Jump to content

Recommended Posts

பனிப்பொழிவு இல்லாமல் போய் விட்டது; கெய்ல், முஜீப்தான் வித்தியாசம்: தோனி

 

 
dhoni2jpg

முதுகு காயம் அடைந்த தோனி.   -  படம். | அகிலேஷ் குமார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று தோனி தி பினிஷர் களத்தில் நின்றும் கிங்ஸ் லெவன் அணியிடம் தோல்வி தழுவியது, முதல் தோல்விதான் என்றாலும் கேப்டன்சியில் தோனியை ஒருவாறு சாமர்த்தியமாக எதிர்கொண்டார் அஸ்வின்.

தோனி முதுகு காயத்திலும் உறுதியான  ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதலில் 28 பந்துகளில் 33 ரன்கள் என்று இன்னிங்சைக் கட்டமைத்தார். 21 பந்துகளில் சென்னை வெற்றிக்கு 65 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி 3 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என்று விளாசினார். குறிப்பாக முடிவு ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டான ஆண்ட்ரூ டை பந்து வீச்சில் 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஆனாலும் திட்டமிட்டு அடிக்கப்பட்ட அடி இன்னிங்ஸ் என்று கூற முடியாது, அடித்து  ஆட வேண்டிய கட்டாயம்.. அடித்து ஆடினார். இன்னும் கொஞ்சம் திட்டமிட்டு அவர் ஆடியிருந்தால் 1 ஓவர் மிச்சம் வைத்து வென்றிருக்க முடியும். ஆனால் காயத்தினால் அவர் சில ஸ்ட்ரோக்குகளை ஆட முடியாமல் கூட போயிருக்கலாம்.

 

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் அவரால் மோஹித் சர்மாவை அடிக்க முடியவில்லை என்பதுதான் பளிச்சிடும் உண்மை. நெருங்கி வந்து தோற்றது சென்னை.

ஆட்டம் தோல்வியடையக் காரணமாக பிராவோவை ஜடேஜாவுக்குப் பிற்பாடு களமிறக்கியதைக் கூறலாம், அல்லது மோஹித் சர்மா வீசிய வைடு பந்துகளை தோனியால் பவுண்டரிகள் அடிக்க முடியாமல் போனதைக் கூறலாம் கெய்ல் இன்னிங்ஸைக் கூறலாம் இன்னும் எவ்வளவோ காரணங்கள் உண்டு அதேபோல் ஒருவர் தன் அணியின் பலம் குறித்தும் நம்பிக்கைக் கொண்டு அதற்கான காரணங்களைக் கூறலாம்... ஏன் அவரின் முதுகுக் காயத்தைக் கூட கூறலாம்.

தோனி ஆட்டம் முடிந்து இவ்வாறு கூறினார்:

அவர்கள் நன்றாக பந்து வீசினார்கள் என்று நினைக்கிறேன். முஜீப்தான் பெரிய வித்தியாசம். இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அவ்வளவாகப் பனிப்பொழிவு இல்லை.

கிறிஸ் கெய்லின் இன்னிங்சும் முஜீப் உர் ரஹ்மான் பந்து வீச்சும் அவர்களுக்கு வெற்றி தேடித் தந்தது. இது நெருக்கமான போட்டி, இது முக்கியம் ஏனெனில் நாம் சவாலாகத் திகழ்கிறோம் என்பதற்கு நெருக்கமான போட்டி என்பதே அடையாளம். எந்த மாதிரியான பவுண்டர்களை நாம் நீக்க வேண்டும். எந்த மாதிரியான சுலபமான பந்துகளைத் தவிர்க்க வேண்டும்? ஆகிய விஷயங்களில் இன்னும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டியுள்ளது.

அனைத்துப் போட்டிகளும் நெருக்கமாக இருப்பதால் அணி வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ள முடியும். இப்படிக் கூறினார்லும் ஒட்டுமொத்தமாக நாங்கள் இன்னும் மேம்பட வேண்டும். ஜடேஜா மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

இப்போதுதான் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும். ரெய்னா மட்டுமே முன்னிலையில் ஒரு இடது கை வீரராக இருக்கிறார் இந்நிலையில் ஜடேஜாவை நாம் நெகிழ்வாகப் பயன்படுத்தினால், இதுவரை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதையும் பார்க்கும் போது, இப்படியாக அவரைப் பயன்படுத்தினால் அவர் நன்றாக வருவார்.

முதுகு காயம் மோசமாக உள்ளது, ஆனால் கடவுள் எனக்கு நிறைய சக்தியைக் கொடுத்துள்ளதால் முதுகைப் பயன்படுத்த வேண்டிய தேவையேற்படவில்லை. என்னுடைய கைகளே வேலையைச் செய்துவிடும்.

என்றார் தோனி.

http://tamil.thehindu.com/sports/article23554106.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • Replies 592
  • Created
  • Last Reply

கெயில் புயலுக்கு ஈடுகொடுத்த எம்.எஸ்.டி மேஜிக் - ஒரு பவுண்டரியில் மிஸ்! #CSKvsKXIP

 
 

'ஒரு மந்தையில் இருந்து பிரிந்த இரண்டு ஆடுகள்... இரண்டெல்லாம் இல்லை, எக்கச்சக்க ஆடுகள் நேற்று மொகாலியில் சந்தித்துக்கொண்டன. கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் பி டீம் என இரண்டு அணிகள் மோதிய போட்டிதான் நேற்று நடந்தது. தனது கேப்டன்சி திறமையால் பஞ்சாபை வெற்றி அடையச் செய்த அஸ்வின், கொஞ்சம் மிஸ்ஸாகி இருந்தாலும் சென்னைக்கு வெற்றியை தாரை வார்க்கக் காத்திருந்த மோகித். இருவருமே சென்னை அணியின் வார்ப்புகள்

டாஸ் வென்றால் இனி மைக்கை நீட்டி கேட்க எல்லாம் தேவையில்லை போல. எல்லாரும் பீல்டிங்கைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். தோனியும் அப்படியே. மொகாலி பேட்டிங்குக்கு ஏற்ற ஆடுகளமென்பதால் சேஸிங் செய்வது சுலபமாக இருக்கும் என தோனி நினைத்திருக்கலாம். சென்னையில் காயமடைந்த ரெய்னாவுக்குப் பதில் முரளி விஜய், பஞ்சாப் அணியில் காயமடைந்த அக்சருக்குப் பதில் பரீந்தர் ஸ்ரன். ஸ்டோய்னிஸ் பெரிதாக சோபிக்காததால் கடோத்கஜன் கெயில் கையில் பேட்டைக் கொடுத்து 'அந்தா வெள்ளைக் கலருல ஒண்ணு பவுலர் கையில இருக்கு பாரு, அதை அப்பப்ப வெளியே அனுப்பிவிடு' என கிசுகிசுத்து வண்டியேற்றிவிட்டார் சேவாக்.

கெயில்

`என்னையவா ஏலத்துல எடுக்காம லூஸ்ல விடுறீங்க?' என தேக்கி வைத்திருந்த கோபத்தை எல்லாம் க்ரீஸில் காட்டினார் கெயில். இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே முன்னால் கால் வைத்து ஒரு பவுண்டரி. 'சாப்பிட்டது செரிக்கல' ரீதியில் முதுகே வளையாமல் நின்றபடி ஆடுவதுதான் கெயில் ஸ்டைல். ஆனால், வழக்கத்துக்கு மாறான முதல் ஷாட். அதிலேயே தெரிந்தது ஒரு முடிவோடுதான் களமிறங்கியிருக்கிறார் என. சென்னைக்கு எதிராக கெயில் எப்போது ஆடினாலும் ஆஃப் ஸ்பின்னரைக் கொண்டு அவரை பெவிலியனுக்கு அனுப்புவார் தோனி. நேற்றும் அந்த நினைப்பில்தான் தமிழ்ப்புலவர் ஹர்பஜனைக் கொண்டு வந்தார். பாவம் ஒரே ஓவரில் 19 ரன்கள் பறிகொடுத்தார் பாஜி!

தாகூர், சஹார், பாஜி என யாரையும் பீம்பாய் விட்டுவைக்கவில்லை. பந்து பேட்ஸ்மேனை தொடும் வேகத்தைவிட பவுண்டரி தொடும் வேகம்தான் அதிகமாக இருந்தது. 'Give me more' என வளைத்து வளைத்து அடித்தார் கெயில். பார்வையாளர்கள் எல்லாம் பீல்டர்களாக மாறினார்கள். விளைவு, பவர்ப்ளே முடிவில் 75 ரன்கள். அதற்கடுத்த ஓவரிலேயே பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார் கெயில். 22 பந்துகளில் அரைசதம். 7 ஓவர்கள் முடிவில் 92 ரன்கள். 'இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?' என சென்னை ரசிகர்கள் புலம்ப, 'அழாதே தோழா, பஞ்சாபின் கோதுமை வயல்களில் பச்சிளம்குழந்தையாக ஓடித்திரிந்த நான் இன்று உன் துயர் துடைக்க இருக்கிறேன்' என ரீ-என்ட்ரியானார் பாஜி. 'இந்தா அடிச்சுக்க' என அவர் ஆசை காட்டிய ஃபுல் டாஸ் பாலை பிராவோ கையில் கொடுத்து வெளியேறினார் ராகுல்.

இதுதான் சமயம் என பவுலிங் சேஞ்ச் கொண்டுவந்தார் தோனி. வாட்டோ வீசிய ஓவர் முதன்முறையாக பவுண்டரி இல்லாமல் கடந்தது. அதன்பின் வந்த பிராவோ ஓவரும் அப்படியே. பீம்பாய் கெயில் பற்றி ஒரு பழமொழி உண்டு. 'என்ன டெலிவரி போட்டாலும் சிக்ஸ் அடிப்பவர் எதிர்ப்பார்க்காத நேரத்தில் சப்பையாக அவுட்டாவார்' என! நேற்றும் அதுதான் நடந்தது. வாட்சன் வீசிய ஷார்ட் பாலை கெயில் லேசாக தொட, அது ஃபைன் லெக்கில் இருந்த தாஹிர் கையில் சரணடைந்தது. கெயில் அவுட்டாகும்போது ஸ்கோர் 12 ஓவர்களில் 127! அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் எல்லாம் அவர்களின் பெயர்களை டைப் செய்வதற்கு முன்பாகவே அவுட்டாகி வெளியேறினார்கள். ஆரோன் பின்ச் இரண்டாவது முறையாக கோல்டன் டக். அடுத்த 48 பந்துகளில் தட்டித்தட்டி 60 ரன்கள் எடுத்தது பஞ்சாப். 220-க்கு குறையாது என நினைத்த ஸ்கோரை 197-க்கே சுருட்டினார்கள் சென்னை பவுலர்கள். முக்கியமாக பிராவோவும் தாஹிரும்.

நீண்ட இடைவேளைக்குப் பின் சென்னை அணிக்காக ஓபனிங் இறங்கினார் விஜய். தேவைப்பட்ட ரன்ரேட் பத்து என்பதால் முதல் பந்தில் இருந்தே அடித்தாட வேண்டிய கட்டாயம். போன மேட்ச்சில் சூப்பர் ஸ்டார்ட் அளித்த வாட்சன் 11 ரன்களில் வெளியேற ஒன் டவுனில் இறங்கினார் ராயுடு. நான்கு ஓவர்களில் 40 ரன்கள் என நல்ல ரன்ரேட் இருந்த நிலையில், 'ஐ மிஸ் மை பங்காளி வாட்சன்' என டை பந்தில் அவுட்டாகி வெளியேறினார் விஜய். அடுத்து இறங்கிய பில்லிங்ஸை சோதிக்க ஸ்பின் அட்டாக் கொண்டுவந்தார் அஸ்வின். இன்ஸ்டன்ட் பலன். அஸ்வின் பந்தை ஸ்வீப் அடிக்க முற்பட்டு பேடில் வாங்க ரிவ்யூ சென்று விக்கெட் வாங்கினார் அஸ்வின்.

கெயில்

தோனி...! அவர் களம்புகுமுன் ஒரு சின்ன டேட்டா! பஞ்சாப் அணியோடு ஆடுவதென்றால் தோனிக்கு பக்கெட் பிரியாணி சாப்பிடுவது போல. அந்த அணிக்கெதிராக நான்கு அரைசதங்கள். ஆவரேஜ் 45.30, ஸ்ட்ரைக் ரேட் 153.04! ஆனாலும் ஃபார்ம் அவுட்டில் இருப்பதால் டவுட்டில் இருந்தார்கள் ரசிகர்கள். எப்போதும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும் தோனி முதல் பந்தில் இருந்தே ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யத் தொடங்கினார். வசதியான பந்து கிடைத்தால் பவுண்டரி விரட்டவும் தவறவில்லை. நான்காவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தார்கள் தோனியும் ராயுடுவும். 

முஜிபுர் ரகுமானின் பந்தை தடுத்து சிங்கிள் எடுப்பது, ஃபாஸ்ட் பவுலர்கள் சிக்கினால் பவுண்டரி அடிப்பது என டீசன்ட் வேகத்தில் ஸ்கோரை உயர்த்தியது இந்த ஜோடி. 13 ஓவர்கள் முடிவில் 107 ரன்கள். களத்தில் இரண்டு செட்டிலான பேட்ஸ்மேன்கள். இவர்களைப் பிரிக்காவிட்டால் ஆபத்து என்பதை உணர்ந்தே இருந்தார் அஸ்வின். அதன் விளைவு எப்போதும் பீல்டிங்கில் சொதப்பும் அஸ்வினே ராயுடுவை க்ளீன் த்ரோ செய்து ரன் அவுட்டாக்கினார். 'சரி அடுத்து பிராவோதானே, நல்லதுதான்' என ரசிகர்கள் நினைக்க, களமிறங்கியது ஜடேஜா!

அநியாயத்திற்கு பொறுமையை சோதித்தார் ஜடேஜா! சிக்ஸ் அடிக்க வேண்டிய பந்துகளில் எல்லாம் சிங்கிள் தட்ட, மறுபுறம் தோனிக்கு தசைபிடிப்பு வேறு! குட்டி பிஸியோதெரபி எடுத்துக்கொண்டு அவர் மீண்டும் களமிறங்கினாலும் குனிந்து ஆட சிரமப்படுவது கண்கூடாகத் தெரிந்தது. ஆனாலும் ஜடேஜா சொதப்புவதால் வலியோடு பொறுப்பையும் சேர்த்தே சுமந்தார். மோகித் சர்மாவின் 18-வது ஓவரை குறிவைத்தார். இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி என அதில் 19 ரன்கள். டார்கெட் சட்டென குறைந்தது. அரைசதம் கடந்தார் தோனி. 34 பந்துகளில்...! Much needed Innings! 

கெயில்

இரண்டு ஓவர்களில் 36 ரன்கள். வலி அதிகமாக இருப்பதால் மின்னல்வேகத்தில் ஓடவும் முடியாது. ஒரே ஆப்ஷன் க்ரீஸில் இருந்தபடி பந்தை சிதறடிப்பதுதான். அதைத்தான் செய்தார். டை வீசிய 19-வது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி, பல்லைக் கடித்துக்கொண்டு ஒரு டூஸ்...! டெடிகேஷன் லெவல் - தோனி! கடைசி ஓவரில் 17 ரன்கள். ஒருவேளை நல்ல உடல்நிலையில் இருந்திருந்தால் ஈஸியாக எடுத்திருக்கலாமோ என்னவோ! தோனி அசாத்திய வலியில் இருக்கிறார், குனிந்து ஆடவே முடியாது என்பதை உணர்ந்த மோகித் எல்லாப் பந்துகளையும் வைட் டெலிவரியாகவே போட்டார். அப்படியும் மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி பயங்காட்டினார் தோனி. 'நான் சில்லறையாதான் தருவேன். சிக்ஸ் எல்லாம் நோ' என திரும்பத் திரும்ப வைட் லென்த் டெலிவரிக்கள். கடைசி பால் சிக்ஸ் அடிக்க, நான்கு ரன்களில் தோற்றது சென்னை. தோனி 44 பந்துகளில் 79! அரங்கம் எழுந்து நின்று கைதட்டுகிறது. அஸ்வின் உள்ளிட்ட பஞ்சாப் வீரர்களும்!

