Jump to content

Recommended Posts

ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிர் விளம்பரமா ராஜஸ்தான் ராயல்ஸ்? சவாலற்ற போட்டியில் வாட்சன் சதத்துடன் வென்று சென்னை முதலிடம்

 

 
watson

வாட்சன் சத நாயகன். | படம்: பிடிஐ.

அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் எந்த ஒரு தீவிரமும், முனைப்பும் இன்றி அறுவையாக ஆடித் தோற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் படுமோசமாக விளையாடி தோல்வி தழுவ சென்னை சூப்பர் கிங்ஸ் 6 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றது.

இன்றைய போட்டியில் ஒரு அணிதான் தீவிரத்துடனும், விறுவிறுப்புடனும் குறிக்கோளுடனும் ஆடியது, அது சென்னை சூப்பர் கிங்ஸ்தான். முதலில் பேட் செய்து 204/5 என்று சென்னை ரன் குவிக்க தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் படுமோசமான சொத்தை பேட்டிங்கில் 140 ரன்களுக்குச் சுருண்டது.

 

சென்னை ஒன்றுமேயில்லாத, சவாலற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதைத் தவிர வேறு வழியில்லை, ஆனால் தமிழ் வர்ணனையாளர்கள் கூறியதுதான் ‘பயங்கரம்’. ‘சென்னைக்கு ஒரு எக்ஸ்ட்ராடினரி விக்டரி’, எக்சலண்ட், எக்சலண்ட், எக்சலண்ட் என்று இப்படி விதந்தோதுவதற்கு இந்தப் போட்டியில் சரியான எந்த ஒரு சவாலையும் சென்னை அணி எதிர்கொள்ளவில்லை, இலக்கு 200 ரன்களுக்கும் மேல் என்பதால் அல்ல இலக்கு 150 ஆக இருந்தாலும் ராஜஸ்தான் இப்படித்தான் ஆடியிருக்கப் போகிறது. ஏனெனில் எக்சலண்ட், பெஸ்ட், எக்ஸ்ட்ராடினரி போன்ற உயர்வு நவிற்சியெல்லாம் அதற்கு நிகரான எதிரிடை இருந்தால்தான் சரியாக இருக்கும், ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் சரிசம அளவான போட்டி இருக்கும் போது ஒன்று சிறப்பாக ஆடியது என்று கூறலாம் ஒரு அணி ஒன்றுமேயில்லை, ஒரு அணி வெல்கிறது என்ற ஒருதலைபட்ச ஆட்டத்தில் எக்ஸ்ட்ராடினரி, எக்சலண்ட் என்ற உயர்வு நவிற்சிகள் அர்த்தமற்றவை.

இதில் டாஸ் வென்று சென்னையை பேட் செய்ய அழைத்ததன் ரகசியம்தான் என்னவென்று புரியவில்லை, இத்தனைக்கும் 40 ஓவர்களுக்கும் நல்ல பிட்ச்தான் இது என்று டாஸ் முடித்துக் கூறிய ரஹானே ஏன் சென்னையை பேட் செய்ய அழைக்க வேண்டும்? இலக்கை விரட்டுவதில் நெருக்கமாக வந்து வென்றுள்ள சென்னை, கிங்ஸ் லெவன் அணிக்கு எதிராக தோற்றுப் போனது. அப்படியிருக்கையில் முதலில் பேட் தான் செய்திருக்க வேண்டும்.

சரி பவுலிங்கைத் தேர்வு செய்தாகி விட்டது. பவுலிங் எப்படி வீச வேண்டும், முழுத் தீவிரத்தையும் காட்ட வேண்டாமா? படுசொத்தையாக வீசியதில் வாட்சன் புகுந்து 51 பந்துகளில் அதிரடி சதம் கண்டார், சுரேஷ் ரெய்னா காயத்திலிருந்து வந்தவர் அவருக்கு நெஞ்சுயர பவுன்சரை வீசினால் அவ்வளவுதான் கொஞ்ச நேரத்தில் கையில் கொடுத்து விட்டு போயிருப்பார். ஆனால் வாட்சனுக்கும், ரெய்னாவுக்கும் மாறி மாறி கேட்டுக் கேட்டு போட்டுத் தந்தனர் ராஜஸ்தான் ராயல்ஸ்.

சிறப்பு ரயிலில் தல தோனியையும், சென்னை வெற்றியையும் பார்க்க வந்த ரசிகர்களுக்கு சென்னையின் எளிதான வெற்றி, அதிரடி பேட்டிங், பவுலிங், என்பதை ரசித்திருப்பார்கள், ஆனால் இன்னும் சவாலாக இருந்திருந்தால் இவ்வளவுதூரம் அங்கு போய் பார்த்திருப்பதற்கு ஒரு நல்ல கிரிக்கெட் விருந்தாகக் கிடைத்திருக்கும். ராஜஸ்தான் இதற்கு ஒரு பெரிய முட்டுக்கட்டை.

ஷேன் வாட்சனுக்கு உள்ளூர் வீரர் திரிப்பாதி விட்ட கேட்சும் வாட்சனின் சதமும்

முதல் ஓவரிலேயே ஸ்லிப்பில் ரெகுலராக வரும் கேட்ச்தான் விட்டார் திரிப்பாதி, தன் சொந்த மண்ணில் பீல்டிங்கிலும் சொதப்பி, பேட்டிங்கிலும் காணாமல் போனார். லாஃப்லின் வீசிய கட் செய்வதற்கு வாகில்லாத பந்தை கட் செய்ய முயன்று அம்பாத்தி ராயுடு 12 ரன்களில் வெளியேற, ரெய்னா, வாட்சன் ஜோடி சேர்ந்தனர்.

ரெய்னா சமீப காலங்களில் ஆடிவரும் ‘சுதந்திர வெளிப்பாடு மனோபாவத்துடன்’ (careless abandonment)ஆடினார். ராஜஸ்தான் ராயல்ஸ் நன்றாகப் போட்டுக் கொடுத்தது. கே.கவுதம், குறிப்பாக ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரை வலைவீச்சாளர்கள் போல் சாத்தினார் வாட்சன், கவுதம் 13 பந்துகளில் 31 ரன்கள் வாட்சனால் விளாசப்பட்டார். இதில் 3 சிக்சர்கள் ஒரு பவுண்டரி அடங்கும். ஸ்டூவர்ட் பின்னியின் ஒரு ஓவரில் போனால் போகிறது என்று 3 பவுண்டரிகளுடன் நிறுத்திக் கொண்டார் வாட்சன்.

குறுக்குசால் மட்டை போட்டார் வாட்சன் அதற்கு வாகாக ராஜஸ்தான் பந்து வீச்சு அமைந்தது. லெக் திசையில் மட்டும் அவர் பாதிக்கும் மேலான ரன்களைக் குவித்திருப்பார். தன் 28வது பந்தில் ஸ்லாக் ஸ்வீப்பில் வாட்சன் அரைசதம் கடந்தார். அடுத்த அரைசதம் 23 பந்துகளில் வந்தது, கெய்லை விடவும் விரைவாக சதம் எடுத்தார் வாட்சன், ஆனால் கெய்ல் ஆட்டத்தைப் பார்க்கும் போது உள்ள பிரமிப்பு இவரிடம் இல்லை, காரணம் அங்கு சன் ரைசர்ஸ் பவுலிங் அப்படி. 57 பந்துகளில் 107 ரன்கள், இதில் 9 பவுண்டரிகள் 6 சிக்சர்கள், முடிவில் கொஞ்சம் மந்தமடைந்தார் ஆனால் அது பாதிக்கவில்லை.

சுரேஷ் ரெய்னா 29 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் அடித்தார். முதல் 15 ஒவர்கள் வரையிலும் 10-11 ரன்கள் என்று ரன் விகிதம் வைத்திருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு கட்டத்தில் 220-225 ரன்கள் வரை போகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஷ்ரேயஸ் கோபால் தன் ஸ்பின் மூலம் 4 ஓவர்களில் வெறும் 2 பவுண்டரிகளையே கொடுத்து 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் முக்கிய விக்கெட்டுகளான ரெய்னா, தோனி (5) ஆகியோர் விக்கெட்டுகளும் அடங்கும். பிறகு சாம் பிலிங்ஸ் விக்கெட்டையும் கோபால் சாய்த்தார். இதனால்தான் கடைசி 7 ஓவர்களில் 54 ரன்கள் மட்டும் வந்தது. ஷ்ரேயஸ் கோபால் இந்தத் தொடரில் விராட் கோலி, டிவில்லியர்ஸ், ரெய்னா, தோனி ஆகியோரை வீழ்த்தி அசத்தியுள்ளார். உனாட்கட் மறுபடியும் வேஸ்ட், அவர் இதுவரையிலான போட்டிகளில் மொத்தம் 6-7 பந்துகளையே ஸ்டம்பில் வீசியுள்ளார். இன்றும் 4 ஓவர்களில் 39 ரன்கள். சென்னை அணி 204/5 என்ற ஸ்கோரை எட்ட சிரமம் எதுவும் படவில்லை. தொடக்கத்திலிருந்தே ரன் விகிதம் ஓவருக்கு 10-11 என்றே வந்து கொண்டிருந்தது.

ரஹானேவின் மோசமான கேப்டன்சி பேட்டிங் வரிசையிலும் பளிச்

ராகுல் திரிப்பாதி கடந்த ஐபிஎல் போட்டிகளில் தொடக்கத்தில் இறங்கி பவர் பிளேயில் கன்னாபின்னாவென்று ரன்களைக் குவித்தவர், ஆனால் அவரைப் பிடிவாதமாக இத்தனை போட்டிகளாக நடுவரிசையில் களமிறக்கி வருகிறார்.

ஹெய்ன்ரிச் கிளாசன் ஒரு நடுவரிசை வீரர் அவரைப்போய் தொடக்கத்தில் இறக்கினார். வாட்சன் தனக்கு கேட்ச் விட்ட தன் முந்தைய அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கிளாசனுக்கு ஒரு கேட்சை விட்டார். ஆனாலும் அவர் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை, மந்தமான பிட்ச் அவரது கால்நகர்த்தல்களில் பிரதிபலித்து ஷர்துல் தாக்கூர் பந்தில் மிடில் ஸ்டம்பை இழந்தார். சஞ்சு சாம்சனை அன்று மாவி ஷார்ட் பிட்சில் வீழ்த்தினார் இன்று தீபக் சாஹர் ஷார்ட் பிட்ச் பந்தில் 2 ரன்களில் சஞ்சு சாம்சனை வெளியேற்றினார்.

16 ரன்கள் எடுத்த ரஹானே அசிங்கமான ஒரு ஷாட்டில் சாஹரிடம் பவுல்டு ஆக ராஜஸ்தான் அணி 33/3 என்று ஆனது.

பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் இணைந்தனர் இம்ரான் தாஹிரை அடித்த ஒரு சிக்ஸ் தவிர பட்லருக்கு எதுவும் சரியாக மாட்டவில்லை அவர் பிராவோவிடம் 22 ரன்களுக்கு வீழ்ந்தார். ஸ்டோக்சுக்கும் ஒன்றும் மாட்டவில்லை. 45 ரன்களில் அவரும் வெளியேற ராஜஸ்தான் பேட்டிங் அவர்கள் பந்து வீச்சைப் போல் பிசுபிசுத்தது. ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன்.

சென்னை அணியில் சாஹர், தாக்குர், பிராவோ, கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வாட்சன் இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர், இந்த சொத்தை பேட்டிங்கிலும் இம்ரான் தாஹிர் 4 ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்ததை தோனி நிச்சயம் குறித்துக் கொண்டிருப்பார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் இனியும் இப்படியாடினால் ஐபிஎல் தொலைக்காட்சி ரேட்டிங் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆடும்போது கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

http://tamil.thehindu.com/sports/article23621945.ece

 

 

"எந்த ஊருக்குப் போனாலும் ஒரு கலக்கு கலக்கணும்..!" - ராஜஸ்தானைப் புரட்டி எடுத்த சென்னை #CSKvsRR

 
 

ஐ.பி.எல் ஓரளவுக்கு கணிக்க முடியும் நிலைமைக்கு வந்திருக்கிறது. எந்த டீம் கெத்து, எந்த ப்ளேயர் வெய்ட்டு, எந்த பவுலர் ரைட்டு என்பதை கொஞ்சம் கணிக்க முடிகிறது. அந்த வகையில் சென்னையும் ராஜஸ்தானும் மோதிய மேட்ச்சில் சென்னை ஜெயிக்கும் என்பதே நிலைமை. ஆனால், இப்படி ஒரு 'வாவ்' வெற்றியை தோனியே நினைத்திருக்க மாட்டார். 

“இனி நம்ம ஊரு புனே… இன்னைக்கு எதிரி கோன் ஹே” என மஞ்சள் ஆர்மி கெத்து காட்டியது. ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை என்றாலும் நல்ல கூட்டம். டாஸ் ஜெயித்த ரஹானேவை தோனி “அதான” என்பது போல பாக்க, ‘அதேதான்’ என சேஸிங்கைத் தேர்ந்தெடுத்தார் ராஜஸ்தான் கேப்டன். சென்னை அணியில் விஜய்க்கு பதிலாக ரெய்னாவும், ஹர்பஜனுக்கு பதிலாக கார்ன் ஷர்மாவும் மாறியிருந்தார்கள். ராஜஸ்தானிலும் இரண்டு மாற்றங்கள். சென்ற போட்டியில் நன்றாக ஆடியும் ஷார்ட்டுக்கு பதிலாக க்ளாஸினும் குல்கர்னிக்கு பதில் பின்னியும் களமிறங்கினார்கள்.

முதல் ஓவரின் முதல் பாலே நோ பால். பின்னி போட்ட ஃப்ரீ ஹிட்டை பவுண்டரிக்கு அனுப்பினார் வாட்ஸன். அடுத்தும் 4 என அந்த ஓவரிலே 14 ரன்கள். ஆனால் கடைசிப் பந்தில் ஸ்லிப்பில் வாட்சன் தந்தக் கேட்ச்சை திரிபாதி தவற விட்டார்.  இன்னொரு வாய்ப்பும் தந்தார் வள்ளல் வாட்ஸன். பாயின்ட்டில் வந்த அந்தக் கடினமான கேட்ச்சையும் தவறவிட்டது ராஜஸ்தான். இத்தனை லைஃப் கிடைத்தால் சும்மா இருப்பாரா? 4,6 என ஆக்டிவ் மோடுக்கு மாறினார் ஆஸி அழகன். இந்தப்பக்கம் ராயுடு அவுட் ஆனதும் வந்த ரெய்னா தொடர்ந்து நான்கு பவுண்டரிகள் அடிக்க, பவர் ப்ளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 69 ரன் அடித்திருந்தது தோனி அண்ட் கோ.

ஃபீல்டிங் கட்டுப்பாடுகள் தளர்ந்தாலும் வாட்ஸன் தளரவில்லை. 28 பந்துகளில் 50 ரன் அடித்தவர், கெளதம் வீசிய ஓவரில் 6,4,6 என பந்தை பவுண்டரிக்கு பார்சல் செய்தார். “நீ ஆடு தல” என்பது போல ரெய்னா தந்த சப்போர்ட்டும் பக்கா சொக்கா.

சென்னை

10 ஓவருக்கு பிறகு ரெய்னாவும் அதிரடி கிளப்ப, ரன்ரேட் மெர்சல் ஆனது. 46 ரன் அடித்திருந்தபோது ரெய்னா அவுட் ஆனார்.அதன்பின் களம் வந்தவர் தோனி. 

தோனியின் ஆட்டத்தில் சென்ற போட்டியிலும் இந்தப் போட்டியிலும் முக்கியமான மாற்றத்தைக் காண முடிந்தது. முதல் பந்தில் ஒரு ரன் அடித்தவர் அந்தப் பந்தை பவுண்டரிக்கு விளாசினார். ஆரம்பத்தில் பந்தைச் சாப்பிடுகிறார் தோனி என்ற விமர்சனம் காரணமா அல்லது கொஞ்சம் டாப் ஆர்டரில் வருவதால் ரிஸ்க் குறைவு என்ற எண்ணம் காரணமா தெரியவில்லை. ஆனால், மூன்றாவது பந்தை சிக்ஸருக்கு அனுப்ப நினைக்க, ஜம்ப் செய்து ஜாக்பாட்டை கைவசமாக்கினார் கெளதம். அதன்பின் சென்னையின் ரன்ரேட் குறையத் தொடங்கியது.

