரா பந்தில் விக்கெட் கீப்பர் இஷன் கிஷானிடம் கேட்ச் கொடுத்து நான்கு ரன்களில் பெவிலியன் திரும்பினார் ஷார்ட். `இதுக்கு பேசாம கிளாசனை எடுத்திருக்கலாம், ஏன் எடுக்கலை…’ என வார்னேவின் டீம் செலக்ஷனை கேள்விக்குள்ளாக்கினர் ரசிகர்கள். அதேநேரத்தில், ஜாஸ் பட்லரை ஓப்பனிங் இறக்கிவிட்ட ராஜஸ்தானின் ஒற்றை முடிவு அவர்களுக்குச் சாதகமாக அமைந்தது. ஏனெனில், அவர் ஓப்பனிங் இறங்கியபிறகு தொடர்ந்து ஐந்து அரைசதம் அடித்துள்ளார்.

ஹர்டிக், குருனால் பந்துகளில் பட்லர் ஒரு ஸ்வீப் சிக்ஸ், ரெண்டு மூனு பவுண்டரி அடித்ததைத் தவிர, பவர்பிளேவில் ராஜஸ்தான் பெரிதாக மிரட்டவில்லை. ஆனாலும், ரன்ரேட் மோசமில்லை. ரஹானே – பட்லர் ஜோடி மிடில் ஓவரில் ரொம்பவும் நிதானமாகவே ஆடியது. இந்த ஜோடியைப் பிரிக்க ரோஹித் பெளலர்களை மாற்றினார்; ஃபீல்டர்களை மாற்றினார். ம்ஹும். பிரிக்க முடியவில்லை. மாறாக, மார்க்கண்டேயா பந்தில் பட்லர் சிக்ஸர் பறக்கவிட, பார்ட்னர்ஷிப் 58 பந்துகளில் 74 ரன்களைத் தொட்டது. ரன்னுக்கும் பந்துக்கும் இடைவெளி குறையாமல் பார்த்துக்கொள்ளும் ரஹானேவின் விக்கெட் தேவையில்லை, பட்லரை அவுட்டாக்க வேண்டும் என நினைத்தபோது அவர் அரைசதம் கடந்திருந்தார். அதேநேரத்தில் ரஹானேவும் அவுட்டாகியிருந்தார். 36 பந்தில் 37 ரன்.

#MIvRR 

 

அரைசதம் அடித்தபின் ஹர்டிக் பாண்டியா பந்தில் பவுண்டரி, சிக்ஸர் என பட்லர் வேகமெடுத்தார். வெற்றிக்கான ரன்ரேட் விகிதம் குறைந்தது. பும்ரா வீசிய 15-வது ஓவரில் 4, 6 என மிரட்ட, ராஜஸ்தானின் வெற்றி அப்போதே உறுதியாகி விட்டது. சென்னைக்கு எதிராக 95 ரன்கள் அடித்த பட்லர், இந்தமுறை சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சஞ்சு சாம்சனும் கிடைத்த கேப்பில் பவுண்டரிகள் விரட்ட, மும்பையின் வெற்றி வாய்ப்பு மெல்ல மெல்ல மங்கத் தொடங்கியது. ஹர்டிக் பாண்டியா பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்ட சாம்சன், மீண்டும் சிக்ஸர் அடிக்க முயன்றபோது அவுட்டானார். ஆனால், அதைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை மும்பை. ஏனெனில், அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்து ராஜஸ்தான் ரசிகர்களைக் கொண்டாட வைத்தார் பட்லர். ராஜஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. 94 ரன்கள் எடுத்த பட்லர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறியது.

https://www.vikatan.com/news/sports/124978-jos-butler-scored-his-fifth-consecutive-fifty-which-propels-rr-to-the-fifth-spot.html

Link to comment
Share on other sites

தோனி, வாட்சன், ரெய்னா வலுவாக உள்ளனர், ஆனால்.. ராயுடுதான் வழிகாட்டி: ஸ்டீபன் பிளெமிங் புகழாரம்

 

 
rayudu

ராயுடு. | ஏ.எஃப்.பி.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை சிறிது காலம் தன் வசம் வைத்திருந்த ராயுடு மிகவும் நேர்மைத்திறத்துடன் ஆடி வருகிறார், 535 ரன்களை எடுத்து பட்டியலில் 4வதாக உள்ளார்.

நேற்று 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக்த் திகழ்ந்தார். ஆனால் இதுவரை சிறப்பாக வீசி வந்த சன் ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் நேற்று என் அவ்வளவு புல்டாஸ்களை வீசினார் என்பது புரியாத புதிர். கேன் வில்லியம்சனின் தொடக்க களவியூகம் சரியாக இல்லை. நேரான இடங்களிலெல்லாம் ஆட்களை நிறுத்தாமல் வைடாக நிறுத்தியதால் சில பவுண்டரிகள் சென்றதையும் மறுப்பதற்கில்லை.

 
 

ஆனாலும் ராயுடு இந்த ஐபிஎல்-ல் சதம் எடுக்கத் தகுதியானவர்தான் அது நேற்று அவருக்குக் கைகூடியது, இந்த ஐபிஎல் தொடரில் சென்னையின் வெற்றிக்கு பெரிதளவு பங்கு செலுத்துபவர் ராயுடுதான்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.எஸ்.கே. பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:

அட்டவணையில் டாப் இடத்துக்கு அருகில் இருக்கிறோம் என்றால் அதற்கு முக்கியக் காரணம் ராயுடுதான்.

ரன் அட்டவணையில் அவர் ஆதிக்கம் செலுத்துவதில் ஆச்சரியமில்லை, ஆனால் அவர் அந்த ரன்களை எடுத்த விதம் அதைவிட ஆச்சரியமானது. பாசிட்டிவாக ஆடுகிறார், மற்றவர்கள் மீது வெகுவிரைவில் தாக்கன் செலுத்துபவராக உள்ளது அவரது ஆட்டம்.

ஐபிஎல்-ஐ வெல்ல வேண்டுமென்றால் டாப் ஆர்டரில் அவரைப்போல் ஓரிவு வீரர்கள் அவசியம். இப்போதைக்கு ராயுடு இதனைச் செய்து வருகிறார். மற்றவீரர்களில் ஷேன் வாட்சன், ரெய்னா, தோனி, ஆகியோர் வலுவாக பங்களிப்பு செய்கின்றனர், ஆனால் கண்டிப்பாக இந்த விஷயத்தில் ராயுடு ஒரு முன்னணி வழிகாட்டியாக உள்ளார்.

இவருடைய பார்ம் தொடர வேண்டும், அவர் கூடவே மற்றவர்களும் செல்ல வேண்டும்.

இவ்வாறு கூறினார் பிளெமிங்.

ஐபிஎல் தொடங்கிய 2008 முதல் நடப்பு ஐபிஎல் வரை 8 சீசன்களில் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23880866.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018: நெட் ரன் ரேட் விவகாரம் இல்லாமலேயே பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி தகுதி பெற முடியும்

 

 
virat%20kohli

விராட் கோலி மற்றும் ஆர்சிபி வீரர்கள்.   -  படம். | கே.முரளிகுமார்

ஐபிஎல் 2018 டி20 கிரிக்கெட் போட்டிகள் அதன் இறுதிக் கட்டத்தை சிறிது சிறிதாக நெருங்கி வரும் நிலையிலும் சன் ரைசர்ஸ், சிஎஸ்கே அணிகள் நீங்கலாக மற்ற அணிகளுக்கிடையே பிளே ஆஃப் வாய்ப்பில் கடும் போட்டி நிலவி வருகிறது.

இதில் டெல்லி அணி கதை முடிந்து விட்டது. ஆனால் மற்ற அணிகளில் 7வது இடத்தில் உள்ள ஆர்சிபி அணிக்கும் பிளே ஆஃப் சுற்றில் தகுதி பெற வாய்ப்புள்ளது. விராட் கோலி தலைமை ஆர்சிபி அணி பல அதிரடி, சரவெடி வீரர்களைக் கொண்டு வலுவாக இருந்தாலும் இந்த ஐபிஎல் தொடரில் கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

 
 

அணித்தேர்வு, களவியூகம், பந்து வீச்சு மாற்றம் என்று இந்திய அணித்தலைவர் விராட் கோலி கடும் குழப்பத்தில் இருப்பது தோல்விகளில் எதிரொலித்து வருகிறது.

தற்போது 11 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் உள்ள ஆர்சிபியின் நிகர ரன் விகிதம் -0.261.

இந்நிலையில் மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் ஆர்சிபி வென்று 14 புள்ளிகளைப் பெற்று விட்டால், மற்ற ஆட்டத்தின் முடிவுகளும் அனுகூலமாக அமைந்தால் ஆர்சிபி அணி நெட் ரன் ரேட் கவலையில்லாமலேயே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும்.

இன்று கிங்ஸ் லெவன் அணிக்கு எதிரான போட்டி ஆர்சிபி அணி மட்டுமல்லாது மற்ற அணிகளுக்கும் மிக மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் 12 புள்ளிகளில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதும் போட்டியும் மிக முக்கியமானது, இந்தப் போட்டி முடிந்த பிறகு பிளே ஆஃப் பற்றிய தெளிவான சித்திரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

http://tamil.thehindu.com/sports/article23883457.ece

Link to comment
Share on other sites

21 hours ago, சுவைப்பிரியன் said:

நாளைக்குத்தான் எனக்கு திரு விழா இருக்கு.?

திருவிழா அந்த மாதிரி போல ?இன்று

Link to comment
Share on other sites

9-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதனை

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு ஒன்பதாவது முறையாக தகுதிபெற்று சாதனை படைத்துள்ளது. #CSK #IPL2018 #VIVOIPL #PlayOffs #WhistlePodu #Yellove

 
9-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதனை
 
 
இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 10 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இதில் மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.
 
இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் பிளே-ஆப் சுற்றுக்கு ஐதராபாத் அணி முதலாவதாக தகுதிபெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி, ஐதராபாத் அணியை வீழ்த்தி 8-வது வெற்றியை பதிவுசெய்தது. இதன்மூலம் 16 புள்ளிகள் பெற்ற சென்னை அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
 
இந்த சீசனின் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றதன் மூலம் சென்னை அணி ஒன்பதாவது முறையாக ஐபிஎல் தொடரின் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று சாதனை படைத்துள்ளது. சென்னை அணி கடந்த இரண்டு ஆண்டுகள் தடையினால் ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை. இந்த முறை பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் விளையாடிய அனைத்து சீசனிலும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்ற ஒரே அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படைத்துள்ளது. 
 
201805141529147248_1_iplcsk1405-12._L_styvpf.jpg
 
சென்னை அணி முன்னதாக விளையாடிய 8 சீசனில், 2 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதோடு, 4 முறை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சென்னை அணியை தவிர மும்பை இந்தியன்ஸ் அணி 11 சீசனில் 7 முறை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. #CSK #IPL2018 #VIVOIPL #PlayOffs #WhistlePodu #Yellove

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/14152914/1162939/CSK-qualifies-for-Ipl-playoffs-for-9th-time.vpf

 

 

அதிக ரன், அதிக சிக்ஸ் பட்டியலை ஆக்கிரமித்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்

 

ஐபிஎல் 11-வது சீசனில் அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் பட்டியலில் பெரும்பாலான இடங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். #CSK #msdhoni

அதிக ரன், அதிக சிக்ஸ் பட்டியலை ஆக்கிரமித்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்
 
சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு ஆண்டுகள் தடைக்குப்பின் தற்போது 11-வது சீசனில் களம் இறங்கியுள்ளது. இரண்டு ஆண்டு தடையால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த சீசனுக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 30 வயதிற்கு மேற்பட்ட அனுபவ வீரர்களை குறிவைத்து எடுத்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய ஹர்பஜன் சிங் மற்றும் அம்பதி ராயுடு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடிய ஷேன் வாட்சன் ஆகியோரை எடுத்தது.