 

தோற்றிருந்தாலும் இந்த ஆட்டத்தில் இருந்து எடுத்துக்கொள்ளவேண்டிய பாசிட்டிவ் விஷயங்கள் சென்னைக்கு நிறையவே இருக்கின்றன. ஒன்று டெத் ஓவர் பவுலிங்! போன ஆட்டத்தில் சொதப்பிய பவுலர்கள் டெத் ஓவர்களில் சூப்பராக பந்துவீசினார்கள். இரண்டாவது தோனியின் ஃபார்ம்! அணியில் வீக் லிங்க்காக இருந்த மிடில் ஆர்டர் தோனியின் கம்பேக் என்ட்ரி மூலம் பலமாகியுள்ளது. ரெய்னாவும் ஜடேஜாவும் இதேபோல் ரீ-என்ட்ரியானால் ப்ளே ஆஃப் செல்வது சுலபமாகிவிடும். எது எப்படியோ, கண்கள் பூக்கக் காத்திருந்த தோனி ரசிகர்களுக்கு நேற்றைய தினம் ஜாக்பாட்தான்!

https://www.vikatan.com/news/sports/122317-match-report-of-kxip-vs-csk.html

 

 

‘ஸ்மார்ட்டாக’ கேப்டன்ஷிப் செய்து ‘மிஸ்டர் கூல்’ தோனியை ஓரம்கட்டிய அஸ்வின்

 

 
aswin%20doni

பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி   -  படம் உதவி: ஐபிஎல் ட்விட்டர்

கிங்ஸ் லெவன் அணியின் கேப்டன் அஸ்வினின் ஸ்மார்ட்டான கேப்டன்ஷிப்பும், வித்தியாசமான அணுகுமுறையும், தோனியின் தேய்ந்துபோன நுட்பங்களை உடைத்து எறிந்தது.

குறிப்பாக கெயிலை களமிறக்கி கையாண்ட விதம், சூப்பர் ஓவர்களில் திறமையான பந்துவீச்சாளர்களை பயன்படுத்து ரன்களை கட்டுப்படுத்தியது, கடைசி ஓவர்களில் மோகித் சர்மா பந்துவீசச் செய்தது போன்றவை தோனிக்கு கேப்டன் நுட்பங்களை அவரிடம் இருந்து கற்று அவருக்கே அஸ்வின் பாடம் சொல்லிக்கொடுத்ததுபோல் அமைந்தது.

     

சண்டிகரில் நேற்று நடந்த 11-வது ஐபில் சீசன் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கிங்ஸ் லெவன் அணி.

கடந்த 10 ஆண்டுகளாக தோனியுடன் இணைந்து விளையாடியதால், அஸ்வினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரர்களை எப்படி பயன்படுத்துவார் தோனி என்பதை அஸ்வின் நன்கு அறிந்து வைத்திருந்தார்.

அதற்கு ஏற்றார்போல் கடந்த இரு போட்டிகளிலும் வெடிகுண்டு வீரர் கெயிலை இறக்காமல் இருப்பு வைத்திருந்தார். ஏன் கெயிலை தேர்வு செய்து பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் வியப்பாக இருந்தது.

gaylejpg

அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் கெயில்

 

ஆனால், ஸ்டோய்னிஸ் கடந்த இருபோட்டிகளிலும் பந்துவீசி இருந்தாலும், பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவு ஜொலிக்கவில்லை. இதனால், ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மன் கெயிலை சிஎஸ்கே அணிக்கு எதிராக அஸ்வின் இறக்கினார்.

ஏனென்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நிலையாக 140 கி.மீ வேககதத்துக்கு பந்துவீசக்கூடிய அளவுக்கு வேகப்பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை. மிதவேகத்தில் சராசரியாக 120 கிமீ வேகத்தில் வீசும் வீரர்களே இருப்பதால், கெயிலே இறக்குவது தொடக்தத்தில் நல்ல பலனளிக்கும் என்று அஸ்வின் எண்ணினார்.

அவரின் திட்டத்தை கச்சிதமாக கெயில் செயல்படுத்தி வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தார். ஃபார்மில் இல்லாத கெயிலை ஏன் தொடக்க வீரராக ஏன் களமிறக்கினார் என்ற கேள்வி ஒருதரப்பினர் எழுப்பினாலும், அவர்களுக்கு பதில், வங்கதேசத்தில் நடந்த பிபிஎல் போட்டியில் கெயில் இரு சதங்கள் அடித்ததே பார்ஃமில் இருந்ததே எனக் கூறலாம்.

அதுமட்டுமல்லாமல், கெயிலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஹர்பஜன் இருந்தார். இதனால், ஹர்பஜனின் முதல் ஓவரை மிகுந்த எச்சரிக்கையாகவே கெயில் கையாண்டார். ஏனென்றால், இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்பஜன் இருந்தபோது, 8 இன்னிங்ஸ்களில் கெயில் அவரின் பந்துவீச்சை எதிர்கொண்டுள்ளார்.

அதில் 3 முறை ஹர்பஜனிடம் கெயில் ஆட்டமிழந்துள்ளார். இதை காரணமாக வைத்து கெயில் பேட் செய்ய வந்தவுடன் ஹர்பஜனை பந்துவீச தோனி வாய்ப்பு கொடுத்தார். முதல் ஓவரில் பொறுமை காட்டிய கெயில், ஹரபஜனின் அடுத்த ஓவரில் ஒரு சிக்சர், ஒருபவுண்டரி விளாசி தோனியின் திட்டத்தை சிதறடித்தார்.

அஸ்வினைப் பொறுத்தவரை கடந்த இரு போட்டிகளிலும், பவர்ப்ளே ஓவர்களின் போது, சுழற்பந்துவீச்சை பெரும்பாலும் பயன்படுத்தி வந்தார். ஆனால், சென்னை அணிக்கு எதிரான பவர்ப்ளேயில், தனது திட்டத்தை மாற்றிய அஸ்வின் கடும் நெருக்கடி கொடுக்கும் நோக்கில் மோகித் சர்மாவையும், ஆன்ட்ரூ டையும் பயன்படுத்தி பந்துவீசச் செய்தார். இதற்கு பலனும் கிடைத்தது. பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் மட்டுமே சிஎஸ்கேவால் எடுக்க முடிந்தது.

அதிலும் சண்டிகர் ஆடுகளம் வேகப்பந்துக்கு ஓரளவு எடுபடும் என்பதால், தொடக்க ஓவர்களில் சுழற்பந்துவீச்சுக்கு அதிகமான முக்கியத்துவத்தை அளிக்காமல், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அஸ்வின் முன்னுரிமை அளித்து, 10 ஓவரக்ளுக்கு மேல், சுழற்பந்துவீச்சை பயன்படுத்தினார்.

10 ஓவர்களுக்கு மேல் அஸ்வின், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் திறம்பட வீசினர். ரஹ்மான் 3 ஓவர்களில் 18 ரன்களையும், அஸ்வின் 32 ரன்களும் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தி சிஎஸ்கே ரன்குவிப்பை கட்டுப்படுத்தினார்.

bravojpg

பிராவோ

 

அடுத்ததாக, சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலும் வியந்த விஷயம், இக்கட்டான நேரத்தில் பிராவோ களமிறக்கப்படாமல், ஜடேஜா களமிறங்கியதுதான்.

கடந்த 2015ம் ஆண்டில் இருந்து ஜடேஜாவின் ஸ்டிரைக் ரேட் 99.58 என்று பாராட்டும்படி இருந்தாலும், பிராவோவின் ஸ்டிரைக் ரேட் 133.90 என்பது அவரைக் காட்டிலும் சிறப்பானதாகும்.

பிராவோ மிகச்சிறந்த அதிரடி பேட்ஸ்மன்,  பதற்றம் இன்றி பந்துகளை எதிர்கொண்டு அடித்து விளையாடக் கூடியவரை ஏன் கடைசி வரிசையில் தோனி பயன்படுத்துகிறார் என்பது சிஎஸ்கே ரசிகர்களின் கேள்வியாக முன்வைக்கப்பட்டது.

பிராவோ சுழற்பந்துவீச்சுக்கு திணறுவார் என்பது கடந்த கால புள்ளிவிவரங்களில் இருந்து அறியலாம். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பிராவோவின் ஸ்டிரைக் ரேட் 111.50 என்றால், வேகப்பந்துவீச்சுக்கு எதிராக 136.83 ஆகும்.

அப்படி இருக்கும்போது, ஜடேஜா பேட் செய்யவரும் போது, அஸ்வின், ரஹ்மான் பந்துவீசி முடித்து வேகப்பந்துவீச்சாளர்கள் களத்தில் பந்துவீச வந்துவிட்டனர். அந்த நேரத்தில் பிராவோவை களமிறக்கி காட்டடி அடிக்கச் செய்வதுதான் புத்திசாலித்தனம். ஆனால், ஜடேஜாவை களமிறக்கி பந்துகளை வீணாக்கிவிட்டார். இதனால் கடைசி நேர நெருக்கடியில் தோனியாலும், பிராவோவாலும் ஒன்றும் செய்ய இயலாமல் போனது.

ஜடேஜா களமிறங்க வேண்டிய இடத்தில் பிராவோவுக்கு ஒருவேளை வாய்ப்பு கிடைத்திருந்தால், சென்னை அணி வெற்றி பெற பெரும்பான்மையான வாய்ப்பு இருந்திருக்கும்.

Mohit%20SharmaBCCIjpg

மோகித் சர்மா

 

சென்னை சூப்பர் கிங்ஸ் பட்டறையில் இருந்து பட்டை தீட்டப்பட்டு வெளியே வந்தவர் மோகித் சர்மா. ஆதலால், யாருக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்ற கணிப்பு அவருக்கு தெரிந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், கடைசிநேரத்தில் நெருக்கடிகளை சமாளித்து, எதிரணி வீரர்களை ரன்களை எடுக்கவிடாமல் பந்துவீசச் செய்வதிலும் மோகித் சர்மா திறமையானவர்.

கடந்த 2015ம்ஆண்டில் இருந்து 16 முதல் 20 ஓவர்களுக்கு இடையே பந்துவீசி மோகித் சர்மா 25 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார், எக்கானமி ரேட்டும் 9.32 மட்டுமே. பும்ரா மற்றும் டிவேன் பிராவோவின் எக்கானமியைக் காட்டிலும் மோகித் சர்மாவ சிறப்பாக இருக்கிறார்.

அதிலும் கடைசி ஓவரை வீசிய மோகித் சர்மா இரு யார்கர் பந்துகளையும், அடுத்து ஆப்சைட்டுக்கு விலக்கியே வீசியதால், தோனியால் அடித்து ஆடுவதில் பெரிய சிரமம் ஏற்பட்டது. இதுபோன்ற அஸ்வின் தனது கேப்டன்ஷிப் திறமையை சென்னைக்கு அணிக்கு எதிராக ஸ்மார்டாக பயன்படுத்தி வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article23556017.ece

Link to comment
Share on other sites

தோனி படையைத் தோற்கடிக்க என்னவெல்லாம் செய்தார் அஷ்வின்..? கேப்டன்ஷிப் அசத்தல்கள்! #CSKvsKXIP #IPL

 
 

சென்னை சூப்பர் கிங்ஸை வென்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்பதைவிட தோனியை வென்றார் அஷ்வின் என்பதே சரியாக இருக்கும். எல்லோருமே சென்னை, பஞ்சாப் மோதலை மற்றுமொரு ஐபிஎல் மேட்சாகப் பார்க்க, அஷ்வின் மட்டும் அதை வாழ்வா- சாவா போராட்டமாக, தனக்கு தலைமைப் பண்பு இருக்கிறதா என்பதை சோதிக்கும் போட்டியாகப் பார்த்திருக்கிறார். தோனி படையை வெல்ல என்னவெல்லாம் செய்தார் அஷ்வின்! #KXIPvCSK

KXIPvCSK

எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

சென்னையை எதிர்கொள்ளப்போகும் முன் அஷ்வினின் பெரிய கவலையாக இருந்தது பேட்டிங். அதுவும் ஓப்பனிங் பேட்டிங். கே.எல். ராகுல், மாயங்க் அகர்வால் என இந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சென்னையின் பெளலிங் அட்டாக்கிற்கு முன்னால் எடுபடாது என்பதைக் கணித்ததுதான் அஷ்வினின் முதல் வெற்றி. போர் என வந்துவிட்டப்பிறகு  வெற்றிக்காக என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதை செய்யத்துணிந்தார் அஷ்வின். 'கிறிஸ் கெய்ல் வெறும் பேட்ஸ்மேன். முதல் ஓவரிலேயே  அவர் அவுட் ஆகவும் வாய்ப்பிருக்கிறது, 20 பந்துகளில் அரை சதம் எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், வெறும் பேட்டிங்குக்காக மட்டுமே, அதுவும் ஏதோ ஒரு மேட்ச்சில் அடிப்பார் என்பதற்காக மட்டுமே, அவரை டீமில் வைத்திருப்பதற்கு பதிலாக ஆல் ரவுண்டர் மார்க் ஸ்டாய்னிஸை அணியில் வைத்திருக்கலாம்' என்கிற அறிவுறுத்தல் மட்டுமே கெயிலை, அஷ்வின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவிடாமல் விட்டதற்குக் காரணம். 

ஆனால், சென்னை மேட்ச்சில் கெயில் அடித்தால் அடிக்கட்டும், அவுட் ஆனாலும் பரவாயில்லை என முதல் ரிஸ்கை எடுத்தார் அஷ்வின். கெயில் சென்னை அணிக்கு எதிராக விளையாடுவார் என்பது யாருமே எதிர்பாராத முடிவு. அதேபோல் அஷ்வினின் கனவை கலைக்கவில்லை கெயில். 33 பந்துகளில் 63 ரன்கள். 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்...  ``நீ என்கிட்ட இதைத்தானே எதிர்பார்த்த... இந்தா வெச்சுக்கோ'' என்பதுபோலவே இருந்தது கெயிலின் பாடி லேங்வேஜ். அவருக்குமே தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் தன்னை அதிக முறை அவுட்டாக்கிய, தன்னை அதிக ரன் எடுக்க விடாமல் தடுக்கக்கூடிய பெளலரான ஹர்பஜனை நேற்று ஓட ஓட விரட்டியடித்தார் கெய்ல்.

#KXIPvCSK

பெளலிங் பிளான்!

வாட்சன், முரளி விஜய் என சென்னை ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை மாற்றியிருப்பதால் ஸ்பின்னர்களை வைத்தே பவர் ப்ளே ஓவர்களை அஷ்வின் சந்திப்பார் என்பதே எதிர்பார்ப்பு. ஆனால், அதையும் நேற்று பொய்யாக்கினார் அஷ்வின். அக்ஸார் பட்டேல் இல்லாமலேயே மேட்சைத் தொடங்கினார் அஷ்வின். முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் சரணிடம் கொடுத்தார். அதேபோல் பவர் ப்ளே ஓவர்களில் ஒரே ஓரு ஓவர் மட்டுமே ஸ்பின்னருக்குக் கொடுத்தார். அதுவும் தான் வீசாமல் முஜிப் உர் ரஹ்மானிடம் கொடுத்தார் அஷ்வின். பவர் ப்ளேவின் முடிவில் 2 விக்கெட்டுகளையும் இழந்து 53 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது சென்னை.

அந்த எல்டபிள்யு!

சாம் பில்லிங்ஸ்தான் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னையைக் காப்பாற்றியவர். அவரை வீழ்த்துவது மிக முக்கியம் என்பதால் அவரை வீழ்த்தத் துடித்தார் அஷ்வின். ஆஃப் ஸ்பின்னர் அஷ்வின், நான்காவது பந்தை லெக் ஸ்பின்னாக மாற்றினார். கால் மேல் பலன். நடுவர், பில்லிங்ஸின் பேட்டில் பட்டு பந்து பெளண்டரிக்குப் போனதாக அறிவிக்க, அது க்ளீன் எல்பிடபுள்யூ எனக் கதறினார் அஷ்வின். ஆனால், டிஆர்எஸ் கேட்க அவருக்குச் சின்ன தயக்கம் இருந்தது. சிறிது நேர யோசனைக்குப் பிறகு துணிந்து முடிவெடுத்தார் அஷ்வின். அவரின் கணிப்பு உண்மையானது. ரீ-ப்ளேவில் பந்து காலில் பட்டுப்போனதும்,  சரியான லைனில் பிட்ச் ஆனதும் தெரிய, பில்லிங்ஸ் அவுட். பஞ்சாபுக்கும், அஷ்வினுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்ததே இந்த விக்கெட்தான்.

