Jump to content

Recommended Posts

கடைசிநேர ஹீரோ கவுதம்: ராஜஸ்தான் நம்பமுடியாத வெற்றி - கோட்டைவிட்ட மும்பை

 

 
8c345bac-c84c-46ad-be39-13b5ab419b4cjpg

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 21-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் விரட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.அரங்கில் அமர்ந்திருந்த அனைவரும் இருக்கையின் நுனியில் அமரவைத்த அற்புதமான ஆட்டமாக அமைந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றிபெறும் என்று கேப்டன் ரஹானே கூட நம்பி இருக்கமாட்டார். ஆட்டத்தின் போக்கை திசைமாற்றி, கவுதம் கடைசி நேர ஹீரோவாக ஜொலித்தார். பந்துவீச்சில் பட்டையை கிளப்பிய ஜோப்ரா ஆர்ச்சர் மும்பை இந்தியன்ஸ் சரிவுக்கு காரணமாக அமைந்தார். ஆட்டநாயகன் விருதையும் ஆர்ச்சர் பெற்றார்.

மும்பை வீண்

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் ஆட்டமா என வியந்து கேட்கும் அளவுக்கு நேற்றைய ஆட்டம் தரமற்ற,பொறுப்பற்றதாக இருந்தது.

ரோகித் சர்மாவின் ேகப்டன்ஷிப் இந்த அளவுக்கு மோசமாகவும், களவியூகம் அமைக்கத் தெரியாமல் மேம்போக்காக இருக்கும் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள். வெண்ணை திரண்டு வரும்போது பானையை உடைத்த பழமொழிக்கு ஏற்ப வெற்றி திரண்டுவரும் போது, மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் கடைசிநேர பந்துவீச்சும், பீல்டிங்கும் பானையை உடைத்தது போல இருந்தது.

பேட்டிங்கை பொறுத்தவரை சொல்லவே தேவையில்லை சூரியகுமார்யாதவ், இஷான் கிஷான் இருவரும் இல்லாவிட்டால் மும்பை இந்தியன்ஸ் நிலைமை அதோகதிதான்….கடைசி 37 ரன்களைச் சேர்க்க 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான பேட்டிங்கை மும்பை இந்தியன் வெளிப்படுத்தியதை என்னவென்று சொல்வது.

3-வது வெற்றி

இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வி என 6 புள்ளிகளுடன் பட்டியலில் 5-இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் 4 தோல்வி, ஒருவெற்றியுடன் 2 புள்ளிகள் மட்டும் பெற்று 7-ம் இடத்தில் உள்ளது.

மாற்றம்

ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடந்த இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக ஃபார்மில் இல்லாத ஸ்டூவர்ட் பின்னி கழற்றிவிடப்பட்டது அந்த அணிக்கு ப்ளஸ்பாயின்ட். லாஹின் நீக்கப்பட்டு ஜோப்ரா ஆர்ச்சர், தவால் குல்கர்னி சேர்க்கப்பட்டு இருந்தனர். மும்பை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

டாஸ்வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. 168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில், 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பெற்றது.

கிஷான் சிறப்பு

சூரியகுமார் யாதவ், லீவிஸ் ஆட்டத்தை தொடங்கினார்கள். தவால் குல்கர்னி முதல் ஓவரிலேயே மும்பைக்கு அதிர்ச்சி அளித்தார். 4-வது பந்தில் லீவிஸை டக்அவுட் முறையில் பெவிலியனுக்கு விரட்டினார். 2-வதாக இஷான் கிஷான் களமிறங்கினார். கடந்த சில போட்டிகளாக கடைசி வரிசையில் வாய்ப்பு பெற்ற இஷான் கிஷான் இந்த முறை 3-வது வீரராக களமிறங்கினார். அந்த வாய்ப்பை கிஷான் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்.

இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். குல்கர்னி வீசிய 5-வது ஓவரில் கிஷான் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடிக்க, யாதவும் ஒரு சிக்ஸர் அடித்தார். மும்பை இந்தியன்ஸ் அணி பவர்ப்ளேயில் 43 ரன்கள்சேர்த்தது. அதன்பின் இருவரும் அவ்வப்போது பவுண்டரிகள், சிக்ஸர் அடித்து ரன்களைச் சேர்த்தனர்.

அரைசதம்

கோபால் வீசிய 10-வது ஓவரில் கிஷான் 2 சிக்ஸர்கள் அடிக்க, யாதவ் ஒரு பவுண்டரி அடித்து 30 பந்துகளில் அரைசத்தை நிறைவு செய்தார். ஸ்டோக்ஸ் வீசிய 11-வது ஓவரில் யாதவுக்கு கேட்சை கோட்டைவிட்டார் ஸ்டோக்ஸ்.

நிதானமாக பேட் செய்த கிஷான் 35 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இருவரின் பாட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்தது. இதுதான் இந்த சீசனின் அதிகபட்சமாகும்.

அருமை கூட்டணி

சிறப்பாக பேட் செய்து வந்த கிஷானை 58 ரன்களில்(42பந்துகள்) வெளியேற்றினார் குல்கர்னி. கிஷான் கணக்கில் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள் அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 129 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

16-வது ஓவரை உனட்கத் வீசினார். யாதவ் 72 ரன்களில்(47பந்துகள்) ஆட்டமிழந்தார்.இவர் கணக்கில் 3சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து களமிறங்கிய சர்மா அதே ஓவரின் 4-வது பந்தில் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் அணி வகுப்பு நடந்தது. பெவிலியனில் இருந்து களத்துக்கு வருவதும், மீண்டும் பெவிலியன் திரும்புவதும் என வருவதும் போவதும் என இருந்தனர். ஒருவர் கூட நிலைத்து பேட் செய்யவில்லை.

48c3c449-c1ab-4e72-b268-37cf777cd164jpg
 

ஆர்ச்சர் அசத்தல்

கேப்டன் ரோகித் சர்மா வந்தவேகத்தில் டக்அவுட்டில் வெளியேறினார். குருனல் பாண்டியா, பொலார்ட் ஜோடி சிறிதுநேரமே தாக்குப்பிடித்தது. ஆர்ச்சர் வீசிய 19-வது ஓவரில் பாண்டியா 7 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கியா ஹர்திக் பாண்டியாவும் ஒரு பவுண்டரி அடித்து அதே ஓவரின் 4-வது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்துவந்த மெக்லனகனும் வந்தவுடன் போல்டாகி டக்அவுட்டில் சென்றார். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை ஆர்ச்சர் கைப்பற்றி மும்பைக்கு அதிர்ச்சி அளித்தார். கடைசி ஓவரில் பொலார்ட் 4 ரன்கள் சேர்த்தார்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. 130 ரன்களுக்கு 2-வது விக்கெட்டை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 200 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த 37ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணித்தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், குல்கர்னி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

வலுவற்ற தொடக்கம்

168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. இந்த அணியிலும் தொடக்கம்தான் பிரச்சினையாக இருந்தது. ரஹானே, திரிபாதி களமிறங்கினார்கள். இருவரும் 6-வது ஓவர்களுக்குள் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். குர்னல் பாண்டியா வீசிய 3-வது ஓவரில் 9 ரன்கள் சேர்த்தநிலையில் திரிபாதி ஆட்டமிழந்தார். 6-வது ஓவரில் மெக்லனகன் பந்துவீச்சில் ரஹானே 14 ரன்களில் ஆட்டமிழந்தார். 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணி இழந்தது. பவர்ப்ளேயில் அந்த அணி 43 ரன்கள் சேர்த்தது.

பொறுப்பான ஆட்டம்

3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாம்ஸன், ஸ்டோக்ஸ் அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். பவுண்டரி, சிக்ஸர் அரிதாக அடித்து ரன்களை சிங்கிலாகச் சேர்ப்பதில் குறியாக இருந்தனர். மெக்லனஹன் வீசிய 11-வது ஓவரில் ஸ்டோக்ஸ் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்தார்.

ஹர்திக் வீசிய 15-வது ஓவரில் ஸ்டோக்ஸ் 40 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் போல்டாகி வெளியேறினார். இவர் கணக்கில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 72ரன்கள் சேர்த்தனர்.

அதன்பின் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள். 36 பந்துகளில் சாம்ஸன் அரைசத்தை நிறைவு செய்தார். பும்ரா வீசிய 16-வது ஓவரில் சாம்ஸன் 52 ரன்கள்(39பந்துகள்,4பவுண்டரி) சேர்த்தநிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பட்லர் போல்டாகி வெளியேறினார்.

கடைசிநேர பரபரப்பு

கடைசி 3 ஓவர்களுக்கு ராஜஸ்தான் வெற்றிக்கு 43ரன்கள் தேவைப்பட்டது. இப்போதுகூட யாரும் ராஜஸ்தான் வெற்றி பெறும் என நம்பவில்லை.

முஸ்தபிசுர் வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் கிளாசன் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். ஆர்ச்சரும், கவுதமும் களத்தில் இருந்தனர். அந்த ஓவரின் 5-வது,6-வது பந்தில் கவுதம் ஒருசிக்ஸர், ஒருபவுண்டரி அடித்து பதற்றத்தை அதிகப்படுத்தினார்.

திசைமாற்றிய ஓவர்

12 பந்துகளில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்தில் ஆர்ச்சர் பவுண்டரி அடித்து, 2-வது பந்தில் 2 ரன்கள் சேர்்த்தார் 3-வது பந்து நோபாலானது. ப்ரீஹிட்டில் ஒரு ரன் எடுத்தார் ஆர்ச்சர். 4-வது பந்தில் 2 ரன்கள் சேர்த்த கவுதம், அடுத்த இருபந்துகளிலும் 2 பவுண்டரிகள் அடித்து பதற்றத்தை உச்சிக்கு கொண்டு சென்றார், போட்டி பரபரப்பை எட்டியது.

எதிர்பாராதவெற்றி

கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவை. ஹர்திக் பாண்டியா வீசிய ஓவரின் முதல் பந்தில் ஆர்ச்சர் 8 ரன்கள் சேர்த்த நிலையில் காட் அன்ட்போல்ட் முறையில் வெளியேறினார். 2-வது பந்தை கவுதம் சந்தித்தார். கவுதம் பவுண்டரி அடிக்க வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. 3வது பந்தில் ரன் ஏதும் அடிக்காமல், 4-வது பந்தை பேக்புட் செய்து, லெக்திசையில் சிக்ஸர் அடிக்க ராஜஸ்தான் அணி பரபரப்பு வெற்றியைப் பெற்றது.

19.4 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்தது. கவுதம் 11 பந்துகளில் 33 ரன்களுடன்(2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்)உனத்கட் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

http://tamil.thehindu.com/sports/article23642547.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • Replies 592
  • Created
  • Last Reply

வில்லியம்சனின் கேப்டன் இன்னிங்ஸை ஓவர்டேக் செய்த அம்பதி ராயுடு! #CSKvsSRH

 
 

மும்பைக்கு எதிராக பிராவோ, கொல்கத்தாவுக்கு எதிராக சாம் பில்லிங்ஸ், பஞ்சாபுக்கு எதிராக தோனி, ராஜஸ்தானுக்கு எதிராக வாட்சன் வரிசையில் ஹைதரபாத்துக்கு எதிராக வெளுத்து வாங்கினார் அம்பதி ராயுடு. உள்ளூர் வீரர் ராயுடுவின் அதிரடி, தீபக் சாஹரின் அட்டகாச ஸ்பெல் முன், கேன் வில்லியம்சனின் கேப்டன் இன்னிங்ஸ் எடுபடவில்லை. சி.எஸ்.கே மீண்டும் ஒருமுறை கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. #CSKvsSRH


இம்ரான் தாஹிர் ஃபிட்னெஸ் காரணமாக விலக, விரல் காயத்தில் இருந்து குணமடைந்த டு பிளெஸ்ஸி சி.எஸ்.கே பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார். சன்ரைசர்ஸ் தரப்பில், காயமடைந்த ஷிகர் தவனுக்குப் பதிலாக ரிக்கி புயி வாய்ப்புப் பெற்றார். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அப்போதே சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஏனெனில், அவர்களது சேஸிங் ரிசல்ட் அப்படி.  

#CSKvsSRH


சென்னைக்கு  வாட்சன் – டு பிளெஸ்ஸி ஓப்பனிங் இறங்கினர். ஸ்டேன்லேக் பந்தை டிரைவ் செய்ய முயன்றபோது அது எட்ஜாகி ஃபர்ஸ்ட் ஸ்லிப் பக்கம் செல்ல, தீபக் ஹுடா அந்த சான்ஸை தவறவிட்டார். டு பிளெஸ்ஸியும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆடும் வாய்ப்பை நழுவவிட்டார்.

இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்து அடித்து வெளுக்கும் வாட்சன், 13 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பதிலேயே, சன்ரைசர்ஸ் பெளலிங்கின் தரத்தை யூகித்துக் கொள்ளலாம். இதற்கு மேல் பொறுமை காக்க முடியாது என, அடுத்த பந்திலேயே அதிரடியை ஆரம்பித்தார். இடுப்பு உயரத்தில் வந்த ஷார்ட் பிட்ச்சை புல் ஷாட் அடித்தால் அது மிட் விக்கெட் பக்கம் சிக்ஸ் போகும். வாட்சனும் அதைத்தான் செய்தார். சி.எஸ்.கே-வுக்கு முதல் பவுண்டரி. அடிபடுகிறது என உணர்ந்த அடுத்த கணமே, லைன் அண்ட் லென்த்தை மாற்றுவது தேர்ந்த பெளலருக்கு அழகு. புவி தேர்ந்த பெளலர். சிக்ஸ் கொடுத்த அடுத்த பந்திலேயே வாட்சனுக்கு ஒரு Knuckle ball பார்சல் செய்தார். அதைத் தவறாக கணித்த வாட்சன், அவசரப்பட்டு ஃபிளிக் செய்ய அது ஷார்ட் மிட் விக்கெட்டில் இருந்த தீபக் ஹுடாவின் கைகளில் சிக்கியது. இந்தமுறை தீபக் மிஸ் செய்யவில்லை. நல்ல கேட்ச். வாட்சன் 9 ரன்களில் அவுட்.


டு பிளெஸ்ஸியுடன் ஜோடி சேர்ந்த சி.எஸ்.கே-யின் செல்லாக்குட்டி ரெய்னா, வழக்கம் போல பேக்வார்ட் பாயின்ட் பக்கம் தட்டிவிட்டு பவுண்டரி கணக்கைத் தொடங்கினார். பவர்பிளேவின் கடைசி ஓவரில் டு பிளெஸ்ஸி ஆக்டிவ் மோடிக்கு மாறினார். சித்தார்த் கவுல் பந்தில் எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி அடித்தார். ஆனாலும், ரன்ரேட் அப்படியேதான் இருந்தது. `டேய் இது பவர்பிளேடா, அடிங்கடா…’ என ரசிகர்கள் கதறாத குறைதான். பவர்பிளே முடிவில் சென்னையின் ஸ்கோர் 27/1. இந்த சீசனில் பவர்பிளேவில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் இதுவே.

#CSKvsSRH


வந்ததும் வராததுமாக ரஷித்கான் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார். ஸ்வீப் அடிக்க முயன்ற டு ப்ளெஸ்ஸி, பந்தை கணிக்கத் தவறி தடுமாற, விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா சிரமமின்றி ஸ்டம்பிங் செய்தார். டிவி அம்பயரிடம் கூட ஆலோசிக்காமல் அம்பயர் செளத்ரி விரலை உயர்த்தினார். டு பிளெஸ்ஸி 11 ரன்களில் அவுட். பவர்பிளே ஓவர்களில் அம்பதி ராயுடு ஸ்ட்ரைக் ரேட் 163.50 வைத்திருக்கிறார். ஆனால், அவருக்குப் பதிலாக ஓப்பனிங் இறங்கிய டு பிளெஸ்ஸியின் ஸ்ட்ரைக் ரேட் 84.61. அடுத்த போட்டிகளில் சி.எஸ்.கே உடனடியாக சரிசெய்யவேண்டிய விஷயம் இது.