இந்த மூன்று பேரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக அம்பதி ராயுடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். யாரும் எதிர்பார்க்காத வகையில் கேப்டன் எம்எஸ் டோனி கடந்த 9 சீசனை விட ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகிறார். இதனால் அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

201805142116227456_1_watson001-s._L_styvpf.jpg

அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் 3 இடங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் ஆக்கிரமித்துள்ளது. அம்பதி ராயுடு 535 ரன்களுடன் 4-வது இடத்தில் உள்ளார். ஷேன் வாட்சன் 424 ரன்களுடன்  8-வது இடத்திலும், எம்எஸ் டோனி 413 ரன்களுடன் 9-வது இடத்திலும் உள்ளனர். முதல் 10 இடத்தில் 3 இடங்களை கைவசப்படுத்தியுள்ளனர்.

சென்னை அணி பிளே-ஆஃப்ஸ் சுற்றை உறுதியாக்கியுள்ளதால் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பட்லர், கேஎல் ராகுல் ஆகியோரை இந்த மூன்று பேரும் பின்னுக்குத் தள்ள வாய்ப்புள்ளது.

201805142116227456_2_msdhoni003-s._L_styvpf.jpg

அதேபோல் அதிக சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில் அம்பதி ராயுடு 29 சிக்சர்களடன் 3-வது இடத்திலும், எம்எஸ் டோனி 29 சிக்சர்களடன் 5-வது இடத்திலும், வாட்சன் 26 சிக்சர்களுடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/14211623/1163037/IPL-2018-chennai-super-kings-player-dominate-most.vpf

Link to comment
Share on other sites

88 ரன்னில் சுருண்டது பஞ்சாப்- எளிதான இலக்கை எட்டுமா ராயல் சேலஞ்சர்ஸ்?

 

உமேஷ் யாதவின் பந்து வீச்சாலும், 3 ரன் அவுட்டாலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 88 ரன்னில் சுருட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். #IPL2018 #KXIPvRCB

 
88 ரன்னில் சுருண்டது பஞ்சாப்- எளிதான இலக்கை எட்டுமா ராயல் சேலஞ்சர்ஸ்?
 
ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார்.

அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 245 ரன்கள் குவித்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிக ரன் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் கிறிஸ் கெய்ல் கொடுத்த கேட்சை விக்கெட் கீப்பர் பிடிக்க தவறினார். இதனால் டக்அவுட்டில் இருந்து தப்பினார் கிறிஸ் கெய்ல். கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதல் 3 ஓவரில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டிம் சவுத்தி வீசிய 4-வது ஓவரில் கிறிஸ் கெய்ல் 3 பவுண்டரி விரட்டினார். இனிமேல் வாணவேடிக்கை நிகழ்த்தப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 5-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அத்துடன் பஞ்சாப் அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

2-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய கேஎல் ராகுல் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் கிறிஸ் கெய்ல் ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 15 பந்தில் 21 ரன்னும், கிறிஸ் கெய்ல் 14 பந்தில் 18 ரன்னும் எடுத்தனர். கிறிஸ் கெய்ல் அவுட்டாகும்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்திருந்தது.

201805142137110936_1_RCB002-s._L_styvpf.jpg

அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 15.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 88 ரன்னில் சுருண்டது. கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல்-ஐ தவிர்த்து பிஞ்ச் (26) மட்டுமே இரட்டை இலக்க ரன் எடுத்தார். 3 பேர் ரன்அவுட் மூலம் வெளியேறினார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதாக இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டிங் செய்கிறது. லோ-ஸ்கோர் மேட்ச் என்பதால் ஏதும் நடக்கலாம்.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/14213711/1163042/IPL-2018-Kings-xi-punjab-88-all-out-umesh-yadav-gets.vpf

66/0 * (5.6/20 ov, target 89)
Link to comment
Share on other sites

ஐபிஎல் போட்டி - பஞ்சாப் அணியை பஞ்சராக்கியது பெங்களூர்

இந்தூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் துல்லியமான பந்து வீச்சு மற்றும் அதிரடியான பேட்டிங்கால் பஞ்சாப் அணியை எளிதில் வீழ்த்தியது பெங்களூர் அணி. IPL2018 #KXIPvRCB

ஐபிஎல் போட்டி - பஞ்சாப் அணியை பஞ்சராக்கியது பெங்களூர்
 
ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
 
ஆனால், பெங்களூர் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் பஞ்சாப் அணி திணறியது. அந்த அணியில் ஆரோன் பிஞ்ச் 26 ரன்னும், லோகேஷ் ராகுல் 21 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் பஞ்சாப் அணி 15.1 ஓவரில் 88 ரன்களுக்கு ஆல அவுட்டானது.
 
201805142239574608_1_rcb-3._L_styvpf.jpg
 
பெங்களூர் அணி சார்பில் உமேஷ் யாதவ்  3 விக்கெட்டும், சிராஜ், சாஹல், கிராண்ட்ஹோம், மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
 
இதையடுத்து, 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பர்திவ் படேலும், விராட் கோலியும் இறங்கினர்.
 
இருவரும் முதலில் இருந்தே அடித்து ஆடியதால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இதனால் 8.1 ஒவரில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்து எளிதில் வென்றது. விராட் கோலி 48 ரன்னும், பர்திவ் படேல் 40 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். IPL2018 #KXIPvRCB

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/14223957/1163057/royal-challangers-bangalore-beat-kings-XI-punjab-by.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

திருவிழா அந்த மாதிரி போல ?இன்று

தோற்றுத் தான் தீர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமோக வெற்றியிட்டுள்ளார்கள்.அந்த வவகையில் திருவிழா பெரு விழாதான்.?

Link to comment
Share on other sites

கிங்ஸ் லெவனின் மோசமான தோல்வி: 10விக். வித்தியாசத்தில் வென்றது கோலி படை

 

 
virat

வெற்றி பெற்ற பிறக் கோலி, கெய்ல், அஸ்வின்.   -  படம். | விவேக் பெந்த்ரே.

இந்தூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2018-ன் 48வது போட்டியில் கிங்ஸ் லெவன் அணி படுமோசமாக விளையாடி ராயல் சாலஞ்சர்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது.

முதலில் பேட் செய்து தரமற்ற, அசிங்கமான கிரிக்கெட்டில் 88 ரன்களுக்கு மடிய, பெங்களூரு அணி பார்த்திவ் படேல் 40 நாட் அவுட், விராட் கோலி 48 நாட் அவுட் என்று விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

 
 

நிலவரங்கள்:

ஆர்சிபி அணி தன் மீதமுள்ள போட்டிகளையும் வென்று மற்ற போட்டிகளும் சாதகமாக அமைந்தால் நிகர ரன் விகிதம் இல்லாமலேயே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும்.

சன் ரைசர்ஸ் அணி டாப் 2 இடங்களில் உள்ளதை உறுதி செய்துள்ளது.

கிங்ஸ் லெவன் கதையும் இன்னும் உயிருடன் உள்ளது. கடைசி 2 போட்டிகளில் வென்றால் 16 புள்ளிகள் பெறும் அல்லது ஒரு போட்டியில் வென்றால் கூட 14 புள்ளிகள் பெறும்.

4 மும்பை இந்தியன்ஸ் 12 புள்ளிகள் பெற்றால் வலுவான நிகர ரன் விகிதத்தில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும்.

ஒரு கருத்து மையமாக்கம்

இத்தகைய போட்டிகளை என்னவென்று வர்ணிப்பது? தரநிலை என்பது ஐபிஎல் கிரிக்கெட்டில் கீழ்மட்டத்துக்குச் சென்று வருகிறது. ஒன்று முன் கூட்டியே யார் வெல்வது என்பது தீர்மானிக்கப்படுகிறது, அல்லது சிலபல கணக்கீடுகள் தீர்மானிக்கிறது, இதில் உண்மையான கிரிக்கெட் என்பதை லென்ஸ் வைத்துத்தான் தேட வேண்டியுள்ளது. இந்த விதத்தில் இது பின்நவீனத்துவ கிரிக்கெட் சூழல்தான் இது(Postmodern Condition அல்லது postmodernity) அதாவது எதுவுமே ஆழமில்லாது, மேலோட்டமான, பொழுதுபோக்குத் தனமான, சிலபல கணக்கீடுகள் மூலம் ஏற்கெனவே அமைத்துக் கொடுக்கப்பட்டு நமக்கு வழங்கப்படும் என்ற விதத்தில்.

பின்நவீனத்துவ சூழல் வேறு, பின்நவீன இயம் வேறு (postmodernism). பின் நவீன இயம் என்பது பின் நவீனத்துவ சூழல் மீதான விமர்சனம் ஆகும். நுட்பங்கள் மறைந்து கணக்கீடுகளும், பொழுதுபோக்கு அம்சங்களும், ஸ்பான்சர்கள் உள்ளிட்ட வணிகநலன்களும் முன்னுக்கு வருவது பின் நவீனத்துவ சூழல், இத்தகைய போக்கின் மீதான விமர்சனங்கள் பின்நவீன இயங்கள். பின் நவீனத்துவ சூழலைக் கொண்டாடுவது வெகுஜன கலாச்சாரத்தின் இயல்பு (தோனிடா, தலடா, கோலிடா போன்ற கோஷங்கள்). விமர்சன கலாச்சாரம் அதைக் கடந்து செல்வது.

ஆகவே ஐபிஎல் கிரிக்கெட்டை விமர்சிப்பது என்பது ஒரு நுட்பங்களை நோக்கிய ஒரு செயல்பாடாகும்.

உமேஷ் யாதவ் அபாரம்

கே.எல்.ராகுல் 3 அபாரமான சிக்சர்களுடன் 21 ரன்களையும் கிறிஸ் கெய்ல் 14 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 18 ரன்களையும் எடுக்க உமேஷ் யாதவ் இருவரையும் ஷார்ட் பாலில் வீழ்த்தினார். அதன் பிறகு பிஞ்ச் 26 ரன்கள் எடுத்தார். மற்ற படி வீர்ர்கள் ஸ்கோர் விவரம் இதோ: 1,2,2,9,9,0,0,3,1 15.1 ஓவர்களில் 88 ரன்களுக்குச் சுருண்டது.

தொடர்ந்து ஆடிய ராயல் சாலஞ்சர்ஸ் அணி 8.1 ஓவர்களில் 92/0 என்று வென்றது இதன் மூலம் மைனஸ் 0.26 என்று இருந்த ஆர்சிபி நிகர ரன் விகிதம் தற்போது பிளஸ் 0.21 ஆக உயர்ந்துள்ளது.

ஆட்டம் தொடங்கும் முன்பே கிங்ஸ் லெவன் அணிக்கு ஒரு பின்னடைவு அதன் சிறந்த பவுலர் முஜீப் உர் ரஹ்மான் கடந்த போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக கையில் அடிபட்டதால் இந்தப் போட்டியில் ஆட முடியவில்லை. மார்கஸ் ஸ்டாய்னிஸ் அவருக்குப் பதிலாக விளையாடினார். ஆனால் சாஹல் பந்தில் பவுல்டு ஆனார்.