#KXIPvCSK

ராயுடு ரன் அவுட்!

ஃபீல்டிங் சொதப்பல், ரன் அவுட் சொதப்பல்களுக்குப் பெயர் பெற்றவர் அஷ்வின். பந்தை நோக்கி ஓடமாட்டார் என்பதோடு ஸ்டம்பைக் குறிபார்த்து அவர் அடித்ததாக வரலாறே இல்லை. ஆனால், தன்னுடைய ட்ராக்  ரெகார்டையே நேற்று மாற்றிக்காட்டினார் அஷ்வின். மின்னல் வேகம் என வார்த்தைக்காக சொல்லவில்லை. உண்மையாகவே நடந்தது அதுதான். எக்ஸ்ட்ரா கவருக்குப் பந்து வந்த வேகத்தில் அதைப் பிடித்து ஸ்டம்பை நோக்கி வீச 49 ரன்களுடன் களத்தில் இருந்த ராயுடு அவுட். அஷ்வினை ஒரு கேப்டனாக கொண்டாடவைத்தது இந்த ரன் அவுட்தான். 

மோஹித் ஷர்மாவுக்கு 2 ஓவர்!

3 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்த எக்கனாமிக்கல் பெளலர் நஜீம் இருந்தாலும், டெத் ஓவர்களை வீச வேகப்பந்து வீச்சாளர்களையே தேர்ந்தெடுத்தார் அஷ்வின். சென்னை அணியில் இருந்த மோஹித் ஷர்மா நெட்களில் தோனிக்கு அதிகமுறை பந்து வீசியவர் எனத் தெரிந்தும், ஸ்பின்னரிடம் கொடுக்காமல் ஷர்மாவிடமே பந்தை அஷ்வின் கொடுக்கக் காரணம், தோனியின் மைனஸ்கள் அவருக்குத் தெரியும் என்பதே. ஆனால், 18-வது ஓவரை மோஹித் வீசியபோது  2 சிக்ஸர், 1 பவுண்டரி என பொளந்துகட்டினார் தோனி. அதனால் 20-வது ஓவர் ஸ்பின்னரிடம்தான் கொடுக்கப்படும் என எல்லோரும் நினைக்க, கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்கிற நிலையில், முந்தைய ஓவரில் 17 ரன்கள் கொடுத்த அதே மோஹித் ஷர்மாவிடம் பந்தைக் கொடுத்தார் அஷ்வின். 

KXIPvCSK

18-வது ஓவரில் ஸ்டம்ப்பை நோக்கி பந்துகளை வீசிய மோஹித் கடைசி ஓவரில் வைடாகப் பந்துகளை வீசினார். தோனி முந்தைய ஓவரில் அடித்ததுபோல அடிக்கமுடியவில்லை. 1 பவுண்டரி 1 சிக்ஸர் மட்டுமே. பஞ்சாப் வென்றது. 

 

பஞ்சாபின் வெற்றிக்கு கெயில், முஜிப், மோஹித் என பலர் உரிமை கொண்டாடலாம். ஆனால், சரியான திறமைகளை சரியான நேரத்தில் முன்நிறுத்தி, ஒன்றாக ஒருங்கிணைத்து, பலவீனங்களை எல்லாம் பலமாக மாற்றி தோனியின் படையை வென்ற பெருமை அஷ்வினை மட்டுமே சேரும்!

https://www.vikatan.com/news/sports/122344-ashwin-outsmarts-old-mate-dhoni.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பஞ்சாப் வெல்லவில்லை......வெற்றிக் கனியை தோனி  அஸ்வின், அகஸ்தியன், ஈழப்பிரியனுக்கும் புடுங்கி கொடுத்து விட்டார்......!  tw_blush:

Link to comment
Share on other sites

சும்மா வதந்தியை கிழப்பகூடாது..tw_blush:

 

20 minutes ago, suvy said:

நேற்று பஞ்சாப் வெல்லவில்லை......வெற்றிக் கனியை தோனி  அஸ்வின், அகஸ்தியன், ஈழப்பிரியனுக்கும் புடுங்கி கொடுத்து விட்டார்......!  tw_blush:

 

 

மீரா எழுதியதை பார்க்கவும்..tw_blush:

 

 

 

 
 
 
முதுகை பயன்படுத்த வேண்டியதில்லை- கை அந்த வேலையைச் செய்யும்- டோனி பளிச் பதில்


முதுகில் வலி இருந்தபோதிலும் பந்தை தூக்கி அடிக்கும் ஷாட்டுகள் (lofted shots) எப்படி ஆடினீர்கள் என்று கேள்வி கேட்கபட்டது. இதற்கு டோனி பதிலளிக்கையில் ‘‘எனது முதுகு பக்கத்தில் அதிக வலி இருந்தது. ஆனால், கடவுள் எனக்கு ஏராளமான பவர் கொடுத்துள்ளார். என்னுடைய முதுகு பகுதியை அதிக அளவில் பயன்படுத்த தேவையில்லை. எனது கைகளால் அந்த வேலையை செய்ய முடியும்’’ என்றார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நவீனன் said:

சும்மா வதந்தியை கிழப்பகூடாது..tw_blush:

 

 

 

மீரா எழுதியதை பார்க்கவும்..tw_blush:

மீரா திண்ணையில் எழுதியதை பார்க்கவும் என்னைவிட கடுப்பில நிக்கிறார்.....!  tw_blush:

ஆனால் கடைசி ஓவர் போட்ட  சர்மா கெட்டிக்காரன் , விக்கட்டையே குறிவைக்கவில்லை எல்லாம் வைட் போல் லைனில் துல்லியமாக போட்டார்.தோனியால் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது.....!

Link to comment
Share on other sites

சென்னை தோற்றால் மீரா கடுப்புதான்... அது சொல்லியா தெரியவேண்டும்..:grin:

இன்று காலை நான் ஹிந்துவில் இருந்து இணைத்த செய்திக்கே மீரா கருத்து எழுதி இருந்தார்.

 

 

கடைசி ஓவர் போட்ட மொஹிட் ஷர்மா 2013 இல் இருந்து சென்னைக்கு விளையாடியவர்.

அஸ்வின் 8 வருடங்கள் சென்னைக்கு விளையாடியவர்.

இவர்களுக்கு தெரியும் டோனியின் பலவீனம்.

 

  எல்லாம் வைட் போல் லைனில் துல்லியமாக போட்டார்.தோனியால் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது.....! // அதுதான் டோனியின் மிகப்பெரிய பலவீனம்.

20 minutes ago, suvy said:

மீரா திண்ணையில் எழுதியதை பார்க்கவும் என்னைவிட கடுப்பில நிக்கிறார்.....!  tw_blush:

ஆனால் கடைசி ஓவர் போட்ட  சர்மா கெட்டிக்காரன் , விக்கட்டையே குறிவைக்கவில்லை எல்லாம் வைட் போல் லைனில் துல்லியமாக போட்டார்.தோனியால் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது.....!

 

Bildergebnis für mohit sharma chennai super kings

Link to comment
Share on other sites

`டெல்லி பௌலர்களைச் சோதித்த ரஸல், ராணா!’ - 200 ரன்கள் குவித்த கொல்கத்தா #KKRvsDD

 
 

ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான போட்டியில், முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. 

நிதிஷ் ராணா

Photo: Twitter/IPL

ஐ.பி.எல் 11 வது சீசனில் இன்று 13 வது போட்டியில் கொல்கத்தா அணியும் டெல்லி அணியும் மோதின. கொல்கத்தாவின் ஈடன் காரடன் மைதானத்தில் இரவு 8 மணிக்குத்  துவங்கிய இந்தப்  போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் கம்பீர் பந்துவீச முடிவு செய்தார். 

 

அதன்படி, கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டகாரர்களாக கிரிஸ் லின் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் களமிறங்கினர் . டெல்லி அணியின் ட்ரெண்ட் போல்ட் மற்றும் மோரிஸ் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக ரன்கள் சேர்க்க கொல்கத்தா அணி திணறியது. சுனில் நரைன் 1 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்துக்  களமிறங்கிய உத்தப்பா அதிரடியில் இறங்கினார். அவர் 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து, நதீம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் தினேஷ் கார்திக் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடி வீரர் ரஸல் களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய ரஸல், 12 பந்துகளில் 6 சிக்ஸர்கள் உதவியுடன் 41 ரன்கள் குவித்தார். அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. ரஸலுடன் இணைந்து டெல்லி பௌலர்களைச் சோதித்த, நிதிஷ் ராணா அரைசதம் அடித்தார். அவர் 35 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ட்ரண்ட் போல்ட் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 4 ஓவர்கள் வீசி 53 ரன்கள் விட்டுக் கொடுத்தார். டிவாட்டியா வீசிய கடைசி ஓவரில் 1 ரன் மட்டும் கொடுத்து 3 வெக்கெட்டுகள் சாய்த்தார். அதேபோல், ட்ரண்ட் போல்ட் வீசிய முதல் ஓவர் மெய்டன் என்பது குறிப்பிடத்தக்கது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களைக் குவித்தது. 

https://www.vikatan.com/news/sports/122393-kolkata-sets-massive-target-for-delhi-in-ipl.html

115/6
Link to comment
Share on other sites

முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை அணி?- பெங்களூருவுடன் இன்று மோதல்

 

 
493479-rohit-sharma-mi-run-700

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

அதிரடி வீரர்களுக்கு பஞ்சம் இல்லாத சூழ்நிலை இருக்கும் போதிலும் இந்த சீசனில் இரு அணிகளும் தொடக்கத்திலேயே தடுமாறி வருகின்றன. அதிலும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது. இந்த சீசனில் வெற்றிக்காக ஏங்கி வரும் அந்த அணி சொந்த மண்ணில் இன்று முதல் வெற்றியை பெறுவதில் முனைப்பு காட்டக்கூடும்.

அதேவேளையில் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வியடைந்த போதிலும் அடுத்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி மீண்டு வந்தது விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி. எனினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 217 ரன்கள் இலக்கை துரத்திய போது 19 ரன்களில் தோல்வியை சந்தித்தது. பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 3 விக்கெட்கள் வீழ்த்திய உமேஷ் யாதவ் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசி 59 ரன்களை வாரி வழங்கினார்.

யுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மட்டுமே சிக்கனமாக ரன்களை வழங்கினர். இதனால் வேகப் பந்து வீச்சு கூட்டணியில் பெங்களூரு அணி சில மாற்றங்களை மேற்கொள்ளக்கூடும். பேட்டிகில் விராட் கோலி பார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கக்கூடும். முதல் இரு ஆட்டங்களிலும் மட்டையை சுழற்றத் தவறிய அவர், ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி 57 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் பிரண்டன் மெக்கலம், டி வில்லியர்ஸ் ஆகியோரும் மிரட்டக் காத்திருக்கின்றனர்.

முதல் இரு ஆட்டங்களிலும் பேட்டிங்கில் சிறந்த திறனை வெளிப்படுத்தத் தவறிய மும்பை அணி கடந்த ஆட்டத்தில் 194 ரன்கள் குவித்தது புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

சூர்யகுமார் யாதவை தொடக்க வீரராக களமிறக்கியது நல்ல பலனை கொடுத்த போதிலும் சிறந்த பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா தொடர்ந்து தடுமாறி வருவது பின்னடைவை கொடுத்துள்ளது. அவரிடம் இருந்து இதுவரை பெரிய அளவிலான பங்களிப்பு வெளிப்படவில்லை. மேலும் ஹர்திக் பாண்டியா, கிருனல் பாண்டியா, கெய்ரன் பொலார்டு ஆகியோரும் ஆல் ரவுண்டர்களாக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் இவர்கள் மூவரும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சுழற்பந்து வீச்சாளரான மயங்க் மார்க்கண்டே இந்த சீசனில் அற்புதமாக பந்து வீசி வருகிறார்.

அதேவேளையில் உலகத்தரம் வாய்ந்த வேகப் பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தபடி செயல்படாததும் பின்னடைவாக கருதப்படுகிறது. அவர், மீண்டும் பார்முக்கு வரும் பட்சத்தில் தொடர்ச்சியாக 4-வது தோல்வியை சந்திப்பதில் இருந்து மும்பை அணி தன்னை பாதுகாத்துக் கொள்ளக்கூடும்.

http://tamil.thehindu.com/sports/article23567839.ece?homepage=true

Link to comment
Share on other sites

ரன் குவிக்க வேண்டும் என்ற தீராத பசியில் உள்ளேன்- ஆர்சிபிக்கு பொல்லார்டு எச்சரிக்கை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன் என பொல்லார்டு கூறியுள்ளார். #MIvRCB #RCBvMI

 
 
ரன் குவிக்க வேண்டும் என்ற தீராத பசியில் உள்ளேன்- ஆர்சிபிக்கு பொல்லார்டு எச்சரிக்கை
 
ஐபிஎல் 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி, மூன்றிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் நாளை தனது சொந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன் என பொல்லார்டு கூறியுள்ளார்.

இதுகுறித்து பொல்லார்டு கூறுகையில் ‘‘நான் எப்போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்டவன். என்னை பொருத்த வரையில் மிகப்பெரிய வீரர்களுக்கு எதிரான ஆட்டத்தை மிகப்பெரிய சவாலாக எடுத்துக் கொள்வேன்.

201804162050272338_1_pollard1-s._L_styvpf.jpg

ஒரு வீரராக எதிரணி எப்படி பட்டது, உங்களுக்கு எதிராக எப்படி செயல்பட இருக்கிறார்கள் என்பதை யோசித்து அதற்கு ஏற்றபடி கடுமையாக பயிற்சி எடுக்க வேண்டும். நாளைய போட்டி அணிக்கு மட்டுமல்ல, எனக்கும் சக்சஸ்புல் போட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

ஒருவேளை நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தால், அதன்பின் நடைபெறும் 10 போட்டிகளும் வாழ்வா? சாவா? போட்டியாக அமைந்துவிடும்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/16205027/1157366/IPL-2018-Mumbai-Indians-Kieron-Pollard-hungry-to-perform.vpf

Link to comment
Share on other sites

என்னாயிற்று டெல்லிக்கு? பந்து வீச்சில் நொறுக்கப்பட்டு பேட்டிங்கில் பெவிலியனை நோக்கி விறுவிறு

 

 
rana

டெல்லி பவுலிங்கை நொறுக்கிய ராணா-ரஸல் கூட்டணி.   -  படம். | பிடிஐ.

கொல்கத்தாவில் நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் கவுதம் கம்பீர் தலைமை டெல்லி டேர் டெவில்ஸ் அணி படுதோல்வி கண்டது.

201 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்கொண்டு ஆடிய டெல்லி அணி முதல் 3 விக்கெட்டை 3 ஓவர்களில் இழந்தது, கடைசி 7 விக்கெட்டுகளை மேலும் விரைவு கதியில் 7 ஓவர்கள் வரை கூட எடுத்துக் கொள்ளாமல் பெவிலியன் நோக்கி பேட்ஸ்மென்களின் அணி வகுப்பாக அமைய 14.2 ஓவர்களில் 129 ரன்களுக்குச் சுருண்டது.

டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ய தவறாக கவுதம் கம்பீர் முடிவெடுத்தார். 201 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஸ்பின்னுக்குச் சாதகமான பிட்சில் வலுவாக அமைய வேண்டிய பேட்டிங் குல்தீப் யாதவ், சுனில் நரைன் ஆகியோர் இணைந்து எடுத்த 6 விக்கெட்டுகளினால் எழும்ப முடியாமல் வீழ்த்தப் பட்டது.

உத்தப்பா அமைத்த அடித்தளத்தில் வெளுத்துக்கட்டிய ரஸல், ரானா:

கிறிஸ் லின், சுனில் நரைனுக்கு எதிராக பவுலிங், களவியூகத் தேர்வுகள் கடினம். ஆனால் டிரெண்ட் போல்ட்டும் அடிப்பதற்கு அவ்வளவு எளிதான பவுலர் கிடையாது, வாச்சாம்பொழச்சான் அடியெல்லாம் அவரிடம் சாத்தியமில்லை. கிறிஸ் லின்னை ஆட்டிப்படைத்து மெய்டனுடன் தொடங்கினார் போல்ட். பிறகு நரைனை (1) அருமையான பவுன்சரில் வீழ்த்தினார்.