வாட்ஸனுக்கு ஷார்ட் பாலாக போட்டது ராஜஸ்தான். அதையும் நேராக லாங் ஆனில் அடிக்கும் அளவுக்கு அசால்ட் செய்தார் வாட்ஸன். ஆரம்பத்திலே இரண்டு கேட்ச்கள் வாட்ஸன் தந்த போதே இரண்டு ஸ்லிப் நிற்க வைத்திருக்கலாம். ரஹானே தவற விட்ட வாய்ப்பு அது. விளைவு, 51 பந்தில் சதமடித்தார் வாட்ஸன். சீசனின் இரண்டாவது சதத்தை அடித்தவரும் 35 வயதைக் கடந்தவர். 

220 ரன்னைக் கடக்கும் என்ற எதிர்பார்ப்பை சென்னையால்,அதைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. தொடர் விக்கெட் இழப்பால் 204 மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால், அதுவே வெற்றிக்கு போதும் என்பது அப்போதே தெரிந்தது. ஸ்ரேயாஸ் கோபால் மட்டும் 20 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார் (4 - 0 - 20 - 3 ). தோனி, ரெய்னா, பில்லிங்ஸ் என ஃபார்மான பிளேயர்களை அவர் அவுட் ஆக்கியிருந்தாலும், அதில் ஃபீல்டர்களின் பங்கு அதிகம் என்பதையும் குறிப்பிடவேண்டும். 

'நீங்க நோ பால் போட்டா நாங்க வைடு போடுவோம்' எனத் தொடங்கினார் தீபக். இரண்டாவது பாலே க்ளாஸீன் தந்த ஸ்லிப் கேட்ச்சைத் தவற விட்டார் வாட்ஸன். “என் கேட்ச்சை நீங்க விட்டிங்க இல்லை. தானிக்கு தீனி சரியா போச்சு” என்பது போல இருந்தது வாட்ஸனின் பார்வை. அந்த ஓவரில் ஏறி வந்து ரஹானே அடிச்ச ஸ்டிரெய்ட் சிக்ஸ் லவ்லி. சரியான டைமிங், சரியான பேலன்ஸ். சென்னை முதல் ஓவரில் அடித்த அதே 14 ரன்னை ராஜஸ்தானும் அடித்தது. சபாஷ் சரியான போட்டி என்றுதான் அப்போது தோன்றியது. 

இரண்டாவது ஓவரில் க்ளாஸீனை க்ளீன் போல்ட் ஆக்கினார் ஷ்ரதுல் தாக்கூர். நேராக ஸ்டம்புக்கு வந்தப் பந்தைச் சுத்தமாக கணிக்கத் தவறினார் க்ளாஸின். ராஜஸ்தானின் ஷார்ட் பால் டெக்னிக்கையே சென்னையும் பின்பற்றியது. ஆனால் சாம்சனால் அதைச் சமாளிக்க முடியவில்லை. வந்த ஷார்ட் பாலை லெக்சைடில் அடிக்க, கேட்ச். ராஜஸ்தானுக்கு மிகப்பெரிய இடியாக இருந்தது அந்த விக்கெட். 

தொடர்ந்து, ரஹானேவும் க்ளீன் போல்ட் ஆக, மேட்ச் ஒன் சைடு ஆனது. ஸ்டோக்ஸ் புனேவுக்காக ஆடியவர். அவர் களத்திலிருந்தது நம்பிக்கையான விஷயம் என்றாலும் 204-ஐ சேஸ் செய்ய 6 ஓவரில் 37 அடித்திருக்கக் கூடாது இல்லையா? 

சென்னை

10வது ஓவரில் ஈஸி ரன் அவுட். அதையும் மிஸ் ஃபீல்டு செய்தார் கார்ன் ஷர்மா. ஏற்கெனவே ஒரு மிஸ் ஃபீல்டு என்பதால், அடுத்த மேட்ச் தோனி வாய்ப்பு தருவாரா என்பது சந்தேகமே. 

11வது ஓவரை வீச வந்த பிராவோவுக்கு முதல் பந்திலே ஆச்சர்யம். பட்லர் அடித்த ஷாட் தாஹீர் கையில் தஞ்சமானது. அதன் பின் நடந்ததை எல்லாம் சொல்வது என்பது ராஜஸ்தான் ரசிகர்களுக்கு ரண வேதனையைக் கொடுக்கலாம் என்பதால் சென்னை வென்றது என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

இந்தப் போட்டியின் பாசிட்டிவ் விஷயமாக சென்னை பவுலிங்கை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், கடைசி நேர பேட்டிங்கை பட்டி டிங்கரிங் பார்க்க வேண்டும். ராஜஸ்தான் ஆரம்பத்தில் 4 போட்டிகளில் ஆட்களை மாற்றாமல் ஆடிவிட்டு, செட் ஆன ஷார்ட்டைத் தூக்கியதைத் தவிர்த்திருக்க வேண்டும்.  சந்தேகத்துக்கு இடமின்றி மேன் ஆஃப் த மேட்ச் வாட்ஸனுக்கே தரப்பட்டது. பந்து வீச்சிலும் 3 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே தந்து ஒரு விக்கெட்டை எடுத்திருந்தார் வாட்ஸன்.

தொடர்ந்து 3 போட்டிகளில் கடைசி ஓவர் வரை இழுத்து ரசிகர்களுக்கு பிரஷரைத் தந்த சென்னை, இந்த முறை ஒரு ரிலாக்ஸ் வெற்றியைத் தந்திருக்கிறது. இந்த சீசன் சென்னையின் பன்ச் ஒன்றுதான். “ஃபைனல்  நிச்சயம்; கப் லட்சியம்”.

ஆனால் இன்னும் இருக்கிறது ஐபிஎல். பார்ப்போம்.

 

https://www.vikatan.com/news/sports/122833-ipl-match-number-17-csk-beats-rr-by-64-runs-and-tops-the-table.html

Link to comment
Share on other sites

  • Replies 592
  • Created
  • Last Reply

இது சென்னை சூப்பர் கிங்ஸ், புனே சூப்பர் கிங்ஸ் அல்ல: வெற்றிக்குப் பிறகு கேப்டன் தோனி

 

 
dhonijpg

தோனி. | பிடிஐ

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ‘கேக்வாக்’ வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் வெற்றி குறித்தும், ரசிகர்கள் குறித்தும் புனே மைதானம் குறித்தும் பேசினார்.

ரஹானேயால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ஷேன் வாட்சனின் புரட்டல் சதத்துடன் 204 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்திலிருந்தே நிகர ரன் விகிதத்துக்கு ஆடுவது போல் ஆடி 140 ரன்களுக்குச் சுருண்டது.

 

இந்தப் போட்டி குறித்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் தோனி கூறும்போது,

“பொதுவாக பின்னால் இருந்து வந்து வெற்றி பெறுவோம், இந்தப் போட்டியில் நாங்கள் முன்னிலை வகித்தோம், இது எங்களுக்கு அன்னியமாகத் தோன்றுகிறது. எங்களில் பலர் 30 வயதுக்கு மேற்பட்டவ்ர்கள் எனவே உடற்தகுதி மிக முக்கியம்.

அனுபவம் கைகொடுக்கும், எங்களிடம் நல்ல பீல்டர்கள் உள்ளனர், ஆனால் உடல் தகுதியில் சிறப்பாகத் திகழ வேண்டும். மைதான மாற்றத்தைப் பற்றி கூற வேண்டுமெனில் நான் இங்கு புனே அணிக்காக ஆடும்போது ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவளித்தனர், இப்போது அவர்கள் அளித்த ஆதரவுக்கு அவர்களுக்கு மீண்டும் எங்களால் திருப்பி அளிக்க முடிகிறது என்பது திருப்தி அளிக்கிறது.

ஆம் இது சென்னை சூப்பர் கிங்ஸ்தான் புனே சூப்பர் கிங்ஸ் அல்ல. ஆனால் 7வது போட்டி முடிவில் இங்கு அதிகம் மஞ்சளைப் பார்க்கலாம். பிட்சைப் பொறுத்தவரை நான் உறுதியாக இல்லை. பவுன்ஸ் கொஞ்சம் முன்னேபின்னே இருந்தது. ஒரு மாதிரியான பஞ்சு போன்ற பவுன்ஸ். பேக் ஆஃப் லெந்த் பந்துகளை அடிப்பது சில வேளைகளில் கடினம்.

இன்று பேட்ஸ்மென்கள் பவுலர்களுக்கு பணியை எளிதாக்கினர். 200 ரன்கள் எடுத்தது பவுலர்கள் பணியை குறைக்கிறது, ஆனாலும் லைன் அண்ட் லெந்த், வேகத்தைக் கூட்டுவது குறைப்பது என்று ஸ்பின்னர்கள் வித்தியாசமாகச் செய்து கொண்டுதான் இருக்க வேண்டும். விரட்டும் போது முதல் 6 ஓவர்கள் முக்கியம்.

பிட்ச் நன்றாக இருந்தால் எந்த அணியும் முதலில் பேட் செய்யத் தயங்காது” என்றார் தோனி.

http://tamil.thehindu.com/sports/article23622173.ece?homepage=true

Link to comment
Share on other sites

பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்: கிறிஸ் கெயிலை சமாளிக்குமா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ?

21CHPMUCHRISGAYLE

ஐபிஎல் டி 20 தொடரில் இன்று மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மாற்றங்களுடன் புதிய வடிவம் பெற்றுள்ள அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பெரிய அளவிலான ஹிட்டர்களான ஆந்த்ரே ரஸ்ஸல், கிறிஸ் கெயில் ஆகியோர் இடையிலான நேரடி மோதலாக பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் நேற்றுமுன்தினம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 பந்துகளில் 104 ரன்கள் விளாசி இந்த சீசனில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்தத் தொடரில் சிறந்த பந்து வீச்சை கொண்ட அணியாக கருதப்படும் ஹைதராபாத்துக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் அனைவரது கவனத்தையும் தன் மீது குவியச் செய்துள்ளார் கிறிஸ் கெயில். இந்த ஆட்டத்தில் அவர், 11 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இதில் 6 சிக்ஸர்கள், உலகின் சிறந்த தரவரிசையில் உள்ள டி 20 சர்வதேச பந்து வீச்சாளர் ரஷீத் கானுக்கு எதிராக விளாசப்பட்டதாகும்.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் தன்னை ஏலம் எடுக்காமல் ஊதாசீனப்படுத்திய பல்வேறு அணிகளுக்கு பொருத்தமான வகையில் தனது மட்டையின் விளாசலால் கிறிஸ் கெயில் பதிலடி கொடுத்ததாகவே கருதப்படுகிறது. 38 வயதான கிறிஸ் கெயில் கடந்த 10 சீசன்களில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடிய நிலையில் இந்த சீசனுக்கான ஏலத்தில் அவரை யாரும் விலைக்கு வாங்க முன்வரவில்லை. அந்த சூழ்நிலையில்தான் பஞ்சாப் அணியின் ஆலோசகரான வீரேந்திர சேவக், கிறிஸ் கெயில் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கினார்.

முதல் இரு ஆட்டங்களிலும் கிறிஸ் கெயிலுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் அடுத்த இரு ஆட்டங்களிலும் கிடைத்த பொன்னான வாய்ப்புகளை முழுமையாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற ஆட்டத்தில் கிறிஸ் கெயில் 63 ரன்கள் விளாசி வெற்றியில் முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு கிறிஸ் கெயில் கூறும்போது, “ஏராளமான மக்கள் நான், எனது திறமையை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருப்பதாக கூறினார்கள். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நான் யாருக்கும் எதையும் நிரூபிக்க இங்கு வரவில்லை. கிரிக்கெட்டை மகிழ்வுடன் விளையாடி நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான்” என்றார்.

ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் மோதலில் சுழற்பந்து வீச்சாளர்களான சுனில் நரேன், குல்தீப், பியூஸ் சாவ்லா, நித்திஷ் ராணா ஆகியோரிடம் இருந்து சவால்களை கிறிஸ் கெயில் எதிர்கொள்ளக்கூடும். இந்த நால்வர் கூட்டணி ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட்டாக 14 ஓவர்களை வீசி, 5 விக்கெட்களை வீழ்த்தியதுடன் எதிரணியின் ரன்குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினார்கள்.

மாற்றங்களுடன் புதிய வடிவம் பெற்றுள்ள பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், மயங்க் அகவர்வால், கருண் நாயர் ஆகியோரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் சளைத்தவர்கள் இல்லை. மேலும் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்கும் வரிசையில் ஆரோன் பின்ச், யுவராஜ் சிங் ஆகியோர் இருப்பதும் கூடுதல் பலம்.

இவர்கள் இருவரிடம் இருந்து இதுவரை பெரிய அளவிலான ஆட்டம் வெளிப்படவில்லையென்றால், இவர்கள் அபாயகரமான வீரர்களாகவே கருதப்படுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய அணி நிர்வாகத்தால் குறுகிய வடிவிலான ஆட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள அஸ்வின் அணியை சிறப்பாக நடத்தி வீரர்களின் திறனை வெளிக் கொண்டுவருவதில் முன்னேற்றம் கண்டு வருவது கூடுதல் பலமாக கருதப்படுகிறது. 4 ஆட்டத்தில் 3 வெற்றிகளுடன் பஞ்சாப் அணி 6 புள்ளிகள் பெற்றுள்ள போதிலும் ரன்விகித அடிப்படையில் (+0.277) பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது.

சுழற்பந்து வீச்சில் 17 வயதான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஜீப், இந்தத் தொடரில் அனைவராலும் கவனிக்கப் படக்கூடிய வீரராக மாறி உள்ளார். 17 வயதான அவர், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலியை நேர்த்தியாக ஆட்டமிழக்க செய்திருந்தார். 4 ஆட்டங்களில் மிக சிக்கனமாகவே ரன்களை விட்டுக் கொடுத்துள்ள (சராசரியாக 6.80) முஜீப்பிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ஆட்டங்களில், 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் (நெட் ரன் ரேட் +0.825) முதலிடம் வகிக்கிறது. ஆட்டத்தை தனிப்பட்ட ஒரு வீரராக கையாண்டு வெற்றியை தேடித் தரும் வீரராக ஆந்த்ரே ரஸ்ஸல் திகழ்கிறார். கடைசியாக டெல்லி அணிக்கு எதிராக 12 பந்துகளில் 41 ரன்கள் விளாசி மிரளச் செய்திருந்தார். கொல்கத்தா அணிக்கு இந்த சீசனில் மிகப் பெரிய ஆதாயமாக நித்திஷ் ராணா உள்ளார். கடந்த சீசனில் மும்பை அணிக்காக விளையாடிய அவர், தற்போது கொல்கத்தா அணியில் ஆல்ரவுண்டராக வலம் வருகிறார். டெல்லி, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான அடுத்தடுத்த ஆட்டங்களில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ராணா, பேட்டிங்கில் அணியின் முதுகெலும்பாக திகழ்கிறார்.

பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராக செயல்பட்டாலும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி, ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அஜிங்கய ரஹானே ஆகியோரது விக்ெட்களை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தார் ராணா. இன்றைய ஆட்டத்திலும் ஆல்ரவுண்டராக அவரிடம் இருந்து சிறந்த திறன் வெளிப்படக்கூடும். இவர்களுடன் சுனில் நரேன், ராபின் உத்தப்பா ஆகியோரும் பேட்டிங்கில் மிரட்ட காத்திருக்கின்றனர். கிறிஸ் லின், இந்த சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் பெரிய அளவிலான இன்னிங்ஸை விளையாட வேண்டிய நிலையில் அவர் உள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article23624331.ece

Link to comment
Share on other sites

பேட்டிங்கில் புதிய சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

 
அ-அ+

புனேவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து, குறைவான ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. #VivoIPL #ChennaiSuperKings

 
 
 
 
பேட்டிங்கில் புதிய சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்
 
 
புனே:
 
ஐபிஎல் தொடரின் 17-வது ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷேன் வாட்சன் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் சதமடித்தார். 
 