மிடில் ஓவரில் இறக்கிவிட்டாலும் பொளந்து கட்டினார் அம்பதி ராயுடு. புவி வீசிய ஸ்லோ பாலில் (111.4 km) ஸ்லாக் ஸ்வீப் மூலம் மிட் விக்கெட் பக்கம் சிக்ஸர் அடித்தார் ராயுடு. தன் பங்குக்கு ரெய்னா டவுன் தி லைன் வந்து இன்சைட் அவுட் மூலம் பவுண்டரி அடித்தார். ஆனாலும், இந்த ஐ.பி.எல் சீசனில் 10 ஓவர்களில் குறைந்தபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற பெருமை(!) சி.எஸ்.கே-வுக்கே கிடைத்தது. ஆம், பத்து ஓவர் முடிவில் ஸ்கோர் 54/2.


பெளலிங் வளம் கொண்ட சன்ரைசர்ஸ் 11-வது ஓவரில் ஆறாவது பெளலர் தீபக் ஹூடாவை இறக்கியது. அவரது ஓவரில் ரிவர் ஸ்வீப் மூலம் அம்பதி ராயுடு பவுண்டரி அடித்தார் என்றாலும், ரெய்னாவின் இயல்பான ஆட்டம் வெளிப்பாடாமல் இருந்தது சி.எஸ்.கே ரசிகர்களுக்கு அதிருப்தியே. `போதும் தலைவா ரொம்ப பால் சாப்டாச்சு. Its time to shift gears’ என ரசிகன் புலம்பிக்கொண்டிருந்தபோது, ரஷீத் ஓவரில் இறங்கி வந்து டீப் மிட் விக்கெட்டில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டார்.  

#CSKvsSRH


சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் அதுவரை பெளலர்களை சரியாகப் பயன்படுத்தி வந்தார். ஷார்ட் பால் மூலம் ரெய்னாவின் விக்கெட்டை எடுக்க நினைத்து ஸ்டேன்லேக் கையில் பந்தைக் கொடுக்க, அந்த ஓவரில் அம்பதி ராயுடு 3 பவுண்டரி, ஸ்ட்ரெய்ட்டில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக ஒரு சிக்ஸர் வெளுக்க, மொத்தம் 19 ரன்கள் கிடைத்தது. அதே சூட்டோடு அரைசதம் கடந்தார் ராயுடு. 50 அடித்தபின் ராயுடுவின் ஆட்டம் வேற லெவலில் (ஸ்ட்ரைக் ரேட் 211) இருந்தது. குறிப்பாக, ஷாகிப் அல் ஹசன், ரஷித் ஓவர்களில் ஈவு இரக்கமில்லாமல் வெளுத்துக்  கட்டினார். ஃபுல்டாஸை பெளலரின் தலைக்கு மேல் சிக்ஸர், நல்ல லைனில் விழுந்த பந்துகளை ஸ்லாக் ஸ்வீப் மூலம் 4, 6 என சிதறவிட்டார். கட் ஷாட்டில் சிங்கிள் தட்டவும் தவறவில்லை இந்த லோக்கல் ஹீரோ. ரிவர்ஸ் ஸ்வீப்பும் ராயுடுவுக்கு கைவந்த கலை.


ஹைதராபாத் மைதானத்தில் சி.எஸ்.கே, சி.எஸ்.கே… என டெசிபில் உச்சகட்டத்தில் இருந்தபோது, தேவையில்லாமல் இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்டு, ரன் அவுட்டானார் ராயுடு. எதிர்முனையில் இருந்த ரெய்னாவையும் குறை சொல்ல முடியாது. அவுட்டானதும் ரெய்னா அப்செட் ஆகக் கூடாது என்பதற்காக, அவரைக் கட்டித்தழுவி விடைபெற்றார் அம்பதி ராயுடு. ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் என சோசியல் மீடியாவில் பாராட்டு மழை. சமூக வலைதளங்கள் மட்டுமல்ல, 37 பந்துகளில் 79 ரன்கள் குவித்தவனுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டுமோ அந்த மரியாதையைக் கொடுத்தனர் களத்தில் இருந்த ரசிகர்கள்.

#CSKvsSRH


20 பந்துகள் மட்டுமே உள்ள சூழலில் களமிறங்கிய தோனி, ரஷித் பந்தில் லாங் ஆஃபில் பவுண்டரி, சித்தார்த் கவுல் வீசிய ஃபுல் டாஸில் தேர்ட் மேன் ஏரியாவில் பவுண்டரி, ஸ்டேன்லேக் வீசிய கடைசி ஓவரில் சிக்ஸர் என வெரைட்டி காட்டினார். மறுமுனையில் ரெய்னா, இந்த சீசனில் முதல் அரைசதம் அடித்ததோடு, ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் வரிசையில் கோலியைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார். 20 ஓவர்களில் சென்னை 182 ரன்கள் எடுத்தது. முதல் பத்து ஓவர்களில் 54 ரன்கள் எடுத்த சென்னை, அடுத்த பத்து ஓவர்களில் 128 ரன்கள் குவித்தது. தேங்ஸ் டு அம்பதி ராயுடு.


ஷிகர் தவனும் இல்லை. பவர் ஹிட்டரும் இல்லை. `இவங்களை சுருட்ட இந்த ஸ்கோர் போதும்’ என்பதே சி.எஸ்.கே ரசிகர்களின் கணிப்பு. உண்மைதான். முதல் ஓவரிலேயே ரிக்கி புய் விக்கெட்டைத் தூக்கினார் தீபக் சாஹர். ரிக்கி, ஸ்லிப்பில் இருந்த வாட்சனிடம் கேட்ச் கொடுக்க, தன் இரண்டாவது ஓவரில் மணீஷ் பாண்டேவை டக் அவுட்டில் அனுப்பி வைத்தார். மற்றுமொருமுறை மணீஷ் பாண்டே ஏனாதானோவென விளையாடினார். ஷார்ட் செலக்ஷன் படு மோசம். போதாக்குறைக்கு, தீபக் சாஹர் தன் மூன்றாவது ஓவரில் தீபக் ஹூடாவை காலி செய்தார். பந்தைத் தவறாக கணித்து, ஃப்ளிக் செய்ய முயன்று, ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்தார். ஸ்கோர் 22/3. அப்போதே ஹைதராபாத்தின் தோல்வி முடிவுசெய்யப்பட்டுவிட்டது.


`உங்களை நம்பி புண்ணியமில்லை’ என வில்லியம்சன் அடித்து ஆட ஆரம்பித்தார். அவருக்கு ஷகிப் அல் ஹசன் ஒத்துழைத்தார். வாட்சன் பந்தில் ஃபைன் லெக் பக்கம் சிக்ஸர், ஷார்ட் பாலில் மிட் விக்கெட்டில் பவுண்டரி என, ஹைதராபாத் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். ஆனாலும், ஷாகிப் 24 ரன்கள் எடுத்திருந்தபோது கரண் சர்மா பந்தில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மறுமுனையில் தனி ஆளாக போராடிய வில்லியம்சன், ஐ.பி.எல் தொடரில் ஆறாவது அரைசதம் அடித்தார். 35 பந்துகளுக்கு 86 ரன்கள் தேவை என்ற சூழலில் வேகத்தைக் கூட்டினார் வில்லியம்சன். கரண் சர்மா சுழலில் மூன்று சிக்ஸர்கள் விளாச, அதுவரை அமைதியாக இருந்த மைதானத்தில் சத்தம் விண்ணைப் பிளந்தது. கேம் ஹைதராபாத் பக்கம் எட்டிப் பார்த்தது. யுசுஃப் பதான் – வில்லியம்சன் ஜோடியைப் பிரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது சென்னை.

#CSKvsSRH


இதுபோன்ற சேஸிங்கில் அமைதியாக பார்ட்னர்ஷிப்பை பில்ட் செய்தால் போதும், மோசமான ஒரு ஓவர் மேட்ச்சையே மாற்றி விடும். கரண் சர்மா 15-வது ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்ததே ஹைதராபாத்துக்குக் கிடைத்த மொமன்ட். வில்லியம்சன், யுசுஃப் இருவரும் அந்தத் தருணத்தை தக்கவைத்துக் கொண்டனர். பிராவோ ஓவரில் தன் பங்குக்கு யுசுஃப் சிக்ஸர் வெளுக்க, சென்னை ரசிகர்கள் அமைதி காத்தனர்.


24 பந்துகளில் 52 ரன்கள் தேவை என்ற நிலை. 17-வது ஓவரை ஷர்துல் தாக்கூர் கையில் கொடுத்தார் தோனி. யுசுஃப் பதான் ஒரு சிக்ஸர் அடித்தாலும், வில்லியம்சன் கொஞ்சம் தடுமாறியதால், அந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. மீண்டும் பிராவோ மீது நம்பிக்கை வைத்தார் தோனி. வேறு வழியும் இல்லை. சாஹர், ஜடேஜாவின் கோட்டா முடிந்தது. ஸ்பின் போட்டால் யுசுஃப் வெளுப்பார். கரண் சர்மாவுக்கு இன்னொரு ஓவர் கொடுக்க முடியாது. பிராவோ 18-வது ஓவரை நேர்த்தியாக வீசினார். ஒரு ஸ்லோ டெலிவரியை சரியாக கணிக்கத் தவறினார் வில்லியம்சன். லாங் ஆனில் இருந்த ரவீந்திர ஜடேஜா ஃபுல் லென்த் டைவ் அடித்து அற்புதமாக கேட்ச் பிடித்தார். வில்லியம்சன் 84 ரன்களில் அவுட்டாக, கேப்டன் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. கூடவே, ஹைதராபாத்தின் வெற்றியும்…

#CSKvsSRH


யுசுஃப் பதான் களத்தில் இருந்தவரை, ஹைதராபாத் ரசிகர்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஷர்துல் தாக்கூர் வீசிய 19-வது ஓவரில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து யுசுஃப் (45) வெளியேறியபோது தலைமேல் கைவைத்தனர் ஹைதராபாத் ரசிகர்கள். ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் ரஷித் சிக்ஸர் பறக்கவிட, கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற சூழல்.

 


சி.எஸ்.கே மேட்ச் த்ரில்லிங் இல்லாமலா? பிராவோ வீசிய கடைசி ஓவரின் முதல் மூன்று பந்தில் 3 ரன்கள் கிடைக்க, நான்காவது பந்தில் சிக்ஸர் அடித்தார் ரஷித். 2 பந்தில் 10 ரன்கள் தேவை. தோனி ஓடிவந்து பிராவோவிடம் பேசுகிறார். ஃபீல்டிங் மாற்றப்படுகிறது. ஆனால், ஐந்தாவது பந்தில் எட்ஜாகி, பவுண்டரி. கடைசி பந்து. சிக்ஸர் அடித்தால் வின். ஃபுல் லென்த் டெலிவரியில் சிங்கிள் மட்டுமே எடுக்க முடிந்தது. நான்கு ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி. மீண்டும் ஒருமுறை சேஸிங் தங்களுக்கு கைகூடாது என நிரூபித்தது சன்ரைசர்ஸ். மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது சி.எஸ்கே.

https://www.vikatan.com/news/sports/123007-williamson-heroics-goes-invain-in-last-minute-thriller-against-csk.html

Link to comment
Share on other sites

சன் ரைசர்ஸூடன் மோதல்: கடைசி ஓவரில் பிராவோவிடம் என்ன கூறினார் தோனி?

 

 
kilgdpng

ஹைதராபாத்தில் சன் ரைசர்ஸூடன் சென்னை சூப்பர் கிங்ஸ்  மோதிய போட்டி கிரிக்கெட் ரசிகர்கர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. ஆரம்பத்தில் தடுமாறினாலும் ராயுடு, ரெய்னா, தோனி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தாக் 183 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இதனையடுத்து களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் துவக்கத்தில் விக்கெட்டுகளை சரிய விட்டாலும் கேப்டன் வில்லியம்சன், யூசப் பதான் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் ஆட்டத்தை ஹைதராபாத் பக்கம் கொண்டு வந்தனர்.

எனினும் முக்கிய கட்டத்தில் இருவரும் ஆட்டமிழக்க, கடை ஓவருக்கு 19 ரன்கள் ஹைதராபாத்துக்கு தேவைப்பட்டது.

 இறுதி ஓவரை பிராவோ  வீச ராஷித்கான், சாஹா களத்தில் இருந்தனர். முதல் மூன்று பந்துகளை சரியாக பயன்படுத்த சன் ரைசர்ஸ் வீரர்கள் கடைசி இரண்டு சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.

ராஷித்கான் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்ததால் ஆட்டத்தில் பரப்பரப்பு உண்டானது கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தால் வெற்றி ஹைதராபாத்திடம், என்ற நிலையில் பிராவோ சிறப்பாக வீச, 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது.

கடை ஓவரில் நான்காவது பந்தில் ராஷித் கான் சிக்ஸ்ர் விளாசியதும், சென்னை கேப்டன் தோனி பிராவோவிடம் சென்று சிறிது நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். தோனி பெரும்பாலும் பந்துவீச்சாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடமாட்டார் என்பதால் இது தொடர்பாக போட்டி வர்ணணையாளர்கள் உட்பட பலரும் தோனி என்ன கூறியிருப்பார் என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக ஆட்டம் முடிந்ததும் தோனியிடம் சஞ்சய் மஞ்ரேக்கர், நீங்கள் பந்துவீச்சாளர்களிடம் ஆலோசித்து பார்த்ததில்லையே? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு தோனி, "அது இரண்டு சகோதரர்களுக்கு இடையேயானது. நாங்கள் என்ன ஆலோசித்தோம் என்று என்னால் தங்களிடம் கூற முடியாது. பந்துவீச்சில் அவரது முடிவை சற்று மாற்றுமாறு கூறினேன். சில நேரங்களில் பிராவோ போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களுக்கும் சிறிய அறிவுரை தேவைப்படுகிறது” என்று கூறினார்.

http://tamil.thehindu.com/sports/article23643557.ece

Link to comment
Share on other sites

தலா ஒரு அரை சதம்: ஆறு சிஎஸ்கே வீரர்களின் சாதனை; இதர அணிகள் பெருமூச்சு!

 

 
raina_dhoni1xx

 

2018 ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் சிஎஸ்கே வீரருக்கு 8-ம் இடம் தான் கிடைத்துள்ளது. எனினும் இந்த வருட ஐபிஎல் போட்டியில் பலம் வாய்ந்த பேட்டிங் அணி என்றால் அது சிஎஸ்கே தான். இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு சிஎஸ்கே வீரராவது அரை சதமெடுக்காமல் இருந்ததில்லை.

இந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி ஆறு அரை சதங்களை எடுத்துள்ளது. இந்த ஆறும் வெவ்வேறு வீரர்களால் எடுக்கப்பட்டவை. இந்தப் பெருமை வேறு எந்த அணிக்கும் கிடையாது.

அரை சதமெடுத்த சென்னை வீரர்கள்

முதல் ஆட்டம் - பிராவோ 68
2-ம் ஆட்டம் - சாம் பில்லிங்ஸ் 56
3-வது ஆட்டம் - தோனி 79*
4-வது ஆட்டம் - ஷேன் வாட்சன் 106
5-வது ஆட்டம் - ராயுடு 79, ரெய்னா 54*

அதாவது நேற்று களமிறங்கிய டு பிளெஸ்ஸிஸ் மற்றும் சில ஆட்டங்களில் கடைசியில் களமிறங்கிய ஜடேஜா தவிர சிஎஸ்கே அணியின் அனைத்து முக்கிய பேட்ஸ்மேன்களும் இந்த ஐபிஎல் போட்டியில் அரை சதமெடுத்துள்ளார்கள். இதுபோல வேறெந்த அணியிலும் ஆறு வீரர்கள் இதுவரை அரை சதமெடுக்கவில்லை. பஞ்சாப் அணியில் ஆறு அரை சதங்கள் எடுக்கப்பட்டாலும் அவை கெயில், ராகுல், கருண் நாயர் ஆகிய மூவரால் மட்டுமே எடுக்கப்பட்டவை.

இதற்கு அடுத்ததாக மும்பை, கொல்கத்தா அணிகளில் 4 வீரர்கள் அரை சதமெடுத்துள்ளார்கள். ராஜஸ்தான் அணி எடுத்த இரு அரை சதங்களும் சஞ்சு சாம்சன் எடுத்தவை. இதனால் பலம் வாய்ந்த பேட்டிங் அணி என்கிற பெருமையைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி.