கடைசியில் அஸ்வின், மோஹித் சர்மா, ராஜ்புத் ஆகியோர் ரன் அவுட் ஆன விதம் தரமற்ற கிரிக்கெட்டை உறுதி செய்வதாக அமைந்தது. அன்று இதே பிட்சில்தானப்பா கொல்கத்தா 245 ரன்களை வெளுக்க தொடர்ந்து கிங்ஸ் லெவன் 214 அடித்தது, 459 பிட்ச் திடீரென 88 பிட்ச் ஆனது எப்படி? பிட்செல்லாம் காரணமில்லை.

umeshjpg

படம். | விவேக் பெந்த்ரே.

 

ஆனால் உமேஷ் யாதவ் மிக அருமையாக வீசியதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும், கெய்லை தன் வேக அவுட் ஸ்விங்கர்களினால் படுத்தி எடுத்தார், ஒரு பந்து எட்ஜ் ஆகி படேல் கேட்சை விட்டார். கெய்ல் அப்போது 0. பிறகு கெயிலின் உடலை நோக்கி பந்துகளை வீசி அவரை எழும்பவிடாமல் செய்தார் உமேஷ். இதே ஷார்ட் பிட்ச் உத்தியில் அவர் ராகுல், கெய்ல் ஆகியோரை அடுத்தடுத்த ஓவர்களில் காலி செய்தார். கருண் நாயரை எட்ஜ் செய்ய வைத்தார் சிராஜ். 41/3. அடுத்த ஓவரில் சாஹலின் கூக்ளியில் பவுல்டு ஆனார் ஸ்டாய்னிஸ். அதன் பிறகு அசிங்கமான ரன் அவுட்கள் கிங்ஸ் லெவன் 88 ரன்களுக்குச் சுருண்டது.

கோலி, பார்த்திவ் பவுண்டரி மழை

பிட்சில் ஒன்றுமில்லை, பந்து வீச்சிலும் ஒன்றுமில்லை, முஜீப் உர் ரஹ்மானும் இல்லை, பிறகென்ன பார்த்திவ், கோலிக்கு அருமையான சூழல். பவர் பிளேயிலேயே 66/0.

பிறகு 8.1 ஓவர்களில் 92/0 என்று ஊதியது. கோலி 28 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள், இந்த சிக்சர்களை அவர் தலா டை, ராஜ்புத் பந்துகளில் அடித்தார்.

பார்த்திவ் படேல் 22 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 40 ரன்கள். மொத்தம் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்கள். 64 ரன்கள் இதிலேயே வந்து விட்டது.

ஒரு சுவாரசியம் என்னவெனில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி பவுலிங் போடும் போது 49 டாட்பால்கள், அதாவது ரன் இல்லாத பந்துகளை வீசியது, பேட்டிங்கில் 89 ரன்கள் வெற்றி இலக்கை 49 பந்துகளில் எட்டியது. ஆட்ட நாயகன் உமேஷ் யாதவ்.

http://tamil.thehindu.com/sports/article23889023.ece

Link to comment
Share on other sites

பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைப்பது யார்?; ராஜஸ்தானுடன் கொல்கத்தா இன்று மோதல்

 

 
15CHPMUJOSBUTTLER

ஜாஸ் பட்லர்   -  PTI

15CHPMUJOSBUTTLER2

ஜாஸ் பட்லர்   -  TH

15CHPMUJOSBUTTLER3

ஜாஸ் பட்லர்   -  PTI

15CHPMUSUNILNARINE

சுனில் நரேன்   -  AFP

 
15CHPMUJOSBUTTLER

ஜாஸ் பட்லர்   -  PTI

ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இரு அணிகளுக்கும் சமநிலையில் உள்ளது. ஏனெனில் இரு அணிகளும் தலா 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்விகளை பதிவு செய்து 12 புள்ளிகளை பெற்றுள்ளன. நெட் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணி (-0.189) பட்டியலில் 4-வது இடம் வகிக்கிறது. ராஜஸ்தான் அணி (-0.347) 5-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே வாழ்வா, சாவா போராட்ட கதிதான்.

 

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி அடுத்தடுத்த இரு தோல்விகளுக்கு பின்னர் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக வெகுண்டெழுந்தது. ஐபிஎல் வரலாற்றில் 4-வது அதிகபட்ச ரன் குவிப்பாக 245 ரன்கள் விளாசி மிரட்டியதுடன் அந்த ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேவேளையில் தொடரில் இருந்து வெளியேறக்கூடும் என கருதப்பட்ட அஜிங்க்ய ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி ஹாட்ரிக் வெற்றியின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த அணியின் தொடர்ச்சியான வெற்றிகளில் ஜாஸ் பட்லரின் அதிரடி ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது. மூன்று ஆட்டங்களிலும் ஆட்ட நாயகன் விருது வென்ற அவர், எதிரணியின் பந்து வீச்சாளர்களை மிரளச் செய்திருந்தார். கடைசியாக நேற்றுமுன்தினம் மும்பை அணிக்கு எதிராக ஜாஸ் பட்லர் 94 ரன்கள் விளாசி கடைசி வரை வீழ்த்த முடியாத வீரராக களத்தில் இருந்தார். அவரது ஆக்ரோஷ ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த சீசனில் ஜாஸ் பட்லர் தொடர்ச்சியாக 5 அரை சதங்கள் விளாசி அசத்தி உள்ளார். இந்த வகையில் ஏற்கெனவே தொடர்ச்சியாக 5 அரை சதங்கள் விளாசியிருந்த சேவக்கின் சாதனையை ஜாஸ் பட்லர் சமன் செய்துள்ளார். கடைசியாக நடைபெற்ற 5 ஆட்டங்களில் அவர் முறையே 67, 51, 82, 95*, 94* ரன்கள் விளாசியுள்ளார். இன்றைய ஆட்டத்திலும் கொல்கத்தா பந்து வீச்சாளர்களுக்கு ஜாஸ் பட்லர் நெருக்கடி கொடுக்கக்கூடும். தொடக்க பேட்டிங் வலுவடைந்துள்ளதால் ரஹானே மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கக்கூடும்.

12 ஆட்டங்களில் 28 சராசரியுடன் 280 ரன்கள் சேர்த்துள்ள அவர், சீரான ரன் குவிப்பு மூலம் அணிக்கு பலம் சேர்க்க வேண்டிய கட்டத்தில் உள்ளார். சஞ்சு சாம்சன், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோரும் மட்டையை சுழற்ற தயாராக உள்ளனர். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் பலம் சேர்ப்பவராக உள்ளார். மும்பை அணிக்கு எதிராக முக்கியமான கட்டத்தில் அடுத்தடுத்த பந்துகளில் சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மாவை ஆட்டமிழக்கக் செய்து பெரிய அளவில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா பேட்ஸ்மேன்களுக்கும் ஜோப்ரா ஆர்ச்சர் தொல்லை தரக்கூடும்.

கொல்கத்தா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் கடைசி லீக் ஆட்டம் இதுகுவாகும். இதனால் அந்த அணி உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த முயற்சிக்கும். பஞ்சாப் அணிக்கு எதிராக 36 பந்துகளில் 75 ரன்கள் விளாசிய சுனில் நரேன், 23 பந்துகளில் 50 ரன்கள் விளாசிய தினேஷ் கார்த்திக் ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, சுப்மான் கில், நித்திஷ் ராணா ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர்.

சுழற்பந்து வீச்சில் சுனில் நரேன், பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ் ஆகியோருடன் நித்திஷ் ராணாவும் ராஜஸ்தான் டாப் ஆர்டர் பேட்டிங்க்கு சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளார். இந்த சீசனில் இரு அணிகளும் 2-வது முறையாக மோதுகின்றன. கடந்த ஏப்ரல் 18-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தோல்விக்கு ராஜஸ்தான் அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

பிளே ஆஃப் சுற்றில் சென்னை

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தானிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தவித சிக்கலும் இன்றி முன்னேறியது.

ஏற்கெனவே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்த நிலையில் 2-வது அணியாக சென்னையும் நுழைந்துள்ளது. இதன் மூலம் பங்கேற்ற அனைத்து தொடர்களிலும் பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்த ஒரே அணி என்ற பெருமையை சென்னை அணி பெற்றது. மீதமுள்ள இரு இடங்களுக்கு பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு அணி ஆகிய 5 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

http://tamil.thehindu.com/sports/article23888620.ece

Link to comment
Share on other sites

அவர்கள் பேட்டிங் வரிசையைக் கண்டு நாங்கள் அச்சப்படுவோம் என கிங்ஸ் லெவன் நினைத்தது: விராட் கோலி

 

 
kohli

விராட் கோலி.   -  படம். | ஏ.எஃப்.பி.

இந்தூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஆர்சிபி அணி மீண்டெழுந்து கிங்ஸ் லெவன் அணியை 88 ரன்களுக்குச் சுருட்டி பிறகு கோலி, பார்த்திவ் சரவெடி பவுண்டரிகளில் விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்று பிளே ஆஃப் தகுதியை உயிருடன் வைத்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து விராட் கோலி கூறும்போது, “கடந்த வாரம் கிரேஸி. நாங்கள் கீழே இருக்கிறோம், வெளியேறுவோம் என்றே நினைத்தோம்.

 

ஆனால் அட்டவணை திடீரென எங்களுக்காகத் திறந்துள்ளது. இப்போது எங்களுக்கு 2 போட்டிகளில் 2 வெற்றிகள் தேவை அவ்வளவே.

கிங்ஸ் லெவன் அணி அவர்கள் பேட்டிங் வரிசையினால் எங்களை லேசாக அச்சுறுத்தலாம் என்று நினைத்தது. ஆனால் பவுலர்கள் வீசிய விதம் அவர்கள் தவறுகள் செய்ய வாய்ப்பில்லை என்பதை அறிவுறுத்தியது.

அவர்கள் அணியில் புதிர் ஸ்பின்னர் (முஜீப் உர் ரஹ்மான்) இல்லை. அதனால் பெரிய அளவுக்கு ரன்களைக் குவிக்க ஆடுவார்கள் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். நாங்கள் அவர்களை சந்தேகத்தில் வைத்தோம்.

டாஸ் முக்கியமானது, அவர்களிடத்தில் முக்கிய ஸ்பின்னர். கடந்த போட்டியில் 180 ரன்களை விரட்டினோம், அதனால் இந்த ஆட்டத்திற்கு நல்ல உத்வேகத்துடன் வந்தோம். பேட்ஸ்மென்கள் நாங்கள் பொறுப்பை கையிலெடுக்க விரும்பினோம்.