106 ரன்கள் எடுத்து வாட்சன் கடைசி ஓவரின் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும். 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ராஜஸ்தான் அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 
 
இப்போட்டியில், முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாட்சன் ராஜஸ்தான் அணி பவுலர்களை திணறடிக்க, சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சென்னை அணி 13 ஓவர்களில் 150 ரன்கள் குவித்தது. இதையடுத்து, குறைவான ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு மும்பை அணிக்கு எதிராக 13.1 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்தது. கடந்த 2010ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 13.5 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. #VivoIPL #ChennaiSuperKings
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/21041358/1158133/IPL-2018-Chennai-Super-Kings-scored-150-runs-in-13.vpf

Link to comment
Share on other sites

புத்துயிர் பெறுமா பெங்களூரு?: டெல்லி அணியுடன் இன்று மோதல்

 

 
VIRATKOHLI

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு, டெல்லி அணிகள் தலா 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை மட்டு பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இரு இடங்களில் உள்ளன. இரு அணிகளுக்குமே இன்றைய ஆட்டம் தொடரில் மீண்டு வருவதற்கான வாய்ப்பாக கருதப்படுகிறது.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வி கண்ட நிலையில் அடுத்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. ஆனால் கடைசி இரு ஆட்டங்களிலும் ராஜஸ்தான், மும்பை அணிகளிடம் வீழ்ந்தது. பெங்களூரு அணி பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சொந்த மண்ணில் கடைசியாக நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் 200-க்கும் அதிகமான ரன்களை வாரி வழங்கினர். சுழற்பந்து வீச்சாளர்களான யுவேந்திரா சாஹல், வாஷிங்டன் சுந்தர் கூட்டணியால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலவில்லை.

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 57 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்து அதீத பார்முக்கு திரும்பியிருப்பது அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அந்த ஆட்டத்தில் கோலி மட்டுமே கடைசி வரை போராடினார். மற்ற எந்த ஒரு பேட்ஸ்மேனிடம் இருந்து அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்கும் விஷயத்திலும் அந்த அணி மெனக்கெட வேண்டியதுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணியில் சில மாற்றங்கள் இருக்கக்கூடும்.

பிரெண்டன் மெக்கலம், மொயின் அலி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 ஆட்டங்களில் 47 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த மெக்கலம் கடைசி ஆட்டத்தில் தனது இடத்தை இழந்திருந்தார்.

காம்பீர் தலைமையிலான டெல்லி அணி முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட அடுத்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் வீழ்ந்தது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜேசன் ராய் 91 ரன்கள் விளாச வெற்றிப் பாதைக்கு திரும்பிய டெல்லி அணி தனது கடைசி ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் வெற்றியை தாரைவார்த்தது. அனுபம் வாய்ந்த காம்பீர், மட்டையை சுழற்றக்கூடிய மேக்ஸ்வெல், இளம் வீரர்களான ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இணைந்து கூட்டாக திறனை வெளிப்படுத்தாதது பின்னடைவாக உள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23624349.ece

Link to comment
Share on other sites

ஐபிஎல்- கொல்கத்தாவிற்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #KKRvKXIP

 
 
ஐபிஎல்- கொல்கத்தாவிற்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
 
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

பஞ்சாப் அணியில் மேகித் சர்மா நீக்கப்பட்டு அங்கித் ராஜ்பூட் சேர்க்கப்பட்டுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/21154119/1158267/IPL-2018-KKRvKXIP-Ashwin-won-toss-select-bowl-first.vpf

Link to comment
Share on other sites

மோசமான ஆட்டம்- ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் வார்னே

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 140 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்ததால் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் வார்னே. #RR

 
மோசமான ஆட்டம்- ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் வார்னே
lg.php?bannerid=13789&campaignid=2428&zo
 
ஐபிஎல் தொடரின் 17-வது ஆட்டம் நேற்று புனேவில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. வாட்சனின் அபார சதத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. பின்னர் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களம் இறங்கியது. அந்த அணி 18.3 ஓவரில் 140 ரன்களில் சுருண்டு 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டிக்கு முன்பு கொல்கத்தா அணியிடம் தோல்வியடைந்தது. நேற்றைய தோல்வியின் மூலம் தொடர்ச்சியாக இரண்டு தோல்வியை சந்தித்துள்ளது. புள்ளிகள் பட்டியலில் 5 போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்து 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

மோசமான தோல்விக்காக அந்த அணியின் தலைமை பயிற்சியாளரும், ஆலோசகரும் ஆன ஷேன் வார்னே ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

201804211618280506_1_warne001-s._L_styvpf.jpg

இதுகுறித்து ஷேன் வார்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மூன்று வகையிலும் (பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்) மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வீரர்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. முயற்சி செய்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.

நாங்கள் சரியான நிலைக்கு திரும்புவோம். அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால், முதல் பாதி சீசனில் 4 வெற்றி, 3 தோல்வி என்ற நிலை ஏற்படும், இரண்டு வெற்றி, ஐந்து தோல்வி என்றால் அது சரியானது அல்ல’’ என்று பதவிட்டுள்ளார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/21161828/1158274/IPL-2018-Shane-Warne-apologises-after-Rajasthan-Royals.vpf

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018- டெல்லிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பந்து வீச்சு தேர்வு

 

சின்னசாமி மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் டெல்லிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #RCBvDD

 
ஐபிஎல் 2018- டெல்லிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பந்து வீச்சு தேர்வு
 
ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது ஆட்டம் பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் போடப்பட்டதில் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். பெங்களூர் அணியில் சர்பராஸ் கான் நீக்கப்பட்டு மனன் வோராவும், டெல்லி அணியில் ஷமி நீக்கப்பட்டு ஹர்ஷல் பட்டேலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெல்லி அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. காம்பீர், 2. ஜேசன் ராய், 3, ஷ்ரேயாஸ் அய்யர், 4. ரிஷப் பந்த், 5. மேக்ஸ்வெல், 6. விஜய் சங்கர், 7. கிறிஸ் மோரிஸ், 8. ராகுல் டெவாடியா, 9. ஹர்ஷல் பட்டேல், 10. நதீம், 11, டிரென்ட் போல்ட்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. குயின்டான் டி காக், 2. மனன் வோரா, 3. விராட் கோலி, 4. டி வில்லியர்ஸ், 5. மந்தீப் சிங், 6. கோரி ஆண்டர்சன், 7. வாஷிங்டன் சுந்தர், 8. கிறிஸ் வோக்ஸ், 9. உமேஷ் யாதவ், 10. முகமது சிராஜ், 11. சாஹல்.
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/21194548/1158307/IPL-2018-RCBvDD-virat-Kohli-won-toss-select-field.vpf

Link to comment
Share on other sites

#ஐபிஎல்2018 : அதிகம் கவனத்தை ஈர்க்கும் ஐந்து இளம் வீரர்கள் யார்?

 
சூர்யகுமார் யாதவ்படத்தின் காப்புரிமைAFP

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் பதினோராவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் 25% போட்டிகள் நிறைவடைந்துள்ளன. சில மூத்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியுள்ள நிலையில் பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

யுவராஜ் சிங், கவுதம் கம்பீர், பென் ஸ்டோக்ஸ், ஆரோன் பின்ச், குயின்டன் டீ காக் ஆகியோர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில் இளம் வீரர்கள் அதகளம் செய்து வருகிறார்கள்.

1. சூர்யகுமார் யாதவ்

11வது ஐபிஎல் சீஸனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. சென்னை அணியின் அபாரமான பந்துவீச்சில் முதல் நான்கு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது மும்பை இந்தியன்ஸ். அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேனான எவின் லெவிஸ் என இரண்டு முக்கியமான பேட்ஸ்மேன்கள் பவர்பிளே முடிவதற்குள்ளாகவே களத்தில் இருந்து பெவிலியன் திரும்பிவிட்டனர்.

இந்நிலையில் 27 வயதைச் சேர்ந்த இளம் நாயகன் சூர்யகுமார் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களை நொறுக்கி அதிரடியாக 29 பந்துகளில் 43 ரன்கள் குவித்த்தார். இதில் ஆறு பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். மும்பை அணியின் அடுத்த போட்டியிலும் சூர்யகுமார் 31 பந்துகளைச் சந்தித்து 28 ரன்கள் குவித்தார்.

சூர்யகுமார் யாதவ்படத்தின் காப்புரிமைAFP

சூர்யகுமார் யாதவ் முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வந்தார். கொல்கத்தா அணியில் துணை கேப்டனாகவும் கீழ் நடுத்தர வரிசையிலும் களமிறங்கி வந்த சூர்யகுமார் யாதவை இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 3.2 கோடிக்கு எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்.

சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடுவது முதல்முறையல்ல. 2012 ஐபிஎல் தொடரில் தனது முதல் ஆட்டத்தை அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவே ஆடினார். புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் நான்கு பந்துகளைச் சந்தித்து ஒரு ரன் கூட எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது ஐபிஎல் பயணத்தை துவங்கி பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நான்கு ஆண்டுகள் விளையாடியபின் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியுள்ள சூர்யகுமார் யாதவ் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் பிறந்தவர்தான்.

இந்த சீசனில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடிவருவதை அடுத்து மும்பை அணி நிர்வாகம் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமாரை தொடக்க வீரராக களமிறக்கியது. அப்போட்டியில் 32 பந்துகளில் 7 பௌண்டரி 1 சிக்ஸர் ஆகியவற்றுடன் 53 ரன்களை குவித்து அசத்தினார் 27 வயது உள்ளூர் நாயகன். எனினும் பெங்களூருக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.

2. நிதிஷ் ராணா :-

ஏப்ரல் 8, 2018 அன்று ஐபிஎல் 11-வது சீஸனின் முதல் போட்டியில் விளையாடியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்திருந்தது கொல்கத்தா அணி.

ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் விராட் கோலியும் ஏபி டிவில்லியர்ஸும் களத்தில் பௌண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசிக்கொண்டிருந்தனர். 14 ஓவர்கள் முடிவில் 125 ரன்களை தாண்டிவிட்ட பெங்களூரு 200 ரன்களைத் தாண்டி குவிக்கும் முனைப்பில் இருந்தது.

15வது ஓவரை வீச நிதிஷ் ராணாவை அழைத்தார் கேப்டன் தினேஷ் கார்த்திக். கிரிக்கெட் உலகம் அதனை ஒரு சுவாரஸ்யமான விஷயமாக பார்த்தது. இரு பெரும் ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்க ஐபிஎல் வரலாற்றில் தனது இரண்டாவது ஓவரை வீச வந்தார் நிதிஷ் ராணா.

அந்த ஒரே ஓவரில் டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் அவுட் செய்தார். குறிப்பாக விராட் கோலியின் விக்கெட்டுகளைத் தகர்த்தபோது பெங்களூரு அணியின் ரசிகர்கள் அதிர்ந்தனர். மிச்செல் ஜான்சன், சுனில் நரேன் என மூத்த பந்துவீச்சாளர்கள் ரன்களை வழங்கிவந்த நிலையில் ஆறே பந்துகளில் ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார் ராணா. அப்போட்டியில் பேட்டிங்கிலும் நிதிஷ் அசத்தினார். 25 பந்துகளில் 2 பௌண்டரி, 2 சிக்ஸர்கள் என 35 ரன்கள் குவித்தார்.

நிதிஷ் ராணா டெல்லியைச் சேர்ந்த 24வயது இளைஞர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடியவந்த ராணாவை கடும் போட்டிக்கு பிறகு 3.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி. மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடியாக விளையாடும் வீரராக அறியப்பட்ட ராணா, 2016 மற்றும் 2017 ஐபிஎல் சீசனில் மொத்தம் 17 போட்டிகளில் நான்கு அரை சதமும் விளாசியுள்ளார்.

இந்த சீசனில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியொன்றில் 35 பந்துகளில் ஐந்து பௌண்டரி நான்கு சிக்ஸர்கள் உதவியுடன் 59 ரன்கள் குவித்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான சமீபத்திய ஆட்டமொன்றில் தொடக்க வீரர்கள் அஜின்க்யா ரஹானே மற்றும் டி ஆர்சி ஷார்ட் என இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார் ராணா. அதே போட்டியில் பேட்டிங்கில் 27 பந்துகளைச் சந்தித்து 35 ரன்களை விளாசினார். இந்த இரு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

'' என்னுடைய வேலை ரன்களை கட்டுப்படுத்துவது என்பது எனக்குத் தெரியும். நான் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பந்து வீசியுள்ளேன். என் மேல் எனக்கு நம்பிக்கை இருந்தது. இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற யோசனை எப்போதும் மூளையில் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருந்தாலும் என்னுடைய இப்போதைய இலக்கு என்னால் முடிந்தவற்றை சிறப்பாகச் செய்வதே'' என ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற பின்னர் கூறினார் இளம் இடது கை பேட்ஸ்மேனான நிதிஷ் ராணா.

சஞ்சு சாம்சன்படத்தின் காப்புரிமைSCOTT BARBOUR Image captionசஞ்சு சாம்சன்

3. சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கேரள இளைஞர் சஞ்சு சாம்சன். இதுவரை ஐபிஎல்லில் 71 போட்டிகளில் விளையாடி 8 அரை சதம் மற்றும் ஒரு சதம் உட்பட 1611 ரன்களை குவித்துள்ள சஞ்சு, இந்தியாவுக்காக இதுவரை ஒரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2013 முதல் 2015 வரை விளையாடிய சஞ்சு, பின்னர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் விளையாடினார். இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 8 கோடி கொடுத்து சஞ்சு சாம்சனை தனது அணிக்கு விளையாட தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம்.

இந்த சீசனில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 22 பந்தில் 37 ரன்கள், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 42 பந்துகளில் 49 ரன்களும் குவித்துள்ளார் சஞ்சு சாம்சன்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஓர் ஆட்டத்தில் 45 பந்துகளில் 10 சிக்ஸர்கள் விளாசி 92 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார் சஞ்சு. அடிப்படையில் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் '' எனது அணி என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறதோ அதைப் பூர்த்திச் செய்வேன். முடியுமளவுக்கு அதிக போட்டிகளை வென்று தர முயல்கிறேன். விக்கெட் கீப்பிங், ஃபீல்டிங் என எந்தப் பணியானாலும் எனது சிறப்பான பங்களிப்பை வழங்குவேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சன்படத்தின் காப்புரிமைSAJJAD HUSSAIN Image captionசஞ்சு சாம்சன்

23 வயது சஞ்சு சாம்சன் வலது கை பேட்ஸ்மேன் ஆவார். 17 வயதில் கேரளா அணிக்காக முதல் தர போட்டியில் விளையாடியவர் சஞ்சு. ராஜஸ்தான் அணிக்கு ராகுல் திராவிட் பயிற்சி அளித்த காலகட்டத்தில் ''இந்திய அணிக்கு எதிர்காலத்தில் சிறந்த வீரராக சாம்சன் திகழ்வார்'' என சாம்சனை பற்றிப் புகழ்ந்துள்ளார்.

4. மயங்க் மார்கன்டே

ஐபிஎல் 11வது சீசனில் அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் நான்கு போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. இந்நிலையில் இதுவரை அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மயங்க் மார்கன்டே.

பஞ்சாபில் பிறந்த மயங்க் இதுவரை ஆறு முதல்தர போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். 20 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் இவரை எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் முதல் போட்டியிலேயே மார்கன்டேவுக்கு வாய்ப்பளித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார் மயங்க். தோனி, ராயுடு, தீபக் சஹர் ஆகிய மூவரின் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். தனது இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய மயங்க் எதிரணியின் பேட்ஸ்மேன்களான விருதிமான் சாஹா, ஷிகர் தவான், மனிஷ் பாண்டே, ஷகிப் அல் ஹசன் ஆகியோரின் விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

தான் விளையாடிய முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் இரண்டாவது போட்டியில் நான்கு விக்கெட்டுகள் என எந்தவொரு வீரரும் இதுவரை ஐபிஎல்லில் சாதிக்காததை செய்து காட்டியுள்ளார் மயங்க். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி முன்னிலை வகிக்கும் பௌலருக்கு ஊதா நிறத் தொப்பி அணிவிக்கப்படும்.