ஐபிஎல் 2018 - அதிக அரை சதங்கள்

சிஎஸ்கே - 6 அரை சதங்கள் ( 6 வீரர்கள்)
பஞ்சாப் - 6 அரை சதங்கள் ( 3 வீரர்கள்)
மும்பை இந்தியன்ஸ் - 5 அரை சதங்கள் ( 4 வீரர்கள்)
சன்ரைசர்ஸ் ஹைதரபாத் - 5 அரை சதங்கள் ( 3 வீரர்கள்)
தில்லி - 4 அரை சதங்கள் ( 4 வீரர்கள்)
கொல்கத்தா - 4 அரை சதங்கள் ( 4 வீரர்கள்)
பெங்களூர் - 4 அரை சதங்கள் ( 2 வீரர்கள்)
ராஜஸ்தான் - 2 அரை சதங்கள் ( 1 வீரர்)

ஐபிஎல் 2018 - அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே வீரர்கள்

ராயுடு - 201 ரன்கள்
ஷேன் வாட்சன் - 184 ரன்கள்
தோனி - 139 ரன்கள்
சுரேஷ் ரெய்னா - 118 ரன்கள்
பிராவோ - 104 ரன்கள்
பில்லிங்ஸ் - 68 ரன்கள்

ஐபிஎல் 2018 - புள்ளிகள் பட்டியல்

வரிசை எண்  அணிகள் ஆட்டங்கள் வெற்றிகள் தோல்விகள் புள்ளிகள் நெட் ரன்ரேட்
 1.   சென்னை  5  4  1  8  0.742
 2.  பஞ்சாப்  5  4  1  8  0.446
 3.  கொல்கத்தா   6  3  3  6  0.572
 4.  ஹைதரபாத்   5  3  2  6  0.301
 5.  ராஜஸ்தான்  6  3  3  6  -0.801
 6.  பெங்களூர்  5  2  3  4  -0.486
 7.  மும்பை  5  1  4  2  0.317
 8.  தில்லி  5  1  4  2  -1.324

http://www.dinamani.com/sports/special/2018/apr/23/six-50-scores-for-csk-this-ipl-all-by-different-players-2906004.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புள்ளி விபரங்கள் எல்லாம் எங்களை ஒன்றும் செய்யாது.....!

Image associée

Link to comment
Share on other sites

உஷ்! கண்டுக்காதீங்க! தருணம்: சன் ரைசர்ஸ் தோல்வி எதனால்?

 

 
sharthul%20thakur

வெற்றி பெறக்கூடிய இன்னிங்ஸை ஆடியும் நடுவரின் ‘தவறினால்’ தோல்வி!   -  படம்.| ஏ.எப்.பி.

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆதிக்க நிலையிலிருந்து தோல்வி நிலைக்குச் சென்றிருக்கும் காரணம் வில்லியம்சன், யூசுப் பத்தான், ஷாகிப் அல் ஹசன் ஆகியோரது பேட்டிங். ஆனாலும் கடைசியில் 4 ரன்களில் தோல்வி.

இந்த 4 ரன்கள் தோல்வி என்பது வெற்றியாக மாறியிருக்க வேண்டிய தருணத்தில் நடுவர் மிகப்பெரிய தவறிழைத்தார். அதை யாரும் பெரிதாகவும் எடுத்துக்கொள்ளவில்லை, சென்னை வெற்றியில் தீபக் சாஹரின் அருமையான தொடக்க ஓவர்கள், ராயுடு, ரெய்னா, தோனி அதிரடி எல்லாவற்றையும் காட்டிலும் நடுவரின் இந்தத் தவறுதான் சன் ரைசர்ஸ் வெற்றியைத் தடுத்த ஒரு பிரதான காரணமாகக் கூற முடியும்.

 

முதல் போட்டியிலேயே தோனிக்கு பிளம்ப் எல்.பியை நடுவர் தர மறுத்து மூன்றாவது நடுவரிடம் சென்று எல்.பி.தீர்ப்பு பெற வேண்டியதாயிற்று, பிறகு இன்னொரு போட்டியில் கேட்சைப் பிடித்து பவுண்டரி கோட்டின் மீது விழுந்து புரண்டார் வீரர் இதனை அவுட் என்று கூறிவிட்டு பிறகு 3வது நடுவரிடம் முறையீடு செய்தார் களநடுவர்.

குறிப்பாக தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ், கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, ரோஹித் தலைமை மும்பை இந்தியன்ஸ் போன்ற ஹெவி ஸ்பான்சர்கள், சூப்பர் ஸ்டார்கள் போட்டியாக அமையும் போது நடுவர்கள் சில வேளைகளில் சாதகமாக நடக்க முற்படுவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 22/3 என்றும் பிறகு 71/4 என்று ஆகி கேன் வில்லியம்சன், யூசுப் பத்தான் மீண்டெழுந்த போது ஜடேஜாவை லாங் ஆஃபில் ஒரு சிக்சர் விளாசினார், பிறகு கரண் ஷர்மா பந்து வீச்சில் ஒரே ஓவரில் மிட்விக்கெட், ஸ்கொயர்லெக், லாங் ஆஃப் ஆகிய இடங்களில் சிக்சர்களை அடித்தார் வில்லியம்சன்.

யூசுப் பத்தான் 12 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த போது கேன் வில்லியம்சனைப் பார்த்து உத்வேகம் பெற்று பிராவோவை 2 மிகப்பெரிய சிக்சர்களை விளாசினார். இதனையடுத்து 4 ஓவர்களில் 52 என்று சன் ரைசர்ஸ் வெற்றி ஆரத்துக்குள் வந்தது.

17வது ஓவரை ஷர்துல் தாக்குர் வீச முதல் பந்தில் வில்லியம்சன் 2 ரன்கள் சேர்த்தார்.

அடுத்த பந்து தாக்கூரினுடையது ஒரு இடுப்புக்கு மேல் வந்த புல்டாஸ். வில்லியம்சன் திடீரென இதனை எதிர்பார்க்காததால் 1 ரன் தான் வந்தது. பந்து க்ளீனாக நோ-பால் என்று தெரிந்தது, ஸ்கொயர் லெக் நடுபர் வினீத் குல்கர்னி என்ன நடந்ததென்று தெரியாவர் போல் வாளாவிருந்தார். வில்லியம்சன் உண்மையில் கடும் ஏமாற்றமடைந்தார். அது நோ-பால் தான், அடுத்த பந்து ஃப்ரீ ஹிட் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றுமே ஆகாதது போல் நடுவர்கள் பேசாமல் இருந்தனர்.

அடுத்த பந்தை யூசுப் பத்தான் தாக்கூரை சிக்ஸ் விளாசினார், இதுவும் புல்டாஸ்தான் ஆனால் இடுப்புக்குச் சற்றுதான் கீழ் வந்தது போல் தெரிந்தது, அது சிக்ஸ் ஆனது, இது ஃப்ரீ ஹிட்டாகியிருந்தாலும் சிக்ஸ்தான். ஆனால் ரன்னும் இல்லாமல் கூடுதல் பந்தும் இல்லாமல் போனது கடைசியில் ரஷீத் கான் 4 பந்துகளில் 17 ரன்கள் விளாசி திகைப்பூட்டினாலும் ஒரேயொரு கொடுக்காத நோ-பால் சன்ரைசர்ஸின் 4 ரன்கள் தோல்வியில் முடிந்தது.

http://tamil.thehindu.com/opinion/blogs/article23646703.ece

 

‘நோ-பால் கொடுக்காத’ நடுவர் வினீத் குல்கர்னி மீது சன் ரைசர்ஸ் ரசிகர்கள் பாய்ச்சல்

 

 
vineeth

வலது கடைசியில் இருப்பவர்தான் நடுவர் வினீத் குல்கர்னி.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

சிஎஸ்கே நேற்று வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 17வது ஓவரில் கேன் வில்லியம்சன் பேட் செய்த போது ஷர்துல் தாக்கூர் இடுப்புக்கு மேல் வீசிய புல்டாஸுக்கு நோ-பால் கொடுக்காததே சன் ரைசர்ஸ் தோல்விக்குக் காரணம் என்று சன் ரைசர்ஸ் ரசிகர்கள் நடுவர் மீது பாய்ந்துள்ளனர்.

இதனையடுத்து ட்விட்டர் பக்கங்களில் ரசிகர்கள் நடுவர் வினீத் குல்கர்னி மீது பாய்ந்துள்ளனர். “ஆட்ட நாயகன் விருது வினீத் குல்கர்னிக்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என்றெல்லாம் கேலி பேசியுள்ளனர்:

 

வினய் மாதுரி: நோ-பால் கொடுக்காத முட்டாள்தனமான முடிவுகள் இல்லாதிருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறுமாதிரியாக அமைந்திருக்கும்.

மேன் ஆஃப் ஜஸ்டிஸ்: டிவி நடுவரிடம் முறையிட்டு ஏன் நோ-பால் சரிபார்க்கக் கூடாது? சிறுசிறு விஷயங்கள் பெரிய முடிவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த நோ-பால் நெருக்கமானது என்று கூட கூற முடியாது மிகவும் வெளிப்படையானது.

அசீம் குரைஷி என்ற ட்விட்டர் கணக்கு வைத்திருப்பவர் ஒரு படிமேலே போய், “ஆட்ட நாயகன்: வினீத் குல்கர்னி” என்று பதிவிட்டதோடு, வினீத் குல்கர்னி யார் என்று தெரியவில்லையா? இவர்தான் நோ-பால் கொடுக்காத நடுவர், என்று பதிவிட்டுள்ளார்.

இன்னொரு ட்விட்டர் வாசியான வீ ஆர் ஹைதராபாத் என்ற கணக்கு வைத்திருப்பவர், “வினீத் குல்கர்னி இதனைச் செய்துள்ளார். சிஎஸ்கேயின் 12வது வீரராகத் திகழ அவர் முடிவெடுத்து விட்டார்” என்று சாடியுள்ளார்.

இன்னொரு ட்விட்டர் வாசி, கரண் சர்மா பவுண்டரியைத் தடுத்ததைத்தான் பேசுகின்றனர். ஆனால் நோ-பால் கொடுக்காத சீரழிவு முடிவை எடுத்த நடுவர் வினீத் குல்கர்னியைப் பற்றி ஒருவரும் பேசுவதில்லை என்று கூறியுள்ளார்.

ரக்‌ஷித் திக்‌ஷித் என்பவர், “உங்களுடைய திறமை குறைவான நடுவர் பணியினால் ஏன் அடுத்தவர் தோற்க வேண்டும்?” என்று கேட்டுள்ளார்.

பாப்யா@தானு என்பவர், ஐசிசி நடுவர் குழுவிலிருந்து வினீத் குல்கர்னியை பிசிசிஐ விலக்கிக் கொண்டது, தற்போது எப்படி அவர் மீண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னும் பரவலான ஹேஷ்டேக்குகளில் சன் ரைசர்ஸ் ரசிகர்கள் வினீத் குல்கர்னியை விளாசியுள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/article23648559.ece?homepage=true

Link to comment
Share on other sites

பிராவோவுக்கும் கூட அட்வைஸ் தேவை, தொடக்கத்தில் ராயுடு அபாய வீரர்: தோனி

 

 
dhoni

படம்.| பிடிஐ.

ஹைதராபாத்தில் நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன் ரைசர்ஸ் அணியை த்ரில் வெற்றி பெற்றது. 4 ரன்களில் சன் ரைசர்ஸ் சோடை போனது.

22/3 என்ற நிலையிலிருந்து ஷாகிப் அல் ஹசன்(24) ஆட்டமிழக்கும்போது 71/4, 10.3 ஓவர்கள் முடிந்திருந்தன, தீபக் சாஹார் அதி அற்புதமாக வீசி 4 ஓவர்கள் 1 மெய்டன் 15 ரன்கள் 3 விக்கெட் என்று அசத்தினார். ஆனால் 71/4 என்ற நிலையில் திடீரென கேன் வில்லியம்சன் (51 பந்துகளில் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 84 ரன்) மற்றும் யூசுப் பத்தான் (27 பந்துகள் 1 பவுண்டரி 4 சிக்சர்கள் 45) இணைந்து 79 ரன்களை 8 ஓவர்களில் விளாசியது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. கடைசியில் ரஷீத் கான் கூட 4 பந்துகளில் 17 விளாசினார். ஆனாலும் 178/6 என்று முடிந்த்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயுடுவின் அபாரமான 37 பந்து 79 ரன்களுடனும் ரெய்னாவின் அதிரடி அரைசதம் மற்றும் தோனியின் 208% ஸ்ட்ரைக் ரேட்டில் 25 ரன்களும் கைகொடுக்க 182 ரன்கள் எடுத்தது. ரஷீத் கான் 4 ஓவர்களில் 49 ரன்கள் விளாசப்பட்டார்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து தோனி அம்பாத்தி ராயுடுவைப் பாராட்டினார். கடைசி ஓவர்களில் பிராவோ கொஞ்சம் சொதப்ப தோனி அவருக்கு அறிவுரை வழங்கினார்.

தோனி கூறியதாவது “நான் அவரது திட்டங்கள் எதையும் மாற்றக் கூறவில்லை. ஆனால் சில வேளைகளில் பிராவோ போன்ற சிறந்த வீரர்களுக்கும் அறிவுரை தேவைப்படும். தவறுகள் செய்வது இயல்பு ஆனால் அதிலிருந்து பாடம் கற்க வேண்டும் என்பதே முக்கியம்.

நிறைய தருணங்களில் இந்த விவாதங்களை மேற்கொண்டிருக்கிறோம். ஆனால் அதிக தருணங்களில் தவறுகள் செய்யும் போது பவுலர்கள் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். முதல் சில ஆண்டுகள் ஐபிஎல்-ஐ ஒப்பிடும் போது பிட்ச்கள் கொஞ்சம் நன்றாக இருக்கின்றன. பேட்ஸ்மென்கள் வலுவாகவும் பெரிதாகவும் இருக்கின்றனர்.

பேட்ஸ்மென்களைப் பாராட்ட வேண்டும், பவுலர்களும் சீராக முன்னேற்றம் கண்டு வருகின்றனர். நாக் அவுட் சுற்றுக்களுக்கு நாங்கள் முன்னேறும்போது பவுலர்கள் புதிய திட்டங்களுடன் வருவார்கள். பெரிய ஸ்கோர்களை எடுப்பது அவ்வளவு சுலபமாக இருக்காது.

தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர் போன்றவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்பது முக்கியம். அவர்கள் சிறப்பாக ஆட வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். ஆம் அவர்களிடம் பிழைகள் உள்ளன, ஆனாலும் திரும்பவும் மீண்டு நன்றாகவே வீசுகின்றனர். ராயுடு அபாரமான ஒரு வீரர்.

அவரை எந்த இடத்தில் இறக்குவது? அவர் நம்பர் 3-ல் இறங்குகிறார், எல்லா டவுன்களிலும் அவரை இறக்க முடியும். எங்கு இறங்கினாலும் சிறப்பாக ஆடுகிறார், பெரிய ஷாட்களை ஆடும்போதும் அவரிடம் நல்ல ஷேப் உள்ளது. எங்கு வேண்டுமானாலும் அவர் இறங்கலாம், ஆனால் நான் அவரை தொடக்கத்தில் இறக்கவே விரும்புகிறேன். அந்த இடத்தில்தான் அவர் அபாயகரமானவராகத் திகழ்கிறார்” இவ்வாறு கூறினார் தோனி.

http://tamil.thehindu.com/sports/article23645366.ece

‘‘கூட்டணியை உடைப்பதும், வெற்றி பெறுவதும் தோனியின் தனித்தன்மை’’ - சிலிர்க்க வைக்கும் சாஹர்

 

 
Gallery-Deepakjpg

எதிரணியின் கூட்டணியை உடைப்பதும், வெற்றியை பறிப்பதும் தோனிக்கே உரிய கேப்டன்ஷிப் வெற்றியின் தனித்தன்மையாகும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஹைதராபாத் நகரில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்கடித்தது.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் 4 ஓவர்கள் வீசிய ஒரு மெய்டன், 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங்கை தொடக்கத்திலேயே சிதைத்ததில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

இதுவரை இந்த சீசனில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் கடைசி ஓவரில் பரபரப்பான கட்டத்திலேயே வெற்றியைப் பெற்றது. அப்படித்தான் சன்ரைசர்ஸ் அணியுடனான போட்டியிலும் கடைசி ஒவரில் வெற்றி பெற்றது.