எங்களிடம் நல்ல உத்வேகம் இருந்தது என்றே நினைக்கிறேன். இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் ஆடும் ஒரு அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் விரும்ப மாட்டார்கள். சரியான மனநிலையில் இருப்பது அவசியம், தகுதி பெறுவது பற்றி அதிகம் யோசிக்கக் கூடாது” என்றார் விராட் கோலி.

http://tamil.thehindu.com/sports/article23890197.ece

Link to comment
Share on other sites

யாரும் கணிக்கக்கூடாது... ஆனா, ஆட்டையக் கலைச்சிட்டிங்களே அஷ்வின்! #KXIPvRCB

 
 

சில நாள்களாக கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப், மும்பை ரசிகர்களெல்லாம் வாயில் இரண்டாம் வாய்ப்பாடும், கையில் கால்குலேட்டருமாக உலவிக் கொண்டிருக்கிறார்கள். `இவனை அவன் ஜெயிச்சா, அவனை இவன் ஜெயிச்சா...' என எந்நேரமும் எதையோ கூட்டிக் கழித்துப் பார்த்து குழப்பத்திலேயே திரிகிறார்கள். அவர்களை இன்னும் குழப்புவதற்காகவே நேற்று நடந்தது #KXIvsRCB மேட்ச். பாவத்த! #KXIPvRCB

#KXIPvRCB

 

ஒரு காலத்தில் பெங்களூரு அணிக்காக உசுரைக் கொடுத்து ஆடிய கெயிலை, கொசுறு போலக் கூட வாங்க விரும்பவில்லை ஆர்.சி.பி. `உங்க மேல இருக்க அக்கறைலதானேடா நீங்க நீட்டின இடத்துல பாய்ஞ்சேன். காட்டின இடத்துல மேய்ஞ்சேன். கடைசியில இப்படி பண்ணிட்டீங்களேய்யா' என நொந்து போனார் கிறிஸ் கெயில். `மீனுக்கு தூண்டில் எதிரி, பாம்புக்கு பருந்து எதிரி, போலீஸுக்கு திருடன் எதிரி, ஆனால், ஆர்.சி.பி-க்கு ஆர்.சி.பிகாரன்தான்டா எதிரி. அந்த மாதிரி ஆர்.சி.பி-க்கு எதிரா இந்த சீசன்ல இரண்டு செஞ்சுரி அடிப்பாரு கிறிஸ்டோபர் ஹென்றி' என ஆர்வமாகக் காத்திருந்தார்கள் ஐ.பி.எல் ரசிகர்கள். ஆனால், முந்தைய போட்டியில் `அன்பிரிடிக்டபிள்' அஷ்வினோ அவரை dug out-ல் உட்காரவைத்துவிட, நேற்றைய மேட்ச்சில்தான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த சம்பவம் நடந்தேறியது.

#KXIPvRCB

பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் முஜீப் உர் ரஹ்மான் காயம் காரணமாக ஆடவில்லை. அவருக்குப் பதிலாக மார்கஸ் ஸ்டாய்னில் அணியில் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார். முன்னாள் ஆர்.சி.பி-யன்கள் கே.எல்.ராகுலும், கெயிலும் பஞ்சாப் அணிக்காக ஓபனிங் இறங்க, உமேஷ் யாதவ் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில், `சோட்டா கில்கிறிஸ்ட்' பார்த்தீப் படேல், கெயில் கொடுத்த கேட்ச்சை கோட்டைவிட்டு கோலியின் கோவத்துக்கு ஆளானார். அந்த ஓவரில் வெறும் 1 ரன் மட்டுமே கொடுத்து, சிரித்த முகத்தோடு அம்பயரிடம் தொப்பியை வாங்கிக் கொண்டு கிளம்பினார் உமேஷ்.

டிம் செளதி வீசிய இரண்டாவது ஓவரில், முதல் ஐந்து பந்துகளையும் கே.ஆர்.ராகுல் டாட் வைக்க, `டேய், அந்த அருவாளை எடு...' ரியாக்‌ஷன் கொடுத்தார் ஷேவாக் . கடைசிப் பந்தில், ஸ்கொயர் லெக் திசையில் ராகுல் ஒரு சிக்ஸரை விளாசியதும்தான் `சரி சரி, அருவா இப்போ தேவைப்படாது. தேவைப்பட்டா பின்னால வாங்கிக்குறேன்' என அமைதியானார். செளதி வீசிய ஆட்டத்தின் நான்காவது ஓவரில் மூன்று பவுண்டரிகளை முறையே கவர், மிட் விக்கெட் மற்றும் மிட் ஆஃப் திசையில் விளாசினார். அணியின் ரன் ரேட் கொஞ்சம் கொஞ்சமாய் உயர ஆரம்பித்தது. எங்கே `மீனுக்கு தூண்டில் எதிரி' பன்ச் டயலாக் மறுபடியும் உண்மையாகிவிடுமோ என பயந்துபோனார்கள் ஆர்.சி.பி.ரசிகர்கள். 

#KXIPvRCB

இந்த சீசனில் ஷார்ட் பந்துகளை எல்லாம் பாப்பா பந்துகளாக டீல் செய்து பவுண்டரிகளை பறக்கவிட்டுக் கொண்டிருந்த கே.எல்.ராகுல் - 21 (15), ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் உமேஷ் வீசிய ஷார்ட் பந்தில் டீப் ஸ்கொயரில் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்குத் திரும்பினார். ராகுல் அவுட்டாகி இரண்டாவது பந்திலேயே பவுண்டரி விளாசி பஞ்சாப் ரசிகர்களை கூல் செய்த கெயில் - 18 (14), அடுத்த பந்திலேயே சிராஜிடம் கேட்ச் கொடுத்து பெங்களூரு ரசிகர்களை கூல் செய்தார். அடுத்ததாக, `அன்பிரிடிக்டபிள்' அஷ்வின் களமிறங்குவார் என ஆர்.சி.பி ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அன்பிரிடிக்டபிளாக ஆரோன் ஃபின்ச்சை களமிறக்கினார். அடுத்த ஓவரிலேயே கருண் நாயரின் - 1 (3) விக்கெட்டை கழட்டினார் சிராஜ். ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த கோலி அருமையான கேட்ச் பிடித்தார். இனி, கொஞ்ச நாள்களில் தியேட்டரில் ஒளிபரப்பாகும் `ஸ்லிப்பில் நின்றுகொன்டிருந்த நான்' விளம்பரத்தில் விராட் நடிக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி ஒரு அருமையான கேட்ச்.

#KXIPvRCB

அதன் பிறகு, பஞ்சாப் ரன்னே அடிக்கவில்லை, விக்கெட்களைத்தான் ஒவ்வொன்றாக இழந்துகொண்டிருந்தது. ஏழாவது ஓவரில், மார்கஸ் ஸ்டாய்னிஸுக்கு - 2 (3) யார்க்கர் வீசி போல்டாக்கினார் ஸ்பின்னர் சாஹல்! பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் வரிசையாக அவுட்டாகிக் கொண்டேயிருக்க, கடைசி பேட்ஸ்மென் வரை எல்லோருமே முன்கூட்டியே க்ளவுஸ், ஹெல்மெட் அணிந்து ரெடியானார்கள். ஒன்பதாவது ஓவரில், கிராந்தோம் வீசிய பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர் மயங் அகர்வால் - 2 (6). மறுபுறம், எதைப் பற்றியும் கவலைப் படாமல், கண்ணும் கருத்துமாக கடமையாற்றிக் கொண்டிருந்த ஃபின்ச் - 26 (23), மொயின் அலி பந்தில் கோலியிடம் டீப்பில் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். இறுதியாக, டை, மோகித் சர்மா, ராஜ்பூட் ஆகியோர்  0,3,1 என தங்களால் முடிந்த பங்களிப்பை பாக்கெட்டிலிருந்து எடுத்து அணிக்கு வழங்க, மொத்தம் 88 ரன்களுக்கே ஆல்-அவுட் ஆனது பஞ்சாப் அணி.

`யுவ்ராஜ் டீம்ல சும்மாவே இருந்தாலும், டீம் ஜெயிச்சுட்டு இருந்தது. அவரை உட்கார வெச்சதுக்குப் பிறகு டீம் தோத்துட்டே இருக்கு. ப்ச்ச்...' என வருத்தமுடன் எழுந்து சென்றார் ஒரு யுவ்ராஜ் ரசிகர். 

#KXIPvRCB

89 தான் இலக்கு என்றாலும், 49 ரன்களுக்கே ஆல் அவுட் ஆன கதையெல்லாம் வரலாற்றில் இருப்பதால் ஆராவாரமில்லாமல் அமைதியாகவே இருந்தார்கள் ஆர்.சி.பி.ரசிகர்கள். `சோட்டோ கில்கிறிஸ்ட்' பார்த்தீவ் படேல் `சோட்டோ ஹைடனா'க உருமாறி, கேப்டன் கோலியோடு ஓபனிங் இறங்கினார். எங்கே ராகுலையும் ஃபின்ச்சையும் பந்துபோட விட்டு, கெயிலை கீப்பிங் நிற்கவைத்து `அன்பிரிடிக்டபிள்' அஷ்வின் வித்தியாசமாக ஏதாவது முயற்சிப்பார் என எதிர்பார்த்தார்கள் ஆர்.சி.பி. ரசிகர்கள். ஆனால், அஷ்வினேதான் முதல் ஓவரை வீசினார். கடைசிப் பந்தில் ஒரு பவுண்டரி உட்பட ஒன்பது ரன்கள் கிடைத்தது. அதன்பிறகு, பவர் ப்ளேயை நன்றாக பயன்படுத்திக் கொண்ட பார்த்தீவும் கோலியும் 92 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்து 8.1 ஓவரில் மேட்சை முடித்துவிட்டு, கைகொடுத்துவிட்டு கிளம்பினர்.

(கோலி - 48 (28), பார்த்தீவ் - 40 (22) ).  கோலி 40-களில் இருக்கும்போது, அவர் அரைசதம் எடுக்க வாய்ப்பு கொடுக்காமல், கிடைத்த பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கு விரட்டி தனியாக கடை போட்ட பார்த்தீவ் மீண்டும் கோலியின் கோபத்துக்கு ஆளாகியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பேட்டிங்கில் கெயில் - கே.எல்.ராகுல், பெளலிங்கில் முஜீப் உர் ரஹ்மான் என மூன்று பேரைத்தான் மொத்த பஞ்சாபும் இமாலய மலையென நம்பியிருக்கிறார்கள். கோப்பைதான் லட்சியம் என்றால், நிச்சயம் ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக பங்காற்ற வேண்டும். ஆர்.சி.பி அணிக்கு இன்னமும் ப்ளே ஆஃபுக்குள் நுழைய, மெல்லிய வாய்ப்பிருக்கிறது. அதற்கு, அடுத்து வரும் போட்டிகளில் அவர்கள் வென்றாக வேண்டும். இனி சென்னை ஆடும் மேட்ச்கள் மட்டுமல்ல, எல்லா மேட்ச்சும் ஹார்ட் அட்டாக் மேட்ச்கள்தான்!

ஒரே ஓவரில் ராகுல் மற்றும் கெயிலின் விக்கெட்களைக் கைப்பற்றிய உமேஷ் யாதவுக்கு (4-0-23-3) ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியால் ஆர்.சி.பி புள்ளிகள் பட்டியலில் ஒரு இன்ச் கூட நகரவில்லை. அதே ஏழாவது இடத்தில் இருக்கிறது என்றாலும் நெட் ரன் ரேட் -0.26-ல் இருந்து +0.218 என மாறியிருப்பது அவர்களுக்கு போனஸ். 

https://www.vikatan.com/news/sports/125071-rcb-beat-kxip-by-10-wickets.html

Link to comment
Share on other sites

மும்பை இந்தியன்ஸை வீட்டுக்கு அனுப்புவோம்: அஸ்வின் நம்பிக்கை

 

 
ashwin

படம். | விவேக் பெந்த்ரே.

ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக படுமோசமாக ஆடி தோல்வி தழுவிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் இன்னும் பிளே ஆஃப் தகுதி வாய்ப்பை இழக்காவிட்டாலும் இன்னும் குறைந்தது ஒரு போட்டியிலாவது வென்று 14 புள்ளிகளுடன் மற்ற போட்டிகளின் முடிவை நம்பியிருக்க வேண்டும், அல்லது அடுத்த 2 போட்டிகளிலும் வென்று 16 புள்ளிகளுடன் தகுதி பெற வேண்டும்.