இந்த சீசனில் ஏப்ரல் 19 நிலவரப்படி முதல் இடத்தில் இருந்த பௌளரான மயங்க் மார்கன்டே தனக்கு பர்ப்பிள் நிற தொப்பி வழங்கப்பட்டபோது ''எனக்கு கேப்டன் ரோஹித் ஷர்மா அதிகம் அறிவுரைகளை வழங்கவில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப அடிப்படை விஷயங்களை மட்டும் கவனத்தில் வைத்துக்கொள் என கூறினார். க்ரூனால் பாண்டியா எனக்கு களத்திலும் வலைப்பயிற்சியிலும் குறிப்பிடத்தக்க உதவிகள் செய்துள்ளார். அது மிகவும் உதவியது'' எனத் தெரிவித்தார்.

ரிஷப் பன்ட்படத்தின் காப்புரிமைSAJJAD HUSSAIN Image captionரிஷப் பன்ட்

ரிஷப் பன்ட் :-

இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் 20 இடங்களில் இருக்கும் பேட்ஸ்மேன்களில் அதிக ஸ்ட்ரைக்ரேட் வைத்திருக்கும் இந்தியாவைச் சேர்ந்த வீரர், ரிஷப் பன்ட்.

இதுவரை நான்கு போட்டிகளில் 34.50 என்ற சராசரியுடன் 138 ரன்கள் குவித்துள்ளார். இதுவரை ரிஷப் அடித்துள்ள பௌண்டரிகளின் எண்ணிக்கை 20.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்த பன்ட் 2016 ஆண்டு முதல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2016 ஆம் ஆண்டு பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் விளையாடிய ரிஷப் 18 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை புரிந்தார்.

கடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 43 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். 2016-ம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் ஜார்கண்ட் அணிக்கு எதிரான ஓர் போட்டியில் 48 பந்தில் சதமடித்து ஆச்சர்யப்படுத்தினார்.

அதிரடியாக சிக்ஸர்கள் விளாசுவதையும் பௌண்டரிகளுக்கு பந்தை விரட்டுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் ரிஷப் இந்த ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 13 பந்தில் 28 ரன்கள், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 14 பந்தில் 20 ரன்கள், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 25 பந்துகளில் ஆறு பௌண்டரி இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 47 ரன்கள், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 26 பந்தில் 7 பௌண்டரிகள், ஒரு சிக்ஸர் உதவியுடன் 43 ரன்கள் குவித்திருக்கிறார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருவதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் 20 வயது இடது கை பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பன்ட்.

 

https://www.bbc.com/tamil/sport-43843763

Link to comment
Share on other sites

13 ஓவருக்கு 125 ரன் இலக்கு- கெய்ல், ராகுல் அதிரடியால் 11.1 ஓவரில் பஞ்சாப் வெற்றி

 

மழை குறுக்கிட்டதால் 13 ஓவருக்கு 125 ரன்கள் என்ற இலக்கை கெய்ல், கேஎல் ராகுல் அதிரடியால் எளிதாக எட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. #KKRvKXIP

 
13 ஓவருக்கு 125 ரன் இலக்கு- கெய்ல், ராகுல் அதிரடியால் 11.1 ஓவரில் பஞ்சாப் வெற்றி
 
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. உத்தப்பா (34), கிறிஸ் லின் (74) தினேஷ் கார்த்திக் (43) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தொடக்கம் முதலே இருவரும் வாணவேடிக்கை நிகழ்த்தினார்கள். இதனால் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. அப்போது கெய்ல் 49 ரன்னுடனும், கேஎல் ராகுல் 45 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

பின்னர் மழை நின்றதும் சுமார் 8.15 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. அப்போது டக்வொர்த் லிவிஸ் விதிப்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 13 ஓவரில் 125 ரன்கள் இலக்கு என நிர்ணயிக்கப்பட்டது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏற்கனவே 8.2 ஓவர்கள் விளையாடிவிட்டதால், 28 பந்தில் 29 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. சாவ்லா முதல் பந்தை வீசினார். அதை கெய்ல் சிக்சருக்கு தூக்கி அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதன்பின் மூன்று பந்துகளிலும் கெய்ல் ரன் அடிக்கவில்லை.

201804212052096495_1_KLrahul002-s._L_styvpf.jpg

10-வது ஓவரை சுனில் நரைன் வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி கேஎல் ராகுல் அரைசதம் அடித்தார். அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தை சிக்சருக்கு அனுப்ப முயற்சி செய்தார். ஆனால் அது கேட்ச் ஆனது. கேஎல் ராகுல் 27 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 60 ரன்கள் குவித்தார்.

அடுத்து மயாங்க் அகர்வால் களம் இறங்கினார். கேஎல் ராகுல் அவுட்டாகும்போது பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 20 பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டது. 11-வது ஓவரை ஷிவம் மவி வீசினார். இந்த ஓவரில் பஞ்சாப் அணி 3 ரன்கள் சேர்த்தது. இதனால் கடைசி 12 பந்தில் 5 ரன் தேவைப்பட்டது. 12-வது ஓவரை குர்ரான் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை கெய்ல் சிக்சருக்கு தூக்கி அணியை வெற்றி பெற வைத்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 11.1 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கிறிஸ் கெய்ல் 38 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 62 ரன்களுடனும், அகர்வால் 2 பந்தில் 2 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று தரவரிசையில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/21205209/1158311/IPL-2018-KKRvKXIP-chris-gayle-KL-rahul-half-century.vpf

Link to comment
Share on other sites

'யுனிவர்ஸ் பாஸ்' இங்கு இருக்கிறேன் என்பது ரஷீத் கானுக்குத் தெரிய வேண்டும்: கிறிஸ் கெய்ல்

 

 
CHRISGAYLE

படம். | அகிலேஷ் குமார்.

அன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக தன் 6வது ஐபிஎல் சதத்தை எடுத்த கிறிஸ் கெய்ல் அதன் பிறகே தன் உணர்ச்சியமயத்தின் உச்சத்தில் இருந்து வருகிறார்.

தன் 2 வயது குழந்தைக்கு பிறந்தநாள் பரிசு அந்த இன்னிங்ஸ் என்றார். தனக்கு அழுத்தம் எதுவும் இல்லை என்றாலும் தான் யாருக்கும் எதுவும் நிரூபிக்கவும் இல்லை என்றும் கூறினாலும் ஏலத்தில் புறக்கணிப்பை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்று தெரிகிறது.

“அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்து அதன் மேல் ஒரு இலக்கைக் கட்டமைக்க வேண்டும் என்பதே எண்ணம். சதம் அடித்தது அதில் நிகழ்ந்த ஒரு சம்பவமே. அது எனக்கு பிடித்தும் இருக்கிறது. நான் ஏற்கெனவே கூறியது போல் பார்மில் இருக்கும் போது அதன் உத்வேகத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அணிக்குள் நாங்கள் 3 விஷயங்களைப் பார்க்கிறோம், சுதந்திரம், பொழுதுபோக்கு, ஒவ்வொருவரும் தங்களை வெளிப்படுத்திக் கொள்வது.

அன்று நான் ஓடவும் செய்தேன் (சிரிப்பு), அது பெரிய மைதானம், சில வேளைகளில் நாம் ஓடவும் வேண்டும், வாழ்க்கை முழுதும் நடந்து கொண்டிருக்க முடியாது.

புவனேஷ்வர் குமார் முக்கிய பவுலர், அவர் நன்றாகத் தொடங்கினார், எனவே அவர் ஓவர்களை எச்சரிக்கையுடன் கடக்க வேண்டும். அவர் தளர்வாக வீசினால் நான் அவர் மீது பாயலாம், ஆனால் அங்கு நிலைமை அப்படியில்லை.

ரஷீத் கான் ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக அபாரமாக வீசி வருகிறார். அதனால் அவர் மீது கொஞ்சம் அழுத்தம் வைக்க முற்பட்டேன். அதாவது யுனிவர்ஸ் பாஸ் இங்குதான் இருக்கிறார் என்பதை அவர் அறிய வேண்டும் என்று விரும்பினேன். யார் அன்று ‘இன்சார்ஜ்’ என்பதை பவுலர்கள் அறிய வேண்டும் என்று விரும்பினேன்.

மட்டையை குழந்தைபோல் தாலாட்டியது என் மகளுக்காக அன்று அவள் பிறந்த தினம். பிறந்த தினத்தில் இந்தியாவில் 2வது முறையாக இருக்கிறோம்.

நான் களத்தில் இருக்கும் போது ரசிகர்களுடன் உரையாட விரும்புபவன், கிறிஸ் கெய்ல் மிகவும் வெளிப்படையானவர் என்பதை அனைவரும் அறிய வேண்டும். மொத்தத்தில் எனக்கு கேளிக்கை பிடிக்கும். வாழ்க்கை என்பதே எனக்கு மகிழ்ச்சிதான், கொண்டாட்டம்தான். எந்த சக்தியும் என்னை இதிலிருந்து தடுக்க முடியாது. வாழ்க்கையை முழுதும் அனுபவிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு கூறினார் கிறிஸ் கெய்ல்.

http://tamil.thehindu.com/sports/article23626907.ece

Link to comment
Share on other sites

`பெங்களூரைச் சோதித்த ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர்!’ - 174 ரன்கள் எடுத்த டெல்லி அணி #RCBvDD

 
 

பெங்களுர் அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர்கள் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் அதிரடியால் 174 ரன்கள் எடுத்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. 

Pant_21180.jpg

ஐ.பி.எல் தொடரில் இன்று இரவு 8 மணிக்குத் தொடங்கிய இரண்டாவது போட்டியில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் விளையாடி வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணிக் கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். 

டெல்லி அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ஜேசன் ராய் மற்றும் கவுதம் கம்பீர் களமிறங்கினர். இந்தப் தொடரில் தனது பந்துவீச்சால் மிரட்டி வரும் வரும் உமேஷ் யாதவ், இந்த முறையும் சிறப்பான துவக்கம் தந்தார். அவரது முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்த அவர், தனது அடுத்த ஓவரில் கம்பீரை வெளியேற்றி டெல்லிக்கு அதிர்ச்சி துவக்கம் அளித்தார். இதனால் டெல்லி அணியின் ரன்ரேட் பவர்ப்ளே ஓவர்களில் 5 -க்கும் குறைவாகவே இருந்தது. 

 

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ராய், 16 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயரும், ரிஷப் பண்ட் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் இறங்கியது. பொறுமையாக இன்னிங்ஸைத் தொடங்கிய இந்த ஜோடி பின்னர் அதிரடியில் இறங்கியது. ஸ்ரேயஸ் ஐயர் 31 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்த பண்ட், அரை சதம் அடித்தார். அதன் பின்னர் ரன்ரேட்டை உயர்த்தும் பொருட்டு அதிரடியில் இறங்கினார் பண்ட். சிராஜின் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்ட அவர், அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசினார். டெல்லி அணி சவாலான ஸ்கோரை எட்ட உதவிய பண்ட், கடைசி ஓவரில் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணி தரப்பில் சஹால் 2 விக்கெட்டுகள் எடுத்தார். 

https://www.vikatan.com/news/sports/122921-delhi-team-set-as-target-for-bangalore-team-in-ipl-league-match.html

115/3

Royal Challengers Bangalore require another 60 runs with 7 wickets and 42 balls remaining

Link to comment
Share on other sites

சொல்லி அடித்த ‘ஜீனியஸ்’ ஏபி.டிவில்லியர்ஸ்: களவியூகம் மறந்த கம்பீர்; புன்னகைப் பூத்த விராட் கோலி

devillers

ஏ.பி. டிவில்லியர்ஸ் தி ஜீனியஸ்.   -  படம். | ஏ.பி.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று ஏ.பி.டிவில்லியர்ஸ் 39 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த பெங்களூரு கேப்டன் கோலி உள்ளிட்ட வீரர்களின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

முதலில் பேட் செய்த டெல்லி டேர் டெவில்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயர் (52), இளம் ரிஷப் பந்த்(85) ஆகியோரது அதிரடியில் 15,3 ஓவர்களில் 105/4 என்ற நிலையிலிருந்து 174/5 என்ற ஓரளவுக்கு சவாலான இலக்கை எட்டியது. தொடர்ந்து ஆடிய ஆர்சிபி அணி தொடக்க பின்னடைவுக்குப் பிறகு டிவில்லியர்ஸின் ஜீனியஸில் 18 ஓவர்களில் 176/4 என்று வென்றது.

 

டிவில்லியர்ஸ் எனும் ஜீனியஸ்: வாயடைத்துப் போன டெல்லி டேர் டெவில்ஸ்

டி காக் (18), வோரா (2) விரைவில் வெளியேற 29/2 என்று தடுமாறிய பெங்களூரு அணி விராட் கோலி (30), டிவில்லியர்ஸ் கூட்டணியில் 11 ஓவர்களில் 92/2 என்று முன்னேற விராட் கோலி, ஹர்ஷல் படேல் புல்டாஸை சிக்சருக்குத் தூக்கி அடித்தார் பந்து பறந்து கொண்டிருந்த போது, பவர்புல் பிளிக் ஷாட் அது, அங்கு போல்ட் தலைக்கு மேல் பந்து சென்று கொண்டிருந்த்து. பின்னால் எம்பிப்பாய்ந்தார் போல்ட் வலது கையில் கேட்சைப் பிடித்து பவுண்டரி மேல் விழாமல் இருக்க ஏகப்பட்ட பிரயத்தனம் கடைசியில் கோலியை வெளியேற்றினார், பயங்கரமான கேட்ச். 92/3 என்ற நிலையில் கொஞ்சம் என்ன வேண்டுமானாலும் ஆகலாம் என்ற நிலைதான். இந்தக் கேட்சைப் பற்றி இன்னும் சில காலங்களுக்கு அனைவரும் பேசவே செய்வார்கள்.

ஆனால் ஏ.பி.டிவில்லியர்ஸின் ஜீனியஸ் அங்குதான் ஏற்கெனவே தன் முகத்தைக் காட்டியிருந்தது. கிறிஸ் கெய்ல் ஆட்டம் ஒரு sublime terror (உன்மத்த பயங்கரம்) என்றால் டிவில்லியர்ஸ் ஆட்டம் என்பது உன்னதக் கலைஞனின் Sublime Aesthtetics (உன்னத அழகியல்). முன்பு ஒரு முறை இப்படித்தான் நம்பிக்கையெல்லாம் போய் விட்ட நிலையில் ஆர்சிபிக்கு ஒரு போட்டியை வென்று கொடுத்தார், அன்று டேல் ஸ்டெய்னை வெளுத்து வாங்கினார். அதாவது சூழ்நிலை தன்னை என்ன செய்து விட முடியும், நான் வைத்ததுதான் சட்டம் என்று அவர் தன் இஷ்டப்படி சுதந்திர ஜீவியாக ஆடினார். அதுவும் காயங்களிலிருந்து மீண்ட பிறகு புன்னகை தவழும் அவரது முகத்தில் எந்த விதமான ஆக்ரோஷ பாவனையும் காட்டாத ஒரு அமைதியான அதிரடி. ஆஃப் ஸ்டம்பில் ஒதுங்கிக் கொண்டு லெக் திசையிலும் அடிக்கிறார், அதே ஆஃப் திசையில் ஒதுங்கிக் கொண்டு அதே ஆஃப் திசையிலும் அடிக்கிறார், உள்ளே வரும் ஷார்ட் பிட்ச் பந்தை ‘என்ன?’ என்று கேட்டவாறே தன் மூக்கு வரைக்கும் வர அனுமதித்து பின் சாய்ந்து தேர்ட்மேனுக்கு மேல் தூக்குகிறார். அதாவது நான் பார்க்காத பவுலிங்கா, நான் பார்க்காத சூழ்நிலையா என்பதைப் போல் அவரது மட்டை பேசியது, ஆனால் அவர் முகத்தில் எதுவும் தெரியவில்லை. முகத்தில் எந்த ஒரு கோபாவேசமோ ஆக்ரோஷமோ இல்லை, அகந்தையும் இல்லை.

devil2jpg

எங்கு திரும்பினார் எங்கு சிக்ஸ்? டிவில்லியர்ஸ்.   -  படம்.| ஏ.எஃப்.பி.