வெற்றிக்குப் பின் வேகப்பந்துவீச்சாளர் சாஹர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அணி இக்கட்டான சூழலில் இருக்கும் போது வெற்றிபெற வைப்பது எல்லாம் கேப்டன் தோனிதான். இந்த போட்டியின் வெற்றிக்கு பின்பும் தோனிதான் இருக்கிறார். இந்த வெற்றியை நினைத்து பெருமைப்படுகிறோம் என்றாலும் அதற்கு தோனியே காரணம்.

இக்கட்டான தருணங்களில் பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் போது, அவரின் ஆலோசனை எங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இந்தப் போட்டியில் யூசுப் பதானும், கேன் வில்லியம்சனும் நல்ல பாட்னர்ஷிப் அமைத்து ரன்களைச் சேர்த்து வந்தனர்.

அவர்களைப் பிரிக்க முடியாமல் சிரமப்பட்டபோது, தோனிதான் சில ஆலோசனைகள் அளித்து பந்துவீசச் சொன்னார். தோனியின் ஆலோசனைக்கு ஏற்ப தாக்கூரும், பிராவோவும பந்து வீசி அந்த கூட்டணியை உடைத்தனர். எதிரணியின் கூட்டணியை உடைப்பதும், வெற்றியைப் பெறுவதும் தோனியின் கேப்டன்ஷிப்பின் தனித்தன்மையாகும்.

மைதானத்துக்குள் சிஎஸ்கே அணியினர் அனைவரும் ஒரு குடும்பத்தைப் போல் இணைந்தே இருப்போம். அந்த மனநிலையில்தான் விளையாடுவோம். ஹைதராபாத் ஆடுகளத்தில் பந்துவீசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்து. பந்துகள் நன்றாக எழும்பின, ஸ்விங் ஆனது. என்னுடைய பந்துவீச்சும், செயல்பாடும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

http://tamil.thehindu.com/sports/article23644360.ece

Link to comment
Share on other sites

ஐபிஎல்-லில் அசத்தலாக அறிமுகமாகியுள்ள ஜோஃப்ரா ஆர்ச்சரின் ஆச்சர்யக் கதை!

 

 
archer81xx

 

ஐபிஎல் ஏலத்தில் ஜோஃப்ரா ஆர்ச்சரை ரூ. 7.20 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி. அப்போது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆர்ச்சரைப் பற்றி அதிகம் தெரியாது.

உடனே கிரிக்கெட் ரசிகர்கள் அவரைப் பற்றிய தகவலை அலசியபோது ஆச்சர்யம் அடைந்தார்கள். ஆம். இதுவரை எந்தவொரு சர்வதேச ஆட்டத்திலும் விளையாடாமல் டி20 லீக் போட்டிகளிலும் கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியே புகழ்பெற்றுள்ளார் ஜோஃப்ரா. இதுவரை 20 முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆர்ச்சர், 42 டி20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் ஆறு அரை சதங்களுடன் 89 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இவர் ஏன் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்பது சுவாரசியமான கதை.

மேற்கிந்தியத் தீவுகளின் ஒன்றான பார்படாஸில் பிறந்த ஜோஃப்ரா ஆர்ச்சரின் தாய் மேற்கிந்தியத் தீவுகள் பகுதியைச் சேர்ந்தவர். தந்தையின் தாய்நாடு இங்கிலாந்து. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாடுவதற்குப் பதிலாக இங்கிலாந்து அணியில் விளையாடவே விருப்பம் கொண்டார் ஆர்ச்சர். அவருக்கு முன்பு மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த கிறிஸ் ஜார்டன், பிறகு இங்கிலாந்து அணிக்காக விளையாடினார். அவர்தான் ஆர்ச்சருக்குப் பெரிய ஊக்கமாக இருந்தார். 2013-ல் பத்தொன்பது வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பிடித்தார் ஆர்ச்சர். பிறகு காயமடைந்ததால் அவரால் பார்படாஸ் அணியில் தொடர்ந்து நீடிக்கமுடியவில்லை. தனக்கான ஊக்கம் கிடைக்காமல் இருந்த நிலையில் அவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தார் கிறிஸ் ஜார்டன்.

பார்படாஸ் அணியின் வலைப்பயிற்சியில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சைக் கண்ட ஜார்டன், இங்கிலாந்து கவுண்டி அணியான சஸ்ஸக்ஸ் நிர்வாகத்தினரிடம் ஆர்ச்சரைப் பற்றிக் கூறினார். இதையடுத்து சஸ்ஸக்ஸ் அணியில் ஆர்ச்சர் இடம்பிடித்தார். 2016-ல் அந்த அணிக்காக அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடினார். வேகப்பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பின்வரிசையில் களமிறங்கி அதிரடியாகவும் விளையாடியதால் அதிகக் கவனம் பெற்றார். அவரை டி20 கிளப்புகள் மொய்க்க ஆரம்பித்தன. ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் இடம்பிடித்தார். அந்த அணி இரண்டாம் இடம் பிடித்தது. இதுதவிர பங்களாதேஷ் பிரிமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் என முக்கியமான டி20 போட்டிகளில் விளையாடியவர், நேற்று ராஜஸ்தான் அணியில் இடம்பிடித்ததோடு ஐபிஎல் போட்டியிலும் அறிமுகமாகியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 19.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வென்றது. ராஜஸ்தானில் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 4 பவுண்டரிகள் உள்பட 52 ரன்கள் அடித்தார். பென் ஸ்டோக்ஸ் 40 ரன்கள் எடுக்க, எஞ்சிய விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வீழ்ந்தன. இறுதிவரை போராடிய கிருஷ்ணப்பா கெளதம், 2 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவையிருந்தபோது சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்தார். அவர் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 33, உனத்கட் ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆட்ட நாயகன் ஆனார். இவருடைய வருகை ராஜஸ்தான் அணிக்குப் புதிய பலத்தை அளித்துள்ளது. 

 

ஆர்ச்சருக்கு தற்போது 23 வயது. மேற்கிந்தியத் தீவுகள் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் இவர் இங்கிலாந்து அணியில் விளையாட வேண்டுமென்றால் 7 வருடம் இங்கிலாந்தில் குடியேறியிருக்க வேண்டும். 18 வயதுக்குப் பிறகு இங்கிலாந்துக்குக் குடியேறிய வீரர்களுக்காக இந்த விதி 2012-ல் அறிமுகமானது. அதன் அடிப்படையில் ஆர்ச்சருக்கு 2022-ல்தான் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கமுடியும். அப்போது அவருக்கு 27 வயதாகிவிடும்.

இதுகுறித்து ஆர்ச்சர் கூறியதாவது: 

இங்கிலாந்து ரசிகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமைகள் மாறாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதற்காகத்தான் நான் முழு நேர கிரிக்கெட் வீரராக மாறினேன். நாள்கள் சீக்கிரம் சென்றுவிடும் என்று நம்புகிறேன். 2022 வரை பொறுமையாக இருக்கவேண்டுமா என்கிற வருத்தம் எனக்கில்லை. அதுவரை கிடைத்த வாய்ப்புகளில் என் திறமையை நிரூபித்து புதிய இடங்களைக் காணவுள்ளேன். 

ஐபிஎல் ஏலத்தில் நடந்ததை இன்னும் நம்பமுடியாமல் உள்ளேன். எனக்காகப் பல அணிகள் போட்டியிட்டன. அவ்வளவு பெரிய தொகைக்கு நான் தேர்வானது ஆச்சர்யத்தை அளித்தது என்று பேட்டியளித்துள்ளார் ஜோஃப்ரா ஆர்ச்சர்.

150 கி.மீ. வேகத்தில் பந்துவீசுவதோடு யார்க்கர்களையும் துல்லியமாக வீசுவதால் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஆர்ச்சர். ஐபிஎல் போட்டியில் இவருடைய அறிமுகம் ராஜஸ்தானுக்கு மட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் என்கிற எதிர்பார்ப்பு நேற்றைய ஆட்டத்துக்குப் பிறகு அதிகமாகியுள்ளது.

Archer433.jpg

http://www.dinamani.com/sports/special/2018/apr/23/jofra-archer-why-has-an-ipl-team-just-paid-72-crore-for-a-little-known-cricketer-2906028.html

Link to comment
Share on other sites

ஐபிஎல்: தொடரும் சிஎஸ்கே ஆதிக்கம்; என்ன செய்யபோகின்றன அந்த 3 அணிகள்?

 

 
win_hyd1

 

சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெற்ற ஆட்டங்கள் ஐபிஎல் போட்டியை மேலும் பரபரப்பாக்கியுள்ளன. 

நேற்று நடைபெற்ற இரு ஆட்டங்களும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன. 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னைக்கு இது 4-ஆவது வெற்றியாகும். அதே எண்ணிக்கையிலான ஆட்டங்களை எதிர்கொண்ட ஹைதராபாதுக்கு இது 2-ஆவது தோல்வி.

ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அடுத்து 183 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஹைதராபாத், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வீழ்ந்தது. ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய ராயுடு ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். 

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 19.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வென்றது.

ராஜஸ்தானில் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 4 பவுண்டரிகள் உள்பட 52 ரன்கள் அடித்தார். பென் ஸ்டோக்ஸ் 40 ரன்கள் எடுக்க, எஞ்சிய விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வீழ்ந்தன. இறுதிவரை போராடிய கிருஷ்ணப்பா கெளதம், 2 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவையிருந்தபோது சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்தார். அவர் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 33, உனத்கட் ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆட்ட நாயகன் ஆனார்.

இந்த ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. சிஎஸ்கேவும் பஞ்சாப்பும் 5 ஆட்டங்களில் நான்கில் வெற்றி பெற்று முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

ஆனால் இந்த ஐபிஎல் தில்லி, மும்பை, பெங்களூர் ஆகிய 3 அணிகளுக்கும் சோகமாக அமைந்துள்ளன. 8 அணிகளில் இந்த மூன்று அணிகள் மட்டுமே இதுவரை 3 வெற்றிகளை அடையாமல் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. அதிலும் தில்லியும் மும்பையும் இதுவரை தலா 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ளன. இதனால் இந்த மூன்று அணிகளும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறுவது மிகவும் கடினம் என்று கணிக்கப்படுகிறது. 

ஐபிஎல் 2018 - புள்ளிகள் பட்டியல்

வரிசை எண்  அணிகள் ஆட்டங்கள் வெற்றிகள் தோல்விகள் புள்ளிகள் நெட் ரன்ரேட்
 1.   சென்னை  5  4  1  8  0.742
 2.  பஞ்சாப்  5  4  1  8  0.446
 3.  கொல்கத்தா   6  3  3  6  0.572
 4.  ஹைதரபாத்   5  3  2  6  0.301
 5.  ராஜஸ்தான்  6  3  3  6  -0.801
 6.  பெங்களூர்  5  2  3  4  -0.486
 7.  மும்பை  5  1  4  2  0.317
 8.  தில்லி  5  1  4  2  -1.324

http://www.dinamani.com/sports/special/2018/apr/23/indian-premier-league-table---2018-2905990.html

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018 - டெல்லி அணியை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

 
அ-அ+

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது. #VivoIPL #DDvKXIP

 
 
 
 
ஐபிஎல் 2018 - டெல்லி அணியை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
 
 
புதுடெல்லி:
 
டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
 
இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். பிஞ்ச் 2 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ராகுல் உடன் மயன்க் அகர்வால் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். ராகுல் 23 ரன்களிலும், மயன்க் அகர்வால் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 
 
201804232340541327_1_KXIP-karun._L_styvpf.jpg
 
அதைத்தொடர்ந்து கருண் நாயரும், யுவராஜ் சிங்கும் ஜோடி சேர்ந்தனர். யுவராஜ் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் டேவிட் மில்லர் களமிறங்கினார். இருவரும் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். கருண் நாயர் 34 ரன்னிலும், டேவிட் மில்லர் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி தரப்பில் லியாம் பிளங்கிட் 3 விக்கெட்களும், அவேஷ் கான், டிரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். 
 
201804232340541327_2_DD-plunkett._L_styvpf.jpg
 
இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, கவுதம் காம்பிர் ஆகியோர் களமிறங்கினர். பிரித்வி ஷா 10 பந்ந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் 12 ரன்னிலும், காம்பிர் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அவர்களை தொடர்ந்து ரிஷாப் பந்த் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்திருந்தது. 
 
201804232340541327_3_DD-prithvi._L_styvpf.jpg
 
அதன்பின் ஷ்ரேயாஸ் அய்யர் - டேனியல் கிறிஸ்டேன் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். கிறிஸ்டேன் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இறுதியில் ராகுல் தெவாட்டியா, ஷ்ரேயாஸ் அய்யர் உடன் இணைந்து அணியின் வெற்றிக்காக போராடினார். தெவாட்டியா 24 ரன்கள் எடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். 
 
டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. பஞ்சாப் அணி பந்துவீச்சில் பரிந்தர் ஸ்ரன், அன்கித் ராஜ்புட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.
 
201804232340541327_4_PTI4_23_2018_000213B._L_styvpf.jpg
 
நாளை நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #VivoIPL #DDvKXIP

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/23234054/1158661/IPL-2018-Kings-XI-Punjab-beat-Delhi-Daredevils-by.vpf

Link to comment
Share on other sites

என்ன இலக்காக இருந்தாலும் தோல்வியா? தலையில் கை வைத்த கம்பீர்; முஜீபின் தைரியத்தில் பஞ்சாப் வெற்றி

 

iyerjpg
mujeeb

முஜீப் உர் ரஹ்மானைக் கொண்டாடும் கிங்ஸ் லெவன் வீரர்கள்.   -  படம். | சந்தீப் சக்சேனா.

iyerjpg
mujeeb

முஜீப் உர் ரஹ்மானைக் கொண்டாடும் கிங்ஸ் லெவன் வீரர்கள்.   -  படம். | சந்தீப் சக்சேனா.

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் 2018-ன் 22-வது போட்டியில் கிங்ஸ் லெவனின் வெகு குறைவான 144 ரன்கள் வெற்றி இலக்கைக் கூட எட்ட முடியாமல் டெல்லி டேர் டெவில்ஸ் தோல்வியடைந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் சிஎஸ்கேயை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்தது.

கிறிஸ் கெய்ல் ‘காயம்’ காரணமாக (உஷ்... கண்டுக்காதீங்க தருணம்) இல்லாததால் பஞ்சாப் அணி 143/8 என்று மடிந்தது.

தொடர்ந்து ஆடிய டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் ஷ்ரேயஸ் ஐயர் கிரீசில் இருக்க 24 பந்துகளில் 43 ரன்கள் தேவை.

பாரிந்தர் ஸ்ரண் வீச வந்தார் டெவாட்டியா முதல் பந்து லெக் திசையில் ஒதுங்கினார், ஒதுங்க ஒதுங்க பந்தை அவரிடமே கொண்டு சென்றார் ஸ்ரண் ஆனால் லெந்த் தவறாக தலைக்கு மேல் சிக்ஸ். மேலும் ஒரு ஸ்வீப் ஷாட் பவுண்டரி அடித்தார் டெவாட்டியா. இதே ஓவரில் ஐயர் ரன் அவுட் ஆக வேண்டிய வாய்ப்பையும் பிஞ்ச் த்ரோவை சரியாக சேகரிக்காமல் விட்ட ஸரண் 15 ரன்களைக் கொடுத்தார்.

18 பந்துகளில் 28 என்று மிகச்சரியாக டெல்லி வெற்றிக்கு வாகாக இருந்தது. ஐயர் 38 ரன்களுடனும் டெவாட்டியா 18 ரன்களுடனும் டை வீசிய 18 வது ஓவரை எதிர்கொண்டனர். 3 பந்துகளில் ஒரு வைடுடன் 4 ரன்கள் வந்தது. அடுத்து யுவராஜ் சிங்கின் தேவையற்ற த்ரோவினால் 2 ரன்கள் சேர்ந்தது. கடைசி பந்தில் அண்ட்ரூ டை விரல்கள் மூலம் வீசி வேகத்தைக் குறைத்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினார். எட்ஜ் ஆனது ராகுல் கேட்ச் எடுக்க டெவாட்டியா 24 ரன்களில் வெளியேறினார். இந்த ஓவர் மிக முக்கிய ஓவராக அமைந்தது. இதில் 7 ரன்கள்தான் வந்தது.