போல்ட்டைத் தடவினாலும் லின்னை நம்ப முடியாது என்று கம்பீர் 6வது ஓவர் முதல் ஸ்பின்னர்களை இறக்கினார். இதனால் கிறிஸ் லின்னின் ஸ்ட்ரைக் ரேட் அடிவாங்கியது. 25 பந்துகளில் 28 ரன்களையே எடுத்திருந்தார் அப்போது 10 ஓவர்கள் முடிந்திருந்தது. 5 ஓவர்களில் உத்தப்பாவும், லின்னும் 55 ரன்களைச் சேர்த்ததில் உத்தப்பாதான் பெரும்பங்களிப்பு.19 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 35 ரன்கள் விளாசி நதீம் பந்து வீச்சில் வெளியேறினார்.

என்னதான் உத்தப்பா டி20யில் அதிரடியாக ஆடினாலும் நம் ரவிசாஸ்திரி விராட் நிர்வாகம் ஸ்ரேயஸ் ஐயருக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள், ராயுடு என்னதான் திறமை காட்டினாலும் வாய்ப்பு கிடைக்காது, என்னதான் சஞ்சு சாம்சன் அடித்து நொறுக்கினாலும் தோனியை நீக்க முடியாது, இதுதான் இந்திய அணியின் தற்போதைய நிலைமை. அணித்தேர்வு விவகாரம் திறமைகளின் அடிப்படையில் இல்லை என்பது தெள்ளத்தெளிவு, இதை வெளிப்படையாக தெரிவிக்கும் யாராக இருந்தாலும் பிசிசிஐ அவர்களை ஓரம் கட்டிவிடும், வர்ணனையாளர்கள் உட்பட.

லின்னுடன் ராணா இணைந்தார் 3.2 ஓவர்களில் 27 ரன்கள் சேர்த்தனர், கிறிஸ் லின் 29 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்து ஷமியின் ஏமாற்றும் ஸ்லோ பந்துக்கு வெளியேறினார். நிதிஷ் ரானா எதிர்முனையில் ஆக்ரோஷம் காட்ட 2 சிக்சர்களுடன் களத்தில் நிற்க 10 ஒவர்களில் 85/2 என்ற நிலைக்குப் பிறகுதான் லின் ஆட்டமிழந்தார்.

மொகமது ஷமியை புரட்டி எடுத்த ரஸல்:

15வது ஓவரில் ரஸல் 0-வில் தான் இருந்தார். அப்போதுதான் மொகமது ஷமிப் பந்து வீச்சு பற்றி ரஸல் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. ஷமியின் ஓவரில் 3 மிகப்பெரிய அரக்க சிக்ஸர்களை அடித்து அந்த ஓவரில் 22 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதில் ஜேசன் ராய் ஒரு கேட்சையும் ரஸலுக்கு கோட்டை விட்டார்.

இந்த ஓவர் போதாதென்று மீண்டும் ரஸல், ஷமியை தென் செல்லப் பிள்ளையாக நடத்தி நெட் பவுலர் போல் மீண்டும் வைடு பந்து, லெந்த் பந்து, பிறகு பவுன்சர் 3 பந்துகளுமே ரஸல் மட்டையிலிருந்து கிளம்பி ஸ்டேடியத்தில் போய் விழுந்தது மீண்டும் ஷமி ஓவரில் 3 சிக்சர்கள். ஷமியை மட்டுமே 6 சிக்சர்கள் விளாசிய ரஸல் 12 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து போல்ட்டின் அபாரமான வேகம் குறைக்கப்பட்ட நல்ல திசையில் துல்லியமாக வீசிய யார்க்கரில் பவுல்டு ஆனார். அப்போது 18 வது ஓவர் நடந்து கொண்டிருந்தது.

கிறிஸ் மோரிஸின் ஓவரை ராணா கவனித்தார். புல்ஷாட்டில் ஒரு சிக்ஸ், பிறகு பாயிண்டில் ஒரு பவுண்டரி என்று ராணா கலக்கி 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உடன் 59 ரன்கள் எடுத்து 19வது ஓவரில் அவுட் ஆகும்போதே ஸ்கோர் 193 ஆக உயர்ந்திருந்தது. 10 ஓவர்களில் 85/2 என்ற நிலையிலிருந்து 20 ஒவர்களில் 200/9 என்று முடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். டெல்லி தரப்பில் சொல்லிக் கொள்ளும்படியாக வீசியதில் போல்ட் 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், டெவாட்டியா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் 41 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

டெல்லியின் பெவிலியன் நோக்கிய அணிவகுப்பு:

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 91 ரன்கள் வெளுத்துக் கட்டிய ஜேசன் ராய் அச்சுறுத்தலுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் இறங்கினாலும் பியூஷ் சாவ்லாவை வைத்து ராயை 1 ரன்னில் வீழ்த்தினார். ஜேசன் ராயைப் பற்றிய அறிவு தினேஷ் கார்த்திக்குக்கு இருந்ததால் சரியாக அவரது லெக்ஸ்பின் பலவீனத்தை அறிந்து சாவ்லாவைக் கொண்டு வந்தார், அவரும் மேலேறி வந்து ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார்.

ஆந்த்ரே ரஸலின் வேகம் மற்றும் எழும்பிய பந்தில் ஷ்ரேயஸ் ஐயர் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். அண்டர் 19 உலகக்கோப்பைப் புகழ் இளம் வேகப்புயல் ஷிவம் மால்வி பந்தை கவுதம் கம்பீர் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொள்ள டெல்லி 24/3 என்று முதல் 3 ஓவர்களிலேயே தோல்வியின் வாசனையை முகர்ந்தது.

suniljpg

டெல்லி பேட்டிங்கை காலி செய்த நரைன், குல்தீப் கூட்டணி.   -  படம். | பிடிஐ.

 

ரிஷப் பந்த் (43), கிளென் மேக்ஸ்வெல் (47) ஆகியோர் இணைந்து 5.3 ஓவர்களில் 62 ரன்கள் சேர்த்தனர், ஆனால் குல்தீப் யாதவ் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தில் பந்த் விக்கெட்டைச் சாய்த்தார். பிறகு அபாய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு ஷார்ட் பிட்ச்சாக இருந்தாலும் குல்தீப் மிக மெதுவாக வீச மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனார். 113/6 அதன் பிறகு 129 ஆல் அவுட்.

கிறிஸ் மோரிஸ் (2), விஜய் சங்கர் (2), ஷமி (7) ஆகியோரை சுனில் நரைன் காலி செய்தார். சுனில் நரைன் 3 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் நிதீஷ் ராணா.

http://tamil.thehindu.com/sports/article23568381.ece

Link to comment
Share on other sites

தோள்தட்டி வரவேற்று தோல்வியுடன் வழியனுப்பிய ஈடன் கார்டன்... கொல்கத்தாவில் கம்பீர் படுதோல்வி! #KKRvsDD

 

கடந்த 7 ஆண்டுகளாக கொல்கத்தா அணிக்காக விளையாடியவர் கவுதம் கம்பீர். இந்த ஐ.பி.எல் சீசனில் டெல்லி அணியின் கேப்டன். அவர் தன் முன்னாள் ஹோம் கிரவுண்ட் ஈடன் கார்டனில் எப்படி ஜொலிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.  #KKRvDD

#KKRvDD

 டாஸ் வென்ற கம்பிர், கொல்கத்தா அணியை பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்த ஐ.பி.எல் தொடரில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை நிகழ்த்தினார் ட்ரென்ட் போல்ட். மேட்ச்சின் முதல் ஓவரே மெய்டன்.  ஆட்டத்தின் முதல் 15 பந்துகளில் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா அணி, அதிரடி தொடக்க வீரரான சுனில் நரேன் விக்கெட்டை இழந்தது. உத்தப்பா தனக்கே உரிய measured assault ஸ்டைலில் ஸ்கோரை உயர்த்தினார். டெல்லி சுழற்பந்து வீச்சாளர் நதீம் வீசிய 6-வது ஓவரில் 2 சிக்ஸர்கள் விளாசி, அந்த ஓவரில் 18 ரன்கள் குவித்தார். கொல்கத்தாவுக்குத் தேவையான மொமென்ட்டை அளித்த உத்தப்பா, ரன் ரேட்டை மேலும் உயர்த்த நினைத்து தன் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 7.2 ஓவர்களில் 62/2. மறுபுறம் லின் தன் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்தி பொறுமையாக ஆடினார். லின்னுடன் இணைந்தார் ராணா.

#KKRvDD

விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தாலும், கொல்கத்தா அணி ரன் ரேட்டை நன்றாகவே நிலைநிறுத்தியது. ராணா எந்தவொரு லூஸ் பாலையும் விட்டுவைக்காமல் விளாசினார். எந்தவொரு இந்திய இளம் வீரரும் சற்று நன்றாக ஆட தொடங்கியதும் அவர்களின் கவனத்தை திசை திருப்ப எதிரணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்லெட்ஜிங் முறையைக் கைப்பற்றுவர். இதையே டெல்லி வீரர் மோரிஸ் முயன்றார். தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் பந்து வீச்சில் ஒரு சிக்ஸரும், மோரிஸ் ஒவரில் ஒரே இடத்தில் 2 பவுண்டரியும் விளாசினார். ஆனால், அடுத்த பந்திலேயே அதே இடத்தில் மூன்றாவது பவுண்டரி அடிக்க முயன்று, விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களமிறங்கியது அதிரடி ரசல்.

இந்த மாறி சூழலுக்கென்றே நேர்ந்துவிடப்பட்ட ரசல், தன் பணியைக் கச்சிதமாகச் செய்தார். சென்னை அணி செய்த அதே தவறை கொல்கத்தா அணியும் செய்தது. எந்த இடத்தில் போட்டால் ரசல் ஸ்லாக் முறையில் பந்தை விளாசுவாரோ, அதே இடத்தில் பந்தைப் போட்டு டெல்லி பௌலர்கள் ஊட்டிவிட்டனர். சந்தித்தது 11 பந்துகள்தான். அதில் 6 சிக்ஸர்கள். 12-வது பந்தில் போல்ட் பந்துவீச்சில் அவுட்டானார். அவர் அவுட் ஆகும் தருணம் ராணா தன் அரைசதத்தைக் கடந்திருந்தார். ஒருகட்டத்தில் 210 - 220 ரன்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தெவேத்தியா கடைசி ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி, ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க, கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் ராணா 59 ரன் குவித்தார். 

#KKRvDD

கடந்த ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக 195 ரன்களை சேஸ் செய்ததால், நம்பிக்கையுடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மும்பைக்கு எதிராக 91 ரன்கள் விளாசிய ஜேசன் ராய் 1 ரன்னில் சாவ்லா பந்து வீச்சில் ஸ்டம்பிங் ஆனார். அடுத்த ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர், மூன்றாம் ஓவரில் கேப்டன் கம்பீர் என முதல் மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறியது டெல்லி.

நான்காம் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பண்ட்- மாக்ஸ்வெல் கூட்டணி கவுண்டர் அட்டாக் செய்யத் தொடங்கியது. இவர்கள் அடிக்கத் தொடங்கினால் எந்தவொரு கிரவுண்டும், எந்தவொரு டார்கெட்டும் பெரிதல்ல என்பதற்கேற்ப, அசால்ட்டாக ஒரு ஓவருக்கு 12 ரன்கள் அடித்து வந்தனர். கொல்கத்தா அணியின் துருப்புச் சீட்டாகக் கருதப்படும் நரேன் ஓவரில்கூட, ரிஷப் பன்ட் வெளுத்து வாங்கினார். இந்த ஸ்கோரையும் எளிதாக சேஸ் செய்துவிடுவார்களோ என்று எதிர்பார்த்த நேரத்தில், தினேஷ் கார்த்திக் தன் இரண்டாம் துருப்புச் சீட்டான குல்தீப் யாதவைக் கொண்டுவந்தார். 

#KKRvDD

வீசிய மூன்றாவது பந்திலேயே பன்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார் குல்தீப். விஜய் சங்கர், மோரிஸ் போன்ற வீரர்கள் இருந்தும் குல்தீப்பை சமாளிக்க தெவேத்தியாவை அனுப்பினார் கம்பீர். அவர் ஒரு ரன்னில் வெளியேற மொத்த பிரஷ்ஷரும் மேக்ஸ்வெல் பக்கம் திரும்பியது. குல்தீப் வீசிய இரண்டாவது ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள் விளாசிய மேக்ஸ்வெல், மூன்றாவது சிக்ஸர் அடிக்க முயலும்போது ஆட்டமிழந்தார்.  

மோரிஸ், விஜய் சங்கர் இருவரும் நரேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். மோரிஸ் விக்கெட்டை எடுத்தபோது, நரேன் 100-வது ஐ.பி.எல் விக்கெட்டை எடுத்தார். இதன்மூலம் மலிங்கா, ஹர்பஜனுக்கு அடுத்ததாக ஒரே அணிக்காக 100 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் சேர்ந்தார். அடுத்து வந்த டெயிலெண்டர்கள் கொல்கத்தா அணியின் சுழற்பந்துக்கு சரணடைந்தனர். டெல்லி 129 ரன்களில் ஆல் அவுட்டானது. கொல்கத்தா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கொல்கத்தா தரப்பில் நரேன், குல்தீப் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினர். 35 பந்துகளில் 59 ரன்கள் குவித்த ராணாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 

#KKRvDD

 

டெல்லி அணிக்கு இது மிகப்பெரிய பாடம். மூன்று மேட்ச்களிலும் அவர்களின் பந்து வீச்சு சொல்லும்படியில்லை. அடுத்தப் போட்டிக்கு இன்னும் 4 நாள்கள் இடைவெளி உள்ளது. அதற்குள் கேப்டன் கம்பீர்,  பயிற்சியாளர் பாண்டிங் இருவரும் இணைந்து `plan b’ தயார்செய்ய வேண்டியது அவசியம். இல்லையேல் , வழக்கம் போல புள்ளிப் பட்டியலில் இறுதி இடத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிட வேண்டியது தான். 

https://www.vikatan.com/news/sports/122436-kolkata-beats-delhi-by-70-runs.html

Link to comment
Share on other sites

‘ப்ளே’ என்றவுடன் 2 பவுல்டுகள்: உமேஷ் யாதவ் மீண்டும் அசத்தல்

 

 
umesh

2 பந்துகளில் 2 பவுல்டு உமேஷ் யாதவ் சூப்பர்.   -  படம். | ஏ.பி.

மும்பையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு உமேஷ் யாதவ் மூலம் அபாரமான தொடக்கம் கண்டது.

சூரியகுமார் யாதவ்வும் எவின் லூயிஸும் முதலில் களமிறங்கினர். விராட் கோலி முதலில் சிராஜிடம் பந்தைக்கொடுப்பார் என்று தோன்றியது. ஆனால் திடீரென என்ன தோன்றிற்றோ உமேஷ் யாதவ்வை அழைத்து வீசச் செய்தார்.

உமேஷ் யாதவ் முதல் ஓவரைத் தொடங்கினார்.

முதல் பந்து ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் ஆகி சற்றே, மிகச்சற்றே நின்று வந்தது சூரிய குமார் யாதவ் தளர்வாக ஆட பந்து ஊடுருவி ஸ்டம்பைத் தாக்கியது, சூரியகுமார் யாதவ் கோல்டன் டக்.

சூரிய குமார் யாதவ் நல்ல பார்மில் இருப்பவர் முதல் பந்தில் வெளியேற, இஷான் கிஷன் களமிறங்கினார். உமேஷ் யாதவ் இவருக்கும் வேகமாக ஒரு பந்தை உள்ளே கொண்டு வர இஷான் கிஷன் தடுப்பாட்டம் எடுபடவில்லை மீண்டும் பவுல்டு. 2 பந்துகளில் 2 விக்கெட், ஹாட்ரிக் வாய்ப்பு.

ரோஹித் சர்மா இறங்கியவுடன் கால்காப்பில் வாங்கினார். ஹாட்ரிக் கிடைக்கவில்லை. அன்று ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய உமேஷ் இன்று முதல் 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ரோஹித் சர்மா அவசரம் அவசரமாக பேடைக் கட்ட வைத்தார்.