 

சர்பராஸ் கானுக்குப் பதில் வந்த மனன் வோரா, 2 ரன்களில் மேக்ஸ்வெலை 2வது ஓவரில் ஸ்வீப் ஷாட்டில் டாப் எட்ஜ் செய்து வெளியேற, குவிண்டன் டி காக் 18 ரன்களில் இல்லாத ரன்னுக்கு ஓடப்போய் கேப்டன் கோலிக்காக தன் விக்கெட்டைத் தியாகம் செய்து வெளியேறினார். 29/2.

இறங்கியவுடன் நிதானித்து பிறகு அடிப்பது என்ற கதையெல்லாம் டிவில்லியர்சிடம் கிடையாது. வந்து 3 பந்துகள் ஆகியிருக்குமா என்று தெரியவில்லை. இடது கை ஸ்பின்னர் ஷாபாஸ் நதீமை 2 பவுண்டரிகள் விளாசினார், பிறகு நதீமின் அடுத்த ஓவரில் திடீர் புதுவித ஷாட் உற்பத்தியில் 3 அதிரடி ஸ்வீப் ஷாட் பவுண்டரிகள் என்று கம்பீருக்கு களவியூகச் சிக்கல்களைத் தோற்றுவித்தார். ஷாட் எட்ஜெல்லாம் ஆகவில்லை அனைத்தும் நன்றாக மிடில் செய்யப்பட்ட ஷாட்கள். தன் இஷ்டத்துக்கு ஆடினார். ஷாட்களெல்லாம் அவருக்கே உரிய தனித்துவ ஷாட்கள், ஒருவரும் அதனை நகல் செய்ய முடியாது.

கோலி ஆட்டமிழந்த போது 54 பந்துகளில் 83 ரன்கள் தேவை என்ற ஒரு நெருக்கடி நிலைதான், ஆனால் ஹர்ஷல் படேல் வீச வந்தார், எனக்கு ஏன் கவலை என்று டிவில்லியர்ஸ் லாங் ஆனில் அவரை ஒரு சிக்சருக்குத் தூக்கினார். அடுத்த பந்துக்கு ஆஃப் திசையில் ஒதுங்கினார், படேல் பந்து அவரைத் துரத்தியது ஆனாலும் கவலையில்லை ஆஃப் திசையிலேயே தூக்கி அடித்தார் பவுண்டரியானது 24 பந்துகளில் அரைசதம் பூர்த்தி செய்தார். அதே ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் என்றும் பாராமல் ஒரு அரக்க ஸ்வீப் ஆடி ஸ்கொயர்லெக்கில் சிக்ஸ் அடித்தார். டெவாட்டியா வந்தார் நின்றபடியே ஒரே தூக்கு. லாங் ஆனில் சிக்ஸ். தன் சக தோழர் கிறிஸ் மோரிஸ் வந்தார் பந்து சின்னசாமி ஸ்டேடியத்தின் மேற்கூரையைத் தொட்டு வந்தது. அடுத்து ஒரு பவுண்டரி. 30 பந்துகளில் 35 என்று இலக்கு வழிக்கு வந்தது. கடைசியில் டிரெண்ட் போல்ட் ரவுண்ட் த விக்கெட்டில் பவுன்சர் வீச அதை வா வா என்று வரவேற்று தன் மூக்கு வரை வரவிட்டு பிறகு தேர்ட் மேன் தலைக்கு மேல் தூக்கினார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, புதியது புனைந்தது போதும் என்று கடைசியில் ஒரு நேர்மறையான கவர் டிரைவ் பவுண்டரியில் வெற்றி தேடித்தந்தார்.

39 பந்துகளில் 90 ரன்கள். இதில் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்கள். மந்தீப் சிங் 17 நாட் அவுட். 176/4 என்று ஆர்சிபி வென்றது. ஆட்ட நாயகன் விருது வேறு யாருக்கு வழங்க முடியும்? டிவில்லியர்ஸ் அதனை தட்டிச் சென்றார்.

ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர் மீட்ட டெல்லி:

முன்னதாக டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார், தொடக்க ஓவர்களில் அசத்தி பிற்பாடு ரன்களைக் கசியவிடும் உமேஷ் யாதவ்வை இன்று முதல் 10 ஒவர்களிலேயே 4 ஓவர்கள் கோட்டாவை முடித்தார் விராட் கோலி. இது அருமையான யோசனை, அதன் படி உமேஷ் 27 ரன்களை மட்டுமேதான் விட்டுக் கொடுத்தார். அதோடு கவுதம் கம்பீரை ஷார்ட் பிட்ச் பந்தில் வீழ்த்தினார்.

இதோடு மட்டுமல்லாமல் ஜேசன் ராய் இதுவரை லெக்ஸ்பின்னுக்கு எவ்வளவு முறை ஆட்டமிழந்தார் என்பதை அறிந்தவராக கோலி சாஹலிடம் பந்தைக் கொடுத்தார். முதலில் இரண்டு பந்துகளைக் கடுமையாகத் திருப்பி பீட் செய்த சாஹல் அடுத்ததாக ஒரு டெம்ப்ளேட் நேர் பந்தை வீசினார் கட் ஆட முயன்ற ஜேசன் ராய் ஸ்டம்ப் தொந்தரவானது. சுமார் 20 பந்துகளுக்கு ரன் எதுவும் வராமல் பவர்ப்ளே முடிவில் 28 ரன்களுக்கு 2 விக்கெட் என்று இந்த சீசனின் குறைந்த பவர் ப்ளே ஸ்கோரை எடுத்தது டேர் டெவில்ஸ்.

உமேஷ் யாதவ்வையும் முடித்த கோலி வாஷிங்டன் சுந்தரின் 3 ஓவர்களையும் முடித்திருந்தார், இதனால் வோக்ஸ், சிராஜை நம்பி கடைசி ஓவர்களை கொடுக்க வேண்டியிருந்தது. அதில் ரிஷப் பந்த், ஐயர் புகுந்து 49 பந்துகளில் 75 ரன்களை விளாசினர். லாங் ஆன், லாங் ஆஃபில் தூக்கித்தூக்கி அடித்த ரிஷப் பந்து ரிவர்ஸ் ஸ்வீப் என்றேல்லாம் ஆடி 34 பந்துகளில் அரைசதம் கண்டார். அதன் பிறகு 2 பெரிய சிக்சர்களையும் பவுண்டரிகளையும் அடித்து 48 பந்துகளில் 6 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 85 ரன்கள் சேர்த்தார். ஐயர் 31 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 52 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தரிடம் வீழ்ந்தார். 15.3 ஓவர்களில் மேக்ஸ்வெல் விக்கெட்டுடன் 105/4 என்று ஆன டெல்லி ரிஷப் பந்த்தின் ஆக்ரோஷத்தினால் 20 ஓவர்களில் 174/6 என்று ஆனது. சாஹல் 2 விக்கெட்டுகள்.

கடைசியில் டிவில்லியர்ஸின் உன்னத அழகியல் ஆட்டத்தை டெல்லி அணியினருமே பார்க்க நேரிட்டது.

http://tamil.thehindu.com/sports/article23633910.ece

Link to comment
Share on other sites

சென்னையுடன் இன்று மோதல்: மீண்டு வருமா ஹைதராபாத்?

 

 
22CHPMUWATSON

ஷேன் வாட்சன்   -  AFP

ஐபிஎல் தொடரில் இன்று மாலை ஹைதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஹைதராபாத், சென்னை ஆகிய இரு அணிகளும் இதுவரை தலா 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளன. எனினும் ரன்விகித அடிப்படையில் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி இந்த சீசனை தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று சிறப்பான முறையில் தொடங்கியது. அந்த அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு பஞ்சாப் அணி கடந்த ஆட்டத்தில் முட்டுக்கட்டை போட்டது. மொகாலியில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் கிறிஸ் கெயில் 64 பந்துகளில், 104 ரன்கள் விளாசி ஹைதராபாத் அணியை மிரளச் செய்திருந்தார்.

பந்து வீச்சு, பேட்டிங்கில் ஒருசேர திறனை வெளிப்படுத்த தவறிய ஹைதராபாத் அணி அந்த ஆட்டத்தின் சுவடுகளை மறந்து, மீண்டு வரும் விதமாக சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தை சந்திக்கிறது. ஹைதராபாத் வெற்றி பெற்ற 3 ஆட்டங்களிலும் குறைந்த இலக்கையை துரத்தியிருந்தது. ஆனால் சென்னை அணிக்கு எதிராக பெரிய அளவிலான இலக்கை (193 ரன்கள்) துரத்திய போது தடுமாற்றம் அடைந்தது. வில்லியம்சன், ஷிகர் தவண் ஆகியோரை மட்டுமே நம்பியிருப்பது சற்று பின்னடைவாக உள்ளது.

மணீஷ் பாண்டே, யூசுப் பதான், தீபக் ஹூடா, ஷகிப் அல்ஹசன் என அனுபவ வீரர்கள் இருந்தாலும் இவர்கள் ஒருசேர கூட்டாக திறனை வெளிப்படுத்தத் தவறுகின்றனர். தொடக்க வீரரான விருத்திமான் சாஹாவிடம் இருந்தும் பெரிய அளவிலான இன்னிங்ஸ் வெளிப்படவில்லை.

அநேகமாக இன்றைய ஆட்டத்தில் அவரது பேட்டிங் வரிசை மாற்றி அமைக்கப்படக்கூடும் என கருதப்படுகிறது.

பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், பில்லி ஸ்டேன்லேக், ஷகிப் அல்ஹசன் ஆகியோர் நெருக்கடி கொடுக்கக்கூடும். சுழற்பந்து வீச்சாளரான ரஷித்கான் கடந்த ஆட்டத்தில் 55 ரன்களை வாரி வழங்கினார். இந்த சீசனில் அவர், 3 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றி உள்ளார். இதனால் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டத்தில் அவர் உள்ளார்.

 

ஷேன் வாட்சன்

காவிரி பிரச்சினை காரணமாக சொந்த மைதானத்தை புனேவுக்கு மாற்றிக் கொண்டுள்ள சென்னை அணி, அங்கு நேற்றுமுன்தினம் விளையாடிய முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை புரட்டியெடுத்தது. ஷேன் வாட்சன் 57 பந்துகளில் 106 ரன்கள் விளாசி மிரட்டினார்.

இந்த சீசனில் ஆல்ரவுண்டராக சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். சுரேஷ் ரெய்னா பார்முக்கு திரும்பியிருப்பது மேலும் வலுசேர்த்துள்ளது. இவர்களுடன் அம்பாட்டி ராயுடு, தோனி, சேம் பில்லிங்ஸ், டுவைன் பிராவோ ஆகியோரும் மிரட்ட காத்திருக்கின்றனர்.

http://tamil.thehindu.com/sports/article23633997.ece

Link to comment
Share on other sites

ராஜஸ்தானுடன் இன்று மோதல்: வெற்றி முனைப்பில் மும்பை

 

 
22CHPMUROHIT

ரோஹித் சர்மா   -  AFP

ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

3 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனை மோசமாக தொடங்கியது. முதல் 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புத்துயிர் பெற்றுள்ளது. அந்த ஆட்டத்தில் முதல் இரு பந்துகளில் 2 விக்கெட்களை இழந்த போதிலும் தொடக்க வீரரான எவின் லீவிஸூடன் இணைந்து கேப்டன் ரோஹித் சர்மா அணியை மீட்டெடுத்தார். 6 ரன்களில் சதத்தை தவறவிட்டிருந்த ரோஹித் சர்மாவிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். இதேபோல் 65 ரன்கள் விளாசிய எவின் லீவிஸூம் மிரட்டக் காத்திருக்கிறார்.

கெய்ரன் பொலார்டு காயத்தில் இருந்து மீண்டுள்ளது அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கக்கூடும். மேலும் ஹர்திக் பாண்டியாவும் பார்முக்கு திரும்பி உள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர், 5 பந்துகளில் 17 ரன்கள் விளாசியிருந்தார். மும்பை அணியின் பந்து வீச்சும் நம்பிக்கை உணர்வை பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆட்டத்தில் டி வில்லியர்ஸ், குயிண்டன் டி காக், கோரே ஆண்டர்சன் உள்ளிட்ட அதிரடி வீரர்களை பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவிடாமல் கட்டுப்படுத்தினர்.

அஜிங்க்ய ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி 5 ஆட்டத்தில் 2 வெற்றி, 3 தோல்விகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. அந்த தொடரை தோல்வியுடன் தொடங்கிய போதும் அடுத்தடுத்து இரு வெற்றிகளை பெற்றது.

ஆனால் அதன் பின்னர் தொடர்ச்சியாக இரு தோல்விகளை சந்தித்துள்ளது. கடைசியாக நேற்றுமுன்தினம் சென்னை அணியிடம் 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்திருந்தது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பந்து வீச்சு, பேட்டிங்கில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இளம் வீரரான சஞ்சு சாம்சன், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்கள் விளாசினார். அதன் பிறகு அவரிடம் இருந்து சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படவில்லை. அவரை தவிர மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இதுவரை குறிப்பிடத்தக்க அளவிலான பங்களிப்பு செய்யவில்லை. பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வீரர்கள் வரிசையில் மாற்றங்கள் செய்யக்கூடும் என கருதப்படுகிறது.

http://tamil.thehindu.com/sports/article23634015.ece

Link to comment
Share on other sites

ஐந்தே டாட் பால்... 39 பந்துகளில் 90 ரன்... டி வில்லியர்ஸ் ஆடியது ஆட்டம் அல்ல மேஜிக்! #RCBvDD

 
 

ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்தார்; ரிஷப் பன்ட் ஆட்டத்தை கோலியே கைதட்டி பாராட்டினார். கோலியை டிரென்ட் போல்ட் ஒரு மிராக்கிள் கேட்ச்சில் வெளியேற்றினார்; ஜேசன் ராய் விக்கெட்டை சாஹல் சொல்லிவைத்து தூக்கினார். இவர்கள் எல்லோருமே நாயகர்கள் எனில், இவர்கள் எல்லோருக்கும் நாயகன் ஏ பி டி வில்லியர்ஸ். சந்தித்த 39 பந்துகளில் ஐந்து டாட் பால். மீதமுள்ள 34 பந்துகளில் ஐந்து சிக்ஸர்கள், பத்து பவுண்டரிகள் விளாசி, ஐ.பி.எல் வரலாற்றில் சேஸிங்கில் தன் அதிகபட்சத்தைப் பதிவுசெய்து, பெங்களூரு ரசிகர்களின் முகத்தில் புன்னகையை வரவைத்தார் டி வில்லியர்ஸ். ஆம், டி வில்லியர்ஸ் ஆடியது ஆட்டம் அல்ல மேஜிக். 

டி வில்லியர்ஸ்


புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் இருந்த டெல்லி, பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூருவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆர்.சி.பி கேப்டன் கோலி ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார். `சர்ஃபராஸ் கானை ஏன் ரீடெய்ன் செய்தனர்’ என புலம்பியவர்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக, மனன் வோராவை களமிறக்கினார் கோலி. `இந்த டோர்னமென்ட்டில் நாங்கள் இரண்டு முறை 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்து விட்டோம்’ எனப் புலம்பிய கெளதம் கம்பீர், முகமது ஷமிக்குப் பதிலாக ஹர்ஷல் படேலை டிக் செய்தார். 