அடுத்த ஓவரில் சரண் மீண்டும் வந்து லியா பிளெங்கெட் விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் ஷ்ரேயஸ் ஐயர் அடிக்க வேண்டிய 2 பந்துகளை பவுண்டரி அடிக்காமல் சிங்கிள்தான் எடுத்தார் (இன்னொரு உஷ்! கண்டுக்காதீங்க தருணம்) கடைசி பந்து ஃபுல், வைடு பந்து அடிக்க வேண்டிய பந்து மிஸ்ரா தேவையில்லாமல் சுற்றி மட்டையில் சிக்கவில்லை (மீண்டும் ஒரு உஷ்...) டாட் பால் ஆனது. 19-வது ஓவரில் 4 ரன்கள்தான் வந்தது.

கடைசி ஓவரில் இதனால் 17 ரன்கள் தேவை என்ற நெருக்கடி ஏற்பட்டது. முதல் பந்தை ஷ்ரேயஸ் ஐயரால் மட்டையில் பட வைக்க முடியவில்லை. அடுத்த பந்து நேராக ஒரு சிக்ஸ், இது அபாரமான ஷாட். அடுத்த பந்தி லாங் ஆஃபுக்கு அடித்தாலும் ஐயர் சிங்கிள் எடுக்கவில்லை. அடுத்த பந்து ஐயர் ஷாட்டை சரியாக ஆடவில்லை. அது மிஸ் பீல்ட் ஆக 2 ரன்களானது. அடுத்த பந்தை முஜீப் லெக் திசையில் வீச நான்கு ரன்களுக்கு விரட்டினார் ஐயர். கடைசி பந்தில் 5 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிளைட் இல்லாமல் வீசப்பட்ட பந்து லாங் ஆஃபில் தூக்கி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ஐயர். 139/8 என்று முடிந்தது. 57 ரன்களுக்கு 45 பந்துகளை அவர் எடுத்துக் கொண்டார், புதிர் ஸ்பின்னர் முஜீப் உர் ரஹ்மான் 3 ஓவர்களில் 13 ரன்கள்தான் கொடுத்தார், கடைசி ஓவரில் 12 ரன்கள் கொடுத்து 25 ரன்களுக்கு 2 விக்கெட் என்று முடிந்தார்.

கடைசி ஓவர் உட்பட ஏகப்பட்ட ‘கண்டுக்காதீங்க’ தருணம் இந்தப் போட்டியில் இருந்தது.

முன்னதாக 144 ரன்கள்தானே கம்பீரே முடித்து விடுவார் என்று யாரேனும் நினைத்திருந்தால் அது தவறு என்று நிரூபித்தார் வேகப்பந்து வீச்சாளர் அங்கிட் ராஜ்புத், இவர் வேகம் மற்றும் பவுன்ஸில் சிறந்து விளங்க அஸ்வின் இவரை தொடர்ச்சியாக 4 ஒவர்கள் வீசச் செய்தார், இதில் 15 டாட் பால்களுடன் 23 ரன்களுக்கு 2 விக்கெட் என்று டெல்லிக்கு 144 எளிதல்ல ஜெண்டில்மேன் என்று உணர்த்தினார்.

10 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் என்று அபாரமாக ஆடி வந்த ஷாவை பவுல்டு செய்தார். பிறகு அதிரடி வீரர் மேக்ஸ்வெலை தன் ஆஃப் கட்டர் மூலம் டாப் எட்ஜ் செய்ய வைத்தார்.

ரெய்னா போலவே ஷார்ட் பிட்ச் பந்துகளில் சோடை போகத் தொடங்கியுள்ள கம்பீர் மீண்டும் ஆண்ட்ரூ டை பந்தை லெக் திசையில் அடிக்கப் பார்த்து மட்டையின் முன் விளிம்பில் பட்டு மிட் ஆஃபில் கேட்ச் ஆனார். பவர் பிளே முடிவில் 42/3.

அதிரடி வீரர் ரிஷப் பந்த் சொற்ப ரன்களில் முஜீப் பந்தில் பவுல்டு ஆனார், அபாரமான பந்து இது. கிரிஸ்டியன் ரன் அவுட் ஆனார். அஸ்வின் ஒரு முனையில் 4 ஓவர்களில் 19 ரன்கள்தான் கொடுத்தார். ஐயர், டெவாட்டியா வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தனர், ஆனால் கடைசியில் முஜீபின் தைரியத்திலும் ஐயரின் சொதப்பலான முந்தைய ஓவர் பேட்டிங்கினாலும் டெல்லி தோற்றது.

முன்னதாக கிங்ஸ் லெவன் அணி பேட்டிங்கும் பூபோல உதிர்ந்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 34 ரன்கள் எடுத்தார், டெல்லி வேகப்பந்து பவுலர் ஆவேஷ் கான் (மத்திய பிரதேசம்) 148கிமீ வேகப்பந்தில் ஏரோன் பிஞ்ச் விக்கெட்டைக் காலி செய்தார். இவர், போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த பிளெங்கெட் 4 ஓவர்களில் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைபற்றினார்.

யுவராஜ் சிங்கின் தொடரும் தடவல்:

8 வது ஓவரில் 60/3 என்று கிங்ஸ் லெவன் இருந்தது. 31 பந்துகள் பவுண்டரி வராமல் ஆடினால் இது என்ன டி20யா? யுவராஜ் சிங் பிரச்சினைதான். எந்தப் பந்து வீச்சுமே அவருக்கு சரிப்பட்டு வரவில்லை, ரப்பர், பிளாஸ்டிக் பந்து என்று எதில், யார் போட்டாலும் தடவலன்றி வேறொன்றுமறியேன் பராபரமே என்று 17 பந்துகளில் 14 ரன்களை போராடி எடுத்து ஆவேஷ் கான் வேகத்தில் புல் ஷாட் மட்டையின் அடியில் பட்டு ரிஷப் பந்த்திடம் கேட்ச் ஆனது.

டேவிட் மில்லருக்க்கு 2 கேட்ச்கள் விடப்பட்டும் அவர் அதைப் பயன்படுத்தவில்லை, ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் கவரில் ஒரு கேட்சை விட்டார், பிறகு பிரிதிவி ஷா ஒரு கேட்சை பாயிண்டில் விட்டார், ஆனாலும் மிஸ்ராவை அடித்த சிக்ஸ் தவிர 26 ரன்களுக்கு மேல் அவரால் எடுக்க முடியவில்லை. 143/8 என்று முடிந்தது கிங்ஸ் லெவன் அணி. ஆட்ட நாயகன் ராஜ்புத்.

மொத்தத்தில் யார் தோற்பது என்று இருவருமே ஆடியதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டது.

ஆவேஷ்கான், அங்கிட் ராஜ்புட் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களின் பவுலிங்கும் முஜீபின் கடைசி ஓவர் தைரியமும் தவிர இம்மாதிரி ஐபிஎல் போட்டிகளினால் ஆய பயன் என்ன?

http://tamil.thehindu.com/sports/article23654058.ece

Link to comment
Share on other sites

கவுதமின் அதிரடி வாழ்நாள் அனுபவம்: சஞ்சு சாம்சன் கருத்து

 

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் கிருஷ்ணப்பா கவுதம் அதிரடியாக விளையாடியது அவருக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் சிறந்த வாழ்நாள் அனுபவமாக இருக்கும் என ராஜஸ்தான் அணி வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது. அந்த அணி வீரரான கிருஷ்ணப்பா கவுதம் கடைசி கட்டத்தில் 11 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். முன்னதாக இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் 52 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 40 ரன்களும் சேர்த்து சிறந்த அடித்தளம் அமைத்து கொடுத்திருந்தனர்.

மும்ப அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி 3 ஓவர்களுக்கு ராஜஸ்தான் வெற்றிக்கு 43ரன்கள் தேவைப்பட்டன. முஸ்டாபிஸூர் வீசிய 18-வது ஓவரின் 5-வது பந்தில் சிக்ஸர் அடுத்த பந்தில் பவுண்டரியும் அடித்து அணியின் நம்பிக்கை அதிகரிக்கச் செய்தார் கிருஷ்ணப்பா கவுதம். 12 பந்துகளில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜோப்ரா ஆர்ச்சருடன் இணைந்து பும்ரா வீசிய 19-வது ஓவரையும் பதம் பார்த்தார் கிருஷ்ணப்பா கவுதம். இந்த ஓவரில் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் விளாசப்பட்டது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா வீசிய முதல் பந்தில் ஆர்ச்சர் (8) ஆட்டமிழந்தார். 2-வது பந்தில் கவுதம் பவுண்டரி அடிக்க வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. 3வது பந்தில் ரன் ஏதும் அடிக்காமல், 4-வது பந்தை லெக்திசையில் கவுதம் சிக்ஸர் விளாச ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. ஆட்டம் முடிவடைந்ததும சஞ்சு சாம்சன் கூறும்போது, “கவுதமின் ஆட்டத்தை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. இது அவருக்கு வாழ்நாள் அனுபவமாக இருக்கும், எங்களுக்கும்தான்.

கவுதமுக்குதான் ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும் என கருதுகிறேன். ஆனால் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானதுதான். ஆட்ட நாயகன் விருது பெற்ற ஆர்ச்சரும் சிறந்த பங்களிப்பு செய்திருந்தார். 3 விக்கெட்கள் கைப்பற்றிய அவர், பேட்டிங்கின் போது சில பவுண்டரிகளையும் அடித்தார். ஆட்ட நாகயன் தேர்வு குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. கடைசி வரை நான் களத்தில் நின்று ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும்.

ஆனால் மும்பை அணியினர் சிறப்பாக பந்து வீசினார்கள். எங்களது வெற்றிக்கான பணியை கவுதம் சிறப்பாக செய்தார். தொடக்க பேட்டிங் பார்ட்னர்ஷிப் சிறப்பானதாக இல்லை என்பது உண்மைதான். வித்தியாசமான சேர்க்கையை முயற்சித்து வருகிறோம். பீல்டிங் விஷயத்திலும் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டியது உள்ளது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கில் சில தவறுகள் செய்தோம். அரை மனதுடன் கூடிய முயற்சிகள் மற்றும் இரு கேட்ச்களை தவறவிட்டோம்’’ என்றார். - பிடிஐ

http://tamil.thehindu.com/sports/article23654254.ece

Link to comment
Share on other sites

வெற்றி நெருக்கடியில் மும்பை அணி: சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று பலப்பரீட்சை

 

 
24CHPMUROHITSHARMA

ரோஹித் சர்மா   -  PTI

24CHPMUKANEWILLIAMSON

வில்லியம்சன்   -  THE HINDU

ஐபிஎல் தொடரில் இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான மும்பை அணி 5 ஆட்டங்களில் விளையாடி 4 தோல்விகளுடன் வெறும் 2 புள்ளிகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. இதனால் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கேப்டன் ரோஹித் சர்மா, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வருவதற்கான வழிகளை கண்டறிய வேண்டிய நிலையில் உள்ளார். இந்த சீசனில் தொடர்ச்சியாக 3 தோல்விகளை பெற்ற மும்பை அணி அதன் பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக வெற்றி பெற்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது.

ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம் மீண்டும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளது மும்பை அணி. பிளே ஆப் சுற்றுக்கு முன்னதாக மும்பை அணிக்கு இன்னும் 9 ஆட்டங்களே எஞ்சியுள்ளன. இதில் குறைந்தது 7 ஆட்டங்களிலாவது வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை அணியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்ப்பை மேம்படுத்திக் கொள்ள முடியும். எனவே ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற வேண்டியது அவசியமாகி உள்ளது.

தொடக்க வீரராக முன்னேற்றம் கண்டுள்ள சூர்யகுமார் யாதவ் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார். இந்த சீசனில் அவர், இதுவரை 196 ரன்கள் சேர்த்துள்ளார். மற்றொரு தொடக்க வீரரான எவின் லீவிஸூம் சிறந்த பார்மில் உள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 94 ரன்கள் விளாசிய ரோஹித் சர்மா அதன் பின்னர் சோபிக்கத் தவறினார். நேற்று முன்தினம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரன் அவுட் முறையில் எளிதாக தனது விக்கெட்டை தாரைவார்த்தார். இந்த ரன் அவுட் ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றியது. இதனால் அணிக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக ரோஹித் சர்மா பெரிள அளவிலான இன்னிங்ஸ் விளையாட வேண்டிய கட்டத்தில் உள்ளார்.

கெய்ரன் பொலார்டு, கிருனல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்த சீசனில் இதுவரை பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தாததும் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதிலும் பொலார்டு இதுவரை 54 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் தனது இடத்தை இழக்கக்கூடும். மும்பை அணியின் பந்து வீச்சு இம்முறை பலவீனம் அடைந்துள்ளது. உலகத் தரம் வாய்ந்த வேகப் பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தது போன்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அதிக ரன்களை தாரைவார்த்தார். 19-வது ஓவரை வீசிய அவர் 18 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். இதற்கு முந்தைய ஓவரை வீசிய முஸ்டாபிஸூர் ரஹ்மான் 15 ரன்களை தாரை வார்த்தார்.

இந்த ஒரு ஓவர்களும்தான் மும்பை அணியிடம் இருந்து ராஜஸ்தான் அணி வெற்றி கனியை பறித்ததில் பிரதான பங்கு வகித்தது. மற்றொரு வேகப் பந்து வீச்சாளரான மெக்லீனகனும் அதிக ரன்களை விட்டுக் கொடுப்பது அணியின் பந்து வீச்சை மேலும் பலவீனமாக்குவதாக உள்ளது. இதனால் பந்து வீச்சில் மும்பை அணி கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

அதேவேளையில் இந்த சீசனை தொடர்ச்சியாக 3 வெற்றிகளுடன் தொடங்கிய ஹைதராபாத் அணி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளது. 6 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள அந்த அணி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் கிங்ஸ்லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி கண்டிருந்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் சிறந்த பார்மில் உள்ளார். 5 ஆட்டங்களில் 230 ரன்கள் சேர்த்துள்ள அவரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். காயம் காரணமாக சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்காத ஷிகர் தவண் முழு உடல் தகுதியை எட்டியுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும்.

5 ஆட்டங்களில் வெறும் 62 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள விருத்திமான் சாஹாவுக்கு பதிலாக ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி களமிறக்கப்படக்கூடும். சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் யூசுப் பதான் 27 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து பார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

தீபக் ஹூடா, மணீஷ் பாண்டே ஆகியோரும் மட்டையை சுழற்றும் பட்சத்தில் மும்பை அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம். புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், ரஷித் கான் ஆகியோரை உள்ளடக்கிய பந்து வீச்சு கூட்டணி மும்பை அணிக்கு நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23654259.ece

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018: அம்பயரிங் பார்க்கும் போது அலட்சியம் வேண்டாம்; சர்ச்சைகளை அடுத்து பிசிசிஐ அறிவுறுத்தல்

 

 
stokes

படம். | ஏ.எஃப்.பி.

நடப்பு ஐபிஎல் தொடரில் நடுவர் தீர்ப்புகள் பல கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் ஐபிஎல் போட்டிகளில் பணியாற்றும் நடுவர்கள் அலட்சியம் காட்டாமல் கூடுதல் பொறுப்புடன் செயல்படுமாறு ஐபிஎல் சேர்மன் ராஜிவ் சுக்லா நடுவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவறுகள் சில வேளைகளில் நடப்பதுதான், ஆனாலும் நடுவர்களிடம் ஆட்ட நடுவர்கள் பேச வேண்டும் என்று ஐபிஎல் சேர்மன் கூறியதாக ராஜிவ் சுக்லாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஒரு ஓவரில் 7 பந்துகள் வீசப்பட்டன.

அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஷர்துல் தாக்கூர், கேன் வில்லியம்சனுக்கு இடுப்புக்கும் மேல் பந்தை புல்டாஸாக வீசியது தெளிவான நோ-பால் ஆகும். வில்லியம்சனின் அதிருப்தி மேலோங்க நடுவர் வினீத் குல்கர்னி வாளாவிருந்தார். இதனையடுத்து அவரைக் கேலி பேசி சன் ரைசர்ஸ் ரசிகர்கள் ட்வீட்மாரிப் பொழிந்தனர்.