இந்நிலையில் அணியின் உத்வேகத்தை அழிக்கும் தோல்வியை ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்று கிங்ஸ் லெவன் பெற்றது. 88 ரன்களுக்குச் சுருண்டு பிறகு கோலி, பார்த்திவின் பவுண்டரி மழையில் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியாமல் தோல்வி தழுவியது.

 
 

இந்நிலையில் தோல்வி அணியான கிங்ஸ் லெவனின் கேப்டன் அஸ்வின் கூறியதாவது:

கடும் ஏமாற்றமளிக்கிறது. பவுலர்கள்தான் புள்ளிகளை எங்களுக்குப் பெற்றுத் தந்தனர். எங்களை நாங்களே மீட்டெடுத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

நெட் ரன் ரேட்டில் எங்களுக்கு கவனம் தேவைப்படுகிறது. ஆனால் மீதமுள்ள போட்டிகளில் வென்று முன்னேறுவதே பாசிட்டிவ் அணுகுமுறை.

வீரர்கள் தங்கள் என்ன நினைத்தனரோ அந்த ரன் எண்ணிக்கையை எடுக்க முடியவில்லை. 20 ஓவர் ஆடவில்லை, 3,4 விக்கெட்டுகளை விறுவிறுவென இழந்தோம். வெற்றி மீண்டும் எங்கள் பக்கம் திருப்ப வேண்டும்.

மும்பையை வீட்டுக்கு அனுப்ப எங்களால் ஆன முயற்சிகளை மேற்கொள்வோம். புனேயில் என்ன ஆகிறது என்று பார்ப்போம்.

பந்துவீச்சு ஓரளவுக்கு நன்றாகவே உள்ளது, நிறைய சர்வதேச அனுபவ வீரர்கள் எங்களிடம் உள்ளனர், இன்று பேட்டிங்கில் சரியாக காட்டவில்லை அவ்வளவுதான்.

இவ்வாறு கூறினார் அஸ்வின்.

http://tamil.thehindu.com/sports/article23891270.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018 - ராஜஸ்தான் ராயல்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

 
அ-அ+

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #VIVOIPL #IPL2018 #KKRvRR

 
 
 
 
ஐபிஎல் 2018 - ராஜஸ்தான் ராயல்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
 
 
கொல்கத்தா:
 
ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராகுல் திரிபாதி, ஜாஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஓவரை பிரசித் வீசினார். இந்த ஓவரில் ராகுல் திரிபாதி ஒரு சிக்ஸ், ஹாட்ரிக் பவுண்டரி வீசினார். இதனால் 19 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 
 
3-வது ஓவரை ஷிவம் மவி வீசினார். இந்த ஓவரில் பட்லர் இரண்டு சிக்ஸ், 3 பவுண்டரி விளாசினார். இதனால் ராஜஸ்தானுக்கு 28 ரன்கள் கிடைத்தது. இதனால் 3 ஓவரில் 49 ரன்கள் குவித்தது. 3.2 ஓவரிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் 50 ரன்னைத் தொட்டது.
 
அதன்பின் கொல்கத்தா அணியினர் சிறப்பாக பந்துவீசினர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவரில் 142 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார்.
 
201805152336164769_1_DdQB7B4VMAAzht4._L_styvpf.jpg
 
இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 143 ரன்கள் வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்தது. தொடர்ந்து கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரேன், கிறிஸ் லைன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக ரன் குவித்தனர். முதல் ஓவரை கவுதம் வீசினார். அந்த ஓவரில் நரேன் 2 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 21 ரன்கள் எடுத்தார்.
 
2-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் நரேன் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராபின் உத்தப்பா 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டோக்ஸ் வீசிய 4-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன்பின் நிதிஷ் ராணா களமிறங்கினார். லைன், ராணா இருவரும் நிதானமாக விளையாடினர். இதனால் ஆறு ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்தது.
 
201805152336164769_2_DdQOJmAW4AEWDlM._L_styvpf.jpg
 
9-வது ஓவரை இஷ் சோடி வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் நிதிஷ் ராணா எல்.பி.டபுல்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அவர் 17 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து கேப்டன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். 10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. 
 
15 ஓவர்களில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது. 16-வது ஓவரை ஸ்டோக்ஸ் வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தில் லைன் ஆட்டமிழந்தார். அவர் 42 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். அதன்பின் ஆண்ட்ரே ரசல் களமிறங்கினார். தினேஷ் கார்த்திக், ரசல் ஆகியோர் இணைந்து பொறுப்புடன் விளையாடினர்.
 
201805152336164769_3_LUKE2068._L_styvpf.jpg
 
இறுதியில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெற செய்தார். அவர் 41 ரன்களுடன் களத்தில் இருந்தார். ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். #VIVOIPL #IPL2018 #KKRvRR

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/15233616/1163330/IPL-Kolkata-Knight-Riders-beat-Rajasthan-Royals-by.vpf

Link to comment
Share on other sites

தினேஷ் கார்த்திக்கின் அபார கேப்டன்சி: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்கிய கொல்கத்தா

 

 
kuldeep

அபாரப் பந்து வீச்சில் திருப்பு முனை ஏற்படுத்திய குல்தீப் யாதவ். | பிடிஐ.

கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் சுமார் 60,000 ரசிகர்கள் முன்னிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி ஐபிஎல் பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்கியது.

டாஸ் வென்ற தினேஷ் கார்த்திக் முதலில் ராஜஸ்தான் அணியை பேட் செய்ய அழைத்தார். என்றைக்கும் இல்லாத திருநாளாக கடந்த ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் கலக்கிய திரிபாதியை ஒருவழியாக தொடக்கத்தில் இறக்கினார் ரஹானே. அவரும் பட்லரும் சேர்ந்து 5 ஓவர்கள் முடிவதற்குள் 63 ரன்கள் விளாசி அதிரடி எழுச்சித் தொடக்கம் கொடுத்தனர். ஆனால் அதன் பிறகு தினேஷ் கார்த்திக்கின் அருமையான கேப்டன்சி, குல்தீப் யாதவ், சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல் ஆகியோரது பந்து வீச்சில் 14 ஓவர்களில் 79 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களுக்கு மடிந்தது ராஜஸ்தான்.

 

143 ரன்கள் இலக்கை தொழில்நேர்த்தியுடன் விரட்டி 18வது ஓவரில் 145/4 என்று வெற்றி பெற்று கொல்கத்தா 14 புள்ளிகள் பெற்றது. தினேஷ் கார்த்திக் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை லாங் ஆன் மேல் தூக்கி சிக்ஸ் அடித்து தோனி பாணியில் வென்றார். அன்று வங்கதேசத்துக்கு எதிராக கவர் பாயிண்டில் சிக்ஸ் அடித்து வெற்றி, நேற்று லாங் ஆனில் சிக்ஸ் அடித்து வெற்றி. குல்தீப் யாதவ் எழுச்சிப் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி திருப்பு முனை ஏற்படுத்தியதற்காக ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

பட்லர், திரிபாதி கொடுத்த அதிர்ச்சித் தொடக்கம்:

ராகுல் திரிபாதியை ஒருவழியாக தொடக்கத்தில் இறக்கினார் ரஹானே, அவரும் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்தார், ஜோஸ் பட்லர் கடந்த 5 போட்டிகளில் அரைசதம் விளாசியவர், கேட்க வேண்டுமா ப்ளே என்று சொன்னவுடன் ஆரம்பித்த ஷாட்கள் நிற்கவேயில்லை.

இன்னும் சொல்லப்போனால் கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் பிரசீத் கிருஷ்ணா 2வது ஓவரை வீச அவரது ஓவ்ர் 3ம் பந்திலிருந்து தொடங்கிய பவுண்டரி மழை ஷிவம் மாவியின் 3வது ஓவர் முடிவு வரை தொடர்ந்தது. ஒரு 10 பந்துகளில் கொல்கத்தாவை மூச்சுத் திணறத் திணற விளாசி 46 ரன்களைக் குவித்தனர். இதில் 7 நான்குகள், 3 ஆறுகள் அடங்கும். 3 ஓவர்களில் கொல்கத்தாவை சிதற அடித்தனர் பட்லர், திரிபாதி ஜோடி. 2வது ஓவரில் திரிபாதி, பிரசித் கிருஷ்ணாவை 1 சிக்ஸ் 3 பவுண்டரிகள் விளாசித்தள்ளினார், ஷிவம் மாவி வீசிய 3வது ஓவரில் பட்லர் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 28 ரன்களை விளாசினார்.

சுனில் நரைனும் தன் முதல் ஓவரில் 10 ரன்கள் கொடுத்தார். 4 ஓவர்கள் முடிவில் 59 ரன்களுக்கு விக்கெட் இல்லை என்று இருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

15 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்த ராகுல் திரிபாதி, ரஸல் வீசிய வேக லெக் திசை ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஷாட் ஆட முயன்று கிளவ்வில் பட்டு தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார்.

ரஹானே இறங்கி 12 பந்துகளில் 11 ரன்கள் என்று சொதப்பினார், நல்ல உத்வேகம் இருந்த ஆட்டத்தை தன் மந்தமான பேட்டிங்கினால் கெடுத்துக் குட்டிச் சுவராக்கினார் ரஹானே. இவரது இந்த மந்தத்தினால் பட்லரின் உத்வேகம் தடைபட்டிருக்கலாம். ஆனால் முதலில் ரஹானே வெளியேறினார், அதுவும் தனக்கு வராத ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டில் குல்தீப் யாதவ்விடம் பவுல்டு ஆனார். லெக் ஸ்டம்புக்கு வரும் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார் என்றால் அது முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒரு ஷாட், அப்படியென்றால் தான் சொதப்பி வருவது நினைவுக்கு வர ரன் ரேட்டை உயர்த்த முயன்ற ஒரு வியர்த்தமான தவறான ஷாட் தேர்வு என்பதையே காட்டுகிறது.

பட்லரின் ரிதம் ரஹானேவினால் தடைபட அவர் 22 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 39 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். சஞ்சு சாம்சன் (12), கவுதம் (3) ஆகிய பார்மில் உள்ள பேட்ஸ்மென்கள் நல்ல பந்து வீச்சுக்கு வெளியேறினர். சாம்சன் சுனில் நரைன் ஸ்கிட்டருக்கு எல்.பி.யாக கவுதம், ஷிவம் மாவியின் தொண்டைக்கு வீசப்பட்ட வெறியான பவுன்சரில் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார். ஷார்ட் பிட்ச் பலவீனம் கவுதமுக்கு உள்ளது 5வது முறையாக நிரூபணமானது. அதிரடி வீரர் பென் ஸ்டோக்ஸ் திக்கித் திணறி 13 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தும், ஸ்டூவர்ட் பின்னி 1 ரன்னிலும் குல்தீப்பிடம் அவுட் ஆக, குல்தீப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி திருப்பு முனைப் பந்து வீச்சை நிகழ்த்தினார்.

ஜெயதேவ் உனாட்கட் திடீரென பொங்கி எழுந்து அனாயாச மட்டைச் சுழற்றலில் ஈடுபட்டு 18 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து கடைசியாக அவுட் ஆக 19 ஓவர்களில் 142 ஆல் அவுட்.

குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 8 டாட்பால்களுடன் 20 ரன்கள் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ரஸல் 3 ஓவர்களில் 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நரைன் 29 ரன்களுக்கு 2 விக்கெட். பிரசீத் கிருஷ்ணா தொடக்க சாத்துமுறைக்குப் பிறகு 35 ரன்களுக்கு 2 விக்கெட்.

தொழில்நேர்த்தியான விரட்டல்:

இலக்கை விரட்டும்போது கிறிஸ்லின் தன் பாணியிலிருந்து சற்றே விலகி நிதானம் கடைபிடிக்க வழக்கம் போல் சுனில் நரைன் வெளுத்து வாங்கினார்.