உமேஷ் யாதவ் மீண்டும் ஒருமுறை தன் முதல் ஸ்பெல்லில் விக்கெட் எடுத்தார். ஷார்ட் பிட்ச் பந்தில் புல் ஷாட் அடிக்க முயல, அது டாப் எட்ஜாக, சாஹல் அதை ஈஸி கேட்ச் பிடிக்க, கெளதம் கம்பீர் கதை 3 ரன்களிலேயே முடிந்தது. கேப்டன் அவுட்டானதும் ஜேசன் ராய் தடுமாற்றத்துடனேயே இருந்தார். சாஹல் ஒரே லைனில் வீசிய பந்தைத் தொடவே பயந்தார். தவிர, இதற்கு முன் 22 டி-20 போட்டிகளில் 12 முறை லெக் ஸ்பின்னர்களிடம் அவுட்டாகியுள்ளார் ஜேசன் ராய் என்ற தகவலும் விராட் கோலி முன் வைக்கப்பட்டிருந்தது. ஆக, அப்போதே தெரிந்துவிட்டது ஜேசன் ராய் விக்கெட் சாஹலுக்குத்தான் என்பது. எதிர்பார்த்ததுபோலவே, சாஹல் தன்னுடைய இரண்டாவது ஓவரில் ஜேசன் ராயை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். 

சாஹல்


பொதுவாக, ஹிட்டர்களுக்கு எதிராக அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப்பில் பிட்ச் செய்து டர்ன் செய்யும் சாஹல், இந்தமுறை மிடில் ஸ்டம்ப்பில் பிட்ச் செய்து ஜேசன் ராயை கட் ஷாட் அடிக்கத் தூண்டினார். முந்தைய பந்துகளில் டர்ன் அதிகமாக இருந்ததால், இந்தமுறையும் பந்து சுழலும் என எதிர்பார்த்தார் ஜேசன் ராய். ஆனால், டர்ன் செய்வதற்குப் பதிலாக வேகத்தை மட்டுமே கூட்டினார் சாஹல். பந்து லெக் ஸ்டம்ப் லைனில் பிட்ச்சானது. லைன் மட்டுமல்ல லென்த்தையும் கொஞ்சம் மாற்றியிருந்தார். அதற்கு கை மேல் பலன் கிடைத்தது. ஜேசன் ராய் (5 ரன்கள்) கிளீன் போல்டு. 

பவர்பிளே முடிவில் டெல்லியின் ஸ்கோர் 28/2. இந்த சீசனில் பவர்பிளேவில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் இதுவே. பவர்பிளே மட்டுமல்ல, அடுத்த நான்கு ஓவர்களிலும் ரன்ரேட் எகிறவில்லை. பத்தாவது ஓவர் முடிவில் டெல்லியின் ஸ்கோர் 58/2. இதற்கு ஓபனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் சேர்ந்து 26 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்ததும், சாஹல் – உமேஷ் கூட்டணியின் அட்டகாசமான பெளலிங்கும் காரணம். முந்தைய போட்டிகளில் உமேஷ் யாதவ் டெத் ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததால், பத்து ஓவர்களிலேயே அவரது கோட்டாவை முடிக்கவைத்த கோலியின் முடிவும் பாராட்டுக்குரியது. 


`எப்படியும் இந்த மேட்ச் ஜெயிச்சே ஆகணும்’ என வெறியோடு இருந்த விராட் கோலி கவர் திசையிலும், `ஏலியன்’ டி வில்லியர்ஸ் மிட் ஆஃப்  திசையிலும் நின்றிருந்தனர். தவிர, பெஸ்ட் ஃபீல்டர்கள் சரியான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தனர். அந்தளவு ஃபீல்டிங் பக்கா. இது, ஜேசன் ராய் பாயின்ட்டில் தட்டிவிட்டு ரன் எடுக்க முயன்றபோது, அங்கிருந்து மன்தீப் direct hit  அடித்தபோதே தெரிந்துவிட்டது. 


முதல் பத்து ஓவர்களில் அடக்கி வாசித்த ஷ்ரேயாஸ், ரிஷப் பன்ட் ஜோடி அதற்குப் பின் அடித்து ஆடத் தொடங்கியது. இந்திய அணிக்காக பவர்பிளே ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் பந்தைக் குறிவைத்து வெளுத்தார் ஷ்ரேயாஸ் ஐயர். அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டு, அரைசதம் கடந்தார். டெல்லி அணியினர் எழுந்துநின்று கைதட்டினர். முதன்முறையாக டெல்லி இந்த மேட்ச்சில் நிமிர்ந்து நின்ற தருணம் அது. ஆனால், அதே ஓவரில் ஆஃப் ஸ்டம்பிலிருந்து தள்ளி, wide செல்வது போல இருந்த பந்தைத் தூக்கி அடிக்க நினைத்து கேட்ச் கொடுத்தார் ஷ்ரேயாஸ். 31 பந்துகளில் 52 ரன்கள். டீசன்ட்டான பேட்டிங். அடுத்து வந்த மேக்ஸ்வெல் தன் பிரத்யேக ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டில் வீழ்ந்தார். ஆனால், ரிஷப் பன்ட் அதே ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் தேர்ட் மேன் ஏரியாவில் சிக்ஸர் பறக்கவிட்டார். அரைசதமும் கடந்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர்

தெவேத்தியாவை எதிர்முனையில் வைத்துக்கொண்டு ரிஷப் பன்ட் ஆடியதுதான் ஆட்டம். யார் போட்டாலும் சராசரியாக இரண்டு சிக்ஸர்கள் விரட்டினார். பவர்பிளேவில் ரன்களைக் கட்டுப்படுத்திய ஆர்.சி.பி, மிடில் ஓவரில் ரன்களைக் கட்டுப்படுத்திய ஆர்.சி.பி, டெத் ஓவரில் ரன்களை  விட்டுக் கொடுத்தது. இதற்கு, 12 ஓவர் முடிவிலயே உமேஷ் தன் கோட்டாவை முடித்ததும், வாஷிங்டன் சுந்தர் 3 ஓவர்களை முடித்ததும் காரணம். அதோடு, கோலியின் மிஸ் கால்குலேஷனால், சாஹல் ஒரு ஓவரை கடைசிவரை வீசமுடியாமலேயே போய்விட்டது. இதனால் டெத் ஓவர்களில் கிறிஸ் வோக்ஸ், முகமது சிராஜை நம்ப வேண்டியிருந்தது. கிறிஸ் வோக்ஸ் வீசிய 19-வது ஓவரில் ரிஷப் பன்ட்டிடம் இருந்த ஏபிடி வெளிப்பட்டார். சுற்றிச் சுழன்று அவர் அடித்ததெல்லாம் பவுண்டரியைக் கிளியர் செய்தது. 

பன்ட்


`லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்… உங்கள் பணியை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு இந்த ஆட்டத்தைப் பாருங்கள்’ என வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே உணர்ச்சிவப்பட்டார் எனில், ரிஷப் பன்ட்டின் ஷாட்களை `Skilful, classy, wounderful execution’ என பாராட்டினார் மைக்கேல் கிளார்க். ஆனால், அந்த இன்னிங்ஸ், ஆட்டம் முடிய 2 பந்துகள் இருந்தபோது முடிவுக்கு வந்தது. ரிஷப் பன்ட் 48 பந்துகளில் 85 ரன்கள் அடித்து வெளியேறியபோது பவுண்டரி லைனில் இருந்த விராட் கோலியே கைதட்டி பாராட்டினார். 20 ஓவர் முடிவில் டெல்லி 174/5 ரன்கள் எடுத்தது.

சர்ஃபராஸுக்குப் பதிலாக களமிறங்கிய மனன் வோராவும் கோலியை ஏமாற்றினார். 18 ரன்கள் எடுத்திருந்தபோது டி காக் ரன் அவுட். பவர் பிளே முடிவில் பெங்களூரு 43/2. டி வில்லியர்ஸ் – கோலி என உலகின் தலைசிறந்த இரு பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப். இறங்கிய முதல் பந்தில் இருந்தே அடிப்பதுதான் ஏபிடி பியூட்டி. நதீம் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து மிரட்டினார் அந்த ஏலியன். 9 பந்துகளில் 23 ரன்கள். அதில் ஐந்து பவுண்டரி, அதில் மூன்று ஸ்வீப் ஷாட் மூலம் வந்தவை. 

AP18111660012110_10582.jpg


 டி வில்லியர்ஸ் அடிக்க நினைத்தால் அடிதான். அது எந்த பெளலராக இருந்தாலும் சரி, பந்து எந்த லைனில் வந்தாலும் சரி, எந்த லென்த்தில் வந்தாலும் சரி. நதீம் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்த டி வில்லியர்ஸ், தெவேத்தியா பந்தில் டீப் மிட்விக்கெட் திசையில் சிக்ஸர் பறக்கவிட்டார். பந்து மேற்கூரையில் பட்டு தெறித்தது. பொதுவாக, கோலி ஸ்ட்ரைக்கர் எண்டில் இருப்பதையே விரும்புவார். ஆனால், ஸ்ட்ரைக்கர் எண்டில் டி வில்லியர்ஸ் இருக்கிறார், அதுவும் ஃபார்மில் இருக்கிறார் என்பதால், அவரை ஆட விட்டு வேடிக்கை பார்த்தார் கோலி.


கோலியின் விக்கெட்டை எடுக்க ஃபீல்டர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்யவேண்டியது அவசியம். இந்தமுறை டிரென்ட் போல்ட் அந்த முயற்சியைச் செய்தார். ஹர்ஷா படேல் புல்டாஸாக வீசியதை ஃபிளிக் செய்தார் கோலி. பந்து டீப் ஸ்கொயர் லெக் திசையில் பறந்து செல்கிறது. அங்கிருந்த போல்ட் ஜம்ப் செய்து வலது கையில் பந்தைப் பிடித்து விட்டார். ஆனால், அவரால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. இடது காலை மட்டும் தரையில் ஊன்றி, மார்பை தரையில் பதித்து, பவுண்டரி அட்டையை முத்தம் கொடுப்பது போல விழுந்து கிடக்கிறார். முதன்முறை பார்க்கும்போது அவரது முகம் பவுண்டரியைத் தொட்டது போல இருந்தது. ஆனால், தொடவில்லை. முகம் மட்டுமல்ல, உடலின் எந்தப் பாகமும் எல்லையைத் தொடவில்லை. கேட்ச். அட்டகாசமான கேட்ச். சென்சேஷனல் கேட்ச். Catch of the tournament… கோலியால் நம்பமுடியவில்லை. எதிரில் இருந்த டி வில்லியர்ஸால் நம்பமுடியவில்லை. எதிரணி கேப்டன் கம்பீரால் நம்பமுடியவில்லை. அம்பயர்களால் நம்பமுடியவில்லை. ரசிகர்களால் நம்பமுடியவில்லை. நம்பித்தான் ஆக வேண்டும். அது அவுட். கோலி 30 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த பார்ட்னர்ஷிப் பிரிந்தது. ஆனாலும், டி வில்லியர்ஸ் களத்தில் இருப்பதால் ரசிகர்கள் நம்பிக்கையிழக்கவில்லை. டி வில்லியர்ஸும் ஏமாற்றவில்லை.

டி வில்லியர்ஸ்


டெஸ்ட் கிரிக்கெட்டோ, ஒன்டே மேட்ச்சோ, டி-20யோ, எந்த ஃபார்மட்டாக இருந்தாலும், டி வில்லியர்ஸ் களத்தில் இருந்தால், சூழல் பரபரப்பாக இருக்கும். பெங்களூருவில் நேற்று அப்படியொரு சூழலை ஏற்படுத்தினார் டி வில்லியர்ஸ். டீப் மிட் விக்கெட், டீப் ஸ்கொயர் லெக், எக்ஸ்ட்ரா கவர், லாங் ஆஃப், தேர்ட் மேன் என ஏரியாவுக்கு ஒன்று வீதம் எல்லா திசைகளிலும் சிக்ஸர் அடித்திருந்தார். அவர் 4 அடிக்காத ஏரியாவே இல்லை. ஷ்ரேயாஸ், ரிஷப் பன்ட் சிறுகச் சிறுக சேகரித்த ரன்களை, கிளாசிக் இன்னிங்ஸை மடார் மடார் என அடித்து காலி செய்தார் ஏபிடி. டெல்லிக்கு மீண்டும் ஒரு தோல்விப் பாதைக்கு வழி காட்டிக் கொண்டிருந்தார். பெங்களூரு ஜெயிக்கும் என்று தெரியும். எத்தனை பந்துகளை மிச்சம் வைத்து, எத்தனை விக்கெட் வித்தியாசத்தில் ஜெயிக்கும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. 

AP18111525080065_10070.jpg

 


முடிவில், 12 பந்துகளை மீதம் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ஆர்.சி.பி. 39 பந்துகளில் 10 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 90 ரன்கள் எடுத்து, , 230.76 ஸ்ட்ரைக் ரேட் வைத்து, ஆட்ட நாயகன் விருதை வென்றார் டி வில்லியர்ஸ். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்துக்கு முன்னேறியது ஆர்.சி.பி. மேட்ச் முடிந்தபின் கோலி, ``டி வில்லியர்ஸ் எப்போதும் நம் முகத்தில் புன்னகையை வரவைப்பார்’’ என்றார்.  அது பொய்யில்லை!

https://www.vikatan.com/news/sports/122943-de-villiers-magic-does-the-trick-for-bangalore.html

Link to comment
Share on other sites

கெயில்... ராகுல்... ரன் மழை! கொல்கத்தா தமிழனை வீழ்த்திய பஞ்சாப் தமிழன் #KXIPvsKKR

 
 

ஐபிஎல்-ல் வீக்கெண்டு என்றாலே டபுள் தமாக்காதான். அதிலும் இன்றைய போட்டியின் கேப்டன்கள் இருவரும் சென்னைப் பசங்க!. தமிழகத்துக்காகப் பல ஆண்டுகள் ஒரே அணியில் டொமஸ்டிக் சீசன் விளையாடியவர்கள். அதிலும் இருவரும் கேப்டனாக இருந்தவர்கள். தற்போதும் இருவரும் கேப்டன். பஞ்சாப் தமிழன் வெர்சஸ் கொல்கத்தா தமிழன்தான் இந்த மேட்சின் ஒரே ஹைலைட்.. இரு கேப்டன்களும், தங்கள் டீம்களை டாப் 4ல் வைத்திருந்தது சிறப்பு. #KXIPvsKKR

கடந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், மீண்டும் ஃபீல்டிங் சென்டிமென்ட்டில் தஞ்சம் புகுந்துவிட்டார் அஷ்வின். டாஸ் வென்றதும், சேஸிங் தேர்வு செய்தார். கடந்த போட்டியில் விக்கெட் வீழ்த்தியிருந்தாலும், ரன்களை வாரி வழங்கிய மோஹித் ஷர்மாவுக்குப் பதில், ராஜ்பூட் தேர்வு செய்யப்பட்டார். தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா, வெற்றிக் கூட்டணியை மாற்றாமல் அப்படியே களமிறங்கியது. 
ரஹ்மான் வீசிய இரண்டாவது ஓவரில் லெக் திசையில், சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு, லாங் ஆனில் கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் நரேன் 1(4). தம்பி, இது மத்த ஊர் இல்ல, ஈடென் என நினைவூட்டியது கொல்கத்தாவின் அகண்ட மைதானம். அடுத்து களமிறங்கிய உத்தப்பா ரஹ்மான் ஓவரில் ஹாட்ரிக் 4 அடித்து அதிரடி மோடை லின்னுடன் ஆரம்பித்தார். பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா. லின் 24 (19), உத்தப்பா 27 (20) . 