இன்னொரு போட்டியில் டிவி ரீப்ளேயில் உமேஷ் யாதவ் அவுட் ஆன பந்துக்கு நோ-பால் செக் செய்யும் போது அவர் ரன்னர் முனையில் இருந்தபோதான வேறொரு பும்ரா பந்து ரீப்ளே காட்டப்பட்டது.

பல வேளைகளில் பவுன்சர் தலைக்கும் மேல் செல்லும் போது ஒரு பவுன்சர் என்று அறிவிக்கப்படுவதில்லை, வைடுகளிலும் பல சர்ச்சைகள் மூண்டு வருகின்றன.

இதனால் ஐபிஎல் போட்டிகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானதையடுத்து நடுவர்களுக்கு ஐபிஎல் சேர்மன் சுக்லா பொறுப்புடன் நடுவர் பணியாற்றுமாறும் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளதாக பிசிசிஐ-க்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தவறிழைக்காத, சறுக்காத நபர்கள் யாரும் இல்லை என்றாலும் கவனத்துடன் செயல்படுவது அவசியம் என்று ஆட்ட நடுவர்கள் தேவைப்படும் போது தலையீடு செய்யலாம் என்று சேர்மன் ராஜிவ் சுக்லா அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

http://tamil.thehindu.com/sports/article23656645.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐபிஎல் - மும்பை அணிக்கு 119 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. #MIvSRH #IPL2018

 
ஐபிஎல் - மும்பை அணிக்கு 119 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
 

மும்பை:

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு செய்தது. ஐதராபாத் அணியின் தவான், வில்லியம்சன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

தவான் 5 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய சாஹா ரன்கள் ஏதுவும் இன்றி ஆட்டமிழந்தார். வில்லியம்சன் 29, மணிஷ் பாண்டே 16 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். ஷாகிப் அல் ஹசன் 2, முகம்மது நபி 14 ரன்கள், ரஷித் கான் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி கட்டத்தில் யூசுப் பதான் 29 ரன்கள் எடுக்க ஐதராபாத் அனி 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. மும்பை அணி தரப்பில் மெக்லெனாகன், ஹர்திக் பாண்டியா, மார்கண்டே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். #MIvSRH #IPL2018

 

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/24215155/1158849/SRH-set-target-119-runs-for-mumbai-indians-in-IPL.vpf

 
Link to comment
Share on other sites

ஐபிஎல் - சிறப்பான பந்து வீச்சால் மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்

 

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தனது சிறப்பான பந்துவீச்சால் 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. #MIvSRH #IPL2018

 
ஐபிஎல் - சிறப்பான பந்து வீச்சால் மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்
 
மும்பை:
 
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.
 
டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஐதராபாத் அணியின் தவான், வில்லியம்சன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
 
தவான் 5 ரன்களிலும், சாஹா ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். வில்லியம்சன் 29, மணிஷ் பாண்டே 16 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். ஷாகிப் அல் ஹசன் 2, முகம்மது நபி 14 ரன்கள், ரஷித் கான் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், யூசுப் பதான் 29 ரன்கள் எடுக்க ஐதராபாத் அனி 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
மும்பை அணி தரப்பில் மெக்லெனாகன், ஹர்திக் பாண்டியா, மார்கண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 
இதையடுத்து, 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர்.
 
ஆனால், ஐதராபாத் அணியினரின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் சிறப்பான பீல்டிங்கால் மும்பை அணி தடுமாறியது. அந்த அணி 15 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 79 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
 
மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் ஓரளவு தாக்குப் பிடித்து 34 ரன்கள் எடுத்தார். அவரை அடுத்து குர்னால் பாண்ட்யா 24 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இதனால் மும்பை அணி 87 ரன்களில் ஆல் அவுட்டானது. இதையடுத்து, ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
ஐதராபாத் அணி சார்பில் கவுல் 3 விக்கெட், ரஷீத், பாசில் தம்பி ஆகியோர் 2 விக்கெட், சந்தீப் ஷர்மா, முகமது நபி, ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #MIvSRH #IPL2018 #Tamilnews

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/24235445/1158865/sunrisers-hyderabad-beat-mumbai-indians-by-31-runs.vpf

Link to comment
Share on other sites

இந்தியாவின் ‘அடுத்த கபில்தேவ்’ பாண்டியா 19 பந்தில் 3 ரன்: டெல்லி ‘டர்’ டெவில்ஸ் வழியில் மும்‘பை’ இந்தியன்ஸ்

 

 
sun

வெற்றியைக் கொண்டாடும் சன் ரைசர்ஸ்.   -  படம். | ஏ.எஃப்.பி.

சன் ரைசர்ஸ் அணியின் 118 ரன்கள் இலக்கை விரட்ட முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணி 87 ரன்களுக்குச் சுருண்டு படு கேவலமான தோல்வியைத் தழுவியது.

ஐபிஎல் வரலாற்றில் இரண்டு அணிகளும் ஆல் அவுட் ஆனது இது 3வது முறை, ஐபிஎல் வரலாற்றில் 2வது மிகவும் குறைந்த ஸ்கோரை வெற்றிகரமாக தடுத்தாட்கொண்டது சன் ரைசர்ஸ்.

மீண்டும் இரு அணிகளுக்குமிடையே யார் தோற்பது என்பதில் கடும் போட்டி, ஸ்கோர் போர்டு காட்டும் அளவுக்கு இந்தப் பிட்சில் ஒன்றுமில்லை, 10 விக்கெட் அல்ல 15 விக்கெட்டுகளை இழந்தாலும் 119 ரன்கள் என்ற இலக்கை வெற்றி பெற்றேயாக வேண்டும், எப்படியிருந்தாலும் வெற்றி பெறும் இலக்காகும் இது, ஆனால் இதையும் தோற்பது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணியில் சீரியசாக ஏதோ பிரச்சினை உள்ளது. அதற்காக ரஷீத் கான், சித்தார்த் கவுல், பேசில் தம்பி ஆகியோரது அபாரப் பந்து வீச்சை குறைத்துப் பேசுவதாகாது, புவனேஷ்வர், ஸ்டான்லேக் இல்லாமலேயே 118 ரன்களை வெற்றிகரமாக சன் ரைசர்ஸ் தடுத்தது.

அதிலும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் டாஸ் வென்று இலக்கைத் துரத்துவோம் என்று சன் ரைசர்ஸ் அணியைக் களமிறக்கி சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வியது பெரிய தமாஷ்தான்.

இந்தியாவின் 'அடுத்த கபில்தேவ்'  பாண்டியாவை ஆட்டிப்படைத்தது ரஷீத் கான் மட்டும்தானா?

2 போட்டிகளாக அதிரடி வீரர்களிடம் சிக்கி ரன்களை கொடுத்த ரஷீத் கான் மும்பை அணியை தன் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் நம்பிக்கையுடன் இறங்கினார். அதனால்தான் 11 ரன்களுக்கு இவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு ஆட்டத்தின் 17வது ஓவரை இந்தியாவின் அடுத்த கபில்தேவான ஹரிதிக் பாண்டியாவுக்கு மெய்டன் ஓவர் வீசியது சிறப்பு மிக்கதாகும்.

rashidjpg

படம். | ஏ.எப்.பி.

 

4 ஓவர்களில் 39 ரன்கள் என்பது எடுக்க முடியாதது அல்ல ஆனால் ஹர்திக் பாண்டியா, ரஷீத் வீசிய முதல் பந்தை லாங் ஆஃபுக்கு அடித்து சிங்கிள் ஓட மறுத்தார், காரணம் எதிர்முனையில் பும்ரா, அவரை ரஷீத் கான் சாப்பிட்டு விடுவார் என்று ஸ்ட்ரைக்கைத் தக்கவைக்க முனைந்தார். இதுவரை சரி. ஆனால் ஸ்ட்ரைக்கைத் தக்க வைத்து என்ன செய்தார் என்பதுதான் கேள்வி.

அடுத்த பந்து பீட்டன், அடுத்த 4 பந்துமே தடுத்தாடப்பட்டது. மெய்டன் ஓவர். ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்தியாவின் அடுத்த கபில்தேவுக்கு 17வது ஓவர் மெய்டன்! இது நடக்குமா எங்காவது? ஹர்திக் பாண்டியா ‘ஹைப்’ பாண்டியாவானதைத்தான் இது காட்டுகிறது.

ஆனால் அடுத்த ஓவரில் பும்ரா கேட்ச் போல் சென்றாலும் 1 ரன்னை எடுத்து பாண்டியாவிடம் ஸ்ட்ரைக் கொடுத்தார், பேசாமல் பும்ரா சிங்கிளை வேண்டாம் என்று கூறி பாண்டியாவிடமிருந்து ஸ்ட்ரைக்கைக் காப்பாற்றியிருக்கலாம். சித்தார்த் கவுல் வீசிய இந்த ஓவரில் பாண்டியா ஸ்ட்ரைக்கு வந்தவுடன் மிட் ஆஃப் முன்னால் உள்ளது, ஃபின் லெக்கும் வட்டத்துக்குள் உள்ளது, ஆனால் 'அடுத்த கபில்தேவ்' மைதானத்தில் ஈக்கள் அதிகம் போல் மட்டையை சுற்றி ஈயோட்டிக் கொண்டிருந்தார். சித்தார்த் கவுல் முடிந்தால் என்னை அடி என்று சவால் விடுத்தார் அடுத்த பந்து ‘கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது’ என்ற பாடல் வரியை நினைவூட்டியது போல் கையொரு பக்கம் காலொரு பக்கம் பாண்டியாவோடு போராடியது மட்டை, என்னவோ செய்தார் தேர்ட்மேனில் கேட்ச் ஆனது.

ஸ்ட்ரைக்குக்கு வந்த பும்ரா அடுத்த பந்தை அருமையாக புல் ஷாட்டில் பவுண்டரி அடித்தது ஸ்ட்ரைக் கொடுக்காமல் அகராதித் தனம் காட்டி தமாஷாக முடிந்த பாண்டியாவுக்கு பும்ரா கொடுத்த பதில் போலத்தான் இருந்தது. 19 பந்துகளில் 3 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 15.78. ரஷீத் கான் மட்டுமல்ல பேசில் தம்பி, சித்தார்த் கவுல் என்று பாண்டியாவுக்கு ஒன்றுமே வரவில்லை. இவருக்கு லாபி செய்த தோனி, விராட், சாஸ்திரி அண்ட் கோ-தான் தென் ஆப்பிரிக்காவில் மணீஷ் பாண்டேயை 6 ஒருநாள் போட்டிகளிலும் உட்கார வைத்தது. சஞ்சு சாம்சனின் திறமையை வம்பிழுக்கும் வினோத் காம்ப்ளிக்கு ஒரு சவால், ஹர்திக் பாண்டியா ஒரு ஹைப் என்று எழுதத் தயாரா?

சன் ரைசர்ஸ் பேட்டிங்கும் சொதப்பல்

சன் ரைசர்ஸ் பேட் செய்ய அழைக்கப்பட்ட போது கேன் வில்லியம்சன், ஷிகர் தவண் இறங்கினர். இருவருமே 9 பந்துகள் தாக்குப் பிடித்தனர். மிட்செல் மெக்லினாகன் இருவரையும் வீழ்த்திய போது ஆஹா ரோஹித் முடிவு சரிதான் என்று தோன்றியது.

மணீஷ் பாண்டே சிறிது நேரம் நின்றாலும் 3 பவுண்டரிகளுடன் 11 பந்துகளில் 16 ரன்களுக்கு ஸ்டைலிஷாக ஆடி கவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், வில்லியம்சனும், ஷாகிப் அல் ஹசனும் ஒரு ரன்னுக்காக கபடி ஆடி அது கடைசியில் ஷாகிப் ரன் அவுட்டில் முடிந்தது. கேன் வில்லியம்சன் மட்டும் தன் கடந்த இன்னிங்சின் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 29 எடுத்து இன்சைடு எட்ஜில் கேட்ச் ஆக சன் ரைசர்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள்.

யூசுப் பத்தான் ஆட்டத்தின் முதல் சிக்ஸை அடித்து 33 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். மொகமது நபியும் 14 ரன்கள் சேர்த்தனர். ஆனால் மயங்க் மார்க்கண்டே நபி, பேசில் தம்பியைக் காலி செய்ய யூசுப் பத்தானை முஸ்தபிசுர் ரஹ்மான் வீழ்த்த, அபாய ரஷீத் கானை பும்ரா வீழ்த்த 20 ஓவர்களுக்குள் 118 ரன்களுக்குச் சுருண்டது சன் ரைசர்ஸ். மெக்லினாகன், மார்க்கண்டே, பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மும்பை வீழ்ந்தது:

எவின் லூயிஸ், சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, இஷான் கிஷன், பாண்டியா சகோதரர்கள் ஆகியோருக்கு 119 ரன்கள் ஒரு பொருட்டா? ஆனால் 2வது போட்டியில் ஆடும் வேறு வகையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா பிரமாதமாக வீசி எவின் லூயிஸை இன்ஸ்விங்கரில் லீடிங் எட்ஜில் வீழ்த்தினார். இஷான் கிஷன் விக்கெட் கீப்பிங்கில் நேற்று சொதப்பிய கையோடு படுமோசமான பொறுப்பற்ற ஷாட்டில் லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கேப்டன் ரோஹித் சர்மா, ஷாகிப் அல் ஹசனை வாரிக்கொண்டு ட்ரைவ் ஆட முனைந்து எட்ஜ் செய்ய ஸ்லிப்பில் ஷிகர் தவண் கேட்ச் எடுத்தார். பவர் பிளே முடிந்து ஸ்கோர் 22/3.

சூர்யகுமார் யாதவ் (34), குருணால் பாண்டியா (24) தவிர ஒருவரும் அர்த்தமுள்ள வகையில் ஆடவில்லை. இருவரும் 40 ரன்களைச் சேர்த்தனர். ரஷீத் வந்தார் குருணாலை எல்.பி. செய்தார். பின் காலில் பட்டது, லைனில் உள்ள பந்து உடனடியாக கையை தூக்க வேண்டிய ரவிக்கு மட்டும் அது நாட் அவுட் போலும், ரிவியூ சென்றதன் அடிப்படையில் அவுட் ஆனது. பொலார்ட் இறங்கினார் ஷாகிப் அல் ஹசன் பந்தில் இந்தப் போட்டியின் 2வது சிக்சரை அடித்தார். ஆனால் ரஷீத் கான் டாட் பால்களாக வீச வீச நெருக்கடி அதிகரித்த பொலார்ட், ஸ்லிப் இருக்கும் போதே ரஷீத்தை லேட் கட் ஆடி கேட்ச் ஆனார். ஷாட் தேர்வும் கேள்விக்குரியதே. அதன் பிறகுதான் பாண்டியாவுக்கு மெய்டன் ஓவர்.

பேசில் தம்பி 15வது ஓவரில் வரவழைக்கப்பட்டார். இவர்தான் முக்கிய விக்கெட்டான சூரியகுமார் யாதவ்வை வீழ்த்தினார். நல்ல ஷாட்தான் ஆனால் நேராக மிட்விக்கெட்டில் ரஷீத் கையில் அடித்தார். ஆனால் ஹர்திக் பாண்டியா ஏதோ ஜெயிக்க வைக்க வந்தவர் போல் நின்றார், ஆனால் சொதப்பினார். சித்தார்த் கவுல் ஸ்பெல் வேகமானது, ஆக்ரோஷமானது, இதில் மெக்லினாகன், மார்க்கண்டே, ஹர்திக் பாண்டியா ஆகியோரை வீட்டுக்கு அனுப்பினார். பேசில் தம்பி, முஸ்தபிசுரை வீழ்த்த 19வது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் சம்பிரதாயங்கள் முடிந்தன.

ஆட்ட நாயகன் ரஷீத் கான். 6 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 1 போட்டியில்தான் வென்றுள்ளது, மும்பையும் டெல்லியும் கடும் வீழ்ச்சிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

http://tamil.thehindu.com/sports/article23665643.ece

Link to comment
Share on other sites

சென்னை அணி சார்பாக 13-7 வெற்றி விகிதம்: ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே ஆதிக்கம் தொடருமா? புதனன்று மோதல்

 

 
dhoni-kohli

படம். | விவேக் பெந்த்ரே.