ஆட்டம் தொடங்கி பிளே என்று நடுவர் கூறியவுடன் கவுதம் கையிலிருந்து வெளியேறிய பந்தை மிட்விக்கெட்டிலிருந்து பார்வையாளர் பகுதியிலிருந்து எடுத்து வர நேரிட்டது. சிக்ஸ். அங்கு பந்தை எடுத்துப் போட்டவர் நகர வேண்டாம் அங்கேயே நிற்கவும் என்று கூறுமாறு மீண்டும் அதே பகுதியில் ஒரு விளாசல், இம்முறை நான்கு. மிட்விக்கெட்டில் அடித்து அடித்து அவருக்கே சலித்துப் போக அடுத்த பந்தை மேலேறி வந்து லாங் ஆனில் தூக்கி சிக்சர் அடித்தார். அடித்து விட்டு மட்டையின் கீழ் பகுதியைப் பார்த்தார், காரணம் பந்து அங்குதான் பட்டது, எங்கு பட்டால் என்ன? முடிவு சிக்சர்தானே!! அடுத்த பந்தை ஒரு மாற்றத்துக்காக ஒதுங்கிக் கொண்டு கவர் திசைக்கு மேல் தூக்கி அடித்தார் நான்கு ரன்கள். 5வது பந்தை தரையோடு தரையாக நரைன் அடிக்க என்ன இது விளையாட்டு, நாங்கள் பந்தை மேலே பார்த்துக் கொண்டிருக்கிறோம், கீழே தரையோடு தரையாக ஆடி என்ன விளையாட்டு இது என்பது போல் ரசிகர்கள் ஒரு ஏமாற்ற ஒலியை எழுப்பினர். அவ்வளவுதான் போதும் 4 பந்துகளில் 21 ரன்கள்!

dkjpg

படம்.| கே.ஆர்.தீபக்.

 

அடுத்த ஓவரை ஸ்டோக்ஸ் வீச அது நல்ல ஒரு ஷார்ட் பிட்ச் பந்து அப்படித்தான் அவருக்கு வீச வேண்டும் டைமிங் கிடைக்காத புல்ஷாட்டில் 21 ரன்களில் வெளியேறினார்.

நரைன் அவுட் ஆனவுடன் கவுதமிடமே 2வது ஓவரை கொடுத்திருக்கலாம், ஆனால் ஜோஃப்ரா ஆர்ச்சரிடம் கொடுக்க கிறிஸ் லின் புல் சிக்ஸ் ஒன்றையும், தேர்ட்மேனை முன்னால் கொண்டு வந்துவிட்டு அசட்டுத்தனமாக ஆஃப் சைட் ஷார்ட் பிட்ச் பந்தை வீச அது தேர்ட்மேனில் பவுண்டரியாகவும் மாற ஆர்ச்சர் ஓவரில் 11 ரன்கள். உத்தப்பா இம்முறை சோபிக்கவில்லை 4 ரன்களில் ஸ்டோக்சின் அருமையான இன்னொரு பவுன்சருக்கு திணறி கேட்ச் ஆனார்.

நிதிஷ் ராணா 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 21 ரன்கள் எடுத்து இஷ் சோதியின் அருமையான பந்தில் எல்.பி.ஆனார். சோதி, உனாட்கட், ஸ்டோக்ஸ் மிக அருமையாக வீசினர், போதிய ரன்கள் கைவசம் இல்லை. ஆனால் கிறிஸ் லின் 42 பந்துகளில் 45 ரன்களை நிதானமாக எடுத்தார். தினேஷ் கார்த்திக் 31 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் கேப்டனுக்கான பொறுப்புடன் மீண்டும் ஒரு வெற்றியை உறுதி செய்தார். ரஸல் 11 நாட் அவுட். 18 ஓவர்களில் தினேஷ் கார்த்திக் வெற்றி சிக்சருடன் கொல்கத்தா 145/4 என்று வென்றது.

http://tamil.thehindu.com/sports/article23900115.ece

Link to comment
Share on other sites

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்; பிளே ஆஃப் சுற்றை தக்கவைக்குமா மும்பை அணி?- தோல்வியடைந்தால் ரோஹித் சர்மா குழு வெளியேறும்

 

 
16CHPMUROHITSHARMA2

மும்பை ஐபிஎல் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறும்.

இந்த சீசனில் தொடக்க போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தொடரின் 2-வது கட்டத்தில் ஹாட்ரிக் வெற்றி பெற்று பட்டியலில் சீரான முன்னேற்றம் கண்டு அனைவரையும் வியக்கவைத்ததுடன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்தது. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்வியால் மும்பை அணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 12 ஆட்டங்களில் விளையாடி உள்ள மும்பை அணி 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

 

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்திலும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் வெற்றி காண வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது மும்பை அணி. இந்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் 14 புள்ளிகளையே பெற முடியும். இந்த நிலை ஏற்பட்டால் மற்ற அணிகளின் முடிவை பொறுத்தே மும்பை அணியின் பிளே-ஆப் சுற்று தலைவிதி நிர்ணயிக்கப்படும். ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி வெற்றிப் பெற தவறினால் தொடரில் இருந்து வெளியேறுவது உறுதி.

அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. நேற்றுமுன்தினம் பெங்களூரு அணிக்கு எதிராக 88 ரன்களில் சுருண்டு 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது அணியின் உத்வேகத்தை சீர்குலைத்துள்ளது. இந்த படுதோல்வியால் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பஞ்சாப் அணி இன்னும் இழக்கவில்லை. இன்றைய ஆட்டத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் எந்தவித சிக்கலும் இல்லாமல் அடுத்த SmallCode.pngசுற்றில் பஞ்சாப் அணி கால்பதிக்கலாம். அதேவேளையில் இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தால் கடைசி ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்படும். அப்படியே வெற்றி பெற்றாலும் நெட் ரன்ரேட் விகிதமும் பிரச்சினையாக உருவெடுக்கக்கூடும்.

நெட் ரன்ரேட்டை (+0.405) பலமாக வைத்துள்ள முப்பை அணி, தொடரின் இறுதி கட்டத்தில் தடுமாறி வரும் பஞ்சாப் அணியின் பலவீனத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக்கூடும். ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியின் நடுகள பேட்டிங் வரிசை மீண்டும் ஒரு மோசமான செயல்திறனை வெளிப்படுத்தியது. முக்கியமாக ரோஹித் சர்மாவின் மோசமான பார்ம் பெரிய பலவீனத்தை ஏற்படுத்தி உள்ளது. 12 ஆட்டங்களில் 26.70 சராசரியுடன் 267 ரன்கள் சேர்த்துள்ள அவர், பொறுப்பை உணர்ந்து உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இதேபோல் கிருணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா சதோதரர்களும் எதிர்பார்த்த அளவுக்கு பேட்டிங்கில் சிறந்த திறனை வெளிப்படுத்தவில்லை. அவர்களும் மட்டையை சுழற்றினால் பேட்டிங் வலுப்பெறும். ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 60 ரன்கள் சேர்த்து எவின் லீவிஸ் மீண்டும் பார்முக்கு திரும்பியிருப்பது கூடுதல் நம்பிக்கையை கொடுத்துள்ளது. அவரிடம் இருந்தும் இந்த சீசனில் 473 ரன்கள் குவித்துள்ள சூர்யகுமார் யாதவிடம் இருந்தும் மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். மும்பை அணியின் பந்து வீச்சும் இந்த சீசனில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

பஞ்சாப் அணியின் அதிரடி வீரர்களான கிறிஸ் கெயில், கே.எல்.ராகுல் ஆகியோரை நேற்றுமுன்தினம் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் ஷார்ட் பால் பந்து வீச்சு யுத்தியை சிறப்பாக கையாண்டு விரைவிலேயே வீழ்த்தினார்.

இதனால் அதேவகையிலான திட்டத்தை ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, மெக்லீனகன் ஆகியோரை உள்ளடக்கிய மும்பை வேகப்பந்து வீச்சு குழுவும் கையாளக்கூடும். இதேபோல் சுழற்பந்து வீச்சாளர்களான மயங்க் மார்க்கண்டே, கிருணல் பாண்டியா ஆகியோரும் பஞ்சாப் அணியை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கக்கூடும்.

கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் 4-ல் அடைந்த தோல்வி அடைந்து துவண்டுள்ள பஞ்சாப் அணி அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காண வேண்டியது உள்ளது. பேட்டிங்கில் கிறிஸ் கெயில், கே.எல்.ராகுல் ஆகியோரை நம்பி மட்டுமே இருப்பது பலவீனமாக உள்ளது. இவர்கள் விரைவிலேயே ஆட்டமிழந்தால் அணியை கரை சேர்ப்பதில் மிடில் ஆர்டர் தேர்ச்சி பெறத்தவறுகிறது. கருண் நாயர், ஆரோன் பின்ச், மயங்க் அகர்வால், அக்சர் படேல் ஆகியோர் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே மிடில் ஆர்டர் பேட்டிங்கில் மீண்டெழ முடியும். பந்து வீச்சில் ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் காயம் அடைந்துள்ளது அணியின் சமநிலையை வெகுவாக பாதித்துள்ளது. இதனால் அஸ்வின், அக்சர் படேல் ஆகியோருக்கு கூடுதல் நெருக்கடி உருவாகி உள்ளது.

‘வீட்டுக்கு அனுப்புவோம்’

பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கூறும்போது, “ பெங்களூரு அணிக்கு எதிரான தோல்வி கடும் ஏமாற்றமளிக்கிறது. கடந்த ஆட்டங்களில் பந்து வீச்சாளர்கள்தான் எங்களுக்குப் புள்ளிகளை பெற்றுத் தந்தனர். இதனால் எங்களை நாங்களே மீட்டெடுத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். நெட் ரன் ரேட்டில் எங்களுக்கு கவனம் தேவைப்படுகிறது. ஆனால் மீதமுள்ள போட்டிகளில் வென்று முன்னேறுவதே நேர்மறையான அணுகுமுறை.

வெற்றியை மீண்டும் எங்கள் பக்கம் திருப்ப வேண்டும். மும்பையை வீட்டுக்கு அனுப்ப எங்களால் ஆன முயற்சிகளை மேற்கொள்வோம். புனேவில் நடைபெறும் கடைசி ஆட்டத்தில் என்ன நடைபெறுகிறது என்பதை அதன் பின்னர் பார்ப்போம். அணியின் பந்து வீச்சு ஓரளவுக்கு நன்றாகவே உள்ளது, நிறைய சர்வதேச அனுபவ வீரர்கள் எங்களிடம் உள்ளனர்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article23899502.ece

Link to comment
Share on other sites

ரஹானேவின் தவறுகள்... குல்தீப் மேஜிக்... கொல்கத்தா வென்ற கதை! #KKRvRR

 

6 4 4 4 4 6 4 4 6 4 - இது பிரஷித் கிருஷ்ணா வீசிய இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் இருந்து ஷிவம் மவி வீசிய மூன்றாவது ஓவரின் கடைசி பந்து வரை திரிபாதி, பட்லர் இருவரும் இணைந்து அடித்த ரன்கள். இப்படி அடித்தும் ராஜஸ்தான் ஏன் தோற்றது? ரஹானே ஏன் முதல் ஓவரை கௌதமுக்கு கொடுத்தார்? ரஹானே ஏன் பட்லருக்கு ஸ்ட்ரைக் கொடுக்கவில்லை? ரஹானே ஏன் கூக்ளியில் ரிவர்ஸ் ஸ்வீப் முயற்சித்தார்? ராஜஸ்தான் தோல்விக்கு அணியின் கேப்டன்தான் காரணமா? கன்சிஸ்டன்ட் பட்லரை குல்தீப் சொல்லி வைத்து தூக்கியது எப்படி?! #KKRvRR மேட்ச் ரிப்போர்ட்... 