#KXIPvsKKR

வழக்கம் போல, அஷ்வின் பவர்பிளே முடிந்ததும் தன் கோட்டாவை ஆரம்பித்தார். கடந்த போட்டியில் ( 4 - 0 - 53 - 0 ) நடந்ததை, மறந்து , அட்டகாசமாக முதல் ஓவர் வீசினார். ஆனால், அதற்கு  அடுத்து பந்துவீச வந்த பர்விந்தர் ஸ்ரன் ஒட்டுமொத்தப் போட்டியின் போக்கையே மாற்றிவிட்டார். முதல் பந்தில் ஸ்குயர் லெக் திசையில் உத்தப்பா ஒரு சிக்ஸ். லின் தன் பங்குக்கு மிட்விக்கெட் திசையில் ஒரு சிக்ஸ், மீண்டும் ஸ்குயர் லெக் திசையில் ஒரு சிக்ஸ். இந்த சீசனில் பஞ்சாபின் மோசமான பந்துவீச்சு இந்த ஓவர்தான் .23 ரன்கள் ( 6 1 4 6 0 6 ) .
அடுத்தடுத்த ஓவர்களில் உத்தப்பாவும், ராணாவும் அவுட்டாக, பத்து ஓவர் முடிவில் 86/3 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. அடுத்த ஒவ்வோர் ஓவரிலும் பத்து ரன்களுக்கும் குறைவில்லாமல், வெளுத்து வாங்கினர் தினேஷ் கார்த்திக்கும் லின்னும். அதிலும், டை வீசிய பந்தில் , லின் லாங் ஆன் திசையில் அடித்த சிக்ஸ் 103 மீட்டர் !. அடேங்கப்பா லின்னே இப்படி அடிக்கறார்ன்னா, கெயில் அடிக்கறதெல்லாம் மைதானத்தைத் தாண்டிடும்ல என்ற மோடில் நம்பிக்கை வைத்து காத்திருந்தனர் டர்பன் பாய்ஸ். 

தினேஷ் கார்த்திக், லின்

நல்ல பந்தையெல்லாம் வெளுத்து வாங்கிய லின், கடைசியாக ஒரு டம்மி பந்தில் அவுட்டானதுதான் பெருஞ்சோகம். நான் பாட்டுக்கு செவனேன்னு தான போறேன் மோடில் ஃபுல் வொய்டு அவுட்சைடு ஆஃப் திசையில் வந்த பந்தை அடிக்க ஆசைப்பட்டு கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 74 (41b 6x4 4x6). ஸ்ரன் வீசிய பந்தில் 2 பவுண்டரி அடித்து, நடையைக் கட்டினார் ரஸல். 
ஒரு ஹிட்டர் என்றால் அனைத்துப் பந்துகளையும் அடிக்க வேண்டுமென எந்தவித அவசியமும் இல்லை என்பதை நினைவுறுத்தினார் தினேஷ் கார்த்திக். ஸ்டிரைக் ரொட்டேட் செய்வது, எந்த எஃபோர்ட்டும் இல்லாமல் கூலாக 4 அடிப்பது என தினேஷ் கார்த்திக் மற்றுமொரு கேப்டன் இன்னிங்ஸ். அதிலும் கெட்டித் தயிர் கப்பில் இருக்கும் தயிரை ஸ்பூனில் ஸ்லைசாக எடுப்பது போல் ஷார்ட் தேர்டு மேனுக்கும், கீப்பருக்கும் இடையே தினேஷ் அடித்த ஒவ்வொரு ஷாட்டும் அழகு!. 

200 ரன்களை அசால்ட்டாக கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. 
முதல் பந்திலிருந்தே அதிரடிக்கு ஆயத்தமானது பஞ்சாப். 8 ரன்கள் (4 4) என ஆரம்பித்து அமர்க்கள என்ட்ரி கொடுத்தார் கே.எல்.ராகுல்.முதல் ஓவர் முதலிரண்டு பந்துகள் பவுண்டரி. இரண்டாம் ஓவரும் முதலிரண்டு பந்துகள் பவுண்டரி... என எல்லாவற்றையும் ராகுல் பவுண்டரிகளில் டீல் செய்தார்.

ராகுல்

நான்காவது ஓவரை ரஸல் வீச , கெயில் எதிர்கொண்டார். கிரவுண்டில் இரு கிங்காங் எதிர் எதிரே நிற்பது போல காட்சியளித்தது. முதல் பந்திலேயே ஒரு இமாலய சிக்ஸ். அதே ஓவரில் மீண்டும் ஒரு பவுண்டரி, சிக்ஸ். வலது தொடையில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக ரஸல் ஃபீல்டுக்குத் திரும்ப, அந்த ஓவரை நித்திஷ் ராணா முடித்து வைத்தார். 

'இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா ' என நினைத்த தினேஷ் கார்த்திக், சுனில் நரேனை அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு பந்தையும் லென்ந்த் பந்தாக வீசி பேட்ஸ்மென்னுக்கு நெருக்கடி கொடுத்தார் நரேன். என்ன நினைத்தாரோ, கடைசிப் பந்தை லெக் சைடில் வீச, அதை பவுண்டரி ஆக்கினார் கெயில். பவர்பிளே முடிவில் பஞ்சாப் அணி ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் எடுத்திருந்தது. 
இன்று ஏனோ ஃபீல்டிங்கில் மிகவும் மெத்தனமாகச் செயல்பட்டது கொல்கத்தா. எப்படியும் பந்து நம்மை நோக்கித்தானே வருகிறது, நாம் ஏன் நகர வேண்டும் என இந்தியாவின் முன்னாள் பந்து வீச்சாளர் முனாஃப் பட்டேல் அதே இடத்தில் நின்று கொண்டிருப்பார். முனாஃப் பயிற்சி கொடுத்தாரோ என்னவோ, `பந்து வரட்டும் தம்பி, தூக்கி வீசுவோம்' என ஹாயாக நின்று கொண்டிருந்தனர் கொல்கத்தா ஃபீல்டர்ஸ். ஒருவேளை கொல்கத்தாவுக்கு அடுத்த ஒரு வாரத்துக்குப் போட்டி இல்லை என்பதால், இப்போதே ரெஸ்ட் மோடுக்குப் போய்விட்டார்கள் போல. 

கெயில்

8வது ஓவரில் சாவ்லா, பந்தை சிக்ஸருக்கு அனுப்ப, கொல்கத்தா அணியைக் காப்பாற்ற , ஈடன் கார்டனில் மழை பெய்ய ஆரம்பித்தது. 8.2 ஓவரில் பஞ்சாப் விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் எடுத்திருந்தது. DLS முறைப்படி 28 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என மாற்றியமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. 
சாவ்லா வீசிய முதல் பந்தில் சிக்ஸ் அடித்து வெல்கம் சொன்னார் கெயில். நரேனின் ஓவரைக்கூட கண்டுகொள்ளாமல், அதிரடி கிளப்பினார் ராகுல். டீப் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸ், அதைத் தொடர்ந்து இரு பவுண்டரி என அடித்தவர் அடுத்த பந்தில் குரானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

இறுதியாக குரான் பந்தில் லாங் ஆனில்  வின்னிங் சிக்ஸ் அடித்தார் கெயில். 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி, முதல் இடத்துக்கு வந்தது பஞ்சாப். 

கெயில்

PC: BCCI

STATS #KXIPvsKKR 

* 3 இன்னிங்ஸில் 229 ரன்கள் எடுத்த கெயில், ஆரஞ்ச் கேப்பைப் பெற்றார்.  

சச்சின் முதல் பிராவோ வரை... ஆரஞ்ச் கேப்... பர்பிள் கேப்... இதுவரை யார் யார்..?

* 6 இன்னிங்ஸில் 8 விக்கெட் வீழ்த்திய நரேன் பர்ப்பிள் கேப்பைப் பெற்றார். மும்பை ஸ்டாரான மார்க்கண்டேவும் 8 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். ஆனால், மும்பை இதுவரையில் நான்கு போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

https://www.vikatan.com/news/sports/122945-gayle-rahul-storm-in-kolkatta.html

Link to comment
Share on other sites

பவர் பிளேயில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 27 ரன்கள் மட்டுமே சேர்த்தது சென்னை

 
அ-அ+

சன்ரைசர்ஸ் அணியின் அபார பந்து வீச்சால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பவர் பிளே ஆன முதல் 6 ஓவரில் --- ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. #SRHvCSK

 
 
 
 
பவர் பிளேயில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 27 ரன்கள் மட்டுமே சேர்த்தது சென்னை
 
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

சென்னை அணியில் இம்ரான் தாஹிர் நீக்கப்பட்டு டு பிளிசிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. ஷேன் வாட்சன், 2. அம்பதி ராயுடு, 3. சுரேஷ் ரெய்னா, 4. டு பிளிசிஸ், 5. டோனி, 6. சாம் பில்லிங்ஸ், 7. வெயின் பிராவோ, 8. ஜடேஜா, 9. கரண் சர்மா, 10. தீபக் சாஹர், 11. சர்துல் தாகூர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தவான் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக ரிக்கி புய் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ஜோர்டான் நீக்கப்பட்டு பில்லி ஸ்டேன்லேக் சேர்க்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. ரிக்கி புய், 2. சகா, 3. கேன் வில்லியம்சன், 4. யூசுப் பதான், 5. மணிஷ் பாண்டே, 6. ஷாகிப் அல் ஹசன், 7. தீபக் ஹூடா, 8. பில்லி ஸ்டேன்லேக், 9. புவனேஸ்வர் குமார், 10. ரஷித் கான், 11. சித்தார்த் கவுல்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷேன் வாட்சன், டு பிளிசிஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. 2-வது ஓவரை ஸ்டேன்லேக் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் டு பிளிசிஸ் கேட்சில் இருந்து தப்பினார். இந்த ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் முதல் இரண்டு ஓவரில் சென்னை அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. சன்ரைசர்ஸ் ஐதராபத் அணி நேர்த்தியான பந்து வீச்சை வெளிப்படுத்தியது.

201804221633223949_1_watson-s._L_styvpf.jpg

3-வது ஓவரை ஷாகிப் அல் ஹசன் வீசினார். இந்த ஓவரில் நான்கு ரன்கள் எடுத்தது. 4-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை வாட்சன் சிக்சருக்கு தூக்கினார். தொடர்ந்து வாட்சன் வாணவேடிக்கை காட்டுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 15 பந்தில் 1 சிக்சருடன் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அடுத்து டு பிளிசிஸ் உடன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். 5-வது ஓவரின் 3-வது பந்தில் ரெய்னா பவுண்டரி அடித்தார். 6-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை டு பிளிசிஸ் பவுண்டரிக்கு விரட்டினார். அதன்பின் சென்னை அணியால் பந்தை எல்லைக் கோட்டிற்கு அனுப்ப முடியவில்லை. இதனால் பவர் பிளே ஆன முதல் 6 ஓவரில் 27 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/22163322/1158437/SRHvCSK-chennai-super-kings-just-27-runs-in-power.vpf

182/3
Link to comment
Share on other sites

`அதிரடி காட்டிய ராயுடு, ரெய்னா' - 182 ரன்கள் குவித்த சென்னை அணி..!

 

அம்பதி ராயுடு மற்றும் சுரேஷ் ரெய்னா அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 182 ரன்கள் குவித்துள்ளது.

15_17231.jpg

photo credit : twitter/ipl

ஐ.பி.எல் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியைச் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. ராஜிவ் காந்தி மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பந்துவீச தீர்மானித்தார். ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாகச் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக ரிக்கி புகி சேர்க்கப்பட்டார். இதேபோல் ஜோர்டனுக்கு பதிலாகப் பில்லி விளையாடினார். சென்னை அணியில் இம்ரான் தாஹிருக்கு பதிலாக டூ பிளஸிஸ் விளையாடினார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் டாப் ஆர்டரில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 

 

ராயுடுவுக்கு பதிலாக டூ பிளஸிஸ் வாட்சனுடன் களம் கண்டார். கடந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய வாட்சன் இந்தமுறை ரசிகர்களைச் சோதித்தார். மெதுவாக ஆடிய வாட்சன் 15 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டூ பிளஸிஸ் சோபிக்க தவறினார். 11 ரன்களில் அவர் வெளியேறச் சென்னை தடுமாற்றம் கண்டது. இருப்பினும் பின்னர் இணைந்த அம்பதி ராயுடு - ரெய்னா இணை அணியைச் சரிவில் இருந்து மீட்டது. ரெய்னா பொறுப்பாக ஆட அம்பதி ராயுடு அதிரடி காட்டினார். 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 79 ரன்களில் ராயுடு ரன் அவுட் ஆக ரெய்னா அரைசதம் அடித்தார். இதன்பின் களமிறங்கிய கேப்டன் தோனி தன் பங்குக்கு அதிரடி காட்ட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. ரெய்னா 54 ரன்களுடன், தோனி 25 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 

https://www.vikatan.com/news/sports/122968-chennai-super-kings-scored-182-runs-against-srh.html

 

Link to comment
Share on other sites

வில்லியம்சன், பதான் அதிரடி வீண் - 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி..!

 
 

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 

18_19171.jpg

photo credit: twitter/ipl

ஐ.பி.எல் தொடரின் இன்றைய லீக்கில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின. ராஜிவ் காந்தி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பந்துவீச தீர்மானித்தார். ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாகச் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக ரிக்கி புகி சேர்க்கப்பட்டார். இதேபோல் ஜோர்டனுக்கு பதிலாகப் பில்லி விளையாடினார். சென்னை அணியில் இம்ரான் தாஹிருக்கு பதிலாக டூ பிளஸிஸ் விளையாடினார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி அம்பதி ராயுடு - ரெய்னா அதிரடியால் 20 ஓவர்களில் 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் அம்பதி ராயுடு 79 ரன்கள் எடுத்தார். இதேபோல் ரெய்னா 54 ரன்கள் எடுத்தார். 

 

இதன்பின் இமாலய இலக்கை நோக்கிக் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்குச் சென்னை வீரர் தீபக் சஹார் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தார். முதல் ஓவரில் ரிக்கி புகியை அவுட் ஆக்கிய சஹார், அடுத்தடுத்த ஓவர்களில் மனிஷ் பாண்டே மற்றும் ஹூடாவை வெளியேற்றினார். 4 ஓவர்களில் 17 டாட் பால், ஒரு மெய்டன் 3 விக்கெட் என சஹார் அசத்தினார். எனினும் பின்னர் இணைந்த வில்லியம்சன் - யூசுப் பதான் ஜோடி அதிரடியாக ஆடியது. கேன் வில்லியம்சன் 84 ரன்களிலும், பதான் 45 ரன்களிலும் அவுட் ஆகக் கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கடைசி ஓவரில் அந்த அணி 14 ரன்கள் மட்டுமே எடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

https://www.vikatan.com/news/sports/122973-chennai-super-kings-won-by-4-runs-against-srh.html

Link to comment
Share on other sites

‘ராயுடு ராஜ்ஜியம்’: சன்ரைசர்ஸை சிதைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்: மீண்டும் முதலிடம்

 

 
rayudu

சிஎஸ்கே அணியின் ரன்குவிப்புக்கு காரணமாக இருந்த ராயுடு, ரெய்னா   -  படம்உதவி: ட்விட்டர்

ராயுடு, ரெய்னாவின் ஆர்ப்பரிப்பான, அர்பணிப்பான பேட்டிங், சாஹரின் மிரட்டல் பந்துவீச்சு ஆகியவற்றால், ஹைதராபாத்தில் இன்று நடந்த 20-வது ஐபிஎல் போட்டியின் பரபரப்பான லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

பவர்ப்ளேயில் 32 ரன்கள் மட்டுமே சேர்த்து, 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த சிஎஸ்கே அணியை ராயுடுவும், ரெய்னாவும் தூக்கி நிறுத்தினார்கள் என்றால் மிகையல்ல. இருவரின் கூட்டணி 100 ரன்களுக்கு மேல் சேர்த்து அணியின் ரன்குவிப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

நடுவரிசையில் இறங்கி பேட்டிங்கில் மிரட்டிய ராயுடு, 37 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்தார். இவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

அதேசமயம், பந்துவீச்சில் சாஹர் தொடக்கத்திலேயே 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சன்ரைசர்ஸ் சரிவுக்கு வித்திட்டார். ஒட்டுமொத்தத்தில் இது சிஎஸ்கே அணியின் கூட்டு உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

முதலிடம்

இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் ஒரு தோல்வி 4 வெற்றிகள், என 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 2 தோல்வி, 3 வெற்றிகள் என  6 புள்ளிகளுடன் 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இம்ரான் தாஹிருக்கு பதிலாக டூப்பிளசிஸ் சேர்க்கப்பட்டு இருந்தார். ஹைதராபாத் அணியில் ஷிகர் தவாணுக்கு பதிலாக ரிக்கி புயி, ஜோர்டானுக்கு பதிலாக ஸ்டான்லேக் ஆகியோர் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் சேர்த்தது. 183 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது.