ஐபிஎல் கிரிக்கெட்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் மோதல் நாளை (புதன், ஏப்ரல் 25) அன்று சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. அதாவது இதுவரை ஆர்சிபிக்கு எதிராக 13-7 என்று வெற்றி விகிதம் வைத்துள்ள தோனி தலைமை சிஎஸ்கே அணியை கோலி தலைமை ஆர்சிபி வென்று அடக்குமா என்ற கேள்விக்கான விடை நாளை தெரியும்.

கடந்த 2 ஐபிஎல் தொடர்களில் சூதாட்டத் தடை காரணமாக சிஎஸ்கே அணிக்கும் ஆர்சிபி அணிக்கும் இடையிலான போட்டி நடைபெறாமல் இருந்துள்ளதால் மீண்டும் இரு அணிகளுக்குமிடையிலான நாளைய போட்டி ரசிகர்களிடையே கடும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது.

 

ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு மீண்டும் வந்த சென்னை அணி தன் தாயகத்தை காவிரிப் போராட்டங்களுக்கு இழந்தாலும் 5 போட்டிகளில் 4-ல் வென்றுள்ளது, ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி நீங்கலாக நெருக்கமாக வந்து திரில் வெற்றி பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். மாறாக ஆர்சிபி 5-ல் 2-ல்தான் வென்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான வெற்றி விகிதத்தில் 13-7 என்று சிஎஸ்கே ஆதிக்கம் உள்ளது, சின்னசாமி ஸ்டேடியத்தில் இரு அணிகளும் மோதிய முந்தைய 7 போட்டிகளிலும் சென்னை-ஆர்சிபி வெற்றி விகிதம் 3-3 என்று சமநிலையில் உள்ளது, எனவே வெற்றி பெறும் அணி என்று ஒன்றைக் கூற வேண்டுமானால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத்தான் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

ஏ.பி.டிவில்லியர்ஸ் சென்னைக்கு எதிராக பெரிய அளவில் ஸ்கோர் செய்ததில்லை, இது சென்னைக்கு அனுகூலமல்ல, மாறாக சென்னை அணி பயப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். ஏற்கெனவே 360 டிகிரி வீரர் டிவில்லியர்ஸ் அன்று 39 பந்துகளில் 90 ரன்கள் அடித்து மைதானத்தில் பந்துகள் எங்கெல்லாம் செல்ல முடியாதோ அங்கெல்லாம் அடித்து அசத்தியுள்ளார்.

கோலி-டிவில்லியர்ஸ் கூட்டணி ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை 2,361 ரன்கள் எடுத்துள்ளது, கிறிஸ் கெய்ல்-கோலி கூட்டணிதான் அதிகம், அதாவது 2,787 ரன்கள் கூட்டணி அமைத்துள்ளனர். ஷிகர் தவண்-வார்னர் கூட்டணி 2,357 ரன்கள் எடுத்துள்ளனர்.

சென்னை அணியைப் பொறுத்தவரையில் வாட்சன், மற்றும் எங்கு இறக்கினாலும் புரட்டி எடுக்கும் அம்பாத்தி ராயுடு, தேவையான அதிரடியைக் காட்டும் தோனி ஆகியோரும் ரெய்னாவின் அனுபவமும் எந்த எதிரணிக்கும் அச்சுறுத்தல்தான். பிராவோ எப்போதும் ஒரு ஆல்ரவுண்ட் அச்சுறுத்தல். தீபக் சாஹரின் தொடக்க ஸ்விங் பவுலிங் கோலியை காலி செய்தால் பெங்களூரு கடும் நெருக்கடிக்குள்ளாகும் என்பது தெளிவு.

ஆர்சிபி அணியில் சாஹல், வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சு எப்படி அமையும் என்பதைப் பொறுத்து வெற்றி தோல்வி தீர்மானமாகும். ஸ்பின் பந்து வீச்சில் சிஎஸ்கே நடப்பு ஐபிஎல் தொடரில் தடுமாறி வருகிறது, இதுவரை ஸ்பின்னர்களிடம் 10 விக்கெட்டுகளைக் கொடுத்துள்ளது சிஎஸ்கே.

கிறிஸ் வோக்ஸ், உமேஷ் யாதவ் ஆகியோரின் தொடக்க ஸ்பெல்கள் மேலும் தீவிரமாக சிஎஸ்கேயால் பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளது, ஏனெனில் உமேஷ் யாதவ்வின் 4 ஓவர்களை முதலிலேயே முடிக்கும் உத்தியை கோலி நிச்சயம் கடைபிடித்தால் சிஎஸ்கே அவரிடம் 2-3 விக்கெட்டுகளை தொடக்கத்தில் கொடுக்காமல் ஆடுவது அவசியம், குறிப்பாக ஷார்ட் பிட்ச் பந்து பலவீனமுடைய ரெய்னாவை தட்டிப்போட்டு எடுத்து விடும் வாய்ப்பு அதிகம்.

சென்னை அணியில் அதிக மாற்றம் இருக்காது என்றே கூற வேண்டும். நாளை இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறுகிறது.

(பிடிஐ தகவல்களுடன்)

http://tamil.thehindu.com/sports/article23659994.ece

 

 

பெங்களூரு அணியுடன் இன்று மோதல்: டி வில்லியர்ஸை சமாளிக்குமா சிஎஸ்கே?

 

 
25CHPMUDEVILLIERS2

டி வில்லியர்ஸ்   -  K_MURALI_KUMAR

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் தொடரின் கடந்த கால சீசன்களில் இரு அணிகள் இடையிலான மோதல்கள் தீவிரமாகவே காணப்பட்டுள்ளது. கடைசியாக நடைபெற்ற இரு தொடர்களிலும் சென்னை அணி விளையாடாத நிலையில் தற்போது மீண்டும் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தோனி தலைமையிலான சென்னை அணி, பெங்களூரு அணிக்கு எதிராக 21 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. இதில் சென்னை அணி 13 ஆட்டங்களிலும், பெங்களூரு 7 ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ளன. அதிலும் சின்னசாமி மைதானத்தில் இரு அணிகளும் 7 முறை மோதி உள்ளது. இதில் இரு அணிகளும் தலா 3 முறை வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் மழையால் முடிவு இல்லாமல் போனது.

2 வருடங்களுக்கு பிறகு திரும்பி உள்ள சென்னை அணி, பெங்களூருவை விட வலுவாகவே உள்ளது. சென்னை அணி 5 ஆட்டங்களில் 4 வெற்றிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. அதேவேளையில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 3 தோல்விகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசியாக டெல்லி டேர்டெவில்ஸை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. டி வில்லியர்ஸ் மிரட்டும் வகையிலான அதிரடிக்கு திரும்பி இருப்பது பெங்களூரு அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

டெல்லி அணிக்கு எதிராக 39 பந்துகளில் 90 ரன்கள் விளாசி வெற்றியில் பிரதான பங்கு வகித்திருந்தார் டி வில்லியர்ஸ். அந்த ஆட்டத்தில் 175 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நிலையில் டி வில்லியர்ஸ் ஒற்றை ஆளாக ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தனது அசாத்தியமான ஆட்டத்தால் வெற்றியை அறுவடை செய்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு மிரளச் செய்யும் அளவிலான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

சென்னை அணியின் பந்து வீச்சுக்கு அவர், கடும் சவாலாக இருக்கக்கூடும். அதேவேளையில் விராட் கோலி ராஜஸ்தான் அணிக்கு எதிராக 52 ரன்களும், மும்பை அணிக்கு எதிராக சேர்த்த 92 ரன்களும் அணிக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்துள்ளது. இவர்களுடன் குயிண்டன் டி காக், மனன் வோரா ஆகியோரும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் பேட்டிங் கூடுதல் வலுப்பெறும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 5 ஆட்டங்களில் 4 ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டு சென்று நெருக்கமாகவே முடித்துள்ளது. இலக்கை துரத்திய 4 ஆட்டங்களில் 2-ல் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. தோல்வியடைந்த ஆட்டமும் கடைசி ஓவர் பரபரப்புக்கு விதிவிலக்காக அமையவில்லை. கடைசியாக மோதிய ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 182 ரன்கள் குவித்த நிலையில் கடைசி ஓவரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது சென்னை அணி.

ராஜஸ்தான் அணிக்கு எதிராக 57 பந்துகளில் 106 ரன்கள் விளாசிய ஷேன் வாட்சன், ஹைதராபாத் அணிக்கு எதிராக 37 பந்துகளில் 79 ரன்கள் குவித்த அம்பாட்டி ராயுடு ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். இதில் அம்பாட்டி ராயுடு இதுவரை 201 ரன்கள் குவித்து அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளார். அதேவேளையில் 184 ரன்கள் சேர்த்துள்ள வாட்சன் பந்து வீச்சில் 6 விக்கெட்களை கைப்பற்றி ஆல்ரவுண்டராக பலம் சேர்த்து வருகிறார். சுரேஷ் ரெய்னா (118), தோனி (139), டுவைன் பிராவோ (104), ஷேம் பில்லிங்ஸ் (68) ஆகியாரும் மட்டையை சுழற்றத் தயாராக உள்ளனர்.

வலுவான சென்னை அணியின் பேட்டிங் வரிசைக்கு எதிராக பெங்களூரு அணி பந்து வீச்சை பலப்படுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளது. அந்த அணி இந்த சீசினில் சொந்த மண்ணில் நடைபெற்ற இரு ஆட்டங்களில் 200 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்திருந்தது என்பது குறிபிடத்தக்கது. அநேகமாக இன்றைய ஆட்டத்தில் கோரே ஆண்டர்சனுக்கு பதிலாக காலின் டி கிராண்ட் ஹோம் இடம் பெற வாய்ப்புள்ளது.

வேகப் பந்து வீச்சில் உமேஷ் யாதவ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுக்கும் போதிலும் அதனை மற்ற பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது பின்னடைவாக உள்ளது. சுழலில் யுவேந்திரா சாஹல், வாஷிங்டன் சுந்தர் ஜோடி உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுழற்பந்து வீச்சில் சற்று தடுமாறி வருகிறது. அந்த அணி சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சராசரியாக 7.70 ரன்கள் சேர்த்துள்ள நிலையில் 10 விக்கெட்களை இழந்துள்ளது. இதனால் சாஹல், வாஷிங்டன் சுந்தர் கூட்டணி சிறப்பாக செயல்படக்கூடும் என கருதப்படுகிறது.

http://tamil.thehindu.com/sports/article23665933.ece

Link to comment
Share on other sites

கோலியின் கேப்டன்ஸி தடுமாற்றங்கள்..! #CSKvsRCB

 

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் போட்டிகள் ஆர்ச் ரைவல்ரி எனில், ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை- பெங்களூரு மேட்ச் அந்த ரகம். சென்னைக்குத் தோனி கேப்டன் என்றால், இந்தியாவின் கேப்டன் கோலிதான் பெங்களூரின் கேப்டன். காவிரி போராட்டங்கள் கொஞ்சம் அமைதியாகியிருக்கும் நிலையில் இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை- பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டா போட்டி ஆரம்பிக்கிறது. #CSKvsRCB

#CSKvsRCB

பெங்களூரும், சென்னையும் இதுவரை மோதிய ஆட்டங்களில் சென்னையே அதிகம் வென்றிருக்கிறது என்றாலும் சென்னைதான் ஃபேவரிட்ஸ் என்று சொல்லிவிடமுடியாது. இனி கிட்டத்தட்ட எல்லா ஆட்டங்களிலும் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் ஆட ஆரம்பித்திருக்கிறது பெங்களூரு. டேபிள் டாப்பராக வேண்டும் என்கிற வெறியில் ஆடுகிறது சென்னை. இந்தியாவின் முன்னாள் கேப்டனும், இந்நாள் கேப்டனும் ஆடும் இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு?

பவர் பிளேயர்கள்!

சென்னை, பெங்களூரு இரண்டு அணிகளுமே பவர் பிளேயர்களைக் கொண்ட அணிகள்தாம். இதில் பெங்களூரின் டாப் ஆர்டர், பயமுறுத்தும் வீரர்களால் நிரம்பியது. குவின்டன் டி காக், கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கோரி ஆண்டர்சன், மந்தீப் சிங், மன்னன் வோரா என எல்லோருமே மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள். ஆனால் கோலி, டி வில்லியர்ஸ் தவிர யாருமே ஃபார்மில் இல்லை என்பதுதான் பெங்களூரு பரிதாபநிலையில் இருக்கக் காரணம். கோலி, டி வில்லியர்ஸ் தவிர மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இதுவரை 50 ரன்களைத் தாண்டியதில்லை. 

கோலி அரை சதங்கள் அடித்த இரண்டு மேட்ச்சிலும் பெங்களூரு தோல்வியடைந்திருக்கிறது. மாறாக, ஏபி டி வில்லியர்ஸ் அரை சதம் அடித்த இரண்டு போட்டிகளிலும் பெங்களூரு வென்றிருக்கிறது. இன்றைய போட்டியில் இருவருமே அதிரடி ஆட்டம் ஆடினால் சென்னைக்கு ஆபத்துதான். 

#CSKvRCB

 

சென்னையின் ஹிட்டர்ஸ்!

`ஓன் மேன் ஆர்மி' அல்ல சென்னை. வாட்சன், டு ப்ளெஸ்ஸி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, தோனி, சாம் பில்லிங்ஸ், பிராவோ, ஜடேஜா என பேட்டிங் ஆர்டரில் செம ஸ்ட்ராங்காக இருக்கிறது சென்னை. இந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேனில் ஒவ்வொருவருமே ஒவ்வொரு மேட்ச்சில் அதிரடி ஆட்டம் ஆடியிருக்கிறார்கள். இதுவரை நடந்த போட்டிகளில் பிராவோ, பில்லிங்ஸ், தோனி, ரெய்னா, வாட்சன், ராயுடு என எல்லோருமே அரைசதம் அடித்திருக்கிறார்கள். இதில் வாட்சன் சதமே அடித்திருக்கிறார். இதனால் இன்றைய போட்டியில் யார் ஃபார்முக்கு வருவார்கள், யார் பெளலிங்கைச் சிதறடிப்பார்கள் என்று கணிப்பதே கோலிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கும். 

பெளலிங் பஞ்சாயத்து!

இரண்டு அணிகளிலுமே பெளலிங்தான் வீக் ஏரியா. ரெய்னாவைச் சமாளிக்க பெங்களூரு அணி சாஹலைக் களமிறக்கும். இதுவரை நான்குமுறை ரெய்னாவை அவுட் ஆக்கியிருக்கிறார் சாஹல். மேலும் சின்னசாமி ஸ்டேடியத்தில் இதுவரை ரெய்னா பெரிய ஸ்கோர் எதுவும் அடித்ததேயில்லை. 9 போட்டிகளில் விளையாடியிருக்கும் ரெய்னா இங்கு மொத்தமாக 156 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். 

ஆனால்,  விராட் கோலி சென்னைக்கு எதிராகத்தான் ரன்களால் மிரட்டியிருக்கிறார். சென்னை அணிக்கு எதிராக இதுவரை 706 ரன்கள் எடுத்திருக்கிறார். இன்றும் சென்னையின் பெளலிங்கைச் சமாளித்து, இறுதியில் அடித்து ஆடும் ஸ்டைலேயே பின்பற்றுவார் கோலி.

சென்னை அணி டி வில்லியர்ஸை சமாளிக்க ஷேன் வாட்சனைக் களமிறக்கும். அதேபோல் இன்று தீபக் சஹார்தான் பெங்களூரின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை உடைக்க வேண்டும். பவர்ப்ளே ஓவர்களில் 2 விக்கெட்டுகளைச் சரித்துவிட்டாலே பெங்களூரு ஆட்டம் கண்டுவிடும்.  

#CSKvRCB

அதே அணி!

சென்னை, பெங்களூரு என இரண்டு அணிகளும் கடைசியாக விளையாடிய போட்டிகளில் பயன்படுத்திய அதே அணியைத்தான் இன்றும் களமிறக்கும். அதனால் பெங்களூரு அணியில் பிரண்டன் மெக்கல்லம் இருப்பது டவுட். 