ஆனால் அதன் பிறகு எவின் லூயிஸ் வெளுத்துக் கட்டி 37 ரன்களுடனும், ரோஹித் சர்மா 12 ரன்களுடனும் களத்தில் இருக்க மும்பை இந்தியன்ஸ் 6 ஓவர்களில் 60/2 என்று நல்ல தொடக்கம் கண்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23576280.ece?homepage=true

143/3
Link to comment
Share on other sites

ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்

 

ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியா தொடக்க பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச் ஏழு அணிகளுக்காக விளையாடிய வீரர் என்ற வித்தியாசமான சாதனையைப் படைத்துள்ளார். #IPL2018

 
ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்
 
ஆஸ்திரேலியாவின் தொடக்க பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச். இவர் ஐபிஎல் தொடரில் கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார். தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இதன்மூலம் 11 தொடர்களில் 7 அணிகளுக்காக விளையாடியவர் என்ற தனிச்சிறப்பை பெற்றுள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
 
Link to comment
Share on other sites

`ரோஹித் ஷர்மா அதிரடி!’ பெங்களூர் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த மும்பை அணி #MIvRCB

 
 

ஐபிஎல் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. 

ரோகித் ஷர்மா

Photo: Twitter/IPL

ஐ.பி.எல்   2018 -ல் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதும்  14 -வது லீக் போட்டின் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ் மற்றும் எவின் லீவிஸ் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். முதல் ஓவரில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றி மும்பை அணிக்கு உமேஷ் யாதவ் அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக கேப்டன் ரோஹித் ஷர்மா களமிறங்கினார். 

 

ரோஹித் ஷர்மா மற்றும் லீவிஸ் ஆகியோர் அணியைச் சரிவில் இருந்து மீட்கும் பணியில் இறங்கினார். அதேநேரத்தில் மோசமான பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் பறக்க விட்டனர். முதல்  6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு, அந்த அணி  60 ரன்கள் எடுத்தது. லீவிஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். 42 பந்துகளில்   65 ரன்கள் எடுத்த அவர், கோரி ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய குர்னல் பாண்டியா 15 ரன்களில் ஆட்டமிழந்தார் . ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் ரோஹித் ஷர்மா தொடர்ந்து அதிரடியாக விளையாடி சிக்ஸர்கள் பறக்கவிட்டார். பொல்லார்ட் 5 ரன்னில் வோக்ஸ் பந்திவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் ஷர்மா, கடைசி ஓவரில் 94 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை மிஸ் செய்தார். மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெடுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. 

https://www.vikatan.com/news/sports/122497-with-the-help-of-rohit-sharma-mumbai-gets-massive-total-in-ipl-league-match.html

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். கிரிக்கெட் - பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்தது மும்பை இந்தியன்ஸ்

 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவுசெய்தது. #IPL2018 #MIvRCB

 
 
ஐ.பி.எல். கிரிக்கெட் - பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்தது மும்பை இந்தியன்ஸ்
 
மும்பை:

ஐ.பி.எல். தொடரின் 14-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

மும்பை அணியின் துவக்க வீரர்களாக சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர். பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் முதல் பந்திலேயே சூர்யகுமார் யாதவை வெளியேற்றினார். அடுத்த பந்தில் இஷான் கிஷான் விக்கெட்டையும் எடுத்து மும்பை அணிக்கு பெரும் அதிர்ச்சி அளித்தார்.

201804172357251098_1_ipl-mivrcb1._L_styvpf.jpg

அடுத்து வந்த கேப்டன் ரோகித் ஷர்மா, லெவிசுடன் கைகோர்த்தார். முதல் இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்து இழந்த போதிலும் லெவிஸ் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 42 பந்துகளில் 65 ரன்கள் (பவுண்டரி 6, சிக்ஸ் 5) விளாசினார்.  மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 108 ரன்கள் குவித்தது.

201804172357251098_2_aneidixp._L_styvpf.jpg

பின்னர் களமிறங்கிய குருனல் பாண்டியா 15 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். ஐ.பி.எல். போட்டி தொடங்கியதில் இருந்து பார்ம் இன்றி தவித்துவந்த கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடினார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 52 பந்தில் 94 ரன்கள் குவித்து சதத்தை தவறவிட்டார். பெங்களூர் அணி தரப்பில் ஆண்டர்சன் மற்றும் உமேஷ் யாதவ் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலியும், கிவிண்டன் டீ காக்கும் களமிறங்கினர். இருவரும் அதிரடியான தொடக்கம் கொடுத்தனர். டி காக் 12 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டி வில்லியர்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

201804172357251098_3_ipl-mivrcb3._L_styvpf.jpg

அதன்பின் வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விராட் கோலி மட்டும் நிலைத்துநின்று விளையாடி அரைசதம் கடந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 92 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி பந்துவீச்சில் குருனல் பாண்டியா 3 விக்கெட்களும், பும்ரா, மெக்லினகன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து நாளை நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. IPL2018 #MIvRCB

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/17235725/1157578/IPL-2018-Mumbai-Indians-beat-Royal-Challengers-Bangalore.vpf

Link to comment
Share on other sites

ஆரஞ்சு தொப்பி இப்போது அவசியமா? : விரக்தியில் விராட் கோலி

virat

கவர் ட்ரைவில் விராட் கோலி.   -  படம். | ஏ.பி.

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் எடுத்த முடிவுகள் அனைத்தும் தவறாக முடிய 46 ரன்களில் தோல்வி கண்ட பெங்களூரு அணி கேப்டன் தோல்வியின் விரக்தியை வெளிப்படுத்தினார்.

முதலில் உமேஷ் யாதவ் முதல் 2 பந்துகளிலேயே மும்பை இந்தியன்சின் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோரை பவுல்டு செய்து அபாரத் தொடக்க கொடுத்தும் அணித்தேர்வு முதல் (நியூஸி. அணியில் இல்லாத கோரி ஆண்டர்சனைத் தேர்வு செய்தது.. மொயின் அலி, கொலின் டி கிராண்ட் ஹோமுக்கு வாய்ப்பு அளிக்காதது), பந்து வீச்சு மாற்றம் வரை சோடைபோன கேப்டன் விராட் கோலி எவின் லூயிஸை பெவிலியன் அனுப்ப எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை, அவர் ஸ்பின்னர்களை வெளுத்துக் கட்டினார், அவர் வெளுத்துக்கட்டுவதைச் சாதகமாக்கிய ரோஹித் சர்மா ஒரு முனையில் நிலைத்து கடைசியில் பின்னி பெடலெடுத்தார். மொத்தத்தில் கோலிக்கு நேற்று தொட்டது எதுவும் துலங்கவில்லை, பேட்டிங்கில் அவர் போகப்போக மந்தமானார். வெற்றி பெற தேவைப்படும் ரன் விகிதம் எகிற எகிற கோலியின் ஸ்ட்ரைக் ரேட் அதற்கேற்ப வலுப்பெறவில்லை.. முடிவு இன்னொரு தோல்வி.

 

ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ரெய்னாவை அவர் முறியடித்து இன்னொரு சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார். ஆரஞ்சுத் தொப்பிக்குச் சொந்தக் காரரான கோலி கூறியது:

“இந்தத் தோல்வி நிலையில் இந்த ஆரஞ்சுத் தொப்பியை நான் அணிய விரும்பவில்லை. நாங்கள் தூக்கித்தான் எறிந்தோம், எங்கள் விக்கெட்டுகளை நாங்கள் பறிகொடுத்த விதங்களை மீண்டும் ஒரு முறை மனதில் அசைப்போட்டு பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

ஓரிரண்டு நல்ல கூட்டணிகள் எங்களுக்கு வெற்றி தேடித் தந்திருக்கும். மும்பை நன்றாகப் பந்து வீசினர், நன்றாக விளையாடினர். அவர்கள் அச்சமற்ற கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நாங்கள் இயன்ற வரை போராடினோம் ஆனால் அவர்கள் விக்கெட்டுகளை தேவைப்படும் போது வீழ்த்த முடியவில்லை.”

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

http://tamil.thehindu.com/sports/article23581316.ece?homepage=true

Link to comment
Share on other sites

கொல்கத்தாவுடன் மோதல் - ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்

 

ஐ.பி.எல். போட்டியின் 15-வது ‘லீக்‘ ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

கொல்கத்தாவுடன் மோதல் - ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்
 
ஜெய்ப்பூர்:

ஐ.பி.எல். போட்டியின் 15-வது ‘லீக்‘ ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத்துடன் 9 விக்கெட்டில் தோற்று 2-வது போட்டியில் டெல்லியை 10 ரன்னிலும், 3-வது போட்டியில் பெங்களூரை 19 ரன்னிலும் வென்றது.

2 ஹாட்ரிக், 1 தோல்வியுடன் இருக்கும் அந்த அணி இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கில் சரக சாம்சன் மிகவும் நல்ல நிலையில் உள்ளார்.

கொல்கத்தா அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் உள்ளது. அந்த அணி பெங்களூரை (4 விக்கெட்), டெல்லியை (71 ரன்) வீழ்த்தி இருந்தது. ஐதராபாத் (5 விக்கெட்), சென்னை (5 விக்கெட்), அணிகளிடம் தோற்று இருந்தது. 3-வது வெற்றி ஆர்வத்தில் கொல்கத்தா இருக்கிறது.

இரு அணிகளும் இன்று மோதுவது 16-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 15 போட்டியில் கொல்கத்தா 9-ல் ராஜஸ்தான் 6-ல் வெற்றி பெற்றுள்ளது. #IPL2018 # #KKRvRR

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/18101304/1157620/IPL-2018--Today-match-between-Kolkata-Knight-Riders.vpf

Link to comment
Share on other sites

விராட் கோலி கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ- பிராவோ

 

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார்.

 
விராட் கோலி கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ- பிராவோ
 
கால்பந்து போட்டியில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களில் ஒருவராக போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனும், ரியல் மாட்ரிட் அணியின் முன்னணி ஸ்டிரைக்கரும் ஆன கிறிஸ்டியானோ ரொனால்டோ கருதப்படுகிறார். விளையாட்டில் எப்படி தனது திறமையை வெளிப்படுத்துகிறாரோ, அதேபோல் தனது உடற்தகுதியிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அதேபோல்தான் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வருவதுபோல் உடற்தகுதியிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான வெயின் பிராவோ, விராட் கோலி கிரிக்கெட்டின் ரொனால்டோ என்று தெரிவித்துள்ளார்.

201804171504563633_1_ronaldo-s21._L_styvpf.jpg

விராட் கோலி குறித்து வெயின் பிராவோ கூறுகையில் ‘‘விராட் கோலியை கிறிஸ்டியானோ ரொனால்டோவுன் ஒப்பிடுவது சிறந்தது. விராட் கோலி 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் எனது இளைய சகோதரரான டேரன் பிராவோ உடன் விளையாடியுள்ளார். விராட் கோலியிடம் என்னுடைய சசோதரர் பேட்டிங் மற்றும் கிரிக்கெட் பற்றி பேசுங்கள் என்ற கேட்டுக்கொண்டேன்.

201804171504563633_2_viratKohli-s._L_styvpf.jpg

நான் விராட் கோலியை பார்க்கும்போது, கிரிக்கெட்டில் ரொனால்டோவை பார்க்கிறேன். ஒரு கிரிக்கெட்டராக விராட் கோலி இந்திய அணிக்காகவும், ஆர்சிபிக்காவும விளையாடும்போது அவரது ஆட்டத்தை பார்த்துள்ளேன். அவரது திறமையை நான் கட்டாயம் பாராட்டுகிறேன். அவர் ஈடுபாட்டுடன் விளையாடும் கிரிக்கெட்டை வைத்து பார்க்கும்போது அனைத்து சாதனைகளுக்கும் தகுதியானவர்’’ என்றார்.
 
Link to comment
Share on other sites

நூலிழையில் தப்பிய இஷான் கிஷனின் வலது கண்: பதம் பார்த்த ஹர்திக் பாண்டியாவின் த்ரோ

 

 
ishan%20kishan

த்ரோவில் அடி வாங்கி வலியில் துடிக்கும் இஷான் கிஷன்   -  படம். | விவேக் பெந்த்ரே.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் கண்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதிலிருந்து நூலிழையில் தப்பினார்.

பெங்களூரு அணி 214 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்ட திணறி கொண்டிருந்த போது ஆட்டத்தின் 13வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பந்தைப் பிடித்து அடித்த த்ரோ ஒன்று பயிற்சி ஆட்டத்துக்கான பிட்சில் பட்டு விக்கெட் கீப்பர் இஷான் கிஷனின் வலது கண்ணருகே தாக்கியது.

வலி தாங்காமல் மைதானத்தில் நிலைகுலைந்தார் இஷான் கிஷன்.

அதாவது பும்ரா வீசிய பந்தை விராட் கோலி தரையோடு தரையாக புல் ஷாட் ஆடினார். பந்து மிட்விக்கெட் பீல்டர் முன்னால் விழுந்தது ஹர்திக் பாண்டியா அடித்த த்ரோ பிட்சில் பட்டு இஷான் கிஷன் வலது கண் அருகில் பயங்கரமாகத் தாக்க அவர் கீழே விழுந்து வலியால் துடித்தார்.

வலது கண் வீங்கிய நிலையில் மருத்துவக் குழு அவருக்கு முதலுதவி அளித்து பெவிலியன் அழைத்துச் சென்றனர், இதனையடுத்து ஆதித்யா தாரே விக்கெட் கீப்பிங் செய்தார்.

பந்து கொஞ்சம் மேலே கண்களைத் தாக்கியிருந்தால் ஒருமுறை தென் ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சருக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை இவருக்கு ஏற்பட்டிருக்கலாம், எப்படியோ தப்பினார், ஆனாலும் அவரது காயத்தின் தீவிரம் குறித்து இனிமேல்தான் தெரியவரும்.

http://tamil.thehindu.com/sports/article23582520.ece

Link to comment
Share on other sites

கோலியின் அனைத்து பிளான்களும் ஃப்ளாப்... தொடரும் ஆர்.சி.பி. சோகம்! #MIvsRCB

 
 

`இந்த ஐ.பி.எல்-ல டாஸ் வின் பண்ணிட்டாலே மேட்ச் வின் பண்ணிட்ட மாதிரிதான்' என்ற அனைவரின் எண்ணத்திலும் கரியைப் பூசிவிட்டார்கள் இதயத் திருடர்கள். கடைசி ஓவர் வரை வெற்றிக்காகப் போராடிப் போராடி தோற்றுக்கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸுக்கு முதல் வெற்றியையும் பரிசளித்துவிட்டார்கள். 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோற்றுவிட்டது ஆர்.சி.பி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏன் தோற்றது என்று எட்டு வருடமாகச் சொல்லிவரும் அதே காரணத்தைத்தான் இப்போதும் சொல்லப்போகிறோம். ஆம், அதேதான்...அந்த பௌலிங் தான். #IPL2018

#IPL2018

முதல் இரண்டு பந்துகளில் 2 விக்கெட்டுகள். உமேஷ் யாதவ் வீசிய அந்த இரண்டு டெலிவரிகளும் உலகத்தரம். ஒரே லென்த்தில் இரண்டு பந்துகளையும் பிட்ச் செய்தார். ஆனால், வலது, இடது என இரு வேறு விதமான பேட்ஸ்மேன்களுக்கும் உள்ளே பந்தை ஸ்விங் செய்ததுதான் மாஸ்டர் ஸ்ட்ரோக். இஷான் கிஷான் போல்டான அந்த பந்து வான்கடே அரண்டுவிட்டது. இப்படி ஒரு அசாத்திய தொடக்கம். ஆனால், 20 ஓவர்கள் முடிவில் மும்பை அடித்தது 213. அந்த அளவுக்கு மோசமாக இருந்தது ஆர்.சி.பி-யின் பௌலிங். இதற்கு முழுக்க முழுக்க பௌலர்களை மட்டுமே குறை சொல்லிட முடியாது.