#KKRvRR

 

சைனாமேன் குல்தீப் ராக்ஸ்... கொல்கத்தா ராஜஸ்தானை தோற்கடித்த மொமன்ட்ஸ்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் இரு அணிகளும் 12 புள்ளிகளுடன் இருந்ததால், எப்படியும் இந்தப் போட்டியில் வென்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தன. கொல்கத்தா அணியில் பியூஸ் சாவ்லாவுக்குப் பதிலாக ஷிவம் மவி வாய்ப்புப் பெற்றார். ராஜஸ்தான் அணியில் ராகுல் திரிபாதி, சோதி, அனுரீத் சிங் பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர். ஈடன் கார்டனில் டாஸ் வென்ற கொல்கத்தா, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

ஷிவம் மவி வீசிய முதல் பந்திலேயே திரிபாதியை பெவிலியனுக்கு அனுப்பியிருக்கலாம். ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் இருந்த நித்திஷ் ராணா, எளிதான கேட்ச்சை தவறவிட்டார். ஆனாலும், மவியின் பெளன்ஸருடன் கூடிய இன் ஸ்விங் பந்துகளை பேட்டில் வாங்கவே தடுமாறினர் திரிபாதி. This is wounderful pace to watch என்று சொல்லி முடிப்பதற்குள், அடுத்த ஓவரில் பிரஷித் கிருஷ்ணா தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு (19) ரன்களை  விட்டுக்கொடுத்தார். தடுமாறிக்கொண்டிருந்த திரிபாதி நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தார்.

#KKRvRR

ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு லைன் அண்ட் லென்த் எவ்வளவு முக்கியம் என்பதற்கு எடுத்துக்காட்டாக தன் முதல் ஓவரை வீசிய மவி, ஒரு வேகப்பந்துவீச்சாளர் எப்படி பந்துவீசக் கூடாது என்பதற்கு உதாரணமாக தன் இரண்டாவது ஓவரை வீசினார். முதல் இரு பந்துகளில் பவுண்டரிகள் செல்வதைப் பார்த்ததுமே, காலில் சுடு தண்ணீரை ஊற்றியதுபோல விக்கெட் கீப்பிங்கில் இருந்து ஓடி வந்து மவியிடம் ஏதோ பேசினார் தினேஷ் கார்த்திக். `நீங்க என்ன வேணாலும் பிளான் பண்ணுங்க. என்னைத் தடுக்க முடியாது’ என தெளிவாக இருந்த ஜாஸ் பட்லர், ஸ்வீப், கட், ஸ்கூப், டிரைவ், லாஃப்ட் என சகலவிதங்களிலும் 4,6 என வெரைட்டியில் மிரட்டி, டீரீம் லெவன், ஃபேன்டஸி லீக் ரசிகர்களின் நெஞ்சில் பால் வார்த்தார். அந்த ஓவரில் 28 ரன்கள். Most expensive over of IPL 2018.

`இது சரிப்பட்டு வராது’ என சுனில் நரைன் கையில் பந்தைக் கொடுத்தார். அவருடன் அடுத்த எண்டில் இருந்து பந்துவீச ரஸெலை டிக் செய்தார் டிகே. நரைன்- ரஸெல் ஜோடி பட்லர் – திரிபாதி ஜோடியின் வேகத்துக்கு ஸ்பீட்பிரேக் போட்டது. மீண்டும் ஒருமுறை ஷார்ட் பால் டெக்னிக் வொர்க் அவுட்டானது. ஷார்ட் பாலை புல் ஷாட் அடிக்கிறேன் என அவசரப்பட, பந்து திரிபாதியின் கிளவுஸில் பட்டு தினேஷ் கார்த்திக்கின் கிளவுஸில் சிக்கியது. திரிபாதி 27 ரன்களில் அவுட். பவர்பிளே முடிவில் ஸ்கோர் 68/1.

#KKRvRR

சைனாமேன் குல்தீப் ராக்ஸ்... கொல்கத்தா ராஜஸ்தானை தோற்கடித்த மொமன்ட்ஸ்!

டி-20-யை ஒன்டே போல ஆடும் ரஹானே மிடிலில் இருக்கும் வரைக்கும்தான் ரன்ரேட் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது ஏனோ, கொல்கத்தா பெளலர்களுக்குப் புரியவில்லை. ரிவர்ஸ் ஸ்வீப்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்பது ரஹானேவுக்கும் புரியவில்லை. அதுவும் லெக் ஸ்டம்ப் லைனில் விழுந்த கூக்ளியை பாயின்ட் திசை நோக்கி ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய நினைத்ததெல்லாம் கொடூரம். இந்த பாதகச் செயலுக்கு விலையாக, ஸ்டம்ப்களைப் பறிகொடுத்தார் ரஹானே (11 ரன்கள்). குல்தீப் சுழலில் ரஹானே அவுட்டானதும், ராஜஸ்தான் ரசிகர்களே சந்தோஷப்பட்டனர். கேப்டன் செய்த அதே தவறைச் செய்தார் பட்லர். அவரும் ரிவர்ஸ் ஸ்வீப் முயற்சித்தார். பந்து அவர் எதிர்பார்த்ததைவிட கொஞ்சம் பெளன்ஸாக, அது ஷார்ட் தேர்ட்மேன் ஏரியாவில் இருந்த சியர்லஸ் கைகளில் சிக்கியது. 39 ரன்களில் ஆட்டமிழந்து, தொடர்ந்து ஆறு அரைசதம் அடித்தவர் என்ற சாதனை படைக்கும் வாய்ப்பை மிஸ் செய்தார் பட்லர். பெரிதும் நம்பிய சஞ்சு சாம்சனை எல்பிடபுள்யு முறையில் வெளியேற்றினார் சுனில் நரைன். அதுவும் விடாப்பிடியாக ரிவ்யூ கேட்டு…!

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே குல்தீப்பின் வேரியேஷன்களில் திணறும்போது, ஆல் ரவுண்டர்(!) ஸ்டூவர்ட் பின்னிதான் என்ன செய்வார் பாவம். எப்படி அடிக்கலாம் என்பதற்குப் பதிலாக, எப்படி அவுட்டாகலாம் என யோசித்துக் கொண்டிருந்தவருக்கு தோதான இடத்தில் ஒரு பந்தை வீசினார் குல்தீப். Wrong turn. இறங்கி அடிக்கிறேன் என பின்னி டவுன் தி லைன் வர, தோனி வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார் டிகே. தன் கடைசி ஓவரில் around the wicket-ல் இருந்து வீசி பென் ஸ்டோக்ஸை caught and bold செய்தார் அந்த சைனாமேன். Kuldeep Strikes again. 4-0-20-4. இது ஐ.பி.எல் போட்டிகளில் அவரது கரியர் பெஸ்ட்.  மற்ற விக்கெட்டுகளைவிட பட்லருக்கு எதிராக அவர் தனியாக பிளான் வைத்திருந்ததுதான் பாராட்டுக்குரிய விஷயம். ``பலனளிக்கிறதோ இல்லையோ டி-20 போட்டிகளில் ஒவ்வொரு பந்துக்கும் ஒரு திட்டம் வைத்திருக்க வேண்டும். வேரியேஷன்களை மாற்ற வேண்டும். எப்படியும் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் அடிப்பார் எனத் தெரியும். அதற்கேற்ப வேரியேஷன்களை மாற்றினேன். அவ்வளவுதான்!’’ என்றார் ஆட்ட நாயகன் விருது வென்றபின் குல்தீப். 

Kuldeep strikes for KKR

டெத் ஓவர்களில் ரன்ரேட் திகிடுமுகிடாக எகிறுவதே டி-20-யின் பியூட்டி. ஆனால், டெயிலெண்டர்கள் களத்தில் இருக்கும்போது, ரன்ரேட் எப்படி எகிறும்? ஜெயதேவ் உனத்கட் மட்டும் ரூ.11.5 கோடிக்கு நியாயம் சேர்க்கும் வகையில் 18 பந்துகளில் 26 ரன்கள் அடித்தார். 800 மீட்டர் ஓட்டத்தில் முதல் ஒரு ரவுண்டை மட்டும் அசுர வேகத்தில் சுற்றிவிட்டு, அடுத்தடுத்த ரவுண்டில் அன்னநடை போட்டால் என்ன ரிசல்ட் கிடைக்குமோ, அதே ரிசல்ட்தான் ராஜஸ்தான் இன்னிங்ஸிலும் கிடைத்தது. விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்த அணி, அடுத்த 15 ஓவர்களில் 83 ரன்களை எடுப்பதற்குள் எல்லா விக்கெட்களையும் இழந்துவிட்டது. கொல்கத்தாவுக்கு ராஜஸ்தான் நிர்ணயித்த இலக்கு 143.

காட்டடி பேட்ஸ்மேன்கள் நிறைந்த அணிக்கு 120 பந்துகளில் 143 ரன்கள் இலக்கு என்பது ஒரு விஷயமே அல்ல. முடிந்தவரை நல்ல ரன்ரேட்டில் ஜெயிக்க வேண்டும் என்பதே கொல்கத்தாவின் அஜெண்டா. `அடிச்சவரை லாபம். எதைப் பத்தியும் கவலைப்படாம சுத்து’ என சுனில் நரைனிடம் சொல்லி அனுப்பி இருப்பார்கள் போல. கொல்கத்தா தரப்பில் குல்தீப் சுழல் ஜாலம் நிகழ்த்தியதால், முதல் ஓவரை வீச வந்தார் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கெளதம். பல போட்டிகளில் அவர் முதல் ஓவரை வீசியிருக்கிறார்தான். ஆனால், அவரிடம் பெரிதாக டெக்னிக் இல்லை. தவிர, ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீசப்படும் ஆஃப் ஸ்பின்னை சுனில் நரைன் அலேக்காக தூக்கி அடிப்பார் என்பதை ஏனோ ரஹானே கணிக்கத் தவறிவிட்டார். கௌதமுக்குப் பதில் ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸை விட்டு ஆட்டம் காட்டியிருக்கலாம். இரண்டாவது ஓவரிலேயே சுனில் அவுட்டாகிவிட்டார்தான் என்றாலும், என்ன செய்ய வேண்டுமோ அதை முதல் ஓவரிலேயே செய்துமுடித்துவிட்டார்.

 

#KKRvRR
 

முதல் பந்திலேயே மிரட்டலாக மிட் விக்கெட்டில் சிக்ஸர். ராஜஸ்தான் ஃபீல்டர்கள் சுதாரிப்பதற்குள் அடுத்த பந்தில் ஸ்கொயர் லெக் பக்கம் பவுண்டரி. என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்குள், மூன்றாவது பந்தில் லாங் ஆன் பக்கம் சிக்ஸர். ரஹானே பதறுகிறார். டீப் மிட் விக்கெட், லாங் ஆன் திசைகளில் கேட்ச் பிடிக்க ஏதுவாக இரண்டு ஃபீல்டர்களை நிறுத்துகிறார். இதற்கு சம்மந்தமே இல்லாத கவர் திசையில் அடுத்த பந்தை சுனில் நரைன் பவுண்டரி அடித்தபோது, ஈடன் கார்டனில் இருந்தவர்கள் இருப்பு கொள்ளவில்லை. 4 பந்துகளில் 20 ரன். மவி ஓவரில் பட்லர் வெளுத்ததைப் போல, கெளதம் ஓவரில் வெச்சு செஞ்சார் சுனில் நரைன். அதனால்தான், பென் ஸ்டோக்ஸ் வீசிய ஷார்ட் பாலில் சுனில் நரைன் கொடுத்த கேட்ச்சைப் பிடித்ததும் வெறித்தனமாகக் கொண்டாடித் தீர்த்தார் கெளதம். இந்த ஆட்டிட்யூட் நல்லதுக்கில்ல ப்ரோ!