சென்னையின் பேட்டிங் ஆர்டர், பெளலிங் ஆர்டர் பக்கவாக செட் ஆகிவிட்டது. வாட்சன், டு ப்ளெஸ்ஸி, ரெய்னா, ராயுடு, தோனி, பில்லிங்ஸ், பிராவோ, ஜடேஜா என பேட்ஸ்மேன்களை வரிசையாக வைத்துக்கொண்டு மிரளவைக்கிறது சென்னை. பெளலிங்கைப் பொறுத்தவரை தீபக் சாஹர், கரண் ஷர்மா, தாக்கூர், ஜடேஜா, பிராவோ, வாட்ஸன் என 6 பெளலர்களை தோனி பயன்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

உமேஷ் யாதவ், கிறிஸ் வோக்ஸ், சாஹல், சிராஜ், வாஷிங்டன் சுந்தர் என 5 பெளலர்களை மட்டுமே கோலி பயன்படுத்துவார். ஆனால் இதுவரையிலான போட்டிகளில் பெளலிங் ரொட்டேஷனில் கோலி சொதப்பியதுதான் பெங்களூரின் தோல்விக்குக் காரணம். ஒரே பிளானோடு ஆடுகிறார் கோலி. பிளான் -ஏ சொதப்பினால் பிளான் -பி, பிளான் -சி என கேம் பிளானில் எந்த மாற்றங்களும் இல்லாமல் இருப்பது கோலியின் கேப்டன்ஸி பலவீனம். இனிமேலும் இந்நிலை நீடித்தால் பெங்களூரு எவ்வளவு ஸ்ட்ராங்கான டீமாக இருந்தாலும் தோல்விகள்தாம் தொடரும். 

கமான் கோலி... கேம் பிளானை மாத்துங்க! 

https://www.vikatan.com/news/tamilnadu/123266-csk-vs-rcb-match-preview.html

Link to comment
Share on other sites

ஐபிஎல் சீசன் முழுவதும் சம்பளம் வேண்டாம்: தோல்விக்கு பொறுப்பேற்று கம்பீர் உணர்ச்சிகரம்

 

 
gambir

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர்   -  படம்: சங்கர் சக்ரவர்த்தி

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று தனது கேப்டன் பதவியை ஸ்ரேயாஸ் அய்யருக்கு விட்டுக்கொடுத்த கவுதம் கம்பீர், இந்த தோல்வியை ஈடுகட்ட இந்த சீசன் முழுவதும் தனக்கு சம்பளத் தொகையான ரூ.2.8 கோடியை வாங்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். இந்த தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஒருபோட்டியில் மட்டுமே வென்றுள்ளது. மீதமுள்ள 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்து 2 புள்ளிகளுடன் 8-ம் இடத்தில் இருக்கிறது.

 

கேப்டன் கம்பீரும் ஒருபோட்டியில் மட்டுமே அரைசதம் அடித்தார், மற்ற 5 போட்டிகளிலும் 15 ரன்களுக்குள் ஆட்டமிழந்து மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 5 போட்டிகளில் 85 ரன்கள் மட்டுமே கம்பீர் சேர்த்தார்.

தொடர் தோல்விகள், மனஅழுத்தம், காரணமாக பேட்டிங்கிலும் கவனம் செலுத்த கம்பீரால் முடியவில்லை. இதனால், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டு, விமர்சிக்கத் தொடங்கினார்கள். இதையடுத்து, டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கம்பீர் இன்று அறிவித்தார். அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அணியின் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பு ஏற்று, இந்த சீசன் முழுவதும் சம்பளம் பெறப்போவதில்லை என்று கம்பீர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கம்பீரின் நெருங்கியவட்டாரமும், டெல்லி அணி நிர்வாகிகளுள் ஒருவர் கூறுகையில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பு ஏற்று ஏற்கனவே கம்பீர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இனிமேல், இந்த சீசன் முழுமைக்கும் தனது ஊதியமான ரூ2.80 கோடியை வாங்கப்போவதில்லை என கம்பீர் முடிவு செய்துள்ளார். ஆனால், தொடர்ந்து மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்.

கவுதம் கம்பீர் மிகச்சிறந்த பேட்ஸ்மென், சிறந்த மனிதர் ஆனால், தொடர் தோல்விகளால் மனவேதனை அடைகிறார்.கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியுடனான போட்டியில் தோல்வி அடைந்தவுடன் அணியில் இருந்து விலகிவிட கம்பீர் முடிவு செய்தார். ஆனால், அணி நிர்வாகத்தினர் சமாதானம் செய்ததையைடுத்து அவர் அந்த முடிவை கைவிட்டார்.

இந்த ஐபில் தொடர் முழுவதும் கம்பீர் விளையாடுவார், ஐபிஎல் தொடருக்கு பின் சில முக்கிய முடிவுகளை கம்பீர் எடுப்பார் என அவர் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article23672454.ece

 

 

ஐபிஎல் 2018: கேப்டன்சியிலிருந்து கவுதம் கம்பீர் விலகினார்

 

 
gambhir

கவுதம் கம்பீர்.   -  படம். | ஏ.பி.

டெல்லி டேர் டெவில்ஸ் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்ததையடுத்து அந்த அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் தன் கேப்டன்சியைத் துறப்பதாக அறிவித்துள்ளார்.

கம்பீரே 23 வயது ஷ்ரேயஸ் ஐயரை அடுத்த கேப்டனாப் பரிந்துரை செய்துள்ளார்.

 

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. கவுதம் கம்பீர் முதல் போட்டியில் எடுத்த அரைசதத்துக்குப் பிறகு தொடர்ச்சியாக குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார். 5 இன்னிங்ஸ்களில் 85 ரன்களையே அவர் எடுத்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான பிறகு 7 ஆண்டுகள் சென்று தன் தாயக அணிக்கு கேப்டனாக வந்தார் கவுதம் கம்பீர்.

இதற்கு முன்பாக ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்காரா, டேனியல் வெட்டோரி, ஷிகர் தவண் ஆகியோரும் இதே போன்று கேப்டன்சியைத் துறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கம்பீர் தன் முடிவு குறித்துக் கூறும்போது, “நான் போதுமான அளவு பங்களிப்பு செய்யவில்லை, அதனால் நான் கேப்டனாக பொறுப்பாக முடிவெடுக்க வேண்டியுள்ளது. இதுதான் சரியான நேரம் என்று நான் உணர்கிறேன்” என்றார்.

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018: கம்பீர் வழியைப் பின்பற்றுவாரா ரோஹித் சர்மா?

 

 
rohit-sharma-mi-vs-gautam-gambhir-kkr

கவுதம் கம்பீர், ரோகித் சர்மா : கோப்புப்ப டம்

ஐபிஎல் 11-வது சீசன் போட்டிகளில் தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

டெல்லி அணியைப் போலவே மும்பை இந்தியன்ஸ் அணியும் மோசமாக விளையாடி வருகிறது, அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் மோசமான பார்மில் இருப்பதால், அவரும் கம்பீர் பாணியைப் பின்பற்றுவாரா என்ற கேள்வி கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா, கடந்த 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே அதிரடியாக ஆடி 94 ரன்கள் சேர்த்துள்ளார். மற்ற போட்டிகள் அனைத்திலும் 15 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை.

சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்களும், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்களும், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 18 ரன்களும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டக்அவுட்டும், நேற்றைய ஆட்டத்தில் 2 ரன்களும் சேர்த்து ரோகித் சர்மா மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் பேட்டிங், பந்துவீச்சு நாளுக்கு நாள் மோசமாக இருப்பதை அவர்களின் ரசிகர்களை வெறுப்பேற்றி இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் மும்பை அணி உள்ளது

. திறமையான பேட்ஸ்மன்களான சூரியகுமார் யாதவ், இசான் கிஷான், ரோகித்சர்மா, ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, பொலார்ட் உள்ளிட்ட பல வீரர்கள் இருந்தும் பேட்டிங்கில் சோடை போனது.

டெல்லி அணியிலும் திறமையான வீரர்கள் இருந்தும் தோல்வி அடைந்ததால், அந்தத் தோல்விக்கு பொறுப்பேற்றும், தனது கவனத்தை பேட்டிங்கிலும் அணியின் வெற்றியிலும் திருப்புவதற்காக கேப்டன் பதவியை கம்பீர் ராஜினாமா செய்தார்.

அதேபோல, ரோகித் சர்மா தனது கேப்டன்ஷிப்பை சரியாகக் கையாளவில்லை, களவியூகத்தை சரியாக அமைக்கவில்லை என்ற விமர்சனங்கள் வரத்தொடங்கிவிட்டன. ஆதலால், அணியின் நலன் கருதி இந்தத் தொடரில் கேப்டன்பொறுப்பை வேறு ஒரு வீரரிடம் ஒப்படைத்து ரோகித் சர்மாவும் பேட்டிங்கில் கவனத்தை திசைதிருப்பினால், மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இல்லாவிட்டால், தொடர்ந்து ரோகித் சர்மாவின் மோசமான ஆட்டத்தையும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி நோக்கிய ஆட்டத்தையுமே ரசிகர்கள் பார்க்க வேண்டியது இருக்கும்.

டெல்லி அணியின் கேப்டன் கம்பீர் தனதுபதவியை ராஜினாமா செய்துவிட்டதால், நிச்சயம் அடுத்த போட்டியில் அந்தஅணியின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என நம்பலாம். அந்த யுத்தி சரியாக செயல்படும்பட்சத்தில் அதேயே ரோகித்சர்மாவும் பின்பற்றலாம்.

ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் இதற்கான முன்னுதாரணமாக ரிக்கி பாண்டிங் திகழ்ந்துள்ளார்.  அணியின் நலனுக்காக இப்படிச் செய்வதில் தவறில்லை என்ற கருத்து வலுபபெற கவுதம் கம்பீர் தலைமைத்துவத்தைத் துறந்ததையடுத்து ரோஹித் சர்மாவுக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23672721.ece

Link to comment
Share on other sites

முந்தைய 8 ஓவர்களில் 104 ரன்கள்: விளாசப்பட்ட ரஷீத் கான் மாற்றிக் கொண்டது எப்படி?

 

 
TH14RASHID

ஸ்பின் குரு முத்தையா முரளிதரனுடன் ரஷீத் கான்.   -  கோப்புப் படம்.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்ற 19 வயது ஆப்கான் புதிர் ஸ்பின்னர் ரஷீத் கான் அதற்கு முந்தைய போட்டிகளில் விளாசப்பட்டார். 8 ஓவர்களில் 104 ரன்களை அவர் விட்டுக் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் அணியில் இருப்பாரா என்ற சந்தேகத்தைப் பலரும் கிளப்ப ரஷீத் கான் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக மீண்டும் உயிர் பெற்றார். அதுவும் லெக் ஸ்பின்னர்களை புரட்டி எடுக்கும் திறனுடைய ஹர்திக் பாண்டியாவுக்கு 17வது ஓவரை மெய்டனாக வீசியது இன்று கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.

கிறிஸ் கெய்ல், சுரேஷ் ரெய்னா இருவரும் ரஷீத் கானுக்கு சாத்துமுறை வழங்கியதற்குக் காரணம் பிளாட்டாக ஃபுல்லாக வீசினார் ரஷித் கான்.

வலது கை வீரர்களை ஆட்டிப்படைக்கும் ரஷீத் கான் இடது கை வீரர்களான கெய்ல், ரெய்னாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். கெய்ல் 6 சிக்சர்களை இவரை மட்டுமே அடிக்க ரெய்னாவோ 9 பந்துகளில் 24 ரன்களை ரஷீத்திடம் எடுத்தார்.

இந்நிலையில் சற்றே பேக் ஆஃப் லெந்த்தில் வீசினால் தன்னை அடிக்க முடியவில்லை, பேட்ஸ்மென்கள் திணறுகின்றனர் என்பதை உடனடியாக அவர் புரிந்து கொண்டு மாற்றிக் கொண்டுள்ளதை அவரே தெரிவிக்கும் போது, “நம் பந்துகளை அடித்து நொறுக்கும்போதுதான் நாம் கற்றுக் கொள்ள முடியும்.

நான் கடைசி 2 போட்டிகளில் கொஞ்சம் ஃபுல் லெந்தில் வீசினேன். அதனால் ரன்கள் கொடுத்தேன். அதனால் கொஞ்சம் லெந்த்தை ஷார்ட் செய்து வீச முடிவெடுத்தேன். அது கைகொடுத்தது.

எந்த பேட்ஸ்மெனாக இருந்தாலும் நாம் வீசும் லைன் மற்றும் லெந்த் முக்கியம். ஹர்திக் பாண்டியாவுக்கு எங்கு வீச வேண்டும் என்பது எனக்கு தெரிந்திருந்தது. அவருக்கு ஃபுல் லெந்தில் வீசக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.

அவர் ஒரு வலுவான ஹிட்டர், எந்த ஒரு பவுண்டரியையும் அவர் சுலபமாகத் தாண்டி அடிக்கக் கூடியவர். அதனால்தான் பேக் ஆஃப் லெந்தில் வீசினாலும் அவர் மட்டையைத்தூக்கி அடிக்க இடம் கொடுக்காமலும் புல் லெந்தில் வீசாமலும் இருக்க முடிவெடுத்தேன்.

அடிப்படைகளை ஒழுங்காகச் செய்தேன். நான் என்ன செய்தேனோ அதற்கு என்னை நானே தயார் படுத்திக் கொண்டேன், மெய்டன் ஓவராக்கினேன்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article23671474.ece

Link to comment
Share on other sites

யாரைத்தான் குறை சொல்வது? பொறுப்பாக ஆடவில்லை - மும்பை பயிற்சியாளர் ஜெயவர்தனே கடும் ஏமாற்றம்

 

 
mumbai

படம். | கேவிஎஸ். கிரி.

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக தோற்கவே முடியாத 118 ரன்கள் இலக்கை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் 87 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்தனேயை கடும் ஏமாற்றத்துக்கு ஆளாக்கியுள்ளது.

“எங்களை நாங்களே இந்த நிலைக்கு ஆளாக்கிக் கொண்டோம் யாரைத்தான் குற்றம் சொல்வது? தோல்வியடைந்த போட்டிகளில் நன்றாகத்தான் ஆடினோம், இந்தப் போட்டிகள் எந்தப்பக்கம் வேண்டுமானாலும் சென்றிருக்கலாம்.

ஆனால் இந்தப் போட்டி (சன் ரைசர்ஸ்) மிகவும் ஏமாற்றமளிக்கிறது, பிட்சில் ஏதோ பூதங்கள் இருப்பது போல் ஆடினோம். நாங்கள் பொறுப்பை எடுத்துக் கொள்ளவில்லை, இதுதான் கடும் ஏமாற்றமளிக்கிறது. பனிப்பொழிவு எதிர்பார்த்தது போல் வந்தது, ஆனால் ஒருவரும் பொறுப்பெடுத்துக் கொள்ளவில்லை. இது துயரத்தை அளிக்கிறது.

ஹர்திக் பாண்டியாவுடன் தொடக்கத்திலிருந்தே பணியாற்றி வருகிறோம். சீசனுக்கு முந்தியும் அவருடன் பயிற்சியில் ஈடுபட்டோம். நம் வீரர்களையும் நாங்கள் ஆய்வுக்குட்படுத்துகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரேமாதிரி ஆட முடியாது, வீரர்கள் வளர்ச்சியடைய வேண்டும். ஹர்திக் போன்ற வீரர்கள் கற்றுக் கொள்வார்கள். கடின உழைப்புத் தேவைப்படுகிறது. வெறும் திறமை மட்டும் நம்மைக் கொண்டு சேர்க்காது. சர்வதேச பவுலர்கள் வந்து பல்வேறு விஷயங்களை நமக்கு எதிராக செலுத்தும் போது அதை கூர்ந்து கவனித்து கற்றுக் கொள்ள வேண்டும். வளர்ச்சியடைய வேண்டும் இல்லையெனில் சீராக ஆட முடியாது.

இருக்கும் வீரர்களைக் கொண்டுதான் ஆட முடியும். வீரர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஆனாலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. இது கூட கொஞ்சம் சீக்கிரமானதுதான், எனக்கு இந்தத் தோல்வியை சிந்திக்க 24 மணி நேரங்கள் வேண்டும். தோல்வி குறித்து உணர்ச்சிவயப்படக்கூடாது என்பது முக்கியம்” என்றார் ஜெயவர்தனே.

http://tamil.thehindu.com/sports/article23669565.ece

Link to comment
Share on other sites

சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பெங்களூர் அணி  8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவிப்பு!
சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பெங்களூர் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவிப்பு!
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.