டாஸ் போடுவதற்கு முன்பு ஆர்.சி.பி அணியில் அறிமுகமாவதற்காக கோரி ஆண்டர்சன் கையில் Debut Cap கொடுக்கப்படுகிறது. காலின் டி கிராந்தோம், மொயீன் அலி என ஏலத்தில் எடுத்தவர்களையெல்லாம் விட்டுவிட்டு ரீப்ளேஸ்மென்ட் வீரராக வந்தவரைக் களமிறக்கினார்கள். இடது கை பௌலர் வேண்டுமென்பதால் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கலாம். இருந்தாலும் ஒரு நியாயம் தர்மம் வேண்டாமா? வெள்ளை நிறப் பந்தில் ஆண்டர்சன் விளையாடி 230 நாள்கள் ஆகியிருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் ஆடியதும் வெறும் மூன்றே முதல் தரப் போட்டிகள். அதிலும் பெரிதாகச் சோபிக்கவில்லை.  இது ஒருபுறமிருக்க, கேப்டன் கோலியின் பௌலிங் சாய்ஸ் வியக்க வைத்தது. 

#IPL2018

கடந்த 3 சீசன்களாக, குருனால் பாண்டியா ஓவரில் டி வில்லியர்ஸ் விக்கெட்டைப் பறிகொடுப்பதைப் பற்றியும், இடது கை வேகப்பந்துவீச்சாளர்களிடம் விராட் திணறுவதைப் பற்றியும், லெக் ஸ்பின்னில் ரோஹித் ஷர்மா தடுமாறுவதைப் பற்றியும்தான் அத்துனை பேரும் பேசிக்கொண்டிருந்தார்கள். கடந்த 28 இன்னிங்ஸில் 9 முறை லெக் ஸ்பின்னர்களிடம் வீழ்ந்துள்ளார் ரோஹித். ஸ்டிரைக் ரேட் கூட வெறும் 111.6 தான். அப்படியிருக்கையில் 9-வது ஓவர் வரை சஹால் கையில் கோலி பந்தைக் கொடுக்கவேயில்லை. ரோஹித் நன்றாக செட்டில் ஆகட்டும் என்று காத்திருந்தார்போல. சரி, தொடக்கத்தில்தான் இப்படியென்றால் ஃபினிஷிங் படுமோசம். 

மும்பை அணி 17 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்திருக்கிறது. வோக்ஸ் இரண்டு ஓவர்கள்தான் வீசியிருக்கிறார். சிராஜ், சஹால், ஆண்டர்சன் ஆகியோருக்கும் தலா 1 ஓவர் கைவசம் இருக்கிறது. முதல் ஓவரில் 16 ரன்கள் கொடுத்திருந்த சிராஜ், அடுத்த 2 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார். அவர் 1 ஓவரும், வோக்ஸ் 2 ஓவர்களும் (அதுவரை எகானமி - 8.00) போடுவதுதான் சரி. எந்தக் கேப்டனாக இருந்தாலும் அதைத்தான் செய்வார்கள். பட் கோலி...! அந்த ஓவர் சிராஜுக்கு. அடுத்த ஓவர் வோக்ஸ். அப்போ கடைசி ஓவர்..? கோரி ஆண்டர்சன் வீச, ரோஹித் சிக்ஸரும் ஃபோருமாக விளாச அந்த ஓவரில் 21 ரன்கள். இந்தப் போட்டிக்கு முன்புவரை ஐ.பி.எல் வரலாற்றில் டெத் ஓவர்களில் மிகக் குறைந்த ரன்ரேட் வைத்திருந்த அணி மும்பை இந்தியன்ஸ்தான். அதுவும் வெறும் 8.00! ஆனால், இந்தப் போட்டியின் கடைசி 5 ஓவர்களில் நம் பெங்களூரு வள்ளல்கள் கொடுத்தது 70 ரன்கள். இங்கு ஒரு 20 ரன்களையாவது குறைத்திருந்தால் சேஸிங் கொஞ்சம் ஈசியாக இருந்திருக்கும். 

rohit sharma

இந்தத் தவறெல்லாம் செய்தது போதாதென்று, சொதப்பிக்கொண்டிருந்த ரோஹித் ஷர்மாவை வேறு ஃபார்முக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். முதல் ஓவரில் களமிறங்கியவர், கடைசி ஓவர்வரை நின்று கதகளி ஆடிவிட்டார்.  வாஷிங்டன் வீசிய நான்காவது ஓவரின் முதல் பந்தில்,அடித்த அந்த கவர் டிரைவ் கோலிக்கே சவால் விடும். அப்படியொரு கிளாசிக்கல் ஷாட். முதல் இரண்டு ஓவர்களை சூப்பராக வீசிவிட்டு, கெத்தாக இரண்டாவது ஸ்பெல் போட வந்த உமேஷை, முதல் பந்திலேயே சிக்ஸருக்கு அனுப்பிய அந்த அடி...மிரட்டல்! உமேஷ் காலி. அவரின் இரண்டாவது ஸ்பெல்லில் 28 ரன்கள். எல்லாம் ரோஹித் உபயம். 

ஆனால் ரோஹித் வெறுமனே சிக்ஸர்களும் பௌண்டரிகளும் அடிக்கவில்லை, அடிக்க முற்படவில்லை. சொல்லப்போனால் மிகவும் சென்சிபிளாக விளையாடினார். முதல் இரண்டு பந்துகளில் 2 விக்கெட் இழந்துவிட்ட நிலையில், இன்னிங்ஸைக் கட்டமைப்பதில் கவனமாக இருந்தார். வழக்கமான மொக்கை போடாமல் ஸ்டிரைக் ரொட்டேட் செய்தார். மறுமுனையில் ஈவின் லூயிஸ் வாணவேடிக்கை காட்ட, பவர்பிளே முடிவில் 60 ரன்கள். அப்போதே ஆட்டத்தை தன்பக்கம் எடுத்து வந்துவிட்டது மும்பை இந்தியன்ஸ். 

lewis

லூயிஸ் அவுட்டாகும் வரை அடிக்கத் தோதான பந்துகளை மட்டும் தேர்வு செய்து விளையாடினார் ரோஹித். காட்டுத்தனமாக அடித்துக்கொண்டிருந்த அந்த கரீபிய வீரர் ஸ்டிரைக்கில் இருக்கவேண்டும் என்பதில் கவனம் கொண்டிருந்தார். 15 ஓவர்கள் முடிந்திருந்தபோது, ரோஹித் சந்தித்திருந்தது வெறும் 34 பந்துகள் மட்டுமே! அவரும் செட்டிலானார். ரன்ரேட்டும் ஒன்பதுக்குக் குறையாமல் நகர்ந்தது. அந்த அளவுக்கு இன்னிங்ஸை கணக்கிட்டு கச்சிதமாக நகர்த்தினார். லூயிஸ் அவுட்டானதும் ஹிட்மேன் மோடுக்கு மாறினார். தான் அதிக நேரம் ஸ்டிரைக்கில் இருப்பதை உறுதி செய்தார். குருனால், பொல்லார்ட் என அடுத்தடுத்த வந்தவர்களும் ரோஹித்துக்கு ஸ்டிரைக் கொடுப்பதில் கவனமாக இருந்தனர். 13-வது ஓவரில் 9.08-ஆக இருந்த ரன்ரேட் சத்தமில்லாமல் உயர்ந்து பத்தைத் தாண்டியது. மும்பை 213 என்ற இமாலய இலக்கை எட்டியது. 

ரோஹித் தெளிவாக இருந்த விஷயத்தில், மும்பை அணி கவனமாக இருந்த விஷயத்தில் ஆர்.சி.பி, கோலி கவனமாக இல்லை. அவர்களிடம் தெளிவும் இல்லை. மெக்கல்லம் இல்லாததால் தானே ஓப்பனிங் இறங்கினார் கோலி. 20 ஓவர்களும் அவுட்டாகாமல் நின்றார். ஆனால் அது என்ன பயன் கொடுத்தது? அவரும், டி வில்லியர்சும் டாப் ஆர்டரில் களம் கண்டுவிட, மிடில் ஆர்டர் ரொம்ப வீக் ஆனது. அவர்களால் தேவைப்படும் ரன்ரேட்டுக்கு ஏற்றார்போல் ஆடவும் முடியவில்லை. கோலிக்கு ஸ்டிரைக் ரொட்டேட் செய்யவும் முடியவில்லை. பவர்பிளே முடிந்து 16-வது ஓவர் வரை ஒரு ஓவரில்கூட 10 ரன்களைத் தாண்டி எடுக்க முடியவில்லை. ரன்ரேட் 8 கூட இல்லை. கடைசியில் நிலைமை... 5 ஓவர்களில் 106 ரன்கள் தேவை. எப்படி முடியும்?

மனன் வோரா, பார்த்திவ் பட்டேல் என்று இரண்டு ஓப்பனர்களை வைத்துக்கொண்டும், தானே ஓப்பனிங் இறங்கியது நிச்சயம் தவறான முடிவுதான். ஏ.பி - இன்று என்ன ஆனதோ தெரியவில்லை? 5 ஓவர்கள்தான் முடிந்திருந்தது, ரன்ரேட்டும் ஒன்பதற்கும் மேல் இருக்கிறது. அப்படியிருக்கையில் தேவையில்லாத அவசரம். அந்த விக்கெட், அப்போதே ஆட்டத்தை மும்பை கையில் திணித்துவிட்டது. இப்படி இரண்டு வீரர்களை மட்டுமே ஒரு அணி நம்பியிருக்கும்போது அவர்கள் இருவருமே டாப் ஆர்டரில் களமிறங்குவது நிச்சயம் சரியான முடிவாக இருக்காது. அதற்கு இந்தப் போட்டி நல்ல எடுத்துக்காட்டு. 

#IPL2018

கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட இந்தப் போட்டியில் எத்தனையோ விஷயங்கள் இருந்தது. 'அடுத்த கிறிஸ் கெய்ல்' என்று வர்ணிக்கப்படும் ஈவின் லூயிஸ், தன் கரீபிய வித்தையை மொத்தமாக இறக்கினார். முகமது சிராஜ், வாஷிங்டன் பந்துகளை அட்ரஸ் இல்லாமல் ஆக்கினார். ஆபத்தான பௌலராகக் கருதப்படும் சஹாலின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு இமாலய சிக்ஸர்கள் அடித்து அலறவிட்டார். 42 பந்துகளில் 65 ரன்கள். துவண்டு கிடந்திருந்த மும்பை இன்னிங்ஸை தூக்கி நிறுத்துவிட்டுச் சென்றார். கடைசி கட்டத்தில் ஹர்டிக் வந்து வாணவேடிக்கை காட்டி 5 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். இப்படி இவர்கள் அடித்துக்கொண்டிருக்க, அந்த டென்ஷனையெல்லாம் அம்பயரிடம் காட்டி சண்டை போட்டார் கோலி.

ஐ.பி.எல்-லின் ஜாலி மேன் டேனி மாரிசன் அவருக்கு ஆரஞ்ச் கேப் கொடுத்தபோதும், "இப்போது இதை அணியும் மனநிலையில் நான் இல்லை" என்று வருந்தினார். அந்த வருத்தத்தில், அவர் ஆடிய அந்த அற்புத இன்னிங்ஸ், ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனை எல்லாம் மறைந்துபோனது. வெற்றி பெற முடியவில்லை என்ற வருத்தம் அவரை அப்படி நடந்துகொள்ளச் செய்தது. 

virat kohli

 

ஆர்.சி.பி மீண்டுவருவது அவர்கள் பௌலர்கள் கையில் மட்டுமில்லை. மோசமான டீம் செலக்‌ஷன் செய்யும் கேப்டன், பயிற்சியாளர் ஆகியோரின் கையிலும் இருக்கிறது. வழக்கமாக பாதித் தொடரில் சொதப்பும் பெங்களூரு இந்த முறை முதலில் இருந்தே தடுமாறி வருகிறது. பலமான அணியாக இருந்தும் வெற்றியை மிஸ் செய்வது எதனால் என்பதை அவர்கள் இனிமேலாவது யோசிக்கவேண்டும்.

https://www.vikatan.com/news/sports/122531-mumbai-indians-beat-rcb-to-register-their-first-win-of-the-season.html

Link to comment
Share on other sites

கடைசி ஓவர்களில் ரன்களை வாரி வழங்கும் கோலியின் ராயல் சாலஞ்சர்ஸ்: பயிற்சியாளர் வெட்டோரி கடும் அதிருப்தி

 
  •  
 
vettori

இறுதி ஓவர்களை எப்படி கட்டுப்படுத்துவது ஆலோசனையில் ஆர்சிபி திங்க் டேங்க்.   -  படம். | ஜி.பி.சம்பத்குமார்

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு வலுவான அதிரடி அணியாக பேப்பரில் தெரிந்தாலும் தொடர் தோல்விகளுக்குக் காரணம் அதன் இறுதி ஓவர்களின் ரன் வாரிவழங்கலே என்பது பயிற்சியாளர் டேனியல் வெட்டோரியின் அதிருப்திக்குக் காரணமாகியுள்ளது.

அன்று ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சஞ்சு சாம்சன் 12 சிக்சர்களைப் புரட்டி எடுத்த போது கடைசி 5 ஓவர்களில் 88 ரன்களை வாரி வழங்கியது பெங்களூரு இதனால் ராஜஸ்தான் 217 ரன்களைக் குவித்தது.

நேற்று மும்பை இந்தியன்சுக்கு எதிராகவும் கடைசி 5 ஓவர்களில் 70 ரன்கள் பக்கம் வாரி வழங்க ஸ்கோர் 213க்கு உயர்ந்தது.

இது குறித்து டேனியல் வெட்டோரி கூறும்போது, “கடைசி ஓவர்கள் பந்து வீச்சு வெறுப்படையச் செய்கிறது. பெரிய இலக்குகளை விரட்டும் போது கடும் அழுத்தம் ஏற்படுவது இயல்புதான். விராட் கோலி இன்று தனித்துவச் சிறப்புடன் ஆடினார் ஆனால் அவருடன் இணைந்து ஆட ஒருவரும் நிற்கவில்லை. ஆகவே தான் கடைசி 2 போட்டிகளில் கடைசி ஓவர்களில் ரன்கள் அதிகம் கொடுத்த விவகாரம் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

எவின் லூயிஸும், ரோஹித் சர்மாவும் ஆக்ரோஷமாக ஆடியதால் சாஹலும், வாஷிங்டன் சுந்தரும் தடுப்பு வியூகத்துக்குச் சென்றார்கள். இன்னும் கொஞ்சம் அட்டாக் செய்திருக்க வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணி மாறாக தன் ஸ்பின்னர்களைக் கொண்டு வரும்போது அந்த அணி நல்ல நிலையில் இருந்ததால் அவர்கள் எங்களை நெருக்க முடிந்தது. பந்தை தைரியமாக பிளைட் செய்தார்கள் இதனால் அவர்கள் அடைந்த பயன்களை நாம் பார்த்தோம்.