நல்ல லென்த்தில் விழும் பந்துகளை விளாசும் பேட்ஸ்மேன்கள், ஷார்ட் பால்களில் விக்கெட்டை இழப்பதுதானே இந்த சீசனின் ஹைலைட். சுனில் நரைனைப் போலவே, உத்தப்பாவும் ஒரு ஷார்ட் பாலில் ஏமாந்தார். இரண்டு ஸ்லிப், பாயின்ட், கல்லி என ஆஃப் சைடில் அத்தனை ஃபீல்டர்களையும் நிறுத்தியபோதும் கட் ஷாட் மூலம் பவுண்டரி அடித்த நித்திஷ் ராணா, சோதி வீசிய பந்தை சரியாக கணிக்கத் தவறி, எல்பிடபுள்யு ஆனார். தினேஷ் கார்த்திக் – கிறிஸ் லின் ஜோடி ரொம்பவே நிதானமாக, பொறுப்புடன் ஆடியது. லூஸ் பால்களை பவுண்டரிக்கு விரட்டியது. வெற்றிக்கான ரன் ரேட்டும் குறைந்தது.

#KKRvRR

இனி அடித்து ஆடலாம் என நினைத்தபோது கிறிஸ் லின் (45 ரன்) அவுட். அவருக்குப் பின்னாடியே தினேஷ் கார்த்திக்கும் dug out சென்றிருப்பார். எல்பிடபிள்யு-க்கு ராஜஸ்தான் ரிவ்யூ கோரியது. ஆனாலும், `அம்பயர்ஸ் கால்’ புண்ணியத்தில் தப்பித்தார். ரஸ்ஸெல் இறங்கி பட்பட்டென பவுண்டரிகளை தட்டிவிட்டார். ஜாப்ரா ஆர்ச்சர் பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்தார் டிகே. இரண்டு ஓவர்கள் மீதமிருந்த நிலையில், கொல்கத்தா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மற்றுமொரு ஒன்சைட் மேட்ச். ஆட்ட நாயகனாக குல்தீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொல்கத்தா 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் தோற்றாலும், பிளே ஆஃப் செல்ல ராஜஸ்தானுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது.

https://www.vikatan.com/news/sports/125146-kuldeep-yadav-just-too-good-for-rajasthan-royals.html

Link to comment
Share on other sites

தோனியின் தன்னம்பிக்கை எங்களுக்கு நல்லது ஆனால் ‘டெத்’ பவுலருக்கு அபாயம்: ஸ்டீபன் பிளெமிங்

 

 
dhoni2

தோனி. | படம். ஏ.எப்.பி.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி உணர்ச்சிப்பூர்வமாக தன் தீவிரத்தைக் காட்டி ஆடிவருகிறார். களவியூகமாகட்டும் பந்து வீச்சு மாற்றமாகட்டும் தோனி முன் யோசனையுடன் தன் அனுபவத்தைக் காட்டி வருகிறார், உத்திகளை விட பேட்டிங், கேப்டன்சி இரண்டிலுமே தோனி காட்டி வரும் தீவிரம், முனைப்பு குறித்து தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் புகழ்ந்து கூறியுள்ளார்.

“மனரீதியாக தீவிரமாக உள்ளார், தொடருக்கு நீண்ட நாட்கள் முன்பாகவே அவர் பயிற்சியில் ஈடுபடத்தொடங்கி விட்டார். நாங்களெல்லாம் வருவதற்கு முன்பாகவே அவர் வந்து விடுவார், ஏகப்பட்ட பந்துகளை அடித்து பயிற்சி மேற்கொள்வார். பெரிய அளவில் பந்துகளை எதிர்கொண்டு ஆடிப் பயிற்சி மேற்கொள்வார். அவர் தன் முனைப்பில் கவனம் செலுத்துபவர்.

 
 
 

சிங்கிள்கள் எடுக்கும் போது அவர் முனைப்புக் குறைவாகவே இருக்கும், ஆனால் பெரிய ஷாட்களை ஆடத் தொடங்கிய பிறகு அவர் 100% கடப்பாட்டுடன் ஆடுவார்.

இப்போதெல்லாம் தொடக்கத்திலேயே பாசிட்டிவ் முனைப்பு காட்டுகிறார். அவரது கால்நகர்த்தல்கள் பாசிட்டிவாக உள்ளன. அவரது பினிஷிங் திறன் மீண்டும் அவரிடமே வந்து சேர்ந்துள்ளது. இது பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது, இந்த இடத்துக்கு வருவதற்கு அவர் கடினமக உழைத்துள்ளார். அவரை இதற்காக நான் பாராட்டியே தீருவேன்.

இப்போது சிந்தனைத் தெளிவில் அவர் இளமையாக இருந்த போது ஆடும் ஆட்டமெல்லாம் கூட அவருக்கு சாத்தியமாகிறது. ஒரு கட்டத்தில் அவருக்கு எதிரான பந்து வீச்சு உத்தியை அவர் எதிர்கொள்ள நேரிட்டது. ஆனால் இப்போது அவர் தன் சாதுரியத்தின் மூலம் அவற்றை முறியடிக்கிறார். அவரது உத்தி வலுவடைந்துள்ளது.

தான் என்ன செய்கிறோம் என்பதில் நம்ப முடியாத அளவுக்கு அவரிடம் தன்னம்பிக்கை பீறிடுகிறது. இது எப்போதும் எங்களுக்கு நல்லது ஆனால் டெத்ஓவர் பவுலருக்கு அபாயமானதே” என்றார் ஸ்டீபன் பிளெமிங்.

சிஎஸ்கே அடுத்ததாக மே 18ம் தேதி டெல்லி டேர் டெவில்ஸ் அணியுடன் விளையாடுகிறது

http://tamil.thehindu.com/sports/article23904418.ece?homepage=true

Link to comment
Share on other sites

ராயுடுவை மிக உயர்ந்த தரத்தில் வைத்திருக்கிறேன்: தோனியின் இதயபூர்வ புகழாரம்

 

 
dhoni

தோனி, ராயுடு.   -  படம். | பிடிஐ.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘வழிகாட்டி’யாக அம்பாத்தி ராயுடு திகழ்கிறார். 500 ரன்களை கடந்துள்ளார். சேசிங், இலக்கை நிர்ணயித்தல் என்று இருதரப்பிலும் சிறப்பாக விளங்குகிறார்.

இந்நிலையில் தோனி, ராயுடு பற்றி இதயபூர்வமாகப் புகழ்ந்துள்ளது பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் இணையதளச் செய்தி வருமாறு:

 
 

இந்த ஐபிஎல் 2018 தொடருக்கு முன்பாகவே கூட நான் ராயுடுவுக்காக இடம் ஒதுக்க வேண்டியிருந்தது. ஏனெனில் நான் அவரைத் தரநிலையில் உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறேன்.

பெரும்பாலான் அணிகள் ஸ்பின்னர்களைக் கொண்டு தொடக்க வீரர்களை கட்டுப்படுத்த நினைக்கும், ஆனால் ராயுடு ஸ்பின், வேகப்பந்து வீச்சு இரண்டிலும் சிறந்து விளங்குகிறார்.

அவரைப்பார்த்தால் பெரிய ஹிட்டர் போல் தெரியவில்லை. ஆனால் பெரிய ஷாட்களை ஆடும்போது ஒவ்வொரு முறையும் எல்லைக்கோட்டைத் தாண்டி பந்துகள் பறக்கின்றன.

என்னுடைய திட்டம் ராயுடுவை தொடக்க வீரராக்கி, கேதார் ஜாதவ் உடற்தகுதி பெற்றால் அவரை 4, 5 நிலையில் இறக்கத் திட்டம்.

எவ்வளவு ஓவர்கள் மீதமுள்ளன என்பதைப் பொறுத்து 4ம் நிலையில் இறக்கும் வீரரை முடிவு செய்கிறோம்.

இவ்வாறு அந்த செய்தியில் தோனியை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23903809.ece

Link to comment
Share on other sites

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 187 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்

வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கு 187 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். #IPL2018 #MIvKXIP

 
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 187 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்
 
ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முக்கியமான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லெவிஸ் நிதானமாக விளையாட சூர்யகுமார் யாதவ் அதிரடியில் இறங்கினார். மும்பை இந்தியன்ஸ் 3.1 ஓவரில் 37 ரன்கள் எடுத்திருக்கும்போது லெவிஸ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி 12 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார். இஷான் கிஷான் ஆட்டமிழந்த அடுத்த பந்தில் சூர்யகுமார் யாதவ் 15 பந்தில் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் அன்ட்ரிவ் டை வீழ்த்தினார்.

அதன்பின் வந்த ரோகித் சர்மா 6 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 8.2 ஓவரில் 71 ரன்கள் எடுப்பதற்குள் முதல் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு குருணால் பாண்டியா உடன் கீரன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது.

12-வது ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். இந்த ஓவரில் குருணால் பாண்டியா இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். 14-வது ஓவரை ராஜ்பூட் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார் பொல்லார்டு. இந்த இரண்டு ஓவரில் மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 37 ரன்கள் கிடைத்தது.

15-வது ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் குருணால் பாண்டியா ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். அடுத்து ஹர்திக் பாண்டியா களம் இறங்கினார். விக்கெட் இழந்ததை பற்றி கவலைப்படாமல் 4-வது மற்றும் ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் பொல்லார்டு. அதோடு விடாமல் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கி 22 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் 17 ரன்கள் சேர்க்க மும்பை இந்தியன்ஸ் 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது.

16-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் மும்பை இந்தியன்ஸ்க்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 3-வது பந்தை லாங்-ஆஃப் திசையை நோக்கி தூக்கினார். ஆனால் பந்து சிக்சருக்கு செல்லாமல் பிஞ்ச் கையில் தஞ்சமடைந்தது. பொல்லார்டு 23 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் சேர்த்தார்.

201805162217459664_1_tye-s212._L_styvpf.jpg

7-வது விக்கெட்டுக்கு ஹர்திப் பாண்டியா உடன் பென் கட்டிங் ஜோடி சேர்ந்தார். 16-வது மற்றும் 17-வது ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தலா மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன் வேகத்தில் தடை ஏற்பட்டது. அஸ்வின் வீசிய 18-வது ஓவரின் 4-வது பந்தில் பென் கட்டிங் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வேகப்பந்து வீச்சாளர் மெக்கிளேனகன் களம் இறங்கினார். கடைசி பந்தை மெக்கிளேனகன் சிக்ஸ் தூக்க அஸ்வின் இந்த ஓவரில் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

19-வது ஓவரை அன்ட்ரிவ் டை வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். டை 4 ஓவரில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். மும்பை இந்தியன்ஸ் 19 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி ஓவரை மோகித் சர்மா வீசினார். முதல் பந்தில் மார்கண்டே பவுண்டரி அடித்தார். அதன்பின் பவுண்டரி ஏதும் செல்லாததால் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 187 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/16221746/1163621/IPL-2018-Mumbai-indians-187-runs-targets-to-Kings.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.