திணறல்

சிஎஸ்கே வீரர்கள் வாட்ஸன், டூப்பிளசிஸ் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். புவனேஷ்குமாரும், ஸ்டான்லேக்கும் துல்லியமாகப் பந்துவீசி பவர்ப்ளே ஓவரில் சென்னை அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர்.

இதனால், தொடக்கத்திலேயே சென்னை அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. வாட்ஸனும், டூப்பிளசியும் தொடக்கத்தில் இருந்து ரன்சேர்க்க தடுமாறினார்கள். 3 ஓவர்களுக்கு 4 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற வலுகுறைந்த அணிக்கு எதிராக கடந்த போட்டியில் சிஸ்கர்களும், பவுண்டரிகளும் பறக்கவிட்ட வாட்ஸன் இந்த போட்டியில் ரன் அடிக்க முடியாமல் தத்தளித்தார்.

புவனேஷ்வர் வீசிய 4-வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்த வாட்ஸன், அடுத்த பந்தில் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா, டூப்பிளசியுடன் இணைந்தார். வேகப்பந்துவீச்சு மட்டுமல்லாமல், சஹிப் அல்ஹசன் பந்துவீச்சிலும் இருவராலும் ரன் சேர்க்க முடியவில்லை. பவர்ப்ளே ஓவரில் 27 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

ராஷித் கான் வீசிய 8-வது ஓவரில் 11 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், டூப்பிளசிஸ் ஆட்டமிழந்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டூபிளசி ஏமாற்றம் அளித்தார். அடுத்ததாக அம்பதிராயுடு களமிறங்கி, ரெய்னாவுடன் இணைந்தார். இதன் பின்தான் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது.

திருப்புமுனை

3-வது விக்கெட்டுக்கு நங்கூரமாக நின்ற இந்த கூட்டணி, தொடக்கத்தில் நிதானமாகவும், பின்னர் தங்களின் அதிரடி ஆட்டத்தாலும் சன்ரைசர்ஸ் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர்.

ராயுடு வந்தவுடன் ராஷித் கான் பந்துவீச்சில் பவுண்டரி அடித்தார். புவனேஷ் குமாரை ஓவரை எதிர்பார்த்துக் காத்திருந்த ரெய்னா அவரின் 10 வது ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்து சவால் விட்டார். 10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 2 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் சேர்த்திருந்தது.

ராஷித் கான் வீசிய 12-வது ஓவரில் ரெய்னா தொடர்ந்து இரு சிக்ஸர்கள் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். ராயுடு நிதானமாக பேட் செய்து தனக்குரிய வாய்ப்புக்காக காத்திருந்தார்.

ராயுடு வாய்ப்பு வந்தது. ஸ்டான்லேக், சஹிப் அல் ஹசன், ராஷித் கான் ஆகியோரின் ஓவரை நொறுக்கி அள்ளிய ராயுடு 27 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

14-வது ஓவரை ஸ்டான்லேக் வீசினார். இந்த ஓவரில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 18 ரன்கள் அடித்து ஸ்டான்லேக்குக்கு கிலி ஏற்படுத்தினார் ராயுடு.

ஹசன் வீசிய 15-வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி, ராஷித்கான் வீசிய 16-வது ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரி என ராயுடு வெளுத்து வாங்க, ரெய்னாவும் ஒரு பவுண்டரி அடித்து வெறுப்பேற்றினார். இவர்களின் அதிரடியைப் பார்த்த வில்லியம்ஸன் கையை பிசைந்தார்.

16-ல் 48 ரன்கள்

கவுல் வீசிய 17-வது ஓவரில் ராயுடு ரன்அவுட் செய்யப்பட்டார். 37 பந்துகளைச் சந்தித்த ராயுடு 79 ரன்கள் சேர்த்தார். இதில் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும். ராயுடு தான் சந்தித்த கடைசி 16 பந்துகளில் மட்டும் 48 ரன்கள் சேர்த்தார். இதில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.

3-வது விக்கெட்டுக்கு ரெய்னா, ராயுடு கூட்டணி 112 ரன்கள் சேர்த்து, பிரிந்தனர்.

காதைப் பிளந்த விசில்

4-வது வீரராக தோனி களமிறங்கினார். தோனி களத்தில் வரும்போதே விசில் சத்தமும், ரசிகர்களின் கரகோஷமும் காதைப் பிளந்தது.

முதல் அரைசதம்

ராஷித்கான் வீசிய 18-வது ஓவரை தோனி சந்தித்தார். 2-வது பந்தில் பவுண்டரி அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். கவுல் வீசிய 19-வது ஓவரில் பவுண்டரி அடித்து ரெய்னா, ஐபிஎல் சீசனில் முதல் சதத்தை 39 பந்துகளில் பதிவு செய்தார்.

கவுல் ஓவரில் பைல் லெக் திசையிலும் தேர்டுமேன் திசையும் இரு பவுண்டரிகளை தோனி அடித்தார். ஸ்டான்லேக் வீசிய கடைசி ஓவரில் தோனி ஒரு சிக்ஸர் அடித்தார்.

20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் சேர்த்தது. ரெய்னா 54 ரன்களுடனும், தோனி 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

சன்ரைசர்ஸ் அணி தரப்பில் புவனேஷ்குமார், ராஷித்கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ராஷித்கான் 4 ஓவர்கள் வீசி 49 ரன்கள் வழங்கினார்.

கடைசி 10 ஓவர்களில் 129

ஒருகட்டத்தில் 10 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் சேர்த்திருந்த சிஸ்கே அணி, அடுத்த 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 129 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் மைதானத்தில் கடந்த 3 ஐபிஎல் சீசனில் சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 148 ரன்கள் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏமாற்றிய தொடக்கம்

183 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. அறிமுக வீரர் ரிக்கி புயி, வில்லியம்ஸன் களத்தில் இறங்கினர். சிஸ்கே பந்துவீச்சாளர் சாஹர் தனது துல்லியத்துடன் கூடிய லென்த்தில் வீசி, முதல் ஓவரில் புயிக்கு படம் காட்டினார். 5-வது பந்தில் புயி ரன் ஏதும் சேர்க்காமல் பர்ஸ்ட் ஸ்லிப்பில் நின்றிருந்த வாட்ஸனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்ற புயி, சர்வதேச அனுபவம் இல்லாதவர். அவரைத் தொடக்க வீரராக களமிறக்கி ஆடவைத்தது மிகப்பெரிய தவறாகும். அதற்கு தண்டனை முதல் ஓவரிலேயே கிடைத்துவிட்டது.

அடுத்து பாண்டே களம் புகுந்தார். முதல் ஓவரில் ரன் ஏதும் கொடுக்காமல் மெய்டன் விக்கெட் வீழ்த்தினார் சாஹர்.

தாக்கூர் வீசிய 2-வது ஓவரில் வில்லியம்ஸன் 2 பவுண்டரிகள் அடித்து அணிக்கு ரன்கள் சேர்த்தார். சாஹர் வீசிய 3-வது ஓவரின் முதல்பந்தில் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து பாண்டேவும் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.

sagarjpg

பாண்டே விக்கெட்டை வீழ்த்தியசாஹரே பாராட்டும் சக வீரர்கள்: படம் உதவி ட்விட்டர் ஐபில்

 

விக்கெட் சரிவு

இரு முக்கியமான விக்கெட்டுகள் சன்ரைசர்ஸ் அணி தொடக்கத்திலேயே இழந்தது பெரும் இக்கட்டான நிலைக்கு தள்ளியது.

அடுத்து வந்த தீபக் ஹூடா, வில்லியம்சனுடன் இணைந்தார். ஹூடா நிதானம் காட்ட வில்லியம்சன் அடித்து ஆடினார். சாஹர் வீசிய 5-வது ஓவரில் ஹூடாவும் ஒரு ரன்னில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால், சன்ரைசர்ஸ் அணி விக்கெட் சரிவில் சிக்கி விழிபிதுங்கி நின்றது. சன்ரைசர்ஸ் அணி பவர்ப்ளே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து, 40 ரன்கள் சேர்த்தது.

4-வது விக்கெட்டுக்கு சஹிப் அல்ஹசன், வில்லியம்சனுடன் இணைந்தார். வில்லியம்சன் அவ்வப்போது சிக்ஸர்களும், பவுண்டரிகளும் அடித்து ரன் விகிதத்தை உயர்த்தினார்.

சர்மா வீசிய 10-வது ஓவரில் நிதானமாக பேட் செய்துவந்த சஹிப் அல்ஹசன் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 51 ரன்கள் சேர்த்தனர்.

வில்லியம்சன் போராட்டம் வீண்

அடுத்து வந்த யூசுப் பதான், வில்லியம்சனுடன் சேர்ந்தார். சர்மா வீசிய 15-வது ஓவரில் வில்லியம்சன் 3 சிக்சர்களை அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். பதான் தன் பங்கிற்கு பிராவோவின் ஓவரில் இரு சிக்ஸர்கள் விளாசினார். இதனால், ஆட்டத்தின் முடிவு மதில் மேல் பூனையாக இருந்தது.

பிராவோ வீசிய 18-வது ஓவரில் திருப்புமுனை ஏற்பட்டது. நங்கூரமிட்டு பேட் செய்த வில்லியம்சன் 84 ரன்களில் (51 பந்துகள்) ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர், 5 பவுண்டரி அடங்கும்.

தாக்கூர் வீசிய 19-வது ஓவரில் பதான் 45 ரன்களில் (27 பந்துகள்) பெவிலியன் திரும்பினார். இவரின் கணக்கில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கும்.

போராடி தோல்வி

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. ராஷித்கான், சாஹா களத்தில் இருந்தனர். பிராவோ வீசிய பந்தில் சாஹா ஒரு பந்தை வீணாக்கினார். 2-வது பந்தில் 2 ரன்களும், 3-வது பந்தில் ஒரு ரன்னும் எடுத்து ராஷித்கானிடம் கொடுத்தார். சரியாக வாய்ப்பை பயன்படுத்திய ராஷித்கான் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்ததால் டென்ஷன் எகிறியது.

கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராஷித்கான் ஒரு ரன் எடுக்க சன்ரைசர்ஸ் போராடி தோல்வி அடைந்தது.

20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது. ராஷித்கான் 17 ரன்களிலும், சாஹா 5 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் சாஹர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

http://tamil.thehindu.com/sports/article23638163.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐபிஎல் - மும்பை இந்தியன்சுக்கு எதிராக திரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்

 
அ-அ+

ஐபிஎல் 20 ஓவர் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. #IPL2018 #MIvRR

 
 
 
 
ஐபிஎல் - மும்பை இந்தியன்சுக்கு எதிராக திரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்
 
 
ஜெய்ப்பூர்:
 
ஐ.பி.எல். தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
 
அதன்படி துவக்க வீரர்களாக சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் களமிறங்கினர். குல்கர்னி வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் லீவிஸ் விக்கெட்டை எடுத்தார். அடுத்து இஷான் கிஷான், சூர்ய குமார் யாதவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர். இவர்கள் இருவரையும் பிரிக்க முடியாமல் எதிரணியினர் திணறினர்.
 
201804222355158714_1_MI-rohit._L_styvpf.jpg
 
மும்பை அணி 130 ரன்கள் எடுத்தபோது இஷான் கிஷான் அவுட்டாகி வெளியேறிய நிலையில் அடுத்த ஓவரிலேயே சூர்ய குமார் யாதவும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா உள்பட மும்பை வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.
 
மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக சூர்ய குமார் யாதவ் 72, இஷான் கிஷான் 58 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோப்ரா ஆர்சர் 3 விக்கெட்டும், குல்கர்னி 2 விக்கெட்டும் எத்தனர். இறுதியில் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டு இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது.
 
201804222355158714_2_MI-Ishan._L_styvpf.jpg
 
பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்கியா ரகானே, ராகுல் திரிபாதி ஆகியோர் களமிறங்கினர். திரிபாதி 9 ரன்களிலும், ரகானே 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் சஞ்சு சாம்சன் உடன், பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்து ரன் குவித்தார். ஸ்டோக்ஸ் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் போல்டானார்.
 
சாம்சன் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சாம்சன் அரைசதம் கடந்தார். 17வது ஓவரை வீசிய பும்ரா சாம்சன், பட்லர் இருவரையும் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழக்க செய்தார். சாம்சன் 39 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து கிளாசன், ஜோப்ரா ஆர்சர் ஆகியோர் களமிறங்கினர். 
 
201804222355158714_3_RR-sanju._L_styvpf.jpg
 
கிளாசன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இறுதியில் கவுதம் அதிரடியாக விளையாடினார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது, கிருஷ்ணப்பா கவுதம் 11 பந்தில் 33 ரன்களுடன் களத்தில் இருந்தார். நாளை நடைபெறும் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #VivoIPL #MIvRR
 

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/22235516/1158465/IPL-2018-Rajasthan-Royals-beat-Mumbai-Indians-by-3.vpf

Link to comment
Share on other sites

ENGLISH
NO TEAMS P W L T NR PTS NRR  
1 CHENNAI SUPER KINGS 5 4 1 0 0 8 +0.742
 
2 KINGS XI PUNJAB 5 4 1 0 0 8 +0.446
 
3 KOLKATA KNIGHT RIDERS 6 3 3 0 0 6 +0.572
 
4 SUNRISERS HYDERABAD 5 3 2 0 0 6 +0.301
 
5 RAJASTHAN ROYALS 6 3 3 0 0 6 -0.801
 
6 ROYAL CHALLENGERS BANGALORE 5 2 3 0 0 4 -0.486
 
7 MUMBAI INDIANS 5 1 4 0 0 2 +0.317
 
8 DELHI DAREDEVILS 5 1 4 0 0 2 -1.324
 

Win - 2 points No Result - 1 point Tied - 1 point

*** Tied (where it was not possible to complete a Super Over at the end of play or where the Super Over itself is tied)

https://sports.ndtv.com/indian-premier-league-2018/points-table

Link to comment
Share on other sites

பெரோஷா கோட்லா மைதானத்தில் பஞ்சாபை சமாளிக்குமா டெல்லி டேர்டெவில்ஸ்

 

 
DELHIDAREDEVILSjpg

ஐபிஎல் தொடரில் இன்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

கவுதம் காம்பீர் தலைமையிலான டெல்லி அணி 5 ஆட்டங்களில் விளையாடி 4 தோல்விகளை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கடைசியாக நேற்றுமுன்தினம் பெங்களூரு அணியிடம் வீழ்ந்திருந்தது. டி வில்லியர்ஸ் 39 பந்துகளில் 90 ரன்கள் விளாசி டெல்லி அணியின் ஒட்டுமொத்த பந்து வீச்சையும் சிதைவுக்குள்ளாக்கியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் இன்று தனது சொந்த மண்ணில் பஞ்சாப் அணியை சந்திக்கிறது டெல்லி அணி. தோல்விகளால் துவண்டுள்ள டெல்லி அணிக்கு கிறிஸ் கெயில் கடும் சவாலாக இருக்கக்கூடும். 2 அரை சதங்கள், ஒரு சதத்துடன் அதிரடி பாதைக்கு திரும்பி உள்ள அவர், மீண்டும் ஒரு ரன் வேட்டைக்கு ஆயத்தமாக உள்ளார். அவருடன் கே.எல்.ராகுலும் மிரட்ட காத்திருக்கிறார்.

இந்த சீசனில் பஞ்சாப் அணியை 2-வது முறையாக எதிர்கொள்கிறது டெல்லி அணி. மொகாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியிருந்தது. இந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் டெல்லி அணி ஒட்டுமொத்தமாக எழுச்சி காண வேண்டும். காம்பீர் பேட்டிங்கில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது பின்னடைவாக உள்ளது. இதேபோல் ஜேசன் ராய், மெக்ஸ்வெல் ஆகியோரும் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தத் தவறுகின்றனர். இதனால் வெற்றிக்கான வியூகத்தில் கவனம் செலுத்தும் விதமாக டெல்லி அணி வீரர்கள் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

http://tamil.thehindu.com/sports/article23642195.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.