ஆனாலும் மும்பை அபாரமாக பேட் செய்தது, எங்கள் ஸ்பின்னர்கள் பவுலிங்கிற்கும் அவர்கள் ஸ்பின்னர்கள் பவுலிங்கிற்கும் உள்ள வேறுபாடுதான் இதற்குக் காரணம்” என்றார் வெட்டோரி.

http://tamil.thehindu.com/sports/article23584749.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சித்தார்த்துவுக்கும்  அரை அமைச்சுப்பதவி ரெடியோ....
    • இரண்டாம் வாக்கை எனக்குத்தான் போடுவினமோ என்று..கன்பார்ம் பண்ணப்போயிருப்பார்..
    • கரும்புலி  மேஜர் மறைச்செல்வன்  செல்வராஜா ரஜினிகாந்தன்  தமிழீழம் (வவுனியா மாவட்டம்)  தாய் மடியில் :03-05-1981 தாயக மடியில்:10.05-2000 அது 1999ஆம் ஆண்டின் மழைக்காலம். சினந்து அழும் சின்னப்பிள்ளையாய் விட்டுவிட்டு மழை தூறிக்கொண்டிருந்தது. மழைநேரம் காட்டின் தரையமைப்பு எப்படி மாறிப்போயிருக்குமோ அந்த மாற்றம் அனைத்தும் நிறைந்த காட்டிற்குள்ளால் பெய்து கொண்டிருக்கும் மழையில் நனைந்தபடி காட்டு மரங்கள் சிந்தும் நீர்த்துளிகளால் விறைத்த படி ஒரு அணி காட்டை ஊடறுத்து வேகமாக நடந்து கொண்டிருந்தது. அவர்களின் வலுவிற்கு அதிகமான சுமைகள். அவற்றோடும் மணலாற்றில் இருந்து காடுகளிற்குள்ளால் கனகராயன்குளம் நோக்கி சளைக்காமல் நடந்து கொண்டிருந்தார்கள். அந்த அணி வீரர்களிலே மிக உயர்ந்தவனும் அகன்ற நெஞ்சுடனும் ஓர் உருவம். நீண்ட கால்கள், பெருத்த கைகள், குழம்பிப்போன தலைமயிர், அடுக்கான பல்வரிசையில் சற்று மிதந்து நிற்கும் ஒரு பல், பொதுநிறம், கண்குழிக்குள் அலையும் கண்கள் எங்கோ, எதையோ தேடிக்கொண்டிருந்தன. இப்படி அடையாளங்களோடு ஒருவன், அவன்தான் அந்த அணியை வழிநடத்திச் செல்லும் அணித்தலைவன் மறைச்செல்வன். அவனது நெஞ்சிற்குள் எத்தனையோ ஏக்கங்கள். அதை முகத்தில் சிறிதும் வெளிக்காட்டிவிடாது தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு அணிகள் எட்டவேண்டிய இலக்கு நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தான். இடையில் எதிர்ப்பட்ட தடைகளைத் தாண்டிச்செல்ல அதிக நேரம் தாமதமாக வேண்டியிருந்தது. தொலைத்தொடர்புக் கருவி அவனை அழைத்தது. ஏதோ கதைத்தான். “இன்னும் இலக்குகளை ஏன் அடையவில்லை. தாக்குதல் தொடங்கி விட்டது” என்று தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் ஏராளம். அதைத் தெரிந்தும் “நாங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் குறித்த இடத்தில் நின்று தொடர்பு எடுக்கின்றோம்” என்று கூறிவிட்டு உடனேயே தொடர்பைத் துண்டித்தான். போய்ச் சேரவேண்டிய இடத்திற்கும் அவர்கள் நிற்கும் இடத்திற்கும் இடையே நீண்ட அந்தக் காட்டுப் பகுதியைக் கடக்க அவர்களிற்கு அந்த நேரம் போதாது. அதுவும் படை முகாம்களைக் கடந்து போக வேண்டியிருந்தது. வேகமாக எல்லோரும் நடந்தார்கள். அந்தக் காட்டுப்பகுதி அவனுக்குப் பழக்கமானது. மரங்கள் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்திருந்தான். ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கையில் அவன் பங்கெடுத்திருந்த போது அதே இடங்களில் பலநாட்கள் கண்விழித்து நின்றிருக்கின்றான். அந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் அவன் தன் தோழர்களைப் பிரிந்து தேம்பி இருக்கின்றான். அப்போதெல்லாம் “உந்த ஆட்லறியை உடைக்கவேணும்” என்று மனதினுள் குமுறிக்கொள்வான். அது அவனிற்கும் அந்த மரங்களிற்கும்தான் தெரியும். தொடர் சண்டைக் காலத்தில், காவலரணில் கடந்த நாட்களில் ஆட்லறி ஏறிகணைகள் சினமும் வெறுப்பும் ஊட்டுபவையாகவே இருந்தன. ஒன்றாய் பதுங்கு குழியில் இருந்து விட்டு தண்ணீர் எடுத்து வரவென வெளியில் சென்ற அவனிலும் அகவை குறைந்த தோழன் திரும்பி வரமாட்டான்... அவன் எறிகணை வீச்சில் வீரச்சாவு அடைந்தோ, அல்லது விழுப்புண் பட்டோ இருப்பான். காணாத தோழனைத் தேடிச்சென்று இரத்த வெள்ளத்தில் காணும் வேளைகளையெல்லாம் சந்தித்தவன். இதற்கு காரணம் அந்த ஆட்லறிகள். அதை உடைக்க வேணும் என்று மனதிற்குள் அப்போதே முடிவெடுத்துக் கொண்டான். அதற்காகவே தலைவருக்குக் கடிதம் எழுதி அனுமதி பெற்றுத் தன்னையே வருத்திப் பயிற்சி எடுத்து இப்போது கரும்புலியாய் இலக்குத்தேடிப் போகின்றான். அவன் முதலில் நடந்த இடங்களை மீண்டும் காணுகின்ற போது மயிர் சிலிர்த்தது. நடையை விரைவுபடுத்தி வேகமானார்கள். பொழுது கருகின்ற நேரம் தான் அந்த இராணுவ முகாமிற்கு அண்மையாக வந்திருந்தார்கள். இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக முடியவேண்டும். தேசம் வேண்டி நிற்பது அதுவே. வன்னியில் பெரும் நிலங்கள் பகை வல்வளைப்பால் குறுகிக்கொண்டிருந்த காலம். நகரங்களையும் தெருக்களையும் கொஞ்சம் கொஞ்சமாய் நாடு இழந்துகொண்டிருந்தது. இந்த அச்ச சூழலில்தான் “வோட்டசெற்” 01, 02 என்று அம்பகாமம் பகுதியில் முன்னேறி சில காவலரண்களையும், எம்மவர்களின் சில வித்துடல்களையும், எதிரிப்படை கைப்பற்றியிருந்தது. வன்னியில் மக்கள் திகைத்து நிற்கின்ற சூழலில், நெருக்கடி நிறைந்ததாய் உணர்ந்த அந்த நாட்களில் தலைவரோ உலகிற்குப் புலிகள் பலத்தை உணர்த்தும் நடவடிக்கைக்கான தாக்குதலில் இவர்களுக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்திருந்தார். தேசத்திற்கும் போராட்டத்திற்கும் இடையூறும் நெருக்கடிகளும் வரும் போது தான் இவர்களது பணி தேசத்திற்குத் தேவைப்படுகின்றது. அவர்களும் அதை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற துடிப்போடுதானே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * கண்டி வீதியைக் கடக்கவேண்டும். கண்டி வீதியைக் கடக்கின்ற போது அந்த அகன்ற தார்ச்சாலை மலைப்பாம்பென நீண்டு வளைந்து கிடந்தது. அதைக் குறுக்கறுத்து எதிரியின் கண்ணில் சிக்காது கடந்தார்கள். ஒரு புறம் அவர்கள் தேடி வந்த இலக்கு கனகராயன்குள படைமுகாம், மறுபுறம் வவுனியா. இரண்டையுமே மறைச்செல்வன் திரும்பத் திரும்ப பார்த்தான். வவுனியாவைப் பார்க்கின்ற போது வேறுபல பழைய நினைவுகள் அவனை சூழ்ந்தன. வவுனியா, அதுதான் அவன் பிறந்து வளர்ந்த இடம். அதற்கும் மன்னாருக்குமான நீளுகின்ற அந்தத் தெருக்கள்... நினைவுகள் மீள் ஒளிபரப்புச் செய்தன. மன்னார் வவுனியா நெடுஞ்சாலையிலே அன்றொரு நாள் நாற்பத்தினான்கு அப்பாவித் தமிழ் மக்கள் சுட்டும் வெட்டியும் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அவர்களது உயிரிழந்த சடலங்கள் ஆங்காங்கே வீதிகளிலே எரிந்தும் எரியாமலும் கிடந்தன. இந்தச் சேதி உள்ளுர் செய்தி ஏடுகளில் பரவலாக வந்தபோது முகம் காணாத சொந்தங்களிற்காக இரங்கி சில கண்ணீர்த் துளிகள் சிந்தப்பட்டன. அப்பாவி மக்கள் படுகொலை என்று கண்ணை உறுத்தும் வகையில் பெரிய எழுத்தில் வெளிவந்த அந்தச் துயரம் மறுநாளே செய்தி ஏடுகள் போல மறைந்துபோனது. அது இன்னொரு துயரச் செய்தியை அவனுக்குக் காவி வந்தது. அது அவர்களது குடும்பத்தில் பெரிய இடியாக விழுந்தது. எல்லோரையும் போல அவர்களால் அந்தத் துயரத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னென்றுதான் தாங்குவது. ஊர்திகளை ஓட்டி குடும்பத்தைத் தாங்கிய அப்பாவை இழந்து இனி எப்படி அவர்களது வாழ்க்கை! சின்ன வயசில் அது அவனுக்குப் பெரிய இழப்பு. அப்பாவை நினைத்து நினைத்து விம்முவான். அழுவான். யார்தான் என்ன செய்யமுடியும். சிறிய குடும்பம். அவனும், அக்காவும், அம்மாவும்தான். ஒவ்வொருவரது முகத்திலும் பெரிதாய் துயரம் குந்திக்கொண்டிருந்தது. யாராலும் ஆற்றிவிட முடியாத அந்தச் துயரத்தோடு அவர்களது குடும்பம் நாளும் நாளும் அல்லற் பட்டுக்கொண்டேயிருந்தது. அம்மாவும் இவர்களுக்குத் துணையாக நின்று, மாடுகள் வளர்த்து ஒருவாறு குடும்பத்தை நடத்திச் சென்றாள். இவன் சின்ன வயதில் குழப்படிக்காரனாகவே இருந்தான். காலையில் எழுந்து மாட்டுப்பட்டிக்குச் சென்று பால் கறந்துவிட்டு மாட்டுச்சாணம் அள்ளிப் போட்டுவிட்டே அவசர அவசரமாய் பள்ளிக்கு ஓடுவான். வந்து புத்தகங்களை வைத்துவிட்டு மாடு மேய்க்கப் போய்விடுவான். மாடு மேய்ப்பதும் வரம்புகளிலும் வயல் வெளிகளிலும் ஓடி விளையாடுவதிலும் இவனது பொழுதுகள் கழியும். அதுவே இவனுக்குச் மகிழ்ச்சி. அந்த வயல்கள் இவனோடு கொண்ட சொந்தத்தின் அடையாளமாக சின்னச் சின்ன சிராய்ப்புக் காயங்களும் இப்போதும் மாறாத அடையாளங்களாய் இருக்கிறன. ஊருக்குள் வரும் போராளிகளைப் பார்த்து ஆசைப்பட்டிருக்கின்றான். ஆனால் அவர்களோடு சேர்ந்து கொள்ளச் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவனது இலட்சிய ஆசைகள் நெருப்பாய் எரிய அதை மறைத்து அம்மாவோடு செல்லம் கொஞ்சுவான். வளரவளர அந்த வேட்கை அவனைவிட வளர்ந்தது. இராணுவக் கட்டுப்பாட்டில் அவனது கிராமத்தில் போராளிகள் அலைகின்ற அலைச்சல் அவர்கள் சுமக்கும் வேதனையான நாட்கள் எல்லாம் அவனைப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்ற தீரத்தை ஏற்படுத்தின. பள்ளிப்பருவத்திலே அவன் போராட்டத்தில் இணைந்துகொண்டான். வயதுக்கு மீறிய வளர்ச்சி உடல் மட்டுமல்ல, அவனது எண்ணங்களும் செயற்பாடுகளும் அப்படியானதே. உயர்ந்த எண்ணங்களும் தூர நோக்கும் கொண்ட அவன் எதிலும் துடிதுடிப்பும் முன்னிற்கும் தன்மையும் கொண்டவன். தாக்குதல் களங்கள் அவனை இன்னும் இன்னும் பட்டை தீட்டின. கண்டி வீதியைக் கடந்து நடந்தான். அன்று 81 மில்லிமீற்றர் மோட்டரையும் தூக்கிக்கொண்டு நடக்கிறபோது அவனுக்கு மட்டும் தெரியக்கூடிய வெப்ப மூச்சோடு, அவனுக்கு மட்டும் கேட்டக்கூடிய சத்தத்தில் ஆட்லறியை உடைக்கவேணும் என்று மனம் சுருதி தப்பாது துடித்தது. நினைவுகள் கனத்தன. ஓயாத அலைகள் மூன்று ஆரம்பமாகி அடிக்கின்ற வேகத்திற்கு கனகராயன்குளம் மீது கரும்புலி அணிகள் ஆட்லறிப் பிரிவினருடன் இணைந்து தாக்க தொடங்கினர். சிறிதும் எதிர்பாராத இத் தாக்குதலில் எதிரி திகைத்து திக்குமுக்காடினான். அவனது ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியது. கட்டளைத் தளபதியாகவிருந்த சிங்களத் தளபதிகளுக்கு கரும்புலிகளின் வெடியதிர்வு சாவாய்க் கதவில் தட்டியது. அந்தப் பெரிய சமர் அங்கே ஒரு நொடியில் மாறியது. தளபதிகள் மூட்டை முடிச்சுக்கட்ட எதிரிப்படை பின்வாங்கியது. எமது இடங்கள் எங்கும் அகல அகலப் பரப்பி நின்ற எதிரிப்படை உடைந்தகுளம் வற்றுவதைப்போல மிக வேகமாக ஓடியது. அந்தச் சாதனையை எதுவித இழப்புக்களும் இல்லாது நடத்தி விட்டு மறைச்செல்வன் தலைமையிலான கரும்புலி அணி வெற்றிகரமாகத் தளம் திரும்பியது. வட போர்முனையில் ஓயாத அலைகள் அடித்தபோது தென்மராட்சியில் பல இடங்களிலும் இவனது செயற்பாடுகள் இருந்தன. எப்போதும் தாயகத்தைப் பற்றியே நினைத்துக்கொண்ட அந்த வீரன் நாகர்கோவிற் பகுதியில் இலக்கொன்றிற்காய் விரைந்து கொண்டிருந்தபோது, இலக்கை நெருங்கும் முயற்சியில் அவன் ஈடுபட்டுக்கொண்டிருக்கவும் எதிரிப்படை தாக்குதலை தொடங்கவும் சரியாக இருந்தது. இழப்புக்கள் எதுவும் இல்லாது பல தாக்குதல்களையும் நிகழ்த்தி தாய்நாட்டிற்காக வெற்றியைக் கொடுத்தவன் 10.05.2000 அன்று நாகர்கோவில் மண்ணிலே வீரகாவியமானான். ஆட்லறியை உடைக்கவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த அந்த தேசப்புயல் துடிப்பிழக்கின்ற போது தன் சாவிலே ஒரு சேதியை இந்தத் நாட்டிற்குச் சொல்லிவிட்டுப்போனது. அழுதுகொண்டிருந்தால் அடிமைகளாவோம், துணிவாய் எழுந்து நின்றுவிட்டால் வாழ்வோம். அல்லது வீரராய்ச் சாவோம் என்று.   " புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் "   தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.   தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.
    • அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. கப்டன் மயூரன்  பாலசபாபதி தியாகராஜா  தமிழீழம் (யாழ் மாவட்டம்) தாய் மடியில் :01.11.1970 தாயக மடியில்:11.11.1993 எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் – கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா, இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். அவனது சின்னக்கா பிரபாவும், பிரபாவின் கணவர் கணேசும், தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள். பிரபாவுடனும் அத்தான் கணேசுடனும் பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான். வயிற்றில் அல்சர் இருப்பதால்தான் வைத்தியம் செய்வதற்காக ஒன்றரை மாத லீவில் வந்திருப்பதாகச் சொன்னான். வைத்தியசாலைக்குச் சென்று ஏதோ மருந்துகள் எடுத்து வருவான். ஆனால் சாப்பாட்டில் எந்த விதக் கட்டுப்பாட்டையும் கடைப் பிடிக்க மாட்டான். அவன் வந்திருக்கிறான் என்று அவனது பாடசாலைத் தோழர்களும் போராளித் தோழர்களும் மாறி மாறி வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் விரும்பிய உணவுகளைக் கேட்டுச் சமைப்பித்துச் சாப்பிடுவது, ஐஸ்கிறீம் பாருக்குச் சென்று ஐஸ்கிறீம் சாப்பிடுவது, சிற்றுண்டி வகைகளைக் கொறிப்பது….. தங்கையைச் சீண்டி விளையாடுவது என்று ஒன்றரை மாதமும் ஒரே கும்மாளமும் கலகலப்பும்தான் வீட்டில். என் பிள்ளை நீண்ட பொழுதுகளின் பின் என்னிடம் வந்திருக்கிறான். அவன் மனம் எந்த வகையிலும் நோகக்கூடாது. போனால் எப்போ வருவானோ தெரியாது. அவர்களது முகாமிற்குள் போய் விட்டால் எல்லாம் கட்டுப்பாடு தானே! என்று நினைத்து நான் என்னால் இயன்றவரை அவனது ஆசைகள் விருப்பங்கள் எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்தேன். அப்போதுதான் பிரபா(அவனது சின்னக்கா) திருமணமாகி ஏழு வருடங்களின் பின் கற்பமாகி இருந்தாள். அதையிட்டு அவன் மிகுந்த சந்தோசத்துடன் இருந்தான். மருமகனா..! மருமகளா..! என்று சதா ஆசையுடன் கேட்டுக் கொண்டே இருந்தான். இப்படியே ஆட்டமும் பாட்டமும் களிப்பும் கும்மாளமும் என்று ஒன்றரை மாதம் போன வேகமே தெரியவில்லை. என் பிள்ளை மீண்டும் என்னை விட்டுப் போகும் நாளும் வந்து விட்டது. அன்று 17.6.1993 – காலையே போக வேண்டும் என்று அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான். பாமா அவனது உடுப்புக்கள் எல்லாவற்றையும் அயர்ண் பண்ணி அடுக்கிக் கொடுத்தாள். அவனது பள்ளி நண்பர்களில் மூவர் எந்நேரமும் அவனுடன்தான் நின்றார்கள். படுக்கைக்கு மட்டுந்தான் தமது வீடுகளுக்குப் போய் வந்தார்கள். என் பிள்ளை போகப் போகிறான் என்றதும் எல்லோர் முகங்களிலும் கவலை. படிந்து போனது போன்ற துயர். வீட்டில் ஓரு விதமான மௌன நிலை. ஆனாலும் அவன் வருந்தக் கூடாது என்ற நினைப்பில் சோகம் கப்பிய சிரிப்புக்கள். வேலைகள். ஆனால் அன்று வாகனம் வரவில்லை. அவன் அன்று போக வில்லை என்றதும் எல்லோரிடமும் ஒரு தற்காலிகமான சந்தோசம். அடுத்த நாள் 18.6.1993 காலை அவனது அத்தான் கணேஸ் சோகத்துடன் – அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வேலைக்குச் சென்றார். திரும்பி வரும் போது அவன் நிற்க மாட்டான் என்பது அவருக்குத் தெரியும். பிரபா(அவனது சின்னக்கா) வேலைக்குப் போகும் போது “நான் மத்தியானம் வாற பொழுது நிற்பியோ? அல்லது போயிடுவியோ?” என்று கவலையோடு கேட்டாள். சோகம் கலந்த சிரிப்பொன்றுதான் அவனிடமிருந்து பதிலாகக் கிடைத்தது. நான் அம்மா அல்லவா! என் சோகம் எல்லாவற்றையும் மறைத்து செய்ய வேண்டியவைகளை ஓடி ஓடிச் செய்து அவனுக்கும் நண்பர்களுக்கும் பன்னிரண்டு மணிக்குச் சாப்பாடு பரிமாறினேன். அதன் பின் வேறு இடத்தில் வாகனம் வருவதாக அவனுக்குச் செய்தி வர அவன் விடை பெற்றுச் சென்றான். அவனது நண்பர்கள் அவனை கூட்டிச் சென்று வாகனத்தில் ஏற்றி விட்டு தமது வீடுகளுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார்கள். இம்முறை என் பிள்ளையின் முகத்தில் வழமை போல இல்லாமல் ஏதோ ஒரு சோகம் அப்பி இருப்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது. அது ஏன் என்று புரியாமல் குழம்பினேன். ஆனாலும் எனக்குள்ளே இருந்த துயரத்தையோ நெருடல்களையோ நான் அவனுக்குக் காட்டவில்லை. அவன் நின்ற ஒன்றரை மாதமும் இராப்பகல் பாராது ஓடியோடி எல்லாம் செய்த நான் – அவன் போனதும் – அதற்கு மேல் எதுவும் செய்யத் தோன்றாது அப்படியே கதிரையில் அமர்ந்து விட்டேன். எல்லாம் ஒரே மலைப்பாக இருந்தது. என் பிள்ளை போய் விட்டானா..? எல்லாம் பிரமையாக இருந்தது. அப்படியே நான் பிரமை பிடித்தவள் போல அந்தக் கதிரையில் ஒரு மணித்தியாலம் வரை இருந்திருப்பேன். என் பிள்ளை திரும்பி வருகிறான். ஏன்..? எனக்குச் சந்தோசமாயிருந்தது. “என்னப்பு..! என்ன விசயம்?” என்று கேட்டேன். “வாகனம் இன்னும் சொன்ன இடத்துக்கு வரேல்லை அம்மா. அதுக்கிடையிலை உங்களை ஒருக்கால் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான். உடனை போகோணும்.” என்றான். எனக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்வது போலிருந்தது. அதற்குள் அவனது சின்னக்காவும் வேலை முடிந்து நாலைந்து கறுத்தக் கொழும்பு மாம்பழங்களுடன் அரக்கப் பரக்க ஓடி வந்தாள். “உனக்கு மாம்பழம் எண்டால் எவ்வளவு ஆசை எண்டு எனக்குத் தெரியும். அதுதான் வேண்டிக் கொண்டு ஓடி வந்தனானடா.” என்று சொன்னாள். நான் மாம்பழத்தின் தோலைச் சீவி அவசரமாய் வெட்டிக் கொடுக்க என் பிள்ளை மிகவும் ஆசையாக ரசித்துச் சாப்பிட்டான். அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கவே வாகனம் எங்கள் வீட்டுக் கேற்றடிக்கு வந்து விட்டது. உடனே “பிரபாக்கா சுகத்தோடை பிள்ளையைப் பெத்தெடுங்கோ. மாமா வருவன் மருமகளைப் பார்க்க..” என்று சொல்லிக் கொண்டே அவசரமாய் விடை பெற்றுச் சென்றான். வாகனத்தில் ஏறி கை காட்டும் பொழுது அவன் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என் கண்கள் குளமாகி விட்டது. என் கண்களில் நீர் வழிவதை அவன் கண்டால் கலங்குவானே என்பதால் என் கண்களைத் துடைக்காமலே திரையிட்ட கண்ணீரோடு கை காட்டினேன். எனக்கு அப்போது தெரியாது அன்று அப்போதுதான் என் பிள்ளையைக் கடைசியாகப் பார்க்கிறேன் என்பது. பிரபாவின் குழந்தையைப் பார்க்க மிகவும் ஆசைப் பட்டான். கடற்புலி கேணல் தளபதி பாமா வந்து குழந்தையைப் பார்த்த போது சொன்னாள். “மயூரன் மணலாறு இதயபூமிச் சண்டைக்குப் போய் வெற்றியோடு திரும்பியிருக்கிறார். மருமகளைப் பார்க்கக் கட்டாயம் வருவார்.” என்று. வருவான் வருவான் என்றுதான் காத்திருந்தோம். அவன் வரவே இல்லை. பூநகரித் தவளைப் பாய்ச்சலுக்குச் சென்று விட்டான். 11.11.1993 அன்று பூநகரித் தவளைப் பாய்ச்சலில் அவன் விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருது நின்ற படையினருள் புயலாகிப் போனான் என்ற செய்தி 15.11.993 அன்றுதான் எனக்குக் கிடைத்தது. விழுப்புண் பெற்ற அவன் வித்துடலைக் கூடக் காண வழியின்றிக் கலங்கி நின்றேன். அதன் பின் தான் உணர்ந்தேன் அப் பெரிய சமர்களுக்குப் போவதற்காகவே அவன் நீண்ட லீவில் என்னிடம் வந்து நின்றான் என்பதை. நீங்காத நினைவுகளை மட்டும் என் நெஞ்சோடு விட்டு விட்டு அவன் சென்று விட்டான்.   கப்டன் மயூரன் நினைவலைகள்…   கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலி போல் ஆகிவிட்டீர்.   அரச பயங்கரவாதத்தில் மக்கள் அடிபட்டுக் கொண்டிருக்க குட்டுப்பட்டு வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா, என்றெண்ணி கொட்டமடிக்கும் கூலிப்படைகளை வெட்டிச் சாய்க்க, திண்ணம் கொண்டான் மயூரன்.   பருத்தித்துறை ஆத்தியடியில், பாலசபாபதியாக அன்னை மடியில் முத்தாகச் சிரித்தவன், வாழும் வயதிலேயே மண்ணுக்கு வித்தாவான் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.   15 வயதான பின்னும் கூட தன் கட்டிலை விட்டு வந்து அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு படுத்திருப்பான். அக்காமார் என்ன கேட்டாலும் முகம் கோணாமல் அத்தனையும் ஓடி ஓடிச் செய்து கொடுப்பான். அக்காமாருக்கு மட்டுமா? ஆத்தியடியில் வயதான கிழவிகளுக்கெல்லாம் இவன் மகன் போல. உதவி செய்வதென்பது இவனோடு பிறந்த குணம்.   அண்ணன் மொறிஸ் களத்தில் நிற்கும் போதே, காட்லியின் கல்வியைக் கை விட்டு, 1987 இல் ஈழப்போர் இரண்டு என்னும் சகாப்தம் வெடிக்கையிலே வேங்கையாய் புறப்பட்டான் நாட்டைக் காக்க என்று.   இந்திய ஆக்கிரமிப்பு எகத்தாளமாய் நடக்க, ஈழத்து உயிர் மூச்சை இதயத்தில் சுமந்து கொண்டு தலைவர் பிரபாகரனின் அன்புக்குப் பாத்திரமானவனாய் காட்டிலே உயிர் வாழ்ந்தான்.   மன்னார், மண்கிண்டி என வீரக்கதை படித்து யாழ்தேவி நடவடிக்கையில் போராளிக் குழுவோடு நின்று பொருத்தமாய் போர் தொடுத்தான். இதய பூமி-1 இல் இறுக்கமாய் கால் பதித்து வெற்றியோடு திரும்பினான்.   திரும்பும் வழியில் வற்றாப்பளையில் வாழும் அண்ணன் தீட்சண்யனை (பிறேமராஜன்) காண ஆசை கொண்டு ஒருக்கால் சென்றான்.   அந்தக் கணங்களை ஒரு காலை இழந்த அவன் அண்ணன் தீட்சண்யன் இப்படிச் சொல்கிறார்.   கடைசிக் கணத்தில் உன் களத்துப் புலிகளுடன் ஓருக்கால் வந்தாய் நாம் கண்மூடி விழிக்க முன் கனவாய் சென்றாய் தடியோடு நான் நடந்து கதவோரம் வந்து நிற்க கையில் பெடியோடு உனது அண்ணி கண் கலங்கப் பார்த்திருக்க பார்த்தாயா…யா? புரியவில்லை நினைவில் தெரியவில்லை. தெருவோடு நீ ஓடி துள்ளி அந்த வாகனத்தின் கூரையிலே பாய்ந்தேறி குழுவோடு அமர்ந்ததைத்தான் நாம் பார்த்தோம் கனவாக மறைந்து போனாய் சும்மா பார்த்து விட்டுப் போக வந்தேன் என்றாய் எம் கண்ணிலெல்லாம் காயாத நீர் கோர்த்து விட்டுத் தானய்யா சென்றாய். இப்படி அண்ணனின் கண்ணில் நீர் கோர்த்து விட்டுச் சென்றவன் நேரே பூநகரிக் களத்தை நோக்கித்தான் சென்றான். போகும் வழியில் பாசம் அவனை பாடு படுத்தியதோ…? நண்பன் சிட்டுவை(மாவீரன்) அழைத்து ஆத்தியடிக்கு அம்மாவிடம் போய், அக்கா அவர்களிடம் இருந்து கடிதங்கள் வந்திருக்கும். வாங்கி வா என்று அனுப்பினான். பின்னர் களத்தில் நின்று கொண்டும் அவன் சிட்டுவை மீண்டும் பலமுறை அனுப்பினான். கடைசி முறையாக சிட்டு மயூரனின் அம்மாவிடம் சென்ற போது, மயூரனின் தங்கை மகிழ்வோடு கடிதத்தைக் கொடுத்து விட்டாள். ஆனால் சிட்டு கடிதத்துடன் மயூரனிடம் சென்றபோது மயூரன் என்ற தீபம் அணைந்து விட்டது. மயூரன் மண்ணுக்கு வித்தாகி விட்டான். மயூரன் 11.11.1993 அன்று சைபர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்று பூநகரிக் களத்தின் காற்றிலே கலந்து விட்ட செய்தியை தாங்கி வந்த சிட்டு அதை எப்படி அம்மாவிடம் சொல்வதென்று தெரியாமல் தயங்கித் தவித்து கலங்கிச் கொன்ன போது ஆத்தியடியே ஒரு முறை உயிர்வலிக்க அழுதது. மயூரனை இழந்து தவித்த அண்ணன் தீட்சண்யன் நினைவில்…   விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருதி நின்ற படையினருள் புயலாகிப் போனாயென விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்கையிலே பூநகரிக் காட்சி எங்கள் கண்ணில் நிழலாடுதையா தலைவன் வளர்த்த மணிவிளக்காய் நீ அங்கு தலைகள் சிதறடித்து தானை துடைத்தெறிந்த கதைகள் பல இங்கு காதில் அடிபடுது ஆனாலும் மயூரா உன் உடலைக் காணவில்லையடா விழுப்புண்கள் பெற்ற உன் வித்துடலை காண்பதற்கு விதி எமக்கு இல்லையடா-அதனால்தான் உதிரம் கொதிக்கிறது உடலம் பதைக்கிறது சடலம் என்ற பெயர் உனக்கு இல்லையடா பொன்னுடல் மின்னிடுடும் படம் வந்த ஊர்தியில் கண்ணிலே ஒற்றி நாம் மாலை போட்டோம் நிறை குடத்தோடு நின்று நாம் நினைவை மீட்டோம் மொறிஸ் சோடு நீ சென்ற பாதையின் வழியில் நாம் உடலோடு உதிரமாய் ஒன்றி வாழ்வோம் உயிரையே உருக்கி நாம் வேள்வி காண்போம் - தீட்சண்யன்.. மயூரனின் நண்பர்களின் நினைவில்…   களத்திலே புலியாகப் பாய்ந்திட்ட வேளையில் கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலிபோல் ஆகிவிட்டீர் களத்தினிலே பாய்ந்த போது கண்டபின் நாம் காணவில்லை வளமான நெல்வயல் சூழ் நைய்தல் நில எல்லையிலே எதிரியின் வேட்டுக்களை ஏந்தி விட்டாய் மார்பினிலே என்றுன்னை நினைக்க மாட்டோம் எரியாகி எரிந்து விட்டாய் எரிமலையாகி வெடித்து விட்டாய் நண்பனே! வள்ளலாகி விட்டாய் மயூரா! உன் பாதம் அடிச்சுவடு உன்னாடை பாதுகை உன் துப்பாக்கி இனி எங்கள் கையிலே உன் நினைவுகள் துணையாகும் எம் பாதையிலே……… ..நண்பர்கள்...   மயூரனின் தங்கையின் நினைவில் (பாமா)   அன்று சிட்டு அண்ணா வந்த போது, நான் முதல் நாள் சின்னண்ணாவுக்குக் (மயூரன்) கொடுத்து விட்ட கடிதத்துக்குப் பதில் கடிதம் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப் பட்டேன். ஆனால் சிட்டு அண்ணா நான் எழுதிக் கொடுத்து விட்ட அந்தக் கடிதத்தை எனக்கு முன்னாலேயே சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். எனக்குச் சரியான கோபமும் அழுகையும் வந்தது. சிட்டு அண்ணாவைத் திட்டினேன். அவர் ஒன்றும் பேசாமல் கூட வந்த நண்பருடன் திரும்பிப் போய் விட்டார். அடுத்த நாள் நடுச்சாமம் 12 மணிக்கு மீண்டும் அவர் எமது வீட்டுக்கு வந்த போது நான் அவரிடம் முகம் கொடுத்துப் பேசாமல் கோபமாய் இருந்தேன். அப்போதுதான் துயரம் தோய்ந்த அந்த செய்தியை, என் அன்பு அண்ணா, களத்தில் காவியமாகி விட்டான் என்ற செய்தியை சிட்டு அண்ணா அழுதழுது சொன்னார். 1.11.1970 இல் பிறந்து 11.11.1993 அன்று நடை பெற்ற பூநகரிப் பெருந்தளச் சமரில்-தவளைப் பாய்ச்சலில்-வெற்றி பெற்றுத் தந்து விட்டு உறங்கிப் போய் விட்டான் மயூரன்.   https://maaveerarkal.blogspot.com/2003/11/blog-post_11.html
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.